May 31, 2009

தோரணை – ரோதணை

31 கருத்துக்குத்து


முதலில் நான் சொல்ல விரும்புவது, நான் ஒரு மசாலா பட விரும்பி. விர்விர்ரென பாயும் சுமோக்களும், வில்லனும் ஹீரோவும் சந்திக்கும் காட்சி முடிந்தவுடன் டண்டண்டன் ஹேய்ஹேய் என ஸ்பீக்கர் அலற ஹீரோ சாய்ந்தபடியும், சிரித்தபடியும் நடக்கும் காட்சிகளையும், அவ்வபோது ரிலாக்ஸுக்காக ஹீரோயின ஒரு டயலாக் பேசி முடித்தவுடன், முடிந்தால் ஒரு இச்சும் கூடவே நச்சுன்னு ஒரு பாட்டும் வந்தால் ரசிப்பவன். நம்ம புரட்சித் தளபதியின் சண்டக்கோழியை தவிர வேறு எதுவும் என்னைக் கவரவில்லை. இருந்தும் என்னைக் கேட்காமலே டிக்கெட் புக் செய்துவிட்ட என் அக்காவைத்,”நீதான் எடுத்த டிக்கெட், ஆனா போகப் போறது என் விக்கெட்” எனத் திட்டிக் கொண்டே ஓசியில், ஏசி காரில், காசி தியேட்டருக்கு போய் சேர்ந்தேன்.


நல்லக் கூட்டம் கவுண்ட்டரில், டிக்கெட் எடுக்க. ஆஹா படம் அப்பீட்டுடா என்று நினைத்துக் கொண்டேன். திரையில் புரட்சி தளபதி விஷால் என பெயர் வர ஆர்ப்பரித்தது தியேட்டர். “சவுண்ட் விஜய் படம் மாதிரி இல்லடா” என்றான் என் அக்கா மகன்.(ஹி இஸ் ஜஸ்ட் தேர்ட் ஸ்டேண்டர்ட்யா). அவனை திட்டுவதா வேண்டாமா என்று லேசாக குழப்பம். விமர்சனம் எழுதறேன்னு படத்த தவிர மத்தத பத்தியே பேசறானேனு கோவம் வருதா? இது விமர்சன்ம் இல்லைங்க.அதனால் அந்த விமர்சனத்த தூர வைங்க. சுமாரான முதல் பாதி. கலகலப்பாகவே செல்கிறது.குறை சொல்ல முடியவில்லை. ஆனால் சும்மா எகிறி பாய வேண்டிய இரண்டாம் பாதியையும் அதே காமெடி, அதிக காதல் என நமுத்து போக வைத்துவிட்டார் இயக்குனர். அனுஜன்யா சொன்னதில் இருந்து எடிட்டிங் ஏ1, ஒளிப்பதிவு ஓக்கே, இசையே படத்தில் இல்லை என டெக்னிக்கல் சமாச்சாரங்களை பந்தாட தோனலை.


நன்றி போடும்போது “My sincere thanks to god- Vishal” என்று முதல் ரோதணையை ஆரம்பித்தார்கள். பாடல் முடிந்த அடுத்த காட்சியில் தொடர்ந்து நாலு தடவை அவன் லாஜிக்கே இல்லாம பேசறாண்டா என விஷால் எகிறும்போது “டேய் டேய் அத நீ கேட்கறியா” என்று ஆத்திரம் வந்தது. பின் நான் ஒரு விஜய் ரசிகன் என்பதால் அமைதியானேன். இன்ச் கேப் கிடைத்தால் ஹீரோ பன்ச் வசனம் பேசலாம். இதில் வரும் எல்லோரும் பன்ச் டயலாக் பேசி நம்மை லன்ச் சாப்பிடுகிறார்கள். ”நான் ஆன்னா போட்டு ஆரம்பிகிறவன் இல்லடா. ஃன்னா போட்டு முடிகிறவன் என்கிறார்” கிஷோர். விஷால் சீரான இடைவெளியில் புத்திமதி சொல்லியே நம்மைக் கொல்கிறார்..ஆவ்வ்வ்வ்..


விஷாலுக்கு டயலாக் டெலிவரியே தெரியலை, பிரகாஷ்ராஜ் வழக்கம் போல, ஷ்ரேயா அருமையெல்லாம் சொல்ல முடியாது. நம்ம மனசுல தோன்றுவது இதுதான்.


விஷால் – போதனை


ஸ்ரேயா – சாதனை


வில்லன்கள் – வேதனை


மொத்தத்தில் தோரணை – ரோதணை.


முதல் பாதி மட்டும் சுமார். படம் முடிந்தவுடன் என் அக்கா என்னடா என்றார்கள். 

விடுப்பா விடுப்பா..

விஜய் படம்ன்னா தியேட்டர கலக்கறதும்

விஷால் படம்ன்னா வயித்த கலக்கறதும் சகஜம் தானே..

(இது புரியாதவர்கள் படம் பார்த்தோ இல்லை, பார்த்ட்வர்களிடம் கேட்டோ தெரிந்துக் கொள்ளுங்கள்)

May 30, 2009

இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் எசமான்

37 கருத்துக்குத்து

சில நாட்களாகவே எனக்குள் ஒரு உறுத்தல் என்னன்னு கடைசில் சொல்றேன்.

நான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து ஹைடெக் சிட்டிக்கு ஷேர் ஆட்டோவில்தான் செல்ல வேண்டும். பின்பக்கம் மூவரையும் ஓட்டுனருக்கு அருகில் இருவரையும் ஏற்றிக் கொன்டுதான் சென்றால்தான் அவர்களுக்கும் கட்டுப்படியாகும். பெண்கள் வந்தால் பின்னாடி அம்ர்ந்திருக்கும் ஆண்கள் முன்னால் அமர வேண்டும். அன்று நான் கையில் பெரிய பையுடன் வந்ததால் முன்னாடி அமர முடியாது என ஆட்டோக்காரரிடம் சொல்லிவிட்டுதான் ஏறினேன். என்னருகே ஒரு அழகிய பெண் வந்தமர்ந்தார். அவரைத் தொடர்ந்து இன்னொரு பெண் வர இவர் என்னருகில் நகர்ந்தார்.

முன்னாடி இருந்த கண்ணாடி வழியாக பின்னாடி இருந்த அந்தப் பெண்ணை பார்த்துக் கொன்டிருக்கும்போது அவர் என்னைப் பார்த்துவிட்டார். என்னாடி என்பதுபோல் கண்ணாடி வழியாகவே பின்னாடி இருந்தவரை நான் பார்க்க, முன்னாடி போங்கனு ஒரு குரல் கேட்டது. திரும்பினால் என் அலுவலகத்தில் வேலை செய்யும் மதுரைப் பெண் ஒருவர் என்னை முன்னால் என்று அமர சொன்னார். நான் என்னிடம் பை இருப்பதை சொல்லிப் போக முடியாதென்றென். ஓட்டுனரே அமைதியா இருக்கும் போது இவர் சத்தம் போட்டது எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. எனக்கு பக்கத்தில் இருந்த பெண் அவருக்காகத்தான் பின்னால் அமர்வதாக நினைத்துக் கொண்டார் போலும். முன்னால் அமர்பவர்கள் என்ன காசு கம்மியாகவா கொடுக்கறாங்கனு கேட்டேன். அவர்கள் பெண்களாம். நான் விடுவேனா? அந்த வண்டியில் இருந்து இறங்கி வேற வண்டியில்தான் சென்றேன்.

இதேப் போல் ஒரு சம்பவம் நான் ட்ரெயினில் போகும்போதும் நடந்தது. சார்மினார் விரைவு வண்டியில் சைடு அப்பர், லோயர் இருந்த இடத்தில் நடுவே இன்னொரு படுக்கை சேர்த்து மூன்றாக்கி விட்டார்கள்.அதில் அப்பர் பெர்த் கிடைத்தவர்கள் பாடு திண்டாட்டம் தான்.அன்று பார்த்து என்னை சுற்றி எல்லோருமே பெண்கள்.(20 25 வயதுக்குள்). ஒரே குஜாலா லேப்டாப் திறந்து என் வலையை மேய்ந்தேன். "எக்ஸ்க்யூஸ் மீ" என ஒருப் பாட்டு சத்தம் கேட்டது. நிமிர்ந்தால் நயந்தாராவின் தங்கை நின்று கொண்டிருந்தார். அவர்கள் குழுவாக வந்திருப்பாதாகவும், அடுத்த கோச்சுக்கு செல்ல முடியுமா எனக் கேட்டார். எப்படி முடியும் என சொல்ல முடியும்? இந்த பரிசலோடு சேர்ந்து நானும் நல்ல்லவனாகி விட்டேன் போலும். சரி ஆனா எந்த பெர்த் என்றேன். அப்பர் பெர்த்தை காண்பித்தார்.செக்கிங் முடிந்தவுடனே போகிறேன் என்றேன்.

அவர் சென்று அவரது உடைமைகளை எடுத்து வந்துவிட்டார். எல்லாம் முடிந்து நான் அங்கேப் போனால் அது சைடு அப்பர். அவர் காட்டியது அதுவல்ல.கடுப்புடன் இவரை வந்துக் கேட்டால் ரெண்டுமே அப்பர்தானே என்றார். நாங்க பொண்ணுங்க. கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சிக்கோங்க என்றார். ஏறியதில் இருந்தே என்னைப் பார்த்து புகைந்துக் கொன்டிருந்த நடுத்தர வயது ஆசாமி ஒருவர் பஞ்சாயத்துக்கு வந்து "லேடீஸ் சார். அட்ஜஸ்ட் பண்ணுங்க என்றார். சரி, நீங்க போய் அதுல படுங்க என்றேன். நான் ஏதோ பெரிய தேசத்துரோகம் செய்வது போல் அனைவரும் பார்த்தார்கள். அதுவரை என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொன்டிருந்த அவரின் தோழிகளும் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். வேறு வழியில்லாமல் விழித்துக் கொண்டே சென்னை வந்து சேர்ந்தேன்.

முதல்ல சொன்ன அந்த உறுத்தல் என்னன்னா, என் நெத்தியில என்ன இளிச்சவாயனு எழுதியிருக்கோ?

May 29, 2009

பிரபாகரன் – வரலாற்று நாயகன்

38 கருத்துக்குத்து

 

பெயர்ச்சொல்லில் ஒரு கவிதை – பிரபாகரன்

வினைச்சொல்லில் ஒரு கவிதை – பிரபாகரன்.

  2000 ஆம் ஆண்டு திண்டிவனத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கவிஞர் அறிவுமதி அவர்கள் சொன்னதுதான் மேலே உள்ளது. என் தந்தையின் பெயரில் அமைக்கப் பட்டிருந்த அந்த அரங்கில் அறிவுமதி போல் பலரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையே இருந்தனர். ஓவ்வொரு முறை பிரபாகரன் பெயர் உச்சரிக்கப்பட்ட போதும் முடிந்த அளவு நானும் பலம் கண்டு கத்தியது நினைவிலிருக்கிறது.

எப்போதிலிருந்து என்பது சரியாக நினைவிலில்லை. ஆனால் எப்போதுமே அவர் என் ஆதர்ச ஹீரோதான். எனக்கு இந்தியர் என்பதில் எப்படி உடன்பாடில்லையோ அது போலத்தான் தமிழன் என்பதிலும். இந்த உணர்வுகளின் வெளியே இருந்துப் பார்த்தாலும் அவர் ஒரு வரலாற்று நாயகர்தான்.  ஒரு இனத்தின் போராளி என்பதல்ல பிரபாகரன் மேல் நான் கொண்ட பற்றின் காரணம், புலிகள் செய்த தவறுகள் பல இருக்கலாம். ஆனால் அவைகள் தாண்டியும் அவர்கள் மீதும், பிராபகரன் மீதும் வரும் ஆர்வத்தின் ஆரம்பம் எதுவென சரியாக தெரியவில்லை.

சே குவேரா உலக மக்கள் அனைவருக்காகவும் போராடியவர். எந்த ஒரு நட்டோடும் தன்னை சுருக்கிக் கொள்ளவில்லை. அந்த அளவிற்கு இல்லையென்றாலும் அவரின் வரிசையில் வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டியவர் பிரபாகரன். விடுதலைப் புலிகள் அமைப்பின் தொடக்கம், வளர்ச்சி, எழுச்சி வீழ்ச்சியென அனைத்தும் வரலாறாக்கப் பட வேண்டும்.  அவரை ஒரு தீவிரவாதியாகத்தான் இன்னமும் பல தமிழர்களே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பின் மற்ற இந்தியர்கள் என்ன சொல்வார்கள்? இவை மாற வேண்டும்.

அங்கிருக்கும் மீதி மக்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இரண்டாம் தர குடிமக்களாக சிங்கிள வெறிப்பிடித்த அரசை அனுசரித்து போக வேண்டியதுதானோ? அபப்டியே வாழ்ந்தாலும் அடுத்த வேளை சோற்றுக்கே வழியின்றித்தானே இருக்கிறார்கள்? 

 பழி வாங்கியாச்சு அம்மையாரே!!! மீதமிருப்பது புலிகள் அல்ல. கருணை காட்டக் கூடாதா? மூன்று அமைச்சரோடு இவர்களுக்கும் ஒரு வரம் வாங்கி வாருங்கள் கலைஞரே.. உயிருள்ள வரை உதயசூரியனுக்கே வாக்களிக்கிறோம்.

நம் குடும்பத்தில் ஒருவர் இறந்தாலே சில நாட்களில் வழமைக்கு திரும்பி விடுகிறோம். நாளையே பிரபாகரன் நம்மை விட்டு தூரம் செல்லக்கூடும். ஆனால் நினைவில் கொள்ள வேண்டியது பிரபாகரனையும் அவன் பின்னால் இருந்த முகமறியா பல்லாயிரக்கணக்கான புலிகளின் தியாகத்தைத்தான்.

    புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள் என்பார்கள். வேண்டாம். இவர்களை புதைத்து விடுங்கள். நாளை இன்னொரு பிரபாகரன் தோன்றி வந்தாலும் நான் கட்டிய வரிப்பணம் டாங்கியாக இலங்கை வந்து சேரும். நினைவில் கொள்ளுங்கள். இந்த உலகம் பாதுகப்பற்றது.  வைரமுத்து சொன்னது போல்

உலகத்தை நேசி ஒருவனையும் நம்பாதே

உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே..

பி.கு: பிரபாகரன் இறந்ததாக சொன்ன அன்று எழுதியது. பின் புது சந்தேகத்தை எழுப்பினார்கள். இன்றுவரை விடை தெரியவில்லை. எங்கே இருக்கிறாய் பிரபாகரா????

May 28, 2009

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-The real champions.

33 கருத்துக்குத்து


(தோல்வியிலும் உடனிருக்கும் கொல்கத்தா நைட் ரசிகர்களுக்கு நன்றி. We will bounce back next year.)

