Mar 31, 2009

கலியுகத்தில் இதுவும் நடக்கும்.இன்னமும் நடக்கும்


  பரிசல் போட்ட பத்த பார்த்தீங்களா? அட கணேஷிடம் அடிபட்ட அவரு, அவருக்கே போட்டுக்கிட்ட பத்து இல்லைங்க. பத்து புத்தகங்கள் பற்றி. பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கா இருக்கிற அவரே ரவுடின்னு வண்டில ஏறும்போது, பேஸ்மெண்ட் வீக்கா இருக்கிற நாம ஏறாம எப்படி? நாம மத்தவங்களுக்கு எங்க அட்வைஸ் கொடுக்கறது? கிரகம் உலகமேதான் நம்மளுக்கு கொடுக்குதே. ஒரே ஒரு அட்வைஸ் மட்டும் சொல்றேங்க. ”யாருக்கும் தயவு செய்து அட்வைஸ் கொடுக்காதீங்க”. (செல்வேந்திரனுக்கு நன்றி)

  இப்ப நிகழ்ச்சிக்கு போகலாமா? ச்சே நிறைய டிவி பார்த்தா இப்படித்தான். பதிவுக்கு போகலாமா?

10) Alchemist (paulo coelho)

  பிரேசில் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் இவர். தன்னம்பிக்கை குறித்து எழுதப்படும் நூல்களை நான் வெறுப்பதாக சொன்னபோது இதை எனக்கு அறிமுகம் செய்தார் நண்பர் ஒருவர். அடுத்த முறை அவரைப் பார்த்தபோது ட்ரீட் வைத்தேன். Outstanding. ஆனால் இதை நம்பி இவரின் மற்ற புத்தகங்களை வாங்கினால் நான் பொறுப்பல்ல. 67 மொழிகளில் பொழிபெயர்க்கப்பட்டு, 150 நாடுகளில் 65 மில்லியன் புத்தகங்கள் விற்றுள்ளன.உயிரோடு இருக்கும் எழுத்தாளர்களில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டதற்காக கின்னஸிலும் இடம் பெற்றிருக்கிறார்.

9) லொள்ளு தர்பார் (முகில்)

   நட்சத்திர வாரத்தில் நான் எழுதிய ஒரு பதிவில், நண்பர் தராசு அதேப் போல ஒன்றை முகிலும் எழுதியிருப்பதாக பின்னூட்டமிட்டிருந்தார். தேடிப்பிடித்து வாங்கினேன். அட்டகாசம் செய்திருக்கிறார். நகைச்சுவை புத்தகங்களை வாங்குவதை நிறுத்தி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் முகிலின் லொள்ளு தர்பார்.. வாய்ப்புகளே இல்லைங்க. மீள்வாசிப்பிலும் சிரிக்க வைக்கிறார்.

8) சிந்தா நதி (லா.ச.ரா)

  சாஹித்ய அகாடெமி பரிசு வாங்கிய புத்தகம். லா.ச.ராவை அதிகம் வாசித்ததில்லை. அவரின் பச்சை கனவும், சிந்தா நதியும் என்னை பல மாத காலம் ஆட்கொண்டன. லா.ச.ராவைப் பற்றி அவரின் தொண்டரடிபொடிகளில் ஒருவரான செல்வேந்திரன் ஒரு பதிவெழுத வேண்டும். சத்தியமா சிந்தா நதி ஐந்து முறை படித்தும் பாதி புரியவில்லை. முதலில் புரிந்தது மீள்வாசிப்பில் புரியவில்லை.

7) மோகமுள் (தி.ஜானகிராமன்)

தமிழ் நாவல்களில் என்னை வெகுவாக கவர்ந்த நாவல். பாபுவும், யமுனாவும் இன்னும் என் கண் முன்னே இருக்கிறார்கள். ஒரு முறை அய்யணார் சொல்லியிருந்தார், தமிழ் எழுத்தாளர்கள் தீராக்காமம் குறித்தே அதிகம் எழுதுவதாக. ஆனால் அதிலே எழுத்தின் உச்சத்தை தொட்டவர் தி.ஜா. மோகமுள் அதற்கு ஒரு நல்ல உதாரணம்.

6) The Motor cycle diaries( Che Guevera)

என் ஆதர்ச நாயகன் சேவின் பயண அனுபவங்கள். 23 வயது மருத்துவன், ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவன், ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் 8000 மைல்கள் பயணித்தான். அவரின் வாழ்க்கையை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தென் அமெரிக்காவையும் மாற்றி அமைக்க ஏதுவாக அமைந்தது அந்தப் பயணம்தான்.

