May 4, 2009

என்னை விமர்சிக்க நீங்கள் யாரு சாரு?


முன்குறிப்பு:

இந்தப் பதிவை முழுவதுமாய் அனுபவிக்க வேண்டுவோர் கீழ்கண்ட சூழ்நிலையில் இதைப் படித்தல் உசிதம்.மொக்கை குறித்த பிரக்ஞை இல்லாதவர்கள் இங்கேயே கழண்டுக் கொள்ளவும்.

1) நள்ளிரவு ஆகுமுன் நல்லிரவு ஒன்று வருமே!! அப்போது படித்தல் நலம். மனம் கொண்டாடும் மனநிலையில் இருந்தால் இன்னும் அருமை

2) அலுவலகத்தில் வேண்டாம்.பிரவுசிங் செண்டரும் வேண்டாம். வீட்டில் படிப்பதை வரவேற்கிறேன். அதுவும் உங்கள் வீடென்றால் அற்புதம்.தங்கமணி ஊரில் இல்லை என்றால் வெகு பிரமாதம்.

3) வீட்டில் டிவி இருந்தால் சூப்பர். அதில் ஆதித்யாவோ, சிரிப்பொலியோ ஓடட்டும். நீங்கள் அதிமுக என்றால் ஜெயா செய்திகள் ஓடும் நேரமாக படியுங்கள். மக்கள் டிவிதான் என்றால் டிவியை அணைத்து விடுங்கள்.

4) வெயில் காலத்துக்கு இதமாக பியரோ, பழக்கமில்லாதவர்கள் நைண்ட்டியோ அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் காசில் இல்லாமல் யாராவது இளிச்சவாயர்கள் வாங்கித் தந்தது என்றால் டப்பாசுதான்.

பின்குறிப்பு:

இதைப் புரிந்துக் கொள்ள முடியாதவர்கள் சாரு அவர்களின் கடவுளும் நானும் என்ற புத்தகத்தில் அவருடைய கவிதையை எப்போது, எப்படி படிக்க வேண்டும் என்ற அறிவுரையை படித்துப் பாருங்கள்.

பின்குறிப்புக்கான டிஸ்கிக்கள்:

1)மேலே சொன்ன பின்குறிப்பு அதற்கும் மேலுள்ள முன்குறிப்புக்கான பின்குறிப்பு. பதிவு இனிதான் ஆரம்பம்

2) பதிவின் நீளத்தைக் கண்டு உண்மைத்தமிழனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள்.

இனிப் பதிவு:

சாரு அவர்களே!! நேற்று என் கனவில் வந்த நீங்கள் என் பதிவுகளைப் பற்றி விமர்சனம் செய்தீர்கள். என் மொக்கைகள் மொக்கையாக இல்லை எனவும், நன்றாக இருப்பதாகவும் சொன்னதைக் கேட்டு அசூசை உணர்வே மேலேழுந்தது எனக்கு. காலையில் கழிப்பறையில் ‘இருந்த’ போது உங்கள் நினைவு வந்தது. எப்படி என்னை நீங்கள் அப்படி விமர்சிக்கலாம்? பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த காலம் முதலே எழுதி வருபவன் நான். மற்ற பதிவர்களைப் போல அல்லாமல், படித்ததை வைத்தே எழுதி வருகிறேன். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் முழு நேரமாக படித்தவன் நான். வாசிப்பனுபவம் உண்டு என்பதற்காக சொல்கிறேன். இதுவரை பத்து முழு ஆண்டு தேர்வுகளும், பத்து அரையாண்டு தேர்வுகளும், பத்து காலண்டு தேர்வுகளும் பல இடைத்தேர்வுகளும், ஆறு செமஸ்டர் தேர்வுகளும் எழுதி இருக்கிறேன். இவையல்லாமல் 200க்கும் அதிகமான பதிவுகள் எழுதி இருக்கிறேன். மொக்கைசாமி என்ற லேபிளில் மட்டுமே 30 பதிவுகள் எழுதி இருக்கிறேன். இதையெல்லாம் படித்திருக்கிறீர்களா? படிக்காமல் ஒரு எழுத்தாளனை எப்படி விமர்சிக்கலாம்? நான் நல்ல எழுத்தாளான் ஆக இல்லாமல் இருக்கலாம். ஆனால் 20 ஆண்டுகளாக எழுதும் ஒருவனுக்கு நீங்கள் தரும் மரியாதை இதுதானா?

