Mar 6, 2009

கார்க்கியின் திருமணத்திற்கு வந்த பிரபலங்கள்


   வானனில் வீதி கார்த்திக் தெரியுமில்ல? என்னை போட்டு சாத்தனும்னு முடிவு செய்து நேத்து ஒரு பதிவு போட்டிருக்கார் அந்த தம்பி. ரொம்ம்ம்ம்ம்ம்ப நன்றிப்பா கார்த்திக். அதுக்கு இன்னும் சில கமெண்ட்டு போட்டு நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்து இதை பதிவாக போடுங்கனு சொன்னார். ( நீல நிற கமெண்ட்டுகள் சொன்ன பிரபல பதிவரை கெஸ் பண்ணுங்களேன்)

************************************************

  பிரபல பதிவர் கார்க்கிக்கு கல்யாணம் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியான இந்த செய்தியால் வலையுலகமே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், உலகெங்கும் இளம்பெண்களின் தற்கொலை முயற்சி பேரதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. (இவனுக்கெல்லாம் திருமணமான்னு சாவறாங்களா?)

   எனினும் நேற்று நடந்த திருமண நிச்சயதார்த்தத்திற்கு பல தமிழக, தேசிய, உலக பிரபலங்கள் / தலைவர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் பேசியபோது, (தொழிலதிபர்களே தேவலாம் போலிருக்கு. தலைவர்களாம்)

*****

இயக்குநர் மணிரத்னம்

நான் இங்க கார்க்கியோட ஃபேனா வந்திருக்கேன். (அப்ளாஸ்..!) இப்ப எழுதப்படுற எல்லா நல்ல ப்ளாக்லயும் கார்க்கியோட சாயல் தெரியுது. அந்த அளவு ப்ளாக் உலகத்தை கார்க்கி பாதிச்சிருக்கார்.

(இது என்ன உங்க டெம்ப்ளேட் பாராட்டா சார்? இதேயேதான் 'நான் கடவுள்' விழால பாலாவை பத்தியும் சொன்னீங்க?)

(கார்க்கி பாதிச்சாரான்னு தெரியல. ஆனா நீங்க ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போல)

ஏ ஆர் ரஹ்மான்

  நம்பவே முடியலை. நான் சிலருக்கு நன்றி சொல்லனும். (பாக்கெட்டில் இருந்து ஒரு லிஸ்ட்டை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார்.) டேனி பாய்ல், ஆன்ட்ரு வெப்பர், சென்னை, மும்பை, லண்டனில் இருக்கும் டெக்னீசியன்ஸ், ...

  (அடச்சே, ஒது கல்யாண பங்ஷன்னு யாராவது அவருக்கு ஞாபகப் படுத்துங்கப்பா. ஆஸ்கர் அழும்பு தாங்கலை.)

(ஆஸ்கார்னு சொன்னா என்கிட்ட மாருதி கார்தான் இருக்குனு சொல்லுவான் கார்க்கி. இதெல்லாம் நெம்ப ஓவரு)

Barack Obama

There is no easy task before us. But, We will rebuild America. (என்னது?) We will build new schools, new bridges, new roads. We will lay broadband, make solar panels, construct wind turbines, ....

(ஹேய், மொய் பணம் பத்திரமா இருக்கான்னு யாராவது பாருங்கப்பா!)

(சேசே.. தமில்ல பேசுங்கப்பா)

முதல்வர் கருணாநிதி

   தம்பி கார்க்கி என்னை சந்தித்து திருமணத்திற்கு அழைத்தபோது "உடல்நிலை ஒத்துழைத்தால் வருக" என்றார். ஆனால் என்னை இயக்குவது என் உடலல்ல. என்னுடைய மனம் என்பது உங்களுக்கு தெரியும். அந்த மனத்திற்கு சக்தியை அளிப்பது தமிழ். தம்பி கார்க்கியின் தமிழ்.
அந்தத் தமிழ் உலகத் தமிழர்களுக்கெல்லாம் சென்று சேரவேண்டும் என்பதால், இந்த அரசு, கார்க்கியின் படைப்புகளை நாட்டுடைமையாக்க உள்ளது. இது நான் தம்பி கார்க்கிக்கு தரும் திருமணப் பரிசு.

(இவரை கேள்வி கேட்க யாருமே இல்லையா?? இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு.)

