Feb 18, 2009

சர்வம் - இசை விமர்சனம்


   விஷ்ணுவர்தன் - யுவன் கூட்டணியைப் பற்றி தமிழகமே அறியும். குறும்பில் (படம் பேருப்பா) இவர்கள் ஆரம்பித்து வைத்த ரீமிக்ஸ் காய்ச்சல் (ஆசை நூறுவகை) இன்னமும் முழுமையாய் விட்டபாடில்லை. அதைத் தொடர்ந்து பட்டியல், பில்லா என டாப் கியரில் போய்க் கொண்டிருக்கிறது இந்த கூட்டணி. பில்லாவின் பாடல்கள் ஆரம்பத்தில் சறுக்கல் என்று பேசப்பட்டாலும் மை நேம் இஸ் பில்லா மற்றும் வெத்தலயை போட்டேன்டி இரண்டும் ரியல் ஹிட்ஸ் என்பதை மறுக்க முடியாது.  இவர்களின் அடுத்த படம் சர்வம். ஆர்யாவும் த்ரிஷாவும் இணையும் முதல் படம்.

1) அடடா வா(இளையராஜா, ஆண்டிரியா)

   வாவ். இந்தப் பாடலை ராஜாவைப் பாட வைக்க யுவன் ரொம்ப மெனெக்கட்டிருப்பார். ஆனால் ரெக்கார்டிங் முடிந்த பின் ராஜா இன்னொரு பாட்டு இப்படி கொடு என்றுக் கேட்டிருப்பார். A typical Pub song. நடுநடுவே புல்லாங்குழல் மேஜிக் செய்கிறது. அதிரடியான ரிதத்திற்கும் அல்ட்ரா மாடர்ன் ஆண்டிரியாவின் குரலுக்கும் (பச்சைக்கிளி மு.ச. பட ஹீரோயின் தாம்ப்பா)  ஈடு கொடுத்து பின்னியிருக்கிறார் ராஜா. கைய கொடுங்க யுவன். உங்க அப்பாதான் இளையராஜாவாமே?

2) நீதானே (யுவன்)

   போகாதே, ஒரு கல் கண்னாடி, நினைத்து நினைத்துப் பார்த்தேன், பொய் சொல்ல என யுவனுக்கென்று ஒரு டைப்பான சோகப்பாடல் ஒன்று உண்டு. அதில் எப்போதும் யுவன் ஏமாற்றினதில்லை. இந்த முறை ஒரு சின்ன டவுட்.  எத்தணை முறைக் கேட்டாலும் மனதில் பச்சக் என்று ஒட்டவில்லை.  ஆங்காங்கே ஹைபிட்ச்சில் ஏ.ஆர்.ஆர். போல முயற்சி செய்கிறாரோ? சாரி யுவன். அது அவரின் பலம். பா.விஜய் பாடல் எழுதுவது எப்படி என்பதை மறந்து போய்விட்டார் என்று நினைக்கிறேன்.

3) சுட்ட சூரியனே (விஜய் யேசுதாஸ்)

     மெல்லத் தொடங்கி செட்டில ஆனபின் அடித்து ஆடும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் போல ஆகிவிட்டார் விஜய். சமீபகாலமாக பல நல்லப் பாடல்களை யுவன் இவருக்கு கொடுக்கிறார். இதுவும் அப்படி ஒன்றுதான். நல்ல ஃபோக் சாங். இசைக்கருவிகளை மீறி ஒலிக்கிறது விஜயின் இளமை. இந்த பேரு இருக்கிறவங்க எல்லோருமே பட்டய கிளப்புவாங்க போல(அடங்குடா.. நெகட்டிவ் ஓட்டு வேணுமா)

4) காற்றுக்குள்ளே (யுவன்)

மீண்டும் யுவன். மழைத்துளியின் சத்தம் வருடுகிறது. வித்தியாசமான் முயற்சி. கார்த்திக் அல்லது பென்னி தயாள் பாடியிருந்தால் இன்னும் அருமையாயிருக்குமோ? கிடாரில் எதை வாசித்தாலும் நல்லாதானிருக்கும். வயலினுக்கும் கிடாருக்கும் ரிலே ரேஸ் போட்டி. வரிகள் சுகம். காதலியின் பிரிவை உணர்த்தியிருக்கின்றன. ஆர்யா முகத்தை விறைப்பாக இல்லாமல் பிரிவின் வலியைக் காட்டுவாரா? இல்லை, போடி என்று காசிக்கு போவாரா என்று பார்ப்போம்.

