May 13, 2009

படிப்பவர்களை கொல்லும் பதிவர்சரியாக நாற்பது வருடங்களுக்கு முன்..

”கடவுளே!! இந்த மனித இனத்தின் கொடுமைக்கு அளவேயில்லையா? எங்களை அழித்து வரும் இவர்களுக்கு நீ தண்டனை தர மாட்டாயா” என அனைத்து மரங்களும் கடவுளிடம் முறையிட்டன. சற்று நேரம் யோசித்தக் கடவுள் சொன்னார்

கவலை வேண்டாம். இன்று நான் பூமிக்கு அனுப்பப் போகும் ஒருவனால் உலகமே அல்லோலகலப் படப்போகிறது. உங்களை அழித்து காகிதமாக்கி அதை வீணடிக்கும் மூடர்களை அந்த காகிதம் மூலமே பாடம் புகட்டுகிறேன்.

அவர் சொன்னது போலவே மே13ம் தேதி 1969.. பூமிக்கு வந்தார் அந்த தீவிரவாதி. உலகை அழிக்க அவரிடம் கடவுள் கொடுத்தனுப்பிய ஆயுதம் எழுத்து.  பேசிப்பேசியே சாகடிக்க இங்கே ஆயிரம் பேரிருக்க, எழுதி எழுதியே கொல்வதற்கு இவர் ஒருவர்தான் இருக்கிறார்.

முன்னூறு வார்த்தைகளில் குதிரைப் பற்றி எழுத சொன்னார்கள் நம் தீவிரவாதியிடம். “காட்டுக்குள்ளே ஓடியது குதிரை டடக் டடக் டடக்  டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் என எழுதியதைப் பார்த்து மாரடைப்பு வந்த ஆசிரியரின் நினைவு நாள் சென்ற மாதம்தான் சென்றது.

வளர்ந்த பின் அவ்வபோது பத்திரிக்கைகளில் எழுதத் தொடங்கினார். அதில் கணிசமான கணக்கில் மரணங்கள் சம்பவித்தாலும் அடிக்கடி அது நிகழாமல் போனதில் வருத்தம் கொண்டார்.

எழுதி மட்டுமே பல பேரைக் கொல்ல முடியாதென்று தெரிந்துக் கொண்ட பின், பேசிப்பேசியே சாகடிக்க தொடங்கினார். பக்கத்து வீட்டுக்காரர் ஒருநாள் பைக்கில் வெளியே வந்தவுடன் ரைட்டிலே வந்துக் கொண்டிருந்தார். நேர்மையின் சிகரமான நம்மாளு காலை எட்டு மணிக்கு அவரிடம் கேட்டார் ”நான் வந்தது லெஃப்ட்டு.ஆனா ரைட்டு. நீங்க வந்தது ரைட்டு. ஆனா ரைட்டா?” அங்கேயே மயங்கி விழுந்தவர் இன்னமும் கோமாவிலே இருப்பதாக தெரிகிறது.

அப்படி இப்படி என  தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ப்ளாக் தொடங்கினார். 2008 மே மாதத்தில் இருந்து கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். சமீபத்திய லயோலா கருத்து கணிப்புப்படி தினம் தினம் செத்து மடியும் பதிவுலக வாசகர்களில் இவரால் மடிபவர்களே அதிகம் என்று தெரிகிறது.

தன் வயதை மறைக்க எப்போதும் ஷார்ட்சில் இருப்பது அவர் வழக்கம். சென்ற வாரம் ஒரு திருமணத்திற்கு சென்ற அவரிடம், ஒரு இளம்பெண் ஏதோ கேட்க இவரும் எடக்க மடக்காக சொல்லிவிட, அது மின்னஞ்சலில் ஒரு பெரிய விவாத பொருளாக வலம் வந்துக் கொண்டிருப்பதை பலரும் அறிவார்கள்.அந்தப் பெண்ணுக்கு என்னாச்சா? கேரளா பகவதியம்மன் கோவிலில் பேய் ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம். நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்ன தகவல்படி, இவரின் பெயரைத்தான் கேட்டிருக்கிறது அந்தப் பெண். நம்மாளு சொன்னது

சென்னை ரோடுல நெரிசல்

மதுரை பக்கம் கரிசல்

நம் நட்பிலில்லை விரிசல்

நல்லவன் என் பேரு ………..

