Apr 3, 2009

காக்டெய்ல் (நமீதா ஸ்பெஷல்)


1) கோவம் கூட, ஜெவுடன் சேர்ந்தா மட்டும் இனிப்பாயிடும். எப்படி தெரியுமா?

2) 3 G A PA 6. இத எப்படிங்க ஒன்னா சேர்த்து படிப்பிங்க?

3) மெத்த  - இத மட்டும் கரெக்டா படிங்க. நீங்க தான் நிறைய படிச்சவருன்னு உலகம் சொல்லும். எப்படி?

4) சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். நமீதாவுக்கு இது எப்படி செட்டாகும்?

விடைகள் நடுவில்..

*************************************************

  ஒன்னுமில்லைங்க. இந்த மாதிரி மொக்கை போட்டாதான் பதிவுலகத்தில் நிக்க முடியும்னு (இல்லன்னா உக்கார்ந்துக்க வேண்டியதுதானே) என்று தெரிய இரண்டு மாதம் ஆனது. அதன் பின் போட்ட அசுர மொக்கையால், ஒரு லட்சம் ஹிட்ஸ் ஆறே மாதங்களில் வந்தது.(எனக்கு இல்லைங்க. பதிவுக்கு) இதோ அதைத் தொடர்ந்து 200 பின் தொடர்பவர்கள்.(அதாம்ப்பா Followers) . பெண் பெயர் கொண்ட பிரபல பதிவரை சந்தித்த போது சொன்னார், இப்போது ஃபாலொயர்ஸ் தான் பிரபலத்திற்கான அளவுகோல் என்று. அவர் சொல்வது எல்லாம் நிஜமில்லை எனபதை நிரூபிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

200ஐ முதலில் தொட்ட பரிசல் பதிவு போட்டு சொன்னதால், நானும் அதை ஃபாலோ செய்கிறேன். ஃபாலோயர்ஸ் விஷயத்தில் பரிசலை ஃபாலோ பண்ணுவதால் அவர் சொன்னதையும் ஃபாலோ செய்கிறேன்.

நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே. பல புதிய பதிவர்களை தேடிப் போனால் அவர்கள் விருப்ப பட்டியலில் என் பெயரும். தினம் தினம் மகிழ்ச்சியான தருணங்களை தந்துக் கொண்டிருக்கும் பதிவுலகத்திற்கு நன்றியைத் தவிர வேற என்ன சொல்ல முடியும்? (மொக்கையை நிறுத்திக்கனோ சொல்லாதீங்க ப்ளீஸ்)

*************************************************

விடைகள்:

1) கோவம்ன்னா Angry. ஜென்னா J. J+Angry = jangry. (சரி சரி இதுக்கே கோவப்பட்டா எப்படி? நெக்ஸ்ட்)

2) 3 G A PA 6.  மூனு ஜி அ பா ஆறு.

  சேர்த்து படிங்க.  “மூஞ்சியப்பாரு”

3) மெத்த படிச்சவருன்னு சொன்னா நிறைய படிச்சவருன்னுதானே அர்த்தம்?

4) சின்ன சின்ன உடைகள் தானே அவங்க வாழ்க்கைல பெரிய மாற்றத்த கொடுத்தது? (அது ஆக்ச்சுவலா பெரிய உடைதான். ஆனா அவங்க பெரிய உடம்பு அத சின்னதா காமிச்சது. அதனால் பெரிய விஷயம்தான் மாற்றத்த கொடுத்துச்சு சொல்றவங்க பேருதான் விதண்டாவாதிகள்)

*************************************************

பாருங்க. மொக்கையவே மொக்கையா எழுதறதுக்கு நம்மள விட்டா வேற யாரு இருக்கா? சீக்கிரம் சேராதவங்க எல்லாம் சேர்ந்துக்குங்கப்பா.

