Mar 6, 2009

ஆத்தா நான் ஸ்டார் ஆயிட்டேன்


நாங்களும் ஆயிட்டோமில்ல.. தமிழ்மணம் நிர்வாக குழுவிற்கு மனமார்ந்த நன்றி.  சகா ஜமாய் என்று சகஜமாய் பழகி, ஊக்கமளித்து வரும் அனைவருக்கும் நன்றி. என்னைப் பற்றி என்ன எழுதுவது என்று நினைத்த போதுதான் பிரபல பதிவரிடம் இருந்து இந்த‌ மடல் வந்தது. 

****************** 

 ரொம்ப நாளா இந்த கேள்விகள ஒனக்கு அனுப்பி, பதிவாப் போடு(டா)ன்னு சொல்லணும்னு நெனைச்சுட்டிருந்தேன். இப்போ ஸ்ட்ரா ஆய்ட்ட.. ச்ச்ட்... ஸ்டார் ஆய்ட்ட.

பல இடங்கள்ல ஒருமைல வந்திருக்கும். ப்ளீஸ்.. வராத இடத்துல மாத்தி அதே மாதிரி போட்டுக்கோ...

1) சாகலாம்னு தோணுது-ன்னு பல சந்தோஷமான தருணங்கள்ல நாம நெனைக்கறதுண்டு. உனக்கு அந்த அளவு சந்தோஷமான தருணம் வாய்த்தது?

 சாகலம்னு நம்மள நினைக்க வைக்கிற விஷயம் இசைதான். சிலப் பாடல்கள்ல கேட்கறப்ப அப்படி நினைப்பதுண்டு. சமீபத்தில் பிச்சைப் பாத்திரம். அப்புறம் பாண்டிச்சேரி கடற்கரையில் தன் காதலை சொல்லிவிட்டு அவர் சென்றபிறகு கடலைப் பார்த்தபோது. அப்படியே குதித்து விடலாம் போலிருந்த்து.

(அப்புறம் மூனு வருஷத்திற்கு முன்னாடி ஜனான்னு ஒரு படம். அதன் க்ளைமேக்ஸுல கூட எனக்கு அப்படித் தோனுச்சு)

2) இப்போது நீங்கள் ஒரு எழுத்தாளர். (அட.. நம்புங்கப்பா.. அப்படித்தான்). இல்ல.. இந்த ஃபீல்டுலதான் நான் ஷைன் பண்ணனும்னு நெனச்சேன்னு நீங்க நெனைக்கற ஒரு துறை?

எனக்கு ஆட்டோமொபைல்ஸ் மேல ஒரு காதல். ஹிந்துஸ்தான் மோட்டார்ஸில் கேம்ப்ஸ் இண்டர்வியூவில் வேலை கிடைச்சும், 55 கிலோ(அப்போ 2000ல) எடை இல்லாமல் நழுவிவிட்டது. அதன் பின் முயன்றும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ் கார் டிசைன் செய்ய வேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று.

(ஹிஹி. எல்லோரையும் போல சினிமா ஆசை எனக்கும் உண்டு.மற்ற பதிவர்கள் மாதிரி கிடையாது. கேமரா, இயக்கம் எல்லாம் வேஸ்ட்டுங்க. நாம ஸ்ட்ரெய்ட்டா ஸீரோதான், ச்சே ஹீரோதான்)

3) உங்களுக்குக் கிடைச்ச பாராட்டுல பெரிய பாராட்டா நீங்க நெனைக்கறது?

   காலேஜ் கிரிக்கெட் டீமுக்கு பயிற்சி கொடுக்க ஒரு நாள் ராபின் சிங் வந்தார். நான் தான் ஒப்பனிங் பேட்ஸ்மென் மற்றும் விக்கெட் கீப்பர். ஒரு நாள் பயிற்சியின் (அப்போ டெஸ்டுக்கு யாரு கோச்னு  மொக்கை போடாதீங்கப்பா) முடிவில் நல்லா கீப்பிங் பண்றன்னு சொன்னார். அதைத்தான் சொல்லுவேன்.

