Feb 28, 2009

நீங்க கடவுளா இல்லை நான் கடவுளா?


அதேதான். இத புதுசா படிக்கறவங்களுக்காக‌

அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும்.

*****************************************

இல்லை , நான் எழுதப் போவது திரைப்பட விமர்சனம் அல்ல.கடவுள் நம்பிக்கை ,ஜோதிடம் ,மதம் சார்ந்த நம்பிக்கைகள் பற்றி ஆளாளுக்கு பதிவுகளை போட்டு பயங்கரமாய் விவாதம் செய்கிறபோது நான் மட்டும் தேமேயென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் கருத்து கந்தசாமி ஆகி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். என்ன நான் கொஞ்சம் லேட். கடவுள் ,மதம் என்பது எல்லாம் தனி நபர் நம்பிக்கை என்றெல்லாம் ஜல்லியடிக்கப் போவதில்லை.இது ஒரு குழப்பமான விஷயம்.இருக்குப்பா என்று சொன்னால்சில பேர் படித்து விட்டு போவார்கள், இல்லை என்று சொன்னால் போதும் நிறைய பேர் படிப்பதோடு மட்டுமல்லாமல் கமென்ட் பண்ணுவார்கள் என்று நினைத்து இந்த பதிவை போடவில்லை (நம்ம்புங்க சார்).

கடவுள் நம்பிக்கை என்பதை அடிப்படையாக வைத்து மக்களை மூன்று விதமாகப் பிரித்திருக்கிர்றார்கள், ஆஸ்திகர்கள், நாஸ்திகர்கள், ஆஸ்திகநாஸ்திகர்கள் (அதாவது ரெண்டுங்கெட்டான்). விபரம் தெரியாத வரை எல்லோரும் ஆஸ்திகர்களே,கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் சில பேர் நாஸ்திக கரை ஒதுங்குவார்கள் தைரியமாக, பலர் ஆஸ்திகர்கள், என்னைப் போன்று நட்டாத்தில் நின்று கொண்டு எந்த பக்கம் ஒதுங்குவது என்று பேந்தப் பேந்த முழிப்பவர்களுக்கு இந்த பதிவு.ஓவர் பில்ட் அப் வேண்டாம் விஷயத்திற்கு வருகிறேன்.

கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை எதனால் ஏற்பட்டிருக்கக் கூடும், அல்லது யாரால் ஏற்படுத்தப் பட்டிருக்கக் கூடும்.தனி ஒரு மனிதன் ஒரே நாளில் இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்க முடியாது.இயற்கையிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் ,தன்னை விட சக்தி வாய்ந்ததான ஒன்றைப் பணிந்து வணங்கும் பழக்கத்தின் அடிப்படை என்னவாக இருக்க முடியும்?உயிர் பயம்.அல்லது காட்டுமிராண்டிகளாக இருந்த மனிதனை வழிக்கு கொண்டு வர யாராலோ ஏற்படுத்தப்பட்ட ஒரு கற்பனை.நாளடைவில் அதற்குப் பல்வேறு முகங்கள் ஏற்பட்டு விரிவடைந்திருக்க வேண்டும்.சடங்குகளை ஏற்படுத்தி அதை தொடர்வதால் உண்டாகும் நன்மைகளின் பட்டியல் ஏற்பட்டு விட்டது இப்போது.கடவுள் இருக்கிறாரா இல்லையா?என்று யோசிக்கக் கூடத் தயாராக இல்லை பலர்.

என் நண்பர் ஒருவரிடம் சில வருடங்களுக்கு முன் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது அவர் சொன்னது,"உன் தாய் கற்புடையவள் என்பதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளாய்? பிறக்கும் குழந்தைக்கு தகப்பன் நீதான் என்பதை எப்படி நம்புகிறாயோ அப்படித்தான் இதுவும்" என்று கொதித்தார். sensitive விஷயம். எங்கும் நிறை பரப்ரம்மம்,ஆதியும் அந்தமும் இல்லாத,இது என்னவாக இருக்க முடியும்?அறிவியல் ரீதியாக கதிர் வீச்சு இல்லாத பொருள்களே இல்லை என்கிறார்கள் .மரம் ,செடி கொடிகளில் இருந்து மனிதன் வரை.காந்தக் கதிர் வீச்சுக்கள் அல்லது magnetic field , அல்லது ஆரா Body என்று அழைக்கப்படும் . இது மனிதனின் ஆரோக்கியத்துக்கும் துணை புரிகிறது .இது பாதிக்கப் பட்டால் உடல் நோயுறும் என்கிறார்கள். இது வேறொன்றுமில்லை ,நம் உடல் சேகரித்து வைத்திருக்கும் cosmic energy தான்.ஒரு பாட்டரி போல. ஆக வெளியில் இருப்பதுதான் உள்ளேயும் இருக்கிறது ,அல்லது எங்கும் இருக்கிறது.

