Apr 14, 2009

Anitha calling..


   பாதி வரை எரிந்து சாம்பலான சிகரெட்டின் முனை போல சுருண்டு கிடந்தான் மதன்.  புதிதாய் மாற்றி அமைக்கப்பட்ட சைடு அப்பர் அவனுக்கு தோதாக இல்லை. மேலும் ரயிலின் தடக் தடக் சத்தத்தை அவனது இதய துடிப்பு வெல்வதையும் அவன் விரும்பவில்லை. தெலுங்கில் ஏதோ சொல்லிக் கொண்டே கைகளை மேலே தூக்கிய பிச்சைக்கரானின் குடுவைக்குள் தன்னையே போட முடியுமா என்று எட்டிப் பார்த்தான். இடது கையில் கெட்டியாய் பிடித்திருந்த செல்ஃபோன் மீது கண் பட்டதும் உள்ளிழுத்துக் கொண்டான்.

  இன்னும் வரவில்லை அழைப்பு. துல்லியமாய் தெரிந்த TFT displayல் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் மது. அந்த வசீகர சிரிப்பையும் மீறி இடது ஓரத்தில், இந்திய பொருளாதாரம் போல மேலும் கீழும் ஏறி இறங்கும் டவரையே வெறித்துக் கொண்டிருந்தான். சிக்னல் கிடைக்காமல் போகும் சமயங்களில் தட்டிப் பார்த்தான். அது கோவத்தின் வெளிப்பாடா அல்லது நோக்கியா இணையதளத்தில் கொடுக்கப்பட்ட டிப்ஸா எனத் தெரியவில்லை. மணி 12ஐ தாண்டி இருந்தது.

“Send me SMS if i am not reachable" .

  sent items ல் இருந்த அதே மெசேஜை பத்தாவது முறையாக ஃபார்வர்ட் செய்தான். “Message sent"  என்று சொல்லி தன் மீது எந்த தவறும் இல்லை என வாக்குமூலம் தந்தது ஏர்டெல் சேவை. மீண்டும் sent itemsக்கு சென்று மதுவிற்குத்தானே அனுப்பினோம் என்று தன் பக்க நியாயத்தை உறுதி செய்து கொண்டான். காரணமே இல்லாமால் அந்த நடு இரவில் இறங்கி சென்று சார்ஜ் செய்தான். ஐந்தே நிமிடத்தில் Battery full என்று காட்டியது. தூக்கம் வராமல் முன்தினம் நடந்ததை மெல்ல அசைப் போட்டான்.

மது.

என்ன?

நான் வேற ஒன்னும் கேட்கல. அடிக்கடி ஃபோன் செய். அது போதும்.

புரிஞ்சிக்கோ மதன். என்னால் முடியறப்ப கண்டிப்பா செய்றேன்.

நான் என்ன அரை மணி நேரமா பேச சொல்றேன் ஜஸ்ட் 2 மினிட்ஸ்.

ம்ம்.. சரி.

முடியலன்னா ஒரு எஸ்.எம்.எஸ். அவ்ளோதாம்ப்பா.

ம்ம்

என்ன. எல்லாத்துக்கும் ம்ம் னு சொன்னா என்ன அர்த்தம்?

கிளம்பறீயா? ட்ரெய்னுக்கு டைம் ஆச்சு.

ட்ரெய்னிக்குத்தானே ஆச்சு. எனக்கு இல்லையே.

ஜோக்கா? Be serious மதன். ஒழுங்கா போய்ட்டு வா.

எனக்கு போகவே பிடிக்கல. ஒரு மாதிரி இருக்குடா.

எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்பறேன். (வேகமாக நடந்தாள்)

ப்ளீஸ். கால் பண்ண மறக்காத. அது மட்டும் போதும். (கத்தினான்)

   இரண்டு கைகளிலும் இருந்த லக்கேஜ் அவன் கண்களை துடைக்க இடைஞ்சலாய் இருந்தது. அது மட்டுமல்ல நகரத் தொடங்கிய ரயிலிலும் ஏறும்போதும் தொல்லை தந்தது. பெர்த்தை கண்டுபிடித்து பைகளை வைத்துவிட்டு Compose செய்தான்.“Send me SMS if i am not reachable". அப்போதுதான் முதல் முறை அந்த புறா பறந்தது.