 ******************************************************

     லட்சுமிராய் தெரியுமா? அவருக்கும் தோனிக்கும் ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல் இருப்பதாக போன வருடம் முதலே பேசிக் கொள்கிறார்கள். இதை அறிந்த ஷாரூக் லட்சுமிராய் மூலம் தோனியிடம் ஒரு பிசினஸ் பேசிகிறார். அதன்படி சென்னை தோற்றுவிட்டால் தோனிக்கு ஒரு 50 லட்சம், லட்சுமிராயுக்கு 20 லட்சம். ஷாரூக்கே நேரிடையாக தோனியிடம் மொபைலில் பேசுகிறார்.

ஷாரூக்: ஹலோ தோனி பையா (இது இந்தி bayya).

தோனி: yes boss.

ஷாரூக்: என்ன சொல்றீங்க? எபப்டியாவது தோற்கனும்.

தோனி: கஷ்டம் ஷாரூக். தாதாவும் அகர்காரும் விளையாடறாங்களா?

ஷாரூக்: ஆமாம். அவங்க இல்லாமலா? அவங்கதான் எங்க கீ ப்ளேயர்ஸ்

தோனி: அப்ப கஷ்டங்க நாங்க தோக்கறது

(டெரர் ஆகிறார் ஷாரூக்)

ஷாரூக்: 50 லட்சம் தர நான் ரெடியா இருக்கேன் தோனி

தோனி: அந்த ரேட்டுக்கு மார்ஜின் வேணா குறைக்க முடியும்.

ஷாரூக்: ப்ளீஸ். ஒரு கோடி. தட்ஸ் ஆல். நான் ஜெயிக்கனும்

தோனி: கோடியா? ரைட்டு. எப்படி தோக்கனும்?என்ன செய்யனும்?

ஷாரூக்: முதல்ல டாஸ் தோக்கனும்.

(மனசுக்குள் சொல்கிறார். ”ங்கொய்யால இதெல்லாம் தெரியாம டீம வாங்கிட்டாரு. வெளங்கிடும்”)

தோனி: அது என் கையில இல்லைங்க. ஜெயிச்சாலும் நீங்க சொல்றபடி செய்றேன். பேட்டிங் எடுக்கனுமா, பவுலிங்கா?

ஷாரூக்: பவுலிங். கொல்கத்தா முதல்ல பேட்டிங் செய்யனும். 180 மேல அடிக்கனும்.

தோனி:  அடிக்க வைக்கனும்னு சொல்லுங்க. கங்குலி வேற ஓப்பனிங். 180 கஷ்டம் தான். பரவாயில்ல. செய்றேன்

ஷாரூக்: நீங்க 100ரன் தான் அடிக்கனும். தட்ஸ் ஆல். இதுக்குத்தான் ஒரு கோடி

தோனி: அகர்கார் நாலு ஓவரும் போட்டா 100 ரன் கஷ்டம். அவரே 50 ,60 கொடுப்பாரு. ஓக்கே. டன்( Ton) டன்(.done)

ஷாரூக்: சரி.  மேட்சுக்கு நடுவுல மொபைல கைல வச்சுக்கோங்க. நான் அடிக்கடி கால் பண்றேன்.

மேட்ச் தொடங்குகிறது. பத்து ஓவரில் 48 ரன்னுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து விடுகிறது கொல்கத்தா. கங்குலியும் ஷுக்லாவும் ஆடுகிறார்கள். Strategy ப்ரேக்கில் கால் செய்கிறார் ஷாரூக்

ஷாரூக்: ஹே. என்ன செய்ற? 10 ஓவருல 48 அடிச்சா எப்படி 180 அடிக்க முடியும்?

தோனி: (அத உங்க ஆளுங்க கிட்ட சொல்லுங்க) நான் என்ன ஷாரூக் செய்வேன்? தாதா ஆஃப் சைடுல நல்லா ஆடுவாருன்னு அபப்டியே போட சொன்னேன். வைடு பால மட்டும் தொடறாரு. மத்த பால தொட மாட்டறாரு.

ஷாரூக்: எக்ஸ்ட்ரா போட வேண்டியதுதானே?

தோனி: 48 ரன்னுல 31 எக்ஸ்ட்ரா தான் பாஸ்.

ஷாரூக்: சரி. அடுத்த 10 ஓவருல 130 ரன் அடிக்க வைங்க. கோடி ஞாபகம் இருக்கட்டும்.

தோனி: நிச்சயமா.

ஜெயிக்கறத விட தோக்கறது ரொம்ப கஷ்டம் போலிருக்கே என்றபடி கிரவுண்டுக்குள் ஓடுகிறார் தோனி. 20 ஓவரின் முடிவில் வெறும் 130 ரன்களே அடிக்கிறார்கள். அதிலும் 51 எக்ஸ்ட்ரா.மீண்டும் ஷாருக் லைனில் வருகிறார்.

ஷாரூக்: என்ன இது தோனி?

தோனி:  அட நீங்க வேறங்க. ஸ்டம்ப்ப பார்த்து போட்டா போல்ட் ஆகறாங்கனு அவுட் சைடு பால் போடறோம். ஏதாவ்து ஒரு பால் தொடறாங்க. அதையும் ஃபீல்ட்ரஸ புடிக்க வேணான்னு சொல்லிட்டேன். அப்பவும் நேரா அம்பயர் மேலயோ, ரன்னர் ஸ்டம்ப் மேலயோ அடிக்கிறாங்க. ரெண்டு ரன் ஓட வேண்டியதுக்கு ஒரு ரன் ஓடிட்டு ரெண்டு பாட்டில் தண்ணி குடிக்கிறாங்க. இந்த ஷுக்லா அவுட்டும் ஆக மாட்ட்றான், ரன்னும் அடிக்க மாட்டறான். நானும் ஃபீல்டிங் மாத்திப் பார்த்தேன். அப்பவும் ஒரு ஃபீல்டரயும் மிஸ் பண்ணாம கரெக்டா அவங்க கைக்கு அடிக்கறாங்க உங்க ஆளுங்க.. நான் என்ன செய்ய?

ஷாரூக்: பேச நேரமில்லை. 80 ரன்னுக்கு அவுட் ஆயிடுங்க.

(லைன் கட்டாகி விடுகிறது.ஹைடனுக்கு காயம் என்று அவரை ஓப்பனிங் ஆடவிடாமல் செய்கிறார். பார்த்தீவ் படேலிடம் முதல் ஆறு ஓவரில் 20 ரன் அடிக்க சொல்கிறார். முதல் ஓவரில் 20 ரன்கள். ஷாரூக் அழைக்கிறார்.   )

ஷாரூக்:  வாட் இஸ் ஹேப்பனிங்க தோனி? 20 ரன் இஷாந்த் ஓவர்ல

தோனி: மேட்ச்ச பாருங்க ஷாரூக். மொத பால் வைடுல ஃபோர். மூனாவது பால் கேட்ச் கொடுத்தா அது நோ பால். ஃப்ரீ ஹிட் கூட மிஸ் செஞ்சோம். ஓவர் த்ரோல ஃபோர் கொடுக்கறாங்க. மறுபடியும் கேட்ச் கொடுக்க ட்ரை பண்ணது மட்டும் சிக்ஸ் போயிடுச்சு. மத்தபடி எங்க மேல தப்பில்ல.

( ஒன் டவுன் பத்ரிநாத்தை இறக்கி, டெஸ்ட் மேட்ச் ஆட சொல்கிறார். அகர்கார் தன் பங்குக்கு எட்டு வைடும், நாலு நோ பாலும் போடுகிறார். எவ்ளோ முயன்றும் சென்னை அணி 19 ஓவரில் 126 ரன் அடித்து விடுகிறது. மொபைலை ரைனாவிடம் கொடுத்துவிட்டு தோனியே இறங்குறார்)

ஷாரூக்: நாலு ரன் அடிச்சிடுவாரா தோனி?

ரெய்னா: தோனியே போயிருக்காரு. அடிக்க மாட்டாருங்க

(அகர்காரிடம் பந்தை கொடுக்கிறார் மெக்கல்லம். இப்போது ரெய்னா ஃபோன் செய்கிறார்)

ரெய்னா: இப்படி செஞ்சா எப்படிங்க நாங்க தோக்கறது? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?

ஷாரூக்: அகர்காரை குறைச்சு மதிப்படறீங்க. பாருங்க.

&*^%^&*&^%, மனசுக்குள் கெட்ட வார்த்தையால் திட்டுகிறார் ரெய்னா. லெக் ஸ்டம்ப் கார்ட் எடுத்து நிற்கிறார் தோனி. ஆனால் அகர்காரின் பந்து ஸ்டம்புக்கு மேலே செல்கிறது. . லெக் அம்பயர் நோ பால் என்கிறார். சண்டைக்கு செல்லும் மெக்கல்லத்திடம் மைதானத்தில் 10 பேர் மட்டுமே இருப்பதாக சொல்கிறார். தண்ணி குடித்திவிட்டு கங்குலி ஓரமாக உட்கார்ந்திருக்கிறார்.

ஷாரூக்:  ரெய்னா. ஏன் அவரு நோ பால் அடிச்சாரு?

ரெய்னா: ங்கொய்யால. அவரு எங்க அடிச்சாரு? தாத்தவ, ச்சே தாதாவ கேளுங்க.

அடுத்த பந்து லெக் சைடில் செல்கிறது. வைடு போகக் கூடாது என்று பேடால் தடுக்கிறார் தோனி. அடுத்த பந்தை ஆஃப் சைடில் போடுகிறார். அந்த வைட் பந்தை தடுக்க முடியாமல் போகிறது தோனியால். அந்தப் பந்தையும் மெக்கல்லம் மிஸ் செய்ய, பவுண்டரியை தாண்டுகிறது. அழுதுக் கொண்டே செல்கிறார்

 

 

 

 

தோனி.

********************************

பி.கு: இந்தப் பதிவை சென்னை-கொல்கத்தா இடையே நடைபெற்ற கடைசி ஐ.பி.எல் ஆட்டத்திற்கு முன் எழுதி வைத்தேன். அதிசயமாக அந்த ஆட்டத்தில் கொல்கத்தா வென்றதால் பதிவிடவில்லை. இருந்தாலும் எழுதியதை சும்மா விடுவோமா? அதான் உங்களுக்காக…

*******************************


  இன்று பிறந்தநாள் காணும்

 அன்பு அண்ணன்

 அசத்தல் மன்னன்

 ஆயர்பாடி கண்ணன்

கும்க்கி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்..

இனறைய பார்ட்டியில் கிழியப்போகுது கிருஷ்ணகிரி..


May 27, 2009

உலகை அழிக்க வந்த உலக அழகி

49 கருத்துக்குத்து

   பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறித்து ப்ளாஸ்டிக் கவரில் சுற்றி பொக்கெயென உன் பிறந்த நாளுக்கு தர மனமில்லை எனக்கு. எனக்காக ஒரே ஒரு முறை ரோஜாத் தோட்டத்திற்கு வா. நீங்களெல்லாம் அழகான ரோஜாவல்ல என அவைகளிடம் சொல்லும் போதெல்லாம் இளக்காரம் செய்கின்றன. உன்னைப் பார்த்து தற்கொலை செய்து கொள்ளும் சில ரோஜாப்பூக்களை சேகரித்து தருகிறேன்.பொக்கெயன.

நினைவிருக்கிறதா? சென்ற பிறந்தநாளன்று கடற்கரைக்கு சென்றோம். காற்றுக் கூட நம்மிடையே நுழைய முடியாதபடி நெருக்கமாக அமர்ந்தாய். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவனிடம் நீ வேஸ்ட்டுடா என்றபடி சற்றுத் தள்ளி அமர்ந்தாய். நம் காதல் வந்து  உட்கார்ந்துக் கொண்டது அந்த இடைவெளியில்.

வெள்ளை நிற சுடிதாரில் உன்னைப் பார்த்த அன்று, நல்லவேளை பாரதிராஜா கண்களில் படாமல் போனாய் என உன் தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். என்னுடன் சமாதானமாக போக வேண்டியே அந்த உடை என அவர்களில் ஒருத்தி சொல்லித்தான் தெரிந்துக் கொண்டேன். நமக்குள் என்ன சண்டை என உன்னிடம் கேட்டபோது சொன்னாய். ” இனிமேல் அப்படிப் பார்க்காதீங்க. ”

நீ பிறக்குமுன் எந்தக் கடவுளிடம் வேண்டிக் கொண்டார்களாம் உன் அம்மாவும், அப்பாவும்? அந்த ரகசியத்தை பிறருக்கும் சொன்னால் இன்னும சில ஆண்கள் என்னைப் போல அந்தரத்தில் நடக்கக் கூடுமல்லவா!!!

என்னிடம் நீ வாங்கிச் சென்ற ரோஜாச்செடி மொட்டு மட்டுமே தருகிறது. பூக்கவே இல்லையென அலுத்துக் கொள்பாவளே, உன்னை யார் மொட்டாய் இருக்கும் போதே அதற்கு முத்தம் தர சொன்னது? அடுத்த முத்தம் வேண்டி உதடு குவிந்து நிற்கிறது அவைகளும் என்னைப் போல.

குளோபல் வார்மிங்குக்கு எதிராக உலகமே நடவடிக்கை எடுக்கவிருக்கிறதாம். விஞ்ஞானிகளும் அதற்கான காரணங்களை கண்டறிந்து அழிக்கப் போகிறார்களாம். எப்படி உன்னை அவர்களிடம் இருந்து காப்பற்ற போகிறேன் எனத் தெரியவில்லை எனக்கு.

முதலிரவைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம் என்றேன். இரவு தொலைபேசியில் கேட்டுக்கோ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாய். அன்றிரவு, "என்னடா செல்லம் உன் டவுட்டு" என்ற உன்னிடம் “மத்த பழமெல்லாம் ஓக்கே. ஈசியா சாப்பிடலாம்.எதுக்கு அன்னாசி பழம் வைக்கறாங்க. உனக்குத் தெரியுமா?” என்றேன். சில நொடி அமைதி  கலைத்து சொன்னாய் “அங்க வந்து இந்த மாதிரி லூசுத்தனமா ஏதாவது கேட்டா உன் மூஞ்சுல தேய்க்கறதுக்கு”.

******************************************

பி.கு: காதல் பதிவு எழுதி ரொம்ப நாளாகிவிட்டதே என மடலிட்டு கேட்டுக் கொண்ட வினோவிற்காக இந்தப் பதிவு. பதிவு பிடிக்கவில்லை என்பவர்கள் வினோவைத் திட்டிக் கொள்ளுங்கள். நல்லாயிருக்குன்னா ஹிஹிஹி ஃபீல் பண்ணி எழுதிய என்னைப் பாரட்டுங்கள்.

May 26, 2009

பதிவர் பரிசலுக்கு

52 கருத்துக்குத்து

பரிசலின் நேற்றைய “நடிகர் விஜய்க்கு” என்ற கடிதத்தைப் படிச்சிட்டிங்கதானே?

*********************************************************** அன்புள்ள ‘கிழட்டு பதிவர்” பரிசலுக்கு..

சமீபகாலமாக பலரையும் பிடித்து ஆட்டும் சினிமா மேனியா உங்களையும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என பல்வேறு குறிப்புகளின் மூலம் உணர்கிறோம்.