சரி இதில் கடவுள் எங்கே வருகிறார் ?எங்கேயும் வரவில்லை. இருப்பதெல்லாம் மனிதன் மட்டுமே.இந்த cosmic energy என்பதைக் கொண்டு நிறைய விஷயங்கள் பண்ணலாம்.நோய்களை குணப்படுத்துவது உட்பட. சாமியார்கள் செய்வது இதைத்தான்.ஆனால் இது எல்லாராலும் முடியும்.ஜப்பானியர்கள் இதை reiki என்று பெயரிட்டு இதை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள். மனோ சக்தி பல அற்புதங்களைச் செய்யக்கூடியது. ரெய்கியின் அடிப்படைத் தத்துவம் அதுதான்,cosmic energy யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்,உங்கள் மனம் அதற்கு எந்த அளவு உபயோகப்படும் என்றெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்கள்.ஆரம்ப காலங்களில் இந்த தத்துவத்தை எளிதாக சொல்லப் போய் அது கை கால்கள் முளைத்து வேறு வடிவத்துக்கு வந்து விட்டது.சரி அப்படியென்றால் கோவில்கள் எதற்கு?அவை எனர்ஜியை சேமிக்கும் பெரிய பாட்டரி.கோவிலுக்கு போனால் அது உங்களுக்குள் புகும் என்பதால்தான்.உங்களிடம் இருந்து கோவிலுக்குள்ளும் பரவும்.அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு.எனவேதான் பழைமையான கோவில்களில் ஒரு தனி நிம்மதி relaxation ஐ உணர்கிறீர்கள் .புதிதாக கட்டப்பட்ட கோவில்களில் அது கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு.

சரி நாம் செய்யும் பிரார்த்தனைகள் நிறைவேறுவது எப்படி ? அல்லது நிறைவேறாமல் போவது எப்படி?என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். ஒரு சரியான, மனம் ஒருமுகப்பட்ட , பிரார்த்தனை நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.அது அந்த இடத்தில் பல மடங்காக replicate ஆகிறது .அப்படி பிரார்த்தித்தால் கோவிலில்தான் என்று இல்லை எங்கும் அது நிகழ வாய்ப்பு உண்டு.செயல்படுவது முழுக்க முழுக்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இதைப் பற்றி தனியாக ஒரு பதிவே போடலாம்.ஏனெனில் இந்தப் பதிவைப் படிக்கும் போதே உங்களுக்கு புரிந்திருக்கும் எனக்கு எதையும் சுருக்கமா சொல்லத் தெரியாதுன்னு.

இருப்பினும் சுருக்கமாக சொல்ல முயற்சித்தால், நீங்கள் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருப்பது ஒரு காந்த சக்திப் புலத்தை, அதன் செயல்களை எளிதாகச் சொல்ல முன்னோர்கள் கையாண்ட விதம் வேறொன்றாக மாறி அல்லது மாற்றி புரிந்துகொள்ளப்பட்டு வேரூன்றி கிளை பரப்பி அசைக்க முடியாமல் ஆகிவிட்டது இப்போது.அதற்காக ஏற்படுத்தப்பட்ட சில வழிமுறைகள் மருவி வெறும் சடங்காக மாறி விட்டது.கையில் இருப்பது வெறும் சாவிதான்.எந்தப் பூட்டை திறக்கும் என்கிற விவரத்தையெல்லாம் எப்போதோ தொலைத்தாயிற்று.

இவரின் மற்ற பதிவுகளைப் படிக்க இங்கே க்ளிக்குங்கள்.
*********************************

46 கருத்துக்குத்து:

narsim on February 28, 2009 at 11:09 AM said...

சகா.. நல்ல அறிமுகம்.. நல்ல பதிவு..

அத்திரி on February 28, 2009 at 11:10 AM said...

