Mar 10, 2009

2009ன் சூப்பர் ஹிட்டாக போகும் பாடல்


  த‌ல‌ம்பாட்டத்தின் 'பிரம்மாண்ட' வெற்றியை அடுத்து அதே இயக்குனருடன் பணிபுரிய இருந்த நேரத்தில், மூத்த(’ர’ இல்லைங்க) இயக்குனர் வாய்ப்பு வர அதில் கவனம் செலுத்துகிறார் தம்பு. ஆனால் படத்தில் குத்துப் பாடலே இல்லை என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இயக்குனருடன் மனக்கசப்பில் இருக்கிறார். ஒருவழியாய் அவரை சம்மதிக்க வைத்து ஒரு குத்துப் பாடலுக்கு பர்மிஷன் வாங்கி தனது குத்துப்படையுடன் டிஸ்கஷன் நடத்துகிறார். இசையமைப்பாளர் சிவனும், பாடலாசிரியர் பூவரசுவும், கிரியேட்டிவ் ஹெட் காஃபி.அஞ்சும் வந்துவிட வேகமாக விரலால், மன்னிக்க, காலால் நடந்து வருகிறார் தம்பு

சிவன்: சிச்சுவேஷன் சொல்லுங்க. போட்டுடலாம்.

பூவரசு: தமிழ் சினிமாவுக்கே புதுசுங்க. ஹீரோ வில்லன்களையெல்லாம் ஒன்னா தீர்த்துக் கட்டப் போறாரு. அதான் க்ளைமேக்ஸ். அதுக்கு முன்னாடி தன் காதலிய பார்க்கறாரு.அப்ப ஒரு பாட்டு. கடைசி நேரங்கறதால நல்லா ஸ்பீடா இருக்கனும்.

காபி.அஞ்சு:  (எகிறுகிறார்)

யோவ் நான் தான் கிரியேட்டிவ் ஹெட்டு

பாட்டு எழுத மட்டும்தான் உனக்கு துட்டு

நான் போட்ட‌ எல்லாப் பாட்டும் ஹிட்டு

இந்த‌ பாட்டுல‌ போட‌றோம் எட்டு செட்டு

(வேறு வழியின்றி வாய் மூடி அமர்கிறார் பூவரசு)

தம்பு: உலகத்திலே சின்ன வயசுல டைரக்டர் ஆனவன் நான் தான். நான் சொல்றேன் சிச்சுவேஷன். கதைப்படி ஹீரோயின நான் பிரிஞ்சிடறேன். அந்த சோகத்துல தண்ணியடிச்சிட்டு பாடறேன். குத்துப்பாட்டாவும் இருக்கனும். காதலின் வலியும் இருக்கனும்.

சிவன்: oops. இப்ப யாருக்கு நான் ட்யூன் போடனும்? தம்பு நீங்க சொன்ன மாதிரியே போடலாம். லிரிக் ரைட்டர் லீடு கொடுத்தா நல்லாயிருக்கும்

பூவரசு: இதோ ஒரு நிமிஷம் சார். (யோசிக்கிறார்)

கா.அ. : சொன்னவுடனே வரணும் பாட்டு

அதுக்கு நான் ஒரு எடுத்துக்காட்டு

இதாப்பா சிவன் புடிச்சுக்கோ..

டண் டணக்கா நீயும் அடிச்சுக்கோ

அட மயிலாப்பூர் ஃபிகரே உனக்கில்லை நிகரே

சிங்கமென வாழ்ந்தவன் நானே

அத அசிங்கமாக ஆக்கிட்டு போனே

பூவரசு: வந்துடுச்சு சார். (எல்லோரும் ஒரு மாதிரி பார்க்க, ஆரம்பிக்கிறார்)

சென்னையில ஓடுதடி கூவம்

என் மேல உனக்கென்ன கோவம்

நீ இல்லாம நான் வாழ்ந்தா பாவம்

ரெண்டு பேரும் ஒன்னா செத்து போவோம்

சிவன்: வாவ். சூப்பர்ப் ஃபீலிங். என்ன தம்பு. மெட்டும் தானா வருது.(மூக்கால் பாடிக் காட்டுகிறார்)

