May 7, 2009

சிக்கி சீரழிஞ்ச கண்டக்டர்


 

  

   அன்று வழக்கம்போல தேவி பாரில் பீராபிஷேகம் முடிந்து, தேவி பேரடைசில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். உன்னைக் கொடு என்னைத் தருவேன் என்ற அந்தக் காவியத்தை அரை மப்பிலும் முழுமையாக கண்டு களித்தார் ஏழு. அரங்கிற்குள் பாலாஜி மறைத்து எடுத்து வந்த பியர் பாட்டில் ஏழுவின் கண்களில் பட்டுவிட, எங்களை ஏமாற்றி அதில் பாதியை அடித்து விட்டான். வெளியே வந்தவன் அடுத்தக் காட்சிக்காக நின்றுக் கொண்டிருந்தவர்களிடம் சென்றான்.

அய்யா.அம்மா.. கெஞ்சிக் கேட்டுக்கறேன். இந்தப் படத்துக்கு மட்டும் போயிடாதீங்க.

ஏண்டா இப்படி செய்ற என்று அடித்து இழுத்து வந்தான் ஆறு. செஞ்ச பாவத்த இப்படியாவது கழுவிக்கலாம்ன்னு பார்த்தேன் மச்சி என்றான்.

    வெளியே வந்தவனை பஸ்ஸில் ஏற்றுவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது. இவன் ஏறும்போது கண்டக்டர் சாந்தி எல்லாம் இறங்கு என்று கத்திக் கொண்டிருந்தார். எதிரில் இறங்கிய ஃபிகரிடம் கேட்டார் ஏழு

சிஸ்டர். உங்க பேரு சாந்தியா?.

   முறைத்துக் கொண்டே சென்றாள் சாந்தி. ச்சே.  ஃபிகர். ச்சே.  அந்தப் பெண். பஸ்சில் கொஞ்சம்தான் கூட்டம் என்றாலும் நாங்கள் அனைவரும் ஃபுட்போர்டிலே நின்றுக் கொண்டிருந்தோம். ஏழுவும் எங்களோடு வந்து சேர்ந்துக் கொண்டான். கையிலிருந்த புத்தகத்தை ஜன்னலோர ஆண்ட்டியிடம் கொடுத்தான். அவரும் முறைத்துக் கொண்டே வாங்கிக் கொண்டார்.

ஃபுட்போர்டுல நிக்கறவங்க டிக்கெட் எடுத்தாச்சா? ரெட் சட்டை..(ஏழுவைத்தான்)எங்க போறீங்க என்றார் கண்டக்டர்.

டிக்கெட் எடுத்தா நான் சொர்க்கதுக்கு. இவனுங்க எல்லாம் நரகத்துக்கு என்றான் ஏழு.

மெலிதாக சிரித்த கண்டக்டர், சொல்லுப்பா. அடுத்த ஸ்டாப்புல செக்கிங் இருக்காங்க. எங்க போனும் என்றார்.

ஹாஸ்டலுக்கு என்றான் ஏழு.

நக்கலா?இந்த முறை முறைந்துக் கொண்டே சொன்னார்.

ஆறு..அடையாறு.. மானிக் பாட்ஷா ரேஞ்சில் சொன்னான் ஏழு.

எத்தனை?

அதான் சொன்னேனில்ல. ஆறு.. அடையாறு.. என்றான் மீண்டும்.

24 ரூபாய் என்றபடி கைகளில் டிக்கெட்டை திணித்தார். 24 ரூபாயா என்று அலறியவன் கண்டக்டரிடம் கெஞ்சினான்.

சார். நான் ஸ்பான்சர்ஷிப்ல படிக்கிறேன் சார். எங்கம்மா கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வைக்கறாங்க சார். இவ்ளோ காசு கொடுக்க முடியாது. கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க சார். 

   கடுப்பான கண்டக்டர் எங்களை முறைத்தார். நரகத்துக்கு போவாங்கன்னு சொன்னா சிரிக்கறியா? மவனே அவன்கிட்ட மாட்டிட்டு சாவுன்னு மனதுக்குள் நினைத்துக் கொண்டு திரும்பி விட்டோம்.

