Apr 30, 2009

ஐ.டி வேலை நிலைக்க பத்து வழிகள் (கார்க்கி)

43 கருத்துக்குத்து


இன்ஃபோசிஸ் சமீபத்தில் பலரை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது. சரியாக பெர்ஃபார்ம் செய்யவில்லை என்று காரணம் சொன்னாலும், சிலரை வெளியேற்றியதற்கு டிசிப்லினரி ஆக்‌ஷன் என்று காரணம் சொல்லி இருக்கிறார்கள். என் நண்பன் சொன்ன தகவல் இது.


1) 50 பக்கம் பிரிண்ட் அவுட் எடுத்தார்.

2) நிறுவன வளாகத்தில் 30 கிமீ வேகத்திற்கு மேல் சென்றார்.(நடந்து இல்லைங்க, பைக்கில்)

இப்படி போகுது அந்தப் பட்டியல்.

இனிமேல் அனைத்து ஐ.டி கம்பெனிகளும் இந்த ஐடியாவை பின்பற்றும் என்பதால் வேலையைக் காப்பற்றிக் கொள்ள கீழ்கண்ட பத்து விஷயங்களை உடனே செய்ய வேண்டும்.லூசுல விட்டுடாதீங்க மக்கா. பீ கேர்ஃபுல் (நான் உங்களத்தான் சொன்னேன்)

1) ஆர்யா மாதிரி இல்லாம, ஒழுங்கா தலை முடிய கட் பண்ணி, சரியா சீவிக்கிட்டு போங்க.( அந்த் சீவி இல்ல, நெல்லைவாசிகளே)

2) நம்ம நாய் சேகர் மாதிரி கடந்த சில மாசமா, பல்லு வெலக்க மறந்து இருந்துங்கின்னா உடனே செஞ்சுடுங்க.

3) சட்டையை நம்ம நர்சிம் மாதிரி, இஸ்திரி போட்டு, கஞ்சி போட்டு, மடிப்பு கலையாம இன்சர்ட் பண்ணி டிப்டாப்பா போங்க. முடிஞ்சா காலர்ல மட்டும் வேற கலர்ல இருக்கிற சட்டை போட்டுட்டு போங்க.

4) தல அஜித் மாதிரி தொப்பையை வளர்த்துக்கிட்டு இருக்கிறவங்க மதியம் சாப்பாட்டுக்கு கூட கேண்டின் பக்கம் போயிடாதீங்க.அப்புறம் பழைய சொத்தை கம்பெனிக்கே போய் ஐ அம் பேக்ன்னு (பேக்கு இல்லைங்க, back) சொல்ல வேண்டியதுதான்

5) மின்னலே அப்பாஸ் மாதிரி எப்பவும் உங்கள சுத்தி நாலு பொண்ணுங்க இருக்குமா? உடனே ஏதாவது செய்து அவங்கள விரட்டி விடுங்க. என்ன செய்றதுன்னு தெரியலன்னா உடனே என் ஃபேவரிட் ஹீரோ ராமராஜன்னு சொல்லிடுங்க. முடிஞ்சா ரெண்டு நாளு ஆஃபிஸ்க்கு லிப்ஸ்டிக்க போட்டுட்டு போங்க

6) சூர்யா மாதிரி கிட்டார் எல்லாம் வாசிக்க தெரியும்ன்னு கம்பெனி கல்ட்ச்சுரல்ஸ், பாடும் ஆஃபிஸ்ன்னு கிளம்பிடாதீங்க. அப்புறம் வயித்து பொழப்புக்கு இன்னிசைக் குழுவுலத்தான் வாசிக்கனும்

7) யாவரும் நலம் மாதவன மனசுல நினைச்சுக்கிட்டு செகண்ட் ஃப்ளோர் வரைக்கும் நடந்தே போங்க. ஏன்னு மேனேஜர் கேட்டா, பவர் சேவிங்ன்னு சொல்லுங்க. அதுக்குன்னு அவர் கூட போகும் போது சேவ் பண்ணிடாதீங்க. அப்புறம் ஷேவ் பண்ணாம அலைய வேண்டியதிருக்கும்

8) விக்ரமன் படத்துல ஒரு பாட்டு வருமே!! அது மாதிரி தொடர்ந்து பல வேலைகள் செஞ்சீங்கன்னா பொழைச்சுக்கலாம்.ஃப்ரீ டைம்ல ஒன் சைடு பேப்பர சேகரிச்சு புக் செய்றது, ஏசி அதிகமா இருக்கு, கொஞ்ச நேரம் ஆஃப் செய்யலாம்னு ஃபெசிலிட்டிஸ்ல போய் சொல்றதுன்னு ஏதாவது புதுசா யோசிச்சு செய்ங்க

9) பீமா விக்ரம் மாதிரி உடம்ப முறுக்கிட்டு அலையாதீங்க. வேலை அதிகம்ன்றதால் ஜிம்முக்கு போகலன்னு சொல்லி வைங்க மேனேஜர்கிட்ட. முடிஞ்சா சேதுல விக்ரம் எப்படி இருக்கிறார்ன்னு ஒரு தடவ பாருங்க.

10) இது ரொம்ப முக்கியமானது. இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு http://www.karkibava.com/, http://www.iamkarki.blogpsot.com/ படிக்கிறது, இல்லைன்னா 97898 87048 நம்பருக்கு கால் பண்ணி பேசறது, iamkarki@gmail.com இமெய்ல் அனுப்புறது. கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் மூட்டை கட்டி வைங்க. இல்லைன்னா உங்கள மூட்டை கட்டி அனுப்பிடுவாங்க. நல்லத செஞ்சா யாருக்கு பிடிக்குது? அதனால் மனச தேத்திக்கிட்டு இதை செய்ங்க.

Apr 29, 2009

முத்தங்கள் பலவகை

36 கருத்துக்குத்து

பக்கத்து வீட்டு குழந்தையின் கன்னத்தில் குழி விழுகிறதென பொறாமைக் கொண்டாய். இன்றிலிருந்து துவங்குகிறேன். நாளொன்றுக்கு ஆயிரம் முத்தங்கள் வீதம் ஒரு மாதக் காலத்தில் சரியாய் 10 மிமீ ஆழமுள்ள பள்ளம் நிச்சயம்.

உன்னைக் காதலிப்பதை முழுநேர வேலையாக செய்துக் கொண்டிருந்தபோது என் மாமா என் வீட்டிற்கு ஒருநாள் வந்தார். என்னடா செய்ற? என்று அதட்டியபோது தைரியமாக "லவ் பண்றேன்" என்றேன்.சன்னமான குரலில் கேட்டார் "எவ்வளவுடா தினக்கூலி?".உன்னிடம் சொல்லி வருத்தப்பட்டப் போது என் கன்னங்களிலும் உதடுகளிலும் மாறிமாறி பலமுறை முத்தமிட்டாய். பின் என் கண்களை உற்று நோக்கி சொன்னாய் "அது நாளுக்குநாள் ஏறிக்கொண்டிருக்கிறது என சொல்"

எனக்கு வாழ்க்கை முழுமைக்கும் ஒரே ஒருத் திருமணம் என்பதில் உடன்பாடில்லை என்றேன். எரித்து விடுவது போல் பார்த்தாய். ஆயிரம் திருமணம் வேண்டும் ஒரு நிபந்தனையோடு, அனைத்து முறையும் நீயே மணப்பெண்ணாக என்றேன். அந்நியன் விக்ரம் போல‌ சட்டென மாறி முத்தமழைப் பொழிந்தாய். அப்போதும் எரிந்துக் கொண்டிருந்தேன்.

என்னை மணந்துக் கொண்டால் பணம், நகையென வரதட்சணைக் கேட்டு உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன் என உன் தந்தையிடம் சொல் என்றேன். அவருக்கு இருக்காது, ஆனால் உன் காதல் அதை விட‌க் கொடுமையானதாய் இருக்குமே எனச் சொல்லி புன்னைகைத்தாய். இடம்,பொருள் பார்க்காமால் அங்கேயே கொடுமைப்படுத்தத் தொடங்கினேன்.

நம் வருங்கால சந்ததியினர் நிலவுக்கு சென்றெல்லாம் வாழக்கூடுமாம். நடக்கட்டுமே. எனக்கு நிலவுக்கு சென்று வாழ்வதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நான் நிலவோடே வாழ நினைப்பவன் என்றேன். என் நிலா சூரியனாய் மாறிக் கொண்டிருந்தது.

மற்றப் பெண்களைப் போல் கன்னத்துக்கு வண்ணப்பூச்சு செய்வதில்லை நீ.என்னை பார்த்த அடுத்த நொடி வெட்க்கத்தால் சிவந்து விடுகிறது. அதை பார்க்கும் பொழுதுதான் ராமராஜன் போல் எனக்கும் உதட்டுச்சாயம் பூச வேண்டுமென ஆசை வருகிறது.

***********************************************

பி.கு:- ரொம்ப நாள் ஆச்சுங்க இந்த மாதிரி காதல் பதிவு எழுதி. மீண்டும் எழுதுவதற்கு முன் ஒரு மீள்பதிவு. ட்ரெய்னிங்கில் இருப்பதால் கொஞ்சம் பிசி.

Apr 27, 2009

’சென்னைவாசிகள் உழைத்து சாப்பிட தயாரில்லை’

56 கருத்துக்குத்து

’சென்னைவாசிகள் உழைத்து சாப்பிட தயாரில்லை’

இதை சொன்னவரு யாருன்னு தெரியுங்களா? நானும் படிக்கல. ’படிச்ச’ ஒருத்தர் சொன்னாருங்க. அபப்டியே புல்லரிச்சு போயிட்டேன். இதை கண்டுக்காம விட்டா யார் யார் என்னவெல்லாம் சொல்வாங்க தெரியுமா?

விவிஎஸ். லக்‌ஷ்மன்: எங்கள் அணியில் யாரும் வேகமாய ரன் குவிக்க தயாரில்லை

அகார்கர் : எங்கள் அணியில் எந்த பவுலரும் குறைவாக ரன் கொடுக்க தயாரில்லை

விஜய்: தமிழ் சினிமாவில் யாரும் வித்தியாசமாய் நடிக்க தயாரில்லை

அஜித் : பேஸ்ம் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரத தட்க்க யார்மே தயார்ல்ல

கலைஞர்: ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப் பட இங்கே யாரும் தயாரில்லை

ராமதாஸ்: தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதை நிறுத்த யாருமே தயாரில்லை

ஏழுமலை: பீரை ராவா அடிக்க இங்க யாருமேஏஏஏ தயாரில்லை

ஆறுமுகம்: இவன் கூட தண்ணியடிக்க போறத நிறுத்த எவனுமே தயாரில்லை

கார்க்கி: தமிழ் பதிவர்கள் யாரும் மொக்கையை குறைக்க தயாரில்லை

அனுஜன்யா: கவிதையில் சொல்ல வருவதை எளிமையாய் சொல்ல யாரும் தயாரில்லை

ஸ்ரீமதி: கமெண்ட் போடாம வெறும் ஸ்மைலி போடறத நிறுத்த யாருமே தயாரில்லை

பரிசல்: நம்ம மதிச்சு கமெண்ட் போடறவங்களுக்கு பதில் சொல்ல யாருமே தயாரில்லை

குசும்பன்: அடுத்தவன கலாய்க்கறத நிறுத்த இங்க யாருமே தயாரில்லை

கும்க்கி: நல்லா எழுத தெரிஞ்ச பல பேரு நேரம் ஒதுக்கி எழுத தயாரில்லை

வாசகர்கள்: இப்படி சாவடிக்கிறானே!! இவன கண்டிக்க இங்க யாருமே தயாரில்லையா?

தேன்கிண்ணம்

40 கருத்துக்குத்து

மின்காந்த அலையாக
வரவேற்பறைக்கு வந்தவள்
விழிகாந்த அலையால்
மனவறைக்குள் நுழைந்தாள்
அடுக்கி வைத்த
அடுக்குமாடி குடியிருப்புகள்
எதிர்பார்த்தவளுக்கு
புறநகரில்
பரந்து விரிந்துகிடக்கும்
காலி மனைகளாக இருந்த
இதயம் பிடித்துவிட்டது.
”அய்யோ நம்பவே முடியல”
“ஒரு ஹாய் சொல்லுங்க”
“எங்க அண்ணன் உங்க ஃபேன்”
டெம்ப்ளேட் பேச்சுகளின்றி
"பிடிச்சிருக்கு" என்றதை ரசித்தாள்.
பதிலாய் பாடினாள்.
பழக்க தோஷம்.
“அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி....”

(யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தது. http://youthful.vikatan.com/youth/karkipoem28042009.asp)

Apr 25, 2009

திரைக்கதை எழுத நடிகர் கமல் நடத்தும் பட்டறை

19 கருத்துக்குத்து

untitled

ராஜ்கமல் இண்டேர்நேஷனலும் IIT யும் இணைந்து மாண்வர்களுக்காக திரைக்கதை எழுதுவது குறித்து பயிற்சி பட்டறை ஒன்று நடத்த இருக்கிறார்கள். கமல்ஹாசன் மட்டுமல்லாமல், பிரபல திரைத்துறை ஜாம்பவான்களும் சிறப்பு வகுப்பு எடுக்கவிருக்கிறார்கள். மே 29 முதல் ஜூன் 3 வரை இது நடைபெற இருக்கிறது. மே ஐந்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு http://screenwritingindia.com. என்ற தளத்தை மேயுங்கள்.

கலந்துக் கொண்டு கலக்கப் போகும் பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

Apr 23, 2009

பெங்களூர் பதிவர் மாநாடும் ப்ளீசிங் பவுடரும்

31 கருத்துக்குத்து


பரிசலின் அவியலில் காக்டெயில் கலந்ததை படிச்சிருப்பிங்க. சத்ய்மா .,ச்சே ராசியில்ல.. இன்ஃபோஸிசா அதன் முழுக் காரணமும் முக்கா காரணமும் பரிசல்தாங்க. அவியலில் வழக்கமான சுவையில்லைன்னு எழுதுவாங்கனு பார்த்தா, தலைகீழா நடந்தது. ஒருத்தர் ஜனாதிபதி விருது தருவேங்கிறாரு. இன்னொருத்தர் அவியல படிச்சாத்தான் அன்னைக்கு சாப்பாடே இறங்குதுங்கிறார். போட்ட ஒரு மணி நேரத்தில் 20 பின்னூட்டமாம், இரண்டு மணி நேரத்தில் சூடாம். இதெல்லாம் அவியல் என்ற பெயருக்குத்தான் சொன்னா, போன வாரம் இப்படி ஆகலையே? என்னமோ போடா கார்க்கி. உலகத்த யாராலயும் காப்பாத்த முடியாது.:))))))

எதுக்கும் ஒரு ஹிண்ட் கொடுக்கலாமேன்னுதான் தல மேட்டர் நடுவுல சேர்த்து விட்டேன். இதையே நான் என் கடைல எழுதி இருந்தா அய்யோ அம்மான்னு நெகட்டிவ் ஓட்டு குத்துற வாலுங்க, அங்க அடக்கி வாசிச்சாங்க. அப்ப அவங்க கோவமெல்லாம் என் மேலத்தானா? தல பேர சொன்னாலே துடிப்பாரே ஒருத்தர், அவரு அங்கயும் கமெண்ட் போட்டாரு. ஆனா இத பத்தி சொல்லல. என்னவோ அவர நான் இன்னொரு ஐ.டில வந்து மிரட்டறதா பதிவெல்லாம் போட்டாரு. தம்பி, மறுபடியும் சொல்றேன், நடிகர்களுக்காக நண்பனை இழப்பவன் நானல்ல. உங்களை கார்க்கியாகவே திட்ட பல காரணம் உருவாக்கி வச்சிருக்கீங்க. அத மாத்த பாருங்க. என்னை பத்தி சரியா தெரியலைன்னா இங்க அடிக்கடி வர கார்த்திக்,ஷாஜி, வினோத் பொன்ற தல ரசிகர்களை கேட்டுக்கோங்க
*************************************************

ஆதி எடுத்த படத்தை பார்த்தீங்களா? எப்படி நம்ம நடிப்பு? அதெல்லாம் இருகட்டும் அது என்னடா அப்படி ஒரு தொப்பையான்னு நிறையப் பேரு கேட்டாங்க. அதை திட்டம் போட்டு செஞ்சிட்டாருங்க ஆதி. ஆக்ட்ச்சுவலா அது ஆதியோட சின்ன வயசு கதைங்க. அதனாலத்தான் அவரு மாதிரியே ஆகனும்ன்னு சொன்னாரு. என்ன சொல்லுவாங்க. ஆங் மெதட் ஆக்டிங். அதுக்காக கஷ்டப்பட்டு ரெண்டு மாசமா வளர்த்த தொப்பைங்க அது. அதை யாரும் பாராட்டாம கிண்டல் செய்றீங்க. அடுத்த படத்துல பரிசலா நடிக்கிறேன். அதுக்காக மறுபடியும் வெயிட் குறைச்சுக்கிட்டு இருக்கேன். வால்பையனா நடிக்கற வாய்ப்புக்காக காத்திட்டு இருக்கேன்.
************************************************

ஏப்ரல் 30 வரை ட்ரெய்னிங். அதிகமாக வலைப்பக்கம் வர முடியாது. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல முடியுமான்னு தெரியல. மத்த கடைகளுக்கும் போக முடியுமான்னு தெரியல. டேட்டா கார்டு வேற மக்கர் பண்ணுது. பார்த்து அட்ஜஸ்ட் செஞ்சிக்கோங்கப்பா.

********************************************
பெங்களூரில் நேற்று பதிவர்கள் மாநாடு நடந்தது. ஆமாங்க ரெண்டு பேருக்கு மேல வந்தாலே மாநாடுன்னுதான் சொன்னாரு அவரு. அவரு எவரு தெரியுமா? சில மாதங்களுக்கு முன் தமிழ்மணத்தையே கலக்கிய ப்ளீசிங்க பவுடர். அவரும் வால்தான், அவரும் பையன் தான். அதுக்காக அவர்தான் வால்பையன்னு எல்லோரும் நினைச்சாங்க. ச்சே நினைச்சோம் இல்ல? இல்லைங்க. இவரு வேற. நான் கூட வால் ஆளு செட் பண்ணிட்டாரோன்னு நிறைய கேள்வி கேட்டேன். எல்லோத்துக்கும் சரியா பதில் சொல்லி அவர்தான் ப்ளீச்சிங் பவுடர்ன்னு நிரூபிச்சாரு. அப்புறம் பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கித் தந்தாரு.

அவரிடம் விசாரனை நடந்ந்துக் கொன்டிருந்தபோதே நம்ம ஜீவ்ஸ் அழைத்தார். கூடவே டிபிசிடியும். கப்பன் பூங்காவை இந்த சோம்பேறி சுற்றிப் பார்க்க மாட்டான் என்று தெரிந்துக் கொன்டு இங்க வா அங்க வா என்று அலைகழித்து நல்லா காட்டினாங்கப்பா. எப்படியும் ஜீவ்ஸ் கேமராவோடு வருவாரு, நம்மள அழகழகா ப‌டம் பிடிப்பாருன்னு நினைச்சா கை வீசிட்டு வந்தாருங்க. அப்ப‌டியே அந்த கைய நான் வீசலாம்ன்னு நினைச்சப்பா டிபிசிடி ஹாய் சொன்னாரு. என் காதுல டேய்ன்னு விழுந்துச்சா, அவரு பார்க்க அப்ப‌டி இருந்தாரா அப்படியே ஆஃப் ஆயிட்டேன்.(halfஇல்ல,off) இவங்க பொரி, கடலை எல்லாம் வாங்கித் தந்தாங்க.

என்ன பேசினோம், எப்ப‌டி பேசினோம், கப்பன் பூங்காவை அவர்கள் தேர்ந்தெடுக்க காரணம் என்ன இன்னும் பல அடுத்த பதிவில்..ஹிஹிஹி

வலையுலக இளவரசிகள்

30 கருத்துக்குத்து

நேற்று போட்ட பதிவை படிச்சிங்களா?

இந்தக் கேள்விகளை கேட்டவங்க ரசனைக்காரி. எல்லா பதிலிலும் அவங்க யாருன்னு ஒரு க்ளூ இருக்கு பாருங்க.

1.மொக்கை,கவிதை (மொக்கை கவிதை இல்ல), சிறுகதை இப்படி தமிழ் வளர ரொம்ப பாடுபட்டிருக்கீங்க... இருந்தாலும், பின் நவீனம் பக்கம் மட்டும் தலை (அஜித் இல்ல) காட்டாதது ஏனோ??

அதுக்கு காரனமும் தமிழ் வளர வேண்டுமென்பதுதான். :)))) (என்ன ஒரு கொலைவெறி உனக்கு. நல்லாயிரு)

2.செடில உதிர்ந்த பூ மறுபடியும் செடியோட ஒட்டிக்காதுன்னு எல்லாருக்கும் தெரியும்.... இருந்தும் நீங்களும் உங்க தங்க தளபதியும் அதையே திரும்ப திரும்ப சொல்ல காரணம் என்ன??

எத்தனை முறை சொன்னாலும் அது ஓட்டாதுன்னு புரிய வைக்கத்தான் :)))

3.புதிய காதல் எப்படி இருக்கு??

ம்ம். நாடு விட்டு நாடு காதலிக்கறேன். என்ன ஆக போகுதோ? அவளுக்கு வேற மார்ஷன் ஆர்ட்ஸ், கம்பு சுத்துறதுன்னு பல விஷயம் தெரியுமாம். கொஞ்சம் பத்திரமாத்தான் இருக்கனும். மச்சானுங்க வேற அதிகம்ன்னு கேள்விப்பட்டேன். எவ்ளோ எதிர்ப்பு வந்தாலும் அவளுக்காக சமாளிக்கலாம். ஏன்னா அவ ரொம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்லவ. :)))

4.கலையுலகத்துக்கு போன பிறகு எழுத்துலகத்த மறந்துடுவீங்களா??

ச்சே..ச்சே..உலகத்தே விட்டே போனாலும் எழுத்துலகத்த மறக்க மாட்டேன். மைண்ட்ல வச்சிப்பேன். :))))

5.நீங்க நடிக்க வரத பத்தி உங்க தலைவர் அகிலாண்ட நாயகன் என்ன சொன்னார்?? அவர சந்திச்சு ஆசீர்வாதம் வாங்கினீங்களா?? அவருக்கு போட்டியா நீங்க??

அவர் முன்னாடி நாம நின்னா, அவருதான் நம்மகிட்ட ஆசீர்வாதம் வாங்குர மாதிரி இருப்பாரு. அவரு கூட எல்லாம் போட்டி போட முடியுமா? என் டார்கெட் அல்டிமேட் ஸ்டார் தான். தொப்பைய பார்த்தீங்க இல்ல? :)))

**********************************

இந்தக் கேள்விகளை கேட்டவங்க ஒரு பின்னூட்ட பினாமி, ச்சே சுனாமி. கும்மியில் கை தேர்ந்தவர்.

1) பெண்களை பற்றி உங்களின் கருத்து என்ன ?
ஆண்களைப் போல அவர்களும் பாவப்பட்ட பிறவிகள். அவ்வளவுதான்.


2) உங்கள் வாழ்வில் எதை மறக்க நினைக்கிறீர்கள்? எதை மறக்க கூடாது என்று நினைக்கிறீர்கள் ?
நிறைய இருக்கு. கல்லூரி காலத்தில் செய்த சேட்டைகளை நினைத்தால் கொஞ்சம் வருத்தமா இருக்கும். அதையெல்லாம் மறக்கனும்னு நினைக்கிறேன். மறக்க கூடாதுன்னா நான் யார் யாருக்கெல்லாம் கடன் கொடுத்து இருக்கேன்னு.


3) நீங்கள் ஒரு பொண்ண லவ் பண்றீங்க ஆனா அந்த பொண்ணு உங்களுக்கு புடிச்ச மாதிரி நீங்க நினைக்கிற மாதிரி இல்ல .இந்த டைம்ல உங்க தோழி உங்களுக்கு உங்களுக்கு லவ் ப்ரொபோஸ் பண்றாங்க உங்களுக்கு உங்க தோழியும் புடிச்சி இருக்கு உங்க லவர்ரயும் விட மனசு வரல இந்த டைம்ல நீங்க என்ன பன்னுவிங்க ?

உண்மைய சொல்லனும்ன்னா எனக்கு இப்படி நடக்க வாய்ப்பே இல்லை. அதனால் உணர்வு பூர்வமா பதில் சொல்ல முடியல. யோசிச்சுப் பார்த்தா, அந்த தோழி நான் லவ் பண்றேன்னு தெரிஞ்சே ப்ரபோஸ் பண்றாங்கில்ல? அதனால் பிற்காலத்தில் எனக்கு பிடிக்காம போக வாய்ப்புண்டு. அதனால

வேற ஒரு பொண்ண தேடுவேன். எப்படி?????????

4) உங்களின் லட்சியம் என்ன ?
ஏற்கனவே சொன்னேனே. லட்சியம் எதுவுமில்லால வாழனும். அதான் என் ஒரே லட்சியம்.

5) உங்களின் முதல் காதலின் அனுபவம் எப்படி அவங்க பெயர் என்ன ?
ஹிஹி. யூ.கே.ஜில நடந்தது எல்லாம் ஞாபகத்துல இல்லைங்க.

