May 5, 2009

காக்டெயில்


  தமிழ்மணத்தில் சில நாட்களாக என் பெயர் தெரிவதில்லை. மேலும் இடுகைகளை சேர்க்க முயன்றால் புதிய இடுகைகள் எதுவும் காணப்படவில்லை என்றே வருகிறது. சில மணி நேரங்களுக்கு பின் முயன்றால் தான் இணைகிறது. வெறும் தலைப்பை மட்டுமே நம்பி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கிறது. அது மட்டுமல்லாமல், ஆயிரம் ஹிட்ஸை தாண்டினாலும் சூடான இடுகையில் வருவதில்லை. அதேப் போல feedjitல் தமிழ்மணம் மூலமாக வருபவர்களை காண முடியவில்லை. தமிழ்மணத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினேன். இந்தப் பிரச்சினை மேலும் சிலருக்கும் இருக்கிறது. என்ன செய்யலாம்? தமிழ்மணத்தில் பெயர் தெரியாதவர்கள் போராட்டக் குழு என்று ஒன்றை தொடங்கி போராடலாமா?

அதேப் போல feedjitல் தமிழ்மணம் மூலமாக வருபவர்களை காண முடியவில்லை.

   Blogspot.com வலைப்பூ வைத்திருப்பவர்களுக்கு சமீபகாலமாக பல தடங்கல்கள் வந்த வண்ணம் உள்ளன. Google analyticsஐ சேர்த்தால் error வருவது(சென்ஷி), தமிழ் மொழிக்கு மாற்றினால் Followers widget காணாமல் போவது(அப்துல்லா), Feedburner சேர்த்தால் வைரஸ் காட்டுவது(லக்கி) எனப் பல பிரச்சினைகள். இப்போது புரோஃபைல் பக்கத்தில், எத்தனை முறை நம்மைப் பற்றிய தகவல்கள் பார்க்கப்பட்டிருகின்றன என்ற எண்ணிக்கையில் பிரச்சினை.(ரொம்ம்ம்ப முக்கியம்). சில வாரங்களாக அது 6600லே இருக்கிறது. பரிசலின் புரொஃபைல் 7600லே நிற்கிறது. அதைப் பார்த்த பின்தான் அப்பாடா என்றிருந்தது.(என்னா வில்லத்தனம்). நேற்று பார்த்தபோது 'Approximately' என்று போட்டிருக்கிறார்கள். என்ன அர்த்தமோ!!!

***********************************************************

ஹைதைக்கு நேற்றுதான் வந்தேன். பெங்களூர் ஹைதையை விட ரொம்ப நல்லாயிருக்குங்க. குளுகுளு weather, VOLVO பேருந்துகள், எங்கே திரும்பினும் ஐ.டி பெண்கள், இளநீர் கடை முதல் KFC வரை அனைவரும் தமிழ் பேசுவது, டிராஃபிக் அதிகமென்றாலும் ஓரளவிற்கு கட்டுப்பாடான ஓட்டுனர்கள் என எல்லாமே ஹைதையை விட பெட்டர் தான். ஆனால் இதையெல்லாம் விட எனக்கு பிடித்தது பெங்களூர் பதிவுலக நண்பர்கள். ‘நான் பார்க்க விரும்பின சில பதிவர்களில் நீங்களும் ஒருத்தர்னு முதன்முதலாக முகம் காட்டிய ப்ளீச்சிங்க, ஆசையாக பொரி வாங்கித்தந்த ஜீவ்ஸ், என்கிட்ட போய் உருப்படியா ஏதாவது பேசியேத் தீருவேன்னு அடம் பிடிச்ச டிபிசிடி,  பாச மழை பொழிந்த பட்டாம்ப்பூச்சி, வாசகர்கள் ஜெகன், தினேஷ், ராஜா... என்ன சொல்ல? அதான்.. அதேத்தான்..