டிக்கெட் எடுக்கலன்னு அடுத்த ஸ்டாப்புல புடிச்சிட்டா போச்சு. எங்கிட்டவே விளையாடறிங்களான்னு எஸ்.கேனார்(அதாங்க.. பொலம்பினார்) அவர்.

கட்டண உயர்வை எதிர்த்து நூதன முறையில் மாணவர்கள் போராட்டம் என்று சொன்ன ஏழு, “தமிழக அரசே தமிழக அரசே: என்றுக் கத்த தொடங்கியதும் ஆறுவிற்கு உதற தொடங்கியது. அவனே பணத்தைத் தந்தான். ஏழுவிடன் நோட்டைக் கொடுத்த ஆண்ட்டி, இது என்ன வெயிட்டாவா இருக்கு? கைல வச்சிக்க முடியாதான்னு கோவத்துடன் தந்தது.

நோட்டை வாங்கிய ஏழு சொன்னான்,” நாங்க மெக்கானிக்கல் ஸ்டூண்ட்ஸ் ஆண்ட்டி. மெக் வெய்ட்டு தெரியுமில்ல”

டேய்.பேசஞ்சர் கிட்ட கலாட்டா பண்ணா போலிஸ் ஸ்டேஷன்தான் போகனும் என்றார் கண்டக்டர்.

மச்சி. நம்மள எல்லாம் படிச்சு என்னத்த கிழிச்ச கேட்கறாங்களே. இவர கண்டக்டர் ஆகி என்னத்த கிழிச்சன்னு கேட்கவே முடியாதில்ல என்றான்.

கடுப்பான அவர், டிரைவரிடம் வண்டியை போலிஸ் ஸ்டேஷனுக்கு ஓட்ட சொன்னார். அந்த ரூட்டில் எந்த போலிஸ் ஸ்டேஷனுல்ம் இல்லை என்பதை அறிந்து சிரித்துக் கொண்டிருந்தோம் நாங்கள்.

உங்க ஃபோன் நம்பர் கொடுங்கண்ணா. இது ஏழு

எதுக்குடா? சும்மா வாயா மூடிட்டு வா என்றான் ஆறு.

இல்ல மச்சி. எத்தனை நாள்தான் கண்டக்டராவே இருப்பாரு. நாம ஒரு கால் போட்டா கண்”டா”க்டர் ஆயிடுவாரில்ல என்ற ஏழுவின் அறிவு செறிந்த ஜோக்கு புரியாமல் விழித்தார் நடத்துனர்.

மச்சி இப்படியே பேசிட்டு இரு. உன்னை ட்ரங்க அண்ட் ட்ரைவ்ல புடிச்சி உள்ளப் போட போறாங்க என்றேன் நான்.

டிரைவர் தான்டா ஓட்டறாரு. என்னை ஏன் புடிப்பாங்க?

நீயும் தண்ணியடிச்சிட்டு எல்லோரையும் ஓட்டிட்டுத்தானே வற்ர என்ற என்னை அடிக்க மொத்த குழுவும் துரத்தியது.

44 கருத்துக்குத்து:

வித்யா on May 7, 2009 at 10:25 AM said...

அப்படியே புட்போர்டிலிருந்து தள்ளிவிடாம விட்டாரே கண்டக்டர் அவர சொல்லனும்.

டக்ளஸ்....... on May 7, 2009 at 10:26 AM said...

Just missu vidya Akka..!

டக்ளஸ்....... on May 7, 2009 at 10:31 AM said...

என் வேலை போச்சுன்னா. நீங்கதான் பொறுப்பு..!

Cable Sankar on May 7, 2009 at 10:49 AM said...

:)\

மண்குதிரை on May 7, 2009 at 11:07 AM said...

வணக்கம் நண்பா. வந்தேன்.

விமல் on May 7, 2009 at 11:12 AM said...

தண்ணி அடித்து விட்டு மப்பில் என்னுடைய நண்பர்கள் செய்த அலம்பல்களை நினைத்துப் பார்க்கிறேன்..

கல்லூரி கால நினைவுகளை அசை போட வைத்தது உங்களுடைய பதிவு..நன்றி..!!

இருந்தாலும் அந்த கண்டக்டர் ரொம்ப பாவம் தான் :-)

ஆமாம் இந்த மாதிரி பதிவெழுத உட்கார்ந்து யோசிப்பிங்களோ !!

ஸ்ரீமதி on May 7, 2009 at 11:17 AM said...

