Feb 24, 2009

பஜாஜ் பைக்குகள் வாங்காதீங்க - ப்ளீஸ்


                             

   பஜாஜ் நிறுவனத்தின் புதிய பைக் ப்ளாட்டினா 125CC. 110 Km மைலேஜ் என்று விளம்பரபடுத்துகிறார்கள். இதேப் போல 2007ல் பஜாஜ் XCD, 109 Km என்ற விளம்பரத்தைப் பார்த்து வாங்கி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். 44,000 ரூபாய் மட்டுமே, செல்ஃப் ஸ்டார்ட், அலாய் வீல், என்ற கவர்ச்சியில் மயங்கி வாங்கிய பின்தான் அவர்களின் உண்மை முகம் தெரிந்தது. முதலில் 70கி.மீ தந்த வண்டி ஒரே மாதத்தில் 65 ஆகியது. மூன்றே மாதங்களில் 60 ஆகிவிட்டது. முதல் மூன்று சர்வீஸ்களை சரியான நேரத்தில் செய்தது மட்டுமில்லாமல் முதல் 600 கி.மீ வரை 40Km/H வேகத்தில்தான் வண்டியை ஓட்டினேன்.

   சிக்னலில் பார்ப்பவர்கள் எல்லாம் எவ்ளோ சார் மைலேஜ் என்று கேட்பதிலே அதன் விளம்பரத்தின் தாக்கத்தை உனர முடிந்தது. என்னால் முடிந்தவரை காப்பாற்றினேன். மற்ற வண்டிகளும் விளம்பரத்தில் சொல்லுமளவுக்கு மைலேஜ் தராவிட்டாலும் இவரகளைப் போல  இரண்டு மடங்கு சொல்வதில்லை. 125 சிசி என்பதால் பிக்கப் நன்றாக இருக்கும். ஆனால் வண்டியின் எடை 112 கிலோ மட்டுமே. அந்த எடைக்கு டிஸ் பிரேக்கும் சாத்தியமில்லை. அதனால் விபத்துகள் அடிக்கடி நேர்ந்தது மட்டுமில்லாமல், முதுகு வலி வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். டீலர்களே திருமணமானவர்களுக்கு கூடிய வரையில் இதை வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.

  இதையெல்லாம் தாண்டி இவர்களிடத்தில் இன்னொரு பெரிய குறை உண்டு. முதலில் Discover 125CC வந்தது. ஒரே வருடத்தில் அதை Discover 135CC என்றாக்கிவிட்டு, XCD125CC என்றார்கள். இதோ, ஒன்றரை வருடத்தில் XCD 135CC ஆக்கிவிட்டு Platina 125cc என்கிறார்கள். இதற்கு முன் Platina 100CC ஆக இருந்தது. இன்னும் சில மாதங்களில் XCD 125CC க்கு உதிரி பாகங்கள் எளிதில் கிடைக்காது. புது வண்டி வாங்கலாம் என்று நினைத்தால், மார்க்கெட்டிலே பஜாஜ் வண்டிகளுக்குத்தான் ரீசேல் வேல்யூ குறைவு. 20000 ரூபாயில் பல்சர் வாங்கிவிடலாம். ஆனால் ஹீரோ ஹோண்டாவின் Passion Plus (வெறும் 105cc) கூட 25,000 குறைவாக  கிடைப்பதில்லை.

  பல்சரை தவிர இவர்களின் எந்த மாடலும் சந்தையில் நிலைத்ததில்லை. போன வருட சர்வேயில் முதல் முறை வாகனம் வாங்குபவர்களில் 60% பேர் பஜாஜை தேர்ந்தெடுப்பதாகவும், அதுவே இரண்டுக்கு மேலான தடவை வாங்குபவர்களில் வெறும் 10% பேர் மட்டுமே பஜாஜை விரும்புவதாகவும் சொல்கிறார்கள். அதை ஊர்ஜிதப்படுத்துவது போல்தான் அவர்களின் விற்பனையும் இருக்கிறது.
  புது மாடல் வந்ததும் அவர்களின் விற்பனை அபரிதமாக வளர்வதை இந்த கிராஃப் குறிக்கிறது.

   பஜாஜ் காலிபர், பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் ,பஜாஜ் M80 என்று சில மாடல்கள் மக்களிடம் வெகுவாய் சென்றடைந்து இருக்கின்றன. அதனால் சில வயதான மக்கள் இன்னமும் பஜாஜ் மீது மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் பஜாஜ் நிறுவனம் தனது வியாபார யுத்திகளை மாற்றிக் கொண்டு பல வருடமாக்கிவிட்டன. அவர்களுக்கு  loyal Customers தேவையில்லை. கவர்ச்சியான விலை, கவர்ச்சியான விளம்பரம், கவர்ச்சியான நிதி உதவிகள் மூலம் இளைஞர்களை கவர்ந்திழுத்து விடலாம் என்ற நோக்கில்தான் செயல்படுகிறது.

   சிறு வயதிலிருந்தே எனக்கு ஆட்டோமொபைல் மீதி ஒரு காதல் உண்டு. எனது விருப்ப பாடமும் அதுதான். தாமிரா ஒரு நாள் துறை சார்ந்த பதிவு எழுத சொன்ன போதே இதைப் பற்றி எழுத நினைத்தேன். Platina 125cc விளம்பரம் பார்த்த பின்புதான் இதை உடனே எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன். சற்று விலை அதிகமானலும் Honda shine, Honda Unicorn ஆகியவை நல்ல சாய்ஸ். ஸ்டைலாக வேண்டும் என்பவர்கள் யமஹா R15 முயற்சிக்கலாம். பஜாஜ் மட்டும் வேண்டாம்.ப்ளீஸ்

81 கருத்துக்குத்து:

Anbu on February 24, 2009 at 9:48 AM said...

me the first

Anbu on February 24, 2009 at 9:52 AM said...

