Feb 25, 2009

காக்டெய்ல்


  நன்றாக எழுதியும் பிரபலமான பதிவர்களில் இவர் முக்கியமானவர். கார்ப்பரேட் கம்பர் என்று அழைக்கப்படும் இவரின் படைப்பு ஒன்று இன்றைய ஜூ.வி.யில் வந்திருக்கிறது. தொடர்ந்து பதிவர்களை ஊக்கப்படுத்தி வரும் விகடனுக்கு நன்றியும் நம்ம நர்சிம்முக்கு வாழ்த்துகளும்.

*************************************************

எந்தப் பொருளை வாங்கினாலும் MRP விலை என்று ஒன்றிருக்கும். அந்த விலையை விட அதிகமாக விற்க கூடாது என்பது விதி. எல்லாப்  பேருந்து நிலையங்களிலும் இது கடைப்பிடிக்கப் படுவதில்லை. ஒவ்வொரு முறையும் எனக்கும் கடைக்காரருக்கும் வாக்குவாதம் நடக்கும். கடையை ஏலத்தில் அதிக தொகை கொடுத்து வாங்குவதே இதற்கு காரணம். இவர்களாவது பில் கொடுப்பதில்லை. பிஸ்ஸா ரெஸ்ட்ராண்டுகளில் 20 ரூபாய் பாட்டிலுக்கு 30 ரூபாய் பில் போடுவார்கள். கையிலே ஆதாரம் இருந்தாலும் கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போனதில்லை. சமீபத்தில் டெல்லியில் ஒரு புண்ணியவான் போய் 10,000 ரூபாய் நஷ்ட ஈடு வாங்கியிருக்கிறார். இன்னமும் சென்னை தோமினோஸில் கோக் அரை லிட்டர் 27.50 +வரிகள்.

************************************************ 

பீட்டர்சன், ஜயவர்தனே என்று இரண்டு கேப்டன்களுக்கும் ஓய்வு வாங்கித் தந்த இந்திய அணி, வெட்டோரிக்கு ஆப்பு வைக்கும் எண்னத்துடன் நியூசிலாந்து சென்றிருக்கிறது. அது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அங்கேயும் ஜொலித்து விட்டால் நம்ம பசங்க கில்லிதான் என்பதை எவரும் மறுக்க முடியாது. முதல் ஆட்டமே ட்வெண்ட்டி ட்வெண்ட்டி. பார்க்க மறக்காதீங்க மக்கா. எங்க கேஃபட்டேரியாவில் டி.வி இருக்கு. பிரச்சனையில்லை. யூனிஸ் கான் வேற 306 ரன்களுடன் களத்துல நிற்கிறார், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில். இன்று லாராவின் சாதனையை முறியடிப்பாரா? (Flash news: புட்டுக்குட்டாரு.313ல க்ளீன் போல்ட்)

************************************************

    ஸ்பாம் தொல்லையால் பல இணையத்தளங்களில் word verification கொண்டு வந்து விட்டார்கள். நல்லதுதான். ஆனால் பல தளங்களில் எழுத்துக்கள் கோணலாக இருக்கிறது. சரியாக புரிவதில்லை. ஸீரோவுக்கும் O (ஓ) க்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஒரு முறை தவறாக தட்டச்சினால் மேலே தட்டச்சு செய்தவை காணாமல் போய் விடுகின்றன. சில இடங்களில் மட்டும் புரியாமல் போனால் வேறு வார்த்தை கேட்கும் வசதி இருக்கிறது. மற்றத் தளங்களில் இல்லை. உங்களுக்கு இந்தக் கஷ்டம் இருக்கா?

