Mar 13, 2009

அதிஷா, எம்.எஸ்.கே அண்ட் அனுஜன்யா


போன பதிவிற்கு நினைத்ததை விட பிரமாதமான் ரெஸ்பான்ஸ். நன்றி நண்பர்களே. சில தவிர்க்க முடியாத காரணங்களால் உடனுக்குடன் பதிலிட முடியாமல் போனது. சில நாட்களுக்கு அது சாத்தியமிலை என நினைக்கிறேன். ஆனா பதில் வரும். பதிவாகவே போடுகிறேன்.

*************************************************

திருவல்லிக்கேனி மேன்ஷன். கோவையில் பிறந்தவர் என்றாலும் சென்னை செந்தமிழில் பட்டையைக் கிளப்பும் அதிஷாவும், காதல் பித்தன் எம்.எஸ்.கேவும், பின்நவீனத்துவ பீரங்கி அனுஜன்யாவும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். எதிர்த்துக் கடை ஃபிகரை யார் கரெக்ட் பண்ணுவது என்ற மோதல் நடந்துக் கொண்டிருந்தது.

அதிஷா: இன்னா நைனா? யாரான்டா பிலிம் காட்டற? அவ என் டாவு.

எம்.எஸ்.கே: அன்பை சுமந்துக் கொன்டு வாழ்பவன் நான். அவள் அன்பின் மொத்த உருவம்

அனுஜன்யா: விழியின் வழியில் மொழியின் சுழலில் வழியும் கவிதை அவள். மழலை சிரிப்பும் அழகின் பிறப்பும் அவளின் இடத்தில்.

அதிஷா: இன்னா எழவோ? இன்னொரு தபா அவளப் பத்தி இப்டித் தப்புத் தப்பா பேசின.. மவனே கீசிடுவேன்

எம்.எஸ்.கே: என்ன மனிதர்கள் இவர்கள்? அமிழ்த்துகிற காதலைத் தாண்டி வெளியே வரத் துடிக்கும் பந்து நான். என்னை உதைத்தத் தள்ளத் துடிக்கும் கட்டை நீங்கள்.

அதிஷா: மவனே அப்டியே கட்டையால அட்ச்சேன் வை. வாயி வெத்தலப்பாக்கு போட்டுக்கும். இன்னாடா பெர்சா சொல்ட்ட நீ? அவள பத்தி நான் சொல்றேன் கேளு.

சோடா விக்கும் சொக்க தங்கமே ‍- கோலி

சோடா விக்கும் சொக்க தங்கமே

என்னை நீ பார்த்தாலே விக்குமே

பாழா போன மனசுக்கு வலிக்குமே

சொன்னா சொன்னா கேளு

இனிமே நீ என்னோட ஆளு

எம்.எஸ்.கே: குவளைக்குள் அடைத்து வைக்கப்பட்ட

வெறும் நீரென என் காதலை எண்ணிவிடாதே

உள்ளுக்குள் வெடிக்க தயாராயிருக்கும்

வாயுவைப் போன்றது அது

அனுஜன்யா: விடலைகளின் பார்வைகளால்
நிராகரிக்கப்பட்ட பெண்ணொன்று
அண்டைவீட்டு சாளரத்திலிருந்து
தஞ்சமடைந்தது என்னிடம்;
விலக மறுத்த முகம்
கவரவில்லையெனினும்
இலயிக்கத்துவங்கியது மனம்

அதிஷா : தபாரு. முட்ஞ்சா தமில்ல சொல்லு. இல்லீன்னா போய்ட்டே இரு..உன் மூஞ்சில என் லெஃப்ட் ஹேண்ட வைக்க.

அனுஜன்யா: உச்சியிறங்கும் போதில்
யாருமற்ற மேற்கின் நிசப்தம்
பின்னிரவின் பேரெழுச்சிக்குமுன்
சோம்பல் முறித்த சிற்றலைகள்
பிரிக்கப்படும் பொட்டலத்திற்கு
கூடத் துவங்கிய காகங்கள்;

அதிஷா: எப்பிதான் ஒரு அர்த்தமும் இல்லாம பாரா பாராவ எய்தி தள்றியோ நீ. போட்டி மாமு. அவ அய்க பத்தி மூனு பேரும் பாடுவோம். யார்து சோக்கா கீதுனு அவ்ளே சொல்ட்டும். டீலூ ஓக்ககேவா?

