Apr 23, 2009

வலையுலக இளவரசிகள்நேற்று போட்ட பதிவை படிச்சிங்களா?

இந்தக் கேள்விகளை கேட்டவங்க ரசனைக்காரி. எல்லா பதிலிலும் அவங்க யாருன்னு ஒரு க்ளூ இருக்கு பாருங்க.

1.மொக்கை,கவிதை (மொக்கை கவிதை இல்ல), சிறுகதை இப்படி தமிழ் வளர ரொம்ப பாடுபட்டிருக்கீங்க... இருந்தாலும், பின் நவீனம் பக்கம் மட்டும் தலை (அஜித் இல்ல) காட்டாதது ஏனோ??

அதுக்கு காரனமும் தமிழ் வளர வேண்டுமென்பதுதான். :)))) (என்ன ஒரு கொலைவெறி உனக்கு. நல்லாயிரு)

2.செடில உதிர்ந்த பூ மறுபடியும் செடியோட ஒட்டிக்காதுன்னு எல்லாருக்கும் தெரியும்.... இருந்தும் நீங்களும் உங்க தங்க தளபதியும் அதையே திரும்ப திரும்ப சொல்ல காரணம் என்ன??

எத்தனை முறை சொன்னாலும் அது ஓட்டாதுன்னு புரிய வைக்கத்தான் :)))

3.புதிய காதல் எப்படி இருக்கு??

ம்ம். நாடு விட்டு நாடு காதலிக்கறேன். என்ன ஆக போகுதோ? அவளுக்கு வேற மார்ஷன் ஆர்ட்ஸ், கம்பு சுத்துறதுன்னு பல விஷயம் தெரியுமாம். கொஞ்சம் பத்திரமாத்தான் இருக்கனும். மச்சானுங்க வேற அதிகம்ன்னு கேள்விப்பட்டேன். எவ்ளோ எதிர்ப்பு வந்தாலும் அவளுக்காக சமாளிக்கலாம். ஏன்னா அவ ரொம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்லவ. :)))

4.கலையுலகத்துக்கு போன பிறகு எழுத்துலகத்த மறந்துடுவீங்களா??

ச்சே..ச்சே..உலகத்தே விட்டே போனாலும் எழுத்துலகத்த மறக்க மாட்டேன். மைண்ட்ல வச்சிப்பேன். :))))

5.நீங்க நடிக்க வரத பத்தி உங்க தலைவர் அகிலாண்ட நாயகன் என்ன சொன்னார்?? அவர சந்திச்சு ஆசீர்வாதம் வாங்கினீங்களா?? அவருக்கு போட்டியா நீங்க??

அவர் முன்னாடி நாம நின்னா, அவருதான் நம்மகிட்ட ஆசீர்வாதம் வாங்குர மாதிரி இருப்பாரு. அவரு கூட எல்லாம் போட்டி போட முடியுமா? என் டார்கெட் அல்டிமேட் ஸ்டார் தான். தொப்பைய பார்த்தீங்க இல்ல? :)))

**********************************

இந்தக் கேள்விகளை கேட்டவங்க ஒரு பின்னூட்ட பினாமி, ச்சே சுனாமி. கும்மியில் கை தேர்ந்தவர்.

1) பெண்களை பற்றி உங்களின் கருத்து என்ன ?
ஆண்களைப் போல அவர்களும் பாவப்பட்ட பிறவிகள். அவ்வளவுதான்.


2) உங்கள் வாழ்வில் எதை மறக்க நினைக்கிறீர்கள்? எதை மறக்க கூடாது என்று நினைக்கிறீர்கள் ?
நிறைய இருக்கு. கல்லூரி காலத்தில் செய்த சேட்டைகளை நினைத்தால் கொஞ்சம் வருத்தமா இருக்கும். அதையெல்லாம் மறக்கனும்னு நினைக்கிறேன். மறக்க கூடாதுன்னா நான் யார் யாருக்கெல்லாம் கடன் கொடுத்து இருக்கேன்னு.


3) நீங்கள் ஒரு பொண்ண லவ் பண்றீங்க ஆனா அந்த பொண்ணு உங்களுக்கு புடிச்ச மாதிரி நீங்க நினைக்கிற மாதிரி இல்ல .இந்த டைம்ல உங்க தோழி உங்களுக்கு உங்களுக்கு லவ் ப்ரொபோஸ் பண்றாங்க உங்களுக்கு உங்க தோழியும் புடிச்சி இருக்கு உங்க லவர்ரயும் விட மனசு வரல இந்த டைம்ல நீங்க என்ன பன்னுவிங்க ?

