Mar 30, 2009

புட்டிக்கதைய ஜெயிக்க வைங்க மக்கா


  சங்கமம் போட்டி தெரியுமில்ல? கல்லூரி தான் தலைப்பு. சும்மா இல்லாம நம்ம புட்டிக்கதைகளில் ஒன்ன அனுப்பினேங்க. நர்சிம், வெட்டியோடத பார்த்ததும் இது வேலைக்காவாதுன்னு விட்டுட்டேன். திடீர்ன்னு பார்த்தா நம்மா பாலா அவர்கள் போட்டிக்கு வந்ததில் இருந்து டாப் டென்னு போட்டார்.  போய் பாருங்க, இளகிய மனம் கொண்டவர்கள் தவிர்ப்பது நலம்.(நோட் பண்ணுங்க, பொண்ணுங்கன்னு சொல்லல). ஏன் நர்சிம்மோடத விட்டுட்டிங்க பாஸ்? அவருடையது இதில் சேர்க்க முடியாதுன்னா?

அப்படியே ஓட்டு போட இங்க போங்க.  அதுக்குன்னு போட்டு கவுத்திடாதீங்க மக்கா..

**********************************************

மறுநாள் செமெஸ்டர் தேர்வுகள். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் முழு பியரையும் அடித்துவிட்டான் ஏழு. படிப்பதில் அவன் சூரன். எங்கள் கவலையெல்லாம் அவனை எப்படியாவது எழுப்பி கிளப்ப வேண்டுமென்பதே. நினைத்தது போலில்லாமல் காலை எட்டு மணிக்கே எழுந்துவிட்டான். ஆனால் மப்பு மட்டும் முழுமையாக இறங்கவில்லை.

தேர்வு அறைக்குள் நுழைந்தவன் நேராக ப்ளாட்ஃபார்ம் மீது ஏறினான். "யாருப்பா இன்னைக்கு எனக்கு பேப்பர் கொடுத்து புண்ணியம் தேடிக்கப் போறது?"

எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ஏழுவா இவ்வளவு சத்தம் போட்டு பேசுவது? பின் மெல்ல அவனை சமாதானப்படுத்தி தேர்வை ஒழுங்காக எழுதுமாறு எடுத்து சொன்னோம். தேர்வும் தொடங்கியது. கேள்வித்தாளையும் விடைத்தாளையும் கொடுத்துவிட்டு சரிப்பார்த்திட சொன்னார். மேற்பார்வையாளர். ஏழு எழுந்ததைப் பார்த்தவுடன் எனக்கு பயம் ஏறியது.

"எக்ஸ்க்யூஸ் மீ சார். Question paperல இருக்கு. ஆனா Answer paperல Answers எதுவுமே இல்ல சார்”

நான் சிரித்ததைப் பார்த்து அவர் ஏழுவை விட்டுவிட்டு என்னை திட்டத்தொடங்கினார். ஏழுவை முறைத்துக் கொண்டே அமர்ந்தேன். அரைமணி நேரம் கழித்து மீண்டும் எழுந்தான்.

"சார். Differential Assembly எப்படி வேலை செய்யுது?” அவர் கோவமடைவதை கண்ட ஏழு பம்மினான். "என்ன சார். சந்தேகம் கேட்டா தீர்த்து வைக்கிறவர்தானே நல்லஆசிரியர்?"

கழுத்தைப் பிடித்து இழுத்து சென்றார் அவர். அவன் மீது எந்த ஒரு 'நல்'வாசனையும் வராததால் இவன் வேண்டுமென்றே விளையாடுவதாக முடிவுசெய்து விட்டார்கள். ஸ்டாஃப் ரூமில் எல்லா லெக்சரரும் கூடியிருக்க விசாரணை ஆரம்பமானது. ஏழு நல்லா படிக்கிற பையன் என்று அனைவரும் சொன்னாலும் அடிபட்டவர் விடுவதாக இல்லை. அதுவரை வாயை மூடியிருந்த ஏழு வாயைத்திறக்கத் தொடங்கினான்.

கெமிஸ்ட்ரி மேடத்தை பார்த்து முதலில் சொன்னான். "மேடம் இவருக்கும் எனக்கும் ஏனோ கெமிஸ்ட்ரி ஒத்து வரவில்லை".

என்னடா பேசற. திமிரா? என்றார் பிஸிக்ஸ்.