என்னை மாதிரி இனிமேல் வண்டி வாங்கும் இளைஞர்களுக்கு நல்ல அறிவுரை

எம்.எம்.அப்துல்லா on February 24, 2009 at 9:54 AM said...

என்னை மாதிரி இனிமேல் வண்டி வாங்கும் இளைஞர்களுக்கு அருமையான அறிவுரை.

narsim on February 24, 2009 at 9:59 AM said...

//புது மாடல் வந்ததும் அவர்களின் விற்பனை அபரிதமாக வளர்வதை இந்த கிராஃப் குறிக்கிறது//

//சிக்னலில் பார்ப்பவர்கள் எல்லாம் எவ்ளோ சார் மைலேஜ் என்று கேட்பதிலே அதன் விளம்பரத்தின் தாக்கத்தை உனர முடிந்தது. என்னால் முடிந்தவரை காப்பாற்றினேன்//

நல்லா எழுதியிருக்கீங்க சகா..

அருண் on February 24, 2009 at 10:07 AM said...

நல்ல கருத்து, நானும் Yamaha Gladiator வாங்கி முதுகு வலி காரணமாக ஒரே வருடத்தில் விற்றேன். 25,000 நஷ்டம். :(

மண்குதிரை on February 24, 2009 at 10:11 AM said...

உண்மைதான்
ஆனா பஜாஜ்ல இருந்து எதும் பிரச்சனை வராதா

விஜய் on February 24, 2009 at 10:17 AM said...

Pulsar'l kooda neraya accident avathu prabalam thaan, so good bye to bajaj nu solla vareengla....

கார்க்கி on February 24, 2009 at 10:18 AM said...

// Anbu said...
என்னை மாதிரி இனிமேல் வண்டி வாங்கும் இளைஞர்களுக்கு நல்ல அறிவு//

யோசிச்சு வாங்குப்பா

************

/ எம்.எம்.அப்துல்லா said...
என்னை மாதிரி இனிமேல் வண்டி வாங்கும் இளைஞர்களுக்கு அருமையான அறிவு//

ஆவ்வ்வ்வ்வ்..

***************
// narsim said...

நல்லா எழுதியிருக்கீங்க சகா//

நன்றி தல. ’டிஸ்கஷன்’ எப்படி போச்சு?

கார்க்கி on February 24, 2009 at 10:21 AM said...

/ அருண் said...
நல்ல கருத்து, நானும் Yamaha Gladiator வாங்கி முதுகு வலி காரணமாக ஒரே வருடத்தில் விற்றேன். 25,000 நஷ்டம்.//

முதுகு வலி ஆட்களுக்கு யுனிகார்ன் தான் பெஸ்ட் சாய்ஸ் சகா

******************

/மண்குதிரை said...
உண்மைதான்
ஆனா பஜாஜ்ல இருந்து எதும் பிரச்சனை வரா//

காசு கொடுத்து வாங்கி ஏமார்ந்திருக்கேன். எவன் கேட்பான்?

************

/ விஜய் said...
Pulsar'l kooda neraya accident avathu prabalam thaan, so good bye to bajaj nu solla vareengla//

உண்மைதான்

prakash on February 24, 2009 at 10:46 AM said...

பிரவீன் பஜாஜ் CT100 தான் வச்சிருக்கான் கார்க்கி...
ரொம்ப மோசம் இல்லன்னுதான் நெனைக்கிறேன். ஆனா நீ சொல்றமாதிரி மைலேஜ் இன்கன்சிஸ்டன்சி இருக்கிறது.
வாங்கியவுடனே 85 தந்தது ஒரு ரெண்டு மாசத்துல 70 க்கு வந்துடுச்சி

என்னோடது ஹீரோ ஹோண்டா ஸ்பிளென்டர் வாங்கியப்போ 65 இப்போ 60

பட் CT100 ல சீட் நல்லா இருக்கும்.
brader and softer than hero honda

Rajeswari on February 24, 2009 at 10:48 AM said...

நல்ல பதிவு

மங்களூர் சிவா on February 24, 2009 at 10:49 AM said...

எல்லா வண்டியிலயும் எதாவது ஒரு குறை இருக்கு. என் வண்டி யமாஹா க்ரக்ஸ்-ல் முதல் கியர் போடும்போது லாரி கியர் மாதிரி "கடக்" என சவுண்ட் ஜாஸ்தி வருகிறது வாங்கி 7 வருஷம் ஆகுது இன்னும் அப்படித்தான். அதைத்தவிர வேறு எந்த பிரச்சனையும் சந்தித்ததில்லை.

வண்டி வாங்கிதான் ஓட்டக் கற்றுக்கொண்டதால் அப்போது தெரியவில்லை தெரிந்திருந்தால் வண்டியை அப்போதே மாற்றியிருக்கலாம்.

என் நண்பனின் க்ரக்ஸ் வண்டியில் அது போல எந்த பிரச்சினையும் இல்லை.

மற்றபடி மைலேஜ் பெரிசா கவலைப்படுவதில்லை வீடும் அலுவலகமும் ஒரு கிலோமீட்டர் தூரம்தான்.

நான் வண்டி வாங்கும் போது என் நண்பர்கள் பஜாஜ் சிடி 100 வாங்கினார்கள் இன்றுவரை நன்றாகவே உள்ளது.

