Apr 13, 2009

பரிசல், கார்க்கி, ஆதி மற்றும் அந்த மூன்று பேரும்


5949837-lg

சென்னையில் அன்று வெயில் குறைவாகத்தான் இருந்தது. மயிலாப்பூரை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த 5சி பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்து சிங்கார சென்னையின் பருவக்குமரி கூவத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். அடையாறை தாண்டிய நிறுத்தத்தில்தான் அந்த மூவரும் ஏறியிருக்கக்கூடும். என் முன் இருக்கையில் இருவரும் அதற்கும் முன் இருக்கையில் ஒருவனும் அமர்ந்தார்கள். அவர்களுக்கு வயது 20லிருந்து 22க்குள் தானிருக்கும். என்னை விட இரண்டு வயது குறைவானவர்களா என்ற ஏக்கத்துடன் அவர்களைப் பார்த்தேன்.

”காலேஜ் லைஃப் வேற மச்சி. இப்ப நீ கொஞ்சம் புரஃபஷ்னலா நடக்க கத்துக்கோ”  பல நாட்கள் ஷேவ் செய்யாத முகத்துடன் இருந்தவன் சொன்ன இந்த டயலாக்கில் இருந்தே அவன் தான் அவர்கள் க்ரூப் க.க (என்னவென்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்) பரிசல் என்பது தெரிந்தது.

”எனக்கு புரியுதுடா. அதுக்காக அவளா வந்து பேசும்போது மூஞ்சிய திருப்பிக்கிட்டு போக முடியுமா? ” மூன்று நாள் தாடியுடன், பார்க்க கொஞ்சமல்ல ரொம்பவே ஸ்மார்ட்டாய் இருந்தவன் கேட்ட இந்தக் கேள்வியின் மூலம் அவன் அந்த க்ரூப் மி.ரோ (போன பத்தியில் சொன்ன அதே வரி ரிப்பீட்ட்டேய்) கார்க்கி எனபதும் தெரிந்தது.

”இப்ப அவளுங்க பேசறதுக்கு பதில் சொல்ல ஆசையாத்தான் மச்சி இருக்கும். போக போக தெரியும் அது எவ்ளோ கஷ்டம்னு” க்ளீன் ஷேவுடன் இருந்தாலும் தலையிலிருந்து தரை நோக்கி Y axisல் நான்கு ஜான் வந்தவுடன், Z axisல் ஒரு ஜான் முன்னே வளர்ந்திருந்த தொப்பை இரண்டாம் அடையாளம் தான். அவன் சொன்ன அந்த எச்சரிக்கையே அவன் அவர்கள் க்ரூப் அ.பா(ரிப்பீட்டேய்) தாமிரா ச்சே ஆதி என்பதும் தெரிந்தது.

அவர்களுக்குள் மாறி மாறி கேள்விகேட்டு பதில் சொல்லிக் கொண்டார்கள். இனிமேல  உன் கூட வெளியே வரவே மாட்டேன் என்றும் சொன்னான் ஒருவன்.  மி.ரோ விளக்கம் சொல்லிக் கொண்டே இருந்தாலும் அவர் லாக்காகிவிட்ட விஷயம் எனக்கே புரிந்தது. கடைசியா கேட்கறேன். பேசறத நிறுத்துவியா மாட்டியா என்றக் கேள்விக்கும் கேட்ச்(அதாங்க பிடி) கொடுக்காமலே பேசினார் மி.ரோ. கோவத்துடன் எழுந்து முன்னே சென்றுவிட்டார் க.க.  இறங்குவதற்குள் சமாதானமாகி கையில் இருந்த காசையெல்லாம் எண்ணி 200ரூபாய் தயார் செய்தார்கள். சினிமாவில் வருவது போல் அவர்களுக்கென தனி ஸ்டைல் வைத்திருந்தார்கள். ஏதோ இங்லிஷீல் சொல்லிக் கொண்டே கைகளை வித்தியாசமாக தட்டி சிரித்தார்கள். பொறாமையாக இருந்தது. பர்சில் (பரிசல் அல்ல, பர்ஸில்) சில ஆயிரங்களும், தேவைப்பட்டால் தேவைப்படும் அளவுக்கு தேய்க்க காந்த அட்டைகளும் கைவசம் இருந்தும் அந்த சிரிப்பு என் உதட்டில் இல்லை.