எம்.எஸ்.கே: நான் தயார், என் கவிதையை கேளுங்கள்

ஒரு பெண்ணைப் பார்க்கவென்று
சொல்லித்தான்
என்னை அழைத்துவந்தனர்,
உன்னைப்பார்ப்பேன் என்று
நான் நினைக்கவுமில்லை.!

அதிஷா: இன்னா நைனா இது? நீ வேலைக்காவ மாட்ட. இத்த கேளு.

மச்சான் பாடப் போறேன் கானா

உன்க்கு மத்ததெல்லாம் வேனா

உன் லிப்ஸ்தான் உனக்கு பேனா

அதுல இங்க் என்ன ஸ்பெஷல் தேனா?

எம்.எஸ்.கே: ம்ஹூம். சார் நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க.

அனுஜன்யா: ரகசியங்கள் கட்டவிழ்க்கும்
தருணங்கள் வந்துவிட்டதென்றாள்
விகாரமாயிருப்பினும்
பின்னாட்களின் நிம்மதி நிமித்தம்
அவள் இறக்கிவிட்ட பாரங்கள்
பெரும் பொருட்டல்லவெனினும்
தைரியத்தின் உச்சகட்டமாக
அவள் பார்த்தவைகள் என்னளவில்
சுயநலங்களும் சாகசங்களில்
விருப்பமின்மையும் மட்டுமே

அதிஷா: தபாரு. நீயும் நானும் ரவுடி ரேஞ்சுக்கு யூத்னு சொல்ட்டு திரியற. கவிதையும் என்ன மாதிரி ஷோக்கா எழுத தெர்ல. டீசண்ட்டா ஒதுங்கிக்கோ. இன்னா நான் சொல்றது?

அனுஜன்யா:

பேச்சுக்குமிழியின்
முட்டைகளுடைத்தவனுக்கு
எனது முத்தங்கள்
திரையின் பின்னாலிருந்து
மொழியுமிழ்தலென்பது
சுய புணர்வையொத்தது
பேச்சுக்களற்ற வெளி அபாயகரமானதென
எவன் சொன்னது
மெளனங்களின் உன்னதங்கள்
கலவியின் கூட்டினை திறக்கவல்லது...

அதிஷா : சாமீ.. எனக்கு அந்தப் பொண்ணும் வோணாம். இவனும் வோணாம். இப்டியே சாவடிச்சிடுவான்.

எம்.எஸ்.கே: நாமிருவரும்
சேர்ந்து நனைவதற்காகவே
இன்னும் சில
அழகான மழைகள்
மேகங்களுக்குள்ளேயே காத்திருக்கின்றன.
சீக்கிரம் வா..
-0-
ஆனால் எதிர்ப்பார்ப்புகளேதுமின்றி வா..
உனக்கென்று கொடுக்க
என்னிடம் இருப்பதெல்லாம்
அளவற்ற நேசமும்
குறைவற்ற முத்தங்களும் மட்டுமே.

அதிஷா: இது கொஞ்சம் சுமார்ப்பா. நீ காம்பெடிஷன்ல கீற. ஆனா அவன அடிச்சு துரத்திடு. இன்னொரு தபா என் கண்ல பட்டான் மவனே டாராந்துடுவான்.

இருவரின் கவிதயைப் படித்த சோடக் கடை ஃபிகர்,

சோடா விக்கும் சொக்க தங்கமே ‍- கோலி

சோடா விக்கும் சொக்க தங்கமே

என்னை நீ பார்த்தாலே விக்குமே

பாழா போன மனசுக்கு வலிக்குமே

சொன்னா சொன்னா கேளு

இனிமே நீ என்னோட ஆளு

பாடலை தேர்வு செய்து விட, அதிஷா ஆனந்தக் கூத்தாடுகிறார். வழக்கம் போல சோக கவிதை எழுதுகிறார் எம்.எஸ்.கே.

50 கருத்துக்குத்து:

prakash on March 13, 2009 at 10:06 AM said...

1 stuuu

prakash on March 13, 2009 at 10:07 AM said...

