Mar 14, 2009

புட்டிக்கதைகள்


அன்று பாலாஜியின் பிறந்த நாள். ஏழுவை நம்பி மீண்டும் பாருக்கு போவதில் யாருக்கும் உடன்பாடில்லை. ஹாஸ்டலுக்கே சரக்கை வாங்கி வருவதென முடிவு செய்தோம். ஏழுவும் நானும் நண்பனின் பல்சரை வாங்கிக் கொண்டு மஹாலட்சுமி ஒயின்ஸுக்கு சென்றோம். MC, Signature என்று எல்லாவற்றிலும் ஆஃப் வாங்கிக் கொண்டோம். நான் சைட் டிஷ் வாங்க சென்ற கேப்பில் ஒரு மினி பியரை அடித்துவிட்டான் ஏழு. அவசரத்தில் ராவாக வேறு அடித்துவிட்டான்.

மச்சி நான் ஓட்டறேன்டா வண்டிய என்றான் ஏழு.

நானும் சரி என்று சொல்லிவிட்டு பாட்டில்களை சைட் பாக்ஸில் வைத்தேன். சிறிது தூரம் வரை சரியாகத்தான் ஓட்டினான். மெதுவாக வண்டியும், ஏழுவும் ஆடுவதை பார்த்துவிட்டு வண்டியை நிறுத்த சொன்னேன். படுபாவி சரியாக அங்கே நின்றிருந்த போலிசின் அருகில் சென்று நிறுத்தினான். இறங்கும் போதே ஆடியவனை அவர்களும் பார்த்துவிட்டார்கள். அருகில் வந்தவர் இன்ஸ்பெக்டர் போல தெரிந்த்து.

என்னப்பா. ஓட்டத் தெரியுமா என்றார் இன்ஸ்பெக்டர். திருவாய் மலர்ந்தான் ஏழு

எங்க செட்டிலே நான் தால் எல்லோரையும் நல்லா ஓட்டுவேன் சார்.

டேய். என்ன நக்கலா? உன் உருவத்த்க்கு இந்த வண்டி தேவையா?
அப்ப கப்பல், ப்ளைட் ஓட்டறவங்க எல்லாம் உங்கள மாதிரி இருப்பாங்களா சார். எனக்கு வேர்க்க ஆரம்பித்த்து. குறுக்கே பேச முயன்றபோது வாயை மூட சொன்னார்கள்.

வண்டில RC இருக்காடா?

MCதான் இருக்கு sir.
நல்ல வேளை அவருக்கு புரியவில்லை. ஆனால் ஏழு தண்ணியடித்திருக்கிறான் என்பதை கண்டுபிடித்து விட்டார்கள்.

இந்த வண்டில மொத்தம் எத்தன கீரு இருக்குன்னு தெரியுமா?

அது தெரில சார். ஆனா ரெண்டு பீரு இருக்கு என்று இந்த முறைத் தெளிவாக சொன்னான் சண்டாளன். எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்த்து.
என்னையும் அவனையும் ஜீப்பில் ஏற்றினார்கள். நான் கெஞ்சும் போதெல்லாம் சிரித்து சிரித்து அவர்களை மேலும் எரிச்சல் படுத்தினான் ஏழு.

சார். நாங்க என்ன சரக்க கடத்தனுமோ என்ன? ரூமுக்கு வாங்கிட்டு போய் அடிக்கறது தப்பா சார்?

வாய மூடிட்டு வாடா. உன்னையெல்லாம் கவனிக்கற விதத்துல கவனிச்சாதான் திருந்துவீங்க என்றார் ஏட்டு.

சார் போலிஸ்ன்னா அதையும் முறையா செய்யனும் தான். ஆனா வன்முறையா செய்யக் கூடாது என்றவன் வாயில் லத்தியால் லேசாகத் தட்டினாட் ஏட்டு.

ஸ்டேஷனுக்குள் நுழைந்த்து ஜீப். இருவரையும் ஒரு பென்ச்சில் அம்ர வைத்தார்கள். ஒரு லெட்டர் ஒன்னு வாங்கிட்டு விட்டுவிட சொன்னார் இன்ஸ்பெக்டர். ஆனால் அந்த ஏட்டு எங்களுக்கு அட்வைஸ் செய்யத் தொடங்கினார்.

