Mar 31, 2009

கலியுகத்தில் இதுவும் நடக்கும்.இன்னமும் நடக்கும்

53 கருத்துக்குத்து

  பரிசல் போட்ட பத்த பார்த்தீங்களா? அட கணேஷிடம் அடிபட்ட அவரு, அவருக்கே போட்டுக்கிட்ட பத்து இல்லைங்க. பத்து புத்தகங்கள் பற்றி. பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கா இருக்கிற அவரே ரவுடின்னு வண்டில ஏறும்போது, பேஸ்மெண்ட் வீக்கா இருக்கிற நாம ஏறாம எப்படி? நாம மத்தவங்களுக்கு எங்க அட்வைஸ் கொடுக்கறது? கிரகம் உலகமேதான் நம்மளுக்கு கொடுக்குதே. ஒரே ஒரு அட்வைஸ் மட்டும் சொல்றேங்க. ”யாருக்கும் தயவு செய்து அட்வைஸ் கொடுக்காதீங்க”. (செல்வேந்திரனுக்கு நன்றி)

  இப்ப நிகழ்ச்சிக்கு போகலாமா? ச்சே நிறைய டிவி பார்த்தா இப்படித்தான். பதிவுக்கு போகலாமா?

10) Alchemist (paulo coelho)

  பிரேசில் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் இவர். தன்னம்பிக்கை குறித்து எழுதப்படும் நூல்களை நான் வெறுப்பதாக சொன்னபோது இதை எனக்கு அறிமுகம் செய்தார் நண்பர் ஒருவர். அடுத்த முறை அவரைப் பார்த்தபோது ட்ரீட் வைத்தேன். Outstanding. ஆனால் இதை நம்பி இவரின் மற்ற புத்தகங்களை வாங்கினால் நான் பொறுப்பல்ல. 67 மொழிகளில் பொழிபெயர்க்கப்பட்டு, 150 நாடுகளில் 65 மில்லியன் புத்தகங்கள் விற்றுள்ளன.உயிரோடு இருக்கும் எழுத்தாளர்களில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டதற்காக கின்னஸிலும் இடம் பெற்றிருக்கிறார்.

9) லொள்ளு தர்பார் (முகில்)

   நட்சத்திர வாரத்தில் நான் எழுதிய ஒரு பதிவில், நண்பர் தராசு அதேப் போல ஒன்றை முகிலும் எழுதியிருப்பதாக பின்னூட்டமிட்டிருந்தார். தேடிப்பிடித்து வாங்கினேன். அட்டகாசம் செய்திருக்கிறார். நகைச்சுவை புத்தகங்களை வாங்குவதை நிறுத்தி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் முகிலின் லொள்ளு தர்பார்.. வாய்ப்புகளே இல்லைங்க. மீள்வாசிப்பிலும் சிரிக்க வைக்கிறார்.

8) சிந்தா நதி (லா.ச.ரா)

  சாஹித்ய அகாடெமி பரிசு வாங்கிய புத்தகம். லா.ச.ராவை அதிகம் வாசித்ததில்லை. அவரின் பச்சை கனவும், சிந்தா நதியும் என்னை பல மாத காலம் ஆட்கொண்டன. லா.ச.ராவைப் பற்றி அவரின் தொண்டரடிபொடிகளில் ஒருவரான செல்வேந்திரன் ஒரு பதிவெழுத வேண்டும். சத்தியமா சிந்தா நதி ஐந்து முறை படித்தும் பாதி புரியவில்லை. முதலில் புரிந்தது மீள்வாசிப்பில் புரியவில்லை.

7) மோகமுள் (தி.ஜானகிராமன்)

தமிழ் நாவல்களில் என்னை வெகுவாக கவர்ந்த நாவல். பாபுவும், யமுனாவும் இன்னும் என் கண் முன்னே இருக்கிறார்கள். ஒரு முறை அய்யணார் சொல்லியிருந்தார், தமிழ் எழுத்தாளர்கள் தீராக்காமம் குறித்தே அதிகம் எழுதுவதாக. ஆனால் அதிலே எழுத்தின் உச்சத்தை தொட்டவர் தி.ஜா. மோகமுள் அதற்கு ஒரு நல்ல உதாரணம்.

6) The Motor cycle diaries( Che Guevera)

என் ஆதர்ச நாயகன் சேவின் பயண அனுபவங்கள். 23 வயது மருத்துவன், ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவன், ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் 8000 மைல்கள் பயணித்தான். அவரின் வாழ்க்கையை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தென் அமெரிக்காவையும் மாற்றி அமைக்க ஏதுவாக அமைந்தது அந்தப் பயணம்தான்.

***********************************************

பதிவின் நீளம் கருதியும், புடுங்க வேண்டிய ஆணிகளை கருத்தில் கொண்டும் தொடரும் போடுகிறேன். அடுத்த ஐந்து புத்தகங்கள் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

Mar 30, 2009

புட்டிக்கதைய ஜெயிக்க வைங்க மக்கா

42 கருத்துக்குத்து

  சங்கமம் போட்டி தெரியுமில்ல? கல்லூரி தான் தலைப்பு. சும்மா இல்லாம நம்ம புட்டிக்கதைகளில் ஒன்ன அனுப்பினேங்க. நர்சிம், வெட்டியோடத பார்த்ததும் இது வேலைக்காவாதுன்னு விட்டுட்டேன். திடீர்ன்னு பார்த்தா நம்மா பாலா அவர்கள் போட்டிக்கு வந்ததில் இருந்து டாப் டென்னு போட்டார்.  போய் பாருங்க, இளகிய மனம் கொண்டவர்கள் தவிர்ப்பது நலம்.(நோட் பண்ணுங்க, பொண்ணுங்கன்னு சொல்லல). ஏன் நர்சிம்மோடத விட்டுட்டிங்க பாஸ்? அவருடையது இதில் சேர்க்க முடியாதுன்னா?

அப்படியே ஓட்டு போட இங்க போங்க.  அதுக்குன்னு போட்டு கவுத்திடாதீங்க மக்கா..

**********************************************

மறுநாள் செமெஸ்டர் தேர்வுகள். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் முழு பியரையும் அடித்துவிட்டான் ஏழு. படிப்பதில் அவன் சூரன். எங்கள் கவலையெல்லாம் அவனை எப்படியாவது எழுப்பி கிளப்ப வேண்டுமென்பதே. நினைத்தது போலில்லாமல் காலை எட்டு மணிக்கே எழுந்துவிட்டான். ஆனால் மப்பு மட்டும் முழுமையாக இறங்கவில்லை.

தேர்வு அறைக்குள் நுழைந்தவன் நேராக ப்ளாட்ஃபார்ம் மீது ஏறினான். "யாருப்பா இன்னைக்கு எனக்கு பேப்பர் கொடுத்து புண்ணியம் தேடிக்கப் போறது?"

எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ஏழுவா இவ்வளவு சத்தம் போட்டு பேசுவது? பின் மெல்ல அவனை சமாதானப்படுத்தி தேர்வை ஒழுங்காக எழுதுமாறு எடுத்து சொன்னோம். தேர்வும் தொடங்கியது. கேள்வித்தாளையும் விடைத்தாளையும் கொடுத்துவிட்டு சரிப்பார்த்திட சொன்னார். மேற்பார்வையாளர். ஏழு எழுந்ததைப் பார்த்தவுடன் எனக்கு பயம் ஏறியது.

"எக்ஸ்க்யூஸ் மீ சார். Question paperல இருக்கு. ஆனா Answer paperல Answers எதுவுமே இல்ல சார்”

நான் சிரித்ததைப் பார்த்து அவர் ஏழுவை விட்டுவிட்டு என்னை திட்டத்தொடங்கினார். ஏழுவை முறைத்துக் கொண்டே அமர்ந்தேன். அரைமணி நேரம் கழித்து மீண்டும் எழுந்தான்.

"சார். Differential Assembly எப்படி வேலை செய்யுது?” அவர் கோவமடைவதை கண்ட ஏழு பம்மினான். "என்ன சார். சந்தேகம் கேட்டா தீர்த்து வைக்கிறவர்தானே நல்லஆசிரியர்?"

கழுத்தைப் பிடித்து இழுத்து சென்றார் அவர். அவன் மீது எந்த ஒரு 'நல்'வாசனையும் வராததால் இவன் வேண்டுமென்றே விளையாடுவதாக முடிவுசெய்து விட்டார்கள். ஸ்டாஃப் ரூமில் எல்லா லெக்சரரும் கூடியிருக்க விசாரணை ஆரம்பமானது. ஏழு நல்லா படிக்கிற பையன் என்று அனைவரும் சொன்னாலும் அடிபட்டவர் விடுவதாக இல்லை. அதுவரை வாயை மூடியிருந்த ஏழு வாயைத்திறக்கத் தொடங்கினான்.

கெமிஸ்ட்ரி மேடத்தை பார்த்து முதலில் சொன்னான். "மேடம் இவருக்கும் எனக்கும் ஏனோ கெமிஸ்ட்ரி ஒத்து வரவில்லை".

என்னடா பேசற. திமிரா? என்றார் பிஸிக்ஸ்.

”சார். மேல போனா கீழ இறங்கித்தான் ஆகனும்னு சொல்றாரு நியூட்டன். எனக்கு மட்டும் ஏன் சார் இறங்க மாட்டங்குது" என்ற போதுதான் இவன் தண்ணி அடித்திருக்கிறான் என்பதை உணர்ந்தார்கள் உரையாளர்கள்.(அதாம்ப்பா லெக்சரர்ஸ்)

இருந்தாலும் அவன் உருவத்தைப் பார்த்து பாவப்பட்ட சில நல்ல ஜீவன்கள் அவன் தண்ணியடிக்கவில்லை என்றும், கூடவே சுத்தும் நாங்கள்தான் அவனுக்கு கஞ்சா டோப்பு அபின் என்று எதோ பழக்கப்படுத்திக் கெடுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். அரை பியர் அய்யாவுக்கு கஞ்சா அபின் என்றதும் முதுகெலும்பில் எறும்பு ஊர்ந்திருக்கிறது.
"ஆமா சார். நேத்து கார்க்கிதான் எனக்கு ஏதோ கொடுத்தான்” என்று உளறியிருக்கிறான்

எப்படி மார்க் போட்டாலும் 40 வரவில்லை என்பதால் மீண்டும் கேள்வித்தாளினை புரட்டிக் கொண்டிருந்தேன், தேர்வு முடிந்து பல மணி நேரம் ஆன பின்னும்.
"உன்னை பிரின்ஸி வர சொன்னாரு. உடனே வா" என்றார் ஆஃபீஸ் பாய்.

பாவம் ஏழு. காப்பற்றலாம் என்ற நல்லெண்ணத்தில் போன என்னிடம் டொய்ங் என சுத்தி ஏழு சொன்னதை ரீப்ளே செய்து காமித்தார்கள். கொலைவெறியோடு அவனைப் பார்த்தேன்.கூலாக சிரித்துக் கொண்டே கேட்டான். "அது அபினா மச்சி?"

அப்படியே அவனைக் கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது. கோவத்தை அடக்கிக் கொண்டு
சார். அவன் நேத்து ஒரு பியர் குடிச்சான். அதுக்குதான் இந்த ஆட்டம் என்றேன்.

ஒரு பியருக்கு ரெண்டு நாளா ஆடுவாங்களா? கூட என்ன சேர்த்த என்று கேட்டுதானும் ஒரு குடிகாரர்தான் என்று நிரூபித்தார் கணக்கு.

சத்தியமா சார்.வேணும்ன்னா பாலாஜிய கூட கேளுங்க என்று சொல்லிவிட்டு பின்பு நாக்கைக் கடித்தேன், இன்னொருத்தனையும் சிக்க வைத்து விட்டோமே என்று.

அந்தக் கவலையே இல்லாமல் அடுத்த டயலாக்கை அடித்தான் ஏழு. " அவன் இவனுக்குதான் சப்போர்ட் பண்ணுவான் சார். நீங்க ஆறுவையும் வர சொல்லுங்க.அவன் தான் எனக்கு மிக்ஸ் செய்து தந்தான்"

பியரடிச்சவனுக்கு எதைடா மிக்ஸ் செய்தீங்க என்று தன் மானம் போவது தெரியாமல் விசாரித்தார் கணக்கு.

அவன் பீரையே தண்ணி கலந்துதான் அடிப்பான் சார் என்றேன். ஏதோ அவனை மன்மதன் என்று சொன்னதைப் போல நகத்தைக் கடித்து அந்த சிமென்ட் தரையில் கால் கட்டை விரலால் நோண்டி வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார் தலைவர்.

அழைத்து வரப்பட்டார்கள் ஆறுவும் பாலாஜியும். பின்புதான் தெரிந்தது அவர்கள் இழுத்து வரப்பட்டார்கள் என்ற உண்மை.

மூன்று பேர் சொல்லியும் யாரும் நம்பத் தயாரில்லை. ஏதோ பெரிய லெவலில் போதை மருந்து பழக்கம் இருப்பதாக முடிவு செய்து விட்டார்கள். பேரன்ட்ஸ் வரனும். சஸ்பென்ஷன் தரணும். இவனுங்களுக்கெல்லாம் எதுக்கு சார் படிப்பு.டி.சி. கிழிச்சிடுங்க, போலிஸ்ல சொல்லலாம் சார் என்ற ஆளுக்கொரு ஐடியா தந்துக் கொண்டிருந்தார்கள்.

மறுநாள் வரை விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. மப்பு இறங்கி எழுந்தவனை கைகள் வலிக்க மொத்தினோம். மறுநாள் எல்லா உண்மையும் சொல்வதாக சொன்னதால் விட்டோம்.

அடுத்த நாள்.. வரிசையாக நின்றோம். யாரிடம் கஞ்சா வாங்கிறீங்க என்றவரிடம் காலில் விழாத குறையாக கெஞ்சினோம். அடிச்சவனே ஒத்துக்கிட்டானே என்றார். ஏழுவைப் பார்த்தோம்.

