Apr 20, 2009

காக்டெய்ல்


சமீபத்தில் என் நண்பர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ’பத்துலட்ச நிமிட அழைப்புகள் இலவசம்’ என்று எழுதப்பட்ட விளம்பரம் ஒன்றை பார்வையிட்டுக் கொண்டே சென்றிருக்கிறார். அந்த விளம்பரம் ஒட்டப்பட்டிருந்த்து அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தில். திடீரென்று பேருந்து நிறுத்தத்திற்காக நின்றுவிட தடுமாறி பேருந்தின் மிக அருகில் சென்று ப்ரேக் பிடித்திருக்கிறார். இதைச் சொல்லி என்னிடம் அவர் புலம்பியபோது ‘உன்னை யாரு விளம்பரத்தைப் பார்த்து வண்டி ஓட்டச் சொன்னாங்க?’ என்று கேட்டேன். (நான்கூட ‘ரசிக்கும் சீமானே’ பட விளம்பரத்தில் நவ்யா நாயரை சைட்டடித்துக்கொண்டே வண்டி ஓட்டியது ஞாபகத்துக்கு வந்தது!)

“பஸ்ஸூக்கு பின்னாடியே ‘பத்துமீட்டர் இடைவெளி விட்டு வரவும்’ன்னு எழுதியிருக்காங்க. அப்பறம் எதுக்கு இப்படி விளம்பரம் பண்ணணும்? பத்துமீட்டர் தூரத்திலிருந்து படிக்கவா முடியும்? பேசாம பஸ் சைடுல விளம்பரம் பண்ணிக்கலாம்ல?” என்று கேட்டார்.

அவர் சொல்றது சரிதானோ?

***************************************

என் உறவினர்களில் ஒருத்தர் பிரபுவின் வெறிபிடித்த ரசிகர். நான் அப்போ சின்னப்பையன். (இப்பமட்டும் என்னவாம்?) ’பிரபுவா’ என்று அவரைக் கிண்டல் செய்வோம். (பிரபுவை அல்ல. சொந்தக்காரரை!

ஆனால் சமீபகாலங்களில் பிரபு அசரடிக்கிறார். சரியான பாத்திரத் தேர்வுகள். நிறைவான நடிப்பு என்று மனதைத் தொடுகிறார். சந்தோஷ் சுப்பிரமணியம், சந்திரமுகி, பில்லா, அயன் என்று அவரது பயணம் சிறப்பாய் இருக்கிறது. வடக்கே அமிதாப் இப்படி குணசித்திரத்திர பாத்திரங்களில் நடிப்பது போல ரஜினி, கமல் ஏன் நடிப்பதில்லை என்றால்..

பிஸினஸ்!

மாவோ சொன்னதுதான்: மரம் சும்மாயிருக்க நினைத்தாலும் காற்று விடுவதாயில்லை.

***************************************

கவிதை எடுத்துப் போடுங்க என்று கேட்டுக் கொண்ட நண்பருக்காக ஒரு கவிதை

தோழர் மோசிகீரனார்

மோசிகீரா

மகிழ்ச்சியினால்

மரியாதையை நான்

குறைத்ததற்கு

மன்னித்தருள வேண்டும் நீ

சொந்தமாக உனக்கிருக்கும்

சங்கக்கவிதை யாதொன்றும்

படித்ததில்லை நான் இன்னும்

ஆனால் உன்மேல் அளவிறந்த

அன்பு தோன்றிறு

இன்றெனக்கு

அரசாங்கக் கட்டிடத்தில்

தூக்கம் போட்ட முதல்மனிதன்

நீதான் என்னும் காரணத்தால்

-ஞானக்கூத்தன்.

***************************************

ரொம்ப டென்ஷனானா நான் பண்ற ஒருவிஷயம் ரயில்வே ஸ்டேஷன்ல போய் ஒரு ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கறது. மகளை தனியே அனுப்பும் பெற்றோர்கள், பெற்றோர் தலை மறைந்ததும் அலைபேசியை எடுக்கும் மகன்கள், எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத அறிவிப்புக்கு முன்னான டிங் டாங் இசையொலி, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ரயில், வந்து நிற்கும் ரயிலின் ஜன்னல் முகங்கள் என்று இரயில்நிலையம் ஒரு போதிமரம்.

அதுசரி...

‘போய்ச் சேர்ந்ததும் லெட்டர் போடு’ என்ற குரல் கேட்கிற இரயில் நிலையங்கள் இருக்கின்றனவா இப்போதும்?