ஏம்ப்பா. காலேஜ் படிக்கற. இப்படியா நடக்கறது? நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போனும்னு ஆசை இல்லையா?

எனக்கு மூனு ஆசை சார் என்றான் ஏழு. கம்முனு இருடா என்ற என்னை அவன் மதிக்கவேயில்லை.படிக்காமாலே பாஸ் ஆகனும். இண்டெர்வ்யூவே இல்லாம வேலைக்குப் போகனும். வேலையே செய்யாம் சம்பளம் வாங்கனும்.

இதெல்லாம் எப்படிப்பா நடக்கும் என்று இன்னமும் பொறுமையாக கேட்டார் ஏட்டு.

மத்தத விடுங்க சார். இப்ப நீங்க வேலையே செய்யாம‌ சம்பளம் வாங்லையா?
ஏட்டுவின் முகம் மாறியது. ஏழுவை கன்னத்தில் ஒன்னு விட்டு மன்னிப்புக் கேட்க தொடங்கினேன். இதெல்லாம் சரிப்படாது நீங்க ட்ரெஸ் கழட்டுங்க என்றார்.

அடி பலமாக விழுந்து விட்டது ஏழுவுக்கு. கன்னத்தைத் தடவிக் கொண்டே சன்னமான குரலில் கேட்டான். “சார் எங்கள ரேப் பண்ணப் போறீங்களா?

நல்ல வேளையாக இன்ஸ்பெக்டர் வந்து எங்களை விடுதலை செய்தார். ஆனால் சரக்கையெல்லாம் கொடுக்கவில்லை. கடுப்பில் இருந்த நான் ஏழுவை அங்கேயே விட்டுவிட்டு ஹாஸ்டலுக்கு சென்றேன். எனக்கு முன்பே அங்கு ஆட்டோவில் வந்த ஏழு கலாட்டா செய்துக் கொண்டிருந்தான். நாங்களும் கண்டுக்காமல் விட்டதில், பிரச்சனை பெரிதாகி மறுநாள் அவனை விடுதியில் இருந்து எடுத்து விட்டார்கள். வழக்கம்போல் தொட்டியில் தலையைக் கவிழ்த்து மப்பை இறக்கிக் கொண்டிருந்தவனிடம் வந்த ஹாஸ்டல் வார்டன், ஏண்டா ஹாஸ்டலுக்குள்ளே தண்ணியடிக்கலாமா என்றார்.

தலையை சிலுப்பிக் கொண்டு பதில் சொன்னான் ஏழு “ பாட்டில குடி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடுன்னு” போட்டிருக்கு சார். விடுதிக்குனு போடல.

50 கருத்துக்குத்து:

அத்திரி on March 14, 2009 at 10:18 AM said...

1

அத்திரி on March 14, 2009 at 10:19 AM said...

ஹிஹிஹி நாந்தான் மொதல்ல

அத்திரி on March 14, 2009 at 10:20 AM said...

//எனக்கு மூனு ஆசை சார் என்றான் ஏழு. கம்முனு இருடா என்ற என்னை அவன் மதிக்கவேயில்லை.படிக்காமாலே பாஸ் ஆகனும். இண்டெர்வ்யூவே இல்லாம வேலைக்குப் போகனும். வேலையே செய்யாம் சம்பளம் வாங்கனும்//

ரசித்தேன் சிரித்தேன் சகா

ஷங்கர் Shankar on March 14, 2009 at 10:25 AM said...

\\ சார் போலிஸ்ன்னா அதையும் முறையா செய்யனும் தான். ஆனா வன்முறையா செய்யக் கூடாது என்றவன் வாயில் லத்தியால் லேசாகத் தட்டினாட் ஏட்டு. \\

super!

கணினி தேசம் on March 14, 2009 at 10:32 AM said...

அஹா..இது என்ன புது பதிவு?

கணினி தேசம் on March 14, 2009 at 10:33 AM said...

சகா, நாங்க ஒரு இன்னிங்க்ஸ் ஆடி முஇட்ச்சிட்டு பார்த்த.. புதுசா போட்டுட்டீங்களே ?

கணினி தேசம் on March 14, 2009 at 10:34 AM said...

நல்ல "சிரிப்பான" பதிவு.

ilavarasan on March 14, 2009 at 10:38 AM said...

