Apr 8, 2009

சே குவேரா - என் தலைவன்


''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” -சே

  க்யூபாவில் தான் உங்கள் புரட்சி வென்றுவிட்டதே. பிறகு ஏன் பொலிவியாவில் போராடுகிறீர்கள் என்ற கேள்விக்கு சே இப்படி பதிலளித்தார்,

   "உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன், ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்"   ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்து ,மருத்துவப் படிப்பையும் முடித்த இளைஞன் அவன். அவனால் தன் வீடு, தன் வாழ்க்கை என்று இருக்க முடியவில்லை. நண்பன் ஒருவனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெரிக்கா முழுவதும் சுற்றி வர தொடங்குகிறான். அந்த பயணத்தின் ஆரம்பம், உலக பண முதலைகளின் அழிவுக்கான ஆரம்பம் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது. 1950ல் தொடங்கிய சேவின் பயணம்,1967 ஆம் ஆண்டு பொலிவிய ராணுவத்தால் முடிவுற்றது. இடையில் ஒரு நாள் கூட ஓய்வெடுத்ததில்லை.  இன்றும் சேவைப் பற்றி படிக்கும்போதும், படங்களைப் பார்க்கும் போதும் நட்சத்திர தொப்பி அணிந்து அவரின் உருவம் என் கண் முன்னே வந்து போகிறது. சில நொடிகள் வரும் அந்த சிலிர்ப்பு. அதில் வாழ்கிறார் சே என்கிற எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna)


எந்த நாட்டிற்கெதிராக தன் வாழ்நாள் முழுவது போராடினாரோ, அந்த நாட்டு இளைஞர்களே டீஷர்டிலும், கீ செய்னிலும் சேவின் படத்தோடு திரிகிறார்கள். எந்த வரலாற்றை மறைக்க முயன்றார்களோ அதை அந்த நாட்டிலே படமாக எடுக்கிறார்கள். சேவை வாழும்போது மட்டுமல்ல, அவன் இறந்த பிறகும் ஜெயிக்க முடியவில்லை.

காடுகளிலே பாதி வாழ்க்கை வாழ்ந்த சேவுக்கு சிறுவயதில் இருந்தே ஆஸ்த்மா நோய் இருந்தது. தனது மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது நடந்த விபத்தில் சேவின் கால் சூடான காஸ் சிலிண்டருக்கு அடியில் மாட்டிக் கொண்டது. க்யூபா போராட்டத்தின் போது அவரின் காலில் குண்டும் பாய்ந்தது. ஆனால் எதுவுமே அவரை தடுத்து நிறுத்தவில்லை. விடுதலை,புரட்சி என்று யார் சொன்னாலும் அவர் சேவை நினைத்துத்தான் சொல்லுவார் என்னுமளவுக்கு வாழ்ந்தவன் சே.

சேவைப் பற்றி திரு.மாதவராஜ் அவர்கள் எழுதிய நூலை தன் வலையிலே பதிவிட்டிருக்கிறார். அதை இங்கே சென்று படிக்கலாம்.

சேவின் பேச்சுகள், அரிதான புகைப்படங்கள், மேலும்  பல விதயங்கள் தெரிந்துக் கொள்ள இங்கே அழுத்துங்கள்.

சேவின் பிரபலமான வசனங்கள்:

“I don't care if I fall as long as someone else picks up my gun and keeps on shooting.”

“I know you are here to kill me. Shoot, coward, you are only going to kill a man.”

”Why does the guerrilla fighter fight? We must come to the inevitable conclusion that the guerrilla fighter is a social reformer, that he takes up arms responding to the angry protest of the people against their oppressors, and that he fights in order to change the social system that keeps all his unarmed brothers in ignominy and misery”

“Better to die standing, than to live on your knees.”

