Mar 3, 2009

போட்டி.. பரிசு.. எல்லோரும் வாங்க..


  ஒன்னுமில்லைங்க. ச்சும்மா ஒரு விஷயம் சொல்லலாம்னு. ஏன்? ச்சும்மா சொன்னா கேட்க மாட்டிங்களா? சரி.பரிசு  தந்தா கேட்பீங்களா? ச்சும்மா ச்சும்மா  குறுக்கப் பேசாம விஷயத்த கேட்கறது மட்டுமில்லாம சொல்ற‌படி செஞ்சீங்கன்னா பரிசு  உண்டு.ஓகேவா? என‌க்கு கேட்காது. இருந்தாலும் ப‌ர‌வாயில்லா ச்சும்மா ஒரு வாட்டி ஓகேனு சொல்லுங்க‌ளேன். சொல்ற‌வ‌ங்க‌ அதிர்ஷ்ட‌சாலி. அவ்ளோதான் இப்போதைக்கு சொல்லுவேன்.அப்புறம் நீ ச்சும்மா சொன்னேனு  நினைச்சு சொல்லாம விட்டுtடேனு கஷ்டப்பட்டு பிரயோஜனமில்ல.

   உன‌க்கு ம‌ட்டும் தின‌மும் ப‌திவெழுத எப்படி  நேரம் கிடைக்குதுனு ப‌ல‌ பேர் ச்சும்மா  ச்சும்மா கேட்க‌றாங்க‌. இன்னைக்கு சொல்றேங்க‌. நான் ம‌ட்டும் என்ன‌ வேலைக்கு போவாம‌  ச்சும்மாவா இருக்கேன்? இல்லை வேலைக்குப்  போய் வேலையே செய்யாம ச்சும்மா சம்பளம் கொடுக்கறாங்களா? ச்சும்மா  விளையாட்டுக்கு கூட‌ அப்ப‌டி சொல்லாதீங்க‌. நான் ப‌ட‌ற‌ க‌ஷ்ட‌ம் என‌க்குத்தான் தெரியும். ஒரு நிமிஷ‌ம் ச்சும்மா இருக்க‌ விட‌ மாட்டாரு எங்க‌ டேமேஜ‌ர். ச்சும்மா  சொன்ன‌தே திருப்பி திருப்பி சொல்லி பாதி நாள‌ வேஸ்டாக்கிடுவாரு. நான் ஒன்னும்  ச்சும்மா சொல்லலைங்க‌. நெச‌மாத்தான்.

  ஒரு நாள் எப்படியோ அஞ்சு  நிமிஷம் என்ன ச்சும்மா இருக்க விட்டாருங்க. நான் ச்சும்மா இல்லாம காதுல சொருகி  பாட்டுக் கேடக ஆரம்பிச்சேங்க.

ச்சும்மா ச்சும்மா ச்சும்மா ச்சும்மா ச்சும்மா

பொண்ணு ஒருத்தி ச்சும்மா ச்சும்மா

பார்த்து சிரிச்சு ச்சும்மா ச்சும்மா..

அட சரியான பாட்டுதான்னு நினைச்சேன். ச்சும்மாதானே இருக்கோம் இந்தப் பாட்டுல எத்தனை தடவ ச்சும்மா வருதுனு  கணக்குப் பண்ணலாம்னு நினைச்சேங்க. ச்சும்மா சொல்லக்கூடாதுங்க. சூப்பரா எழுதியிருக்காங்க. ஒரு இடத்துல கூட ச்சும்மாவ ச்சும்மா யூஸ் பண்ணவேயில்ல. நல்ல அர்த்தம். நீங்களும்  ச்சும்மா இருக்கும்போது ச்சும்மா ச்சும்மா பாட்டக் கேட்டுப் பாருங்க. ச்சும்மா  கூச்சப்படாம வாய் வரைக்கும் வந்த டவுட்ட கேளுங்க. காயத்ரி ரகுராம் பிரபுதேவா தோள் வரைக்கும் கால தூக்கி போடுவாளே அந்தப் பாட்டுதானானு நீங்க கேட்கறது எனக்கு  கேட்குது. என்ன ரெண்டு கேட்கறதுனு குழம்பறீங்களா? நீங்க வாயால கேட்கறது எனக்கு  காதுல கேட்குது. ச்சும்மா ச்சும்மா பேச்ச மாத்தாதீங்க. நானே எங்கெங்கோ போயிட்டேன். எங்க விட்டோம்? ஆங்ங்ங் ச்சும்மால..அதுக்குள்ள அஞ்சு நிமிஷம் ஆயிடுசுச்சா? ச்சும்மா இருக்கிறத கண்டா எங்க டேமேஜருக்குதான் ஆகாதே. வந்து தந்தாருங்க வேலை. ச்சும்மா ச்சும்மா இதே வேலையாப் போச்சு இந்தாளுக்கு.

