May 6, 2009

ஷாரூக் - நைட் ரைடர்ஸ் - தாதா..வடை போச்சே!!!!
   அடி மேல் அடி வச்சால் அம்மியும் நகரும். அடி மேல் அடி வாங்கினால் என்ன நகரும்? கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிலைமை இப்படி ஆயிடுச்சுங்க. “என்னங்க சிவாஜி இப்படி ஆயிடுச்சேன்னு” கேட்ட மாதிரி : என்னங்க ஷாருக் இப்படி ஆயிடுச்சேன்னு” பாலிவுட்டே கலாய்க்க போகிறது. உஷாரா நம்ம தாதா ஃபேன்ஸ் அவர் கேப்டன் இல்லை என்பதால் ஆதரவை வாபஸ் வாங்கிட்டாங்க. என்னால் முடியல. அவரு ஜெயிச்சாலும் தோத்தாலும் தாதா தாத்தாதான்.. ச்சே தாதா தாதாதான்..

நாலு கேப்டன், மூனு விக்கெட் கீப்பர்ன்னு இந்த வருஷம் புது புது திட்டங்கள் அறிவிச்ச மாதிரி அடுத்த வருஷம் என்ன சொல்லலாம்னு ஷாரூக் யோசிச்சிட்டு இருக்காராம்.அதான்  அவருக்கு சில டிப்ஸ்.

1) ஏதோ orange கேப்பாம். அத போட்டவங்கதான் அதிக ரன் குவிச்சவராம். நாம என்ன செய்வோம்ன்னா மனீஷ் மல்ஹோத்ராகிட்ட சொல்லி நம்ம ஜெர்ஸியே ஆரஞ்ச் கலர்ல மாத்திடுவோம். மேட்சிங்கா ஆரஞ்ச் கலர் கேப். எப்படி ஐடியா? நம்ம டீம்ல எல்லோருமே அதிக ரன் அடிச்சவஙக்ளா ஆயிடுவாங்க.

2) நாலு கேப்டன் தேவைன்னு சொன்னாரே புச்சனன். அவரு ஐடியாவ அப்படியே அவருக்கும் அப்ளை பண்ணுவோம். அவர மாதிரியே பல நல்ல கோச்சு இருக்காங்க. பவுலிங்க்கு நம்ம வெங்கடேஷ் பிரசாத், அப்புறம் ரமீஸ் ராசா, இப்படி நாலு கோச் வச்சுப்போம். புச்சனன் வேலை என்னன்னா இந்த நாலு கோச்சுக்கும் அவர் கோச். ஏன்னா பிரசாத்துக்கு இன்னமும் பவுலிங் சரியா போட தெரியாதாம். கோச்சுக்கே கோச்சு. எப்படி?????

3) நாம முக்கியமா செய்ய வேண்டியது அகர்காருக்கு நிறைய வாய்ப்பு தரணும். எல்லா மேட்சிலும் அவருக்கு ஒரு ஓவர்தான் தர்றோம். அவர் அதிலே 15 ரன் கொடுத்துட்டு போயிடறாரு. இன்னும் ரெண்டு மூனு ஓவர் கொடுத்தாதானே அவரப் பத்தி தெரியும் .அதுக்குன்னு 18, 19வது ஓவர் கொடுக்க கூடாது. அப்புறம் 20வது ஓவர் போடற வாய்ப்பு யாருக்குமே கிடைக்காது.

4) இன்னும் சில வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுப்போம். ஆனா அவங்கள வெளில உட்கார வச்சு மேட்ச் பார்க்க வைப்போம். அத பார்த்துட்டு அவங்க நாம் செய்ற தப்பையெல்லாம் சொல்லட்டும். 2011 IPL ல நம்மல திருத்திக்க அது உதவும்.