  (அப்புறம் ட்ரெய்ன்ல என்னை அடையாளம் கண்டுபிடிச்சு பாராட்டிட்டு போனாங்களே அந்த ரெண்டு பொண்ணுங்க. அந்த பாராட்டையும் மறக்க முடியாது. அப்பவே செலிப்ரிட்டி ஆயிட்டோம்ல J)


4)
எழுத்தைத் தவிர உங்களுக்குப் பிடித்த மூன்று விஷயங்கள்?

நடனம், கிட்டார், கிரிக்கெட் 

5) வாழ்க்கைல உங்க ரோல் மாடல்..?

அப்படி யாரும் இல்ல. ஆனா எங்க அப்பாவ அப்படி ஒரு இடத்துல நினைச்சிட்டு இருக்கேன்.

6) எனக்கு இது தெரியாது-ன்னு நீங்க  ஒத்துக்கற...அதுக்காக வருத்தப்படற விஷயம்?

ஒரு காலத்துல பைக். சில வருடங்களுக்கு முன்புதான் கற்றுக் கொண்டேன். அது தவிர்த்து, தெரியாத விஷயங்கள் பல இருந்தாலும் வருத்தப்படுவது, ம்ஹூம் நினைவுக்கு வரவில்லை.

(அடப்பாவி. ஒழுங்கா எழுத தெரியலன்னு வருத்தமே இல்லையான்னு கேட்ட தாமிரா அங்கிள் ஒழிக.)

7) இதைப் பற்றி எழுதவேண்டும் என்று நீங்கள் நினைத்து.. தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் ஒரு விஷயம்.. அல்லது ஒரு பதிவு?

தென்மெரிக்காவில் நடந்த புரட்சிகள் பற்றியும், சே மற்றும் காஸ்ட்ரோவைப் பற்றியும்,

(ஹிஹிஹி. விஜய் சூப்பர்ஸ்டார் ஆனது எப்படி என்று..என்னது காந்தி செத்துட்டாரான்னு நினைக்கறவங்கள என்னனு சொல்றது)

8) வேண்டாமென்று நினைத்தாலும் உன்னால் தவிர்க்க முடியாத ஒன்று? (அவள் நினைவுகள்ன்னா ஒத விழும்!)

நீங்களே பதில் சொன்னா எப்படி? ம்ம். சுந்தர்ஜி மாதிரி தைரியமா சொல்ல முடியல. இப்போதைக்கு பதிவுலகம்.

(தினமும் குளிப்பது, பல் தேய்ப்பது போன்றவற்றை சொல்லலாம்)

  9) எங்களைப் போன்ற வளரும் பதிவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

உங்க வளர்ச்சி இன்னும் பாக்கி இருப்பதால், உங்களையும் வளரும் பதிவரா நினைச்சுக்கலாம். ஆனா உங்களுக்கு நான் என்ன சொல்வது.. சரி. திட்டாதிங்கப்பா..

1)     நல்லப் பதிவுகள் எழுதினாலும், அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நினைக்காதீர்கள். ஒரு நாள் அது கிடைக்கும் போது உங்க பழைய பதிவுகளை மக்கள் படித்து உங்கள் மீது அதிகம் ஆர்வம் கொள்வார்கள். மீள்பதிவுகள் மூலம் ரீ ரிலிஸ் செய்யலாம்.அதனால் எழுதுவதை நிறுத்தாமல் இருங்கள்

2)    யார் சொன்னாலும் பரவாயில்லை. பரவலாக தெரியப்பட சில மொக்கைகள் போடுங்கள். கணிசமான வாசகர்கள் கிடைக்கும் போது சரியாக எழுதி அந்த மொக்கைக்கு பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

3)    உங்கள் பலத்தை பதிவின் வெற்றி மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள். அதில் உங்களை மெருகேற்றுவது வெற்றியை எளிதாக்கும். உதாரணம் கவிதை கதை, மொக்கை,நகைச்சுவை. எது உங்களுக்கு நல்லா வருதுன்னு பாருங்க.

10) உங்கள் வாசிப்பனுபவம் எந்த அளவில் உள்ளது? புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தது எப்போது..? எந்த வகைப் புத்தகங்களீல் விருப்பமதிகம்?

இந்தப் பதிவே இதற்கு சரியான பதில். புனைவுகளை விட வரலாற்று புத்தகங்களின் மீது சமீப காலமாக ஆர்வம் அதிகமாக இருக்கிறது.

11) அரசியல் ஆர்வம்?

