Apr 30, 2009

ஐ.டி வேலை நிலைக்க பத்து வழிகள் (கார்க்கி)
இன்ஃபோசிஸ் சமீபத்தில் பலரை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது. சரியாக பெர்ஃபார்ம் செய்யவில்லை என்று காரணம் சொன்னாலும், சிலரை வெளியேற்றியதற்கு டிசிப்லினரி ஆக்‌ஷன் என்று காரணம் சொல்லி இருக்கிறார்கள். என் நண்பன் சொன்ன தகவல் இது.


1) 50 பக்கம் பிரிண்ட் அவுட் எடுத்தார்.

2) நிறுவன வளாகத்தில் 30 கிமீ வேகத்திற்கு மேல் சென்றார்.(நடந்து இல்லைங்க, பைக்கில்)

இப்படி போகுது அந்தப் பட்டியல்.

இனிமேல் அனைத்து ஐ.டி கம்பெனிகளும் இந்த ஐடியாவை பின்பற்றும் என்பதால் வேலையைக் காப்பற்றிக் கொள்ள கீழ்கண்ட பத்து விஷயங்களை உடனே செய்ய வேண்டும்.லூசுல விட்டுடாதீங்க மக்கா. பீ கேர்ஃபுல் (நான் உங்களத்தான் சொன்னேன்)

1) ஆர்யா மாதிரி இல்லாம, ஒழுங்கா தலை முடிய கட் பண்ணி, சரியா சீவிக்கிட்டு போங்க.( அந்த் சீவி இல்ல, நெல்லைவாசிகளே)

2) நம்ம நாய் சேகர் மாதிரி கடந்த சில மாசமா, பல்லு வெலக்க மறந்து இருந்துங்கின்னா உடனே செஞ்சுடுங்க.

3) சட்டையை நம்ம நர்சிம் மாதிரி, இஸ்திரி போட்டு, கஞ்சி போட்டு, மடிப்பு கலையாம இன்சர்ட் பண்ணி டிப்டாப்பா போங்க. முடிஞ்சா காலர்ல மட்டும் வேற கலர்ல இருக்கிற சட்டை போட்டுட்டு போங்க.

4) தல அஜித் மாதிரி தொப்பையை வளர்த்துக்கிட்டு இருக்கிறவங்க மதியம் சாப்பாட்டுக்கு கூட கேண்டின் பக்கம் போயிடாதீங்க.அப்புறம் பழைய சொத்தை கம்பெனிக்கே போய் ஐ அம் பேக்ன்னு (பேக்கு இல்லைங்க, back) சொல்ல வேண்டியதுதான்

5) மின்னலே அப்பாஸ் மாதிரி எப்பவும் உங்கள சுத்தி நாலு பொண்ணுங்க இருக்குமா? உடனே ஏதாவது செய்து அவங்கள விரட்டி விடுங்க. என்ன செய்றதுன்னு தெரியலன்னா உடனே என் ஃபேவரிட் ஹீரோ ராமராஜன்னு சொல்லிடுங்க. முடிஞ்சா ரெண்டு நாளு ஆஃபிஸ்க்கு லிப்ஸ்டிக்க போட்டுட்டு போங்க

6) சூர்யா மாதிரி கிட்டார் எல்லாம் வாசிக்க தெரியும்ன்னு கம்பெனி கல்ட்ச்சுரல்ஸ், பாடும் ஆஃபிஸ்ன்னு கிளம்பிடாதீங்க. அப்புறம் வயித்து பொழப்புக்கு இன்னிசைக் குழுவுலத்தான் வாசிக்கனும்

7) யாவரும் நலம் மாதவன மனசுல நினைச்சுக்கிட்டு செகண்ட் ஃப்ளோர் வரைக்கும் நடந்தே போங்க. ஏன்னு மேனேஜர் கேட்டா, பவர் சேவிங்ன்னு சொல்லுங்க. அதுக்குன்னு அவர் கூட போகும் போது சேவ் பண்ணிடாதீங்க. அப்புறம் ஷேவ் பண்ணாம அலைய வேண்டியதிருக்கும்