5) சிறகுகள் (ஜாவித் அலி, மதுஸ்ரீ)

     சாதனா சர்கம், மதுஸ்ரீ, ஷ்ரேயா கோஷல். இவங்க மூனு பேரும் பாடும் பாட்டை மூனு தடவ கேட்டாதான் வித்தியாசம் தெரிகிறது. ஜாவித் அலி இன்னும் தம் உச்சரிப்பை மேம்படுத்த வேண்டும். இல்லையென்றால் டாக்ஸி டாக்ஸி போன்ற பாடல் பாடுவது நலம். எளிதில் ரீச்சாக கூடிய ரிதம். ஹிட்டாகிவிடும். இரண்டு பேருக்கும் ஆடத் தெரியாது. எப்படித்தான் எடுத்தாரோ விஷ்ணு?

6) தீம் மீயுஸீக்

   யுவனின் பலமான ஏரியா. பில்லா தீம் மியூஸிக் இன்னமும் என் ரிங் டோனாக இருக்கிறது. படம் த்ரில்லர் என்பதை இதை வைத்தே சொல்ல முடிகிறது. கிடார் (ஸ்பானிஷ் கிடார் என நினைக்கிறேன்) பீஸோடு தொடங்கி heavy metal notes க்கு மாறுகிறது. பில்லாவின் சாயல் தெரிந்தாலும் எக்ஸலன்ட் யுவன்.

************************************************

  வழக்கமான விஷ்ணுவின் படம் போல சில நல்லப் பாடல்களும் சில சுமாரன பாடல்களும் தான் சர்வமும்.(ஐ மீன் சர்வம் படத்திலும்). படம் வெளிவந்த பின் தான் ஆடியோ சேல்ஸ் ஏறும். யுவனின் சமீபத்திய சாதனையான குங்கும பூவும் கொஞ்சு புறாவோடும் இதை ஒப்பிடவே முடியாது. அது யுவன் ராஜாவாகும் முயற்சி. இதில் ராஜாவை யுவனாக்கும் முயற்சி.

53 கருத்துக்குத்து:

gayathri on February 18, 2009 at 1:02 PM said...

me they 1st

gayathri on February 18, 2009 at 1:03 PM said...

ok wait panuga post padichitu varen

கும்க்கி on February 18, 2009 at 1:03 PM said...

மியாவ் த செகண்ட்.

கும்க்கி on February 18, 2009 at 1:06 PM said...

பாட்டு மட்டுமா..?
பட விமரிசனமாக்கும் என்று நினைத்தேன் முதலில்.

vinoth gowtham on February 18, 2009 at 1:12 PM said...

//Billa Theme தான் என்னோட ரிங் டோன்...//

நம்ப முடியவில்லைஐஐஐஐஐஐஐஐ.

தாரணி பிரியா on February 18, 2009 at 1:12 PM said...

கார்க்கி இது நீங்க எழுதினதுதானா?

நம்ப முடியவில்லை வில்லை :)

//பில்லா தீம் மியூஸிக் இன்னமும் என் ரிங் டோனாக இருக்கிறது//

நிஜமாவா ஆச்சரியமா இருக்கு

தாரணி பிரியா on February 18, 2009 at 1:16 PM said...

யுவனுக்கு சோக பாட்டுகள்ல் தொண்டைக்குழிக்குள்ளயே பாடற பாட்டுதான் செட்டாகுது போல. அவர் பாடினதுல எனக்கு பிடிச்சது போகாதேதான்

தாரணி பிரியா on February 18, 2009 at 1:17 PM said...

//இந்த பேரு இருக்கிறவங்க எல்லோருமே பட்டய கிளப்புவாங்க போல//

//பா.விஜய் பாடல் எழுதுவது எப்படி என்பதை மறந்து போய்விட்டார் என்று நினைக்கிறேன்//

:)

கார்க்கி on February 18, 2009 at 1:30 PM said...

@காயத்ரி,

படிச்சாச்சா?