அதிகம், தெரிந்துக் கொள்வதில். இந்திய அரசியல் மீது ஒரு எழவு ஆர்வமும் கிடையாது.

12) ஆப்பிள், ஆரஞ்சு, பைனாப்பிள், பலா, வாழை - எந்தப் பழம் ரொம்பப் பிடிக்கும்?

ஆரஞ்சு. ஏன்னு யாருக்காவது தெரியுமா??????

13) உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது?

கிகிகிகி.. புத்திசாலிகளுக்கு மற்றவர்கள் சொல்வது முக்கியமில்லை.

இறுதியாக.. சும்மா சும்மா ஃபீல் ப்ண்ண மாட்டேன் என்ற வாக்குறுதியை எங்களுக்குத் தரத்தயாரா?

ஃபீல். அது திட்டமிட்டு நிகழ்வதா? அது நடக்கும் போது எப்படி எதிர்கொள்வது என்று எப்படி திட்டமிட முடியும்? வாழ்க்கையை அதன் போக்கிலே வாழ விரும்புகிறேன். ஃபீல் செய்ய வைக்கும் சூழ்நிலை வந்தால் ஃபீல் செய்யவே விரும்புகிறேன். காலம் அதை சீக்கிரம் மாற்றும். ஃபீல் செய்வதை அல்ல, எத்ற்காக செய்கிறேனோ அதற்கான காரணத்தை.

*******************

ரைட். இனி ஒரு வாரம். ச்சும்மா வூடு கட்டுவோமா? இப்ப போறேன். நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

 

111 கருத்துக்குத்து:

Karthik on March 9, 2009 at 9:49 AM said...

hey, me the first???

Karthik on March 9, 2009 at 9:50 AM said...

CONGRTAS KARKI!!!
:))

ஸ்ரீமதி on March 9, 2009 at 9:54 AM said...

//ஆரஞ்சு. ஏன்னு யாருக்காவது தெரியுமா??????//

அய்யய்யோ எனக்கு தெரியுமே... :))

ஸ்ரீமதி on March 9, 2009 at 9:55 AM said...

நட்சத்திரமானதுக்கு வாழ்த்துகள்... :))) இத தான் முதல்ல சொல்லிருக்கணும்.. பட் வாட் டு டூ?? அது தான் முதல்ல கண்ணுல பட்டது.. ;)))

narsim on March 9, 2009 at 9:55 AM said...

சகா.. மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்.வாழ்த்துக்கள்.. இந்த வாரம் கலக்கல் வாரம் என வாழ்த்துகிறேன்..

ஸ்ரீமதி on March 9, 2009 at 9:56 AM said...

கருப்பு விடைகளை விட சிவப்பு கமெண்ட்டுகள் சூப்பர் ;))))

ஸ்ரீமதி on March 9, 2009 at 9:57 AM said...

ஒரு டவுட்... கேள்வி எல்லாம் உங்கள நீங்களே கேட்டுகிட்டதா?? ;))))))))

ஸ்ரீமதி on March 9, 2009 at 9:58 AM said...

பதிவு சூப்பர் :))வாரம் முழுவதும் கலக்க வாழ்த்துகள் :))

வெட்டிப்பயல் on March 9, 2009 at 10:00 AM said...

வாழ்த்துகள் கார்க்கி :)

Karthik on March 9, 2009 at 10:00 AM said...

yay, me the first one to congratulate you here.

how many treats you owe me karki???
:)

இராம்/Raam on March 9, 2009 at 10:13 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி :))

Massattra Kodi on March 9, 2009 at 10:19 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி !! You deserve it !!

நேர்மையான பதில்கள் - esp. 9th one.

அன்புடன்
மாசற்ற கொடி

எம்.எம்.அப்துல்லா on March 9, 2009 at 10:20 AM said...

//"ஆத்தா நான் ஸ்டார் ஆயிட்டேன்" //


இதப் பார்த்துட்டு நான் பேஜாராயிட்டேன் :)

எம்.எம்.அப்துல்லா on March 9, 2009 at 10:21 AM said...

வாழ்த்துகள் கார்க்கி. இன்னும் ஒரு வாரத்துக்கு நான் இங்கயே டேரா போட்டுறேன்

முரளிகண்ணன் on March 9, 2009 at 10:25 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி

குசும்பன் on March 9, 2009 at 10:32 AM said...