8) விக்ரமன் படத்துல ஒரு பாட்டு வருமே!! அது மாதிரி தொடர்ந்து பல வேலைகள் செஞ்சீங்கன்னா பொழைச்சுக்கலாம்.ஃப்ரீ டைம்ல ஒன் சைடு பேப்பர சேகரிச்சு புக் செய்றது, ஏசி அதிகமா இருக்கு, கொஞ்ச நேரம் ஆஃப் செய்யலாம்னு ஃபெசிலிட்டிஸ்ல போய் சொல்றதுன்னு ஏதாவது புதுசா யோசிச்சு செய்ங்க

9) பீமா விக்ரம் மாதிரி உடம்ப முறுக்கிட்டு அலையாதீங்க. வேலை அதிகம்ன்றதால் ஜிம்முக்கு போகலன்னு சொல்லி வைங்க மேனேஜர்கிட்ட. முடிஞ்சா சேதுல விக்ரம் எப்படி இருக்கிறார்ன்னு ஒரு தடவ பாருங்க.

10) இது ரொம்ப முக்கியமானது. இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு http://www.karkibava.com/, http://www.iamkarki.blogpsot.com/ படிக்கிறது, இல்லைன்னா 97898 87048 நம்பருக்கு கால் பண்ணி பேசறது, iamkarki@gmail.com இமெய்ல் அனுப்புறது. கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் மூட்டை கட்டி வைங்க. இல்லைன்னா உங்கள மூட்டை கட்டி அனுப்பிடுவாங்க. நல்லத செஞ்சா யாருக்கு பிடிக்குது? அதனால் மனச தேத்திக்கிட்டு இதை செய்ங்க.

43 கருத்துக்குத்து:

விஜய் on April 30, 2009 at 12:22 PM said...

Excellent one........

This is my last vote and comment from this computer/place.


Bye
Take care

விஜய் on April 30, 2009 at 12:23 PM said...

WISH YOU A SUCCESSFULL BLOGGER TITLE

கடைக்குட்டி on April 30, 2009 at 12:38 PM said...

ஹா ஹா.. நல்லா இருக்குங்க... :-)
என்னமாதிரி இன்னும் வேல கெடக்காத freshers என்ன பண்ணானும்னு சொல்லுங்க தல .. (ஓஹ்.. தலன்னா புடிக்காதுல்ல..) செரி.. சொல்லுங்க தளபதி

Karthik on April 30, 2009 at 12:39 PM said...

//இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு http://www.karkibava.com/, http://www.iamkarki.blogpsot.com/ படிக்கிறது, இல்லைன்னா 97898 87048 நம்பருக்கு கால் பண்ணி பேசறது, iamkarki@gmail.com இமெய்ல் அனுப்புறது. கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் மூட்டை கட்டி வைங்க.

நான் பிஸியா இருக்கேன்றத சொல்றதுக்கு இப்படி ஒரு பிட்டா? நடத்துங்க.. நடத்துங்க..!

MayVee on April 30, 2009 at 12:43 PM said...

இதுக்கு தான் நான் அப்பவே என் அப்பா கிட்ட சொன்னேன் ...... படிக்க மாட்டேன் என்று ....
பாருங்க இப்ப ....
படித்தினால் லே ஆப் போன்றவற்றுக்கு எல்லாம் பயப்பட வேண்டி இருக்கு .....
இதற்க்கு சிறந்த வழி....
யாரும் படிக்காதிங்க ....
வேலைக்கு போகதிங்க ....
லே ஆப் க்கு பயப்பட தேவை இல்லை ......
எப்படி நாம யோசனை......

MayVee on April 30, 2009 at 12:45 PM said...

சீரியஸ் சொல்லவேண்டுமானால் ......
உங்க competitive advantage யை ஜாஸ்தி ஆகிகோங்க ....
அதான் ஒரே வழி

தராசு on April 30, 2009 at 1:19 PM said...

மறுபடியும் பத்து வியாதி ஆரம்பிச்சுடுச்சா, முடியலடா சாமி. எல்லாம் பரிசல் அண்ணனை சொல்லணும், பத்து பத்தா தொத்து வியாதி கொண்டு வந்தவர் அவுருதான்.

வித்யா on April 30, 2009 at 1:20 PM said...

