Feb 23, 2009

அடையாறில் ஓடிய இரத்த ஆறு


  கொஞ்சம் கொஞ்சமாக ஏழுவின் கெப்பாசிட்டி ஏறிக் கொண்டே வந்தது. அவனை நம்பி வெகு நாட்களுக்கு பின் பாருக்கு சென்றோம். வழக்கம்போல முதல் ரவுண்ட் முடிந்தது.

"ஹாஃபுன்னா சவுண்டு மட்டும்தான்..

ஃபுல்லுன்னா கிரவுண்டுல மட்டம்தான்” என்ற ஏழுவை பாரில் இருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவன் சொன்ன ஹாஃப், ஹாஃப் பியர் என்பதை அறியாதவர்கள் அவர்கள்.

  அடுத்த ரவுண்டுக்கு வாங்குவதற்கு எப்போதும் ஏழுவை அனுப்ப மாட்டோம். ஆனால் அன்று ட்ரீட் அவனுடையது என்பதால் அவனே சென்றான். அவனுடன் துணைக்கு செல்ல யாரும் தயாராயில்லை. தனியே சென்றவன வெகு நேரம் ஆகியும் வராததால் ஆறு சென்றான்.

அங்கே ஏழுவை சில பேர் அடிக்க வர, ஆறு குறுக்கே பாய்ந்தான். அடி அவனுக்கு விழுந்தது. நாங்கள் அனைவரும் ஓடிப் போய் பார்த்தபோது ஒரு பெரிய கும்பலே வருவதைக் கண்டு அனைவரும் ஓடத் தொடங்கினோம். ஆறுவின் தலையில் ரத்தம் வந்துக் கொண்டிருந்தது. வலியைப் பொறுத்துக் கொண்டு அவனும் எங்களுடன் ஓடி வந்துக் கொண்டிருந்தான். சிறிது தூரம் ஓடிய பின் ஏழு என்னை சீன்டினான். என்னடா என்றேன்.

நாளைக்கு தினத்தந்தில போடுவாங்க இல்ல என்றான்.

எத?

அடையாறில் ஓடிய இரத்த ஆறு. அப்படின்னு மொத பக்கத்துல போடுவாங்க மச்சி என்றவனை நின்னு அடிக்க கூட முடியாமல் இன்னும் வேகமாக ஓடத் தொடங்கினேன்.

ஒரு வழியாக அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டோம் என்று நினைத்தப் போதுதான் அவர்கள் ஆட்டோவில் வருவதைப் பார்த்து பாலாஜி சொன்னான். அங்கிருந்து ஆறாவது குறுக்குத் தெரு வழியாக ஓடி மாநகராட்சி மைதானத்தில் ஒளிந்துக் கொள்ளலாம் என்று ஐடியா சொன்னான் பாலாஜி.

வேணாம் மச்சி என்று பதறினான் ஏழு.

ஏன்டா?

அப்புறம் அதே தந்தில ஆறாவது பக்கத்துல இரண்டாவது பத்தில குறுக்குத் தெரு வழியாக கிறுக்கு பசங்க ஓட்டம்னு போடுவாங்கடா.

  ஒரு வழியாக தப்பித்து கோட்டூர்புரம் வந்துவிட்டோம். ஆறுவுக்கு உடனடியாக சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று, அருகில் இருந்தவரிடம் ஆஸ்பிட்டல் எங்க இருக்கு என்றோம்.

அதோ பறக்கும் ட்ரெயின் பாலம் போதே. அத தாண்டினா மொத ரைட்டு என்றார்.

என்னண்ணா, அது அவ்ளோ பெருசா இருக்கு. அதப் போய் தாண்ட சொல்றீங்க. லூசாப்பா நீ? என்றான் ஏழு.

