Mar 26, 2009

சனி திசை தொடங்கிவிட்டது


ஹாய் ஹாய் ஹாய்..எல்லோரும் நலம்தானே? சரியாய் ஒரு வாரம் ஆகிவிட்டது பதிவுலகம் பக்கம் வந்து. எல்லா நாளும் அநியாயத்துக்கும் பிசி என்பதால் அவ்வளவு கஷ்டம் இல்லை. அவ்வபோது அலுவலகம் விஷயமாக மெயிலை திறந்தால் விசாரிப்பு மின்னஞ்சல்கள். உடனடியாக பதில் அனுப்ப முடியாமல் போனதுதான் வருத்தம். எதுவுமே எழுதாத நாட்களிலும் 150 முதல் 200 பேர் வரை வந்து கடையைக் காப்பாற்றியிருக்கிறார்கள். வந்த மெய்ல்களும், குறுந்தகவல்களும், அழைப்புகளும் நானும் ரவுடிதான் என்பதை சொல்கின்றன. சீக்கிரம் நன்றிக்கு பதிலா வேற ஒரு வார்த்தை கண்டுபிடிங்கப்பா.

******************************************

நம்ம நட்சத்திரம் மாதவராஜ் தமிழ் கதாநாயகர்களை அறிவற்றவர்கள் என்று சொன்னப் பதிவை புதிய நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். ஏன் எனக்கு அனுப்பினீங்க என்ற கேட்டதற்கு அவரின் கோவம் முழுவதும் ரஜினி மற்றும் விஜய் மேல்தான். விஜய்க்கு ஆதரவாக பதிவுலகில் வெளிப்படையாக பேசுவது நீங்க மட்டும்தானே என்றார். 'வெளிப்படையாக' என்பதால் நான் மட்டும் இருக்கலாம்.ஆனால் பதிவுலகிலும் விஜயை ரசிப்பவர்கள் தான் அதிகம். நம் ரசனை சரியோ தவறோ, மேலோ கீழோ அதை மற்றவர்களுக்காக மறைப்பது தேவையில்லாத ஒன்று. அந்த மாதிரி தனக்கு தோன்றியதை சொல்லியிருக்கிறார் அவர்.அறிவற்றர்வர்கள் என்ற வார்த்தைதான் இடிக்கிறது. அவர்கள் அறிவாளிகள் தான். இன்னும் சில தினங்களில் என்னுடைய பார்வையை பதிவு செய்கிறேன்.

****************************************

நான் கடவுள் குறித்த ஜெயமோகனின் பதில்களைப் படித்து விட்டு என்னிடம் விவாதித்துக் கொண்டிருந்தான் என் அண்ணன். அப்போதுதான் கவனித்தேன். எத்தனைப் பிழைகள்? பதிவர்கள் நேரமில்லாமலும், அறியாமையிலும் பிழையோடு எழுதுவதையே குறை சொல்லும் அன்பர்கள், ஜெமோவை படிப்பதில்லையா? அவர் எழுதினால் நாங்களும் எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள் எல்லாம் எலக்கியவாதி இல்லையா? அதனால் கேட்கிறேன்.

அதேப் போல் தமிழ் இலக்கியம் என்று ஸீரோ டிகிரியையும், ரப்பரையும் எப்படி சொல்கிறார்கள்? மொழி என்ற வனத்தின் நடுவே இருக்கும் அழகிய நீர் வீழ்ச்சி போன்றது இலக்கியம் என்கிறார் சாரு. அப்படியெனில் ஸிரோ டிகிரி எப்படி தமிழ் இலக்கியம் ஆகும்? அதற்கு ஒப்பான தலைப்பு தமிழில் இல்லையெனில் தமிழ் எப்படி செம்மொழி ஆகும்? சந்தேகம்தான். தீர்த்து வையுங்கள்.