ஆபிஸ் நேரத்துல வேலை பார்க்காம மொக்கை போடுவதை நிறுத்தவும்.

அட நானும் யோசனையாதான் சொன்னேன்:)

தராசு on April 30, 2009 at 1:23 PM said...

//தல அஜித் மாதிரி தொப்பையை வளர்த்துக்கிட்டு இருக்கிறவங்க மதியம் சாப்பாட்டுக்கு கூட கேண்டின் பக்கம் போயிடாதீங்க.அப்புறம் பழைய சொத்தை கம்பெனிக்கே போய் ஐ அம் பேக்ன்னு (பேக்கு இல்லைங்க, back) சொல்ல வேண்டியதுதான்//

இதை, இதை நீங்க சொல்றீங்க.

முதல்ல கொஞ்சம் கீழ குனிஞ்சு உங்க கால் விரலை எல்லாம் பார்க்க முயற்சி பண்ணுங்க. விரலை பார்த்து எத்தனை நாளாச்சுண்ணு சொல்லுங்க.

Bleachingpowder on April 30, 2009 at 1:31 PM said...

//இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு http://www.karkibava.com/, http://www.iamkarki.blogpsot.com/ படிக்கிறது, இல்லைன்னா 97898 87048 நம்பருக்கு கால் பண்ணி பேசறது, iamkarki@gmail.com இமெய்ல் அனுப்புறது. கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் மூட்டை கட்டி வைங்க.//

:(( நிஜமா தல, இப்பெல்லாம் ஆபிஸ்ல பிளாக் படிச்சா ஒரு மாதிரி தான் பாக்குறாங்க. நானும் இனி ஆணி புடுங்குற இடத்துல தமிழ்மணத்தை திறக்க கூடாதுனு முடிவு பண்ணியிருக்கிறேன்

SK on April 30, 2009 at 1:32 PM said...

சகா

நீங்க போன்ல வேற யாருடனோ நெடு நேரம் பேசனும்னு இங்கே இப்படி ஒரு பிட்டா :)

narsim on April 30, 2009 at 1:33 PM said...

வணக்கம் சகா...

விக்னேஷ்வரி on April 30, 2009 at 1:42 PM said...

முடிஞ்சா ரெண்டு நாளு ஆஃபிஸ்க்கு லிப்ஸ்டிக்க போட்டுட்டு போங்க ///

ஹிஹிஹி..... இது கொஞ்சம் டூ மச்.

யாவரும் நலம் மாதவன மனசுல நினைச்சுக்கிட்டு செகண்ட் ஃப்ளோர் வரைக்கும் நடந்தே போங்க. ஏன்னு மேனேஜர் கேட்டா, பவர் சேவிங்ன்னு சொல்லுங்க. அதுக்குன்னு அவர் கூட போகும் போது சேவ் பண்ணிடாதீங்க. அப்புறம் ஷேவ் பண்ணாம அலைய வேண்டியதிருக்கும் ////

:D :D

இது ரொம்ப முக்கியமானது. இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு http://www.karkibava.com/, http://www.iamkarki.blogpsot.com/ படிக்கிறது, இல்லைன்னா 97898 87048 நம்பருக்கு கால் பண்ணி பேசறது, iamkarki@gmail.com இமெய்ல் அனுப்புறது. கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் மூட்டை கட்டி வைங்க. இல்லைன்னா உங்கள மூட்டை கட்டி அனுப்பிடுவாங்க. நல்லத செஞ்சா யாருக்கு பிடிக்குது? அதனால் மனச தேத்திக்கிட்டு இதை செய்ங்க //

இது டாப் ஐடியா. ;)

Jenbond on April 30, 2009 at 2:23 PM said...

இப்பதான் தெரியுது உங்க சிவப்பான உதட்டின் காரணம்.

வால்பையன் on April 30, 2009 at 2:33 PM said...

//என் ஃபேவரிட் ஹீரோ ராமராஜன்னு சொல்லிடுங்க. முடிஞ்சா ரெண்டு நாளு ஆஃபிஸ்க்கு லிப்ஸ்டிக்க போட்டுட்டு போங்க//

இவ்வளவு பண்ணியும் உங்களை சுற்றி பொண்ணுங்க இருக்குதே ச்கா!