Arun Kumar on February 24, 2009 at 10:52 AM said...

நல்ல பதிவு.

பஜாஜ் வண்டிகளில் பல்சர் 150 சிசி தவிர மற்ற அனைத்து வண்டிகளிலும் ஏதாவது பெரிய பிரச்சனை இருக்கிறது..

100 சிசி - 125 சிசி வண்டிகளில்

ஸ்பெலண்டர், honda shrine வாங்கலாம்

150 சிசி மேல் Apache அல்லது unicorn வாங்கலாம்

அப்பாவி தமிழன் on February 24, 2009 at 10:58 AM said...

honda- unicorn is best go for it

மங்களூர் சிவா on February 24, 2009 at 10:59 AM said...

600 சிசில 'நானோ'ன்னு ஒரு பைக் வருதாம்ல சீக்கிரம் யாராச்சும் வாங்கி அதைபத்தி சொல்லுங்கப்பு வாங்கிருவோம்!!

கார்க்கி on February 24, 2009 at 11:01 AM said...

@ prakash

அதனால்தான் சிடி100 ஐ இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள் பஜாஜ். இரண்டு வண்டியின் மார்க்கெட் விலை விசாரிச்சு பாருங்க. சிடி100 15000 கூட போகாது..

****************

/ Rajeswari said...
நல்ல பதிவு//

நன்றி

************
@சிவா,

அதனலதான் நானும் CT100 பற்றி ஏதும் சொல்லவில்லை சக. ஆனால் அனைத்து புது மாடல்களும் சொதப்பல்.அதே போல் சிடி 100 பிரேக்கையும் ஹோண்டா பைக்குகளின் பிரேக்கையும் பாருங்கள். டிஸ் இல்லாமலே நச்சுனு இருக்கும் ஹோண்டா பிரேக்.

************

@அருண்,

ஆமாங்க. ஆனால் அப்பாச்சியை விட யுனிகார்ன் நல்ல சாய்ஸ். அப்பாச்சி ரெண்டு டிஸ்க். சிட்டில கொஞ்சம் கஷ்டம்.

இளைய பல்லவன் on February 24, 2009 at 11:04 AM said...

நான் பஜாஜ சி.டி.100தான் வைத்திருக்கிறேன். இன்று வரை மைலேஜ் 70+ தருகிறது. ஸ்மூத்தாக செல்கிறது. சீட் ஸ்டைல் கூட நன்றாக இருக்கிறது.

பஜாஜ் வண்டிகளில் இதுதான் சரியான மாடல் என்று நினைக்கிறேன். ஆனால் இதையும் நிறுத்தி விட்டார்கள்.

முதலில் எம்80 வைத்திருந்தேன்.

விக்னேஷ்வரி on February 24, 2009 at 11:05 AM said...

முதுகு வலி ஆட்களுக்கு யுனிகார்ன் தான் பெஸ்ட் சாய்ஸ் சகா ///

ம், யுனிகார்ன் நல்லா இருக்கு கார்க்கி. ஓட்ட ஸ்மூத்தா இருக்கு.... ட்ரை பண்ணலாம். ஆனா, HERO HONDA HUNK தான் என்னோட சாய்ஸ்.வண்டியும் நல்லா இருக்கு. எந்த பிரச்சனையும் இல்ல.
Hunk, the best.

விக்னேஷ்வரி on February 24, 2009 at 11:06 AM said...

கார்க்கி, உங்களோட ப்ளாக் லிங்கை என்னோட ப்ளாக்ல போட்டிருக்கேன். அனுமதி கேட்காம போட்டதுக்கு ஸாரி. ;)

தாரணி பிரியா on February 24, 2009 at 11:08 AM said...

பொண்ணுங்க சாய்ஸ் எல்லாம் ஸ்கூட்டி இல்லாட்டி ப்ளஷர்தான். அப்புற‌ம் ப்ளேம் ஒர‌ள‌வுக்கு ஒ.கே. இங்க‌யும் ப‌ஜாஜ் கிரிஸ்ட‌ல் வாங்க‌ ஆளில்லை. அந்த‌ வண்டி லுக்கே என‌க்கு பிடிக்க‌லை :)

ஷாஜி on February 24, 2009 at 11:12 AM said...

எனது தம்பிக்கு வண்டி வாங்க எண்ணியபோது, சில Research செய்து பார்ததில் BAJAJ ஒத்துவராது என அரிந்துகொண்டேன். இப்போது என் தம்பி Honda Unicorn-இல் ஹாயாக செல்கிறான். நான் இப்போது கூட Hero Honda - Splendar plus தான்.

vinoth gowtham on February 24, 2009 at 11:13 AM said...

U Mechanical..??

கும்க்கி on February 24, 2009 at 11:14 AM said...

நல்ல பதிவு...நீ.....ண்டதொரு பதில் போட உத்தேசம் . ஏனெனில் பல்சர் பரதேசிகளில் நானும் ஒருவன்.

வித்யா on February 24, 2009 at 11:16 AM said...

எங்காளும் பஜாஜ் (CT 100)தான் வெச்சிருக்காரு. Maintenance ரொம்ப கஷ்டமா இருக்கு. மாசத்துக்கு ஒரு தடவையாவது கைவெக்க வேண்டியிருக்கு:(

ரமேஷ் வைத்யா on February 24, 2009 at 11:16 AM said...

சரி. என்னோட ஸ்ப்ளெண்டரை எக்ஸ்சேஞ் பண்ணிக்கிறீங்களா? சமீபத்தில் வாங்கியதுதான் (அந்த சமீபத்தில்தான்)

prakash on February 24, 2009 at 11:29 AM said...