சார். இல்ல சார். நான் பீரடிச்சாலே ஏறிடும் சார். சத்யமா நேத்து பீருக்குத்தான் அப்படியாயிட்டேன் என்றான்.

டேய். மெக்கானிக்கல்ன்னா பெரிய பருப்பா? நாங்களும் அத படிச்சிட்டுதானே வந்திருக்கோம். ஒரு பீருக்கே இவரு ரெண்டு நாள் ஆடுவாராம். யார் கிட்ட கதை உடறீங்க என்றார் ஹெச்.ஓ.டி.

மெதுவாக சொன்னான் ஏழு " வேணும்ன்னா ஒன்னு வாங்கித் தந்து பாருங்க சார்.எப்படி ஆடுறேனு”

Mar 28, 2009

தேர்தல் வருதுங்கோ

41 கருத்துக்குத்து
வெள்ள நிவாரண நிதி
க்யூவிலிருந்த அருக்காணி-
முக்கால் அம்மணமாய்‍
மூக்கொழுகி நிற்க,
கையிலிருந்த
ரேஷன் கார்டு
பிளாஸ்ட்க் அட்டையில்
பளபளத்தது.

தேர்தல் வருதுங்க. அவன் ஏன் இவன் கூட சேர்ந்தான், இவன் ஏன் அவன விட்டுப் போனான்னு யோசிக்கறத விட்டுட்டு சம்பாதிக்கற வழிய பாருங்க. என்ன நான் சொல்றது? நான் ஒரு தேசத் துரோகி, நாட்டுப் பற்று அற்றவன்னு யாராவது பதிலடி கொடுத்தா நாமளும் ரவுடிதான்னு தெரிஞ்சிப்பேங்க.. ப்ளீஸ்

Mar 27, 2009

சென்னைவாழ் ஆண்களே ஒன் நிமிட்

116 கருத்துக்குத்து

ஹலோ

சொல்லுங்க.யாரு?

நான் வி..ராஜேஷ் பேசறேன். என் ஃப்ரெண்ட் உங்க நம்பர் கொடுத்தான்.

உங்க ஃப்ரெண்ட் பேரு?

நரேஷ்ங்க. உங்கள பார்க்கனும் இப்ப வரலாமா?

ம்ம். நீங்க எங்க இருக்கிங்க? ஃப்ரெண்ட் எல்லாத்தையும் சொன்னாருங்களா?

சொன்னான். நான் டி.நகர்ல தான் இருக்கேன். அந்த பேங்க்கிட்ட வரட்டுமா? இப்ப வந்தா பார்க்கலாமில்ல?

ஃப்ரீயாத்தான் இருக்கேன். வாங்க. பேங்க்குக்கு வந்துட்டு எனக்கு கால் பண்ணுங்க.

********************************
(பேங்க்கிடம் வந்துட்டு கால் செய்கிறான்)
ஹ‌லோ. நான் தாங்க‌. பேங்க்குக்கு வந்துட்டேன்.

ம்ம். என்ன கலர் சட்டை?

ப்ளூ ஷர்ட். பல்சர் பைக்.

அக்க‌வுன்ட் ந‌ம்ப‌ர் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க‌

சொல்லுங்க‌

000101543262. பேரு எம் டாட் ஜி எச் ஏ என் ஏ. 500 ரூபாய் போட்டுடுங்க‌.

நீங்க‌ வ‌ந்தா பார்த்துட்டு போட‌லாமா?

இல்ல‌ங்க‌. ந‌ம்பிக்கை இருந்தா போடுங்க‌. காசு போட்டுட்டு கால் ப‌ண்ணுங்க‌. நானே வ‌ந்து கூட்டிட்டு வ‌ரேன்.

(க‌ட் ஆகிவிடுகிற‌து. ந‌ண்ப‌னுக்கு கால் செய்கிறான்)

என்ன‌ ம‌ச்சி செய்ய‌ட்டும்?காசு போட்டாதான் வ‌ருவாளாம்.

அஞ்சு நிமிஷ‌ம் க‌ழிச்சு கால் செய்து போட்டாச்சுனு சொல்லு. அவ‌ளுக்கு எப்ப‌டி தெரியும்?

ரைட்டுடா
*************************************
ஹ‌லோ. போட்டாச்சுங்க‌

போட்டிங்க‌ளா? இல்லையே.

போட்டேங்க‌. க‌வ‌ர்ல‌ டெபாசிட் ப‌ண்னேன். ஒரு ம‌ணி நேர‌ம் ஆகும்.

இல்லையே. நீங்க‌ பேங்க்குள்ளேவே போக‌லையே.

சாரிங்க‌. உங்க‌ள‌ பார்த்துட்டு போட‌லாம்னு. இதோ போடுறேங்க‌.
***********************************
ஹ‌லோ. நிஜ‌மா போட்டேங்க‌.

ஓகே. நீங்க‌ ரெண்டு ம‌ணி நேர‌ம் க‌ழிச்சு கால் ப‌ண்ணுங்க‌.

உட‌னே பார்க்க‌லாம்னு சொன்னீங்க‌ளே. எனக்கு வேலை இருக்குங்க‌

இல்ல‌ங்க‌. இப்ப‌ முடியாது. வீட்டுல‌ ஆள் வந்துட்டாங்க‌.

என்னை வ‌ந்து பார்த்துட்டு போயிடுங்க‌ளேன். ப்ளீஸ்

இல்ல‌. புரிஞ்சிக்கோங்க‌. மாமா வந்துட்டாரு.

லைன் க‌ட்டாகிற‌து.
******************************************
சொல்லு மச்சி.ஓக்கேவா

@#$%^&*(*&&^^%%$$##@@. எவன்டா உனக்கு நம்பர் கொடுத்தது?
ஏமாத்திட்டாடா.அஞ்சு மண்க்குதான் வருவாளாம்

எதுக்கும் அஞ்ச மணிக்கு கால் பண்ணி பார்க்கலாமா?

உன்னை மாதிரி ஆளுங்க இருக்கிறவரைக்கும் ஏமாத்திட்டுதான் இருப்பாங்க.

தோடா. போய் ஏமாந்தது நீ. என்னை சொல்றீயா?

உன் ஃப்ரெண்ட் போயிட்டு வந்தான்னு சொன்னியே?

அவன் அப்படித்தான் சொன்னான்.

போடாங்க.
********************************************

இது ஒரு சாம்பிள்தான். இன்னும் இது மாதிரி பல வழிகளில் ஏமாத்தறாங்க. கொஞ்சம் உஷாரா இருங்கப்பா. இந்த வார குமுதத்திலோ எதிலோ இன்னும் ஒரு ஏமாற்று வேலையைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். மேலும் பல வழிகள் உண்டு. மேலதிக தகவ்ல்களுக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். :)))

Mar 26, 2009

சனி திசை தொடங்கிவிட்டது

59 கருத்துக்குத்து

ஹாய் ஹாய் ஹாய்..எல்லோரும் நலம்தானே? சரியாய் ஒரு வாரம் ஆகிவிட்டது பதிவுலகம் பக்கம் வந்து. எல்லா நாளும் அநியாயத்துக்கும் பிசி என்பதால் அவ்வளவு கஷ்டம் இல்லை. அவ்வபோது அலுவலகம் விஷயமாக மெயிலை திறந்தால் விசாரிப்பு மின்னஞ்சல்கள். உடனடியாக பதில் அனுப்ப முடியாமல் போனதுதான் வருத்தம். எதுவுமே எழுதாத நாட்களிலும் 150 முதல் 200 பேர் வரை வந்து கடையைக் காப்பாற்றியிருக்கிறார்கள். வந்த மெய்ல்களும், குறுந்தகவல்களும், அழைப்புகளும் நானும் ரவுடிதான் என்பதை சொல்கின்றன. சீக்கிரம் நன்றிக்கு பதிலா வேற ஒரு வார்த்தை கண்டுபிடிங்கப்பா.

******************************************

நம்ம நட்சத்திரம் மாதவராஜ் தமிழ் கதாநாயகர்களை அறிவற்றவர்கள் என்று சொன்னப் பதிவை புதிய நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். ஏன் எனக்கு அனுப்பினீங்க என்ற கேட்டதற்கு அவரின் கோவம் முழுவதும் ரஜினி மற்றும் விஜய் மேல்தான். விஜய்க்கு ஆதரவாக பதிவுலகில் வெளிப்படையாக பேசுவது நீங்க மட்டும்தானே என்றார். 'வெளிப்படையாக' என்பதால் நான் மட்டும் இருக்கலாம்.ஆனால் பதிவுலகிலும் விஜயை ரசிப்பவர்கள் தான் அதிகம். நம் ரசனை சரியோ தவறோ, மேலோ கீழோ அதை மற்றவர்களுக்காக மறைப்பது தேவையில்லாத ஒன்று. அந்த மாதிரி தனக்கு தோன்றியதை சொல்லியிருக்கிறார் அவர்.அறிவற்றர்வர்கள் என்ற வார்த்தைதான் இடிக்கிறது. அவர்கள் அறிவாளிகள் தான். இன்னும் சில தினங்களில் என்னுடைய பார்வையை பதிவு செய்கிறேன்.

****************************************

நான் கடவுள் குறித்த ஜெயமோகனின் பதில்களைப் படித்து விட்டு என்னிடம் விவாதித்துக் கொண்டிருந்தான் என் அண்ணன். அப்போதுதான் கவனித்தேன். எத்தனைப் பிழைகள்? பதிவர்கள் நேரமில்லாமலும், அறியாமையிலும் பிழையோடு எழுதுவதையே குறை சொல்லும் அன்பர்கள், ஜெமோவை படிப்பதில்லையா? அவர் எழுதினால் நாங்களும் எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள் எல்லாம் எலக்கியவாதி இல்லையா? அதனால் கேட்கிறேன்.

அதேப் போல் தமிழ் இலக்கியம் என்று ஸீரோ டிகிரியையும், ரப்பரையும் எப்படி சொல்கிறார்கள்? மொழி என்ற வனத்தின் நடுவே இருக்கும் அழகிய நீர் வீழ்ச்சி போன்றது இலக்கியம் என்கிறார் சாரு. அப்படியெனில் ஸிரோ டிகிரி எப்படி தமிழ் இலக்கியம் ஆகும்? அதற்கு ஒப்பான தலைப்பு தமிழில் இல்லையெனில் தமிழ் எப்படி செம்மொழி ஆகும்? சந்தேகம்தான். தீர்த்து வையுங்கள்.

*********************************

தங்கையின் திருமணம் நல்லபடியாக நடந்தது. இதுவரை சில திருமணங்களுக்கு சென்றிருந்தாலும் அருகிலிருந்து நடத்தியது இதுதான் முதல் முறை. அந்த அனுபவங்களை சிலப் பதிவுகளாக எழுதலாம் என்றிருக்கிறேன். 24 மணி நேரத்தில் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது. பூத்துக் குலுங்கும் ரோஜாச் செடியை வேரோடு பிடுங்கி வேறொருத் தோட்டத்தில் வைப்பது மட்டுமல்லாமல், அங்கேயும் பூக்க வேண்டும் என்கிறார்கள். நட்டு வைத்துவிட்டு வீடு திரும்பியதும் பூவைக் காணாமல் வெறிச்சோடியிருக்கும் நம் தோட்டம். அதுசரி.. என் தோட்டத்திற்கான ரோஜாவை யார் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ?

Mar 19, 2009

தங்கச்சிக்கு கண்ணாலம்..

65 கருத்துக்குத்து

 

 

  வரும் ஞாயிற்றுக் கிழமை என் தங்கையின்(cousin) திருமணம். உங்கள் வாழ்த்துகளும் வேண்டும்.

Mar 18, 2009

காக்டெய்ல்

125 கருத்துக்குத்து

  கடந்த வாரம் நல்லபடியாய் போனது என்ற நினைத்த நேரத்தில்தான் அந்த மின்னஞ்சல் வந்தது. ராஜேஷ் என்ற அந்த நண்பர் அனுப்பிய கடிதம் சற்று சூடாகவே இருந்தது. நானெல்லாம் ஏன் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார். இன்னும் பல கஷ்டம் இருக்கிறது அவருக்கு. பதிலுக்கு ஒரே ஒரு வரி எழுதினேன். ஏன் எழுதக் கூடாது? இதுவரை பதில் வரவில்லை அவரிடமிருந்து. பலரும் சொல்வதுதான். முறையான வாசிப்பனுபவம் இல்லாமல் எழுதத் தொடங்க கூடாது என்று. இதுவரை குப்பைகளை எழுதாத எழுத்தாளர் எவருமுண்டோ? எங்கள் முயற்சிகளை விரும்பாதோர் படிக்க வேண்டாம். சும்மா பூச்சி காட்டாதீங்க.

*************************************************  மீண்டும் வியாழக்கிழமை மாலை சென்னை கிளம்புகிறேன். கைவசம் டிராஃப்ட்டில் எந்தப் பதிவும் இல்லை. எனவே அடுத்த ஒரு வாரத்திற்கு நம்ம கடை லீவு. சந்தோஷமா இருங்க. பதிவெழுத தொடங்கியதிலிருந்து இத்தனை நாள் எழுதாமல் இருந்ததில்லை. தீபாவளிக்கு கூட ஒரு நாள் தான். என் டார்கெட் என நினைத்த நட்சத்திரம், ஒரு லட்சம் ஹிட்ஸ், 100 ஃபாலோயர்கள் என அனைத்தும் கிடைத்து விட்டதாலா எனத் தெரியவில்லை. எந்தவித வருத்தமும் இல்லை. முன்பெல்லாம் எழுதாமல் போனால் வருத்தப் பட்டதுண்டு. உங்களுக்கென்ன சந்தோஷம்தானே?

*************************************************  இன்னும் முழுமையாக உடல நலம் பெறவில்லை. அலைபேசியில் பேசும் நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். குரல் சரியில்லை. தொண்டை வலிக்கிறது. பாத்ரூமில் கூட பாட முடியவில்லை. நிறைய விடுமுறை வேறு எடுத்தாகிவிட்டது. என்ன செய்யலாம்? பேசாமல் திருமணம் செய்துக் கொள்ளலாமா? வேணாம்.. ச்சும்மா சொன்னேங்க. பட்டது போதும்.

