Mar 11, 2009

அமெரிக்கா எனும் அரக்கன்


  உலகமயமாக்கல். முதன் முதலில் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்ட போது என் வயது பத்து. அது காட்டப் போகும் கவர்ச்சியையும் அதனால் விளையப் போகும் பிரச்சினைகளைப் பற்றி யாரிடமோ பேசினார் என் தந்தை. அது மட்டும்தான் எனக்கு நினைவிருக்கிறது. இன்று உலகமயமாக்கிலினால் உருவான ஒரு பணியில்தான் நானிருக்கிறேன். ஆனாலும் அது குறித்த என் பார்வை வேறு மாதியிருக்கிறது.அதைப் பதிவு செய்யவே இந்தப் பதிவு. என் பல மொக்கைகளை பொறுமையாக படித்த நீங்கள் இதையும் முழுவதுமாய் படிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்

   உலகமயமாக்கல் என்பதே புதிதல்ல. முதலாளித்துவத்தின் நீட்சி, அதன் ஒரு பகுதி என்பதே சரியாகும். சக்தி வாய்ந்த ஒரு சில நாடுகளின் விருப்பத்திற்கேற்ப உலகின் மொத்த பொருளாத முறையையும் ஒரே மாதிரி ஆக்குவதே உலகமயமாக்கல். சக்தி வாய்ந்த நாடுகள் என்ற போதே அமெரிக்காவிற்கு இதில் கிடைக்கும் நன்மைகளும் அதற்கு அவர்கள் செய்யும் உட்டாலக்கடி வேலைகளும் உங்களுக்கு புரிந்திருக்கும். உலகமயமாக்கல் என்பது வெறும் பொருளாதாரத்தை முன்னிறுத்தி மட்டுமே அல்ல, அரசியல், கலாச்சாரம் என பல முகங்களை கொண்டது. டாடா நிறுவனம் கோரசை வாங்கியதும், சென்னை தெருக்களில் McDonald’s, KFC இருப்பதற்கும் காரணம் உலகமயமாக்கல் தான்.

   சோவியத் யூனியனின் சரிவும், உலகில் மற்ற பகுதிகளில் இருந்த கம்யூனிஸ நாடுகளின் தோல்வியும் உலகமயமாக்கலை துரிதப்படுத்தின. இதனால் உலகின் சில நாடுகளும், அல்லது அந்தந்த பிராந்தியத்தில் செல்வாக்குப் பெற்ற நாடுகளின் விருப்பபடிதான் மற்ற நாடுகளும் நடக்க வேண்டும். இது படிப்படியாக எப்படி சாத்தியமாயிற்று என்பதை விளக்கமாக தெரிந்துக் கொள்வதை விட இதனால் இனி உருவாகப் போகும் தீமைகளை நாம் புரிந்துக் கொள்வதே நம்மை இந்த அரக்கனிடம் இருந்து காப்பாற்றும்.

ஊரான் ஊரான் தோட்டத்துல

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்க சொல்லி

காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்” என்றும்

வேட்டிய உருவறான் டங்கல்

அத ஃபோட்டோ புடிக்கிறான் அமெரிக்கா அங்கிள்

என்றும், 1993ல் நரசிம்மராவின் டங்கல் ஆதரவுக்கு எதிராக ம.க.இ.க வினர் பாடி வெளிட்ட இசைத்தட்டு இப்போது கிடைக்கிறதா என்று வினவு என்ற பெயரில் எழுதி வரும் மகஇகவினர்தான் சொல்ல வேண்டும். அப்போது எனக்கு 11 வயது. ஆனால் எனக்கே புரியும்படி பல வரிகள் கொண்ட பாடல் அது. இன்று கம்ப்யுட்டர் பத்தாயிரம் ரூபாய்க்கும், அரிசி 32 ரூபாய்க்கும் கிடைப்பதற்கு காரணம் இந்த அரக்கன்தான். அமெரிக்க துரை சொல்லும்படி ஆடுவதில் அனைவரையும் மிஞ்சி விட்டார் சிதம்பரம். தற்போது உலகை ஆட்டிப் படைக்கும் ரெசிஷனில் இந்தியா ஓரளவிற்கு தப்பி பிழைக்கக் காரணம் கம்யூனிஸ்ட் என்று சொன்னால் எத்தனை பேர் ஒத்துக் கொள்வார்களோ? அதற்காக மீண்டும் கம்யூனிசம்தான் தேவை என்று சொல்ல வரவில்லை. கம்யூனிசத்தை சற்றே மாற்றி புதியதொரு வழியில் செல்லும் சில நாடுகளைப் போல செய்யலாமே.

    உலகின் மொத்த வேலை நேரத்தில் மூன்றில் இரண்டு பங்கு நேரம் பெண்கள் வேலை செய்து,உலகம் உற்பத்தி செய்யும் உணவில் பாதியை உற்பத்தி செய்கிறார்கள்.ஆனால் அவர்கள் உலக வருமானத்தில் 10% மட்டுமே பெறுகிறார்கள். வந்தனா என்ற இந்திய ஆய்வாளர் இப்படி சொல்கிறார் " உலகமயமாக்கல், கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னாலும், அவை அவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. அவர்களின் தொழிலை அழித்துவிட்டு அவர்களுக்கு பாதுக்கப்பற்ற, அநியாய சம்பளத்தில் வேலை தந்திருப்பதை எப்படி சாதனை என்று சொல்ல முடியும்?”

   தொழிற்துறை இந்த உலகமயமாக்கலால் வளர்ந்து இருப்பதாக சொல்கிறார்கள் மன்மோகன் சிங்கும் சிதம்பரமும். உண்மை அதுவல்ல. இந்திய நிறுவனங்களை அழித்து உலக நிறுவனங்களே வளர்ந்து இருக்கின்றன. என்றைக்கு இருந்தாலும் இவர்களால் இந்தியாவிற்கு ஆபத்தே. யோசித்துப் பாருங்கள். 1990களில் இருந்த கோல்ட் ஸ்பாட்ட் என்ன ஆனது? கோத்ரெஜின் இன்றைய சந்தை பங்கு என்ன? உலகமயமாக்கலிலும் பல நன்மைகள் உண்டு. இல்லாத்தை இறக்குமதி செய்து, அதிகம் இருப்பதை ஏற்றுமதி செய்தால் நன்மை உண்டு. ஆனால் 80% விவசாயம் செய்யப்படும் நாட்டில், எத்தனை சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது? ஏற்கனவே நம்மிடம் இருக்கும் பொருட்களையே இறக்குமதி செய்ய சொல்லி அமெரிக்கா சொன்னால், எல்லாத்தையும் ஆட்டுகிறார்கள் நம்ம அரசியல்வாதிகள்.