***************************************

ஐ.பி.எல். சீஸன் 2 ஆரம்பமாகிவிட்டது. போனமுறை இருந்த ஓபனிங் ரெஸ்பான்ஸ் இந்தமுறை இல்லையென்றே சொல்லவேண்டும். போகப் போக ஹிட்டாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

மும்பை இண்டியன்ஸில் சச்சினும், சென்னை சூப்பர் கிங்க்ஸில் தோனியும், ராயல் சேலஞ்சர்ஸில் டிராவிட்டும், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்-ல் யுவராஜும் டெல்லி டேர்டெவிலில் சேவக்கும் கலக்கலாக விளையாடுவது மகிழ்ச்சியே. நிச்சயம் இது தொடர்ந்துவரும் T 20 உலகக் கோப்பையில் எதிரொலிக்கும் என்பதால்.

வருடா வருடம் இப்படி ஐ.பி.எல். தொடர்ந்தால் இதே மாஸ் இருக்குமா?

சந்தேகம்தான்!

***************************************

தினத்தந்தி குருவியார் பதில்கள் மிக சுவாரஸ்யமிக்கவை. மன்னிக்கவும். பதில்கள் அல்ல கேள்விகள்.. பதில்களை நான் படிப்பதில்லை. கேள்விகளை மேய்ந்துவிட்டுப் போய்விடுவேன். எப்படி வேலைமெனக்கெட்டு இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார்கள் என்று நினைப்பதுண்டு.

இந்த வாரம் வந்திருந்த கேள்விகள் சில..

விஜயசாந்தி தொடர்ந்து நடிப்பாரா, நடிகர் சார்லியின் சம்பளம் எவ்வளவு,

ஜெனிலியா ஏன் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை, வடிவேலுவின் இஷ்ட தெய்வம் யார் etc.. etc…

சிறந்ததாய் நான் தேர்ந்தெடுத்த கேள்வி:

பிரபல நடிகைகளை தாடி வைத்த ஆண்கள் சுலபமாக மயக்கி விடுகிறார்களே.. எப்படி? (இரா.தமிழரசன், தஞ்சை.)

நோ கமெண்ட்ஸ்

44 கருத்துக்குத்து:

தமிழ் பிரியன் on April 20, 2009 at 8:41 AM said...

///பிரபல நடிகைகளை தாடி வைத்த ஆண்கள் சுலபமாக மயக்கி விடுகிறார்களே.. எப்படி? ///
மெய்யாலுமா?.. ;-))

அப்பாவி முரு on April 20, 2009 at 8:54 AM said...

//மாவோ சொன்னதுதான்: மரம் சும்மாயிருக்க நினைத்தாலும் காற்று விடுவதாயில்லை.//

பலபேருக்கு அப்படித்தான்!!!

Cable Sankar on April 20, 2009 at 8:56 AM said...

//‘போய்ச் சேர்ந்ததும் லெட்டர் போடு’ என்ற குரல் கேட்கிற இரயில் நிலையங்கள் இருக்கின்றனவா இப்போதும்?

//

நல்ல அப்சர்வேஷன்.. கார்க்கி..

டக்ளஸ்....... on April 20, 2009 at 9:07 AM said...

\\என் உறவினர்களில் ஒருத்தர் பிரபுவின் வெறிபிடித்த ரசிகர். நான் அப்போ சின்னப்பையன். (இப்பமட்டும் என்னவாம்?)\\
அப்படியா தல..
சொல்லவே இல்ல...

அய்யய்யோ..
எனக்கு தாடி வளரமாட்டேங்குதே..ஹி..ஹி..யுத்துல..
கொஞ்ச நாள் பொறுப்போம்..!

தராசு on April 20, 2009 at 9:19 AM said...

//இரயில்நிலையம் ஒரு போதிமரம்//

சேம் பிளட். நானும் அதிக நேரம் ரயில் நிலையங்களில் செலவிடுவேன்.

பரிசல்காரன் on April 20, 2009 at 9:43 AM said...

நீ சமீபத்துல எழுதினதுலயே ஆகச் சிறந்த எழுத்து இந்த காக்டெய்ல்தான் கார்க்கி.

அருமை.

அதுவும் ரயில்நிலையம் குறித்த பத்தி மிக மிக அருமை.

T.V.Radhakrishnan on April 20, 2009 at 10:01 AM said...

அருமையான கலவை

ஜ்யோவ்ராம் சுந்தர் on April 20, 2009 at 10:03 AM said...

