Apr 10, 2009

காக்டெய்ல் ( WITH A JOKE )


  நா.முத்துக்குமாரைப் பற்றி நான் அடிக்கடி பேசுவதுண்டு. அப்படி ஒரு நாள் என் அண்ணனுடன் பேசிக் கொண்டே SMS படத்தில் வரும் ஒரு கல் ஒரு கண்ணாடி பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். அதன் முதல் சரணத்தில் கடைசி  வரிகள் இப்படி முடிகின்றன.

கடும் விஷத்தினை குடித்தாலும் அடி

கொஞ்ச நேரம் கழித்தே உயிர் போகும்

இந்தக் காதலிலே உடனே உயிர் போகும்

காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தான்

உடனே உயிர் போய்விடும் என்றால் எப்படி சித்ரவதை ஆகும்? வேறு அர்த்தம் இருக்க வாய்ப்பில்லைதானே!!

*************************************************  

சமீபத்தில் வெளிவந்த எந்தப் படத்தின் பாடல்களும் பெரிதாய் ஈர்க்கவில்லை. ஆனந்த தாண்டவம் என்ற படத்தில் பென்னி தயாள் பாடிய “கல்லில் ஆடும் பூவே” என்ற பாடல் மட்டும் பிடித்திருக்கிறது. நான் அதிகம் விரும்பும் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் நாவலை படமாக்கியிருக்கிறார்கள். இந்த வாரம் ரிலீஸ். பார்ப்பதற்கே பயமாயிருக்கிறது. சொதப்பி விடுவார்களோ?

பாடலை ஆன்லைனில் கேட்க இங்கே க்ளிக்குங்கள்

*************************************************

செல்வேந்திரனை சந்தித்த போது சொன்னார், தமிழகத்தில் ஏழு மணிக்கு பிறகு ஜட்ஜு சொல்றதைத்தான் கேட்கணும். இனி ஒரு மாதத்திற்கு தமிழ் தொலைக்காட்சி ஜட்ஜுகள் பாடு திண்டாட்டம்தான். ஐபிஎல் தொடங்கப் போகிறது. தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றியதால் ஏற்பட்ட நஷ்டத்தை(?) ஈடு கட்ட பத்து ஓவர்களுக்கு ஒரு முறை ஐந்து நிமிட இடைவெளி உண்டாம். Cheer girls உண்டு. ஆனாலும் நம்ம ஊரு பொண்ணுங்க மாதிரி இருக்குமா?

  எனது ஃபேவரிட் டீம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். தாதாவிற்காக. ஆனால் அவர்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. கோச் ஒரு பக்கம், தாதா ஒரு பக்கம், ஷாரூக் ஒரு பக்கமென இருக்கிறார்கள். நாலைந்து போட்டிகள் முடிந்தால்தான் யூகிக்க முடியும். ஆனால் எனக்கு தோனுது, இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் பப்பு வேகாது.

*************************************************

  பேசும்போது நான் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தை “கண்டிப்பா”. யாராவது அழைத்தால் கண்டிப்பா வருகிறேன் என்று சொல்றோம்ல. அது மாதிரி. ஆனால் அது சரியா? நிச்சயமா என்றுதானே சொல்ல வேண்டும். கண்டிப்பு என்பதற்கு strict என்றுதானே அர்த்தம்? இல்லை ஆங்கிலத்தில் Fine என்பதை போல இரு அர்த்தமா? சொல்லுங்கப்பூ.

*************************************************

  தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கிய படங்களை எந்த வித வெட்டும் இன்றி தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? தொலைக்காட்சியில் வரும் டிரெய்லர்களுக்கே தனியாக சான்றிதழ் வாங்க வேண்டுமாம். அபப்டி இருக்க இதை யாரும் கண்டுக்காமல் இருப்பது ஏன்? சமீபத்தில் பொதிகையில் வின்னர் காமெடி பார்த்துக் கொண்டிருந்தேன். வடிவேலு ஒத்துக்கறேன். உன் அ... (நம்ம கடையும் தணிக்கை செய்யப்பட்டதுதான்) என்று சொல்லும் வசனம் கட் செய்யப்பட்டது. அதன் பிறகுதான் கவனித்தேன், பொதிகையில் பல காட்சிகள் அப்படித்தான் ஒளிபரப்புகிறார்கள். பாராட்டலாமே?