5) இந்த தடவ புச்சனன் நாலு பேர் பத்தாது, அஞ்சு வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்கனும்னு சொன்னாரிlல்ல. அது மாதிரி ஃபீல்டிங் பண்ணும்போது 11 பேர் பத்தல. இன்னும் ரெண்டு பேர் ஃபீல்டிங்குக்கு மட்டும் தேவைன்னு சொல்ல சொல்லுவோம். அவர் எத வேணும்னாலும் சொல்லுவாருங்க. ஷேன் வார்ன் அவருக்கு வச்ச செல்ல பேரு என்ன தெரியுமா? Verbal diarrhea

6) ப்ரீத்தி, ஷில்பான்னு கலக்கிட்டு இருக்காங்க மத்த டீம். கொஞ்சம் வயசானாலும் ஜூஹி நம்ம கிட்ட இருக்காங்க. அவங்கள விட்டு கட்டிப்புடி வைத்தியம் பார்க்க வச்சாலாவது நம்ம பசங்க விளையாடறாங்களாம் பார்க்கலாம். என்ன, கேட்ச்சையே ஒழுங்கா புடிக்க தெரியாது நம்ம பயபுள்ளைங்களுக்கு. ஜூஹியாவது சரியா புடிக்கறாங்களான்னு பார்ப்போம்.

7) இதெல்லாம் எதுக்குன்னு யோசிச்சா, பேசாம டீம வித்துட்டு போயிடலாம். என்ன சொல்றீங்க?


டிஸ்கி: ஷாருக்கானுக்கு பத்து அறிவுரைகள்ன்னுதான் போடலாம்னு நினைச்சேன். போடாததுக்கு ரெண்டு காரணம். 10 வியாதி இன்னும் போகலையான்னு கும்க்கி பின்னூட்டம் போடுவாரு. ரெண்டாவது காரணம், மீதி நாலு பாய்ண்ட்ட  யோசிக்கறதுக்குள்ள டேமேஜர் மீட்டிங்குக்கு கூப்பிடறாரு.

38 கருத்துக்குத்து:

கயல்விழி நடனம் on May 6, 2009 at 11:35 AM said...

//இதெல்லாம் எதுக்குன்னு யோசிச்சா, பேசாம டீம வித்துட்டு போயிடலாம். என்ன சொல்றீங்க?


நீங்க கொடுத்ததிலேயே நல்ல யோசனை இது தான்.. :D

விஜய் ஆனந்த் on May 6, 2009 at 11:41 AM said...

:-)))...

nondhu poirukkaravangala noondi udareengalae....

ஸ்ரீமதி on May 6, 2009 at 12:02 PM said...

பேசாம நீங்க போயி விளையாடலாம் :)))

அறிவிலி on May 6, 2009 at 12:03 PM said...

//பேசாம டீம வித்துட்டு போயிடலாம்//

ஒரு படம்னாலும் சூப்பர் ஹிட் குடுத்துருக்கீங்க. நீங்களே ஏன் வாங்கறத பத்தி யோசிக்க கூடாது?

டக்ளஸ்....... on May 6, 2009 at 12:09 PM said...

யாரோ சடு பார்ல "சப்போர்ட் நட் ரைடர்ஸ்"னு வச்சுருந்தாங்கலாம்ல..!

டக்ளஸ்....... on May 6, 2009 at 12:10 PM said...

\\ஒரு படம்னாலும் சூப்பர் ஹிட் குடுத்துருக்கீங்க. நீங்களே ஏன் வாங்கறத பத்தி யோசிக்க கூடாது?\\

Repeattututut..!

தமிழ்ப்பறவை on May 6, 2009 at 12:11 PM said...

கிரிக்கெட்டுக்கும் எனக்குமான தொடர்பு , எனக்கும், என் பக்கத்து வீட்டு ஃபிகருக்கும் உள்ளதைப் போல் ரொம்ப தூரம்.
இருந்தும் ‘வட போச்சே’ மேட்டர் சூப்பர்.
//புச்சனன் வேலை என்னன்னா இந்த நாலு கோச்சுக்கும் அவர் கோச்.//
கோச்சுக்காம வேலை வாங்கினா சரி.
//அதுக்குன்னு 18, 19வது ஓவர் கொடுக்க கூடாது. அப்புறம் 20வது ஓவர் போடற வாய்ப்பு யாருக்குமே கிடைக்காது. //
ஹி..ஹி..
//என்ன, கேட்ச்சையே ஒழுங்கா புடிக்க தெரியாது நம்ம பயபுள்ளைங்களுக்கு. ஜூஹியாவது சரியா புடிக்கறாங்களான்னு பார்ப்போம்.//
ஒரு பந்துன்னாத்தான் கேட்ச் பிடிக்க நம்ம பயலுக கஷ்டப் படுவானுங்க... ஆனா...:-P

