Apr 7, 2009

2009 தேர்தலில் என் ஓட்டு இவருக்குத்தான்


  நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று நம்ம சகா ஒருத்தர் கேட்டிருந்தார். அதன் பின்புதான் யாருக்கு வாக்களிக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கினேன். இதுவரை இரண்டு முறை மட்டுமே வாக்களித்திருக்கிறேன். இரு முறையும் உதய சூரியனுக்கே..

பரிசல் ஸ்டைல்ல சொன்னா ரொம்ப ஃபார்மலா இருக்கில்ல? சரி. இந்தப் பதிவு எதுக்குன்னா, யார் யார் என்ன என்ன வாக்குறுதிகள் அளித்தால் அவர்களுக்கு நான் வாக்களிப்பேன் என்று சொல்லவே. ஸ்டார்ட் மீஜிக்..

1) காங்கிரஸ்: சஞ்சய 2013ல (எப்படியும் தேர்தல் வரும்னு தோணுது பாஸ்) எம்.பி ஆக்குவோம்னு சொல்லுங்க. என் ஓட்டு உங்களுக்குதான்.

2) திமுக:  அடுத்த தேர்தலில் உதயநிதி, அறிவுநிதி, ***நிதிகளுக்கு சீட்டு கிடையாது என்று சொல்லுங்கள்

3) பாமக: தேர்தல் முடிவுகள் வந்தவுடன் காங்கிரஸூடன் சேர மாட்டோம் என்று சொல்லுங்கள். என் வீட்டில் இருக்கும் மூனு ஓட்டும் உங்களுக்குத்தான்

4) கம்யூனிஸ்ட்: மன்னிக்க தோழரே, ஜெவை விட்டு வாங்க. யோசிக்கலாம்.

5) தேமுதிக: இனிமேல் விஜய்காந்த் நடிக்க மாட்டார் என்று சொன்னால் யோசிக்கலாம். கவனிக்க, யோசிக்கலாம்.

6) மதிமுக: தேர்தலில் நின்னா சத்தியமா என் ஓட்டு உங்களுக்குத்தான்

7) சமக: அதாங்க சரத்குமார் கட்சி. நீங்க ஏதாவது பேச வாய் திறந்திங்கன்னா என் ஓட்டு உங்களுக்கு இல்லை. அப்படியே மூடிகிட்டு இருங்க.

8) அ.இ.நா.ம.க: கட்சி பேர மாத்தறன்னு கார்த்திக் சொல்லட்டும், என் ஓட்டு மட்டுமில்ல என்னால முடிஞ்ச 20 ஓட்டும் அவருக்குத்தான், டவுட்டேயில்ல.

9) பா.ஜ.க: ஹிஹிஹி..

10) ல.தி.மு.க : லட்சியம்ன்னா என்னன்னு அர்த்தம் சொல்லுங்க. பார்க்கலாம்.

11) அதிமுக: நீங்க என்ன சொன்னாலும் என் ஓட்டு உங்களுக்கு  கிடையாதுங்க

12) ஜனதா தளம்: ஓட்டு போடறது இருக்கட்டும். ஞாபகம் வச்சிருந்து அந்தக் கட்சி பேர சொல்லியிருக்கேன் இல்ல. அதுக்காக என்னைப் பாராட்டி தமிழ்மணத்திலும் தமிலிஷிலும் ஒரு ஓட்டுப் போட்டு போங்க.

57 கருத்துக்குத்து:

வெட்டிப்பயல் on April 7, 2009 at 10:38 AM said...

//10) ஜனதா தளம்: ஓட்டு போடறது இருக்கட்டும். ஞாபகம் வச்சிருந்து அந்தக் கட்சி பேர சொல்லியிருக்கேன் இல்ல. அதுக்காக என்னைப் பாராட்டி தமிழ்மணத்திலும் தமிலிஷிலும் ஒரு ஓட்டுப் போட்டு போங்க//

கலக்கல் :-)

prakash on April 7, 2009 at 10:40 AM said...

//சஞ்சய 2013ல (எப்படியும் தேர்தல் வரும்னு தோணுது பாஸ்) எம்.பி ஆக்குவோம்னு சொல்லுங்க.//

பொடியன் சஞ்சய்யவா...