“I don't know if the Cuban revolution will survive or not. It's difficult to say. But [if it doesn't] . . . don't come looking for me among the refugees in the embassies. I've had that experience, and I'm not ever going to repeat it. I will go out with a machine gun in my hand, to the barricades. . . I'll keep fighting to the end.”
சேவைப் பற்றிய புத்தகங்கள்:
என்னைக் கவர்ந்த சரித்திர நாயகர் என்ற தொடர்பதிவுக்கு என்னை அழைத்த வானவில் வீதி கார்த்திக்கிற்கு நன்றி. இதைத் தொடர நான் அழைப்பது டக்ள்ஸ் அவர்களை. (உங்க தலையை பற்றி எழுதிட்டு அவரும் சரித்திர நாயகர்ன்னு சொல்லாதீங்க பாஸ். அவர்.. வேணாம். அமைதி கார்க்கி)

43 கருத்துக்குத்து:

பொன்.பாரதிராஜா on April 9, 2009 at 10:50 AM said...

ம்ம்...நன்றாக இருந்தது...
இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் கார்க்கி...


//உங்க தலையை பற்றி எழுதிட்டு அவரும் சரித்திர நாயகர்ன்னு சொல்லாதீங்க பாஸ். அவர்.. வேணாம். அமைதி கார்க்கி

திருத்தவே முடியாது கார்க்கி...

லக்கிலுக் on April 9, 2009 at 10:58 AM said...

கலக்கல் சகா. அவ்வப்போது இதுபோலவும் எழுதவும்.

அருண் on April 9, 2009 at 11:04 AM said...

Super!

மண்குதிரை on April 9, 2009 at 11:13 AM said...

ஏற்கனவே இதுபோல் எழுதுவதாக சொல்லியிருந்தீர்கள்.

வாழ்த்துக்கள் நண்பா. அப்படியே சாவோஸ், காஸ்ட்ரோ............. என்று தொடருங்கள்.

வித்யா on April 9, 2009 at 11:21 AM said...

சே வின் போராட்ட வாழ்க்கையை ஒரு தொடராக எழுது கார்க்கி. அன்னைக்கு சொன்னதே தான் இன்னிக்கும் - நல்லவேளை மனுஷன் இப்போ உயிரோட இல்லை:)

லவ்டேல் மேடி on April 9, 2009 at 11:30 AM said...

ஆஹா.... !!! அற்புதம்.......!!! அருமை.....அருமை......!!!! என் அருமை தம்பியே...... !!! என்னை முதல் முதலில் ஈர்த்த அருமையான பதிவு ...!!!! நானும் உன் சகோதரன்தான்....!!!! நானும் ஒரு " சே '' கொள்கைகளின் நலம் விரும்பி....!!!!!

நீ

" வாழ் வளமுடன்......!!!!! "

prakash on April 9, 2009 at 11:46 AM said...

சே!!!!!!!!!!!!!!!

"ச்சே" இவ்ளோ நாளா தெரிஞ்சிக்காம போயிட்டனே.....

prakash on April 9, 2009 at 11:47 AM said...

//உங்க தலையை பற்றி எழுதிட்டு அவரும் சரித்திர நாயகர்ன்னு சொல்லாதீங்க பாஸ். அவர்.. வேணாம். //

அடங்கவே மாட்டியா நீ :))

அனுஜன்யா on April 9, 2009 at 11:52 AM said...

நல்ல பதிவு. பிறிதொரு தருணத்தில் விரிவாக (தொடர்) எழுதலாம். அதற்கான விஷயமும், ஆர்வமும் உன்கிட்ட இருக்கு. நிறைய பேரையும் சென்று சேரும்.

அனுஜன்யா

affable joe on April 9, 2009 at 11:57 AM said...

அருமை கார்கி இன்னும் எழுதிர்கலாம் தொடர் பதிவாக இருக்கும் என்று எதிர்பாக்கிறேன் .THE MOTORCYCLE DIARIES படம் பார்த்து இருகிறீர்களா பாருங்கள் .

கார்க்கி on April 9, 2009 at 12:10 PM said...