***********************************************

பதிவின் நீளம் கருதியும், புடுங்க வேண்டிய ஆணிகளை கருத்தில் கொண்டும் தொடரும் போடுகிறேன். அடுத்த ஐந்து புத்தகங்கள் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

53 கருத்துக்குத்து:

அப்பாவி முரு on March 31, 2009 at 11:22 AM said...

வணக்கம் சகா.,

புது ட்ரண்டை ஆரம்பிச்சாச்சு.,

இனி ஆ.வி., குமுதம் முதல் #@!$#!#@,@###@ வரை எல்லா புத்தங்களின் பெயர்களும், அதை எழுதியவர்களின் பெயர்களும் வரப்போகிறது.

இந்த ட்ரண்டை ஆரம்பித்தவர்களுக்கு நன்றிகள்.

விக்னேஷ்வரி on March 31, 2009 at 11:28 AM said...

நல்ல வேலை பண்ணான் செல்வா. இப்படி எல்லாரும் எழுதுங்க. அதை வாங்கி படிச்சுட்டு, நல்லா இல்லைனா அப்புறம் கடுமையா பின்னூட்டம் போடுறேன். ;) இப்போதைக்கு Thanks for the Books suggestion Karki.

வித்யா on March 31, 2009 at 11:32 AM said...

ஆறாவது புத்தகம் என்னிடமிருக்கிறது. இன்னும் படிக்கவில்லை. ஆனால் சேவை பார்க்கும்போதெல்லாம் ஒன்னு தோன்றும். வேணாம் ஓரளவுக்கு மேல் ஆட்டோக்களின் வருகையை என்னால் தாங்க முடியாது:)

தராசு on March 31, 2009 at 11:44 AM said...

தல,
லொள்ளு தர்பார் படிச்சீங்களா..., ஹா, ஹா.

ஆமா, தலைப்புக்கும் ப்திவுக்கும் இன்னா கனிக்ஷன், ஒரே பேஜாராக்குது.

தராசு on March 31, 2009 at 11:45 AM said...
This comment has been removed by the author.
மண்குதிரை on March 31, 2009 at 11:47 AM said...

வணக்கம் நண்பா

வந்தேன்.
வாசித்தேன்.

எனக்கு பட்டியலிடத் தெரியவில்லை குழம்பிப் போகிறேன்.

இப்போது படித்ததில்,

உருபசி, முகுந்த்தின் தொகுப்பு, சோளகர் தொட்டி, ம், ஆதவன் சிறுகதைகள், குஞ்நுண்ணியின் கவிதைகள்.

வெயிலான் on March 31, 2009 at 11:49 AM said...

// பரிசல் போட்ட பத்த பார்த்தீங்களா? அட கணேஷிடம் அடிபட்ட அவரு, அவருக்கே போட்டுக்கிட்ட பத்து இல்லைங்க //

இதை மென்மையாக கண்டிக்கிறோம் கார்க்கி!

எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குவாரு எங்க தலைவர் பரிசல்!

ஸ்ரீமதி on March 31, 2009 at 12:09 PM said...

Super... :))

Bleachingpowder on March 31, 2009 at 12:15 PM said...

இதுக்கு தான் தல நாலெழுத்து படிச்சிருக்கனும்.

Anonymous said...

ரொம்ப பெரிய ஆளுங்க, பத்து பத்தா நூறு அடிச்சுடுங்க. வாழ்த்துக்கள்

Bleachingpowder on March 31, 2009 at 12:17 PM said...

நானெல்லாம் இன்னும் அம்புலிமாம,பூந்தளிர்,சிறுவர் மலர் தான் தல படிச்சிட்டிருக்கேன்

கார்க்கி on March 31, 2009 at 12:29 PM said...

@முரு,

நன்றி சகா. ஆரம்பிச்சவரு செல்வேந்திரன்.

************
நன்றி விக்னேஷ்வரி

***************

ஆமாம் வித்யா. நீங்க Mr. Flour ஐத்தானே சொல்றீங்க?

************

@தராசு,

தலைப்பு.. நானெல்லாம் இத படிங்கனு சொல்ரேனே. அதுக்கு. இதுக்கு மேலயும்ன்னா அடுத்த பதிவும் இத பத்திதனனு அர்த்தம் தல

************

கார்க்கி on March 31, 2009 at 12:32 PM said...

@மண்குதிரை,

இது எதயுமே நான் இன்னும் படிக்கல :((

************
@வெயிலான்,

தாங்குவாரு. ஆனா கட்டு போட்டுப்பாரில்ல?

**********
@ஸ்ரீமதி,

நிஜமா?

********
@ப்ளீச்சிங்,

நீங்கதான் உலக சினிமால கலக்கறீங்களே தல

*************

@மயில்,
நன்றிங்க

பாலராஜன்கீதா on March 31, 2009 at 12:41 PM said...