இது நடந்து சில மாதங்கள் ஆகின்றன. ஆனால் தினமும் இரவில் தவறாமல் அவர்களை நினைத்துக் கொள்வேன். 2002க்கு பின் சில காரணங்களால் எனக்கென்று புதிதாய் எந்த நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளவில்லை நான். தனியாகவே இருக்க பழகி கொண்டேன். பதிவெழுத தொடங்கிய பின்னும் யாரிடமும் அதிக நெருக்கம் காட்டவில்லை. பதிவுலகில் ஏற்பட்ட சந்தோஷமான தருணங்களை மட்டுமே பதிவுலக நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வேன். கொஞ்சம் கொஞ்சமாய் மாறத் தொடங்கினேன்.

மனசு சரியில்லை என்று எழுதினால் நள்ளிரவில் ஜெர்மனியின் இருந்து கால் வருகிறது. லேசா தலைவலிக்குது என்றால் சிங்கப்பூரில் இருந்து கால் வருகிறது. தமிழ்மணம் நட்சத்திரம் ஆகி விட்டேன் என்றால் துபாயில் இருந்து அழைத்து வாழ்த்துகிறார்கள். போரடிக்குது என்று சொன்னால் ஆஸ்திரேலியாவில் இருந்து அழைக்கிறார்கள். ஓவ்வொரு மனிதனுக்கும் கல்லூரி நட்புதான் உயர்வாய் இருக்கும். சாய்ஸும் அதிகம். நமக்கு ஒத்துக் கொள்பவர்களை எளிதில் தேடிக் கண்டுப் பிடித்துக் கொள்ளலாம். ஆனால் அதையும் தாண்டி விட்டது பதிவுலக நட்பு.

என்ன ஆச்சு கார்க்கி? எழுதனும்ன்னு எழுதற மாதிரி இருக்கு. ரெஸ்ட் எடுத்துக்கோ.

writers blockனு சொல்வாங்க. எல்லோருக்கும் வருவதுதான். அதுக்காக பத்து நாளா லீவு விடறது?

பின்னுட்டங்களில் இதை அதிகம் காண முடிகிறது, நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு

உண்மைதான். முன்பிருந்த ஆர்வம் குறைந்தது போல் இருக்கிறது. ஆனால் அதற்கு காரணம் பல பல. எழுத்தின் மீதான் ஆர்வம் குறையவில்லை. மனசு ஏதோ அலைபாய்ந்துக் கொண்டே இருக்கு. சரியாயிடும் என்று நானும் காத்துக் கொண்டே இருக்கிறேன்.

   சனிக்கிழமை நண்பர் ஒருவர் அமெரிக்காவில் இருந்து அழைத்தார். அரை மணி நேரப் பேச்சில் அவர் சொன்ன ஒரு வரி ஒட்டிக் கொண்டது. “ஒழுங்கா எழுதற வரைக்கும் தாம்ப்பா. இல்லைன்னா மூட்டைய கட்ட வேண்டியதுதான்”. உண்மைதான். கடைசி ஒரு மாதத்தில் எழுதியதை படித்துப் பார்த்தேன். :((((((

இதோ. ட்ரெயினில் செல்லும் பொழுது கடந்த ஓரிரு மாதங்களாக எழுதவதில்லை. இன்று புறப்பட்டதுமே எடுத்து இதை டைப்பிக் கொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு புத்துணர்ச்சி. புதிதாய் எழுதுவதைப் போல. என்னை இந்த சக்தி இன்னும் சில காலம் செலுத்துக் கூடும்.  ஆறு வருடங்களாய் கிடைக்காத நண்பர்களை கொடுத்த எழுத்திற்கு நன்றி சொல்லலாம். நண்பர்களுக்கு சொன்னால் தான் திட்டுவார்கள்.

54 கருத்துக்குத்து:

Mahesh on April 13, 2009 at 10:09 AM said...

நல்லாத்தானே போயிடுருந்துச்சு ??!!

Rajaraman on April 13, 2009 at 10:09 AM said...

தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

டக்ளஸ்....... on April 13, 2009 at 10:30 AM said...

பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்ண்ணே...விடுங்கண்ணே!

அ.மு.செய்யது on April 13, 2009 at 10:30 AM said...

டெம்பிளேட் எல்லாம் புதுசா இருக்கு.

பிரஷ்ஷா ஆரம்பிங்க சகா....

MayVee on April 13, 2009 at 10:34 AM said...