*************************************************

  இரண்டு வாரங்களுக்கு முன்னால் அறை மாறினேன். தனியாக இருந்தவன் இப்போது நால்வருடன் கூட்டுக் குடும்பம்.என் வலையைப் பற்றி அதில் ஒருவருக்கு மட்டும் தெரிந்திருந்தது. இன்னொருவர் அதைப் பற்றிக் கேட்டதால் காட்டினேன். யூத் விகடன் மேட்டர், நட்சத்திரம் இதையெல்லாம் பார்த்துவிட்டு கேட்டார்  “இதுக்கெல்லாம் எவ்ளோ செல்வாச்சு?”. “எட்டு மாசம். தினம் இரண்டு மணி நேரம்” என்றேன்.

*************************************************

   கடந்த இரு தினங்களாக நடிகர் விஜய் கோபமாக கத்திய காணொளி ஒன்று இணைய உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 8 பதிவுகள் சூடாகியிருக்கின்றன. வெளியிடப்பட்டது ஒரு பாகம் தான். அவர் ரசிகர்களைப் பார்த்து கத்தினாரா, நிருபர்களைப் பார்த்து கத்தினாரா அல்லது அவரிடம் வேலை செய்பவரைப் பார்த்து கத்தினாரா என்று தெரியவில்லை. அதற்குள் பல அறிவு ஜீவிகள் ரசிகர்களை திட்டி எல்லா இடங்களிலும் பின்னூட்டம் இடுகிறார்கள். நடத்துங்க.நான் சொல்ல வந்தது.. அவர் செய்தது தப்புதான். டவுட்டேயில்ல. ஆனா சந்து கிடைக்கிற இடத்தில் எல்லாம் தன் வேலையைக் காட்டி சம்பாதிக்கும் அரசியல்வாதிக்கும், இது போன்ற சம்பவம் கிடைத்தால் உடனே ஒரு மட்டமான தலைப்பை வைத்து ஹிட்ஸ் பார்க்க விரும்புகிறவர்களுக்கும் என்ன வித்தியாசம்? குறிப்பாக அனலாக பார்க்கும் பதிவர் ஒருவர் காத்துக் கொண்டே இருப்பார். மொக்கை படத்தை திருட்டு சி.டியில் பார்த்து விட்டு விமர்சனம் செய்வார். இனி விஜய் படங்களே பார்க்க மாட்டேன் என்பார். ண்ணா திருட்டு சி.டியிலே பார்க்கறதுக்கே இவ்ளோ பில்டப்பா? நீங்க திருந்துங்கப்பா. அப்புறம் ரசிகர்களை நாய பேயன்னு திட்டலாம்.

Mar 16, 2009

வர்ட்டா..?????

100 கருத்துக்குத்து

ஒரு வாரம் முடிந்தது. பிறந்த நாளுக்காக ப‌ல நாட்கள் காத்திருந்து பல திட்டங்கள் போட்டு வைத்து, பாதி மட்டுமே முடித்து, நினைத்ததை விட வேகமாக முடியும் அந்த நாள். அப்படி ஒரு நிலையில் தான் இருக்கிறேன். தமிழ்மணத்தை அறிந்த நாளில் இருந்து என்று சொல்ல முடியாது, ஆனால் எழுத தொடங்கி நல்லாயிருக்குப்பான்னு சில பின்னூட்டங்கள் வந்த நாளில் இருந்தே அந்த ஆசை உண்டு.

ப‌ல திட்ட‌ங்க‌ள் வைத்திருந்தேன்‌. ஒரு சிலப் ப‌திவுக‌ளைத் த‌விர‌ மற்ற‌தை எழுதிவிட்டாலும், முழு திருப்தி இல்லை. வ்ழ‌க்க‌மாய் பின்னூட்ட‌மிடும் அனைவ‌ருக்கும் த‌னித்த‌னியாய் ப‌தில் சொல்வ‌தை வ‌ழ‌க்க‌மாய் வைத்திருக்கிறேன்.ஆனால் இந்த‌‌ வார‌ம் அது முடியாம‌ல் போன‌து. கார‌ண‌ம் இருக்கிற‌து. க‌ட‌ந்த‌ புத‌ன்கிழ‌மை திடிரென‌ உட‌ல்ந‌ல‌ம் ச‌ரியில்லாம‌ல் போய்விட்ட‌து. சென்னைக்கு கிள‌ம்பி வந்துவிட்டேன்.

வீட்டில் லேப்டாப்பை திறந்தாலே த‌லையில் அடி விழுகிற‌து. உட‌ம்பு ச‌ரியில்லைனு லீவு போட்டுட்டு வந்துட்டு இது தேவையான்னு கேட்டாங்க‌ அம்மா. அவ‌ங்க‌ கிட்ட‌ ந‌ட‌ச‌த்திர‌த்த‌ ப‌த்தி சொன்ன‌தும் ப‌திவிட‌ ம‌ட்டும் ஸ்பெஷ‌ல் அனும‌தி. அத‌னால்தான் நேர‌த்தில் பின்னூட்ட‌ங்க‌ளுக்கு ப‌திலிட‌ முடிய‌வில்லை. மேலும் சிலப் பதிவுகளில் எழுத்துப் பிழைகள் அதிகம் இருக்கிறது. என்ன காரணம் சொன்னாலும் அவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும்.

ஒருப் பதிவில் அனுஜன்யா, அதிஷா மற்றும் எம்.எஸ்.கேவைப் பற்றி எழுதி இருந்தேன். அந்தப் பதிவை அவ்ர்களுக்கு அனுப்பி அனுமதி கேட்க நினைத்திருந்த நேரத்தில் நேரமின்றி உரிமையுடன் போட்டு விட்டேன். அவர்கள் ஏதும் சொல்லவில்லை என்றாலும் கேட்காமல் செய்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

இதை ர‌ம‌ணா விஜ‌ய்காந்த் குர‌லில் ப‌டிக்க‌வும்.

ஏழு நாட்க‌ளில் எழுதிய பதிவு ஏழு. அதுல சூடானுது அஞ்சு. தமிலிஷ்ல பாப்புலரானது நாலு. மொத்த‌ப் பின்னூட்ட‌ங்க‌ள் 425. அதுல‌ நான் போட்ட‌து வெறும் எட்டு. கிடைச்ச‌ ஹிட்ஸ் இப்ப‌வ‌ரைக்கும் 8413. புதுசா வந்த‌ ஃபாலோய‌ர்ஸ் 16. இவ‌ங்க‌ளுக்கெல்லாம் அத‌ சொல்ல‌னும்னுதான் நினைக்கிறேன். ஆனா ந‌ன்றி த‌மிழ்ல‌ என‌க்கு பிடிக்காத‌ வார்த்தை. எதுக்கு நன்றி சொல்லனும்? நான் உங்க வீட்டுப் பிள்ளை இல்லையா??????????

அடுத்த நட்சத்திரம் அண்ணன் ஆதிமூலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

Mar 14, 2009

புட்டிக்கதைகள்

50 கருத்துக்குத்து
அன்று பாலாஜியின் பிறந்த நாள். ஏழுவை நம்பி மீண்டும் பாருக்கு போவதில் யாருக்கும் உடன்பாடில்லை. ஹாஸ்டலுக்கே சரக்கை வாங்கி வருவதென முடிவு செய்தோம். ஏழுவும் நானும் நண்பனின் பல்சரை வாங்கிக் கொண்டு மஹாலட்சுமி ஒயின்ஸுக்கு சென்றோம். MC, Signature என்று எல்லாவற்றிலும் ஆஃப் வாங்கிக் கொண்டோம். நான் சைட் டிஷ் வாங்க சென்ற கேப்பில் ஒரு மினி பியரை அடித்துவிட்டான் ஏழு. அவசரத்தில் ராவாக வேறு அடித்துவிட்டான்.

மச்சி நான் ஓட்டறேன்டா வண்டிய என்றான் ஏழு.

நானும் சரி என்று சொல்லிவிட்டு பாட்டில்களை சைட் பாக்ஸில் வைத்தேன். சிறிது தூரம் வரை சரியாகத்தான் ஓட்டினான். மெதுவாக வண்டியும், ஏழுவும் ஆடுவதை பார்த்துவிட்டு வண்டியை நிறுத்த சொன்னேன். படுபாவி சரியாக அங்கே நின்றிருந்த போலிசின் அருகில் சென்று நிறுத்தினான். இறங்கும் போதே ஆடியவனை அவர்களும் பார்த்துவிட்டார்கள். அருகில் வந்தவர் இன்ஸ்பெக்டர் போல தெரிந்த்து.

என்னப்பா. ஓட்டத் தெரியுமா என்றார் இன்ஸ்பெக்டர். திருவாய் மலர்ந்தான் ஏழு

எங்க செட்டிலே நான் தால் எல்லோரையும் நல்லா ஓட்டுவேன் சார்.

டேய். என்ன நக்கலா? உன் உருவத்த்க்கு இந்த வண்டி தேவையா?
அப்ப கப்பல், ப்ளைட் ஓட்டறவங்க எல்லாம் உங்கள மாதிரி இருப்பாங்களா சார். எனக்கு வேர்க்க ஆரம்பித்த்து. குறுக்கே பேச முயன்றபோது வாயை மூட சொன்னார்கள்.

வண்டில RC இருக்காடா?

MCதான் இருக்கு sir.
நல்ல வேளை அவருக்கு புரியவில்லை. ஆனால் ஏழு தண்ணியடித்திருக்கிறான் என்பதை கண்டுபிடித்து விட்டார்கள்.

இந்த வண்டில மொத்தம் எத்தன கீரு இருக்குன்னு தெரியுமா?

அது தெரில சார். ஆனா ரெண்டு பீரு இருக்கு என்று இந்த முறைத் தெளிவாக சொன்னான் சண்டாளன். எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்த்து.
என்னையும் அவனையும் ஜீப்பில் ஏற்றினார்கள். நான் கெஞ்சும் போதெல்லாம் சிரித்து சிரித்து அவர்களை மேலும் எரிச்சல் படுத்தினான் ஏழு.

சார். நாங்க என்ன சரக்க கடத்தனுமோ என்ன? ரூமுக்கு வாங்கிட்டு போய் அடிக்கறது தப்பா சார்?

வாய மூடிட்டு வாடா. உன்னையெல்லாம் கவனிக்கற விதத்துல கவனிச்சாதான் திருந்துவீங்க என்றார் ஏட்டு.

சார் போலிஸ்ன்னா அதையும் முறையா செய்யனும் தான். ஆனா வன்முறையா செய்யக் கூடாது என்றவன் வாயில் லத்தியால் லேசாகத் தட்டினாட் ஏட்டு.

ஸ்டேஷனுக்குள் நுழைந்த்து ஜீப். இருவரையும் ஒரு பென்ச்சில் அம்ர வைத்தார்கள். ஒரு லெட்டர் ஒன்னு வாங்கிட்டு விட்டுவிட சொன்னார் இன்ஸ்பெக்டர். ஆனால் அந்த ஏட்டு எங்களுக்கு அட்வைஸ் செய்யத் தொடங்கினார்.

ஏம்ப்பா. காலேஜ் படிக்கற. இப்படியா நடக்கறது? நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போனும்னு ஆசை இல்லையா?

எனக்கு மூனு ஆசை சார் என்றான் ஏழு. கம்முனு இருடா என்ற என்னை அவன் மதிக்கவேயில்லை.படிக்காமாலே பாஸ் ஆகனும். இண்டெர்வ்யூவே இல்லாம வேலைக்குப் போகனும். வேலையே செய்யாம் சம்பளம் வாங்கனும்.

இதெல்லாம் எப்படிப்பா நடக்கும் என்று இன்னமும் பொறுமையாக கேட்டார் ஏட்டு.

மத்தத விடுங்க சார். இப்ப நீங்க வேலையே செய்யாம‌ சம்பளம் வாங்லையா?
ஏட்டுவின் முகம் மாறியது. ஏழுவை கன்னத்தில் ஒன்னு விட்டு மன்னிப்புக் கேட்க தொடங்கினேன். இதெல்லாம் சரிப்படாது நீங்க ட்ரெஸ் கழட்டுங்க என்றார்.

அடி பலமாக விழுந்து விட்டது ஏழுவுக்கு. கன்னத்தைத் தடவிக் கொண்டே சன்னமான குரலில் கேட்டான். “சார் எங்கள ரேப் பண்ணப் போறீங்களா?

நல்ல வேளையாக இன்ஸ்பெக்டர் வந்து எங்களை விடுதலை செய்தார். ஆனால் சரக்கையெல்லாம் கொடுக்கவில்லை. கடுப்பில் இருந்த நான் ஏழுவை அங்கேயே விட்டுவிட்டு ஹாஸ்டலுக்கு சென்றேன். எனக்கு முன்பே அங்கு ஆட்டோவில் வந்த ஏழு கலாட்டா செய்துக் கொண்டிருந்தான். நாங்களும் கண்டுக்காமல் விட்டதில், பிரச்சனை பெரிதாகி மறுநாள் அவனை விடுதியில் இருந்து எடுத்து விட்டார்கள். வழக்கம்போல் தொட்டியில் தலையைக் கவிழ்த்து மப்பை இறக்கிக் கொண்டிருந்தவனிடம் வந்த ஹாஸ்டல் வார்டன், ஏண்டா ஹாஸ்டலுக்குள்ளே தண்ணியடிக்கலாமா என்றார்.

தலையை சிலுப்பிக் கொண்டு பதில் சொன்னான் ஏழு “ பாட்டில குடி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடுன்னு” போட்டிருக்கு சார். விடுதிக்குனு போடல.