வித்யா on April 7, 2009 at 10:40 AM said...

சூப்பர்:)

கார்த்திக்கும் வாய தொறக்காம இருக்கலாம்.

vinoth gowtham on April 7, 2009 at 10:42 AM said...

ல.தி.மு.க.
விட்டுதிங்கலே..

prakash on April 7, 2009 at 10:42 AM said...

//அடுத்த தேர்தலில் உதயநிதி, அறிவுநிதி, ***நிதிகளுக்கு சீட்டு கிடையாது என்று சொல்லுங்கள்//

அடுத்தது சட்டமன்ற தேர்தல் தானே
அதுல கருணாநிதிக்கே சீட்டு இருக்காது போல....

prakash on April 7, 2009 at 10:44 AM said...

//தேர்தல் முடிவுகள் வந்தவுடன் காங்கிரஸூடன் சேர மாட்டோம் என்று சொல்லுங்கள். என் வீட்டில் இருக்கும் மூனு ஓட்டும் உங்களுக்குத்தான்//

அதுமாதிரி சொன்னா உன் வீட்டுல இருக்கிற மூணு வோட்டு மட்டும் தான் விழும்
பாட்டாளிங்க ஒட்டு எல்லாம் பனால் ஆகிடும்

prakash on April 7, 2009 at 10:48 AM said...

//இனிமேல் விஜய்காந்த் நடிக்க மாட்டார் என்று சொன்னால் யோசிக்கலாம். கவனிக்க, யோசிக்கலாம்.//

அப்படி மட்டும் சொன்னா யோசிக்கதீங்கப்பு. அவர ஆதரிச்சிடுங்க..
ஏன்னா நான் போன சண்டே தவசி பார்த்தேன் அவ்வ்வ்வ்வ்வ்வ் .....

prakash on April 7, 2009 at 10:50 AM said...

//தேர்தலில் நின்னா சத்தியமா என் ஓட்டு உங்களுக்குத்தான்//

அவர் பேசாம ஐநா சபை செயலர் பதவிக்கு போடியிடலாம்.
ரேஞ்சு தெரியாம இங்கனயே சுத்திகிட்டு இருக்கார்

mythees on April 7, 2009 at 10:55 AM said...

அ.தி.மு.க
missing......?
:-))))

mythees on April 7, 2009 at 10:58 AM said...

உங்களுக்கு பிடிச்சா கமெண்ட் போடுங்க.. உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க.. நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்...

ஏதோ என்னால முடிந்தது ......

:-)))) சும்மா லோ ல ஈ

prakash on April 7, 2009 at 11:00 AM said...

//ஜனதா தளம்//

உன்னுடன் ஒரே நகைச்சுவையாய் இருக்கிறது:)))

குடுகுடுப்பை on April 7, 2009 at 11:00 AM said...

குஜமுக விற்கு வேட்பாளர் தேவை, யாராவது உடுக்கை சின்னத்தில் போட்டியிடுங்கள்.

T.V.Radhakrishnan on April 7, 2009 at 11:05 AM said...

முதல்லே உங்களுக்கு ஓட்டு போடும் வயதாகிவிட்டதா? :
:-))))

கார்க்கி on April 7, 2009 at 11:05 AM said...

@பிரகாஷ்,

என்ன சகா? காலைலே ஃபுல் ஃபார்ம்ல இருக்கிங்க.ம்ம்

************
நன்றி வெட்டி

**********

நன்றி வித்யா. கொபசெ அமைதியாக இருக்கலாமா?ஆரம்பிங்க ஆட்டத்த

***********

@வினோத்,

நன்றி. இப்போ சேர்த்துட்டேன்

************
மைதீஸ்.. சேர்த்தாச்சு

************
@குடுகுடுப்பை,

எவ்ளோ தருவீங்க செலவுக்கு?

மண்குதிரை on April 7, 2009 at 11:11 AM said...

வணக்கம் நண்பா !

ரசித்தேன், சிரித்தேன்.

ஸ்ரீமதி on April 7, 2009 at 11:12 AM said...

இவ்ளோ கட்சிங்க இருக்கா தமிழ் நாட்ல?? குண்டூசி விக்கிரவன்லாம் தொழிலதிபர் மாதிரி... சரி வேணாம்..

