Apr 23, 2009

பெங்களூர் பதிவர் மாநாடும் ப்ளீசிங் பவுடரும்பரிசலின் அவியலில் காக்டெயில் கலந்ததை படிச்சிருப்பிங்க. சத்ய்மா .,ச்சே ராசியில்ல.. இன்ஃபோஸிசா அதன் முழுக் காரணமும் முக்கா காரணமும் பரிசல்தாங்க. அவியலில் வழக்கமான சுவையில்லைன்னு எழுதுவாங்கனு பார்த்தா, தலைகீழா நடந்தது. ஒருத்தர் ஜனாதிபதி விருது தருவேங்கிறாரு. இன்னொருத்தர் அவியல படிச்சாத்தான் அன்னைக்கு சாப்பாடே இறங்குதுங்கிறார். போட்ட ஒரு மணி நேரத்தில் 20 பின்னூட்டமாம், இரண்டு மணி நேரத்தில் சூடாம். இதெல்லாம் அவியல் என்ற பெயருக்குத்தான் சொன்னா, போன வாரம் இப்படி ஆகலையே? என்னமோ போடா கார்க்கி. உலகத்த யாராலயும் காப்பாத்த முடியாது.:))))))

எதுக்கும் ஒரு ஹிண்ட் கொடுக்கலாமேன்னுதான் தல மேட்டர் நடுவுல சேர்த்து விட்டேன். இதையே நான் என் கடைல எழுதி இருந்தா அய்யோ அம்மான்னு நெகட்டிவ் ஓட்டு குத்துற வாலுங்க, அங்க அடக்கி வாசிச்சாங்க. அப்ப அவங்க கோவமெல்லாம் என் மேலத்தானா? தல பேர சொன்னாலே துடிப்பாரே ஒருத்தர், அவரு அங்கயும் கமெண்ட் போட்டாரு. ஆனா இத பத்தி சொல்லல. என்னவோ அவர நான் இன்னொரு ஐ.டில வந்து மிரட்டறதா பதிவெல்லாம் போட்டாரு. தம்பி, மறுபடியும் சொல்றேன், நடிகர்களுக்காக நண்பனை இழப்பவன் நானல்ல. உங்களை கார்க்கியாகவே திட்ட பல காரணம் உருவாக்கி வச்சிருக்கீங்க. அத மாத்த பாருங்க. என்னை பத்தி சரியா தெரியலைன்னா இங்க அடிக்கடி வர கார்த்திக்,ஷாஜி, வினோத் பொன்ற தல ரசிகர்களை கேட்டுக்கோங்க
*************************************************

ஆதி எடுத்த படத்தை பார்த்தீங்களா? எப்படி நம்ம நடிப்பு? அதெல்லாம் இருகட்டும் அது என்னடா அப்படி ஒரு தொப்பையான்னு நிறையப் பேரு கேட்டாங்க. அதை திட்டம் போட்டு செஞ்சிட்டாருங்க ஆதி. ஆக்ட்ச்சுவலா அது ஆதியோட சின்ன வயசு கதைங்க. அதனாலத்தான் அவரு மாதிரியே ஆகனும்ன்னு சொன்னாரு. என்ன சொல்லுவாங்க. ஆங் மெதட் ஆக்டிங். அதுக்காக கஷ்டப்பட்டு ரெண்டு மாசமா வளர்த்த தொப்பைங்க அது. அதை யாரும் பாராட்டாம கிண்டல் செய்றீங்க. அடுத்த படத்துல பரிசலா நடிக்கிறேன். அதுக்காக மறுபடியும் வெயிட் குறைச்சுக்கிட்டு இருக்கேன். வால்பையனா நடிக்கற வாய்ப்புக்காக காத்திட்டு இருக்கேன்.
************************************************

ஏப்ரல் 30 வரை ட்ரெய்னிங். அதிகமாக வலைப்பக்கம் வர முடியாது. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல முடியுமான்னு தெரியல. மத்த கடைகளுக்கும் போக முடியுமான்னு தெரியல. டேட்டா கார்டு வேற மக்கர் பண்ணுது. பார்த்து அட்ஜஸ்ட் செஞ்சிக்கோங்கப்பா.