தம்பு: யா. எக்ஸலண்ட். அப்படியே பல்லவிய முடிச்சுக் காட்டுங்க பாஸ்

பூவரசு: (டஸ் புஸ் சத்தம் இல்லாம, வாயசைவதே தெரியாமல் பாடுகிறார்)

புடிக்கல புடிக்கல வாழப் புடிக்கல

முடிக்கல முடிக்கல ஃபுல்ல முடிக்கல

தம்பு: அப்படியே பல்லவியோட லாஸ்ட் லைன் சும்மா கும்முனு சொல்லுங்க. வார்த்தைகள் பவர்புல்லா, தமிழ் சினிமாவுக்கு புதுசா இருக்கனும்

பூவரசு: சர்ர்க் சர்ர்க கலந்தடிச்சா காக்டெயில்

டர்ர்க் புர்ர்க் காதலிலே நான் ஃபெயில்.

சிவன்: (சிலிர்த்துக் கொண்டு பாடிக் காட்டுகிறார் பல்லவியை.)

சென்னையில ஓடுதடி கூவம்

என் மேல உனக்கென்ன கோவம்

நீ இல்லாம இப்ப நான் வாழ்ந்தா பாவம்

ரெண்டு பேரும் ஒன்னா செத்து போவோம்

புடிக்கல புடிக்கல வாழப் புடிக்கல

முடிக்கல முடிக்கல ஃபுல்ல முடிக்கல

சர்ர்க் சர்ர்க கலந்தடிச்சா காக்டெயில்

டர்ர்க் கர்ர்க் காதலிலே நான் ஃபெயில்.

(கையாலும் வாயாலும் டண்டணக்க தாளம் போடுகிறார் கா.அ. வலிப்பு வந்ததைப் போல ஆடுகிறார் தம்பு)

பூவரசு: அப்படியே சரணமும் சொல்றேன் கேளுங்க

பிஞ்சுன்னு நினைச்சுட்டாங்க என்ன

நெஞ்சுக்குள்ள வச்சுப்புட்டேன் உன்ன

மஞ்சுன்னு உன் பேர நீ சொன்ன

ம்ம்.. கடைசி வரில வைக்கிறோம் சார் ல்வ் ஃபீலிங்க

நஞ்ச வச்சு இப்ப நீயே ஏன் கொன்ன.எப்படி சார்?

தம்பு: பின்றீங்க பாஸ். அப்படியே நம்ம மாஸ் காட்டலாமா?

பூவரசு: அது இல்லாமலா?

என் பின்னால ஒரு கோடி பேரு

தமிழ்நாட்டில் எல்லாமே என் ஊரு

உன் கையால சாப்பிடனும் சோறு

என்னை வெல்ல உனையன்றி யாரு?

ரெண்டு மனசுக்குள்ள நடக்குது வாரு

இப்ப என் கையில மட்டும் பாரு பீரு

தம்பு: கொன்னுட்டிங்க சார்

பூவரசு: ஃபினிஷிங் கேளுங்க

சர்ர்க் சர்ர்க கலந்தடிச்சா காக்டெயில்

டர்ர்க் கர்ர்க் காதலிலே நான் ஃபெயில்.

(ஏரியா கலகலப்பான நேரம், மோசதேவன் அங்கே வர, பாடலைப் பாடிக் காட்டுகிறார்கள். அலறியடித்துக் கொண்டு ஸ்க்ரிப்ட்டோடு  கோர்யா வீட்டுக்கு ஓடுகிறார்)

50 கருத்துக்குத்து:

குசும்பன் on March 10, 2009 at 10:32 AM said...

மீ த பர்ஸ்ட்:)

குசும்பன் on March 10, 2009 at 10:34 AM said...

//காதலின் வலியும் இருக்கனும். //

ஒரு ஊசிய வெச்சு குத்த சொல்லுங்க நல்லா வலியும் இருக்கும்:)

மண்குதிரை on March 10, 2009 at 10:39 AM said...

hi karki

vanakkam !

o avura niingka !

kallakkal aanantha vikadanla loosu payan pola irukku nanba !