’சினிமா மேனியா’ என நான் குறிப்பிடுவது லக்கி, அதிஷா வகையறா பதிவர்களுக்கு இருக்கும் விமர்சன மேனியா அல்ல. சினிமா டைரக்‌ஷன் பண்ண நினைப்பது.

நான் லக்கிலுக் வாரிசு என்று சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் சாருக்கும் எனக்கும் நடுவில் லக்கிலுக் எதற்கு என்று டைரக்டாக சாருவின் வாரிசாக உங்களைக் காட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள். பரிசல்காரனின் வலைப்பூவில் பரிசல்காரனின் கதை என்றத் தலைப்பை பார்க்கும் போதே என்னைப் போன்ற பலருக்கும் கிலி பிடித்து ஆட்டியது. அடுத்த பதிவின் பெயரும் டுபாக்கூர் இன்பாக்ஸ். அதற்கடுத்து ‘ஜட்டியோபனியனோஷீனிசம் என்று உறுதிப்படுத்தாத வட்டாரங்களிலிருந்து தகவல் வருகிறது. சரி.. திடீரென்று ஏன் இந்த சாரு பாசம் என்றால்.. அவரும் ஒரு இ.வா தயாரிப்பாளர் மாட்டினால் இயக்குவேன் என அது குறித்த எந்த பிரக்ஞையும் இல்லாமல் சொல்லி வருகிறார். அவரைப் போல வெளம்பரம் என்று தற்பெருமை வேறு அடித்துக் கொள்ள தொடங்கிவிட்டீர்..

மேலும் அதை உறுதிப்படுத்துவது.. ஆனந்த விகடனில் வெளியான உங்கள் கதை. ‘நான் இந்தக் கதையையே திரைப்படமாக எடுக்க  வேண்டும் என்பது என் ரசிகர்களின் விருப்பம். என் பிறந்தநாளன்று நல்ல முடிவு சொல்லுவேன்’ என்றிருக்கிறீர்கள்.

உங்களை திரைப்படம் இயக்க சொல்பவன் உங்களின் உண்மையான வாசகனாய் இருக்க முடியாது. அதை நம்பி நீங்கள் அந்த முயற்சியில் இறங்கினால் அது எப்படி இருக்கும் என்பது கடந்த காலத்தில் அப்படி போனவர்களின்  வரலாறுகளைப் பார்த்தாலே புரியும்.ஆதி ஹிட்டடித்தாரே என கேட்காதீர்கள். அவருக்கு கிடைத்த ஹீரோ உங்களுக்கு கிடைக்க மாட்டார்.ஆதியின் மற்றப் படங்களுக்கு நேர்ந்தக் கதை தெரியுமா?

  சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று கிளம்பிய  ஒருவர் கேமரா கிடைக்காமல் பிரியாணி பதிவரை துரத்தி வருகிறாராம். போதாதென எடிட்டிங் டூல் கேட்டு இன்னொருவரை கொத்து பரோட்டா போடுகிறாராம். இவர் தான் இப்படி என்றால் எல்லா முன் அனுபவமும் இருக்கும் அந்த டிவி பதிவர், விகடனில் இருந்து சரோஜாதேவி வரை கதை சொல்லிவிட்டார். ஆனால் இன்னமும் விமர்சனம் மட்டுமே எழுதிக்  கொண்டிருக்கிறார். இவ்வளவு ஏன், எளிதில் எடுத்து விடலாம் என அந்த அழகு கொஞ்சும் பதிவரை அஜால் குஜால் படத்தில் நடிக்க வைக்க முயன்றார்கள், பதிவுலக கோ இன்சிடென்ஸ் இரட்டையர்கள். இன்னும் அழகுப் பதிவர் ஆசையோடு காத்திருக்கிறார். ஸ்கீரின் டெஸ்ட் கூட நடக்கவில்லையாம்.

இதையெல்லாம் சொல்ல நீ யார் என்று கேட்காதீர்கள். எனக்கும், என் காதலிகளுக்கும் உங்கள் எழுத்து பிடிக்கும். உங்கள் ரசிகர்கள்தான் நாங்கள். அந்த வேலையை நீங்கள் ஒழுங்காய் செய்தாலே போதும். சினிமா ரசிகனுக்கு இன்னும் ஒரு இயக்குனர்  தேவையே இல்லை. அப்படி இயக்குனர் ஆகியேத் தீருவேன் என்றால் ஒரு பிரபல இயக்குனரிடம் உதவியாளராக சேருங்கள்.அல்லது ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில்; சேருங்கள்.அப்படி உழைத்து கஷ்டமெல்லாம் பட்டு பின்னாளில் ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால்.. இதெல்லாம் முடியுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்...

அதை விடுத்து நேரிடையாக அவர் போல இயக்குனர் என்று கனவெல்லாம் காணாதீர்கள். ப்ளீஸ்.

பதிவில் எழுதுவது  உங்கள் தொழில். எழுதுங்கள். கார்க்கியிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். பதிவுலகத்திலே முழுமூச்சாய் இருங்கள். மனதிருப்திகாக படம் எடுக்க வேண்டுமென்றால் மொக்கை கேமராவில் படம் எடுங்கள். ஆனானப்பட்ட பைத்தியக்காரனே  வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் களம் அது. அவரை நாடகம் போதும், சினிமா எடுங்கள்  என்று தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு படம் எடுக்காமல்  மறைமுகமாக அவர் நல்லது செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தவர்கள் அறிவார்கள். அறிவுள்ளவர்கள் உணர்வார்கள்.

எங்களுக்குத் தேவைப் படமல்ல. உங்களால் முடிந்த ஒரு அவியலை தந்துக் கொண்டே இருங்கள். அதுபோதும். எந்த பிரபல்யமுமின்றி இருக்கும் பலரும் குறும்படம் எடுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.  அதற்கு எந்த நட்சத்திர பின்புலமோ, ஜால்ரா தட்ட வேண்டும்  என்ற நிர்பந்தமோ இல்லை.

  புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை சாருவிடம் காட்டுங்கள். ஏதாவது பலனிருக்கிறதா என்று பார்ப்போம்!


அளவில்லா கடுப்போடு
உங்கள் அவியலைப் படித்து அலறிக் கொண்டிருக்கும்

சாதாரண வாசகன்.

May 23, 2009

விஜயகாந்த்: சந்தர்ப்பவாத அரசியலும் ஈழ ஆதரவும்

28 கருத்துக்குத்துவிஜயகாந்த்தின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டினை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். 
 தேமுதிகவிற்கு முன்:  
  அரசியல் தலைவராக அவதாரமேடுப்பதற்கு முன்பு வரை விஜயகாந்த் ஒரு நேர்மையான ஈழ ஆதரவாளராகவே இருந்து வந்தார். இன்னும் சொல்லப்போனால், தனிப்பட்ட லாபம் எதுவும் இல்லாமலேயே இவர் ஈழ விடுதலைப்பற்றி தனது கருத்துக்களை பதிந்து வந்தார். ஒரு சாதாரண நடிகராக (அரசியல் கனவுகள் இல்லாதபோதே) இருக்கும்போதே வெளிப்படையாக ஈழ விடுதலைக்கான தனது ஆதரவு கருத்துக்களை சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் வெளிப்படுத்த தவறியதில்லை. குறிப்பாக தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயரிட்டது, ஈழம் விடுதலை பெறும்வரை பிறந்தநாள் கொண்டாடமாட்டேன் என்று கூறியது, அதனை கூடியமட்டிலும் கடைபிடித்தது, ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகளிலும் ஈழம் 
சம்பந்தமான கேள்விகளுக்கு எவ்வித மழுப்பலுமின்றி பதில் கூறியது போன்ற செய்கைகளை கவனிக்கும்போது நமக்கு தோன்றியது ஒன்றுதான்; ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இவர் நெடுமாறனுக்கோ வைகோவிற்கோ என்றும் சளைத்ததில்லை.
 தேமுதிகவிற்கு பின்:
  ஒரு அரசியல் தலைவராக உருவெடுத்த பின் ஈழம் பற்றி விஜயகாந்த் அவ்வளவாக எங்கும் பேசியதாக எனக்கு நினைவில்லை. தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டபோது கூட இவர் கலைஞரை சாடுவதில்தான் கவனம் காட்டினாரே தவிர ஈழ விடுதலைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் இவற்றையெல்லாம் ஒதுக்கிவிடலாம்.
  ஆனால் ஈழத்தில் போர் தீவிரமடைந்து மக்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டு வந்த சூழலில் இவர் மௌனம் சாதித்தது ஏற்றுக்கொள்ளக்கூடியதே அல்ல. அதிலும் முத்துக்குமரனின் உயிர்த்தியாகம் நடந்தேறிய சமயம் இவர் ஏனோதானோவென்று இருந்தது சகித்துக்கொள்ள இயலாத ஒன்று.
   வாழ்நாள் முழுவதும் ஈழ ஆதரவாளராக இருந்த ஒருவர் ஏன் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? காரணம் ஒன்றே ஒன்று, காங்கிரசுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள். ஈழப்பிரச்சினையில் காங்கிரஸின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அக்கட்சியுடன் கூட்டணி பேசும்போதே எவ்வாறு ஈழ ஆதரவு கருத்துக்களை வெளிப்படையாக பேசுவது எப்படி? தமிழகத்தில் ஈழ ஆதரவு எழுச்சி பெற்றிருந்த காலத்தில் காங்கிரசுடனான கூட்டணிக்காக தனது ஈழ ஆதவு கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டது விஜயகாந்த்தும் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியே என்பதை உலகிற்கு உணர்த்திவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியுற்ற பிறகு ஈழம் பற்றி அதிகம் பேசியதும் அவரது சந்தர்ப்பவாதத்தை நிரூபிப்பதாகவே அமைந்தது.
  திமுக காங்கிரசை மீறி எந்த நிலைப்பாடும் எடுக்க முற்படாத சூழலில் ஆத்மார்த்தமாக ஈழ விடுதலையில் அக்கறைகொண்ட கட்சிகளை இணைத்து தேர்தலை எதிர்கொள்ளும் வாய்ப்பு தேமுதிகவிற்கு அமைந்தது. தேமுதிக, மதிமுக, இடதுசாரிகள் மற்றும் விசி ஆகிய கட்சிகள் கூட்டணியாக சேர்ந்திருந்தால் இப்போது வெற்றிபெற்ற இடங்களைவிட ஒன்றாவது அதிகம் பெற்றிருப்பார்கள் என்பது ஏன் எண்ணம். இவை அனைத்துமே கடந்தகாலங்களில் (விஜயகாந்த் நடிகராக மட்டும், தா.பாண்டியன் சில மாதங்களாக, மார்க்சிஸ்டுகள் போர்நிறுத்தம் என்ற அளவில் மட்டும்) ஈழ பிரச்சினையில் நிஜ அக்கறையுடன் நடந்துகொண்ட கட்சிகள் ஆகும்.
  தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவேன் என்று பேச்சுக்கு பேச்சு கூறும் விஜயகாந்த் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது தானும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என்று நிரூபித்துள்ளார். ஈழத்தில் நடைபெற்று வரும் பேரவலங்களை தடுத்து நிறுத்தும் வல்லமை இவருக்கு இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதேபோல எதிர்காலத்தில் அவர்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தவல்ல வாய்ப்பு அமைந்தபோது அதனை தனது சுயலாபத்திற்காக நீர்த்துபோகச்செய்த விஜயகாந்த் ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதி என்பதும் உண்மை.
  தேர்தல் அரசியல் என்ற சாக்கடையை மீறி சிலத் தலைவர்களிடம் காணப்படும் சில நல்ல விஷயங்கள் கூட இவரிடம் இல்லை என்பது என் கருத்து.

May 22, 2009

முகமூடி

34 கருத்துக்குத்து

 


மு.கு: இந்தப் பதிவில்  குறிப்பிட்டிருக்கும் நிகழ்ச்சிகளும்,   கதாபாத்திரங்களும் உண்மை

 

அல்ல

******************************************************************************************************************

கடைசி ஓவரில் 21 அடிக்க வேண்டும் டெக்கான் சார்ஜர்ஸ்.மார்டசாவிடம் பந்தைக் கொடுத்தார் மெக்கலம். முதல் பந்தில் ரோஹித் ஷர்மா அடித்த பவுண்டரியில் லயிக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மதனின் மொபைல் ”hi you got an sms " என சினுங்கியது. நிலா அனுப்பியிருந்தாள். நிலா மதனின் தோழி.

"Love is just a word unless someone come to you along with the meaning" good night.

கை தானாக ஃபார்வர்ட் பட்டனை அழுத்தியது. முதலில் கம்லாவிற்கு அனுப்பினான். பதிலுக்கு காத்திருந்தவனுக்கு ”The last message costs Rs1.50" என்ற பதில் வந்தது ஏர்டெல்லிடம் இருந்து மட்டும்.

   நான்கு பந்து .பதினான்கு ரன் தேவை. எப்படியும் கொல்கத்தா ஜெயித்து விடும் என்று நம்பினான்.

அடுத்து அதே குறுந்தகவலை ரம்யாவிற்கு அனுப்பினான். மின்னல் வேகத்தில் பதில் வந்தது.”Oh. you got someone already who sends sms like dis. good. Bye". வெறுத்துப் போனான்.

மூன்றாவது பந்தை சிக்சருக்கு விரட்டினார் ரோஹித். ஈகுவேஷன் 3 பந்தில் 8 ஆக குறைந்தது. மேட்ச் இன்னமும் கொல்கத்தா கையில் இருப்பதாக நினைத்தான் மதன்.

காணாமல் போனது ரோஹித் அடித்த பந்து. சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் சோனி நிறுவனத்தினர் லாரியே ஓட்டி கொண்டிருந்தனர். மீண்டும் மொபலை நோண்டினான். இந்த முறை ரேவதிக்கு. காண்டாக்ட்ஸில் அவர் பெயர் இல்லை. ஞாபகத்தில் இருந்த நம்பருக்கு அனுப்பினான்.  பதில் வந்தது. “Wrong number.Stop sending sms".

நான்காவது பந்து வைடு ஆனது. மூன்று பந்தில் ஏழு ரன்கள்.

அலுவலக தோழி சேத்னா எஸ்.எம்.எஸ் அனுப்பினாள். ”Hey deccan will win. wanna bet?". பதிலுக்கு நிலா அனுப்பிய குறுந்தகவலை அனுப்பினான். “good one. sandeep and pravin sent this morning" என்று பதில் வந்தது சுந்தர தெலுங்கு பைங்கிளியிடமிருந்து.

இன்னொரு நான்காவது பந்தில் இரண்டு ரன்கள்.மீண்டும் ரோஹித்தே ஸ்ட்ரைக்கர் எண்டில்.தேவை ஐந்து ரன்கள், இரண்டு பந்தில்.

வேறு யாரு இருக்கிறார்கள்? யாராவது நான் இருக்கேண்டா செல்லம் என பதில் அனுப்ப மாட்டார்களா என ஏங்கினான் மதன். ஷோபனாவின் நம்பரை தேடி எடுத்தான். அவளுக்கும் ஓலைப் போனது. பதில் வரவில்லை. அழைத்தான். “This number doesn't exist".