ஏழோட ஒரே ஏழரையா போச்சே.

முரளிகண்ணன் on March 14, 2009 at 11:08 AM said...

வழக் கலக்

டக்ளஸ்....... on March 14, 2009 at 11:12 AM said...

கதை சூப்பரு.... நல்லா சிரிச்சேன் பாசு...
ஆனா Half பீருக்கெ இந்த அலும்பான்னுதான்
நம்ப முடியல....
அந்த Half பீருக்கு போதை தெளிய,தொட்டிக்குள்ள தலையை விட்டதெல்லாம்
ரொம்ப ஒவரு பாசு...

Sinthu on March 14, 2009 at 11:19 AM said...

எழு என்று இருந்தால் கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது என்று வந்தேன். அதே போல பஞ்சமே இருக்கவில்லை. இப்போதைக்கு இந்த சிரிப்பு போதும். அப்புறமாக வாறன். நான் தான் 11................

Thusha on March 14, 2009 at 12:08 PM said...

அகா அண்ணா கொஞ்ச நாளைக்குப் பிறகு ஏழுவை அழைத்து வந்து இருக்கீங்க என்ன இருந்தாலும் ஏழுவின் லோல்ளுக்கு குறைச்சல் இல்ல நன்றாக சிரித்தேன்
நன்றி

பாண்டி-பரணி on March 14, 2009 at 1:22 PM said...

உங்களோட நட்ச்சத்திர பதிவுல ஏழு கதை வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது அதை இப்போ இந்த பதிவு

கலக்கல் சகா :)

//எங்க செட்டிலே நான் தால் எல்லோரையும் நல்லா ஓட்டுவேன் சார்.//
//MCதான் இருக்கு sir.//
//அது தெரில சார். ஆனா ரெண்டு பீரு இருக்கு என்று இந்த முறைத் தெளிவாக சொன்னான் சண்டாளன்//

மீனா on March 14, 2009 at 3:04 PM said...

கலக்கல்...!

கார்க்கி on March 14, 2009 at 4:13 PM said...

நன்றி அத்திரி

நன்றி ஷங்கர்

நன்றி கணிணி தேசம்

நன்றி இளவரசன்

நன்றி முரளி

நன்றி டக்ளஸ்

நன்றி துஷா, சிந்து

நன்றி பரணி :))

நன்றி மீனா

ரமேஷ் வைத்யா on March 14, 2009 at 4:55 PM said...

HILLLLLLARIOUS. I can't help laughing in office. Keep it up.

எம்.எம்.அப்துல்லா on March 14, 2009 at 4:57 PM said...

ஏழு என்னுடைய கல்லூரி காலத்து ஆளு யாரையோ நினைவு படுத்துறானேன்னு பார்த்தா..... கிட்டத்தட்ட என்னைத்தான்.

Lancelot on March 14, 2009 at 5:18 PM said...

thala appo jail poitaae vanthutael..besh besh :P ....by the by...ellu beeraa kuda kalanthuthaan adipaaara??? annaiku RAWaa adichitaarunu eluthi irukeenga???EKSI

அன்புடன் அருணா on March 14, 2009 at 6:09 PM said...

//ஏழு என்னுடைய கல்லூரி காலத்து ஆளு யாரையோ நினைவு படுத்துறானேன்னு பார்த்தா..... கிட்டத்தட்ட என்னைத்தான்//
இதுதான் சூப்பர்!!!!
அன்புடன் அருணா

Kathir on March 14, 2009 at 6:45 PM said...

//வண்டில RC இருக்காடா?

MCதான் இருக்கு sir.

இந்த வண்டில மொத்தம் எத்தன கீரு இருக்குன்னு தெரியுமா?

அது தெரில சார். ஆனா ரெண்டு பீரு இருக்கு என்று இந்த முறைத் தெளிவாக சொன்னான் சண்டாளன். //

:))))))))

தங்கவேல் மாணிக்கம் on March 14, 2009 at 6:58 PM said...

அடப்பாவி மக்கா, கமெண்டுக்கா பதிவு எழுதுறீங்க...

படிச்சு மனசு விட்டு சிரித்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு...

வித்யா on March 14, 2009 at 7:03 PM said...

