Mar 2, 2009

காக்டெய்ல்


  ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் குமுதம் ஒரு பக்க டெம்ப்ளேட் கதைகள் போல ஆகிவிட்டன. அடுத்த எந்த இசைக்கருவி வாசிப்பார் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. ஒரே ஒரு கேட்ச்சியான மெட்டு கிடைத்து விட்டால் அதை வைத்து நல்ல enjoyable song compose செய்ய, உலக இசையைப் பற்றிய அவரது ‘ஞானம்’ கை கொடுக்கிறது. அயன் படத்தில் ஒரு பாட்டு “விழி மூடி யோசித்தால்”. நல்லாத்தானிருக்கு. அதுவும் பாட்டின் முடிவில் அந்த விசில். வாவ். கார்க்கி மாத்துடா ரிங்டோன.

***********************************************

சிறுவயதில் இருந்தே எனக்கு விசில் ரொம்ப பிடிக்கும். இன்னுமும் அடிக்கத் தெரியாது. தமிழில் வெகு சிலப் பாடல்களிலே விசிலை உபயோகித்திருப்பார்கள். 12பி யில் பூவே வாய் பேசும்போது. BGM ல் கலக்கலாக இருக்கும். பின் குருவியில் தேன் தேன் தேன் பாடல். இந்த விசில் சத்ததை மட்டும் MP3 cutterல் கட் செய்து ரிங்டோனாக வைத்துப் பாருங்கள். அட்டகாசமாய் இருக்கும். வேறு சில பாடல்கள் இருந்தாலும் நினைவில் இல்லை. ஏதோ ஒரு பழையப் பாட்டு.சிவாஜி விசிலடிச்சுக்கிட்டே பாடுவார். யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்

************************************************

தமிழ்மண விருதுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். ஆனால் பல முக்கிய தலைகள் போட்டியிடவே இல்லை. நர்சிம்மிடம் கேட்டால், ஆமாம்ப்பா அனுப்பல என்றார். முரளிகண்ணனும் அனுப்பவில்லை என்று நினைக்கிறேன். இன்னும் நிறைய பெரும்புள்ளிகள் அனுப்பாததற்கு பின்னால் இருக்கும் காரணம் இன்னும் ரகசியமாகவே இருக்கிறது.

************************************************

  ஏர்டெல்லின் புது விளம்பரம் பார்த்தீங்களா? குட்டிப்பயன் பொம்மை செல்ஃபோன் வச்சிக்கிட்டு பேசுவானே? How cute? அப்படியே அவனைக் கடத்திகிட்டு போய் ஒரு நடு காட்டுல குடிசைக்குள்ள அடைச்சு வச்சு, நாள் முழுக்க கொஞ்சிக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. யூட்யூபில் தேடினேன். கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் அனுப்புங்களேன். அடுத்த சனிக்கிழமைதான் நான் மீண்டும் டி.வி பார்க்க முடியும்.

*************************************************

  என்னிடம் சாட்டிக் கொண்டிருந்த அந்த பெண் வாசகர் அப்படியென்ன இருக்கு ஷாலினியிடமும் நதியாவிடமும்? அவர்களைத் தவிர வேறு எந்த நடிகையும் பிடிக்காமல் போவதற்கான காரணத்தைக் கேட்டார். வேறு யாரும் பிடிக்கவில்லை என்றல்ல. அவர்கள் தான் என் ஆல் டைம் ஃபேவரிட். இந்தக் காட்சியைப் பாருங்கள். ஷாலினியின் கண்களைப் பாருங்கள். கலங்கவில்லை உங்கள் கண்களும்?

67 கருத்துக்குத்து:

narsim on March 2, 2009 at 11:48 AM said...

வணக்கம் சகா..

//ஆனால் பல முக்கிய தலைகள் போட்டியிடவே இல்லை. நர்சிம்மிடம் கேட்டால், ஆமாம்ப்பா அனுப்பல என்றார். முரளிகண்ணனும் அனுப்பவில்லை என்று நினைக்கிறேன். இன்னும் நிறைய பெரும்புள்ளிகள் அனுப்பாததற்கு பின்னால் இருக்கும் காரணம் இன்னும் ரகசியமாகவே இருக்கிறது. //

ரகசியம்லாம் இல்ல சகா.. விருதுக்கு அனுப்புற அளவுக்கு இன்னும் எழுத்து மேம்படவில்லை என்ற எண்ணமேயன்றி வேறொன்றும் இல்லை..