விடியலை அறிவிக்க வந்த சூரியன் மதனைக் கண்டு ஹாய் சொல்லிப் போனது. அப்போதும் அந்த வசீகர சிரிப்பிலே மூழ்கி கிடந்தான் மதன். இறங்குமிடம் வந்ததும் போர்ட்டரை தேடினான். இந்த ரெண்டு சின்ன பைக்கு போர்ட்டரா என்று யாரும் இவனை கவனிக்கவில்லை. முதுகில் ஒன்று, இடது கையில் ஒன்றுமாய் ஆக்கிக் கொண்டு, வலது கையில் அலைபேசியை பார்த்தபடி நடக்க தொடங்கினான். அவ்வபோது 121க்கு அழைத்து லைன் க்ளியர் என்பதை உறுதி செய்து கொண்டான்.

லாட்ஜ் வேணுமா சார்? ஏ.சி இருக்கு என்றவனிடம் , அந்த லாட்ஜில் ஏர்டெல் சிக்னல் கிடைக்குமா என்று வினவினான். ஒரு வழியாய் அறைக்குள் வருவதற்குள் அரை நாள் முடிந்து விட்டது. கால் இன்னும் வரவில்லை. குழப்பமாய் அலைந்தவன் ஒரு பாட்டிலை முடித்த நேரம் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தான். ஏனோ சில நிமிடங்களிலே மீண்டும் குழப்பமாய் அலையத் தொடங்கினான். சில மணி நேர அவஸ்தைக்குப் பின் டைரியைத் திறந்து எழுதத் தொடங்கினான்.

செய்வதென முடிவாகிவிட்டது.
எதைக் கொண்டு
என்பதில் தொடங்கியது
சில குழப்பங்கள்.
துப்பாக்கிகள்
எளிதில் கிடைப்பதில்லை.
பர்மா பஜார் கத்திகள்
100% வெல்வதில்லையாம்.
அருவிகள் தேடிச் செல்ல
நேரமில்லை.
என்ன செய்துவிடும் கயிறு?
சாக துணிந்தவனுக்கு
இதெல்லாம்
ஒரு வலியா
என்று நினைத்த நேரத்தில்
ஒலித்தது அலைபேசி

“Anitha calling"...

47 கருத்துக்குத்து:

டக்ளஸ்....... on April 14, 2009 at 10:59 AM said...

தல...
கலக்குறீங்களே தல...
யாரு அந்த மதன்....கார்க்கியோட கார்பன் காப்பியா ?

குசும்பன் on April 14, 2009 at 11:14 AM said...

கார்த்திக் அனிதா படத்தின் திரை விமர்சனமா?:)))

ஜோசப் பால்ராஜ் on April 14, 2009 at 11:29 AM said...

ஏன்யா,
நீரு மதுகிட்ட் இருந்துல்லா போன் வரணும்னு காத்திருந்த?
இப்ப அனிதா காலிங்...
அது சரி நமக்கு கால் தான் முக்கியம் கால் பண்றவங்க இல்ல, அப்டித்தானே?

துஷா on April 14, 2009 at 12:05 PM said...
This comment has been removed by the author.
சென்ஷி on April 14, 2009 at 12:07 PM said...

:-))

நல்லது..

Truth on April 14, 2009 at 12:08 PM said...

நல்லாருக்கு. கொஞ்சம் நாள் முன்னாடி நான் ஒரு சிறுகதை எழுதினேன்.
இங்கே இருக்கு , படிங்க.

துஷா on April 14, 2009 at 12:21 PM said...

அண்ணா இதுல இருந்து ஒன்னு மட்டும் நல்ல விளங்குது யாரையோ அடிக்கடி போன் பண்ண சொல்லுரிங்க என்று .......
எப்படி கண்டு பிடிச்சிட்டம்
யாருங்க மது அனிதா மற்றும் எல்லோரும் நல்லகே கேட்டுக் கொள்ளுங்கப்பா be serious ok
lolz

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anbu on April 14, 2009 at 12:43 PM said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா

கதை சூப்பராக உள்ளது அண்ணா

தராசு on April 14, 2009 at 12:56 PM said...

கலக்கல்,

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Suresh on April 14, 2009 at 12:56 PM said...