   அமெரிக்காவின் இந்த செயலை எதிர்க்க எந்த நாடும் முன் வரவில்லையா என்ன? க்யுபாவும், வெனிசுலாவும் அதற்கு சரியா உதாரணம். அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு உள்ளானாலும் அவர்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. க்யூபா என்றால் ஃபிடல் காஸ்ட்ரோ என்பதை அறிவோம். வெனிசுலாவை வழி நடத்துபவர் யார்? இவர்கள் இருவரோடு லத்தின் அமெரிக்காவின் முக்கிய தலைவரும், எனக்கு மிகவும் பிடித்த சே குவேராவைப் பற்றியும் நான் அறிந்ததை அடுத்தப் பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

79 கருத்துக்குத்து:

Jenbond on March 12, 2009 at 9:29 AM said...

me the first

அத்திரி on March 12, 2009 at 9:30 AM said...

வட போச்சே

Jenbond on March 12, 2009 at 9:34 AM said...

\\வெனிசுலாவை வழி நடத்துபவர் யார்? இவர்கள் இருவரோடு லத்தின் அமெரிக்காவின் முக்கிய தலைவரும், எனக்கு மிகவும் பிடித்த சே குவேராவைப் பற்றியும் நான் அறிந்ததை அடுத்தப் பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.\\

சகா அப்படின்னா இனிமேல் பல நல்ல பதிவுகளை (மொக்கை இல்லாமல்) எதிர் பார்க்கலாம். கலக்குங்க சகா சே குவேராவைப் பற்றி நிறைய எழுதுங்க சகா.

Jenbond on March 12, 2009 at 9:36 AM said...

\\வட போச்சே\\
வேற எதுவும் கிடைத்ததா?

ஸ்ரீமதி on March 12, 2009 at 9:47 AM said...

me the 5th :):)

தராசு on March 12, 2009 at 9:47 AM said...

சரி, சரி எதோ உருப்படற வழியை யோசிச்ச மாதிரி தெரியுது

ஆ.ஞானசேகரன் on March 12, 2009 at 9:51 AM said...

//ஓரளவிற்கு தப்பி பிழைக்கக் காரணம் கம்யூனிஸ்ட் என்று சொன்னால் எத்தனை பேர் ஒத்துக் கொள்வார்களோ? அதற்காக மீண்டும் கம்யூனிசம்தான் தேவை என்று சொல்ல வரவில்லை. கம்யூனிசத்தை சற்றே மாற்றி புதியதொரு வழியில் செல்லும் சில நாடுகளைப் போல செய்யலாமே.//

நான் வன்மையாக ஒத்துக்கொள்கின்றேன்......

narsim on March 12, 2009 at 10:02 AM said...

நட்சத்திர பதிவு சகா.. பெருமையாய் இருக்கிறது..மிக நல்ல பதிவு.. சில கருத்துக்கள் விவாதப் பொருளாக இருந்தாலும் சொல்ல வந்ததை நன்றாக பதிவிட்டிருக்கிறீர்கள் சகா.. வாழ்த்துக்கள்..//இந்திய நிறுவனங்களை அழித்து உலக நிறுவனங்களே வளர்ந்து இருக்கின்றன. //

உண்மை.. கோக்,பெப்ஸிகளில் காளிமார்க்குகள் காணமல்போனதே..

நல்ல பதிவு சகா

Cable Sankar on March 12, 2009 at 10:09 AM said...

//உண்மை.. கோக்,பெப்ஸிகளில் காளிமார்க்குகள் காணமல்போனதே.. //

ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்...

டக்ளஸ்....... on March 12, 2009 at 10:19 AM said...

அட..ஸ்டார் ஆனதுல பொறுப்பு வந்துடுச்சா...
பாத்துங்க..ஓவரா பொங்கிறாதீங்க கார்க்கி அண்ணே....

prakash on March 12, 2009 at 10:21 AM said...

கார்க்கி நல்ல மாற்றம் :))

//ஓரளவிற்கு தப்பி பிழைக்கக் காரணம் கம்யூனிஸ்ட் என்று சொன்னால் எத்தனை பேர் ஒத்துக் கொள்வார்களோ?//

இது எப்படி என்று கொஞ்சம் விளக்க முடியுமா?

அத்திரி on March 12, 2009 at 10:31 AM said...

//Cable Sankar said...
//உண்மை.. கோக்,பெப்ஸிகளில் காளிமார்க்குகள் காணமல்போனதே.. //

ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்...//


ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

அருமையா அலசியிருக்க.. ஆமா யார் எழுதி கொடுத்தா..

Bleachingpowder on March 12, 2009 at 11:00 AM said...

உலகமயமாக்கலை பொருத்த வரை தீமையை விட நன்மையே நாம் அதிகம் பெற்றிருக்கிறோம் தல சாரி தோழரே :).

என்ன ஒரு லிட்டர் பாலின் விலையும் தண்ணீரின் விலை ஏறகுறைய ஒரே மாதிரி இருப்பது தான் உறுத்துகிறது.

1995வரை இருந்த வேலையில்லா திண்டாட்டம் உலகமயமாக்கலுக்கு பிறகு குறைந்திருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உன்மை(உபயம்: வெள்ளக்காரன் கத்து கொடுத்துட்டு போன இங்கிலிபிசு).

முன்பெல்லாம் திறமை இருக்கும் ஆனால் வாய்ப்பு இருக்காது, ஆனால் இப்பொழுது நிலமை அப்படியில்லை, கொஞ்சம் திறமை, ஆங்கிலம் தெரிந்தால் எப்படியும் பிழைத்து கொள்ளலாம்.

தமிழ் எம்.ஏகள் கவணத்திற்கு :-இங்கே பெங்களுரில் பெருபாலான ஐடி கம்பெணிகளில் கண்ணடம் கற்று கொள்ள விரும்புகிறவர்களுக்கு வெளியில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து வகுப்பெடுக்கிறார்கள், அவர்களுக்கு இரண்டு மணி நேர வருமாணம் மூவாயிரம் ருபாய். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று நிறுவனங்களுக்கு போய் வருவார்.அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது தான் தெரிந்தது அவர் அரசு பணியில் பணிபுரிந்ததாகவும், ஐடியின் அசுர வளர்ச்சி கண்டு விப்ரோ, டிசிஸ், இன்போசிஸ் போன்ற நிறுவனங்களை அனுகி வாய்ப்பு பெற்று இப்பொழுது, அரசு பணியை ராஜினாமா செய்து இப்பொழுது இதையே முழு நேர தொழிலாக செய்து வருகிறார்.

கார்க்கி on March 12, 2009 at 11:12 AM said...

@ஜென்பாண்ட்,

அப்ப மொக்கை வேஸ்ட்டுன்னு சொல்றீங்களா சகா???????? ச்சும்மா..

****************
@அத்திரி,
//
அருமையா அலசியிருக்க.. ஆமா யார் எழுதி கொடுத்தா.//

பப்ளிக் பப்ளிக்

****************
ஐந்தாம் இடம் பிடித்த ஸ்ரீ வாழ்க

*************
// தராசு said...
சரி, சரி எதோ உருப்படற வழியை யோசிச்ச மாதிரி தெரியு//

இதுக்கான பதிலை பதிவா போடரேன் தல..

Thusha on March 12, 2009 at 11:13 AM said...

நல்ல பதிவு அண்ணா
இப்படி கொஞ்சம் பொதுவானா விடையங்ககைப் பற்றியும் எழுதுங்களேன் வாசிக்கும் எங்களுக்கும் கொஞ்சம் அறிவு வளரும் இல்ல lol

கார்க்கி on March 12, 2009 at 11:17 AM said...

