Apr 22, 2009

வலையுலக ராணிகளின் கேள்விகளும் எனது பதில்களும்


கடந்த சில மாதங்களாகவே வலையுலகில் ராணிக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பலரும் பல தளங்களில் பின்னி பெடலெடுக்கிறார்கள். கவிதை, கதை, புகைப்படம், சமையல், மொக்கை, கும்மி என எல்லா தமிழ்மண‌ பிரிவுக்கும் ஒரு ரெப்ரெசென்ட்டேடிவ் இருக்காங்க.

இப்ப மேட்டர் என்னென்னா,ஆதி ஒரு தொடர்பதிவுக்கு அழைத்தார். அதன் எல்லா நிபந்தனைகளும் யாருக்குமே சரியா தெரியவில்லை. கேள்விக்கு பதில் சொல்லனும். அது மட்டும் புரிஞ்சுது. இப்ப நான் என்ன செய்யப் போறேனா, நம்ம வலையுலகில் கொடி கட்டும் பறக்கும் சில ராணிக்கள் என்னிடம் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் சொல்லப் போகிறேன். கேள்வி கேட்டவர்களை யூகித்து சொல்லுங்கள்.

இவர் ஒரு நல்ல சாப்பாட்டு பிரியர். கொள்கையே இல்லாத கொ.ப.செ. இதுக்கு மேல க்ளூ வேணும்ன்னா பேரைத்தான் சொல்லனும்.

1. ஒருவேளை இப்போ உங்கம்மா உனக்காக பார்க்கும் பெண் உன் முன்னால் காதலியாய் இருந்தால்?
கேள்வியிலே தப்பு இருக்கு. முன்னால் தானே அவங்க இருப்பாங்க? நீங்க கேட்க வந்தது முன்னாள் காதலின்னு நினைக்கிறேன். அதுவும் மொட்டையாக் கேட்டா எப்படி? எந்த காதலிய சொல்றீங்கன்னு தெரியல. ஹிஹிஹி. ஆனா உண்மை என்னன்னா அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு. பேரு கார்க்கியில்ல.

2. காதல் தோல்வியைத் தவிர உன்னை வாழ்க்கையில் வெறுப்படைய வைத்த சம்பவம்?

அதுக்க‌ப்புற‌ம் நான் வாழ்க்கையே வெறுத்து விட்ட‌தால்,எதுவும் என்னை பெரிதாய் பாதிக்க‌வில்லை.:)))). நிஜ‌மா வேறு எதுவும் அப்ப‌டி தோனலைங்க‌.

3. விஜய் ரசிகனாக நீ கொடுத்த/கொடுக்கும் விலை?

நிறைய இருக்கு. ஆனா எப்படி சொல்றதுனு தெரியல. பல பேரு நான் ஏதோ தெய்வ குத்தம் செய்வதுப் போல அட்வைஸ் பண்றாங்க. அவங்க மத்த விஷயத்துல என் நலம் விரும்பிகள் என்பதால் அமைதியா கேட்டுக்கிறேன். பிறருக்காக என் விருப்பங்களை மாற்றிக் கொள்ளவோ மறைக்கவோ நான் விரும்பவில்லை.

4. ஒரு விஷயம்/செயலை பண்ணனும்ன்னு ஆசை. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது. அப்படி ஏதாவது ஒரு மேட்டர்?
சொன்னா நம்பமாட்டீங்க. கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நினைக்கிறேன். :)). வேற எதுவும் இதுவரைக்கும் இல்லை. ஏன்னா நான் நினைக்கிறத ரகசியமாவாது செய்து பார்க்கலைன்னா எனக்கு தூக்கம் வராது.

5. பிளாக் எழுத வந்திருக்காவிட்டால்?
வேலைய‌ ஒழுங்கா செய்திருப்பேன். ஆனா ரெண்டே மாச‌த்துல‌ ஹைதைல‌ இருந்து வேலை ரிசைன் ப‌ண்ணிட்டு ஓடியிருப்பேன்.

*******************************

இவரின் கேளிவிகளை படித்தாலே கண்டுபிடிச்சிடலாம். ரொம்ப நல்ல்ல்லவங்க.


1. உங்களுக்கும் ஒஸ்திரேலியாவில் இருக்கும் டான்யா என்ற Greek நாட்டு மங்கைக்கும் அப்படி என்ன சிநேகிதம்?