(வுட்டா கார்க்கிக்கு பாராளமன்ற தேர்தல்ல ஒரு சீட்ட் கொடுத்திடுவார் போலிருக்கே)

டாக்டர். 'இளைய தளபதி' விஜய்

ம்ம், கார்க்கிக்கு வாழ்த்துக்கள்!
இந்த கல்யாணத்துக்கு வந்த எல்லாருக்கும் என் ரசிகர் மன்றம் மூலமா ரெயின் கோட்டும், சன் கிளாஸும் வழங்கப்படும். இது வெறும் சமூக சேவைதான். அரசியல் எல்லாம் இல்லைங்னா.

(நீங்க மட்டும் அரசியலுக்கு வந்தீங்க, நான் தமிழ் நாடு மட்டுமில்லை, இந்தியாவை விட்டே ஓடிப் போய்டுவேன்.)

(ண்ணா.. நல்ல வேளை உங்க ரசிகர்கள இவர் கல்யாணத்துக்கு தந்தி அடிக்க சொல்லாம இருந்தீங்களே)

அப்துல் கலாம்

2020ல் கார்க்கி ஒரு சூப்பர் ஹியுமனாக மாறவேண்டும். அதற்கு இளைஞர்கள் கனவு காண்பது அவசியம். கனவு காண்பதோடு நின்றுவிடாமல் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். மஹாராஷ்ட்ரா சென்றிருந்த போது ஒரு பள்ளிச் சிறுமி என்னை பார்த்து கேட்.....

(ஸாரி ஸார், மைக்ல ஏதோ ப்ராப்ளம். நீங்க நாளைக்கு பேசுங்களேன்.)

(விவேக் கூட சேராதீங்கனு சொன்னா கேட்டாத்தானே?)

மருத்துவர் ராமதாசு அய்யா

தம்பி மகிழ்வுந்து திறவுகோலுக்கு வாழ்த்துக்கள்!
அவர் மிகவும் ஒழுக்கமானவர். ஆனால் அவர் ஆங்கிலம் கலந்து எழுதுவது, புகைபிடிப்பது, கஞ்சா அடிப்பது, டக்கீலா அடிப்ப்து, பீர் சாப்பிடுவது போன்ற பழக்கங்களை கைவிடவேண்டும்.
இதை நான் ஒரு வேண்டுகோளாகத்தான் வைக்கிறேன்.

(ம்ம், இதுக்கு மேல் கல்யாணம் நடக்குமா என்பது சந்தேகம் தான். பத்த வெச்சுட்டயே பரட்டை?!)

(இந்த பழக்கமெல்லாம் இருக்கா கார்க்கிக்கு? அப்ப அவர் பாமக வா?)

*****

பாதுகாப்பு காரணங்களால் திருமணம் நடைபெறும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திருமணத்தை லைவ்வாக ஒளிபரப்ப பி.பி.சி 800 கோடிக்கு உரிமம் வாங்கியிருப்பதால், நீங்கள் உங்கள் வீட்டிலேயே காணமுடியும்.

(ஆவ்வ்வ். சன் டிவி வாங்கியிருந்தா அவர் கல்யாண வாழ்க்கை ஃப்ளாப் ஆகியிருக்கும். ஜஸ்ட் மிஸ்)

72 கருத்துக்குத்து:

muru on March 6, 2009 at 11:17 AM said...

நான் தான் பஸ்டு

கல்யாணத்திற்க்கு நானும் வந்திருந்தேன்

Anonymous said...

:P :P :P

[சகா நான் ஒருத்தர் மறுமொழி போட்ட பின்னர் போடுறேன்..] கிகிகி

தமிழ் பிரியன் on March 6, 2009 at 11:23 AM said...

:))))

narsim on March 6, 2009 at 11:34 AM said...

கலக்குங்க சகா.. ம்ம்ம்ம்

LOSHAN on March 6, 2009 at 11:36 AM said...

கார்க்கிக்கு வந்த சோதனை.. :)
கார்த்திக்கின் தளத்திலேயே பார்த்து சிரித்தேன்..இத்தனை பிரபலங்களைக் கூப்பிட்ட நீங்க என் நம்ம காவியத் தலைவன், அடுத்த இந்தியப் பிரதமர் சுப்பிரமணியம் சுவாமியைக் கூப்பிடல?

வித்யா on March 6, 2009 at 11:41 AM said...

என்னது உன் கல்யாணத்துக்கு ஜே.கே.ஆர் வரல போல:(

Kathir on March 6, 2009 at 11:46 AM said...

சகா,

கார்த்திக் கடையில நான் போட்ட பின்னூட்டம்....

//Kathir said...

நல்லா இருக்கு கார்த்திக்..

One more...

தல அஜீத்...