"அ.மு.செய்யது said...
டெம்பிளேட் எல்லாம் புதுசா இருக்கு.

பிரஷ்ஷா ஆரம்பிங்க சகா...."

periya repeat......

விஜய் ஆனந்த் on April 13, 2009 at 10:44 AM said...

:-)))...

ஸ்ரீமதி on April 13, 2009 at 10:44 AM said...

டெம்பிளேட் சூப்பர் :)))

தராசு on April 13, 2009 at 10:44 AM said...

//மனசு ஏதோ அலைபாய்ந்துக் கொண்டே இருக்கு.//

ம்ம்ம்,

புரியுது, புரியுது.டெம்பிளேட்டை யாரோ சொன்னாங்கன்னு மாத்துன போதே நினைச்சேன், எதொ நடக்குதுன்னு.

உங்க அம்மா கிட்ட சொல்றோம், நல்ல மருமகளா சீக்கிரம் பாருங்கன்னு.

அனுஜன்யா on April 13, 2009 at 10:44 AM said...

சொந்த தளமா? வாழ்த்துகள். (ரொம்ப லேட்டா கவனிக்கறேனா?)

ஆம், கார்க்கி, உன்னோட சமீப பதிவுகள் உன்னோட potential இக்கு கீழே தான் இருந்தது. வாசிப்பதை குறைத்து விட்டாயா? Out of form எல்லாம் சகஜமப்பா. But introspection is very important. அதைத்தான் நீ இப்போ செய்கிறாய். Bounce back.

வாழ்த்துகள் எல்லாவற்றுக்கும்.

அனுஜன்யா

தராசு on April 13, 2009 at 10:45 AM said...

//ஏதோ ஒரு புத்துணர்ச்சி. புதிதாய் எழுதுவதைப் போல. என்னை இந்த சக்தி இன்னும் சில காலம் செலுத்துக் கூடும்.//

அப்ப "அவுங்க" பேரு சக்தியா??

தராசு on April 13, 2009 at 10:47 AM said...

//ஆறு வருடங்களாய் கிடைக்காத நண்பர்களை கொடுத்த எழுத்திற்கு நன்றி சொல்லலாம். நண்பர்களுக்கு சொன்னால் தான் திட்டுவார்கள்.//

சரி, சரி, சரி, ரொம்பத்தான் (புத்)உணர்ச்சி வசப் படறீங்க.

Rajaraman on April 13, 2009 at 10:54 AM said...

தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

Anonymous said...

பையனுக்கு கல்யாண ஆசை வந்திருச்சு.

சீக்கிரமேவ விவாஹப் பிராப்தி ரஸ்து.

சென்ஷி on April 13, 2009 at 10:56 AM said...

:-))

// Mahesh said...

நல்லாத்தானே போயிடுருந்துச்சு ??!!//

ரிப்பீட்டே :-))

பொன்.பாரதிராஜா on April 13, 2009 at 10:58 AM said...

அதுக்காக அவசரப் பட்டு கல்யாணம் பண்ணிக்காத கார்க்கி...
இருக்குற கொஞ்ச உணர்ச்சியும் (ஐயோ...புத்துணர்ச்சி..)போய்டும்...

லக்கிலுக் on April 13, 2009 at 11:00 AM said...

ரைட்டர்ஸ் பிளாக் சகஜம் தான். ஆனால் ரொம்ப ஈஸியா க்ளியர் பண்ணிடலாம். ஒரு நாளைக்கு ஐம்பது பக்கமாவது இலக்கியம், மசாலா, சரோஜாதேவின்னு வரைமுறை இல்லாமல் படிக்கணும்.

கார்க்கி on April 13, 2009 at 11:01 AM said...

@மஹேஷ்,

இதுவும் அவுட்டுன்னு சொல்ல வறீங்களா சகா? :))

******************
@டக்ளஸ்,

ரைட்டு தம்பி..

**************
@செய்யது,

அதுக்குத்தான் மாத்தினேன் சகா. நன்றி

***************

நாங்க மேவீ

*************
சிரிப்பிற்கு நன்றி விஜய்

**************
@ஸ்ரீமதி,

ஓகேவா?ரைட்டு

லக்கிலுக் on April 13, 2009 at 11:02 AM said...