அப்புறம்.. அந்த கடைசி வரிகள்.. தப்பு சகா..

வித்யா on March 2, 2009 at 12:06 PM said...

me the 2nd:)

வித்யா on March 2, 2009 at 12:06 PM said...

\\ரகசியம்லாம் இல்ல சகா.. விருதுக்கு அனுப்புற அளவுக்கு இன்னும் எழுத்து மேம்படவில்லை என்ற எண்ணமேயன்றி வேறொன்றும் இல்லை..\\

தன்னடக்கமாம்:)

vinoth gowtham on March 2, 2009 at 12:06 PM said...

//ச்சே.குரங்கு கையில் பூமாலை.//

நல்ல சிந்தனை..

ரொம்ப ஓவரா இருக்குங்க..

வித்யா on March 2, 2009 at 12:07 PM said...

நானும் அந்த ஏர்டெல் விளம்பரத்த பத்தி எழுதி வைச்சிருக்கேன். சே நான் எழுத நினைக்கறத யாராவது நல்லா எழுதிடறாங்க:(

ஸ்ரீமதி on March 2, 2009 at 12:11 PM said...

1. இன்னும் கேட்கல
2. எனக்கு விசில் அடிக்க தெரியும் ;))
3. வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் :))
4. இன்னும் பார்க்கல இனிமே தான் பார்க்கணும்... ஆமா அதுக்கேன் கடத்திட்டு போகணும்?? கொஞ்சம் டேர்ரர்ரா தான் யோசிக்கிறீங்க ம்ம்ம்... :))
5. ஒன்னும் சொல்றதுகில்ல... நமக்கு பிடிக்கலேன்னா விட்ரலாமே..

புதுகைத் தென்றல் on March 2, 2009 at 12:13 PM said...

நதியா, ஷாலினி எனக்கும் ஃவேரரீட் தான்.

கோவி.கண்ணன் on March 2, 2009 at 12:17 PM said...

எனக்கு தெரிந்து "தேனாம் பேட்டை சூப்பர் மார்கெட் இறங்கு" - சிட்டுகுருவி படம், சிவக்குமார் பாடுவார். அதுல விசிலு வரும்

மண்குதிரை on March 2, 2009 at 12:18 PM said...

வணக்கம் நண்பா

அந்த ஏர்டெல் விளம்பரம் அருமை. அந்த பையன் முகபாவம் ஏதே ஒரு disturbance பண்ணுது

Mahesh on March 2, 2009 at 12:20 PM said...

//விருதுக்கு அனுப்புற அளவுக்கு இன்னும் எழுத்து மேம்படவில்லை என்ற எண்ணமேயன்றி வேறொன்றும் இல்லை..//

அய்யய்ய... நானெல்லாம் வேற அனுப்பித் தொலைச்சனே :( குறை குடம் கூத்தாடும்னு சும்மாவா சொன்னாங்க :)

தாரணி பிரியா on March 2, 2009 at 12:20 PM said...

1. அயன் பாட்டு எதுவுமே மனசுல செட்டாகலை :(. ச
2. ஹை என‌க்கு விசில் அடிக்க‌ தெரியுமே. (ஆனா சூப்ப‌ரா எல்லாம் அடிக்க‌ தெரியாது. ந‌ல்லா ச‌வுண்ட்டு வரும் அவ்வ‌ள‌வுதான்)

3. வெற்றி பெற்ற‌ எல்லாருக்கும் வாழ்த்துக்க‌ள்

4.ஹையோ நானும் வோடாபோன் புது விள‌ம்ப‌ர‌த்தையும், ஏர்டெல் விள‌ம்ப‌ர‌ம் ப‌த்தியும் சொல்ல‌ நினைச்சு இருந்தேனே :(

5. ம் ஷாலினி ந‌தியா எல்லாருக்குமே பேவ‌ரைட். என‌க்கு அவ‌ங்க‌ முக‌ அமைப்பு கூட‌ ஒத்து போற‌ மாதிரி தோணும் அம்மா பொண்ணா நடிச்சு இருக்கலாம் :)

கார்க்கி on March 2, 2009 at 12:21 PM said...

@நர்சிம்,

ரைட்டு தல. அப்புறம் கடைசி வரி எடுத்துட்டேன். :))

**********
@வித்யா,
அட வேஸ்ட்டுங்க அவரு. போட்டி போடரது யாரு கூடன்னு கூட தெரியல அவருக்கு.

ஏர்டெல் ஆட் பத்தி ‘நல்லா’ எழுதியிருக்கேனா? நன்றிங்க

**********
// vinoth gowtham said...
//ச்சே.குரங்கு கையில் பூமாலை.//

நல்ல சிந்தனை..