************************************************

இப்ப எல்லாம் கடவுள் நம்பிக்கை அதிகம் ஆயிடுச்சுங்க. எனக்காக இல்ல. என் அம்மாவுக்காக. அவங்களுக்கு அழகா, அம்சமா, நல்ல செல்வ செழிப்பா, கலரா, அடக்கமா, ஒரு மருமகள் கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன். நீங்களும் வேண்டிக்கோங்க. ஆவ்வ்வ்வ். முக்கியமானது. சின்ன மருமகள். அத மறந்துடாதீங்க

*************************************************

தலைப்பு ஏண்டா இப்படின்னு யோசிச்சிங்களா? ஒரே ஒரு மேட்டர், ச்சே, விஷயம்தான் நமீதாவ பற்றி இருக்கு. அப்புறம் எப்படி நமீதா ஸ்பெஷல்? நம்ம சகா ஒருத்தர் சொன்னாரு, நமீதாவுக்கு மார்க்கெட்(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லையே) டவுன் ஆயிடுச்சாம். பதிவுலகத்தில் அது உண்மையான்னு பார்க்கத்தான். இன்னைக்குன்னு பார்த்து அவியல்,கொத்து பரோட்டா, அனுஜன்யாவின் பற்றியும் பற்றாமலும் என நிறைய கலக்கல் பதிவுகள் வந்திருக்கு. பார்ப்போம். நம்மள சூடாக்கற நமீதாவை மக்கள் சூடாக்கறாங்களான்னு.

*************************************************

கட்சீயா ஒரே ஒரு தத்துவம்ப்பா

வாழ்க்கை ஒரு பனமரம். ஏறினா நுங்கு. விழுந்தா சங்கு.

68 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on April 3, 2009 at 10:37 AM said...

1:)

தாரணி பிரியா on April 3, 2009 at 10:40 AM said...

மொக்கையை விட மொக்கை அப்படின்றதுக்கு யாராவது ஒரு வார்த்தை கண்டுபிடியுங்களேன் ப்ளீஸ்

தாரணி பிரியா on April 3, 2009 at 10:49 AM said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா on April 3, 2009 at 10:50 AM said...

நல்ல பொண்ணா கிடைக்க வாழ்த்துக்கள் ‍ ‍ இந்த தடவை வாழ்த்து உங்களுக்குதான்.

mythees on April 3, 2009 at 10:53 AM said...

மொக்கை sir thankamudiyala

Anonymous said...

ஆரம்பிச்சாச்சா??

மண்குதிரை on April 3, 2009 at 10:57 AM said...

வணக்கம்.
வாழ்த்துக்கள்.

mythees on April 3, 2009 at 11:02 AM said...

next time varum pothu doctor.........
udan thaan.........

ஸ்ரீமதி on April 3, 2009 at 11:04 AM said...

கஷ்டம் :))))

கார்க்கி on April 3, 2009 at 11:08 AM said...

@தா.பி,

அதுக்கு பேருதான் கார்க்கி. :))

****************
@மைதீஸ்,

நல்ல மொக்கைக்கு அடையாளமே தாங்க முடியாம போறதுதாங்க

****************
@தூயா,

நான் எப்போ நிறுத்தினேன்?

***************
வணக்கம் மண்குதிரை

****************
@ஸ்ரீமதி,

கஷ்டத்திலும் சிரிக்கிற பாரு. நீ நல்லா வருவ.. :)))

விஜய் on April 3, 2009 at 11:20 AM said...

HAHAHAHAHA
Sema kalakkal Cocktail ma

Weekend naalae jolly posts thaan
polarukku

Kalakkunga karki

நமிதா...! on April 3, 2009 at 11:20 AM said...

ஏன் இந்த கொல வெறி..?

:)

விஜய் on April 3, 2009 at 11:20 AM said...

Ithu Mokkainu yaar sonna???
evlo informatic'a sollirukeenga
Thanksngnaaaaa

நமிதா...! on April 3, 2009 at 11:22 AM said...

நான் என்ன பண்ணுவது மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காதுனு பழமொழி தெரியாதா உங்களுக்கு :)

நமிதா...! on April 3, 2009 at 11:23 AM said...

விஜய் said...