அந்தக் கவிதை பிரசுரமாகி 35 - 40 வருசம் இருக்கும். நான் படிச்சு ஒரு 20 வருசம் இருக்கும். ஆனாலும் ஞாபகம் இருக்கும் கவிதையது!

அனுஜன்யா on April 20, 2009 at 10:48 AM said...

ரயிலடியும், ஞானக்கூத்தனும் அருமை. இந்தக் காக்டெயில் பிடிச்சிருக்கு.

அனுஜன்யா

தீப்பெட்டி on April 20, 2009 at 10:58 AM said...

///பஸ்ஸூக்கு பின்னாடியே ‘பத்துமீட்டர் இடைவெளி விட்டு வரவும்’ன்னு எழுதியிருக்காங்க. அப்பறம் எதுக்கு இப்படி விளம்பரம் பண்ணணும்? பத்துமீட்டர் தூரத்திலிருந்து படிக்கவா முடியும்?///

அது பேருந்து நிக்கும் போது படிக்குறதுக்கு....


//ரயில்வே ஸ்டேஷன்ல போய் ஒரு ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கறது. //

எனக்கும் அந்த பழக்கம் ரொம்ப வருசமா இருக்கு. நான் தனியாக இந்த உலகத்தை பார்ப்பது போன்ற
மிதப்பு. யாரும் நம்மை லட்சியம் செய்யாமல் இருப்பது ஒரு பெரிய சவுகரியம். தரை முழுதும் பரவி கிடந்து ரயில் நிலையத்தை சொந்த வீடாக பாவிக்கும் நமது இந்திய மக்கள்...பார்க்க பார்க்க சலிக்காத காட்சி. (அடுத்த வீட்டுக்குள் அவர்களுக்கு உறுத்தாமல் எட்டி பார்க்கும் ஆசை தானோ?)

அ.மு.செய்யது on April 20, 2009 at 11:00 AM said...

//‘போய்ச் சேர்ந்ததும் லெட்டர் போடு’ என்ற குரல் கேட்கிற இரயில் நிலையங்கள் இருக்கின்றனவா இப்போதும்?//

அதை விட கொஞ்சம் மீனம்பாக்கம் போய் பாருங்க சகா..

எத்தனை கண்ணீர்..எத்தனை பிரிவு..எத்தனை மகிழ்ச்சி !!!

( ஞானக்கூத்தன் கவிதை சூப்பர் )

ஸ்ரீமதி on April 20, 2009 at 11:20 AM said...

:))))

வித்யா on April 20, 2009 at 11:30 AM said...

கடைசி மேட்டர் - நோ கமெண்ட்ஸ்

வந்தியத்தேவன் on April 20, 2009 at 11:46 AM said...

சந்தோஷ் சுப்பிரமணியத்தில் பிரபு நடித்தாரா?

narsim on April 20, 2009 at 11:49 AM said...

//karki bavananthi
கண்ணுங்களா பேசனும்ன்னா 09989322884, கலாய்க்கனும்ன்னா iamkarki@gmail.com //

எத்தன சகா?

MayVee on April 20, 2009 at 12:04 PM said...

bangalore ponathum "காக்டெய்ல்" eluthitingale.. nalla irukku intha koli vaalu

MayVee on April 20, 2009 at 12:04 PM said...

"அனுஜன்யா said...
ரயிலடியும், ஞானக்கூத்தனும் அருமை. இந்தக் காக்டெயில் பிடிச்சிருக்கு.

அனுஜன்யா"

repeatuuuuuu

வண்ணத்துபூச்சியார் on April 20, 2009 at 12:08 PM said...

நல்லாயிருக்கு நண்பா..


வாழ்த்துகள்

எம்.எம்.அப்துல்லா on April 20, 2009 at 12:16 PM said...

இரயில் நிலையம் //

இது நான் அடிக்கடி செய்யும் விஷயம். சமீபத்தில் நானும்,தாமிராவும்,பரிசலும் சேர்ந்து மயிலாப்பூர் ஸ்டேஷனில் அரை மணி நேரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி அரட்டை அடித்தது மறக்க முடியாத நிகழ்வு

:)

ஆதிமூலகிருஷ்ணன் on April 20, 2009 at 12:19 PM said...

கவிதை, ரயில்வேஸ்டேஷன், குருவிபதில்கள் என அனைத்துமே சூப்பர் கார்க்கி.!

