Mar 5, 2009

48 மணி நேரத்தில் பர்சனல் லோன்


  எனக்கு நேரம் சரியில்லைங்க. நேரமே இல்லைன்னே கூட பரவாயில்ல, நேரம் இருந்து அது சரியில்லைன்னா அது இன்னும் கொடுமைங்க. சரி சரி ஓடாதீங்க. இதுவும் மொக்கை பதிவல்ல.

என் தங்கையின்(cousin) திருமண செலவுக்காக தனிநபர் கடன் வேண்டி விண்ணப்பித்தேன். முதல்ல Axis Bank. அதில் ஏற்கனவே எனக்கு வீட்டுக் கடன் இருப்பதால், சிறப்பு சலுகையாக குறைந்த வட்டின்னு அவனுங்களே வந்தாங்க. அது டிசம்பர் மாதம். சரி இன்னும் மூனு மாசம் இருக்கேனு நானும் அதிலே அப்ளை செஞ்சேன். ஒன்னு ஒன்னா கேட்டான். நானும் ஒவ்வொரு வாரமும் சென்னை வரும்போது கொடுத்துட்டே இருந்தேன்.

”சார் முகவரி சான்றா லேண்ட்லைன் பில கொடுத்தீங்க. அது அம்மா பேர்ல இருக்கு.ரிலேஷன்ஷிப் ப்ரூஃப் வேணும்”னு தலைய சொறிஞ்சான்.

  சரின்னு ரேஷன் கார்டு கொடுத்தேன். அதுல கார்க்கி பேர பார்த்தா கார்த்தினு தெரியுதாம்.

“ டேய் வீட்டு டாகுமெண்ட்டே என் பேர்லதான் இருக்கு. அதுவும் உங்க கிட்டதான் இருக்கு” னு சொன்னேன்.

  இல்ல சார். அது வேறன்னு சொன்னான். அப்புறம் எல்லாம் முடிஞ்சுது. ஆஃபிஸ்க்கு போனாங்க. வீட்டுக்கு வந்தாங்க. அப்படி இப்படினு ஒரு மாசம் ஆச்சு. இன்னும் ரெண்டு நாள்ல கிரெடிட் ஆகும்னு சொன்னான். அடுத்த நாள் ஃபோன் பண்ணப்ப சொன்னான் பாருங்க ஒரு வார்த்தை.

“ யாரு? கார்க்கியா? ஆதம்பாக்கம் தானே? உங்க லோன் ரிஜக்ட் ஆயிடுச்சு சார்”.

“ரிஜெக்ட்டா? ஏன்?

நீங்க ஏற்கனவே ஹோம் லோன் எடுத்து இருக்கிங்க. அதான்.

டேய் நாய. அத வச்சுதாண்டா ஸ்பெஷல் ஆஃபர்னு சொன்னீங்க.

சாரி சார்.கிரெடிட் மேனேஜர் வேணாம்ன்னு சொல்லிட்டாரு.

  டொக்.வச்சிட்டான்

  அவனைத் தேடிப் போய் அடிக்கவா முடியும்? அடுத்து ICICI. ஏ.டி.எம்மில் பணம் எடுத்த உடனே நீங்க. வல்லவரு. நல்லவரு.(அப்பவே உஷாராயிருக்கனும்) அதனால உங்களுக்கு 3 லட்சம் ரூபாய் ப்ரீ அப்ரூவ்ட் லோன் இருக்கு. வேணுமான்னு கேட்டது. ஆமாம்னு அழுத்தினேன்.

ஆரம்பிச்சானுங்க. வீட்டுக்கு வந்தான். 30ரூபாய்க்கு ஜெராக்ஸ்., ஃபோட்டோ எல்லா எழவையும் கொடுத்தேன். ஆறு செக் கேட்டான். இன்னும் லோனே வரலையேனு கேட்டா, அது அப்படித்தான்னு சொன்னான். ப்ரீ அப்ரூவ்ட்னால வந்துடும்னு நினைச்சு நானும் கொடுத்தேன். ஹோம் லோன் மேட்டர் சொன்னேன். உங்க சம்பளத்துக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல சார்னு சொன்னான்.