***********************************************************

எனக்கு இந்தி ’தோடா தோடா ஆத்தா ஹை’. இருங்கப்பா அவசரப்பட்டு திட்டாதீங்க. அப்படின்னா கொஞ்சம் கொஞ்சம் வரும்னு அர்த்தம். நேற்று  வலையுலக பிரபலம் ஒருவருடன் சேட்டில் இந்தியில் பேசினேன். நல்லாப் பேசறீங்கன்னு அவர் சொன்னதுக்கு, பக்கத்து சீட்டு ஆளுக்கு மாலையில் குட்டி ட்ரீட் தந்தேன். பக்கத்து சீட்டு, அவனா , அவளா என்பது இருக்கட்டும். இதுக்கெல்லாமா ட்ரீட் தருவாங்கன்னு கேட்கறவங்களுக்கு ரெண்டு காரணம் இருக்குங்க. நான் இந்தி கிளாஸ் போன முதல் நாள் கேட்ட கேள்வி என்னத் தெரியுமா? என் பேரு கார்க்கி ஜி (இந்தி மேடத்த அப்படித்தான் கூப்பிடனுமாம்) இதுக்கு இந்தில என்ன?. அடுத்த காரணம் ரொம்ப நாளா அவங்களே எனக்கு காஃபி வாங்கித் தந்துட்டு இருக்காங்க. அதனால் என் இந்தி விஜய்காந்த் தமிழ் மாதிரி இருக்குன்னோ, தல பேசுவது போல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குன்னு சொல்லி இருந்தாலும் ட்ரீட் தந்திருப்பேன்.

***********************************************************

இந்த மாதிரி பதிவுகளில் இறுதியா கவிதையோ, ஜோக்கோ (சில சமயம் ரெண்டும் இருக்கும். கவிதையே காமெடியா..நோ நோ நான் அனுஜன்யாவின் கவிதைகளை சொல்லல) போடுவார்கள். நான் சந்தேக சந்திராசாமியின் கேள்விகளை போடுவதுண்டு. இதோ இந்த வார சந்தேகம்.


இது என்ன??????????????????????

43 கருத்துக்குத்து:

mythees on May 5, 2009 at 11:12 AM said...

இன்னைக்கும் me tha first

Chill-Peer on May 5, 2009 at 11:22 AM said...

முதல் பாரா - நிஜமான காக்டெயில் :O

ஹி..ஹி..ஹி..

மண்குதிரை on May 5, 2009 at 11:22 AM said...

காக்டெயிலில் ஏதோ miss ஆகுது நண்பா. உங்க அங்கத நடைன்னு நினைக்கேன்.

அது என்னன்னு தெரியலயே. ஏதோ பாம்பு ?/////

வித்யா on May 5, 2009 at 11:43 AM said...

ம்ம்ம்ம் ஏதோ மிஸ்ஸிங் கார்க்கி:)
சரி ஏழு எங்க சம்ம வெகேஷனா?

அனுஜன்யா on May 5, 2009 at 11:45 AM said...

படம்: மலைப் பாம்பின் முதுகு, சாலையின் பள்ளங்கள், பட்டைகள் உரிந்த மரம், அமீபாக்கள், கோணலான முகம் (இரண்டு கண்கள், மூக்கு, வாய்). இதுக்கு என் கவிதையே பரவாயில்ல இல்ல?

அனுஜன்யா

மாசற்ற கொடி on May 5, 2009 at 11:54 AM said...

Technical காக்டெயில்.

அது - குண்டும் குழியும் உள்ள ஒரு பாதை. சொன்ன பிறகு பாம்பாகவும் தெரிகிறது.

அன்புடன்
மாசற்ற கொடி

விக்னேஷ்வரி on May 5, 2009 at 11:58 AM said...

தமிழ் மொழிக்கு மாற்றினால் Followers widget காணாமல் போவது //

எனக்கும் இந்த பிரச்சனை உள்ளது. :(

என்ன சொல்ல? அதான்.. அதேத்தான்.. //

பொறாமையா இருக்கு உங்களைப் பார்த்தா.

என் இந்தி விஜய்காந்த் தமிழ் மாதிரி இருக்குன்னோ, தல பேசுவது போல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குன்னு சொல்லி இருந்தாலும் ட்ரீட் தந்திருப்பேன் ///

:)))))

இந்தப் படம் எதோ பாரன்கைமா, கோலன்கைமா மாதிரி இருக்கு. எப்போவோ பாட்டனியில பார்த்த நினைவு.

vinoth gowtham on May 5, 2009 at 12:06 PM said...