இன்னொரு சினேகிதி மூலம் பழக்கமானவர். எனது புகைப்படத்தை பார்த்து என்னிடம் பேசத் தொடங்கினார். தமிழ் படிக்க தெரியாவிட்டாலும் எங்கள் பொதுவான அந்த நண்பி மூலம் விஷயத்தை தெரிந்துக் கொள்வார். கூடிய சீக்கிரம் அவர் இங்கேயோ, அல்லது நான் ஆஸ்திரேலியாவிற்கோ செல்லக்கூடும்.

2. சகா, உங்களுக்கு எப்போது சகி வருவார்?
டான்யாவிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

3. உங்கள் பதிவுகளுக்கு மட்டும் நர்சிம் உடனே மறுமொழி இடும் மாயம் என்ன? இங்கு ஏதும் கொடுக்கல்வாங்கல் உள்ளதா?

ஹிஹிஹி. அன்பைத்தான் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்( நோ நோ நோ க்ரையிங்)

4. அது எப்படி உங்களால் மட்டும் மொக்கைகளை கூட சிறந்த பதிவுகளாக மாற்ற முடிகின்றது?

மொக்கைகளை சிற‌ந்த படைப்பென நம்பும் உங்களை போன்ற வாசகர்கள் இருக்கும்வரை நம்ம வியாபாரம் சிற‌க்கும். நல்லப் படைப்பென எழுதுவதை மொக்கையா இருக்கு என்று விமர்சிக்கலாம். ஆனால் மொக்கையென வகைப்ப‌டுத்துவதை மொக்கையென்றாலும் பாராட்டுவதை போலாகும். நல்லாயிருக்கும் என்றாலும் அப்ப‌டியே ஆகும். இதுதான் தந்திரம்.

5. மிகவும் அருமையான எழுத்துக்களை படைத்துவரும் தாங்களுடைய அடுத்த கட்ட திட்டங்கள் எவை என அறியலாமா?
ஹிஹிஹிஹிஹிஹிஹி..வாழ்க்கைல என் ஒரே லட்சியம் எந்த லட்சியமும் இல்லாமல் வாழ்வதுதான். அதனால் எதிர்காலத்தை பற்றி நான் யோசிப்பதே இல்லை.

மேலும் சில ராணிக்களின் கேள்விகளும் எனது பதில்களும் அடுத்த பதிவில். ரசனைக்காரி என்ற பெயர் வாங்கியவரும், பின்னூட்ட சுனாமி என்ற‌ பேர் வாங்கியவரும் நாளை..

56 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on April 22, 2009 at 10:06 AM said...

சரி!

narsim on April 22, 2009 at 10:17 AM said...

சரி..சரி..

ஜி on April 22, 2009 at 10:17 AM said...

ரைட்டு!! ;))

நான் ஆதவன் on April 22, 2009 at 10:23 AM said...

அப்ப சரி....

Subankan on April 22, 2009 at 10:26 AM said...

ஓகே ஓகே.

//சொன்னா நம்பமாட்டீங்க. கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நினைக்கிறேன். :)). வேற எதுவும் இதுவரைக்கும் இல்லை. ஏன்னா நான் நினைக்கிறத ரகசியமாவாது செய்து பார்க்கலைன்னா எனக்கு தூக்கம் வராது//

அப்படீன்னா கல்யாணம் பண்ணிட்டு, எங்ககிட்ட பண்ணிக்காதமாதிரி இருக்கீங்க அப்படித்தானே?

கும்க்கி on April 22, 2009 at 10:27 AM said...

யென்னா அல்லாம் கண்டக்டர் கணக்கா சொல்லிகினு கீராங்கோ..
தோ வண்ட்டேன்.

மண்குதிரை on April 22, 2009 at 10:28 AM said...

//ஒரு குழந்தை இருக்கு. பேரு கார்க்கியில்ல//

//அன்பைத்தான் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்( நோ நோ நோ க்ரையிங்)//

//வாழ்க்கைல என் ஒரே லட்சியம் எந்த லட்சியமும் இல்லாமல் வாழ்வதுதான்//

ரசித்தேன் நண்பா !

சென்ஷி on April 22, 2009 at 10:31 AM said...

டபுள் ரைட்டு!!!!..

Anbu on April 22, 2009 at 10:38 AM said...

:))

SUREஷ் on April 22, 2009 at 10:45 AM said...