"நான் அதிகம் பேஸ் மாட்டேன்... நம்ம கார்க்கி "சில" பேருக்கு கொடி பிடிக்கறதை நிறுத்திட்டார் ன்னா அடுத்த வலையுலக சூப்பர் ஸ்டார் அவர்தான்.."

:))
//

prakash on March 6, 2009 at 11:49 AM said...

nice one....

Bleachingpowder on March 6, 2009 at 11:55 AM said...

//பதிவர் கார்க்கிக்கு கல்யாணம் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியான இந்த செய்தியால் வலையுலகமே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், உலகெங்கும் இளம்பெண்களின் தற்கொலை முயற்சி பேரதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.//

தல பேசாம நீங்க சன் டீவில நீயுஸ் வாசிக்க போலாம்:))

கார்க்கி on March 6, 2009 at 12:02 PM said...

/ muru said...
நான் தான் பஸ்டு

கல்யாணத்திற்க்கு நானும் வந்திருந்தேன்//

அப்படியா சகா? நான் போகலை :)

*************
// Thooya said...
:P :P :P

[சகா நான் ஒருத்தர் மறுமொழி போட்ட பின்னர் போடுறேன்..]//

அவரு போட்டாரு..

********
/ தமிழ் பிரியன் said...
:))))//

:)))))

**********
/ narsim said...
கலக்குங்க சகா.. ம்ம்ம்//

எனக்கு கல்யானம்ன்னா கலக்கறதா? நல்ல மனசு தல..

பொன்.பாரதிராஜா on March 6, 2009 at 12:03 PM said...

கார்க்கிக்கு வாழ்க்க தந்த அந்த அப்பாவிப் பொண்ணப் பத்தி யாரும் பேசலயே அப்பு...

கார்க்கி on March 6, 2009 at 12:09 PM said...

/ LOSHAN said...
கார்க்கிக்கு வந்த சோதனை//

அதையும் சாதனையா மாத்துவேன் சகா:)))

**********

// வித்யா said...
என்னது உன் கல்யாணத்துக்கு ஜே.கே.ஆர் வரல போல//

தலிவர் அவர் பிறந்த நாளில் பிசி

**********
@கதிர்,

கொடி பிடிக்கறத நிறுத்தினாதான் அது சாத்தியம்னா நமக்கு வேனாம் சகா. நாம நாமா இருக்கனும்.ரைட்டா?

********
/ prakash said...
nice one../

ஆமாம் சகா.

**********
/தல பேசாம நீங்க சன் டீவில நீயுஸ் வாசிக்க போலாம்:/
எனக்கு பிரச்சாரம் பண்ண புடிக்காது தல

அனுஜன்யா on March 6, 2009 at 12:13 PM said...

பிரபல கவிஞர் ஒருவர், கார்க்கி திருமணத்தில் வாசித்த 'கவிதை'யை, அது யாருக்கும் புரியவில்லை என்ற காரணம் காட்டித் தணிக்கை செய்தது கண்டனம் செய்யப்படுகிறது.

அனுஜன்யா

Kathir on March 6, 2009 at 12:19 PM said...

//கொடி பிடிக்கறத நிறுத்தினாதான் அது சாத்தியம்னா நமக்கு வேனாம் சகா. நாம நாமா இருக்கனும்.ரைட்டா?//

அது சும்மா சகா....

நம்ம "தல" வந்து "இளைய தளபதி"ய பத்தி பேசுற பஞ்ச்.....

:))

Lancelot on March 6, 2009 at 12:28 PM said...

thalai semma kalakkal post... he he he unmaya sollunga ungalluku kalyanama illaya???

அறிவிலி on March 6, 2009 at 12:42 PM said...

\\ Lancelot said...
thalai semma kalakkal post... he he he unmaya sollunga ungalluku kalyanama illaya???\\


நெருப்பில்லாம புகையுமா?

Kathir on March 6, 2009 at 12:57 PM said...

//நெருப்பில்லாம புகையுமா?//

அதானே....!!!

:))

தராசு on March 6, 2009 at 1:30 PM said...

யோவ்,

இன்னாது இது நெருப்புங்கறாங்க, புகைன்றாங்க,

இன்னா நடக்குது, புரியறமாதிரி மாட்லாடுங்க தல.

பரிசல்காரன் on March 6, 2009 at 1:36 PM said...

நீ சொன்னதை வைத்துத்தான் உனக்குக் கல்யாண வாழ்த்து சொன்னேன். வெளியில் தெரிய வேண்டாம் என்று நீ சொல்லியிருந்தால் நான் பின்னூட்டத்தில் வெளியிட்டிருக்கவே மாட்டேன். அதனால் நீ ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானதில் வருத்தப்பட்டிருந்தால் ஸாரி.

narsim on March 6, 2009 at 1:43 PM said...