  கடைசியா அவனும் பப்ளிகாம் மாதிரி இழுக்க ஆரம்பிச்சான். இவன் புதுசா பாஸ்போர்ட் காபி கேட்டான். கொடுத்தேன்,. ஒரு வாரம் கழிச்சு இது எக்ஸ்பயர்ட் ஆயிடுச்சாமே சார்னு சொன்னான். டேய் லூசு. அதுக்குதான் 12ம்பக்கம் காபியும் கொடுத்து இருக்கேன். Renewal details அதுல இருக்குடானு சொன்னேன்.

  ஆவ்வ்..ஓகே சார்னு சொன்னான். அப்படி இப்படின்னு இவனும் ஒரு மாசம் அக்கிட்டான். அதே மாதிரி கிரெடிட் டேட் வந்தது. அவனே ஃபோன் செஞ்சான். அப்பாடானு எடுத்தா, அதே டயலாக். அப்ப கூட நான் டென்ஷன் ஆகலைங்க. அதுக்கு அவன் ஒரு காரணம் சொன்னான் பாருங்க.

“ஐ.டி வேலையில இருக்கறவங்களுக்கு லோன் ஸ்டாப் பண்ன சொல்லி இண்டர்னல் ஆர்டர் சார்”

டேய் பொறம்போக்கு நாய்ங்களா. கம்பெனி பற்றிய தகவல்கள் தரும்போதே அது ஐ,.டினு நான் சொல்லலையா” கத்தினேன்.

டொக்.வச்சிட்டான்

இப்ப ஹெச்.டி.எஃப்.சி. இவன் என் நண்பன் தான். கண்டிப்பா முடிச்சி தரேன் மச்சினு சொல்றான். வேணாம்டா சாமின்னா விட மட்றான். கல்யாணம் இருக்கே. சரின்னு கொடுத்தேன்.

ஒரே வாரம் டா. நான் கியாரண்டின்னு போனான். நேத்து ஃபோன் வந்தது.

சார். நாங்க ஹெச்.டி.எஃப்.சில இருந்து கால் பண்றோம். உங்க last employer tata steels வோட relieving order வேனுமே சார்.

என் கிட்ட இல்லைங்க.பே ஸ்லிப்பும் இல்லையே. ஆனா சம்பளம் கிரெடிட் ஆனதற்கு ஸ்டேட்மெண்ட் கொடுத்து இருக்கேன்.

ஆமாம் சார். ஆனா அது டாடா போட்ட சம்பளம்தான் எப்படி சார் தெரியும்?

வேலைல இருந்தாத்தானே சம்பளம் கிரெடிட் ஆகும்?

அது ரைட் சார். ஆனா எங்களுக்கு இப்ப அந்த ரிலிவிங் ஆர்டர் இருந்தாத்தான் பண்ண முடியும் சார். எங்களுக்கு ரூல்ஸ் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். மத்த பேங்க் மாதிரி இல்லை.

டொக்.

இந்த முறை நான் வச்சிட்டேன். அந்த பேங்கில் பார்த்த ஞாபகம்.

HDFC personal loans.

Faster approval - Easy Documentation -Loans in 48 Hrs.

**********************************************

  இடைநிலை ஊழியர்கள் என்ன செய்வார்கள்? அவர்களை ஏன் திட்டனும்னு யாரும் சொல்லாதீங்க.ப்ளீஸ். அவர்கள் டார்கெட்டுக்காக நம்மள நம்ப வைத்து கழுத்தறுப்பதே அவர்கள்தான். எனக்கு திட்டனும்னு தோணுது. இன்னும் இருவது நாள்ல கல்யானம். இவனுங்க கிட்ட இது எல்லாத்தையும் சொன்னேன். கண்டிப்பா வந்துடும் சார்னு சொல்லி சொல்லியே...

61 கருத்துக்குத்து:

Anbu on March 5, 2009 at 12:29 PM said...

me the first

புதுகைத் தென்றல் on March 5, 2009 at 12:31 PM said...