***************
// கும்க்கி said...
பாட்டு மட்டுமா..?
பட விமரிசனமாக்கும் என்று நினைத்தேன் முதலில்//

படம் இன்னும் வரல தல

************
/vinoth gowtham said...
//Billa Theme தான் என்னோட ரிங் டோன்...//

நம்ப முடியவில்லைஐஐஐஐஐஐஐ//

சரி. நம்பாதீங்க :))

*************
///பில்லா தீம் மியூஸிக் இன்னமும் என் ரிங் டோனாக இருக்கிறது//

நிஜமாவா ஆச்சரியமா இருக்/

இசைக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்?

/ தாரணி பிரியா said...
//இந்த பேரு இருக்கிறவங்க எல்லோருமே பட்டய கிளப்புவாங்க போல//

//பா.விஜய் பாடல் எழுதுவது எப்படி என்பதை மறந்து போய்விட்டார் என்று நினைக்கிறேன்///

மறந்து போய் விட்டார்ன்னா முதல்லா சூப்பரா எழுதினார்னு அர்த்தம்தானே.. மேலும் அவர் பா.விஜய். வெற்ய்ம் விஜயல்லா.(அப்பாடா)

கும்க்கி on February 18, 2009 at 1:43 PM said...

இருங்க எறக்கி கேட்டுபிடலாம்.

ஸ்ரீமதி on February 18, 2009 at 1:57 PM said...

:))))))))

Anonymous said...

//அது யுவன் ராஜாவாகும் முயற்சி. இதில் ராஜாவை யுவனாக்கும் முயற்சி. //

கலக்குற கார்த்தி. கூர்ந்த அவதானிப்பு உன்னுடையது.

வித்யா on February 18, 2009 at 2:25 PM said...

யோவ் லிங்க் எங்கே? என்னால போய் தேடிட்டு இருக்கமுடியாது:)

வெயிலான் on February 18, 2009 at 2:31 PM said...

கூர்மையான விமர்சனம் பவா!

பரிசல்காரன் on February 18, 2009 at 2:37 PM said...

தலைப்ப மாத்து சகா..

சர்வம் - இசை விமர்சனம்”

முரளிகண்ணன் on February 18, 2009 at 2:50 PM said...

கார்க்கி, படம் பற்றிய பீல் மற்ற பாடல்களில் கிடைக்கிறதா?. (தீம் மியூசிக் - திரில்லர்)

gayathri on February 18, 2009 at 2:52 PM said...

படிச்சாச்சா?

ippa than padichen.

கார்க்கி on February 18, 2009 at 2:58 PM said...

/ ஸ்ரீமதி said...
:))))))))/

:)))

************

// வடகரை வேலன் said...
//அது யுவன் ராஜாவாகும் முயற்சி. இதில் ராஜாவை யுவனாக்கும் முயற்சி. //

கலக்குற கார்த்தி. கூர்ந்த அவதானிப்பு உன்னுடையது//

நன்றி அண்ணாச்சி

****************
/வித்யா said...
யோவ் லிங்க் எங்கே? என்னால போய் தேடிட்டு இருக்கமுடியாது:/

சிடி வாங்கி கேளுங்க..

*****
/ வெயிலான் said...
கூர்மையான விமர்சனம் பவா/

நன்றி சகா. கேர்ஃபுல்லா படிங்க. கண்ணை குத்திட போது

கார்க்கி on February 18, 2009 at 3:03 PM said...

/ பரிசல்காரன் said...
தலைப்ப மாத்து சகா..

சர்வம் - இசை விமர்சனம்/

மாத்திட்டேன் சகா. படமே வரலையே எப்படி விமர்சனம் எழுத முடியும்? லேபிளில் சரியாத்தான் போட்டிருக்கேன்.. சரி பதிவ பத்தி??????

***********
/ முரளிகண்ணன் said...
கார்க்கி, படம் பற்றிய பீல் மற்ற பாடல்களில் கிடைக்கிறதா?. (தீம் மியூசிக் - திரில்லர்//

இல்ல தல. சாதரண படத்துக்கு இருக்கிற மியூஸீக்தான். ஆனா ஓக்கே..

********

// gayathri said...
படிச்சாச்சா?

ippa than padichen//

என்னதான் ஆச்சு கிரெடிட் கார்டு? மெய்ல் அனுப்புவிங்களா மாட்டிங்களா?

அனுஜன்யா on February 18, 2009 at 3:04 PM said...

இது யூத். அட்டகாச பதிவு.