************************************************

     சில நாட்களுக்கு முன் அலுவலக பார்ட்டியில் என்னை ரஜினியின் வசனங்களை பேசிக் காட்ட சொன்னார்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் நான் செய்தாக வேண்டுமென்பதால் (அப்படி ஒரு விளையாட்டு) வேறு வழியில்லாமல் அருணாச்சலம் படத்தில் இருந்து ஒரு வசனம் பேசினேன். “இழுத்துட்டு போறதுக்கு அவ ஒன்னும் மாடு இல்ல. எங்க வீட்டு மகாலக்ஷ்மி” என்ற வசனத்துக்கு அமோக வரவேற்பு. யூட்யூபில் அந்த காட்சியைத் தேடினேன், வசனங்களை சரிபார்க்க.  அப்படியே ஒரு மணி நேரம் சூப்பர் ஸ்டாரின் சூப்பர் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்று.உங்களுக்காக.

“என்னை விடுங்க. என் தலைமுடி கூட ஆடாது” தலைவா..

***********************************************

சந்தேக சந்திராசாமியை ஞாபகமிருக்கா? பழைய காக்டெயிலில் அவரது சந்தேகங்களைப் படித்துப் பாருங்கள். இனி எல்லா வாரமும் தன் பங்கை அவர் செவ்வனே செய்வார். இந்த வார சந்தேகம்.

செய்தி: மருத்துவமனையில் இருந்தபடியே கலைஞர் பாடி மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

சந்தேகம்:  என்ன பாட்டு ‘பாடி’ திறந்து வச்சார்? எங்கே நிம்மதி எங்கே நிம்மதி.. அங்கே எனக்கோர் இடம் வேண்டுமா?

64 கருத்துக்குத்து:

Anbu on February 25, 2009 at 10:02 AM said...

me the first

Anbu on February 25, 2009 at 10:08 AM said...

\\செய்தி: மருத்துவமனையில் இருந்தபடியே கலைஞர் பாடி மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

சந்தேகம்: என்ன பாட்டு ‘பாடி’ திறந்து வச்சார்? எங்கே நிம்மதி எங்கே நிம்மதி.. அங்கே எனக்கோர் இடம் வேண்டுமா?\\

ரொம்ப அருமை அண்ணா!!

Anbu on February 25, 2009 at 10:12 AM said...

பீட்டர்சன், ஜயவர்தனே என்று இரண்டு கேப்டன்களுக்கும் ஓய்வு வாங்கித் தந்த இந்திய அணி, வெட்டோரிக்கு ஆப்பு வைக்கும் எண்னத்துடன் நியூசிலாந்து சென்றிருக்கிறது!!

அடுத்த கேப்டன் ஓய்வு வெட்டோரி தான் அதில் என்ன சந்தேகம்

மண்குதிரை on February 25, 2009 at 10:18 AM said...

வந்தேன் நண்பா!

ஸ்ரீமதி on February 25, 2009 at 10:21 AM said...

:))))

MayVee on February 25, 2009 at 10:32 AM said...

சூப்பர் இருக்கு கோழி வாலு பதிவு......

கார்க்கி on February 25, 2009 at 10:33 AM said...

/ Anbu said...
me the first/

வாப்பா..

************

/ அத்திரி said...
உள்ளேன் சகா//

ரைட்டு.காக்டெய்ல்னா முதல்ல வந்துடுவீங்களே!!

***********
// மண்குதிரை said...
வந்தேன் நண்பா//

ஓகே ஹார்ஸ்

***********
// ஸ்ரீமதி said...
:))))//

என்ன சிரிப்பு?

***********
/ MayVee said...
me th 7th//

வாங்க மேவீ..

Bleachingpowder on February 25, 2009 at 10:35 AM said...

//நன்றாக எழுதியும் பிரபலமான பதிவர்களில் இவர் முக்கியமானவர். //

ஹாஹாஹா...இது சூப்பர் பன்ச் தல:)))

நானெல்லாம் எப்போ நல்லா எழுதி, எப்ப பிரபலமாகறது..ஹும்...

Bleachingpowder on February 25, 2009 at 10:38 AM said...