சகா.. மேட்டர் சீரியஸ் என்பது தெரியாமல் வாழ்த்தாமல் இருந்து விட்டேன்.. பரிசலின் அலை(ழை)ப்பில் தான் தெரிந்து கொண்டேன்.. வாழ்த்துக்கள் சகா.. திருமண வாழ்வு என்பது அடுத்த கட்ட வாழ்க்கை.. வாழ்த்துக்கள்..

ஒரு வருத்தம் சகா.. பரிசல் சொல்லித்தான் தெரிய வந்தது.. உன் வாயால் சொல்லி இருக்கலாம்..

வாழ்த்துக்கள்..

ஸ்ரீமதி on March 6, 2009 at 1:55 PM said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா :)))

வண்ணத்துபூச்சியார் on March 6, 2009 at 2:04 PM said...

கலக்கல்..

Anonymous said...

paathu sir, nijamavee vanthira poranga....

KaveriGanesh on March 6, 2009 at 3:00 PM said...

தென்னக்த்தின் ஆர்னால்டு JKR ரசிகர் மன்றத்தின் சார்பாக என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்

தமிழன்-கறுப்பி... on March 6, 2009 at 3:41 PM said...

:))))))))))

தாமிரா on March 6, 2009 at 3:56 PM said...

அவ்வ்வ்.. கொலவெறி மொக்கை.!

தாமிரா on March 6, 2009 at 3:57 PM said...

narsim said...
சகா.. மேட்டர் சீரியஸ் என்பது தெரியாமல் வாழ்த்தாமல் இருந்து விட்டேன்.. பரிசலின் அலை(ழை)ப்பில் தான் தெரிந்து கொண்டேன்.. வாழ்த்துக்கள் சகா.. திருமண வாழ்வு என்பது அடுத்த கட்ட வாழ்க்கை.. வாழ்த்துக்கள்..
ஒரு வருத்தம் சகா.. பரிசல் சொல்லித்தான் தெரிய வந்தது.. உன் வாயால் சொல்லி இருக்கலாம்.. //

டாய் இங்க‌ என்னா ந‌ட‌க்குது? என்ன‌திது ச்சின்ன‌ப்புள்ள‌த்த‌ன‌மா? ப‌ரிச‌ல் என்ன‌ டுபாக்கூர் வுட்டுகினுருக்காரா?

தாமிரா on March 6, 2009 at 4:14 PM said...

ஸாரி, கார்க்கி இப்போதான் நர்சிம் போன் பண்ணினார்.. மகிழ்ச்சி.. வாழ்த்துகள். பே.பா (பேச்சுலர் பார்ட்டி) எப்போ?

MayVee on March 6, 2009 at 4:18 PM said...

super.....

karthik writting kku neenga thantha commentu.....

MayVee on March 6, 2009 at 4:18 PM said...

me th 30 th

MayVee on March 6, 2009 at 4:20 PM said...

saringa vudu thola....
Bachelors degree mudiyachachu....
ippo neenga
Masters panna poringa....
avalavu thaan

be happy.....
thunbam varum velaiyil siringa....

எம்.எம்.அப்துல்லா on March 6, 2009 at 4:25 PM said...

//
ஒரு வருத்தம் சகா.. பரிசல் சொல்லித்தான் தெரிய வந்தது.. உன் வாயால் சொல்லி இருக்கலாம்.. //

கார்க்கி நீ என்னிடம் இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம்...நான் உங்களிடமும் பரிசலிடமும் மட்டும் தான் சொல்லி இருக்கிறேன் என்ற போதே சொன்னேன்...பரிசல் பச்சப் புள்ள மாதிரி, அவருக்கிட்ட ரகசியம் சொன்னதுக்கு நீ எல்லாரிடமும் சொல்லி இருக்கலாம்னு சொன்னேன். நான் சொன்னது நடந்துருச்சா இப்போ!!!!

எம்.எம்.அப்துல்லா on March 6, 2009 at 4:27 PM said...

// பே.பா (பேச்சுலர் பார்ட்டி) எப்போ?

//


க்கும்...அதுல மட்டும் குறியா இருங்க
:))))

அத்திரி on March 6, 2009 at 4:30 PM said...

ஊருக்கு போயிட்டு வறதுக்குள்ள அவசரப்பட்டுடியல.. சொல்லியிருந்தா அல்வா வாங்கிட்டு வந்திருப்பேன்ல.......