அச்சச்சோ முடியல :((((

கயல்விழி நடனம் on May 7, 2009 at 11:24 AM said...

//வித்யா said...
அப்படியே புட்போர்டிலிருந்து தள்ளிவிடாம விட்டாரே கண்டக்டர் அவர சொல்லனும்.

repeatttttttttttt

MayVee on May 7, 2009 at 11:27 AM said...

pavam elu

அன்புடன் அருணா on May 7, 2009 at 11:36 AM said...

பாவம் அந்தக் கண்டக்டர்!!!
அன்புடன் அருணா

பிரியமுடன்.........வசந்த் on May 7, 2009 at 11:44 AM said...

//24 ரூபாய் என்றபடி கைகளில் டிக்கெட்டை திணித்தார். 24 ரூபாயா என்று அலறியவன் கண்டக்டரிடம் கெஞ்சினான்.

சார். நான் ஸ்பான்சர்ஷிப்ல படிக்கிறேன் சார். எங்கம்மா கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வைக்கறாங்க சார். இவ்ளோ காசு கொடுக்க முடியாது. கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க சார். //

ஹிஹி......ஹா ஹா
,,,ஆகா.......

vinoth gowtham on May 7, 2009 at 11:57 AM said...

//உன்னைக் கொடு என்னைத் தருவேன் என்ற அந்தக் காவியத்தை அரை மப்பிலும் முழுமையாக கண்டு களித்தார் ஏழு. //

ரொம்ப நல்ல படம் ஆயிற்றே எத்தனை முறை வேண்டும் ஆனாலும் பார்க்கலாம்..

பிரியமுடன்.........வசந்த் on May 7, 2009 at 12:04 PM said...

vinoth gowtham on May 7, 2009 11:57 AM said...
//உன்னைக் கொடு என்னைத் தருவேன் என்ற அந்தக் காவியத்தை அரை மப்பிலும் முழுமையாக கண்டு களித்தார் ஏழு. //

ரொம்ப நல்ல படம் ஆயிற்றே எத்தனை முறை வேண்டும் ஆனாலும் பார்க்கலாம்..


மிகச்சரியாக சொன்னீர்

எம்.எம்.அப்துல்லா on May 7, 2009 at 12:07 PM said...

அசத்தல்டா கார்க்கி :)

கோபிநாத் on May 7, 2009 at 12:24 PM said...

கலக்கல் சகா...;))))))))))))))))))

முரளிகண்ணன் on May 7, 2009 at 12:25 PM said...

ரசிச்சு சிரிச்சேன் கார்க்கி

தராசு on May 7, 2009 at 12:27 PM said...

//நாங்கள் அனைவரும் ஃபுட்போர்டிலே நின்றுக்
கொண்டிருந்தோம்//

கால்ல என்ன போர்டு மாட்டியிருந்தீங்க???

Bleachingpowder on May 7, 2009 at 12:33 PM said...

//உன்னைக் கொடு என்னைத் தருவேன் என்ற அந்தக் காவியத்தை அரை மப்பிலும் முழுமையாக கண்டு களித்தார் ஏழு//

புதிய கீதை, நெஞ்சினிலே படத்தை சரக்கடிக்காமலேயே முழுசா பாத்த நம்ம ஏழுவுக்கு இதெல்லாம் ஜுஜூபி ;)


//வெளியே வந்தவனை பஸ்ஸில் ஏற்றுவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது.//

அஜீத் படம் பார்த்தார்ன்ற ஒரே காரணத்திற்காக அவர் பஸ்ஸில் ஏத்தி கொலை செய்ய துணிந்த விஜய் ரசிகர்கள் கடும் கண்டனத்திற்குறியவர்கள்.

//நான் ஸ்பான்சர்ஷிப்ல படிக்கிறேன் சார். //

கார்ப்ரேஷன் ஸ்கூல ஸ்பான்சர்ஷிப்பெல்லாம் இருக்கா?? இது தெரியாம நான் ஒரு எழெட்டு தடவ ஃபீஸ் கட்டிடேனே தல

துஷா on May 7, 2009 at 12:52 PM said...