அவர்கள் டார்கெட்டுக்காக நம்மள நம்ப வைத்து கழுத்தறுப்பதே அவர்கள்தான்.//

ஆமாம் கார்க்கி. எனக்கும் இந்த அனுபவம் இருக்கு.

புதுகைத் தென்றல் on March 5, 2009 at 12:32 PM said...

லோன் நாமா கேக்காட்டாலும் உங்களு 25 லட்சம் லோன் ரெடியா இருக்கு, எப்ப வேணாம் வாங்கிக்கோங்கன்னு எத்தனை தடவை போன் செஞ்சாங்க தெரியுமா.

அவங்க ஆபீஸுக்கு போய் அடிக்காத குறையா திட்டனதுக்கப்புறம் தான் போன் வருவதுநின்னுச்சு.

புதுகைத் தென்றல் on March 5, 2009 at 12:33 PM said...

ஒரு காலத்துல மேல விழுந்து லோன் கொடுத்தாங்க. இப்ப லோன் கேட்டா பேங்கல கூட மேலையும், கீழையும் பாக்கறாங்க.

எல்லாம் ரெஷஷன் செய்யும் ஜாலம்.

வித்யா on March 5, 2009 at 12:33 PM said...

எனக்கு ஒரு வாரம் தொடர்ந்து தினமும் கால் செய்துக்கொண்டிருந்தார்கள். இன்னொரு தடவை கால் பண்ணீங்கன்னா நான் legal action எடுப்பேன்னு சொன்னதுக்கப்புறம் தான் நிறுத்தினாங்க. வாங்கினாலும் பிரச்சனை, வேணாம்னாலும் பிரச்சனை:(

பரிசல்காரன் on March 5, 2009 at 12:40 PM said...

//டேய் வீட்டு டாகுமெண்ட்டே என் பேர்லதான் இருக்கு. அதுவும் உங்க கிட்டதான் இருக்கு”//

//டேய் நாய. அத வச்சுதாண்டா ஸ்பெஷல் ஆஃபர்னு சொன்னீங்க.//

//டேய் பொறம்போக்கு நாய்ங்களா. //

ஒனக்கு லோன் கிடைக்கறது கஷ்டம்தாம்பா!

பரிசல்காரன் on March 5, 2009 at 12:44 PM said...

எனக்கு ரெண்டு, மூணு நாள் தொடர்ந்து ஃபோன் வந்தது. நான் எப்பவுமே எங்க எ.டி.கூட இருக்கறதால எடுத்து உடனே நாட் இண்ட்ரஸ்டட்னு சொல்லி கட் பண்ணீடுவேன். நாலாவது நாளும் ஃபோன் வந்தது. ‘ஐ வாண்ட் த்ரீ க்ரோர்ஸ் வெரி இம்மீடியட்லி. ஒன் ருபீ லெஸ் ஆல்சோ ஐ’ல் பி இன் பிக் ப்ராப்ளம். ப்ளீஸ் டெல் மீ வேர் ஐ ஹாவ் டு கம்’னு அடிச்சு விட்டேன். இப்போ ‘டொக்’ அந்தப்பக்கம் கேட்டது!

MayVee on March 5, 2009 at 12:45 PM said...

nanga ellam pesuvathu penaga irunthal, pesi pesiye avanga mobile number, vitu address, weekend movie ellathukkum ready panniruvom....

athe aanaga irunthal
"dont waste my time" thaan

MayVee on March 5, 2009 at 12:46 PM said...

most important thing is that i wont apply for loan

Indian on March 5, 2009 at 12:48 PM said...

1. Never beleive when they say it will be credited in 2 days or a week. When I applied for personal loan in Citibank, way back in 1999, they promised for 2 weeks and eventually credited after 2 months.

2. I applied for an additional credit card with HDFC bank recently as I am their customer already. The contact person told me (this was in 3rd week of Jan) that everything is approved and I'll receive the card through mail in a week. I call them in the 2nd week of Feb, I was told that my application was rejected. Apparently, all the banks seem to put hold issuing new credit cards to all IT folks. I may be wrong, however.