))))))))))))))))))

தாமிரா on March 6, 2009 at 4:35 PM said...

உங்களிடமும் பரிசலிடமும் மட்டும் தான் சொல்லி இருக்கிறேன்//

sollaveyilla paatheengala Abdul.! ungkakooda kaa.!

coolzkarthi on March 6, 2009 at 4:44 PM said...

/ muru said...
நான் தான் பஸ்டு

கல்யாணத்திற்க்கு நானும் வந்திருந்தேன்//

அப்படியா சகா? நான் போகலை :)

haiyo haiyo...

coolzkarthi on March 6, 2009 at 4:44 PM said...

வாழ்த்துக்கள் சகா.....அடுத்த தபா ஒபாமாவா பாத்தா கேட்டதா சொல்லுங்க....

ஸ்ரீமதி on March 6, 2009 at 4:46 PM said...

வாழ்த்துகள் அண்ணா :))

நீங்க சொல்லலேன்னா எங்களுக்கு சொல்ல ஆளா இல்ல??

இருந்தாலும் சொல்லாதது கொஞ்சம் வருத்தம் தான்.. :((

//தாமிரா said...
உங்களிடமும் பரிசலிடமும் மட்டும் தான் சொல்லி இருக்கிறேன்//

sollaveyilla paatheengala Abdul.! ungkakooda kaa.!//

Naan anna kooda pazham... :))

Thusha on March 6, 2009 at 5:17 PM said...

அட வாழ்த்துக்கள் அண்ணா
Eaxms என்பதால் கொஞ்சம் busy ya இருந்துட்டான் மறுபடி வந்த இங்க ஒரே நல்ல செய்தியா இருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

வெயிலான் on March 6, 2009 at 5:33 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி!

என்ன இருந்தாலும், போன்லயாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.

Karthik on March 6, 2009 at 5:55 PM said...

ரொம்ப்ப்ப்ப்ப நன்றி கார்க்கி.

:)))

//நீல நிற கமெண்ட்டுகள் சொன்ன பிரபல பதிவரை கெஸ் பண்ணுங்களேன்

கமெண்ட்ஸ் எல்லாம் கலக்கலா இருக்கு. யாருங்க அது??

Kathir on March 6, 2009 at 6:01 PM said...

//என்ன இருந்தாலும், போன்லயாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.//

போன்ல இல்லைன்னா மெயில்லயாவது "ரெண்டு" வார்த்தை சொல்லியிருக்கலாம்......

Kathir on March 6, 2009 at 6:06 PM said...

கார்க்கி எங்கே இருந்தாலும் மேடைக்கு வரவும்......
எல்லோரும் வாழ்த்து சொல்றாங்க..
வந்து நன்றி சொல்லிவிட்டு போகவும்......

(இல்லைன்னா உன் சார்புல நாங்களே
சொல்லிடறோம்....)

அன்புடன் அருணா on March 6, 2009 at 6:09 PM said...

ம்ம்ம் இதை வைத்து இன்னும் எத்தனை பதிவு ஓட்டப் போறீங்கன்னு பார்க்கலாம்...
அன்புடன் அருணா

ச்சின்னப் பையன் on March 6, 2009 at 6:20 PM said...

:-)))

Massattra Kodi on March 6, 2009 at 6:20 PM said...

இந்த விளையாட்டு ஒரு சீசன் போல ! முன்பு அதிஷா, இப்போ கார்க்கி....

By any chance நெஜமாவே கல்யாணம் என்றால் வாழ்த்துகள் Mrs.கார்க்கி (தங்கமான புள்ள !)

அன்புடன்
மாசற்ற கொடி

முரளிகண்ணன் on March 6, 2009 at 6:36 PM said...

கார்க்கி

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

ஆறு மாதம் தான் நம் பழக்கம் என்றாலும் 60 வருட பிரியம் வைத்திருந்தேன்.

அப்துல்லா, பரிசலிடம் இருக்கும் பாசத்தில் 1% கூட என்னிடம் இல்லை என்றதும் மனசுக்கு என்னவோ போலிருக்கிறது.

கடைசியில் நர்சிம் தான் எனக்கு சொன்னார்.


பரவாயில்லை கார்க்கி. நீ இதை ரயில் சினேகிதம் என நினைத்துவிட்டாய். நான் ரயில்வே வேலை அளவுக்கு உறுதியானது என நினைத்தது என் தவறுதான்.

இருந்தாலும் ஆறு மாத பழக்கத்துக்காக

வாழ்த்துக்கள் சகா...