கடைசி படம்...கிழிஞ்சி போன டுயுபூ..
கரெக்ட்டா..!

Mahesh on May 5, 2009 at 12:12 PM said...

அட... உங்களுக்கும் இந்தி தெரியாதா? நம்ம கச்சி !!

ஆமா... அது என்ன ஒட்டைச்சிவிங்கியோட கழுத்தா?

கார்க்கி on May 5, 2009 at 12:14 PM said...

வாங்க மைதீஸ்
*****************

நன்றி chill-peer
******************

@மண்குதிரை,

இது ஒரு தகவல் பதிவாகத்தான் எழுதினேன் சகா. அது காரணமாக இருக்காலாம்..

********************
@வித்யா,

நாளை வருகிறார் ஏழு

*****************
@அனுஜன்யா,

இல்ல இல்ல.. உங்க கவிதை வேணாம்.. விடை தப்புங்கண்ணா

****************
@மாசற்ற கொடி,

கொஞ்ச நாளா எங்க போனீங்க?

**************
@விக்னேஷ்வரி,

உங்களுக்கு இந்தி தெரியுமாங்க?

************
@வீனோத்,

நல்ல முயற்சி. ஆனா தப்புப்பா

Suresh on May 5, 2009 at 12:15 PM said...

நம்க்கும் சில் பிரச்சனைக்கள் தமிழ்ஷ்ல வோட்டு வாங்கினாலும் முதல் பக்கத்தில் பப்பிளிஷ் ஆகுறது இல்லை :-( நீங்க சொன்ன மேற்கண்ட தமிழ்மணத்தில் புது இடுகைகள் காணப்படுவது இல்லை எனக்கு வந்தது

Jenbond on May 5, 2009 at 12:25 PM said...

ஒட்டக சிவிங்கியின் கழுத்து.

Jenbond on May 5, 2009 at 12:25 PM said...

ஒட்டக சிவிங்கியின் கழுத்து.

கயல்விழி நடனம் on May 5, 2009 at 12:26 PM said...

//டிராஃபிக் அதிகமென்றாலும் ஓரளவிற்கு கட்டுப்பாடான ஓட்டுனர்கள் ...

கார்க்கி சாமிக்கு இன்னும் பெங்களூர பத்தி சரியா தெரியல...பெங்களூர் ஆளுங எல்லொரும் சொல்லுங்கப்பா...

Jenbond on May 5, 2009 at 12:27 PM said...

யாருங்க புதுசா ஒரு ஜெகன்?

Jenbond on May 5, 2009 at 12:28 PM said...

என்ன சகா MG Road போகலையா?

தராசு on May 5, 2009 at 12:34 PM said...

//எனக்கு இந்தி ’தோடா தோடா ஆத்தா ஹை’//

ஆத்தாடி உனக்கு தொட தொட ஆத்தா வர்றாங்களா, குறி கேக்கறதுக்கு எப்ப வர்றது, கூழ் ஊத்தறதுக்கு ஒரு நல்ல நாள் சொல்லு தாயீ.

அறிவிலி on May 5, 2009 at 12:50 PM said...

அந்த படம் - என்னோட பதிவுக்கு புது ப்ரொஃபைல் இமேஜ் சஜஸ்ட் பண்ணிருக்கீங்கதானே (கிறுக்கி தள்ளு)

டக்ளஸ்....... on May 5, 2009 at 12:50 PM said...

இதுக்கு எப்பிடி பின்னூட்டம் போடுறதுன்னு தெரியலப்பா..
அதுனால ஒரெ ஒரெ ஸ்மைலி மட்டும்...

வால்பையன் on May 5, 2009 at 12:55 PM said...

//அனுஜன்யா on May 5, 2009 11:45 AM said...

படம்: மலைப் பாம்பின் முதுகு, சாலையின் பள்ளங்கள், பட்டைகள் உரிந்த மரம், அமீபாக்கள், கோணலான முகம் (இரண்டு கண்கள், மூக்கு, வாய்). இதுக்கு என் கவிதையே பரவாயில்ல இல்ல? //

இதை நான் கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்!