//இரண்டு வண்டியின் மார்க்கெட் விலை விசாரிச்சு பாருங்க. சிடி100 15000 கூட போகாது..//

அதுவும் கரெக்ட் தான்

லவ்டேல் மேடி on February 24, 2009 at 11:30 AM said...

பஜாஜ் ப்ளாட்டினா 125CC said :


அட பாவி கார்கி ....... என் பொளப்புல மண்ணள்ளி போட பாக்குறியே ...... !!!! இது உனக்கே நால்லாருக்கா ........ !!!!! என் பீச்சாங்கைய ம்ம்ம்ம்ம்ம்ம் ----------- வெக்க ....... !!!!!! ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நீலாம்பரி ஸ்டைல்ல உன்ன பழி வாங்காம உடமாட்டேன்......!!!! இது பல்லு வெலக்காத டூத் பிரஷ் மேல சத்தியம் ................!!!!!!

prakash on February 24, 2009 at 11:31 AM said...

//பல்சர் பரதேசிகளில் நானும் ஒருவன்.//

ஹி ஹி ஹி .....
நல்ல சொல்லாடல் கும்க்கி :)))

முரளிகண்ணன் on February 24, 2009 at 11:32 AM said...

கார்க்கி அருமையாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.

தொடருங்களேன்

கார்க்கி on February 24, 2009 at 11:36 AM said...

/ விக்னேஷ்வரி said...

ம், யுனிகார்ன் நல்லா இருக்கு கார்க்கி. ஓட்ட ஸ்மூத்தா இருக்கு.... ட்ரை பண்ணலாம். ஆனா, HERO HONDA HUNK தான் என்னோட சாய்ஸ்//

ஆவ்வ்..பைக் ஓட்டுவீஙக்ளா? சூப்பர்.

// விக்னேஷ்வரி said...
கார்க்கி, உங்களோட ப்ளாக் லிங்கை என்னோட ப்ளாக்ல போட்டிருக்கேன். அனுமதி கேட்காம போட்டதுக்கு ஸாரி.//

எதுக்குங்க சாரி? நன்றி நான் தான் சொல்லனும்.

************

// இளைய பல்லவன் said...
நான் பஜாஜ சி.டி.100தான் வைத்திருக்கிறேன். இன்று வரை மைலேஜ் 70+ தருகிறது. ஸ்மூத்தாக செல்கிற//

ஆமாம். சிடி100 பரவாயில்லை..

************
/ தாரணி பிரியா said...
பொண்ணுங்க சாய்ஸ் எல்லாம் ஸ்கூட்டி இல்லாட்டி ப்ளஷர்தான்.//

அதுவும் பிங்க் கலர். சரியா?

*************

/ஷாஜி said...
எனது தம்பிக்கு வண்டி வாங்க எண்ணியபோது, சில Research செய்து பார்ததில் BAJAJ ஒத்துவராது //

ஆமாம் சகா

கார்க்கி on February 24, 2009 at 11:38 AM said...

/ vinoth gowtham said...
U Mechanical..?//

ஆமாம்ங்க.. நீங்களுமா?

********

/கும்க்கி said...
நல்ல பதிவு...நீ.....ண்டதொரு பதில் போட உத்தேசம் . ஏனெனில் பல்சர் பரதேசிகளில் நானும் ஒருவன்//

ஹாஹா

***********

/ வித்யா said...
எங்காளும் பஜாஜ் (CT 100)தான் வெச்சிருக்காரு. Maintenance ரொம்ப கஷ்டமா இருக்கு. மாசத்துக்கு ஒரு தடவையாவது கைவெக்க வேண்டியிருக்கு//

மாத்திடுங்க..

************
/ ரமேஷ் வைத்யா said...
சரி. என்னோட ஸ்ப்ளெண்டரை எக்ஸ்சேஞ் பண்ணிக்கிறீங்களா? சமீபத்தில் வாங்கியதுதா//

ஜோரா பண்ணிடலாம். வண்டி நான் வாங்கினா நீங்க எவ்ளோ பனம் தருவீங்கண்ணா?

vinoth gowtham on February 24, 2009 at 11:59 AM said...

vinoth gowtham said...
U Mechanical..?//

ஆமாம்ங்க.. நீங்களுமா?//


நானும் தான் சகா ..

MayVee on February 24, 2009 at 12:06 PM said...

முதல இந்த லிங்க் யை என் நண்பன்க்கு அனுப்பனும்.....
ஏனென்றால் அவன் பைக்யை தான் எப்பொழுதும் use பண்ணுவேன்....

என் பைக் எப்பொழுதுமே
ஓசி பைக் தான்.....
ஹி ஹி

Anonymous said...

//சற்று விலை அதிகமானலும் Honda shine, Honda Unicorn ஆகியவை நல்ல சாய்ஸ்//
நீங்க சொல்றது உண்மைனா என் சாய்ஸ் நல்ல சாய்ஸ் தான். ஆமாம் ஏழு மாதம் முன்னாடி தான் பல தடவை அலசி ஆராய்ஞ்சு என் பட்ஜெட்டுக்குள்ள வாங்கினேன்.

ஹீ ஹீ ...உங்க பதிவை படிச்சுட்டு எதோ நான் கொஞ்சம் விவரமுன்னு நினைச்சுக்கிட்டேன்.ஹீ ஹீ ...

Lancelot on February 24, 2009 at 12:39 PM said...

@ Thalai

I bought an avenger 4 years back(12th avenger in Chennai) I dint have a problem till I sold it before coming to Singapore last year...ennaku ennamo avanga vandila Pulsar and Avenger nalla than pudichu irunthuchu...athye mathiri CT 100 kuda avangalthu thaanae?>??athuvum nalla than irukku...