*****************************
பயப்படாதீங்க. இன்றோடு முடிந்தது. கேள்விகள் கேட்ட அந்த நால்வருக்கும், பதில்களை படித்த அந்த நாலாயிரம் (சரி சரி) பேருக்கும் நன்றி. இந்த தொடர்பதிவின் விதிமுறைகள் சரிவர பின்பற்றபடாததால் யாரையும் அழைக்க நான் விரும்பவில்லை. தொடர விரும்புவர்கள் கேள்விகளுக்கு என்னை அனுகலாம்.


Apr 22, 2009

வலையுலக ராணிகளின் கேள்விகளும் எனது பதில்களும்

56 கருத்துக்குத்து

கடந்த சில மாதங்களாகவே வலையுலகில் ராணிக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பலரும் பல தளங்களில் பின்னி பெடலெடுக்கிறார்கள். கவிதை, கதை, புகைப்படம், சமையல், மொக்கை, கும்மி என எல்லா தமிழ்மண‌ பிரிவுக்கும் ஒரு ரெப்ரெசென்ட்டேடிவ் இருக்காங்க.

இப்ப மேட்டர் என்னென்னா,ஆதி ஒரு தொடர்பதிவுக்கு அழைத்தார். அதன் எல்லா நிபந்தனைகளும் யாருக்குமே சரியா தெரியவில்லை. கேள்விக்கு பதில் சொல்லனும். அது மட்டும் புரிஞ்சுது. இப்ப நான் என்ன செய்யப் போறேனா, நம்ம வலையுலகில் கொடி கட்டும் பறக்கும் சில ராணிக்கள் என்னிடம் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் சொல்லப் போகிறேன். கேள்வி கேட்டவர்களை யூகித்து சொல்லுங்கள்.

இவர் ஒரு நல்ல சாப்பாட்டு பிரியர். கொள்கையே இல்லாத கொ.ப.செ. இதுக்கு மேல க்ளூ வேணும்ன்னா பேரைத்தான் சொல்லனும்.

1. ஒருவேளை இப்போ உங்கம்மா உனக்காக பார்க்கும் பெண் உன் முன்னால் காதலியாய் இருந்தால்?
கேள்வியிலே தப்பு இருக்கு. முன்னால் தானே அவங்க இருப்பாங்க? நீங்க கேட்க வந்தது முன்னாள் காதலின்னு நினைக்கிறேன். அதுவும் மொட்டையாக் கேட்டா எப்படி? எந்த காதலிய சொல்றீங்கன்னு தெரியல. ஹிஹிஹி. ஆனா உண்மை என்னன்னா அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு. பேரு கார்க்கியில்ல.

2. காதல் தோல்வியைத் தவிர உன்னை வாழ்க்கையில் வெறுப்படைய வைத்த சம்பவம்?

அதுக்க‌ப்புற‌ம் நான் வாழ்க்கையே வெறுத்து விட்ட‌தால்,எதுவும் என்னை பெரிதாய் பாதிக்க‌வில்லை.:)))). நிஜ‌மா வேறு எதுவும் அப்ப‌டி தோனலைங்க‌.

3. விஜய் ரசிகனாக நீ கொடுத்த/கொடுக்கும் விலை?

நிறைய இருக்கு. ஆனா எப்படி சொல்றதுனு தெரியல. பல பேரு நான் ஏதோ தெய்வ குத்தம் செய்வதுப் போல அட்வைஸ் பண்றாங்க. அவங்க மத்த விஷயத்துல என் நலம் விரும்பிகள் என்பதால் அமைதியா கேட்டுக்கிறேன். பிறருக்காக என் விருப்பங்களை மாற்றிக் கொள்ளவோ மறைக்கவோ நான் விரும்பவில்லை.

4. ஒரு விஷயம்/செயலை பண்ணனும்ன்னு ஆசை. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது. அப்படி ஏதாவது ஒரு மேட்டர்?
சொன்னா நம்பமாட்டீங்க. கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நினைக்கிறேன். :)). வேற எதுவும் இதுவரைக்கும் இல்லை. ஏன்னா நான் நினைக்கிறத ரகசியமாவாது செய்து பார்க்கலைன்னா எனக்கு தூக்கம் வராது.

5. பிளாக் எழுத வந்திருக்காவிட்டால்?
வேலைய‌ ஒழுங்கா செய்திருப்பேன். ஆனா ரெண்டே மாச‌த்துல‌ ஹைதைல‌ இருந்து வேலை ரிசைன் ப‌ண்ணிட்டு ஓடியிருப்பேன்.

*******************************

இவரின் கேளிவிகளை படித்தாலே கண்டுபிடிச்சிடலாம். ரொம்ப நல்ல்ல்லவங்க.


1. உங்களுக்கும் ஒஸ்திரேலியாவில் இருக்கும் டான்யா என்ற Greek நாட்டு மங்கைக்கும் அப்படி என்ன சிநேகிதம்?

இன்னொரு சினேகிதி மூலம் பழக்கமானவர். எனது புகைப்படத்தை பார்த்து என்னிடம் பேசத் தொடங்கினார். தமிழ் படிக்க தெரியாவிட்டாலும் எங்கள் பொதுவான அந்த நண்பி மூலம் விஷயத்தை தெரிந்துக் கொள்வார். கூடிய சீக்கிரம் அவர் இங்கேயோ, அல்லது நான் ஆஸ்திரேலியாவிற்கோ செல்லக்கூடும்.

2. சகா, உங்களுக்கு எப்போது சகி வருவார்?
டான்யாவிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

3. உங்கள் பதிவுகளுக்கு மட்டும் நர்சிம் உடனே மறுமொழி இடும் மாயம் என்ன? இங்கு ஏதும் கொடுக்கல்வாங்கல் உள்ளதா?

ஹிஹிஹி. அன்பைத்தான் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்( நோ நோ நோ க்ரையிங்)

4. அது எப்படி உங்களால் மட்டும் மொக்கைகளை கூட சிறந்த பதிவுகளாக மாற்ற முடிகின்றது?

மொக்கைகளை சிற‌ந்த படைப்பென நம்பும் உங்களை போன்ற வாசகர்கள் இருக்கும்வரை நம்ம வியாபாரம் சிற‌க்கும். நல்லப் படைப்பென எழுதுவதை மொக்கையா இருக்கு என்று விமர்சிக்கலாம். ஆனால் மொக்கையென வகைப்ப‌டுத்துவதை மொக்கையென்றாலும் பாராட்டுவதை போலாகும். நல்லாயிருக்கும் என்றாலும் அப்ப‌டியே ஆகும். இதுதான் தந்திரம்.

5. மிகவும் அருமையான எழுத்துக்களை படைத்துவரும் தாங்களுடைய அடுத்த கட்ட திட்டங்கள் எவை என அறியலாமா?
ஹிஹிஹிஹிஹிஹிஹி..வாழ்க்கைல என் ஒரே லட்சியம் எந்த லட்சியமும் இல்லாமல் வாழ்வதுதான். அதனால் எதிர்காலத்தை பற்றி நான் யோசிப்பதே இல்லை.

மேலும் சில ராணிக்களின் கேள்விகளும் எனது பதில்களும் அடுத்த பதிவில். ரசனைக்காரி என்ற பெயர் வாங்கியவரும், பின்னூட்ட சுனாமி என்ற‌ பேர் வாங்கியவரும் நாளை..

Apr 21, 2009

XXX பத்து வழிகள்

46 கருத்துக்குத்து

1) லிஃப்டுக்குள் நுழைபவர்கள் அவர்களுக்காக ஸ்பெஷல் சர்வீஸ் வருவது போல கதவு திறந்தவுடனே உள்ளே நுழைய முயன்று வெளியே வருபவர்களை இடிப்பது போல் வந்து அசடு வழியும்போது

2) பத்தாவது தளத்திற்கு செல்ல வேண்டியவர்கள், லிஃப்ட் ஏதோ பாய்ண்ட் டூ பாய்ண்ட் சர்வீஸ் என நினைத்துக் கொண்டு லிஃப்ட்டில் கூட ஃபுட்போர்டு அடிக்கும் போது..

3) சரியா பச்சை விளக்குதாஙக எரியும் நம்ம ரூட்ல. மஞ்சள் மாறிடபோதுன்னு கொஞ்சம் முறுக்குவோம். சிஞல் பார்க்காம அவங்க குறுக்குல் வந்துட்டு "எப்படி போறான்" பாருன்னு நம்மள குத்தம் சொல்லும் பொண்ணுங்கள பார்க்கும் போது..

4) கேண்டின்ல வரிசையா டம்ளர் இருக்கும். பெரிய இவரு மாதிரி வந்து கேனோடு எடுத்து, அத கீழ் உதட்டில் முட்டுக் கொடுத்து தண்ணி குடிச்சிட்டு, கொஞ்ச தண்ணிய வாயில இருந்து அது மேல தெளிச்சிட்டு போகும் போது

5) கஷ்டபட்டு பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சு, அத தெளிவா ஒரு ஃப்ளோல Developer கிட்ட விளக்கி சொல்லும்போது, ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again சொல்லும் போது

6) அதிசயமா ஒருத்தர் நம்மளுக்கும் புரியற மாதிரி ப‌யிற்சி வகுப்பு எடுத்திட்டு இருக்கும்போது அவரையும் கடுப்பேத்தி நம்மளையும் கொலை முயற்சி செய்ய தூண்டிற மாதிரி "அக்கட கொட்டு கொட்டு"னு ஒருத்தன் மொபைல் அலறும்போது

7) Conference roomக்கு போய் client கூட conferenceபோடுவதற்கு ஃபோன எடுத்திட்டு வந்து டெலிஃஃபோன் ஜாக்குக்கு பதிலா LAN portல சொருகிட்டு, phone ஒர்க் ஆகல சொலறவங்கள பார்க்கும்போது

8) காலேஜ் வரைக்கும் காடுவெட்டில புரண்ட அழுக்குமூட்டை அண்ணாமலை ,Hey dude try to avoid road side food என்று அட்வைஸ் அய்யாசாமீயா மாறும்போது

9) இவரு code தப்பா எழுதிட்டு, அதை யாராவது டெஸ்ட் செய்து தப்பை கரெக்ட் பண்ண சொன்னா, ஏதோ எக்ஸ்ட்ரா வேலை சொன்ன மாதிரி ”they are squeezing me” ன்னு கரும்பு மாதிரி கவலைப்படறத பார்க்கும்போது

10) பொண்ணுங்களே அதிகம் பார்க்காம கலங்கி நின்ற என்னை மாதிரி மெக்கானிக்கல் பசங்க, அழகழகான பொண்ணுங்க இருந்தும் அவளுங்கள பிடிக்காம போற மாதிரி நடந்துக்குற அலட்டல் அலமேலுகள பார்க்கும் போது…

ங்கொய்யால மறுபடியும் நம்ம manufacturing domainக்கே போயிடலாம்ன்னு தோனுதுங்க..

தலைப்பு :XXX= ஐ.டியை வெறுக்க பத்து வழிகள். (நீங்க வேற ஏதாவ்து நினைச்சிங்கன்னா அதையும் போட்டுக்கலாம். அதுக்காகாத்தான் xxxxxxxxx..)

Apr 20, 2009

காக்டெய்ல்

44 கருத்துக்குத்து

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ’பத்துலட்ச நிமிட அழைப்புகள் இலவசம்’ என்று எழுதப்பட்ட விளம்பரம் ஒன்றை பார்வையிட்டுக் கொண்டே சென்றிருக்கிறார். அந்த விளம்பரம் ஒட்டப்பட்டிருந்த்து அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தில். திடீரென்று பேருந்து நிறுத்தத்திற்காக நின்றுவிட தடுமாறி பேருந்தின் மிக அருகில் சென்று ப்ரேக் பிடித்திருக்கிறார். இதைச் சொல்லி என்னிடம் அவர் புலம்பியபோது ‘உன்னை யாரு விளம்பரத்தைப் பார்த்து வண்டி ஓட்டச் சொன்னாங்க?’ என்று கேட்டேன். (நான்கூட ‘ரசிக்கும் சீமானே’ பட விளம்பரத்தில் நவ்யா நாயரை சைட்டடித்துக்கொண்டே வண்டி ஓட்டியது ஞாபகத்துக்கு வந்தது!)

“பஸ்ஸூக்கு பின்னாடியே ‘பத்துமீட்டர் இடைவெளி விட்டு வரவும்’ன்னு எழுதியிருக்காங்க. அப்பறம் எதுக்கு இப்படி விளம்பரம் பண்ணணும்? பத்துமீட்டர் தூரத்திலிருந்து படிக்கவா முடியும்? பேசாம பஸ் சைடுல விளம்பரம் பண்ணிக்கலாம்ல?” என்று கேட்டார்.

அவர் சொல்றது சரிதானோ?