*************************************************

ஆங்ங்ங். தலைப்பில் சொன்னதை மறந்து விட்டேன். ஜோக் இதோ.

அம்மாவின் ஆசைக்காக கொஞ்சம் தடியான தங்க செய்ன் ஒன்றை அணிந்திருக்கிறேன். எப்படியோ அதை கடிக்கும் பழக்கம் வந்துவிட்டது. ஒரு நாள் கடுப்பான என் அம்மா கேட்டாங்க அதை ஏண்டா கடிச்சி சாப்பிடற? தங்க பஸ்பம் சாப்பிட்டு வெள்ளை ஆகனுமா?

நீங்கதான சொன்னீங்க எனக்கு நகை சுவையுணர்வு அதிகம்னு

அடிக்காதீங்க. எஸ்கேப்.......

35 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on April 10, 2009 at 10:44 AM said...

hi me the first

தாரணி பிரியா on April 10, 2009 at 10:47 AM said...

கள்ளில் ஆடும் எனக்கும் ரொம்பவே பிடிக்கும். படம் கண்டிப்பா பாக்கணுமுன்னு முடிவு செஞ்சு இருக்கேன். இரண்டாவது பாகத்துக்குதான் அதிக முக்கியதுவம் குடுத்து இருப்பாங்கன்னு தோணுது

அம்மா ஆசைக்காக நம்பிட்டோம் :)

பொன்.பாரதிராஜா on April 10, 2009 at 10:50 AM said...

//அதை ஏண்டா கடிச்சி சாப்பிடற? தங்க பஸ்பம் சாப்பிட்டு வெள்ளை ஆகனுமா?

முடி வெள்ளையாறதுக்குல கல்யாணம் பண்ற வழிய பாரு கார்க்கி...
அத விட்டுட்டு வெள்ளையாகிறாராம்

Suresh on April 10, 2009 at 10:51 AM said...

கண்டிப்பா even i use this often it meaans sure ...

அறிவிலி on April 10, 2009 at 10:52 AM said...

பாத்து உணர்வு ஜாஸ்தியாயி காஸ்ட்லியான் உணவாயிடப் போகுது.

அப்றம் ரொம்ப வெள்ளையா வேற போயிட்டீங்கன்னா ச்சின்னப்பையனையும், டுபுக்குவையும்தான் உதவிக்கு கூப்புடணும்.

அறிவிலி on April 10, 2009 at 10:54 AM said...

"பொண்ணு தேடறதுக்கு" உதவ

டக்ளஸ்....... on April 10, 2009 at 11:08 AM said...

//உடனே உயிர் போய்விடும் என்றால் எப்படி சித்ரவதை ஆகும்? வேறு அர்த்தம் இருக்க வாய்ப்பில்லைதானே!//
ஏண்ணே இப்படி டெரர்ரா யோசிக்கிறீங்க!
//ராஜஸ்தான் ராய்ஸ்//
அப்டின்னா என்ன?
//அதை ஏண்டா கடிச்சி சாப்பிடற? தங்க பஸ்பம் சாப்பிட்டு வெள்ளை ஆகனுமா//
ஷட்டப்.."பால் பொங்கும்,பச்சத்தண்ணி எப்படி பொங்கும்!"

Kathir on April 10, 2009 at 11:10 AM said...

//கல் கண்ணாடி பாட்டுக்//

அப்படின்னா???

தராசு on April 10, 2009 at 11:11 AM said...

//இந்த முறை ராஜஸ்தான் ராய்ஸ் பப்பு வேகாது. //

பந்தயம் வெச்சுக்கலாமா, சென்னை வீரன்கள் தான் இந்த முறை டாப்பு.

Kathir on April 10, 2009 at 11:15 AM said...

//காதலிலே உடனே உயிர் போகும்//

சகா,
அதுல நிஜமா உயிர் போறதை பத்தி சொல்லவில்லை....

