Mar 10, 2009

நிச்சயிக்கப்பட்ட சொர்க்கம்


  முதன்முதலில் நம் அலுவலகப் பேருந்தில் தான் உன்னைப் பார்த்தேன். திசம்பர் 16. எந்தவிதமான பரவச உணர்வும் வரவில்லை எனக்கு. பறவைகள் நிற்காமல் பறந்தன. அலைகள் வழக்கம் போல் தான் எழுந்து விழுந்தன. உன்னைத்தான் கலாய்க்க வேண்டும் என்று நண்பன் சொன்னதும் சற்று மகிழ்வாய் உணர்ந்தேன். என் ஓவ்வொரு வார்த்தைக்கும் பதலடி தந்த உன்னை நான் மட்டுமல்ல, அனைவரும் அதிசயமாக பார்த்தனர். உன்னையேப் பார்த்துக் கொண்டிருந்த என்னை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

  மல்லிகை வாசனையை நான் நுகரும் அளவிற்கு வேறு எந்தப் பெண்ணும் என்னிடம் நெருக்கம் காட்டியதில்லை. எல்லோருக்கும் பிரசாதம் மடித்த பேப்பரை நீட்டிவிட்டு எனக்கு மட்டும் நெற்றியில் திருநீரிட்டு கண்களை மூடச் சொன்னாய். அருகில் ஊத வந்த உன்னை எப்படி பார்க்காமல் இருப்பது? கண்கள் திறந்தேன். தலையில் தட்டினாய். சுகமாய் வலித்தது.

  அடுத்த நாள் வீட்டிலிருந்து கிளம்பி தெருமுனை வரை சென்றவன் ஓடோடி வந்தேன்,மீண்டும் வீட்டுக்கு. எதடா மறந்துட்ட என்ற என் அம்மா, நான் விபூதியை வைத்துக் கொண்டதைப் பார்த்துவிட்டு தெரிந்தவர்கள் இடமெல்லாம் சொல்லியிருக்கிறார், நான் ஆத்திகனாகிவிட்டேன் என்று. தேவதைகள் எல்லாம் கடவுளா என்ன?

  சேலை கட்டுவாயா என்றேன். தோழிகள் எல்லாம் சொல்லி வைத்துக் கொண்டு ஒரே நாளில் கட்டுவோம் என்றாய். ஒரு நாள் வர சொன்னதுக்கு உன் தோழி முடியாது என்றாள். உதட்டைச் சுழித்து நான் என்ன செய்ய என்றாய். இன்னொரு முறை அதைப் போல உதட்டை சுழி என்றேன். வாய் விட்டு சிரித்தாய். இப்பவே செய்யனுமா என்றாய். ஆமாம். சுழிக்க வேண்டாம். இதேப் போல் சிரித்துக் காட்டு என்றேன். அமைதியாக இருந்தாய். என்னாச்சு என்றதற்கு நான் வேறு ஏதாவது செய்தால் அதை செய்ய சொல்லுவாய் என்றாய். அய்யோ!! நீ என்ன செய்தாலும் ஒன்ஸ்மோர் கேட்க தோன்றியது.

  ஒரு வழியாக தைரியத்தை வரவைத்துக் கொண்டு அந்த காதல் கடித்தத்தை கொடுத்த தேதி நினைவிருக்கிறதா? திசம்பர் 31. படித்து முடித்ததும் உன் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் என் பெயரை அழித்துக் கொண்டிருந்தது. உன்னால் ஏற்கனவே கரைந்துக் கொண்டிருந்த நான் பதிலேதும் பேசாமல் சென்றுவிட்டேன். மாலைப் பேருந்தில் என்னருகே நீ வந்து அமர்ந்தாய். நண்பர்கள் அனைவரும் நீ என் காதலை ஏற்றுக் கொண்டதாக முடிவு செய்து நம்மை கிண்டல் செய்துக் கொண்டிருந்தார்கள். நீ பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாய். உன் நிறுத்தத்தில் இறங்கி செல்லும்போதும் என் நண்பன் சொன்னான் ”அவ உன்னை திரும்பி பார்த்துட்டு போனா, அவ உன்னை லவ் பண்ணலடா”. பயந்துக் கொண்டே இருந்தேன். திரும்பாமல் சென்று விட்டாய். எகிறி குதித்ததில் லேசாக ஆடியது பஸ். என்ன ஆச்சு என்றவர்களிடம் “ஹேப்பி நியூ இயர்” என்றேன்.