//அது யுவன் ராஜாவாகும் முயற்சி. இதில் ராஜாவை யுவனாக்கும் முயற்சி. //

ரூம் போட்டு யோசிக்கிறியா? சூப்பர்மா.

அனுஜன்யா

prakash on February 18, 2009 at 3:11 PM said...

கார்க்கி அதென்ன இப்பல்லாம் மதியமா பதிவு போடற?

காலைல போட்டாதான் [பதிவ] நல்ல இருக்கு

prakash on February 18, 2009 at 3:13 PM said...

//கைய கொடுங்க யுவன். உங்க அப்பாதான் இளையராஜாவாமே?//

சூப்பர்...

Rajeswari on February 18, 2009 at 3:17 PM said...

கேசட் எங்க வாங்குனீங்க ?

prakash on February 18, 2009 at 3:18 PM said...

//ஆங்காங்கே ஹைபிட்ச்சில் ஏ.ஆர்.ஆர். போல முயற்சி செய்கிறாரோ?//

இசையமைக்க தெரிந்த அளவு யுவனுக்கு பாடும் திறமை இல்லை..

அந்த விஷயத்தில் இளையராஜாவும் ரஹ்மானும் பெஸ்ட் ...

கும்க்கி on February 18, 2009 at 3:25 PM said...

வணக்கம் ப்ரகாஷ்..
நல்லாருக்கீங்களா...
கியாபகமிருக்கா..?

prakash on February 18, 2009 at 3:29 PM said...

வணக்கம் கும்க்கி...

என்ன இப்படி கேட்டுட்டிங்க...

உங்கள மறக்க முடியுமா? நீங்க எப்படி இருக்கீங்க?

கும்க்கி on February 18, 2009 at 3:45 PM said...

ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கேன்.
வேளை பளு அதிகம்.

prakash on February 18, 2009 at 4:00 PM said...

லூஸ்ல விடுங்க கும்க்கி,
எல்லாம் சரியாகிடும்.
அதான் ரிலாக்ஸ் பண்ண கார்க்கி பதிவு இருக்கு இல்ல :))

Anbu on February 18, 2009 at 4:20 PM said...

\\சாதனா சர்கம், மதுஸ்ரீ, ஷ்ரேயா கோஷல். இவங்க மூனு பேரும் பாடும் பாட்டை மூனு தடவ கேட்டாதான் வித்தியாசம் தெரிகிறது.\\

கண்டிப்பாக அண்ணா.நானும் பலமுறை குழப்பமடைந்துள்ளேன்.

பாடல் விமர்சனம் நன்றாக உள்ளது

Anbu on February 18, 2009 at 4:22 PM said...

இப்பத்தான் தரவிறக்கம் செய்தேன்.கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன் அண்ணா

gayathri on February 18, 2009 at 4:50 PM said...

// gayathri said...
படிச்சாச்சா?

ippa than padichen//

என்னதான் ஆச்சு கிரெடிட் கார்டு? மெய்ல் அனுப்புவிங்களா மாட்டிங்களா?

கிரெடிட் கார்டு mailla anupa mudiyathu venumna unga vettu address kodunga vetuku anupuren enna deel ok va

தாமிரா on February 18, 2009 at 6:07 PM said...

:)

Karthik on February 18, 2009 at 10:36 PM said...

சூப்பர்ப் கார்க்கி..! ட்ரெய்லர் மட்டும்தான் பார்த்தேன். பாட்டு இன்னும் கேட்கலை.

//பில்லா தீம் மியூஸிக் இன்னமும் என் ரிங் டோனாக இருக்கிறது.

தல Rockzzzzzzzz!

//இந்த பேரு இருக்கிறவங்க எல்லோருமே பட்டய கிளப்புவாங்க போல

ஆமாங்க. கிரீடம்னு ஒரு படம். என்னமா எடுத்திருக்காருன்னு நினைக்கிறீங்க!
:)

narsim on February 19, 2009 at 10:04 AM said...

வடகரை வேலன் said...
//அது யுவன் ராஜாவாகும் முயற்சி. இதில் ராஜாவை யுவனாக்கும் முயற்சி. //

கலக்குற கார்த்தி. கூர்ந்த அவதானிப்பு உன்னுடையது.
//

இன்னும் என்ன வேண்டும்... சகா... கலக்கல்

கார்க்கி on February 19, 2009 at 10:15 AM said...