Mar 13, 2009

அதிஷா, எம்.எஸ்.கே அண்ட் அனுஜன்யா

50 கருத்துக்குத்து

போன பதிவிற்கு நினைத்ததை விட பிரமாதமான் ரெஸ்பான்ஸ். நன்றி நண்பர்களே. சில தவிர்க்க முடியாத காரணங்களால் உடனுக்குடன் பதிலிட முடியாமல் போனது. சில நாட்களுக்கு அது சாத்தியமிலை என நினைக்கிறேன். ஆனா பதில் வரும். பதிவாகவே போடுகிறேன்.

*************************************************

திருவல்லிக்கேனி மேன்ஷன். கோவையில் பிறந்தவர் என்றாலும் சென்னை செந்தமிழில் பட்டையைக் கிளப்பும் அதிஷாவும், காதல் பித்தன் எம்.எஸ்.கேவும், பின்நவீனத்துவ பீரங்கி அனுஜன்யாவும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். எதிர்த்துக் கடை ஃபிகரை யார் கரெக்ட் பண்ணுவது என்ற மோதல் நடந்துக் கொண்டிருந்தது.

அதிஷா: இன்னா நைனா? யாரான்டா பிலிம் காட்டற? அவ என் டாவு.

எம்.எஸ்.கே: அன்பை சுமந்துக் கொன்டு வாழ்பவன் நான். அவள் அன்பின் மொத்த உருவம்

அனுஜன்யா: விழியின் வழியில் மொழியின் சுழலில் வழியும் கவிதை அவள். மழலை சிரிப்பும் அழகின் பிறப்பும் அவளின் இடத்தில்.

அதிஷா: இன்னா எழவோ? இன்னொரு தபா அவளப் பத்தி இப்டித் தப்புத் தப்பா பேசின.. மவனே கீசிடுவேன்

எம்.எஸ்.கே: என்ன மனிதர்கள் இவர்கள்? அமிழ்த்துகிற காதலைத் தாண்டி வெளியே வரத் துடிக்கும் பந்து நான். என்னை உதைத்தத் தள்ளத் துடிக்கும் கட்டை நீங்கள்.

அதிஷா: மவனே அப்டியே கட்டையால அட்ச்சேன் வை. வாயி வெத்தலப்பாக்கு போட்டுக்கும். இன்னாடா பெர்சா சொல்ட்ட நீ? அவள பத்தி நான் சொல்றேன் கேளு.

சோடா விக்கும் சொக்க தங்கமே ‍- கோலி

சோடா விக்கும் சொக்க தங்கமே

என்னை நீ பார்த்தாலே விக்குமே

பாழா போன மனசுக்கு வலிக்குமே

சொன்னா சொன்னா கேளு

இனிமே நீ என்னோட ஆளு

எம்.எஸ்.கே: குவளைக்குள் அடைத்து வைக்கப்பட்ட

வெறும் நீரென என் காதலை எண்ணிவிடாதே

உள்ளுக்குள் வெடிக்க தயாராயிருக்கும்

வாயுவைப் போன்றது அது

அனுஜன்யா: விடலைகளின் பார்வைகளால்
நிராகரிக்கப்பட்ட பெண்ணொன்று
அண்டைவீட்டு சாளரத்திலிருந்து
தஞ்சமடைந்தது என்னிடம்;
விலக மறுத்த முகம்
கவரவில்லையெனினும்
இலயிக்கத்துவங்கியது மனம்

அதிஷா : தபாரு. முட்ஞ்சா தமில்ல சொல்லு. இல்லீன்னா போய்ட்டே இரு..உன் மூஞ்சில என் லெஃப்ட் ஹேண்ட வைக்க.

அனுஜன்யா: உச்சியிறங்கும் போதில்
யாருமற்ற மேற்கின் நிசப்தம்
பின்னிரவின் பேரெழுச்சிக்குமுன்
சோம்பல் முறித்த சிற்றலைகள்
பிரிக்கப்படும் பொட்டலத்திற்கு
கூடத் துவங்கிய காகங்கள்;

அதிஷா: எப்பிதான் ஒரு அர்த்தமும் இல்லாம பாரா பாராவ எய்தி தள்றியோ நீ. போட்டி மாமு. அவ அய்க பத்தி மூனு பேரும் பாடுவோம். யார்து சோக்கா கீதுனு அவ்ளே சொல்ட்டும். டீலூ ஓக்ககேவா?

எம்.எஸ்.கே: நான் தயார், என் கவிதையை கேளுங்கள்

ஒரு பெண்ணைப் பார்க்கவென்று
சொல்லித்தான்
என்னை அழைத்துவந்தனர்,
உன்னைப்பார்ப்பேன் என்று
நான் நினைக்கவுமில்லை.!

அதிஷா: இன்னா நைனா இது? நீ வேலைக்காவ மாட்ட. இத்த கேளு.

மச்சான் பாடப் போறேன் கானா

உன்க்கு மத்ததெல்லாம் வேனா

உன் லிப்ஸ்தான் உனக்கு பேனா

அதுல இங்க் என்ன ஸ்பெஷல் தேனா?

எம்.எஸ்.கே: ம்ஹூம். சார் நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க.

அனுஜன்யா: ரகசியங்கள் கட்டவிழ்க்கும்
தருணங்கள் வந்துவிட்டதென்றாள்
விகாரமாயிருப்பினும்
பின்னாட்களின் நிம்மதி நிமித்தம்
அவள் இறக்கிவிட்ட பாரங்கள்
பெரும் பொருட்டல்லவெனினும்
தைரியத்தின் உச்சகட்டமாக
அவள் பார்த்தவைகள் என்னளவில்
சுயநலங்களும் சாகசங்களில்
விருப்பமின்மையும் மட்டுமே

அதிஷா: தபாரு. நீயும் நானும் ரவுடி ரேஞ்சுக்கு யூத்னு சொல்ட்டு திரியற. கவிதையும் என்ன மாதிரி ஷோக்கா எழுத தெர்ல. டீசண்ட்டா ஒதுங்கிக்கோ. இன்னா நான் சொல்றது?

அனுஜன்யா:

பேச்சுக்குமிழியின்
முட்டைகளுடைத்தவனுக்கு
எனது முத்தங்கள்
திரையின் பின்னாலிருந்து
மொழியுமிழ்தலென்பது
சுய புணர்வையொத்தது
பேச்சுக்களற்ற வெளி அபாயகரமானதென
எவன் சொன்னது
மெளனங்களின் உன்னதங்கள்
கலவியின் கூட்டினை திறக்கவல்லது...

அதிஷா : சாமீ.. எனக்கு அந்தப் பொண்ணும் வோணாம். இவனும் வோணாம். இப்டியே சாவடிச்சிடுவான்.

எம்.எஸ்.கே: நாமிருவரும்
சேர்ந்து நனைவதற்காகவே
இன்னும் சில
அழகான மழைகள்
மேகங்களுக்குள்ளேயே காத்திருக்கின்றன.
சீக்கிரம் வா..
-0-
ஆனால் எதிர்ப்பார்ப்புகளேதுமின்றி வா..
உனக்கென்று கொடுக்க
என்னிடம் இருப்பதெல்லாம்
அளவற்ற நேசமும்
குறைவற்ற முத்தங்களும் மட்டுமே.

அதிஷா: இது கொஞ்சம் சுமார்ப்பா. நீ காம்பெடிஷன்ல கீற. ஆனா அவன அடிச்சு துரத்திடு. இன்னொரு தபா என் கண்ல பட்டான் மவனே டாராந்துடுவான்.

இருவரின் கவிதயைப் படித்த சோடக் கடை ஃபிகர்,

சோடா விக்கும் சொக்க தங்கமே ‍- கோலி

சோடா விக்கும் சொக்க தங்கமே

என்னை நீ பார்த்தாலே விக்குமே

பாழா போன மனசுக்கு வலிக்குமே

சொன்னா சொன்னா கேளு

இனிமே நீ என்னோட ஆளு

பாடலை தேர்வு செய்து விட, அதிஷா ஆனந்தக் கூத்தாடுகிறார். வழக்கம் போல சோக கவிதை எழுதுகிறார் எம்.எஸ்.கே.

Mar 11, 2009

அமெரிக்கா எனும் அரக்கன்

79 கருத்துக்குத்து

  உலகமயமாக்கல். முதன் முதலில் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்ட போது என் வயது பத்து. அது காட்டப் போகும் கவர்ச்சியையும் அதனால் விளையப் போகும் பிரச்சினைகளைப் பற்றி யாரிடமோ பேசினார் என் தந்தை. அது மட்டும்தான் எனக்கு நினைவிருக்கிறது. இன்று உலகமயமாக்கிலினால் உருவான ஒரு பணியில்தான் நானிருக்கிறேன். ஆனாலும் அது குறித்த என் பார்வை வேறு மாதியிருக்கிறது.அதைப் பதிவு செய்யவே இந்தப் பதிவு. என் பல மொக்கைகளை பொறுமையாக படித்த நீங்கள் இதையும் முழுவதுமாய் படிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்

   உலகமயமாக்கல் என்பதே புதிதல்ல. முதலாளித்துவத்தின் நீட்சி, அதன் ஒரு பகுதி என்பதே சரியாகும். சக்தி வாய்ந்த ஒரு சில நாடுகளின் விருப்பத்திற்கேற்ப உலகின் மொத்த பொருளாத முறையையும் ஒரே மாதிரி ஆக்குவதே உலகமயமாக்கல். சக்தி வாய்ந்த நாடுகள் என்ற போதே அமெரிக்காவிற்கு இதில் கிடைக்கும் நன்மைகளும் அதற்கு அவர்கள் செய்யும் உட்டாலக்கடி வேலைகளும் உங்களுக்கு புரிந்திருக்கும். உலகமயமாக்கல் என்பது வெறும் பொருளாதாரத்தை முன்னிறுத்தி மட்டுமே அல்ல, அரசியல், கலாச்சாரம் என பல முகங்களை கொண்டது. டாடா நிறுவனம் கோரசை வாங்கியதும், சென்னை தெருக்களில் McDonald’s, KFC இருப்பதற்கும் காரணம் உலகமயமாக்கல் தான்.

   சோவியத் யூனியனின் சரிவும், உலகில் மற்ற பகுதிகளில் இருந்த கம்யூனிஸ நாடுகளின் தோல்வியும் உலகமயமாக்கலை துரிதப்படுத்தின. இதனால் உலகின் சில நாடுகளும், அல்லது அந்தந்த பிராந்தியத்தில் செல்வாக்குப் பெற்ற நாடுகளின் விருப்பபடிதான் மற்ற நாடுகளும் நடக்க வேண்டும். இது படிப்படியாக எப்படி சாத்தியமாயிற்று என்பதை விளக்கமாக தெரிந்துக் கொள்வதை விட இதனால் இனி உருவாகப் போகும் தீமைகளை நாம் புரிந்துக் கொள்வதே நம்மை இந்த அரக்கனிடம் இருந்து காப்பாற்றும்.

ஊரான் ஊரான் தோட்டத்துல

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்க சொல்லி

காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்” என்றும்

வேட்டிய உருவறான் டங்கல்

அத ஃபோட்டோ புடிக்கிறான் அமெரிக்கா அங்கிள்

என்றும், 1993ல் நரசிம்மராவின் டங்கல் ஆதரவுக்கு எதிராக ம.க.இ.க வினர் பாடி வெளிட்ட இசைத்தட்டு இப்போது கிடைக்கிறதா என்று வினவு என்ற பெயரில் எழுதி வரும் மகஇகவினர்தான் சொல்ல வேண்டும். அப்போது எனக்கு 11 வயது. ஆனால் எனக்கே புரியும்படி பல வரிகள் கொண்ட பாடல் அது. இன்று கம்ப்யுட்டர் பத்தாயிரம் ரூபாய்க்கும், அரிசி 32 ரூபாய்க்கும் கிடைப்பதற்கு காரணம் இந்த அரக்கன்தான். அமெரிக்க துரை சொல்லும்படி ஆடுவதில் அனைவரையும் மிஞ்சி விட்டார் சிதம்பரம். தற்போது உலகை ஆட்டிப் படைக்கும் ரெசிஷனில் இந்தியா ஓரளவிற்கு தப்பி பிழைக்கக் காரணம் கம்யூனிஸ்ட் என்று சொன்னால் எத்தனை பேர் ஒத்துக் கொள்வார்களோ? அதற்காக மீண்டும் கம்யூனிசம்தான் தேவை என்று சொல்ல வரவில்லை. கம்யூனிசத்தை சற்றே மாற்றி புதியதொரு வழியில் செல்லும் சில நாடுகளைப் போல செய்யலாமே.

    உலகின் மொத்த வேலை நேரத்தில் மூன்றில் இரண்டு பங்கு நேரம் பெண்கள் வேலை செய்து,உலகம் உற்பத்தி செய்யும் உணவில் பாதியை உற்பத்தி செய்கிறார்கள்.ஆனால் அவர்கள் உலக வருமானத்தில் 10% மட்டுமே பெறுகிறார்கள். வந்தனா என்ற இந்திய ஆய்வாளர் இப்படி சொல்கிறார் " உலகமயமாக்கல், கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னாலும், அவை அவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. அவர்களின் தொழிலை அழித்துவிட்டு அவர்களுக்கு பாதுக்கப்பற்ற, அநியாய சம்பளத்தில் வேலை தந்திருப்பதை எப்படி சாதனை என்று சொல்ல முடியும்?”

   தொழிற்துறை இந்த உலகமயமாக்கலால் வளர்ந்து இருப்பதாக சொல்கிறார்கள் மன்மோகன் சிங்கும் சிதம்பரமும். உண்மை அதுவல்ல. இந்திய நிறுவனங்களை அழித்து உலக நிறுவனங்களே வளர்ந்து இருக்கின்றன. என்றைக்கு இருந்தாலும் இவர்களால் இந்தியாவிற்கு ஆபத்தே. யோசித்துப் பாருங்கள். 1990களில் இருந்த கோல்ட் ஸ்பாட்ட் என்ன ஆனது? கோத்ரெஜின் இன்றைய சந்தை பங்கு என்ன? உலகமயமாக்கலிலும் பல நன்மைகள் உண்டு. இல்லாத்தை இறக்குமதி செய்து, அதிகம் இருப்பதை ஏற்றுமதி செய்தால் நன்மை உண்டு. ஆனால் 80% விவசாயம் செய்யப்படும் நாட்டில், எத்தனை சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது? ஏற்கனவே நம்மிடம் இருக்கும் பொருட்களையே இறக்குமதி செய்ய சொல்லி அமெரிக்கா சொன்னால், எல்லாத்தையும் ஆட்டுகிறார்கள் நம்ம அரசியல்வாதிகள்.