  நீயும் பதிலேதும் சொல்லாமல், நானும் கேட்காமலே 10 நாட்கள் சென்றுவிட்டது. ஆறு மணி குளிரில், ஆளில்லா ஃப்ரெஞ்சு வீதியில் உன்னோடு நடப்பது எனக்கு உலகிலே முக்கியமான வேலை. ஜனவரி 16. எப்போதும் போல் தான் கடற்கரைக்கு வரச் சொல்கிறாய் என்று நினைத்தேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னாய் “ உனக்கு முன்பே நான் உன்னை காதலிக்க தொடங்கிட்டேன்டா”. அந்த அரையிருளிலும் உன் விழியோரம் உருண்ட கண்ணீர் மின்னியது. அப்போது பிடித்த உன் கைகளை ஒன்பது மணிக்குத்தான் விட்டேன். குழந்தைகளின் பூமித் தொடாத பாதங்கள் மென்மையானவையாமே. உன் கைகளை விடவா?

  நமக்குள் இந்தக் காதல் மிக இயல்பாய் வந்திருக்கிறது. ஒரு பூ இதழ் விரிப்பது போல. ஜனவரி 26 நினைவிருக்கிறதா? உன் தோழியின் அறையில் நாம் இருவர் மட்டும். எனக்காகவே எடுத்து வந்திருந்த சேலையை கட்டிக் கொண்டு வந்தாய். அணைத்து முத்திமிடுவேன் என்று எதிர்பார்த்தாய் நீ.  உன்னைக் கையெடுத்து கும்பிட்டதும் காலில் விழுந்தாய். பதறிப் போனேன் நான். நெற்றியில் குங்குமம் வைத்துவிட சொன்னாய். அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் நடக்காமல் போனது என் குற்றம்தான்.

  காதலர் தினத்தன்றுதான் நான் சிங்கப்பூருக்கு கிளம்ப வேண்டும். நமக்காக ஒரு நாள் முன்னரே காதலர் தினத்தை வைத்துக் கொண்டோம். இனிமேல் வரும் ஆண்டுகளில் 13ஆம் தேதியே கொண்டாடுவது என முடிவு செய்தோம். (அன்று நடந்தவற்றைப் படிக்க இங்கே செல்லுங்கள்)

   உன் கல்லூரி நண்பன் நம்மைப் பற்றி உன் அப்பாவிடம் சொன்னது, என்னால் இந்தியாவிற்கு சரியான நேரத்தில் வர முடியாமல் போனது, உன் பெற்றொரின் தற்கொலை பயறுத்தல், என ஆயிரம் காரணம் இருந்தாலும் எனக்காக காத்திருந்திருக்கலாம் கம்லா. மார்ச் 2 என்னிடம் நீ கடைசியாக பேசிய நாள். என்ன பேசினாய்? உன் திருமணத்தைப் பற்றிதான். அன்றிலிருந்து ஒவ்வொரு மார்ச் 10 ஆம் தேதியும் பைத்தியம் பிடித்து விடுகிறது எனக்கு. ஓ.. இன்று மார்ச் 10..

*******************************************

கனவுகள் சுமந்த

கவிதைகளால்

காகிதம் நிரப்பியிருந்தேன்....

மைப்பட்ட புத்தகத்தின்

பக்கங்களாக மறைந்துவிட்டிருந்தது

கண்ணீரில் குலைந்த காதலால்....

எதேச்சையாக கண்களில்

பட்டுத்தொலைக்கும்

உன் பெயரும்...

நாம் சென்ற கடற்கரையின்

மணலில் தான்

இன்னும்

இன்றும் நீ நடைப்போடுகிறாய்

என்ற எண்ணங்களும்...

வரம்பு மீறிவிட்ட வார்த்தைகளும்...

இனி எதுவும், எவையும்

துணைவரப்போவதில்லை....

பிரிவுகள் கொண்டாட

இதயம் பழக்கிவிட்டேன்......

இருந்தபோது விரும்பி,

இன்று வெறுக்கும்

வாலாட்டும் ஜீவன் தானே அது??

.

.

.

.

பிரிவெழுத பிரியமில்லை...

.

.

எனினும்,

திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயிக்கப்படுகின்றனவாம்......

என் நிச்சயிக்கப்பட்டுவிட்ட

சொர்க்கத்திற்கு,

திருமணநாள் நல்வாழ்த்துகள்...

(கவிதையை எழுதியவர் ஸ்ரீமதி )

71 கருத்துக்குத்து:

ஸ்ரீமதி on March 10, 2009 at 5:23 PM said...

Naan dhaan first?? :):)

Bleachingpowder on March 10, 2009 at 5:29 PM said...