பிரிவோம் சந்திப்போம் அடுத்த இடுகையிலா ?
:-)

எம்.எம்.அப்துல்லா on March 31, 2009 at 12:57 PM said...
This comment has been removed by the author.
எம்.எம்.அப்துல்லா on March 31, 2009 at 12:58 PM said...
This comment has been removed by the author.
எம்.எம்.அப்துல்லா on March 31, 2009 at 1:00 PM said...

குமுதம்
குமுதம் ரிப்போட்டர்
குமுதம் பக்தி
குமுதம்ஜோதிடம் கல்கண்டு
ஆனந்தவிகடன்
ஜீனியர்விகடன்
சுட்டிவிகடன்
நாணயம்விகடன்
பசுமை விகடன்.

இதுதாம்பா நான் படிக்கிற
டாப் டென் லிஸ்டு.

Thusha on March 31, 2009 at 1:01 PM said...

எல்லாம் நல்ல தன் இருக்கு அண்ணா ........

prakash on March 31, 2009 at 1:02 PM said...

:))))

இப்பவே சொல்லிடறேன் அடுத்த பதிவிற்கும் இதே பின்னூட்டம் தான்

வால்பையன் on March 31, 2009 at 1:05 PM said...

நீங்க சொன்னதெல்லாம் புத்தகமா!
நான் எதோ பதிவர்கள அறிமுகபடுத்துறிங்கன்னு நினைச்சேன்

narsim on March 31, 2009 at 1:09 PM said...

நல்ல வரிசை சகா

Karthik on March 31, 2009 at 1:58 PM said...

NO idea! இதில் எதையும் நான் படிக்கவில்லை. :(

நானும் ஒரு லிஸ்ட் போடலாமா கார்க்கி? நல்ல விஷயமா இருக்கே அதுதான். :)

கார்க்கி on March 31, 2009 at 3:28 PM said...

// பாலராஜன்கீதா said...
பிரிவோம் சந்திப்போம் அடுத்த இடுகையிலா//

ஆமாங்க. புரொஃபைலை பார்த்தீங்களா? :))

*****************
@அப்துல்லா அண்ணன்,

இதெல்லாம் ஓவரு. மண்ட்டோ படைப்புகள், ஒரு பொருளாதார அடியாளின். என பல புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்க

***************
நன்றி துஷா, ப்

நன்றி நன்றி பிரகாஷ். ரெண்டு நன்றி இப்பவே சொல்லிட்டேன்

***********
@வால்,

கிகிகிகி

************

நன்றி தல..

***********

போடு கார்த்திக். நிச்சயம் அது வித்தியாசமா இருக்கும்..

முரளிகண்ணன் on March 31, 2009 at 3:44 PM said...

நல்ல வரிசை சகா.

அறிவிலி on March 31, 2009 at 4:00 PM said...

மோகமுள் தவிர மத்ததெல்லாம் படிச்சதில்ல..let me try other books...

Anbu on March 31, 2009 at 5:15 PM said...

இதில் எதுவுமே நான் படித்ததில்லை அண்ணா..

ம்ம்ம்ம்...பார்ப்போம் புத்தகம் கிடைக்கிறதா என்று

கார்க்கி on March 31, 2009 at 6:46 PM said...

@முரளி,

நன்றி சகா

************
@அறிவிலி,

மோகமுள் பிடித்தத்தா சகா?

*************
@அன்பு,

இவை எளிதில் கிடைக்குமே அன்பு

MayVee on March 31, 2009 at 7:01 PM said...

ithu ellam padicha.....
entha university la enna degree tharuvanga?????

present annathey.....

ithu periya alunga irukkira idam...

athanal naan game kku not coming

கார்க்கி on March 31, 2009 at 7:47 PM said...

@மேவீ,

இதுக்கெல்லாம் பயப்படலாமா சகா? சும்மா நாங்களும் ரவுடிதான் காட்டுங்க..

ஆதிமூலகிருஷ்ணன் on March 31, 2009 at 9:44 PM said...

ஒரே ஒரு அட்வைஸ் மட்டும் சொல்றேங்க. ”யாருக்கும் தயவு செய்து அட்வைஸ் கொடுக்காதீங்க”. (செல்வேந்திரனுக்கு நன்றி)//

இதுக்கு எதுக்கு செல்வாவுக்கு நன்றி?நான் பதிவையே அறிவுரை சொல்வதற்காக ஆரம்பித்தவன். எனது முதல் பதிவிலேயே இதை அழுத்தமாகச் சொன்னவன். ஆகவே நன்றி எனக்குதான்.