எதை எழுதி இவரு சாவடிக்கிறாருன்னு யோசிச்சுப் பார்த்தா இவரு எதை எழுதினாலும் சாவடிக்கிறார்ன்னுதான் சொல்லத் தோணுதுங்க. பொதுவாக நல்ல வாசிப்பனுபவத்தை தருபவர்களே ந்ல்ல எழுத்தாளர்கள் என்று சொல்வார்கள். இவரு அனுபவத்தையே வாசிக்க தருவதால் நொல்ல எழுத்தாளர்ன்னு சொல்லலாம். ரொம்ப சொல்லியாச்சு. அவரு யாருன்னு இன்னமும் தெரியாதவங்க வலையுல்கிற்கு வந்து ஒரு வாரமே ஆகியிருக்ககூடும்.

  ராஜாவின் இசையைக் கேட்பவர்கள் சொல்லும் பிரபலமான வாச்கம் :ங்கொய்யால செத்து போலாம்டா ராஜாவுக்காகத்தான்..” அதேத்தான் இவருக்கும். இதேப்போல இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து எழுதி எழுதி எங்களை சாவடிக்க வாழ்த்துகிறோம் சகா.

தலைக்கு கீழேதான் கழுத்து-நம்ம

தலைக்கு எல்லாமே எழுத்து.

பி,கு: அவரது பிறந்த நாள் பரிசாக அவரது கதை ஒன்று இந்த வார விகடனில் வெளிவரவிருக்கிறது. 

39 கருத்துக்குத்து:

gayathri on May 13, 2009 at 10:11 AM said...

me they1st jsut wait padichitu varen

sakthi on May 13, 2009 at 10:11 AM said...

haiyoo yarunga anna athu

sakthi on May 13, 2009 at 10:12 AM said...

சரியாக நாற்பது வருடங்களுக்கு முன்.. ”கடவுளே!! இந்த மனித இனத்தின் கொடுமைக்கு அளவேயில்லையா? எங்களை அழித்து வரும் இவர்களுக்கு நீ தண்டனை தர மாட்டாயா” என அனைத்து மரங்களும் கடவுளிடம் முறையிட்டன.

nalla erukke intha kathai

அறிவிலி on May 13, 2009 at 10:13 AM said...

பரிசலுக்கு வாழ்த்துகள்.

விகடனுக்கும்.

gayathri on May 13, 2009 at 10:18 AM said...

ooooooooooooooooooooo avar than nampa parisala okok

டக்ளஸ்....... on May 13, 2009 at 10:34 AM said...

vazthukkal parisal...!

குசும்பன் on May 13, 2009 at 10:36 AM said...

பரிசலுக்கு வாழ்த்துக்கள்

//ஒரு இளம்பெண் ஏதோ கேட்க இவரும் எடக்க மடக்காக சொல்லிவிட, அது மின்னஞ்சலில் ஒரு பெரிய விவாத பொருளாக வலம் வந்துக் கொண்டிருப்பதை பலரும் அறிவார்கள்.//

கார்க்கி முழு பூசினிக்காயை சோற்றில் மறைக்கமுடியுமா? அப்புறம் அந்த மெயில் அனைத்தையும் நான் பதிவாக போடுவேன் சாக்கிரதை:)

மண்குதிரை on May 13, 2009 at 10:56 AM said...

வித்தியாசமான வாழ்த்து. வாழ்த்துகிறேன் நானும்.