12063549950709l

தற்போது நான் எழுதிய ஆங்கில தேர்வுகளை எப்படியாவது இங்கிலிஷில் மொழி பெயர்த்து வெளியிட நினைத்திருக்கிறேன். எனக்கு இந்தியாவை விட அமெரிக்காவிலே எதிரிகள் அதிகம். அங்கே கொலம்பியா பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் இதற்கு சம்மதம் தெரிவித்தார். அங்கே இருக்கும் சில இலக்கியவாதிகள் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவரை மாற்றிவிட்டார்கள். ஆந்திராவில் என்னைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு என் அருமை தெரிந்திருக்கிறது.போகட்டும். நாம் விஷயத்திற்கு வருவோம்.

ஆறாவது படிக்கும்போது நான் எழுதிய ஆறு தன் வரலாறு கூறுதல் படித்தீர்களா? தமிழில் சுஜாதாவிற்கு அடுத்து சுவாரஸ்யமாக தேர்வு எழுதியது நான் தான். சமீபத்தில் புட்டிக்கதைகள் என்ற பெயரில் எழுதும் ஏழு தன் வரலாறு கூறுதலையாவது படிக்கிறீர்களா? தமிழிலக்கியத்தில் சரக்கை மையமாக வைத்து எழுதும் முதல் ஆள் நான் தான். இதையெல்லாம் தெரியாத மைக்மோகன் என்ற மாணவன் நான் சரக்கில்லாத ஆள் என்று கிண்டலடிக்கிறாராம். கூபாவை சேர்ந்த கூமுட்டை என்ற குடிகாரன் எழுதிய ‘சந்தித்த வேளையும் சரக்கடித்த லீலையும்” நாவல் அவர் படித்ததுண்டா? அவருக்கு கும்மிடிபூண்டியைத் தாண்டி ஒன்றும் தெரியாது. நாம் விட்ட இடத்திற்கே வருவோம்.

என்னை முழுமையாக படிக்காமல் எப்படி என்னை விமர்சிக்க நினைத்தீர்கள் சாரு? எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் நான் எழுதிய தேர்வுத்தாள்களை சேகரித்து வைத்திருக்கிறேன். விவரம் என்றால் பல உண்டு. சூரியன் கிழக்கில் உதிக்கும் என்ற விவரம் எனக்கு எப்போதோ தெரிந்துவிட்டது. ஆனால் என்ன செய்தால் கிழக்கு பதிப்பகத்தில் புத்தகம் எழுத முடியும் என்ற விவரம் தாமதமாகத்தான் தெரிய வந்தது. புத்தகம் எழுதி, அது நன்றாக விற்றால் பணம் வருமாம். எனக்கு இந்த வீண் வேலைகள் வேண்டாம். பணம் மட்டும் தர முடிந்தால் தாருங்கள். நல்ல புத்தகம் எழுதுங்கள் என்பது போன்ற இலவச அறிவுரைகள் எனக்கு எரிச்சலையும் மன உளைச்சலையும் தருகிறது என்று என் டியூஷன் டீச்சர் கந்தவேல் மூலம் சொல்லியிருக்கிறேன். எங்கேயோ போய்விட்டோம். விவரம் இருக்கட்டும்.விஷயத்திற்கு வருவோம். நான் எழுதிய அந்த தேர்வுத் தாள்கள் வேண்டுமென்றால் 3000 ரூபாய்க்கு டிடி எடுத்து அனுப்புங்கள். எனக்கு டீ குடிக்க 3000 ரூபாய் தேவைப்படுகிறது.

DSC04123

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரும் நானும் அப்போது ராமாபுரத்தில் தங்கியிருந்தோம். அப்போது எனக்கு நாலு வயதுதான். காலையில் ஒன்றாக டீ குடிக்க செல்வோம். அப்போதே நான் சொல்லும் ரைம்ஸுகளை அரசுடமையாக்க போவதாக சொல்லுவார். எம்.ஜி.ஆர் எல்லாம் என தகுதிக்கு சிறியவர் என்பதால் அவர் சொன்னதுக்கு ஆதாரத்தை நான் வைத்துக் கொள்ளவில்லை. டீ என்றவுடன் இதை சொல்ல வேண்டும் போலிருந்தது. டீ குடிப்பதிலும் நான் ஒரு பின்நவீனத்துவாதி எனபதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும்.

மக்கள் பொதுவாக டீ கிளாசை வலது கையாலதான் பிடித்துக் குடிப்பார்கள். அந்தக் கைப்பிடி ஓரம்தான் வாய் வைத்து குடிப்பார்கள். கடைக்காரன் ஒழுங்காக கழுவ மாட்டான். அதனால் நான் குடிக்கும்போது இடது கையால் பிடித்து குடித்து பொதுபுத்தியின் கட்டமைப்பை உடைத்தேன். பின்நவீனத்துவத்தில் இது முக்கியமான கட்டம். பின்நவீனத்துவம் என்ற வார்த்தையில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஹூக்குநவீனத்துவம் என்று சொல்லிக் கொள்ளலாம். ஏன் சொல்கிறேன் என்றால் நான் வழக்கமாக படிக்கும் கிராண்டா என்ற யூ.கே பத்திரிக்கையில் post moderism என்பதையே பழசு என்பவர்கள் courier moderism என்று சொல்லிக் கொள்ளலாம் என எழுதி இருக்கிறார்கள். சில மாதங்களாக கிராண்ட்டாவை படிக்க முடியவில்லை. யூ.கேவில் வாழும் இளிச்சவாயர்கள் யாராவது சந்தா கட்டிணால் நலம். அதற்காக நான் பாரிஸ் வரும்போது எனனை சந்திக்க வேண்டும் என்று சொல்லக் கூடாது.