குசும்பன் on March 10, 2009 at 10:40 AM said...

//சர்ர்க் சர்ர்க கலந்தடிச்சா காக்டெயில்

டர்ர்க் கர்ர்க் காதலிலே நான் ஃபெயில்//

இந்த இரண்டு வரியில் சில பல சூட்சமங்கள் இருக்கின்றன, விளக்கம்வேண்டுபவர்கள் தனி மெயிலுக்கு வரவும்!:)

ஸ்ரீமதி on March 10, 2009 at 10:45 AM said...

:)))))))))))

டக்ளஸ்....... on March 10, 2009 at 10:51 AM said...

ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்....

பொன்.பாரதிராஜா on March 10, 2009 at 10:59 AM said...

அடுத்த படத்த நீயே டைரக்ட் பண்ணி வம்பை விட இளைய டைரக்ட்டர்னு பேர் வாங்கிடு கார்க்கி....

கார்க்கி on March 10, 2009 at 11:01 AM said...

@மண்குதிரை,

நன்றி நண்பரே..

*********
@குசும்பன்,

நம்ம மக்கள் புத்திசாலிகள். கண்டுபுடிச்சுடுவாங்க தல

*********
/ ஸ்ரீமதி said...
:)))))))))))//

:))))

***************
/ டக்ளஸ்....... said...
ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்//

நன்றி சகா

*************
/ பொன்.பாரதிராஜா said...
அடுத்த படத்த நீயே டைரக்ட் பண்ணி வம்பை விட இளைய டைரக்ட்டர்னு பேர் வாங்கிடு கார்க்கி..//

பாரதிராஜா வாயால சொன்னா நடக்கும் தல.. :))

kishore on March 10, 2009 at 11:15 AM said...

நல்ல இருந்த புள்ளைய ஸ்டார் படம் குடுத்து இப்டி கிறுக்கு பிடிச்சி அலைய விட்டுடாங்க.. ஊருக்குள்ள்ள திடிர்னு நேத்துல இருந்து பேய் மழை பெய்யுது... இது எங்க போய் முடிய போகுதோ... கருப்ப சாமி கார்கி அண்ணன் நல்லா ஆகிட்டா உனக்கு 100 ஆடு வெட்டி விருந்து வக்கிறேன் சாரயதோட ...

narsim on March 10, 2009 at 11:21 AM said...

சகா.. ஸ்டார் வாரத்திற்கு வாழ்த்துக்கள் என்பதை நினைவுபடுத்துகிறேன்..

தாமிரா on March 10, 2009 at 11:31 AM said...

உனக்குத் தெரியாத கமர்ஷியலா..? கலக்கு.. கலக்கும்மா.!

Anonymous said...

இப்போ என் முறை :P

Anonymous said...

// தாமிரா said...

உனக்குத் தெரியாத கமர்ஷியலா..? கலக்கு.. கலக்கும்மா//

அண்ணாச்சி, பேர மாத்த போறிங்களாமே??

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Mahesh on March 10, 2009 at 11:49 AM said...

அப்ப அடுத்த சிம்பு படத்துக்கு நீங்கதான் பாடலாசிரியர்...

(ஸ்டார் ஆனதும் எப்பிடியேல்லாம் யோசிக்கிறாங்கப்பா !!)

அன்புடன் அருணா on March 10, 2009 at 11:56 AM said...

இப்பிடில்லாம் யோசிக்கிறது கூடப் பரவாயில்லை.....எப்பிடி எழுதவும் முடியுதுன்னு புரியலைப்பா...
அன்புடன் அருணா

அத்திரி on March 10, 2009 at 12:25 PM said...

ரொம்ப நாளா இந்த நக்கல் நையாண்டிய காணோமேன்னு நினைச்சேன்......... ஆரம்பிச்சிட்டியா///

வால்பையன் on March 10, 2009 at 12:32 PM said...

பயங்கர மொக்கையா இருக்கு!
ஆனந்தவிகடன் லூசுபையன் மாதிரி கொஞ்சம் விசுவலா பார்த்தா இன்னும் நல்லாயிருக்குன்னு நினைக்கிறேன்.