Namitha spl nu sollitu kannamoochi aaditengalae pa
/

அதான் நாங்க ஸ்பெசலா ஆடுறோமில இங்க
அப்புறம் என்னா?

விஜய் on April 3, 2009 at 11:24 AM said...

//1) கோவம்ன்னா Angry. ஜென்னா J. J+Angry = jangry. (சரி சரி இதுக்கே கோவப்பட்டா எப்படி? நெக்ஸ்ட்)

2) 3 G A PA 6. மூனு ஜி அ பா ஆறு.

சேர்த்து படிங்க. “மூஞ்சியப்பாரு”

3) மெத்த படிச்சவருன்னு சொன்னா நிறைய படிச்சவருன்னுதானே அர்த்தம்?//


Utkaarnthu yosipeenglo???
illa engayachu suttatha???

நமிதா...! on April 3, 2009 at 11:24 AM said...

கார்க்கியை கட்டிக்க எனக்கு ஒகே தான்

கார்க்கிக்கு ஒகேவா?


:)

விஜய் on April 3, 2009 at 11:24 AM said...

Sutta pazhama irunthalum paravala
Jangry mathiri nallathaan irukku

நமிதா...! on April 3, 2009 at 11:25 AM said...

//1) கோவம்ன்னா Angry. ஜென்னா J. J+Angry = jangry. (சரி சரி இதுக்கே கோவப்பட்டா எப்படி? நெக்ஸ்ட்)
//


யோவ் நல்லா வாயில வருது..!!!


:)

விஜய் on April 3, 2009 at 11:25 AM said...

//நமிதா...! said...
கார்க்கியை கட்டிக்க எனக்கு ஒகே தான் கார்க்கிக்கு ஒகேவா?//

Try pannunga...... ponnu thedratha kelvi pattaen

நமிதா...! on April 3, 2009 at 11:27 AM said...

ஹாய் விஜய் என்னோட ஆட வரியா...!!

நமிதா...! on April 3, 2009 at 11:29 AM said...

ஹாய் விஜய் நீங்க பா.விஜயா இல்லை வில்லு விஜயா?பா.விஜய்னா ஒகே

வில்லு விஜய் னா யோசிக்கனும்

:)

விஜய் on April 3, 2009 at 11:35 AM said...

//பா.விஜய்னா ஒகே
வில்லு விஜய் னா யோசிக்கனும்//

mathi solliteenga....
Villu Vijay thaan neengana konjam yosikkanum....

Bleachingpowder on April 3, 2009 at 11:35 AM said...

//ஃபாலோயர்ஸ் விஷயத்தில் பரிசலை ஃபாலோ பண்ணுவதால் அவர் சொன்னதையும் ஃபாலோ செய்கிறேன்.
//

அவரும் உலக படம் பார்த்து விமர்சணம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க, நீங்க எப்ப ஆரம்பிக்க போறீங்க, ரசிகன், கோயமுத்தூர் மாப்பிளைல இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க தல :)

விஜய் on April 3, 2009 at 11:38 AM said...

//ஹாய் விஜய் என்னோட ஆட வரியா...!!//

Fans kaaga.......
Item no'a venumna adalam

Anonymous said...

இதை விட வெளிபடைய யாராலும் பொண்ணு தேட சொல்ல முடியாது, என்ன கண்ணு வீட்டில் யாரும் கண்டுக்க மாட்டேனு சொல்ராங்கள? அட்ரஸ் சொல்லு நாங்க சிபாரிசு பண்றோம், இல்லன ஆட்டோ வாவது அனுப்பறோம்.

வெயில் ரொம்ப ஜாஸ்தியோ? நமீதா மேட்டர இருக்கு எங்க பாத்தாலும். தாங்க முடியலடா சாமி.

விஜய் on April 3, 2009 at 11:45 AM said...

OOOPs sorry maranthutaen pa

CONGRATS FOR YOURS 200 FOLLOWERS

GREAT GOING KARKI

VAAZHTHUKKALH

லக்கிலுக் on April 3, 2009 at 11:47 AM said...