*********************************

தங்கையின் திருமணம் நல்லபடியாக நடந்தது. இதுவரை சில திருமணங்களுக்கு சென்றிருந்தாலும் அருகிலிருந்து நடத்தியது இதுதான் முதல் முறை. அந்த அனுபவங்களை சிலப் பதிவுகளாக எழுதலாம் என்றிருக்கிறேன். 24 மணி நேரத்தில் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது. பூத்துக் குலுங்கும் ரோஜாச் செடியை வேரோடு பிடுங்கி வேறொருத் தோட்டத்தில் வைப்பது மட்டுமல்லாமல், அங்கேயும் பூக்க வேண்டும் என்கிறார்கள். நட்டு வைத்துவிட்டு வீடு திரும்பியதும் பூவைக் காணாமல் வெறிச்சோடியிருக்கும் நம் தோட்டம். அதுசரி.. என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?

59 கருத்துக்குத்து:

முரளிகண்ணன் on March 26, 2009 at 11:09 AM said...

வா கார்க்கி. கடைசி வரி அருமை

பரிசல்காரன் on March 26, 2009 at 11:27 AM said...

சீக்கிரம் தலைப்ப மாத்துடா.. ஒத விழும்.

Subankan on March 26, 2009 at 11:28 AM said...

//பூத்துக் குலுங்கும் ரோஜாச் செடியை வேரோடு பிடுங்கி வேறொருத் தோட்டத்தில் வைப்பது மட்டுமல்லாமல், அங்கேயும் பூக்க வேண்டும் என்கிறார்கள்//

காலம் கடந்தாலும் அது பூத்துத்தான் ஆகவேண்டும். பாரம்பரியம்??? . அதுசரி, என்ன‍ ஒருவாரக் கதைகளை ஒரே நாளில் கூற உத்தேசமோ என யோசிக்கும் அளவிற்கு ஒரு பதிவு? விரிவாகப் போடலாமில்ல‍?

வால்பையன் on March 26, 2009 at 11:28 AM said...

//சீக்கிரம் தலைப்ப மாத்துடா.. ஒத விழும்.//

ஏன் உங்களுக்கு அதில் அபார நம்பிக்கையோ!

பரிசல்காரன் on March 26, 2009 at 11:28 AM said...

ஸாரி.. போன பின்னூட்டத்துல அந்த ‘டா’ மனசிலேர்ந்து அப்படியே விழுந்திட்டது.

ஸாரி எகெய்ன்!

வால்பையன் on March 26, 2009 at 11:29 AM said...

//பதிவுலகிலும் விஜயை ரசிப்பவர்கள் தான் அதிகம்.//

இன்னும் தெளியலையா?

பரிசல்காரன் on March 26, 2009 at 11:30 AM said...

@ வாலு

நம்பிக்கை என்பது நம்பிக்கையற்றதாய் மாறும்போது நம்பிக்கை குறித்த நம்பிக்கைகள் அலசி ஆராயப்படுவதன் நம்பிக்கைகளை நம்பாததால் அப்படிச் சொன்னேன்!!!

வால்பையன் on March 26, 2009 at 11:31 AM said...

//என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?//

கூடவே முள்ளும் வரும் என்று ”ஆபாச” தலைவர் சொல்ல சொன்னார்.

மண்குதிரை on March 26, 2009 at 11:31 AM said...

வாங்க நண்பா

எவ்வளவு நாளா முடிய கடையைப் பார்த்துக் கொண்டிருப்பது.

1 . //சீக்கிரம் நன்றிக்கு பதிலா வேற ஒரு வார்த்தை // ரசித்தேன்.

2 .விளக்குங்க

3 .எதுக்கு நண்பா அரசியல்?

4. //அதுசரி.. என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?//அருமை.

அப்பாவி முரு on March 26, 2009 at 11:32 AM said...

//நம் ரசனை சரியோ தவறோ, மேலோ கீழோ அதை மற்றவர்களுக்காக மறைப்பது தேவையில்லாத ஒன்று//

ரசனையாக இருந்தால் பிரச்சனை இல்லை, வரவேற்கலாம்.