பாரீஸ். நான் அடிக்கடி செல்லும் இடம். டீ குடிக்க காசு குறைவாக இருந்தால் நடந்தே பாரீசுக்கு சென்று பேப்பர் கப்புகளை குறைந்த விலையில் வாங்கி வருவேன். பாரிசில் வசிக்கும் சேட் ஒருத்தர் நல்ல ஹிந்துஸ்தானி வித்வான். அவரின் பாடல்களை யூட்யூபில் கேட்கலாம். இல்லையேல் அவரின் கடைக்கு சென்று பாட சொல்லிக் கேட்கலாம். அவர் ரெய் வகை இசையிலும் தேர்ந்தவர். வாயில் பீடாவுடன் அவர் பாடுவதைக் கேட்டால் சில கப்புகள் இலவசமாகவும் தருவார். நான் அதற்காகத்தான் அந்தக் கடைக்கு செல்வதாக சிலர் சொல்கிறார்கள். எத்தனை முறை சொல்வது?

சரி.விஷயத்திற்கு வருவோம்.கனவில்தானே விமர்சித்தேன் என்கிறீர்களா? கனவிலாவது என் படைப்புகளை படித்ததுண்டா? நான் எழுதிய பல எழுத்துக்களை இந்திய அரசாங்கமே சேர வேண்டியவர்களிடம் சேர்க்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம், நான் அவர்களுக்கு லெட்டர் எழுதுவேன். தினமும் அலுவலகத்தில் கூட என்ன எழுதலாம் என்ற சிந்தனையே செய்கிறேன், அதனாலே வேலை விட்டு அனுப்பிவிட்டார்கள். தூங்கும்போதும் நீங்கள் விமர்சிக்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் 24 மணிநேரமும் உழைக்கிறேன். ஆனால் என்ன சம்பாதிக்கிறேன்? யாராவது இளிச்சவாயர்கள் கிடைத்தால் தேர்வுத்தாள்களை 3000 ரூபாய்க்கு அவர்கள் தலையில் கட்டி டீ குடிக்கிறேன். மீதிக்கு நான் என்ன செய்ய? வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும். சிட்டி செண்ட்டரில் இருந்தால் எல்லாவற்றிர்க்கும் வசதி என விசாரித்தேன். ஐனாக்ஸ் தியேட்டருக்கு அடுத்த கடை நன்றாக இருக்கிறது. அங்கே எல்லாமே கடைகள்தான். நான் தான் முதலில் தங்கப் போகிறேன். வாடகை மட்டும் மாதம் இரண்டு லட்சம். அட்வான்ஸ் 20 லட்சம். இடம் பிடித்திருக்கிறது. யாராவது உதவினால் பால் காய்ச்சலாம். பாக்கெட் பால் நண்பர் ஒருவர் வாங்கித் தருவதாக சொல்லி இருக்கிறார். எனது வங்கிக் கணக்கு தகவல்கள்.

பெயர்: அழகுமணி

நம்பர்: 000101546578.ICICI, CENATOPH ROAD BRANCH.

தமிழகத்தில் மட்டும் தான் எழுத்தாளனுக்கு இந்த நிலை. செக்கோஸ்லோவியாவில் இப்படி இல்லை. மானங்கெட்ட தமிழர்களுக்கு ஸ்ரேயாவை ஏன் பிடிக்கிறது என்றுத் தெரியவில்லை. அவர் ஒரு பீரோ. எங்கெங்கோ போய்விட்டோம். சாரு, என்னை ஏன் கனவில் வந்து விமர்சிக்கிறீர்கள்? உங்களை போன்ற ஆட்கள் இருக்கும் வரை தமிழ் இலக்கியத்தை பாபாதான் காப்பாற்ற வேண்டும்.

04-05-2009

11.05 AM

நிஜமான பின்குறிப்பு:

இதன் அடுத்த பாகம் விரைவில் வெளிவரும்.

77 கருத்துக்குத்து:

mythees on May 4, 2009 at 11:10 AM said...

me tha first

Anonymous said...

//இதன் அடுத்த பாகம் விரைவில் வெளிவரும். //

இத வேற சொல்லிப் பயமுறுத்திறியேப்பா.