//அதன் பின் போட்ட அசுர மொக்கையால், ஒரு லட்சம் ஹிட்ஸ் ஆறே மாதங்களில் வந்தது.(எனக்கு இல்லைங்க. பதிவுக்கு) இதோ அதைத் தொடர்ந்து 200 பின் தொடர்பவர்கள்.(//

வாழ்த்துக்கள் சகா!

அன்புடன் அருணா on April 3, 2009 at 12:08 PM said...

//வாழ்க்கை ஒரு பனமரம். ஏறினா நுங்கு. விழுந்தா சங்கு.//
இந்தப் பன்ச்தாம்பா உன்னை நிக்க வைக்குது!!!!
அன்புடன் அருணா

Thusha on April 3, 2009 at 12:10 PM said...

அண்ணா மொத்தமா எத்தனை வாழ்த்து சொல்லுறது தெரியலா

ஆனாலும் இந்த பதிவுகளா எனக்கு உங்க தத்துவம் தன் ரொம்ப பிடித்து இருக்கு ஹஹஹாஹ்ஹ

பரிசல்காரன் on April 3, 2009 at 12:51 PM said...

வாழ்த்துகள் சகா/

கார்க்கி on April 3, 2009 at 1:11 PM said...

வாழ்த்துக்கு நன்றி லக்கி, பரிசல், துஷா மற்றும் அன்புடன் அருணா..

குத்தாட்டதிற்கு நன்றி நமீ மற்றும் விஜய்..

*************************
// mayil said...
இதை விட வெளிபடைய யாராலும் பொண்ணு தேட சொல்ல முடியாது//

ஆமாங்க. அதுவும் எத்தனை தடவ சொல்ரது?

*********************
//Bleachingpowder said...
//ஃபாலோயர்ஸ் விஷயத்தில் பரிசலை ஃபாலோ பண்ணுவதால் அவர் சொன்னதையும் ஃபாலோ செய்கிறேன்.
//

அவரும் உலக படம் பார்த்து விமர்சணம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க, நீங்க எப்ப ஆரம்பிக்க போறீங்க, ரசிகன், கோயமுத்தூர் மாப்பிளைல இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க தல //

எடுத்த உடனே அந்த அளவுக்கு போக கூடாதுங்க. முதல்ல பாபா, குசேலன்னு ஆரம்பிக்கனும்

கணினி தேசம் on April 3, 2009 at 1:15 PM said...

//ஒரே ஒரு தத்துவம்ப்பா வாழ்க்கை ஒரு பனமரம். ஏறினா நுங்கு. விழுந்தா சங்கு.//

நீர் பெரிய மொக்கை ஞானி.. ச்சீ...தத்துவ ஞானி !!

தராசு on April 3, 2009 at 1:35 PM said...

சரி, சரி, கல்யாண ஆசை வந்துருச்சு, பாவம் யார் அந்த தியாகியோ

vinoth gowtham on April 3, 2009 at 1:42 PM said...

பயங்கர மொக்கை தலைவா..

அமிர்தவர்ஷினி அம்மா on April 3, 2009 at 2:02 PM said...

வாழ்த்துக்கள்,
ஃபாலோயர் உங்களுக்கு கிடைச்சதுக்கும்,
சீக்கிரமே நீங்க ஃபாலோயர் ஆகப் போறதுக்கும் சேர்த்து.

கார்க்கி on April 3, 2009 at 2:35 PM said...

@கணிணிதேசம்,

ஞானியா? நோ நோ பேட் நேர்ட்ஸ்..

***************
/ தராசு said...
சரி, சரி, கல்யாண ஆசை வந்துருச்சு, பாவம் யார் அந்த தியாகி//

நடத்துங்க...