♥ தூயா ♥ Thooya ♥ on April 7, 2009 at 11:17 AM said...

கிகிகிகி

narsim on April 7, 2009 at 11:19 AM said...

//மதிமுக: தேர்தலில் நின்னா சத்தியமா என் ஓட்டு உங்களுக்குத்தான்//

கலக்கல் சகா

பத்திரிகை மேட்டர்

லக்கிலுக் on April 7, 2009 at 11:24 AM said...

கலக்கல் சகா! :-)

தராசு on April 7, 2009 at 11:31 AM said...

//இதுவரை இரண்டு முறை மட்டுமே வாக்களித்திருக்கிறேன்//

அவ்வளவு வயசாயிடுச்சா உங்களுக்கு,

த்தோடா, இவ்வளவு நடந்ததுக்கப்புறம் இவுரு இப்பத்தான் பொண்ணு தேடறாராம்.

Karthik on April 7, 2009 at 11:36 AM said...

ha..ha. :)

sema kalakkal. :))

விஷ்ணு. on April 7, 2009 at 11:39 AM said...

//ல.தி.மு.க : லட்சியம்ன்னா என்னன்னு அர்த்தம் சொல்லுங்க. பார்க்கலாம். //


லட்சியம் பத்தி கேக்காத என்னானட
அது பத்தி கேக்க வந்து நிப்பேன் உன்னாண்ட.
நான் ஆட போரேன் வேட்டை
நீ போடபோர உன் ஓட்டை.

ஏய் டண்டணக்கா டடக்குணக்குணக்கா

mayil on April 7, 2009 at 11:43 AM said...

நாமெல்லாம் சேர்ந்து புது கட்சி ஆரம்பிச்ச என்ன?? மொக்கை போடுவோர் முனேற்ற கலக்கம், மன்னிச்சுகுங்க கழகம். நாந்தான் பொது செயலாளர். மத்த பதவி மேல் எனக்கு ஆசை இல்லை.

இப்ப ஓட்டு போட்டுதான ஆகணும்

கார்க்கி on April 7, 2009 at 12:09 PM said...

நன்றி மண்குதிரை

நன்றி ஸ்ரீமதீஈஈஈஈஈஈ

நன்றி சகி
**************

// narsim said...
கலக்கல் சகா

பத்திரிகை மேட்ட//.

நன்றி தல

******************
@லக்கி,

:) நன்றி தல

**************
@தராசு,

//அவ்வளவு வயசாயிடுச்சா உங்களுக்கு,

த்தோடா, இவ்வளவு நடந்ததுக்கப்புறம் இவுரு இப்பத்தான் பொண்ணு தேடறாரா//

எனக்கு இப்ப 25 வயசு. 2004, 2006 தேர்தலில் வாக்களித்தேன். 2004 எனக்கு 20 வயசு.. என்ன குழப்பம்?

***************

நன்றி கார்த்திக், விஷ்ணு, மயில் :))

பொன்.பாரதிராஜா on April 7, 2009 at 12:21 PM said...

ஆனா கார்க்கி என்னோட ஓட்டு எப்பவுமே உங்களுக்குதான்...

Karthik on April 7, 2009 at 12:46 PM said...

//பொன்.பாரதிராஜா said...
ஆனா கார்க்கி என்னோட ஓட்டு எப்பவுமே உங்களுக்குதான்

விஜய் சீக்கிரம் கட்சி ஆரம்பிக்க இருக்கிறார். என்ன பிரச்சனைனா, அரசியல்ல ஏற்கனவே டாக்டரும் இருக்கார், தளபதியும் இருக்கார். அதனால் என்ன பேர்ல இறங்கறதுன்னு தான் தெரியல.

இறங்கினா கார்க்கிக்கு தென் சென்னை ஒதுக்கப்படும். :)

Bleachingpowder on April 7, 2009 at 1:08 PM said...

காங்கிரஸ் :(வெறும்)படிச்ச மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் வெள்ளகாரியிடம் கை கட்டி வாய் பொத்தி அவர் காலால் இட்ட உத்தரவை தலையால் செய்து முடிக்கும் இந்த கோமாளிகளுக்கு என்னோட வோட்டு எப்பவுமே கிடையாது.