டக்ளஸ்....... on May 4, 2009 at 11:28 AM said...

அசூசை உணர்வுன்னா என்னண்ணே..!

சென்ஷி on May 4, 2009 at 11:29 AM said...

//1) நள்ளிரவு ஆகுமுன் நல்லிரவு ஒன்று வருமே!! அப்போது படித்தல் நலம். மனம் கொண்டாடும் மனநிலையில் இருந்தால் இன்னும் அருமை//

பின்னூட்டம் எப்ப, எப்படி போடுறதுன்னு சொல்லி அனுப்பினா கும்முறதுக்கு வசதியா இருக்கும்!

டக்ளஸ்....... on May 4, 2009 at 11:31 AM said...

உங்க வயசுக்கு கனவுல, சாரு வராம, நமீதாவா வருவாங்க அங்கிள்..!

Anonymous said...

போச்சு! நான் ஒரு பேரா சாருவைப்பத்தி எழுதனதுக்கே 70 லைன் பின்னூட்டம் வந்தது... அது சரி கிட்ட இருந்து. மவனே உனக்கு ஆட்டோதான் .....

வித்யா on May 4, 2009 at 11:32 AM said...

கன்பார்ம்டா தெரியுது கார்க்கி. உனக்கு ................

மங்களூர் சிவா on May 4, 2009 at 11:35 AM said...

/
டக்ளஸ்....... said...

உங்க வயசுக்கு கனவுல, சாரு வராம, நமீதாவா வருவாங்க அங்கிள்..!
/

ROTFL
:))))

மண்குதிரை on May 4, 2009 at 11:37 AM said...

என்ன நண்பா எதோ training இருக்கேன் சொன்னீங்க.

இதெல்லாம் எப்படி யோசிக்கீங்க.

இது "பின்-நவீனத்துவம்" என்பதா?

ரசித்தேன்.சில இடங்களில் சிரித்தேன்.

நான் ஆதவன் on May 4, 2009 at 11:44 AM said...

//வாயில் பீடாவுடன் அவர் பாடுவதைக் கேட்டால் சில கப்புகள் இலவசமாகவும் தருவார்.//

கப்பு தருவது இருக்கட்டும் டிஸ்யூ தருவாரா?

நான் ஆதவன் on May 4, 2009 at 11:44 AM said...

// சென்ஷி said...

//1) நள்ளிரவு ஆகுமுன் நல்லிரவு ஒன்று வருமே!! அப்போது படித்தல் நலம். மனம் கொண்டாடும் மனநிலையில் இருந்தால் இன்னும் அருமை//

பின்னூட்டம் எப்ப, எப்படி போடுறதுன்னு சொல்லி அனுப்பினா கும்முறதுக்கு வசதியா இருக்கும்!///

ரிப்பீட்டே

விஜய் ஆனந்த் on May 4, 2009 at 11:46 AM said...

:-)))...

vinoth gowtham on May 4, 2009 at 11:53 AM said...

சாரு சாருன்னு சொல்றிங்களே..
சாருமதியா, சாருலதாவா..
இல்ல
சயின்ஸ் சாரா, இங்கிலீஷ் சாரா..
அதுவும் இல்ல..
எலுமிச்சை சாறா, சாத்துக்குடி சாறா..

கார்க்கி on May 4, 2009 at 11:56 AM said...

முதல் வருகைக்கு நன்றி மைதீஸ்

@வேலன்,
ஏன் அண்ணாச்சி? :((

**************
@டக்ளஸ்,

அட.நீ சின்னப்புள்ள. உனக்கெல்லாம் அந்த அர்ர்த்தம் சொல்லக்கூடாது
****************

@சென்ஷி,

அதை அண்ணன் குசும்பன் சொல்லுவாரு தல

*************
@மயில்,

எங்ககிட்ட லாரியே இருக்குங்க

**************

@வித்யா,

அறிவு அதிகம்ன்னுதானே சொல்ல வர்றீங்க? :))

******************
@சிவா,

இன்னும் மாறலையா சகா நீங்க? :))

***************
@மண்குதிரை,

ட்ரெய்னிங் முடிஞ்சு ஹைதை வந்தாசுங்க..இது நேத்து இரவு ட்ரெய்னில வரும்போது எழுதியது

***************
நன்றி நான் ஆதவன் மற்றும் ஸ்மைலி ஆனந்த்

விக்னேஷ்வரி on May 4, 2009 at 12:12 PM said...

படிச்சு முடிச்சதும் தல சுத்துது கார்க்கி.

இதன் அடுத்த பாகம் விரைவில் வெளிவரும். ///

:(((((

அனுஜன்யா on May 4, 2009 at 12:15 PM said...

ஏனிந்தக் கொல வெறி கார்க்கி? சாரு ரசிகர்களின் பாவம் உன்னை ....