இன்றும் ஒரே நேரத்தில் இரண்டு மெகா ஹிட் ஐட்டங்கள் வெளியாகியுள்ளன...........

vinoth gowtham on April 22, 2009 at 10:47 AM said...

//சொன்னா நம்பமாட்டீங்க. கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நினைக்கிறேன்.//

இது மட்டும் பொய்.
உங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு ஆசை வந்து ரொம்ப நாள் ஆகுது..
உங்க பல பதிவுல இருந்து நான் பண்ண ஒரு சின்ன Psychological analyzation.

mythees on April 22, 2009 at 10:58 AM said...

சரி அப்புறம் ................

கும்க்கி on April 22, 2009 at 11:00 AM said...

டான்யா...ப்ரம் க்ரீக்.
ரைட்டு...

கும்க்கி on April 22, 2009 at 11:01 AM said...

மொதல்ல கேள்வி கேட்டவங்க வித்யாக்காவா..?

டக்ளஸ்....... on April 22, 2009 at 11:01 AM said...

முதல் ராணி: நம்ம கொ.ப.செ வித்யா அக்கா...
ரெண்டாவது தெரியலண்ணே...!

\\என் விருப்பங்களை மாற்றிக் கொள்ளவோ மறைக்கவோ நான் விரும்பவில்லை.\\

வாங்கண்ணே...வாங்க... நீங்களும் நானும் ஒன்னு..!

\\உங்கள் பதிவுகளுக்கு மட்டும் நர்சிம் உடனே மறுமொழி இடும் மாயம் என்ன? இங்கு ஏதும் கொடுக்கல்வாங்கல் உள்ளதா?\\

உள்குத்துதான்...ரெண்டு பேருமே யூத்துங்கோ..!

\\மொக்கைகளை சிற‌ந்த படைப்பென நம்பும் உங்களை போன்ற வாசகர்கள் இருக்கும்வரை நம்ம வியாபாரம் சிற‌க்கும். நல்லப் படைப்பென எழுதுவதை மொக்கையா இருக்கு என்று விமர்சிக்கலாம். ஆனால் மொக்கையென வகைப்ப‌டுத்துவதை மொக்கையென்றாலும் பாராட்டுவதை போலாகும். நல்லாயிருக்கும் என்றாலும் அப்ப‌டியே ஆகும். இதுதான் தந்திரம்.\\

இதுக்கு பேர் என்ன ?
மொக்கையா...?!?!?

கடைசியா ஒரே ஒரு கேள்வி..?
இத எழுதுனது யார்..?
பரிசலா இல்ல கார்க்கியா?

கும்க்கி on April 22, 2009 at 11:01 AM said...

ரெண்டாவதுதாம் யார்னு தெர்ல.அப்சல்யூட்.

டக்ளஸ்....... on April 22, 2009 at 11:02 AM said...

என்ன கும்க்கி..!
ரெடியா இருக்கீங்கிளா?
ஆடிருவோமா..?

கும்க்கி on April 22, 2009 at 11:03 AM said...

எப்போ ப்ரீ ப்ரதர்..?
பெண்களூர்ல ஒரு மீட் போட்ருவமா?
(நண்பர்களுக்கும் சேர்த்துதான் இங்க கேள்வி)

கும்க்கி on April 22, 2009 at 11:04 AM said...

வணக்கம் டக் அண்ணே...வாங்க.
முன்பதிவு சபதம் நினைவிருக்கா>?

டக்ளஸ்....... on April 22, 2009 at 11:04 AM said...

வாங்க கும்க்கி...
விளையாடலாம்...!

டக்ளஸ்....... on April 22, 2009 at 11:05 AM said...

எனக்கு ஞாபக இருக்கு..!
பாக்கலாம்..!
நீங்களா..
நானான்னு..!

டக்ளஸ்....... on April 22, 2009 at 11:06 AM said...

யோவ்...ஆரம்பிச்சாச்சா...?
இதோ வர்றேன்..
நான் ABCD...

தராசு on April 22, 2009 at 11:07 AM said...

ரைட்டு, ரைட்டு, ரைட்டு,

அந்த கல்யாண மேட்டரை நம்பறோம், நம்பறோம், நம்பறோம்.

தராசு on April 22, 2009 at 11:07 AM said...
This comment has been removed by the author.
டக்ளஸ்....... on April 22, 2009 at 11:09 AM said...