சென்னை மெரினா சந்திப்பு ஒரு உதாரணம்!

Anonymous said...

நீங்க ஏதோ படத்தில நடிச்சு முதலமைச்சரா ஆகறதா யார் பதிவுலயோ பாத்தனே

கயல்விழி நடனம் on April 30, 2009 at 3:01 PM said...

அட...இப்போ தான் Lunchல Infi Layoff பத்தி பெசிட்டு இருந்தோம்...U TOOO...

இதையும் செத்துகோங்க...
அரை மணிக்குஒருமுறை Pantry ல டீ குடிக்கிறேன்னு சொல்லி மொக்கை போடுறது...பக்கத்து Seat Figurue க்கு பிடிக்கும்ன்னு சொல்லி உங்க Machineல பாட்டு போடுறது...முக்கியமா வேல நெரத்துல இப்படி பதிவு போடுறது..(பதிவுக்கு பதில் சொல்லுறது...) இதெல்லாம் கூட விட்டுடுங்க...
:P

விஜய் ஆனந்த் on April 30, 2009 at 3:05 PM said...

:-)))...

:-(((...

பரிசல்காரன் on April 30, 2009 at 3:35 PM said...

என்ன மொத கொமெண்ட் அதும் விஜய்ட்டேர்ந்து இப்படி??

அவ்வ்வ்வ்வ்

தீப்பெட்டி on April 30, 2009 at 4:51 PM said...

அது சரி..........

designspot on April 30, 2009 at 6:03 PM said...

//என் ஃபேவரிட் ஹீரோ ராமராஜன்னு சொல்லிடுங்க. முடிஞ்சா ரெண்டு நாளு ஆஃபிஸ்க்கு லிப்ஸ்டிக்க போட்டுட்டு போங்க//

ரூம் போட்டு யோசிச்சிங்களோ

Senthil on April 30, 2009 at 6:13 PM said...

ha ha ha ha

sayrabala on April 30, 2009 at 7:02 PM said...

ramarajan unakku avlo elakaarama poitaara

koiyaala

vanmaiyaa kandikiren

லவ்டேல் மேடி on April 30, 2009 at 7:41 PM said...

நல்ல வேல .... நா ஐ.டி கம்பெனியில வேல செய்யுல......மீ கிரேட் எஸ்கேப்புங்கோவ் ......!!!!!

Chill-Peer on April 30, 2009 at 7:53 PM said...

//லவ்டேல் மேடி said...
நல்ல வேல .... நா ஐ.டி கம்பெனியில வேல செய்யுல......

மீ கிரேட் எஸ்கேப்புங்கோவ் ......!!!!!//

Me tooooo.....

அன்புடன் அருணா on April 30, 2009 at 8:02 PM said...

//என் ஃபேவரிட் ஹீரோ ராமராஜன்னு சொல்லிடுங்க. முடிஞ்சா ரெண்டு நாளு ஆஃபிஸ்க்கு லிப்ஸ்டிக்க போட்டுட்டு போங்க//

hahahahahaha....I just cldn't control....LOL....kaarkki..I just enjoyed ur sense of humour...
anbudan aruna

தமிழ்ப்பறவை on April 30, 2009 at 8:05 PM said...

தல...
நீங்க சொன்னது எல்லாக் கம்பெனி ஆளுங்களுக்கும் பொருந்தும்...
4 மற்றும் 6 வது பாயிண்ட்டுகளைப் படிக்கிறப்போ எனக்குக் குறும்(பு)படம் நினைவுக்கு வந்துதொலைக்குது..

தமிழ் விரும்பி on April 30, 2009 at 8:06 PM said...
This comment has been removed by the author.
தமிழ் விரும்பி on April 30, 2009 at 8:08 PM said...

