Apr 6, 2009

மிஸ்ஸை மிஸ் பண்ண ஏழு


(இதுவரை புட்டிக்கதைகள் படிக்காத நண்பர்கள் இங்கே சென்று ஏழுவையும் அவனது நண்பர்களையும் பற்றி படித்து விட்டு வந்துடுங்க.இது தொடர்கதை அல்ல)

*************************************************

  ஏழுவை இப்பவெல்லாம் அடக்கவே முடிவதில்லை. நாங்கள் இல்லாவிட்டால் வேறு சில ஜூனியர்ஸோடு சென்று தண்ணியடித்து விட்டு வந்துவிடுகிறான்.. மெக்கானிக்கல் மாண்வர்களுக்கு ஐந்தாவது செம்ஸ்டரில் கம்புயூட்டர் லேப் வரும்.ஏழுவுக்கு கம்ப்யூட்டர் என்றால் என்னவென்றே தெரியாது. அன்று மதியம் கம்புயூட்டர் லேப். வழக்கம்போல் பாதி மப்புடன் லேபுக்கு வந்தான்.

உள்ளே வரும்போதே லேசாக ஆடிக்கொன்டு வந்தவனை அமுக்கிக் கொன்டு வந்தேன். வரிசையாக அனைவரும், அந்த புதிதாய் சேர்ந்த 22 வயது மிஸ்ஸிடம் (மேடம் என்றால் ஏழுவுக்கு கோபம் வரும்) அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அதுவும் ஆங்கிலத்தில். ஏழுவின் முறை வந்தது. எழுந்தவன் ஸ்டைலாக சொன்னான் நேம் : செவன் மவுன்டைன், டவுன் : கீ ஃபென்ஸ்(நெய்வேலியாம்). இப்போது மிஸ் முறை வந்தது. அதாவது ஏழுவைப் பார்த்து முறைத்தார்.

சிலபஸில் என்னென்ன லேங்குவாஜ் இருக்கு என்று தெரியுமா என்பதை அவர் ஆங்கிலத்தில் கேட்க, நாலு ப்ளஸ் ரெண்டு அதை சன்னமாக மொழிபெயர்க்க, அஞ்சு ப்ளஸ் ரெண்டு இங்கிலீஷ்லே பதில் சொன்னான். “Now no languages . First year English have.” என்று சொல்லிவிட்டு எங்களைப் பார்த்தான். ரொம்ப சுமாரான ஜோக்கு மச்சி, நெக்ஸ்ட்டு என்றான் பாலாஜி.

ஒரு வழியாக சமாளித்து அமர்ந்தான். பின் கூட்டமாக அந்த மிஸ்ஸை மிஸ் பண்ணாமல் ஃபோலோ செய்தது எங்கள் கிளாஸ். ஒரு மிஷினிடம் நின்றவர், This is server என்றார். அதை எட்டிப் பார்த்த ஏழு சொன்னான் " நாலு இட்லி. ஒரு வடை". வாயைப் பொத்திய ஆறுவின் கைகளை கடித்து விடுவித்துக் கொண்ட தலைவர் சொன்னார், சர்வரிடம் ஆர்டர் செய்றது தப்பா மச்சி?

நல்ல வேளையாக அவரின் காதில் இது விழவில்லை. அடுத்தக் கேள்வியைக் கேட்டார் மிஸ். What is Ram?

ஏழு மட்டுமே கையை தூக்கினான்.Yes proceed என்றார்.

The head portion of the Milling machine is called Ram என்றார் செவன்.

I am asking about computers .

Then why did u ask about Ram என்று கேள்வி பதில் கேட்டவரிடமே பதில் கேள்வி கேட்டான் நாலு ப்ளஸ் மூனு.

கடுப்பான மிஸ் ஏழுவை தனியாக ஒரு சிஸ்டத்தில் அமர்ந்து ஒரு BASIC Program கொடுத்து output எடுக்க சொன்னார்.

ஐந்து நிமிடம் கழித்து , மிஸ் இந்த மிஷின் ஸ்டார்ட் ஆகல என்றான் பத்து மைனஸ் மூனு.

நாங்க வேணும்ன்னா தள்ளட்டுமா ஏழு. வண்டி ஸ்டார்ட் ஆகிடும் என்றான் பாலாஜி.