முரளிகண்ணன் on May 6, 2009 at 12:12 PM said...

அருமை கார்க்கி

தீப்பெட்டி on May 6, 2009 at 12:19 PM said...

பாவம்பாஸ்.... ஷாரூக்
விட்டுருங்க.. நொந்துபோய் இருக்கார்..

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ on May 6, 2009 at 12:33 PM said...

எப்போ நம்ம தாதாவை கேப்டன் பதவியில இருந்து தூக்கினாங்களோ அப்போவே சாபம் விட்டுட்டேன். ஷாருக் கான் டீம் கேவலமா தோக்கனும்னு. பலிச்சதுல ரொம்ப சந்தோஷம். :))

விக்னேஷ்வரி on May 6, 2009 at 12:43 PM said...

அவரு ஜெயிச்சாலும் தோத்தாலும் தாதா தாத்தாதான்.. ச்சே தாதா தாதாதான்.. //

முதல்ல சொன்னதே சரி தான். தாத்தா தான். ;)

கோச்சுக்கே கோச்சு. எப்படி????? //

வெளங்குனாப்புல தான்.

இன்னும் சில வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுப்போம். ஆனா அவங்கள வெளில உட்கார வச்சு மேட்ச் பார்க்க வைப்போம். அத பார்த்துட்டு அவங்க நாம் செய்ற தப்பையெல்லாம் சொல்லட்டும். 2011 IPL ல நம்மல திருத்திக்க அது உதவும் //

ஷாரூக் அம்பேல் ஆகுறதுல உங்களுக்கு அவ்வளவு ஆர்வமா...

இதெல்லாம் எதுக்குன்னு யோசிச்சா, பேசாம டீம வித்துட்டு போயிடலாம். //

அந்த டீமை யாரும் வாங்க ரெடியா இல்லையே. இருந்திருந்தா ஷாரூக் அதை எப்பவோ செஞ்சிருப்பாரு. ;)

மீதி நாலு பாய்ண்ட்ட யோசிக்கறதுக்குள்ள டேமேஜர் மீட்டிங்குக்கு கூப்பிடறாரு //

அப்பப்ப கொஞ்சம் வேலையும் பாருங்க ஆபிசர்.

தராசு on May 6, 2009 at 12:48 PM said...

//@ டக்ளஸ்....... said...
யாரோ சடு பார்ல "சப்போர்ட் நட் ரைடர்ஸ்"னு வச்சுருந்தாங்கலாம்ல..!//

கன்னா பின்னான்னு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டு

MayVee on May 6, 2009 at 12:51 PM said...

http://fakeiplplayer.blogspot.com/

ஜ்யோவ்ராம் சுந்தர் on May 6, 2009 at 12:51 PM said...

கலக்கல் கார்க்கி!

வித்யா on May 6, 2009 at 1:20 PM said...

\\அறிவிலி on May 6, 2009 12:03 PM said...
//பேசாம டீம வித்துட்டு போயிடலாம்//

ஒரு படம்னாலும் சூப்பர் ஹிட் குடுத்துருக்கீங்க. நீங்களே ஏன் வாங்கறத பத்தி யோசிக்க கூடாது?\\

ROTFL:)

negamam on May 6, 2009 at 1:21 PM said...

will see sharhuhan?????????
nice punch..........
keep it up.........

வள்ளி on May 6, 2009 at 1:46 PM said...

இன்றைக்கு ஏழு வருவார் என்று எதிர்பார்த்தேன். எப்போ ஏழு வருவார்?