அந்த ஏரியா கொஞ்சம் மோசமானது என்பதை நாங்களறிவோம். நின்னு மன்னிப்பு கேட்கவோ ஏழுவை மொத்தவோ நேரமில்லை. மீண்டும் ஓடினோம்.
ஆறுவைப் பார்க்கத்தான் பாவாமயிருந்தது. ஒரு வழியாய் ஆஸ்பிட்டலுக்கு சென்றோம்.பார்த்து பதறிய நர்ஸ் "என்னங்க தலையில இவ்ளோ ரத்தம் வருது" என்றார்.

ஏதாவது ஏடாகூடமாய் சொல்லிவிடுவானோ ஏழு என்று பயத்துடன் பார்த்தான் பாலாஜி.அதைக் கூட நேயர் விருப்பமாய் நினைத்து வாய் மலர்ந்தார் ஏழு.
தலையில ரத்தம்தாங்க வரும். வாயிலதான் சத்தம் வரும்.

குத்துற மாதிரி குத்துன்னா வாயில இருந்து ரெண்டும் வரும். போய் ரிசப்ஷன்ல டெபாசிட் கட்டிட்டு வாங்க என்ற படியே நகர்ந்தார் அந்த நர்சு.

மச்சி நர்ச காணோம் என்று அலறினான் ஏழு.

மூடியக் கதவை திறந்து தலையை மட்டும் காட்டினார் நர்சு.

சாரிங்க. பர்ச காணோம்னு சொல்ல வந்தேன். அவர் ஏழுவைப் பார்த்து புன்னகைக்க ஹீரோ சிரிப்பு சிரித்தார் ஏழு.
அவனை முறைத்துக் கொண்டே ஐவரும் தனித்தனியே அமர்ந்தோம். சிறிது நேரத்திற்குப் பின் தலையில் கட்டுடன் வந்தான் ஆறு. நேராய் ஏழுவை நோக்கி வந்தவன், அப்படி என்னடா செஞ்ச பார்ல என்றான்.

இல்ல மச்சி. எப்ப பீரு வாங்கப் போனாலும் அந்த நாப்பது வயசு ஆன்ட்டியே தருது. அதான் மினி பீரு கொடுக்க இருவது வயசுல யாரும் இல்லையான்னு கேட்டேன் என்றான்.

யாரோ பலமாக சிரிக்க சிரிப்பு வந்த திசையை பத்துக் கண்களும் பார்த்தது. நர்சு சிரித்துக் கொண்டிருந்தார்.

47 கருத்துக்குத்து:

MayVee on February 23, 2009 at 10:31 AM said...

nanga thaan 1st u

MayVee on February 23, 2009 at 10:32 AM said...

supernga....
nalla padivu

அன்புடன் அருணா on February 23, 2009 at 10:37 AM said...

"அடையாறில் ஓடிய இரத்த ஆறு"
என்னமோ ஏதோன்னு பயந்து போய் வந்தா......அடப் பாவி....
அன்புடன் அருணா

தாரணி பிரியா on February 23, 2009 at 10:44 AM said...

:)))))))))))))

தாரணி பிரியா on February 23, 2009 at 10:45 AM said...

:)))))))))))))

அத்திரி on February 23, 2009 at 10:49 AM said...

ஏதோ சமூக பிரச்சினையின்னு ஓடி வந்தேன்........ கொய்யால....

கார்க்கி on February 23, 2009 at 10:51 AM said...

/ MayVee said...
supernga....
nalla padivu//

நன்றி மேவீ.. நேற்றைய கும்மிக்கும் ஸ்பெஷல் நன்றி

**********
//அன்புடன் அருணா said...
"அடையாறில் ஓடிய இரத்த ஆறு"
என்னமோ ஏதோன்னு பயந்து போய் வந்தா......அடப் பா//

ஏங்க அங்கேயாதான் புட்டிக்கதைகள் என்ற லேபிள் தெரியுதே!!!

*************
/ தாரணி பிரியா said...
:)))))))))))))//

இந்த தடவ ஓக்கேவா தா.பி?