இருவரையும் முறைத்த மிஸ், ஏழுவைப் பார்த்து Switch on the Monitor என்றார்.

புரியாத ஏழு சொன்னான், அதை மதியமே முடிச்சிட்டேன் மிஸ்.

கோவத்தில் Get out of my class என்றார் மிஸ்.

அதுவும் புரியாத ஏழு மெதுவாக ஆறுவைப் பார்த்து சொன்னான் "நான் என் கிளாஸ்லதான் மச்சி அடிச்சேன்"

சொல்லிக் கொண்டே வெளியே சென்ற ஏழுவை பார்த்து மீண்டும் கேட்டார் மிஸ், வெளியே போ சொன்னா சந்தோஷமா போறீங்க. கிளாஸ் முக்கியமில்லையா?. இந்த முறை தமிழிலே கேட்டார். சற்று மூன்று ப்ளஸ் மூன்றுதலாய் உணர்ந்த ஏழு பதில் சொன்னான்.

அப்பதானே மிஸ் Outstanding Student ஆக முடியும்.

அஜித்தில் அடித்துக் கொண்ட மிஸ் உள்ளே வர சொன்னார். உங்க மரமண்டைல எதுவுமே ஏறாது.கிளாச தொல்லைப் பண்ணாம ஓரமா உட்காருங்க என்றார்.

சோகத்துடன் ஹாஸ்டலுக்கு வந்தவன் பாலாஜியின் அருகே படுக்கப் போனான்.

என்ன மச்சி மறந்திட்டியா?. அவன் தலைல இருக்கிற பேன் உனக்கு ஏறிட போது என்றான் ஆறு.

கடுப்பான பாலாஜி சொன்னான், "இவன் மரமண்டைலதான் எதுவும் ஏறாதுன்னு மிஸ்ஸே சொன்னாங்களே". எதையோ பறிகொடுத்தவன் போல பார்த்த ஏழு கேட்டான்.

அந்த மிஸ் எனக்கு மிஸஸ் ஆகுமா இல்ல‌ மிஸ் ஆயிடுமா மச்சி?

49 கருத்துக்குத்து:

தராசு on April 6, 2009 at 10:12 AM said...

படிச்சுட்டு அப்புறமா வரேன்.

vinoth gowtham on April 6, 2009 at 10:19 AM said...

யாரு சாமி அந்த ஏழு..

பொன்.பாரதிராஜா on April 6, 2009 at 10:28 AM said...

நானே கேக்கலாம்னு இருந்தேன்...புட்டிக்கதைகள் வந்து ரொம்ப நாள் ஆச்சேன்னு....

MayVee on April 6, 2009 at 10:28 AM said...

"vinoth gowtham said...
யாரு சாமி அந்த ஏழு.."

which comes after six....

MayVee on April 6, 2009 at 10:29 AM said...

கார்கி...
உண்மையை சொல்லுங்க அந்த ஏழு நீங்க தானே

பொன்.பாரதிராஜா on April 6, 2009 at 10:30 AM said...

//அஜித்தில் அடித்துக் கொண்ட மிஸ் உள்ளே வர சொன்னார்..

ஹஹா அட்டூழியத்துக்கு ஒரு அளவில்லாம போச்சு...

வித்யா on April 6, 2009 at 10:31 AM said...

சர்வர் மேட்டரும் மானிட்டரும் டாப்பு:)

ஸ்ரீமதி on April 6, 2009 at 10:36 AM said...

Super.. :))))

vinoth gowtham on April 6, 2009 at 10:37 AM said...

//Mayvee said:

"vinoth gowtham said...
யாரு சாமி அந்த ஏழு.."

which comes after six....//

ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

கார்க்கி on April 6, 2009 at 10:46 AM said...

@தராசு,

இன்னுமா படிக்கறீங்க? ரிப்பீட் ஆடியன்ஸ் அதிகமாயிட்டாங்கபா..

***********
@வினோத்,

ஆவ்வ்வ். போய் புட்டிகதைகள் லேபிளில் இருப்பதை படிச்ச்ட்டு வாங்க

*********
@பாரதிராஜா,
/அஜித்தில் அடித்துக் கொண்ட மிஸ் உள்ளே வர சொன்னார்..

ஹஹா அட்டூழியத்துக்கு ஒரு அளவில்லாம போச்சு.//

இதுல நான் அவர கிண்டல் எதுவும் பண்ண்லையே

**************
/ MayVee said...
கார்கி...
உண்மையை சொல்லுங்க அந்த ஏழு நீங்க தா//

அட இல்லப்பா..