கார்க்கி உனக்கு இன்னொரு பெயர் மத்னா 7G :-) அனித்தா வா

Suresh on April 14, 2009 at 12:58 PM said...

//குழப்பமாய் அலைந்தவன் ஒரு பாட்டிலை முடித்த நேரம் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தான். /

பாட்டில் தான் பல மேஜை மாநாடுகளை கூட தீர்க்கமா முடிவேடுக்க உதவிருக்கு ஹ்ஹா

Suresh on April 14, 2009 at 12:58 PM said...

//சாக துணிந்தவனுக்கு இதெல்லாம் ஒரு வலியா என்று நினைத்த நேரத்தில் ஒலித்தது அலைபேசி “anitha calling"....//

இதுக்கு பதிலா .. புது பிகர் ஆர்த்தி calling nu mudichi iruntha :-) ha ha arumai

லவ்டேல் மேடி on April 14, 2009 at 12:59 PM said...

கினாரதும்பி ஷகிலா காலிங்......

ஸ்ஸ்ஸ்ஸ்.....ம்ம்ம்ம்ம்.....ஹாங்... என்னடா செல்லம்...........!!!!!

போயிட்டு வாரானுங்கோ சாமியோவ்.......!!!!

gayathri on April 14, 2009 at 1:00 PM said...

naan ennmo ethonu nenachi vanten pa anitha name pathu

கும்க்கி on April 14, 2009 at 1:04 PM said...

ஏம்ப்பா கத எழுதுனா கதயா எடுத்துக்காம கத கத யா அடிச்சு தொவைக்கறாங்களே...

கார்க்கி on April 14, 2009 at 1:08 PM said...

@டக்ளஸ்,

மதன். எனக்கு பிடிச்ச பேரு. அப்புறம் வைரமுத்து பையன் பேரு மதன் கார்க்கி.. :))

****************
@குசும்பன்,

ஏன் தல?

***************
@ஜோசப்,

இப்படி பூடகமா விட்ட எந்தெந்த மாதிரி யோசிக்கறாங்கனு பார்க்கத்தான் அபப்டி செய்தேன். நல்லாத்தான் யோசிக்கறீங்க சகா

***************
@சென்ஷி,

எது நல்லது தல?

************
@ட்ரூத்,

படிச்சிட்டு சொல்றேங்க. நன்றி

**************
@துஷா,

இது புனைவு கதைதான் :))

**************
வாழ்த்துகள் அன்பு

கும்க்கி on April 14, 2009 at 1:09 PM said...

மக்களுக்கு எம்புட்டு ஆர்வம் (பெர்சனல் பேருங்களை தெரிஞ்சுக்க)...
அவங்களாயிருக்குமோ....
இல்லல்ல இவங்களாயிருக்குமோ...
அடடா யாரும் இல்லாமலிருக்குமோ....
அய்யய்யோ அப்டின்னா ஏன் காதல் கதைகளா எழுதறாரே...எதாச்சும் இருக்கும்.
ஹரே கார்க்கி பையா ஒரே கொழப்பமா கீது பா.(நம்மள்கி இல்லே)

கார்க்கி on April 14, 2009 at 1:10 PM said...

@தராசு,

நன்றி தல

*************
@சுரேஷ்,
/இதுக்கு பதிலா .. புது பிகர் ஆர்த்தி calling nu mudichi iruntha :-) ha ha arumai//

சரியா படிங்க சகா. மொத பொண்ணு பேரு மது. கடைசியா கால் பண்ணவ அனிதா. இது வேறதான் :))

****************
@லவ்டேல்,

உங்களுக்கு அவங்கதான் கால் பண்ணுவாங்க. போயிட்டு வாங்க

****************
@காயத்ரி,

ஹாஹாஹா.. நான் கூட யோசிக்கல.. நலமா?

***************
@கும்க்கி,
நல்லா கேளுங்க தல.. கதை எபப்டி இருந்துச்சு சொல்ல மாடறாங்க. ஆமா நீங்க என்ன சொல்றீங்க?

மண்குதிரை on April 14, 2009 at 1:15 PM said...

கார்க்கி நல்ல இருந்துச்சு.

ரைட்டிங் ஸ்டைல் நல்ல இருக்கு.

கும்க்கி on April 14, 2009 at 1:15 PM said...