”சார். மேல போனா கீழ இறங்கித்தான் ஆகனும்னு சொல்றாரு நியூட்டன். எனக்கு மட்டும் ஏன் சார் இறங்க மாட்டங்குது" என்ற போதுதான் இவன் தண்ணி அடித்திருக்கிறான் என்பதை உணர்ந்தார்கள் உரையாளர்கள்.(அதாம்ப்பா லெக்சரர்ஸ்)

இருந்தாலும் அவன் உருவத்தைப் பார்த்து பாவப்பட்ட சில நல்ல ஜீவன்கள் அவன் தண்ணியடிக்கவில்லை என்றும், கூடவே சுத்தும் நாங்கள்தான் அவனுக்கு கஞ்சா டோப்பு அபின் என்று எதோ பழக்கப்படுத்திக் கெடுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். அரை பியர் அய்யாவுக்கு கஞ்சா அபின் என்றதும் முதுகெலும்பில் எறும்பு ஊர்ந்திருக்கிறது.
"ஆமா சார். நேத்து கார்க்கிதான் எனக்கு ஏதோ கொடுத்தான்” என்று உளறியிருக்கிறான்

எப்படி மார்க் போட்டாலும் 40 வரவில்லை என்பதால் மீண்டும் கேள்வித்தாளினை புரட்டிக் கொண்டிருந்தேன், தேர்வு முடிந்து பல மணி நேரம் ஆன பின்னும்.
"உன்னை பிரின்ஸி வர சொன்னாரு. உடனே வா" என்றார் ஆஃபீஸ் பாய்.

பாவம் ஏழு. காப்பற்றலாம் என்ற நல்லெண்ணத்தில் போன என்னிடம் டொய்ங் என சுத்தி ஏழு சொன்னதை ரீப்ளே செய்து காமித்தார்கள். கொலைவெறியோடு அவனைப் பார்த்தேன்.கூலாக சிரித்துக் கொண்டே கேட்டான். "அது அபினா மச்சி?"

அப்படியே அவனைக் கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது. கோவத்தை அடக்கிக் கொண்டு
சார். அவன் நேத்து ஒரு பியர் குடிச்சான். அதுக்குதான் இந்த ஆட்டம் என்றேன்.

ஒரு பியருக்கு ரெண்டு நாளா ஆடுவாங்களா? கூட என்ன சேர்த்த என்று கேட்டுதானும் ஒரு குடிகாரர்தான் என்று நிரூபித்தார் கணக்கு.

சத்தியமா சார்.வேணும்ன்னா பாலாஜிய கூட கேளுங்க என்று சொல்லிவிட்டு பின்பு நாக்கைக் கடித்தேன், இன்னொருத்தனையும் சிக்க வைத்து விட்டோமே என்று.

அந்தக் கவலையே இல்லாமல் அடுத்த டயலாக்கை அடித்தான் ஏழு. " அவன் இவனுக்குதான் சப்போர்ட் பண்ணுவான் சார். நீங்க ஆறுவையும் வர சொல்லுங்க.அவன் தான் எனக்கு மிக்ஸ் செய்து தந்தான்"

பியரடிச்சவனுக்கு எதைடா மிக்ஸ் செய்தீங்க என்று தன் மானம் போவது தெரியாமல் விசாரித்தார் கணக்கு.

அவன் பீரையே தண்ணி கலந்துதான் அடிப்பான் சார் என்றேன். ஏதோ அவனை மன்மதன் என்று சொன்னதைப் போல நகத்தைக் கடித்து அந்த சிமென்ட் தரையில் கால் கட்டை விரலால் நோண்டி வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார் தலைவர்.

அழைத்து வரப்பட்டார்கள் ஆறுவும் பாலாஜியும். பின்புதான் தெரிந்தது அவர்கள் இழுத்து வரப்பட்டார்கள் என்ற உண்மை.

மூன்று பேர் சொல்லியும் யாரும் நம்பத் தயாரில்லை. ஏதோ பெரிய லெவலில் போதை மருந்து பழக்கம் இருப்பதாக முடிவு செய்து விட்டார்கள். பேரன்ட்ஸ் வரனும். சஸ்பென்ஷன் தரணும். இவனுங்களுக்கெல்லாம் எதுக்கு சார் படிப்பு.டி.சி. கிழிச்சிடுங்க, போலிஸ்ல சொல்லலாம் சார் என்ற ஆளுக்கொரு ஐடியா தந்துக் கொண்டிருந்தார்கள்.

மறுநாள் வரை விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. மப்பு இறங்கி எழுந்தவனை கைகள் வலிக்க மொத்தினோம். மறுநாள் எல்லா உண்மையும் சொல்வதாக சொன்னதால் விட்டோம்.