பட்டாம்பூச்சி on May 13, 2009 at 11:02 AM said...

நேத்து சொன்ன மாதிரியே,பதிவு வந்திருக்குப்பா. கலக்கல்.

பரிசலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் :)
படைப்பு வெளிவந்தமைக்கும் வாழ்த்துகள் அவருக்கு.

//கார்க்கி முழு பூசினிக்காயை சோற்றில் மறைக்கமுடியுமா? அப்புறம் அந்த மெயில் அனைத்தையும் நான் பதிவாக போடுவேன் சாக்கிரதை:)//

குசும்பன் அண்ணே, அதைத்தான நானும் கார்க்கியும் எதிர்பார்த்துட்டு இருக்கோம்.சீக்கிரமா பதிவை போடறது இல்லேன்னா தனிமடல் போடறது ;)

Bleachingpowder on May 13, 2009 at 11:12 AM said...

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு இப்போ பரிசலையேவா.நடத்துங்க

மறக்காம என்னோட வாழ்த்தை சொல்லீடுங்க தல

கலையரசன் on May 13, 2009 at 11:38 AM said...

அருமை, கார்கி..பைக்கி..சைக்கள்கி..
பதிவை ரசிச்சேன்.. பரிசல் அண்ணாவுக்கு வாழ்த்துகள்..
அப்படியே நம்ம கட பக்கம் வார்ரது?
www.kalakalkalai.blogspot.com

கார்க்கி on May 13, 2009 at 12:23 PM said...

வாங்க காயத்ரி..

சக்தி, அவருதான் எங்க கொல தெய்வம் பரிசல் அங்கிள்

நன்றி அறிவிலி

நன்றி டக்ளஸ்

குசும்பரே சீக்கிரம் பதிவு போடுங்க

நன்றி மண்குதிரை

பட்டாம்பூச்சி, எல்லாம் உங்க ஆசீர்வாதம்.. ஷிட்சுகே.. செய்ரி..
*****************

/ Bleachingpowder said...
ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு இப்போ பரிசலையேவா.நடத்துங்//

தல, அப்ப பரிசல் ஆடு , மாடு மாதிரின்னு சொல்றீங்களா? ஆவ்வ்

*************

கலையரசன், கலையரசி,கலைமந்திரி, கலைசேவகன், கலைவீரன் நன்றிங்க.. வந்து பார்க்கிரேன்

அன்புடன் அருணா on May 13, 2009 at 12:32 PM said...

ஹாஹாஹாஹஹா.....கலக்குறே கார்க்கி!!!!
அன்புடன் அருணா

mayil on May 13, 2009 at 12:42 PM said...

சந்தடி சாக்கில் நாற்பது வயசுன்னு போட்டு கொடுக்கறீங்க.... நல்ல இருங்க...

வெண்பூ on May 13, 2009 at 12:51 PM said...

யோவ்.. வாழ்த்தெல்லாம் சரி.. ஆனா பிறந்த வருசம் தப்பா இருக்குற மாதிரி இருக்கே.. அவரு யூத்துன்னு நீயும் நம்பிட்டயா சகா?

Mahesh on May 13, 2009 at 1:26 PM said...

கொன்னுட்டீங்க போங்க !! இன்னொருக்கா உங்களோட சேந்து வாழ்த்து கூவிக்கிறேன் !!!!

(நம்ம கடைக்கும் வந்து போனதுக்கு நன்றி)

கார்க்கி on May 13, 2009 at 1:55 PM said...

நன்றி அருணா

மயில்.. அது உங்களுக்கு தெரியாதா????

நாற்பதே யூத்தா? அப்ப நீங்களும் யூத்தா சகா?

உங்க கடைக்கு தினமும்தான் வர்றோம்.. பின்னூட்டம் தான் அப்பப்ப போடறோம் துக்ளக்.. :))

மணிநரேன் on May 13, 2009 at 2:01 PM said...