அப்புறம் சொல்ல மறந்துட்டேன். இந்த மாதிரி காக்டெயில், பொரியல், அவியல் ரேஞ்சிலே தொடர்ந்து எழுதினால் குயிக்காவே ரைட்டர்ஸ் பிளாக் வந்துடும். இது அனுபவத்தில் தெரிந்துகொண்டது. மாசத்துக்கு ஒருமுறை அமாவாசை சோறு போட்டா போதும்.

ஏதாவது ஒரு விஷயத்தை ‘நச்’சின்னு எடுத்துக்கிட்டு அதையே ஒரு கட்டுரையாகவோ, கதையாகவோ எழுதப் பழகவும். அதுக்கப்புறம் ரைட்டர்ஸ் பிளாக்காவது, புடலங்காயாவது.

மங்களூர் சிவா on April 13, 2009 at 11:03 AM said...

/
மனசு சரியில்லை என்று எழுதினால் நள்ளிரவில் ஜெர்மனியின் இருந்து கால் வருகிறது.
/

ஜெர்மனில இருந்தா சரி ரைட்டு
:))))))))))))))))

மங்களூர் சிவா on April 13, 2009 at 11:03 AM said...

/
வடகரை வேலன் said...

பையனுக்கு கல்யாண ஆசை வந்திருச்சு.

சீக்கிரமேவ விவாஹப் பிராப்தி ரஸ்து.
/

ரிப்பீட்டு

கார்க்கி on April 13, 2009 at 11:10 AM said...

@தராசு,

அதெல்லாம் ஒன்னும் இல்லை தல.. என்னவோ குறையுது. என்னன்னு தெரியல

************
@அனுஜன்யா,

சொந்த தளம் வாங்கி ஆறு மாசமாச்சு தல :)).. நன்றி..

**************
@வேலன்,

அதெல்லாம் இல்ல அண்ணாச்சி.. :))

****************

வாங்க சென்ஷி :))

****************
@பாரதி
இருக்கிற கஷ்டத்துல எது வேறயா சகா? நிச்ச்யமா இன்னும் ஒரு வருஷத்துக்கு இல்ல..

***************
@லக்கி,

ரொம்ப நன்றி லக்கி.முயற்சி செய்து பார்க்கிறேன்

***************

narsim on April 13, 2009 at 11:12 AM said...

//லக்கிலுக் said...
அப்புறம் சொல்ல மறந்துட்டேன். இந்த மாதிரி காக்டெயில், பொரியல், அவியல் ரேஞ்சிலே தொடர்ந்து எழுதினால் குயிக்காவே ரைட்டர்ஸ் பிளாக் வந்துடும். இது அனுபவத்தில் தெரிந்துகொண்டது. மாசத்துக்கு ஒருமுறை அமாவாசை சோறு போட்டா போதும்.

ஏதாவது ஒரு விஷயத்தை ‘நச்’சின்னு எடுத்துக்கிட்டு அதையே ஒரு கட்டுரையாகவோ, கதையாகவோ எழுதப் பழகவும். அதுக்கப்புறம் ரைட்டர்ஸ் பிளாக்காவது, புடலங்காயாவது.
//

சகா.. அள்ளுங்க, கலக்குங்க.

Anonymous said...

அதெல்லாம் ஒண்ணும் இல்லை, வயசு தான். கல்யாணம் பண்ணிகங்க, அப்பறம் பாருங்க மனைவி அகராதி போட்டே கடையை கட்டிரலாம்.

ஸ்ரீதர் on April 13, 2009 at 11:37 AM said...

வேலன்,மயில் சொல்றது சரின்னு தோணுது.

கார்க்கி on April 13, 2009 at 12:27 PM said...

@மங்களூர்,

தல இது பையன்.. ஹிஹிஹி

*************
@நர்சிம்,

:)))))

****************
@மயில்,

அது இல்லைன்னு தோனுதுங்க..

****************
@ஸ்ரீதர்,

ஒருத்தன மாட்டி விட்றுதல என்ன ஒரு குதுகலம்!!! :))))

***************************

கடைசி பத்திகளில் சிக்கிட்டிங்களோ.. முதல் மூன்று பத்திகளில் யூகிக்க சொல்லி கேட்ட் இருந்தேனே.. யாருமே சொல்லைலயே..

Karthik on April 13, 2009 at 12:47 PM said...

புது டெம்ப்ளேட் சூப்பரப்பு. :)

ரைட்டர்ஸ் ப்ளாக்கா? என்னை விடுங்க. ரைட்டர்ஸை கேளுங்க. :)

Poornima Saravana kumar on April 13, 2009 at 2:08 PM said...