@பாரதி,

அவரை பற்றி ஒரு பதிவில் எழுதி விட முடியுமா என்ன? அதனால் தான் அவரைப் பற்றிய நூல்களையும், இணையத்தளத்தையும் குறிப்பிட்டிருக்கிறேன் சகா

****************
@லக்கி,

ஊக்கத்திற்கு நன்றி தல

*****************
நன்றி அருண். அடிக்கடி காணாம போயிடறீங்க

*************
@மண்குதிரை,

எண்ணம் இருக்கிறது. நிச்சயம் எழுதுகிறேன் நன்றி

***************
@வித்யா,

ஆமாங்க. அந்த மேட்டரை காக்டெய்லில் போடலாம் என்று விட்டுவிட்டேன்

***************
நன்றி லவ்டேல்மேடி.. :))

**************
நன்றி பிரகாஷ். அடங்கியதால் தான் .... போட்டு விட்டுவிட்டேன் :))

************
@அனுஜன்யா,
ஊக்கத்திற்கு நன்றி தல. முயற்சிக்கிறேன்

**************
@ஜோ,

பார்த்திருக்கிரே சகா. இந்த வருடம் பிரேசில் நாட்டு இயக்குனர் ஒருவர் சேவின் கடைசி நாடக்ள் ரகசியத்தை மையமாக வைத்து படமெடுக்க போகிறாராம். ஆர்வத்துடன் இருக்கிறேன்.

டக்ளஸ்....... on April 9, 2009 at 12:14 PM said...

நல்லத்தான போயிக்கிட்டுருந்துச்சு...

MayVee on April 9, 2009 at 12:17 PM said...

naanum motor cycle diaries padithu irukkiren.....

arumaiyana alu avar. antha bookyai padithu irukkiren....
neenga sonna innoru bookum padithu irukkiren.....

motor cycle diaries la arumaiya oru pschologicalana mana mattrathai super ah solli iruppar.

ennai matriya book la athuyum ontru

MayVee on April 9, 2009 at 12:22 PM said...

சாகும் போது கூட கண்களை முடவில்லை அவரு....
அந்த பயணம் வேறு எதுக்கோ ஆரமித்து எங்கையோ அவரை அழைத்து சென்றது....


motorcycle டைரிஎஸ் புக் அவரை பற்றி அறிந்த பின்பு படித்தால் நல்ல இருக்கும்....

என்னை போல் உள்ளவர்கள் motorcycle diaries படம் பார்ப்பது நன்று.....
visual treat உடன் புரிந்து கொள்ளலாம்

MayVee on April 9, 2009 at 12:27 PM said...

சகா....
இன்னும் நிறைய புக்ஸ் இருக்கு அவரை பற்றி......
அவரை பற்றி நாம் பல்வேறு கோணத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.....

ஒரு மனிதனாய்...
ஒரு தலைவனாய்...
ஒரு போராளியாய்...

பிறகு இன்னும் நாம் மனவியல், மற்றும் பொருளாதாரத்தின் முலமாக நாம் அவரை புரிந்து கொள்ளலாம்

டக்ளஸ்....... on April 9, 2009 at 12:30 PM said...

ஒரு மருத்துவராக மட்டுமன்றி, மக்களின் உள்ளங்களை பிரதிபலித்து மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட அந்த "சே" எனும் மறக்கவியலா சரித்தரத்திற்கு என்னுடைய வீரவணக்கங்களும்.. அவரைப் பற்றி எழுதிய கார்க்கி அண்ணனுக்கு
வாழ்த்துக்களும் உரித்தாகுக!

MayVee on April 9, 2009 at 12:35 PM said...

"டக்ளஸ்....... said...
ஒரு மருத்துவராக மட்டுமன்றி, மக்களின் உள்ளங்களை பிரதிபலித்து மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட அந்த "சே" எனும் மறக்கவியலா சரித்தரத்திற்கு என்னுடைய வீரவணக்கங்களும்.. அவரைப் பற்றி எழுதிய கார்க்கி அண்ணனுக்கு
வாழ்த்துக்களும் உரித்தாகுக!"


அது மட்டும் இல்லை ... அவர் சிறந்த மேலாண்மையாளர் கூட

T.V.Radhakrishnan on April 9, 2009 at 12:41 PM said...

அருமை

ஆதிமூலகிருஷ்ணன் on April 9, 2009 at 12:55 PM said...

சே.. ஒரு நிஜமான புரட்சி வீரன். காலம் கடந்து நிற்பவன். வரலாற்றில் வேறெங்கும் பார்க்கமுடியாதபடி பிற தேசங்களின் விடுதலைக்காக போராடிய அரிய மனிதன். அவனைப்பற்றி தொடரோ, நீள்கட்டுரையோ எழுதத்துவங்கும் முன்னர் அதற்குரிய தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

மிகவும் ஷார்ட்டாக, கிரிஸ்ப்பாக எழுதப்பட்டதே இந்தக்கட்டுரையின் சிறப்பு. வாழ்த்துகள்.. கார்க்கி.!