// narsim said...
நட்சத்திர பதிவு சகா.. பெருமையாய் இருக்கிறது//

பயந்துட்டே இருந்தேன் தல. சுமார்தான் என்றாலும் இது மாதிரி பதிவுக்ள் எழுத தொடங்குவதை ஆதரித்ததற்கு மிக்க நன்றி..

************8
வாங்க சங்கர்ஜி

************

// டக்ளஸ்....... said...
அட..ஸ்டார் ஆனதுல பொறுப்பு வந்துடுச்சா...
பாத்துங்க//

இதை என் 200வது பதிவா போட இருந்தேன். அதுக்குள்ள ஸ்டார் அழைப்பு வர இப்ப போட்டேன்..

*************8
// prakash said...
கார்க்கி நல்ல மாற்றம் :)//

நன்றி சகா

////ஓரளவிற்கு தப்பி பிழைக்கக் காரணம் கம்யூனிஸ்ட் என்று சொன்னால் எத்தனை பேர் ஒத்துக் கொள்வார்களோ?//

இது எப்படி என்று கொஞ்சம் விளக்க முடியு//

நிச்சயம். ஆனா இன்னைக்கு டைம் இல்ல சகா.. நான் ரொம்ம்ம்ம்ப பிசி

****************

@ப்ளீச்சிங்க்,

நல்ல கேளிவிகள். நீங்க ஐ.டி என்ற ஒரு துறையை விட்டு வெளில வாங்க. விவசாயம்தான் இந்தியாவின் உயிர். உலகமயமாக்கல் அதற்கு என்ன செய்தது? நல்லதொரு விவாதத்தை தொடங்கியிருக்கிங்க. ஆனா எதிர்பாராமல் நான் வேற ஒரு வேலையா போறேன். மற்றொரு நாளில் விவாதிப்போம். இல்லைன்னா வேற யாராவது பதில் சொல்லுங்கப்பா

Karthikeyan G on March 12, 2009 at 11:19 AM said...

// சென்னை தெருக்களில் McDonald’s, KFC இருப்பதற்கும் காரணம் உலகமயமாக்கல் தான்.//

US, UK-வில் சரவண பவன் இருப்பதற்ற்க்கு காரணமும் globalisation தான்.

//ஆனால் 80% விவசாயம் செய்யப்படும் நாட்டில், எத்தனை சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது? ஏற்கனவே நம்மிடம் இருக்கும் பொருட்களையே இறக்குமதி செய்ய சொல்லி அமெரிக்கா சொன்னால், எல்லாத்தையும் ஆட்டுகிறார்கள் நம்ம அரசியல்வாதிகள். //

அமெரிக்காவின் கடன் அதிகரித்ததற்கே காரணம் globalisation தான். Globalisation னால் அதன் விவசாய ஏற்றுமதி , இதர ஏற்றுமதி வெகுவாக குறைந்துவிட்டது. காரணம் இந்திய, பிரேசில், அர்ஜென்டினா நாடுகள் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்தது தான்.

உலகமயமாக்கலால் காரணமாக அமெரிக்க நன்மை அடைந்தது என்பது முழு உண்மை இல்லை.


அமெரிக்காவில் இருக்கும் கட்டற்ற சுதந்திரம் வேறு எந்த கம்யூனிச நாடுகளில் இருக்கிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் on March 12, 2009 at 11:32 AM said...

நீங்கள் சொல்லியுள்ள கருத்துகளோடு ஒத்துப் போகிறேன், சிலவற்றில் கொஞ்சம் வேறு பார்வைகள் உண்டு. ஆனால், அது அவ்வளவு முக்கியமல்ல - நீங்கள் இதுபோன்று சீரியஸ் பதிவுகளை எழுதுவதை நான் ஆதரிக்கிறேன்.

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் on March 12, 2009 at 11:43 AM said...

தவறு நேராத படிக்கு மேலோட்டமாக சப்ஜெக்ட் கையாளப்பட்டுள்ளது எழுத்துத்திறமையை காட்டுகிறது. சொல்லப்பட்ட விஷயங்கள் பாராட்டுக்குரியது.

Lancelot on March 12, 2009 at 11:48 AM said...

super appu...ithuthaan posttu ...i am waiting to know about my favorite Che as well...

prognostic on March 12, 2009 at 11:54 AM said...

// இல்லாத்தை இறக்குமதி செய்து, அதிகம் இருப்பதை ஏற்றுமதி செய்தால் நன்மை உண்டு. //

இப்படி இறக்குமதி ஏற்றுமதி கழித்தல் கூட்டலை வைத்து ஒரு பொருளாதாரத்தை அளவிடுவது உலகமயமாக்கல் சூழலில் தவறான அணுகுமுறையாகும்.

எடுத்துக்காட்டுக்கு இலங்கை இந்திய பொருளாதார உறவுகளை இறக்குமதி-ஏற்றுமதி ஊடாக பார்த்தால் இலங்கை இந்தியாவுடனான ஏற்றத்தாழ்வு குறைந்து இருவரும் சம பலமுள்ளவர்கள் போன்று தோற்றம் தரும். ஆனால் விசயம் எப்படி வேலை செய்கிறது என்றால், இலங்கையில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்து அந்த பொருட்கள் இந்தியாவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


இதே போலத்தான் பன்னாட்டு மூலதனம் இந்திய வளங்களை சுரண்டுவதும். எனவே இறக்குமதி, ஏற்றமதி கழித்தல் கூட்டல் கணக்கு சரியான முறையல்ல.


மூலதனத்தின் உலகமயமும் அதன் தேசிய தன்மையும்தான் முதலாளித்துவ பொருளாதாரத்தை புரிந்து கொள்ள சரியான துருப்புச் சீட்டு.

முக்காலமும் உணர்ந்த முனிவன்

கார்க்கி on March 12, 2009 at 11:55 AM said...

//உலகமயமாக்கலால் காரணமாக அமெரிக்க நன்மை அடைந்தது என்பது முழு உண்மை இல்லை. //

உலகமயமாக்கலை ஏகபோகமாக நடைமுறைபடுத்திய அமெரிக்காவிற்கே நன்மை இல்லை என்றால் மத்தவங்க கதி? Free market-nu சொல்லிட்டு இப்போ நஷ்டமடையும் தனியார் கம்பெனிகளை பொதுமக்கள் வரிப்பணத்தில் மீட்கிறார்கள். அதேபோல, இன்று அமெரிக்கவில் உள்ளூர் ஆளுங்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்கிறார்கள். இதுக்கும் Nehruvian Socialism-க்கும் எந்த வித்தியாசமில்லை. இவர்களுக்கு தேவைப்பட்ட மாதிரி பொருளாதாரக் கொள்கைகளை மாற்றுவது எந்த விதத்தில் நியாயம்?