ஸ்ரீமதி on March 5, 2009 at 12:51 PM said...

:(((

நான் ஆதவன் on March 5, 2009 at 1:09 PM said...

இந்த டெலி பேங்கர்ஸே இப்படிதான் முதலாளி...குத்துங்க முதலாளி குத்துங்க...

கார்க்கி on March 5, 2009 at 1:26 PM said...

@அன்பு,

வாப்பா..

*********
@புதுகைத் தென்றல்,

சேம் ப்ளட்? என்ன செய்றது?

**********
@வித்யா,

ஆனா லோன் வாங்காம இனிமேல வீடு கட்டறாது எல்லாம் சாத்தியமா? டைம் ஆனாலும் தேசிய வங்கிகளைத்தான் நாடனும்

************
@பரிசல்,
அவங்க கிட்ட அப்படி சொல்வேனா? கடுப்புல இங்க அப்படி சொல்லியிருக்கேன் சகா..

கார்க்கி on March 5, 2009 at 1:28 PM said...

@மேவீ,

அந்த வேலையெல்லாம் நாங்களும் செய்வோம். ஆனா இப்ப லோன் தேவைபப்டுதே. அதானே முக்கியம்

*********

@இந்தியன்,

தகவலுக்கும் வருகைக்கும் நன்றி

***********
@ஸ்ரீமதி,

:)))))))))

**********

@ஆதவன்,

எங்க ஆளையேக் காணோம் ரொம்ப நாளா சகா?

நாமக்கல் சிபி on March 5, 2009 at 1:31 PM said...

//இந்த டெலி பேங்கர்ஸே இப்படிதான் முதலாளி...குத்துங்க முதலாளி குத்துங்க..//

:))


அட்ரஸ் ப்ரூஃப், காண்டாக்ட் நம்பர், பேங்க் ஸ்டேட்மெண்ட், செக் லீவ்ஸ் இதெல்லாம் மட்டும் தரமுடியாது!

மத்ததை வெச்சிகிட்டு எவ்ளோ லொன் கொடுக்க முடியுமோ அவ்ளோ மட்டும் கேஷா எடுத்துகிட்டு மதியாணம் வந்துடுங்க! இம்மீடியட்டா முடிச்சிக்கலாம்னு சொல்லி பாருங்கா!
ஒரு பய ஃபோன் பண்ண மாட்டான்!

Bleachingpowder on March 5, 2009 at 1:34 PM said...

ரெண்டு வருசம் முன்னால நான் கூட சிட்டி பேங்குல லோன் எடுத்தனே தல, ஒரு வாராத்துல செக் அனுபிச்சுட்டான். கார் லோன் Axis பேங்குல தான் எடுத்தேன், ரெண்டே நாள்ல பணத்தை டீலருக்கு அனுப்பிச்சிட்டான்.

எனக்கென்னவோ உங்க பேப்பரை அவனுங்க process பண்ணவே இல்லைன்னு தான் தோனுது. சும்மா டார்க்கட்டுக்காக உங்களை அலைய வச்சிருக்கானுங்க.

தராசு on March 5, 2009 at 2:06 PM said...

கேக்கறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கு தல,

ஆனா இந்த பேங்க் காரங்கள நம்மால ஒண்ணுமே பண்ண முடியாதா?

மண்குதிரை on March 5, 2009 at 2:17 PM said...

வணக்கம் நண்பா !

நாமக்கல் சிபி on March 5, 2009 at 2:19 PM said...

//ஆனா இந்த பேங்க் காரங்கள நம்மால ஒண்ணுமே பண்ண முடியாதா?//

எல்லா தகவல்களையும் ஒரு தாள்ளே எழுதி கொடுத்துட்டு முதல்ல வெரிஃபிகேஷன், அப்ரூவல் பிராசஸ் எல்லாம் முடிச்சிட்டு செக்கோட வாங்க, டாகுமெண்ட்ஸ் அப்பவே தரேன்னு சொல்லலாம்!