ஸ்ரீதர் on March 6, 2009 at 7:54 PM said...

மண்ட காய வைக்கிறாங்கப்பா.கார்க்கி கல்யாணம் ஆயிடுச்சா இல்லையா.நானெல்லாம் வெள்ள மனசுக்காரன்.சுத்தி வளைச்சுப் பேசுனா புரியாது.ஒரு வேளை ஆயிடுச்சுன்னா வாழ்த்துக்கள்.இல்ல இனிமேதான் ஆகப் போகுதுன்னாலும் வாழ்த்துக்கள்.

லவ்டேல் மேடி on March 6, 2009 at 8:59 PM said...

// பிரபல பதிவர் கார்க்கிக்கு கல்யாணம் என்பது அனைவரும் அறிந்ததே. //


ஆமாங்கோவ்..!!! இவுரு நெம்ப பிரபலமுங்கோவ் .....!!! நேரிய அஜால் .... குஜால் ..... கதையெல்லாம் எழுதுவாருங்கோவ்....!!! பூரா பதிவுமே ..... நெம்ப செக்ஸியா இருக்குமுங்கோவ் ..........!!!// நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியான இந்த செய்தியால் வலையுலகமே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் //


ஆமாங்கோவ்....!! இதுனால ஊரு ஒலகமெல்லாம் .... மசற புடுச்சுகிட்டு
அடுச்சுக்குராங்கோவ் ...!!!!!// உலகெங்கும் இளம்பெண்களின் தற்கொலை முயற்சி பேரதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. //


ஆமாங்கோவ்....!! நேத்து எங்க பக்கத்தூட்டு ஆயாகிட்ட கார்க்கிக்கு கண்ணாலமுன்னு சொன்னேனுங்கோவ்....!! அந்த நிமுசமே அந்த பலுப்பு நாண்டுகிட்டு செத்துபோச்சுங்கோவ்....!!!! இதெல்லாம் நெம்ப பாவமுங்கோவ்...!!!


//எனினும் நேற்று நடந்த திருமண நிச்சயதார்த்தத்திற்கு பல தமிழக, தேசிய, உலக பிரபலங்கள் / தலைவர்கள் வந்திருந்தனர் //


ஆமாங்கோவ்....!! எங்க காவியத் தலைவி " ஷகிலா "....... , குலுக்கு நடிகை
" மும்தாசு " ....., கேபரே குயீன் " சூனியர் சிலுக்கு " .... இன்னுமும் நேரிய பேரு வந்தாங்கோவ்......!!!!!!


// இயக்குநர் மணிரத்னம் //


// நான் இங்க கார்க்கியோட ஃபேனா வந்திருக்கேன். //

ஃபேநு நல்ல சுத்துமுங்களா...???? நல்ல காத்து வருமுங்களா...?? இல்லீனா உங்க படம் மாதிரியே நின்னு ... நின்னு ... ஓடுமுங்களா...????


// இப்ப எழுதப்படுற எல்லா நல்ல ப்ளாக்லயும் கார்க்கியோட சாயல் தெரியுது. அந்த அளவு ப்ளாக் உலகத்தை கார்க்கி பாதிச்சிருக்கார். //

ஆமாங்கோ......!!! " கபால கன்னித்தீவு " , " சொப்பனத்தில் சுந்தரி " , " நாடு ஆத்தில் நந்தினி " , " கார்கியும் கமலாவும் " .. இந்த எல்லா பதிவுளையும் டபுள் மீனிங்கா போட்டு ...... ஒலகத்த நெம்ப பாத்துச்சு போட்டாருங்கோவ்....!!!!


// ஏ ஆர் ரஹ்மான் //

// நம்பவே முடியலை. நான் சிலருக்கு நன்றி சொல்லனும். //


(பாக்கெட்டில் இருந்து ஒரு லிஸ்ட்டை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார்.)


!. கடல பருப்பு ..

2. உளுத்தம் பருப்பு .

3. கடல எண்ணை.

4. நல்ல எண்ணை .

5. கடுகு .

6. காஞ்ச மொளகா .

7. கருவேப்பிலை .

8. உப்பு .

9. புளி .

10. பெருங்காயம் .


// Barack ஒபாமா //


//There is no easy task before us. But, We will rebuild America. (என்னது?) We will build new schools, new bridges, new roads. We will lay broadband, make solar panels, construct wind turbines, .... //மொதல்ல அவரோட பேன்ட்டுல ஜிப்ப போடா சொல்லுங்கோவ்......!!!!!மீதிக்கி நாளைக்கு வரனுங்க தம்பி.......!!!!!!!!!