ரொம்ப ஓவரா இருக்குங்//

எடுத்துட்டேன் வினோத். :(((

*****
@ஸ்ரீமதி,

நல்லாயிருக்கியா?

*********
@புதுகை தென்றல்,

அப்படியா? சூப்பர் நீங்க ரொம்ப நல்ல ரசனைவாதிங்க :))

**********

@கோவி,

என்ன பாட்டு தல? நான் கேட்டதே இல்ல :(

தாரணி பிரியா on March 2, 2009 at 12:22 PM said...

அட பின்னூட்டம் போடும்போது கூட வித்யாவையும், ஸ்ரீமதியையும் காப்பி செஞ்சு இருக்கேனே.

தாரணி பிரியா on March 2, 2009 at 12:24 PM said...

அந்த பாட்டு என் கண்மணி அப்படின்னு ஆரம்பிக்குமுன்னு நினைக்கிறேன். பஸ்ஸ போகும்போது பாடற மாதிரி இருக்கும். நல்லா இருக்கும் கேட்டு பாருங்க‌

ராம்ஜி on March 2, 2009 at 12:24 PM said...

//குரங்கு கையில் பூமாலை.//

Thevya ithu??

புதுகைத் தென்றல் on March 2, 2009 at 12:29 PM said...

சிட்டுக்குருவி படத்தில் அந்தப் பாட்டு

“என் மன்னவன் உன் காதலன்,

உனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான்” அப்படின்னு ஆரம்பிக்கும் பாட்டு.

நடுநடுவில்

இந்தாம்மா கருவாட்டுக்கூட முன்னல போ!!

தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்குன்னு - பஸ் பயணத்தின் ஊடே வரும்படி இருக்கும்

அருண் on March 2, 2009 at 12:29 PM said...

//குரங்கு கையில் பூமாலை.//

ஷாலினி கையில் அஜித்?

அருண் on March 2, 2009 at 12:30 PM said...

//அடுத்த சனிக்கிழமைதான் நான் மீண்டும் டி.வி பார்க்க முடியும். //

டி.வி ரிப்பேரா?

கார்க்கி on March 2, 2009 at 12:38 PM said...

// மண்குதிரை said...
வணக்கம் நண்பா

அந்த ஏர்டெல் விளம்பரம் அருமை. அந்த பையன் முகபாவம் ஏதே ஒரு disturbance பண்ணு//

ஆமாங்க.

************
@மஹேஷ்,

என்ன சகா? நமக்காகத்தானே போட்டியே?

*********

@தா.பி,

அசின் கூட நதியாவின் சாயல். ஆனால் அவ்ளவா எனக்கு பிடிக்கல. ஓக்கே..

**********
// ராம்ஜி said...
//குரங்கு கையில் பூமாலை.//

Thevya ithu??//

அதானே? தேவையா ஷாலினிக்கு? ச்சும்மா சகா :)))

********
@பு.தென்றல்,

ஓ அந்தப் பாட்டா? அது தெரியுங்க
*********

// அருண் said...
//அடுத்த சனிக்கிழமைதான் நான் மீண்டும் டி.வி பார்க்க முடியும். //

டி.வி ரிப்பேரா//

இல்ல சகா.. ஹைதைல என் ரூம்ல ட்.வி.இல்ல. சென்னை போய் தான் பார்க்கனும்

எம்.எம்.அப்துல்லா on March 2, 2009 at 12:39 PM said...

//ரகசியம்லாம் இல்ல சகா.. விருதுக்கு அனுப்புற அளவுக்கு இன்னும் எழுத்து மேம்படவில்லை என்ற எண்ணமேயன்றி வேறொன்றும் இல்லை..

//

இப்படியெல்லாம் யோசிச்சா நானெல்லாம் எந்த ஜென்மத்துலயும் அனுப்ப முடியாது.

கணினி தேசம் on March 2, 2009 at 12:47 PM said...

ஏர்டெல் விளம்பரம் நிஜமாவே நல்ல இருக்கு.. சிறுவன் நடித்தான அல்லது நிஜமா? தூள்!

அயன் பாடல் விமர்சனம் எப்போ எழுதப்போறீங்க?

கும்க்கி on March 2, 2009 at 12:49 PM said...