//சோடா விக்கும் சொக்க தங்கமே

என்னை நீ பார்த்தாலே விக்குமே//

எது விக்கும் சோடாவா :)))

Anbu on March 13, 2009 at 10:08 AM said...

me the 3rd

prakash on March 13, 2009 at 10:11 AM said...

//நிராகரிக்கப்பட்ட பெண்ணொன்று
அண்டைவீட்டு சாளரத்திலிருந்து//

அனுஜன்யா உனக்கு பக்கத்துக்கு வீடா?
சாளரம் அவருக்கு அண்டை வீடா?

Anbu on March 13, 2009 at 10:12 AM said...

வெற்றி வெற்றி அதிஷா அண்ணனுக்கே!!!

சைட் அடிப்பதில் வெற்றி பெற்ற அதிஷா அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க

prakash on March 13, 2009 at 10:15 AM said...

கலாய்ப்பதற்காக நீ எழுதும் பின்னவீனத்துவ கவிதைகள்
உண்மையிலே நல்லா இருக்குப்பா.

narsim on March 13, 2009 at 10:24 AM said...

அனுஜன்யா பேசுவது போல் வரும் வரிகள் ஜம் ரகம்.

ஸ்ரீமதி on March 13, 2009 at 10:28 AM said...

:)))))))Where is MSK and Anujanya anna?? :))))))))

அனுஜன்யா on March 13, 2009 at 10:54 AM said...

:)))))))))))))))

ROTFL

:))))))))))

தமிழ் பிரியன் on March 13, 2009 at 10:57 AM said...

கலக்கல் கார்க்கி!

அத்திரி on March 13, 2009 at 11:01 AM said...

சகா பின்னி பெடலெடுத்துட்ட... ஹாஹாஹா........

அனுஜன்யா on March 13, 2009 at 11:01 AM said...

கார்க்கி, அதிஷா வந்த போது நீ போயாச்சே! உனக்கு யார் சொன்னது? உண்மையிலேயே அதிஷா என்ன அப்பிடித்தான் பாத்தாரு. அவரு என்னப் பாத்து, வுட்ட லுக்குல, நான் பயந்து, லக்கி லுக் பின்னாடி ஒளிந்து கொண்டேன் :)

எனக்கு அடி விழுந்தாலும்.... MSK..... ஹா ஹா ஹா! Really hilarious!

அனுஜன்யா

மண்குதிரை on March 13, 2009 at 11:09 AM said...

வந்தேன் நண்பா !

ரசித்தேன்

gayathri on March 13, 2009 at 11:18 AM said...

ingayachi mskva konjam santhosama iruka vedungalenpa

வித்யா on March 13, 2009 at 11:22 AM said...

:))

நையாண்டி நைனா on March 13, 2009 at 11:29 AM said...

கவிதை எல்லாம் சூப்பர்.
நான் உங்க கிட்டே ட்யூசன் வரலாம்னு இருக்கேன். உங்க வசதியை சொல்லுங்க.

கணினி தேசம் on March 13, 2009 at 11:35 AM said...

அசத்திட்ட மாமு!

இத்த படிச்சா "அதிஷா, எம்.எஸ்.கே அண்ட் அனுஜன்யா " இந்த மூணு பேரும் மெர்சலாகிப் பூடுவாங்க.

கணினி தேசம் on March 13, 2009 at 11:36 AM said...

// Anbu said...

வெற்றி வெற்றி அதிஷா அண்ணனுக்கே!!!

சைட் அடிப்பதில் வெற்றி பெற்ற அதிஷா அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க//


ஓ........ ஓ........!!

Kathir on March 13, 2009 at 11:41 AM said...

சூப்பர் சகா...

Anonymous said...

:)

ஆயில்யன் on March 13, 2009 at 12:02 PM said...

கலக்கல் :)))

சூப்பரான கூட்டணியும் கூட....!

ரமேஷ் வைத்யா on March 13, 2009 at 12:10 PM said...

சகோ,
அனுஜன்யாவின் பல கவிதைகள் எனக்குப் பிடிக்கும். ஆனால் நீங்கள் எழுதியிருப்பது கேலியாக இல்லாமல் உண்மையிலேயே ரசிக்க வைக்கும் சீரியஸ் கவிதைகளாக இருக்கு. இது வெற்றியா, தோல்வியா?

முரளிகண்ணன் on March 13, 2009 at 12:13 PM said...