பரிசு உண்டுனு ச்சும்மா  சொன்னேன் நினைச்சீங்களா? இந்த மாதிரி ச்சும்மா வெட்டியா எழுதாம உருப்படியா ஒன்னு  செய்ங்க. புள்ளி ராஜா, அர்ஜூன் அம்மா யாருன்ற மாதிரி என் வலைல ஒரு மேட்டர் போட்டு இருக்கேன். அது எதைப் பற்றியது என்று தனிமடலில் சொல்லுங்கள். சரியாக யூகிப்பவர்களுக்கு பரிசு உண்டு.அனுப்ப வேண்டிய முகவரி blogkarki@gmail.com

   கடைசியா ஒரு மேட்டர் (இன்னும் முடியலையானு கேட்கறவன் யாருடா) மொத பத்தில ’ஓகே’ சொல்ல சொன்னேனே. நீங்க சொன்னீங்களா? ஒன்னுமில்லைங்க. ச்சும்மாதான் சொல்ல சொன்னேன். மொத பத்தில சொல்ல சொன்னத பத்தி  கடைசி பத்தில கேட்டேனேனு நடுவுல இருக்கிற பத்தில போட்டிய பத்தி சொன்னத  மறந்துடாதீங்க. சரியா?

டிஸ்கி: நணபர்கள் விடையை தனி மடலில் மட்டுமே தெரியப்படுத்தவும். பின்னூட்டங்களில் வேண்டாமே. ப்ளீஸ்

52 கருத்துக்குத்து:

MayVee on March 3, 2009 at 10:40 AM said...

ME TH 1ST

MayVee on March 3, 2009 at 10:40 AM said...

ME TH 2ND

Mahesh on March 3, 2009 at 10:45 AM said...

நானும் ச்சும்மா ஒரு கமெண்ட் போட்டு வெக்கறேன்....

MayVee on March 3, 2009 at 10:47 AM said...

YENNA karki anna elutha matter ethum illaiya?????

summa entra ஒரு வார்த்தையை வைத்து கொண்டு ஒரு மொக்கை பதிவு எழுதிருக்கிங்க......
தமிழ் தாய் உங்களை bless பண்ணட்டும்.......

prakash on March 3, 2009 at 10:47 AM said...

200 வது பதிவுதானே?
வாழ்த்துகள்

MayVee on March 3, 2009 at 10:49 AM said...

" prakash said...
200 வது பதிவுதானே?
வாழ்த்துகள்"


appadiya....
200 varaikkum kummi adikkalama prakash

MayVee on March 3, 2009 at 10:49 AM said...

"Mahesh said...
நானும் ச்சும்மா ஒரு கமெண்ட் போட்டு வெக்கறேன்...."

same blood

MayVee on March 3, 2009 at 10:50 AM said...

"புள்ளி ராஜா, அர்ஜூன் அம்மா யாருன்ற மாதிரி என் வலைல ஒரு மேட்டர் போட்டு இருக்கேன். அது எதைப் பற்றியது என்று தனிமடலில் சொல்லுங்கள்."


enna gift athu

கார்க்கி on March 3, 2009 at 10:54 AM said...

மேவீ,

நடக்கட்டும் நாச வேலைகள்

தொடங்கட்டும் துஷ்ட தனங்கள் :))

****
/ Mahesh said...
நானும் ச்சும்மா ஒரு கமெண்ட் போட்டு வெக்கறேன்..//

ரைட் ரைட்

************
// prakash said...
200 வது பதிவுதானே?
வாழ்த்துகள்//

இலண்ணே.. இங்க சொல்ல வேண்டாமே. ப்ளீஸ்

Cable Sankar on March 3, 2009 at 11:24 AM said...