கார்க்கி on May 6, 2009 at 1:56 PM said...

@கயல்விழி,

ஹிஹிஹி.. நடக்க போகுது பாருங்க

***************
@விஜய்,

உங்களுக்கு பேச தெரியுமா சகா? :))

***********
@ஸ்ரீமதி,

பேசாம என்னால் இருக்க முடியாதே!!!

*************
@அறிவிலி,

தயாரிப்பாளர் அப்துல்லா அண்ணே இன்னும் அட்வான்சையே கொடுக்கலைங்க
**************
@டக்ளஸ்,

இப்பவும் நான் தாதா ஃபேன் தான். நைட் ரைடர்ஸ் சப்போர்ட்டர் தாம்ப்பா

************
@தமிழ்ப்பறவை,

சகா நான் சொல்ல நினைச்சேன். ஆனா 18 வயசு குறைவா இருக்கிறவங்க அபப்டி பேசக் கூடாதாம்
**************
@முரளி,

நன்றி சகா

**************

@தீப்பெட்டி,

ரசிகர்கள் நாங்க அவ்ளோ நொந்துப் போயிருக்கோம் சகா

LOSHAN on May 6, 2009 at 1:57 PM said...

நல்ல ஐடியாங்கன்னா.. கொல்கத்தா விளங்கும்..

மொர்தசாவும் மென்டிசும் வெறுத்துப் போயிருப்பாங்க..


//ஷாருக்கானுக்கு பத்து அறிவுரைகள்ன்னுதான் போடலாம்னு நினைச்சேன். போடாததுக்கு ரெண்டு காரணம். 10 வியாதி இன்னும் போகலையான்னு கும்க்கி பின்னூட்டம் போடுவாரு. ரெண்டாவது காரணம், மீதி நாலு பாய்ண்ட்ட யோசிக்கறதுக்குள்ள டேமேஜர் மீட்டிங்குக்கு கூப்பிடறாரு.
//

ஹா ஹா.. உங்க பெரியவரும் புக்கனன் மாதிரியா? ;)

கார்க்கி on May 6, 2009 at 2:00 PM said...

@சஞ்சய்,
அட நீங்களும் தாதா ஃபேனா? சூப்பர்

***********
@விக்கி(பேரு பெருசா இருக்குங்க)

வேலையா? மீட்டிங்குக்கு மட்டும் தான் போவேன். வேலையெல்லாம்.. ஹேய் ஹேஹேய்ய்

************
@தராசு,

இருக்கு உங்களுக்கு :))

*************
@மேவீ,

அந்த ப்ளாக் எல்லாம் எப்பவோ படிச்சாச்சு சகா

******************
நன்றி சுந்தர்ஜி.

*****************
@வித்யா,

ஹலோ அது உண்மைதானே. அப்புறம் என்ன சிரிப்பு

****************
வருகைக்கு நன்றி நேகமம்

*************
@வள்ளி,

சாரிங்க.. இன்னும் முழுசா எழுதல.. ஏதோ குறையுற மாதிரி இருக்கு.. அதான் மண்டையை போட்டு உடைச்சிட்டு இருக்கேன்.. :)))

Bleachingpowder on May 6, 2009 at 2:19 PM said...

கரண் ஜோகர் கூட சேர்ந்ததிலிருந்தே அந்த ஆள் சரியில்ல தல, கொஞ்சம் கொஞ்சமா பொண்ணு மாதிரி ஆயிட்டு வரான். ஐபில் மீட்டிங்கு எல்லாரும் டிசண்டா கோட் சூட்னு வரும் போது, இவன் மட்டும் கிழிஞ்ச ஜீன்சும், மேல சூடிதார் மாதிரி ஒன்ன போட்டுட்டு, கழுத்துல துப்பட்ட மாட்டிட்டு, இது தாண்டா படிச்சவனுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்னு சொல்லாம சொல்றான்ன்.