புனைவு சூப்பர் தல ;)

SK on March 10, 2009 at 5:34 PM said...

yovvvvvvvvvvvvvvv

நான் ஆதவன் on March 10, 2009 at 5:34 PM said...

நல்லாயிருக்கு சகா..ஆனா கவிதை தான் சுமார் :))))) (ச்சும்ம்மா)

Karthik on March 10, 2009 at 6:07 PM said...

FIVE STAR POST KARKI.

Really Superb! :)

Sri mathi's poem syncs well with the post. Nice.

கார்க்கி on March 10, 2009 at 6:24 PM said...

@ஸ்ரீமதி,

நீதான்..

***********
@ப்ளீச்சிங்க்,

:))))))))

************
@எஸ்.கே,

அது வாவ்வ்வ்வ் அல்லது யோவ்? எது சகா?

***********
@நான் ஆதவன்,

ஆமாங்க.. கவிதை சுமார்.:))

***********

@கார்த்திக்,

தாங்க்ஸ் கார்த்திக்

தமிழன்-கறுப்பி... on March 10, 2009 at 6:26 PM said...

மார்ச் பதினோராம் திகதி வாறேன்...

;)

மோனி on March 10, 2009 at 6:30 PM said...

வழக்கம் போல டச் ...

வால்பையன் on March 10, 2009 at 6:32 PM said...

//என் ஓவ்வொரு வார்த்தைக்கும் பதலடி தந்த உன்னை நான் மட்டுமல்ல, அனைவரும் அதிசயமாக பார்த்தனர். உன்னையேப் பார்த்துக் கொண்டிருந்த என்னை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.//

நமக்கு இரண்டு கண்கள் இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும். பின் இது எப்படி சாத்தியம்.

எங்கயோ இடிக்குது சகா!

வால்பையன் on March 10, 2009 at 6:33 PM said...

//அருகில் ஊத வந்த உன்னை எப்படி பார்க்காமல் இருப்பது? கண்கள் திறந்தேன். தலையில் தட்டினாய். சுகமாய் வலித்தது.//

இப்படி இருந்தா எப்படி இருக்கும் சகா!

அருகில் ஊத வந்த உன்னை எப்படி பார்க்காமல் இருப்பது? கண்கள் திறந்தேன். தலையில் தட்டினாய். மயக்கம் தெளிந்தது.

வால்பையன் on March 10, 2009 at 6:37 PM said...

//உதட்டைச் சுழித்து நான் என்ன செய்ய என்றாய். இன்னொரு முறை அதைப் போல உதட்டை சுழி என்றேன். வாய் விட்டு சிரித்தாய்.//

சகா அங்க வெயில் ஜாஸ்தியா!
கொஞ்ச நாளைக்கு சென்னைக்கே வந்துருங்களேன்!

வால்பையன் on March 10, 2009 at 6:37 PM said...

//அய்யோ!! நீ என்ன செய்தாலும் ஒன்ஸ்மோர் கேட்க தோன்றியது.//

ஓங்கி கன்னத்துல ஒண்ணு விட்டா!

வால்பையன் on March 10, 2009 at 6:39 PM said...

//ஆளில்லா ஃப்ரெஞ்சு வீதியில் உன்னோடு நடப்பது எனக்கு உலகிலே முக்கியமான வேலை//

அங்க எப்போ சகா போனிங்க!
சொல்லவேயில்ல

வால்பையன் on March 10, 2009 at 6:39 PM said...

//உனக்கு முன்பே நான் உன்னை காதலிக்க தொடங்கிட்டேன்டா”.//

இனிமே பெண் புத்தி முன் புத்தி!

வால்பையன் on March 10, 2009 at 6:41 PM said...

//உன் திருமணத்தைப் பற்றிதான். அன்றிலிருந்து ஒவ்வொரு மார்ச் 10 ஆம் தேதியும் பைத்தியம் பிடித்து விடுகிறது எனக்கு. ஓ.. இன்று மார்ச் 10..//

அடடே இடம் பொருள் தெரியாமல் கலாய்த்து விட்டேனோ!

மனசுல எதுவும் வச்சிக்காதிங்க சகா ஸாரி!

MayVee on March 10, 2009 at 6:43 PM said...

உங்களுக்கு மார்ச் 10 என்றால்...
என்னக்கு ஜன் 20 .....
அந்த அதிர்ச்சி இன்னும் என் மனதில் இருக்கிறது.......
நான் எந்த மன நிலைமையில் இருதாலும் அந்த நாளில் என்னக்கு பைத்தியம் பிடித்து விடும்.....

pappu on March 10, 2009 at 6:46 PM said...