சந்தடி சாக்குல குரங்கு கைல பூமாலைன்னு போட்டு தாக்குறதா...
யாரங்கே....படைகள் கிளம்பட்டும்.
ஏய் பொருள்ளாம் எடுத்துட்டு சீக்கிறம் ஆட்டோவ கிளப்புங்கடா...

கும்க்கி on March 2, 2009 at 12:55 PM said...

ஷாலினியிடமும்,நதியாவிடமும் எனக்கு பிடித்தது....
பந்தா.

எம்.எம்.அப்துல்லா on March 2, 2009 at 12:58 PM said...

அடுத்தவாட்டி நீ வர்றப்ப விசில் அடிக்க சொல்லித் தர்றேன் :)

பரிசல்காரன் on March 2, 2009 at 1:07 PM said...

ஒத வாங்கப் போற சகா நீ... அந்த ஏர்டெல் விளம்பரத்தப் பத்தி நீ எழுதீட்ட.. இந்த வார அவியலுக்கு நான் இன்னொரு மேட்டர் தேடணுமா?

அந்த விளம்பரம் பார்த்துட்டு உமா அழுதுட்டாங்க... என்ன திங்கிக்ப்பா! ச்சான்ஸே இல்ல!

அனுஜன்யா on March 2, 2009 at 1:09 PM said...

ஹாரிச vidu சகா. 'மசக்கலி' கேளு. ஜிவ்வுன்னு இருக்கு.

சிவாஜி பாட்டு தெரியும். திரும்பியும் 'யூத்' பற்றிய சந்தேகம் வரும். எதுக்கு வம்பு.

தமிழ்மணம் நான் கூட அனுப்பலைன்னு சொல்லப் பாத்தேன். வேலன் அன்னிக்கிக் கூப்பிட்டு 'யோவ், உன்னோட "படிக்காதவன்" பதிவு ஏழாம் இடம் வந்திருக்கு' சொன்ன அப்புறம்தான் அடடா, நாமளும் பங்கேற்று, தோற்ற ஞாபகம் வந்து, ஒரு பார்மலிடிக்கு ஒரு ஐந்து நிமிடம் துக்கம் அனுஷ்டித்தேன்.

ஆமாம், ஷாலினி அழகு தான். ஆனா, இப்போ உனக்கு மாற்றான் (தல) தோட்டத்து மல்லிகை' ஆச்சே? இளைய தளபதி இரசிகருக்குப் பிடிப்பது எங்ஙனம்?

அனுஜன்யா

அமிர்தவர்ஷினி அம்மா on March 2, 2009 at 1:09 PM said...

சிவாஜி பாட்டு, நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே ந்னு நெனைக்கிறேன். எதுக்கும் உறுதிப்படுத்திக்கங்க.

நர்சிம் சார். ஆனாலும் உங்களு்க்கு ரொம்ப தன்னடக்கம்தான்.

முரளிகண்ணன் on March 2, 2009 at 1:10 PM said...

\\ரகசியம்லாம் இல்ல சகா.. விருதுக்கு அனுப்புற அளவுக்கு இன்னும் எழுத்து மேம்படவில்லை என்ற எண்ணமேயன்றி வேறொன்றும் இல்லை\\

வழிமொழிகிறேன்.

பட்டாம்பூச்சி on March 2, 2009 at 1:12 PM said...

நீங்க சொல்லுற airtel விளம்பரம் இன்னும் பாக்கல.
பார்த்த பிறகு கருத்து சொல்கிறேன்(நாங்கெல்லாம் கருத்து கஜா இல்ல?).
மார்கழி பூவே பாடலும் விசிலில் நன்றாக இருக்கும்.ரிங்டோனோ இன்னும் சுகம்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!!!

செல்வேந்திரன் on March 2, 2009 at 1:27 PM said...

கார்க்கி, இந்த காக்டெய்ல் சுவைக்கவில்லை. சப்பென்று இருக்கிறது.

கார்க்கி on March 2, 2009 at 1:32 PM said...

// கணினி தேசம் said...
ஏர்டெல் விளம்பரம் நிஜமாவே நல்ல இருக்கு.. சிறுவன் நடித்தான அல்லது நிஜமா? தூள்!