Bleachingpowder on February 24, 2009 at 12:48 PM said...

பைக்குன்னா நம்ம ஆல் டைம் ஃபேவரைட் ஸ்பெலண்டர் தான் தல. என்னோட பைக்கை கடைசியா கழுவினது ஷோரூம்ல தான், அது பாட்டுக்கு ஓடுது

கார்க்கி on February 24, 2009 at 12:52 PM said...

/ முரளிகண்ணன் said...
கார்க்கி அருமையாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.

தொடருங்களே/

நம்றி சகா. நிச்சயம் முயற்சி செய்கிறேன்

************
/ MayVee said...
முதல இந்த லிங்க் யை என் நண்பன்க்கு அனுப்பனும்.....
ஏனென்றால் அவன் பைக்யை தான் எப்பொழுதும் use பண்ணுவே//

அது சரி.. உங்க ஃப்ரெண்ட் நம்பர் கொடுங்க

************
@ஸ்ரீராம்,

யுனிகார்னா, ஷைனா சகா?

***********
@ Lancelo,

அவர்களின் பழைய மாடல்கள் ஓகே. இந்த ராஜதந்திரங்களை சமீபத்தில்தான் செய்கிறார்கள்.. ஆனால் அவெஞ்சரும் மைலேஜ் வெறும் 30தானே?

Lancelot on February 24, 2009 at 12:54 PM said...

athu ennamo thalai ennaku mattum 38 - 43 varaikkum koduthuchi...single hand driving...

Lancelot on February 24, 2009 at 12:54 PM said...

180 CC vandikku athu periyaa vishayam...

IRSHATH on February 24, 2009 at 12:59 PM said...

Bajaj CT 100 இல் பெட்ரோல் மீட்டர் இல்லை. இப்படியான வாகனத்தை வைத்துக்கொண்டு பயந்து பயந்து தான் தொலை தூர பயணம் செல்ல வேண்டியிருக்கிறது..

அதேபோல் நசிந்தது போன்ற தோற்றமுள்ள பெட்ரோல் tank உம்..

ஆண்ட்ரு சுபாசு on February 24, 2009 at 1:02 PM said...

100cc -ஹீரோ ஹோண்டா...என்ன ..ஹெட் லைட் தான் பிரச்சனை ...ரொம்ப டல் ஆ இருக்கு ..
125cc -ஹோண்டா சைன் வாங்குங்க ..டிஸ்க்,டிஸ்க் இல்லாம ரெண்டு மாடலையும் இருக்கு ..
150cc - நம்ம ரோட்டுக்கு இந்த ரேஞ் தேவையா அப்படின்னு தோனுது ...

Anonymous said...

// @ஸ்ரீராம்,

யுனிகார்னா, ஷைனா சகா?//
பட்ஜெட் என்ற வார்த்தையை நான் கூறும்போதே அது ஷைன் ஆகத் தானே இருக்க வேண்டும் சகா...

Anonymous said...

/ vinoth gowtham said...
U Mechanical..?//

ஆமாம்ங்க.. நீங்களுமா?//

என்னையும் சேர்த்துக்கோங்க ...

Natty on February 24, 2009 at 1:38 PM said...

சகா.. நானும் மெக்கி தான்... ஆனாலும் பல்சர் மேலே ஒரு காதல் ... காதல் அதிகம்ன்ற தாலே உங்க கருத்தில் உடன்பாடு இல்ல... கொஞ்சம் லுக் நல்லா இருந்தா ஹை மெயின்டனன்ஸ் இருக்கத்தான் செய்யும்... ;)

தராசு on February 24, 2009 at 1:38 PM said...

//சிறு வயதிலிருந்தே எனக்கு ஆட்டோமொபைல் மீதி ஒரு காதல் உண்டு//

எதை காதலிக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா,

ஆமா, பஜாஜ் மேல ஏன் இந்தக் கொலை வெறி?

குசும்பன் on February 24, 2009 at 1:59 PM said...

கார்க்கி மைலேஜ் அதிகம் கொடுக்கனும் என்றால் பெட்ரோல் போட்டுக்கிட்டு வண்டிய நீங்க தள்ளிக்கிட்டு வேகமா ஓடுங்க செம மைலேஜ் கொடுக்கும்!

நல்ல பதிவு!

ஸ்ரீமதி on February 24, 2009 at 2:29 PM said...

ம்ம்ம் :))

மணிகண்டன் on February 24, 2009 at 3:12 PM said...

***
கார்க்கி மைலேஜ் அதிகம் கொடுக்கனும் என்றால் பெட்ரோல் போட்டுக்கிட்டு வண்டிய நீங்க தள்ளிக்கிட்டு வேகமா ஓடுங்க செம மைலேஜ் கொடுக்கும்!
***
இல்ல உங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா, பெட்ரோல் போடாமையே கூட தள்ளிக்கிட்டு போகலாம்.

Bajaj use பண்ற advertising agency யாருன்னு பாக்கணும். கலக்கரானுங்க.

நான் unicorn வச்சி இருக்கேன். ஆனா அதவிட pulsar பெட்டர்ன்னு தான் எனக்கு தோனுது.

ராஜ நடராஜன் on February 24, 2009 at 3:23 PM said...

நல்ல பதிவு.பதிவைப் படிக்காமலே மனதுக்குள் நினைத்தது யமாஹா.

வால்பையன் on February 24, 2009 at 3:25 PM said...

என்றும் உற்ற நண்பன்,
ஸ்பெலண்டர் ப்ளஸ்.