:-)))))))))))

ஸ்ரீதர் on March 13, 2009 at 12:42 PM said...

hilarious.

முரளிகண்ணன் on March 13, 2009 at 12:55 PM said...

\\ஆனால் நீங்கள் எழுதியிருப்பது கேலியாக இல்லாமல் உண்மையிலேயே ரசிக்க வைக்கும் சீரியஸ் கவிதைகளாக இருக்கு. இது வெற்றியா, தோல்வியா\\

ரிப்பி

பரிசல்காரன் on March 13, 2009 at 1:07 PM said...

இன்னும் முழுசாப் படிக்கலப்பா. ஆனா ஒனக்கு க்ளாஸ விட மாஸ்தான் ஒத்துப் போகுதுன்னு சொல்லிக்கறேன்.

Mahesh on March 13, 2009 at 2:09 PM said...

ஹய்யோ... ஹய்யோ... எம் எஸ் கே வும் அனுஜன்யாவும் பாவம்யா...

கோலி ஜோட கவுஜ ஷோக்கா கீது !!

Karthik on March 13, 2009 at 2:53 PM said...

ha..ha. :)))

எல்லா ஸ்டைல்லயும் பின்றீங்களே எப்படி கார்க்கி???

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் on March 13, 2009 at 3:32 PM said...

..ஸி..க்ஸர்..!!!!!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் on March 13, 2009 at 3:36 PM said...

அட்டகாசம்.. அனுஜன்யாவின் வரிகள் நீ எழுதியதா? அவரிடமிருந்தே லவிட்டியதா? அதுவே அவரோட கவிதைகள் படிச்சா மாதிரி கொஞ்சம் கிர் வரவைத்தது.. அப்படியே. எம்எஸ்கே கலாசல்.. அதிஷாவுக்கே வெற்றி.! (நம்ப லோக்கலுக்கு பிகர குடுத்ததுனால தப்பிச்ச நீ.. இல்ல வுட்டு பீராய்ஞ்சிருப்பேன்..).. ஆமா பெயர்களை பயன்படுத்த பர்மிஷன் வாங்கப்பட்டதா? வெளியுலகம் வராத கல்லுக்குள் தவளையாச்சே எம்எஸ்கே.!

எம்.எம்.அப்துல்லா on March 13, 2009 at 3:45 PM said...

அதகளம்

:))

தமிழன்-கறுப்பி... on March 13, 2009 at 3:53 PM said...

:)

Saravana Kumar MSK on March 13, 2009 at 4:01 PM said...

ஏன் இந்த கொலைவெறி?

//வழக்கம் போல சோக கவிதை எழுதுகிறார் எம்.எஸ்.கே.//
பதிவுகளில் கூட எனக்கு பிகர் செட் ஆகாதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்..

yathra on March 13, 2009 at 4:13 PM said...

மிகவும் ரசிக்கும் படியாய் இருக்கிறது

Saravana Kumar MSK on March 13, 2009 at 4:23 PM said...

//ஸ்ரீமதி said...
:)))))))Where is MSK and Anujanya anna?? :))))))))//

good question..


//gayathri said...
ingayachi mskva konjam santhosama iruka vedungalenpa//

அதானே..


//தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...
வெளியுலகம் வராத கல்லுக்குள் தவளையாச்சே எம்எஸ்கே.!//

ஆதி அண்ணே.. என்ன இதெல்லாம்.. கல்லுக்குள் கிடப்பது, தப்பித்தலுக்கான எத்தனிப்பே..

மிஸஸ்.டவுட் on March 13, 2009 at 4:35 PM said...

கவிதைகள் ரசிக்கும்படி அமைந்து விட்டன.
அவரவரது ஸ்டைலில் வார்த்தைகளைக் கோர்த்து கலக்கலாக ஒரு பதிவு.நல்ல சிந்தனை தான். அனுஜன்யா சொல்வதைப் போல வரும் கவிதைகளின் பூடகத் தன்மை அருமை.அதிஷா வின் சோடா விக்கும் வார்த்தைகளும் நயமே.எம்.எஸ்.கே வரிகளில் கொஞ்சம் சோகம்.மொத்தத்தில் வாசிக்க ரசனையான பதிவு.

pappu on March 13, 2009 at 4:35 PM said...