உள்ளேன் சகா

அத்திரி on February 28, 2009 at 11:11 AM said...

அய்யோ வடை போச்சே

மண்குதிரை on February 28, 2009 at 11:20 AM said...

வணக்கம் நண்பா !

நல்ல அறிமுகம்

Thusha on February 28, 2009 at 12:14 PM said...

அட நீங்க தன் ஆராச்சியில் இறங்கிட்டிங்கள் என்று நினைத்து விட்டேன் அண்ணா

ஆனாலும் நல்ல பதிவு
கடவுள் என்பது அவர் அவர் நம்பிக்கையைப் பொறுத்தது

Thusha on February 28, 2009 at 12:19 PM said...

200 வது பதிவுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள் அண்ணா
இன்னும் இரண்டே இரண்டு பதிவு தன் வேண்டும்

வாழ்த்துக்கள் கலக்குங்க

அனுஜன்யா on February 28, 2009 at 12:19 PM said...

இந்த மாதிரி சுட்டி கொடுக்கும் பதிவுகளுக்கு ஒரு பொதுப்பெயர் கொடுத்து விடேன். நான் பயந்துட்டேன் - நீதான் எங்க இவ்வளவு ஆழமா எழுதத் தொடங்கி விட்டியோ என்று!

நல்ல சுட்டி. இந்த மாதிரி நிறைய பேரு நல்லா எழுதறாங்க போல. மத்தவங்க உன்னப் போல பிரபலமா .....சரி சரி அடிக்க வராத.

அனுஜன்யா

அத்திரி on February 28, 2009 at 1:05 PM said...

//அனுஜன்யா said...
இந்த மாதிரி சுட்டி கொடுக்கும் பதிவுகளுக்கு ஒரு பொதுப்பெயர் கொடுத்து விடேன். நான் பயந்துட்டேன் - நீதான் எங்க இவ்வளவு ஆழமா எழுதத் தொடங்கி விட்டியோ என்று! //

)))))))))))))))))))

தராசு on February 28, 2009 at 1:24 PM said...

அந்த பிரார்த்தனை மேட்டர் சூப்பர் தல,

ம் ம் , உங்க பேருக்கு முன்னால ஒரு சுவாமி மட்டும்தான் பாக்கி, அதை மாத்திரம் சேர்த்துட்டா,

சுவாமி கார்க்கிபவ வாழ்க.

பரிசல்காரன் on February 28, 2009 at 1:54 PM said...

//இந்த மாதிரி சுட்டி கொடுக்கும் பதிவுகளுக்கு ஒரு பொதுப்பெயர் கொடுத்து விடேன். நான் பயந்துட்டேன் - நீதான் எங்க இவ்வளவு ஆழமா எழுதத் தொடங்கி விட்டியோ என்று!
//

நானும் நெனைச்சேன். கீழ பாரு தராசு நீ எழுதினன்னு உன்னைப் பாராட்டறாரு.

”மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்” தலைப்பு ஓக்கேவா? முதல்லயே இன்னார் எழுதினதுன்னு சொல்லீட்டு ஆரம்பி. இது அவசியம்னு கூட இல்ல. சொல்லாம எழுதறது தப்பு!

கார்க்கி on February 28, 2009 at 2:03 PM said...

// narsim said...
சகா.. நல்ல அறிமுகம்.. நல்ல பதிவு//

அபப்டியே ஸ்ரீதரிடம் சொல்லி விடுகிறேன்
****************
// அத்திரி said...
அய்யோ வடை போச்//

கேளுங்க நர்சிம் கொடுத்திடுவாரு

*************
// மண்குதிரை said...
வணக்கம் நண்பா !

நல்ல அறிமுகம்//

நன்றி

***********8
// Thusha said...
அட நீங்க தன் ஆராச்சியில் இறங்கிட்டிங்கள் என்று நினைத்து விட்டேன் அண்//

நன்றி

கார்க்கி on February 28, 2009 at 2:06 PM said...