'அநியாயத்தை கண்டு உன் ரத்தம் கொதிக்குமென்றால், நீ என் தோழன்' -சே.

-- இது அஜயன்பாலா விகடனில் எழுதியது. உனது துவக்க வரிகளை விட இது இன்னும் கிரிஸ்ப்பாக இருக்கிறதல்லவா?

narsim on April 9, 2009 at 1:59 PM said...

//Better to die standing, than to live on your knees.”
//

நீண்ட நேரம் யோசிக்க வைத்த/கொண்டிருக்கும் வார்த்தைகள்..

narsim on April 9, 2009 at 2:00 PM said...

//அன்னைக்கு சொன்னதே தான் இன்னிக்கும்//

என்னிக்கி என்ன?

கார்க்கி on April 9, 2009 at 2:39 PM said...

நன்றி டக்ளஸ்.. ம்ம் ஆரம்பிங்க

நன்றி மேவீ.

நன்றி TVR sir

@ஆதி,

நீ என் தோழனில் இருக்கும் கம்பீரத்தைப் பாருங்கள். அதுதான் சே. விளக்கமான பின்னூட்ட்டத்திற்கு நன்றி சகா

**************
@நர்சிம்,

ஆம் தல. முதலில் படித்த போது சாவது பைத்தியக்காரத்தனம் என்று நைனைத்தேன். ஆனால் அவரின் வரலாற்றை படித்த பின் அந்த வரிகள்..

கார்க்கி on April 9, 2009 at 4:55 PM said...

அமெரிக்க டவுசரை கிழித்தவன்னு தலைப்பு வைக்கலாம்னு நினைச்சேன். அப்புறம் இப்படி மாத்தினேன். அபப்டி போட்டிருந்தால் சூடாகி சும்மா பட்டய கிளப்பியிருக்கும்..

வடை போச்சே

தீப்பெட்டி on April 9, 2009 at 5:26 PM said...

பிரமாதமான பதிவு.
தொடரட்டும் இது போன்ற பதிவுகள்

Joe on April 9, 2009 at 5:37 PM said...

Che vive!

அமிர்தவர்ஷினி அம்மா on April 9, 2009 at 5:44 PM said...

wow

சூப்பர் கார்க்கி

லின்க் கொடுத்தமைக்கு நன்றிகள்

(இது தொடர் பதிவா, எப்பவோ உங்க பதிவில் சே வைப் பற்றி பதிவு எழுதப்போவதாக படித்த ஞாபகம், விரிவாக எழுதுவீர்களா ????)

கார்க்கி on April 9, 2009 at 6:39 PM said...

/தீப்பெட்டி said...
பிரமாதமான பதிவு.
தொடரட்டும் இது போன்ற பதிவுக//

வருகைக்கு நன்றி தீப்பெட்டி

***************
// Joe said...
Che vive!/

Che vive

நன்றி ஜோ

****************

/ அமிர்தவர்ஷினி அம்மா said...
wow

சூப்பர் கார்க்கி

லின்க் கொடுத்தமைக்கு நன்றிகள்

(இது தொடர் பதிவா, எப்பவோ உங்க பதிவில் சே வைப் பற்றி பதிவு எழுதப்போவதாக படித்த ஞாபகம், விரிவாக எழுதுவீர்களா ????//

அப்படி எழுதி வைத்த பதிவைத்தான் மாற்றி மாற்றி, இந்த தொடர் பதிவில் போட்டிருக்கிறேன். சாவேஸ் மற்றும் காஸ்ட்ரோவைப் பற்றியும் எழுத வேண்டும். :))

மணிகண்டன் on April 9, 2009 at 6:55 PM said...

அந்த புத்தகம் வாங்கி படிச்சி பாக்கறேன் கார்க்கி. அறிமுகத்துக்கு நன்றி.