********************************************
பெங்களூரில் நேற்று பதிவர்கள் மாநாடு நடந்தது. ஆமாங்க ரெண்டு பேருக்கு மேல வந்தாலே மாநாடுன்னுதான் சொன்னாரு அவரு. அவரு எவரு தெரியுமா? சில மாதங்களுக்கு முன் தமிழ்மணத்தையே கலக்கிய ப்ளீசிங்க பவுடர். அவரும் வால்தான், அவரும் பையன் தான். அதுக்காக அவர்தான் வால்பையன்னு எல்லோரும் நினைச்சாங்க. ச்சே நினைச்சோம் இல்ல? இல்லைங்க. இவரு வேற. நான் கூட வால் ஆளு செட் பண்ணிட்டாரோன்னு நிறைய கேள்வி கேட்டேன். எல்லோத்துக்கும் சரியா பதில் சொல்லி அவர்தான் ப்ளீச்சிங் பவுடர்ன்னு நிரூபிச்சாரு. அப்புறம் பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கித் தந்தாரு.

அவரிடம் விசாரனை நடந்ந்துக் கொன்டிருந்தபோதே நம்ம ஜீவ்ஸ் அழைத்தார். கூடவே டிபிசிடியும். கப்பன் பூங்காவை இந்த சோம்பேறி சுற்றிப் பார்க்க மாட்டான் என்று தெரிந்துக் கொன்டு இங்க வா அங்க வா என்று அலைகழித்து நல்லா காட்டினாங்கப்பா. எப்படியும் ஜீவ்ஸ் கேமராவோடு வருவாரு, நம்மள அழகழகா ப‌டம் பிடிப்பாருன்னு நினைச்சா கை வீசிட்டு வந்தாருங்க. அப்ப‌டியே அந்த கைய நான் வீசலாம்ன்னு நினைச்சப்பா டிபிசிடி ஹாய் சொன்னாரு. என் காதுல டேய்ன்னு விழுந்துச்சா, அவரு பார்க்க அப்ப‌டி இருந்தாரா அப்படியே ஆஃப் ஆயிட்டேன்.(halfஇல்ல,off) இவங்க பொரி, கடலை எல்லாம் வாங்கித் தந்தாங்க.

என்ன பேசினோம், எப்ப‌டி பேசினோம், கப்பன் பூங்காவை அவர்கள் தேர்ந்தெடுக்க காரணம் என்ன இன்னும் பல அடுத்த பதிவில்..ஹிஹிஹி

31 கருத்துக்குத்து:

Anonymous said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வித்யா on April 24, 2009 at 12:29 PM said...

சரி சரி.

டக்ளஸ்....... on April 24, 2009 at 12:37 PM said...

\\எதுக்கும் ஒரு ஹிண்ட் கொடுக்கலாமேன்னுதான் தல மேட்டர் நடுவுல சேர்த்து விட்டேன். \\
எங்க தல...
உங்களுக்கு ஊறுகாயா...?
நானும் அதை "பரிசலோட‌ கார்க்கியின் தாக்கம்"னு நம்பி லூசுல விட்டுட்டேன்..!

\\அப்ப அவங்க கோவமெல்லாம் என் மேலத்தானா?\\
சே..சே..அப்டியெல்லாம் இல்ல தல..சார்..டலபதி...
நீங்க இல்லாட்டி நாங்க (தல அணுதாபீஸ்) யாருக்கு கண்டனம் சொல்றது...!

என்னை "தல ரசிகன்" இல்லனு சொன்ன "பிரபல டலபதி பதிவர் கார்க்கியை" அசலாகக் கண்டிக்கிறேன்..!

தராசு on April 24, 2009 at 12:39 PM said...

//கஷ்டப்பட்டு ரெண்டு மாசமா வளர்த்த தொப்பைங்க அது. அதை யாரும் பாராட்டாம கிண்டல் செய்றீங்க//

சரி, சரி, நம்புறோம்.

எம்.எம்.அப்துல்லா on April 24, 2009 at 12:57 PM said...

//எல்லோரும் நினைச்சாங்க. ச்சே நினைச்சோம் இல்ல? //

நான் மட்டும் முதலில் இருந்தே சொல்லிக்கொண்டு இருந்தேன்..இருவரும் வேறுவேறு என. யார் கேட்டீங்க???

லோகு on April 24, 2009 at 1:20 PM said...