   அமெரிக்காவின் இந்த செயலை எதிர்க்க எந்த நாடும் முன் வரவில்லையா என்ன? க்யுபாவும், வெனிசுலாவும் அதற்கு சரியா உதாரணம். அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு உள்ளானாலும் அவர்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. க்யூபா என்றால் ஃபிடல் காஸ்ட்ரோ என்பதை அறிவோம். வெனிசுலாவை வழி நடத்துபவர் யார்? இவர்கள் இருவரோடு லத்தின் அமெரிக்காவின் முக்கிய தலைவரும், எனக்கு மிகவும் பிடித்த சே குவேராவைப் பற்றியும் நான் அறிந்ததை அடுத்தப் பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

Mar 10, 2009

நிச்சயிக்கப்பட்ட சொர்க்கம்

71 கருத்துக்குத்து

  முதன்முதலில் நம் அலுவலகப் பேருந்தில் தான் உன்னைப் பார்த்தேன். திசம்பர் 16. எந்தவிதமான பரவச உணர்வும் வரவில்லை எனக்கு. பறவைகள் நிற்காமல் பறந்தன. அலைகள் வழக்கம் போல் தான் எழுந்து விழுந்தன. உன்னைத்தான் கலாய்க்க வேண்டும் என்று நண்பன் சொன்னதும் சற்று மகிழ்வாய் உணர்ந்தேன். என் ஓவ்வொரு வார்த்தைக்கும் பதலடி தந்த உன்னை நான் மட்டுமல்ல, அனைவரும் அதிசயமாக பார்த்தனர். உன்னையேப் பார்த்துக் கொண்டிருந்த என்னை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

  மல்லிகை வாசனையை நான் நுகரும் அளவிற்கு வேறு எந்தப் பெண்ணும் என்னிடம் நெருக்கம் காட்டியதில்லை. எல்லோருக்கும் பிரசாதம் மடித்த பேப்பரை நீட்டிவிட்டு எனக்கு மட்டும் நெற்றியில் திருநீரிட்டு கண்களை மூடச் சொன்னாய். அருகில் ஊத வந்த உன்னை எப்படி பார்க்காமல் இருப்பது? கண்கள் திறந்தேன். தலையில் தட்டினாய். சுகமாய் வலித்தது.

  அடுத்த நாள் வீட்டிலிருந்து கிளம்பி தெருமுனை வரை சென்றவன் ஓடோடி வந்தேன்,மீண்டும் வீட்டுக்கு. எதடா மறந்துட்ட என்ற என் அம்மா, நான் விபூதியை வைத்துக் கொண்டதைப் பார்த்துவிட்டு தெரிந்தவர்கள் இடமெல்லாம் சொல்லியிருக்கிறார், நான் ஆத்திகனாகிவிட்டேன் என்று. தேவதைகள் எல்லாம் கடவுளா என்ன?

  சேலை கட்டுவாயா என்றேன். தோழிகள் எல்லாம் சொல்லி வைத்துக் கொண்டு ஒரே நாளில் கட்டுவோம் என்றாய். ஒரு நாள் வர சொன்னதுக்கு உன் தோழி முடியாது என்றாள். உதட்டைச் சுழித்து நான் என்ன செய்ய என்றாய். இன்னொரு முறை அதைப் போல உதட்டை சுழி என்றேன். வாய் விட்டு சிரித்தாய். இப்பவே செய்யனுமா என்றாய். ஆமாம். சுழிக்க வேண்டாம். இதேப் போல் சிரித்துக் காட்டு என்றேன். அமைதியாக இருந்தாய். என்னாச்சு என்றதற்கு நான் வேறு ஏதாவது செய்தால் அதை செய்ய சொல்லுவாய் என்றாய். அய்யோ!! நீ என்ன செய்தாலும் ஒன்ஸ்மோர் கேட்க தோன்றியது.

  ஒரு வழியாக தைரியத்தை வரவைத்துக் கொண்டு அந்த காதல் கடித்தத்தை கொடுத்த தேதி நினைவிருக்கிறதா? திசம்பர் 31. படித்து முடித்ததும் உன் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் என் பெயரை அழித்துக் கொண்டிருந்தது. உன்னால் ஏற்கனவே கரைந்துக் கொண்டிருந்த நான் பதிலேதும் பேசாமல் சென்றுவிட்டேன். மாலைப் பேருந்தில் என்னருகே நீ வந்து அமர்ந்தாய். நண்பர்கள் அனைவரும் நீ என் காதலை ஏற்றுக் கொண்டதாக முடிவு செய்து நம்மை கிண்டல் செய்துக் கொண்டிருந்தார்கள். நீ பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாய். உன் நிறுத்தத்தில் இறங்கி செல்லும்போதும் என் நண்பன் சொன்னான் ”அவ உன்னை திரும்பி பார்த்துட்டு போனா, அவ உன்னை லவ் பண்ணலடா”. பயந்துக் கொண்டே இருந்தேன். திரும்பாமல் சென்று விட்டாய். எகிறி குதித்ததில் லேசாக ஆடியது பஸ். என்ன ஆச்சு என்றவர்களிடம் “ஹேப்பி நியூ இயர்” என்றேன்.

  நீயும் பதிலேதும் சொல்லாமல், நானும் கேட்காமலே 10 நாட்கள் சென்றுவிட்டது. ஆறு மணி குளிரில், ஆளில்லா ஃப்ரெஞ்சு வீதியில் உன்னோடு நடப்பது எனக்கு உலகிலே முக்கியமான வேலை. ஜனவரி 16. எப்போதும் போல் தான் கடற்கரைக்கு வரச் சொல்கிறாய் என்று நினைத்தேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னாய் “ உனக்கு முன்பே நான் உன்னை காதலிக்க தொடங்கிட்டேன்டா”. அந்த அரையிருளிலும் உன் விழியோரம் உருண்ட கண்ணீர் மின்னியது. அப்போது பிடித்த உன் கைகளை ஒன்பது மணிக்குத்தான் விட்டேன். குழந்தைகளின் பூமித் தொடாத பாதங்கள் மென்மையானவையாமே. உன் கைகளை விடவா?

  நமக்குள் இந்தக் காதல் மிக இயல்பாய் வந்திருக்கிறது. ஒரு பூ இதழ் விரிப்பது போல. ஜனவரி 26 நினைவிருக்கிறதா? உன் தோழியின் அறையில் நாம் இருவர் மட்டும். எனக்காகவே எடுத்து வந்திருந்த சேலையை கட்டிக் கொண்டு வந்தாய். அணைத்து முத்திமிடுவேன் என்று எதிர்பார்த்தாய் நீ.  உன்னைக் கையெடுத்து கும்பிட்டதும் காலில் விழுந்தாய். பதறிப் போனேன் நான். நெற்றியில் குங்குமம் வைத்துவிட சொன்னாய். அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் நடக்காமல் போனது என் குற்றம்தான்.

  காதலர் தினத்தன்றுதான் நான் சிங்கப்பூருக்கு கிளம்ப வேண்டும். நமக்காக ஒரு நாள் முன்னரே காதலர் தினத்தை வைத்துக் கொண்டோம். இனிமேல் வரும் ஆண்டுகளில் 13ஆம் தேதியே கொண்டாடுவது என முடிவு செய்தோம். (அன்று நடந்தவற்றைப் படிக்க இங்கே செல்லுங்கள்)

   உன் கல்லூரி நண்பன் நம்மைப் பற்றி உன் அப்பாவிடம் சொன்னது, என்னால் இந்தியாவிற்கு சரியான நேரத்தில் வர முடியாமல் போனது, உன் பெற்றொரின் தற்கொலை பயறுத்தல், என ஆயிரம் காரணம் இருந்தாலும் எனக்காக காத்திருந்திருக்கலாம் கம்லா. மார்ச் 2 என்னிடம் நீ கடைசியாக பேசிய நாள். என்ன பேசினாய்? உன் திருமணத்தைப் பற்றிதான். அன்றிலிருந்து ஒவ்வொரு மார்ச் 10 ஆம் தேதியும் பைத்தியம் பிடித்து விடுகிறது எனக்கு. ஓ.. இன்று மார்ச் 10..

*******************************************

கனவுகள் சுமந்த

கவிதைகளால்

காகிதம் நிரப்பியிருந்தேன்....

மைப்பட்ட புத்தகத்தின்

பக்கங்களாக மறைந்துவிட்டிருந்தது

கண்ணீரில் குலைந்த காதலால்....

எதேச்சையாக கண்களில்

பட்டுத்தொலைக்கும்

உன் பெயரும்...

நாம் சென்ற கடற்கரையின்

மணலில் தான்

இன்னும்

இன்றும் நீ நடைப்போடுகிறாய்

என்ற எண்ணங்களும்...

வரம்பு மீறிவிட்ட வார்த்தைகளும்...

இனி எதுவும், எவையும்

துணைவரப்போவதில்லை....

பிரிவுகள் கொண்டாட

இதயம் பழக்கிவிட்டேன்......

இருந்தபோது விரும்பி,

இன்று வெறுக்கும்

வாலாட்டும் ஜீவன் தானே அது??

.

.

.

.

பிரிவெழுத பிரியமில்லை...

.

.

எனினும்,

திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயிக்கப்படுகின்றனவாம்......

என் நிச்சயிக்கப்பட்டுவிட்ட

சொர்க்கத்திற்கு,

திருமணநாள் நல்வாழ்த்துகள்...

(கவிதையை எழுதியவர் ஸ்ரீமதி )

2009ன் சூப்பர் ஹிட்டாக போகும் பாடல்

50 கருத்துக்குத்து

  த‌ல‌ம்பாட்டத்தின் 'பிரம்மாண்ட' வெற்றியை அடுத்து அதே இயக்குனருடன் பணிபுரிய இருந்த நேரத்தில், மூத்த(’ர’ இல்லைங்க) இயக்குனர் வாய்ப்பு வர அதில் கவனம் செலுத்துகிறார் தம்பு. ஆனால் படத்தில் குத்துப் பாடலே இல்லை என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இயக்குனருடன் மனக்கசப்பில் இருக்கிறார். ஒருவழியாய் அவரை சம்மதிக்க வைத்து ஒரு குத்துப் பாடலுக்கு பர்மிஷன் வாங்கி தனது குத்துப்படையுடன் டிஸ்கஷன் நடத்துகிறார். இசையமைப்பாளர் சிவனும், பாடலாசிரியர் பூவரசுவும், கிரியேட்டிவ் ஹெட் காஃபி.அஞ்சும் வந்துவிட வேகமாக விரலால், மன்னிக்க, காலால் நடந்து வருகிறார் தம்பு

சிவன்: சிச்சுவேஷன் சொல்லுங்க. போட்டுடலாம்.

பூவரசு: தமிழ் சினிமாவுக்கே புதுசுங்க. ஹீரோ வில்லன்களையெல்லாம் ஒன்னா தீர்த்துக் கட்டப் போறாரு. அதான் க்ளைமேக்ஸ். அதுக்கு முன்னாடி தன் காதலிய பார்க்கறாரு.அப்ப ஒரு பாட்டு. கடைசி நேரங்கறதால நல்லா ஸ்பீடா இருக்கனும்.

காபி.அஞ்சு:  (எகிறுகிறார்)

யோவ் நான் தான் கிரியேட்டிவ் ஹெட்டு

பாட்டு எழுத மட்டும்தான் உனக்கு துட்டு

நான் போட்ட‌ எல்லாப் பாட்டும் ஹிட்டு

இந்த‌ பாட்டுல‌ போட‌றோம் எட்டு செட்டு

(வேறு வழியின்றி வாய் மூடி அமர்கிறார் பூவரசு)

தம்பு: உலகத்திலே சின்ன வயசுல டைரக்டர் ஆனவன் நான் தான். நான் சொல்றேன் சிச்சுவேஷன். கதைப்படி ஹீரோயின நான் பிரிஞ்சிடறேன். அந்த சோகத்துல தண்ணியடிச்சிட்டு பாடறேன். குத்துப்பாட்டாவும் இருக்கனும். காதலின் வலியும் இருக்கனும்.

சிவன்: oops. இப்ப யாருக்கு நான் ட்யூன் போடனும்? தம்பு நீங்க சொன்ன மாதிரியே போடலாம். லிரிக் ரைட்டர் லீடு கொடுத்தா நல்லாயிருக்கும்

பூவரசு: இதோ ஒரு நிமிஷம் சார். (யோசிக்கிறார்)

கா.அ. : சொன்னவுடனே வரணும் பாட்டு

அதுக்கு நான் ஒரு எடுத்துக்காட்டு

இதாப்பா சிவன் புடிச்சுக்கோ..