கலக்கல் அண்ணா.............
டெம்ப்ளேட்டை சொன்னேன்:))

மாசற்ற கொடி on April 13, 2009 at 2:39 PM said...

"writer's block" ஆ! - ஸ்போர்ட்ஸ் இல் out of form போலவா ? எழுதணும்னு தோன்றதை எழுத முடியலைனா அதுக்கு என்ன பேரு ?

க க - கருத்து கந்தசாமி
மி r - Mr. Romeo
அ.பா. - தெரியல

அன்புடன்
மாசற்ற கொடி

விக்னேஷ்வரி on April 13, 2009 at 3:44 PM said...

மனசு ஏதோ அலைபாய்ந்துக் கொண்டே இருக்கு. //

அலைகள் ஓய்வதில்லைனு அடுத்த தலைப்பு போடறதுக்குள்ள, வீட்டில சொல்லி, பொண்ணு பார்க்க சொல்லுங்க கார்க்கி. எல்லாம் சரியாகிடும்.
;)

உங்களால நல்லா எழுத முடியும் கார்க்கி. உங்களுடைய பழைய பதிவுகளை எடுத்துப் பாருங்க. இப்போ, எல்லாருக்கும் பிடிக்கணும்னு நீங்க மொக்கைப் பதிவுகளை அதிகமாக்கிட்டீங்க. சீக்கிரமே உங்க கிட்ட இருந்து நல்ல, தனித்துவப் பதிவுகளை எதிர்பார்க்கிறேன் கார்க்கி.

பரிசல்காரன் on April 13, 2009 at 4:10 PM said...

லக்கியின் கமெண்ட் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

சகா... உனக்கு இந்த ப்ளாக் எல்லாம் ஜூஜுபி. You'll go places!

(ப்ளாக் = BLOCK & BLOG Also)

பரிசல்காரன் on April 13, 2009 at 4:11 PM said...

//
உங்களால நல்லா எழுத முடியும் கார்க்கி. உங்களுடைய பழைய பதிவுகளை எடுத்துப் பாருங்க. இப்போ, எல்லாருக்கும் பிடிக்கணும்னு நீங்க மொக்கைப் பதிவுகளை அதிகமாக்கிட்டீங்க. சீக்கிரமே உங்க கிட்ட இருந்து நல்ல, தனித்துவப் பதிவுகளை எதிர்பார்க்கிறேன் கார்க்கி.//

வடிவேலுவோட ரெண்டு டயலாக் ஞாபகம் வருதா சகா உனக்கு?

1) இ.இ.உ.ந.ந ?

2) என்னையும் நம்ம்ம்ம்ம்பி ஐநூறு ரூபா கடன் கேட்கறியேடா..?

(ச்சும்மா ஜாலிக்குப்பா...)

கும்க்கி on April 13, 2009 at 4:31 PM said...

தளத்தை விரிவாக்கி கொள்ளவும்.
படிப்பு,சினிமா,அரசியல்.
ரொம்ப போரடிச்சா ஒரு டூர் போட்டுடலாம் வாங்க அல்லது போங்க.

வெயிலான் on April 13, 2009 at 4:36 PM said...

அகத்தாய்வா....

மிக நல்ல விசயம்.

குசும்பன் on April 13, 2009 at 4:43 PM said...

//மனசு சரியில்லை என்று எழுதினால் நள்ளிரவில் ஜெர்மனியின் இருந்து கால் வருகிறது. லேசா தலைவலிக்குது என்றால் சிங்கப்பூரில் இருந்து கால் வருகிறது. தமிழ்மணம் நட்சத்திரம் ஆகி விட்டேன் என்றால் துபாயில் இருந்து அழைத்து வாழ்த்துகிறார்கள். போரடிக்குது என்று சொன்னால் ஆஸ்திரேலியாவில் இருந்து அழைக்கிறார்கள். //

கோவை சரளா ஒரு படத்தில் சொல்வாற்கள் என்னை சிங்கபூரில் கூப்பிட்டாக , அது இதுன்னு கடுப்பான கவுண்டர் சொல்வார்
என்னை மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக என்னடி ஓவர் சவுண்டு உடுற என்று...

அப்படி காண்டாகிய கவுண்டமணியாக
ஒரு லோக்கல் கால் கூட வராத
குசும்பன்:)

குசும்பன் on April 13, 2009 at 4:46 PM said...