// அனுஜன்யா said...
இந்த மாதிரி சுட்டி கொடுக்கும் பதிவுகளுக்கு ஒரு பொதுப்பெயர் கொடுத்து விடேன். நான் பயந்துட்டேன் - நீதான் எங்க இவ்வளவு ஆழமா எழுதத் தொடங்கி விட்டியோ என்று//

ஓகே தல. பரிசல் ஒரு தலைப்பு வேற கொடுத்திருக்காரு. நிச்சயம் செய்றேன். அப்புறம் சீகிரம் என் 200வது பதிவு இதே மாதிரி ஆழமாத்தான் இருக்கனும்னு முடிவு செஞ்சிருக்கேன். தயாரா இருங்க

**********

// தராசு said...
அந்த பிரார்த்தனை மேட்டர் சூப்பர் தல,//

:))))

**************
//பரிசல்காரன் said...
//இந்த மாதிரி சுட்டி கொடுக்கும் பதிவுகளுக்கு ஒரு பொதுப்பெயர் கொடுத்து விடேன். நான் பயந்துட்டேன் - நீதான் எங்க இவ்வளவு ஆழமா எழுதத் தொடங்கி விட்டியோ என்று!
//

நானும் நெனைச்சேன். கீழ பாரு தராசு நீ எழுதினன்னு உன்னைப் பாராட்டறாரு.

”மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்” தலைப்பு ஓக்கேவா? முதல்லயே இன்னார் எழுதினதுன்னு சொல்லீட்டு ஆரம்பி. இது அவசியம்னு கூட இல்ல. சொல்லாம எழுதறது தப்பு//

சொல்லியிருக்கேன்.. அடுத்த தடவ தலைப்பும் போட்டு முதலிலே டிஸ்கி போடறே சகா

கணினி தேசம் on February 28, 2009 at 2:07 PM said...

//இந்த மாதிரி சுட்டி கொடுக்கும் பதிவுகளுக்கு ஒரு பொதுப்பெயர் கொடுத்து விடேன். நான் பயந்துட்டேன் - நீதான் எங்க இவ்வளவு ஆழமா எழுதத் தொடங்கி விட்டியோ என்று! //

நானும்தான்..என்னடா நம்ம சகாவா இதுன்னு!

கணினி தேசம் on February 28, 2009 at 2:07 PM said...

நல்ல அறிமுகம்

நன்றி

kumar on February 28, 2009 at 2:32 PM said...

\\கையில் இருப்பது வெறும் சாவிதான்.எந்தப் பூட்டை திறக்கும் என்கிற விவரத்தையெல்லாம் எப்போதோ தொலைத்தாயிற்று\\

kumar on February 28, 2009 at 2:33 PM said...

//கையில் இருப்பது வெறும் சாவிதான்.எந்தப் பூட்டை திறக்கும் என்கிற விவரத்தையெல்லாம் எப்போதோ தொலைத்தாயிற்று\\


சத்தியமான் உண்மை

வெண்பூ on February 28, 2009 at 3:25 PM said...

பதிவு புரியவே இல்லை கார்க்கி.. :(
அதனால அந்த லிங்க் உள்ளவும் போகல..

Mahesh on February 28, 2009 at 3:35 PM said...

நல்ல பதிவு.... ஆனா நிறையத் தடவை படிச்சாத்தா புரியும் போல...

கார்க்கிபாவா வா? இல்ல பாபாவா?

லவ்டேல் மேடி on February 28, 2009 at 3:42 PM said...

// நீங்க கடவுளா இல்லை நான் கடவுளா? //


எனக்கு ஷகிலாதான்பா கடவுள் ...... அவுங்ககிட்ட நல்ல வாழ்க்கை தாத்துவம் இருக்குது ......
// இல்லை ..... //


என்னது ........!!!! இல்லையா ........ ??!!!??

ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .........// கருத்து கந்தசாமி ஆகி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். //


கருத்து கந்தசாமின்னு சொல்லிட்டு ........... , இப்புடி மொக்கைய போட்டுரிக்கியே சாமி .......!!!!!!// என்ன நான் கொஞ்சம் லேட். //


கொஞ்சம் லேட்டா வந்தாலும் ...... நெம்ப லேடெஷ்ட்டா வந்திருக்க தம்பி .........!!!!

கலக்குஙங்க தம்பி ...!!! எங்க ஓட்டு உங்களுக்குத்தான் ........!!!!!


// கடவுள் ,மதம் என்பது எல்லாம் தனி நபர் நம்பிக்கை என்றெல்லாம் ஜல்லியடிக்கப் போவதில்லை. //


அப்போ ..... செம காண்டுல பேசபோரிங்க.......!!!!! கலக்குங்க ........!!!!!