(என் ப்ளாக்கிலயும் இந்த மாதிரி உண்மைய பேசுங்கப்பா)

Cable Sankar on March 10, 2009 at 12:38 PM said...

suuperrrr nakkal.. kaarki

முரளிகண்ணன் on March 10, 2009 at 12:45 PM said...

கலக்கிட்ட கார்க்கி

எம்.எம்.அப்துல்லா on March 10, 2009 at 1:04 PM said...

நட்சத்திர வாரத்தில் இருக்க கார்க்கி :)

prakash on March 10, 2009 at 1:05 PM said...

//எக்ஸலண்ட். அப்படியே பல்லவிய முடிச்சுக் காட்டுங்க பாஸ்//

பல்லவி எல்லாம் ஏற்கனவே முடிஞ்சுபோன பீஸு....

வேணும்னா திரிஷா, நயன்தாரா இப்படி யாரையாவது முடிக்கலாம் ....

ஸ்ரீதர் on March 10, 2009 at 1:08 PM said...

ஒ இதுதான் மொக்க போடறதா?

முரளிகண்ணன் on March 10, 2009 at 1:11 PM said...

கார்க்கி நீ கூட அந்தப் பாட்ட பத்தித்தான் சொல்லியிருக்கியோன்னு வந்தேன்

கார்க்கி on March 10, 2009 at 1:12 PM said...

@கிஷோர்,

நல்ல வேண்டிக்கோங்க சகா

**********
@நர்சிம்,

தல, மொத பதிவா எதப் போடறதுன்னு யோசிச்சேன். ஏறி வந்த ஏணிய எட்டி உதைக்க கூடாது. அதான் இதை போட்டேன். எனக்கு அடையாளம் தந்ததே இதானே. அடுத்தடுத்த மாற்றலாம். அக்கறைக்கு நன்றி

************
// தாமிரா said...
உனக்குத் தெரியாத கமர்ஷியலா.//

புரிதலுக்கு நன்றி சகா
*************
@தூயா,

நர்சிம் முந்திட்டாரே

கார்க்கி on March 10, 2009 at 1:15 PM said...

@மஹேஷ்,

சிம்பு படத்துக்கா? இவர் பேரு தம்புங்க

***********
// அன்புடன் அருணா said...
இப்பிடில்லாம் யோசிக்கிறது கூடப் பரவாயில்லை.....எப்பிடி எழுதவும் முடியுதுன்னு புரியலைப்பா.//

அவ்ளோ தைரியம் எனக்கு :))

*********

// அத்திரி said...
ரொம்ப நாளா இந்த நக்கல் நையாண்டிய காணோமேன்னு நினைச்சேன்//

:)))

*********

@வால்,

நேர்மையான கருத்துக்கு நன்றி சகா(வறேன் உங்க க்டைக்கு. )

கார்க்கி on March 10, 2009 at 1:17 PM said...

// Cable Sankar said...
suuperrrr nakkal.. kaarki//

நன்றி சகா

**********

@முரளி,

நன்றி சகா

*********
@அப்துல்லா,

மொத பதிவா எதப் போடறதுன்னு யோசிச்சேன். ஏறி வந்த ஏணிய எட்டி உதைக்க கூடாது. அதான் இதை போட்டேன். எனக்கு அடையாளம் தந்ததே இதானே. அடுத்தடுத்த மாற்றலாம். அக்கறைக்கு நன்றி

************
@பிரகாஷ்,

அரண்டவன் கண்ணுக்கு.. :)))))))

************
// ஸ்ரீதர் said...
ஒ இதுதான் மொக்க போடற//

ஆமாங்க.. :)))

Karthik on March 10, 2009 at 1:20 PM said...

பின்றீங்களே கார்க்கி!!
:)))))))))))))))))))

Lancelot on March 10, 2009 at 1:51 PM said...

anna room pottu yosikirathungrathu ennanu ippothan parkuren.;...mudiyala

Anbu on March 10, 2009 at 2:03 PM said...