ஹேய் தலைவா, எப்படி இதெல்லாம்? ரொம்ப ஃபீலிங்ஸ் ஆஃப் இண்டியாவா இருக்கே! நல்லாருக்கு! இதெல்லாம் எங்க இருந்து வருது?

ILA on March 10, 2009 at 6:46 PM said...

march 11 சரியாகிருமா?

வால்பையன் on March 10, 2009 at 6:48 PM said...

உங்கள் காதலின் ஆழத்தை வார்த்தையால் வடித்திருக்கிறீர்கள்,

ஏற்கனவே காதல் மேல் தீராத பகையுள்ள எனக்கு உங்கள் பதிவை படிக்கும் போது காதலிக்கும் ஆசை வருகிறது.

இதை ஏற்கனவே ஒருமுறை கூட சொல்லியிருக்கிறேன்.

ரெண்டு பீர வுட்டு ஆத்திகோங்க சகா!

pappu on March 10, 2009 at 6:49 PM said...

ஹேய் மார்க், டோண்ட் க்ரை யா! கூல் டவுன் கூல் டவுன் கூல் டவுன்......


ஆமா இது புனைவு தான!

pappu on March 10, 2009 at 6:50 PM said...

//அருகில் ஊத வந்த உன்னை எப்படி பார்க்காமல் இருப்பது? கண்கள் திறந்தேன். தலையில் தட்டினாய். சுகமாய் வலித்தது.//

ஒவர் தண்ணியோ?

Thusha on March 10, 2009 at 7:00 PM said...

வாசிக்கும் போதோ ஐயோ என் இப்படி ஆச்சு ஏன்னு தோனுது அண்ணா

சுப்பர் இதுக்கு மேல ஓங்கும் தோணலை......

Thusha on March 10, 2009 at 7:02 PM said...

"MayVee said...
உங்களுக்கு மார்ச் 10 என்றால்...
என்னக்கு ஜன் 20 ....."

அட உங்களை மாதிரி நெறைய பேர் நாட்டிலா இருக்காங்க போலா

அன்புடன் அருணா on March 10, 2009 at 7:11 PM said...

அட நீங்க இப்பிடில்லாம் கூட எழுதுவீங்களா???? ரொம்ப அழகா எழுதிருக்கீங்க....
அன்புடன் அருணா

குசும்பன் on March 10, 2009 at 7:17 PM said...

அருமை!

Karthikeyan G on March 10, 2009 at 8:11 PM said...

பப்ளிக்! பப்ளிக்!!

Karthikeyan G on March 10, 2009 at 8:11 PM said...

looks like this post is too personnel :(

தாமிரா on March 10, 2009 at 8:31 PM said...

பிரமாதம் கார்க்கி.. அதிலும் முடித்திருந்த விதம் அருமை.. (ஸ்ரீமதியிடம் இன்னும் பிரமாதமான இதற்கு பொருத்தமான கவிதைகள் உண்டென கருதுகிறேன். இருப்பினும் இதுவும் அழகுதான்.!)

ச்சின்னப் பையன் on March 10, 2009 at 8:38 PM said...

அருமை!

பாண்டி-பரணி on March 10, 2009 at 9:13 PM said...

அருமை!
ஒரு விஷயம் உங்கள் காதல் பாண்டியில் ஆரம்பித்தா

கணினி தேசம் on March 10, 2009 at 9:33 PM said...

சகா, நல்லா எழுதியிருக்கீங்க!!

ஸ்டார் வாரத்தில் அருமையான துவக்கம்,
ச்சும்மா ஜமாய்ங்க !!

கணினி தேசம் on March 10, 2009 at 9:34 PM said...

//nothing said...//
நெஜமா?

ஸ்ரீதர்கண்ணன் on March 10, 2009 at 9:57 PM said...

காணவில்லை
----------------------------

கார்க்கி என்கிற மொக்கைச்சாமி

முரளிகண்ணன் on March 10, 2009 at 10:25 PM said...

அசத்தல் ரகம் கார்க்கி

Kathir on March 10, 2009 at 10:44 PM said...

பதிவு நல்லா இருந்தது சகா.....

Cable Sankar on March 10, 2009 at 11:04 PM said...

கார்கீ இந்த மாதிரி ஒரு பதிவை உங்க கிட்டேயிருந்து எதிர்பார்க்கல.... சூப்பர்.. உருகிருச்சு..

Massattra Kodi on March 11, 2009 at 12:09 AM said...