***************
/ vinoth gowtham said...
பயங்கர மொக்கை தலை//

ஆவ்வ்வ்.. என்னங்க? உங்க தலையவே இப்படி சொல்றீங்க? (ச்சும்மா)

*****************
/அமிர்தவர்ஷினி அம்மா said...
வாழ்த்துக்கள்,
ஃபாலோயர் உங்களுக்கு கிடைச்சதுக்கும்,
சீக்கிரமே நீங்க ஃபாலோயர் ஆகப் போறதுக்கும் சேர்த்து//

:)))))))))))))

shabi on April 3, 2009 at 2:46 PM said...

விஜய் SILENT சொன்னப்ப எங்க ஆள காணூம்

வால்பையன் on April 3, 2009 at 2:48 PM said...

//கோவம் கூட, ஜெவுடன் சேர்ந்தா மட்டும் இனிப்பாயிடும். எப்படி தெரியுமா?//

அது ஜாங்கிரி ஆகிவிடுவதால்

வால்பையன் on April 3, 2009 at 2:49 PM said...

//3 G A PA 6. இத எப்படிங்க ஒன்னா சேர்த்து படிப்பிங்க?//

பழய எஸ்.எம்.எஸ் ஜோக்கு
மூன்சியபாரு!

வால்பையன் on April 3, 2009 at 2:49 PM said...

மெத்த - இத மட்டும் கரெக்டா படிங்க. நீங்க தான் நிறைய படிச்சவருன்னு உலகம் சொல்லும். எப்படி?//


அத படிக்காட்டியும் நாங்க ”மெத்த” படித்த மேதாவிங்க தான்

வால்பையன் on April 3, 2009 at 2:50 PM said...

//சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். நமீதாவுக்கு இது எப்படி செட்டாகும்?//

சின்ன சின்ன உடை தானே!

மணிகண்டன் on April 3, 2009 at 3:00 PM said...

ராமநாதபுரம் தொகுதில ஜே கே ஆர் போட்டியிட தலைமையிடம் மனு கொடுத்து இருக்காரு. நேர்காணல்ல வேற பங்கு எடுத்து இருக்காரு.

ஆனா அத பத்தி உங்க சங்கத்துலேந்து ஒரு பதிவும் வரல.

prakash on April 3, 2009 at 3:17 PM said...

//நமீதாவுக்கு மார்க்கெட்(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லையே)//

ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லன்னாலும் நாங்களா ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடதான்
படிப்போம்

Anonymous said...

திருந்த மாட்டியா? கலயாணம் என்பது இக்கரைக்கு அக்கறை பச்சை. இதுக்குதான் ஒரு பொன்மொழி பத்தி போட்டு இருக்கேன். ஏனுங்க உங்க சுதந்திரத்தை அடகு வைக்க எவ்வளவு ஆசை?

SK on April 3, 2009 at 3:47 PM said...

நமீதா ஜெயிச்சுடாங்க போல :)

முரளிகண்ணன் on April 3, 2009 at 3:54 PM said...

வாழ்த்துக்கள் சகா

கார்க்கி on April 3, 2009 at 4:21 PM said...

// shabi said...
விஜய் SILENT சொன்னப்ப எங்க ஆள காணூ//

தலைவர் தான் சைலண்ட் சொன்னாருல்ல. அதான் அமைதியா இருந்தோம்..

****************
பொறுப்பா பதில் சொன்ன வால் வாழ்க..

**************
@மணிகண்டன்,

சங்கத்த போய் பாருங்க சார். அதெல்லாம் போட்டாச்சு

***************
@மயில்,

அதுக்குன்னு கல்யானம் பண்ணாமலே இருந்தா எல்லா பெண்களும் லவ் பண்ண சொல்லி தொல்ல பண்றாங்களே.. நான் என்ன செய்யா?

*************
@எஸ்.கே,

இன்னும் சூடு ஆகலையே சகா

***********

நன்றி முரளி

நிஜமா நல்லவன் on April 3, 2009 at 4:40 PM said...

ஹா...ஹா...ஹா...

Anbu on April 3, 2009 at 5:02 PM said...

நன்றாக இருக்கிறது அண்ணா..
உங்கள் மொக்கைப் பதிவு

VIKNESHWARAN on April 3, 2009 at 5:15 PM said...

nice thathuvam....

prakash on April 3, 2009 at 5:56 PM said...