"ஐ.டி வேலை நிலைக்க பத்து வழிகள் (கார்க்கி)"

10) இது ரொம்ப முக்கியமானது. இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு http://www.karkibava.com/, http://www.iamkarki.blogpsot.com/ படிக்கிறது, இல்லைன்னா 97898 87048 நம்பருக்கு கால் பண்ணி பேசறது, iamkarki@gmail.com இமெய்ல் அனுப்புறது. கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் மூட்டை கட்டி வைங்க. இல்லைன்னா உங்கள மூட்டை கட்டி அனுப்பிடுவாங்க. நல்லத செஞ்சா யாருக்கு பிடிக்குது? அதனால் மனச தேத்திக்கிட்டு இதை செய்ங்க.

சகா ஐ.டி வேலை வேண்டாம் சகா..
இது போதும்...

Chill-Peer on April 30, 2009 at 8:10 PM said...

//தமிழ்ப்பறவை on April 30, 2009 8:05 PM said...
தல...
நீங்க சொன்னது எல்லாக் கம்பெனி ஆளுங்களுக்கும் பொருந்தும்...//

ஐயோ... முன்னிட்ட பின்னூட்டம் ரீகால்....

ச்சின்னப் பையன் on April 30, 2009 at 8:36 PM said...

வாய்ப்பே இல்லாமே அட்டகாசமா இருக்கு....

அத்திரி on April 30, 2009 at 8:49 PM said...

சகா இதையெல்லாம் நீயும் செய்றியா?

அறிவிலி on April 30, 2009 at 9:12 PM said...

:-))))))

ஆதிமூலகிருஷ்ணன் on April 30, 2009 at 10:15 PM said...

செமத்தியான பதிவு.. அப்படியே முதலில் துவங்கிய பட்டியலையும் இன்னும் நீட்டியிருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும்.

10 MBக்கு மேல பிரவுஸ் பண்ணினதால சமீபத்துல ஒரு விக்கெட் காலி.

ஆதிமூலகிருஷ்ணன் on April 30, 2009 at 10:16 PM said...

முந்தைய பின்னூட்டத்தில் நகைப்புக்காக சொல்லவில்லை.. சோக ஸ்மைலி போட தவறிட்டேன்..

:-(((

Kathir on April 30, 2009 at 10:20 PM said...

//50 பக்கம் பிரிண்ட் அவுட் எடுத்தார்.//

ஏதாவது ஏடாகூடமா எடுத்து இருப்பார்.....

//நிறுவன வளாகத்தில் 30 கிமீ வேகத்திற்கு மேல் சென்றார்.(நடந்து இல்லைங்க, பைக்கில்//

ஆபிஸ்க்கு உள்ளா?????

Kathir on April 30, 2009 at 10:23 PM said...

இவிங்க இப்படித்தான் ஏதாவது செஞ்சுகிட்டு இருப்பாங்க......
இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா......

விடுங்க பாஸ்.....

Suresh on April 30, 2009 at 11:48 PM said...

நீ சொன்னத கேட்குற மச்சான், அப்புறம் ஆள காணோம் என்று தேடாதே ( உன்னை எவன் டா தேடினான் :-) )

அக்னி பார்வை on May 1, 2009 at 12:58 AM said...

a hot intellectual excellent creative comic post..

a got a big smile like this

" "
<----------------------->

கார்க்கி on May 1, 2009 at 8:26 AM said...

அட.. என்ன்னங்க 1500 ஹிட்ஸ் வந்திருக்கு.. ஆனா தமிழ்மணத்துல சூடாகல..

என்ன தவறு? யார் செய்த தாமதம்?


நேற்று முழுவதும் நெட் பயன்படுத்த முடியவில்லை. எனவே பின்னூட்டமிட்ட அனைவருக்கும் ஒரு பெரிய்ய்ய்ய நன்றி சொல்லிக் கொள்கிறென்

Sameer N on May 1, 2009 at 12:43 PM said...

Nicely said Karki.

பட்டாம்பூச்சி on May 4, 2009 at 2:18 PM said...

டாப் ஐடியா :)

Muruganantham Durairaj on May 11, 2009 at 10:34 PM said...

>>>..ஃபேவரிட் ஹீரோ ராமராஜன்னு சொல்லிடுங்க. முடிஞ்சா ரெண்டு நாளு ஆஃபிஸ்க்கு லிப்ஸ்டிக்க போட்டுட்டு போங்க


Excellent :-)

 

all rights reserved to www.karkibava.com