அயன் பாடல் விமர்சனம் எப்போ எழுதப்போறீங்க//

இந்தப் படத்துக்கு தேவையில்லைனுதான் ஒரே ஒரு பாட்ட பத்தி சொல்லியிருக்கிறேன். வேஸ்ட்

*************
// கும்க்கி said...
சந்தடி சாக்குல குரங்கு கைல பூமாலைன்னு போட்டு தாக்குறதா...
யாரங்கே....படைகள் கிளம்பட்டும்.
ஏய் பொருள்ளாம் எடுத்துட்டு சீக்கிறம் ஆட்டோவ கிளப்புங்க//

கிகிகி.. நான் ரெடி..

***********
// பரிசல்காரன் said...
ஒத வாங்கப் போற சகா நீ... அந்த ஏர்டெல் விளம்பரத்தப் பத்தி நீ எழுதீட்ட.. இந்த வார அவியலுக்கு நான் இன்னொரு மேட்டர் தேடணுமா?

அந்த விளம்பரம் பார்த்துட்டு உமா அழுதுட்டாங்க... என்ன திங்கிக்ப்பா! ச்சான்ஸே இல்ல//

நானும்தான் சகா.. வாய்ப்புகளே இல்ல

**********
@அனுஜன்யா,

:))
ஷாலினிய எங்களுக்குதான் முதல்ல பிடிச்சது. அப்புறம் தான் அவருக்கு. சோ நாங்க ஏன் மாறனும்?

*************
//அமிர்தவர்ஷினி அம்மா said...
சிவாஜி பாட்டு, நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே ந்னு நெனைக்கிறேன். எதுக்கும் உறுதிப்படுத்திக்கங்க//

அதுவான்னு தல அனுஜன்யா சொல்லுவாரு

Anbu on March 2, 2009 at 1:37 PM said...

நன்றாக இருக்கிறது அண்ணா!!


ஷாலினி எனக்கும் பேவரைட் தான்

Lancelot on March 2, 2009 at 1:38 PM said...

super appu about shalini and nadiya....

and antha airtel adai naanum rasithen searching for the video- i wont kidnap him and all :P whistle adippathu eppadi endru naan oru bhuthakam eluthukiren ungallukaga...

LOSHAN on March 2, 2009 at 1:41 PM said...

ம்ம்ம் நானும் விசில் இசைப் பாட்டுகளின் ரசிகன்.. :)

மின்னலே படப்பாடல் 'அழகிய தீயே' இன்னுமொன்று..

சிவாஜிக்கு TMS பாடிய அந்தப்பாடல் 'சாந்தி' படத்தில் 'யார் அந்த நிலவு' (ஆகா கண்டு பிடிச்சிட்டேனே)

narsim on March 2, 2009 at 1:41 PM said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
சிவாஜி பாட்டு, நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே ந்னு நெனைக்கிறேன். எதுக்கும் உறுதிப்படுத்திக்கங்க.

நர்சிம் சார். ஆனாலும் உங்களு்க்கு ரொம்ப தன்னடக்கம்தான்.
//

அமிர்தவர்ஷினி அம்மாவா பாட்டியா???ஆஆஆ??

LOSHAN on March 2, 2009 at 1:45 PM said...

நானும் அயனின் இந்தப்பாடலின் ரசிகன்.. ஹாரிஸ் தனது பாணியை மாற்றிக் கொள்ளாவிட்டாலும் ரசிகர்களை எந்த மெட்டு,எந்த இசைக்க் கருவி மூலம் கவரலாம் என்பதை நல்லா அறிஞ்சு வைச்சிருக்கார்.. அதனால் தான் வேறெந்த இசையமைப்பாளரையும் விட ஹாரிஸ் தொடர்ந்து ஹிட்ஸ் கொடுக்கிறார்.

பாண்டி-பரணி on March 2, 2009 at 1:53 PM said...

காக்டெய்ல் சரக்கு கம்மி சகா

இன்னும் துக்கல வேணும் சகா

அப்புறம் புதுச miranda அசின் விளம்பரம் தூள் என்ன அலப்பாரையான
கலக்கல் விளம்பரம் அது

prakash on March 2, 2009 at 2:33 PM said...

//என்னிடம் சாட்டிக் கொண்டிருந்த அந்த பெண் வாசகர் //

யாரது?
எனக்கு மட்டும் ஏன் பெண் வாசகரே இருக்க மாட்றாங்க?
ஒ நான் எழுதறதே இல்லையா?
ஹி ஹி ஹி ....

dharshini on March 2, 2009 at 3:15 PM said...