சே நம்ம தல என்னமா பட்டைய கிளப்புறார். சூப்பர்:)

Chennai Vennai on March 14, 2009 at 7:07 PM said...

கலகிட்டிங்க கார்கி. உங்க பதிவ எல்லாம் படிப்பேன், இது தான் முதல் பின்னோட்டம் :).

MayVee on March 14, 2009 at 7:22 PM said...

superppaa

MayVee on March 14, 2009 at 7:23 PM said...

me th 25

Lancelot on March 14, 2009 at 7:55 PM said...

Youngistan Kartik & One of a Kind Lancelot anbudan alaikirom...

http://lancelot-kartik.blogspot.com/

அறிவிலி on March 14, 2009 at 8:33 PM said...

//கேப்பில் ஒரு மினி பியரை அடித்துவிட்டான் ஏழு. அவசரத்தில் ராவாக வேறு அடித்துவிட்டான்.//

அவசரம் இல்லாட்டி பியருக்கே சோடா, பெப்சியெல்லாம் உண்டா?

சூப்பர்.. ROTFL

அறிவிலி on March 14, 2009 at 8:49 PM said...

இது ஒரு சீரிஸ் என்று தெரியாமல் பின்னூட்டம் போட்டு விட்டேன்.

இப்போதுதான் முந்தைய பதிவுகளை படித்து ஏழுவின் மகோன்னதத்தை புரிந்துகொண்டேன்.

முழு தொடருமே பிரமாதம். பாராட்டுக்கள்.

நான் ஆதவன் on March 14, 2009 at 11:27 PM said...

கலக்கல் சகா...

விஜி சுந்தரராஜன் on March 15, 2009 at 5:30 AM said...

sooper !! enjoyed !

pappu on March 15, 2009 at 6:52 AM said...

ஏன் ஏழு ன்னு கூப்பிடுறீங்க ! ஏழரைனு கூப்பிடுங்க!

வால்பையன் on March 15, 2009 at 12:24 PM said...

பட்டய கிளப்புது! காமெடி!

கார்க்கி on March 15, 2009 at 12:40 PM said...

அப்படியே வானத்துக்கு மேலே பறக்கைறேன்.. கிட்டதட்ட அல்லா பதிவுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ்.. ரொம்ப நன்றி சகாக்களே..

அனைவருக்கும் பதில் சொல்ல முடியாமல் போனதுதான் வருத்தம்

ஸ்ரீதர் on March 15, 2009 at 8:56 PM said...

//பாட்டில குடி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடுன்னு” போட்டிருக்கு சார். விடுதிக்குனு போடல.//

சரியான காமெடி .நன்கு ரசித்தேன்.'பட்டைய' கெளப்புறீங்க.

தாரணி பிரியா on March 15, 2009 at 11:32 PM said...

ஏழு வந்தவுடன் தான் நட்சத்திர பதிவு முழுமையடைஞ்சு இருக்கு

ஸ்ரீமதி on March 16, 2009 at 10:52 AM said...

:)))

விக்னேஷ்வரி on March 18, 2009 at 3:05 PM said...

நெருக்கடியான ஆபிஸ் டென்ஷனுக்கு நடுவில் வாய் விட்டு சிரிக்க வச்சுட்டீங்க. நன்றி கார்க்கி அண்ட் ஏழு.
வடிவேலு, விவேக் காமெடியெல்லாம் எம்மாத்திரம்.

விஜய் on March 18, 2009 at 4:59 PM said...

K

விஜய் on March 18, 2009 at 5:03 PM said...

a

விஜய் on March 18, 2009 at 5:04 PM said...

r

விஜய் on March 18, 2009 at 5:04 PM said...

k

விஜய் on March 18, 2009 at 5:04 PM said...

i

விஜய் on March 18, 2009 at 5:04 PM said...

b

விஜய் on March 18, 2009 at 5:04 PM said...

u

விஜய் on March 18, 2009 at 5:04 PM said...

d

விஜய் on March 18, 2009 at 5:04 PM said...

d

விஜய் on March 18, 2009 at 5:05 PM said...

y

விஜய் on March 18, 2009 at 5:05 PM said...

karki naalae..........

விஜய் on March 18, 2009 at 5:06 PM said...

buddi' thaana????

விஜய் on March 18, 2009 at 5:06 PM said...

is it??

 

all rights reserved to www.karkibava.com