அடுத்த நாள்.. வரிசையாக நின்றோம். யாரிடம் கஞ்சா வாங்கிறீங்க என்றவரிடம் காலில் விழாத குறையாக கெஞ்சினோம். அடிச்சவனே ஒத்துக்கிட்டானே என்றார். ஏழுவைப் பார்த்தோம்.

சார். இல்ல சார். நான் பீரடிச்சாலே ஏறிடும் சார். சத்யமா நேத்து பீருக்குத்தான் அப்படியாயிட்டேன் என்றான்.

டேய். மெக்கானிக்கல்ன்னா பெரிய பருப்பா? நாங்களும் அத படிச்சிட்டுதானே வந்திருக்கோம். ஒரு பீருக்கே இவரு ரெண்டு நாள் ஆடுவாராம். யார் கிட்ட கதை உடறீங்க என்றார் ஹெச்.ஓ.டி.

மெதுவாக சொன்னான் ஏழு " வேணும்ன்னா ஒன்னு வாங்கித் தந்து பாருங்க சார்.எப்படி ஆடுறேனு”

42 கருத்துக்குத்து:

விஜய் on March 30, 2009 at 10:43 AM said...

First..........

விஜய் on March 30, 2009 at 10:44 AM said...

Puttikathaiya jeikka vekkanuma?????
Appo adichu pathutu vanthu solraen

Anonymous said...

எங்களுக்கும் பீர் வாங்கிக்குடுங்க. நாங்களும் புட்டிக்கதையை ஜெயிக்க வைக்கறோம். (ஹிஹி சும்மா)

வித்யா on March 30, 2009 at 10:46 AM said...

விலைவாசில்லாம் ஏறிப்போச்சு. ஒரு ஓட்டு போட்டா எவ்ளோ தருவ?

அப்பாவி முரு on March 30, 2009 at 10:56 AM said...

//சின்ன அம்மிணி said...
எங்களுக்கும் பீர் வாங்கிக்குடுங்க. நாங்களும் புட்டிக்கதையை ஜெயிக்க வைக்கறோம். (ஹிஹி சும்மா)//

ஆனா நான் நிஜமாத்தான் கேக்குறேன்.

ஸ்ரீமதி on March 30, 2009 at 10:59 AM said...

:)))

மண்குதிரை on March 30, 2009 at 11:11 AM said...

வணக்கம் நண்பா !

ஏற்கனவே வாசித்தேன் உங்க லிங் மூலமாக.

ஓட்டு போட்டாச்சு

ஒருத்தர் எத்தனை முறை வேண்டுமானாலும் போடலாம் என்றால் இன்னும் போடுறேன்.

அது சரி,

''நான் தான்'' கதை எழுதுன கார்க்கி எங்க இருக்கார் ?

கார்க்கி on March 30, 2009 at 11:20 AM said...

@விஜய்,
ரைட்டு.. நைட்டு அப்ப ஜூட்டு

***************
@அம்மிணி,

நன் ரெடிங்க. ஹைதைக்கு வாங்க..

****************
@வித்யா,

அதே விலைவாசி எனக்கு தாங்க ஏறிப்போச்சு. கையில் காசே இல்லைங்க

***********
@முரு,

பீரா சகா? குழந்தையா நீங்க?

**********
@மண்குதிரை,

வருவாருங்க.. இந்த வாரம் ஒரு சிறுகதை எழுதனும்.. நியாபகபடுத்தியதற்கு நன்றி

narsim on March 30, 2009 at 11:30 AM said...

பாலாசாரின் ஜட்ஜ்மெண்ட்டில் முதலாவதாக வந்ததிற்கு வாழ்த்துக்கள் சகா..

போட்டியிலும் முதல்தான்.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

MayVee on March 30, 2009 at 11:57 AM said...

:-))
(ithukku neenga ethavathu reply panniye aaganum...........)

MayVee on March 30, 2009 at 11:59 AM said...

10000 adikka yaaravathu irukkingala....

intru nan free thaan...
office la velai yethum illai

எம்.எம்.அப்துல்லா on March 30, 2009 at 12:06 PM said...

//வித்யா said...
விலைவாசில்லாம் ஏறிப்போச்சு. ஒரு ஓட்டு போட்டா எவ்ளோ தருவ

//

அவன் நம்பகிட்ட கேப்பான்
:)

Anonymous said...

மக்கா,
இது கதையா? சுய சரிதையா?

ஒட்டு போட மதுரையில் எப்படி கவனிச்சாங்க பாத்தியா?

தராசு on March 30, 2009 at 12:14 PM said...