***********

/ அத்திரி said...
ஏதோ சமூக பிரச்சினையின்னு ஓடி வந்தேன்........ கொய்யால.//

லேபிள் பாருங்க சகா.. புட்டிக்கதைகள் என்ற பேர பார்த்து தொடர்கதைன்னு ஓடிடறாங்க.. அவங்களுக்கு விரிச்ச வலை.. :))))

ஸ்ரீமதி on February 23, 2009 at 10:59 AM said...

ஹா ஹா ஹா சூப்பர் :)))

ஸ்ரீமதி on February 23, 2009 at 11:01 AM said...

//குறுக்குத் தெரு வழியாக கிறுக்கு பசங்க ஓட்டம்னு //

தெளிவா தான் இருந்துருக்காரு ஏழு ;)))

ஸ்ரீமதி on February 23, 2009 at 11:01 AM said...

//எப்ப பீரு வாங்கப் போனாலும் அந்த நாப்பது வயசு ஆன்ட்டியே தருது. அதான் மினி பீரு கொடுக்க இருவது வயசுல யாரும் இல்லையான்னு கேட்டேன் என்றான்.//

:))

radhika on February 23, 2009 at 11:32 AM said...

hilarious.

ரமேஷ் வைத்யா on February 23, 2009 at 11:33 AM said...

அடப்பாவி, பிக்கிறியேப்பா..!

அசோசியேட் on February 23, 2009 at 11:57 AM said...

approved as noted !

super!

கார்க்கி on February 23, 2009 at 12:24 PM said...

// ஸ்ரீமதி said...
ஹா ஹா ஹா சூப்பர் :)))//

வாம்மா மின்னல்..

***********

/ radhika said...
hilarious//

நன்றி ராதிகா..

***********
/ ரமேஷ் வைத்யா said...
அடப்பாவி, பிக்கிறியேப்பா//

:)))

************
/ அசோசியேட் said...
approved as noted !

super!//

நன்றி சகா

விஜய் on February 23, 2009 at 12:30 PM said...

mm, Weekend naalae thanni story thaana......

பரிசல்காரன் on February 23, 2009 at 12:37 PM said...

கலக்கறியே சகா!

எல்லாம் முடிஞ்சு ஏழுமலைக்கு கல்யாணம் ஆனப்பறம் இதையெல்லாம் தொகுத்து அவனுக்குக் குடு! (அப்படியே எங்களுக்கும்!)

வித்யா on February 23, 2009 at 12:39 PM said...

:)))))))

கார்க்கி on February 23, 2009 at 1:06 PM said...

/ விஜய் said...
mm, Weekend naalae thanni story thaana.....//

அப்படி இல்லைங்க. வாராவாரம் ஒரு புட்டிக்கதை..

*********
// பரிசல்காரன் said...
கலக்கறியே சகா!

எல்லாம் முடிஞ்சு ஏழுமலைக்கு கல்யாணம் ஆனப்பறம் இதையெல்லாம் தொகுத்து அவனுக்குக் குடு! (அப்படியே எங்களுக்கும்!//

அவனுக்கு கல்யானம் போன வருஷம் ஆயிடுச்சு சகா.. உங்களுக்கு தொகுத்து கொடுக்கிறேன்

************
/ வித்யா said...
:)))))))/

ஓகேவா கொ.ப.செ?

Jenbond on February 23, 2009 at 1:24 PM said...

சாக கலக்கல், சூப்பர், அட்டகாசம்........ இப்படின்னு சொல்லி சொல்லி ரொம்ப போர்
அடிக்குது. நீங்க எந்த ஏரியா? இல்ல எங்க ஏரியா பத்தி சரியா சொன்னதால கேட்கிறேன்.

ஸ்ரீமதி on February 23, 2009 at 1:28 PM said...

me the 20:):)

Truth on February 23, 2009 at 1:41 PM said...

கடைசியா அந்த நர்ஸ் என்ன ஆனாங்க? அத பத்தி அடுத்தப் பதிவு வருமா? :-)

தாரணி பிரியா on February 23, 2009 at 2:09 PM said...