பரிசலுக்கு வித்தியாசமான வாழ்த்து கார்க்கி...நன்றாக உள்ளது.

Chill-Peer on May 13, 2009 at 2:10 PM said...

//பேசிப்பேசியே சாகடிக்க இங்கே ஆயிரம் பேரிருக்க, எழுதி எழுதியே கொல்வதற்கு இவர் ஒருவர்தான் இருக்கிறார்.//

கார்க்கி முதல் வகையா?

வாழ்த்துக்கள்...

விஷ்ணு. on May 13, 2009 at 2:15 PM said...

பரிசலுக்கு வாழ்த்துக்கள்

தீப்பெட்டி on May 13, 2009 at 2:41 PM said...

பரிசலாருக்கு வாழ்த்துகள்...

MayVee on May 13, 2009 at 5:05 PM said...

:-))

குசும்பன் on May 13, 2009 at 6:10 PM said...

// இல்லேன்னா தனிமடல் போடறது ;)//

என்னது தனிமடலா? அவ்வ்வ்வ்வ் நான் மாட்டேன்ப்பா:))))))))))))

Karthik on May 13, 2009 at 6:30 PM said...

this is what karki style.. missed this for long.. hope you do write like this often..

fantastic!! :)))

happy bday and congrats for parisal! :)

தாரணி பிரியா on May 13, 2009 at 6:45 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரிசல்

sakthi on May 13, 2009 at 6:54 PM said...

Happy birthday to u parisalkarare

புதுகைத் தென்றல் on May 13, 2009 at 7:02 PM said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆதிமூலகிருஷ்ணன் on May 13, 2009 at 8:23 PM said...

கொலைசெய்யப்பட்ட இன்னொருவனின் வாழ்த்துகளும் பரிசல் உங்களுக்கு.!

வித்யா on May 13, 2009 at 9:38 PM said...

வாழ்த்துகள் பரிசல்:)

தமிழ்ப்பறவை on May 13, 2009 at 10:23 PM said...

பரிசலுக்கு வாழ்த்துக்கள் .. 40 வயசாயிருச்சா...?!

pappu on May 14, 2009 at 2:49 AM said...

சென்னை ரோடுல நெரிசல்

மதுரை பக்கம் கரிசல்

நம் நட்பிலில்லை விரிசல்

நல்லவன் என் பேரு ………../////

பரிசல் மாமா தான?

அவருக்கு ஒரு வாழ்த்து.

கார்க்கி on May 14, 2009 at 8:01 AM said...

வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் சார்பிலும், பரிசல் மாமா(அங்கிளுங்க) சார்பிலும் நன்றி.. நன்றி..நன்றி..

பிரபா on May 14, 2009 at 8:52 AM said...

சும்மா அதிருதில்ல .......

கோவி.கண்ணன் on May 14, 2009 at 11:23 AM said...

//அப்படி இப்படி என தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ப்ளாக் தொடங்கினார். 2008 மே மாதத்தில் இருந்து கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். //

:)

இதுவரை 300 பேர் பின் தொடர்ந்து மாய்ந்ததாக கேள்வி.

அமிர்தவர்ஷினி அம்மா on May 14, 2009 at 12:09 PM said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு. பரிசல்காரருக்கு..

Poornima Saravana kumar on May 14, 2009 at 2:55 PM said...

பிறந்த நாள் வாழ்த்துகள் பரிசல் அண்ணா:)

கும்க்கி on May 14, 2009 at 7:41 PM said...

க க க போ
கொன்னுட்ட.

கும்க்கி on May 14, 2009 at 7:42 PM said...

அங்கிளுக்கு(எனக்கில்லப்பா)எனது வாழ்த்தையும் பதிசெய்து கொல்கிறேன்.

வால்பையன் on May 14, 2009 at 8:43 PM said...

அப்ப சரி
செத்து செத்து விளையாடலாம்!

 

all rights reserved to www.karkibava.com