ஆதிமூலகிருஷ்ணன் on March 31, 2009 at 9:47 PM said...

வெயிலான் said...
// பரிசல் போட்ட பத்த பார்த்தீங்களா? அட கணேஷிடம் அடிபட்ட அவரு, அவருக்கே போட்டுக்கிட்ட பத்து இல்லைங்க //

இதை மென்மையாக கண்டிக்கிறோம் கார்க்கி!
//

கண்டிக்கிறதுல என்னைய்யா.. மென்மை.?

ஆதிமூலகிருஷ்ணன் on March 31, 2009 at 9:49 PM said...

அப்புறம் புத்தக லிஸ்ட்ல ஒண்ணையும் இன்னும் படிக்கலை.. டிரை பண்ணுவோம்.! (நீ டிரை பண்ணிட்டாலும்.. என்றெல்லாம் இழுக்கக்கூடாது)

பட்டாம்பூச்சி on March 31, 2009 at 9:52 PM said...

நல்ல அறிமுகம்.நன்றி.
சிந்தா நதி இன்னும் படிக்கவில்லை.படித்துவிட்டு சொல்கிறேன் :).

தாரணி பிரியா on April 1, 2009 at 6:07 AM said...

மோகமுள்ளும், சேவும் மட்டும்தான் இந்த லிஸ்ட்ல அறிமுகமானது. மத்தது எல்லாம் இப்பதான் அறிமுகம். நல்ல அறிமுகத்துக்கு நன்றி

Joe on April 1, 2009 at 6:17 AM said...

நல்ல பதிவு!

சம்பந்தமில்லாத தலைப்பு!

கார்க்கி on April 1, 2009 at 10:28 AM said...

// டிரை பண்ணுவோம்.! (நீ டிரை பண்ணிட்டாலும்.. என்றெல்லாம் இழுக்கக்கூடாது//

ஏன் ஆதி? புக்கெல்லாம் ஈரமாயிடுச்சா?

****************
@பட்டாம்பூச்சி,

படிச்சிட்டு சொல்லுங்க

***************
@தா.பி,

அறிமுகம்ன்னா.. தெரியுமா? இல்ல ப்டிச்சாச்சா?

************
@ஜோ,

நானெல்லாம் இத படிக்கலாம்னு சொல்றேனெ. அதுக்குதாங்க தலைப்பு.. :)))

dharshini on April 1, 2009 at 3:42 PM said...

மோகமுள் மறக்கவே முடியாத ஒன்று..
மீதி எப்பொழுது அண்னா?

Suresh on April 2, 2009 at 9:24 AM said...

@ கார்க்கி

// அறிமுகத்திற்கு நன்றி சகா//

உங்க எழுத்துக்களை விடாம படிச்சிட்டு வருகின்றேன் ... அருமை...

எனக்கும் ஒரு பிண்ணோட்டம் போட மாட்டிர்களா என்று எதிர்ப்பார்த்து ... காத்திருந்தது வீண்போகவில்லை

ரொம்ப நன்றி சகா ...

விஜய் on April 3, 2009 at 4:55 PM said...

38 comments thana

விஜய் on April 3, 2009 at 4:55 PM said...

itho vanthutaen

விஜய் on April 3, 2009 at 4:56 PM said...

40 pothumnu thonala, so innum athiga maakiduraen

விஜய் on April 3, 2009 at 4:57 PM said...

ithu 42

விஜய் on April 3, 2009 at 4:57 PM said...

43 ku vanthachu

விஜய் on April 3, 2009 at 4:58 PM said...

44th um vanthachu

விஜய் on April 3, 2009 at 4:59 PM said...

45th nanbarae

விஜய் on April 3, 2009 at 4:59 PM said...

46th

விஜய் on April 3, 2009 at 4:59 PM said...

47th vanthutaen, enna panrathu karki kaaga half century adichutae poiralam

விஜய் on April 3, 2009 at 5:00 PM said...

48th ma

விஜய் on April 3, 2009 at 5:00 PM said...

49th vanthutomla

விஜய் on April 3, 2009 at 5:01 PM said...

yeaaahhhhhhhhhhhhh
half century adichachae

விஜய் on April 3, 2009 at 5:01 PM said...

nandri sollunga nanbarae

Karthik on May 12, 2009 at 1:33 PM said...

@karki

//போடு கார்த்திக். நிச்சயம் அது வித்தியாசமா இருக்கும்..

போட்டுட்டேன் கார்க்கி. வந்து பாருங்க.. :)

Karthik on May 12, 2009 at 1:33 PM said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.

oops!

இது எப்ப இருந்து?? ;P

 

all rights reserved to www.karkibava.com