ஹே..முதல் சாதனை..
15ம் நாந்தான்..
25ம் நாந்தான்..
தராசு அண்ணே விளையாடுறதுக்கு
Entry Fees கட்டியாச்சா?

டக்ளஸ்....... on April 22, 2009 at 11:10 AM said...

You Are Back karkki...

கும்க்கி on April 22, 2009 at 11:26 AM said...

டக்ளஸண்ணே ஆபீஸ் அழைக்கிறது சாரி மிரட்டுகிறது.அப்பாலிக்கா வர்ரேன்.

டக்ளஸ்....... on April 22, 2009 at 11:32 AM said...

அதேதான் இங்கயும் தல..
Lunchக்கு வாங்க..!
சேர்ந்து விளையாடலாம்..!

ஸ்ரீமதி on April 22, 2009 at 11:47 AM said...

ம்கும்...

Suresh on April 22, 2009 at 11:47 AM said...

//மொக்கைகளை சிற‌ந்த படைப்பென நம்பும் உங்களை போன்ற வாசகர்கள் இருக்கும்வரை நம்ம வியாபாரம் சிற‌க்கும். நல்லப் படைப்பென எழுதுவதை மொக்கையா இருக்கு என்று விமர்சிக்கலாம். ஆனால் மொக்கையென வகைப்ப‌டுத்துவதை மொக்கையென்றாலும் பாராட்டுவதை போலாகும். நல்லாயிருக்கும் என்றாலும் அப்ப‌டியே ஆகும். இதுதான் தந்திரம்/

மச்சான் ஹ அஹா சூப்பர் கலக்கிட்ட படிக்கும் மக்கள் இருக்கும் வரை மொக்கை பதிவுகள் சிறக்கும் :-) நம்மலும் உங்கள மாதிரி தான் ஹா ஹா அட மொக்கையில் சொன்னேன் பா

அப்புறம் அந்த ஆதி பிளாக் ல உங்க குறும் பட்ம் பார்த்து அந்த எலுமிச்சை ஸீன்ல ஹா ஹா நல்லா சிரித்தேன் மச்சான்

விக்னேஷ்வரி on April 22, 2009 at 11:50 AM said...

பிளாக் எழுத வந்திருக்காவிட்டால்?
வேலைய‌ ஒழுங்கா செய்திருப்பேன். //

அப்போ, அது ஒழுங்கா அங்கே போறதில்லையா....

எனது புகைப்படத்தை பார்த்து என்னிடம் பேசத் தொடங்கினார் //

புகைப்படத்தைப் பார்த்த பின்னருமா.... ;)

மொக்கைகளை சிற‌ந்த படைப்பென நம்பும் உங்களை போன்ற வாசகர்கள் இருக்கும்வரை நம்ம வியாபாரம் சிற‌க்கும். ///

:)))))))))))

ஹிஹிஹி. அன்பைத்தான் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்( நோ நோ நோ க்ரையிங்) //

ரொம்பவும் ரசித்தேன்.

☼ வெயிலான் on April 22, 2009 at 11:54 AM said...

ம்.. அடுத்தது அவுஸ்திரேலியா பயணக்கட்டுரையா? இல்லை பதிவர் சந்திப்பா?

புதுகைத் தென்றல் on April 22, 2009 at 12:15 PM said...

அட்டண்டென்ஸ் போட்டுக்கோங்க

தீப்பெட்டி on April 22, 2009 at 12:23 PM said...

/// விஜய் ரசிகனாக நீ கொடுத்த/கொடுக்கும் விலை?

நிறைய இருக்கு. ஆனா எப்படி சொல்றதுனு தெரியல. பல பேரு நான் ஏதோ தெய்வ குத்தம் செய்வதுப் போல அட்வைஸ் பண்றாங்க. அவங்க மத்த விஷயத்துல என் நலம் விரும்பிகள் என்பதால் அமைதியா கேட்டுக்கிறேன். பிறருக்காக என் விருப்பங்களை மாற்றிக் கொள்ளவோ மறைக்கவோ நான் விரும்பவில்லை.///

அதான விஜய் ரசிகரா இருக்குறது அவ்ளோ பெரிய குற்றமா?

நமது சொந்த விருப்புகளின் மேல் இவர்கள் திருத்தம் மேற்கொள்ள முயற்சிப்பதை விட......