Bleachingpowder on February 24, 2009 at 3:34 PM said...

//வால்பையன் said...
என்றும் உற்ற நண்பன்,
ஸ்பெலண்டர் ப்ளஸ்.
//

என்னை எப்போ நீங்க விட்டு கொடுதிருக்கிங்க :))

வால்பையன் on February 24, 2009 at 3:36 PM said...

//என்னை எப்போ நீங்க விட்டு கொடுதிருக்கிங்க :)) //

என் மீது எனக்கே கோபம் வருமா என்ன?

வால்பையன் on February 24, 2009 at 3:36 PM said...

// எம்.எம்.அப்துல்லா said...

என்னை மாதிரி இனிமேல் வண்டி வாங்கும் இளைஞர்களுக்கு அருமையான அறிவுரை.//

அண்ணே வண்டி வாங்குன கையோட, என்னை மாதிரி குழந்த பசங்களுக்கு ஓட்ட கத்து கொடுப்பிங்களா?

Mahesh on February 24, 2009 at 4:53 PM said...

நல்ல பதிவு தல... பல்சருக்குப் பிறகு உள்ள இரண்டு சக்கர வாகனங்களைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனா இப்ப இருக்கற வியாபார போட்டியில என்னத்தயாவது சொல்லி விக்கணும்கறது ஒரு கட்டாயமாப் போச்சு. இதுக்கு பஜாஜ் மட்டும் விதிவிலக்கா இருக்க முடியாது. இப்ப வர விளம்பரங்கள்ல பாதி பொய் மீதி உண்மை கிடையாது.

கார்க்கி on February 24, 2009 at 5:02 PM said...

/ IRSHATH said...
Bajaj CT 100 இல் பெட்ரோல் மீட்டர் இல்லை. இப்படியான வாகனத்தை வைத்துக்கொண்டு பயந்து பயந்து தான் தொலை தூர பயணம் செல்ல வேண்டியிருக்கிற//

ஆச்சரியமான விஷயம். எப்படி இதை விட்டார்கள்?

*********
/ Natty said...
சகா.. நானும் மெக்கி தான்... ஆனாலும் பல்சர் மேலே ஒரு காத//

பல்சர் ஓக்கே சகா. ஆனா அதுக்கும் ரீசேல் வேல்யு குறைவுதான்

************
/ தராசு said...

ஆமா, பஜாஜ் மேல ஏன் இந்தக் கொலை வெறி//

கஷ்டபடறேனே.. அதான் தல..

**********
/ குசும்பன் said...

நல்ல பதிவு//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் நன்றி குசும்பரே

கார்க்கி on February 24, 2009 at 5:05 PM said...

/ ஸ்ரீமதி said...
ம்ம்ம் :))//

சைக்கிள் ஓட்டறவங்களுக்கு எல்லாம் இங்க அனுமதி கிடையாது

*************

/ மணிகண்டன் said...

Bajaj use பண்ற advertising agency யாருன்னு பாக்கணும். கலக்கரானுங்க//

ஆமாங்க.. இந்த விஷயத்தில் ஹீரோ ஹோண்டா வேஸ்ட்

************
/ ராஜ நடராஜன் said...
நல்ல பதிவு.பதிவைப் படிக்காமலே மனதுக்குள் நினைத்தது யமாஹா//

அப்ப படிச்சிங்களா இல்லையா தல?

***************
/ வால்பையன் said...
என்றும் உற்ற நண்பன்,
ஸ்பெலண்டர் ப்ள//

மிகச்சரி..

********

/ Mahesh said...
நல்ல பதிவு தல... பல்சருக்குப் பிறகு உள்ள இரண்டு சக்கர வாகனங்களைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது//

நிறைய வந்துடுச்சுங்க.. என் சாய்ஸ் ஹோண்டா வின் பைக்குகள் தான்.. (ஹீரோ ஹோண்டா அல்ல)

சாதிக் அலி on February 24, 2009 at 5:48 PM said...

உபயோகமான பதிவு.எனக்கு ஸ்ப்லெண்டர் ப்ளஸ் திருப்தியாக உள்ளது.பழகிய செருப்பு போல் இணக்கமானது. மெயின்டனன்ஸ் செலவு இல்லை,ஃபேமிலியோடு போக ஏற்றது,உயரம் குறைவானதால் நன்றாக காலூன்றி நிற்கலாம். சொன்ன படி கேட்கும்,மைலேஜ் ஓகே. ஒரு தட்டு முட்டு ஏற்பட்டதில்லை. ஒரே குறை ஹெட் லைட் வெளிச்சம் டிம் தான். ஏன் அப்படி வைத்திருக்கிறார்களோ?

Karthik on February 24, 2009 at 6:31 PM said...

என்னை மாதிரி இனிமேல் வண்டி வாங்கும் இளைஞர்களுக்கு நல்ல அறிவுரை

Karthik on February 24, 2009 at 6:40 PM said...

//U Mechanical..?

U Gautham menon???

Karki, Do you know whos the THALA of automobiles in kollywood?
;)

கணினி தேசம் on February 24, 2009 at 7:01 PM said...

//சற்று விலை அதிகமானலும் Honda shine, Honda Unicorn ஆகியவை நல்ல சாய்ஸ்.//

என்னுடைய சாய்ஸ் கூட Honda Unicorn தான்..அனா வாங்கறதுக்குள்ள வெளிநாடு வந்துட்டதால வாங்கலை..ஹி.ஹி.!!

கணினி தேசம் on February 24, 2009 at 7:02 PM said...

நல்ல அலசல்!

நன்றி

புருனோ Bruno on February 24, 2009 at 9:04 PM said...