//ஒவ்வொரு முறையும் எனக்கும் கடைக்காரருக்கும் வாக்குவாதம் நடக்கும்.///

ரயில்வே ஸ்டேசன், பஸ் ஸ்டாண்ட் டூ வீலர் பார்க்கிங்கை மறந்துட்டீங்களே தல. இது வரைக்கும் சண்டை போடாம நான் ஒரு தடவை கூட வண்டியை எடுத்ததில்லை. ரெண்டு மணி நேரத்திற்கு மூனு ரூபாய் தான் வாங்கனும், ஆனா அஞ்சு ருபாய் கேப்பானுங்க, டோக்கனும் ஒழுங்கா கொடுக்க மாட்டானுங்க.

அத்திரி on February 25, 2009 at 10:40 AM said...

காக்டெயில் கலகல............... சமூக அக்கறையுடன் எம் ஆர் பி ரேட் மேட்டர் நச்

முரளிகண்ணன் on February 25, 2009 at 10:43 AM said...

nice karki

வித்யா on February 25, 2009 at 10:47 AM said...

சாமியின்ன் சந்தேகம் சூப்பர்:))

Mahesh on February 25, 2009 at 11:00 AM said...

காத்தாலதான் வால்பையன் இந்த காக்டெய்ல் தலைப்புக்கு உங்களுக்கு ஒரு நன்றி சொல்லியிருந்தாரு. உடனே விருந்து வெச்சுட்டீங்களே !!!

நர்சிம்முக்கு வாழ்த்துகள் !!

MRP பத்தி அப்பாலிக்கா ஒரு பதிவே போடணும்.

narsim on February 25, 2009 at 11:02 AM said...

நன்றி சகா..

ச.சயின் பாட்டு மேட்டர் கலக்கல் சகா

எம்.எம்.அப்துல்லா on February 25, 2009 at 11:05 AM said...

//நன்றாக எழுதியும் பிரபலமான //

அப்ப நல்லா எழுதுனா பிரபலமாக முடியாதா???

Ramesh on February 25, 2009 at 11:10 AM said...

Interesting! வாழ்த்துகள்!

ஸ்ரீமதி on February 25, 2009 at 11:16 AM said...

me the 20 :):)

வலையேறி மூக்கன் on February 25, 2009 at 11:16 AM said...

நியுசிலாந்து பயணம் நிஜமாகவே இந்திய அணிக்கு பெரிய சவால்தான்.

"சென்னை சூப்பர் கிங்" டோனி இதையும் செவ்வனே செய்வார் என்று எதிர்பார்கிறேன்.

இந்த சீரிஸில் இந்தியா வெற்றி பெற்றால் உங்களுக்கு மொட்டை போடுறதா வேண்டிக்குறேன்! :))

நன்றி,

சபரிநாதன்
பெங்களூரு

வால்பையன் on February 25, 2009 at 11:20 AM said...

நண்பர் நர்சிம்முக்கு வாழ்த்துக்கள்!

மற்ற நண்பர்கள் பதிவெல்லாம் மயிலுக்கு வந்து விடுக்கிறது, இதை இன்னும் காணோமே!
“அந்த” பிரபல பதிவருக்கு இருப்பது போல் இவருக்கு யாரும் கொ.ப.செ. இல்லையா?

கார்க்கி on February 25, 2009 at 11:33 AM said...

/ Bleachingpowder said...
//நன்றாக எழுதியும் பிரபலமான பதிவர்களில் இவர் முக்கியமானவர். //

ஹாஹாஹா...இது சூப்பர் பன்ச் தல:)))

நானெல்லாம் எப்போ நல்லா எழுதி, எப்ப பிரபலமாகறது..ஹும்//

நீங்க எப்பவோ பிரபலமாயிட்டிங்க சகா

***************
// முரளிகண்ணன் said...
nice karki//

நன்றி தல

***********
// வித்யா said...
சாமியின்ன் சந்தேகம் சூப்பர்//

:))))

************
// Mahesh said...
காத்தாலதான் வால்பையன் இந்த காக்டெய்ல் தலைப்புக்கு உங்களுக்கு ஒரு நன்றி சொல்லியிருந்தாரு. உடனே விருந்து வெச்சுட்டீங்க//

இத போட்டத்துகப்புறம்தான் அத பார்த்தேன் சகா

கார்க்கி on February 25, 2009 at 11:36 AM said...