அதே, வெறியாக இருப்பவர்களை என்ன செய்வது?

Thamizhmaangani on March 26, 2009 at 11:32 AM said...

//என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?//

நாங்கலாம் எதுக்கு இருக்கோம். கண்டிப்பா கண்டுபுடிச்சு தருவோம்ல!

வால்பையன் on March 26, 2009 at 11:33 AM said...

//நம்பிக்கை என்பது நம்பிக்கையற்றதாய் மாறும்போது நம்பிக்கை குறித்த நம்பிக்கைகள் அலசி ஆராயப்படுவதன் நம்பிக்கைகளை நம்பாததால் அப்படிச் சொன்னேன்!!!//

எதா இருந்தாலும் சனி ஞாயிறு பேசிக்கலாம், இப்போ தெளிவா இருக்குறதால சரியா புரியல!

அப்பாவி முரு on March 26, 2009 at 11:35 AM said...

// வால்பையன் said...
//நம்பிக்கை என்பது நம்பிக்கையற்றதாய் மாறும்போது நம்பிக்கை குறித்த நம்பிக்கைகள் அலசி ஆராயப்படுவதன் நம்பிக்கைகளை நம்பாததால் அப்படிச் சொன்னேன்!!!//

எதா இருந்தாலும் சனி ஞாயிறு பேசிக்கலாம், இப்போ தெளிவா இருக்குறதால சரியா புரியல/

அண்ணே வால்ஸ்.,

அந்த சனியத்தான் நம்ம கார்க்கியும் சொன்னாரு

கார்க்கி on March 26, 2009 at 11:37 AM said...

@முரளி,

வாங்க சகா.:))

****************
@பரிசல்,

ஏன் சகா?
(டா சொன்னதுக்கு சாரி சொன்னிங்களே. அதுக்கு சாரி சொல்லுங்க)

*****************
@சுபாங்கன்,

நிச்சயமா. விரிவா போடறேன் சகா

************
@வால்,
//கூடவே முள்ளும் வரும் என்று ”ஆபாச” தலைவர் சொல்ல சொன்னார்.//

தெரியும் சகா. பிரிச்சு மேஞ்சிடுவோமில்ல

கார்க்கி on March 26, 2009 at 11:40 AM said...

@மண்குதிரை,

சந்தோஷமா இருக்குங்க. உங்க தொடர் ஆதரவுக்கு ரொம்ப நன்றி

*****************
@முரு,
//ரசனையாக இருந்தால் பிரச்சனை இல்லை, வரவேற்கலாம்.

அதே, வெறியாக இருப்பவர்களை என்ன செய்வது?//

உண்மைதான். ஆனா இப்ப இதை எத்ரிப்பவர்கள்தான் வெறித்தனமாக இருக்கிறார்கள். ஆதரிப்பவர்கள் பரவாயில்லை.

****************8

@தமிழ்மாங்கனி,
//நாங்கலாம் எதுக்கு இருக்கோம். கண்டிப்பா கண்டுபுடிச்சு தருவோம்ல//

முழுசா படிக்கறதுக்குள்ள ஒரு நிமிஷம் பறக்க ஆரம்பிச்சிட்டேங்க.. :)))

அப்பாவி முரு on March 26, 2009 at 11:42 AM said...

// கார்க்கி...
@முரு,
//ரசனையாக இருந்தால் பிரச்சனை இல்லை, வரவேற்கலாம்.

அதே, வெறியாக இருப்பவர்களை என்ன செய்வது?//

உண்மைதான். ஆனா இப்ப இதை எத்ரிப்பவர்கள்தான் வெறித்தனமாக இருக்கிறார்கள். ஆதரிப்பவர்கள் பரவாயில்லை.//


எதிர்ப்பவங்க தானே,,,

மூணுவருசத்துக்கு முன்னாடி அவுங்கெல்லாம் எங்க இருந்தாங்க...

Rajeswari on March 26, 2009 at 11:51 AM said...

welcome back ...