***************************************

என் உறவினர்களில் ஒருத்தர் பிரபுவின் வெறிபிடித்த ரசிகர். நான் அப்போ சின்னப்பையன். (இப்பமட்டும் என்னவாம்?) ’பிரபுவா’ என்று அவரைக் கிண்டல் செய்வோம். (பிரபுவை அல்ல. சொந்தக்காரரை!

ஆனால் சமீபகாலங்களில் பிரபு அசரடிக்கிறார். சரியான பாத்திரத் தேர்வுகள். நிறைவான நடிப்பு என்று மனதைத் தொடுகிறார். சந்தோஷ் சுப்பிரமணியம், சந்திரமுகி, பில்லா, அயன் என்று அவரது பயணம் சிறப்பாய் இருக்கிறது. வடக்கே அமிதாப் இப்படி குணசித்திரத்திர பாத்திரங்களில் நடிப்பது போல ரஜினி, கமல் ஏன் நடிப்பதில்லை என்றால்..

பிஸினஸ்!

மாவோ சொன்னதுதான்: மரம் சும்மாயிருக்க நினைத்தாலும் காற்று விடுவதாயில்லை.

***************************************

கவிதை எடுத்துப் போடுங்க என்று கேட்டுக் கொண்ட நண்பருக்காக ஒரு கவிதை

தோழர் மோசிகீரனார்

மோசிகீரா

மகிழ்ச்சியினால்

மரியாதையை நான்

குறைத்ததற்கு

மன்னித்தருள வேண்டும் நீ

சொந்தமாக உனக்கிருக்கும்

சங்கக்கவிதை யாதொன்றும்

படித்ததில்லை நான் இன்னும்

ஆனால் உன்மேல் அளவிறந்த

அன்பு தோன்றிறு

இன்றெனக்கு

அரசாங்கக் கட்டிடத்தில்

தூக்கம் போட்ட முதல்மனிதன்

நீதான் என்னும் காரணத்தால்

-ஞானக்கூத்தன்.

***************************************

ரொம்ப டென்ஷனானா நான் பண்ற ஒருவிஷயம் ரயில்வே ஸ்டேஷன்ல போய் ஒரு ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கறது. மகளை தனியே அனுப்பும் பெற்றோர்கள், பெற்றோர் தலை மறைந்ததும் அலைபேசியை எடுக்கும் மகன்கள், எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத அறிவிப்புக்கு முன்னான டிங் டாங் இசையொலி, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ரயில், வந்து நிற்கும் ரயிலின் ஜன்னல் முகங்கள் என்று இரயில்நிலையம் ஒரு போதிமரம்.

அதுசரி...

‘போய்ச் சேர்ந்ததும் லெட்டர் போடு’ என்ற குரல் கேட்கிற இரயில் நிலையங்கள் இருக்கின்றனவா இப்போதும்?

***************************************

ஐ.பி.எல். சீஸன் 2 ஆரம்பமாகிவிட்டது. போனமுறை இருந்த ஓபனிங் ரெஸ்பான்ஸ் இந்தமுறை இல்லையென்றே சொல்லவேண்டும். போகப் போக ஹிட்டாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

மும்பை இண்டியன்ஸில் சச்சினும், சென்னை சூப்பர் கிங்க்ஸில் தோனியும், ராயல் சேலஞ்சர்ஸில் டிராவிட்டும், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்-ல் யுவராஜும் டெல்லி டேர்டெவிலில் சேவக்கும் கலக்கலாக விளையாடுவது மகிழ்ச்சியே. நிச்சயம் இது தொடர்ந்துவரும் T 20 உலகக் கோப்பையில் எதிரொலிக்கும் என்பதால்.

வருடா வருடம் இப்படி ஐ.பி.எல். தொடர்ந்தால் இதே மாஸ் இருக்குமா?

சந்தேகம்தான்!

***************************************

தினத்தந்தி குருவியார் பதில்கள் மிக சுவாரஸ்யமிக்கவை. மன்னிக்கவும். பதில்கள் அல்ல கேள்விகள்.. பதில்களை நான் படிப்பதில்லை. கேள்விகளை மேய்ந்துவிட்டுப் போய்விடுவேன். எப்படி வேலைமெனக்கெட்டு இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார்கள் என்று நினைப்பதுண்டு.

இந்த வாரம் வந்திருந்த கேள்விகள் சில..

விஜயசாந்தி தொடர்ந்து நடிப்பாரா, நடிகர் சார்லியின் சம்பளம் எவ்வளவு,

ஜெனிலியா ஏன் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை, வடிவேலுவின் இஷ்ட தெய்வம் யார் etc.. etc…

சிறந்ததாய் நான் தேர்ந்தெடுத்த கேள்வி:

பிரபல நடிகைகளை தாடி வைத்த ஆண்கள் சுலபமாக மயக்கி விடுகிறார்களே.. எப்படி? (இரா.தமிழரசன், தஞ்சை.)

நோ கமெண்ட்ஸ்

Apr 19, 2009

பெங்களூரில் பதிவர் சந்திப்பு

30 கருத்துக்குத்து
bengaluru01

பெங்களூரில் வசிக்கும் தோழிகளே, சகிக்களே, தாய்மார்களே மற்றும் நண்பர்களே (ம்க்கும்) வரும் திங்கள் முதல் ஏப்ரல் 30 வரை ரகசிய பயணமாக பெங்களூர் வருகிறேன். பெங்களூர் விவேகானந்தர் தெருவில் வசிக்கும் நண்பர்களும், மன்னார் அண்ட் கோ வில் வேலை செய்யும் நண்பர்களும் என்னை சந்திக்க விரும்பினால் அழைக்கலாம். மாலையில் இரண்டு கிங்ஃபிஷரும், சிக்கன் டிக்காவும் சாப்பிடுவது என் வழக்கம், அதன் பின் உங்கள் விருப்பம். கூட்டம் கூடுவதும் எனக்கு பிடிக்காது

செல்: 9789887048

மொபைல்: 9789887048

அலைபேசி :9789887048

ஹேண்ட்ஃபோன் : 9789887048

சென்னை நம்பர் என்பதால் முன்னால் 0 போட்டுக் கொள்ளுங்கள்.முன்னால் எம்.பி மாதிரி அல்ல. 09789887048. பிரியுதா? அதான் சேர்த்தே எழுதி இருக்கேனே. அப்புறம் எப்படி பிரியும்?

ஒன்னுமில்லைங்ண்ணா. நம்ம சாரு என்னை மாதிரி(மாறுவேஷமா? அடிங்க) பெங்களூரு வந்தால் எப்படி சொல்லுவாருன்னு யோசிச்சேன். ஹிஹிஹி.

Apr 17, 2009

சாலமனுக்கு ஒரு கடி தம்

40 கருத்துக்குத்து

 

   இந்த தொடர் பதிவுக்கு இப்படி ஒரு சோகமான நெலம வரும்ன்னு நினைக்கவே இல்லைங்க. அதிஷாவுக்கு நன்றி.

சாலமனுக்கு ஒரு கடி தம்:

சாலமனுக்கு ஒரு கடி:

நண்பன் 1: மச்சி குற்றாலத்துல இப்ப நல்ல சீஸன் தொடங்கி இருக்குன்னு சொன்னத ரமேஷ் நம்ப மாட்டறாண்டா

நண்பன் 2: விடு மச்சி. அவன் ஃபால்ஸ் நியூஸ் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டிருப்பான்.

சாலமனுக்கு ஒரு தம்:டிஸ்கி: திட்டறதுக்கு முன்னால தலைப்ப மறுபடியும் படிச்சிட்டு வாங்க. நான் ஏமாத்தல ஏமாத்தல ஏமாத்தல…

Apr 16, 2009

எனக்கு எப்போ இந்த மாதிரி சொல்லுவீங்க???????

26 கருத்துக்குத்துகண்ணால் காண்பது பொய்...

    இந்தப் ஃபோட்டோவ பார்த்தா அதாங்க தோணுது.. ராமதாஸ கூட நம்பிடலாம். இந்த மனுஷன.. ம்ஹூம்..

  எந்த நேரத்தில் டவுசர அவுப்பாருன்னு தெரியாம நம்ம நர்சிம் பேண்ட்ட in shirt செய்து டைட்டா பெல்ட்ட போட்டா, அதையும் கலாய்ச்சவர். 

   கொஞ்சம் லேட்டுதான், பரவாயில்ல.. இன்னும் நாள்  முடியலையே. இப்ப சொல்லலாம். இருங்க இருங்க..

ரெடி.ஸ்டார்ட் ஒன்..டூ.த்ரீ..

இனிய மணநாள் வாழ்த்துகள் திருமதி& திரு சரவணா...........

 
  

Apr 14, 2009

Anitha calling..

47 கருத்துக்குத்து

   பாதி வரை எரிந்து சாம்பலான சிகரெட்டின் முனை போல சுருண்டு கிடந்தான் மதன்.  புதிதாய் மாற்றி அமைக்கப்பட்ட சைடு அப்பர் அவனுக்கு தோதாக இல்லை. மேலும் ரயிலின் தடக் தடக் சத்தத்தை அவனது இதய துடிப்பு வெல்வதையும் அவன் விரும்பவில்லை. தெலுங்கில் ஏதோ சொல்லிக் கொண்டே கைகளை மேலே தூக்கிய பிச்சைக்கரானின் குடுவைக்குள் தன்னையே போட முடியுமா என்று எட்டிப் பார்த்தான். இடது கையில் கெட்டியாய் பிடித்திருந்த செல்ஃபோன் மீது கண் பட்டதும் உள்ளிழுத்துக் கொண்டான்.

  இன்னும் வரவில்லை அழைப்பு. துல்லியமாய் தெரிந்த TFT displayல் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் மது. அந்த வசீகர சிரிப்பையும் மீறி இடது ஓரத்தில், இந்திய பொருளாதாரம் போல மேலும் கீழும் ஏறி இறங்கும் டவரையே வெறித்துக் கொண்டிருந்தான். சிக்னல் கிடைக்காமல் போகும் சமயங்களில் தட்டிப் பார்த்தான். அது கோவத்தின் வெளிப்பாடா அல்லது நோக்கியா இணையதளத்தில் கொடுக்கப்பட்ட டிப்ஸா எனத் தெரியவில்லை. மணி 12ஐ தாண்டி இருந்தது.

“Send me SMS if i am not reachable" .

  sent items ல் இருந்த அதே மெசேஜை பத்தாவது முறையாக ஃபார்வர்ட் செய்தான். “Message sent"  என்று சொல்லி தன் மீது எந்த தவறும் இல்லை என வாக்குமூலம் தந்தது ஏர்டெல் சேவை. மீண்டும் sent itemsக்கு சென்று மதுவிற்குத்தானே அனுப்பினோம் என்று தன் பக்க நியாயத்தை உறுதி செய்து கொண்டான். காரணமே இல்லாமால் அந்த நடு இரவில் இறங்கி சென்று சார்ஜ் செய்தான். ஐந்தே நிமிடத்தில் Battery full என்று காட்டியது. தூக்கம் வராமல் முன்தினம் நடந்ததை மெல்ல அசைப் போட்டான்.

மது.

என்ன?

நான் வேற ஒன்னும் கேட்கல. அடிக்கடி ஃபோன் செய். அது போதும்.

புரிஞ்சிக்கோ மதன். என்னால் முடியறப்ப கண்டிப்பா செய்றேன்.

நான் என்ன அரை மணி நேரமா பேச சொல்றேன் ஜஸ்ட் 2 மினிட்ஸ்.

ம்ம்.. சரி.

முடியலன்னா ஒரு எஸ்.எம்.எஸ். அவ்ளோதாம்ப்பா.

ம்ம்

என்ன. எல்லாத்துக்கும் ம்ம் னு சொன்னா என்ன அர்த்தம்?

கிளம்பறீயா? ட்ரெய்னுக்கு டைம் ஆச்சு.

ட்ரெய்னிக்குத்தானே ஆச்சு. எனக்கு இல்லையே.

ஜோக்கா? Be serious மதன். ஒழுங்கா போய்ட்டு வா.

எனக்கு போகவே பிடிக்கல. ஒரு மாதிரி இருக்குடா.

எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்பறேன். (வேகமாக நடந்தாள்)

ப்ளீஸ். கால் பண்ண மறக்காத. அது மட்டும் போதும். (கத்தினான்)

   இரண்டு கைகளிலும் இருந்த லக்கேஜ் அவன் கண்களை துடைக்க இடைஞ்சலாய் இருந்தது. அது மட்டுமல்ல நகரத் தொடங்கிய ரயிலிலும் ஏறும்போதும் தொல்லை தந்தது. பெர்த்தை கண்டுபிடித்து பைகளை வைத்துவிட்டு Compose செய்தான்.“Send me SMS if i am not reachable". அப்போதுதான் முதல் முறை அந்த புறா பறந்தது.