அனுஜன்யா

KVR on May 4, 2009 at 12:32 PM said...

:-)))))))))))))))))))))

சூப்பர்

ஜ்யோவ்ராம் சுந்தர் on May 4, 2009 at 12:36 PM said...

நீங்கள் கொடுத்திருந்த வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் போட்டிருக்கிறேன் - தயவு செய்து இனிமேல் இப்படி மொக்கையாக எழுதாதீர்கள் :)

கும்க்கி on May 4, 2009 at 12:40 PM said...

அடப்பாவி....சிச்சு சிச்சு கண்ணுல ஆனந்தகண்ணீரா வழியுதப்பா......

கும்க்கி on May 4, 2009 at 12:41 PM said...

மொத்த டீடெய்ல்ஸும் கொடுத்திருக்கிறாயே...இதெல்லாம் சாரு சார் கனவுல உங்கிட்ட சொன்னாரா?

கயல்விழி நடனம் on May 4, 2009 at 12:43 PM said...

உங்க ஊர்ல வெயில் ரொம்ப அதிகமோ????

லக்கிலுக் on May 4, 2009 at 12:51 PM said...

இதுவும் மண்டபத்துலே எழுதிக் கொடுத்ததுன்னு அடுத்த பதிவு போட்டுடாதீங்க :-)

தமிழ் விரும்பி on May 4, 2009 at 12:59 PM said...

உங்களை போன்ற ஆட்கள் இருக்கும் வரை தமிழ் இலக்கியத்தை பாபாதான் காப்பாற்ற வேண்டும்.

narsim on May 4, 2009 at 1:01 PM said...

மாஸ்டர் பீஸ் சகா.. மிக நல்ல அவதனிப்பு..அதுவும் //அரசாங்கமே கொண்டு சேர்க்கிறது..லெட்டர் போடுகிறேன்// அருமை சகா.

Suresh on May 4, 2009 at 1:09 PM said...

//சாரு சாருன்னு சொல்றிங்களே..
சாருமதியா, சாருலதாவா..
இல்ல
சயின்ஸ் சாரா, இங்கிலீஷ் சாரா..
அதுவும் இல்ல..
எலுமிச்சை சாறா, சாத்துக்குடி சாறா..//

ஹா ஹா

அறிவன்#11802717200764379909 on May 4, 2009 at 1:30 PM said...

great man..

rotfl.

Senthil on May 4, 2009 at 1:34 PM said...

good criticism about charu

உங்கள் நண்பன் on May 4, 2009 at 1:35 PM said...

கத்தரி வெயில் கொடுமை தாங்கலடா சாமி.....

zorbathebuddha on May 4, 2009 at 1:35 PM said...

தினமும் சாருவை படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதுதான் இப்படி எல்லாம் எழுதத்தூண்டுகிறது. ஹிஹி..ஹி..

நல்லா எழுதுறீங்க எழுதுங்க வாழ்த்துக்கள்.

ஆமா நீங்க எந்த ஊரு..மதுரையா நக்கல் நல்லா வருதே...

தீப்பெட்டி on May 4, 2009 at 1:39 PM said...

நல்லாயிருக்கு கார்க்கியண்ணே..

ஒரு சின்ன சந்தேகம்..

//பெயர்: அழகுமணி//

அந்த ரெண்டு ஃபோட்டாவுக்கும் இந்த பேருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?...

மணிகண்டன் on May 4, 2009 at 1:53 PM said...

கார்க்கி, சூப்பர். அதுவும் கடைசில Date/Time போட்டு முடிச்சி இருக்கீங்க ! ஆனா, பல கனவுகள் குறித்த youtube லிங்க் கொடுத்து இருக்கணும். அட்லீஸ்ட், பாகம் 2 ல எதிர்பார்க்கறேன்.

தராசு on May 4, 2009 at 2:12 PM said...

எப்படி, எப்படி...,,,

இப்படி...

Anonymous said...

அடடா நீங்களும் ஓவன்னாக் கதைகள் படிக்கிறீங்களா?( இப்பொழுதும்)

மங்களூர் சிவா on May 4, 2009 at 2:58 PM said...

@கார்க்கி

எதுக்கு நைனா மாறணும்???

நாம் நாமாகவே இருப்போம் அதுதானே சிறப்பு
(வீட்டுக்கு தெரிஞ்சா ஆகீடும் உடம்பெல்லாம் சிராய்ப்பு. அதெல்லாம் கண்டுக்காதீங்க)

Anonymous said...

சாருவோட சண்டை போடற அளவுக்கு பெரிய ஆளாகிட்டாங்க. !!

VIKNESHWARAN on May 4, 2009 at 3:09 PM said...

முடியல :))

பாண்டி-பரணி on May 4, 2009 at 3:10 PM said...