//அமெரிக்காவில் இருக்கும் கட்டற்ற சுதந்திரம் வேறு எந்த கம்யூனிச நாடுகளில் இருக்கிறது.//


இந்தப் பதிவு பொருளாதாரம் சார்ந்த கருத்துக்களைப் பற்றியது மட்டுமே. கலாசாரம் சார்ந்த விடயங்களை வேறொரு சமயம் விவாதிப்போம்.

ஸ்ரீமதி on March 12, 2009 at 12:04 PM said...

நல்ல பதிவு அண்ணா :)))

அனுஜன்யா on March 12, 2009 at 12:43 PM said...

இந்த விஷயங்களை எழுதுவது மகிழ்ச்சியாக மட்டுமில்லாமல் பெருமையாகவும் இருக்கு. ஆனால் ஆதிமூலகிருஷ்ணன் (இவ்வளவ் பெரிய பேரு.. ஹ்ம்ம்) சொல்றது மாதிரி மேலோட்டமா இருக்கு. அப்படி எழுதினாதான் ஓரளவு காயங்களுடன் தப்பித்து வர முடியும் :)

ஸ்ரீதர் நாராயணன்/அதியமான் போன்றவர்களின் தாக்குதலுக்குத் தயார்தானே :)))

இடது சாரியிலிருந்து உனக்கு அமோக வரவேற்பு கிடைக்கும். அப்ப நான்? ஊரு ரெண்டு பட்டா யாருக்கோ கொண்டாட்டம்னு சொல்லுவாங்களே! :)))

அனுஜன்யா

வால்பையன் on March 12, 2009 at 12:52 PM said...

// இன்று கம்ப்யுட்டர் பத்தாயிரம் ரூபாய்க்கும், அரிசி 32 ரூபாய்க்கும் கிடைப்பதற்கு காரணம் இந்த அரக்கன்தான்.//

அரிசி யாருக்கையா வேணும்.
அரிசியை மட்டும் நம்பியிருக்கும் மக்கள் இந்த நாட்டிலெதுக்கு!
நமக்கு கம்பியூட்டர் இருக்கு!
பசிச்சா தின்ன பீசா இருக்கு!
அமெரிக்காவுக்கு சலாம் போடு!
மக்களையெல்லாம் கிடப்புல போடு!

வால்பையன் on March 12, 2009 at 12:54 PM said...

வெனிசுலா அதிபர் பெயர் சாவோஸ்!

அந்த நாட்டு மக்களால் நிரந்தர அதிபராக ஏற்று கொள்ளப்பட்டவர், ஆனால் அவரே அதை வேண்டாம் என எதிர்க்கிறார்!

நம்மளும் இருக்கோமே! நாற்காலிய கெட்டியா பிடிச்சிகிட்டு!

K.R.அதியமான் on March 12, 2009 at 1:08 PM said...

சீரியஸ் பதிவிற்காக வாழ்த்துகள். ஆனால் மேலோட்டமாகவும், cliches நிறைந்ததாகும் இருக்கிறது.

உலகமயமாக்கல் பற்றி எமது 'சீரியஸ்' பதிவுகளில் பதில்கள் உள்ளன :

http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_1502.html

http://nellikkani.blogspot.com/2008/01/blog-post.html

வால்பையன் on March 12, 2009 at 1:13 PM said...

//K.R.அதியமான் said...

சீரியஸ் பதிவிற்காக வாழ்த்துகள். ஆனால் மேலோட்டமாகவும், cliches நிறைந்ததாகும் இருக்கிறது.

உலகமயமாக்கல் பற்றி எமது 'சீரியஸ்' பதிவுகளில் பதில்கள் உள்ளன ://

அதானே பார்த்தேன்
இருபடிகிற இடத்துல ஈயெல்லாம் சுத்துது. கொல்லன இன்னும் காணோமேன்னு!
வந்துட்டாருல்ல!

முரளிகண்ணன் on March 12, 2009 at 1:14 PM said...

தொடருங்கள் கார்க்கி

Joe on March 12, 2009 at 1:42 PM said...

கார்கியோட பதிவா இது?
நல்லதொரு புதிய முயற்சி.

பிழைத்திருத்தம்.
சரியா?!? உதாரணம் --> சரியான உதாரணங்கள்.

கியூபாவில் ரவுல் காஸ்ட்ரோ பதவியேற்று பல மாதங்கள் ஆகிறதே சகா?
Venezuela-வின் அதிபர் ஹுகோ சாவேஸ்.

அறிவிலி on March 12, 2009 at 1:57 PM said...

//இன்று கம்ப்யுட்டர் பத்தாயிரம் ரூபாய்க்கும், அரிசி 32 ரூபாய்க்கும் கிடைப்பதற்கு காரணம் இந்த அரக்கன்தான்.//

இல்லாட்டி நாமெல்லாம் இப்படி பதிவெழுதி உலகமயமாக்கல பத்தி அலச முடியுமா..

இது வளர்ச்சியா என்றால் நிச்சயம் கிடையாது.ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் குறைய வேண்டும்.

Karthik on March 12, 2009 at 2:35 PM said...

நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கீங்க கார்க்கி. எல்லாமே தெரிஞ்சுக்க வேண்டியது. சீரியஸ் பதிவுகளை வரவேற்கிறேன். :))

ரிலாக்ஸ் பண்ணனும் போல இருந்தா அதுக்கும் பதிவு போடுவீங்கள்ல??

Bleachingpowder on March 12, 2009 at 2:41 PM said...

//@ப்ளீச்சிங்க்,

நல்ல கேளிவிகள். நீங்க ஐ.டி என்ற ஒரு துறையை விட்டு வெளில வாங்க. விவசாயம்தான் இந்தியாவின் உயிர். உலகமயமாக்கல்//

மறுக்கவில்லை. உலகமயமாக்கலை விவசாயத்தில் பயன்படுத்தாதது நம்முடைய குற்றமே. தண்ணீருக்காக அடுத்த மாநிலத்தை நம்பியிருப்பதறகு பதிலா இஸ்ரேல் பயன் படுத்தும் தொழில்நுட்பத்தை மானிய விலையில் அரசாங்கம் விவசாயிகளுக்கும் அளிக்கலாம். குறைந்த பட்சம் சொட்டு நீர் பாசணத்தின் பயன்களையாவது விவசாயிகளிடம் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுதலாம். இப்படி மற்ற வளர்ந்த நாடுகளில் இருக்கும் தொழில்நுட்பத்தை விவசாயத்தில் பயன்படுத்தலாம்.

அமெரிக்காவில் ரசாயன உரங்களையும், விதைகளையும் மட்டும் இங்கே விற்க எப்படி முடிகிறது அவர்களால். எல்லாம் கமிஷன் தான். அதிகாரிகளையும், அரசியில்வாதிகளையும் சரி கட்டினால் போதும், இங்கே எதை வேண்டுமானாலும் விற்கலாம்.

//நல்ல கேளிவிகள். நீங்க ஐ.டி என்ற ஒரு துறையை விட்டு வெளில வாங்க. //

இல்ல தல, நான் ஐ.டி காக சப்போர்ட் பண்ணி பேசல ஆனா அதே ஐ.டினால தான் கேட்டரிங்க தொழிலில் இருந்து, மல்டிபிளஸ் தியேட்டரில் டிக்கட் கிழிக்கும் பையன் வரை பிழைக்கிறார்கள்.