திமுக: உங்க பொண்டாட்டி சாமி கும்பிட்ட அது அவங்க நம்பிக்கை, நாங்க கும்பிட்டா கேலி செய்வது. சர்சுக்கு போய் யேசுநாதரை சேவையை பற்றி பேசவார். மசூதிக்கு போய் குல்லா போட்டு கூல் குடிப்பார். அதே மாதிரி கோயில் கும்பாபிஷேகத்திற்கும் கலந்துக்க வேண்டியது தானே. இந்த மாதிரி ரெண்டுகெட்டாங்களுக்கும் என் வோட்டு கிடையாது.

பாமக: பாமகன்னு டைப் பண்ணும் போதே பிபி எகிறுது, ஜாதி வெறியன். இவன மட்டுமல்ல இவனுக்கு ஓட்டு போடுறவனை கூட எனக்கு பிடிக்காது.

கம்யூனிஸ்ட்: ஐம்பது வருசமாகியும் தனியா நிக்க வக்கில்லாத கட்சி, இவங்களுக்கு ஓட்டு ஒரு கேடா?

தேமுதிக: இந்தாளு நடிச்சு நம்மள கொடுமை படுத்தினது போதாதா, ஆட்சியை வேற புடிக்கனுமா.

மதிமுக: மனுசனா பொறந்தா சொறனை இருக்கனும். அப்படி இல்லைனா தேர்தல்ல நிக்க கூடாது.

சமக: ஒரளவு படிச்ச, மேடையில நாகரிகமா பேசுறவர் இவர். ஆனா ஓட்டு போடுற அளவுக்கு இன்னும் வளரல.

அ.கி.நா.ம.க: ஏய் நீ என்ன ஷொன்னாலும் என் வோட்டு உனக்கு கிடையாது.

பா.ஜ.க : தோக்குற கட்சியாச்சே பாக்குறேன். நல்ல கூட்டணியோட நின்னா என் வோட்டு உங்களுக்கு தான். ஹிஹிஹிஹின்னு சொல்லி சமாளிக்கறதெல்லாம் வேண்டாம் :))

ல.தி.மு.க: இந்த சிங்கம் என் தொகுதியில நின்னா மூனு லட்சம் வோட்டு வித்தியாசத்துல ஜெய்க்க வக்க வேண்டியது என் பொறுப்பு.

ஜனதா தளம்: நான் எதாவது சொல்ல போக, ப்ளிச்சீங் பவுடர் அமெரிக்கா நாட்டு உளவு துறையிடம் இருந்து காசு வாங்கிட்டு எனக்கு எதிரா எழுதுறான்னு சொன்னாலும் சொல்லுவாரு.

அதிமுக: வொய் நாட்?

விஷ்ணு. on April 7, 2009 at 1:17 PM said...

//ல.தி.மு.க: இந்த சிங்கம் என் தொகுதியில நின்னா மூனு லட்சம் வோட்டு வித்தியாசத்துல ஜெய்க்க வக்க வேண்டியது என் பொறுப்பு. //

சிங்கம் மட்டும் சிவகாசி தொகுதில நிக்கட்டும் தமிழ் நாடே அவ்ர் பின்னாடி வரவப்பம்ல.

Poornima Saravana kumar on April 7, 2009 at 1:17 PM said...

மொத்ததில் உங்க ஓட்டு யாருக்கும் இல்லைன்னு சொல்லுங்க:)

அத்திரி on April 7, 2009 at 1:22 PM said...

//திமுக: அடுத்த தேர்தலில் உதயநிதி, அறிவுநிதி, ***நிதிகளுக்கு சீட்டு கிடையாது என்று சொல்லுங்கள்//

ஹிஹிஹிஹி,,,,,,,,, சகா மெயின் மேட்டர்லயே கைய வைக்குறியே

வெங்கிராஜா on April 7, 2009 at 1:28 PM said...

//அடுத்த தேர்தலில் உதயநிதி, அறிவுநிதி, ***நிதிகளுக்கு சீட்டு கிடையாது என்று சொல்லுங்கள்//
ஏப்ரல் ஒண்ணாம் தேதிக்கு சொல்றாப்ல இருக்கு?

coolzkarthi on April 7, 2009 at 1:47 PM said...