உண்மைய சொல்லனும்ன்னா எனக்கு இப்படி நடக்க வாய்ப்பே இல்லை. அதனால் உணர்வு பூர்வமா பதில் சொல்ல முடியல. யோசிச்சுப் பார்த்தா, அந்த தோழி நான் லவ் பண்றேன்னு தெரிஞ்சே ப்ரபோஸ் பண்றாங்கில்ல? அதனால் பிற்காலத்தில் எனக்கு பிடிக்காம போக வாய்ப்புண்டு. அதனால

வேற ஒரு பொண்ண தேடுவேன். எப்படி?????????

4) உங்களின் லட்சியம் என்ன ?
ஏற்கனவே சொன்னேனே. லட்சியம் எதுவுமில்லால வாழனும். அதான் என் ஒரே லட்சியம்.

5) உங்களின் முதல் காதலின் அனுபவம் எப்படி அவங்க பெயர் என்ன ?
ஹிஹி. யூ.கே.ஜில நடந்தது எல்லாம் ஞாபகத்துல இல்லைங்க.

*****************************
பயப்படாதீங்க. இன்றோடு முடிந்தது. கேள்விகள் கேட்ட அந்த நால்வருக்கும், பதில்களை படித்த அந்த நாலாயிரம் (சரி சரி) பேருக்கும் நன்றி. இந்த தொடர்பதிவின் விதிமுறைகள் சரிவர பின்பற்றபடாததால் யாரையும் அழைக்க நான் விரும்பவில்லை. தொடர விரும்புவர்கள் கேள்விகளுக்கு என்னை அனுகலாம்.


30 கருத்துக்குத்து:

gayathri on April 23, 2009 at 9:16 AM said...

mmmmmmmmmmmmmmmmmmmmm sollrathuku onnum illapa

Cable Sankar on April 23, 2009 at 10:00 AM said...

//ஹிஹி. யூ.கே.ஜில நடந்தது எல்லாம் ஞாபகத்துல இல்லைங்க.
//

:):)

தராசு on April 23, 2009 at 10:55 AM said...

ரைட்டு

தமிழ் விரும்பி on April 23, 2009 at 11:04 AM said...

//ஹிஹி. யூ.கே.ஜில நடந்தது எல்லாம் ஞாபகத்துல இல்லைங்க.
//

ஆனா அழுதது நியாபகம் இருக்குல்ல!!

but sorry to remind it, karki..

அந்த வலி தான் இன்னைக்கு
உங்கள எங்க முன்னாடி நிக்க வச்சுருக்கு!!

there is nothing to face,
just cross it..

"நம்ம ஜெயிக்கணும்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம்
தொக்கரத பத்தி நினைக்க கூடாது!!"

பஞ்ச் அப்படி இருக்கு..

நல்ல இருப்போம்
நல்ல இருப்போம்
நல்ல இருப்போம்
எல்லாரும்
நல்ல இருப்போம்

narsim on April 23, 2009 at 11:13 AM said...

//கண்ணுங்களா பேசனும்ன்னா 09989322884, கலாய்க்கனும்ன்னா iamkarki@gmail.com //

வேல பாக்குது போலேயே சகா..

VIKNESHWARAN on April 23, 2009 at 11:28 AM said...

:))

டக்ளஸ்....... on April 23, 2009 at 11:36 AM said...

\\@கும்க்கி,

இந்த மதுரைக்காரு அருவா இல்லைங்க, அறுவை பார்ட்டி ::)\\


யேய்..கார்க்கி அண்ணனுக்கு ஒரு 100000000000000000000 அருவா பார்சல் பண்ணுங்கப்பா..

டக்ளஸ்....... on April 23, 2009 at 11:45 AM said...

எங்க போயிட்டீங்க கும்க்கி அண்ணே..
வாங்க ..வந்து தோள் குடுங்க..!

கார்க்கி on April 23, 2009 at 11:48 AM said...

நன்றி காயத்ரி.