// ஆஸ்திகநாஸ்திகர்கள் (அதாவது ரெண்டுங்கெட்டான்) //


ஐயையோ ...... !! அப்போ ....!!! திரு நங்கைகளா .......!! அவிக என்ன பண்ணுவாங்க பாவம் ...!!!!// ஓவர் பில்ட் அப் வேண்டாம் விஷயத்திற்கு வருகிறேன். //


புருஞ்சுகிட்டா சரி .....!!!


// கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை எதனால் ஏற்பட்டிருக்கக் கூடும், அல்லது யாரால் ஏற்படுத்தப் பட்டிருக்கக் கூடும்.தனி ஒரு மனிதன் ஒரே நாளில் இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்க முடியாது.இயற்கையிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் ,தன்னை விட சக்தி வாய்ந்ததான ஒன்றைப் பணிந்து வணங்கும் பழக்கத்தின் அடிப்படை என்னவாக இருக்க முடியும்?உயிர் பயம்.அல்லது காட்டுமிராண்டிகளாக இருந்த மனிதனை வழிக்கு கொண்டு வர யாராலோ ஏற்படுத்தப்பட்ட ஒரு கற்பனை. //நெம்ப சரி .......!! இதை நான் செம குஜால்ல ஆதரிக்கிறேன்.....!!!
// அவர் சொன்னது,"உன் தாய் கற்புடையவள் என்பதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளாய்? பிறக்கும் குழந்தைக்கு தகப்பன் நீதான் என்பதை எப்படி நம்புகிறாயோ அப்படித்தான் இதுவும்" என்று கொதித்தார். //இதெல்லாம் நெம்ப டூ மச் ......!!!!


// எங்கும் நிறை பரப்ரம்மம்,ஆதியும் அந்தமும் இல்லாத,இது என்னவாக இருக்க முடியும்? //


தெரியிலையே சாமி.....!!!!!!!! ஏதோ ஆறாங்கிளாசு புக்குல வர கடவுள் வாழ்த்து மாதிரி ஒப்பிக்கிற...........!!!!// மரம் ,செடி கொடிகளில் இருந்து மனிதன் வரை.காந்தக் கதிர் வீச்சுக்கள் அல்லது magnetic field , அல்லது ஆரா Body என்று அழைக்கப்படும் . இது மனிதனின் ஆரோக்கியத்துக்கும் துணை புரிகிறது .இது பாதிக்கப் பட்டால் உடல் நோயுறும் என்கிறார்கள். இது வேறொன்றுமில்லை ,நம் உடல் சேகரித்து வைத்திருக்கும் cosmic energy தான். //


நெம்ப சரி ..........


// சரி இதில் கடவுள் எங்கே வருகிறார் ?எங்கேயும் வரவில்லை. இருப்பதெல்லாம் மனிதன் மட்டுமே. //


அப்போ.....!!! ஸ்ரீ . ஸ்ரீ . ஸ்ரீ . ப்ரேமானந்தா அவர்கள் சாமி இல்லியா தம்பி .......????// இந்த cosmic energy என்பதைக் கொண்டு நிறைய விஷயங்கள் பண்ணலாம். //


எங்கூட்டுக்கு ஒரு கால் பண்ணனும் ....!!!! பண்ணலாமா கண்ணு ........?????


// சரி அப்படியென்றால் கோவில்கள் எதற்கு? //


ஐயோ .....!!! கண்ணு ......!! தென்னது இப்புடி கேட்டுபோட்ட........???? கோயிலு இல்லீனா.. பிகரயெல்லாம் வேற எங்க சாமி மொத்தமா பாக்குறது.......??????

முரளிகண்ணன் on February 28, 2009 at 4:21 PM said...

நல்ல அறிமுகம்

viji on February 28, 2009 at 5:51 PM said...

ninga nallavara kettavara?? :P


p/s: innum padikele. padicitu, 50 aah ille 100 aah nu mudivu panneran. varta.. pasikutu. saptu vanthu temba elutaran

அன்புடன் அருணா on February 28, 2009 at 6:14 PM said...

என்னா ஆச்சுப்பா கார்க்கிக்குன்னு பயந்துட்டேம்பா.....நல்லவேளை அப்பிடி ஒண்ணும் ஆகலை....
அன்புடன் அருணா

ரௌத்ரன் on February 28, 2009 at 7:31 PM said...

//உங்களுக்கு பிடிச்சா கமெண்ட் போடுங்க.. உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க.. நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்...//

ஆஜர் நண்பா...