//சில மாதங்களாக கிராண்ட்டாவை படிக்க முடியவில்லை. யூ.கேவில் வாழும் இளிச்சவாயர்கள் யாராவது சந்தா கட்டிணால் நலம். அதற்காக நான் பாரிஸ் வரும்போது எனனை சந்திக்க வேண்டும் என்று சொல்லக் கூடாது. பாரீஸ்.//

நல்ல சரளமான நடை சகா

இது தல “சுஜாத்தா டச்சு very nice :) :) :)0)

டக்ளஸ்....... on May 4, 2009 at 3:57 PM said...

\\இது தல “சுஜாத்தா டச்சு very nice :) :) :)0)\\

என்ன கொடுமை சுஜாதா சார் இது?

டக்ளஸ்....... on May 4, 2009 at 3:59 PM said...

டிஸ்கிக்கே டிஸ்கி போட்ட எங்கள் ஹைதையின் அஞ்சா நெஞ்சன் கார்க்கி வாழ்க..வாழ்க..வாழ்க..வாழ்க..வாழ்க..

டக்ளஸ்....... on May 4, 2009 at 4:02 PM said...

\\பதிவின் நீளத்தைக் கண்டு உண்மைத்தமிழனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். \\
உங்களுக்கும் உண்மைத்தமிழனுக்கும் என்ன சம்பந்தம் ?

டக்ளஸ்....... on May 4, 2009 at 4:04 PM said...

\\மொக்கைசாமி என்ற லேபிளில் மட்டுமே 30 பதிவுகள் எழுதி இருக்கிறேன். \\

அப்ப லேபிள் போடாத எல்லாம் நல்ல பதிவா..?

Jeeves on May 4, 2009 at 4:08 PM said...

தூள். படங்கள் மட்டும் சரியா தெரியலை.

( உடனே அதை மாத்த தொழில்நுட்ப கணக்குக்கு ஒரு பத்தாயிரத்த அக்கவுண்ட்ல போடச்சொல்லிடாதீரும் )

Kathir on May 4, 2009 at 4:13 PM said...

//அலுவலகத்தில் வேண்டாம்.பிரவுசிங் செண்டரும் வேண்டாம். வீட்டில் படிப்பதை வரவேற்கிறேன். அதுவும் உங்கள் வீடென்றால் அற்புதம்.தங்கமணி ஊரில் இல்லை என்றால் வெகு பிரமாதம்//

தங்கமணியே இல்லாதவங்க எல்லாம் என்னய்யா பன்றது??????

Kathir on May 4, 2009 at 4:15 PM said...

//வீட்டில் டிவி இருந்தால் சூப்பர். அதில் ஆதித்யாவோ, சிரிப்பொலியோ ஓடட்டும். நீங்கள் அதிமுக என்றால் ஜெயா செய்திகள் ஓடும் நேரமாக படியுங்கள்//

இதில் பொருட்பிழை உள்ளது அமைச்சரே....

"நீங்கள் திமுக என்றால் ஜெயா செய்திகள் ஓடும் நேரமாக படியுங்கள்" என்று இருக்க வேண்டும்....

Kathir on May 4, 2009 at 4:18 PM said...

//வெயில் காலத்துக்கு இதமாக பியரோ, பழக்கமில்லாதவர்கள் நைண்ட்டியோ அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.அது உங்கள் காசில் இல்லாமல் யாராவது இளிச்சவாயர்கள் வாங்கித் தந்தது என்றால் டப்பாசுதான்//

யோவ்,
சைட் டிஷ் யாரு வாங்கிக் கொடுப்பாங்க...

Kathir on May 4, 2009 at 4:19 PM said...

//மேலே சொன்ன பின்குறிப்பு அதற்கும் மேலுள்ள முன்குறிப்புக்கான பின்குறிப்பு. பதிவு இனிதான் ஆரம்பம்//

:(((

:))))

Kathir on May 4, 2009 at 4:21 PM said...

//ட்ரெய்னிங் முடிஞ்சு ஹைதை வந்தாசுங்க..இது நேத்து இரவு ட்ரெய்னில வரும்போது எழுதியது//

அய்யோ.....

சாரி சகா. நான் ஹையா ன்னு தான் சொன்னேன். ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சி......

Kathir on May 4, 2009 at 4:21 PM said...

பதிவ இன்னும் படிக்கலை.....
அப்புறம் வரேன்ன்ன்ன்

Kathir on May 4, 2009 at 4:22 PM said...

49

Kathir on May 4, 2009 at 4:22 PM said...

ஹை 50

அக்னி பார்வை on May 4, 2009 at 4:39 PM said...

யோவ் இங்கே ஏற்கனவே வெயில் கொடும தாங்கல

ச்சின்னப் பையன் on May 4, 2009 at 4:55 PM said...