**************

வாங்க சங்கர். :)))

**************
லெஃப்ட்டு..
**************

@தமிழ்விரும்பி,

நல்லா இருப்போம் சகா

*****************

@நர்சிம்,

ஹிஹிஹி. இது அதுக்கு முன்னாடியே கிளப்பிய பயணம் தல

*****************
நன்றி விக்கி

****************

@டகளஸ்,

நான் அவ்ளோ வொர்த் இல்லப்பா.. ஒரு அருவா போதும்


**************

MayVee on April 23, 2009 at 11:50 AM said...

ithu nalla irukke ....
yaarunga athu

திருச்சிகாரன் on April 23, 2009 at 11:52 AM said...

naan puthusu...
yaarnnu kandu pidikka mudiyala

மண்குதிரை on April 23, 2009 at 12:17 PM said...

rasiththeen nanbaa

கார்க்கி on April 23, 2009 at 12:55 PM said...

நன்றி மேவீ

நன்றி திருச்சிக்கரான்

நன்றி மண்குதிரை

எம்.எம்.அப்துல்லா on April 23, 2009 at 1:15 PM said...

:)

வால்பையன் on April 23, 2009 at 1:22 PM said...

மொக்கை மன்னன்ற பட்டத்தை யாருக்கும் விட்டு தர மாட்டிங்கன்னு நம்புறேன்.

டக்ளஸ்....... on April 23, 2009 at 1:48 PM said...

\\நான் அவ்ளோ வொர்த் இல்லப்பா.. ஒரு அருவா போதும்\\
ஒரு அருவாவா?
நீங்க போடுற மொக்கை கொஞ்சமா? நஞ்சமா?
அதுக்கு ஒரு அருவா பத்தாதுண்ணே...!
அதுக்குத்தான் அவ்ளோ அருவா பாசு..!

SK on April 23, 2009 at 2:47 PM said...

நல்ல இருங்க அப்பு :)

Karthik on April 23, 2009 at 2:59 PM said...

what is this???

தீப்பெட்டி on April 23, 2009 at 5:30 PM said...

அப்போ இது அதே தானா.....
சொல்லவே இல்ல.... ;-))

கார்க்கி on April 23, 2009 at 6:59 PM said...

சிரிப்புக்கு நன்றி அப்துல்லா அண்ணே

அது யாருக்கும் கிடையாது வால் :))

எஸ்.கே என்ன ஆச்சு?

என்ன சொல்றீங்க கார்த்திக்? எனக்கு கொங்கனி பாஷை தெரியாது..:)


அதான் சொல்லிட்டோமில்ல‌ தீப்பெட்டி

தாரணி பிரியா on April 23, 2009 at 10:08 PM said...

:)))))))))))))))) shree style correcta irukka :)))))))))

ஆதிமூலகிருஷ்ணன் on April 23, 2009 at 10:23 PM said...

கடை கல்லா கட்டல போலிருக்கே.!

Anonymous said...

யாருங்க அந்த பின்னூட்ட சுனாமி?

Peer on April 24, 2009 at 5:04 AM said...

216 சம்பாதிச்சதுல. சாளரத்த இப்பதாங்க எட்டி பார்க்கிறேன். உள்ள நிறைய மொக்க இருக்கும் போல? சாவகாசமா நாளைக்கு வருகிறேன் சகா...

கார்க்கி on April 24, 2009 at 12:31 PM said...

aamaam thaaini

adhi, konjcam dull thaan. nethu leave aache..

thanks maha

welcome peer..

பட்டாம்பூச்சி on April 24, 2009 at 5:43 PM said...

ரைட்டு :)

கயல்விழி நடனம் on April 25, 2009 at 12:45 PM said...

Konjam Over ah theriyalaya???
sari vidunga...pothu vazhkkaila ithellam sakajam thaane...
( puthu varavu... :D )

Anonymous said...

நான் 5 கேள்வியெல்லாம் கேட்கப் போறது இல்ல. ஒரே ஒரு கேள்வி தான்.

கார்க்கி
நீங்க நல்லவரா? கெட்டவரா?

கும்க்கி on April 26, 2009 at 6:29 PM said...

ஹலோஓஓஓஒ
கார்க்கியா..
ஏம்ப்பா உனக்கு நிசமாலுமே இன்னும் கல்யாணமாகலையா..?
இன்னும் எத்தன நாளைக்கு இப்படி சொல்லி கும்மியடிக்கப்போற...?

சுரேகா.. on April 28, 2009 at 1:43 PM said...

:)

:))

:)))

:))))

இது படிக்கட்டு ஸ்மைலி! :)

 

all rights reserved to www.karkibava.com