பேசாம ஷாருக் இந்த டீமை நம்ம கேப்டனுக்கு வித்துட்டு போக சொல்லுங்க அப்புறம் பாருங்க விளையாட்டை

இல்லைனா நம்ம தமிழின தலைவருக்காவது வித்திட சொல்லுங்க, ஐம்பது ரன் அடிச்சா MLA, நூறு ரன் அடிச்சா மந்திரி சொல்லி ஆட வச்சிடுவாரு. சரியா ஆடலைனா சேப்பாக்கம் கிரவுண்டுல உண்ணாவிரதம் இருந்து மிரட்டிடுவார்.

நம்ம ராமதாஸ் டீமை வாங்கினாலும் சந்தோசம் தான். முத நாளே காடு வெட்டி குருவை எதிர் டீமோட தலைவரை பார்த்து அன்பா எடுத்து சொல்லி பக்குவமா பாலை போடவுட்டு ஜெயிச்சிடுவாரு. என்ன ஒரு பிரச்சனைனா, அணியில இட ஒதுக்கிட்டை அமல் படுத்திடுவாரு. டீமுல ஏழு பேரு வன்னியரு, ரெண்டு சிறுபாண்மையினர், மூனு தலித், கோச் கண்டிப்பா காடு வெட்டி குரு தான்.

நம்ம வைகோ வந்தாருனா, புலிகளிடம் ஆயுத பயிற்சி எடுத்தவர்களை மட்டும் தான் அணியில் சேர்த்துக் கொள்வார், டீ ஷர்டில் கூட முன்னாடி பிரபாகரன் படத்தையும், பின்னாடி சேகுவார படத்தையும் போட்டிடுவார். என்ன டீம் தோத்தா கிரவுண்டுலையே தேம்பி தேம்பி அழுவார்.


ஆனா என்னோட favourite புரட்சி தலைவி டீம் தான்.
பவுலர் ஒவ்வொரு பந்தை போடுவதற்கு முன்னாலும், இந்த பந்தை புரட்சி தலைவி, டாக்டர் இதய தெய்வம் தெய்வத் தாய் அம்மாவிற்கு இந்த பந்தை காணிக்கியாக்கிகுறோம்னு சொல்லிட்டு தான் போடனும். பேட்ஸ்மேன் கிரவுண்டிற்கு உள்ளே வரும் முன் அங்கே இருக்கும் ஜெயலித்தாவின் படத்திற்கு முன் விழுந்து வணங்கி விட்டு தான் மைதானத்திற்குள் செல்ல வேண்டும்.

சோ, சுப்பிரமணியசாமியை வீரர்களை தேர்தெடுக்கும் பொறுப்பை விட்டிடலாம், அப்படி விட்டால் வீரர்களின் பெயர் வருமாறு. பார்த்தசாரதி,வேணு சாஸ்த்திரி அய்யங்கார்,உப்பிலி,ரங்காச்சாரி,வெங்கிட கிருஷ்ணன்,ராமானுஜம்,விஸ்வநாதன், ரங்கராஜன், கிருஷ்ணமூர்த்தி.

பின்னூட்டம் ரொம்ப பெருசா போற மாதிரி இருக்கு தல அதனால இங்கேயே நிறுத்திக்கிறேன்

அ.மு.செய்யது on May 6, 2009 at 2:54 PM said...

க‌டைசி மேட்சுக்கு முந்தின (கேகே ஆர்) மேட்ச‌ ஷாருக்கான் டிவில‌ கூட‌ பாக்க‌ல‌யாம்.

ஒரு க‌ல்யாண‌ பார்ட்டில த‌ண்ணிய‌டிச்சுட்டு டான்ஸ் ஆடிட்ருந்தாராம்.

ஆதிமூலகிருஷ்ணன் on May 6, 2009 at 2:54 PM said...

ஜூப்பர்.! இதே மாதிரி மத்த டீம்களையும் கலாய்ச்சா நா ரொம்ப சந்தோஷப்படுவேன்..

நர்சிம் on May 6, 2009 at 3:20 PM said...