அவங்க பேசிப்பேசி நம்ம உயிர எடுப்பாங்க இல்ல, அதை சொல்லி இருக்காங்க...

:))

Kathir on April 10, 2009 at 11:18 AM said...

//பேசும்போது நான் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தை “கண்டிப்பா”. யாராவது அழைத்தால் கண்டிப்பா வருகிறேன் என்று சொல்றோம்ல. அது மாதிரி. ஆனால் அது சரியா? நிச்சயமா என்றுதானே சொல்ல வேண்டும். கண்டிப்பு என்பதற்கு strict என்றுதானே அர்த்தம்? இல்லை ஆங்கிலத்தில் Fine என்பதை போல இரு அர்த்தமா? சொல்லுங்கப்பூ.//

கண்டிப்பா சொல்லிடலாம் சகா...
நிச்சயமா... நீங்க கேட்கும் போது சொல்லாம இருப்போமா??

:))

மண்குதிரை on April 10, 2009 at 11:24 AM said...

1 ) //முதல் முறை பார்த்தது எங்கே?
மனதும் தேடும்
மழை நின்ற போதும்
மரக்கிளை எல்லாம்
மெதுவாய் தூறும்//

நா முத்துக்குமாரின் பாடல்கள் எனக்கும் பிடிக்கும். அது போல் அவருடைய ''பட்டாம் பூச்சி விற்பவன்'', ''நியூட்டனின் மூன்றாம் விதி'' மற்றும் கட்டுரை தொகுப்பு ''கிராமம், நகரம், மா நகரம்''.

2 ) ஏன் நண்பா ''வெண்ணிலா........ '' பாடல்கள் பிடிக்கவில்லையா? எளிமையான அழகான வரிகள். ''லேசா பறக்குது மனசு...'', ''பட படவென பறந்திட சிறகுகள் அடடா முளைக்கிறதே..'', யார் எழுதியது என்று தெரியவில்லை. நா முத்துக்குமார் அல்லது ப்ரான்சிஸ் கிருபா ? கண்டிப்பாக சினேகனாக இருக்காது.


3 ) காற்றுள்ளபோதுதானே தூற்றிக் கொள்ளவேண்டும். (நன்றி மாலன் அவர்கள்)

4 ) நானும்தான். ஒற்றுமை. கண்டிப்பாக மாற்றிக் கொள்ளவேண்டும்.

5 ) ஆமா நண்பா ஏ சான்றிதழ் படத்துக்கு குழந்தைகளோடு செல்கிறார்கள்.

6 ) புரியலையே........

கடைக்குட்டி on April 10, 2009 at 11:26 AM said...

ஆன்ந்தத் தாண்டவம் பார்க்க எனக்கும் பயம்தன்.. கேபிள் அண்ணனின் விமர்சனத்திற்குப் பிறகு பார்க்கலாம்...

நம்ம கட பக்கமும் கொஞ்சம் வாங்க தல..

எம்.எம்.அப்துல்லா on April 10, 2009 at 11:26 AM said...

//ஆங்கிலத்தில் Fine என்பதை போல இரு அர்த்தமா? சொல்லுங்கப்பூ.

//

கண்டிப்பா சொல்றேன்

:)

narsim on April 10, 2009 at 11:31 AM said...

நா.மு. நண்பர்தான். கேட்டுச் சொல்லவா சகா?

கண்டிப்பு.. யார்கிட்டயோ போன்ல வாங்குன மாதிரி இருக்கே சகா அந்த வார்த்தையை யூஸ் பண்ணி..ஷேம் பிளட்.

வித்யா on April 10, 2009 at 11:38 AM said...

ஆனந்த தாண்டவத்தில் கனா காண்கிறேன் பாட்டும் நல்லாருக்கு. நித்யஸ்ரீ, சுபா வாய்ஸ்ல சூப்பர்:) இந்த வீக்கெண்ட் பார்க்கலாம்ன்னு பிளான்:)

அப்புறம் ஜோக் - உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

அன்புடன் அருணா on April 10, 2009 at 11:46 AM said...

பதிவு கொஞ்சம் சுமார்தான் கார்க்கி!!!
அன்புடன் அருணா

கார்க்கி on April 10, 2009 at 11:49 AM said...