:-)))))))))))))))

Cable Sankar on May 4, 2009 at 4:57 PM said...

எப்பிடி..?????

MayVee on May 4, 2009 at 5:00 PM said...

present sir

பட்டாம்பூச்சி on May 4, 2009 at 6:15 PM said...

ஏன் இப்படி? உங்களுக்கு என்ன ஆச்சுப்பா?போன தடவ பேசுனப்போ கூட நல்லாத்தானே பேசிகிட்டு இருந்தீங்க...இப்படி சாருவ எல்லாம் பொளந்து கட்டற அளவுக்கு இப்ப என்ன நடந்துடுச்சுன்னு இந்த கொலைவெறி?
ஆனாலும் மிகவும் சிரித்து ரசித்தேன் என்று இங்கு பதிவு செய்து கொள்கிறேன் :))))

பட்டாம்பூச்சி on May 4, 2009 at 6:16 PM said...

என்னது மீண்டும் ஹைதை போயாச்சா?(இவ்வளவு சீக்கிரம் பெங்களூருக்கு விமோசனமா?நம்ம்ம்பவே முடியல :) )அதான் கூப்டப்போ சுவிட்சு ஆப் என்று கேட்கிறதா?
அது சரி....சொல்லாம கொள்ளாம கெளம்பிட்டீங்க?இது நல்லால்ல ஆமா சொல்லிட்டேன்....

aravind on May 4, 2009 at 6:29 PM said...

சாருவே சொல்லி விட்டார் நான் மலம் அள்ளிய பரம்பரையில் வந்தவன், பிச்சை எடுப்பவன் என்று .

நீங்கள் வேறு தனியாக சொல்ல வேண்டாம்.

நீங்கள் சொல்வது அவர் அள்ளிய மலத்தை வாங்கி குடித்து விட்டு அந்த நாற்றத்தில் உளறுவது போல் உள்ளது.

கார்க்கி on May 4, 2009 at 6:40 PM said...

/ aravind said...
சாருவே சொல்லி விட்டார் நான் மலம் அள்ளிய பரம்பரையில் வந்தவன், பிச்சை எடுப்பவன் என்று .

நீங்கள் வேறு தனியாக சொல்ல வேண்டாம்.

நீங்கள் சொல்வது அவர் அள்ளிய மலத்தை வாங்கி குடித்து விட்டு அந்த நாற்றத்தில் உளறுவது போல் உள்ளது//

மன்னிச்சுக்கோங்க. அவர் உங்க சொந்தக்காரர்ன்னு தெரியாம செஞ்சிட்டேன்

அறிவிலி on May 4, 2009 at 6:59 PM said...

மாஸ்டர் பீஸ்.

வேற ஒண்ணும் சொல்றதுக்கில்லை.

எம்.எம்.அப்துல்லா on May 4, 2009 at 7:00 PM said...

முன்குறிப்பு : இந்தப் பின்னூட்டத்தை முழுவதுமாக அனுபவிக்க வேண்டுவோர் கீழ்கண்ட சூழ்நிலையில்.....

வேண்டாம்டா கார்க்கி...நீ என்னைய அடிக்க வருவ :)))))

aravind on May 4, 2009 at 7:07 PM said...

உங்களை மன்னித்து விட்டேன் கார்கி
தெரியாமல் செய்ததால் ஒன்றும் பிழை கிடையாது
நாங்கள் அள்ளுவதொடு நிறுத்தி கொள்வோம் உங்களை போல
அதை அருந்த மாட்டோம்

அவர் எனது சொந்தகாரர் என்றால் எனக்கு பெருமை தான்

கார்க்கி on May 4, 2009 at 7:10 PM said...

@அரவிந்த்,

கொஞ்சம் வீட்டுப் பக்கம் வர முடியுமா? வேலை இருக்கு.

வால்பையன் on May 4, 2009 at 7:36 PM said...

ஹா ஹா ஹா

சான்சே இல்லை சகா!

பெயர்களை மட்டும் மாத்தி போட்டால் அப்படியே அங்க படிக்கிற மாதிரியே இருக்கு!

உங்களுக்கு சர்ருவோமேனியா வந்துருச்சான்னு செக் பண்ணீகோங்க!

தமிழ் பிரியன் on May 4, 2009 at 7:54 PM said...

kalakkal karki!

ஆதிமூலகிருஷ்ணன் on May 4, 2009 at 8:02 PM said...

உண்மையிலேயே கொஞ்சம் சீரியஸா போய்விட்டதுன்னுதான் நினைக்கிறேன், அடுத்த பதிவில் எப்படிச்சமாளிக்கப்போகிறாய் தெரியவில்லை. சப்ஜெக்ட் தேவையற்ற விஷயமாக படுகிறது. அதனால் நல்ல நகைச்சுவையாக வந்திருக்க வேண்டிய விஷயம் மிஸ்ஸாகிவிட்டதாக தோன்றுகிறது. சரி OK.!