கடைசி பத்தி அருமை

பாண்டி-பரணி on March 26, 2009 at 11:52 AM said...

வாங்க சகா
தினமும் கடைய எட்டி பார்ப்பேன்
இன்றைக்கு வந்தாச்சி

//என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?//

கண்ணால ஆச துளிர்விடுதோ :)

//சீக்கிரம் தலைப்ப மாத்துடா.. ஒத விழும்.//
பரிசல் அண்ணே அது எல்லாம்
பாசத்தின் வெளிப்பாடு உள்ள இருந்து
அப்படித்தான் வெளிவரும்

Anonymous said...

சைக்கிள் கேப்பில் பொண்ணு பார்க்க சொல்லி பிட்ட?

அதுசரி.. என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?

Bleachingpowder on March 26, 2009 at 11:55 AM said...

//நான் கடவுள் குறித்த ஜெயமோகனின் பதில்களைப் படித்து விட்டு என்னிடம் விவாதித்துக் கொண்டிருந்தான் என் அண்ணன். அப்போதுதான் கவனித்தேன். எத்தனைப் பிழைகள்?//

அப்போ நானும் ஜெமோவும் ஒன்னா தல ??

அனுஜன்யா on March 26, 2009 at 12:02 PM said...

Welcome back.

பதிவோட கடைசி வரிகளை உன் அம்மா கிட்ட காமி. அவங்க ஆவன செய்வார்கள்.

அனுஜன்யா

narsim on March 26, 2009 at 12:15 PM said...

வா கார்க்கி, வாவ் கார்க்கி..

நல்ல ரிட்டர்ன் பதிவு.

சகா.. உன் வீட்டுக்கான ரோஜாவ வளர்கிறவர் மேல நம்பிக்கை இல்லாம டெய்லி போய் பார்த்துட்டுத்தானப்பா வர்ற.. அப்புறம் என்ன?

ஆனாலும் வரிகள் அருமை.

குசும்பன் on March 26, 2009 at 12:20 PM said...

அனுஜன்யாவுக்கு ஒரு ரிப்பீட்டேய்!

குசும்பன் on March 26, 2009 at 12:21 PM said...

சகா.. உன் வீட்டுக்கான ரோஜாவ வளர்கிறவர் மேல நம்பிக்கை இல்லாம டெய்லி போய் பார்த்துட்டுத்தானப்பா வர்ற.. அப்புறம் என்ன?//

இங்க ஒன்னும் சொல்லமுடியலை!:(((

கார்க்கி on March 26, 2009 at 12:26 PM said...

நன்றி ராஜேஷ்வரி
**********8

வாங்க பரணி. உங்கள மாதிரி நண்பர்கள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
***********

@மயில்,
ஆமாங்க.. இல்லன்ன நம்மள கண்டுக்கவே மாட்டாங்க
**************
@ப்ளீச்சிங்க்,

நீங்க சாரு தல.. :)))

******************
@அனுஜன்யா,

எப்படியும் போய் சேரும் என்ற நம்பிக்கையில்தானே இத எழுதறேன் :))

*****************
@நர்சிம்,

தல, அது என் வீட்டு ரோஜாவான்னு தெரியாது. ரோஜான்னு தெரிஞ்சா பார்ப்பேன். :)))
***********

@குசும்பன்,

அப்ப அவருக்கு போட்ட பதில படிச்சுக்கோங்க பாஸ்

அசோசியேட் on March 26, 2009 at 12:29 PM said...

WELCOME BACK.

Thusha on March 26, 2009 at 12:45 PM said...

"ஹாய் ஹாய் ஹாய்..எல்லோரும் நலம்தானே?"
நீங்க நலம் தானே welcome back anna

பதிவு சுப்பர்
புதுசு புதுசா கேள்ளவி எல்லாம் வந்திருக்கு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஸ்ரீமதி on March 26, 2009 at 12:56 PM said...