//நல்லா கீப்பிங் பண்றன்னு சொன்னார். அதைத்தான் சொல்லுவேன்.//

வாழ்த்துக்கள் கார்க்கி

குசும்பன் on March 9, 2009 at 10:33 AM said...

//நல்லா கீப்பிங் பண்றன்னு சொன்னார். அதைத்தான் சொல்லுவேன்.//

”கீப்” மெயிண்டனர் கார்க்கின்னு சொல்லலாமா???

வேந்தன் on March 9, 2009 at 10:33 AM said...

நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள் கார்க்கி :)

குசும்பன் on March 9, 2009 at 10:36 AM said...
This comment has been removed by the author.
குசும்பன் on March 9, 2009 at 10:42 AM said...

//ச்சும்மா வூடு கட்டுவோமா? //

லோன் கிடைச்சுடுச்சா சகா?

வந்தியத்தேவன் on March 9, 2009 at 10:45 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி. அட்டகாசமாக ஆரம்பித்திருக்கிறீர்கள்(ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆச்சே) ஒரு வாரம் அடித்து ஆடுங்கள்.

கீழை ராஸா on March 9, 2009 at 10:47 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி...

அனுஜன்யா on March 9, 2009 at 10:54 AM said...

வாழ்த்துகள் சகா. எப்பவும் போல அடிச்சு ஆடு.

அனுஜன்யா

prakash on March 9, 2009 at 10:55 AM said...

நட்சத்திர வாழ்த்துகள் கார்க்கி. படிச்சிட்டு வரேன்

அருண் on March 9, 2009 at 10:57 AM said...

Congrats Karki!

வெயிலான் on March 9, 2009 at 11:02 AM said...

நட்சத்திர வாழ்த்துக்கள் கார்க்கி!

ஆயில்யன் on March 9, 2009 at 11:05 AM said...

நட்சத்திர வாழ்த்துக்கள் கார்க்கி :)

ஆயில்யன் on March 9, 2009 at 11:10 AM said...

// சாகலம்னு நம்மள நினைக்க வைக்கிற விஷயம் இசைதான். சிலப் பாடல்கள்ல கேட்கறப்ப அப்படி நினைப்பதுண்டு. சமீபத்தில் பிச்சைப் பாத்திரம்.//

ஸேம் பீலிங்க்ஸ் !

பாபு on March 9, 2009 at 11:12 AM said...

நம்ம வாழ்த்துக்களையும் வாங்கிக்குங்க

வித்யா on March 9, 2009 at 11:18 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி:)

Bleachingpowder on March 9, 2009 at 11:26 AM said...

தல நீங்க ஸ்டார் ஆகி ரொம்ப நாளாச்சு, இது சும்மா சம்பிரதாயத்துக்கு தான்

இளைய பல்லவன் on March 9, 2009 at 11:38 AM said...

ஆஹா,

கார்க்கி ஸ்டாராயிட்டாரா? இனிமே எப்படி தமிழ்மணம் ஸ்டார் பதிவர்களைக் கலாய்க்கப்போறார்னு தெரியலயே?:))

வாழ்த்துக்கள் கார்க்கி.

prakash on March 9, 2009 at 11:42 AM said...

//ஆரஞ்சு. ஏன்னு யாருக்காவது தெரியுமா??????//

எனக்கு தெரியும். எனக்கு தெரியும் :)))))

ராம்ஜி on March 9, 2009 at 11:42 AM said...

CONGRATS KARKI...

//(அப்புறம் மூனு வருஷத்திற்கு முன்னாடி ஜனான்னு ஒரு படம். அதன் க்ளைமேக்ஸுல கூட எனக்கு அப்படித் தோனுச்சு)//

எனக்கு ATM, வில்லு, ஆதி, என நிறைய படங்கள்ல ஒபெநிங் முதற்கொண்டு சாகலாமுன்னு தோணிச்சு...

{அப்பாடி Counter குடுத்தாச்சு..}

T.V.Radhakrishnan on March 9, 2009 at 11:45 AM said...

வாழ்த்துகள் கார்க்கி

muru on March 9, 2009 at 11:54 AM said...

//ராம்ஜி said...
CONGRATS KARKI...