அருமை கார்க்கி. சூப்பர் பதிவான "ஹேமா"வின் சாயல் இருந்தாலும், அது ஏறபடுத்திய தாக்கத்தை இதிலும் உணர முடிகிறது.

இதுவும் கடந்து போகும். எல்லாம் நன்மைக்கே !

ஸ்டார் வாரத்தில் இதை எதிர்பார்த்தேன், இதே போல் ஒரு சிறுகதை, ஏழுமலை ப்ளீஸ்.

அன்புடன்
மாசற்ற கொடி

அனுஜன்யா on March 11, 2009 at 12:13 AM said...

பின்னூட்டத்தைப் பார்த்தால், புனைவு இல்லை. அனுபவம் என்று தோன்றுகிறது. ஆறுதல் மட்டுமே சொல்ல எங்களால் முடியும் :((

எழுத்து என்ற வகையில் உன்னுடைய மிகச் சிறந்த பதிவுகளுள் ஒன்று. ஸ்ரீமதியின் கவிதை மிக கச்சிதமாகப் பொருந்துகிறது. கிட்டத் தட்ட அய்ஸ் அளவுக்கு எழுதி இருக்கிறாய். Thats something man.

உனக்கு மார்ச் 10. MayVee க்கு ஜூன் 20. எனக்கு மே 3. ஏன் இவ்வளவு துக்கம் என்று யோசித்தேன். அது என் மணநாள் :) சிரிப்பு வராவிட்டாலும், சிரித்து விடு. அதுக்காகத்தான் இந்த கமெண்டு :)

Cheer up man.

அனுஜன்யா

Anonymous said...

சோகமா இருக்கே..

MayVee on March 11, 2009 at 6:49 AM said...

கார்கி......

நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்று நினைக்கையில் மரண தேவன் சிரித்து விட்டான்;

அகவே வாழ்கிறேன் மரணத்தை நோக்கி

தாரணி பிரியா on March 11, 2009 at 6:52 AM said...

வலியை கூட அழகா சொல்லி இருக்கிங்களே ம் காலம் எல்லாத்தையும் மாத்தும் :). ஸ்ரீ யோட கவிதை அழகா பொருத்துது இந்த இடத்துல

தாரணி பிரியா on March 11, 2009 at 6:53 AM said...

இது நிஜமாவே நட்சத்திர பதிவுதான் :). திரும்ப திரும்ப படிக்க வெச்சிட்டிங்க‌

Sinthu on March 11, 2009 at 7:09 AM said...

அப்படி என்றால் மார்ச் 10 ஐ நாங்கள் லீப் நாளாக மாத்திடுவோம் கார்க்கி அண்ணா. கவலைப் படவேண்டாம். என் என்றால் மார்ச் 10 இனி 4 வருடங்களுக்கு ஒருக்கால் தான் வரும். எல்லாரும் என்ன சொல்றீங்க, இனி மார்ச் தான் எங்களுக்கு லீப் நாள். ok தானே

narsim on March 11, 2009 at 9:30 AM said...

one of your best...

சகா.. மிக ஆழ்ந்த எழுத்துக்கள்..அனுபவங்களை மொழிபடுத்துதல் மிகவும் கடினம்.அதிலும் எது புனைவு எது நிகழ்வு என்பதை கண்டுபிடிக்கமுடியாவண்ணம் தீட்டுவது கடினமே.. இங்கே அது அருமையாக வந்திருக்கிறது..

நல்லா இருக்கு சகா. standard!

கார்க்கி on March 11, 2009 at 9:56 AM said...

@தமிழன்,

நன்றி சகா

********
/ மோனி said...
வழக்கம் போல ட//

நன்றி

************
@வால்,

கலக்குங்க.. இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம்?

**********
/ MayVee said...
உங்களுக்கு மார்ச் 10 என்றால்...
என்னக்கு ஜன் 20 .....
அந்த அதிர்ச்சி இன்னும் என் மனதில் இருக்கிறது..//

:(((((((

***********
/ pappu said...
ஹேய் தலைவா, எப்படி இதெல்லாம்//

அதுவா வருது பப்பு :))

கார்க்கி on March 11, 2009 at 9:58 AM said...

// ILA said...
march 11 சரியாகிரு//

தெரியலயேப்பா

***********
/ Thusha said...
வாசிக்கும் போதோ ஐயோ என் இப்படி ஆச்சு ஏன்னு தோனுது அண்ணா

சுப்பர் இதுக்கு மேல ஓங்கும் தோணலை.//

:))))))

***************

/ அன்புடன் அருணா said...
அட நீங்க இப்பிடில்லாம் கூட எழுதுவீங்களா???? ரொம்ப அழகா எழுதிருக்கீங்க.//

நன்றிங்க

**************
// குசும்பன் said...
அருமை//

இதுதான் எனக்கு பெரிய பாராட்டு தல.. :))

*************

// Karthikeyan G said...
looks like this post is too personnel //

இல்லங்க புனைவுதான் :)))

கார்க்கி on March 11, 2009 at 10:05 AM said...