சுருக்கா சொல்லோனும்னா மன்ச தொள்தி வுடாதீங்க...ஒன்னு போனா ஒன்னு கெடைக்கும்னு ப்ராக்டிகலா சொல்றாப்பில தெர்துபா.

வித்யா on April 14, 2009 at 3:02 PM said...

நீ நடத்து ராஜா நடத்து:)

கார்க்கி on April 14, 2009 at 4:24 PM said...

@மண்குதிரை,

ரொம்ப நன்றிங்க

**************
@கும்க்கி,

/சுருக்கா சொல்லோனும்னா மன்ச தொள்தி வுடாதீங்க...ஒன்னு போனா ஒன்னு கெடைக்கும்னு ப்ராக்டிகலா சொல்றாப்பில தெர்துபா//

நீ ஒன்னும் மெர்சில் ஆவாதப்பா.. அதேத்தான்..

/ கும்க்கி said...
மக்களுக்கு எம்புட்டு ஆர்வம் (பெர்சனல் பேருங்களை தெரிஞ்சுக்க)...
அவங்களாயிருக்குமோ//

நான் ஒன்னும் கதை வுடலைங்க. நிஜமா இது கதைதான் :))

******************
@வித்யா,

:)))))

pappu on April 14, 2009 at 4:54 PM said...
This comment has been removed by the author.
ச்சின்னப் பையன் on April 14, 2009 at 4:56 PM said...

super

pappu on April 14, 2009 at 5:12 PM said...

//குழப்பமாய் அலைந்தவன் ஒரு பாட்டிலை முடித்த நேரம் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தான். /

பாட்டில எடுத்ததெ தீர்க்கமான முடிவுதாங்கிறேன்.

அப்புறம் மொத மூணு பாராவில இருக்கிற உவமைகள் பிரமாதம். ஆனா, நிறைய இருக்கிற மாதிரி இருக்கே. ப்ளான் பண்ணிதான் பண்ணிங்களா?

Cable Sankar on April 14, 2009 at 5:18 PM said...

நல்ல நடை..

ஆதிமூலகிருஷ்ணன் on April 14, 2009 at 8:00 PM said...

மிக அழகான ஆரம்பம், சிறப்பான நடை..

கிளைமாக்ஸ்.?

அன்புடன் அருணா on April 14, 2009 at 8:39 PM said...

:((
anbudan aruNaa

அறிவிலி on April 14, 2009 at 8:48 PM said...

Nalla nadai. The twist in the end is nice.

T.V.Radhakrishnan on April 14, 2009 at 9:33 PM said...

:-))))

தமிழ்ப்பறவை on April 14, 2009 at 9:37 PM said...

கதை நன்றாக இருந்தது கார்க்கி...
//கைகளை மேலே தூக்கிய பிச்சைக்கரானின் குடுவைக்குள் தன்னையே போட முடியுமா என்று எட்டிப் பார்த்தான். இடது கையில் கெட்டியாய் பிடித்திருந்த செல்ஃபோன் மீது கண் பட்டதும் உள்ளிழுத்துக் கொண்டான்.//
இரு வரிகளிலேயே முரணை அழகாகச் சொல்லியாயிற்று...
க்ளைமேக்ஸ் கார்க்கி டச்...

Kathir on April 14, 2009 at 11:05 PM said...

கதை நல்லா இருக்கு சகா.....

இதுவும் ஆ வரிசையா ?????

(அனிதா ஆஆஆஆ)

:))))

MayVee on April 15, 2009 at 4:36 AM said...

:-))

orey kalakalls of india va irukke

கார்க்கி on April 15, 2009 at 10:50 AM said...

நன்றி சின்னப்பையன்

*************
@பப்பு,

ஆமாம் சகா :))

***************
நன்றி சங்கர்ஜி

****************
@ஆதி,

நன்றி சகா. க்ளைமேக்ஸ்?? என்ன?

***************
@அருணா,

என்னங்க ஆச்சு?

**************
நன்றி அறிவிலி

கார்க்கி on April 15, 2009 at 10:57 AM said...

நன்றி TVR sir

***************

நன்றி தமிழ்ப்பறவை. :))))

*****************
@கதிர்,

ஆஆஆஆஆஆ.. அனிதாவும் நம்ம ஏழு காதலில் ஒரு ஆள். ஞாபகம் இருக்கா?