பட்டாம்பூச்சி on April 22, 2009 at 2:07 PM said...

ரைட்டு!! ;))

கார்க்கி on April 22, 2009 at 2:57 PM said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி..

ஸ்பெஷல் நன்றி பட்டாம்பூச்சிக்கு :)))

டக்ளஸ்....... on April 22, 2009 at 3:04 PM said...

என்னுடைய விலை மதிப்பற்ற பின்னூட்டங்களையும் நண்பர் கும்க்கியின் விலை மதிப்பற்ற பின்னூட்டங்களையும் அழித்த பதிவர் "கார்க்கி"அவர்களை நான் கும்மியடிப்போர் சங்கம் சார்பில் வன்மையாக உண்மையாக கருமையாக வெண்மையாக கருமையாக பேனா மையாக இன்னும் எல்லா மையாக‌க் கண்டிக்கிறேன்..

கண்டனப் பதிவுகளும் வரவேற்கப்படுகின்றன..

கார்க்கி on April 22, 2009 at 5:02 PM said...

டக்ளஸ் அண்ணே என்னை திட்டு வரும் பின்னூட்டஙக்ளை அழிப்பதில் என்ன தவறு இருக்கு? எனக்கு தெரியாத மொழியில் என்னைப் பற்றி என்ன சொல்ரீங்கனு நான் எப்படி தெரிஞ்சிக்கிறது?

ILA on April 22, 2009 at 5:26 PM said...

ஓஹோ

திருச்சிகாரன் on April 22, 2009 at 5:45 PM said...

சூப்பர் அப்பு

டக்ளஸ்....... on April 22, 2009 at 6:16 PM said...

\\டக்ளஸ் அண்ணே என்னை திட்டு வரும் பின்னூட்டஙக்ளை அழிப்பதில் என்ன தவறு இருக்கு? எனக்கு தெரியாத மொழியில் என்னைப் பற்றி என்ன சொல்ரீங்கனு நான் எப்படி தெரிஞ்சிக்கிறது?\\

எப்பிடி நீங்க அத திட்டி வந்த பின்னூட்டம்னு சொல்லலாம்..
அவ்வையாரே முருகனை 1, 2, 3...ன்னுதான் வரிசைப்படுத்திப் பாடுனாப்ல..
அது மாதிரி நான் A,B,C,D ன்னு உங்களை வரிசைப்படுத்திப் பாடக்கூடாதா?
அவ்வையாருக்கு ஒரு ஞாயம்...எனக்கு ஒரு ஞாயமா?
என்னா தல...?

கும்க்கி on April 22, 2009 at 7:59 PM said...

டக்ளஸ்....... said...

எப்பிடி நீங்க அத திட்டி வந்த பின்னூட்டம்னு சொல்லலாம்..
அவ்வையாரே முருகனை 1, 2, 3...ன்னுதான் வரிசைப்படுத்திப் பாடுனாப்ல..
அது மாதிரி நான் A,B,C,D ன்னு உங்களை வரிசைப்படுத்திப் பாடக்கூடாதா?
அவ்வையாருக்கு ஒரு ஞாயம்...எனக்கு ஒரு ஞாயமா?
என்னா தல...?

ஏன் கார்க்கி பாட்டு ஆரம்பிக்கும் முன்னயே கெடுத்திட்ட..?
அது எப்படி 1,2,3 வந்து உன்னை திட்டுவதாகும்?

கும்க்கி on April 22, 2009 at 8:01 PM said...

அவ்வையாருக்கு ஒரு ஞாயம்...எனக்கு ஒரு ஞாயமா?
என்னா தல...?

ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டாரு டக்ளஸ்..
அய்யகோ...இன்னும் என்னென்ன கலவரம்லாம் இந்த பூமியில் விளையப்போகிறதோ....

கும்க்கி on April 22, 2009 at 8:16 PM said...

சொந்த டெலீட்டில் சூனியம் வைத்துக்கொண்டாயே ப்ரதர்?
மதுரக்காரவங்க ஏற்க்கெனவே அருவா பார்ட்டிங்க...

வால்பையன் on April 22, 2009 at 8:47 PM said...

//அதுக்க‌ப்புற‌ம் நான் வாழ்க்கையே வெறுத்து விட்ட‌தால்,எதுவும் என்னை பெரிதாய் பாதிக்க‌வில்லை.:))))//

காதல் அவ்ளோ பெரிய மேட்டரா?