மிகவும் சிரித்தேன்..
நன்றாக இருந்தது..
நல்ல மொக்கை

அறிவிலி on March 10, 2009 at 2:41 PM said...

உங்க கோட் வோர்ட் எல்லாம் புரிஞ்சுகக்கறதே பெரும்பாடா இருக்குப்பா.(ஜெனரஷன் கேப்).

காபி.அஞ்சுன்னு பேர் ஏன் வெச்சீங்கன்னு இப்பத்தான் புரிஞ்சுது...

ஹ்ம்ம்.. வயசாயிருச்சோ..

Still, interesting

Anonymous said...

நல்ல மொக்கை!!
குறிப்பா "காபி.அஞ்சு" தான் டாப்பு!!

கும்க்கி on March 10, 2009 at 3:12 PM said...

kishore said...

நல்ல இருந்த புள்ளைய ஸ்டார் படம் குடுத்து இப்டி கிறுக்கு பிடிச்சி அலைய விட்டுடாங்க.. ஊருக்குள்ள்ள திடிர்னு நேத்துல இருந்து பேய் மழை பெய்யுது... இது எங்க போய் முடிய போகுதோ... கருப்ப சாமி கார்கி அண்ணன் நல்லா ஆகிட்டா உனக்கு 100 ஆடு வெட்டி விருந்து வக்கிறேன் சாரயதோட ...

இதை வழிமொழிகின்றேன்.
:-))

கார்க்கி on March 10, 2009 at 4:43 PM said...

/ Karthik said...
பின்றீங்களே கார்க்கி!!
:)))))))))))))))))))//

நன்றி கார்த்திக்

**************
// Lancelot said...
anna room pottu yosikirathungrathu ennanu ippothan parkuren.;...mudiyala//

கிகிகி..

***********
// Anbu said...
மிகவும் சிரித்தேன்..
நன்றாக இருந்தது..
நல்ல மொக்//

நன்றிப்பா

************

//அறிவிலி said...
உங்க கோட் வோர்ட் எல்லாம் புரிஞ்சுகக்கறதே பெரும்பாடா இருக்குப்பா.(ஜெனரஷன் கேப்).

காபி.அஞ்சுன்னு பேர் ஏன் வெச்சீங்கன்னு இப்பத்தான் புரிஞ்சுது//

யாருமே சொல்ல்லையேனு கவலப்பட்டேன்.. நன்றிங்க

***********
/ suttapalam said...
நல்ல மொக்கை!!
குறிப்பா "காபி.அஞ்சு" தான் டாப்பு//

தாங்க்ஸ்ங்க

**********

@கும்க்கி,

உங்களுக்கு தனியா இருக்கு

Thusha on March 10, 2009 at 5:09 PM said...

சும்மாவே அங்க பாட்டு கேட்டாலே ஒன்னும் புரியாது இங்க நீங்க எழுதினதை வாசிச்சே எனக்கு ஒன்னும் புரியலை
ஏன் அண்ணா இப்படி ஒரு வில்லத்தனம்

’டொன்’ லீ on March 10, 2009 at 5:37 PM said...

haaha..:-)

உண்மையில் அப்படித்தான் நடக்குது போல :-)

Anonymous said...


உடுக்குறி இடுகையாளருக்கு வாழ்த்துக்கள்.

தமிழன்-கறுப்பி... on March 10, 2009 at 6:18 PM said...

பேரரசு படத்துல பாட்டெழுதுறிங்களா சொல்லவே இல்ல... :)

தமிழன்-கறுப்பி... on March 10, 2009 at 6:20 PM said...

குசும்பன் said...
//சர்ர்க் சர்ர்க கலந்தடிச்சா காக்டெயில்

டர்ர்க் கர்ர்க் காதலிலே நான் ஃபெயில்//

இந்த இரண்டு வரியில் சில பல சூட்சமங்கள் இருக்கின்றன, விளக்கம்வேண்டுபவர்கள் தனி மெயிலுக்கு வரவும்!:)
\\

எனக்கு தெரியுமே தனிமடல் எல்லாம் வேணாம் அடுத்த வாரம் பதிவா போட்டுடறேன்.. :)

அறிவன்#11802717200764379909 on March 10, 2009 at 8:59 PM said...