எம்.எம்.அப்துல்லா on May 5, 2009 at 1:36 PM said...

ஒன்லி அட்டெண்டென்ஸ்

:))

புன்னகை on May 5, 2009 at 2:10 PM said...

படத்தில் இருப்பது ஒட்டகச்சிவிங்கியின் கழுத்துப் பகுதி தானே???

Truth on May 5, 2009 at 2:20 PM said...

//எனக்கு இந்தி ’தோடா தோடா ஆத்தா ஹை’.

ஹி ஹி... நீங்களுமா?
இது என்னோட இந்தி

Ariv on May 5, 2009 at 2:30 PM said...

ஹைதை என்பது ஐதராபாத்-ஐ குறிக்றீர்களா???
ஆம் எனில் --- இங்கு வெயில் படுத்தும் பாடு இங்கு இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்....
இந்த கடுப்புல நீங்க வேர பெங்களூர், ஊட்டி, கோடை னு.....

ஆதிமூலகிருஷ்ணன் on May 5, 2009 at 3:28 PM said...

ச்சின்னதா முடிஞ்சா மாதிரி ஒரு ஃபீலிங்கு.!

அப்புறம் எங்களுக்கெல்லாம் பேரு வந்தா என்ன, வராட்டி (வரட்டி இல்ல) என்ன? எப்பிடியும் சூடாவுறதில்ல.. (எப்போதாவது சூடாகும் எச்சரிக்கை பதிவுகளை உதாரணம் சொல்ல வேண்டாம்).. நீ கவலப்படுறது நாயம்தான்.

அப்புறம் தமிழ்மணத்துக்கும், ஃபீட்ஜிட்டுக்கும் ஏதாவது பிரச்சினையா? அங்கிருந்து வர்ற ஆளுங்களை ஃபீட்ஜிட் காமிக்க மாட்டேங்குது.!

தீப்பெட்டி on May 5, 2009 at 3:43 PM said...

//டக்ளஸ்....... said...

இதுக்கு எப்பிடி பின்னூட்டம் போடுறதுன்னு தெரியலப்பா..
அதுனால ஒரெ ஒரெ ஸ்மைலி மட்டும்...///

ரிப்பீட்டேய்ய்ய்ய்..

Sinthu on May 5, 2009 at 3:48 PM said...

"இது என்ன??????????????????????"
பாம்பா அது..
அண்ணா வருவதற்கு நேரம் கிடைக்கவில்லை...

Anbu on May 5, 2009 at 3:50 PM said...

:)

MayVee on May 5, 2009 at 5:05 PM said...

தமிழ்மணத்தில் பொதுவா என் பதிவுகளை இணைக்க மாட்டேன்.
அது நான் மனித சமுதாயதிற்கு நான் செய்யும் பெரிய தொண்டாக கருதுகிறேன்

நீங்க பெங்களூர் இல இருந்த சமயம் நானும் கர்நாடகவில் ஒரு ஓரத்தில் தான் இருந்தேன்.


கண்டிப்பான முறையில் அது பெண் ஆக தான் இருக்க வேண்டும். இல்லடி நீங்க treat தந்து இருக்க மாட்டிங்க.....


"(சில சமயம் ரெண்டும் இருக்கும். கவிதையே காமெடியா..நோ நோ நான் அனுஜன்யாவின் கவிதைகளை சொல்லல) "

ஒரு யூத் நல்ல கவிதை எழுதின்ன உங்களை மாதிரி அங்கிள்ஸ் க்கு எல்லாம் பிடிக்காதே .....
எல்லாம் பொறாமை ...
ஹி ஹி ஹி

துஷா on May 5, 2009 at 6:59 PM said...

"நாளை வருகிறார் ஏழு"

ம்ம் வரட்டும் வரட்டும்

அண்ணா எப்பவும் வருவேன் பின்னுட்டம் போடா தான் முடியாலா

MayVee on May 5, 2009 at 7:08 PM said...
This comment has been removed by the author.
pappu on May 5, 2009 at 7:09 PM said...