சும்மா. சும்மா எதையாச்சும் இப்படி மொக்கையா எழுதியே பேர்வாங்குபவர்கள் இருக்கிறார்க்ள்..

Lancelot on March 3, 2009 at 11:46 AM said...

amma mudiyalayae chumma
tamil nattuku kaveri varumma
chappathikku thottuka kuruma
intha postaa padikka thevai poruma...

எம்.எம்.அப்துல்லா on March 3, 2009 at 11:54 AM said...

அட போப்பா...காலையிலேயே...

விஜய் on March 3, 2009 at 11:58 AM said...

Shabba.........
Mudiyala.......

ஸ்ரீமதி on March 3, 2009 at 12:03 PM said...

exactly whats ur problem?? :)

Anbu on March 3, 2009 at 12:18 PM said...

சும்மா தான் வந்தேன் அண்ணா.. சும்மா சொல்லக்கூடாது.சும்மா கலக்கீட்டிங்க!

gayathri on March 3, 2009 at 12:19 PM said...

summa intha pakkam vanthu pakalamnu vantha.summa oru pathivu pottu irukenga.naan atha pathuthu summa pona neenga summa irupengala.athanala summa oru comment avalavu than

gayathri on March 3, 2009 at 12:20 PM said...

MayVee said...
" prakash said...
200 வது பதிவுதானே?
வாழ்த்துகள்"


appadiya....
200 varaikkum kummi adikkalama prakash

adikalame naan ready neega readya

வால்பையன் on March 3, 2009 at 12:22 PM said...

முடியல
அழுதுருவேன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

வால்பையன் on March 3, 2009 at 12:22 PM said...

//ஸ்ரீமதி said...

exactly whats ur problem?? :)//

சும்மா இருக்குறது தான் ப்ராபளம்

narsim on March 3, 2009 at 12:27 PM said...

வாழ்த்துக்கள் சகா.. ச்சும்மா ச்சொன்னேன்

Bleachingpowder on March 3, 2009 at 12:40 PM said...

//நான் ம‌ட்டும் என்ன‌ வேலைக்கு போவாம‌ ச்சும்மாவா இருக்கேன்? இல்லை வேலைக்குப் போய் வேலையே செய்யாம ச்சும்மா சம்பளம் கொடுக்கறாங்களா? //

நாங்க ஒன்னுமே கேட்கலை....நீங்களா தான் உளறீட்டீங்க தல :))

மண்குதிரை on March 3, 2009 at 12:59 PM said...

வணக்கம் நண்பா

நல்லாருக்கு

ச்சும்மா இல்ல நெசமாகத்தான்

கார்க்கி on March 3, 2009 at 1:08 PM said...

// Cable Sankar said...
சும்மா. சும்மா எதையாச்சும் இப்படி மொக்கையா எழுதியே பேர்வாங்குபவர்கள் இருக்கிறார்க்ள்//

என் கடைக்கு வந்து உங்க கடைக்கு விளம்பரமா?????

************
// Lancelot said...
amma mudiyalayae chumma
tamil nattuku kaveri varumma
chappathikku thottuka kuruma
intha postaa padikka thevai poruma.//

சரிதான் போடா எருமன்னு சொல்லாம விட்டிங்களே.. நன்றி சகா

************
/ எம்.எம்.அப்துல்லா said...
அட போப்பா...காலையிலேயே.//

ஆமாண்னே காலைலதான் போனேன்..

***********
// விஜய் said...
Shabba.........
Mudiyala......//

:)))

***********
/ ஸ்ரீமதி said...
exactly whats ur problem?? //

அது தெரிஞ்சா நான் ஏன் உன் கூட எல்லாம் சேரப் போறேன்?

கார்க்கி on March 3, 2009 at 1:11 PM said...

// Anbu said...
சும்மா தான் வந்தேன் அண்ணா.. சும்மா சொல்லக்கூடாது.சும்மா கலக்கீட்டிங்க//

சும்மா போகாம பின்னூட்டம் போட்டதுக்கு ஒரு நன்றி. சும்மா வாங்கிக்க..