// narsim said...
நன்றி சகா..

ச.சயின் பாட்டு மேட்டர் கலக்கல் ச/

வாழ்த்துகள் தல

*************
/எம்.எம்.அப்துல்லா said...
//நன்றாக எழுதியும் பிரபலமான //

அப்ப நல்லா எழுதுனா பிரபலமாக முடியாதா???//

இது என்ன சின்னப்புள்ளத்தன்மா இருக்கு? பரிசல பார்த்தா தெரியல? அது கஷ்டம்னு :))))

************
/ Ramesh said...
Interesting! வாழ்த்துகள்//

நன்றி

**********
// ஸ்ரீமதி said...
me the 20 :):)//

பொய் சொல்லாத. 25 ஆச்சில்ல.வயசு

***********
@வலையேறிமுக்கன்,

நீங்களாவது மோட்டை போடரேனு சொன்னீங்க.. நான் வேற ஒன்னு வேண்டிக்கிட்டேன். உங்களுக்குத்தான் :))

************

@வால்,

இன்னும் ஸ்கேன் காபி கிடைக்கல. கிடைச்ச உடனே போடறேன் சகா

வெயிலான் on February 25, 2009 at 11:44 AM said...

காக்டெயில் சூப்பர்!

வால்பையன் said.....
“அந்த” பிரபல பதிவருக்கு இருப்பது போல் இவருக்கு யாரும் கொ.ப.செ. இல்லையா?

யோவ்! வாலு யாரை வம்புக்கு இழுக்கிறீங்க?

ஜ்யோவ்ராம் சுந்தர் on February 25, 2009 at 11:54 AM said...

யூனிஸ் கான் 313 அவுட்டாயிட்டாரு :)

ஸ்ரீமதி on February 25, 2009 at 11:54 AM said...

//கார்க்கி said...
// ஸ்ரீமதி said...
me the 20 :):)//

பொய் சொல்லாத. 25 ஆச்சில்ல.வயசு//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))

அனுஜன்யா on February 25, 2009 at 11:56 AM said...

நர்சிமுக்கு வாழ்த்துகள். நீ எப்போ கார்க்கி? (இதே கேள்விய இப்பதான் முரளியையும் கேட்டேன்). நீ எலக்கியவாதி ஆயாச்சு (நான் நான்தான்). பிரபலப் பத்திரிகையில் ரெகுலர் எழுத்தாளரா சீக்கிரமே ஆகக் கடவது :)

New Zealand கொஞ்சம் கஷ்டமான டூர்தான். பாப்போம். நல்ல காக்டெயில்.

அனுஜன்யா

MayVee on February 25, 2009 at 11:57 AM said...

"ஸ்ரீமதி said...
//கார்க்கி said...
// ஸ்ரீமதி said...
me the 20 :):)//

பொய் சொல்லாத. 25 ஆச்சில்ல.வயசு//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))"

ellam uncle aunty aa irukkanga ppa....

ennai madiri youth yaarum illaiya???

ஸ்ரீமதி on February 25, 2009 at 12:00 PM said...

//MayVee said...
"ஸ்ரீமதி said...
//கார்க்கி said...
// ஸ்ரீமதி said...
me the 20 :):)//

பொய் சொல்லாத. 25 ஆச்சில்ல.வயசு//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))"

ellam uncle aunty aa irukkanga ppa....

ennai madiri youth yaarum illaiya???//

Yaaru aunty?? :@

கார்க்கி on February 25, 2009 at 12:07 PM said...