//அழைத்து வரப்பட்டார்கள் ஆறுவும் பாலாஜியும். பின்புதான் தெரிந்தது அவர்கள் இழுத்து வரப்பட்டார்கள் என்ற உண்மை//

எதுகை, மோனை எல்லாம் பார்த்தா, வைரமுத்துவை அதிகம் படிப்பீங்க போலிருக்குதே,

Thusha on March 30, 2009 at 12:56 PM said...

அண்ணா ஓட்டு போட்டாச்சு
நம தலை ஏழுக்ககா இனொரு ஓட்டு போடலாம் ஏன்னு பார்த்தேன் முடியலை

கார்க்கி on March 30, 2009 at 1:03 PM said...

@நர்சிம்,

நன்றி தல. :))

*************
@மேவீ,

10,000??????? என்னப்பா?

*********
@அப்துல்லா,

நீங்க வெவரம்ண்ணே

************
@மயில்,

சுயசரிதையா??? ஆவ்வ்வ்வ்வ்

************
@தராசு,

இதுல எது தல எதுகை & மோனை?

***************
@துஷா,

நன்றி துஷா..

Lancelot on March 30, 2009 at 1:07 PM said...

ennaku oru full rum koduthaa intha kathaikku booker prize vaangitharen...

முரளிகண்ணன் on March 30, 2009 at 1:20 PM said...

வாழ்த்துக்கள் சகா

இராகவன் நைஜிரியா on March 30, 2009 at 1:33 PM said...

ஓட்டு போட்டாச்சுங்க.. (3 எடத்துலேயும்..)

வாழ்த்துகள்..

// எத்தனை வோட்டு வேணும்னாலும் போடலாம். //

இல்லீங்க உங்களுக்கு இரண்டாவது தடவை ஓட்டு போட முயற்சி பண்ணினேன்.. நீங்க முன்னாடியே ஒட்டு போட்டுட்டீங்க அப்படின்னு இங்கிலிபீசுல சொல்லுதுங்க..

தாரணி பிரியா on March 30, 2009 at 2:18 PM said...

1 votekku mela poda mudiyalai karki

கார்க்கி on March 30, 2009 at 2:27 PM said...

@lancelot,

ஒன்னு போதுமா சகா?

***********
நன்றி முரளி

************
@ராகவன்,

ரொம்ப நன்றிங்க

***************

@தா.பி,

ஒரு தடவ வோட்டு போடுங்க. அடுத்து வேறு யாருக்காவாது (கவனம். இதுக்கு 1 மார்க் கொடுங்க) போடுங்க.. மறுபடியும் என் பதிவுக்கு நேரா 5 க்ளிக்கி வோட்டு போடுங்க.. இப்படி மாத்தி மாத்தி போட்டா நிறைய போடலாம்.. ரெடி ஸ்டார்ட் மீஜிக்

மணிகண்டன் on March 30, 2009 at 2:31 PM said...

****
ஒரு தடவ வோட்டு போடுங்க. அடுத்து வேறு யாருக்காவாது (கவனம். இதுக்கு 1 மார்க் கொடுங்க) போடுங்க.. மறுபடியும் என் பதிவுக்கு நேரா 5 க்ளிக்கி வோட்டு போடுங்க.. இப்படி மாத்தி மாத்தி போட்டா நிறைய போடலாம்.. ரெடி ஸ்டார்ட் மீஜிக்
****

:)-

மணிகண்டன் on March 30, 2009 at 2:34 PM said...

நான் பாலாஜி சக்திவேல்ங்கர புனைபெயருல "கல்லூரி" படத்த போட்டிக்கு சப்மிட் பண்ணினேன். அத அவங்க போட்டிக்கு எடுத்துக்கவே இல்ல. உங்கள ஜெயிக்க வைக்கறதுக்காக !

லவ்டேல் மேடி on March 30, 2009 at 2:40 PM said...

சேரிங்கோ தம்பி....!! எம்பட ஓட்டு உங்குளுக்குத்தான் ....!!!!!ஒரு ஓட்டுக்கு 3000 ரூவாய் குத்துருங்கோ.....!!!!! நெம்ப சவுரியமா போயிரும்......!!!!

prakash on March 30, 2009 at 2:44 PM said...

வாழ்த்துகள் கார்க்கி...

வோட்டு போட்டு விட்டேன்...

ஒருமுறைதான் போடமுடிகிறது....
[இதையும் போன பதிவிற்கு முந்தய பதிவையும் குழப்பிக்கொள்ள வேண்டாம் :)) ].

மறுமுறை மற்றவர்களுக்கு வேண்டுமானால் அனுமதிக்கிறது உனக்கு வோட்டளிக்க அனுமதி இல்லை....

மணிகண்டன் on March 30, 2009 at 2:52 PM said...