வால்பையன் on April 22, 2009 at 8:51 PM said...

//விஜய் ரசிகனாக நீ கொடுத்த/கொடுக்கும் விலை?//

தலையில பாதி காலியாமாம்!

Kathir on April 22, 2009 at 9:54 PM said...

/சொன்னா நம்பமாட்டீங்க. கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நினைக்கிறேன். :)). வேற எதுவும் இதுவரைக்கும் இல்லை. ஏன்னா நான் நினைக்கிறத ரகசியமாவாது செய்து பார்க்கலைன்னா எனக்கு தூக்கம் வராது.//

இது வரைக்கும் எத்தனை ரகசிய கல்யாணம் செஞ்சு இருக்கீங்க????

Kathir on April 22, 2009 at 9:58 PM said...

//மொக்கைகளை சிற‌ந்த படைப்பென நம்பும் உங்களை போன்ற வாசகர்கள் இருக்கும்வரை //

நன்றி சகா....

:))))

Kathir on April 22, 2009 at 9:59 PM said...

//உங்களுக்கும் ஒஸ்திரேலியாவில் இருக்கும் டான்யா என்ற Greek நாட்டு மங்கைக்கும் அப்படி என்ன சிநேகிதம்? //

கிகிகி...

Kathir on April 22, 2009 at 9:59 PM said...

50............

pappu on April 23, 2009 at 2:09 AM said...

// விஜய் ரசிகனாக நீ கொடுத்த/கொடுக்கும் விலை?

நிறைய இருக்கு. ஆனா எப்படி சொல்றதுனு தெரியல. பல பேரு நான் ஏதோ தெய்வ குத்தம் செய்வதுப் போல அட்வைஸ் பண்றாங்க. அவங்க மத்த விஷயத்துல என் நலம் விரும்பிகள் என்பதால் அமைதியா கேட்டுக்கிறேன். பிறருக்காக என் விருப்பங்களை மாற்றிக் கொள்ளவோ மறைக்கவோ நான் விரும்பவில்லை.///

விஜய் ரசிகரா இருக்கறது அவ்ளோ பெரிய தியாகமா?

எம்.எம்.அப்துல்லா on April 23, 2009 at 9:20 AM said...

//எனது புகைப்படத்தை பார்த்து என்னிடம் பேசத் தொடங்கினார். //

உண்மையிலேயே அந்த புள்ள ரொம்ப நல்ல புள்ளையோ!!!!

Anonymous said...

கிகிகிகிகி

ஒரு சந்தேகம், ஒஸ்திரேலியா பதிவர்கள் நாங்கள் எல்லாம் பெண்வீடா? பையன் வீடா?

வித்யா on April 23, 2009 at 11:13 AM said...

என்னாது அக்காவா? கும்க்கி வேணாம் அவ்வ்வ்.

கார்க்கி on April 23, 2009 at 11:21 AM said...

@டக்ளஸ்,

a b c d எல்லாம் நல்ல வார்த்தைதானா? அது தெரியாம சொல்லிட்டேன் அப்பூ..

@கும்க்கி,

இந்த மதுரைக்காரு அருவா இல்லைங்க, அறுவை பார்ட்டி ::)

************

நன்றி கதிர், வால், பப்பு,

************


//♥ தூயா ♥ Thooya ♥ said...
கிகிகிகிகி

ஒரு சந்தேகம், ஒஸ்திரேலியா பதிவர்கள் நாங்கள் எல்லாம் பெண்வீடா? பையன் வீடா?
//

பெண் வேலை செய்யுமிடம்தான் ஓஸ்திரேலியா. அதனால் நீ பையன் வீடுதான்

*************

// வித்யா said...
என்னாது அக்காவா? கும்க்கி வேணாம் அவ்வ்வ்.
//

அதானே? நீ கோச்சிக்காதீங்க ஆண்ட்டி

டக்ளஸ்....... on April 23, 2009 at 11:36 AM said...

\\@கும்க்கி,

இந்த மதுரைக்காரு அருவா இல்லைங்க, அறுவை பார்ட்டி ::)\\


யேய்..கார்க்கி அண்ணனுக்கு ஒரு 100000000000000000000 அருவா பார்சல் பண்ணுங்கப்பா..

 

all rights reserved to www.karkibava.com