Cover ஏரியாவில் சீறிப் பாய்ந்தது அந்த பந்து. நான்கு ரன்கள் என நடுவர் காட்டுவதைக் கண்டு மெல்லிதாய் புன்னகைத்தான் ரோஹித் ஷர்மா. கடைசிப் பந்து. ஒரே ஒரு ரன். அந்த ஆட்டத்தையும் ஒதுக்க முடியாமல், தான் ஆடும் ஆட்டத்தையும் நிறுத்த முடியாமல் தவித்தான் மதன்.

   மார்ட்சா ஓடி வருவதற்குள் தீபாவுக்கு அனுப்பி விடலாம் என வேகமாய் அழுத்தினான். when he gets the message "the message has been sent " , rohit has sent the ball to the gallery.Six. அதிர்ந்துப் போனான் மதன். அவனது கைபேசியும். தீபாவிடமிருந்து பதில்.

“poda. eppavum nee late."

இரண்டு ஆட்டங்களிலும் தோற்றுப் போனான் மதன். எல்லாம் முடிந்தவுடன் ஒட்டிய மண்ணைத் துடைத்துக் கொண்டு நிலாவுக்கு பதில் டைப்பினான்.

”Hope there are more synonyms for this word. Dats why i have  more girls who can teach the different meaning."

May 21, 2009

ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்

34 கருத்துக்குத்து

    அன்று எங்கள் கல்லூரியில் இரண்டாமாண்டு மின்னியல் துறைக்கும், மூன்றாமாண்டு இயந்திரவியல் துறைக்கும் கிரிக்கெட் போட்டி. ஏழு ஒரு நல்ல ஸ்பின்னர். சொல்லப் போனால் நாங்கள் இறுதிப் போட்டி வரை வந்ததற்கு முழுக் காரணமும் அவன் தான். எங்கள் கெட்ட நேரம் அதற்கு முந்தைய இரவு தலை ஃபுல் மப்பு. வழக்கம் போல காலையிலும் போதையுடனே கிரவுண்டிற்கு வந்தான். பாலாஜிதான் அணி கேப்டன்.

மச்சி. டாஸ் போடப் போறாங்க. என்ன எடுக்கலாம் என்றான் பாலாஜி.

மறக்காம டாஸ் போட்ட காச எடுத்துட்டு வந்துடு மச்சி என்ற ஏழுவை மிதித்துவிட்டு டாஸ் தோற்க சென்றான் பாலாஜி.

நான் ஏழுவிற்கு மோரும், மற்றவர்களும் ஆரஞ்சு ஜூசும் வாங்கி வந்தேன். மோரை குடித்த ஏழு கேட்டான் ஒரு கேள்வி ”இதுக்கு ஏன் ஆரஞ்சுன்னு பேரு வந்தது தெரியுமா?”

தல ஃபுல் ஃபார்மில் இருந்தத்தை அறிந்த நான் நீயே சொல்லு என்றேன்.

அதுக்குள்ள பதினோரு சுளை இருக்கும் மச்சி. ஆறும் அஞ்சும் பதின்னொனுதானே என்றவனை அடிக்கும் நிலையில் நானின்ல்லை. அவனை நம்பித்தானே மேட்ச்சே இருக்கு. டாஸ் தோத்த பாலாஜி வந்தான். “மச்சி.பவுலிங். ஓக்கேதானே?”

30 ரன் எடுத்த மேட்ச்சில் கூட ஏழு ஏழு விக்கெட் எடுத்து ஜெயிக்க வைத்தான். அப்படியிருக்க பாலாஜி டாஸ் வென்று பவுலிங் எடுக்க வாய்ப்பில்லை என்பதை நாங்களறிவோம். கையில் மோர் பாக்கெட்டுடன் களமிறங்கிய ஏழு சொன்னான் “பெப்சி கோக்குன்னு விளம்பரத்தில் வர வேண்டியவனை மோருக்கு ஆக்ட் பண்ண வச்சிட்டியேடா. அட்லீஸ்ட் ஒரு சன்ரைஸ்க்காவது விளம்பரம் பண்ணியிருக்கலாம்

முதல் ஓவரை வீச சென்றான் பாலாஜி. ஃபீல்டிங் செட்டப் செய்து கொண்டிருந்தான். ” ஏழு.ஸ்லிப்புல நில்லு” என்று கத்தினான்.

நானே நிக்க முடியாம ஸ்லிப் ஆயிட்டு இருக்கேன்.கேட்ச்ச விட்டா பர்வால்லையா என்று வடிவேலுவைப் போல கேட்டான்.

கடுப்பேத்தாத.ஃபைன் லெக்லயாவது நில்லு.

லெக்கு சரியா நிக்க மாட்டேங்குது. அதான் மச்சி பிரச்சினை.

சரி.பாயிண்ட்டுல நில்லு.

எவன்டா இவன். லெக்லயே நிக்க முடியலன்னு சொல்றேன். நீ வேற பாயிண்ட்டுல நிக்க சொல்ற. நான் என்ன சர்க்கஸ்காரனா என்றவனை முறைத்துக் கொண்டே எங்கேயாச்சும் நில்லு என்றான் பாலாஜி.

நாலு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள். ஏழு பால் போடு என ஏழுவை அழைத்தான் பாலாஜி. படு ஸ்டைலாக நடந்து வந்து பந்தை வாங்கிய ஏழு அமபையரிடம்  சென்று எஸ்.பி என்று சொல்லிவிட்டு முதல் பந்தை போட்டான்.நோ பால் என்ற அம்பையர் காட்(guard) சொல்லவில்லை என்றார். சண்டைக்கு சென்றான் ஏழு,

நான் ஹாஃப் ஸ்பின்னர். அதுக்குத்தான் எஸ்.பி(SP) ன்னு சொன்னேனே என்றவனை அங்கேயே அடித்தான் பாலாஜி. ஒழுங்க காட் சொல்லிட்டு போடு என்று மிரட்டி நகர்ந்தான். அவன் காதில் விழும்படி சத்தமாக சொன்னான். “முருகன், பிள்ளையார், ஜீஸஸ்”.

பின் பாலாஜி வந்து கெஞ்சிக் கேட்டவுடன் ரைட் ஆர்ம் ஆஃப் ஸ்பின் என்று சொல்லிவிட்டு முதல் பந்திலே விக்கெட் எடுத்தான். சந்தோஷத்தில் துள்ளியது எங்கள் டீம். அந்த ஓவரில் மீதிப் பந்துகளில் ரன் ஏதும் அடிக்கவில்லை. ஆறு பந்து முடிந்ததும் ஏழு ஏழாவது பந்தை வீச வேண்டும் என்று அடம் பிடித்தான். ஏண்டா என்று ஓடிவந்தான் பாலாஜி சோகமாக.

நீதானே மச்சி. ஏழு பால் போடுன்னு முதல்ல சொன்ன. ஆறு பால் தான் ஆயிருக்கு என்றவனிடம் என்ன சொல்ல முடியும்? கோச்சிக்கிட்டு விக்கெட் எடுக்கவில்லை என்றால் பாலாஜியை காய்ச்சி விடுவார்கள். பாலாஜியை ஓரங்கட்டி விட்டு நானே ஏழுவை சமாளித்து போட வைத்தேன். எதிரணியை 62க்கு சுருட்டினோம்.

  பிரேக்கில் வெஜ் ,நான் வெஜ் என இரண்டும் இருந்தது. நான் வெஜிட்டேரியன் என்றபடி வந்த ஏழுவை எங்கள் வகுப்பிற்கு கோவையில் இருந்து வந்த புது  ஃபிகரான மாமி வந்து வாழ்த்தியது. குதுகலித்த ஏழு சாப்பிடறியா என்றான். ம்ம்ம் நான் சைவம் என்றது அந்தச் சிலை. நானும்தான் என்றான் ஏழு.

நான் வெஜ் சொன்னிங்க இப்போ.

அப்போ Non veg. இப்போ நான் veg  என்றான்.

எப்பவுமே Naan veg தான்டா என்ற என்னைப் பார்த்து ஹாய் என்றாள். வளராத தாடியைத் தடவிக் கொண்டே நகர்ந்த ஏழு புலம்பினான் “gap விட மாட்டேனே.புதுசா ஒன்னு வந்து உடனே புடிச்சுடுவான்” என்றவன் காதில் சொன்னேன்

”Spinners seldom get new ball da”

May 20, 2009

முதுகு சொறிதலும் மூக்கில் குத்துதலும்.

45 கருத்துக்குத்து(படத்தில் இருப்பவர் ஆண் மாடல்தான். பதிவுக்கு வாங்க. ஸப்பா)

   நமக்கு நெருக்கமான பதிவர்களிடம் மட்டும் தான் நாம் உரிமையோடு குறைகளை சொல்ல முடியும். நெருக்கமானவர்கள் என்பதாலே அவ்வபோது முதுகு சொறிதலும் செய்ய வேண்டியிருக்கிறது. இன்று எனக்குப் பிடித்த சிலப் பதிவர்களின் நிறைகளாக நான் நினைப்பதை முதுகு சொறிதலிலும், குறைகளாக எனக்குத் தோன்றுவதை மூக்கில் குத்துதலிலும் பார்க்கலாம்.

1) முதல் பதிவர். என் வலையுலக பிதாமகன்.(ஹிஹி.ஏன்னு புரிஞ்சுதுங்களா) பதிவுலக மார்க்கண்டேயன். அவியல் அய்யாசாமி திரு. பரிசல் கிருஷ்ணா அவர்கள்

முதுகு சொறிதல்: எந்த ஒரு படைப்பென்றாலும் வாசகன் தன் அனுபவங்களோடு ஒப்பிட்டுக் கொள்ள முடியுமென்றால் அது பெரு வெற்றிப் பெறும் என்பது வரலாறு. அந்த வகையில் இவரது ஓவ்வொரு பதிவும் அனுபவங்களைப் பற்றியே பேசுவதால், எளிதில் ஸ்டார் பதிவர் ஆகிவிட்டார். இவருக்கு வரும் கடிதங்களும் அதையே நிரூபிக்கின்றன. ஒவ்வொரு பதிவருக்கும் ஏதாவது ஒரு துறையில் Passion இருக்கும். அதைப் பற்றி அவர்கள் எழுதும்போது அந்தப் பதிவின் தரம் உயர்வாய் இருக்கும். ஆதியின் தங்கமணி பதிவு, முரளியின் சினிமாப் பதிவு போல. ஆனால் இவருக்கு எழுத்து என்பதே passion என்பதால் எல்லாப் பதிவுமே அட்டகாசமாய் வருகிறது.

மூக்கில் குத்துதல்: அவ்வபோது அவியலையே அடிக்கடி எழுதி தலைப்பை மட்டும் மாற்றி வைப்பது, புனைவு பக்கம் போகாதது ஆகியவற்றை இவர் கவனத்தில் கொள்ள வேண்டும். (பார்றா. எவன் எவன்லாம் அட்வைஸ் பண்றான்?)

2) அடுத்து பேச்சுலர்களின் இதயக்கனி, சற்று வயதான பருவக்கனி. தானைத் தலைவன் ஆதீ என்கிற தாமிரா..

முதுகு சொறிதல்: அடிக்கடி தங்கமணிகளை கலாய்த்து பதிவு போட்டாலும், காதல் பதிவுகளை எழுதி அதற்கு பிராயசித்தம் தேடிக் கொள்கிறார். துறைச் சார்ந்த பதிவுகள் போட்டு வலையுலகிற்கு புது விதமான பதிவுகளை அறிமுகப்படுத்தினார். எதைப் பற்றி எழுதினாலும் ஆங்காங்கே நகைச்சுவை தெளித்து எழுதுவதால் ரசிக்க முடிகிறது. இன்றைய தேதியில் பலப் பிரபல பதிவர்களின் புரொஃபைல் படங்கள் இவரால் எடுக்கப்பட்டவைதான். சகலகலா வல்லவர்

மூக்கில் குத்துதல்: அடிக்கடி பின்னூட்ட அளவிலே பதிவு போடுவது, பதிவுகளுக்கே இடையே முறையான இடைவெளி இல்லாமல் இருப்பது, அனுஜன்யா போன்ற வைரஸ்களால் தாக்கப்படும்போது கவுஜ எழுதனும் என்ற எண்ணம் வருவது போன்றவற்றை கையாளத் தெரியவில்லை. பக்கா கமர்ஷியல் பதிவராக வர வேண்டியவர் ஏதோ ஒரு சில காரணங்களால் அடிபடுகிறார். என்னன்னு தெரியல சகா. நீங்க போற பாதை மாஸா அல்லது கிளாஸா என்று சரியான முடிவு செய்யாதது என்றே நினைக்கிறேன்.

3) அடுத்து நம்ம மாணவர் சாதி வானவில் வீதி கார்த்திக்.

முதுகு சொறிதல்: யூத்து யூத்துனு நாமெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறோம். ஆனால் எழுத்தில் இளமை கொப்பளிப்பது இவனிடம் தான். என்ன எழுதினாலும் சுவாரஸ்யம் ஒட்டிக் கொள்கிறது. எந்த அளவிற்கு எழுத்தில் அவனுக்கு நாட்டம் இருக்கிறதென்று தெரியவில்லை. முயற்சி செய்தால் பிரைட் ஃப்யூச்சர் நிச்சயம் கார்த்திக்.

மூக்கில் குத்துதல்: குறைவான பதிவுகளே போடுவது, சரியான தலைப்பு வைக்காதது, தமிழில் அதிகம் வாசிக்காதது போன்றவற்றை சொல்லலாம். இருந்தும் அவருக்கு அதுதான் கம்ஃபர்டபளாக இருக்கக்கூடும்.

4) இறுதியாக நான்காம் நம்பர் கார்ப்பரேட் கம்பர்.(அட நம்ம நர்சிம்தாங்க)

முதுகு சொறிதல்: சங்க காலம் முதல் ஷங்கர் காலம் வரை இலக்கியம், சினிமா என எல்லாத் துறைகளிலும் அப்டூ டேட்டாக இருக்கிறார். வாசகனின் மனநிலை அறிந்து பதிவு போடாமல், சூழ்நிலைக்குத் தேவையான பதிவாக போட்டு அதற்குள் வாசகனை இழுப்பதில் கில்லாடி. இவரது வர்ணனைகளும், பின்னூட்ட வார்த்தை ஜாலங்களும் பதிவுலகில் பிரபலம்.

மூக்கில் குத்துதல்: ஒன்னும் தெரியலங்க. பார்க்க என்னை விட ரொம்ப அழகா(?) இருப்பது போல் தோன்றுவதால் நிஜமாகவே மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டுக்குறேன். ங்கொய்யால சைனீஸ் மூக்கு போல ஆகட்டும்.


May 18, 2009

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

29 கருத்துக்குத்து

  

வீண் வதந்திகளை நம்பி பதிவுகளை எழுதி எங்களை நோகடிக்காதீர்கள். எப்படா செத்து போவார்கள் பதிவு எழுதலாம் என காத்திருந்த போல சில பதிவுகள் வருகின்றன... இது ஒருவர் இருவரின் உயிர் பிரச்சனை அல்ல... ஒரு இனத்தின் உயிர் பிரச்சனை...புரிந்து கொள்ளுங்கள்...நீங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பாதீர்கள்...