//(அப்புறம் மூனு வருஷத்திற்கு முன்னாடி ஜனான்னு ஒரு படம். அதன் க்ளைமேக்ஸுல கூட எனக்கு அப்படித் தோனுச்சு)//

எனக்கு ATM, வில்லு, ஆதி, என நிறைய படங்கள்ல ஒபெநிங் முதற்கொண்டு சாகலாமுன்னு தோணிச்சு...

{அப்பாடி Counter குடுத்தாச்சு..}//


அடடா இங்கயுமா உங்க பிரச்சனை.
விடுங்கப்பா!

நான் சொல்ல வந்ததை சொல்லீடுறேன்.

கன்கிராட்ஸ் கார்க்கி

புதியவன் on March 9, 2009 at 12:04 PM said...

தமிழ்மணம் நட்சத்திர வாழ்த்துக்கள் கார்க்கி...

" உழவன் " " Uzhavan " on March 9, 2009 at 12:07 PM said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

மங்களூர் சிவா on March 9, 2009 at 12:09 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி

Anonymous said...

Vaazhthukkal sagaa...

கோபிநாத் on March 9, 2009 at 12:25 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி ;)

ஸ்ரீதர் on March 9, 2009 at 12:37 PM said...

congrats kaarkki.kalakkunga.

Lancelot on March 9, 2009 at 12:39 PM said...

karkki starru yaarunu ketta chinna blogger um sollum kannae unnathu peyarai oru thaaram sonna kanni pengalum thullum :P

ஜ்யோவ்ராம் சுந்தர் on March 9, 2009 at 12:59 PM said...

நட்சத்திரமானதற்கு வாழ்த்துகள் கார்க்கி. T20 மாதிரி அடித்து ஆடவும்.

கும்க்கி on March 9, 2009 at 1:17 PM said...

*****"
:-))

SP.VR. SUBBIAH on March 9, 2009 at 2:06 PM said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!
ஜாமாயுங்கள்!

தாரணி பிரியா on March 9, 2009 at 2:08 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி :))

வெண்பூ on March 9, 2009 at 2:09 PM said...

ரெண்டு வாராம ஆணி அதிகம்ன்றதால பதிவுகளை படிக்கக்கூட முடியல.. இன்னிக்கு கிடைச்ச 5 நிமிச கேப்ல தமிழ்மணத்தை திறந்தா நீங்க ஸ்டார்னு தெரிஞ்சது.. வாழ்த்துகள் கார்க்கி... அடிச்சி தூள் கிளப்புங்க..

வெண்பூ on March 9, 2009 at 2:10 PM said...

சரி வந்ததுதான் வந்துட்டோம் 50 போட்டுடுறேன்...

வெண்பூ on March 9, 2009 at 2:10 PM said...

50.. :)))

தாரணி பிரியா on March 9, 2009 at 2:10 PM said...

சிவப்பு கலர் கமெண்ட் எல்லாமே சூப்பர்

கார்க்கி on March 9, 2009 at 2:11 PM said...

தவிர்க்க முடியாத வேலை ஒன்று. காலையில் இருந்து பதட்டமாகவே இருந்தது. இங்க வந்து பார்த்தால் 45 வாழ்த்துகள், அதற்குள் சூடு என எல்லாம் நலம்.

தனித்தனியே நன்றி சொல்லியே பழக்கப்பட்டவன். ஏனோ இன்று நேரமில்லை. இதுவரை வாழ்த்தியவர்களுக்கும், இன் வரப்போகும் சகாக்களுக்கும் மனமார்ந்த நன்றி. நாளை முதல் பவர்ப்ளே. தயாராகுங்கள்

அமிர்தவர்ஷினி அம்மா on March 9, 2009 at 2:55 PM said...

ஹே

வாழ்த்துக்கள் ப்பா.

பதிலெல்லாம் நல்லாதான் இருக்கு
கேள்வி கேட்டது யாருப்பா?

அப்புறம் ட்ரெய்ன்ல என்னை அடையாளம் கண்டுபிடிச்சு பாராட்டிட்டு போனாங்களே அந்த ரெண்டு பொண்ணுங்க. அந்த பாராட்டையும் மறக்க முடியாது. அப்பவே செலிப்ரிட்டி ஆயிட்டோம்ல J) //
இன்னும் அதையேவா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க...