/ தாமிரா said...
பிரமாதம் கார்க்கி.. அதிலும் முடித்திருந்த விதம் அரு//

நன்றி சகா.. :))

***********

// ச்சின்னப் பையன் said...
அருமை//

நன்றி சகா

************
/பாண்டி-பரணி said...
அருமை!
ஒரு விஷயம் உங்கள் காதல் பாண்டியில் ஆரம்பித்//

இந்த்க கதை பாண்டியில் தான் நடக்கிறது

************
// கணினி தேசம் said...
சகா, நல்லா எழுதியிருக்கீங்க!!

ஸ்டார் வாரத்தில் அருமையான துவக்கம்//

நன்றி சகா

************
/ ஸ்ரீதர்கண்ணன் said...
காணவில்லை
----------------------------

கார்க்கி என்கிற மொக்கைச்சா//

நாளைக்கு பொங்கிட்டு வருவாரு பாருங்க

கார்க்கி on March 11, 2009 at 10:08 AM said...

/முரளிகண்ணன் said...
அசத்தல் ரகம் கார்க்//

நன்றி தல

******************
// Kathir said...
பதிவு நல்லா இருந்தது சகா//

:)))))))))

****************
// Cable Sankar said...
கார்கீ இந்த மாதிரி ஒரு பதிவை உங்க கிட்டேயிருந்து எதிர்பார்க்கல.... சூப்பர்.. உருகிருச்சு//

நாங்களும் ரவுடிதான் பாஸ் :))

***************
/ Massattra Kodi said...
அருமை கார்க்கி. சூப்பர் பதிவான "ஹேமா"வின் சாயல் இருந்தாலும்//

அத்தனை முறை ஹேமாவைப் படித்திருக்கிறேன். :)))

****************
@அனுஜன்யா,

மகிழ்ச்சியாக இருக்கு தல உங்க பாராட்டு.

//கிட்டத் தட்ட அய்ஸ் அளவுக்கு எழுதி இருக்கிறாய்//

வானத்தைத் தாண்டி பறந்துக் கொண்டிருக்கிறேன்..

கார்க்கி on March 11, 2009 at 10:10 AM said...

/ Thooya said...
சோகமா இருக்கே//

:((((

***************
// தாரணி பிரியா said...
இது நிஜமாவே நட்சத்திர பதிவுதான் :). திரும்ப திரும்ப படிக்க வெச்சிட்டிங்//

நன்றி தா.பி

**************
// Sinthu said...
அப்படி என்றால் மார்ச் 10 ஐ நாங்கள் லீப் நாளாக மாத்திடுவோம் கார்க்கி அண்ணா//

உன் அன்புக்கு என்ன செய்ய்யப் போகிரேன் நான்?
****************

/ narsim said...
one of your best...

சகா.. மிக ஆழ்ந்த எழுத்துக்கள்..அனுபவங்களை மொழிபடுத்துதல் மிகவும் கடினம்.அதிலும் எது புனைவு எது நிகழ்வு என்பதை கண்டுபிடிக்கமுடியாவண்ணம் தீட்டுவது கடினமே.. இங்கே அது அருமையாக வந்திருக்கிறது..

நல்லா இருக்கு சகா. standard//

:)))).. வார்த்தைகள் வரவில்லை தல..

அமிர்தவர்ஷினி அம்மா on March 11, 2009 at 11:27 AM said...

புனைவோ நிஜமோ,,

பதிவு அருமை.

தலையில் தட்டினாய். சுகமாய் வலித்தது. //
உண்மைய சொல்லுங்க, தட்டினாங்களா, இல்ல கொட்டினாங்களா.

குழந்தைகளின் பூமித் தொடாத பாதங்கள் மென்மையானவையாமே. உன் கைகளை விடவா?
:)-

உன்னைக் கையெடுத்து கும்பிட்டதும் காலில் விழுந்தாய்//
எதுக்கு கையெடுத்து கும்பிட்டீங்க, இனிமே புடவை கட்டாத தாயீ அப்படின்றதுக்காகவா.. சும்மா கேட்டேன்.
மிகவும் ரசனையாக இருந்தது இந்தப் பாரா.