டி ஆருக்கு காஃபி அஞ்சு...புரியலையேப்பா...

மத்தபடி,கலக்கல்.வாழ்த்துக்கள்.

கணினி தேசம் on March 10, 2009 at 9:56 PM said...

மொக்கையின்னா மொக்கை இது
கார்க்கியோட மொக்கை..!!

சக்கை போடு போடும் நம்ம
சகாவுக்கு போடு
அட்ரா சக்கை..!!


மொக்கையின்னா மொக்கை இது
கார்க்கியோட மொக்கை..!!

சக்கை போடு போடும் நம்ம
சகாவுக்கு போடு
அட்ரா சக்கை..!!


மொக்கையின்னா மொக்கை இது
கார்க்கியோட மொக்கை..!!

சக்கை போடு போடும் நம்ம
சகாவுக்கு போடு
அட்ரா சக்கை..!!


அட்ரா சக்கை..!! அட்ரா சக்கை..!! அட்ரா சக்கை..!!

Hisham Mohamed - هشام on March 10, 2009 at 11:12 PM said...

நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்.

மதிபாலா on March 11, 2009 at 7:41 AM said...

எங்கியோ போய்ட்டீங்க பாஸு.

நச்சத்திரமா ஆனாலும் ஆனிங்க பாஸ் , பின்றீங்க போங்க பாஸ்....!

எப்படி பாஸு இப்படியெல்லாம்?

கார்க்கி on March 11, 2009 at 10:14 AM said...

/’டொன்’ லீ said...
haaha..:-)

உண்மையில் அப்படித்தான் நடக்குது போ//

தெரியல பாஸ். வருகைக்கு நன்றி

***************
/ தமிழன்-கறுப்பி... said...
பேரரசு படத்துல பாட்டெழுதுறிங்களா சொல்லவே இல்//

ஏன் ஏன் இந்த கொலவெறி?

****************
//அறிவன்#11802717200764379909 said...
டி ஆருக்கு காஃபி அஞ்சு...புரியலையேப்//

என்னங்க? டீக்கு பதில் காபி. ஆறுக்கு பதில் அஞ்சு.

*****************
/ கணினி தேசம் said...
மொக்கையின்னா மொக்கை இது
கார்க்கியோட மொக்கை//

வர வர மக்களுக்கு நம்ம மேல பயம் இல்ல சகா.. அதான் அப்பப இப்படி ஒரு மொக்கை

***********
/ Hisham Mohamed - هشام said...
நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்//

நன்றி சகா

**************
/ மதிபாலா said...
எங்கியோ போய்ட்டீங்க பாஸு.

நச்சத்திரமா ஆனாலும் ஆனிங்க பாஸ் , பின்றீங்க போங்க பாஸ்//

வாங்க சகா.. ரொம்ப நாளா ஆளக் காணோம்?

இராம்/Raam on March 11, 2009 at 1:08 PM said...

:))

ஜி on March 11, 2009 at 11:30 PM said...

:))

கிரி on March 12, 2009 at 8:00 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி

(உங்களோட ஸ்டார் பதிவு திறக்கமாட்டேன் என்கிறது)

Joe on March 12, 2009 at 11:25 AM said...

முடியல!

லவ்டேல் மேடி on March 12, 2009 at 6:26 PM said...

அட பழனிச்சாமி ......... ஓடிப்போயிரு ......!! இல்லீநீனா அல்லகட்டி
கடுச்சுபுடுவாங் ........!!!! அடங்கொன்னியா........!!!
மொக்க தாங்க முடியிலடா சாமி...........!!!! பாட்டு படிக்கிறேன்னு சொல்லீட்டு இந்த கடி கடிக்குரானே.......!!!!!!

dharshini on March 13, 2009 at 10:25 PM said...

யாருப்பா அது யுவன கின்டல் பண்றது.

//டி ஆருக்கு காஃபி அஞ்சு...புரியலையே//

தாங்கமுடியல..

கலக்கிடீங்க அண்ணா.

 

all rights reserved to www.karkibava.com