விஜய் on March 9, 2009 at 2:56 PM said...

Vaazhthukkal karki

நட்புடன் ஜமால் on March 9, 2009 at 3:03 PM said...

நட்ச்சத்திர வாழ்த்துகள்.

தமிழ் பிரியன் on March 9, 2009 at 3:15 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி!

SK on March 9, 2009 at 3:15 PM said...

சகா, வாழ்த்துக்கள். அடிச்சு ஆடுங்க :) (அடிச்சிட்டு இல்லை :-) )

LOSHAN on March 9, 2009 at 3:18 PM said...

நட்சத்திர வாழ்த்துக்கள் கார்க்கி..

ஆரம்பமே அசத்தல்..

//நாளை முதல் பவர்ப்ளே. தயாராகுங்கள்//
இந்த ஒரு வாரமும் பவர் பிளே ஆக அமையட்டும்... ;)

//அப்பவே செலிப்ரிட்டி ஆயிட்டோம்ல //
அப்பவே ஆத்தாகிட்ட சொல்லலையா? ;)

உங்கள் இந்த வார நட்சத்திரப் பதிவுகள் வில்லாக அமையாமல்,கில்லியாக வரட்டும்.. ;)

நான் ஆதவன் on March 9, 2009 at 3:44 PM said...

வாழ்த்துகள் சகா.

//சுந்தர்ஜி மாதிரி தைரியமா சொல்ல முடியல.//

சகா இத சொல்றதுக்கே தைரியம் வேணுமில்ல :))

தராசு on March 9, 2009 at 4:35 PM said...

//நாளை முதல் பவர்ப்ளே. தயாராகுங்கள்//

தயாரா இருக்கோம் தல, ஆரம்பிங்க.

வாழ்த்துக்கள்.

Cable Sankar on March 9, 2009 at 4:59 PM said...

வாழ்த்துக்கள்.

MayVee on March 9, 2009 at 5:34 PM said...

congrats dude.....
then big repeat for all comments...
me th 62

Thusha on March 9, 2009 at 5:34 PM said...

நட்சத்திரமானதுக்கு வாழ்த்துகள்......

தமிழன்-கறுப்பி... on March 9, 2009 at 5:58 PM said...

உங்க பதிவுல அறிவிப்பை பாத்ததுமே புரிஞ்சுகிட்டேன் கார்க்கி

வாழ்த்துக்கள்...!

தமிழன்-கறுப்பி... on March 9, 2009 at 6:01 PM said...

எனக்கு உங்க பதிவுகளில் புடிச்சது சரளமாய் வந்து விழுகிற நகைச்சுவைகள்தான்.
:))

(மொக்கைன்னு நேரடியாவே சொல்லுடான்னெல்லாம் கோச்சுக்கப்படாது)

ச்சின்னப் பையன் on March 9, 2009 at 6:02 PM said...

வாழ்த்துகள் கார்க்கி :)

அக்னி பார்வை on March 9, 2009 at 6:14 PM said...

Good karki, Congratz

தஞ்சாவூரான் on March 9, 2009 at 6:33 PM said...

வாழ்த்துக்கள், மகிழ்வுந்து திறவுகோல் :)

பரிசல்காரன் on March 9, 2009 at 6:36 PM said...

மீ த 69த் என்பதைத் தவிர என்ன சொல்ல?

அதான் எல்லாரும் வந்து வாழ்த்தோ வாழ்த்துன்னு வாழ்த்தீட்டாங்களே!

உன்னை இப்படிக் கேள்வி கேட்டு அசத்தியவரின் கைகளுக்கு தங்கமோதிரம் செய்து கொடுக்கவும்! நன்றாகக் கேட்டிருக்கிறார்!

லவ்டேல் மேடி on March 9, 2009 at 6:42 PM said...

// ஆத்தா நான் ஸ்டார் ஆயிட்டேன்....

நாங்களும் ஆயிட்டோமில்ல.. //என்ன கொடும மக்களே இது........ !!!!இதனால் உலகத்தில் நடக்கின்ற மாற்றங்கள் ........1 . பொருளாதார சீரழிவு .............


2 . ஆங்காங்கே காட்டுத் தீ..........

3. நாடுகளுக்கிடையே சண்டைகள் ........