நான் 1998ல் பஜாஜ் 4s champion வாங்கினேன். முதலிம் 1 லிட்டர் பெட்ரோலிற்கு 80 கிலோமீட்டர் வரை தந்தது.

நான் 2005 வரை அந்த வண்டியைத்தான் பயன் படுத்தி வந்தேன். 2005 லிட்டருக்கு 65 கிலோமீட்டர்

நான் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிந்த காலத்தில் பெரும்பாலும் மண்சாலைகளில் சென்ற போதும் 65 கிலோமீட்டர் குறையவில்லை

இன்று வரை நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது

(சில முறை டயர் ட்யூம் மாற்றியதை தவிர) பெரிதாக எந்த செலவும் வரவில்லை

இது என் அனுபவம்

affable joe on February 24, 2009 at 9:12 PM said...

அருமையான விளக்க கட்டுரை சகா என் நண்பர்கள் கூட புல்சர் நீண்ட கால உபயோகத்தில் ஒன்றும் சொல்லிகொள்ளும்படி இல்லை என்று கூறுகிறார்கள் ஹீரோ ஹோண்டா ஹுன்க் எப்படி என்று கூறுங்கள் சகா

பழூர் கார்த்தி on February 24, 2009 at 10:20 PM said...

நல்லா எழுதியிருக்கீங்க கார்க்கி..

நான் ஹீரோஹோண்டா ஸ்ப்ளெண்டர் + வைத்திருக்கேன்.. வாங்கி 8 மாசமாகுது.. நல்லா இருக்கு..

பஜாஜ் வாங்கலயேன்னு கவலைப் பட்டுகிட்டு இருந்தேன்..

உங்க பதிவு அந்த கவலையை போக்கிடுச்சு ஹிஹிஹி :-)

ஈர வெங்காயம் on February 24, 2009 at 10:25 PM said...

//சிறு வயதிலிருந்தே எனக்கு ஆட்டோமொபைல் மீதி ஒரு காதல் உண்டு. எனது விருப்ப பாடமும் அதுதான்//

கார்க்கி, நீங்கள் ஒரு எக்ஸ்பர்ட் என்று கேட்கிறேன்...

Royal Enfield - Elantra 5s (or)Thunderbird எது உங்கள் சாய்ஸ்..?

அத்திரி on February 25, 2009 at 8:48 AM said...

சகா நமக்கு எப்பவுமே டிவிஎஸ் சாம்ப் தான்....... இதான் எப்பவுமே பெஸ்ட்..

அத்திரி on February 25, 2009 at 8:49 AM said...

// எம்.எம்.அப்துல்லா said...
என்னை மாதிரி இனிமேல் வண்டி வாங்கும் இளைஞர்களுக்கு அருமையான அறிவுரை.//ஹிஹிஹிஹிஹிஹி.உள்குத்து எதுவும் கிடையாது

அத்திரி on February 25, 2009 at 8:50 AM said...

// ரமேஷ் வைத்யா said...
சரி. என்னோட ஸ்ப்ளெண்டரை எக்ஸ்சேஞ் பண்ணிக்கிறீங்களா? சமீபத்தில் வாங்கியதுதான் (அந்த சமீபத்தில்தான்)//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................

கார்க்கி on February 25, 2009 at 9:46 AM said...

// Karthik said...
//U Mechanical..?

U Gautham menon??//

என்னை அசிங்கபடுத்தாத கார்த்திக் :)))

**************
// கணினி தேசம் said...
நல்ல அலச//

நன்றி சகா

*************
@புரூனோ,

அதான் சொல்லியிருக்கேனே தல. பழைய மாடல்கள் நன்றாக இருந்ததால் இன்னமும் பலர் பஜாஜின் மீது நம்பிக்கை வச்சிருக்காங்கனு..:))

*************
/ affable joe said...
அருமையான விளக்க கட்டுரை சகா என் நண்பர்கள் கூட புல்சர் நீண்ட கால உபயோகத்தில் ஒன்றும் சொல்லிகொள்ளும்படி இல்லை என்று கூறுகிறார்கள் ஹீரோ ஹோண்டா ஹுன்க் எப்படி என்று கூறுங்கள் ச//

ஹன்க்கும் ஓகே ரகம்தான். ஷைன்தான் லாங் ரன்னில் ஜொலிக்கிறது

கார்க்கி on February 25, 2009 at 9:59 AM said...

@கார்த்தி,

நன்றி சகா

**************
ஈரவெங்காயம்,

//கார்க்கி, நீங்கள் ஒரு எக்ஸ்பர்ட் என்று கேட்கிறேன்...//

லொள்ளுக்கு ஒரு அள்வேயில்லாம் போச்சு

//Royal Enfield - Elantra 5s (or)Thunderbird எது உங்கள் சாய்ஸ்..//

அது electra சகா. இரண்டுமே கிட்டதட்ட ஒரே விலைதான். ஆனால் எலக்ட்ரா பெட்டர். மைலேஜ் சற்று அதிகம். கம்ஃபர்ட்டும் எல்க்ட்ராதான். ஆனால் தண்டர்பேர்ட் லுக்கில் சூப்பர். மேலும் தண்ட்ர்பேர்ட் ஐந்து கியர். அதிகபட்ச வேகமும் தண்ட்ர்பேடுதான்..

உங்களுக்கு looks முக்கியமெனில் தண்டர்பேர்டு. மைலேஜ் ,கம்ஃபர்ட் முக்கியமெனில் எல்க்ட்ரா. no big difference.