அப்பத்தான் ரெண்டு பக்கமும், நேரம், ஜெராக்ஸ் செலவுகள் தவிர்க்கப் படும்!

narsim on March 5, 2009 at 2:38 PM said...

சகா.. க்ரெடிட் அனலிஸ்ட் என்ற என் சிறு அறிவிற்கு எட்டிய அளவில்.. இப்பொழுது ஒரு லோனை அப்ரூவ் செய்வது என்பது.. ம்ஹூம்.. எவன் ஒருவனுக்கு வாழ்க்கையில் லோனே தேவைப்படாதோ அவனுக்கு மட்டுமே லோன் கொடுக்க முடியும் என்ற ரீதியில் இருக்கிறது..

CIBIL என்று ஒன்று உள்ளது.. நீங்கள் பிறப்பதற்கு முன்னரே யாரிடமாவது ஒரு ரூபாய் வாங்கி திருப்பித் தரவில்லை என்றாலும் அதில் இருக்கும்..( அதாவது.. நீங்கள் செட்டில் செய்ததாக நினைக்க்கும் உங்கள் பழைய க்ரெடிக் கார்டில் 100 ரூபாய் இருந்தாலே நீங்கள் அந்த CIBILஐ பொருத்தவரை டிபால்ட்டர்..

சில க்ரெடிட் அனலிஸ்ட் கொஞ்சம் புத்தியை உபயோகித்து அப்ரூவல் கொடுப்பார்கள்.. சில ராகுல் திராவிட்கள் அவுட் சைடு ஆப் ஸ்டம் பாலைத் தொட்டே தொலைய மாட்டார்கள்..

உலக பொருளாராத நொருக்கடியே காரணம்.. இன்னும் ஒரு மிகப்பெரிய அணுகுண்டு உள்ளது.. அது .. மாஸ்டர்,விசா.. இரண்டுமே நெருக்கடியில் உள்ளது என்பதே.. ஒபாமாவின் கண்ணசைவிற்கிப் பின் அந்த செய்தியும் சந்தைக்கு வரும்.. டர்ர்ர்ர்ர்ர்ர் தான்

Lancelot on March 5, 2009 at 2:43 PM said...

thalai intha mathiri prachanaigalla thatti ketkaa banking ombusmanu oruthaara RBI nyamichirukku- neenga intha vishayatha chumma vida kudaathunu nenachingana let me know...(ithulla vakeel illama neengalae argue pannalam)

குசும்பன் on March 5, 2009 at 3:07 PM said...

ரெண்டு டொக்குக்கே டென்சன் ஆனா எப்படி கார்க்கி? எத்தனை டொக்கை பார்க்கவேண்டி இருக்கு:(!

இதோ அதோன்னு சொல்லி கடைசியில் கழுத்தறுப்பான் பாருங்க! என்ன செய்யமுடியும்:(

குசும்பன் on March 5, 2009 at 3:10 PM said...

//மாஸ்டர்,விசா.. இரண்டுமே நெருக்கடியில் உள்ளது என்பதே.. ஒபாமாவின் கண்ணசைவிற்கிப் பின் அந்த செய்தியும் சந்தைக்கு வரும்.. டர்ர்ர்ர்ர்ர்ர் தான்//


ஏற்கனவே ரொம்ப பெரிய பெரிய டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆகிட்டு இருக்கு:(

Anbu on March 5, 2009 at 3:26 PM said...

எனக்கும் ஒரு வாரம் தொடர்ந்து தினமும் கால் செய்துக்கொண்டிருந்தார்கள். இன்னொரு தடவை கால் பண்ணீங்கன்னா அண்ணா

நான் ஆதவன் on March 5, 2009 at 4:04 PM said...

//
@ஆதவன்,

எங்க ஆளையேக் காணோம் ரொம்ப நாளா சகா?//

ஆணி கொஞ்சம் அதிகம் சகா. தமிழ்மணத்த ஓபன் செய்யிறதே பெரிய விசயமா இருக்கு.

உங்க போன பதிவை படிச்சேன். 200க்கு வாழ்த்துகள் சகா. தொட முடியாத தூரத்திற்கு போய்டீங்க(போய்கிட்டிருக்கீங்க) :)

Massattra Kodi on March 5, 2009 at 4:07 PM said...