விடியலை அறிவிக்க வந்த சூரியன் மதனைக் கண்டு ஹாய் சொல்லிப் போனது. அப்போதும் அந்த வசீகர சிரிப்பிலே மூழ்கி கிடந்தான் மதன். இறங்குமிடம் வந்ததும் போர்ட்டரை தேடினான். இந்த ரெண்டு சின்ன பைக்கு போர்ட்டரா என்று யாரும் இவனை கவனிக்கவில்லை. முதுகில் ஒன்று, இடது கையில் ஒன்றுமாய் ஆக்கிக் கொண்டு, வலது கையில் அலைபேசியை பார்த்தபடி நடக்க தொடங்கினான். அவ்வபோது 121க்கு அழைத்து லைன் க்ளியர் என்பதை உறுதி செய்து கொண்டான்.

லாட்ஜ் வேணுமா சார்? ஏ.சி இருக்கு என்றவனிடம் , அந்த லாட்ஜில் ஏர்டெல் சிக்னல் கிடைக்குமா என்று வினவினான். ஒரு வழியாய் அறைக்குள் வருவதற்குள் அரை நாள் முடிந்து விட்டது. கால் இன்னும் வரவில்லை. குழப்பமாய் அலைந்தவன் ஒரு பாட்டிலை முடித்த நேரம் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தான். ஏனோ சில நிமிடங்களிலே மீண்டும் குழப்பமாய் அலையத் தொடங்கினான். சில மணி நேர அவஸ்தைக்குப் பின் டைரியைத் திறந்து எழுதத் தொடங்கினான்.

செய்வதென முடிவாகிவிட்டது.
எதைக் கொண்டு
என்பதில் தொடங்கியது
சில குழப்பங்கள்.
துப்பாக்கிகள்
எளிதில் கிடைப்பதில்லை.
பர்மா பஜார் கத்திகள்
100% வெல்வதில்லையாம்.
அருவிகள் தேடிச் செல்ல
நேரமில்லை.
என்ன செய்துவிடும் கயிறு?
சாக துணிந்தவனுக்கு
இதெல்லாம்
ஒரு வலியா
என்று நினைத்த நேரத்தில்
ஒலித்தது அலைபேசி

“Anitha calling"...

Apr 13, 2009

பரிசல், கார்க்கி, ஆதி மற்றும் அந்த மூன்று பேரும்

54 கருத்துக்குத்து

5949837-lg

சென்னையில் அன்று வெயில் குறைவாகத்தான் இருந்தது. மயிலாப்பூரை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த 5சி பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்து சிங்கார சென்னையின் பருவக்குமரி கூவத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். அடையாறை தாண்டிய நிறுத்தத்தில்தான் அந்த மூவரும் ஏறியிருக்கக்கூடும். என் முன் இருக்கையில் இருவரும் அதற்கும் முன் இருக்கையில் ஒருவனும் அமர்ந்தார்கள். அவர்களுக்கு வயது 20லிருந்து 22க்குள் தானிருக்கும். என்னை விட இரண்டு வயது குறைவானவர்களா என்ற ஏக்கத்துடன் அவர்களைப் பார்த்தேன்.

”காலேஜ் லைஃப் வேற மச்சி. இப்ப நீ கொஞ்சம் புரஃபஷ்னலா நடக்க கத்துக்கோ”  பல நாட்கள் ஷேவ் செய்யாத முகத்துடன் இருந்தவன் சொன்ன இந்த டயலாக்கில் இருந்தே அவன் தான் அவர்கள் க்ரூப் க.க (என்னவென்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்) பரிசல் என்பது தெரிந்தது.

”எனக்கு புரியுதுடா. அதுக்காக அவளா வந்து பேசும்போது மூஞ்சிய திருப்பிக்கிட்டு போக முடியுமா? ” மூன்று நாள் தாடியுடன், பார்க்க கொஞ்சமல்ல ரொம்பவே ஸ்மார்ட்டாய் இருந்தவன் கேட்ட இந்தக் கேள்வியின் மூலம் அவன் அந்த க்ரூப் மி.ரோ (போன பத்தியில் சொன்ன அதே வரி ரிப்பீட்ட்டேய்) கார்க்கி எனபதும் தெரிந்தது.

”இப்ப அவளுங்க பேசறதுக்கு பதில் சொல்ல ஆசையாத்தான் மச்சி இருக்கும். போக போக தெரியும் அது எவ்ளோ கஷ்டம்னு” க்ளீன் ஷேவுடன் இருந்தாலும் தலையிலிருந்து தரை நோக்கி Y axisல் நான்கு ஜான் வந்தவுடன், Z axisல் ஒரு ஜான் முன்னே வளர்ந்திருந்த தொப்பை இரண்டாம் அடையாளம் தான். அவன் சொன்ன அந்த எச்சரிக்கையே அவன் அவர்கள் க்ரூப் அ.பா(ரிப்பீட்டேய்) தாமிரா ச்சே ஆதி என்பதும் தெரிந்தது.

அவர்களுக்குள் மாறி மாறி கேள்விகேட்டு பதில் சொல்லிக் கொண்டார்கள். இனிமேல  உன் கூட வெளியே வரவே மாட்டேன் என்றும் சொன்னான் ஒருவன்.  மி.ரோ விளக்கம் சொல்லிக் கொண்டே இருந்தாலும் அவர் லாக்காகிவிட்ட விஷயம் எனக்கே புரிந்தது. கடைசியா கேட்கறேன். பேசறத நிறுத்துவியா மாட்டியா என்றக் கேள்விக்கும் கேட்ச்(அதாங்க பிடி) கொடுக்காமலே பேசினார் மி.ரோ. கோவத்துடன் எழுந்து முன்னே சென்றுவிட்டார் க.க.  இறங்குவதற்குள் சமாதானமாகி கையில் இருந்த காசையெல்லாம் எண்ணி 200ரூபாய் தயார் செய்தார்கள். சினிமாவில் வருவது போல் அவர்களுக்கென தனி ஸ்டைல் வைத்திருந்தார்கள். ஏதோ இங்லிஷீல் சொல்லிக் கொண்டே கைகளை வித்தியாசமாக தட்டி சிரித்தார்கள். பொறாமையாக இருந்தது. பர்சில் (பரிசல் அல்ல, பர்ஸில்) சில ஆயிரங்களும், தேவைப்பட்டால் தேவைப்படும் அளவுக்கு தேய்க்க காந்த அட்டைகளும் கைவசம் இருந்தும் அந்த சிரிப்பு என் உதட்டில் இல்லை.

இது நடந்து சில மாதங்கள் ஆகின்றன. ஆனால் தினமும் இரவில் தவறாமல் அவர்களை நினைத்துக் கொள்வேன். 2002க்கு பின் சில காரணங்களால் எனக்கென்று புதிதாய் எந்த நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளவில்லை நான். தனியாகவே இருக்க பழகி கொண்டேன். பதிவெழுத தொடங்கிய பின்னும் யாரிடமும் அதிக நெருக்கம் காட்டவில்லை. பதிவுலகில் ஏற்பட்ட சந்தோஷமான தருணங்களை மட்டுமே பதிவுலக நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வேன். கொஞ்சம் கொஞ்சமாய் மாறத் தொடங்கினேன்.

மனசு சரியில்லை என்று எழுதினால் நள்ளிரவில் ஜெர்மனியின் இருந்து கால் வருகிறது. லேசா தலைவலிக்குது என்றால் சிங்கப்பூரில் இருந்து கால் வருகிறது. தமிழ்மணம் நட்சத்திரம் ஆகி விட்டேன் என்றால் துபாயில் இருந்து அழைத்து வாழ்த்துகிறார்கள். போரடிக்குது என்று சொன்னால் ஆஸ்திரேலியாவில் இருந்து அழைக்கிறார்கள். ஓவ்வொரு மனிதனுக்கும் கல்லூரி நட்புதான் உயர்வாய் இருக்கும். சாய்ஸும் அதிகம். நமக்கு ஒத்துக் கொள்பவர்களை எளிதில் தேடிக் கண்டுப் பிடித்துக் கொள்ளலாம். ஆனால் அதையும் தாண்டி விட்டது பதிவுலக நட்பு.

என்ன ஆச்சு கார்க்கி? எழுதனும்ன்னு எழுதற மாதிரி இருக்கு. ரெஸ்ட் எடுத்துக்கோ.

writers blockனு சொல்வாங்க. எல்லோருக்கும் வருவதுதான். அதுக்காக பத்து நாளா லீவு விடறது?

பின்னுட்டங்களில் இதை அதிகம் காண முடிகிறது, நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு

உண்மைதான். முன்பிருந்த ஆர்வம் குறைந்தது போல் இருக்கிறது. ஆனால் அதற்கு காரணம் பல பல. எழுத்தின் மீதான் ஆர்வம் குறையவில்லை. மனசு ஏதோ அலைபாய்ந்துக் கொண்டே இருக்கு. சரியாயிடும் என்று நானும் காத்துக் கொண்டே இருக்கிறேன்.

   சனிக்கிழமை நண்பர் ஒருவர் அமெரிக்காவில் இருந்து அழைத்தார். அரை மணி நேரப் பேச்சில் அவர் சொன்ன ஒரு வரி ஒட்டிக் கொண்டது. “ஒழுங்கா எழுதற வரைக்கும் தாம்ப்பா. இல்லைன்னா மூட்டைய கட்ட வேண்டியதுதான்”. உண்மைதான். கடைசி ஒரு மாதத்தில் எழுதியதை படித்துப் பார்த்தேன். :((((((

இதோ. ட்ரெயினில் செல்லும் பொழுது கடந்த ஓரிரு மாதங்களாக எழுதவதில்லை. இன்று புறப்பட்டதுமே எடுத்து இதை டைப்பிக் கொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு புத்துணர்ச்சி. புதிதாய் எழுதுவதைப் போல. என்னை இந்த சக்தி இன்னும் சில காலம் செலுத்துக் கூடும்.  ஆறு வருடங்களாய் கிடைக்காத நண்பர்களை கொடுத்த எழுத்திற்கு நன்றி சொல்லலாம். நண்பர்களுக்கு சொன்னால் தான் திட்டுவார்கள்.

Apr 11, 2009

சினிமா கிசுகிசு.. ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்காக

29 கருத்துக்குத்து
  தலைவரின்  மகளுடன் கூட்டணி சேர்வதாகச் சொன்ன ஹாலிவுட் நிறுவனம் பின் வாங்குகிறதாம். முதலில் எல்லாமே நீங்கதான் என்று சொன்ன அந்த நிறுவனம், தற்போது போ கம் படத்தின் ஸ்கி‌ரிப்ட் கேட்டு நச்ச‌ரிக்கிறதாம். 

  கழன்று கொள்வதற்கான வெள்ளோட்டம் இது என அனுபவசாலிகள் சொன்னதால் கலக்கத்தில் இருக்கிறாராம் உச்சத்தின் மகள்

****************************************************
  என்னவோ தெ‌ரியவில்லை உலக நாயகனுக்கு தொட்டதெல்லாம் துயரமாகவே முடிகிறது. யோகி போகியானது ஒருபுறம் என்றால் அடுத்து எடுப்பதாக இருந்த தலைவன் படத்திலும் தலைவலி. 

இந்தியில் படத்தை தய‌ரித்தவர்களிடமிருந்து முறைப்படி ‌ரீமேக் உ‌ரிமையை வாங்கிய பிறகு, அவர்கள் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயா‌ரித்தவர்கள், உண்மையான ரைட்ஸ் எங்களிடம்தான் இருக்கிறது என புதிதாக ஒரு குரூப் போர்க் கொடி தூக்கியிருக்கிறதாம். தாடியை சொறிந்தபடி யோசித்துக் கொண்டிருக்கிறார் உலகம்.

***************************************************
திமிரு நடிகருடன் மீண்டும் ஜோடி சேரயிருக்கிறார் சென் நடிகை. முதல் படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது எழுந்த கிசுகிசு இதனால் மீண்டும் துளிர் விட்டிருக்கிறது. 

ஜோடி சேருவோம் என்று நடிகை விரும்பிப் போய் நடிகரை கேட்டாராம். மனம் கனிந்த நடிகரும் உடனே ஓகே சொல்லியிருக்கிறா


****************************************************

புத்த இயக்குனர் தனது ஹெவன் படத்துக்கும் சிக்ஸ் பேக் ஹீரோவிடம்தான் கால்ஷீட் கேட்டிருக்கிறார். 

யானை படத்துக்கு வர வேண்டிய சம்பளமே இன்னும் கிடைக்கவில்லை. மறுபடியும் ஒரு படமா என்று கௌரவமாக கழன்று கொள்ள, வேறு வழியில்லாமல் அவர் பிடித்ததுதான் விரல் நடிகராம்


***********************************************************

சத்தம் போடாத முட்டைக் கண் நடிகர் பற்றிதான் வயிறு தீப்பிடிக்க பேசுகிறார்கள் கோலிவுட்டில். 