எழுத்து பிழை இல்லாமல் சூப்பர் பதிவு அழகான தமிழில் :)))

லக்கிலுக் on March 26, 2009 at 1:00 PM said...

kadaisi paththi kalakkal

ஸ்ரீமதி on March 26, 2009 at 1:11 PM said...

//அதுசரி.. என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?//

யாராவது ஒரு ஏமாந்த தோட்டக்காரரா தான் இருக்கும்... ;)))))))))
சாரி சொல்லாம இருக்க முடியல... :((

நான் ஆதவன் on March 26, 2009 at 1:21 PM said...

வெல்கம் பேக் சகா.

மாதவராஜ் விஜய், ரஜினி போன்ற நடிகர்களின் ரசிகர்கள் அறிவற்றவர்கள் சொல்லியிருந்தா இந்த பிரச்சனை இவ்வளவு பெரிசா ஆகியிருக்காது. நடிகரெல்லாம் புத்திசாலிங்க தான் சகா....

Cable Sankar on March 26, 2009 at 2:03 PM said...

//அதுசரி.. என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?//

உனக்குன்னு யாராவது வளத்துகிட்டுதானே இருப்பாங்க..

தராசு on March 26, 2009 at 2:59 PM said...

யோவ், எத்தன தரம் தான் ஃபோன் பண்றது, எப்ப ஃபோன் ப்ண்ணாலும் ஒரு பொண்ணுதான் பேசுது,

தினமும் வந்து கடைய பாத்தா அது வேற பூட்டிக்கிடக்கு,

கல்யாணத்துல உங்களுக்கு என்ன பொறுப்பு குடுத்தாங்க????

//என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?//

சரி, சரி, தகவல் வந்துடுச்சு, ஈ.சி.ஆர் ரோட்ல இருக்குற முதல் டோல் கேட்டை தாண்டி ஒரு நர்சரி இருக்குதாம். அங்கதான் வளர்க்கறாங்களாம். போய் வாங்கிக்குங்க, டோர் டெலிவரி பண்ண மாட்டாங்களாம்.

prakash on March 26, 2009 at 3:09 PM said...

//அதுசரி.. என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?//

யாரும் வளர்க்காமல் தானே வளர்ந்த காட்டு ரோஜா வந்து அமைய வாழ்த்துகள் :))

welcome back...

KISHORE on March 26, 2009 at 3:13 PM said...

welcome back friend

வெண்பூ on March 26, 2009 at 3:14 PM said...

கலக்கல் கார்க்கி... ஸீரோ டிகிரி, நல்ல கேள்வி...

//
என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?
//
சூப்பர்..

விஜய் on March 26, 2009 at 3:19 PM said...

onnumae illainalum, cocktail nallathaan irukkupa.......
intha kadaisiya onnu sonneenglae
roja, chedi ithellam thadukka ethavathu vazhi iruntha sollungalaenpa

Anbu on March 26, 2009 at 5:26 PM said...

நன்றாக இருக்கிறது அண்ணா

கடைசி வரிகள் மிக அருமை அண்ணா....

Anonymous said...

\\ தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?//

மிக அருமை ...

அந்த ரோஜாவுக்கும் புது இடத்தில் வளர்வது பற் றிய பயம், குழப்பம், தயக்கம் இப்படி பல உண்ர்வுகள் மத்தியில் தான் நிச்சயமாக வளரும்

Sinthu on March 26, 2009 at 7:57 PM said...
This comment has been removed by the author.
Sinthu on March 26, 2009 at 8:06 PM said...

"என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?"

யாராவது வளர்க்காமலா விட்டிருப்பாங்க.. வளத்திருப்பாங்க தானே..

அத்திரி on March 26, 2009 at 8:18 PM said...

சகா மீண்டும் வருக .....அந்தக் கடேசி வரிகள் அருமை...

pappu on March 26, 2009 at 9:21 PM said...

சகா, தினமும் சும்மா பூட்டின கடைய பாத்து வெறுத்து போய்டேன். அப்பொ ஒரு Im backஉடன் கடைய ஆரம்பிங்க!