// அனுஜன்யா said...
இது யூத். அட்டகாச பதிவு.

//அது யுவன் ராஜாவாகும் முயற்சி. இதில் ராஜாவை யுவனாக்கும் முயற்சி. //

ரூம் போட்டு யோசிக்கிறியா? சூப்பர்மா//

என் வீடே ரூம் தான் தல..(ஹைதைல)

***************
/ prakash said...
கார்க்கி அதென்ன இப்பல்லாம் மதியமா பதிவு போடற?

காலைல போட்டாதான் [பதிவ] நல்ல இருக்கு//

கைவசம் எதுவுமில்ல தல. வந்து எழுதி போட மதியம் ஆயிடுது

************
// Rajeswari said...
கேசட் எங்க வாங்குனீங்//

மியாபூர் மியூஸீக் வேர்ல்ட்

********
// கும்க்கி said...
ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கேன்.
வேளை பளு அதிக//

உங்களுக்கே வேலையா? கலி முத்திடுச்சு

கார்க்கி on February 19, 2009 at 10:20 AM said...

// Anbu said...
இப்பத்தான் தரவிறக்கம் செய்தேன்.கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன் அண்//

கேட்டு சொல்லு

***********
/ தாமிரா said...
:)/

ஆஜரா?

***********
// Karthik said...
சூப்பர்ப் கார்க்கி..! ட்ரெய்லர் மட்டும்தான் பார்த்தேன். பாட்டு இன்னும் கேட்கலை.

//பில்லா தீம் மியூஸிக் இன்னமும் என் ரிங் டோனாக இருக்கிறது.

தல Rockzzzzzzzz//

அது யுவன் RockZZZZZ.. தல only Walkzzzzzzzz

************

// narsim said...
வடகரை வேலன் said...
//அது யுவன் ராஜாவாகும் முயற்சி. இதில் ராஜாவை யுவனாக்கும் முயற்சி. //

கலக்குற கார்த்தி. கூர்ந்த அவதானிப்பு உன்னுடையது.
//

இன்னும் என்ன வேண்டும்... சகா... கலக்க//

மகிழ்ச்சி தல..

MayVee on February 19, 2009 at 11:42 AM said...

"குறும்பில் (படம் பேருப்பா) இவர்கள் ஆரம்பித்து வைத்த ரீமிக்ஸ் காய்ச்சல் (ஆசை நூறுவகை) இன்னமும் முழுமையாய் விட்டபாடில்லை"
எந்திரன்யில் கூட ஒரு ரீமிக்ஸ் இருக்காம்........
சூப்பர் ஸ்டார் கூட ரீமிக்ஸ் பிவேர் வந்துருச்சு இவங்களால

MayVee on February 19, 2009 at 11:51 AM said...

"ஈடு கொடுத்து பின்னியிருக்கிறார் ராஜா. கைய கொடுங்க யுவன். உங்க அப்பாதான் இளையராஜாவாமே?"
பருத்தி வீரன் படத்திலையே அந்த range க்கு வந்துட்டாருன்னு நினைக்குறேன்.....

MayVee on February 19, 2009 at 11:53 AM said...

"பா.விஜய் பாடல் எழுதுவது எப்படி என்பதை மறந்து போய்விட்டார் என்று நினைக்கிறேன்."

அதான் தாய் காவியத்தில் ஹீரோவா நடிக்கிறார்ல....
அப்புறம் பாட்டு எழுத ஏது டைம் ......

MayVee on February 19, 2009 at 11:56 AM said...

"விஜயின் இளமை. இந்த பேரு இருக்கிறவங்க எல்லோருமே பட்டய கிளப்புவாங்க போல(அடங்குடா.. நெகட்டிவ் ஓட்டு வேணுமா)"
முடியல சாமி.....
என்னங்க... நடிகர் விஜய்க்கு promo வா

MayVee on February 19, 2009 at 11:58 AM said...

"காதலியின் பிரிவை உணர்த்தியிருக்கின்றன"
ஆமாங்க...
காதல் ன்ன சும்மா இல்லை

MayVee on February 19, 2009 at 12:00 PM said...

"பில்லா தீம் மியூஸிக் இன்னமும் என் ரிங் டோனாக இருக்கிறது."
அந்த டோன் popular க்கு காரணம் தல தான்.....

"படம் த்ரில்லர் என்பதை இதை வைத்தே சொல்ல முடிகிறது"
நானும் கேட்டேன் ....