***
அமெரிக்க டவுசரை கிழித்தவன்னு தலைப்பு வைக்கலாம்னு நினைச்சேன்
***

சூடாகி இருக்கலாம். ஆனா உங்க பதிவுக்கு அப்படி ஒரு அவசியம் இல்லையே ! என்னவா இருந்தாலும் மக்கள் வந்து படிக்கறாங்க.

அடுத்தது அமெரிக்கான்னு சொல்றது தப்பு. USA ன்னு தான் சொல்லணும் !

தமிழ்ப்பறவை on April 9, 2009 at 7:21 PM said...

வாழ்த்துக்கள் சகா.. கீப் இட் அப்....

Karthik on April 9, 2009 at 7:32 PM said...

maranthuteenga nnu ninaichen. :)

superb post karki. will read the book. :)

Ilan on April 9, 2009 at 7:58 PM said...

தோழர் கார்க்கி, நல்ல பதிவு, வாழ்த்துக்கள். இன்னும் சற்று விரிவாக எழுதி இருக்கலாம்.
காரணம், சே பற்றி முதன்முதலாக வாசிப்பவர்களுக்கு, அவரின் முழு நீட்சி தெரியாமல் போக இடமிருக்கிறது. எனினும், சிறந்த அறிமுகம். வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர் on April 9, 2009 at 8:41 PM said...

சந்தேகமில்லாமல் அவர் ஒரு legend கார்க்கி . பல முறை அவரைப் பற்றி படித்திருந்தும் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அந்த மனிதனின் வாழ்க்கை பற்றிய பிரமிப்பு தோன்றும்.வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்ற எண்ணம் அவரைப் பற்றிப் படிக்கும் போது எல்லோருக்கும் ஏற்படும்.அவரின் எளிமை ,பேச்சு ,நிறைந்த சபையிலும் சர்வ சாதாரணமாக டேபிளின் மேல் உட்கார்ந்து கொண்டு பேசுவது....சொல்லிக் கொண்டே போகலாம்.ஆனால் இந்த கிறுக்குப் பிடித்த ஜனங்கள் fashion என்ற பெயரில் அவருடைய உருவத்தை கண்ட மேனிக்குப் பயன்படுத்துவதை பார்க்கும் போது மிகவும் வருத்தப் பட்டிருக்கிறேன்.ஏதாவது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதற்க்கு தடை ஏற்படுத்தினால் தேவலாம்.நல்ல பதிவு.வாழ்த்துகள்.

வால்பையன் on April 9, 2009 at 8:42 PM said...

அருமையான பதிவு சகா!

புரட்சி என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரியாமல், பெயருக்கு முன்னாள் சேர்த்து கொள்ளும் நடிகர்களுக்கு இதை யாராவது எடுத்து சொன்னால் நலம்!

ரகுநந்தன் on April 9, 2009 at 9:20 PM said...

நன்றி. அவரின் போராட்ட வாழ்க்கை பற்றி அமெரிகாவைச்சேர்ந்த புகழ்பெற்ற சினிமாக்காரர் Stevan Soderberg ஒரு திரைப்படம் எடுத்திருக்கிறார். அதில் சே ஆக நடித்தவர் பெனிட்சியோ டெல் ரோரோ! இப்படம் மிக நீளமாக இருப்பதால் இரண்டு பாகங்களாக வெளியிட இருக்கிறார்கள். ஆனால் இருமாதங்களின் முன்னர் நியூயோர்க்கில் ஒரே படமாக (இடைவேளை விட்டனர்! ) திரையிட்டார்கள். நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். எப்போது திரைக்கு வரும் என சொல்ல முடியாதிருப்பதாக சொன்னார்கள். சிலவேளை வராமலும் போகலாம் என்றனர். அட்டகாசமான திரைக்கதை , படப்பிடிப்பு என எலாவற்றிலும் மேன்மையாக இருந்ததௌ. முக்கியமான காட்சிகள் சேயின் நியூயோர்க் ஐ.நா உரை மற்ற்றும் சாண்டா கிளரா சண்டைக்காட்சிகள்.

தாரணி பிரியா on April 10, 2009 at 12:02 AM said...