தராசு on March 11, 2009 at 11:56 AM said...

தல,

அருமையான பதிவு.

ஆமா, நட்சத்திரமாயிட்டா ஏழுமலையோட காய் விட்டு தொரத்தீட்டீங்களா?

சேலை கட்டிய மா(ந்)தரை விடு மாமூ, ஏழுமலையை இட்னு வா

கல்கி on March 11, 2009 at 12:01 PM said...

அண்ணே,
நல்லா இருக்கு உங்க கற்பனை.... ஆனா.....புனைவு பதிவு மாதிரி தெரியலயே :)

Prosaic on March 11, 2009 at 1:34 PM said...

dai, mothalla pera delete pannu.. ellaarum unmai-nu ninaichikka poraanga!!

Palanivel on March 11, 2009 at 2:58 PM said...

அன்புள்ள கார்கி,
இது உண்மையா இல்லை கற்பனையா தெரியவில்லை ஆனால் அருமையான பதிவு. என்னை ரொம்பவும் பாதித்து விட்டது.

அன்புடன்
பழனிவேல்

prakash on March 11, 2009 at 3:06 PM said...

நன்றாக இருக்கிறது.

இதுமாதிரி நிறைய எழுதுகிறாய் கார்க்கி.

நீ எழுத்துகளில் வேறுபடுத்தி காட்டினாலும், படிக்கும்பொழுது ஒரே மாதிரி உணர்வு ஏற்படுகிறது.

உன்னை முன்னிலை படுத்தி எழுதாமல் அதையும் ஒரு கதாபாத்திரமாக மாற்றி முயற்சி செய்யேன்.

நான், நீ என்பதாக இல்லாமல் அவன் அவள் என்று எழுதினால் ஒரு மாற்றமாக இருக்கும் என நினைக்கிறேன்.

மாதேவி on March 11, 2009 at 4:18 PM said...

நட்சத்திரபதிவு நன்று.

மணிகண்டன் on March 11, 2009 at 4:35 PM said...

முதல்ல நட்சத்திர பதிவர் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.

இந்த பதிவு அருமை. இதுக்கு மேல சொல்ல வார்த்தை தெரியல. குசும்பனே ஒன்னும் நக்கலடிக்காம படிச்சுட்டு போய் இருக்காருன்னா பாருங்களேன்.

ஸ்ரீமதியோட கவிதையும் சூப்பர்.

பனங்காட்டான் on March 11, 2009 at 4:44 PM said...

அற்புதமான பதிவு. உங்களுக்கு மார்ச் 10 என்றால் எனக்கு மார்ச் 31. படிக்கப் படிக்க எனக்கு கண்ணீர் வந்துவிடும்போல் ஆகி விட்டது. இனி கொஞ்ச நாளைக்கு தூக்கம் போச்!

கார்க்கி on March 11, 2009 at 4:47 PM said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
புனைவோ நிஜமோ,,

பதிவு அருமை//

நன்றி அமித்து அம்மா

************
// தராசு said...
தல,

அருமையான பதிவு.

ஆமா, நட்சத்திரமாயிட்டா ஏழுமலையோட காய் விட்டு தொரத்தீட்டீங்க//

அப்படி செய்வோமா தல? நம்மள நட்சத்திரமாக்கினதே ஏழுதானே

************
// கல்கி said...
அண்ணே,
நல்லா இருக்கு உங்க கற்பனை.//

ரொம்ப நன்றி தம்பி

*************
// Prosaic said...
dai, mothalla pera delete pannu.. ellaarum unmai-nu ninaichikka poraanga//

இப்ப டெலீட் செஞ்சதான் அப்படி நினைப்பாங்க :)))

***********
// Palanivel said...
அன்புள்ள கார்கி,
இது உண்மையா இல்லை கற்பனையா தெரியவில்லை ஆனால் அருமையான பதிவு. என்னை ரொம்பவும் பாதித்து விட்டது//

வருகைக்கு நன்றி சகா

கார்க்கி on March 11, 2009 at 4:49 PM said...

@பிரகாஷ்,

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. மாற்ற முயற்சி செய்கிறேன்

************
/ மாதேவி said...
நட்சத்திரபதிவு நன்//

ந்ன்றி மாதேவி

************
// மணிகண்டன் said...
முதல்ல நட்சத்திர பதிவர் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.

இந்த பதிவு அருமை. இதுக்கு மேல சொல்ல வார்த்தை தெரியல. குசும்பனே ஒன்னும் நக்கலடிக்காம படிச்சுட்டு போய் இருக்காருன்னா பாருங்களே//

நன்றி சகா

************

// பனங்காட்டான் said...
அற்புதமான பதிவு. உங்களுக்கு மார்ச் 10 என்றால் எனக்கு மார்ச் 31. படிக்கப் படிக்க எனக்கு கண்ணீர் வந்துவிடும்போல் ஆகி விட்டது//

:))))..