நான் உங்களுக்கு ஹிந்தி கத்து த்ரேன். கவல படாதீங்க. முதல்ல ஃபீசா 500ரூ அனுப்புங்க

pappu on May 5, 2009 at 7:09 PM said...

நான் உங்களுக்கு ஹிந்தி கத்து த்ரேன். கவல படாதீங்க. முதல்ல ஃபீசா 500ரூ அனுப்புங்க

அன்புடன் அருணா on May 5, 2009 at 7:48 PM said...

//தமிழ்மணத்தில் பெயர் தெரியாதவர்கள் போராட்டக் குழு என்று ஒன்றை தொடங்கி போராடலாமா?//

நீங்க சொன்ன அத்தனை பிரச்னையும் எனக்குமிருக்கு...அந்தக் குழுவில் என்னையும் சேர்த்துக்கோங்கப்பா!!அன்புடன் அருணா

அன்புடன் அருணா on May 5, 2009 at 7:51 PM said...

கார்க்கிஜி!!! பாத்மே ஹிந்தி சீக்கா யா நஹீ????ஏ தோ பத்தாஓ!!!
அன்புடன் அருணா

அ.மு.செய்யது on May 5, 2009 at 8:17 PM said...

அது ஒரு 'படம்' சகா !!!!

தமிழ்ப்பறவை on May 5, 2009 at 8:36 PM said...

மலைப் பாம்பின் முதுகு
சாலையின் பள்ளங்கள்
பட்டைகள் உரிந்த மரம்
அமீபாக்கள்
கோணலான முகம்
இரண்டு கண்கள், மூக்கு, வாய்


கார்க்கி பார்த்தீங்கள்ல, அனுஜன்யா உங்க பதிவுல கேப்புல கவிதையப் போட்டுட்டுப் போயிருக்காரு...
தலைப்புதான் தெரியல.

இரா. வசந்த குமார். on May 5, 2009 at 10:51 PM said...

கடைசிப் படம், 'பறவைப் பார்வையில் கொஞ்சம் வறண்ட நதி'... இது எப்புடி....!!!!

தாரணி பிரியா on May 5, 2009 at 10:54 PM said...

தமிழ் மணமா அப்படின்னா என்னா. நான் போடறது எல்லாம் பதிவு கணக்குல வரது இல்லை. அதனால எனக்கு இந்த பிரச்சினையும் இல்லை .

அப்ப சிவாஜி யை ஹிந்தியில எப்படி சொல்லறதுங்க‌

ILA on May 5, 2009 at 11:08 PM said...

உங்கள் ஓடைதாங்க காரணம்(feed). feedburnerல் பதிவரின் பெயர் சரியாக தெரிவதில்லை.
சங்கமத்தில் இப்பொழுது இதை சரி செஞ்ச்சாச்சு.

கும்க்கி on May 5, 2009 at 11:12 PM said...

kaarkeejee
bahuth achee he..

வசந்த் ஆதிமூலம் on May 6, 2009 at 1:41 AM said...

காக்டெயில நல்லா கலக்குறீங்க கார்க்கி. வாழ்த்துகள்.

கார்க்கி on May 6, 2009 at 10:28 AM said...

அடடா.. பல விடைகள் வந்திருக்கு.. சரியான விடை..

ஒட்டக சிவிங்கியின் கழுத்துப்பகுதி...

சில பேர் சரியா சொல்லி இருக்கிங்க..

பின்னூட்டமிட்ட

சுரேஷ், ஜென்பாண்ட், கயல்விழி, தராசு, அறிவிலி, டக்ளஸ், வால்பையன், அப்துல்லா, புன்னைகை, ட்ரூத், அறிவ்,ஆதி, தீப்பெட்டி, சிந்து, துஷா,பப்பு, அருணா, செய்யது, தமிழ்ப்பறவை, வச்ந்தகுமார்,தா.பி, இளா, கும்க்கி, வசந்த ஆதிமூலம்....

சோடா ப்ளீஸ்..


அனைவருக்கும் பெரிய்ய்ய்ய நன்றி

 

all rights reserved to www.karkibava.com