 

இரண்டு மூன்று நாட்களாகவே தமிழின எதிர்ப்பு ஊடகங்களும், சிங்கள அரசும் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக பொய்ச்செய்திகள் பரப்பி வருகிறார்கள். இன்று காலை முதல் தமிழ்நாட்டு ஊடகங்களில் இந்த செய்தி தொடர்ந்து அடிபட தமிழகத் தமிழர்கள் கொந்தளித்த நிலையில் இருந்தார்கள்.


இந்நிலையில் பிரிட்டன் ஊடகமான சேனல்4-க்கு புலிகளின் செய்தித் தொடர்பாளர் குமரன் பத்மநாபன் அளித்திருக்கும் பேட்டியில் இந்த விஷ வதந்தியை அடியோடு மறுத்திருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், பிரபாகரன் நலமோடு இருக்கிறார். சிங்கள ராணுவத்தால் பரப்பப்படும் பொய்ச்செய்திகளை உலகத்தமிழர்கள் யாரும் நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.


சிங்கள ராணுவத்தின் மனிதநேயமற்ற கொடூரத்தாக்குதல்களால் படுகாயமடைந்திருக்கும் ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டி செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனும், தளபதி பூலித்தேவனும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கூட கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள ராணுவம் பொய்ப்பரப்புரை செய்து வருகிறது.

தமிழக தேர்தல் காமெடிகள்

37 கருத்துக்குத்து

 

  நடந்து முடிந்த தேர்தலில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகள் பல நடந்தன. ஞாபகத்தில் இருக்கும் ஒரு சில..

  ஒரு வார இறுதி நாளில் சென்னையில்  இருந்த போது ஆலந்தூர் நகர பா.ஜ.கவினர் ஓட்டுக் கேட்டு வந்தனர். நமக்குத்தான் இளிச்சவாயன் மாட்டினால் கொண்டாட்டம் ஆச்சே. ஆசையோடு வெளியில் வந்தேன். அவர்கள் கொடுத்த துண்டு பிரசுரத்தில் தென்சென்னை தொகுதி வேட்பாளர் இல.கணேசனுக்கு வாக்களியுங்கள் என்று இருந்தது.

   ஏங்க, இந்த ஏரியா தென்சென்னை தொகுதியில் வராதுங்க. இது கூட தெரியாம வர்றவங்கள நம்பி எப்படிங்க ஓட்டுப் போடறது என்றேன்.

இது பெரிய குழப்பமா இருக்கு சார்.  இது எந்த தொகுதி சார் என்று என்னிடமே கேட்டார்.

ஸ்ரீபெரும்புதூர்.

அப்ப அந்த தொகுதி பாஜ.க வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்க சார்.படிச்சவங்க யோசிச்சுப் பாருங்க. யாரு நாட்டுக்கு நல்லது செஞ்சாங்கன்னு என்று நீட்டினார்.

நாடு இருக்கட்டுங்க. நீங்க ஆலந்தூர் நகர பாஜக. ஆலந்தூர் முழுவதுமே தென்சென்னைல வராது. அப்படியிருக்க நீங்க ஏன் இல.கணேசனுக்கு ஆதரவா ஓட்டுக் கேட்கறீங்க? ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் காசு தரலையா என்ற என்னை முறைத்தார் அதற்குள் அம்மா வெளில வந்து உள்ள வாடா என்று நச்சரிக்க ஆரம்பிச்சாங்க.

ஸ்ரீபெரும்புதூர் பாஜக வேட்பாளர் பேரு சொல்லிட்டா என் ஓட்டு தாமரைக்கே என்றேன். கொலைவெறியோடு அடுத்த வீட்டுக்கு சென்றார்கள். அங்கே நின்றிருந்த ஆண்ட்டியும் என்னைப் பார்த்து சிரிக்க எங்கத் தெருவை விட்டே நகர்ந்துப் போனார்கள். ஏண்டா இபடி பண்ற என்று தொடங்கினார்கள் அம்மா.

நாட்டை காப்பத்த முடியுமான்னு தெரியல. அட்லீஸ்ட்டு நம்ம தெருவையாவது பாஜகவிடம் இருந்து காப்பத்தலாம்னு தாம்மா என்றேன.

மு.கு: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பாஜக போட்டியிடவேயில்லை.

*************************************************

   ஆதம்பாக்கம் போலிஸ் நிலையத்தில் இருந்து சற்று தூரம் தள்ளி திமுகவின் தேர்தல் அலுவலகம் இருந்தது. திரு தேநீர். அல்லது. பந்து (டீ.ஆர்.பாலுன்னு எதுக்கு இங்லீஷல சொல்லிகிட்டு) வருவதாக இருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. காரில் சென்ற நான் ஹார்ன் அடித்துக் கொண்டே கடக்க முயன்றேன்.

“அப்படி சுத்திக்கிட்டு போங்க சார்.வோட்டு கேட்க வ்ர்றாங்க” என்றார் ஒரு உடன்பிறப்பு.

எனக்கு வழிவிட்டா எங்க வீட்டுல இருக்கிற அஞ்சு ஓட்டு கிடைக்கும் என்றேன் கண்ணாடியை கீழே இறக்கி. அதற்குள் அங்கு வந்த ஒரு வட்டமோ சதுரமோ, நகருங்கப்பா. டிராஃபிக் ஆவுதுன்னு களத்தில் இறங்கினார். கூட இருந்த அல்லக்கை ஒன்று “இதையே அதிமுக காரன் கிட்ட சொல்ல முடியுமா? என்றார்.

அவங்க கலாட்டா நமக்கு தெரியாதா பாஸ். மோசமானவங்க என்று சிரித்தேன். அவரும் சிரித்தார். இதுதான் நேரம் என்று நீங்க அதிமுகன்னு அழகிரி திமுகவைத்தானே சொல்றீங்க என்றபடி நேரா செகண்ட் கியர் போட்டேன். தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார் அந்த அல்லக்கை. அவரது தலைவர் ஸ்டாலினா தயாநிதி மாறனா என்றுத் தெரியவில்லை.

*************************************************

   ஜே.கே.ஆர் பாத்ரூம் போனால் கூட வடபழனியில் பேனர் வைப்பார்கள். எம்.பியாகி வருகிறார் என்றால் சும்மா விடுவார்களா? காமெடி என்னவென்றால் ஒரு தீவிர ரசிகர் “அண்ணன் ஜே.கே.ஆருக்கு வாக்களித்த  வடபழனி பகுதி மக்களுக்கு நன்றி” என்று டிஜிட்டல் போர்டு வைத்திருக்கிறார். காரில் சென்ற போது பார்த்ததால் இறங்கி ஃபோட்டோ எடுக்க முடியவில்லை. வடபழனி பகுதி நண்பர்கள் பார்த்து ரசியுங்கள். 100 அடி ரோட்டில் இருந்து ஒரு வழிப்பாதை வந்து ஆற்காடு ரோட்டில் சேரும் இடத்தில் இருக்கிறது இந்தக் கல்வெட்டு.

*************************************************

   இன்னும் சில மேட்டர் இருக்கு. அப்புறம் பார்ப்போம் அதை.  இத படிச்சா வயிறு குலுங்கலையே என்று கவுண்ட்டர் கொடுக்கும் சகாக்கள் முதல்ல என்னை மாதிரி செல்லத் தொப்பை வளர்த்துக்கோங்க. அப்புறம் சிரிக்காமலே வயிறு குலுங்கும் பாருங்க.. ஹிஹிஹி.

May 15, 2009

இந்த ஒரு முறை மன்னிச்சிடுங்க..

39 கருத்துக்குத்து

 

கவிதையென

வெற்றுத்தாளை

நீட்டினாய்..                                                                                         

“உன் மனச வேறு எப்படிடா எழுத”

என்பதில் இருந்தது அது..

********************************************************

வலக்கண்ணில்

இருந்த

தூசியை ஊதிக் கொண்டிருந்தாய்.                                    

சம்பந்தமேயில்லாமல்

அழுதுக் கொண்டிருந்தது

இடக்கண்..

********************************************************

நேற்று முதல்

எதை சாப்பிட்டாலும்

லிப்ஸ்டிக் வாசனை என்றேன்.

உனக்கு பரவாயில்லை

எனக்கு ரத்த வாசனை என்கிறாய்.

********************************************************

கன்னத்தில் இருந்த

தீக்காயம்

உன்

முத்தத்தால் வந்தது

என்றால் நம்புமா உலகம்?

********************************************************

வெறிபிடித்த நாயின்

வாயில் கிட்டிய

பூனைப் போல

காலத்தின் கைகளில் நான்..

சிந்தும் ரத்தமென கண்ணீர்..

********************************************************

      இந்த வாரம் பதிவர் வாரம் போல இருக்குங்க. பரிசல்(மே13), அமித்து அம்மா (மே14), மங்களூர் சிவா(மே 15, இன்னைக்குத்தான்), சிங்கை சிங்கம் துர்கா, பெண் சிங்கதாங்க(மே 15) ஆகியோருக்கு பிறந்த நாளும், வாலுவுக்கு இன்று திருமண நாள்(ஃபர்ஸ்ட்டு மேரேஜுக்கு), அப்புறம் பதிவர்கள் பத்திரிக்கையில்.. எல்லோருக்கும் சேர்த்து வாழ்த்திடுவோங்க..

       நான் இன்னும் வரவில்லையா பத்திரிக்கையில் என்று அலைபேசியிலும், சேட்டிலும், மெயிலிலும் கேட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி. என் பேரு முதல்ல கல்யாண பத்திரிக்கையில் வர வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். கிகிகி

கடைசி பத்திய படிச்சிட்டு வாழ்த்துகள்னு சொல்லிட்டு ஓடிடாதீங்க. அதுக்கு மேல இருக்கிற புத்திசாலித்தனமான வார்த்தைகளை(சரியா சுந்தர்ஜி) பற்றியும் ஏதாவது திட்டுங்க.ச்சே சொல்லுங்க.

May 14, 2009

வோடோஃபோன் விளம்பரங்கள்- ஆச்சரியம்

41 கருத்துக்குத்து


 

 ஐ.பி.எல்லில் சக்கைப் போடும் விளம்பரம் வோடோஃபோனின் விளம்பரங்கள்தான். இவையெல்லாம் அனிமேஷன் இல்லை என்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதை எடுக்க அவர்கள் பயன்படுத்திய யுத்திகளை விளக்கமாக சொன்னது அந்த இ.மெயில். இதோ இன்னொரு மெயில் அதைப் படமாகவே காட்டுகிறது. அந்த டீமுக்காக தொப்பியை கழட்டலாம் இல்ல..(அதாங்க..Hats off)

May 13, 2009

படிப்பவர்களை கொல்லும் பதிவர்

39 கருத்துக்குத்து

சரியாக நாற்பது வருடங்களுக்கு முன்..

”கடவுளே!! இந்த மனித இனத்தின் கொடுமைக்கு அளவேயில்லையா? எங்களை அழித்து வரும் இவர்களுக்கு நீ தண்டனை தர மாட்டாயா” என அனைத்து மரங்களும் கடவுளிடம் முறையிட்டன. சற்று நேரம் யோசித்தக் கடவுள் சொன்னார்

கவலை வேண்டாம். இன்று நான் பூமிக்கு அனுப்பப் போகும் ஒருவனால் உலகமே அல்லோலகலப் படப்போகிறது. உங்களை அழித்து காகிதமாக்கி அதை வீணடிக்கும் மூடர்களை அந்த காகிதம் மூலமே பாடம் புகட்டுகிறேன்.

அவர் சொன்னது போலவே மே13ம் தேதி 1969.. பூமிக்கு வந்தார் அந்த தீவிரவாதி. உலகை அழிக்க அவரிடம் கடவுள் கொடுத்தனுப்பிய ஆயுதம் எழுத்து.  பேசிப்பேசியே சாகடிக்க இங்கே ஆயிரம் பேரிருக்க, எழுதி எழுதியே கொல்வதற்கு இவர் ஒருவர்தான் இருக்கிறார்.

முன்னூறு வார்த்தைகளில் குதிரைப் பற்றி எழுத சொன்னார்கள் நம் தீவிரவாதியிடம். “காட்டுக்குள்ளே ஓடியது குதிரை டடக் டடக் டடக்  டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் என எழுதியதைப் பார்த்து மாரடைப்பு வந்த ஆசிரியரின் நினைவு நாள் சென்ற மாதம்தான் சென்றது.

வளர்ந்த பின் அவ்வபோது பத்திரிக்கைகளில் எழுதத் தொடங்கினார். அதில் கணிசமான கணக்கில் மரணங்கள் சம்பவித்தாலும் அடிக்கடி அது நிகழாமல் போனதில் வருத்தம் கொண்டார்.

எழுதி மட்டுமே பல பேரைக் கொல்ல முடியாதென்று தெரிந்துக் கொண்ட பின், பேசிப்பேசியே சாகடிக்க தொடங்கினார். பக்கத்து வீட்டுக்காரர் ஒருநாள் பைக்கில் வெளியே வந்தவுடன் ரைட்டிலே வந்துக் கொண்டிருந்தார். நேர்மையின் சிகரமான நம்மாளு காலை எட்டு மணிக்கு அவரிடம் கேட்டார் ”நான் வந்தது லெஃப்ட்டு.ஆனா ரைட்டு. நீங்க வந்தது ரைட்டு. ஆனா ரைட்டா?” அங்கேயே மயங்கி விழுந்தவர் இன்னமும் கோமாவிலே இருப்பதாக தெரிகிறது.

அப்படி இப்படி என  தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ப்ளாக் தொடங்கினார். 2008 மே மாதத்தில் இருந்து கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். சமீபத்திய லயோலா கருத்து கணிப்புப்படி தினம் தினம் செத்து மடியும் பதிவுலக வாசகர்களில் இவரால் மடிபவர்களே அதிகம் என்று தெரிகிறது.

தன் வயதை மறைக்க எப்போதும் ஷார்ட்சில் இருப்பது அவர் வழக்கம். சென்ற வாரம் ஒரு திருமணத்திற்கு சென்ற அவரிடம், ஒரு இளம்பெண் ஏதோ கேட்க இவரும் எடக்க மடக்காக சொல்லிவிட, அது மின்னஞ்சலில் ஒரு பெரிய விவாத பொருளாக வலம் வந்துக் கொண்டிருப்பதை பலரும் அறிவார்கள்.அந்தப் பெண்ணுக்கு என்னாச்சா? கேரளா பகவதியம்மன் கோவிலில் பேய் ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம். நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்ன தகவல்படி, இவரின் பெயரைத்தான் கேட்டிருக்கிறது அந்தப் பெண். நம்மாளு சொன்னது

சென்னை ரோடுல நெரிசல்

மதுரை பக்கம் கரிசல்

நம் நட்பிலில்லை விரிசல்

நல்லவன் என் பேரு ………..