// வெயிலான் said...
காக்டெயில் சூப்ப//

நன்றி சகா

********
/ ஜ்யோவ்ராம் சுந்தர் said...
யூனிஸ் கான் 313 அவுட்டாயிட்டாரு //

அப்பவே பதிவுல அப்டேட் பண்ணிட்டேன் தல

***********
// அனுஜன்யா said...
நர்சிமுக்கு வாழ்த்துகள். நீ எப்போ கார்க்கி? (இதே கேள்விய இப்பதான் முரளியையும் கேட்டேன்). நீ எலக்கியவாதி ஆயாச்சு (நான் நான்தான்). பிரபலப் பத்திரிகையில் ரெகுலர் எழுத்தாளரா சீக்கிரமே ஆகக் கடவது//

:)))))))))))

***********
// MayVee said...
ellam uncle aunty aa irukkanga ppa....

ennai madiri youth yaarum illaiya?//

உங்கள மாதிரி யூத் இங்க இல்ல சகா.. என்னை மாதிரி ரியல் யூத்துதான் இருக்கோம்..

விஜய் on February 25, 2009 at 12:39 PM said...

MRP pathu vangura alavukku naama irunthomna ethukkupa naadu ippadi irukka poguthu???????

விஜய் on February 25, 2009 at 12:41 PM said...

Soooooooooperb scene ma ithu, Especially Rajini and Vijayshanthi meet panra scenes ellame kalakkal thaan

radhika on February 25, 2009 at 1:45 PM said...

interesting. keep going karki

கார்க்கி on February 25, 2009 at 2:07 PM said...

// விஜய் said...
MRP pathu vangura alavukku naama irunthomna ethukkupa naadu ippadi irukka poguthu?????//

என்னங்க பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க?

***********
/ radhika said...
interesting. keep going karki//

நன்றி ராதிகா..

radhika on February 25, 2009 at 2:47 PM said...

Hi,

please give your mail id. we are regular readers of you and great fans too. its me radhika, ramya and jamunaa from chennai.

தமிழ் பிரியன் on February 25, 2009 at 2:55 PM said...

காக்டெய்ல் நல்லாவே கலக்குறிங்க தல... :)

மணிகண்டன் on February 25, 2009 at 3:21 PM said...

பாத்து, தோணிய தூக்கிட போறாங்க.

MayVee on February 25, 2009 at 3:35 PM said...

"கார்க்கி said...
// MayVee said...
ellam uncle aunty aa irukkanga ppa....

ennai madiri youth yaarum illaiya?//

உங்கள மாதிரி யூத் இங்க இல்ல சகா.. என்னை மாதிரி ரியல் யூத்துதான் இருக்கோம்.."

mudiyala sami.....
vitta naama "vanavil vithi" karthik kuuda anna nnu kupuduvinga pol irukke.....

குசும்பன் on February 25, 2009 at 3:39 PM said...

போச்சு 20 20யும் போச்சு!

கலைஞர் மேட்டர் கலக்கம்

வந்தியத்தேவன் on February 25, 2009 at 4:29 PM said...

முதல் இருவதுக்கு 20ல் இந்தியா தோற்றுவிட்டது, மத்தியதர வீரர்கள் சோபிக்கவில்லை. இந்த ரோகித் சர்மாவுக்கு எல்லாம் ஏன் இடம் கொடுத்து ஒரு வீரரின் இடத்தை வீணாக்கின்றார்கள்.

விட்டோரி பீட்டர்சன், ஜெயவர்த்தனா அளவுக்கு சோப்ளாங்கி இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

Karthik on February 25, 2009 at 5:27 PM said...

//நர்சிம்முக்கு வாழ்த்துகளும்.

Congrats to him. I liked his post 'Akka' very much.
:)

//சமீபத்தில் டெல்லியில் ஒரு புண்ணியவான் போய் 10,000 ரூபாய் நஷ்ட ஈடு வாங்கியிருக்கிறார்.