இந்த நவ நாகரிக மங்கைகளுக்கு (Axis, HDFC, ICICI etc.) நம்ம மாமிகள் (SBI, இந்தியன் பேங்க், etc.) எவ்வளவோ மேல்.

உங்களக்கு கடுப்பா இருந்தாலும், எங்களக்கு (படிக்க) சுவாரசியமா இருக்கு.

All the best !

அன்புடன்
மாசற்ற கொடி

மணிகண்டன் on March 5, 2009 at 4:30 PM said...

உங்களுக்கு லோன் கொடுக்கறேன்னு சொன்ன பொண்ணு கிட்ட பாலம் கட்ட லோன் கேட்டீங்க தான ? அந்த பொண்ணு கொடுத்த சாபமா இருக்கும் !

ச்சின்னப் பையன் on March 5, 2009 at 4:51 PM said...

:-((((

Anonymous said...

Me too facing the same problem now with HDFC Bank for the personal loan.

இவனுங்க உஷாரா இருக்காங்கலாமாம் ...இதே உஷார அமெரிக்க நாட்டுலையும் பாலோ பண்ணிருந்தாங்கன்னா இப்ப ரிசஷன் இந்த அளவுக்கு தலைய விரிச்சுப் போட்டுட்டு ஆடி இருக்காது.

mony on March 5, 2009 at 5:16 PM said...

ஆக மொத்தம் தங்கச்சிக்குதான் கல்யாணம்-னு தெளிவு பண்ணீட்டீங்க
ஒ கே
ஒ கே

அமிர்தவர்ஷினி அம்மா on March 5, 2009 at 5:32 PM said...

நான் மட்டும்தான் பாதிக்கப்பட்டேன்னு நெனச்சேன், நீங்களுமா கார்க்கி,

ஐசிஐசிஐ & ஹெச் டி எப்.சி

ரெண்டுமே வரும் ஆனா வரா....து டைப் போல

Mahesh on March 5, 2009 at 6:42 PM said...

கொடுமைடா சாமி.... :((((

கணினி தேசம் on March 5, 2009 at 7:09 PM said...

நண்பா , உங்களை நினைச்சா பாவமா இருக்கு.

இங்க துபாய்ல இன்னமும் லோன் அள்ளிக் கொடுக்கறாங்க. அதிகபட்சம் ரெண்டு வாரம் போதும் !

மங்களூர் சிவா on March 5, 2009 at 7:15 PM said...

/
பரிசல்காரன் said...

எனக்கு ரெண்டு, மூணு நாள் தொடர்ந்து ஃபோன் வந்தது. நான் எப்பவுமே எங்க எ.டி.கூட இருக்கறதால எடுத்து உடனே நாட் இண்ட்ரஸ்டட்னு சொல்லி கட் பண்ணீடுவேன். நாலாவது நாளும் ஃபோன் வந்தது. ‘ஐ வாண்ட் த்ரீ க்ரோர்ஸ் வெரி இம்மீடியட்லி. ஒன் ருபீ லெஸ் ஆல்சோ ஐ’ல் பி இன் பிக் ப்ராப்ளம். ப்ளீஸ் டெல் மீ வேர் ஐ ஹாவ் டு கம்’னு அடிச்சு விட்டேன். இப்போ ‘டொக்’ அந்தப்பக்கம் கேட்டது!
/

:))))

வால்பையன் on March 5, 2009 at 7:38 PM said...

லோன் கிடைத்ததா இல்லையா சகா!
சிஸ்டர் மேரேஜ் எப்போ?
எந்த ஊருல?

MUTHU on March 5, 2009 at 7:48 PM said...

ஆமாம் ,லோன் வாங்கினீர்களா ,இல்லையா இல்லையென்றால் நம்ம பாங்குக்கு வந்து டிடைல்ஸ் கொடுக்கவும் with in 24hrs response

கும்க்கி on March 5, 2009 at 7:49 PM said...