***********
/வால்பையன் said...
முடியல
அழுதுருவே//

வெற்றி வெற்றி வெற்றி

*************
/narsim said...
வாழ்த்துக்கள் சகா.. ச்சும்மா //

ரைட் ரைட். நோ க்ளுஸ்

********
/ மண்குதிரை said...
வணக்கம் நண்பா

நல்லாருக்கு

ச்சும்மா இல்ல நெசமாகத்தா//

நன்றி சகா..
***********

// Bleachingpowder said...
//நான் ம‌ட்டும் என்ன‌ வேலைக்கு போவாம‌ ச்சும்மாவா இருக்கேன்? இல்லை வேலைக்குப் போய் வேலையே செய்யாம ச்சும்மா சம்பளம் கொடுக்கறாங்களா? //

நாங்க ஒன்னுமே கேட்கலை....நீங்களா தான் உளறீட்டீங்க தல :)//

ஆஹா.. அப்பா நானாத்தான் உளறிட்டேனோ!!!!
***********
// gayathri said...
summa intha pakkam vanthu pakalamnu vantha.summa oru pathivu pottu irukenga.naan atha pathuthu summa pona neenga summa irupengala.athanala summa oru comment avalavu than//

:)))

Truth on March 3, 2009 at 1:38 PM said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆ, முடியல

தராசு on March 3, 2009 at 1:54 PM said...

உங்களுக்கு என்னமோ ஆயிருச்சு தல,

மந்திரிச்சு விட்ட மாதிரியே திரியரீங்க.

புன்னகை on March 3, 2009 at 2:19 PM said...

"சும்மா" - இந்த வார்த்தையை வைத்துக் கொண்டு எங்களையெல்லாம் என்ன பாடுபடுத்தி விட்டீர்கள் கார்க்கி? வடநாட்டுப் பக்கம் போகும் போது மட்டும் இதை உபயோகிக்க வேண்டாம், அங்க இந்த வார்த்தைக்கு அர்த்தமே வேறாச்சே!!! ;-)

Karthik on March 3, 2009 at 2:22 PM said...

//தராசு said...
உங்களுக்கு என்னமோ ஆயிருச்சு தல,மந்திரிச்சு விட்ட மாதிரியே திரியரீங்க.

Repeat......!
:))

தமிழ் பிரியன் on March 3, 2009 at 2:51 PM said...

அட, கார்க்கிக்கு கல்யாணம்... வாழ்த்துக்கள் அண்ணே!

தமிழ் பிரியன் on March 3, 2009 at 3:31 PM said...

கார்ர்க்கி, அதான் கல்யாணம்ன்னு சொல்லிட்டேனே கரீட்டா... பரிசு எங்க?

தாமிரா on March 3, 2009 at 4:20 PM said...

தலசுத்துது.. ஒண்ணியும் புர்ல..

விக்னேஷ்வரி on March 3, 2009 at 4:27 PM said...

ரெண்டு நாள் முன்னாடி போட்டிருந்தீங்களே, அவ்ளோதானா கார்க்கி நீ? அதுவும், இந்த ச்சும்மாவும், கலக்கல் கார்க்கி. ஒண்ணுமே இல்லாத விஷயத்த கூட இப்படி எழுத முடியும்னு கலக்கிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

ஒரு தடவை, நரசிம் சொல்லிருந்த "ஏதாவது செய்யணும் பாஸ்" க்கு மத்தவங்க சொல்லிருந்தத விட நீங்க சொன்னது, எளிமையாவும், செய்யக் கூடியதாவும், இருந்தது.

ஒண்ணுமே இல்லாதத எழுத சொன்னாலும் சரி, உருப்படியா எழுத சொன்னாலும் சரி, முடியும்னு நிருபிக்கறவன் தான் நல்ல எழுத்தாளன். நிரூபிச்சுட்டீங்க.

Good Luck.

gayathri on March 3, 2009 at 4:43 PM said...

என் வலைல ஒரு மேட்டர் போட்டு இருக்கேன். அது எதைப் பற்றியது என்று . சரியாக யூகிப்பவர்களுக்கு பரிசு உண்டு.

en birthdayku kandipa gift irukunu sonnega.but neega kettu irka questionku answer panna than giftnu sollave illaye karki.

PRAPA on March 3, 2009 at 4:43 PM said...

சும்மா போங்க உங்களுக்கு ஒரே நகைச்சுவைதான் .....