Wow, Shall I too??

//எங்க கேஃபட்டேரியாவில் டி.வி இருக்கு. பிரச்சனையில்லை.

Ours has no TV otherwise no one will go to class. :)

//அப்படியே ஒரு மணி நேரம் சூப்பர் ஸ்டாரின் சூப்பர் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.

In Office?? ;)

//என்ன பாட்டு ‘பாடி’ திறந்து வச்சார்?

An Empty Street..An Empty house..A hole inside my heart.
:))

கார்க்கி on February 25, 2009 at 6:53 PM said...

/தமிழ் பிரியன் said...
காக்டெய்ல் நல்லாவே கலக்குறிங்க தல.//

நன்றி சகா

***********
// மணிகண்டன் said...
பாத்து, தோணிய தூக்கிட போறாங்//
இந்த டூர் முழுதும் தோற்றாலும் அது சாத்தியமில்லை..
***********
// குசும்பன் said...

கலைஞர் மேட்டர் கலக்க//

நன்றி தல

**********
// வந்தியத்தேவன் said...
முதல் இருவதுக்கு 20ல் இந்தியா தோற்றுவிட்டது, மத்தியதர வீரர்கள் சோபிக்கவில்லை. இந்த ரோகித் சர்மாவுக்கு எல்லாம் ஏன் இடம் கொடுத்து ஒரு வீரரின் இடத்தை வீணாக்கின்றார்கள்//

அது பரவாயில்லை. 20 ரன் அடிக்கிரார் என்பதற்காக இர்ஃபானை பவுலராக சேர்ப்பது தவறு. எல்லா மேட்ச்சிலும் ரன் அதிகம் கொடுப்பவர் அவரே..

**********

@கார்த்திக்,

சரியா சொன்னிங்க அண்ணா.. (மேவீ ஓக்கேவா)

தராசு on February 25, 2009 at 7:11 PM said...

//எந்தப்பொருளை வாங்கினாலும் MRP விலை என்று ஒன்றிருக்கும். அந்த விலையை விட அதிகமாக விற்க கூடாது என்பது விதி. எல்லாப் பேருந்து நிலையங்களிலும் இது கடைப்பிடிக்கப் படுவதில்லை. ஒவ்வொரு முறையும் எனக்கும் கடைக்காரருக்கும் வாக்குவாதம் நடக்கும். கடையை ஏலத்தில் அதிக தொகை கொடுத்து வாங்குவதே இதற்கு காரணம். இவர்களாவது பில் கொடுப்பதில்லை. பிஸ்ஸா ரெஸ்ட்ராண்டுகளில் 20 ரூபாய் பாட்டிலுக்கு 30 ரூபாய் பில் போடுவார்கள். கையிலே ஆதாரம் இருந்தாலும் கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போனதில்லை. சமீபத்தில் டெல்லியில் ஒரு புண்ணியவான் போய் 10,000 ரூபாய் நஷ்ட ஈடு வாங்கியிருக்கிறார். இன்னமும் சென்னை தோமினோஸில் கோக் அரை லிட்டர் 27.50 +வரிகள். //

கண்ட கண்ட இடங்கள்ல எல்லாம் சுத்தறது, கண்டதையும் வாங்கித்திங்கறது, எப்பத்தான் நல்ல பையனா மாறப் போறீங்க!!!!

MayVee on February 25, 2009 at 7:16 PM said...

"கார்க்கி said...
@கார்த்திக்,

சரியா சொன்னிங்க அண்ணா.. (மேவீ ஓக்கேவா)"


கார்கி அண்ணா
ஒத்துக்கிறேன் ......
நீங்க orginal யூத் தான் ......

Anonymous said...

Hi

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

பழூர் கார்த்தி on February 25, 2009 at 9:51 PM said...

காக்டெயில் நல்லா இருந்ததுங்க..