ஏதோ ஒரு பாட்டு என் காதில்....(உன்னிடதில் என்னை கொடுத்தேன் படத்தில்) பாடலில் வரும் விசில் சத்தமும் நன்றாக இருக்கும்.
t.v-யே இல்ல!
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நதியாவும், ஷாலினியும் எனக்கும் ரொம்ப‌ பிடிக்கும்.
(காதலுக்கு மரியாதை‍‍-என்னை தாலாட்ட வருவாளா... ஆல்டைம் ஃபேவரிட்).

சரவணகார்த்திகேயன் சி. on March 2, 2009 at 3:21 PM said...

You can get it here..
http://www.airtel.in/wps/wcm/connect/about+bharti+airtel/Bharti+Airtel/Vision/Signature+Tune+and+more/#

ச்சின்னப் பையன் on March 2, 2009 at 3:34 PM said...

//ஆனால் பல முக்கிய தலைகள் போட்டியிடவே இல்லை. //

ஹிஹி... நானும்தான். ஆனா நான் முக்காத தலை.....

:-)))

MayVee on March 2, 2009 at 3:40 PM said...

"அயன் படத்தில் ஒரு பாட்டு “விழி மூடி யோசித்தால்”. நல்லாத்தானிருக்கு"
அப்படியா......
என்னக்கு அவர் இசையை கேட்டாலே ஒரே லவ்வங்கி feelings ஆஹ் வருது.....
என்ன செய்ய......

"அதுவும் பாட்டின் முடிவில் அந்த விசில். வாவ். கார்க்கி மாத்துடா ரிங்டோன."
அப்ப கடைசி வரைக்கும் வேட்டைக்காரன் பட பாட்டை ரிங்டோன்யாக
வைக்கவில்லையா ??????
ஹி ஹி ஹி

"ஏதோ ஒரு பழையப் பாட்டு.சிவாஜி விசிலடிச்சுக்கிட்டே பாடுவார். யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்"
அது
பார் மகளே பார்
"இரோடும் வைகிலே......... "


"இன்னும் நிறைய பெரும்புள்ளிகள் அனுப்பாததற்கு பின்னால் இருக்கும் காரணம் இன்னும் ரகசியமாகவே இருக்கிறது."

ஹி ஹி ஹி
புகழ்ச்சி எல்லாம் என்னக்கு பிடிக்காது கார்கி அங்கிள்.... அதான் அனுப்பவில்லை


"அப்படியே அவனைக் கடத்திகிட்டு போய் ஒரு நடு காட்டுல குடிசைக்குள்ள அடைச்சு வச்சு, நாள் முழுக்க கொஞ்சிக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு."
ஆமாம்....
so cute ......
அனால் நீங்கள் கொஞ்சுன பிறகு
போலீஸ் வந்து உங்களை கொஞ்சுவாங்க


"ஷாலினியின் கண்களைப் பாருங்கள். கலங்கவில்லை உங்கள் கண்களும்?"

காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் ஓன்று போதுமே....

கார்க்கி on March 2, 2009 at 3:51 PM said...

@அன்பு& lancelot,

நன்றி

***********
// LOSHAN said...
ம்ம்ம் நானும் விசில் இசைப் பாட்டுகளின் ரசிகன்.. :)

மின்னலே படப்பாடல் 'அழகிய தீயே' இன்னுமொன்று//

ஆமாம் சகா. ஹாரீஸ் நிரைய யூஸ் பண்றார்

************
//பாண்டி-பரணி said...
காக்டெய்ல் சரக்கு கம்மி சகா

இன்னும் துக்கல வேணும் ச//

அடுத்த தடவ ராவா கொடுத்துடலாம் சகா..

***********

@பிரகாஷ்,

ஆமாம் நீங்க ஏன் எழுதல?

கார்க்கி on March 2, 2009 at 3:54 PM said...

@தர்ஷினி,

அனதப் படமே சூப்பர் படங்க.. தலைவாஆஆஅ

**************

@csk,

வீடியோவிற்கு நன்றி சகா

*************
// ச்சின்னப் பையன் said...
//ஆனால் பல முக்கிய தலைகள் போட்டியிடவே இல்லை. //

ஹிஹி... நானும்தான். ஆனா நான் முக்காத தலை..//

அப்புறம் எப்படி அது?????????

************
@மேவீ,

நீங்களும் தலைவி ஃபேனா????

SK on March 2, 2009 at 4:23 PM said...

நல்ல இருக்கு.. ஆனா இன்னும் நல்ல எழுத முடியும் உங்களால் :)

prakash on March 2, 2009 at 4:46 PM said...