நான் பெரிதும் விரும்பும் கங்குலி,கேப்டன் இல்லை என்றதும் ஆடமாட்டார் என்று நினைத்தேன்..

pappu on May 6, 2009 at 3:22 PM said...

வட போச்சே.. கடைசி ஐடியா நல்லதுன்னு ப்படுது.

Nanotechnology on May 6, 2009 at 3:57 PM said...

Idha Padinga Bava...
http://www.cricbuzz.com/component/latest_cricket_news/Story/13314/Kite-Riders-/

Guru on May 6, 2009 at 5:06 PM said...

பேசாம 2011 ல நாங்க தான் சாம்பியன்னு ஒரு அறிக்கை விட வேண்டியது தான். (ஐடியா : மருத்துவர் ராமதாஸ் )

ஜ்யோவ்ராம் சுந்தர் on May 6, 2009 at 5:37 PM said...

கிரிக்கெட் பற்றிய பதிவை நல்ல அரசியல் பதிவாகப் பின்னூட்டத்தால் ஆக்கிய ப்ளீச்சிங் பவுடருக்கு ஜே!

mythees on May 6, 2009 at 5:55 PM said...

வெற்றி......
வெற்றி......

kkr team

அன்புடன் அருணா on May 6, 2009 at 7:17 PM said...

//வடை போச்சே!!!//

ஹஹாஹஹாஹா...சூப்பர்!!!
அன்புடன் அருணா

VIKNESHWARAN on May 6, 2009 at 9:20 PM said...

டத்தோ ஷாரூக்...

தாரணி பிரியா on May 6, 2009 at 11:00 PM said...

வடை போச்சே சூப்பர்

Naresh Kumar on May 6, 2009 at 11:09 PM said...

செமை காமெடி!!!

டெல்லி கூட, ஹாட்ஜ் அவுட் ஆனதுக்கப்புறம் அடுத்த ஓவரை அவங்க ஆடுன விதம் எனக்கே பயங்கரமா டென்ஷனை ஏத்திச்சுன்னா, ஓனரை நினைச்சா ஒரே காமெடியா இருக்கு!!!

பதிவு தூள்

நரேஷ்
www.nareshin.wordpress.com

பிரியமுடன்.........வசந்த் on May 7, 2009 at 10:14 AM said...

தல ப்ரோபைல் போட்டோல சன்னியாசி மாதிரி தோணுது மாத்துங பொண்ணுங்க யாரும் அப்பறம் வரமாட்டாங்க

கார்க்கி on May 7, 2009 at 10:39 AM said...

பதிவ இங்கேயே போட்டிங்கலா ப்ளீச்சிங்க்?

வருகை தந்த செய்யது, ஆதி, நர்சிம்,பப்பு, நேனோ, குரு, மைதீஸ்,அருணா, விக்கி, தா.பி, நரேஷ், வசந்த்

:)))

பட்டாம்பூச்சி on May 7, 2009 at 4:23 PM said...

//டேமேஜர் மீட்டிங்குக்கு கூப்பிடறாரு.//

அப்பாடா ஒரு வழியா நம்ம கார்க்கியண்ணே ரொம்ப நாள் கழிச்சு நேருக்கு நேர் டேமேஜர பார்க்க போறாருப்பா...கும்மி அடிக்கறது,ஒரு நாள்ல ஒரு பதிவுன்னு பிசியா இருந்தா எங்க அவர பார்க்காது...அதத்தான் சொன்னேன்....கோச்சுகாதீங்கப்பு ;-)

வால்பையன் on May 7, 2009 at 7:01 PM said...

பதிவை விட ப்ளீச்சிங்கின் பின்னூட்டம் கலக்கல்!

Karthik on May 8, 2009 at 4:34 PM said...

//உஷாரா நம்ம தாதா ஃபேன்ஸ் அவர் கேப்டன் இல்லை என்பதால் ஆதரவை வாபஸ் வாங்கிட்டாங்க.

ஹி..ஹி. சென்னை சூப்பர் கிங்ஸுங்க. ;)

பதிவு கலக்கல்! :)

 

all rights reserved to www.karkibava.com