டபுள் செஞ்சுரி க்கும் வாழ்த்துக்கள் .

கணேஷ் on March 3, 2009 at 5:04 PM said...

சத்தியமாக எனக்கு எதுவும் புரியவில்லை :((

தாரணி பிரியா on March 3, 2009 at 5:17 PM said...

ச்சும்மா ச்சும்மா நாலஞ்சு தடவை படிச்சு பார்த்தும் என்னன்னு புரியலை. எனக்கு பரிசு வேண்டாம் :). நீங்களே வச்சுகோங்க நன்றி :).

pappu on March 3, 2009 at 5:31 PM said...

இது 200ஆமே, சொல்லவேயில்ல்!.
சும்மாக்கு தான் நம்ம தமிழ்ல எத்தனை அர்த்தம்....

பரிசல்காரன் on March 3, 2009 at 5:40 PM said...

மனமார்ந்த மண வாழ்த்துகள் கார்க்கி!

பொண்ணு பேரை இப்படி சூசகமா இத்தன வாட்டி சொன்னதுக்கு மவனே, மே மாசம் முடிஞ்சா இருக்குடி ஒனக்கு!

pappu on March 3, 2009 at 6:05 PM said...

கார்க்கி.... உங்களுக்கு கல்யாணமாமே? வாழ்த்துக்கள்.... ஆனா உங்க பாச்சுலர் டிகிரி பறிபோகுதே!

அன்புடன் அருணா on March 3, 2009 at 6:19 PM said...

இப்போ கேக்கலாம் போல இருக்கு...அவ்ளோதானா கார்க்கி நீ?
அன்புடன் அருணா

வித்யா on March 3, 2009 at 6:46 PM said...

ச்சும்மா இந்தப் பக்கம் வந்தேன். ச்சும்மா தான்:)

கணினி தேசம் on March 3, 2009 at 7:44 PM said...

நானும் ச்சும்மா ஒரு வரி போட்டுக்காறேன்.

ச்சும்மா ச்சும்மா எதையாவது புடிச்சி பதிவு போட்டு ச்சும்மா ச்சும்மா எங்களை படிக்க வைக்கிறீங்க

ச்சும்மா ஆசத்துங்க நண்பா!

ச்சின்னப் பையன் on March 3, 2009 at 8:06 PM said...

வாழ்த்துக்கள் சகா.. ச்சும்மா ச்சொன்னேன்

Suresh.S.Manian on March 3, 2009 at 8:28 PM said...

chumma athiruthilla. Advance Wedding wishes kargi

ILA on March 3, 2009 at 11:01 PM said...

நீங்க நெசமாலுமே எழுத்தாளர். சொன்ன சொல் கேட்குது உங்க எழுத்து.

Poornima Saravana kumar on March 3, 2009 at 11:17 PM said...

என்ன கொடுமை இது:(((

Kathir on March 3, 2009 at 11:50 PM said...

புரியவில்லை சகா.............

MayVee on March 4, 2009 at 8:54 AM said...

"பரிசல்காரன் said...
மனமார்ந்த மண வாழ்த்துகள் கார்க்கி!

பொண்ணு பேரை இப்படி சூசகமா இத்தன வாட்டி சொன்னதுக்கு மவனே, மே மாசம் முடிஞ்சா இருக்குடி ஒனக்கு!"


o....
anni peru g3 ah????
valthukkal

நான் on March 4, 2009 at 8:54 AM said...

innum mudiyalaya....

Anonymous said...

:P :P :P

Kalki on March 4, 2009 at 1:39 PM said...

எனக்கு answer தெரியும்... நீங்க நிஜமாவே பரிசு கொடுப்பேன்னு சொன்னாதான் சொல்லுவேன்.

//நான் ம‌ட்டும் என்ன‌ வேலைக்கு போவாம‌ ச்சும்மாவா இருக்கேன்? இல்லை வேலைக்குப் போய் வேலையே செய்யாம ச்சும்மா சம்பளம் கொடுக்கறாங்களா?//

எங்கப்பன் குதிருக்குள்ள இல்லனு யாரோ சொல்லுறாப்புல இருக்கு. :P

dharshini on March 4, 2009 at 5:18 PM said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது உங்களால.
வாழ்துக்கள் அண்ணா.

 

all rights reserved to www.karkibava.com