***************
/ வித்யா said...
சர்வர் மேட்டரும் மானிட்டரும் டாப்பு://

அஜித் மேட்டர்????????

**************
/ ஸ்ரீமதி said...
Super.. :))))//

ஸ்மைலி போட்டியே

narsim on April 6, 2009 at 10:52 AM said...

I am asking about computers .

Then why did u ask about Ram என்று கேள்வி பதில் கேட்டவரிடமே பதில் கேள்வி கேட்டான் நாலு ப்ளஸ் மூனு
//

கலக்கல் சகா

டக்ளஸ்....... on April 6, 2009 at 10:58 AM said...

இயந்திரவியல் மணவர்கள்ன்னா சும்மாவா?

\\அஜித்தில் அடித்துக் கொண்ட \\

நீங்க அஜித்த இப்பல்லாம் கிண்டலே பண்றதில்லையாமே...!

Venkatesh subramanian on April 6, 2009 at 11:04 AM said...

சர்வர் மேட்டரும் மானிட்டரும் டாப்பு:)
-----ரிப்பிட்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

T.V.Radhakrishnan on April 6, 2009 at 11:10 AM said...

கலக்கல்

கார்க்கி on April 6, 2009 at 11:20 AM said...

@நர்சிம்,

நன்றி தல

*************
@டக்ளஸ்,

இதுல என்ன சகா கிண்டல் இருக்கு? தலன்னுதானே நானும் சொல்ரேன்?

*************
/ Venkatesh subramanian said...
சர்வர் மேட்டரும் மானிட்டரும் டாப்பு:)
-----ரிப்பிட்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்//

வருகைக்கு நன்றி

***************
@டி.வி.ஆர்

நன்றி சார்..

கும்க்கி on April 6, 2009 at 11:31 AM said...

புட்டிகதைகள் அடுத்த ஸ்டேஜுக்கு போயிட் டாப்ல இருக்கு. புதுசா படிக்கிறவங்களுக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கும்.நாளாக சரியாய்விடும்.
வரிக்கு வரி நக்கலும் நையாண்டியும்....கலக்கல் கார்க்கி.

அறிவிலி on April 6, 2009 at 11:41 AM said...

1400/200,140/20,21/3,266/38.... அப்படின்னு பல பேர்ல கூப்பிடலாம் போல இருக்கே...

விஜய் on April 6, 2009 at 11:51 AM said...

Shabbaaaaaaaaaaaa

Kaalailiyae vaa.........

விஜய் on April 6, 2009 at 11:53 AM said...

Etho enakku araiyum koraiyuma therinja orei other language Englishnu nenachutu irukaen, athaiyum ippadi kolapi vitta ......

Yaarappa antha Aelu........

தராசு on April 6, 2009 at 11:59 AM said...

//அதுவும் புரியாத ஏழு மெதுவாக ஆறுவைப் பார்த்து சொன்னான் "நான் என் கிளாஸ்லதான் மச்சி அடிச்சேன்"//

ஏழுவோட நக்கலு தாங்கல.

Karthik on April 6, 2009 at 12:18 PM said...

ha..ha. :)))

superb..!

thala ya chumma irukka vita maateenga??

mythees on April 6, 2009 at 12:21 PM said...

பதிவு Super.............
அஜித் மேட்டர்????????

KISHORE on April 6, 2009 at 12:33 PM said...

அந்த ஏழு மட்டும் என்கிட்ட மாட்னான்...? ஒரு புல்லு வங்கி குடுப்பேன்... வித் ஜின்ஜர் பிக்கில்

gayathri on April 6, 2009 at 12:33 PM said...

nalla iurku pa

Anonymous said...

புட்டி கதைகள் புட்டி அடிக்கற அன்னிக்கு மட்டும் தான் தோணுமோ???

குசும்பன் on April 6, 2009 at 12:41 PM said...

//"இவன் மரமண்டைலதான் எதுவும் ஏறாதுன்னு மிஸ்ஸே சொன்னாங்களே". //

:))) எங்களுக்கு எல்லாம் மிஸ் 1வது வரைதான்:(((

கார்க்கி on April 6, 2009 at 1:07 PM said...