//@பிரகாஷ்,

ஆமாம் நீங்க ஏன் எழுதல?//

நான் பதிவு எழுதாதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான மூன்று காரணங்கள சொல்லனும்னா

1. எனக்கு பதிவு எழுதற அளவு சரக்கில்லை
2. எனக்கு பதிவு எழுதற அளவு சரக்கில்லை
3. எனக்கு பதிவு எழுதற அளவு சரக்கில்லை

prakash on March 2, 2009 at 4:47 PM said...

அப்புறம் இன்னொரு விஷயம்

prakash on March 2, 2009 at 4:48 PM said...

50 நெருங்கரதால

prakash on March 2, 2009 at 4:48 PM said...

இப்படியே இழுத்து

prakash on March 2, 2009 at 4:48 PM said...

50 போட்டுறலாம்

Cable Sankar on March 2, 2009 at 4:58 PM said...

அது சரி.. என்ன சரக்கு கொஞம் கலக்கலா தெரியுது..?ஏறலையே

தாமிரா on March 2, 2009 at 5:49 PM said...

வித்யா said...
\\ரகசியம்லாம் இல்ல சகா.. விருதுக்கு அனுப்புற அளவுக்கு இன்னும் எழுத்து மேம்படவில்லை என்ற எண்ணமேயன்றி வேறொன்றும் இல்லை..\\

தன்னடக்கமாம்:)
//

கிகிகிகிகிகிகிகி....

pappu on March 2, 2009 at 6:21 PM said...

இங்க டிவி இருந்தே அத பாக்காம சுத்திட்டு இருக்கேன். முதல்ல அந்த விளம்பரத்த பாக்குறேன். இந்த ஏர்டெல் காரன் எப்பவுமே ஒரு அழகான,ஒரு புன்முறுவல வரவைக்கிற விளம்பரங்கள தான் எடுக்குறான். இது அவனோட முதல் ரகுமான் விளம்பரதிலயே தெரியும்.

கார்க்கி on March 2, 2009 at 6:27 PM said...

// SK said...
நல்ல இருக்கு.. ஆனா இன்னும் நல்ல எழுத முடியும் உங்களால் ://

:))))

***********
/ Cable Sankar said...
அது சரி.. என்ன சரக்கு கொஞம் கலக்கலா தெரியுது..?ஏறலை//

கலக்கலா தெரியுதுனு சொன்னதுக்கு நன்றி சகா

***********
@தாமிரா,

என்ன சிரிப்பு இது????

************
/ pappu said...
இங்க டிவி இருந்தே அத பாக்காம சுத்திட்டு இருக்கேன். முதல்ல அந்த விளம்பரத்த பாக்குறேன். இந்த ஏர்டெல் காரன் எப்பவுமே ஒரு அழகான,ஒரு புன்முறுவல வரவைக்கிற விளம்பரங்கள தான் எடுக்குறான். இது அவனோட முதல் ரகுமான் விளம்பரதிலயே தெரியும்//

ஆமாம். அவர்கள்தான் இப்போது டாப் கிளாஸ் விளம்பரங்கள் தர்றாங்க.. வருகைக்கு நன்றி

பட்டாம்பூச்சி on March 2, 2009 at 9:50 PM said...

ஹே...தமிழ்மண விருதுக்காக கார்க்கி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் :))).

வால்பையன் on March 2, 2009 at 10:08 PM said...

//விருதுக்கு அனுப்புற அளவுக்கு இன்னும் எழுத்து மேம்படவில்லை என்ற எண்ணமேயன்றி வேறொன்றும் இல்லை..//

இதே காரணத்துக்காக தான் நானும் கலந்துக்கல!

Kathir on March 2, 2009 at 11:39 PM said...
This comment has been removed by the author.
Kathir on March 2, 2009 at 11:43 PM said...

/சிவாஜி விசிலடிச்சுக்கிட்டே பாடுவார். யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன் //

நிறைய பாட்டு இருக்கு சகா...
எனக்குப்பிடித்த ஒரு பாட்டு
"வந்த நாள் முதல் இந்த நாள் வரை"

http://www.youtube.com/watch?v=swXyPj-B4bU

கார்க்கி on March 3, 2009 at 10:52 AM said...

/ பட்டாம்பூச்சி said...
ஹே...தமிழ்மண விருதுக்காக கார்க்கி அண்ணனுக்கு வாழ்த்துக்க//

எனக்கா? எப்போ?