<<>>

சேவக் அடித்த வேகத்தை பார்த்து 250 ரன் அடிப்பாங்கன்னு நினைச்சா.. கவுத்துடாங்கப்பூ...

<<>>

ரஜினியின் வசனங்களிலேயே மொக்காயானது எதுன்னு சொல்லுங்களேன்..

பரிசல்காரன் on February 26, 2009 at 12:44 AM said...

ரஜினி ரஜினிதான் சகா! (இதுக்கு ஆமான்னு கிண்டல் பண்ணாத!)

என்னதான் சொல்லு.. சும்மாவா ஒண்ணுக்குமாகாதவங்கள்லாம் அவரை ஃபாலோ பண்ணி ஹீரோ ஆகறாங்க! (இதுக்கு கோவிச்சுக்காத!)

மொத பாராவுல இருந்த உள்குத்து யாருக்கு?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

ச்சின்னப் பையன் on February 26, 2009 at 4:49 AM said...

காக்டெயில் கலக்கல்...

ச்சின்னப் பையன் on February 26, 2009 at 4:50 AM said...

அண்ணே.. 20-20 போயிடுச்சுண்ணே.... :-(((((

ச்சின்னப் பையன் on February 26, 2009 at 4:50 AM said...

நல்லதொரு குடும்பம்... பல்கலைக்கழகம்....

இப்படித்தான் பாடியிருப்பார்....

:-))

ச்சின்னப் பையன் on February 26, 2009 at 4:51 AM said...

49

ச்சின்னப் பையன் on February 26, 2009 at 4:51 AM said...

ரொம்ப நாள் கழிச்சி 50 அடிச்சிட்டேன்.....

:-)))

Lancelot on February 26, 2009 at 5:02 AM said...

aaaaaahhhhhhhhh ennakum athey prachanai nethu gmail password maatha sollitan...

தாரணி பிரியா on February 26, 2009 at 8:53 AM said...

:)))))

கார்க்கி on February 26, 2009 at 9:46 AM said...

/ பழூர் கார்த்தி said...
காக்டெயில் நல்லா இருந்ததுங்//

நன்றி சகா. ரஜினி பேசின வசனம் மொக்கையா இருக்கலாம். ஆனா அவரு எப்பவும் மொக்கையா பேச மாட்டாரு

************
// பரிசல்காரன் said...
ரஜினி ரஜினிதான் சகா! (இதுக்கு ஆமான்னு கிண்டல் பண்ணாத!)//

ரைட்டு

//என்னதான் சொல்லு.. சும்மாவா ஒண்ணுக்குமாகாதவங்கள்லாம் அவரை ஃபாலோ பண்ணி ஹீரோ ஆகறாங்க! (இதுக்கு கோவிச்சுக்காத!)//

ஆனா அவரு நாற்காலி வேணும்னு டேபிள குத்தினவங்க எல்லாம் புஸ்ஸாயிட்டாங்களே. ஒருத்தர் தானே ஜெயிச்சிருக்கார்

//மொத பாராவுல இருந்த உள்குத்து யாருக்கு? //

அதுல உள்குத்து இல்ல சகா. ஆனா பதிவுல ஒரு உள்குத்து இருக்கு

**********

கார்க்கி on February 26, 2009 at 9:47 AM said...

/ ச்சின்னப் பையன் said...
காக்டெயில் கலக்க//

நன்றி சகா
************

// Lancelot said...
aaaaaahhhhhhhhh ennakum athey prachanai nethu gmail password maatha sollitan//

ஆமாம் சகா.. ஜிமெய்ல்தான் இதுல ரொம்ப கஷ்டம்

************
// தாரணி பிரியா said...
:)))))//

ஏம்ப்பா.. அதர் ஆப்ஷன் பூட்டற மாதிரி ஸ்மைலிய பூட்ட முடியாதா?

ஷாஜி on February 26, 2009 at 3:37 PM said...