//எதுக்கும் ஒரு ஹிண்ட் கொடுக்கலாமேன்னுதான் தல மேட்டர் நடுவுல சேர்த்து விட்டேன். இதையே நான் என் கடைல எழுதி இருந்தா அய்யோ அம்மான்னு நெகட்டிவ் ஓட்டு குத்துற வாலுங்க, அங்க அடக்கி வாசிச்சாங்க. அப்ப அவங்க கோவமெல்லாம் என் மேலத்தானா? தல பேர சொன்னாலே துடிப்பாரே ஒருத்தர், அவரு அங்கயும் கமெண்ட் போட்டாரு. ஆனா இத பத்தி சொல்லல. என்னவோ அவர நான் இன்னொரு ஐ.டில வந்து மிரட்டறதா பதிவெல்லாம் போட்டாரு. தம்பி, மறுபடியும் சொல்றேன், நடிகர்களுக்காக நண்பனை இழப்பவன் நானல்ல. உங்களை கார்க்கியாகவே திட்ட பல காரணம் உருவாக்கி வச்சிருக்கீங்க. அத மாத்த பாருங்க. என்னை பத்தி சரியா தெரியலைன்னா இங்க அடிக்கடி வர கார்த்திக்,ஷாஜி, வினோத் பொன்ற தல ரசிகர்களை கேட்டுக்கோங்க//

அன்புக்கு இனியவரே வணக்கம்,
நான் உங்களது எந்த பதிவுலும் (குறிப்பாக விஜய் அஜித் பதிவுகளில்) வந்து பின்னூட்டம் இட்டது இல்லை.. அஜித்தை கலாய்க்கும் பதிவுகளுக்கு (யார் எழுதினாலும்) நான் எப்போதும் பின்னூட்டம் போடுவதில்லை. அந்த பின்னூட்டம் பரிசல் அவர்களுக்கு என்று நினைத்து எழுதியது. இது உங்கள் பதிவு என்று தெரிந்திருந்தால் பின்னூட்டம் இட்டிருக்க மாட்டேன்.. எனது பிரச்சனை எல்லாம் அஜித்தை திட்டுவதால் அல்ல.. என்னையும், என் குடும்பத்தையும் திட்டியதால் தான்..

வலையுலகில் புதியவனான நான் பிரபலமான உங்களை பகைத்துக் கொள்ள வேறு காரணங்கள் எதுவும் இல்லை..

என்னை கார்க்கியாகவே திட்ட பல காரணங்கள் இருப்பதாக கூறினீர்கள். 'கார்க்கி' இல்லை என்றால் திட்டுவதற்கு என்னிடம் பல காரணங்கள் இருக்கின்றன..

வால்பையன் on April 24, 2009 at 1:37 PM said...

//சில மாதங்களுக்கு முன் தமிழ்மணத்தையே கலக்கிய ப்ளீசிங்க பவுடர். அவரும் வால்தான், அவரும் பையன் தான். அதுக்காக அவர்தான் வால்பையன்னு எல்லோரும் நினைச்சாங்க. ச்சே நினைச்சோம் இல்ல? இல்லைங்க. இவரு வேற.//


அப்படியே இந்த கணேஷ் யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லிருங்க!

அதுவும் நான் தான்னு ஒருத்தர் கொ.ப.செ வேலை பார்த்துகிட்டு இருக்கார்.

ஸ்ரீமதி on April 24, 2009 at 1:44 PM said...

:)))

narsim on April 24, 2009 at 2:00 PM said...

ம்ம்...

தாரணி பிரியா on April 24, 2009 at 2:03 PM said...

//அதுக்காக கஷ்டப்பட்டு ரெண்டு மாசமா வளர்த்த தொப்பைங்க அது. அதை யாரும் பாராட்டாம கிண்டல் செய்றீங்க//

nambarom saga pinne neega 4 masathukku munna kuda olliyathane iruthinga :)

Bleachingpowder on April 24, 2009 at 2:11 PM said...

வால்பையன் - கார்க்கி பெங்களூரில் ரகசிய சந்திப்பு திடுக்கிடும் தகவல்னு தினத்தந்தியில போட்டிருக்காங்க நீங்க என்னடானா என்ன பாத்ததா சொல்றீங்க தல.

நான் ரெண்டு வாரமா ஊருலயே இல்ல, நீங்க யார பாத்தீங்க எப்போ பாத்தீங்க??????

Karthik on April 24, 2009 at 2:58 PM said...

:))))

MayVee on April 24, 2009 at 5:10 PM said...

vaalpaiyan neenga nadikka mudiyathu karki. avar born intelligent. avarai yaaralaiyum imitate panna mudiyathu....

MayVee on April 24, 2009 at 5:12 PM said...

"அதுக்காக கஷ்டப்பட்டு ரெண்டு மாசமா வளர்த்த தொப்பைங்க அது. அதை யாரும் பாராட்டாம கிண்டல் செய்றீங்க"


illaiye.... ungalai bloggers meet la partha pothu neenga......

slim aa theriya vendumanal jeans vudunga....
cotton phant use pannunga thoppai theriyathu

MayVee on April 24, 2009 at 5:14 PM said...

vijay rasigar thaan Ajith patri eluthi ullar....
athanal vijayyai vida ajith thaan tamil nattin darling entru kuvi kolgiren

MayVee on April 24, 2009 at 5:16 PM said...