எதை எழுதி இவரு சாவடிக்கிறாருன்னு யோசிச்சுப் பார்த்தா இவரு எதை எழுதினாலும் சாவடிக்கிறார்ன்னுதான் சொல்லத் தோணுதுங்க. பொதுவாக நல்ல வாசிப்பனுபவத்தை தருபவர்களே ந்ல்ல எழுத்தாளர்கள் என்று சொல்வார்கள். இவரு அனுபவத்தையே வாசிக்க தருவதால் நொல்ல எழுத்தாளர்ன்னு சொல்லலாம். ரொம்ப சொல்லியாச்சு. அவரு யாருன்னு இன்னமும் தெரியாதவங்க வலையுல்கிற்கு வந்து ஒரு வாரமே ஆகியிருக்ககூடும்.

  ராஜாவின் இசையைக் கேட்பவர்கள் சொல்லும் பிரபலமான வாச்கம் :ங்கொய்யால செத்து போலாம்டா ராஜாவுக்காகத்தான்..” அதேத்தான் இவருக்கும். இதேப்போல இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து எழுதி எழுதி எங்களை சாவடிக்க வாழ்த்துகிறோம் சகா.

தலைக்கு கீழேதான் கழுத்து-நம்ம

தலைக்கு எல்லாமே எழுத்து.

பி,கு: அவரது பிறந்த நாள் பரிசாக அவரது கதை ஒன்று இந்த வார விகடனில் வெளிவரவிருக்கிறது. 

May 12, 2009

வைகோ- ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகம்

64 கருத்துக்குத்து

 

முன்குறிப்பு: ஈழத்தில் நடைபெறும் ஆயுதப் போராட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்கள் இறந்து மடியும் செய்திகளைக்கேட்டு எழுந்த ஆத்மார்த்தமான எண்ணங்களை இந்த/இனிவரும் பதிவில் காணலாம்.

குறுந்தொடராக வரப்போகும் இந்த பதிவுகளில் ஈழத்தில் நடைபெறும் ஆயுதப் போராட்டத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தவல்ல, இந்தியாவைச்சேர்ந்த அரசியல்வாதிகளைப்பற்றியும் அவர்களது செயல்பாடுகளைப்பற்றியும் எனது கருத்துக்களை பதிவதே எனது நோக்கமாகும்.

-----------
வைகோ - ஈழ ஆதரவும் கருணாநிதி எதிர்ப்பு அரசியலும்

ஈழ ஆதரவு அரசியல்வாதிகளில் முதன்மையானவராகக் கருதப்படுபவர். எனக்கும் இதில் உடன்பாடே, பதவி அரசியல் (தேர்தல்) தளத்தில் இயங்கும் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில்... அதுவும் கொண்ட கொள்கையில் நிலைத்து நிற்கும் பண்பிற்காக! ஆனால்கடந்த இரண்டு ஆண்டுகளாக இவரால் ஒரு புண்ணியமும் இல்லை என்பதுதான் என்னுடைய முக்கிய குற்றச்சாட்டே.

சிங்கள அரசின் இந்த யுத்தம் சாத்தியப்படுவதற்கு ஒரு முக்கியக்காரணம் வைகோவின் தவறான நிலைப்பாடே! மத்திய காங்கிரஸ் அரசின் சிங்கள ஆதரவு கடந்த ஓராண்டாகவே அரசல் புரசலாக செய்திகளில் வந்துக்கொண்டுதான் இருந்தது. அத்தகைய சூழலில் மத்திய அரசைக் கவிழ்ப்பது மட்டுமே யுத்ததின் தீவிரத்தை குறைத்து இருக்கும். அதற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன.

1. அணுசக்தி ஒப்பந்தத்தின் காரணமாக கம்யூனிஸ்டுகள் ஆதரவை  விலக்கிக்கொண்ட போது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை இடதுசாரிகள் கொண்டுவந்த போது தேசிய அளவில் காங்கிரஸ் அரசிற்கெதிராக அதிகபட்ச உழைப்பினை காட்டி இருக்க வேண்டும், ஆனால் இவரது செயல்பாடுல்கள் ஏனோதானோவென்றே இருந்தன. அப்போதே இந்த அரசு கலைந்திருக்குமேயானால் இன்று ஈழத்தில் இப்படியொரு நிலைமை ஏற்பட்டிருக்காதே...

2. பதவியை துறக்கவும் தயார் என கருணாநிதி ஈழ யுத்தத்தைப்பற்றிய  விவாதத்தில்
(அக்டோபர்/நவம்பர் 2008) குறிப்பிட்டபோது. காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டபோதும், கருணாநிதி எதிர்ப்பு என்ற அரசியலின் காரணமாக ஈழ மக்களுக்கு வைகோ துரோகமிழைத்தது இந்த சமயத்தில் தான்! திமுக/பாமக கட்சிகளின் ஆதரவில்லாமல் காங்கிரஸ் அரசு நிச்சயம் கவிழ்ந்திருக்கும். தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஆதரவில்லாமல் பாமக/இடதுசாரிகள்/விசி/மதிமுக கட்சிகளின் ஆதரவுடன் திமுகவால் 5 ஆண்டுகளை நிச்சயம் பூர்த்தி செய்திருக்க முடியும். அப்படியொரு கூட்டணி அமைய திருமா, வீரமணி போன்றோர் பாடுபட்டதும் நன்கு தெரிந்ததே.

ஆனால் அப்படியொரு கூட்டணி அமைவதற்கான சூழல் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டதில் வைகோவின் பங்கு பிரதானமானது. அது ஏன்? ஈழத்தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று வாய்கிழிய பேசும் வைகோ, காங்கிரஸ் அரசை கலைக்க அதன்மூலம்  ஈழ மக்களுக்கெதிராக சிங்கள அரசு தொடுத்திட்ட போரின் தீவிரத்தைக் குறைக்க ஒருமுறை திமுக அரசை ஆதரிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இவர்கள் இல்லாமல் காங்கிரஸ் ஆதரவுடன் திமுக ஆட்சி செய்யும் என்பது நன்றாகவே தெரியும். இருந்தும் ஏன் வைகோ எதுவும் செய்யவில்லை? இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், அக்டோபர் 2008 சமயங்களில் அதிமுகவிற்கும் காங்கிரசிற்கும் ஈழத்தை பொறுத்தவரையில் கொள்கை அளவில் சிறு வித்தியாசமும் கிடையாது.

வைகோவிற்கு ஈழ மக்களின் நலனைவிட கருணாநிதி எதிர்ப்பு முக்கியமானதா? வைகோ சாதித்தது தான் என்ன? கருணாநிதிக்கு ஈழ மக்களைவிட பதவியே முக்கியம் என்று நிரூபித்தது, ஜெயலலிதாவின் காலங்கடந்த தனிஈழ முழக்கம்... இதற்காக இழந்தது என்ன? பல்லாயிரக்கணக்கான உயிர்கள்!!

தனது கருணாநிதி எதிர்ப்பு என்ற சுயநல அரசியலினால் ஈழ மக்களுக்கு உதவும் வாய்ப்பை தவறவிட்ட வைகோ என்னைப்பொறுத்த வரையில் துரோகியாகவே கண்ணுக்குத் தெரிகிறார்.

பின்குறிப்பு: வைகோவை விமர்சிப்பதினாலேயே என்னை ஒரு உடன்பிறப்பாக நினைப்பவர்கள் கலைஞரைப் பற்றிய பதிவு வரும்வரை அமைதிகாக்கும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்!

May 11, 2009

Diploma students can do direct MBA

25 கருத்துக்குத்து

 

  டிப்ளமா படித்த மானவர்கள் பலரும் அஞ்சல்வழியில் பட்டப்படிப்பு படிப்பதை பார்த்திருக்கிறேன். அவர்கள் பணிபுரியும் வேலையில் பிரமோஷனுக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் அது உதவுமென்று அதை படிப்பார்கள்.இப்ப மேட்டர் என்னன்னா, பட்டய படிப்பு முடித்து ஐந்து வருடங்கள் பணி புரிந்த அனுபவம் உள்ளவர்கள் நேரிடையாக எம்.பி.ஏ படிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் மூன்று வருடங்கள் மிச்சமாகும்.

  symbiosis center for distance learningல் இந்த வசதி இருக்கிறது. கட்டணமும் மிக குறைவு. இரண்டு வருடங்களுக்கு  25,000 ரூபாய்தான். அதிலே புத்தகங்கள், தேர்வு கட்டணங்கள் என எல்லாம் அடக்கம்.  யுனிவர்சிட்டியும் நல்ல யுனிவர்சிட்டிதான். இவர்களது ரெகுலர் எம்.பி.ஏ கல்லூரி இந்தியாவில் டாப் டென்னில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் இவர்களது சான்றிதழை அனைத்து ஐ.டி நிறுவனங்களும், மற்ற துறை நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன.

2009 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கொடுக்க ஆரம்பித்தாகிவிட்டது. Axis bank கிளைகளில் 900 ருபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு இங்கே க்ளிக்குங்கள்.

To know the available Specialization, இங்கே க்ளிக்குங்கள்.

இவர்களது சேவையைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்துக் கொள்ள விழைவோர் என்னை iamkarki@gmail.com அல்லது 09989322884 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

May 9, 2009

கலங்க வைத்த பிரேம் கோபால்

20 கருத்துக்குத்து

 

இதுவும் ஒரு சாதரண நடனப் போட்டியின் ஒரு பகுதி என்றுதான் பார்க்கத் தொடங்கினேன். என்ன சொல்வது? நீங்களே பாருங்க. இதை மின்னஞ்சலில் பகிர்ந்துக் கொண்ட நண்பர் ஜோ விமலுக்கு நன்றி.

பிரேம் கோபால். நாங்க இருக்கிறோம் என்று சொல்லக் கூட முடியாமல் போனதற்கு வெட்கப்படுகிறேன்.

May 8, 2009

டாக்டரைக் கண்டு அலறும் முரளிதரன்

30 கருத்துக்குத்து 

   பிரவின் குமாரை பீட்டர்சன் எறிந்த பந்து நெற்றியில் வந்து அடிச்சிடுச்சுங்க. அந்த வீடியோவ தேடினா யூட்யூபில் ஐ.பி.எல். காப்பிரைட் உரிமையால் அந்த வீடியோ நீக்கப்பட்டதுன்னு வருது. எங்க தேடியும் அந்த ஃபோட்டோ கூட கிடைக்கல. 

டிஸ்கி:  ஐ.பி.எல் படங்களுக்கு இந்த கமெண்ட்டுகளை எழுதி ரெண்டு நாளா டிராஃப்டுல இருக்குங்க. நேத்து குசும்பன் வேற கார்ட்டூன் கமெண்ட்ஸ் போட்டத்தால நம்ம கடைக்கு மவுசு குறையும்ன்னு தெரியும். கமெண்ட்ஸ் சுமார் தான். குசும்பன் கமென்ட்ஸ் தான் டாப்புன்னு அவர கேவலப்படுத்தாதீங்க. :)))))


May 7, 2009

சிக்கி சீரழிஞ்ச கண்டக்டர்

44 கருத்துக்குத்து

 

  

   அன்று வழக்கம்போல தேவி பாரில் பீராபிஷேகம் முடிந்து, தேவி பேரடைசில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். உன்னைக் கொடு என்னைத் தருவேன் என்ற அந்தக் காவியத்தை அரை மப்பிலும் முழுமையாக கண்டு களித்தார் ஏழு. அரங்கிற்குள் பாலாஜி மறைத்து எடுத்து வந்த பியர் பாட்டில் ஏழுவின் கண்களில் பட்டுவிட, எங்களை ஏமாற்றி அதில் பாதியை அடித்து விட்டான். வெளியே வந்தவன் அடுத்தக் காட்சிக்காக நின்றுக் கொண்டிருந்தவர்களிடம் சென்றான்.

அய்யா.அம்மா.. கெஞ்சிக் கேட்டுக்கறேன். இந்தப் படத்துக்கு மட்டும் போயிடாதீங்க.

ஏண்டா இப்படி செய்ற என்று அடித்து இழுத்து வந்தான் ஆறு. செஞ்ச பாவத்த இப்படியாவது கழுவிக்கலாம்ன்னு பார்த்தேன் மச்சி என்றான்.

    வெளியே வந்தவனை பஸ்ஸில் ஏற்றுவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது. இவன் ஏறும்போது கண்டக்டர் சாந்தி எல்லாம் இறங்கு என்று கத்திக் கொண்டிருந்தார். எதிரில் இறங்கிய ஃபிகரிடம் கேட்டார் ஏழு

சிஸ்டர். உங்க பேரு சாந்தியா?.

   முறைத்துக் கொண்டே சென்றாள் சாந்தி. ச்சே.  ஃபிகர். ச்சே.  அந்தப் பெண். பஸ்சில் கொஞ்சம்தான் கூட்டம் என்றாலும் நாங்கள் அனைவரும் ஃபுட்போர்டிலே நின்றுக் கொண்டிருந்தோம். ஏழுவும் எங்களோடு வந்து சேர்ந்துக் கொண்டான். கையிலிருந்த புத்தகத்தை ஜன்னலோர ஆண்ட்டியிடம் கொடுத்தான். அவரும் முறைத்துக் கொண்டே வாங்கிக் கொண்டார்.

ஃபுட்போர்டுல நிக்கறவங்க டிக்கெட் எடுத்தாச்சா? ரெட் சட்டை..(ஏழுவைத்தான்)எங்க போறீங்க என்றார் கண்டக்டர்.

டிக்கெட் எடுத்தா நான் சொர்க்கதுக்கு. இவனுங்க எல்லாம் நரகத்துக்கு என்றான் ஏழு.

மெலிதாக சிரித்த கண்டக்டர், சொல்லுப்பா. அடுத்த ஸ்டாப்புல செக்கிங் இருக்காங்க. எங்க போனும் என்றார்.

ஹாஸ்டலுக்கு என்றான் ஏழு.

நக்கலா?இந்த முறை முறைந்துக் கொண்டே சொன்னார்.

ஆறு..அடையாறு.. மானிக் பாட்ஷா ரேஞ்சில் சொன்னான் ஏழு.

எத்தனை?

அதான் சொன்னேனில்ல. ஆறு.. அடையாறு.. என்றான் மீண்டும்.

24 ரூபாய் என்றபடி கைகளில் டிக்கெட்டை திணித்தார். 24 ரூபாயா என்று அலறியவன் கண்டக்டரிடம் கெஞ்சினான்.

சார். நான் ஸ்பான்சர்ஷிப்ல படிக்கிறேன் சார். எங்கம்மா கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வைக்கறாங்க சார். இவ்ளோ காசு கொடுக்க முடியாது. கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க சார். 

   கடுப்பான கண்டக்டர் எங்களை முறைத்தார். நரகத்துக்கு போவாங்கன்னு சொன்னா சிரிக்கறியா? மவனே அவன்கிட்ட மாட்டிட்டு சாவுன்னு மனதுக்குள் நினைத்துக் கொண்டு திரும்பி விட்டோம்.