இன்றைய நிலையில் உங்களுக்கு கார் ஓட்ட தெரிந்தால் மட்டும் போதும், சென்னை, பெங்களூரில் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை சம்பாதிக்கலாம். டிரைவர்களுக்கு அவ்வளவு டிமாண்ட்.

விவசாயம் தான் உயிர்ன்னு சொல்றீங்களே, இன்றய தேதிக்கு தஞ்சாவுர்,நாகர்கோவில் பகுதிகளில் இருநூறு ருபாய்க்கு குறைந்து யாரும் விவசாய வேலைக்கு வர மாட்டார்கள். கட்டட வேலைக்கு சித்தாலு வேலைக்கு கூலி நூற்றி ஐம்பது ருபாய். ப்ளம்பருக்கு ஒரு நாள் கூலி முன்னூரு ரூபாய். இது எல்லாம் சென்னை, பெங்களுரில் அல்ல, தமிழ்நாட்டில் எங்கே போனாலும் இதே ரேட் தான்.

இதுக்கு என்ன காரணம். உலகமயமாக்கலா இல்லை ஒரு ருபாய்க்கும் ஒரு கிலோ அரிசியும், இலவச கலர் டீவியும், கேஸ் சிலிண்டரும் கொடுக்கும் அரசியலா?

மண்குதிரை on March 12, 2009 at 3:10 PM said...

வணக்கம் நண்பா !

நம்முடைய ஸ்டத்தில் சின்ன ப்ரபளம் அதான் தாமதம்.

இது போன்ற பதிவுகளை வரவேற்கிறேன்.

வெனிசுலாவின் அதிபர் சாவோஸ். அவரும் காஸ்ட்ரோவின் ஒத்த கொள்கையுடையவர்தான். அமெரிக்காவை தைரியத்தோடு எதிர்ப்பர்வர்.

மணிகண்டன் on March 12, 2009 at 3:28 PM said...

****
வெனிசுலா அதிபர் பெயர் சாவோஸ்!

அந்த நாட்டு மக்களால் நிரந்தர அதிபராக ஏற்று கொள்ளப்பட்டவர், ஆனால் அவரே அதை வேண்டாம் என எதிர்க்கிறார்!
****

ஹா ஹா ஹா ! என்ன உலக ஞானம் வாலு. இந்த செய்தி எங்க படிச்சீங்க ?

கியூபால, venezuala எல்லாம் தேனாறு ஓடுது. பாகிஸ்தான்ல பெண்கள் சுதந்திரம் பரிபூரணமா இருக்குன்னு சொல்ற வலது சிந்தனை கருத்துக்கள் சொல்ற தமிழ் அறிஞர்கள் மட்டும் படிச்சிகிட்டு இருந்தா இப்படி தான் !

அந்தாளு ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவ referendum வச்சி நிரந்தர அதிபர் ஆக (2020 வரை ) முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்காரு. முதல் தடவ தோத்து போனா, மறுபடியும் ஒரு referendum. ஜெயிக்கறது வரைக்கும் இது நடந்துக்கிட்டே இருக்கும். ஜெயிச்சுட்டா அதுக்கு பிறகு இலக்க்ஷன் வேண்டாம்.

இந்த பதிவு பொருளாதாரம் பத்திதான்னு கார்க்கி சொல்லி இருக்காரு. அதுனால இதுக்கு மேல இதுல விவாதிக்க வேணாம். ஆனாலும் கியூபா, venezuala வோட பிரமிக்க வைக்கும் வளர்ச்சிய பத்தி பேசினதுனால நான் இதை எழுதினேன்.

மணிகண்டன் on March 12, 2009 at 3:30 PM said...

வலது இல்ல இடது

SK on March 12, 2009 at 3:37 PM said...

சகா அருமை.

இன்னும் நிறைய விடயங்கள் இந்த வாரத்தில் மட்டும் இல்லாமல் இந்த வாரத்தில் இருந்து எழுதுங்க. நாங்களும் தெரிஞ்சுக்கணும்ல. :)

வாழ்த்துக்கள்.

வால்பையன் on March 12, 2009 at 3:55 PM said...

//ஆனாலும் கியூபா, venezuala வோட பிரமிக்க வைக்கும் வளர்ச்சிய பத்தி பேசினதுனால நான் இதை எழுதினேன். //

எவன் தலையிலும் மிளகாய் அரைக்காம ஒரு நாடு முனேறினா நம்மாள ஏத்துகிறது கொஞ்சம் கஷ்டம் தான் இல்லையா!

எனக்கு வெனிசுலா எங்கே இருக்குன்னு கூட தெரியாது

ஆனா உலகமயமாக்கல் என் நாட்டு மக்களை எப்படி அடிமையாக்குதுன்னு தெரியும்.

அமிர்தவர்ஷினி அம்மா on March 12, 2009 at 4:03 PM said...

இதையும் முழுவதுமாய் படிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்

உங்கள் விருப்பம் நிறைவேறியது.

சேகுவைப் பற்றி சீக்கிரம் எழுதவும், பதிவு 3,4 பார்ட் போனாலும் பரவாயில்லை.

Karthikeyan G on March 12, 2009 at 4:07 PM said...

//வால்பையன் said...
உலகமயமாக்கல் என் நாட்டு மக்களை எப்படி அடிமையாக்குதுன்னு தெரியும்.//

எப்படி?

மணிகண்டன் on March 12, 2009 at 4:24 PM said...

***
எவன் தலையிலும் மிளகாய் அரைக்காம ஒரு நாடு முனேறினா நம்மாள ஏத்துகிறது கொஞ்சம் கஷ்டம் தான் இல்லையா!
***

இல்ல வாலு. முன்னேறிடுச்சு முன்னேரிடுச்சுன்னு சொல்லி அவங்க ஊருக்காரங்க தலையில மிளகாய் அரைக்காம இருந்தா சரி தான் எனக்கு.

அறிவன்#11802717200764379909 on March 12, 2009 at 4:34 PM said...

ரொம்பவும் மேம்போக்கான பதிவாக இருப்பதாகத் தோன்றுகிறது...

பின்வரும் என் சந்தேகங்களுக்கு விடைதர முடியுமா?

1.கம்யுனிசம் இருப்பதால் இந்தியா தப்பித்தது என்கிறீர்களே?சீனாவிலும் நிதி நெருக்கடி இப்போது இருக்கிறது,அவர்களும் பெயில் அவுட் பிளான்கள் பற்றிப் பேசுகிறார்கள்..இந்தியாவில் கம்யூனிசம் இருந்ததால் தப்பித்ததாகச் சொல்லும் நீங்கள் நம்மைவிட அதிகம் கம்யூனிசம் இருக்கும் சீனாவில் அமெரிக்கா போலவே பொருளியல் நெருக்கடிகள் வருகின்றனவே,ஏன்??

2.தாராளமயமாக்கலினால்தான அரிசி விலை ஏறியதா? எவ்வாறு?