கார்க்கி செம அடி.....
பாவம் அழுதுட போறாங்க.....

vinoth gowtham on April 7, 2009 at 2:56 PM said...

//சமக: ஒரளவு படிச்ச, மேடையில நாகரிகமா பேசுறவர் இவர். ஆனா ஓட்டு போடுற அளவுக்கு இன்னும் வளரல.//

Tis is Quite accepetable.
Compare to other actor cum politicians..
Sarath is Gud.

அறிவிலி on April 7, 2009 at 2:57 PM said...

உங்க பதிவுல வலது கை ஒரத்துல ஒரு கட்டம் கட்டியிருக்கீங்களே... அத எந்த கட்சி புக் பண்ணுதோ அவங்களுக்குத்தான் ஒட்டுன்னு சொல்லி...... 4 காச பாக்கலாம்.

லவ்டேல் மேடி on April 7, 2009 at 3:01 PM said...

அட தம்பி......!!! மொதல்ல உனக்கு ஓட்டு இருக்குதா தம்பி....!!! நீ இன்னுமும் 18 - ....

18 + ஆனாதேன் எல்லாருக்குமும் ஓட்டு.....!!! ஆல பாருங்கய்யா .....!!

dharshini on April 7, 2009 at 3:10 PM said...

ஹா ஹா சூப்பர் அண்ணா.(ஓட்டும் போட்டாச்சு)

கார்க்கி on April 7, 2009 at 3:14 PM said...

எனக்கு ஓட்டா? பாரதிராஜா.. :)))

*************

நன்றி கார்த்திக். எனக்கு சட்டமன்றம்தான் வேணும்

************
நன்றி ப்ளீச்சிங்

***************
அப்படி போடுங்க விஷ்ணு

************
என் ஓட்டா? அதான் சொன்னேனே பூர்ணீ

************

நன்றி வெங்கி, கார்த்தி, அத்திரி

*********
@வினோத்,

சரத் ஓக்கேவா? அதுசரி.. நீங்க அவரையே புடிக்குதுன்னு சொன்ன ஆளாச்சே :))

**********
பாய்ண்ட்டு அறிவிலி..

***********

அமாங்க லவ்டேல். எனக்கு ஓட்டே கிடையாதில்ல ?

நன்றி தர்ஷினி :))

MayVee on April 7, 2009 at 3:18 PM said...

:-))


naan chinna paiyanunga....

Karthik on April 7, 2009 at 3:25 PM said...

//நன்றி கார்த்திக். எனக்கு சட்டமன்றம்தான் வேணும்

அய்யய்ய, உங்கள மாதிரி கம்ப்யூட்டர் படிச்சிட்டு இங்கிலீஷ் பேசுறவங்களை சட்ட மன்றத்துல வெச்சுக்கிட்டு என்ன பண்றது? அதுக்கெல்லாம் வேற ஆள்கள் இருக்காங்க. உங்களுக்கு டெல்லிதான்.
;)

MayVee on April 7, 2009 at 3:45 PM said...

haa haa

ரங்கன் on April 7, 2009 at 4:04 PM said...

பயபுள்ள ஓட்டு போட சோம்பேறித்தனம்..


அதை இப்படி டீசண்டா சொல்லிக்க வேண்டியது..!!

வேணும்னா ஒரு ஐடியா..எல்லாரும் ஓட்டு போட்டுட்டா என்ன?

subash on April 7, 2009 at 4:16 PM said...

hello u think u only the genius here........y u not tell anything about BJP.......u cant....if u r a indian think first deeply......see them agenda after u tell which party is the best one here.......otherwise see the BJP states administration and development Example:gujrat,MP and etc

விக்னேஷ்வரி on April 7, 2009 at 5:11 PM said...

நீங்க ஏதாவது பேச வாய் திறந்திங்கன்னா என் ஓட்டு உங்களுக்கு இல்லை. அப்படியே மூடிகிட்டு இருங்க. //

ஹிஹிஹி........

கடைசியா யாருக்கு தான் ஓட்டு போடப் போறீங்க கார்க்கி.

ஜோசப் பால்ராஜ் on April 7, 2009 at 5:40 PM said...