/கும்க்கி said...
புட்டிகதைகள் அடுத்த ஸ்டேஜுக்கு போயிட் டாப்ல இருக்கு//

நன்றி தல. :))

************
@அறிவிலி,

ச்சே.. இத மிஸ் பண்ணிட்டேனே..

************
@விஜய்,
காலைல இல்லைங்க. லேப் மதியம் தான்

************
@கார்த்திக்,

எந்த தலைய சொல்ற கார்த்திக்? ஏழுவையா? :))

************
/ mythees said...
பதிவு Super.............
அஜித் மேட்டர்?//

அப்படியா? எனக்கு தெரியாதுங்க..

கார்க்கி on April 6, 2009 at 1:09 PM said...

/ KISHORE said...
அந்த ஏழு மட்டும் என்கிட்ட மாட்னான்...? ஒரு புல்லு வங்கி குடுப்பேன்... வித் ஜின்ஜர் பிக்கி//

அவனுக்கு ஃபேவரிட் லெமன் பிக்கிள்

******************
நன்றி காயத்ரி

******************
/ mayil said...
புட்டி கதைகள் புட்டி அடிக்கற அன்னிக்கு மட்டும் தான் தோணுமோ??//

அப்பதானே அது புட்டீகதைகள்? சரி நீங்க குட்டிக்கதைகள் எழுதுங்க. ஐ மீன் ஸ்மால் ஸ்டோரி

*************
// குசும்பன் said...
//"இவன் மரமண்டைலதான் எதுவும் ஏறாதுன்னு மிஸ்ஸே சொன்னாங்களே". //

:))) எங்களுக்கு எல்லாம் மிஸ் 1வது வரைதான்:((//

மிஸ்ஸ ரொம்ப மிஸ் பண்றீங்களா தல?

Anonymous said...

ஏழு back feed போட்டா எப்படி இருக்கும்னு யோசிக்கறேன். அதான் பின்னூட்டம்

ubbus on April 6, 2009 at 3:33 PM said...

karki

kalakkura po, Namma hero eluvukkku ithalllam theriyama

LOSHAN on April 6, 2009 at 3:52 PM said...

ஐயோ முடியலே.. ஒண்ணாம் வகுப்பு கணக்குப் பாடம் மறுபடி படிச்ச மாதிரி ஒரு பீலிங்..

அஜித்தில அடிச்சது நச்(சு)..

அந்த மிஸ் இப்ப இருக்கிறது கீழ்ப்பாக்கதிலயா?

தமிழ் பிரியன் on April 6, 2009 at 4:02 PM said...

நிறைய டயம் எடுத்து எழுதி இருப்பீங்க போல..சூப்பரா இருக்கு!

Suresh on April 6, 2009 at 4:37 PM said...

மச்சான் சூப்பர்

Suresh on April 6, 2009 at 4:38 PM said...

find ஏழு and replace all ஏழு with கார்க்கி

தத்துபித்து on April 6, 2009 at 4:52 PM said...

varungala muthalvar annan aaru+1 valga ! valga !

akila ulaga annan " 7 " rasigar mantram.

கார்க்கி on April 6, 2009 at 5:50 PM said...

வாங்க சின்ன அம்மிணி

*************
// ubbus said...
karki

kalakkura po, Namma hero eluvukkku ithalllam theriyama//

cpt சுப்புதானே இது??

**************
@லோஷன்,
//அஜித்தில அடிச்சது நச்(சு)//

தப்பா புரிஞ்சிக்க போறாங்க சகா

*************
// தமிழ் பிரியன் said...
நிறைய டயம் எடுத்து எழுதி இருப்பீங்க போல..சூப்பரா இருக்//

இல்லையே.. வழக்கம் போல தான்

****************
நன்றி சுரேஷ்

நன்றி தத்து பித்து

தர்ஷன் on April 6, 2009 at 6:34 PM said...

அருமை
ஏழு எப்போதும் ஞாபகத்தில் இருககும் அருமையான நகைச்சுவை பாத்திர படைப்பு

pappu on April 6, 2009 at 6:45 PM said...

ஏழோட கதைகளுக்கே ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் போலயே!

அத்திரி on April 6, 2009 at 8:06 PM said...