ஆதவா on February 28, 2009 at 7:45 PM said...

சில விஷயங்கள் உளவியல் ரீதியா சிறப்பா இருந்தது!! இந்த பதிவு விகடன்ல வந்திருக்கு.. வாழ்த்துகள்!!

கார்க்கி on February 28, 2009 at 9:08 PM said...

// கணினி தேசம் said...
நல்ல அறிமுகம்//

நன்றி சகா

**************
// kumar said...
//கையில் இருப்பது வெறும் சாவிதான்.எந்தப் பூட்டை திறக்கும் என்கிற விவரத்தையெல்லாம் எப்போதோ தொலைத்தாயிற்று\\


சத்தியமான் உண்மை//

வருகைக்கு நன்றி

**********88

//வெண்பூ said...
பதிவு புரியவே இல்லை கார்க்கி.. :(//

:(((((

*************

// Mahesh said...
நல்ல பதிவு.... ஆனா நிறையத் தடவை படிச்சாத்தா புரியும் போல...
//

அபப்டியா?

கார்க்கி on February 28, 2009 at 9:11 PM said...

@லவ்டேல்மேடி,

போதுமா சகா?

************8

//முரளிகண்ணன் said...
நல்ல அறிமுகம்//

நன்றி சகா

*************

// viji said...
ninga nallavara kettavara?? ://

நல்லா கெட்டவன்..

************

//அன்புடன் அருணா said...
என்னா ஆச்சுப்பா கார்க்கிக்குன்னு பயந்துட்டேம்பா.....நல்லவேளை அப்பிடி ஒண்ணும் ஆகலை....//

ஆகலைன்னு வருத்தம் மாதிர் இருக்கே!!!!:))

*****************
//ரௌத்ரன் said...
//உங்களுக்கு பிடிச்சா கமெண்ட் போடுங்க.. உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க.. நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்...//

ஆஜர் நண்பா...//

நன்றி சகா

***********

// ஆதவா said...
சில விஷயங்கள் உளவியல் ரீதியா சிறப்பா இருந்தது!! இந்த பதிவு விகடன்ல வந்திருக்கு.. வாழ்த்துகள்
//

தகவலுக்கு நன்றி சகா

வித்யா on February 28, 2009 at 9:20 PM said...

என்னவோ புரியுது. ஆனா ஒன்னுமே புரியலை:((

வித்யா on February 28, 2009 at 9:20 PM said...

என்னவோ புரியுது. ஆனா ஒன்னுமே புரியலை:((

MayVee on February 28, 2009 at 9:38 PM said...

present sir
(feeling sleepy; so not able to type th comments)

கார்க்கி on March 1, 2009 at 9:27 AM said...

// வித்யா said...
என்னவோ புரியுது. ஆனா ஒன்னுமே புரியலை:(//

உங்களுக்கு புரியலன்னு புரியுதுனு நினைக்கிறேன்

**************
// MayVee said...
present sir
(feeling sleepy; so not able to type th comments//

ரைட் சகா.. நல்லா தூங்குங

Lancelot on March 1, 2009 at 10:28 AM said...

naan kadavul.... :P

வண்ணத்துபூச்சியார் on March 1, 2009 at 10:37 AM said...

இந்த பதிவு விகடன்.காம் பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ளது.

வாழ்த்துகள் நண்பரே....

லவ்டேல் மேடி on March 1, 2009 at 11:46 AM said...

// @லவ்டேல்மேடி,

போதுமா சகா? //


முடியல....................!!! வலிக்குது .....................!!! அழுதுருவேன் ..................!!!

ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .........................!!!!!!!

kishore on March 1, 2009 at 12:18 PM said...

அவங்க தான் ஏற்கனவே குழபிடாங்க அப்பறம் எதுக்கு சகா திரும்பவும் குழபுரிங்க? ஒ... இதுதான் குழப்பி விட்டு வேடிகை பாக்குறதா? நல்லா தான் இருக்கு...

தாமிரா on March 1, 2009 at 12:45 PM said...

உண்மையில் உருப்படியான அறிமுகம். நன்றி கார்க்கி.! ஃப்ரெண்ட்லியான நடை. விவாததிற்குரிய தேவையான கருத்து. கருத்துகளில் மாற்று இருந்தாலும் பாராட்டுகள் தோழருக்கு.! சின்ன வயதில் ஒரு மருத்துவர் ஒருவர் கடவுள் குறித்து நான் கேட்ட கேள்விகளுக்கு அளித்த அந்த பதிலை அப்படியே இந்த பதிவில் காண்கிறேன்.