எல்லா வகையிலயும் கவித பின்னுறீங்களே! எல்லாம் சொந்த சரக்கா!

ஸ்ரீமதி on March 13, 2009 at 5:18 PM said...

//Saravana Kumar MSK said...
கல்லுக்குள் கிடப்பது, தப்பித்தலுக்கான எத்தனிப்பே..//

என்ன கொடுமை சரவணா?? ;)))

ச்சின்னப் பையன் on March 13, 2009 at 5:28 PM said...

:-)))))))))))

அறிவிலி on March 13, 2009 at 5:28 PM said...

மூன்று பேர் பதிவையும் ஒன்றாக படித்தது போல் இருந்தது.

மிக மிக பிரமாதம்...

கிரிக்கெட்டுககு ஒரு தோனின்னா..
பதிவுக்கு ஒரு...

ச.முத்துவேல் on March 13, 2009 at 6:12 PM said...

செம கலாய்ச்சல் நைனா..இன்னாமா எய்திகீற..
ஒரேடியா மூனுபேரு மேரியும் கவிதை எய்தற நீதான் நைனா பெரிய கை.

ரொம்ப நல்லாயிருந்ததுங்க.ரசிச்சு படிச்சேன்.தமிழ் மணம்- நட்சத்திரம்..
வாழ்த்துகள்.

வால்பையன் on March 13, 2009 at 6:55 PM said...

எப்பா
சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சுப்பா!

இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன்!

சகா தூள் கிளப்பிட்டிங்க!

அன்புடன் அருணா on March 13, 2009 at 6:58 PM said...

பாவம்பா...எம்.எஸ்.கே...அழுகுண்ணிப் பையனாக்கீட்டீங்க அவரை...
அன்புடன் அருணா

மாசற்ற கொடி on March 13, 2009 at 9:00 PM said...

அசத்தல் கார்க்கி. அதிசாவின் பார்ட் simply சூப்பர். இதுதான் மாஸ் சாய்ஸ் என்றாலும் உங்களின் உள்குத்தும் நன்றாகவே இருக்கு.

அன்புடன்
மாசற்ற கொடி

Sinthu on March 13, 2009 at 9:42 PM said...

"சோடா விக்கும் சொக்க தங்கமே ‍- கோலி

சோடா விக்கும் சொக்க தங்கமே

என்னை நீ பார்த்தாலே விக்குமே

பாழா போன மனசுக்கு வலிக்குமே

சொன்னா சொன்னா கேளு

இனிமே நீ என்னோட ஆளு "
தாங்க முடியவில்லை...........................

ஸ்ரீதர்கண்ணன் on March 13, 2009 at 11:32 PM said...

சோடா விக்கும் சொக்க தங்கமே

:))))))))))

Anonymous said...

என்னப்பௌ கலக்கறீங்க....

காசிமேடு நைனா கணக்காவும் பேசுற.. கவிதை செந்தமிழ்லயும் கலக்கற... சூப்பர்...

அதும் இந்த வரிகள்..


எம்.எஸ்.கே: நாமிருவரும்
சேர்ந்து நனைவதற்காகவே
இன்னும் சில
அழகான மழைகள்
மேகங்களுக்குள்ளேயே காத்திருக்கின்றன.
சீக்கிரம் வா..
-0-
ஆனால் எதிர்ப்பார்ப்புகளேதுமின்றி வா..
உனக்கென்று கொடுக்க
என்னிடம் இருப்பதெல்லாம்
அளவற்ற நேசமும்
குறைவற்ற முத்தங்களும் மட்டுமே.

அட்டகாசமான கவிதை..

வாழ்த்துக்கள் நண்பா!

அதிஷாவின் அதிரடி கவிதைகளையும் ரசித்தேன்! :)

நிஜமா நல்லவன் on March 14, 2009 at 9:47 AM said...

:))))

தராசு on March 14, 2009 at 10:00 AM said...

தல,

முகிலின் "லொள்ளு தர்பார்" லயும் இந்த மாதிரி மூணு கேரக்டர்களையும் மோத விட்டிருப்பார்.

சேம் ப்ளட், ஆனால் ரசிக்க முடிந்தது.

MayVee on March 14, 2009 at 11:12 AM said...

me th 50

 

all rights reserved to www.karkibava.com