/ஆனா அவரு நாற்காலி வேணும்னு டேபிள குத்தினவங்க எல்லாம் புஸ்ஸாயிட்டாங்களே. ஒருத்தர் தானே ஜெயிச்சிருக்கார்//

-உங்க உள்குத்து புரியுது. ஆனா நீங்க ஜெயித்ததா சொன்னவரு HAT-TRICK அடிச்சிட்டருல.. காலம் மெதுவா தான் பதில் சொல்லும் சகா...

ஷாஜி on February 26, 2009 at 3:44 PM said...

//சில நாட்களுக்கு முன் அலுவலக பார்ட்டியில் என்னை ரஜினியின் வசனங்களை பேசிக் காட்ட சொன்னார்கள். //

--இல்லனா நீங்க 'வாழ்க்கை ஒரு வட்டம், செவ்வகம், சதுரம், அப்டி இப்டினு' உங்க டயாலக் பேசி இருப்பிங்க இல்ல...

எப்பவுமே 'அசலு'க்கு தான் மரியாதை அதிகம். xerox எல்லாம் ரொம்ப நாள் தாக்குபிடிக்காது...

கார்க்கி on February 26, 2009 at 4:44 PM said...

//ஷாஜி said...
/ஆனா அவரு நாற்காலி வேணும்னு டேபிள குத்தினவங்க எல்லாம் புஸ்ஸாயிட்டாங்களே. ஒருத்தர் தானே ஜெயிச்சிருக்கார்//

-உங்க உள்குத்து புரியுது. ஆனா நீங்க ஜெயித்ததா சொன்னவரு HAT-TRICK அடிச்சிட்டருல.. காலம் மெதுவா தான் பதில் சொல்லும் சகா.//

உங்களுக்கு மட்டும் சீக்கிரமே சொல்லிடுச்சே சகா :))

**********
/ ஷாஜி said...
//சில நாட்களுக்கு முன் அலுவலக பார்ட்டியில் என்னை ரஜினியின் வசனங்களை பேசிக் காட்ட சொன்னார்கள். //

--இல்லனா நீங்க 'வாழ்க்கை ஒரு வட்டம், செவ்வகம், சதுரம், அப்டி இப்டினு' உங்க டயாலக் பேசி இருப்பிங்க இல்ல...//


அதெல்லாம் ஆண்வத்துல ஆடற்வங்க கிட்டதான் சொல்வோம் சகா

//எப்பவுமே 'அசலு'க்கு தான் மரியாதை அதிகம். xerox எல்லாம் ரொம்ப நாள் தாக்குபிடிக்காது//

அச்சச்சோ.. அப்போ பில்லா?

ஷாஜி on February 26, 2009 at 4:59 PM said...

//அச்சச்சோ.. அப்போ பில்லா?//

--Billa: Old Wine in New Bottle (remade - scenes are completely diff.)

But POKKIRI&GIILI: Mahash bau's TAMIL dubbing/xerox version.(same scenes in tamil&Telugu - Ditto Copy)

கார்க்கி on February 26, 2009 at 5:04 PM said...

// ஷாஜி said...
//அச்சச்சோ.. அப்போ பில்லா?//

--Billa: Old Wine in New Bottle//

அப்பாடா.. மண்ணு ஒட்டல சகா.. சரக்குதான் முக்கியம். பாட்டல் வச்சு என்ன செய்ய முடியும்? :))))

ஷாஜி on February 26, 2009 at 5:09 PM said...

:)

அமிர்தவர்ஷினி அம்மா on February 27, 2009 at 2:47 PM said...

:)-

Suresh.S.Manian on February 28, 2009 at 12:25 PM said...

Good NICE work

செல்வேந்திரன் on February 28, 2009 at 6:39 PM said...

“என்னை விடுங்க. என் தலைமுடி கூட ஆடாது” தலைவா..
// juper

தாமிரா on March 1, 2009 at 1:02 PM said...

Good..

 

all rights reserved to www.karkibava.com