அசோசியேட் on March 1, 2009 at 4:33 PM said...

""::இந்தப் பதிவைப் படிக்கும் போதே உங்களுக்கு புரிந்திருக்கும் எனக்கு எதையும் சுருக்கமா சொல்லத் தெரியாதுன்னு.""


அப்படியா சகா !

MayVee on March 2, 2009 at 7:11 AM said...

வாழ்த்துக்கள்....
இந்த பதிவு youthful vikatan யில் வந்து இருக்கு
இப்போ தான் பார்த்தேன்

"கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran] on March 2, 2009 at 8:10 AM said...

நல்ல முயற்சி... கார்க்கி...
குட்டி பெரியாராகலாமுனு மனசுல ஏதும் நினைப்பு ஓடுதோ?!

கோவி.கண்ணன் on March 2, 2009 at 8:49 AM said...

உயிர் பயம் தான் கடவுள் நம்பிக்கை -சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

மற்றொன்று எதிர்காலத்தை தீர்மாணிக்கும் ஆற்றல், அல்லது எதிர்காலம் குறித்த பயம், அது நடக்காமல் போய்விடக் கூடாது என்பதற்காக உந்து சக்தி இறை நம்பிக்கை.

நல்ல பதிவு,

நீங்க என்னதான் ஆ(ரா)ய்ந்து எழுதினாலும் யாரும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளவில்லையே ஏன் ஏன் ஏன் ?
:)

கோவி.கண்ணன் on March 2, 2009 at 8:49 AM said...

மீ த 40 !

தாரணி பிரியா on March 2, 2009 at 9:48 AM said...

நீங்களும் கடவுள் நானும் கடவுள் இதுதாங்க என்னோட கான்செப்ட்


அன்பே சிவம் கான்செப்டேதான் :)


நல்லா அறிமுகம் கார்க்கி

கார்க்கி on March 2, 2009 at 11:43 AM said...

// வண்ணத்துபூச்சியார் said...
இந்த பதிவு விகடன்.காம் பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ளது//

தகவலுக்கு நன்றி

**********
// kishore said...
அவங்க தான் ஏற்கனவே குழபிடாங்க அப்பறம் எதுக்கு சகா திரும்பவும் குழபுரிங்க//

:)))

***********

/ தாமிரா said...
உண்மையில் உருப்படியான அறிமுகம். நன்றி கார்க்கி//

நன்றி சகா

******
// அசோசியேட் said...
""::இந்தப் பதிவைப் படிக்கும் போதே உங்களுக்கு புரிந்திருக்கும் எனக்கு எதையும் சுருக்கமா சொல்லத் தெரியாதுன்னு.""


அப்படியா சகா//

ஆமாங்க. எனக்கும் புரியல

கார்க்கி on March 2, 2009 at 11:44 AM said...

/ MayVee said...
வாழ்த்துக்கள்....
இந்த பதிவு youthful vikatan யில் வந்து இருக்கு
இப்போ தான் பார்த்தே//

நன்றி மேவீ.படம் மாத்திட்டிங்களா?

*********
/"கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran] said...
நல்ல முயற்சி//

நன்றி சகா

**********

/ கோவி.கண்ணன் said...
உயிர் பயம் தான் கடவுள் நம்பிக்கை -சரியாக சொல்லி இருக்கிறீர்கள்//

வாங்க தல..

********
/ தாரணி பிரியா said...
நீங்களும் கடவுள் நானும் கடவுள் இதுதாங்க என்னோட கான்செப்ட்


அன்பே சிவம் கான்செப்டேதான் :)


நல்லா அறிமுகம் கார்க்//

கிகிகி

MayVee on March 2, 2009 at 3:46 PM said...

" கார்க்கி said...
நன்றி மேவீ.படம் மாத்திட்டிங்களா?"

அமாங்க .......
பழையபடம் clear யாக இல்லை...
அதான் மாற்றி விட்டேன்

Poornima Saravana kumar on March 2, 2009 at 10:14 PM said...

நல்ல பதிவு..

விஜய் on March 18, 2009 at 3:42 PM said...

46th

 

all rights reserved to www.karkibava.com