ம் இந்த தடவை ஏழுமலை ஃபார்ம்க்கு வந்துட்டார் கார்க்கி :)

புன்னகை on February 23, 2009 at 2:20 PM said...

//இல்ல மச்சி. எப்ப பீரு வாங்கப் போனாலும் அந்த நாப்பது வயசு ஆன்ட்டியே தருது. அதான் மினி பீரு கொடுக்க இருவது வயசுல யாரும் இல்லையான்னு கேட்டேன் என்றான்//
இப்படியெல்லாம் எப்படி தான் யோசிக்கிறீங்களோ? :-)

Poornima Saravana kumar on February 23, 2009 at 3:10 PM said...

:)))

கார்க்கி on February 23, 2009 at 3:27 PM said...

// Jenbond said...
சாக கலக்கல், சூப்பர், அட்டகாசம்........ இப்படின்னு சொல்லி சொல்லி ரொம்ப போர்
அடிக்குது. நீங்க எந்த ஏரியா? இல்ல எங்க ஏரியா பத்தி சரியா சொன்னதால கேட்கிறேன்//

ரொம்ப நன்றி சகா.. நான் படிச்சது தரமனி சி.பி.டி வளாகத்தில். :))

**************
/ Truth said...
கடைசியா அந்த நர்ஸ் என்ன ஆனாங்க? அத பத்தி அடுத்தப் பதிவு வருமா? //

ஆமாங்க.. வெகு விரைவில்

*************
/ தாரணி பிரியா said...
ம் இந்த தடவை ஏழுமலை ஃபார்ம்க்கு வந்துட்டார் கார்க்கி ://

:))))

**************
/ புன்னகை said...

இப்படியெல்லாம் எப்படி தான் யோசிக்கிறீங்களோ? :-//

கிகிகிகி..

************

/ Poornima Saravana kumar said...
:)))//

கொஞ்சம் நல்லாத்தான் சிரியேன்

prakash on February 23, 2009 at 3:54 PM said...

கலக்கல்.....

குசும்பன் on February 23, 2009 at 4:29 PM said...

பாலாஜி கதைக்குள்ள வந்தாச்சில்ல இனி ஒரே மஜாதான்:)))

அமிர்தவர்ஷினி அம்மா on February 23, 2009 at 4:31 PM said...

:)))))))

நான் ஆதவன் on February 23, 2009 at 4:33 PM said...

கலக்கல்..

Thusha on February 23, 2009 at 5:11 PM said...

முடியால அண்ணா .............
நீங்க ஓடி கலைத்திர்களோ இல்லையே நாம் சிரித்துக் களைத்துப் போனோம்

Thusha on February 23, 2009 at 5:14 PM said...

"/ Truth said...
கடைசியா அந்த நர்ஸ் என்ன ஆனாங்க? அத பத்தி அடுத்தப் பதிவு வருமா? //

ஆமாங்க.. வெகு விரைவில்"

நல்லத்தான் ஐடியா எடுத்துக் கொடுக் கிறங்கப்பா

கார்க்கி on February 23, 2009 at 5:44 PM said...

// prakash said...
கலக்கல்...//

என்ன சகா? வேலை அதிகமோ? ஒரே வார்த்தைல முடிச்சிட்டிங்க

*********

// குசும்பன் said...
பாலாஜி கதைக்குள்ள வந்தாச்சில்ல இனி ஒரே மஜாதான்//

அவன் கதைய எழுதனா அது ‘குட்டி’கதைகள் ஆயிடும் தல

**************
/ அமிர்தவர்ஷினி அம்மா said...
:)))))))/

பெண்கள் அனைவரும் சொல்லி வச்சி ஸ்மைலி போடறீங்களா?

***********
/நான் ஆதவன் said...
கலக்கல்/

நன்றி சகா

*************
/ Thusha said...
முடியால அண்ணா .............
நீங்க ஓடி கலைத்திர்களோ இல்லையே நாம் சிரித்துக் களைத்துப் போனோ/

:)))))))))

Karthik on February 23, 2009 at 5:53 PM said...