Bleachingpowder on March 11, 2009 at 5:49 PM said...

ஸ்டார் வாரம், ஏழுமலையோட காலையிலேயே வந்து கலக்குவீங்க நினைச்சா ஏமாத்தீட்டீங்களே. மணி ஆறு ஆச்சு, இன்னும் பதிவு ஒன்னையும் கானோம்?????

gayathri on March 11, 2009 at 6:17 PM said...

ennalaum march 10 marakka mudiyathu pa.

unaku kastamana naal.

enaku santhosamana naal

Anonymous said...

க(வி)தை நடை நான் ரொம்ப ரசிச்சேன்.. கவிதை வழிகிறது வரிகளிலெல்லாம்.. ஒரு படம் பார்ப்பதுபோல மனம் ஒட்டிக்கொண்டது இந்த பதிவினூடே...

வாழ்த்துக்கள் நண்பா!

அருமை!

King... on March 12, 2009 at 4:12 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி...

King... on March 12, 2009 at 4:16 AM said...

அனுஜன்யா said...

\\
பின்னூட்டத்தைப் பார்த்தால், புனைவு இல்லை. அனுபவம் என்று தோன்றுகிறது. ஆறுதல் மட்டுமே சொல்ல எங்களால் முடியும் :((

எழுத்து என்ற வகையில் உன்னுடைய மிகச் சிறந்த பதிவுகளுள் ஒன்று. ஸ்ரீமதியின் கவிதை மிக கச்சிதமாகப் பொருந்துகிறது. கிட்டத் தட்ட அய்ஸ் அளவுக்கு எழுதி இருக்கிறாய். Thats something man.

உனக்கு மார்ச் 10. MayVee க்கு ஜூன் 20. எனக்கு மே 3. ஏன் இவ்வளவு துக்கம் என்று யோசித்தேன். அது என் மணநாள் :) சிரிப்பு வராவிட்டாலும், சிரித்து விடு. அதுக்காகத்தான் இந்த கமெண்டு :)

Cheer up man.

அனுஜன்யா
\\

நடக்கட்டும்... :)

விஜய் on March 12, 2009 at 1:08 PM said...

Good story.........
karpanaiya, nijama???

Sinthu on March 13, 2009 at 9:25 PM said...

"// Sinthu said...
அப்படி என்றால் மார்ச் 10 ஐ நாங்கள் லீப் நாளாக மாத்திடுவோம் கார்க்கி அண்ணா//

உன் அன்புக்கு என்ன செய்ய்யப் போகிரேன் நான்?"
கைமாறா எத்தனை இருக்கு அதில ஒன்றைச் செயுங்க முதல் சரியா. அடடா என்ன கைமாறு என்று சொல்லவில்லையே. அது வேறு ஒன்றும் இல்லை. சந்தோசமாக இருக்கப் பாருங்க..

dharshini on March 13, 2009 at 10:37 PM said...

கற்பனை கதை super anna.
ஆனா கவிதை தான் சுமார்
(ச்சும்ம்மாதான் கோச்சிக்கபோறாங்க) :)

தமிழ்ப்பறவை on January 1, 2010 at 7:06 PM said...

எப்படி இப்படி ஒரு நல்ல போஸ்ட்டை மிஸ் பண்ணினேன்.. தமிழ்மண விருதுகளின் தயவால் படித்துத் தன்யனானேன்/... போஸ்ட் எக்ஸலெண்ட்ன்னு தனியா வேற சொல்லணூமா என்ன? ஆல்த பெஸ்ட் சகா...

பா.ராஜாராம் on January 5, 2010 at 4:38 AM said...

பரணி கருத்துதான் என்னுடையதும்..

thanks தமிழ்மணம்!

execelent kaarki!

hats off!

தமிழ்மணம் ஓட்டு போட தெரியாது கார்க்கி.தெரிஞ்சால் கண்டிப்பா ஓட்டு போடுவேன்.ஜெயிக்கணும் மக்கா.

kannaki on January 9, 2010 at 4:04 PM said...

நிஜமாய் இருந்தாலும் புனைவாய் இருந்தாலும் மனதை என்னமோ செய்துவிட்டது கார்க்கி.. இதுமாதிரி எத்தனையோ ஜீவன்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

 

all rights reserved to www.karkibava.com