KARKI - KALKI

வால்பையன் on April 24, 2009 at 5:44 PM said...

வால்பையன் - கார்க்கி பெங்களூரில் ரகசிய சந்திப்பு திடுக்கிடும் தகவல்னு தினத்தந்தியில போட்டிருக்காங்க நீங்க என்னடானா என்ன பாத்ததா சொல்றீங்க தல.

நான் ரெண்டு வாரமா ஊருலயே இல்ல, நீங்க யார பாத்தீங்க எப்போ பாத்தீங்க??????//

அதானே நானும் பெங்களூர் வரவே இல்லையே!

ஈரோடுல தானே இருக்கேன்!
எப்படி என்னை பார்த்திருக்க முடியும்!

பட்டாம்பூச்சி on April 24, 2009 at 6:16 PM said...

//எப்படி நம்ம நடிப்பு? //

ம்க்கும்.....இதுல ஒன்னும் கொறச்சல் இல்ல.

என்னத்த சொல்றது?
உங்க நடிப்பு அமோகமா ஹிட் ஆகி திருட்டு சிடி கூட கிடைக்க மாடேங்குதுன்னு பேசிக்கிறாங்க( உங்க படத்த பாக்க கூட்டம் அப்படி அலைமோதுதாம்).
அதுவும் இளைய தளபதிக்கு அடுத்த வாரிசு நீங்கதான்னும் அதுல போட்டியே இல்லாம நீங்க மட்டும்தான் செலக்ட் ஆகிட்டீங்கன்னும் பேசிக்கிறாங்க பாஸ்.
இனிமேல் உங்கள சின்ன இளைய தளபதின்னு கூப்டு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்னு தீவிர ரகசிய ஆலோசனைகள் நடப்பதாக நம்பத்தகுந்த உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

பட்டாம்பூச்சி on April 24, 2009 at 6:19 PM said...

//அதுக்காக மறுபடியும் வெயிட் குறைச்சுக்கிட்டு இருக்கேன். வால்பையனா நடிக்கற வாய்ப்புக்காக காத்திட்டு இருக்கேன்.//

இதையெல்லாம் கேக்க ஆளே இல்லையா? குசும்பன் அண்ணே எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.நீங்க இங்க இல்லேன்ற தெகிரியத்துல என்னவெல்லாம் இந்த கார்க்கிப்புள்ள பேசிகிட்டு இருக்குன்னு பாருங்க :))

Mahesh on April 24, 2009 at 8:41 PM said...

ப்ளீச்சிங்பவுடர் (எ) வால்பையனை சந்திச்சது கார்க்கி (எ) பரிசலா?

விடமாட்டிங்களா அதைன்னு நீங்க கேக்கறது கேக்குது.... சும்மா டமாசுக்கு,,,:))))))))))))

pappu on April 25, 2009 at 2:22 AM said...

வழக்கம் போல நக்கல்தான். ஆமா, என்ன திடீர்னு ட்ரைனிங்? புது வேலையா?

பரிசல்காரன் on April 25, 2009 at 3:54 AM said...

ப்ளீச்சிங் பவுடர்
&

வாலு

அடங்க மாட்டீங்களா?

ஆரம்பிக்கறதெல்லாம் நீங்க.. அடி என்னவோ எங்களுக்கு விழுது.

:-))))))

பரிசல்காரன் on April 25, 2009 at 3:56 AM said...

ப்ளீச்சிங் பவுடர்
&

வாலு

அடங்க மாட்டீங்களா?

ஆரம்பிக்கறதெல்லாம் நீங்க.. அடி என்னவோ எங்களுக்கு விழுது.

:-))))))

Suresh on April 25, 2009 at 7:28 AM said...

மச்சான் என்னால தான் வர முடியவில்லை நான் திருச்சி, சேலம், மணப்பாறைனு ஒரே டிரிப்பு ...
கண்டிப்பா மீட் பண்ணுவோம்

அப்புறம் மெதட் ஆக்டிங் ;) சூப்பர்

கார்க்கி on April 25, 2009 at 8:08 AM said...

ம்ம் சொன்ன தூயா வாழ்க..

வாங்க வித்யா

டக்ளஸூம் தல ரசிகராம்ப்பா.. அதுக்காக டக்லூசுன்னு சொல்லிடாதீங்க

@தராசு,

டேங்க்சுங்க

@அப்துல்லா,

நீங்க சொல்றத யாருண்ணே கேட்கறாங்க ::))))

கார்க்கி on April 25, 2009 at 8:13 AM said...