டண் டணக்கா நீயும் அடிச்சுக்கோ

அட மயிலாப்பூர் ஃபிகரே உனக்கில்லை நிகரே

சிங்கமென வாழ்ந்தவன் நானே

அத அசிங்கமாக ஆக்கிட்டு போனே

பூவரசு: வந்துடுச்சு சார். (எல்லோரும் ஒரு மாதிரி பார்க்க, ஆரம்பிக்கிறார்)

சென்னையில ஓடுதடி கூவம்

என் மேல உனக்கென்ன கோவம்

நீ இல்லாம நான் வாழ்ந்தா பாவம்

ரெண்டு பேரும் ஒன்னா செத்து போவோம்

சிவன்: வாவ். சூப்பர்ப் ஃபீலிங். என்ன தம்பு. மெட்டும் தானா வருது.(மூக்கால் பாடிக் காட்டுகிறார்)

தம்பு: யா. எக்ஸலண்ட். அப்படியே பல்லவிய முடிச்சுக் காட்டுங்க பாஸ்

பூவரசு: (டஸ் புஸ் சத்தம் இல்லாம, வாயசைவதே தெரியாமல் பாடுகிறார்)

புடிக்கல புடிக்கல வாழப் புடிக்கல

முடிக்கல முடிக்கல ஃபுல்ல முடிக்கல

தம்பு: அப்படியே பல்லவியோட லாஸ்ட் லைன் சும்மா கும்முனு சொல்லுங்க. வார்த்தைகள் பவர்புல்லா, தமிழ் சினிமாவுக்கு புதுசா இருக்கனும்

பூவரசு: சர்ர்க் சர்ர்க கலந்தடிச்சா காக்டெயில்

டர்ர்க் புர்ர்க் காதலிலே நான் ஃபெயில்.

சிவன்: (சிலிர்த்துக் கொண்டு பாடிக் காட்டுகிறார் பல்லவியை.)

சென்னையில ஓடுதடி கூவம்

என் மேல உனக்கென்ன கோவம்

நீ இல்லாம இப்ப நான் வாழ்ந்தா பாவம்

ரெண்டு பேரும் ஒன்னா செத்து போவோம்

புடிக்கல புடிக்கல வாழப் புடிக்கல

முடிக்கல முடிக்கல ஃபுல்ல முடிக்கல

சர்ர்க் சர்ர்க கலந்தடிச்சா காக்டெயில்

டர்ர்க் கர்ர்க் காதலிலே நான் ஃபெயில்.

(கையாலும் வாயாலும் டண்டணக்க தாளம் போடுகிறார் கா.அ. வலிப்பு வந்ததைப் போல ஆடுகிறார் தம்பு)

பூவரசு: அப்படியே சரணமும் சொல்றேன் கேளுங்க

பிஞ்சுன்னு நினைச்சுட்டாங்க என்ன

நெஞ்சுக்குள்ள வச்சுப்புட்டேன் உன்ன

மஞ்சுன்னு உன் பேர நீ சொன்ன

ம்ம்.. கடைசி வரில வைக்கிறோம் சார் ல்வ் ஃபீலிங்க

நஞ்ச வச்சு இப்ப நீயே ஏன் கொன்ன.எப்படி சார்?

தம்பு: பின்றீங்க பாஸ். அப்படியே நம்ம மாஸ் காட்டலாமா?

பூவரசு: அது இல்லாமலா?

என் பின்னால ஒரு கோடி பேரு

தமிழ்நாட்டில் எல்லாமே என் ஊரு

உன் கையால சாப்பிடனும் சோறு

என்னை வெல்ல உனையன்றி யாரு?

ரெண்டு மனசுக்குள்ள நடக்குது வாரு

இப்ப என் கையில மட்டும் பாரு பீரு

தம்பு: கொன்னுட்டிங்க சார்

பூவரசு: ஃபினிஷிங் கேளுங்க

சர்ர்க் சர்ர்க கலந்தடிச்சா காக்டெயில்

டர்ர்க் கர்ர்க் காதலிலே நான் ஃபெயில்.

(ஏரியா கலகலப்பான நேரம், மோசதேவன் அங்கே வர, பாடலைப் பாடிக் காட்டுகிறார்கள். அலறியடித்துக் கொண்டு ஸ்க்ரிப்ட்டோடு  கோர்யா வீட்டுக்கு ஓடுகிறார்)

Mar 6, 2009

ஆத்தா நான் ஸ்டார் ஆயிட்டேன்

111 கருத்துக்குத்து

நாங்களும் ஆயிட்டோமில்ல.. தமிழ்மணம் நிர்வாக குழுவிற்கு மனமார்ந்த நன்றி.  சகா ஜமாய் என்று சகஜமாய் பழகி, ஊக்கமளித்து வரும் அனைவருக்கும் நன்றி. என்னைப் பற்றி என்ன எழுதுவது என்று நினைத்த போதுதான் பிரபல பதிவரிடம் இருந்து இந்த‌ மடல் வந்தது. 

****************** 

 ரொம்ப நாளா இந்த கேள்விகள ஒனக்கு அனுப்பி, பதிவாப் போடு(டா)ன்னு சொல்லணும்னு நெனைச்சுட்டிருந்தேன். இப்போ ஸ்ட்ரா ஆய்ட்ட.. ச்ச்ட்... ஸ்டார் ஆய்ட்ட.

பல இடங்கள்ல ஒருமைல வந்திருக்கும். ப்ளீஸ்.. வராத இடத்துல மாத்தி அதே மாதிரி போட்டுக்கோ...

1) சாகலாம்னு தோணுது-ன்னு பல சந்தோஷமான தருணங்கள்ல நாம நெனைக்கறதுண்டு. உனக்கு அந்த அளவு சந்தோஷமான தருணம் வாய்த்தது?

 சாகலம்னு நம்மள நினைக்க வைக்கிற விஷயம் இசைதான். சிலப் பாடல்கள்ல கேட்கறப்ப அப்படி நினைப்பதுண்டு. சமீபத்தில் பிச்சைப் பாத்திரம். அப்புறம் பாண்டிச்சேரி கடற்கரையில் தன் காதலை சொல்லிவிட்டு அவர் சென்றபிறகு கடலைப் பார்த்தபோது. அப்படியே குதித்து விடலாம் போலிருந்த்து.

(அப்புறம் மூனு வருஷத்திற்கு முன்னாடி ஜனான்னு ஒரு படம். அதன் க்ளைமேக்ஸுல கூட எனக்கு அப்படித் தோனுச்சு)

2) இப்போது நீங்கள் ஒரு எழுத்தாளர். (அட.. நம்புங்கப்பா.. அப்படித்தான்). இல்ல.. இந்த ஃபீல்டுலதான் நான் ஷைன் பண்ணனும்னு நெனச்சேன்னு நீங்க நெனைக்கற ஒரு துறை?

எனக்கு ஆட்டோமொபைல்ஸ் மேல ஒரு காதல். ஹிந்துஸ்தான் மோட்டார்ஸில் கேம்ப்ஸ் இண்டர்வியூவில் வேலை கிடைச்சும், 55 கிலோ(அப்போ 2000ல) எடை இல்லாமல் நழுவிவிட்டது. அதன் பின் முயன்றும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ் கார் டிசைன் செய்ய வேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று.

(ஹிஹி. எல்லோரையும் போல சினிமா ஆசை எனக்கும் உண்டு.மற்ற பதிவர்கள் மாதிரி கிடையாது. கேமரா, இயக்கம் எல்லாம் வேஸ்ட்டுங்க. நாம ஸ்ட்ரெய்ட்டா ஸீரோதான், ச்சே ஹீரோதான்)

3) உங்களுக்குக் கிடைச்ச பாராட்டுல பெரிய பாராட்டா நீங்க நெனைக்கறது?

   காலேஜ் கிரிக்கெட் டீமுக்கு பயிற்சி கொடுக்க ஒரு நாள் ராபின் சிங் வந்தார். நான் தான் ஒப்பனிங் பேட்ஸ்மென் மற்றும் விக்கெட் கீப்பர். ஒரு நாள் பயிற்சியின் (அப்போ டெஸ்டுக்கு யாரு கோச்னு  மொக்கை போடாதீங்கப்பா) முடிவில் நல்லா கீப்பிங் பண்றன்னு சொன்னார். அதைத்தான் சொல்லுவேன்.

  (அப்புறம் ட்ரெய்ன்ல என்னை அடையாளம் கண்டுபிடிச்சு பாராட்டிட்டு போனாங்களே அந்த ரெண்டு பொண்ணுங்க. அந்த பாராட்டையும் மறக்க முடியாது. அப்பவே செலிப்ரிட்டி ஆயிட்டோம்ல J)


4)
எழுத்தைத் தவிர உங்களுக்குப் பிடித்த மூன்று விஷயங்கள்?

நடனம், கிட்டார், கிரிக்கெட் 

5) வாழ்க்கைல உங்க ரோல் மாடல்..?

அப்படி யாரும் இல்ல. ஆனா எங்க அப்பாவ அப்படி ஒரு இடத்துல நினைச்சிட்டு இருக்கேன்.

6) எனக்கு இது தெரியாது-ன்னு நீங்க  ஒத்துக்கற...அதுக்காக வருத்தப்படற விஷயம்?

ஒரு காலத்துல பைக். சில வருடங்களுக்கு முன்புதான் கற்றுக் கொண்டேன். அது தவிர்த்து, தெரியாத விஷயங்கள் பல இருந்தாலும் வருத்தப்படுவது, ம்ஹூம் நினைவுக்கு வரவில்லை.

(அடப்பாவி. ஒழுங்கா எழுத தெரியலன்னு வருத்தமே இல்லையான்னு கேட்ட தாமிரா அங்கிள் ஒழிக.)

7) இதைப் பற்றி எழுதவேண்டும் என்று நீங்கள் நினைத்து.. தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் ஒரு விஷயம்.. அல்லது ஒரு பதிவு?

தென்மெரிக்காவில் நடந்த புரட்சிகள் பற்றியும், சே மற்றும் காஸ்ட்ரோவைப் பற்றியும்,

(ஹிஹிஹி. விஜய் சூப்பர்ஸ்டார் ஆனது எப்படி என்று..என்னது காந்தி செத்துட்டாரான்னு நினைக்கறவங்கள என்னனு சொல்றது)

8) வேண்டாமென்று நினைத்தாலும் உன்னால் தவிர்க்க முடியாத ஒன்று? (அவள் நினைவுகள்ன்னா ஒத விழும்!)

நீங்களே பதில் சொன்னா எப்படி? ம்ம். சுந்தர்ஜி மாதிரி தைரியமா சொல்ல முடியல. இப்போதைக்கு பதிவுலகம்.

(தினமும் குளிப்பது, பல் தேய்ப்பது போன்றவற்றை சொல்லலாம்)

  9) எங்களைப் போன்ற வளரும் பதிவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

உங்க வளர்ச்சி இன்னும் பாக்கி இருப்பதால், உங்களையும் வளரும் பதிவரா நினைச்சுக்கலாம். ஆனா உங்களுக்கு நான் என்ன சொல்வது.. சரி. திட்டாதிங்கப்பா..

1)     நல்லப் பதிவுகள் எழுதினாலும், அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நினைக்காதீர்கள். ஒரு நாள் அது கிடைக்கும் போது உங்க பழைய பதிவுகளை மக்கள் படித்து உங்கள் மீது அதிகம் ஆர்வம் கொள்வார்கள். மீள்பதிவுகள் மூலம் ரீ ரிலிஸ் செய்யலாம்.அதனால் எழுதுவதை நிறுத்தாமல் இருங்கள்

2)    யார் சொன்னாலும் பரவாயில்லை. பரவலாக தெரியப்பட சில மொக்கைகள் போடுங்கள். கணிசமான வாசகர்கள் கிடைக்கும் போது சரியாக எழுதி அந்த மொக்கைக்கு பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

3)    உங்கள் பலத்தை பதிவின் வெற்றி மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள். அதில் உங்களை மெருகேற்றுவது வெற்றியை எளிதாக்கும். உதாரணம் கவிதை கதை, மொக்கை,நகைச்சுவை. எது உங்களுக்கு நல்லா வருதுன்னு பாருங்க.

10) உங்கள் வாசிப்பனுபவம் எந்த அளவில் உள்ளது? புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தது எப்போது..? எந்த வகைப் புத்தகங்களீல் விருப்பமதிகம்?

இந்தப் பதிவே இதற்கு சரியான பதில். புனைவுகளை விட வரலாற்று புத்தகங்களின் மீது சமீப காலமாக ஆர்வம் அதிகமாக இருக்கிறது.

11) அரசியல் ஆர்வம்?

அதிகம், தெரிந்துக் கொள்வதில். இந்திய அரசியல் மீது ஒரு எழவு ஆர்வமும் கிடையாது.

12) ஆப்பிள், ஆரஞ்சு, பைனாப்பிள், பலா, வாழை - எந்தப் பழம் ரொம்பப் பிடிக்கும்?

ஆரஞ்சு. ஏன்னு யாருக்காவது தெரியுமா??????

13) உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது?

கிகிகிகி.. புத்திசாலிகளுக்கு மற்றவர்கள் சொல்வது முக்கியமில்லை.

இறுதியாக.. சும்மா சும்மா ஃபீல் ப்ண்ண மாட்டேன் என்ற வாக்குறுதியை எங்களுக்குத் தரத்தயாரா?

ஃபீல். அது திட்டமிட்டு நிகழ்வதா? அது நடக்கும் போது எப்படி எதிர்கொள்வது என்று எப்படி திட்டமிட முடியும்? வாழ்க்கையை அதன் போக்கிலே வாழ விரும்புகிறேன். ஃபீல் செய்ய வைக்கும் சூழ்நிலை வந்தால் ஃபீல் செய்யவே விரும்புகிறேன். காலம் அதை சீக்கிரம் மாற்றும். ஃபீல் செய்வதை அல்ல, எத்ற்காக செய்கிறேனோ அதற்கான காரணத்தை.

*******************

ரைட். இனி ஒரு வாரம். ச்சும்மா வூடு கட்டுவோமா? இப்ப போறேன். நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

 

கார்க்கியின் திருமணத்திற்கு வந்த பிரபலங்கள்

72 கருத்துக்குத்து

   வானனில் வீதி கார்த்திக் தெரியுமில்ல? என்னை போட்டு சாத்தனும்னு முடிவு செய்து நேத்து ஒரு பதிவு போட்டிருக்கார் அந்த தம்பி. ரொம்ம்ம்ம்ம்ம்ப நன்றிப்பா கார்த்திக். அதுக்கு இன்னும் சில கமெண்ட்டு போட்டு நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்து இதை பதிவாக போடுங்கனு சொன்னார். ( நீல நிற கமெண்ட்டுகள் சொன்ன பிரபல பதிவரை கெஸ் பண்ணுங்களேன்)

************************************************

  பிரபல பதிவர் கார்க்கிக்கு கல்யாணம் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியான இந்த செய்தியால் வலையுலகமே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், உலகெங்கும் இளம்பெண்களின் தற்கொலை முயற்சி பேரதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. (இவனுக்கெல்லாம் திருமணமான்னு சாவறாங்களா?)