"நீயும் தண்ணியடிச்சிட்டு எல்லோரையும் ஓட்டிட்டுத்தானே வற்ர"

சுப்பர் அண்ணா
சிரிக்கும் நிலையில்
இல்லையென்றாலும் சிரிக்க வைத்து விட்டிர்கள்

கார்க்கி on May 7, 2009 at 1:18 PM said...

@வித்யா,

ஏழுவ தொட முடியுமா?

**************
@டக்ளஸ்,

என்ன சொன்னாரு டேமேஜரு?

**********
சிரிப்புக்கு நன்றி சங்கர்ஜி

***************
நன்றி மண்குதிரை

***************
சில நேரம் நடக்கும் போது, படுக்கும் போது கூட யோசிப்பதுண்டு விமல் :))

************
@ஸ்ரீமதி,

ஏழுவின் அட்டகாசங்கள் முடியாது

***************
@கயல்விழி,

வித்யாவுக்கு நான் சொன்ன பதிலு ரிப்பீட்டு

*************
@மேவீ,

அவன் ஏன் பாவம் சகா?

கார்க்கி on May 7, 2009 at 1:21 PM said...

@அருணா,

ஆமாங்க..

**************
@வீனோத்,

கிர்ர்ர்ர்ர்ர்

***********
@வசந்த்,

அவரு நல்லவ்ரு. அபப்டித்தா சொல்வாருங்க

************
நன்றி அபுதுல்லாண்ணே

************

நன்றி முரளி

*************
@தராசு,

ஹிஹிஹி. எந்த ஸ்கூலுங்க நீங்க? (இப்ப இல்ல, 50 வருஷம் முன்னாடி)

*************
@ப்ளீச்சிங்க,
தல அப்புறம் குசேலன்னு மாத்திடுவேன்.. :)))

****************
@துஷா,,

எதுவும் சொல்ல முடியலம்மா.. :((பயந்துட்டே இருந்தேன். சரியா வரலையைன்ன்னு.. ஏழுவுக்கு அமோக ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

தீப்பெட்டி on May 7, 2009 at 1:25 PM said...

//எம்.எம்.அப்துல்லா on May 7, 2009 12:07 PM said...

அசத்தல்டா கார்க்கி :)
கோபிநாத் on May 7, 2009 12:24 PM said...

கலக்கல் சகா...;))))))))))))))))))
முரளிகண்ணன் on May 7, 2009 12:25 PM said...

ரசிச்சு சிரிச்சேன் கார்க்கி
//

அட என்னதான் சொல்லுறது.. எல்லாத்தையும் இவுங்களே சொல்லிட்டாங்களே....

மத்தவுங்களுக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்களேன் பாஸ்.....

நான் ஆதவன் on May 7, 2009 at 1:32 PM said...

அசத்தல் சகா :)

மாசற்ற கொடி on May 7, 2009 at 2:23 PM said...

இந்த முறையும் ஏழு ஏமாத்தல ! உங்க பேரை தமிழ் மணத்துல வரவைக்க என்னெல்லாம் பண்றீங்க -

அப்புறம் - கொஞ்ச நாளா பிஸி (வேலையால் இல்ல!)

அன்புடன்
மாசற்ற கொடி

தமிழ் பிரியன் on May 7, 2009 at 3:17 PM said...

நல்லா ரசிச்சேனுங்க

sundar on May 7, 2009 at 3:32 PM said...

//கண்டக்டர் சாந்தி எல்லாம் இறங்கு என்று கத்திக் கொண்டிருந்தார். எதிரில் இறங்கிய ஃபிகரிடம் கேட்டார் ஏழு சிஸ்டர். உங்க பேரு சாந்தியா?//
நல்ல டைமிங் சென்ஸ்

pappu on May 7, 2009 at 4:41 PM said...

ஆர்.டி.ஓ. ஆபிசருக்கே ஏழரை போட்டு காண்பிக்கும் ஏழுவுக்காக 'ஏழு ரசிகர் மன்றம்' ஆரம்பிக்குறோம். விருப்பமுள்ளவர்கள் சேரலாம்.

-இவண்
ஏழு ரசிகர் மன்ற செயலாளர்.

ஆதிமூலகிருஷ்ணன் on May 7, 2009 at 5:18 PM said...

ரசித்தேன்..

குசும்பன் on May 7, 2009 at 5:33 PM said...

அருமையாக இருக்கு கார்க்கி!

"அகநாழிகை" on May 7, 2009 at 5:41 PM said...