அஸ்திவாரமே ஆட்டம் கண்டிருக்கும் இவர், உச்சத்துக்கே ஜோடியாக நடித்த பூம்பாவாயுடன் டேட்டிங் சென்றாராம். 

இந்த எடக்கு மடக்கு காம்பினேஷனின் அடித்தளம் தெ‌ரியாமல் புகைந்து கொண்டிருக்கிறார்கள் டேட்டிங் டேட்ஸ் கிடைக்காதவர்கள்

***************************************************************
அப்பா கண்டிக்கவே மாட்டார் என்று பேட்டி கொடுத்துக் கொண்டே கண்டபடி மகள் சுற்றுவதால் குறுமுனி இயக்குனர் வீட்டில் கசமுசாவாம். 

நடிக்கிறது ச‌ரி, ஆனால் அளவோடு ஊர் சுற்று என முனிவர் போடும் வட்டத்தை அழிப்பதிலேயே குறியாக இருக்கிறார் மகள். 

ஒருகட்டத்துக்கு மேல் கண்டிக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார் காதலில் கோட்டை கட்டிய குறுமுனி

*****************************************************************

எகிப்து எம்பள நிறுவனம் தல தளபதி படங்களின் தோ‌ல்‌வியால் துவண்டு போயிருக்கிறது. 

கோடிகளை கலைத்துறையில் கோட்டைவிட்டது போதும் என்று முடிவெடுத்திருப்பவர்கள் தங்களது பிஸினஸ் பார்வையை கடல் பக்கம் திருப்பியிருக்கிறார்கள். 

அதாவது மீன்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம். கலையில் விட்டதை வலையில் பிடிக்கப் பார்க்கிறார்கள். வெற்றி கிட்டட்டும்

நன்றி : வெப்துனியா.காம்

Apr 10, 2009

காக்டெய்ல் ( WITH A JOKE )

35 கருத்துக்குத்து

  நா.முத்துக்குமாரைப் பற்றி நான் அடிக்கடி பேசுவதுண்டு. அப்படி ஒரு நாள் என் அண்ணனுடன் பேசிக் கொண்டே SMS படத்தில் வரும் ஒரு கல் ஒரு கண்ணாடி பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். அதன் முதல் சரணத்தில் கடைசி  வரிகள் இப்படி முடிகின்றன.

கடும் விஷத்தினை குடித்தாலும் அடி

கொஞ்ச நேரம் கழித்தே உயிர் போகும்

இந்தக் காதலிலே உடனே உயிர் போகும்

காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தான்

உடனே உயிர் போய்விடும் என்றால் எப்படி சித்ரவதை ஆகும்? வேறு அர்த்தம் இருக்க வாய்ப்பில்லைதானே!!

*************************************************  

சமீபத்தில் வெளிவந்த எந்தப் படத்தின் பாடல்களும் பெரிதாய் ஈர்க்கவில்லை. ஆனந்த தாண்டவம் என்ற படத்தில் பென்னி தயாள் பாடிய “கல்லில் ஆடும் பூவே” என்ற பாடல் மட்டும் பிடித்திருக்கிறது. நான் அதிகம் விரும்பும் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் நாவலை படமாக்கியிருக்கிறார்கள். இந்த வாரம் ரிலீஸ். பார்ப்பதற்கே பயமாயிருக்கிறது. சொதப்பி விடுவார்களோ?

பாடலை ஆன்லைனில் கேட்க இங்கே க்ளிக்குங்கள்

*************************************************

செல்வேந்திரனை சந்தித்த போது சொன்னார், தமிழகத்தில் ஏழு மணிக்கு பிறகு ஜட்ஜு சொல்றதைத்தான் கேட்கணும். இனி ஒரு மாதத்திற்கு தமிழ் தொலைக்காட்சி ஜட்ஜுகள் பாடு திண்டாட்டம்தான். ஐபிஎல் தொடங்கப் போகிறது. தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றியதால் ஏற்பட்ட நஷ்டத்தை(?) ஈடு கட்ட பத்து ஓவர்களுக்கு ஒரு முறை ஐந்து நிமிட இடைவெளி உண்டாம். Cheer girls உண்டு. ஆனாலும் நம்ம ஊரு பொண்ணுங்க மாதிரி இருக்குமா?

  எனது ஃபேவரிட் டீம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். தாதாவிற்காக. ஆனால் அவர்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. கோச் ஒரு பக்கம், தாதா ஒரு பக்கம், ஷாரூக் ஒரு பக்கமென இருக்கிறார்கள். நாலைந்து போட்டிகள் முடிந்தால்தான் யூகிக்க முடியும். ஆனால் எனக்கு தோனுது, இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் பப்பு வேகாது.

*************************************************

  பேசும்போது நான் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தை “கண்டிப்பா”. யாராவது அழைத்தால் கண்டிப்பா வருகிறேன் என்று சொல்றோம்ல. அது மாதிரி. ஆனால் அது சரியா? நிச்சயமா என்றுதானே சொல்ல வேண்டும். கண்டிப்பு என்பதற்கு strict என்றுதானே அர்த்தம்? இல்லை ஆங்கிலத்தில் Fine என்பதை போல இரு அர்த்தமா? சொல்லுங்கப்பூ.

*************************************************

  தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கிய படங்களை எந்த வித வெட்டும் இன்றி தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? தொலைக்காட்சியில் வரும் டிரெய்லர்களுக்கே தனியாக சான்றிதழ் வாங்க வேண்டுமாம். அபப்டி இருக்க இதை யாரும் கண்டுக்காமல் இருப்பது ஏன்? சமீபத்தில் பொதிகையில் வின்னர் காமெடி பார்த்துக் கொண்டிருந்தேன். வடிவேலு ஒத்துக்கறேன். உன் அ... (நம்ம கடையும் தணிக்கை செய்யப்பட்டதுதான்) என்று சொல்லும் வசனம் கட் செய்யப்பட்டது. அதன் பிறகுதான் கவனித்தேன், பொதிகையில் பல காட்சிகள் அப்படித்தான் ஒளிபரப்புகிறார்கள். பாராட்டலாமே?

*************************************************

ஆங்ங்ங். தலைப்பில் சொன்னதை மறந்து விட்டேன். ஜோக் இதோ.

அம்மாவின் ஆசைக்காக கொஞ்சம் தடியான தங்க செய்ன் ஒன்றை அணிந்திருக்கிறேன். எப்படியோ அதை கடிக்கும் பழக்கம் வந்துவிட்டது. ஒரு நாள் கடுப்பான என் அம்மா கேட்டாங்க அதை ஏண்டா கடிச்சி சாப்பிடற? தங்க பஸ்பம் சாப்பிட்டு வெள்ளை ஆகனுமா?

நீங்கதான சொன்னீங்க எனக்கு நகை சுவையுணர்வு அதிகம்னு

அடிக்காதீங்க. எஸ்கேப்.......

Apr 8, 2009

சே குவேரா - என் தலைவன்

43 கருத்துக்குத்து
''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” -சே

  க்யூபாவில் தான் உங்கள் புரட்சி வென்றுவிட்டதே. பிறகு ஏன் பொலிவியாவில் போராடுகிறீர்கள் என்ற கேள்விக்கு சே இப்படி பதிலளித்தார்,

   "உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன், ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்"   ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்து ,மருத்துவப் படிப்பையும் முடித்த இளைஞன் அவன். அவனால் தன் வீடு, தன் வாழ்க்கை என்று இருக்க முடியவில்லை. நண்பன் ஒருவனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெரிக்கா முழுவதும் சுற்றி வர தொடங்குகிறான். அந்த பயணத்தின் ஆரம்பம், உலக பண முதலைகளின் அழிவுக்கான ஆரம்பம் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது. 1950ல் தொடங்கிய சேவின் பயணம்,1967 ஆம் ஆண்டு பொலிவிய ராணுவத்தால் முடிவுற்றது. இடையில் ஒரு நாள் கூட ஓய்வெடுத்ததில்லை.  இன்றும் சேவைப் பற்றி படிக்கும்போதும், படங்களைப் பார்க்கும் போதும் நட்சத்திர தொப்பி அணிந்து அவரின் உருவம் என் கண் முன்னே வந்து போகிறது. சில நொடிகள் வரும் அந்த சிலிர்ப்பு. அதில் வாழ்கிறார் சே என்கிற எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna)


எந்த நாட்டிற்கெதிராக தன் வாழ்நாள் முழுவது போராடினாரோ, அந்த நாட்டு இளைஞர்களே டீஷர்டிலும், கீ செய்னிலும் சேவின் படத்தோடு திரிகிறார்கள். எந்த வரலாற்றை மறைக்க முயன்றார்களோ அதை அந்த நாட்டிலே படமாக எடுக்கிறார்கள். சேவை வாழும்போது மட்டுமல்ல, அவன் இறந்த பிறகும் ஜெயிக்க முடியவில்லை.

காடுகளிலே பாதி வாழ்க்கை வாழ்ந்த சேவுக்கு சிறுவயதில் இருந்தே ஆஸ்த்மா நோய் இருந்தது. தனது மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது நடந்த விபத்தில் சேவின் கால் சூடான காஸ் சிலிண்டருக்கு அடியில் மாட்டிக் கொண்டது. க்யூபா போராட்டத்தின் போது அவரின் காலில் குண்டும் பாய்ந்தது. ஆனால் எதுவுமே அவரை தடுத்து நிறுத்தவில்லை. விடுதலை,புரட்சி என்று யார் சொன்னாலும் அவர் சேவை நினைத்துத்தான் சொல்லுவார் என்னுமளவுக்கு வாழ்ந்தவன் சே.

சேவைப் பற்றி திரு.மாதவராஜ் அவர்கள் எழுதிய நூலை தன் வலையிலே பதிவிட்டிருக்கிறார். அதை இங்கே சென்று படிக்கலாம்.

சேவின் பேச்சுகள், அரிதான புகைப்படங்கள், மேலும்  பல விதயங்கள் தெரிந்துக் கொள்ள இங்கே அழுத்துங்கள்.

சேவின் பிரபலமான வசனங்கள்:

“I don't care if I fall as long as someone else picks up my gun and keeps on shooting.”

“I know you are here to kill me. Shoot, coward, you are only going to kill a man.”

”Why does the guerrilla fighter fight? We must come to the inevitable conclusion that the guerrilla fighter is a social reformer, that he takes up arms responding to the angry protest of the people against their oppressors, and that he fights in order to change the social system that keeps all his unarmed brothers in ignominy and misery”

“Better to die standing, than to live on your knees.”

“I don't know if the Cuban revolution will survive or not. It's difficult to say. But [if it doesn't] . . . don't come looking for me among the refugees in the embassies. I've had that experience, and I'm not ever going to repeat it. I will go out with a machine gun in my hand, to the barricades. . . I'll keep fighting to the end.”
சேவைப் பற்றிய புத்தகங்கள்:
என்னைக் கவர்ந்த சரித்திர நாயகர் என்ற தொடர்பதிவுக்கு என்னை அழைத்த வானவில் வீதி கார்த்திக்கிற்கு நன்றி. இதைத் தொடர நான் அழைப்பது டக்ள்ஸ் அவர்களை. (உங்க தலையை பற்றி எழுதிட்டு அவரும் சரித்திர நாயகர்ன்னு சொல்லாதீங்க பாஸ். அவர்.. வேணாம். அமைதி கார்க்கி)

நல்லாத்தான் போச்சு மார்ச்

56 கருத்துக்குத்து

டிஸ்கி: இது 100% சுய தம்பட்ட பதிவு.  

  மார்ச் மாதம் நம்ம வியாபாரம் எப்படி போச்சுனு ஒரு அலசல் செய்தேன். பல ஆச்சரியமான் தகவல்கள் கிடைத்தன். 10 நாட்கள் கடை மூடப்பட்டிருந்தாலும் நட்சத்திர வாரத்தில் கிடைத்த ஹிட்ஸ் மூலம் வருமானம் வழக்கம் போல் 22,000 ஹிட்ஸ் ஆக இருக்கிறது. தமிழ்மணத்திற்கும், அதன் வாசகர்களுக்கும் நன்றி.