4. நாட்டுக்குள்ளே சமூக சீரழிவு , அரசியல் சண்டைகள் .........


5. மேலும் பல ....... பல .......

Anonymous said...

நல்லாருக்கு

ILA on March 9, 2009 at 6:50 PM said...

vaazthukkaL

-ILA

’டொன்’ லீ on March 9, 2009 at 6:59 PM said...

வாழ்த்துகள்...

கலை - இராகலை on March 9, 2009 at 7:15 PM said...

நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்

Mahesh on March 9, 2009 at 7:22 PM said...

//தல நீங்க ஸ்டார் ஆகி ரொம்ப நாளாச்சு, இது சும்மா சம்பிரதாயத்துக்கு தான்//

ரிப்பீட்டேய்....

கணினி தேசம் on March 9, 2009 at 8:10 PM said...

சகா கலக்கல்! நட்ச்சத்திர வாரத்திற்கு பாராட்டுக்கள் !!

வால்பையன் on March 9, 2009 at 8:12 PM said...

வாழ்த்துக்கள் சகா!

மீள்பதிவு போடாமா ஒழுங்கா எழுதி போடுங்க!

தாமிரா on March 9, 2009 at 8:21 PM said...

பிஸி.. ஜாரி பார் தி லேட்டு.!

அட்டகாசமான துவக்கம்.. வாழ்த்துகள்.! இனி கில்லி பறக்கணும்..

கணினி தேசம் on March 9, 2009 at 8:21 PM said...

இந்த வாரம்......!!
கார்க்கி வாரம்.........!!

ரொம்ப சிறப்பாக எழுத வேண்டும்னு ரொம்ப மெனக்கேடாதீங்க. எப்பவும் போல எழுதுங்க

தாமிரா on March 9, 2009 at 8:24 PM said...

Me the 80.!

Anbu on March 9, 2009 at 8:37 PM said...

congrats anna

Anonymous said...

வாழ்த்துக்கள் கார்க்கி.

Kathir on March 9, 2009 at 10:11 PM said...

வாழ்த்துக்கள் சகா..

:))

Kathir on March 9, 2009 at 10:14 PM said...

//ஹிந்துஸ்தான் மோட்டார்ஸில் கேம்ப்ஸ் இண்டர்வியூவில் வேலை கிடைச்சும், 55 கிலோ(அப்போ 2000ல) எடை இல்லாமல் நழுவிவிட்டது//

2000 ல கேம்ப்ஸ் இண்டர்வியூ வா????

உங்க நிஜ வயசு என்ன சகா???

Kathir on March 9, 2009 at 10:19 PM said...

//எந்தப் பழம் ரொம்பப் பிடிக்கும்? ஆரஞ்சு. ஏன்னு யாருக்காவது தெரியுமா?????? //

தெரியுமே.....


K........athir.

:))

gulf-tamilan on March 9, 2009 at 10:21 PM said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!!!

நசரேயன் on March 9, 2009 at 10:58 PM said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

புருனோ Bruno on March 9, 2009 at 11:14 PM said...

வாழ்த்துக்கள் தலைவரே

Saravana Kumar MSK on March 9, 2009 at 11:48 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி ..
கலக்குங்க.. :)

ஆ.ஞானசேகரன் on March 10, 2009 at 12:10 AM said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

Anonymous said...

சகா, வாழ்த்துகள் :)

சுரேகா.. on March 10, 2009 at 7:26 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி !

பின்னுங்க!

pappu on March 10, 2009 at 8:19 AM said...

எல்லாரும் போல நானும் வாழ்த்துதான் சொல்ல போறேன். இனி ஒரு வாரத்துக்கு உங்க பதிவு எல்லாம் அனல் பறக்குமே!
ஆமா, நீங்க 2000லயே வேலை தேடுனீங்கனா, ரொம்ப வயசாயிடுச்சோ?
நாங்களாம் யூத்துப்பா!

பரிசல்காரன் on March 10, 2009 at 8:21 AM said...

அடடா... 92 கமெண்டா? இருங்க சச்சினைக் கூப்பிடறேன்...

பரிசல்காரன் on March 10, 2009 at 8:22 AM said...

யாராவது இருக்கீங்களா? செஞ்சுரி அடிக்கலாம்....