டிக்கெட் எடுக்கலன்னு அடுத்த ஸ்டாப்புல புடிச்சிட்டா போச்சு. எங்கிட்டவே விளையாடறிங்களான்னு எஸ்.கேனார்(அதாங்க.. பொலம்பினார்) அவர்.

கட்டண உயர்வை எதிர்த்து நூதன முறையில் மாணவர்கள் போராட்டம் என்று சொன்ன ஏழு, “தமிழக அரசே தமிழக அரசே: என்றுக் கத்த தொடங்கியதும் ஆறுவிற்கு உதற தொடங்கியது. அவனே பணத்தைத் தந்தான். ஏழுவிடன் நோட்டைக் கொடுத்த ஆண்ட்டி, இது என்ன வெயிட்டாவா இருக்கு? கைல வச்சிக்க முடியாதான்னு கோவத்துடன் தந்தது.

நோட்டை வாங்கிய ஏழு சொன்னான்,” நாங்க மெக்கானிக்கல் ஸ்டூண்ட்ஸ் ஆண்ட்டி. மெக் வெய்ட்டு தெரியுமில்ல”

டேய்.பேசஞ்சர் கிட்ட கலாட்டா பண்ணா போலிஸ் ஸ்டேஷன்தான் போகனும் என்றார் கண்டக்டர்.

மச்சி. நம்மள எல்லாம் படிச்சு என்னத்த கிழிச்ச கேட்கறாங்களே. இவர கண்டக்டர் ஆகி என்னத்த கிழிச்சன்னு கேட்கவே முடியாதில்ல என்றான்.

கடுப்பான அவர், டிரைவரிடம் வண்டியை போலிஸ் ஸ்டேஷனுக்கு ஓட்ட சொன்னார். அந்த ரூட்டில் எந்த போலிஸ் ஸ்டேஷனுல்ம் இல்லை என்பதை அறிந்து சிரித்துக் கொண்டிருந்தோம் நாங்கள்.

உங்க ஃபோன் நம்பர் கொடுங்கண்ணா. இது ஏழு

எதுக்குடா? சும்மா வாயா மூடிட்டு வா என்றான் ஆறு.

இல்ல மச்சி. எத்தனை நாள்தான் கண்டக்டராவே இருப்பாரு. நாம ஒரு கால் போட்டா கண்”டா”க்டர் ஆயிடுவாரில்ல என்ற ஏழுவின் அறிவு செறிந்த ஜோக்கு புரியாமல் விழித்தார் நடத்துனர்.

மச்சி இப்படியே பேசிட்டு இரு. உன்னை ட்ரங்க அண்ட் ட்ரைவ்ல புடிச்சி உள்ளப் போட போறாங்க என்றேன் நான்.

டிரைவர் தான்டா ஓட்டறாரு. என்னை ஏன் புடிப்பாங்க?

நீயும் தண்ணியடிச்சிட்டு எல்லோரையும் ஓட்டிட்டுத்தானே வற்ர என்ற என்னை அடிக்க மொத்த குழுவும் துரத்தியது.

May 6, 2009

ஷாரூக் - நைட் ரைடர்ஸ் - தாதா..வடை போச்சே!!!!

38 கருத்துக்குத்து


   அடி மேல் அடி வச்சால் அம்மியும் நகரும். அடி மேல் அடி வாங்கினால் என்ன நகரும்? கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிலைமை இப்படி ஆயிடுச்சுங்க. “என்னங்க சிவாஜி இப்படி ஆயிடுச்சேன்னு” கேட்ட மாதிரி : என்னங்க ஷாருக் இப்படி ஆயிடுச்சேன்னு” பாலிவுட்டே கலாய்க்க போகிறது. உஷாரா நம்ம தாதா ஃபேன்ஸ் அவர் கேப்டன் இல்லை என்பதால் ஆதரவை வாபஸ் வாங்கிட்டாங்க. என்னால் முடியல. அவரு ஜெயிச்சாலும் தோத்தாலும் தாதா தாத்தாதான்.. ச்சே தாதா தாதாதான்..

நாலு கேப்டன், மூனு விக்கெட் கீப்பர்ன்னு இந்த வருஷம் புது புது திட்டங்கள் அறிவிச்ச மாதிரி அடுத்த வருஷம் என்ன சொல்லலாம்னு ஷாரூக் யோசிச்சிட்டு இருக்காராம்.அதான்  அவருக்கு சில டிப்ஸ்.

1) ஏதோ orange கேப்பாம். அத போட்டவங்கதான் அதிக ரன் குவிச்சவராம். நாம என்ன செய்வோம்ன்னா மனீஷ் மல்ஹோத்ராகிட்ட சொல்லி நம்ம ஜெர்ஸியே ஆரஞ்ச் கலர்ல மாத்திடுவோம். மேட்சிங்கா ஆரஞ்ச் கலர் கேப். எப்படி ஐடியா? நம்ம டீம்ல எல்லோருமே அதிக ரன் அடிச்சவஙக்ளா ஆயிடுவாங்க.

2) நாலு கேப்டன் தேவைன்னு சொன்னாரே புச்சனன். அவரு ஐடியாவ அப்படியே அவருக்கும் அப்ளை பண்ணுவோம். அவர மாதிரியே பல நல்ல கோச்சு இருக்காங்க. பவுலிங்க்கு நம்ம வெங்கடேஷ் பிரசாத், அப்புறம் ரமீஸ் ராசா, இப்படி நாலு கோச் வச்சுப்போம். புச்சனன் வேலை என்னன்னா இந்த நாலு கோச்சுக்கும் அவர் கோச். ஏன்னா பிரசாத்துக்கு இன்னமும் பவுலிங் சரியா போட தெரியாதாம். கோச்சுக்கே கோச்சு. எப்படி?????

3) நாம முக்கியமா செய்ய வேண்டியது அகர்காருக்கு நிறைய வாய்ப்பு தரணும். எல்லா மேட்சிலும் அவருக்கு ஒரு ஓவர்தான் தர்றோம். அவர் அதிலே 15 ரன் கொடுத்துட்டு போயிடறாரு. இன்னும் ரெண்டு மூனு ஓவர் கொடுத்தாதானே அவரப் பத்தி தெரியும் .அதுக்குன்னு 18, 19வது ஓவர் கொடுக்க கூடாது. அப்புறம் 20வது ஓவர் போடற வாய்ப்பு யாருக்குமே கிடைக்காது.

4) இன்னும் சில வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுப்போம். ஆனா அவங்கள வெளில உட்கார வச்சு மேட்ச் பார்க்க வைப்போம். அத பார்த்துட்டு அவங்க நாம் செய்ற தப்பையெல்லாம் சொல்லட்டும். 2011 IPL ல நம்மல திருத்திக்க அது உதவும்.

5) இந்த தடவ புச்சனன் நாலு பேர் பத்தாது, அஞ்சு வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்கனும்னு சொன்னாரிlல்ல. அது மாதிரி ஃபீல்டிங் பண்ணும்போது 11 பேர் பத்தல. இன்னும் ரெண்டு பேர் ஃபீல்டிங்குக்கு மட்டும் தேவைன்னு சொல்ல சொல்லுவோம். அவர் எத வேணும்னாலும் சொல்லுவாருங்க. ஷேன் வார்ன் அவருக்கு வச்ச செல்ல பேரு என்ன தெரியுமா? Verbal diarrhea

6) ப்ரீத்தி, ஷில்பான்னு கலக்கிட்டு இருக்காங்க மத்த டீம். கொஞ்சம் வயசானாலும் ஜூஹி நம்ம கிட்ட இருக்காங்க. அவங்கள விட்டு கட்டிப்புடி வைத்தியம் பார்க்க வச்சாலாவது நம்ம பசங்க விளையாடறாங்களாம் பார்க்கலாம். என்ன, கேட்ச்சையே ஒழுங்கா புடிக்க தெரியாது நம்ம பயபுள்ளைங்களுக்கு. ஜூஹியாவது சரியா புடிக்கறாங்களான்னு பார்ப்போம்.

7) இதெல்லாம் எதுக்குன்னு யோசிச்சா, பேசாம டீம வித்துட்டு போயிடலாம். என்ன சொல்றீங்க?


டிஸ்கி: ஷாருக்கானுக்கு பத்து அறிவுரைகள்ன்னுதான் போடலாம்னு நினைச்சேன். போடாததுக்கு ரெண்டு காரணம். 10 வியாதி இன்னும் போகலையான்னு கும்க்கி பின்னூட்டம் போடுவாரு. ரெண்டாவது காரணம், மீதி நாலு பாய்ண்ட்ட  யோசிக்கறதுக்குள்ள டேமேஜர் மீட்டிங்குக்கு கூப்பிடறாரு.

May 5, 2009

காக்டெயில்

43 கருத்துக்குத்து

  தமிழ்மணத்தில் சில நாட்களாக என் பெயர் தெரிவதில்லை. மேலும் இடுகைகளை சேர்க்க முயன்றால் புதிய இடுகைகள் எதுவும் காணப்படவில்லை என்றே வருகிறது. சில மணி நேரங்களுக்கு பின் முயன்றால் தான் இணைகிறது. வெறும் தலைப்பை மட்டுமே நம்பி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கிறது. அது மட்டுமல்லாமல், ஆயிரம் ஹிட்ஸை தாண்டினாலும் சூடான இடுகையில் வருவதில்லை. அதேப் போல feedjitல் தமிழ்மணம் மூலமாக வருபவர்களை காண முடியவில்லை. தமிழ்மணத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினேன். இந்தப் பிரச்சினை மேலும் சிலருக்கும் இருக்கிறது. என்ன செய்யலாம்? தமிழ்மணத்தில் பெயர் தெரியாதவர்கள் போராட்டக் குழு என்று ஒன்றை தொடங்கி போராடலாமா?

அதேப் போல feedjitல் தமிழ்மணம் மூலமாக வருபவர்களை காண முடியவில்லை.

   Blogspot.com வலைப்பூ வைத்திருப்பவர்களுக்கு சமீபகாலமாக பல தடங்கல்கள் வந்த வண்ணம் உள்ளன. Google analyticsஐ சேர்த்தால் error வருவது(சென்ஷி), தமிழ் மொழிக்கு மாற்றினால் Followers widget காணாமல் போவது(அப்துல்லா), Feedburner சேர்த்தால் வைரஸ் காட்டுவது(லக்கி) எனப் பல பிரச்சினைகள். இப்போது புரோஃபைல் பக்கத்தில், எத்தனை முறை நம்மைப் பற்றிய தகவல்கள் பார்க்கப்பட்டிருகின்றன என்ற எண்ணிக்கையில் பிரச்சினை.(ரொம்ம்ம்ப முக்கியம்). சில வாரங்களாக அது 6600லே இருக்கிறது. பரிசலின் புரொஃபைல் 7600லே நிற்கிறது. அதைப் பார்த்த பின்தான் அப்பாடா என்றிருந்தது.(என்னா வில்லத்தனம்). நேற்று பார்த்தபோது 'Approximately' என்று போட்டிருக்கிறார்கள். என்ன அர்த்தமோ!!!

***********************************************************

ஹைதைக்கு நேற்றுதான் வந்தேன். பெங்களூர் ஹைதையை விட ரொம்ப நல்லாயிருக்குங்க. குளுகுளு weather, VOLVO பேருந்துகள், எங்கே திரும்பினும் ஐ.டி பெண்கள், இளநீர் கடை முதல் KFC வரை அனைவரும் தமிழ் பேசுவது, டிராஃபிக் அதிகமென்றாலும் ஓரளவிற்கு கட்டுப்பாடான ஓட்டுனர்கள் என எல்லாமே ஹைதையை விட பெட்டர் தான். ஆனால் இதையெல்லாம் விட எனக்கு பிடித்தது பெங்களூர் பதிவுலக நண்பர்கள். ‘நான் பார்க்க விரும்பின சில பதிவர்களில் நீங்களும் ஒருத்தர்னு முதன்முதலாக முகம் காட்டிய ப்ளீச்சிங்க, ஆசையாக பொரி வாங்கித்தந்த ஜீவ்ஸ், என்கிட்ட போய் உருப்படியா ஏதாவது பேசியேத் தீருவேன்னு அடம் பிடிச்ச டிபிசிடி,  பாச மழை பொழிந்த பட்டாம்ப்பூச்சி, வாசகர்கள் ஜெகன், தினேஷ், ராஜா... என்ன சொல்ல? அதான்.. அதேத்தான்..

***********************************************************

எனக்கு இந்தி ’தோடா தோடா ஆத்தா ஹை’. இருங்கப்பா அவசரப்பட்டு திட்டாதீங்க. அப்படின்னா கொஞ்சம் கொஞ்சம் வரும்னு அர்த்தம். நேற்று  வலையுலக பிரபலம் ஒருவருடன் சேட்டில் இந்தியில் பேசினேன். நல்லாப் பேசறீங்கன்னு அவர் சொன்னதுக்கு, பக்கத்து சீட்டு ஆளுக்கு மாலையில் குட்டி ட்ரீட் தந்தேன். பக்கத்து சீட்டு, அவனா , அவளா என்பது இருக்கட்டும். இதுக்கெல்லாமா ட்ரீட் தருவாங்கன்னு கேட்கறவங்களுக்கு ரெண்டு காரணம் இருக்குங்க. நான் இந்தி கிளாஸ் போன முதல் நாள் கேட்ட கேள்வி என்னத் தெரியுமா? என் பேரு கார்க்கி ஜி (இந்தி மேடத்த அப்படித்தான் கூப்பிடனுமாம்) இதுக்கு இந்தில என்ன?. அடுத்த காரணம் ரொம்ப நாளா அவங்களே எனக்கு காஃபி வாங்கித் தந்துட்டு இருக்காங்க. அதனால் என் இந்தி விஜய்காந்த் தமிழ் மாதிரி இருக்குன்னோ, தல பேசுவது போல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குன்னு சொல்லி இருந்தாலும் ட்ரீட் தந்திருப்பேன்.

***********************************************************

இந்த மாதிரி பதிவுகளில் இறுதியா கவிதையோ, ஜோக்கோ (சில சமயம் ரெண்டும் இருக்கும். கவிதையே காமெடியா..நோ நோ நான் அனுஜன்யாவின் கவிதைகளை சொல்லல) போடுவார்கள். நான் சந்தேக சந்திராசாமியின் கேள்விகளை போடுவதுண்டு. இதோ இந்த வார சந்தேகம்.


இது என்ன??????????????????????

May 4, 2009

என்னை விமர்சிக்க நீங்கள் யாரு சாரு?

77 கருத்துக்குத்து

முன்குறிப்பு:

இந்தப் பதிவை முழுவதுமாய் அனுபவிக்க வேண்டுவோர் கீழ்கண்ட சூழ்நிலையில் இதைப் படித்தல் உசிதம்.மொக்கை குறித்த பிரக்ஞை இல்லாதவர்கள் இங்கேயே கழண்டுக் கொள்ளவும்.