நன்றி தாபி

நன்றி சுரேஷ்

முடி வெள்ளையாகல பாரதி. மனசுதான்.. :))

அக்கறைக்கு நன்றி அறிவிலி

பச்சத்தண்ணியையும் பொங்க வைப்போமில்ல நாங்க.. டக்ளசு..

@கதிர்,

அடிச்சு ஆடறீங்க

*****************
@தராசு,

வாய்ப்பு இருக்கு. ஆனா T20ல எதையும் சொல்ல முடியாது தல

**************
@மண்குதிரை,

நன்றிங்க. ஜோக்கா புரியல? ஆவ்வ்வ்வ்

*************
கடைக்குட்டி, வந்து பின்னூட்டமும் போட்டேன். பாருங்க சகா

**************

சீக்கீரம் சொலுங்கண்ணே

************

@நர்சிம்,

அதே.. அதே..

************
நிதயஸ்ரீ... நோ.. எனக்கு பிடிக்கவே பிடிக்காத குரல் அது.. சந்திரமுகில ராரா பாட்ட தெலுஙுல பின்னி பாடியிருப்பாங்க. அதோட தெலுங்கு படத்துல பாட்டு தமுழ்ல வரும் (புரியுதா) அத இந்த எம்மா எப்படி கொன்னு இருக்காங்கனு கேட்டு சொல்லுங்க..

நீங்க சொன்ன பாட்டு ஓக்கே.. ஆனா எனக்கு பெருசா படல.. :)))

பரிசல்காரன் on April 10, 2009 at 12:31 PM said...

ஆனந்த தாண்டவம் டைரக்டர் மிகுந்த திறமைசாலி.. சரியான ப்ரேக் கிடைக்காமல் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

நிச்சயமா நீ சொன்ன ஒரு மேட்டர் ஏற்கனவே ஒருத்தர் எழுதிட்டார். கண்டிப்பா அதைப் படி. (நிச்சயமா இல்ல... கண்டிப்பா படி!)

ரமேஷ் வைத்யா on April 10, 2009 at 12:59 PM said...

மூணு பேரும் மன்னிச்சுடுங்கப்பா!

T.V.Radhakrishnan on April 10, 2009 at 1:05 PM said...

strict என்பதற்கு without irregular என்றும் அர்த்தம் உண்டு..அதனால் கண்டிப்பாய் வருகிறேன் என்றால் தப்பில்லை

ரமேஷ் வைத்யா on April 10, 2009 at 1:15 PM said...

கண்டிப்பாய் வருகிறேன் என்பதற்கு கண்டனம் தெரிவித்தபடி வருகிறேன் என்றும் ஓர் அர்த்தம் உண்டு. Stricture என்கிற வார்த்தைக்குப் பொருள் பார்க்கவும்.

ஸ்ரீதர் on April 10, 2009 at 1:51 PM said...

//உடனே உயிர் போய்விடும் என்றால் எப்படி சித்ரவதை ஆகும்? வேறு அர்த்தம் இருக்க வாய்ப்பில்லைதானே!//
எப்படித்தான் யோசிக்கிறாங்களோ?

Anbu on April 10, 2009 at 2:26 PM said...

\\“கல்லில் ஆடும் பூவே” என்ற பாடல் மட்டும் பிடித்திருக்கிறது\\

எனக்கும் மிகப்பிடித்த பாடல் அண்ணா

கார்க்கி on April 10, 2009 at 3:41 PM said...

@பரிசல்,

ஆமாம் சகா. பார்ப்போம் எப்படி இருக்குன்னு.

@ரமேஷ்,

என்ன குரு,நாங்கதான் தப்பா பேசறோம். நாங்கதான் மன்னிப்பு சொல்ல்னும்

@TVR,

அப்படியா சொல்றீங்க? ஆனா நீங்க சொல்ற அர்த்ததில் நாம் பேசுவது இல்லையே

@ஸ்ரீதர்,

ஆமா சகா.நான் சின்ன வயசுல இருந்தே.. சரி சரி.. விட்டுடறேன் :))

@அன்பு,

நன்றி

கணினி தேசம் on April 10, 2009 at 7:09 PM said...