ஒரு வித கட்டாயத்தால் படிக்க ஆரம்பித்து ரொம்ப பிடித்து போனவர் சே. ஆனாலும் இன்னும் அவரை பற்றி நிறைய தெரியாது. ஒரளவுக்குதான் தெரியும். இதை தொடர்பதிவாக்கி மாதம் இரு முறையாவது அவரை பற்றி சொல்லுங்களேன் கார்க்கி.

Kathir on April 10, 2009 at 1:52 AM said...

அறிமுகத்திற்கு நன்றி சகா.
நேரம் கிடைக்கும் போது படிக்கனும்...

Joe on April 10, 2009 at 7:27 AM said...

நீங்க சேவை பத்தி எழுதுறதா சொல்லிட்டு ரொம்ப நாளா எழுதவேயில்லையா, சரி நாம Jon Lee Anderson எழுதிய சே-வின் சரிதையை கொஞ்சம் கொஞ்சமா மொழி பெயர்ப்பு பண்ணி போடலாம்னு நெனெச்சேன். ஐந்து வருடங்களுக்கு முன்னால வாங்கின புத்தகம் எங்கே இருக்கும்னு தேடணும்!

மாதவராஜ் எழுதிய புத்தகத்தின் ஒரு அத்தியாத்தை அவரது இணைய தளத்தில் படித்ததும், என்னாலே அந்தளவுக்கு கண்டிப்பா செய்ய முடியாது-ன்னு புரிஞ்சு போச்சு.
அது தவிர copyright விஷயங்கள் தடையாக இருக்கும் என்று தோன்றியது.

ஆனாலும் சே-வை பற்றி எழுத நிறைய விஷயங்கள் இருக்கு, நானும் சில மாதங்கள் கழித்து எழுதுவேன்.

அன்புடன் அருணா on April 10, 2009 at 8:30 AM said...

A very inspiring post Karkki.!!
anbudan aruna

அறிவிலி on April 10, 2009 at 9:03 AM said...

அருமையான கூக்ளி பந்து.

ஜி on April 10, 2009 at 9:21 AM said...

Motorcycle Dairies படம் பாத்தேன்... அதுல ஒரு காட்சி வரும்... தொழுநோயாளிகளெல்லாம் ஆத்தக் கடந்த தனி தீவுல வச்சிருப்பாங்க... மருத்தவ செவிலியர்களெல்லாம் இந்த கரைல இருப்பாங்க.. அவரோட பிறந்தநாள் வரும்... அத அந்த தொழுநோயாளிகளோட கொண்டாடனும்னு ஆத்துல நீந்தியே அந்தக் கரைக்குப் போவாரு... அவருக்கு ஆஸ்துமா வியாதி இருக்குறதையும் பொருட்படுத்தாம.... இதெல்லாம் உண்மையிலேயே நடந்துச்சுன்னு நெனச்சப்ப அப்படியே மெய்சிலிர்த்துச்சு..

அருமையான படம்... தென்னமெரிக்காவையே சுத்திக் காட்டிருப்பாய்ங்க...

கார்க்கி on April 10, 2009 at 9:40 AM said...

நன்றி மணிகண்டன். :))

நன்றி கார்த்திக். இதை மறப்பேனா?

நன்றி இளன். இப்போது படித்தால் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம். :((

நன்றி ஸ்ரீதர்.

நன்றி வால்

நன்றி ரகுநந்தன். நானும் அனத செய்தியை படித்தேன்.

நன்றி தாபி..

தவறாம படிங்க கதிர்

ஆமாம் ஜோ. இதை நான் பல பக்கங்கள் எழுதி, பின் அதற்கெல்லாம் நான் சரியா ஆளல்ல என்று முடிவு செய்து, மீண்டும் சுருக்கி பிற தளங்களுக்கு சுட்டியும், புத்தகங்க்கள் பற்றியும் சொல்லிவிடலாம் என முடிவு செய்தேன்.

நன்றி அருணா

நன்றி அறிவிலி

நன்றி ஜி. நானும் அந்த படம் பார்த்திருக்கிறேன். அதை விட அந்த புத்தகம் படித்து பாருங்கள்

குசும்பன் on April 11, 2009 at 11:33 AM said...

அருமை!

mokkamayan on December 11, 2012 at 2:56 PM said...

I like sayakuvara

saya was not death
He is leveing my heart

 

all rights reserved to www.karkibava.com