   எனினும் நேற்று நடந்த திருமண நிச்சயதார்த்தத்திற்கு பல தமிழக, தேசிய, உலக பிரபலங்கள் / தலைவர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் பேசியபோது, (தொழிலதிபர்களே தேவலாம் போலிருக்கு. தலைவர்களாம்)

*****

இயக்குநர் மணிரத்னம்

நான் இங்க கார்க்கியோட ஃபேனா வந்திருக்கேன். (அப்ளாஸ்..!) இப்ப எழுதப்படுற எல்லா நல்ல ப்ளாக்லயும் கார்க்கியோட சாயல் தெரியுது. அந்த அளவு ப்ளாக் உலகத்தை கார்க்கி பாதிச்சிருக்கார்.

(இது என்ன உங்க டெம்ப்ளேட் பாராட்டா சார்? இதேயேதான் 'நான் கடவுள்' விழால பாலாவை பத்தியும் சொன்னீங்க?)

(கார்க்கி பாதிச்சாரான்னு தெரியல. ஆனா நீங்க ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போல)

ஏ ஆர் ரஹ்மான்

  நம்பவே முடியலை. நான் சிலருக்கு நன்றி சொல்லனும். (பாக்கெட்டில் இருந்து ஒரு லிஸ்ட்டை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார்.) டேனி பாய்ல், ஆன்ட்ரு வெப்பர், சென்னை, மும்பை, லண்டனில் இருக்கும் டெக்னீசியன்ஸ், ...

  (அடச்சே, ஒது கல்யாண பங்ஷன்னு யாராவது அவருக்கு ஞாபகப் படுத்துங்கப்பா. ஆஸ்கர் அழும்பு தாங்கலை.)

(ஆஸ்கார்னு சொன்னா என்கிட்ட மாருதி கார்தான் இருக்குனு சொல்லுவான் கார்க்கி. இதெல்லாம் நெம்ப ஓவரு)

Barack Obama

There is no easy task before us. But, We will rebuild America. (என்னது?) We will build new schools, new bridges, new roads. We will lay broadband, make solar panels, construct wind turbines, ....

(ஹேய், மொய் பணம் பத்திரமா இருக்கான்னு யாராவது பாருங்கப்பா!)

(சேசே.. தமில்ல பேசுங்கப்பா)

முதல்வர் கருணாநிதி

   தம்பி கார்க்கி என்னை சந்தித்து திருமணத்திற்கு அழைத்தபோது "உடல்நிலை ஒத்துழைத்தால் வருக" என்றார். ஆனால் என்னை இயக்குவது என் உடலல்ல. என்னுடைய மனம் என்பது உங்களுக்கு தெரியும். அந்த மனத்திற்கு சக்தியை அளிப்பது தமிழ். தம்பி கார்க்கியின் தமிழ்.
அந்தத் தமிழ் உலகத் தமிழர்களுக்கெல்லாம் சென்று சேரவேண்டும் என்பதால், இந்த அரசு, கார்க்கியின் படைப்புகளை நாட்டுடைமையாக்க உள்ளது. இது நான் தம்பி கார்க்கிக்கு தரும் திருமணப் பரிசு.

(இவரை கேள்வி கேட்க யாருமே இல்லையா?? இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு.)

(வுட்டா கார்க்கிக்கு பாராளமன்ற தேர்தல்ல ஒரு சீட்ட் கொடுத்திடுவார் போலிருக்கே)

டாக்டர். 'இளைய தளபதி' விஜய்

ம்ம், கார்க்கிக்கு வாழ்த்துக்கள்!
இந்த கல்யாணத்துக்கு வந்த எல்லாருக்கும் என் ரசிகர் மன்றம் மூலமா ரெயின் கோட்டும், சன் கிளாஸும் வழங்கப்படும். இது வெறும் சமூக சேவைதான். அரசியல் எல்லாம் இல்லைங்னா.

(நீங்க மட்டும் அரசியலுக்கு வந்தீங்க, நான் தமிழ் நாடு மட்டுமில்லை, இந்தியாவை விட்டே ஓடிப் போய்டுவேன்.)

(ண்ணா.. நல்ல வேளை உங்க ரசிகர்கள இவர் கல்யாணத்துக்கு தந்தி அடிக்க சொல்லாம இருந்தீங்களே)

அப்துல் கலாம்

2020ல் கார்க்கி ஒரு சூப்பர் ஹியுமனாக மாறவேண்டும். அதற்கு இளைஞர்கள் கனவு காண்பது அவசியம். கனவு காண்பதோடு நின்றுவிடாமல் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். மஹாராஷ்ட்ரா சென்றிருந்த போது ஒரு பள்ளிச் சிறுமி என்னை பார்த்து கேட்.....

(ஸாரி ஸார், மைக்ல ஏதோ ப்ராப்ளம். நீங்க நாளைக்கு பேசுங்களேன்.)

(விவேக் கூட சேராதீங்கனு சொன்னா கேட்டாத்தானே?)

மருத்துவர் ராமதாசு அய்யா

தம்பி மகிழ்வுந்து திறவுகோலுக்கு வாழ்த்துக்கள்!
அவர் மிகவும் ஒழுக்கமானவர். ஆனால் அவர் ஆங்கிலம் கலந்து எழுதுவது, புகைபிடிப்பது, கஞ்சா அடிப்பது, டக்கீலா அடிப்ப்து, பீர் சாப்பிடுவது போன்ற பழக்கங்களை கைவிடவேண்டும்.
இதை நான் ஒரு வேண்டுகோளாகத்தான் வைக்கிறேன்.

(ம்ம், இதுக்கு மேல் கல்யாணம் நடக்குமா என்பது சந்தேகம் தான். பத்த வெச்சுட்டயே பரட்டை?!)

(இந்த பழக்கமெல்லாம் இருக்கா கார்க்கிக்கு? அப்ப அவர் பாமக வா?)

*****

பாதுகாப்பு காரணங்களால் திருமணம் நடைபெறும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திருமணத்தை லைவ்வாக ஒளிபரப்ப பி.பி.சி 800 கோடிக்கு உரிமம் வாங்கியிருப்பதால், நீங்கள் உங்கள் வீட்டிலேயே காணமுடியும்.

(ஆவ்வ்வ். சன் டிவி வாங்கியிருந்தா அவர் கல்யாண வாழ்க்கை ஃப்ளாப் ஆகியிருக்கும். ஜஸ்ட் மிஸ்)

புட்டிக்கதை

39 கருத்துக்குத்து

மறுநாள் செமெஸ்டர் தேர்வுகள். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் முழு பியரையும் அடித்துவிட்டான் ஏழு. படிப்பதில் அவன் சூரன். எங்கள் கவலையெல்லாம் அவனை எப்படியாவது எழுப்பி கிளப்ப வேண்டுமென்பதே. நினைத்தது போலில்லாமல் காலை எட்டு மணிக்கே எழுந்துவிட்டான். ஆனால் மப்பு மட்டும் முழுமையாக இறங்கவில்லை.

தேர்வு அறைக்குள் நுழைந்தவன் நேராக ப்ளாட்ஃபார்ம் மீது ஏறினான். "யாருப்பா இன்னைக்கு எனக்கு பேப்பர் கொடுத்து புண்ணியம் தேடிக்கப் போறது?"

எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ஏழுவா இவ்வளவு சத்தம் போட்டு பேசுவது? பின் மெல்ல அவனை சமாதானப்படுத்தி தேர்வை ஒழுங்காக எழுதுமாறு எடுத்து சொன்னோம். தேர்வும் தொடங்கியது. கேள்வித்தாளையும் விடைத்தாளையும் கொடுத்துவிட்டு சரிப்பார்த்திட சொன்னார். மேற்பார்வையாளர். ஏழு எழுந்ததைப் பார்த்தவுடன் எனக்கு பயம் ஏறியது.

"எக்ஸ்க்யூஸ் மீ சார். Question paperல இருக்கு. ஆனா Answer paperல Answers எதுவுமே இல்ல சார்”

நான் சிரித்ததைப் பார்த்து அவர் ஏழுவை விட்டுவிட்டு என்னை திட்டத்தொடங்கினார். ஏழுவை முறைத்துக் கொண்டே அமர்ந்தேன். அரைமணி நேரம் கழித்து மீண்டும் எழுந்தான்.

"சார். Differential Assembly எப்படி வேலை செய்யுது?” அவர் கோவமடைவதை கண்ட ஏழு பம்மினான். "என்ன சார். சந்தேகம் கேட்டா தீர்த்து வைக்கிறவர்தானே நல்லஆசிரியர்?"

கழுத்தைப் பிடித்து இழுத்து சென்றார் அவர். அவன் மீது எந்த ஒரு 'நல்'வாசனையும் வராததால் இவன் வேண்டுமென்றே விளையாடுவதாக முடிவுசெய்து விட்டார்கள். ஸ்டாஃப் ரூமில் எல்லா லெக்சரரும் கூடியிருக்க விசாரணை ஆரம்பமானது. ஏழு நல்லா படிக்கிற பையன் என்று அனைவரும் சொன்னாலும் அடிபட்டவர் விடுவதாக இல்லை. அதுவரை வாயை மூடியிருந்த ஏழு வாயைத்திறக்கத் தொடங்கினான்.

கெமிஸ்ட்ரி மேடத்தை பார்த்து முதலில் சொன்னான். "மேடம் இவருக்கும் எனக்கும் ஏனோ கெமிஸ்ட்ரி ஒத்து வரவில்லை".

என்னடா பேசற. திமிரா? என்றார் பிஸிக்ஸ்.

”சார். மேல போனா கீழ இறங்கித்தான் ஆகனும்னு சொல்றாரு நியூட்டன். எனக்கு மட்டும் ஏன் சார் இறங்க மாட்டங்குது" என்ற போதுதான் இவன் தண்ணி அடித்திருக்கிறான் என்பதை உணர்ந்தார்கள் உரையாளர்கள்.(அதாம்ப்பா லெக்சரர்ஸ்)

இருந்தாலும் அவன் உருவத்தைப் பார்த்து பாவப்பட்ட சில நல்ல ஜீவன்கள் அவன் தண்ணியடிக்கவில்லை என்றும், கூடவே சுத்தும் நாங்கள்தான் அவனுக்கு கஞ்சா டோப்பு அபின் என்று எதோ பழக்கப்படுத்திக் கெடுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். அரை பியர் அய்யாவுக்கு கஞ்சா அபின் என்றதும் முதுகெலும்பில் எறும்பு ஊர்ந்திருக்கிறது.
"ஆமா சார். நேத்து கார்க்கிதான் எனக்கு ஏதோ கொடுத்தான்” என்று உளறியிருக்கிறான்

எப்படி மார்க் போட்டாலும் 40 வரவில்லை என்பதால் மீண்டும் கேள்வித்தாளினை புரட்டிக் கொண்டிருந்தேன், தேர்வு முடிந்து பல மணி நேரம் ஆன பின்னும்.
"உன்னை பிரின்ஸி வர சொன்னாரு. உடனே வா" என்றார் ஆஃபீஸ் பாய்.

பாவம் ஏழு. காப்பற்றலாம் என்ற நல்லெண்ணத்தில் போன என்னிடம் டொய்ங் என சுத்தி ஏழு சொன்னதை ரீப்ளே செய்து காமித்தார்கள். கொலைவெறியோடு அவனைப் பார்த்தேன்.கூலாக சிரித்துக் கொண்டே கேட்டான். "அது அபினா மச்சி?"

அப்படியே அவனைக் கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது. கோவத்தை அடக்கிக் கொண்டு
சார். அவன் நேத்து ஒரு பியர் குடிச்சான். அதுக்குதான் இந்த ஆட்டம் என்றேன்.

ஒரு பியருக்கு ரெண்டு நாளா ஆடுவாங்களா? கூட என்ன சேர்த்த என்று கேட்டுதானும் ஒரு குடிகாரர்தான் என்று நிரூபித்தார் கணக்கு.

சத்தியமா சார்.வேணும்ன்னா பாலாஜிய கூட கேளுங்க என்று சொல்லிவிட்டு பின்பு நாக்கைக் கடித்தேன், இன்னொருத்தனையும் சிக்க வைத்து விட்டோமே என்று.

அந்தக் கவலையே இல்லாமல் அடுத்த டயலாக்கை அடித்தான் ஏழு. " அவன் இவனுக்குதான் சப்போர்ட் பண்ணுவான் சார். நீங்க ஆறுவையும் வர சொல்லுங்க.அவன் தான் எனக்கு மிக்ஸ் செய்து தந்தான்"

பியரடிச்சவனுக்கு எதைடா மிக்ஸ் செய்தீங்க என்று தன் மானம் போவது தெரியாமல் விசாரித்தார் கணக்கு.

அவன் பீரையே தண்ணி கலந்துதான் அடிப்பான் சார் என்றேன். ஏதோ அவனை மன்மதன் என்று சொன்னதைப் போல நகத்தைக் கடித்து அந்த சிமென்ட் தரையில் கால் கட்டை விரலால் நோண்டி வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார் தலைவர்.

அழைத்து வரப்பட்டார்கள் ஆறுவும் பாலாஜியும். பின்புதான் தெரிந்தது அவர்கள் இழுத்து வரப்பட்டார்கள் என்ற உண்மை.

மூன்று பேர் சொல்லியும் யாரும் நம்பத் தயாரில்லை. ஏதோ பெரிய லெவலில் போதை மருந்து பழக்கம் இருப்பதாக முடிவு செய்து விட்டார்கள். பேரன்ட்ஸ் வரனும். சஸ்பென்ஷன் தரணும். இவனுங்களுக்கெல்லாம் எதுக்கு சார் படிப்பு.டி.சி. கிழிச்சிடுங்க, போலிஸ்ல சொல்லலாம் சார் என்ற ஆளுக்கொரு ஐடியா தந்துக் கொண்டிருந்தார்கள்.