ஹா...ஹா...ஹா...

கும்க்கி on March 5, 2009 at 7:57 PM said...

MUTHU said...

ஆமாம் ,லோன் வாங்கினீர்களா ,இல்லையா இல்லையென்றால் நம்ம பாங்குக்கு வந்து டிடைல்ஸ் கொடுக்கவும் with in 24hrs response.

ஏம்ப்பா அடரஸ் கொடுங்க கண்ணு..முத்து பேங்க்கா இல்ல முத்தூட் பேங்க்கா..?

கும்க்கி on March 5, 2009 at 7:58 PM said...

மணிகண்டன் said...

உங்களுக்கு லோன் கொடுக்கறேன்னு சொன்ன பொண்ணு கிட்ட பாலம் கட்ட லோன் கேட்டீங்க தான ? அந்த பொண்ணு கொடுத்த சாபமா இருக்கும் !

சனங்கல்லாம் எம்புட்டு நாபக சக்தியோட இருக்காங்க ப்ரதர்...

கும்க்கி on March 5, 2009 at 8:03 PM said...

ஆடு,மாடு, கோழி வளர்த்தனும்னா இல்லாட்டி எதாச்சும் பயிர் கடன்னா நான் உங்கள நம்பி கொடுக்க தயார்.என்ன பே ஸ்லிப்,செக், பாஸ்புக் செராக்ஸ் ஏதும் தேவையில்ல.. ஒரு 5 ஏக்கர் நிலம் இருந்தா போதுமானது.
ஆனா அத வச்சி கல்யாணம்லாம் செய்ய முடியாது சகா.. கல்யாணத்துக்கு பின்னாடி அல்லது முன்னாடி வேணா பார்ட்டி வைக்கலாம்.அவ்வளவுதான்.

அன்புடன் அருணா on March 5, 2009 at 8:13 PM said...

அடி பலம் போலிருக்கு????
அன்புடன் அருணா

Baski on March 5, 2009 at 8:50 PM said...

Pavam Karki

Same blood

Axis, ICICI ennaku loan tharala.
Aen da ketta enga appa Police Dept irrukar athan sonnan.
avanga police, politicians, lawyers loan koduka kudathun policy vachirrungalam.

Iyarkai on March 5, 2009 at 9:12 PM said...

யூத் விகடன் வாழ்த்துகள்:-)

Sundar on March 5, 2009 at 10:29 PM said...

try loan against property on ur house - it will be treated as 'top up' loan on ur property. or try loan on ur PF. PF rules allow loan in case of marriage in the family. Personal loans are unsecured loans, so in theory they attach too much weight...in current situation, banks are acting unreasonable and destroying value creation. sorry too much to type so English.

ஸ்ரீதர்கண்ணன் on March 6, 2009 at 12:00 AM said...

அதே டயலாக். அப்ப கூட நான் டென்ஷன் ஆகலைங்க. அதுக்கு அவன் ஒரு காரணம் சொன்னான் பாருங்க.

“ஐ.டி வேலையில இருக்கறவங்களுக்கு லோன் ஸ்டாப் பண்ன சொல்லி இண்டர்னல் ஆர்டர் சார்”

:)))))))))))

ஸ்ரீதர்கண்ணன் on March 6, 2009 at 12:07 AM said...

இன்னும் இருவது நாள்ல கல்யானம். இவனுங்க கிட்ட இது எல்லாத்தையும் சொன்னேன். கண்டிப்பா வந்துடும் சார்னு சொல்லி சொல்லியே...

:(((((((((

செல்வேந்திரன் on March 6, 2009 at 6:56 AM said...

இப்படியெல்லாம் பார்த்து பார்த்து லோன் கொடுத்துமா வங்கிகள் திவால் ஆகின்றன?!!!!!!!!!!!!!

சுரேகா.. on March 6, 2009 at 6:58 AM said...

இவனுங்களையெல்லாம்....

நாமதான் வளரவிட்டு...இப்ப ஆடுறானுங்க!

கவலைப்படாதீங்க கார்க்கி ! எல்லாம் நல்லபடியா நடக்கும்!