  அடுத்து, எந்தெந்த தளங்களில் இருந்து நம் கடைக்கு வந்திருக்கிறார்கள் என்று பார்த்தேன்.தமிலிஷ் இரண்டாம் இடத்திலும் நேரிடையாக கடைக்கு வந்தவர்கள் மூன்றாவதாகாவும் இருக்கிறது. நான்காம் இடம் யூத்ஃபுல் விகடன். பின்புதான் பார்த்தேன், இதுவரை எட்டிற்கும் அதிகமான பதிவை குட் ப்ளாகில் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். நேற்று பதிவிட்ட யாருக்கு என் ஓட்டு கூட அதில் இருக்கிறது. நன்றி விகடன்.

http://nigazhvugal.com என்ற இணையத்தளம் மார்ச் மாதத்தின் சிறந்த 31 பதிவுகளை தேர்தெடுத்து இருக்கிறது. அதில் எனது 48 மணி நேரத்தில் பர்சனல் லோன் என்ற பதிவும் இருக்கிறது. நன்றி நிகழ்வுகள்

Snapjudge பாலா அவர்கள் சங்கமம் போட்டிக்காக வந்த பதிவுகளில் டாப் 10 போட்டிருந்தார். ஆச்சரியமாக புட்டிக்கதை முதலிடத்தில் இருந்தது. மார்ச் மாதம் எனக்கு நடந்த இன்னொரு நல்ல விஷயம் இது. நன்றி பாலா. (வரும் வெள்ளிக்கிழமை முடிவுகள் வரப்போகிறது)

  ஹைஸ்டாட்ஸ் மூலம் நம் பதிவுக்கு எங்கெங்கெல்லாம் சுட்டி கொடுக்கப் பட்டிருக்கிறது என்று தெரிந்துக் கொள்ள முடிகிறது. ஜெயமோகன் அவர்கள் நான் கடவுள் குறித்து எழுதப்பட்ட விமர்சனங்கள் சிலவற்றைக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். அதிலிருந்து தினமும் இருவர் வந்து விடுகிறார்கள்.  ஜெமோவுக்கும் நன்றி

  இவை மட்டும் அல்லாமல் பல பதிவர்கள் அவர்கள் ஃபாலோ செய்யும் பதிவர்களின் பட்டியலை அவர்கள் வலையில் வைத்திருக்கிறார்கள். அதன் மூலமும் பலர் வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

Apr 7, 2009

2009 தேர்தலில் என் ஓட்டு இவருக்குத்தான்

57 கருத்துக்குத்து

  நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று நம்ம சகா ஒருத்தர் கேட்டிருந்தார். அதன் பின்புதான் யாருக்கு வாக்களிக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கினேன். இதுவரை இரண்டு முறை மட்டுமே வாக்களித்திருக்கிறேன். இரு முறையும் உதய சூரியனுக்கே..

பரிசல் ஸ்டைல்ல சொன்னா ரொம்ப ஃபார்மலா இருக்கில்ல? சரி. இந்தப் பதிவு எதுக்குன்னா, யார் யார் என்ன என்ன வாக்குறுதிகள் அளித்தால் அவர்களுக்கு நான் வாக்களிப்பேன் என்று சொல்லவே. ஸ்டார்ட் மீஜிக்..

1) காங்கிரஸ்: சஞ்சய 2013ல (எப்படியும் தேர்தல் வரும்னு தோணுது பாஸ்) எம்.பி ஆக்குவோம்னு சொல்லுங்க. என் ஓட்டு உங்களுக்குதான்.

2) திமுக:  அடுத்த தேர்தலில் உதயநிதி, அறிவுநிதி, ***நிதிகளுக்கு சீட்டு கிடையாது என்று சொல்லுங்கள்

3) பாமக: தேர்தல் முடிவுகள் வந்தவுடன் காங்கிரஸூடன் சேர மாட்டோம் என்று சொல்லுங்கள். என் வீட்டில் இருக்கும் மூனு ஓட்டும் உங்களுக்குத்தான்

4) கம்யூனிஸ்ட்: மன்னிக்க தோழரே, ஜெவை விட்டு வாங்க. யோசிக்கலாம்.

5) தேமுதிக: இனிமேல் விஜய்காந்த் நடிக்க மாட்டார் என்று சொன்னால் யோசிக்கலாம். கவனிக்க, யோசிக்கலாம்.

6) மதிமுக: தேர்தலில் நின்னா சத்தியமா என் ஓட்டு உங்களுக்குத்தான்

7) சமக: அதாங்க சரத்குமார் கட்சி. நீங்க ஏதாவது பேச வாய் திறந்திங்கன்னா என் ஓட்டு உங்களுக்கு இல்லை. அப்படியே மூடிகிட்டு இருங்க.

8) அ.இ.நா.ம.க: கட்சி பேர மாத்தறன்னு கார்த்திக் சொல்லட்டும், என் ஓட்டு மட்டுமில்ல என்னால முடிஞ்ச 20 ஓட்டும் அவருக்குத்தான், டவுட்டேயில்ல.

9) பா.ஜ.க: ஹிஹிஹி..

10) ல.தி.மு.க : லட்சியம்ன்னா என்னன்னு அர்த்தம் சொல்லுங்க. பார்க்கலாம்.

11) அதிமுக: நீங்க என்ன சொன்னாலும் என் ஓட்டு உங்களுக்கு  கிடையாதுங்க

12) ஜனதா தளம்: ஓட்டு போடறது இருக்கட்டும். ஞாபகம் வச்சிருந்து அந்தக் கட்சி பேர சொல்லியிருக்கேன் இல்ல. அதுக்காக என்னைப் பாராட்டி தமிழ்மணத்திலும் தமிலிஷிலும் ஒரு ஓட்டுப் போட்டு போங்க.

Apr 6, 2009

மிஸ்ஸை மிஸ் பண்ண ஏழு

49 கருத்துக்குத்து

(இதுவரை புட்டிக்கதைகள் படிக்காத நண்பர்கள் இங்கே சென்று ஏழுவையும் அவனது நண்பர்களையும் பற்றி படித்து விட்டு வந்துடுங்க.இது தொடர்கதை அல்ல)

*************************************************

  ஏழுவை இப்பவெல்லாம் அடக்கவே முடிவதில்லை. நாங்கள் இல்லாவிட்டால் வேறு சில ஜூனியர்ஸோடு சென்று தண்ணியடித்து விட்டு வந்துவிடுகிறான்.. மெக்கானிக்கல் மாண்வர்களுக்கு ஐந்தாவது செம்ஸ்டரில் கம்புயூட்டர் லேப் வரும்.ஏழுவுக்கு கம்ப்யூட்டர் என்றால் என்னவென்றே தெரியாது. அன்று மதியம் கம்புயூட்டர் லேப். வழக்கம்போல் பாதி மப்புடன் லேபுக்கு வந்தான்.

உள்ளே வரும்போதே லேசாக ஆடிக்கொன்டு வந்தவனை அமுக்கிக் கொன்டு வந்தேன். வரிசையாக அனைவரும், அந்த புதிதாய் சேர்ந்த 22 வயது மிஸ்ஸிடம் (மேடம் என்றால் ஏழுவுக்கு கோபம் வரும்) அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அதுவும் ஆங்கிலத்தில். ஏழுவின் முறை வந்தது. எழுந்தவன் ஸ்டைலாக சொன்னான் நேம் : செவன் மவுன்டைன், டவுன் : கீ ஃபென்ஸ்(நெய்வேலியாம்). இப்போது மிஸ் முறை வந்தது. அதாவது ஏழுவைப் பார்த்து முறைத்தார்.

சிலபஸில் என்னென்ன லேங்குவாஜ் இருக்கு என்று தெரியுமா என்பதை அவர் ஆங்கிலத்தில் கேட்க, நாலு ப்ளஸ் ரெண்டு அதை சன்னமாக மொழிபெயர்க்க, அஞ்சு ப்ளஸ் ரெண்டு இங்கிலீஷ்லே பதில் சொன்னான். “Now no languages . First year English have.” என்று சொல்லிவிட்டு எங்களைப் பார்த்தான். ரொம்ப சுமாரான ஜோக்கு மச்சி, நெக்ஸ்ட்டு என்றான் பாலாஜி.

ஒரு வழியாக சமாளித்து அமர்ந்தான். பின் கூட்டமாக அந்த மிஸ்ஸை மிஸ் பண்ணாமல் ஃபோலோ செய்தது எங்கள் கிளாஸ். ஒரு மிஷினிடம் நின்றவர், This is server என்றார். அதை எட்டிப் பார்த்த ஏழு சொன்னான் " நாலு இட்லி. ஒரு வடை". வாயைப் பொத்திய ஆறுவின் கைகளை கடித்து விடுவித்துக் கொண்ட தலைவர் சொன்னார், சர்வரிடம் ஆர்டர் செய்றது தப்பா மச்சி?

நல்ல வேளையாக அவரின் காதில் இது விழவில்லை. அடுத்தக் கேள்வியைக் கேட்டார் மிஸ். What is Ram?

ஏழு மட்டுமே கையை தூக்கினான்.Yes proceed என்றார்.

The head portion of the Milling machine is called Ram என்றார் செவன்.

I am asking about computers .

Then why did u ask about Ram என்று கேள்வி பதில் கேட்டவரிடமே பதில் கேள்வி கேட்டான் நாலு ப்ளஸ் மூனு.

கடுப்பான மிஸ் ஏழுவை தனியாக ஒரு சிஸ்டத்தில் அமர்ந்து ஒரு BASIC Program கொடுத்து output எடுக்க சொன்னார்.

ஐந்து நிமிடம் கழித்து , மிஸ் இந்த மிஷின் ஸ்டார்ட் ஆகல என்றான் பத்து மைனஸ் மூனு.

நாங்க வேணும்ன்னா தள்ளட்டுமா ஏழு. வண்டி ஸ்டார்ட் ஆகிடும் என்றான் பாலாஜி.

இருவரையும் முறைத்த மிஸ், ஏழுவைப் பார்த்து Switch on the Monitor என்றார்.

புரியாத ஏழு சொன்னான், அதை மதியமே முடிச்சிட்டேன் மிஸ்.

கோவத்தில் Get out of my class என்றார் மிஸ்.

அதுவும் புரியாத ஏழு மெதுவாக ஆறுவைப் பார்த்து சொன்னான் "நான் என் கிளாஸ்லதான் மச்சி அடிச்சேன்"

சொல்லிக் கொண்டே வெளியே சென்ற ஏழுவை பார்த்து மீண்டும் கேட்டார் மிஸ், வெளியே போ சொன்னா சந்தோஷமா போறீங்க. கிளாஸ் முக்கியமில்லையா?. இந்த முறை தமிழிலே கேட்டார். சற்று மூன்று ப்ளஸ் மூன்றுதலாய் உணர்ந்த ஏழு பதில் சொன்னான்.

அப்பதானே மிஸ் Outstanding Student ஆக முடியும்.

அஜித்தில் அடித்துக் கொண்ட மிஸ் உள்ளே வர சொன்னார். உங்க மரமண்டைல எதுவுமே ஏறாது.கிளாச தொல்லைப் பண்ணாம ஓரமா உட்காருங்க என்றார்.

சோகத்துடன் ஹாஸ்டலுக்கு வந்தவன் பாலாஜியின் அருகே படுக்கப் போனான்.

என்ன மச்சி மறந்திட்டியா?. அவன் தலைல இருக்கிற பேன் உனக்கு ஏறிட போது என்றான் ஆறு.

கடுப்பான பாலாஜி சொன்னான், "இவன் மரமண்டைலதான் எதுவும் ஏறாதுன்னு மிஸ்ஸே சொன்னாங்களே". எதையோ பறிகொடுத்தவன் போல பார்த்த ஏழு கேட்டான்.

அந்த மிஸ் எனக்கு மிஸஸ் ஆகுமா இல்ல‌ மிஸ் ஆயிடுமா மச்சி?

Apr 5, 2009

மகாத்மா காந்தியை வெறுப்பேற்றும் பதிவுலகம்

20 கருத்துக்குத்து

பதிவர்கள் செய்யும் ஹிம்ஸைக்கு ஒரு அளவே இல்லாமல் போகிறது. என்னதான் அவர் ஒரு அஹிம்சைவாதி என்றாலும் நாம் போடும் மொக்கை தாங்காமல் ஒரு நாள் சிலை வடிவில் இருக்கும் காத்தி தாத்தா நம்மை குச்சியால் அடித்து துரத்தப் போகிறார்.

ஒன்னுமில்லைங்க. மறுபடியும் அதே தண்ணியில்லா குளம், அதே காந்தி சிலை. அதே பதிவர்கள். சில புதிய பதிவர்கள். அதே மொக்கைத்தலைப்பு. இது போதாதென்று மொக்கை மகாராஜா என்னையும் வந்தே ஆக வேண்டும் என்கிறார்கள். ஆறு மணி ட்ரெய்னை 8.45 பஸ்ஸாக மற்றி விட்டேன். ச்சே. அதில்லைங்க. ட்ரெய்ன பஸ்ஸா மாத்தற மேஜிக்க்காரனா நான்? மாத்தி புக் செஞ்சிருக்கேன்.