அப்புறம் அர்விந்த் பயன்படுத்தியது தேவையற்ற வார்த்தைகள் என்றாலும் அவருக்குச் சரிக்கு சமமாய் அதை கிளறிக் கொண்டிருக்க வேண்டுமா?

dharshini on May 4, 2009 at 8:20 PM said...
This comment has been removed by the author.
MayVee on May 4, 2009 at 8:51 PM said...

கார்கி...
சொல்ல மறந்து விட்டேன் .....
பதிவில் இருக்கிற போட்டோ ஸ் மற்றும் profile போட்டோ எல்லாம் நல்ல இருக்கு ...


ஆமா இந்த பதிவின் உள்நோக்கம் என்ன ??????

தாரணி பிரியா on May 4, 2009 at 10:53 PM said...

present saga
ஏன் இப்படி

Jenbond on May 5, 2009 at 8:25 AM said...

\இதுவரை பத்து முழு ஆண்டு தேர்வுகளும், பத்து அரையாண்டு தேர்வுகளும், பத்து காலண்டு தேர்வுகளும் பல இடைத்தேர்வுகளும், ஆறு செமஸ்டர் தேர்வுகளும் எழுதி இருக்கிறேன். \\

கொஞ்சம் குழப்பமாகவே இருக்கு சகா நீங்க என்னதான் படிச்சிங்க எப்படி பாத்தாலும் கணக்கு இடிக்குது.

Karthik on May 5, 2009 at 11:31 AM said...

Dear Karki,

i'm reading your site for sometime. its a totally diffrent experience for me. you're the only writer whos managed to make me read in tamil.

my mom is very happy abt me reading tamil. hope i can get some your books when i come to india.

keep rocking!

suresh

boston.

கார்க்கி on May 5, 2009 at 11:42 AM said...

அனைவருக்கும் நன்றி... :))

@கார்த்திக்,

ங்கொய்யால. கஷ்டப்பட்டு பதிவெழுதினா இப்படி ஒரு கமெண்ட்டுலே ஜெயிச்சிட்டியே.. சான்ஸே இல்ல..

Karthik on May 5, 2009 at 11:50 AM said...

//கார்க்கி said...
@கார்த்திக்,
ங்கொய்யால. கஷ்டப்பட்டு பதிவெழுதினா இப்படி ஒரு கமெண்ட்டுலே ஜெயிச்சிட்டியே.. சான்ஸே இல்ல..

ஹி..ஹி. நன்றி. :)

Kalyanakumar on May 5, 2009 at 12:53 PM said...

Haha,

If Charu read this, He will look like a Ginger eaten monkey

Anonymous said...

//சாரு சாருன்னு சொல்றிங்களே..
சாருமதியா, சாருலதாவா..
இல்ல
சயின்ஸ் சாரா, இங்கிலீஷ் சாரா..
அதுவும் இல்ல..
எலுமிச்சை சாறா, சாத்துக்குடி சாறா..//

repeat......
who is charu?

தமயந்தி on May 20, 2009 at 1:43 PM said...

சான்சே இல்ல கார்க்கி..நீங்க பின்நவினத்துவ கிங்க்கு தான்..எம்.ஜி.ஆர் கூட காப்பி குடிச்சப்ப உங்க ரைம்ஸை மட்டுமா அரசு உடமையாக்கணுமானு நினைச்சார்..உங்க ஸ்ஸ்கூல் பேக்கை தேசியசின்னமா மாத்தணும்னு மத்திய அரசுகு கோரிக்கை வச்சத தன்னடக்கம் காரணமா சொல்லாம வுட்டுப் புட்டீக..ம்ம்ம்ம்

தமயந்தி on May 20, 2009 at 1:47 PM said...

..சான்சே இல்ல கார்க்கி..நீங்க பின்நவினத்துவ கிங்க்கு தான்..எம்.ஜி.ஆர் கூட காப்பி குடிச்சப்ப உங்க ரைம்ஸை மட்டுமா அரசு உடமையாக்கணுமானு நினைச்சார்..உங்க ஸ்ஸ்கூல் பேக்கை தேசியசின்னமா மாத்தணும்னு மத்திய அரசுகு கோரிக்கை வச்சத தன்னடக்கம் காரணமா சொல்லாம வுட்டுப் புட்டீக..ம்ம்ம்ம்

Joe on May 23, 2009 at 12:09 PM said...

ஏன் இந்த விளம்பரம்?

அந்த சினிமாக்காரனுங்க தான் விளம்பரம், விளம்பரம்னு அலையுரானுங்க...

 

all rights reserved to www.karkibava.com