// மனசு ஏதோ அலைபாய்ந்துக் கொண்டே இருக்கு. சரியாயிடும் என்று நானும் காத்துக் கொண்டே இருக்கிறேன்.//

இன்னும் அந்த பெண் ஓகே சொல்லவில்லையா? இருந்தாலும் அந்த பெண் தான் என்று முடிவு செஞ்சுட்டீல்ல விடு தானா வரும்! அதுவரை உறுதியாக இரு.
அம்மாவிடம் சொல்லி விடு எனக்கான ரோஜா தயாராக இருக்கு ஆனால் பறிக்க சமயம் எடுக்கும் என்று!!!

அப்பாடி வெளிநாட்டு கால் இரண்டை கட் செஞ்சாச்சு:)))

கார்க்கி on April 13, 2009 at 5:09 PM said...

@கார்த்திக்,

அந்த மூனு பேரையும் பார்த்த போது உன் நினைவுதான் வந்தது

*************
@பூர்ணிமா,

அடிக்கடி காணாம போயிடற..

***************
@கொடி,

அப்பாடி நீங்களாவது சொன்னிங்களே..

*****************
@விக்னேஷ்வரி,

ரொம்ப நன்றிங்க. :)))

குசும்பன் on April 13, 2009 at 5:10 PM said...

நோ அட்வைஸ் நோ கிரையிங்!

சீக்கிரம் வா!

கார்க்கி on April 13, 2009 at 5:11 PM said...

@பரிசல்,

ஆமாம் சகா.. என்னையும் நம்புது பாரேன் இந்த உலகம்..

நன்றி

***************
@கும்க்கி,

சீக்க்கிரமே வருவேன்னு நினைக்கிறேன்

**************
@வெயிலான்,

நன்றி சகா

**************

@குசும்பரே,

ரோஜாப்பூவா? எனக்கு காலிஃபளவர் கூட கிடைக்காது போலிருக்கு :)))

T.V.Radhakrishnan on April 13, 2009 at 5:20 PM said...

//வடகரை வேலன் said
பையனுக்கு கல்யாண ஆசை வந்திருச்சு.

சீக்கிரமேவ விவாஹப் பிராப்தி ரஸ்து.//

repeateyyyyyyyy

ஜோசப் பால்ராஜ் on April 13, 2009 at 5:54 PM said...

Amma number send thru' mail.

அறிவிலி on April 13, 2009 at 6:20 PM said...

ஒரு நடை ஏழுவை பாத்துட்டு வந்துருங்க.மனசு லேசா ஆயிரும்

pappu on April 13, 2009 at 6:52 PM said...

நெசமாலுமே ஃபீல் பண்ணிருக்கீங்களா?

இல்ல வழக்கம் போல கலாய்க்கிறீங்களா?

dharshini on April 13, 2009 at 6:55 PM said...

டெம்ப்ளேட் சூப்பர்.... எல்லாம் சரியா போயிடும் விடுங்க அண்ணா.. அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணிட்டு..
:)

அன்புடன் அருணா on April 13, 2009 at 7:13 PM said...

என்னப்பா திடீர்னு ஒரு self analysis???
போன பதிவைவிட ரொம்ப நல்லாவே இரு்க்கு!!
அன்புடன் அருணா

தமிழ்ப்பறவை on April 13, 2009 at 10:10 PM said...

என்ன இது சீரியஸ் பதிவா இருக்கு சகா...
இதல்லாம் ஜகஜம்...இன்னொரு புட்டிக்கதைகள் போடுங்க..இல்லை இன்னொரு வலையுலக தர்பார் போடுங்க...
இல்லை இன்னும் அதிகமாக் காதலிங்க...
உங்க பழைய ஃபார்ம் வந்துடும்...
வாழ்த்துக்கள் நண்பரே...

ஆயில்யன் on April 13, 2009 at 10:56 PM said...

//குசும்பன் on April 13, 2009 4:43 PM said...
//மனசு சரியில்லை என்று எழுதினால் நள்ளிரவில் ஜெர்மனியின் இருந்து கால் வருகிறது. லேசா தலைவலிக்குது என்றால் சிங்கப்பூரில் இருந்து கால் வருகிறது. தமிழ்மணம் நட்சத்திரம் ஆகி விட்டேன் என்றால் துபாயில் இருந்து அழைத்து வாழ்த்துகிறார்கள். போரடிக்குது என்று சொன்னால் ஆஸ்திரேலியாவில் இருந்து அழைக்கிறார்கள். //

கோவை சரளா ஒரு படத்தில் சொல்வாற்கள் என்னை சிங்கபூரில் கூப்பிட்டாக , அது இதுன்னு கடுப்பான கவுண்டர் சொல்வார்
என்னை மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக என்னடி ஓவர் சவுண்டு உடுற என்று...