கார்க்கி on March 26, 2009 at 9:38 PM said...

நன்றி அசோசியேட், துஷா

**********************8

// லக்கிலுக் said...
kadaisi paththi kalakkal
//

நன்றி சகா. உங்க புதிய ஃபோட்டோ அருமை.

*********************
@ஸ்ரீமதி,
//யாராவது ஒரு ஏமாந்த தோட்டக்காரரா தான் இருக்கும்... ;)))))))))
சாரி சொல்லாம இருக்க முடியல... :((//

ஏன் சொல்ல மாட்ட? உனக்கு இருக்கு..

****************

@நான் ஆதவன்,

ஆமாம் சகா.ரசிகர்களை சொல்லலாம் :))

**************
@கேபிள் சங்கர்,

அது யாருன்னுதான் தெரியல..

Suresh on March 26, 2009 at 9:39 PM said...

intha vaigal onnu onnu muthukkal arumai


தங்கையின் திருமணம் நல்லபடியாக நடந்தது. இதுவரை சில திருமணங்களுக்கு சென்றிருந்தாலும் அருகிலிருந்து நடத்தியது இதுதான் முதல் முறை. அந்த அனுபவங்களை சிலப் பதிவுகளாக எழுதலாம் என்றிருக்கிறேன். 24 மணி நேரத்தில் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது. பூத்துக் குலுங்கும் ரோஜாச் செடியை வேரோடு பிடுங்கி வேறொருத் தோட்டத்தில் வைப்பது மட்டுமல்லாமல், அங்கேயும் பூக்க வேண்டும் என்கிறார்கள். நட்டு வைத்துவிட்டு வீடு திரும்பியதும் பூவைக் காணாமல் வெறிச்சோடியிருக்கும் நம் தோட்டம். அதுசரி.. என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?

கார்க்கி on March 26, 2009 at 9:44 PM said...

@தராசு,

தல சென்னை நம்பர் ட்ரை பண்ணிங்களா?

***************
@பிரகாஷ்,

நல்ல வாழ்த்துங்க..

*****************
நன்றி கிஷோர்

***************

நன்றி வெண்பூ. யாருமே சந்தேகத்த தீர்த்து வைக்க மாட்டறாங்க

***************
@விஜய்,

வழியா? இன்னும் 50 வருஷத்துக்கு இல்லைங்க

**************

நன்றி அன்பு

***************
@விஜே,

என்னால் முடிந்த வரை அந்த ரோஜா செடியை இயல்பு கெடாமல் நடத்துவேங்க

******************
நன்றி சிந்து

*****************8
நன்றி அத்திரி

************

பப்பு.. ரொம்ப தாங்க்ஸ்ப்பா

Karthik on March 26, 2009 at 9:52 PM said...

//சீக்கிரம் நன்றிக்கு பதிலா வேற ஒரு வார்த்தை கண்டுபிடிங்கப்பா

தேங்க்ஸ்???

//அவர்கள் அறிவாளிகள் தான். இன்னும் சில தினங்களில் என்னுடைய பார்வையை பதிவு செய்கிறேன்.

நீங்க ஒரு இன்டெலெக்சுவல் மாதிரி பேசுறீங்க கார்க்கி! :))

//என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?

பின்றீங்கபா...! :)

சரவணகுமரன் on March 26, 2009 at 11:25 PM said...

கடைசி வரி சூப்பர்

தமிழ் பிரியன் on March 27, 2009 at 1:13 AM said...

உங்க வீட்டு தோட்டத்துக்கான ரோஜாச் செடி.. கலக்கல்!

தமிழ் பிரியன் on March 27, 2009 at 1:13 AM said...

:) 50!

கீழை ராஸா on March 27, 2009 at 2:36 AM said...

//என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?//

இப்ப புரியுது ஏன் இந்த தலைப்பு என்று...

தாரணி பிரியா on March 27, 2009 at 8:22 AM said...

வாங்க சகா வாங்க

கார்க்கி on March 27, 2009 at 11:50 AM said...