************

// வால்பையன் said...
//விருதுக்கு அனுப்புற அளவுக்கு இன்னும் எழுத்து மேம்படவில்லை என்ற எண்ணமேயன்றி வேறொன்றும் இல்லை..//

இதே காரணத்துக்காக தான் நானும் கலந்துக்கல//

உங்களுக்கும் தண்ணியடக்கமா? ச்சே தன்னடக்கமா சகா?

*************
/ Kathir said...
/சிவாஜி விசிலடிச்சுக்கிட்டே பாடுவார். யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன் //

நிறைய பாட்டு இருக்கு சகா...
எனக்குப்பிடித்த ஒரு பாட்டு
"வந்த நாள் முதல் இந்த நாள் வ//

அதேதன் சகா.. சூப்பர். உங்க வயசு என்ன?

ஸ்ரீமதி on March 3, 2009 at 12:05 PM said...

me the 60 :):)

புன்னகை on March 3, 2009 at 12:28 PM said...

எனக்குத் தெரிஞ்சு சிவாஜியின் பாடல்களில் இரண்டில் விசில் தனித்துத் தெரியும்.
1. நீரோடும் வைகையிலே
2. அந்த நாள் முதல் இந்த நாள் வரை

பட்டாம்பூச்சி on March 3, 2009 at 1:19 PM said...

இரண்டு பின்னோட்டங்களில் ஒன்றிற்கு மட்டும் அதுவும் விருத பத்தி பேசுனா மட்டும் பின்னூட்டத்திற்கு மறுமொழி தரும் கார்க்கி அண்ணனின் நுண்ணரசியலை கண்டித்து இப்போ மட்டும் வெளிநடப்பு செய்கிறேன்.ஆனா அடுத்த பதிவுக்கு யார் தடுத்தாலும் மறுபடியும் வருவேன்.ஹிஹிஹி.

நீங்க 5-வது இடம்னு எங்கயோ(குசும்பரோட வலைப்பதிவுன்னு நெனைகறேன்) நீங்கதானே அண்ணே பின்னூட்டம் போட்டிருந்தீங்க?அப்போ சும்மா வழக்கம்போல உட்டாலக்கடிக்கா?தமிழ்மண விருது கிடைக்காட்டி என்ன வலை மேயும் தமிழ்மனங்களில் விருது பெறுவதற்கு உரிய இடத்தில்தான் நீங்கள் இருக்கிறீர்கள் :)).

Karthik on March 3, 2009 at 2:00 PM said...

1. என்னோட ரிங்டோன் 'மஸக்களி' ப்ரம் டெல்ஹி 6. :)

2. குருவியில் அந்த பாட்டு எனக்கும் பிடிச்சிருந்தது. விசில் அடிக்க தெரியாது.

3. ம்ம்ம். :)

4. நான் இன்னும் பார்க்கவில்லை.

5. ஷாலினியை எனக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் தவிர இது மணிரத்னம் படம்.
:)

Karthik on March 3, 2009 at 2:04 PM said...

//ச்சே.குரங்கு கையில் பூமாலை.

என்ன இது???

கார்க்கி on March 3, 2009 at 6:03 PM said...

/ ஸ்ரீமதி said...
me the 60 :):/
அதான் தெரியுமே பாட்டி

***********

// புன்னகை said...
எனக்குத் தெரிஞ்சு சிவாஜியின் பாடல்களில் இரண்டில் விசில் தனித்துத் தெரியும்.
1. நீரோடும் வைகையிலே
2. அந்த நாள் முதல் இந்த நாள் வ//

நன்றிங்க

************
@பட்டாம்பூச்சி,

ஐந்தாம் இடம் வாங்கியது உண்மைதான்.. உங்க அன்புக்கு நன்றி

**********
// Karthik said...
//ச்சே.குரங்கு கையில் பூமாலை.

என்ன இது??//

சேட்டில் சொல்றேன் :))

Kathir on March 3, 2009 at 11:35 PM said...

//அதேதன் சகா.. சூப்பர். உங்க வயசு என்ன//

நான் இன்றைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்செல்லாம் பேச மாட்டேன்...

Me always the 22 சகா....

நம்புய்யா....

நானும் யூத்து தான்....
நானும் யூத்து தான்....
நானும் யூத்து தான்....

Busy on April 8, 2009 at 8:44 AM said...

one Song remind me, shivaji with major sundarajan, "antha nal nabakam vanthathe.........."

 

all rights reserved to www.karkibava.com