************
// அத்திரி said...
சகா நமக்கு எப்பவுமே டிவிஎஸ் சாம்ப் தான்....... இதான் எப்பவுமே பெஸ்ட்//

அது சரி.. லூனா பிடிக்காதா?

பட்டாம்பூச்சி on February 25, 2009 at 12:35 PM said...

My vote is for HH-Splendor Plus.
Cost effective and sensible mileage.
Good post :).

சாணக்கியன் on February 25, 2009 at 1:56 PM said...

பஜாஜ் அவெஞ்சர் எப்படி? உபயோகப்படுத்திய 180CC அவெஞ்சரை வாங்கலாம் என்ற எண்ணம்... for style biking and confortable riding. பல்சர் போன்று முன் குனிந்து ஓட்டுமாறு உள்ள பைக் எனக்கு ஒத்துவராது. ஆனால் அதேபோல் பிக்-அப்பும் பவரும் வேண்டும்.

muthu on February 27, 2009 at 11:08 AM said...

I am having Honda Unicorn it is the best in this segment

செல்வேந்திரன் on March 2, 2009 at 1:21 PM said...

ஹோண்டா யூனிகார்ன் நல்ல சாய்ஸ் என அறிவித்து எங்களைப் போன்ற 'விங்க் ரைடர்களைக்' கவுரவித்த அண்ணன் கார்க்கியை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.

DHANS on March 13, 2009 at 2:21 PM said...

நானும் பஜாஜ் பல்சர் 150 CC பைக் வாங்கினேன் 2005 ஆம் வருடம், இன்று வரை அது நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வாங்கிய புதிதில் பிக் உப மிக நன்றாக இருந்தது, அதுவரை யமாஹா RX135 ஓடிக்கொண்டு இருந்த நான் இது கூட நல்ல இருகீ என்று நினைத்தேன், மூன்று வருடங்களில் பிக் உப்வேகுவாக குறைந்து விட்டது அனால் சரியான பராமரிப்பு இல்லாததால் மட்டுமே.

ஒழுங்காக இலவச பரிசோதனை, மற்றும் அதற்க்கு பிறகு கட்டண பரிசோதனை மட்டும் செய்தால் பத்து, இலவச பரிசோதனை என்பது டீலர்கள் பணம் சம்பாதிப்பதுக்கு மட்டுமே. அவர்கள் எதுவுமே செய்ய மட்டார்கள் வண்டியை கழுவுவது கூட நன்றாக இருக்காது.

ஆயில் மாற்றுவது டீலரிடம் செல்லாமல் நீங்களே மாற்றுங்கள், இல்லாவிடில் ஆயில் நீங்களே வாங்கி அருகில் உள்ள மெக்கானிக்கிடம் கொடுத்து மாற்றுங்கள். டயரில் 32 PSI கு மேலே காற்று ஏற்றாதீர்கள்.
வேகத்தை குறைத்தால் பத்து, அடிக்கடி கியர் மாற்றுவது, கிளட்சை பிடித்துக்கொண்டே ஓடுவது, அதிக RPM இல் கியர் மாற்றுவது போன்றவற்றை தவிர்த்தாலே நல்ல மைலேஜ் வரும்.

எனது பல்சர் இன்னும் 55 கிலோமீட்டர் தருகிறது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு.

அனாலும் முதுகு வலி வருவதால் இப்போது காருக்கு மாறிவிட்டேன்,

இப்போது பழைய யமாஹா RX 135 வாங்கும் எண்ணம் உள்ளது.செலவு வைக்காத வண்டி இது. என்னிடம் இருந்த யமகாவை அன்ன பிடுங்கிக்கொண்டார் :(

வேறு ஏதும் சந்தீகம் இருந்தால் கேட்க்கவும்

DHANS on March 13, 2009 at 2:24 PM said...

சாணக்கியன் அவர்களே அவேன்ஜர் நல்ல வண்டிதான் அனாலும் crusier bike என்பதால் அதிகமாக விற்க வில்லை. இருநூறு சி சி என்ஜின் அதனால் மில்கே குறைவு. தாராளமாக வாங்கலாம், இல்லை எனில் என்பீல்டு தண்டர் பர்ட் வாங்கலாம்

Cool Boy கிருத்திகன். on June 12, 2010 at 2:03 PM said...

என் ஐயப்பாட்டை நீக்கியமைக்கு நன்றி தல...
எனக்கும் பல்சர் மோகம் இருந்தது இத படிச்சதிலயிருந்து மறுபரிசீரனை நடக்குது..
இப்ப நான் பாவிக்கறது பசன்
நல்ல மைலேஜ்
2002லயிருந்து சோக்கா உழைக்குது நமக்காக..
நன்றி..

r suresh on May 1, 2011 at 3:07 PM said...

Hi Karki,
I then worked with a Japanese Automobile company,based on my experiece with Japanese I am expressing here.
Usually when they are with Joint venture with Indian Co, they give to them only the old technologay and based on the competition available in the market.But when they come with new plant,they introduce the awesome feature with latest tech.( Ex.. Honda bikes..comapared with Hero Honda bikes) The reason for they give the lower tech. to the joint venture is at one point of time,both companies planned to go to the new platform so the joint venture might be the compeititor.

rajakumar on May 28, 2011 at 1:42 PM said...

Hero Honda always good !

kpachaiyappan on July 30, 2011 at 9:48 PM said...

tvs jive totaly waste kuppai vandi yarum vangathinga kpy

kpachaiyappan on July 30, 2011 at 9:51 PM said...

TVS JIVE VANDI PAKKA VEST THAYAVU SEITHU ANTHA VANDIYAI VANGATHINKA

 

all rights reserved to www.karkibava.com