ஏ ஆர் ரஹ்மானுக்கு அடுத்து நம்ம ஏழுமலைதான் என்னை திரும்பவும் ப்ளாக் பக்கம் இழுத்துட்டு வந்தார். ஏன் கார்க்கி இப்படி பண்றீங்க??? ஒரு ப்ரேக் விடலாம்னா முடியல..! :)

பாண்டி-பரணி on February 23, 2009 at 8:10 PM said...

//அடையாறில் ஓடிய இரத்த ஆறு. //

//குறுக்குத் தெரு வழியாக கிறுக்கு பசங்க ஓட்டம்னு//

அஹ அற்புதம் 7 தல back to form..

தமிழ்ப்பறவை on February 23, 2009 at 9:35 PM said...

ஓ.கே. தல...
கொஞ்சம் பெப் கம்மி....

affable joe on February 23, 2009 at 9:38 PM said...

இன்றைக்கு போதை சற்று கம்மி சரக்கு பலயதோ !!!!

HS on February 23, 2009 at 10:07 PM said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

தமிழ் பிரியன் on February 24, 2009 at 12:35 AM said...

செம கலக்கல்!

Anonymous said...

தலைப்ப பார்த்து பயந்திட்டேன்....அக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Lancelot on February 24, 2009 at 7:12 AM said...

ha ha ha....half beerukae intha alambunaa...omg cannot imagine(bharathiraja english) blog rolling you...

SurveySan on February 24, 2009 at 7:19 AM said...

SSSSSsssss :)

Anonymous said...

கலக்கல் நல்லா இருக்கு

Anonymous said...

எனக்கு ஒரு சின்ன சந்தேகம். இது கதையா?

கார்க்கி on February 24, 2009 at 9:56 AM said...

/ Karthik said...
ஏ ஆர் ரஹ்மானுக்கு அடுத்து நம்ம ஏழுமலைதான் என்னை திரும்பவும் ப்ளாக் பக்கம் இழுத்துட்டு வந்தார். ஏன் கார்க்கி இப்படி பண்றீங்க??? ஒரு ப்ரேக் விடலாம்னா முடியல//

:))))))

***********
/ பாண்டி-பரணி said...
//அடையாறில் ஓடிய இரத்த ஆறு. //

//குறுக்குத் தெரு வழியாக கிறுக்கு பசங்க ஓட்டம்னு//

அஹ அற்புதம் 7 தல back to for/

நன்றி சகா

************
/ தமிழ்ப்பறவை said...
ஓ.கே. தல...
கொஞ்சம் பெப் கம்மி./

அப்படியா????

**********
/ affable joe said...
இன்றைக்கு போதை சற்று கம்மி சரக்கு பலயதோ !!!//

என்னங்க? புதுசு தாங்க

கார்க்கி on February 24, 2009 at 9:59 AM said...

/ தமிழ் பிரியன் said...
செம கலக்கல்!
//

நன்றி சகா

************
// Thooya said...
தலைப்ப பார்த்து பயந்திட்டேன்....அக்ர்ர்ர்ர்ர்ர்ர்//

ஏன் சகி?

*********
// Lancelot said...
ha ha ha....half beerukae intha alambunaa...omg cannot imagine(bharathiraja english) blog rolling you.//

நன்றி சகா

****************
/ SurveySan said...
SSSSSsssss :/

வருகைக்கு நன்றி தல

*************
/ மகா said...
எனக்கு ஒரு சின்ன சந்தேகம். இது கதையா//

ஆமாங்க

விஜய் on February 24, 2009 at 12:24 PM said...

//அப்படி இல்லைங்க. வாராவாரம் ஒரு புட்டிக்கதை..//
Means.........vara weeks ellathukkum oru "thanni" story irukkunu sollreenga.......so neraya adichirukeenganu vechukalama????

தாமிரா on March 1, 2009 at 1:03 PM said...

:))

 

all rights reserved to www.karkibava.com