வெட்டிப்பயல் on March 6, 2009 at 9:08 PM said...

//மருத்துவர் ராமதாசு அய்யா தம்பி மகிழ்வுந்து திறவுகோலுக்கு வாழ்த்துக்கள்!
அவர் மிகவும் ஒழுக்கமானவர். ஆனால் அவர் ஆங்கிலம் கலந்து எழுதுவது, புகைபிடிப்பது, கஞ்சா அடிப்பது, டக்கீலா அடிப்ப்து, பீர் சாப்பிடுவது போன்ற பழக்கங்களை கைவிடவேண்டும்.
இதை நான் ஒரு வேண்டுகோளாகத்தான் வைக்கிறேன். (ம்ம், இதுக்கு மேல் கல்யாணம் நடக்குமா என்பது சந்தேகம் தான். பத்த வெச்சுட்டயே பரட்டை?!) (இந்த பழக்கமெல்லாம் இருக்கா கார்க்கிக்கு? அப்ப அவர் பாமக வா?)
//

Kalakal...
especially Car Key :)

வெட்டிப்பயல் on March 6, 2009 at 9:09 PM said...

All the best Karki...

ILA on March 6, 2009 at 9:30 PM said...

All the Best! (கண்ணாலத்துக்கு அப்புறம் முன்னால் பதிவராகப் போகும் கார்க்கிக்கு எங்களது பணிவான நமஸ்காரங்கள்))

நான் ஆதவன் on March 6, 2009 at 11:00 PM said...

ஹா..ஹா..ஹேய் கார்க்கி...வசமா...மாட்டிகிட்டான் ஹேய் (அலைபாயுதே ஸ்டைலில் படிக்கவும்)

கணினி தேசம் on March 6, 2009 at 11:09 PM said...

You've missed this VIP speech !

ப.சிதம்பரம்
"
இத்தனை தலைவர்களை ஒரே இடத்துல அழைத்து செக்யூரிட்டி தருவது சிக்கலான விடயம். அனால், நான் கார்க்கியின் ரசிகன் என்பதால் நானே முன்னின்று விழா செக்யூரிட்டி பணிகளை கவனித்தேன். நன்றி"

வால்பையன் on March 6, 2009 at 11:13 PM said...

//தம்பி மகிழ்வுந்து திறவுகோலுக்கு வாழ்த்துக்கள்!
அவர் மிகவும் ஒழுக்கமானவர். ஆனால் அவர் ஆங்கிலம் கலந்து எழுதுவது, புகைபிடிப்பது, கஞ்சா அடிப்பது, டக்கீலா அடிப்ப்து, பீர் சாப்பிடுவது போன்ற பழக்கங்களை கைவிடவேண்டும்.
இதை நான் ஒரு வேண்டுகோளாகத்தான் வைக்கிறேன்.

(ம்ம், இதுக்கு மேல் கல்யாணம் நடக்குமா என்பது சந்தேகம் தான். பத்த வெச்சுட்டயே பரட்டை?!)//


இது தான் இருக்குறதுலயே சூப்பர் கமெண்ட்!

உண்மையிலேயே கார்க்கியோட கல்யாணத்துக்கு ராமதாஸை கூப்பிட்டால் ஒரு பொண்ணோட வாழ்க்கை தப்பிக்கும்!

Anonymous said...

"தில் தில் திகில்..."
என்ற கதைக்காகத் தங்களை அழைக்கிறேன்.
http://mahawebsite.blogspot.com/

தமிழ்பித்தன் on March 7, 2009 at 4:31 AM said...

உங்களுக்கு எவனையா பொண்ணு கொடுத்தது

MayVee on March 7, 2009 at 8:07 AM said...

"தமிழ்பித்தன் said...
உங்களுக்கு எவனையா பொண்ணு கொடுத்தது"

avaru romba nallavarunga

MayVee on March 7, 2009 at 8:09 AM said...

"Karthik said...


//நீல நிற கமெண்ட்டுகள் சொன்ன பிரபல பதிவரை கெஸ் பண்ணுங்களேன்

கமெண்ட்ஸ் எல்லாம் கலக்கலா இருக்கு. யாருங்க அது??"

me too same doubt

MayVee on March 7, 2009 at 8:09 AM said...

me th 60th

Sinthu on March 7, 2009 at 9:47 AM said...

ஏன் ஏன் ஏன் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது.....?

Sinthu on March 7, 2009 at 9:52 AM said...