3.உங்கள் கல்வித்தகுதி போன்ற அதை தகுதிக்கு,தற்போது உங்கள் பணி அளிக்கும் ஊதியம்,90 களுக்கு முன் கிடைத்ததா? அல்லது நீங்கள் பார்ப்பது போன்ற பணியாவது கிடைத்ததா? கிடைக்கவில்லை எனில்,ஏன்?

4.கியூபா,வெனிசூலா வின் பொருளியல் நிலவரம் என்ன? அவற்றின் பொருளியளில் கம்யூனிசம் என்ன மாறுபாடுகளைக் கொண்டு வந்தது?

5.இன்னும் இறுக்கமான சோவியத்,கம்யூனிசம் இருந்தும் சிதறுண்டது ஏன்?

Anbu on March 12, 2009 at 4:52 PM said...

நல்ல பதிவு அண்ணா வாழ்த்துக்கள்..

MayVee on March 12, 2009 at 4:55 PM said...

ella commentkkum oru periya repeat......

MayVee on March 12, 2009 at 4:56 PM said...

"narsim said...//இந்திய நிறுவனங்களை அழித்து உலக நிறுவனங்களே வளர்ந்து இருக்கின்றன. //

உண்மை.. கோக்,பெப்ஸிகளில் காளிமார்க்குகள் காணமல்போனதே.. "

gold spot kuda than

குப்பன்_யாஹூ on March 12, 2009 at 5:00 PM said...

In 2004-05 we have appreciated USA and appreciated Manmohan, chidambaram etc.

We only appreciated doha talks were great and Muralsoi maran is a revolutionst etc.

I bet in 2010 ( when new boom start) we all will chnage our tunes.

Recessions and booms are part and parcel of all kind of economies , be it is capitlist, socialist or mixed.

Anonymous said...

YEY இந்த தடவை நானாக்கும் சகா ;)

நல்ல பதிவு.
நட்சத்திரம் ஆகிட்டிங்க. எண்ணி எண்ணி பதிவு போட்டா எப்படி? நிறைய இன்னும் எழுதுங்க..

Mahesh on March 12, 2009 at 5:38 PM said...

அமெரிக்கா ஒரு மலைமுழுங்கி மகாதேவன்... எல்லாத்தையும் தின்னுட்டு கடப்பாரையையும் முழுங்கிட்டு இஞ்சி கஷாயம் குடிச்சு ஏப்பம் உடற ஆளு... எழுதுங்கண்னே... தாக்குங்க... 'சே' குவெராவை ஆவலோடு எதிர்பாக்கறோம்.

மணிகண்டன் on March 12, 2009 at 5:51 PM said...

அறிவன்,

நீங்க கேட்டு இருக்கற அஞ்சி கேள்விக்கும் சின்னதா, நறுக்குன்னு பதில் சொல்லனும்ன்னா

"அமெரிக்க ஒரு அரக்கன்" !!!!!!!
இல்லாட்டி தமிழனா
"அமெரிக்கா ஒரு தேவன்ன்னு திட்டலாம்" !!!

விலாவாரியா பதில் சொல்ல எனக்கு அறிவு இல்ல. ஆனா உங்களோட 4 வது கேள்விக்கு மட்டும் ஒரு சின்ன கமென்ட். பொருளியல் நிலவரம் அளவுகோல், அளவிடும் முறை ஒவ்வொரு "ism" க்கும் மாறுபடும். கியூபாவுல ஒருத்தனோட life expectancy 75 வயசுக்கும் மேல. மருத்துவ வசதி எல்லாருக்கும் ரொம்ப எளிதா கிடைக்கும். அதே மாதிரி, கல்வியும் எளிதா, பணம் செலவு இல்லாம கிடைக்கும். ஆனா இதுல நீங்க தனி மனித சுதந்திரம் எதிர்பார்க்க கூடாது..

pappu on March 12, 2009 at 5:59 PM said...

/////////உலகமயமாக்கலிலும் பல நன்மைகள் உண்டு. இல்லாத்தை இறக்குமதி செய்து, அதிகம் இருப்பதை ஏற்றுமதி செய்தால் நன்மை உண்டு. ஆனால் 80% விவசாயம் செய்யப்படும் நாட்டில், எத்தனை சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது? ஏற்கனவே நம்மிடம் இருக்கும் பொருட்களையே இறக்குமதி செய்ய சொல்லி அமெரிக்கா சொன்னால், எல்லாத்தையும் ஆட்டுகிறார்கள் நம்ம அரசியல்வாதிகள்.//////////

இந்த விஷயம் மட்டும் நான் ரொம்ப ஆதரவு தெரிவிக்கிறேன், எல்லாத்தையும் விட. கோதுமை நம்மலே நிறைய உற்பத்தி பண்ணி அதையெல்லாம் ஏற்றுமதி பண்ணிட்டு அப்புறம் காலியாச்சு கோதுமை, பாகிஸ்தான்கிட்ட வாங்கினான். இது முதல யோசிக்கல. பற்றாக்குறை வந்த பிறகுதான் யோசிக்கிறான். இதனால பெரிய ஏற்றுமதியாளர்களுக்கு லாபம். ஆனா கடைநிலை நுகர்வோருக்குதான் நஷ்டம்.

லவ்டேல் மேடி on March 12, 2009 at 6:19 PM said...

தம்பி கார்க்கி ...!!!!! இது நீதானா.....?????? நெம்ப சொருஞ்சுபோட்ட தம்பி...!!!! அரிப்பு தாங்க முடியல...!!!! பக்க்ஷே .....!!! நெம்ப பீலிங்கோட எழுதீருக்க.......!!! நெரிய உண்மைகள் சொலீருக்க ....!!!! ஆனா என்ன பண்ணுறது ......!!! " கூத்தடிக்க போன கூத்தியா திரும்பி வரமாட்டா " ங்குற கதையா....... இனி ஒன்னும் பண்ணமுடியாது தம்பி......!!!!! அதுக்காக மொக்க பதிவா போட்டு மனுசன கொள்ளாத.....!!!!!

கணினி தேசம் on March 12, 2009 at 7:28 PM said...

சக, நட்சத்திர வாரத்திற்கு ஏற்ற தலைப்பு.

விவாதிக்க வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன.
பலர் கேள்விக்கனைகளை தொடுத்தும் விட்டார்கள்.

ம்ம். ஆகட்டும் !!

கும்க்கி on March 12, 2009 at 7:42 PM said...

:-))

குடுகுடுப்பை on March 12, 2009 at 7:57 PM said...

நீங்கள் ஆதரிக்கும் சில விசயங்களில் எனக்கு உடன்பாடில்லை(க்யூபா). ஆனால் உலகமயமாக்கல் ஆரம்பித்தது சில ஆயிரம் ஆண்டுகள் ,இப்போது பரிணாம வளர்ச்சி அடைந்து அது உழைப்பு சுரண்டலில் நிற்கிறது.

VIKNESHWARAN on March 12, 2009 at 8:57 PM said...

ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க நண்பா... இது பொருளாதார தீவிரவாதம்... எல்லா வகையிலும் தீவிரவாதத்தை வளர்பதற்கு அவர்கள் தாம் முன் நிற்கிறார்கள்.

affable joe on March 12, 2009 at 9:28 PM said...