அப்படி காண்டாகிய கவுண்டமணியாக
ஒரு லோக்கல் கால் கூட வராத
குசும்பன்:)
//

குசும்பா உனக்கும் இதே ஹிஸ்டரி ஜியோகிரபிதானா ! அதுசரி :(

சரி வர்ற மிஸ்டு காலையாச்சும் கரீக்ட் பண்ணலாமான்னு பார்த்தா சிஐடி கிராஸ் செக் பண்ணுறானுங்களாம் என்ன கொடுமை :((

Saravana Kumar MSK on April 14, 2009 at 1:06 AM said...

//பின் சில காரணங்களால் எனக்கென்று புதிதாய் எந்த நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளவில்லை நான். தனியாகவே இருக்க பழகி கொண்டேன். பதிவெழுத தொடங்கிய பின்னும் யாரிடமும் அதிக நெருக்கம் காட்டவில்லை.//

என் இனமா..!!

Dr.Rudhran on April 14, 2009 at 5:24 AM said...

just keep going. best wishes

தாரணி பிரியா on April 14, 2009 at 5:53 AM said...

இது வழக்கம் போல கலாய்க்கலைன்னு தெரியுது கார்க்கி. முடிஞ்சா உங்கம்மாவை கொஞ்ச நாள் உங்க கூட வந்து இருக்க சொல்லுங்க. ஏதாவது புது ஊருக்கு போயிட்டு வாங்க சரியாகிடும் கார்க்கி.

தாரணி பிரியா on April 14, 2009 at 5:56 AM said...

ஹேய் ருத்ரன் சாரே சொல்லி இருக்கார் பாருங்க. எல்லாம் சரியாகிடும். புது தமிழ் வருசத்தில் இருந்து புது கார்க்கியா வாங்க‌

கார்க்கி on April 14, 2009 at 10:13 AM said...

@TVR,

வாழ்த்துக்கு நன்றிங்க :))

*************
@ஜோசப்,

9989322884. என் நம்பர்தான். எனக்கு கால் பண்ணி சொல்லுங்க. நனே சொல்லிடறேன் :))

**************
@அறிவிலி,

ஏழு தடவை பார்த்தாச்சு சகா :))

**************
@பப்பு,

நான் எப்ப கலாய்ச்சேன்?

*****************

நீ சொன்னா சரிதான் தர்ஷினி :))

***************
நன்றி அருணா

***************
@தமிழ்ப்பறவை,

மூனாவது மேட்டர் ஓக்கேன்னு
நினைக்கிரேன் :))))

***************
நன்றி ஆயில்யன்

**************
@எம்.எஸ்.கே,

ஆனா உன் அளவுக்கு இல்லப்பா.. யார்கிட்டயும் பேசக்க்கூட மாட்டியாமே நீ

***************
@Dr.ருத்ரன்,

ரொம்ப நன்றி டாக்டர். உங்கள் பின்னூட்டம் உற்சாகத்தை தருகிறது

***************
@தா.பி,

கோவைதான் வரலாம்ன்னு இருக்கேன் :))

Bleachingpowder on April 15, 2009 at 10:46 AM said...

நானே சொல்லனும்னு நினைச்சேன் தல, Non fiction எதாச்சும் எழுதலாமே. இனையத்தில் இப்பொழுதெல்லாம் யாருமே பயணக் கட்டுரைகள் எழுதவதில்லை. உங்க சிங்கபூர் அனுபவங்களை எழுதுங்க தல ரெண்டு வாரம் ஓடிடும், அதுக்குள்ள இப்போ இருக்கிற தடங்கல் சரியாயிடும்.

கணினி தேசம் on April 16, 2009 at 10:41 PM said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...!!


அனா, புலம்பறா மாதிரி பதிவுலகத்துக்கு நன்றி சொன்னவிதம், ரசித்தேன். சகா!

நன்றி.

பட்டாம்பூச்சி on April 22, 2009 at 2:02 PM said...

இதெல்லாம் சகஜமப்பா...!!

 

all rights reserved to www.karkibava.com