MayVee on February 19, 2009 at 12:02 PM said...

"அது யுவன் ராஜாவாகும் முயற்சி. இதில் ராஜாவை யுவனாக்கும் முயற்சி. "
இது தான் இந்த பதிவின் டாப்.....

gayathri on February 19, 2009 at 12:02 PM said...

ennaga karki naan ketathuku pathil soiive illa ennna ippa sollugaகிரெடிட் கார்டு venuma

gayathri on February 19, 2009 at 12:03 PM said...

me they 45

Bleachingpowder on February 19, 2009 at 12:36 PM said...

//யுவன். உங்க அப்பாதான் இளையராஜாவாமே?
//
NOooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

அப்பாவை விட பெருசா ஒன்னும் பண்ண வேண்டாம். பண்ணினாலும் அதை நான் ஒத்துக்க மாட்டேன் அது உன்மையாகவே இருந்தாலும். ராஜாவுக்கு மேலே யாரும் வர வேண்டாம். ராஜா அறுபது கலைகளில் ஐம்பத்தொன்பதை மட்டும் யுவனுக்கு கற்று கொடுத்தால் போதும் தல.

கார்க்கி on February 19, 2009 at 1:20 PM said...

@மேவீ,

அடிச்சு கிளப்புங்க.. தல தான் காரணமாம்? அப்படின்னா நான் அதை வச்சிருக்கவே மாட்டேன்.
கார்க்கி மாத்துடா ரிங்டோன..

பரிசல் காலிங்,

“ராமா ராமா ராமா ராமன்கிட்ட வில்ல கேட்டேன்”

**************
/ gayathri said...
ennaga karki naan ketathuku pathil soiive illa ennna ippa sollugaகிரெடிட் கார்டு venum//

அட நீங்க என்னங்க? ஒன்னு நீங்க மெய்ல் அனுப்புங்க iamkarki@gmail.com.. இல்லன்னா உங்க மெய்ல் ஐடி ய கொடுங்க..

**************

/ Bleachingpowder said...
//யுவன். உங்க அப்பாதான் இளையராஜாவாமே?
//
NOooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

அப்பாவை விட பெருசா ஒன்னும் பண்ண வேண்டாம். பண்ணினாலும் அதை நான் ஒத்துக்க மாட்டேன் அது உன்மையாகவே இருந்தாலும். ராஜாவுக்கு மேலே யாரும் வர வேண்டாம். ராஜா அறுபது கலைகளில் ஐம்பத்தொன்பதை மட்டும் யுவனுக்கு கற்று கொடுத்தால் போதும் த//

அது ஒரு பாராட்டுதான்.. ராஜாவை மிஞ்ச முடியாது. இனி வரும் காலம் அத்தனை பெருமையை ஒருவருக்கே தராது.. ராஜா ராஜாதான்.

விஜய் on February 19, 2009 at 3:21 PM said...

mm.......nalla sarva gnayanam ullavara???

prakash on February 19, 2009 at 4:08 PM said...

மீ த 50 போடலாம்னு வந்தேன்

prakash on February 19, 2009 at 4:09 PM said...

போட்டுட்டேன்...
கெளம்பறேன்

Sinthu on February 19, 2009 at 7:41 PM said...

" MayVee said...
"பில்லா தீம் மியூஸிக் இன்னமும் என் ரிங் டோனாக இருக்கிறது."
அந்த டோன் popular க்கு காரணம் தல தான்....."

படம் வந்தது போனது ஆனால் யுவனின் பாட்டு இப்பவும் நிக்கிது.......... புரியுதுங்களா?
அப்போ து தல க்கு இல்லீங்கோ....

Sinthu on February 19, 2009 at 7:43 PM said...

"
prakash said...
போட்டுட்டேன்...
கெளம்பறேன்"
இது கெ ளம்பிறேனா இல்லை கெள ம்பிறேனா? நீங்க எதைச் சொல்றீங்க.......

prakash on February 20, 2009 at 10:13 AM said...

//இது கெ ளம்பிறேனா இல்லை கெள ம்பிறேனா? நீங்க எதைச் சொல்றீங்க.......//

அது கெ ள ம் ப றே ன்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா........

ஆணிய புடுங்க வேணாம்:)))

 

all rights reserved to www.karkibava.com