அருமையான பதிவு தோழரே நீங்கள் இது வரை எழுதியதில் ஆக்கபூர்வமானது இது தான் என்று நினைக்கிறன் .கம்யூனிசம் இந்திய வில் இல்லை என்றால் இந்நேரம் பாதி இந்தியாவை எழுதி கொடுதிர்பார்கள் .காஸ்ட்ரோவுக்கும் ,சவேசுக்கும் உள்ள தைரியம் இந்திய தலைவர்களுக்கு என்றுமே வராது. சே பத்தின உங்கள் பதிவிற்க்காக காத்திருக்கிறேன் .ஸ்டார் பதிவரானதற்கு வாழ்த்துக்கள் .

K.S.Muthubalakrishnan on March 12, 2009 at 9:31 PM said...

G .karthikeyan what you told that is rite.

when you are talking about globalsation we think about our govt and finance minister and what they had done for our nation. problem is in govt side also

எம்.எம்.அப்துல்லா on March 12, 2009 at 9:38 PM said...

//தற்போது உலகை ஆட்டிப் படைக்கும் ரெசிஷனில் இந்தியா ஓரளவிற்கு தப்பி பிழைக்கக் காரணம் கம்யூனிஸ்ட் என்று சொன்னால் எத்தனை பேர் ஒத்துக் கொள்வார்களோ?

//


இதைப் பற்றி ஹைதராபாத் தெருக்களில் உன்னிடம் நான் விளக்கமாக பேசிச் சென்றது நினைவிறுக்கிறதா கார்க்கி???

மணிகண்டன் on March 12, 2009 at 9:56 PM said...

***
இதைப் பற்றி ஹைதராபாத் தெருக்களில் உன்னிடம் நான் விளக்கமாக பேசிச் சென்றது நினைவிறுக்கிறதா கார்க்கி???
***

எது ? அந்த பிகரு பாத்தவுடன பீலாவுட பேசினீங்களே, அதுவா !!!

பழூர் கார்த்தி on March 12, 2009 at 9:59 PM said...

நல்ல விவாதத்திற்கு தோதான பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்!!

<<>>

கம்யூனிசத்தால்தான் இந்தியா recessionலிருந்து தப்பித்தது என்று எவ்வாறு சொல்கிறீர்கள், கார்க்கி?

Kathir on March 12, 2009 at 10:12 PM said...

நல்ல பதிவு கார்க்கி..
வாழ்த்துக்கள்.
இன்னும் கொஞ்சம் விரிவா எழுதுங்க.(புட்டிக்கதைகள் மாதிரி தொடரா எழுதினாலும் சரி).

ILA on March 12, 2009 at 11:14 PM said...

The Best from Karki

மணிகண்டன் on March 12, 2009 at 11:58 PM said...

பழூர் கார்த்தி,

இது checks / balances சம்பந்தப்பட்டது. ஒரு வலதுசாரி வழியில் செல்லும் அரசாங்கம் தோல்வியை சந்திக்கும்போது, இடதுசாரி கொள்கைகள் சற்று உயர்த்தி பார்க்கப்படுவது தான் இயல்பு. (vice versa)

எடுத்துக்காட்டுக்கு இந்தியாவோட provident fund scheme எடுத்துக்கோங்க. மூணு வருடம் முன்னாடி பணத்த அரசாங்கம் ஸ்டாக் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணனும்ன்னு வலதுசாரி சிந்தனையாளர்கள் குதிச்சாங்க. அதுக்கு பெரும் எதிர்ப்பு left கிட்டேந்து வந்தது. இப்போ அத evaluate பண்ணி பாத்தா அது நிச்சயமா ஒரு நல்ல எதிர்ப்பு தான ! இல்லாட்டி இப்போ பென்ஷன் வாங்கற மக்கள் முழுசா panick ஆகி இருப்பாங்க.

அதே இடதுசாரி சிந்தனையாளர்கள் provident fund returns 9%, 10% ஆக்கனும்ன்னு குதிச்சாங்க. அத அரசாங்கம் செயல்படுத்தல. பண்ணி இருந்தா, recession க்கு முன்னாடியே பென்ஷன் மொத்தமும் ஸ்வாஹா ஆகி இருக்கும்.

சூடு பட்ட பூனை on March 13, 2009 at 12:20 AM said...

நாம தினம் தினம் பயன்படுத்தற பொருட்கள் எல்லாம் பெரும்பாலும் வெளிநாட்டுப் பொருட்கள்தான்! இந்தியாவில் இந்தியப் பொருட்கள் வெளி நாட்டுப் பொருட்களோடப் போட்டிப் போட்டுக்கிட்டு இருக்கு.
இங்க போய் பார்த்தீங்கன்னா தெரியும்...
Made in India

கார்க்கி on March 13, 2009 at 1:10 AM said...

நினத்ததை விட பிரமாதமான் ரெஸ்பான்ஸ். நன்றி நண்பர்களே. சில தவிர்க்க முடியாத காரணங்களால் உடனுக்குடன் பதிலிட முடியாமல் போனது. சில நாட்களுக்கு அது சாத்தியமிலை என நினைக்கிறேன். ஆனா பதில் வரும். பதிவாகவே போடுகிறேன்

Itsdifferent on March 13, 2009 at 7:02 AM said...

எல்லா நாட்டிலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. நாம் அதை எப்படி பார்க்கிறோம், எதை எடுத்து கொள்கிறோம் என்பது மிக முக்கியம். முன்பே யாரோ சொன்ன மாதிரி, நாம் அவர்களின் தீமைகள் நிறைந்த உரங்களை வாங்குகிறோம், அனால் அவர்களிடம் உள்ள மற்ற நன்மை பயக்கும் எந்த ஒரு வழக்கத்தையும் கற்று கொள்ளவில்லை. (Short supply chain, rewarding the farmers rich, cold storage, efficient use of water resource etc...). மற்றொரு உதாரணம் இந்த ஊடகம், அமெரிக்காவில் நிறைய ஊடகங்கள், நிறைய நல்ல விஷயங்களை சொல்லி தருகின்றன (percentage wise I mean), நாம் என்ன செய்கிறோம், சினிமா, அல்லது அடுத்தவரை குறை சொல்வது அல்லது சமூகத்துக்கு , அதன் முன்னேற்றத்துக்கு பயனில்லா விஷயங்களை தான் எழுதுகிறோம். அவ்வளவாக வெளியுலகம் தெரியாத விவசாயியும் கணினி வசதி உள்ள நாமும் ஒரே குற்றத்தை தான் செய்கிறோம். இது யாருடைய தவறு?
And people who believe communism is the reason why we are escaping from this recession, please take a look at Kerala and WB, or if not look at China (especially Chinese treatment of its people, and the sufferings of their villages)
So it is the ultimate greediness of our stupid politicians, bureaucrats and other corporate people which brought us in here. Add to that, the constitution, which makes the common man powerless.
Atleast from now on, lets use this media to create an awareness, to make a difference. America is one of the biggest donor nations in the planet, most of the americans have giving back to the society in their hearts and that was taught to them through their education and system. How many of us even think about helping others, where the need is much more than any other nation in the world. Elections are near, use the media to highlight the constituency's needs, ask the reps the questions, to keep them accountable. Dont tell me what difference will it make, read star fish story (google star fish story).
Sorry Karki about the long response, this is not against you, I just used the mood here. Some of you know, the requests I have made, and one of you know the responses I have got so far. So this is another request, please use the media efficiently. We can make a difference. India has an oppportunity which no other nation in this planet has right now, our politicians and other decision makers are messing it up big time, but small guys like the social welfare organizations are doing a great job. lets do what we can do for both the groups.