//இருவரையும் முறைத்த மிஸ், ஏழுவைப் பார்த்து Switch on the Monitor என்றார்.புரியாத ஏழு சொன்னான், அதை மதியமே முடிச்சிட்டேன் மிஸ்.
கோவத்தில் Get out of my class என்றார் மிஸ்.அதுவும் புரியாத ஏழு மெதுவாக ஆறுவைப் பார்த்து சொன்னான் "நான் என் கிளாஸ்லதான் மச்சி அடிச்சேன்//

வரிக்கு வரி ரசித்தேன் ஏழுவின் லீலையை

affable joe on April 6, 2009 at 9:34 PM said...

சகா என்ன இது 4 +2 ,10-3 அஜித்தில் அடித்த மிஸ் ,ஆனாலும் ஏழு கலக்குகிறார் எப்போதும் போல.

ஆதிமூலகிருஷ்ணன் on April 6, 2009 at 10:27 PM said...

வரிக்கு வரி கலக்கல்.. கார்க்கி.! (முந்தைய பின்னூட்ட்டம்போடாத பதிவுகளையும் படித்தாயிற்று)

dharshini on April 6, 2009 at 10:41 PM said...

பதிவு கலக்கல் அண்ணா.
:)

//அஜித்தில் அடித்துக் கொண்ட மிஸ் உள்ளே வர சொன்னார்..//

இது உங்களுக்கெ கொஞ்சம் ஓவரா இல்ல?

தமிழ்ப்பறவை on April 6, 2009 at 11:30 PM said...

பதிவே கலக்கல்தான் இருந்தாலும், எல்லாத்துக்கும் அஜித்தா இருக்கிறது
”//அஜித்தில் அடித்துக் கொண்ட மிஸ் உள்ளே வர சொன்னார்.//”- இதுதான்...
அடுத்து ஏழுவோட பேரை ஏகப்பட்ட விதத்துல சொன்ன விதம்.:-)

தாரணி பிரியா on April 7, 2009 at 10:10 AM said...

இந்த தடவை ஏழு அடிச்சு ஆடிட்டார். சூப்பர்

கார்க்கி on April 7, 2009 at 10:50 AM said...

நன்றி தர்ஷன்

நன்றி பப்பு

நன்றி அத்திரி

நன்றி ஜோ

//ஆதிமூலகிருஷ்ணன் said...
வரிக்கு வரி கலக்கல்.. கார்க்கி//

வாங்க சகா. ஃப்ரீ ஆயாச்சா?

கார்க்கி on April 7, 2009 at 10:52 AM said...

/ dharshini said...

//அஜித்தில் அடித்துக் கொண்ட மிஸ் உள்ளே வர சொன்னார்..//

இது உங்களுக்கெ கொஞ்சம் ஓவரா இல்ல//

இதுலல் என்ன இருக்கு? நான் எதுவும் கிண்டல் செய்யலையே
*********************
நன்றி தமிழ்ப்பறவை

****************

நன்றி தா.பி :))


************

விக்னேஷ்வரி on April 7, 2009 at 5:21 PM said...

ஆபிஸ்ல எல்லாரும் முறைக்குறாங்க நான் சிஸ்டத்த பார்த்து, சிரிக்குரத பார்த்து. As usual kalakkal dialogues. :)

பாண்டி-பரணி on April 7, 2009 at 6:39 PM said...

" நாலு இட்லி. ஒரு வடை". வாயைப் பொத்திய ஆறுவின் கைகளை கடித்து விடுவித்துக் கொண்ட தலைவர் சொன்னார், சர்வரிடம் ஆர்டர் செய்றது தப்பா மச்சி?//

இந்த வரியில சிரிக்காம இருக்கவே முடியாது :)........:)..........

கலக்கல் சகா

வால்பையன் on April 9, 2009 at 8:53 PM said...

//The head portion of the Milling machine is called Ram என்றார் செவன்.//

சகா இதுக்கு தமிழ் அர்த்தம் சொல்லுங்க சகா!

மற்ற ஜோக்கையெல்லாம் ரசிக்க முடிஞ்ச எனக்கு இது மட்டும் மிஸ் ஆகிறுச்சு!

மிஸ்ஸஸ் ஆகாட்டியும் பரவாயில்லை! புரிஞ்சிகிட்டா போதும்!

 

all rights reserved to www.karkibava.com