"
LOSHAN said...
கார்க்கிக்கு வந்த சோதனை.. :)
கார்த்திக்கின் தளத்திலேயே பார்த்து சிரித்தேன்..இத்தனை பிரபலங்களைக் கூப்பிட்ட நீங்க என் நம்ம காவியத் தலைவன், அடுத்த இந்தியப் பிரதமர் சுப்பிரமணியம் சுவாமியைக் கூப்பிடல?"

அண்ணா கல்யாணம் ஒரு சோதனையா.... யாராவது இந்தப் பின்னூட்டலைப் பார்த்தால் பிரச்சனை ஆகிடப் போகிறதே....
நான் இப்போ ஊரைச் சுற்று காற்று என்று பாடின ஆள் தானே நீங்க ( சூரியன்)
இது லோஷன் அண்ணாவுக்கு,,.,.

மண்குதிரை on March 7, 2009 at 10:02 AM said...

கார்க்கி புரியல நெஜமாக உங்களுக்கு கல்யாணமா?

அப்படி இருந்தால் என் வாழ்த்துக்கள்

வக தக இல்லாம எல்லாரையும் போட்டு தாக்கிட்டேங்கள நண்பா

ரசித்தேன்.

RAMYA on March 8, 2009 at 8:43 AM said...

என்னாது உன் கல்யாணத்துக்கு பாலகுமாரன் வரலை போல் இருக்கு போப்பா!!

அவருக்கு அழைப்பிதல் கொடுக்கலையா??

வர வர ரொம்பா ஜாஸ்தியா போச்சு. அட்டகாசமும் அளவிற்கு அதிகமா போச்சு.

சரி சரி வந்திருந்த எல்லா பெரியவங்களுக்கும் என் நன்னி.

RAMYA on March 8, 2009 at 8:44 AM said...

//
தமிழ்பித்தன் said...
உங்களுக்கு எவனையா பொண்ணு கொடுத்தது

//


Ha ha ha super joke!!

RAMYA on March 8, 2009 at 8:44 AM said...

//
கார்க்கி said...
/ muru said...
நான் தான் பஸ்டு

கல்யாணத்திற்க்கு நானும் வந்திருந்தேன்//

அப்படியா சகா? நான் போகலை :)

//

ச்சே அப்போ???

RAMYA on March 8, 2009 at 8:47 AM said...

வீட்டு அட்ரஸ் கொடுங்க நான் வீட்டுக்கு போயி பேசறேன்
தொல்லை தாங்கலை.

கலயாணம் கல்யாணம் என்று சொல்லு பல பதிவுகள்.

வர வர பொலம்பல் பொன்னம்பலம் ஆகிட்டீங்க.

Anonymous said...

இது தான் எனக்கு முன்னாடியே தெரியுமே. நான் அங்கயே பார்த்திட்டேன்.

viji on March 8, 2009 at 12:59 PM said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

விஜய் on March 9, 2009 at 2:59 PM said...

MMMM nandru.......

Lakshmi on March 9, 2009 at 7:33 PM said...

hai frnd, i saw ur blog id in divya site. unga kita oru vishayam solanum. don't delete this comment. plz do post it in ur blog.

http://manasukulmaththaapu.blogspot.com/2009/01/1.html

divya has steald all our writings. naanga kastapatu yosithu ezudhum stories ellam thirudi potu irukaanga.

plz refer this site. naanga elorum ezudhiya story iruku. including en vasam naan illai. she changed the title and charecters names. unga elorukum idhu theriyanumnu soli thaan am posting this.

plz neengalum indha maadhiri cheating-ku thunai poga vendam.

http://amutha.wordpress.com/2009/03/07/copying-our-stories/

indha maadhiri asingamana persons kooda irukaanganu neenga elorum therindhu kolla vendam.if u respect us plz do help us friend. becoz idhu engalin vilai uyarndha eluthu.idhai thiruda naanga anumadhika mudiyaadhu. naanga elorum evlo comments potu kooda still shez doing the same thing.

PLEASE CONSIDER OUR REQUEST

டக்ளஸ்....... on March 10, 2009 at 11:08 AM said...

கருணா நிதிக்கு கார்க்கி தம்பின்னா...அய்யோ..கார்க்கிக்கு என்ன வாயசு...
(கால்குலேட்டர் அழுகிறது...)

அமெரிக்க ஒபாமா வந்த க்ல்யாணத்துக்கு ஏன் தமிழக ஒபாமா ஜே,கே,ரித்திஸ் வரலை...
இதுல ஏதோ உள்குத்து இருக்கு...சி.பி.ஐ. வைங்கப்பா...

 

all rights reserved to www.karkibava.com