அயன் படத்தில் எப்போதும் சாந்தமாக வரும் பிரபு, சூர்யாவை போலீஸ் அடித்தது தெரியவரும் போது அந்த இன்ஸ்பெக்டரை நோக்கி எகிறும் காட்சி பிரமிப்பு, அவ்வளவு பர்பெக்ஷன் அவரது நடிப்பில்.. அப்படியே 'மதம் கொண்ட யானை' போல.. நானே இது குறித்து எழுதலாம் என்றிருந்தேன்.. முந்திக்கொண்டாய்.!

vinoth gowtham on April 20, 2009 at 12:23 PM said...

//சந்தோஷ் சுப்பிரமணியத்தில் பிரபு நடித்தாரா?//

sumthng sumthng..

Suresh on April 20, 2009 at 12:26 PM said...

:-)

பரிசல்காரன் on April 20, 2009 at 12:34 PM said...

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில்தான் பிரபு நடித்தார். சந்தோஷ் சுப்பிரமணியம் என்று எழுதியிருக்கிறாய்.. நீயெல்லாம் எதுக்குய்யா சரிபார்க்காம பதிவெழுதற? ஷேம்.. ஷேம்..

:-))

(ஸ்ரீமதி உனக்கு சின்ன ஸ்மைலிதான் போட்டிருக்காங்க., எனக்கு பெரீஈஈஈய ஸ்மைலி போட்டிருக்காங்களே...)

அத்திரி on April 20, 2009 at 1:24 PM said...

சகா பிரபு ஜெயம் ரவி நடித்தது உனக்கும் எனக்கும்---- சந்தோஷ் சுப்ரமணியம் கிடையாது

அத்திரி on April 20, 2009 at 1:24 PM said...

25 நாந்தானுங்கோ

Anonymous said...

எனக்கெல்லாம் போய்சேந்ததும் போன் பண்ணுன்னு தான் சொல்லுவாங்க.

//‘போய்ச் சேர்ந்ததும் லெட்டர் போடு’ என்ற குரல் கேட்கிற இரயில் நிலையங்கள் இருக்கின்றனவா இப்போதும்//

ஸ்ரீமதி on April 20, 2009 at 1:42 PM said...

//(ஸ்ரீமதி உனக்கு சின்ன ஸ்மைலிதான் போட்டிருக்காங்க., எனக்கு பெரீஈஈஈய ஸ்மைலி போட்டிருக்காங்களே...)//

Anna en indha kolaveri?? :))

தாரணி பிரியா on April 20, 2009 at 2:16 PM said...

ரயில்வே ஸ்டேஷன் நிஜமாவே நம்ம டென்ஷனை மறக்கடிக்கிற இடம்தான், எனக்கு பிரபு இப்பவும் பிடிக்குமே.

Bleachingpowder on April 20, 2009 at 3:41 PM said...

//என் உறவினர்களில் ஒருத்தர் பிரபுவின் வெறிபிடித்த ரசிகர்.//

எனக்கும் பிரபுவை பிடிக்கும் தல. அவரோட smile ரொம்ப innocentஆ குழந்தைதனமாக இருக்கும். நல்ல நடிகர். எதார்த்தத்தை உணர்ந்து வயதுக்கேத்த நல்ல கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

//வடக்கே அமிதாப் இப்படி குணசித்திரத்திர பாத்திரங்களில் நடிப்பது போல ரஜினி, கமல் ஏன் நடிப்பதில்லை என்றால்..பிஸினஸ்! மாவோ சொன்னதுதான்: மரம் சும்மாயிருக்க நினைத்தாலும் காற்று விடுவதாயில்லை//

தலைவர் படத்துல அவருக்கு ஒரு முடி நரைச்ச மாதிரி காட்டுனா கூட அத பாத்துட்டு இந்த ப்ளிச்சிங் பவுடர் சும்மா இருக்க மாட்டான்

Karthik on April 20, 2009 at 3:49 PM said...

what the ... fantastic cocktail!

really liked this one so much. :)

Karthik on April 20, 2009 at 3:51 PM said...

kkr flopped yesterday. :)

i'm not supporting kkr this season since dada is not captain.

கார்க்கி on April 20, 2009 at 4:59 PM said...

thanks to everyone..

sorry no tamil fonts...

in training in banglore..

அன்புடன் அருணா on April 20, 2009 at 6:45 PM said...

//எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத அறிவிப்புக்கு முன்னான டிங் டாங் இசையொலி, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ரயில், வந்து நிற்கும் ரயிலின் ஜன்னல் முகங்கள் என்று இரயில்நிலையம் ஒரு போதிமரம்.//

நான் கூட ரொம்ப ரசிப்பவை இவை கார்க்கி!!!
அன்புடன் அருணா

ச்சின்னப் பையன் on April 20, 2009 at 8:11 PM said...

நல்லாயிருக்கு நண்பா..

அறிவிலி on April 20, 2009 at 8:13 PM said...

சரி விகிதத்தில் கலந்து மிதமான போதை அளித்தது.

நன்றாக இருந்தது

கும்க்கி on April 20, 2009 at 8:26 PM said...

:’]\.

nathas on April 20, 2009 at 9:12 PM said...

//“பஸ்ஸூக்கு பின்னாடியே ‘பத்துமீட்டர் இடைவெளி விட்டு வரவும்’ன்னு எழுதியிருக்காங்க. அப்பறம் எதுக்கு இப்படி விளம்பரம் பண்ணணும்? பத்துமீட்டர் தூரத்திலிருந்து படிக்கவா முடியும்? பேசாம பஸ் சைடுல விளம்பரம் பண்ணிக்கலாம்ல?” //

பத்து மீட்டர் இடைவெளி விட்டு வரவுங்களுக்கு இந்த எச்சரிக்கை தேவை இல்லை (அதனால இதை அவங்க படிச்சா என்ன ? படிக்காட்டி என்ன ?) :)
மிக அருகில் பேருந்தை பின் தொடர்பவர்கள் படிப்பதற்கு தான் இந்த எச்சரிக்கைன்னு நினைக்குறேன் :)

VIKNESHWARAN on April 21, 2009 at 1:31 AM said...

//சந்தோஷ் சுப்பிரமணியம், சந்திரமுகி, பில்லா, அயன் என்று அவரது பயணம் சிறப்பாய் இருக்கிறது. //

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் பிரபு நடிச்சாருங்களா? :)

ராமலக்ஷ்மி on April 21, 2009 at 7:30 AM said...

அவியல் அருமை.

கார்க்கி, அங்கே உங்கள் காக்டெயிலும்தான்...:))!

பிரபு பற்றிய இதே கருத்தை நானும் சமீபத்தில் வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன். மிகையற்ற அசர வைக்கும் நடிப்பு, அசத்தலான பாத்திரத் தேர்வுகள் என.

ரயிலடி போதிமரம் நன்று.

Ramesh on April 21, 2009 at 10:03 AM said...

போங்கையா நீங்களும் உங்க விளையாட்டும். ;-)

முதலிலே மக்களை மொக்கை போட்டு, வோட்டு போட சொல்லுங்க.

Busy on April 21, 2009 at 10:36 AM said...

Very Good Avial with Cocktail !!!!!!!!!!!!!!!

டக்ளஸ்....... on April 21, 2009 at 10:49 AM said...

தல.. நான் உங்களுக்கு போட்ட பின்னூட்டத்தை
அப்டியே பரிசலுக்கு பார்சல் அனுப்பவும்...!

Joe on April 22, 2009 at 9:14 AM said...

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் பிரகாஷ் ராஜ் & ஜெயம் ரவி தான் நடித்தார்கள். பிரபு எங்கே வந்தார்?

வால்பையன் on April 22, 2009 at 9:14 PM said...

//அவர் சொல்றது சரிதானோ?//

//மரம் சும்மாயிருக்க நினைத்தாலும் காற்று விடுவதாயில்லை.//

//பிரபல நடிகைகளை தாடி வைத்த ஆண்கள் சுலபமாக மயக்கி விடுகிறார்களே.. எப்படி? (இரா.தமிழரசன், தஞ்சை.)
நோ கமெண்ட்ஸ்//

இந்த பின்னூட்டம் பரிசலுக்கு!

நான் ஏற்கனவே உங்கள் பதிவில் சொன்னது தான், கார்க்கியின் பதிவுகளில் கிண்டலும் கேலியும் நிறைந்து இருக்கும்,

உங்களுக்குள் ஒரு கருத்து கந்தசாமி ஒளிந்திருக்கிறார், அவர் உங்களை அறியாமல் உங்கள் பதிவுகளில் வெளிவந்து விடுவார்.

ஏற்கனவே எனக்கு ஆள்மாறாட்ட விசயம்(உங்கள் பதிவில்)தெரிந்ததனால் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.

அவியலையும், காக்டெயிலையும் மாறி மாறி ஒரு முறை படித்து பாருங்கள்.

 

all rights reserved to www.karkibava.com