1) நள்ளிரவு ஆகுமுன் நல்லிரவு ஒன்று வருமே!! அப்போது படித்தல் நலம். மனம் கொண்டாடும் மனநிலையில் இருந்தால் இன்னும் அருமை

2) அலுவலகத்தில் வேண்டாம்.பிரவுசிங் செண்டரும் வேண்டாம். வீட்டில் படிப்பதை வரவேற்கிறேன். அதுவும் உங்கள் வீடென்றால் அற்புதம்.தங்கமணி ஊரில் இல்லை என்றால் வெகு பிரமாதம்.

3) வீட்டில் டிவி இருந்தால் சூப்பர். அதில் ஆதித்யாவோ, சிரிப்பொலியோ ஓடட்டும். நீங்கள் அதிமுக என்றால் ஜெயா செய்திகள் ஓடும் நேரமாக படியுங்கள். மக்கள் டிவிதான் என்றால் டிவியை அணைத்து விடுங்கள்.

4) வெயில் காலத்துக்கு இதமாக பியரோ, பழக்கமில்லாதவர்கள் நைண்ட்டியோ அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் காசில் இல்லாமல் யாராவது இளிச்சவாயர்கள் வாங்கித் தந்தது என்றால் டப்பாசுதான்.

பின்குறிப்பு:

இதைப் புரிந்துக் கொள்ள முடியாதவர்கள் சாரு அவர்களின் கடவுளும் நானும் என்ற புத்தகத்தில் அவருடைய கவிதையை எப்போது, எப்படி படிக்க வேண்டும் என்ற அறிவுரையை படித்துப் பாருங்கள்.

பின்குறிப்புக்கான டிஸ்கிக்கள்:

1)மேலே சொன்ன பின்குறிப்பு அதற்கும் மேலுள்ள முன்குறிப்புக்கான பின்குறிப்பு. பதிவு இனிதான் ஆரம்பம்

2) பதிவின் நீளத்தைக் கண்டு உண்மைத்தமிழனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள்.

இனிப் பதிவு:

சாரு அவர்களே!! நேற்று என் கனவில் வந்த நீங்கள் என் பதிவுகளைப் பற்றி விமர்சனம் செய்தீர்கள். என் மொக்கைகள் மொக்கையாக இல்லை எனவும், நன்றாக இருப்பதாகவும் சொன்னதைக் கேட்டு அசூசை உணர்வே மேலேழுந்தது எனக்கு. காலையில் கழிப்பறையில் ‘இருந்த’ போது உங்கள் நினைவு வந்தது. எப்படி என்னை நீங்கள் அப்படி விமர்சிக்கலாம்? பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த காலம் முதலே எழுதி வருபவன் நான். மற்ற பதிவர்களைப் போல அல்லாமல், படித்ததை வைத்தே எழுதி வருகிறேன். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் முழு நேரமாக படித்தவன் நான். வாசிப்பனுபவம் உண்டு என்பதற்காக சொல்கிறேன். இதுவரை பத்து முழு ஆண்டு தேர்வுகளும், பத்து அரையாண்டு தேர்வுகளும், பத்து காலண்டு தேர்வுகளும் பல இடைத்தேர்வுகளும், ஆறு செமஸ்டர் தேர்வுகளும் எழுதி இருக்கிறேன். இவையல்லாமல் 200க்கும் அதிகமான பதிவுகள் எழுதி இருக்கிறேன். மொக்கைசாமி என்ற லேபிளில் மட்டுமே 30 பதிவுகள் எழுதி இருக்கிறேன். இதையெல்லாம் படித்திருக்கிறீர்களா? படிக்காமல் ஒரு எழுத்தாளனை எப்படி விமர்சிக்கலாம்? நான் நல்ல எழுத்தாளான் ஆக இல்லாமல் இருக்கலாம். ஆனால் 20 ஆண்டுகளாக எழுதும் ஒருவனுக்கு நீங்கள் தரும் மரியாதை இதுதானா?

12063549950709l

தற்போது நான் எழுதிய ஆங்கில தேர்வுகளை எப்படியாவது இங்கிலிஷில் மொழி பெயர்த்து வெளியிட நினைத்திருக்கிறேன். எனக்கு இந்தியாவை விட அமெரிக்காவிலே எதிரிகள் அதிகம். அங்கே கொலம்பியா பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் இதற்கு சம்மதம் தெரிவித்தார். அங்கே இருக்கும் சில இலக்கியவாதிகள் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவரை மாற்றிவிட்டார்கள். ஆந்திராவில் என்னைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு என் அருமை தெரிந்திருக்கிறது.போகட்டும். நாம் விஷயத்திற்கு வருவோம்.

ஆறாவது படிக்கும்போது நான் எழுதிய ஆறு தன் வரலாறு கூறுதல் படித்தீர்களா? தமிழில் சுஜாதாவிற்கு அடுத்து சுவாரஸ்யமாக தேர்வு எழுதியது நான் தான். சமீபத்தில் புட்டிக்கதைகள் என்ற பெயரில் எழுதும் ஏழு தன் வரலாறு கூறுதலையாவது படிக்கிறீர்களா? தமிழிலக்கியத்தில் சரக்கை மையமாக வைத்து எழுதும் முதல் ஆள் நான் தான். இதையெல்லாம் தெரியாத மைக்மோகன் என்ற மாணவன் நான் சரக்கில்லாத ஆள் என்று கிண்டலடிக்கிறாராம். கூபாவை சேர்ந்த கூமுட்டை என்ற குடிகாரன் எழுதிய ‘சந்தித்த வேளையும் சரக்கடித்த லீலையும்” நாவல் அவர் படித்ததுண்டா? அவருக்கு கும்மிடிபூண்டியைத் தாண்டி ஒன்றும் தெரியாது. நாம் விட்ட இடத்திற்கே வருவோம்.

என்னை முழுமையாக படிக்காமல் எப்படி என்னை விமர்சிக்க நினைத்தீர்கள் சாரு? எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் நான் எழுதிய தேர்வுத்தாள்களை சேகரித்து வைத்திருக்கிறேன். விவரம் என்றால் பல உண்டு. சூரியன் கிழக்கில் உதிக்கும் என்ற விவரம் எனக்கு எப்போதோ தெரிந்துவிட்டது. ஆனால் என்ன செய்தால் கிழக்கு பதிப்பகத்தில் புத்தகம் எழுத முடியும் என்ற விவரம் தாமதமாகத்தான் தெரிய வந்தது. புத்தகம் எழுதி, அது நன்றாக விற்றால் பணம் வருமாம். எனக்கு இந்த வீண் வேலைகள் வேண்டாம். பணம் மட்டும் தர முடிந்தால் தாருங்கள். நல்ல புத்தகம் எழுதுங்கள் என்பது போன்ற இலவச அறிவுரைகள் எனக்கு எரிச்சலையும் மன உளைச்சலையும் தருகிறது என்று என் டியூஷன் டீச்சர் கந்தவேல் மூலம் சொல்லியிருக்கிறேன். எங்கேயோ போய்விட்டோம். விவரம் இருக்கட்டும்.விஷயத்திற்கு வருவோம். நான் எழுதிய அந்த தேர்வுத் தாள்கள் வேண்டுமென்றால் 3000 ரூபாய்க்கு டிடி எடுத்து அனுப்புங்கள். எனக்கு டீ குடிக்க 3000 ரூபாய் தேவைப்படுகிறது.

DSC04123

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரும் நானும் அப்போது ராமாபுரத்தில் தங்கியிருந்தோம். அப்போது எனக்கு நாலு வயதுதான். காலையில் ஒன்றாக டீ குடிக்க செல்வோம். அப்போதே நான் சொல்லும் ரைம்ஸுகளை அரசுடமையாக்க போவதாக சொல்லுவார். எம்.ஜி.ஆர் எல்லாம் என தகுதிக்கு சிறியவர் என்பதால் அவர் சொன்னதுக்கு ஆதாரத்தை நான் வைத்துக் கொள்ளவில்லை. டீ என்றவுடன் இதை சொல்ல வேண்டும் போலிருந்தது. டீ குடிப்பதிலும் நான் ஒரு பின்நவீனத்துவாதி எனபதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும்.

மக்கள் பொதுவாக டீ கிளாசை வலது கையாலதான் பிடித்துக் குடிப்பார்கள். அந்தக் கைப்பிடி ஓரம்தான் வாய் வைத்து குடிப்பார்கள். கடைக்காரன் ஒழுங்காக கழுவ மாட்டான். அதனால் நான் குடிக்கும்போது இடது கையால் பிடித்து குடித்து பொதுபுத்தியின் கட்டமைப்பை உடைத்தேன். பின்நவீனத்துவத்தில் இது முக்கியமான கட்டம். பின்நவீனத்துவம் என்ற வார்த்தையில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஹூக்குநவீனத்துவம் என்று சொல்லிக் கொள்ளலாம். ஏன் சொல்கிறேன் என்றால் நான் வழக்கமாக படிக்கும் கிராண்டா என்ற யூ.கே பத்திரிக்கையில் post moderism என்பதையே பழசு என்பவர்கள் courier moderism என்று சொல்லிக் கொள்ளலாம் என எழுதி இருக்கிறார்கள். சில மாதங்களாக கிராண்ட்டாவை படிக்க முடியவில்லை. யூ.கேவில் வாழும் இளிச்சவாயர்கள் யாராவது சந்தா கட்டிணால் நலம். அதற்காக நான் பாரிஸ் வரும்போது எனனை சந்திக்க வேண்டும் என்று சொல்லக் கூடாது.

பாரீஸ். நான் அடிக்கடி செல்லும் இடம். டீ குடிக்க காசு குறைவாக இருந்தால் நடந்தே பாரீசுக்கு சென்று பேப்பர் கப்புகளை குறைந்த விலையில் வாங்கி வருவேன். பாரிசில் வசிக்கும் சேட் ஒருத்தர் நல்ல ஹிந்துஸ்தானி வித்வான். அவரின் பாடல்களை யூட்யூபில் கேட்கலாம். இல்லையேல் அவரின் கடைக்கு சென்று பாட சொல்லிக் கேட்கலாம். அவர் ரெய் வகை இசையிலும் தேர்ந்தவர். வாயில் பீடாவுடன் அவர் பாடுவதைக் கேட்டால் சில கப்புகள் இலவசமாகவும் தருவார். நான் அதற்காகத்தான் அந்தக் கடைக்கு செல்வதாக சிலர் சொல்கிறார்கள். எத்தனை முறை சொல்வது?

சரி.விஷயத்திற்கு வருவோம்.கனவில்தானே விமர்சித்தேன் என்கிறீர்களா? கனவிலாவது என் படைப்புகளை படித்ததுண்டா? நான் எழுதிய பல எழுத்துக்களை இந்திய அரசாங்கமே சேர வேண்டியவர்களிடம் சேர்க்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம், நான் அவர்களுக்கு லெட்டர் எழுதுவேன். தினமும் அலுவலகத்தில் கூட என்ன எழுதலாம் என்ற சிந்தனையே செய்கிறேன், அதனாலே வேலை விட்டு அனுப்பிவிட்டார்கள். தூங்கும்போதும் நீங்கள் விமர்சிக்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் 24 மணிநேரமும் உழைக்கிறேன். ஆனால் என்ன சம்பாதிக்கிறேன்? யாராவது இளிச்சவாயர்கள் கிடைத்தால் தேர்வுத்தாள்களை 3000 ரூபாய்க்கு அவர்கள் தலையில் கட்டி டீ குடிக்கிறேன். மீதிக்கு நான் என்ன செய்ய? வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும். சிட்டி செண்ட்டரில் இருந்தால் எல்லாவற்றிர்க்கும் வசதி என விசாரித்தேன். ஐனாக்ஸ் தியேட்டருக்கு அடுத்த கடை நன்றாக இருக்கிறது. அங்கே எல்லாமே கடைகள்தான். நான் தான் முதலில் தங்கப் போகிறேன். வாடகை மட்டும் மாதம் இரண்டு லட்சம். அட்வான்ஸ் 20 லட்சம். இடம் பிடித்திருக்கிறது. யாராவது உதவினால் பால் காய்ச்சலாம். பாக்கெட் பால் நண்பர் ஒருவர் வாங்கித் தருவதாக சொல்லி இருக்கிறார். எனது வங்கிக் கணக்கு தகவல்கள்.

பெயர்: அழகுமணி

நம்பர்: 000101546578.ICICI, CENATOPH ROAD BRANCH.

தமிழகத்தில் மட்டும் தான் எழுத்தாளனுக்கு இந்த நிலை. செக்கோஸ்லோவியாவில் இப்படி இல்லை. மானங்கெட்ட தமிழர்களுக்கு ஸ்ரேயாவை ஏன் பிடிக்கிறது என்றுத் தெரியவில்லை. அவர் ஒரு பீரோ. எங்கெங்கோ போய்விட்டோம். சாரு, என்னை ஏன் கனவில் வந்து விமர்சிக்கிறீர்கள்? உங்களை போன்ற ஆட்கள் இருக்கும் வரை தமிழ் இலக்கியத்தை பாபாதான் காப்பாற்ற வேண்டும்.

04-05-2009

11.05 AM

நிஜமான பின்குறிப்பு:

இதன் அடுத்த பாகம் விரைவில் வெளிவரும்.

May 3, 2009

டாக்டர் ருத்ரன் மற்றும் ஷாலினியை சந்திக்கும் முன்.

10 கருத்துக்குத்து

 

ChildAbuseT

Child abuse.

    இதை எப்படி வரையறுப்பது? பயப்படாதீங்க. இதைப் பத்தி நான் எதுவும் சொல்லப் போறதில்லை. நம்ம டாக்டர்.ருத்ரன் அவர்களும் (அவரும் பதிவர்தாங்க) மற்றும் டாக்டர் ஷாலினி அவர்களும் இதைப் பற்றி ஒரு கலந்துரையாடலுக்கு சம்மதிச்சு இருக்காங்க.மேலதிக தகவலுக்கு

நர்சிம்மின்

லக்கியின்

பதிவுகளை படிங்க.

நாள் : மே 10, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி.

இடம் : கிழக்கு பதிப்பகத்தின் மொட்டைமாடி
கிழக்குப்பதிப்பகம் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது. (எல்டாம்ஸ் ரோடு மியூசிக் வோர்ல்டு அருகில் )

இதன் பின் இருக்கும் அனைத்து பதிவுலக நண்பகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.

வருகை தரவிருக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  Child abuse பற்றிய இணையத்தளம். மேய்ந்துவிட்டு வந்தால் கலந்துரையாடல் பயனுள்ளதாய் அமையுமென கருதுகிறேன்.

May 2, 2009

sunrise

14 கருத்துக்குத்து

Beautifil_Sunrise

May 1, 2009

எங்க தலைக்கு பிறந்த நாள்.. உலகத்துக்கே லீவுடா

47 கருத்துக்குத்து
இன்று மே

ஒன்று..

இளைஞர்களின் எழுச்சி நாயகன்

தமிழ் சினிமாவின் சாதனை நாயகன்

வாழும் வரலாறு

நடிப்புலக சக்ரவர்த்தி

அண்ணன் ‘முத்துக்காளை’

அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து..

சொல்லிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

இப்படிக்கு,

அகில உலக முத்துக்காளை ரசிகர் மன்றம்
 

all rights reserved to www.karkibava.com