கார்க்கி,
அப்படியா..
நடக்கட்டும்.. நடக்கட்டும்..


“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

வால்பையன் on May 7, 2009 at 6:54 PM said...

ஏழு ரவுசு தாங்க முடியலையே!

அடித்த முறை பதிவர் சந்திப்புக்கு வரும் போது கூட்டிவாங்க!

கார்க்கி on May 7, 2009 at 6:57 PM said...

நன்றி தீப்பெட்டி

***********
நன்றி ஆதவன்
************
நன்றி மாசற்ற கொடி.என்ன பிசிங்க???

*************

நன்றி தமிழ்பிரியன். எப்போ எழுத ஆரம்பிக்க போறீங்க?

************

நன்றி சுந்தர்

************
நன்றி பப்பு. ஏற்கனவே ஒன்னு ஆரம்பிச்சாங்க. அப்புறம் விட்டாங்க..:)

************
நன்றி ஆதி

**************
இப்படி உங்க வாயால சொல்ல வைக்க ரொம்ப நாளாயிடுச்சு குசும்பரே

*************
வாங்க அகநாழிகை. திருச்சி பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்

Sinthu on May 7, 2009 at 7:32 PM said...

ஏழு அண்ணா தான் எப்படித் தண்ணி அடித்தாலும் தெளிவாக இருக்கிறார்? எப்படி எண்டு கேட்டு சொல்லுங்களேன் கார்க்கி அண்ணா?

அத்திரி on May 7, 2009 at 8:41 PM said...

சகா கலக்கல்

தமிழ்ப்பறவை on May 7, 2009 at 9:37 PM said...

சகா...
ஆஃப்டர் எ லாங் கேப், ஏழுவின் ஏடாகூடம் ஏ ஒன்.
//செஞ்ச பாவத்த இப்படியாவது கழுவிக்கலாம்ன்னு பார்த்தேன் மச்சி//
ஹி..ஹி...
//அதான் சொன்னேனில்ல. ஆறு.. அடையாறு.. //

நல்லாயிருக்கு சகா...

தமிழ்ப்பறவை on May 7, 2009 at 9:40 PM said...

//ஏழு ரவுசு தாங்க முடியலையே!

அடித்த முறை பதிவர் சந்திப்புக்கு வரும் போது கூட்டிவாங்க!//
கண்டிப்பா... கார்க்கி இருந்தா அங்க ஏழும் இருப்பார்.அவங்கள்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு

Kathir on May 7, 2009 at 9:40 PM said...

:))

shabi on May 8, 2009 at 12:55 AM said...

காலமெல்லாம் காத்திருப்பேனு ஒரு மகா மொக்க படம் அந்த படம்னு போட வேண்டியது தான இங்க ஏன் அஜித் படம் பத்தி போடணும்

shabi on May 8, 2009 at 12:56 AM said...

ரிப்ளை போடணும்

பாலா... on May 8, 2009 at 3:25 AM said...

:))..லொள்ளின் உச்சம்.

Lancelot on May 8, 2009 at 8:57 AM said...

kadi thaangala...ada da da da da da da da da da da....

Karthik on May 8, 2009 at 4:28 PM said...

ஹா..ஹா. :))

'அல்டிமேட்' கார்க்கி. (இதை விட நல்ல வார்த்தை கிடைக்கலை. ஹி..ஹி.) ;)

//ரொம்ப நல்ல படம் ஆயிற்றே எத்தனை முறை வேண்டும் ஆனாலும் பார்க்கலாம்..

ரிப்பீட்டேய்ய்ய்! :P

வள்ளி on May 8, 2009 at 5:33 PM said...

சிரித்தேன் சகா.
எழுவ கூட்டிக்கொண்டு வந்ததற்கு நன்றி.

கார்க்கி on May 9, 2009 at 8:30 PM said...

நன்றி சிந்து, அத்திரி, தமிழ்பறவை, பாலா, கதிர், lancelot,கார்த்திக், வள்ளி..

ஷாபி,

நாங்க எந்த படத்துக்கு போனோமோ அதத்தானே சொல்ல முடியும். நீங்க சொன்ன படமும் மொக்கைதான்.. ஆனா இந்தளவுக்கு இல்ல.. :)))

 

all rights reserved to www.karkibava.com