மறுநாள் வரை விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. மப்பு இறங்கி எழுந்தவனை கைகள் வலிக்க மொத்தினோம். மறுநாள் எல்லா உண்மையும் சொல்வதாக சொன்னதால் விட்டோம்.

அடுத்த நாள்.. வரிசையாக நின்றோம். யாரிடம் கஞ்சா வாங்கிறீங்க என்றவரிடம் காலில் விழாத குறையாக கெஞ்சினோம். அடிச்சவனே ஒத்துக்கிட்டானே என்றார். ஏழுவைப் பார்த்தோம்.

சார். இல்ல சார். நான் பீரடிச்சாலே ஏறிடும் சார். சத்யமா நேத்து பீருக்குத்தான் அப்படியாயிட்டேன் என்றான்.

டேய். மெக்கானிக்கல்ன்னா பெரிய பருப்பா? நாங்களும் அத படிச்சிட்டுதானே வந்திருக்கோம். ஒரு பீருக்கே இவரு ரெண்டு நாள் ஆடுவாராம். யார் கிட்ட கதை உடறீங்க என்றார் ஹெச்.ஓ.டி.

மெதுவாக சொன்னான் ஏழு " வேணும்ன்னா ஒன்னு வாங்கித் தந்து பாருங்க சார்.எப்படி ஆடுறேனு”

Mar 5, 2009

48 மணி நேரத்தில் பர்சனல் லோன்

61 கருத்துக்குத்து

  எனக்கு நேரம் சரியில்லைங்க. நேரமே இல்லைன்னே கூட பரவாயில்ல, நேரம் இருந்து அது சரியில்லைன்னா அது இன்னும் கொடுமைங்க. சரி சரி ஓடாதீங்க. இதுவும் மொக்கை பதிவல்ல.

என் தங்கையின்(cousin) திருமண செலவுக்காக தனிநபர் கடன் வேண்டி விண்ணப்பித்தேன். முதல்ல Axis Bank. அதில் ஏற்கனவே எனக்கு வீட்டுக் கடன் இருப்பதால், சிறப்பு சலுகையாக குறைந்த வட்டின்னு அவனுங்களே வந்தாங்க. அது டிசம்பர் மாதம். சரி இன்னும் மூனு மாசம் இருக்கேனு நானும் அதிலே அப்ளை செஞ்சேன். ஒன்னு ஒன்னா கேட்டான். நானும் ஒவ்வொரு வாரமும் சென்னை வரும்போது கொடுத்துட்டே இருந்தேன்.

”சார் முகவரி சான்றா லேண்ட்லைன் பில கொடுத்தீங்க. அது அம்மா பேர்ல இருக்கு.ரிலேஷன்ஷிப் ப்ரூஃப் வேணும்”னு தலைய சொறிஞ்சான்.

  சரின்னு ரேஷன் கார்டு கொடுத்தேன். அதுல கார்க்கி பேர பார்த்தா கார்த்தினு தெரியுதாம்.

“ டேய் வீட்டு டாகுமெண்ட்டே என் பேர்லதான் இருக்கு. அதுவும் உங்க கிட்டதான் இருக்கு” னு சொன்னேன்.

  இல்ல சார். அது வேறன்னு சொன்னான். அப்புறம் எல்லாம் முடிஞ்சுது. ஆஃபிஸ்க்கு போனாங்க. வீட்டுக்கு வந்தாங்க. அப்படி இப்படினு ஒரு மாசம் ஆச்சு. இன்னும் ரெண்டு நாள்ல கிரெடிட் ஆகும்னு சொன்னான். அடுத்த நாள் ஃபோன் பண்ணப்ப சொன்னான் பாருங்க ஒரு வார்த்தை.

“ யாரு? கார்க்கியா? ஆதம்பாக்கம் தானே? உங்க லோன் ரிஜக்ட் ஆயிடுச்சு சார்”.

“ரிஜெக்ட்டா? ஏன்?

நீங்க ஏற்கனவே ஹோம் லோன் எடுத்து இருக்கிங்க. அதான்.

டேய் நாய. அத வச்சுதாண்டா ஸ்பெஷல் ஆஃபர்னு சொன்னீங்க.

சாரி சார்.கிரெடிட் மேனேஜர் வேணாம்ன்னு சொல்லிட்டாரு.

  டொக்.வச்சிட்டான்

  அவனைத் தேடிப் போய் அடிக்கவா முடியும்? அடுத்து ICICI. ஏ.டி.எம்மில் பணம் எடுத்த உடனே நீங்க. வல்லவரு. நல்லவரு.(அப்பவே உஷாராயிருக்கனும்) அதனால உங்களுக்கு 3 லட்சம் ரூபாய் ப்ரீ அப்ரூவ்ட் லோன் இருக்கு. வேணுமான்னு கேட்டது. ஆமாம்னு அழுத்தினேன்.

ஆரம்பிச்சானுங்க. வீட்டுக்கு வந்தான். 30ரூபாய்க்கு ஜெராக்ஸ்., ஃபோட்டோ எல்லா எழவையும் கொடுத்தேன். ஆறு செக் கேட்டான். இன்னும் லோனே வரலையேனு கேட்டா, அது அப்படித்தான்னு சொன்னான். ப்ரீ அப்ரூவ்ட்னால வந்துடும்னு நினைச்சு நானும் கொடுத்தேன். ஹோம் லோன் மேட்டர் சொன்னேன். உங்க சம்பளத்துக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல சார்னு சொன்னான்.

  கடைசியா அவனும் பப்ளிகாம் மாதிரி இழுக்க ஆரம்பிச்சான். இவன் புதுசா பாஸ்போர்ட் காபி கேட்டான். கொடுத்தேன்,. ஒரு வாரம் கழிச்சு இது எக்ஸ்பயர்ட் ஆயிடுச்சாமே சார்னு சொன்னான். டேய் லூசு. அதுக்குதான் 12ம்பக்கம் காபியும் கொடுத்து இருக்கேன். Renewal details அதுல இருக்குடானு சொன்னேன்.

  ஆவ்வ்..ஓகே சார்னு சொன்னான். அப்படி இப்படின்னு இவனும் ஒரு மாசம் அக்கிட்டான். அதே மாதிரி கிரெடிட் டேட் வந்தது. அவனே ஃபோன் செஞ்சான். அப்பாடானு எடுத்தா, அதே டயலாக். அப்ப கூட நான் டென்ஷன் ஆகலைங்க. அதுக்கு அவன் ஒரு காரணம் சொன்னான் பாருங்க.

“ஐ.டி வேலையில இருக்கறவங்களுக்கு லோன் ஸ்டாப் பண்ன சொல்லி இண்டர்னல் ஆர்டர் சார்”

டேய் பொறம்போக்கு நாய்ங்களா. கம்பெனி பற்றிய தகவல்கள் தரும்போதே அது ஐ,.டினு நான் சொல்லலையா” கத்தினேன்.

டொக்.வச்சிட்டான்

இப்ப ஹெச்.டி.எஃப்.சி. இவன் என் நண்பன் தான். கண்டிப்பா முடிச்சி தரேன் மச்சினு சொல்றான். வேணாம்டா சாமின்னா விட மட்றான். கல்யாணம் இருக்கே. சரின்னு கொடுத்தேன்.

ஒரே வாரம் டா. நான் கியாரண்டின்னு போனான். நேத்து ஃபோன் வந்தது.

சார். நாங்க ஹெச்.டி.எஃப்.சில இருந்து கால் பண்றோம். உங்க last employer tata steels வோட relieving order வேனுமே சார்.

என் கிட்ட இல்லைங்க.பே ஸ்லிப்பும் இல்லையே. ஆனா சம்பளம் கிரெடிட் ஆனதற்கு ஸ்டேட்மெண்ட் கொடுத்து இருக்கேன்.

ஆமாம் சார். ஆனா அது டாடா போட்ட சம்பளம்தான் எப்படி சார் தெரியும்?

வேலைல இருந்தாத்தானே சம்பளம் கிரெடிட் ஆகும்?

அது ரைட் சார். ஆனா எங்களுக்கு இப்ப அந்த ரிலிவிங் ஆர்டர் இருந்தாத்தான் பண்ண முடியும் சார். எங்களுக்கு ரூல்ஸ் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். மத்த பேங்க் மாதிரி இல்லை.

டொக்.

இந்த முறை நான் வச்சிட்டேன். அந்த பேங்கில் பார்த்த ஞாபகம்.

HDFC personal loans.

Faster approval - Easy Documentation -Loans in 48 Hrs.

**********************************************

  இடைநிலை ஊழியர்கள் என்ன செய்வார்கள்? அவர்களை ஏன் திட்டனும்னு யாரும் சொல்லாதீங்க.ப்ளீஸ். அவர்கள் டார்கெட்டுக்காக நம்மள நம்ப வைத்து கழுத்தறுப்பதே அவர்கள்தான். எனக்கு திட்டனும்னு தோணுது. இன்னும் இருவது நாள்ல கல்யானம். இவனுங்க கிட்ட இது எல்லாத்தையும் சொன்னேன். கண்டிப்பா வந்துடும் சார்னு சொல்லி சொல்லியே...

Mar 4, 2009

எனக்கு திருமணம்....

78 கருத்துக்குத்து

  எப்படி தொடங்குவது? உண்மையில் என்ன எழுதப் போறோம் என்று தெரியாமல் பதிவெழுத தொடங்குவது இதுதான் முதல் முறை. (இல்ல்லைன்னா மட்டும் இவர் மனசுல மேட்டர் நயாக்ராவா கொட்டும்)

  200 என்பது ஒரு நம்பர்தான்.(கண்டுபுடிச்சிட்டாருப்பா ராமானுஜர்) அதில் எத்தனை நான் எழுதியது? எத்தனை தேறும்? எத்தனை செய்திகள்? இருந்தாலும் 200வது பதிவு என்கிற போது ஒரு மகிழ்ச்சி.(உனக்கு இருக்கும், எங்களுக்கு??????)

ஹைதைக்கு வந்தி பின்பு தனிமை என்னை விரட்டி விரட்டி காதலித்தது.(அதுவாச்சு உன் பின்னாடி வந்துச்சே) ஏதாவது ஒரு பொழுதுபோக்கு வேண்டும் என்று தொடங்கியதுதான் ப்ளாக். தமிழ்மணமே ஒரு மாதம் கழித்து என் நண்பன் பாலாஜி மூலம் தெரியும் எனக்கு. (அந்த டுபாக்கூரதான் உதைக்கனுமா?)

   முதல் 50 கிறுக்கிவிட்டு ஐம்பதாவது பதிவாக எழுதியதுதான் “நான் நான் தான்” என்ற சிறுகதை. (ஓ அது சிறுகதையா) உயிரோசையிலும் வந்தது. பலரிடம் எனக்கு பாராட்டையும் பெற்று தந்தது. (அந்தப் பலரில் ஒருத்தர சொல்லேன். கை நமநமன்னு இருக்கு) பின் நூறாவது பதிவாக ஒரு மொக்கையை எழுதினேன். (அதுக்கும் மொக்கைன்னு சொல்லு). 150 மறந்து விட்டேன் இப்ப 200வது. ஒரு லட்சம் ஹிட்ஸ், 100 Followers என்பதை எல்லாம் விட இது எனக்கு அதிக மகிழ்ச்சி தருகிறது. (என்னடா வெளம்பரம்)

சிலரின் பெயரை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும் என்று தோன்றினாலும், என்னை வாசித்த அனைவருக்கும் நன்றி சொல்வதே உத்தமம் என்றும் தோன்றுகிறது. (அது சரி, அந்த பாவத்த செஞ்சவங்களுக்கு இது தேவைதான்). சமீபகாலமாக வேலை மற்றும் சில காரணங்களால் அதிக நேரம் செலவிட்டு எழுத முடியாமல் போகிறது. அதனால்தான் ச்சும்மா போன்ற மொக்கையெல்லாம் வருகிறது. (இல்லைன்னா இவரு சாகித்ய அகாடெமி விருது வாங்கிடுவாரு)

சரி.விட்டா நான் பொங்கல் வச்சிக்கிட்டே இருப்பேன். தலைப்புக்கு வரேன்.(ஸப்பா.. முடியல) நேற்று சொன்ன போட்டிக்கு நானே எதிர்பார்க்கவில்லை. 10 பேர் மின்னஞ்சலில் பதில் சொல்லியிருக்கிறார்கள். (உலகம் இன்னுமா நம்புது) அதில் யாருமே சரியான விடையை சொல்லவில்லை. பலரும் சொன்ன பதில், எனக்கு திருமணம்.(என்னா வில்லத்தனம்?) பரிசல் நல்லாயிருங்க.

சரியான விடை அடுத்த வாரம் சொல்கிறேன். (போடாங்க்க். நீயும் உன் போட்டியும்) ஆனால் எனக்குத் திருமணமா என்று மின்னஞ்சலிலும், சேட்டிலும், தொலைபேசியும் கேட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. (அப்பவாது எழுதறத குறைச்சிப்பியான்னு கேட்டோம்). அதில் பெரும்பாலோனோர் பெண்கள் என்றும், அதைப் படித்துவிட்டு அவர்கள் அடைந்த வருத்தத்தையும் சொன்னா நம்பவா போறீங்க? (சாமீ. எனக்கு ஏன் கண்ணை கொடுத்து, படிக்கவும் கத்து கொடுத்த?)

இந்த வாரம் முழுவதும் தினமும் பதிவெழுத முடியுமா எனத் தெரியவில்லை.(இந்தப் பதிவிலே எனக்கு பிடிச்ச வரி இதான்) மீண்டும் ஒரு நன்றி சொல்லி முடிச்சிக்கிறேன். (எனக்கு பிடிச்ச ரெண்டாவது வரி இதான். கெளம்பு காத்து வரட்டும்)

 

all rights reserved to www.karkibava.com