என்ன சகா சட்டைய மாத்திடீங்க? ஐ மீன் வலைச்"சட்டை".

//உடனே உயிர் போய்விடும் என்றால் எப்படி சித்ரவதை ஆகும்? வேறு அர்த்தம் இருக்க வாய்ப்பில்லைதானே!! //

வரிகள் வேண்டுமானால் எசகுபிசகாக இருக்கலாம்
அனால். காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தான்!

//எனது ஃபேவரிட் டீம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். //
எனக்கு நம்ம சென்னை டீம் தான் ஃபேவரிட்

கணினி தேசம் on April 10, 2009 at 7:10 PM said...

//அம்மாவின் ஆசைக்காக கொஞ்சம் தடியான தங்க செய்ன் ஒன்றை அணிந்திருக்கிறேன். எப்படியோ அதை கடிக்கும் பழக்கம் வந்துவிட்டது.ஒரு நாள் கடுப்பான என் அம்மா கேட்டாங்க அதை ஏண்டா கடிச்சி சாப்பிடற? தங்க பஸ்பம் சாப்பிட்டு வெள்ளை ஆகனுமா? //

எங்களையெல்லாம் கடிக்கறது பத்தாதா ??


:))

கும்க்கி on April 10, 2009 at 7:12 PM said...

கீரிகெட்டில் ஆர்வம்(அஸாருதீன் புண்ணியத்தில்)இல்லை நண்பரே.ஓ நோ காமெண்ட்ஸ்.
தங்க பஸ்பம் சாப்ட்டு உடம்ப கெடுத்த வேணாம்.அந்த செயின அப்படியே கொடுத்தா...அருமையான வசிய லேகியம் செஞ்சு தர ஆள் நம்ம கிட்ட இருக்கு சகா.

அத்திரி on April 10, 2009 at 8:50 PM said...

அதான் கொஞ்சம் கலரா இருக்கியா சகா...... ரகசியத்தை வெளிய சொல்லாத

குசும்பன் on April 11, 2009 at 11:36 AM said...

//அம்மாவின் ஆசைக்காக கொஞ்சம் தடியான தங்க செய்ன் ஒன்றை அணிந்திருக்கிறேன். //

ரைட்டு அவசரத்துக்கு உதவும் பாஸ்! தகவலுக்கு நன்றி:)

அன்புடன் அருணா on April 11, 2009 at 7:09 PM said...

சரி சரி பதிவு சூப்பர்னு சொல்லிடறேன் கார்க்கி........சுமார்னு சொன்னா பதில் போட மாட்டீங்களா????
அன்புடன் அருணா

தீப்பெட்டி on April 11, 2009 at 8:12 PM said...
This comment has been removed by the author.
தீப்பெட்டி on April 11, 2009 at 8:13 PM said...

கண்டிப்பு = உறுதி + நிச்சயம்
நிச்சயம் = உறுதியில்லா கண்டிப்பு

நிச்சயமா சொல்லுவேன் - இது நழுவும் விஷயம்,
கண்டிப்பா சொல்வேன் - நழுவ முடியாத விஷயம், இதில் சொல்லுபவரது நிச்சயம் உறுதியுடன் வெளிப்படும்

ஏதாவது புரியுதுனு நினைக்குறீங்க ???/
எனக்கு இல்ல
கரெக்டா தெரிஞ்சவுங்க சொல்லுங்களேன்பா

Sundar on April 12, 2009 at 11:25 PM said...

//அம்மாவின் ஆசைக்காக ...//

நம்பிட்டோம் :)

ச.முத்துவேல் on April 13, 2009 at 5:47 PM said...

/உடனே உயிர் போய்விடும் என்றால் எப்படி சித்ரவதை ஆகும்? வேறு அர்த்தம் இருக்க வாய்ப்பில்லைதானே!!/

புல்லரிச்சிடுச்சி. அப்புறம் கடைசியில ஒரு ஜோக், அதைவிட அதிகமா புல்லா அரிச்சுடுச்சி.

 

all rights reserved to www.karkibava.com