LOSHAN on March 10, 2009 at 8:24 AM said...

செஞ்சரிக்கு ஹெல்ப்புக்கு வந்திட்டம்..

பரிசல்காரன் on March 10, 2009 at 8:25 AM said...

ஹலோ.. யாரு இருக்கீங்க???

பரிசல்காரன் on March 10, 2009 at 8:26 AM said...

ஆஹா,, சச்சின், செஞ்சுரின்னதும் லோஷன் வந்துட்டார்ல!

பரிசல்காரன் on March 10, 2009 at 8:27 AM said...

100! (கரெக்டா?)

பரிசல்காரன் on March 10, 2009 at 8:27 AM said...

100! (கரெக்டா? இதும் மிஸ்ஸா?)

பரிசல்காரன் on March 10, 2009 at 8:31 AM said...

சகா..

உன்னோட மொத ஸ்டார் பதிவுக்கு நான் செஞ்சுரி கமெண்ட் போட்டதை நினைத்துப் புளகாங்கிதமடைகிறேன்! இதைக் கொண்டாடும் விதமாக இந்த மாத ஏதாவதொரு ஞாயிறு சென்னை வருகிறேன்!

டீல் ஓக்கே?

LOSHAN on March 10, 2009 at 8:41 AM said...

ராமர் பாலத்துக்கு அணில் மாதிரி ஏதோ என்னால முடிஞ்சது.. (சேது பற்றி பேசக் கூடாதோ?)

சகா, ஆரம்ப அறிமுகமே இப்படின்னா, போகப் போக.. ம்ம்ம்ம் இந்த வாரம் பரபர தான்..

பரிசல் அண்ணே, சீனியர் என்றதால 100வது பின்னூட்டம் போட சான்ஸ் ஒன்னு குடுத்தேன்.. ஹீ ஹீ..

அதுக்காக எனக்கொண்ணும் பார்டி கிடையாதா?

cheena (சீனா) on March 10, 2009 at 9:03 AM said...

ஹல்லோ கார்க்கி

தமிழ் மண நட்சத்திரமானதற்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துகள். பரிசல் கூட சென்னை வரட்டா.....

cheena (சீனா) on March 10, 2009 at 9:05 AM said...

சென்னை வரணுமா 0 இல்ல ஹைதை வரணுமா

kishore on March 10, 2009 at 10:12 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி அண்ணா... ஆனா சந்தடி சாக்குல போட்டிங்களே ஒரு பிட்டு
"தினமும் குளிப்பது, பல் தேய்ப்பது..."
முடியல ...

கார்க்கி on March 10, 2009 at 10:18 AM said...

மக்களே..

கும்மியில்லாமல் 100 பின்னூட்டங்கள். வந்ந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 82. என்னுடைய பதில் வெறும் இரண்டே இரண்டுதான். எப்படி நன்றி சொல்ல?

அதெல்லாம் வேணாம் பாஸ்.. என்ன சொல்றீங்க?

நல்லாருப்போம் ந்ல்லாருப்போம் எல்லோரும் நல்லாருப்போம்..

அத்திரி on March 10, 2009 at 12:14 PM said...

வாழ்த்துக்கள் சகா

அத்திரி on March 10, 2009 at 12:15 PM said...

வாழ்த்துக்கள் சகா

Sundar on March 10, 2009 at 5:04 PM said...

//ஃபீல். அது திட்டமிட்டு நிகழ்வதா? அது நடக்கும் போது எப்படி எதிர்கொள்வது என்று எப்படி திட்டமிட முடியும்? வாழ்க்கையை அதன் போக்கிலே வாழ விரும்புகிறேன். ஃபீல் செய்ய வைக்கும் சூழ்நிலை வந்தால் ஃபீல் செய்யவே விரும்புகிறேன். காலம் அதை சீக்கிரம் மாற்றும். ஃபீல் செய்வதை அல்ல, எத்ற்காக செய்கிறேனோ அதற்கான காரணத்தை.
//
Super!

dharshini on March 13, 2009 at 10:22 PM said...

நட்சத்திர வாழ்துக்கள் அண்ணா.
:)

dharshini on March 13, 2009 at 10:32 PM said...

நட்சத்திர வாழ்துக்கள் அண்ணா.
:)

 

all rights reserved to www.karkibava.com