ரூட்டர் அணைச்சிட்டு ஆன் பண்ணுங்க பிரகாஷ். இப்படி தான் number 21 க்கு பத்தாயிரம் வோட்டு போட்டேன் !

mythees on March 30, 2009 at 3:49 PM said...
This comment has been removed by the author.
Karthik on March 30, 2009 at 4:00 PM said...

:))))

விஜய் on March 30, 2009 at 4:19 PM said...

Yenpa vaara motha naalae vaa???
yen intha kola veri????

கார்க்கி on March 30, 2009 at 4:20 PM said...

@மணிகண்டன்,

வாழ்த்துகள். போட்டிக்கு

*************
@லவ்டேல்மேடி,

3000 ரூபாயா? நான் திமுக காரங்க. 5000 கேளுங்க

*************
@பிரகாஷ்,

’போட்டதுக்கு’ நன்றிங்க

**************
சிரிக்கும் சிந்தனை சிற்பி கார்த்திக் வாழ்க.. (அவரு இல்லப்பா)

ஸ்ரீதர் on March 30, 2009 at 7:16 PM said...

kalakkitteenka.

Anonymous said...

ஒரு பீருக்கே இந்த ஆட்டமா?!

நல்ல நகைச்’சுவையான’ பதிவு

அறிவிலி on March 30, 2009 at 7:56 PM said...

கார்க்கி.. எக்கச்சக்கமா ஒட்டு போட்றுக்கேன்.(உங்களுக்காக இல்லை.. ஏழுக்காகத்தான்...)

டச் வுட்.. இதையும் மீறி உங்களுக்கு எதிரா ரிசல்ட் வந்தா, கழகக் கண்மணிகள் எல்லாம் உங்களுக்கு எதிரா அணிவகுத்துருக்காங்கன்னு அர்த்தம். அவங்கல்லாம் ப்ரொஃபஷனல்ஸ், என்னால போட்டி போட முடியாது.

Joe on March 30, 2009 at 9:06 PM said...

//
மெதுவாக சொன்னான் ஏழு " வேணும்ன்னா ஒன்னு வாங்கித் தந்து பாருங்க சார்.எப்படி ஆடுறேனு”
//

ஹா ஹா! வாய்ப்பேயில்லை!

Poornima Saravana kumar on March 30, 2009 at 10:46 PM said...

:)

Kathir on March 30, 2009 at 11:59 PM said...

//எங்களுக்கும் பீர் வாங்கிக்குடுங்க. நாங்களும் புட்டிக்கதையை ஜெயிக்க வைக்கறோம். (ஹிஹி சும்மா)//

ஆனா நான் நிஜமாத்தான் கேக்குறேன்//

ஆமாம்.... எனக்கும் ஒன்னு பார்சல்......

:))

pappu on March 31, 2009 at 6:59 AM said...

///மெதுவாக சொன்னான் ஏழு " வேணும்ன்னா ஒன்னு வாங்கித் தந்து பாருங்க சார்.எப்படி ஆடுறேனு”
///
.
அட்றா சக்கை...அட்றா சக்கை....அட்ட்றாஆஆஆ சக்கை!

mythees on March 31, 2009 at 10:42 AM said...

வாழ்த்துகள் சங்கமம் போட்டிக்கு

ஓட்டும் போட்டாச்சிங்கோ

கலர் டீவி எப்போ...............

eesh

விக்னேஷ்வரி on March 31, 2009 at 11:43 AM said...

ஓட்டுப் போட்டாச்சு கார்க்கி. எனக்கு ஒரு உண்மை சொல்லுங்க, நீங்க எழுதுற கதைக்கான பாராட்டுகள் ஏழுவை சேர்ந்ததா, இல்லை உங்களையா... உண்மையிலேயே இவ்வளவு நகைச்சுவை மிகுந்தவர் அவரா, நீங்களா..... Anyways, enjoyed the story.

பாண்டி-பரணி on March 31, 2009 at 12:21 PM said...

சகா

போட்டாச்சி போட்டாச்சி வோட்டு போட்டாச்சி

ஏழு தான் 1st வருவாபல
ரைட்டு உடு..

dharshini on April 1, 2009 at 3:39 PM said...

// மெதுவாக சொன்னான் ஏழு " வேணும்ன்னா ஒன்னு வாங்கித் தந்து பாருங்க சார்.எப்படி ஆடுறேனு”//
ha ha ha :)

Bendz on April 1, 2009 at 7:07 PM said...

Simply superb. You've got a lot of experiences. Enjoy.
:-)
Insurance

 

all rights reserved to www.karkibava.com