சுரேகா.. on March 6, 2009 at 7:06 AM said...

பழைய டாக்குமெண்ட்ஸெல்லாம் விரட்டி வாங்கிடுங்க! உங்கபேர்ல செக் போட்டு எடுத்து விளையாடிடுவானுங்க !

அதுக்கு கேஸ் கூட போடலாம்.!

அப்புறம்..
யூத்புல் விகடனுக்கு வாழ்த்துக்கள்!

MayVee on March 6, 2009 at 7:33 AM said...

me th 50 th ah

VIKNESHWARAN on March 6, 2009 at 9:17 AM said...

தராசு கூட இந்த மாதிரி பேங்க் சம்பந்தமா ஒரு விசயம் எழுதி இருக்காரு படிச்சிங்களா? அவுங்களுக்கு லோன் அப்ரூவ் ஆகரது முக்கியமில்ல... டாக்டெட் கஷ்டமர் கிடைச்சா போதும். கமிசன் எடுத்துக்கிட்டு கஷ்டமர கழட்டிவிட்டுவாங்க... ஆப்பிசர் கையில் காசு... கஷ்டமருக்கு தோசை..

Lancelot on March 6, 2009 at 11:03 AM said...

You have been awarded. Please check http://lancelot-oneofakind.blogspot.com/2009/03/cute-is-innocence.html

Anonymous said...

வாழ்த்துக்கள் சகா..

டக்ளஸ்....... on March 6, 2009 at 11:55 AM said...

நான் போன மாசம் தான் 1,50,000/‍ பர்சனல் லோன் எடுத்தேன் கார்க்கி அண்ணே....SBIல‌
SBIல முயற்சி பண்ணுங்க...(அங்கயும் கிடைக்கலனா என்னைய திட்டி இன்னொரு பதிவு போட்டுராதீங்க!)

கும்க்கி on March 6, 2009 at 12:12 PM said...
This comment has been removed by the author.
கும்க்கி on March 6, 2009 at 12:14 PM said...

Sriram said...

வாழ்த்துக்கள் சகா..

தெய்வமே எதுக்கு வாழ்த்து..?

cheena (சீனா) on March 7, 2009 at 8:39 AM said...

என்ன செய்வது ... இந்த வங்கிகள் அனைத்துமே இப்படித்தான். தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் கால தாமதம் ஆனாலும் அதிக விழுக்காடு கடன் தந்து விடுகிறார்கள்

Anonymous said...

hmmmmmm

விஜய் on March 9, 2009 at 3:00 PM said...

ha ha ha
he he he

nothing to say
All are true pa

லதானந்த் on March 9, 2009 at 8:21 PM said...

நண்பா! பேசுறது ஆம்பிளையா இருந்தா உடனடி டொக்! பொம்பிளையா இருந்தா “ஒங்க வாய்ஸ் நெம்ப ஸ்வீட்டா இருக்கு! என்னோட ஃப்ரண்டோட சிஸ்டர் ஒங்க்ள மாதியே பேசுவாங்க. தப்பா நெனைக்கதீங்க! முடிஞ்சா சாயங்காலம் ஆர். எஸ். புரம் சவிதா ஹால் கிட்ட சரியா சாயங்கால்ம் 6 மணிக்கு வாங்க.
நிச்சயம் ஹெல்ப் பண்றேன்.”

இது மாதப்பனோட பேச்சு!
25% சக்ஸஸ் ஆவும். சரியா?

Dpal on August 4, 2011 at 11:04 AM said...

yennakum ippadi thaan oruthi car loan kodukarenu phone pannitey iruntha. naan keten sari yevlo kodupeynu. she told full amount with no guarentee. i told ok then give me. she said we will just need your car RC book. athu already yenkita thaan iruku. freeya kodutha kodu illana neeye vechikonu soliten.namma katra vatti vechithaan ivanuga salraye vaanguraanuga aana avan yennomo namaku pichai podura mathiri thaan nadapaan.ithu antha naai antha bank-la velaiku thaan irukum.owner illa.

 

all rights reserved to www.karkibava.com