***************

நன்றி மேவீ

***************

மக்களே, க்ளைமேக்ஸ் இன்னும் விரிவா எழுதி இருந்தேன். அனிதா எனபவள் மதுவின் தோழி. இவன் அழைப்பை ஏற்றதும் அது மதுவாக இருக்கும் என்று பேசுகிறான். அவளல்ல என்று தெரிந்ததும் உடைந்து அழுகிறான். ஆறுதல் சொல்கிறாள் அனிதா. மெல்ல இருவருக்கும் காதல் மலர்கிறது. மதன் அதை ஏற்கவில்லை. ஆனால் தான் இப்போது உயிரோடு இருக்க அவள் தான் காரணம் என்று அவள் காதலை ஏற்றுக் கொள்கிறான். அந்த பகுதி ரொம்ப அழகா வந்ததாக உனர்கிறேன். அதனால் அதை வேறு ஒரு கதையாக்கி இதை இப்படி முடித்து விட்டேன். முடிவை உங்கள் யூகத்துக்கே விட்டேன்.பலரும் நல்லாயிருக்குனு சொல்லி இருக்கிங்க. சிலர், அனிதா என்பவள் ஒரு புது ஃபிகர் என்றும், அவள் வந்தவுடன் தன் காதலை விட்டுவிட்டு செல்லும் மதனை தவறாக நினைக்க கூடும். அவன் நல்லவனோ இல்லையோ.. அதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிட்டேன்.

ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன். உண்மைதானே?

ஸ்ரீதர் on April 15, 2009 at 10:58 AM said...

v.n.p

அனுஜன்யா on April 15, 2009 at 11:59 AM said...

நல்ல ஸ்டைல் கார்க்கி. டைரியில் எழுதுவதை நீல நிறத்தில் எழுதியதால் 'Anitha calling' கூட டைரியில் எழுதியது மட்டுமே என்று நினச்சேன். கதை சொல்வதில் புது உத்தி என்றும் நினைத்தேன்.

அனுஜன்யா

ஸ்ரீமதி on April 15, 2009 at 1:15 PM said...

நல்லாருக்கே :))

தீப்பெட்டி on April 15, 2009 at 2:24 PM said...

இது கலக்கல்.
நல்லா இருக்கு

தீப்பெட்டி on April 15, 2009 at 2:38 PM said...

சாரி லேட் ஆயிடுச்சு
ஆனாலும்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

முரளிகண்ணன் on April 15, 2009 at 3:25 PM said...

நல்லாயிருக்கு கார்க்கி

Karthik on April 15, 2009 at 6:27 PM said...

:)))

(சிரிக்கும் சிந்தனைவாதின்னோ என்னவோ சொல்வீங்களே அதை மறுபடியும் கேட்கனும்னு தோணுச்சு. ;))

dharshini on April 15, 2009 at 8:35 PM said...

பேசலைன்றதுக்கே இந்த முடிவா?! :)

கார்க்கி on April 16, 2009 at 7:26 PM said...

நன்றி ஸ்ரீதர்

************
@அனுஜன்யா,

அவள் அழைத்ததைதான் அவன் டைரியில் எழுதினான் தல.. நன்றி

***************8

நன்றி ஸ்ரீமதி,

நன்றி தீப்பெட்டி

நன்றி முரளி

நன்றி கார்த்திக் :))

நன்றி தர்ஷினி

சுரேகா.. on April 16, 2009 at 9:08 PM said...

சூப்பர் கார்க்கி..!
கலக்கிட்டீங்க

பரிசல்காரன் on April 19, 2009 at 9:34 PM said...

வர்ணனைகள் அபாரம் சகா.

வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும் என்ற உன் வலைப்பூவிற்கேற்ற கதை!

இவன் மொழியும் உயிரும் தமிழ்.. on April 21, 2009 at 11:14 AM said...

/* சாக துணிந்தவனுக்கு
இதெல்லாம்
ஒரு வலியா
என்று நினைத்த நேரத்தில்
ஒலித்தது அலைபேசி

“Anitha calling"...*/


இதோ வந்து விடாது,
அதை விட பெரிய வலி,
தலை வலி...
:-))))

 

all rights reserved to www.karkibava.com