அதனால சென்னை வாழ் மொக்கையர்களே..ச்சே ப‌திவ‌ர்க‌ளே.. வாருங்க‌ள். வந்து பாருங்க‌ள்.. மொக்கையில் சேருங்க‌ள்.. சுண்ட‌ல் வாங்கி தாருங்க‌ள்.. (அவ்ளோதாம்ப்பா)

எடம் - மெரீனா பீச்சு காந்தி செலையான்டை

டைமு- 5 மணிலேருந்து அரட்ட கச்சேரி

நாளு 05-04-2009 ஞாய்த்துகெழமை

Apr 3, 2009

காக்டெய்ல் (நமீதா ஸ்பெஷல்)

68 கருத்துக்குத்து

1) கோவம் கூட, ஜெவுடன் சேர்ந்தா மட்டும் இனிப்பாயிடும். எப்படி தெரியுமா?

2) 3 G A PA 6. இத எப்படிங்க ஒன்னா சேர்த்து படிப்பிங்க?

3) மெத்த  - இத மட்டும் கரெக்டா படிங்க. நீங்க தான் நிறைய படிச்சவருன்னு உலகம் சொல்லும். எப்படி?

4) சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். நமீதாவுக்கு இது எப்படி செட்டாகும்?

விடைகள் நடுவில்..

*************************************************

  ஒன்னுமில்லைங்க. இந்த மாதிரி மொக்கை போட்டாதான் பதிவுலகத்தில் நிக்க முடியும்னு (இல்லன்னா உக்கார்ந்துக்க வேண்டியதுதானே) என்று தெரிய இரண்டு மாதம் ஆனது. அதன் பின் போட்ட அசுர மொக்கையால், ஒரு லட்சம் ஹிட்ஸ் ஆறே மாதங்களில் வந்தது.(எனக்கு இல்லைங்க. பதிவுக்கு) இதோ அதைத் தொடர்ந்து 200 பின் தொடர்பவர்கள்.(அதாம்ப்பா Followers) . பெண் பெயர் கொண்ட பிரபல பதிவரை சந்தித்த போது சொன்னார், இப்போது ஃபாலொயர்ஸ் தான் பிரபலத்திற்கான அளவுகோல் என்று. அவர் சொல்வது எல்லாம் நிஜமில்லை எனபதை நிரூபிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

200ஐ முதலில் தொட்ட பரிசல் பதிவு போட்டு சொன்னதால், நானும் அதை ஃபாலோ செய்கிறேன். ஃபாலோயர்ஸ் விஷயத்தில் பரிசலை ஃபாலோ பண்ணுவதால் அவர் சொன்னதையும் ஃபாலோ செய்கிறேன்.

நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே. பல புதிய பதிவர்களை தேடிப் போனால் அவர்கள் விருப்ப பட்டியலில் என் பெயரும். தினம் தினம் மகிழ்ச்சியான தருணங்களை தந்துக் கொண்டிருக்கும் பதிவுலகத்திற்கு நன்றியைத் தவிர வேற என்ன சொல்ல முடியும்? (மொக்கையை நிறுத்திக்கனோ சொல்லாதீங்க ப்ளீஸ்)

*************************************************

விடைகள்:

1) கோவம்ன்னா Angry. ஜென்னா J. J+Angry = jangry. (சரி சரி இதுக்கே கோவப்பட்டா எப்படி? நெக்ஸ்ட்)

2) 3 G A PA 6.  மூனு ஜி அ பா ஆறு.

  சேர்த்து படிங்க.  “மூஞ்சியப்பாரு”

3) மெத்த படிச்சவருன்னு சொன்னா நிறைய படிச்சவருன்னுதானே அர்த்தம்?

4) சின்ன சின்ன உடைகள் தானே அவங்க வாழ்க்கைல பெரிய மாற்றத்த கொடுத்தது? (அது ஆக்ச்சுவலா பெரிய உடைதான். ஆனா அவங்க பெரிய உடம்பு அத சின்னதா காமிச்சது. அதனால் பெரிய விஷயம்தான் மாற்றத்த கொடுத்துச்சு சொல்றவங்க பேருதான் விதண்டாவாதிகள்)

*************************************************

பாருங்க. மொக்கையவே மொக்கையா எழுதறதுக்கு நம்மள விட்டா வேற யாரு இருக்கா? சீக்கிரம் சேராதவங்க எல்லாம் சேர்ந்துக்குங்கப்பா.

************************************************

இப்ப எல்லாம் கடவுள் நம்பிக்கை அதிகம் ஆயிடுச்சுங்க. எனக்காக இல்ல. என் அம்மாவுக்காக. அவங்களுக்கு அழகா, அம்சமா, நல்ல செல்வ செழிப்பா, கலரா, அடக்கமா, ஒரு மருமகள் கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன். நீங்களும் வேண்டிக்கோங்க. ஆவ்வ்வ்வ். முக்கியமானது. சின்ன மருமகள். அத மறந்துடாதீங்க

*************************************************

தலைப்பு ஏண்டா இப்படின்னு யோசிச்சிங்களா? ஒரே ஒரு மேட்டர், ச்சே, விஷயம்தான் நமீதாவ பற்றி இருக்கு. அப்புறம் எப்படி நமீதா ஸ்பெஷல்? நம்ம சகா ஒருத்தர் சொன்னாரு, நமீதாவுக்கு மார்க்கெட்(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லையே) டவுன் ஆயிடுச்சாம். பதிவுலகத்தில் அது உண்மையான்னு பார்க்கத்தான். இன்னைக்குன்னு பார்த்து அவியல்,கொத்து பரோட்டா, அனுஜன்யாவின் பற்றியும் பற்றாமலும் என நிறைய கலக்கல் பதிவுகள் வந்திருக்கு. பார்ப்போம். நம்மள சூடாக்கற நமீதாவை மக்கள் சூடாக்கறாங்களான்னு.

*************************************************

கட்சீயா ஒரே ஒரு தத்துவம்ப்பா

வாழ்க்கை ஒரு பனமரம். ஏறினா நுங்கு. விழுந்தா சங்கு.

Apr 2, 2009

தல தலதான்..

66 கருத்துக்குத்து


   நேற்றுதான் கவனித்தேன். ஹைதை எங்கும் நடிகர் பிராபசின் புதிய படத்திற்கான ஹோர்டிங்க்ஸ் ஆக்ரமித்திருந்தது. பார்த்த உடனே தெரிந்து விட்டது அது பில்லாவின் ரீமேக் என்று. படு ஸ்டைலாக இருப்பதாக அலுவலகம் முழுவது பேச்சு பரவ, ஆர்வத்துடன் இணையத்தில் மேய்ந்தேன்.ப்ச். அஜித்தின் கால் தூசிக்கு கூட இல்லை.


சிலரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர்களுக்கு பிரபாஸை இதற்கு முன் அதிகம் பிடித்ததில்லையாம். ஆனால் இந்தப் படத்தில் சூப்பராக இருப்பதாக சொன்னார்கள். மகேஷ் பாபுவின் தீவிர ரசிகர்கள் கூட பாராட்டு பத்திரம் வாசித்தார்கள். பெண்களிடம் சர்வே நடத்தலாம் என்று நினைத்தேன். ஆண்கள் அளவுக்கு அபரிதமான செல்வாக்கு இல்லை என்றாலும் அங்கேயும் கணிசமான வாக்குகள் வாங்கினார் பிரபாஸ்.

இன்று நான் என் தலையை பிய்த்துக் கொண்டேன். பின் மீண்டும் அடுத்த ரவுண்ட் சென்றேன். இந்த முறை நம்ம தலயின் படஙக்ளை அவர்களுக்கு காண்பித்தேன். அரண்டு விட்டார்கள். அவர்களுக்கு அஜித்தை தெரியுமாம். ஆனால் இந்த ஸ்டில்களை பார்த்ததில்லை என்றார்கள். தல தலதான்.
  ஹிந்தியில் ஷாருக்கு கலக்கி இருப்பார். ஆனாலும் நான் தேடிப் பார்த்த ஸ்டில்களில் அவரால் அஜித்தை தோற்கடிக்க முடியவில்லை. நான் அஜித்தை ரசித்தது பில்லாவில் அவர் நடந்த போதுதான். ச்சே பழக்க தோஷங்க. பில்லாவில் அவர் நடித்த போதுதான். Really thala rocks in Billa.  நான் ஆறாவது படித்த போது ஆலமரம் தன் வரலாறு கூறுதல் கட்டுரை படித்துவிட்டு தேர்வுக்கு சென்றேன். ஆனால் தேர்வில் பசு மாடு தன் வரலாறு கூறுதலை கேட்டிருந்தார்கள். சற்றே யோசித்துவிட்டு ஆலமரத்தை பற்றி சொல்லிவிட்டு ”"இத்தகைய சிறப்பு மிக்க ஆல மரத்தில்தான் நான் கட்டபட்டிருப்பேன்" ” என்று முடித்துவிட்டேன்.

  அதேப் போல்தான் இந்தப் பதிவும்...

(மீதியை சென்சார் செய்துவிட்டார்கள். என்னவாக இருக்கும் என்று சரியாக யூகிக்க முடிந்தவர்கள் பின்னூட்டத்தில் முயற்சி செய்யுங்களேன்.)

Apr 1, 2009

காதலியை தேடும் பிரபல பதிவர்

60 கருத்துக்குத்து

   சென்ற வாரம் அண்ணா சாலையில் சென்று கொண்டிருந்தபோது அன்பகத்தைப்(திமுக இளைஞரணி அலுவலகம்) பார்த்தேன். சில நாட்களுக்கு முன்பு வரை ஓட்டு வீடு போல இருந்தது, இப்போது மிக அழகாக கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் கட்சிக் கொடி இருளில் சரியாக தெரியவில்லை. ஒரு ஃபோகஸ் லைட் வைத்தால் நல்லாயிருக்கும். 1970களுக்கு முன்பு வரை இந்த இடம் தான் திமுகவின் தலைமை அலுவலகமாக இருந்தது. இப்போது அறிவாலயம் இருக்கும் இடம் நடிகர் எஸ்.எஸ்.ஆர் கட்சிக்கு கொடுத்தது என நினைக்கிறேன்.

*************************************************

  சிம்புவுக்கும் கவுதமுக்கும் முட்டல் ஆரம்பமாகி விட்டதாம். படத்தில் சந்தானத்தை போட சொல்லி வற்புறுத்துகிறாராம் லிட்டில் சூப்பர்ஸ்டார். கவுதம்மின் சாய்ஸ் பத்மஸ்ரீ..  ஹாரிஸூக்கும் சரணுக்கும் கூட ஒத்து வரவில்லையாம். சிச்சுவேஷனே சொல்லாம இருந்த எப்படியா மெட்டு வரும்ன்னு புலம்புகிறாராம் ஹாரீஸ். பரத்வாஜ் அளவுக்கு ஈடுபாடும், வேகமும் இல்லையென சொல்கிறாராம் சரண். நடுவில் தலையே தலையை பிய்ச்சுக்கிட்டு இருக்கிறாராம்.

*************************************************

  தனியாய் படம் பார்த்து எத்தனை நாளாயிற்று? அருந்ததீ காணும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் சத்யம் காம்ப்ளக்சில். நுழைவுசீட்டு வாங்கும் போதே 18 வயதுகுட்ப‌ட்டோர்களுக்கு நிச்சயமாய் அனுமதியில்லை என்று சொன்னார்கள். ஆச்சரியமாய் இருந்தது. நாடு திருந்திவிட்டதா? இல்லை படம் அவ்வ்வ்வ்வ்வளவு ****? தனியாய் சென்றவனிடம் கார்னர் சீட்டு வேண்டுமா என்றார். சிரித்தேன். படம் வேலைக்காகல. கிராஃபிக்ஸின் துணையுடன் அனுஷ்காவை அருந்ததீன்னு காட்டினாலும் நான் அவரை அருந்ததிஈஈஈஈ என்றுதான் பார்த்து விட்டு வந்தேன்.

*************************************************

தோனி கேப்டனாக இது வரை 6 டெஸ்ட் மேட்ச் விளையாடி இருக்கிறார். அதுவும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸீலாந்து என அனைத்தும் பலமான அணிகள். அதில் ஐந்தில் வெற்றியும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்திருக்கிறது. இந்த தொடரையும் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேப் போல் கம்பிரின் சமீபத்திய ரன்களை பாருங்கள். 137,16, 30*, 72, 97, 179, 66. இருவரின் சாதனைப் பயணம் தொடர வாழ்த்துகள்.

*************************************************

  அந்த பிரபல பதிவருக்கு உண்மையில் அதிகம் பெண் நண்பர்கள் கிடையாது. வலையுலகில் சிலர் இருந்தாலும் அவர்கள் வெறும் நண்பர்களாகவே இருக்கிறார்களாம். உடனடியாக ஒரு காதலியை தேடிக் கொண்டு இருக்கிறாராம். மிகவும் ‘நல்லவர்’ என பெயரெடுத்த அவர், அடுத்த ஆண்டுக்குள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக விரும்புகிறாராம். (சத்தியமா உண்மை செய்திங்க. ஏப்ரல் ஃபூல் எல்லாம் இல்ல)

 

all rights reserved to www.karkibava.com