@லோகு,

நானும் நீங்க கமெண்ட் போடலைன்னு சொல்லல.

//இதையே நான் என் கடைல எழுதி இருந்தா அய்யோ அம்மான்னு நெகட்டிவ் ஓட்டு குத்துற வாலுங்க, அங்க அடக்கி வாசிச்சாங்க. //

வழக்கமா சொல்றவங்களை தான் சொன்னேன்.

குடும்பத்தை பத்தி சொன்னதுக்கு நானும் என் கண்டனங்களை உங்க பதிவிலே பதிவு செஞ்சிருக்கேன்.

கார்க்கி என்பதால் கரிசனம் வேண்டாம்.திட்ட வேண்டும் என்றால் தொடங்குங்கள் :)))

****************

@வால்,

கனெஷை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைகிரேன் சகா :))

***********************
@ஸ்ரீமதி,

:((((

*********************
@நர்சிம்,

ம்ம்ம்ம்ம்

**********************

@தா.பி,

ஆமாம் தாரினி. ஃபோட்டோல பார்த்தீங்கல்ல?

***************************

@ப்ளீச்சிங்க,

ஹிஹிஹி..

கார்க்கி on April 25, 2009 at 8:17 AM said...

@கார்த்திக்,

எதுக்கு கார்த்திக் சிரிப்பு?

**************

@மேவீ,

ரொம்ப அறிவுங்க உங்களுக்கு. நீங்க எனக்கு பார்த்த போதுதான் ஷூட்டிங் நடந்த நேரம்.. அப்ப அபப்டித்தானே இருப்பேன்?

******************

//பட்டாம்பூச்சி said...
//எப்படி நம்ம நடிப்பு? //

ம்க்கும்.....இதுல ஒன்னும் கொறச்சல் இல்ல.
//

ரொம்ப புகழாதீங்க. கூச்சுமா இருக்கு.

*********************
@மஹேஷ்,

பரிசலா?????//// ஆவ்வ்வ்.. வேற யாராவ்து சொலுங்கண்ணே

******************

@பரிசல்,

தவறு உங்களுக்கு மாட்டும்தான் விழுந்துச்சு சகா :))

*******************

@சுரேஷ்,

இன்னொரு நாள் பார்க்கலாம் சகா

MayVee on April 25, 2009 at 9:42 AM said...

"கார்க்கி said...

@மேவீ,

ரொம்ப அறிவுங்க உங்களுக்கு. நீங்க எனக்கு பார்த்த போதுதான் ஷூட்டிங் நடந்த நேரம்.. அப்ப அபப்டித்தானே இருப்பேன்?"


நான் அறிவாளி எல்லாம் இல்லைங்க ..... அடி முட்டாளுங்க நானு

குசும்பன் on April 25, 2009 at 10:25 AM said...

//அது என்னடா அப்படி ஒரு தொப்பையான்னு நிறையப் பேரு கேட்டாங்க. அதை திட்டம் போட்டு செஞ்சிட்டாருங்க //

நல்லவேளை உள்ளே ஒரு தலயனை வைத்து எடுத்தாங்கன்னு சொல்லாம விட்டீங்களே!


//என்ன பேசினோம், எப்ப‌டி பேசினோம், கப்பன் பூங்காவை அவர்கள் தேர்ந்தெடுக்க காரணம் என்ன இன்னும் பல அடுத்த பதிவில்..ஹிஹிஹி //

இதுவேறயா?:((

கும்க்கி on April 26, 2009 at 3:49 PM said...

ஹலோ தம்பி கார்க்கி...பெங்களூர்ல எங்க எங்க போய் என்னென்ன சென்சுருக்கன்னு ஸ்பை ரிப்போர்ட்ஸ் வந்துருக்கு...ரொம்ப அதிர்ச்சியாயிட்டேன்.அதான் ப்லோக் பக்கமே வரலை.

ஷாஜி on May 7, 2009 at 5:50 PM said...

//அத மாத்த பாருங்க. என்னை பத்தி சரியா தெரியலைன்னா இங்க அடிக்கடி வர கார்த்திக்,ஷாஜி, வினோத் பொன்ற தல ரசிகர்களை கேட்டுக்கோங்க//

கார்க்கி என் பேர் போட்டு என்னைய கவுரவ படுத்தனதுக்கு மிக்க நன்றி.
எல்லோர்க்கும் சொல்றேன் கார்கி ரொம்ப நல்லவன் ! நல்லவன் !! நல்லவன் !!!

(நடிகர்களுக்காக ''நல்ல' நட்பை யாரும் இழக்காதிர்கள் )

 

all rights reserved to www.karkibava.com