Karthik on March 13, 2009 at 1:36 PM said...

@Itsdifferent

i agree with ur points regarding the responsible use of this new media.

but, dude, india isnt america. our readership is a drop compared to theirs.

here, WE depend on mainstream media for content and not the other way around. :(

தஞ்சாவூரான் on March 13, 2009 at 4:43 PM said...

//தற்போது உலகை ஆட்டிப் படைக்கும் ரெசிஷனில் இந்தியா ஓரளவிற்கு தப்பி பிழைக்கக் காரணம் கம்யூனிஸ்ட் என்று சொன்னால் எத்தனை பேர் ஒத்துக் கொள்வார்களோ?//

உண்மையோ உண்மை. சிதம்பர ஆட்டத்திற்கும், மன்மோகன பாட்டுக்கும் ஓரளவு இவங்க அப்பப்போ தடை போடுவதுதான் இந்தியா இப்போ ஓரளவு அழிவோடு நிக்குது.

'சே' வைப் பத்தி எழுதுங்க. எனக்குத் தெரிந்தவரை, அமெரிக்காவிடம் கெஞ்சிக் கத்துக் கொண்டு அடி வாங்குவதை விட, வெனிசுவேலா, க்யூபா போன்ற நாடுகளிடம் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!!

SASee on March 13, 2009 at 5:09 PM said...

Hi கார்க்கி
உண்மையான கொபம் தெரிகிறது உங்கள் பதிவில்.
//”ஊரான் ஊரான் தோட்டத்துல

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்க சொல்லி

காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்” என்றும்

வேட்டிய உருவறான் டங்கல்

அத ஃபோட்டோ புடிக்கிறான் அமெரிக்கா அங்கிள்”//

//அரிசி 32 ரூபாய்க்கும் கிடைப்பதற்கு காரணம் இந்த அரக்கன்தான். //


அற்புதமாய்ச் சொன்னீர்கள்..... உண்மையை

எனக்கு தெரிந்த வகையில் ஒசாமாவின் தாக்குதலும் இந்த உலகமயமாக்கலுக்களும் ஒருகாரணமாய் கெள்விப்பட்டிருக்கிறேன் (சரியான தகவலா என்பது ஊர்ஜிதம் இல்லை)


(இன்று தான் உங்கள் வலைப்பதிவு
வட்டமடித்து என் விழிகளின் வட்டத்தை தொட்டது.
பின்னூட்டம் தர நினைத்தது பதிவு என்னையும் பாதித்ததால்.
தொடர்ந்து வருவேன்......)

நன்றி

Itsdifferent on March 13, 2009 at 10:01 PM said...

Read this and see whether we can make a star fish story difference.
http://www.nytimes.com/2009/03/13/world/asia/13malnutrition.html?_r=1&hp

Sinthu on March 13, 2009 at 10:08 PM said...

ஃபிடல் காஸ்ட்ரோ, அப்பா இவரைப் போல நிறையப் பேர் நமக்கு வேண்டும். அமெரிக்க என்ற நாடு பொதுவாக எல்லா நாடுகளுக்குமே எதிரியாகவே இருக்கின்றது, குறிப்பாக முஸ்லிம் நாடுகளுக்கு (இது யாவரும் அறிந்ததே)

சரவணகுமரன் on March 13, 2009 at 10:10 PM said...

நல்ல பதிவு

dharshini on March 13, 2009 at 10:39 PM said...

இதெல்லாம் கூட எழுதுவீங்களா..
:)

புரியும்படி ஈசியா இருந்தது.. thanks anna.

மாதவராஜ் on March 13, 2009 at 11:02 PM said...

கார்க்கி!
நல்ல பதிவுங்க... வாழ்த்துக்கள்!

நர்சிம்!

//உண்மை.. கோக்,பெப்ஸிகளில் காளிமார்க்குகள் காணமல்போனதே.. //

ரொம்பச் சரி.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) on March 14, 2009 at 2:19 AM said...

Most of the things written in blog very common communist agenda based statements which doesn't have any depth nor does it tell the truth properly. Had not Narshima Rao's govt opted for globalization which was executed by our current PM Manmohan singh India would have faced a very deep recession at that particular point of time, with depleting foreign reserves and sinking economy the move was brilliant and much wanted at that point in time.

We always come back to the fact that Agriculture related workers are very poor in India, is it any different in US or China or Russia? Its the same in every part of the world its a bad trend but there is no use in blaming globalization for that.

India's biggest strength is in their man power. We are a young country we have our own government for only 50 years because of which we lag behind other countries in technical, manufacturing and many other areas and we are also the second largest country in terms of population which means we have lot of people to feed.

Our main strength at this point is our man power and their expertise. We need to utilize this and globalization has opened avenues for this. We have made leaps and bounds in Technology and Science since we have opened our economy.

We lagged behind during the industrial revolution because we were under the rule of British. Now is the era of Technology revolution we are growing in leaps and bounds because of this era of globalization. Even china has acknowledged the need to globalization.

We cannot be short sighted and lag behind because we believe in some ideology. If communism ideologies are the better ways of life we should have followed that, clearly for whatever the reason it has failed. Now this is the way forward sure there are lot of finer points to be worked out but simply criticizing it and doing nothing is not going to do any good.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) on March 14, 2009 at 2:37 AM said...

Agriculture was and will be the most important source of revenue in our country but why is it so? why not manufacturing why not automobile why not energy? why do we lag behind in these areas? Are not we not talented enough to compete with other countries in the world no because we are a young country and because we don't have enough research and development going on. These are areas which have vastly improved in the era of globalization. With globalization we not only import goods we also import technology, knowledge and other skills which will be needed to make our country a stronger one with closed door policy we will always be lagging behind.

குசும்பன் on March 14, 2009 at 10:00 AM said...

இதை பல பாகங்களாக எழுதுவதற்கான விசயங்கள் இருக்கின்றன.

விரிவாக பேசனும் இதை பற்றி!

என் பக்கம் on June 17, 2009 at 3:20 PM said...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html

சுரேகா.. on July 16, 2009 at 9:18 AM said...

உண்மையிலேயே இப்ப காஸ்ட்ரோவைவிட வெனிசூலாக்காரர்தான் பின்னி பெரடு கட்றாரு!

சூப்பரா ஆரம்பிச்சுருக்கீங்க !

இன்னும் ஆழமா, உங்க பாணியில் வந்தா இந்தப்பதிவு டாப்பு! வாழ்த்துக்கள்!

:)

 

all rights reserved to www.karkibava.com