//@மணிகண்டன்,

சங்கத்த போய் பாருங்க சார். அதெல்லாம் போட்டாச்சு

***************
@மயில்,

அதுக்குன்னு கல்யானம் பண்ணாமலே இருந்தா எல்லா பெண்களும் லவ் பண்ண சொல்லி தொல்ல பண்றாங்களே.. நான் என்ன செய்யா//

:))) ஏன்? ஏன்? ஏன்?

Karthik on April 3, 2009 at 6:12 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி. :)

நான் பார்த்தசாரதி கோவில் பத்தி சொன்னதை இவ்வளவு சீரியஸா எடுத்துப்பீங்கன்னு நினைக்கவில்லை. ;)

அத்திரி on April 3, 2009 at 7:05 PM said...

கலக்கு சகா...... நான் அனுப்பிய மெயில் பாத்தியா?

dharshini on April 3, 2009 at 7:13 PM said...

பதிவு சூப்பர், அதைவிட இன்றைய தத்துவம் சூப்பர்.
// நான் பார்த்தசாரதி கோவில் பத்தி சொன்னதை இவ்வளவு சீரியஸா எடுத்துப்பீங்கன்னு நினைக்கவில்லை //
ஹா ஹா ஹா :)

Venkatesh subramanian on April 3, 2009 at 8:04 PM said...

(கார்க்கி said...நல்ல மொக்கைக்கு அடையாளமே தாங்க முடியாம போறதுதாங்க)
சத்தியமா தாங்க முடியலை சாமி

அறிவிலி on April 3, 2009 at 8:49 PM said...

வாழ்த்துகள்

பாலராஜன்கீதா on April 3, 2009 at 9:25 PM said...

//அவங்களுக்கு அழகா, அம்சமா, நல்ல செல்வ செழிப்பா, கலரா, அடக்கமா, ஒரு மருமகள் கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன்.//
இது புரியுது.

//நீங்களும் வேண்டிக்கோங்க. ஆவ்வ்வ்வ். முக்கியமானது. சின்ன மருமகள். //
இது புரியலையே
:-)

Cable Sankar on April 3, 2009 at 11:10 PM said...

சீக்கிரமே விவாஹ ப்ராப்திரஸ்து..

விஜய் on April 4, 2009 at 10:41 AM said...

60 ma

SASee on April 4, 2009 at 2:57 PM said...

உங்களுக்கு பிடிச்சா கமெண்ட் போடுங்க.. உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க.. நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்...

:)
x-(
:P
:)

SASee on April 4, 2009 at 2:58 PM said...

3 G A PA 6.

கும்க்கி on April 4, 2009 at 6:28 PM said...

கார்க்கி மொக்கை மக்கா வாழ்க நீவிர் பல்லாண்டு.
இப்படியா நம்ம மக்களை சோதனைக்குள்ளாக்குவது?
எனக்கு லேசா தலை சுத்தலா இருக்கு.

MayVee on April 4, 2009 at 6:49 PM said...

:-))

தமிழ்ப்பறவை on April 5, 2009 at 12:06 AM said...

மொக்கையாயிருந்தாலும் முதலிரண்டும் எனக்குப் புதுசுதான். .நல்லது மேல வச்சுக்க...good keep it up

வித்யா on April 5, 2009 at 6:09 PM said...

கல்யாணம் பண்ணிக்கோ. சங்கு கன்பர்ம்:)

pappu on April 5, 2009 at 9:30 PM said...

கார்க்கி, செலவே இல்லாம மணமகள் தேவை விளம்பரத்த ஒவ்வொரு பதிவுலயும் செஞ்சுக்கிட்டு இருக்கீங்க!

Anonymous said...

//"கார்க்கி, செலவே இல்லாம மணமகள் தேவை விளம்பரத்த ஒவ்வொரு பதிவுலயும் செஞ்சுக்கிட்டு இருக்கீங்க!"//

repeat.............

 

all rights reserved to www.karkibava.com