நன்றி கார்த்திக், கீழை ராஸா, சரவணகுமரன், தமிழ்பிரியன், தா.பி :))

கணினி தேசம் on March 27, 2009 at 6:43 PM said...

சகா, விடுமுறையில் எங்கள் தொல்லையில்லாமல் மழிவாக இருந்திருப்பீர்கள் (நாங்களும்தான் ஹி.ஹி).

முதல் பதிவுலையே விவாதங்கள் துங்கரமாதிரி இருக்கு.. பட்டைய கிளப்புங்க.

//. அதுசரி.. என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?//
உங்களை பல ரோஜா தோட்டங்களில் நீர் ஊற்றிக்கொண்டிருந்தா தகவல்.. நிஜமா?

வாழ்த்துகள்.
:))

ஸ்ரீதர் on March 27, 2009 at 9:16 PM said...

வாங்க பாஸ் ..

rathnapeters on March 28, 2009 at 12:18 AM said...

உங்கள் உதாரணம் ஒரு ரோஜா செடியாக இருப்பது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது, ஏன் என்றால் முள் இல்லாத ரோஜா செடி இருக்காது என்பதனால். ஒரு மல்லிகையோ முல்லையோ, கனகாம்பரமோ சாமந்தியாகவோ இருந்து விட்டு போகட்டுமே......

லவ்டேல் மேடி on March 28, 2009 at 3:23 PM said...

// ஆனால் பதிவுலகிலும் விஜயை ரசிப்பவர்கள் தான் அதிகம். //
ஹி......ஹி......ஹி......ஹி......ஹி......ஹி......!!!


போங்கோ தம்பி.... உங்குளுக்கு எப்பவுமே தமாசுதான்.......!!!!!!


// தங்கையின் திருமணம் நல்லபடியாக நடந்தது. //


நெம்ப சந்தோசமுங்கோ தம்பி....!!


// அதுசரி.. என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ? //


அட தம்பி.... இன்னுமும் வெயிடிங் லிஸ்ட்டா ........??!!??


கவலைய உடுங்கோ தம்பி......!!! நீங்க மட்டும் ம்ம்.... சொல்லுங்கோ .........
எங்க தங்கத் தலைவி....


காவியத் தென்றல்.....


கொடியிடையாள்.......சொப்பன சுந்தரி......மின்னும் பைங்கிளி......
கின்னார தும்பி புகழ் ...............

சகிலா மேடத்தோட சாதகத்த வேணுமுன்னா வாங்கித்தாறேனுங்கோ தம்பி....!! உங்குளுக்குமும் .... அம்முனிக்கும்......... சோடி பொருத்தம் நெம்ப சூப்பரா இருக்குமுங்கோ தம்பி........!!!

புருனோ Bruno on March 28, 2009 at 9:44 PM said...

//கூடவே முள்ளும் வரும் என்று ”ஆபாச” தலைவர் சொல்ல சொன்னார்.//

தா.ஆ.ச.அ

Anonymous said...

தங்கையின் திருமணம் நல்லபடியாக நடந்தது. இதுவரை சில திருமணங்களுக்கு சென்றிருந்தாலும் அருகிலிருந்து நடத்தியது இதுதான் முதல் முறை. அந்த அனுபவங்களை சிலப் பதிவுகளாக எழுதலாம் என்றிருக்கிறேன். 24 மணி நேரத்தில் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது. பூத்துக் குலுங்கும் ரோஜாச் செடியை வேரோடு பிடுங்கி வேறொருத் தோட்டத்தில் வைப்பது மட்டுமல்லாமல், அங்கேயும் பூக்க வேண்டும் என்கிறார்கள். நட்டு வைத்துவிட்டு வீடு திரும்பியதும் பூவைக் காணாமல் வெறிச்சோடியிருக்கும் நம் தோட்டம். அதுசரி.. என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?///

அடேயப்பா! என்ன கவித்துவமான வரிகள்!

சூப்பர்!

 

all rights reserved to www.karkibava.com