சகா, எனக்கு இந்த தொந்தரவேயில்ல.
ஏன்னா எனக்கு இன்னும் ஓட்டுப்போடும் வயசு வரலை பாருங்க.
18 வயசு ஆனதும் இதப்பத்தி பொருமையா யோசிச்சுக்குவோம்.

pappu on April 7, 2009 at 6:30 PM said...

நம்பர் 12 டாப்புங்க!

Suresh on April 7, 2009 at 7:13 PM said...

12 lollu super thalai

கணினி தேசம் on April 7, 2009 at 7:23 PM said...

//நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று நம்ம சகா ஒருத்தர் கேட்டிருந்தார். அதன் பின்புதான் யாருக்கு வாக்களிக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கினேன்.//

எந்த ஹோட்டல்ல ரூம் போட்டீங்க?

கணினி தேசம் on April 7, 2009 at 7:29 PM said...

//திமுக: அடுத்த தேர்தலில் உதயநிதி, அறிவுநிதி, ***நிதிகளுக்கு சீட்டு கிடையாது என்று சொல்லுங்கள்//

அவுங்கல்லாம் இல்லாட்டி கட்சியே இருக்காது, அப்புறன் எங்கபோய்த் ஒட்டு போடுறது.


//பாமக: தேர்தல் முடிவுகள் வந்தவுடன் காங்கிரஸூடன் சேர மாட்டோம் என்று சொல்லுங்கள். என் வீட்டில் இருக்கும் மூனு ஓட்டும் உங்களுக்குத்தான்//

இன்று வேறு..நாளை வேறு...நாளை மறுநாள் வேறு...!!
குர்ர்ர்ரங்கு!!


//கம்யூனிஸ்ட்: மன்னிக்க தோழரே, ஜெவை விட்டு வாங்க. யோசிக்கலாம்.//

இவுங்களுக்கும் பா.ம.க. குணம் வந்துருச்சோன்னு தோனுது.

கணினி தேசம் on April 7, 2009 at 7:31 PM said...

சகா,

எப்படி எவ்வளவு கட்சிகள் பெயர் ஞாபகம் வெச்சிருக்கீங்க?

கணினி தேசம் on April 7, 2009 at 7:33 PM said...

//இந்தப் பதிவு எதுக்குன்னா, யார் யார் என்ன என்ன வாக்குறுதிகள் அளித்தால் அவர்களுக்கு நான் வாக்களிப்பேன் என்று சொல்லவே. //

யாருமே வாக்குறுதி அளிக்காவிட்டால் (அள்ளி வீசுகிறது ஒன்னும் பெரிய காரியம் இல்லை, இருந்தாலும்!) யாருக்கு போடுவீங்க?

நவநீதன் on April 8, 2009 at 1:15 AM said...

எல்லாருக்கும் போட்டு செல்லாம பண்ணி நம்ம அரசியல்வாதிகள் பேரை காப்பாத்துங்கோ..:-)

குடுகுடுப்பை on April 8, 2009 at 1:54 AM said...

@குடுகுடுப்பை,

எவ்ளோ தருவீங்க செலவுக்கு?//

அத நான் கேக்கனும் சாமி, குஜமுக வோட கொள்கைப்படி நீங்கதான் காசு தரனும்.

தாரணி பிரியா on April 8, 2009 at 5:46 AM said...

2011 ல தளபதிக்கா

கார்க்கி on April 8, 2009 at 10:57 AM said...

@ரங்கன்,

முதல் வருகைக்கு நன்றி சகா

***********
@சுபாஷ்,

ஆவ்வ்வ்வ்.. நல்லாயிருங்க சுபாஷ்..

************
@விக்னேஷ்வரி,

49ஓ

***************
@ஜோசப்,

சரிங்க சீனியர் சிட்டிசன்

*************
@பப்பு,

ரைட்டு தம்பி :))

***********
நன்றி சுரேஷ், கண்ணிதேசம்,நவநீதன்

***********

@தா.பி,

தளபதி அரசியலுக்கு வந்தால் எனக்கு பிடிக்காது..

விஜய் on April 8, 2009 at 11:46 AM said...

Good thoughts.........

Great work

விஜய் on April 8, 2009 at 11:46 AM said...

kalakiteenga ponga

விஜய் on April 8, 2009 at 11:46 AM said...

mothathula intha thadavai vote poda porathillainu sollunga

 

all rights reserved to www.karkibava.com