Feb 16, 2009

புட்டிக்கதைகள்


   ஏன் மச்சி.. எதுக்கெதுக்கோ நாளு வச்சு கொண்டாடறாங்க. உண்மையா கொண்டாடுற குடிகாரர்களுக்கு ஏதாவது நாளிருக்காடா என்று பியரை திறக்குமுன்னே வாய் திறந்தான் ஏழு.

உனக்கு ஒரு சைட் இல்லைன்னா உலகமே காதலர் தினம் கொண்டாட கூடாதா என்றான் ஆறு.

இப்ப யாரு காதலர் தினம் வேணாம்னு சொன்னா? குடிக்கறதுக்கு நாளிருக்கான்னுதானே கேட்டேன்.

ரைட் விடு. நாம கொண்டாடிலாம்.நீ என்னைக்கு முழு பியர் ராவா அடிக்கிறியோ அன்னைக்குத்தான் குடிகாரர்கள் தினம்.

கொண்டாடவே கூடாதுன்னு இப்படி சொல்றீயா மச்சி என்ற பாலாஜியை முறைத்தான் ஏழு.

அவனை ஏண்டா முறைக்கிற? எதுக்கு ஒன்ன கெமிஸ்ட்ரி திட்டிட்டு இருந்தாரு என்ற கேட்ட ஆறுவையும் முறைத்தான் ஏழு.

நான் சொல்றேன் மச்சி. அவரோட முக்கியமான bag காணாம போயிடுச்சாம். அதுல அவர் பண்ற ஆராய்ச்சி பத்தியெல்லாம் இருந்தததாம். அதனால அத கண்டுபுடிச்சு கொடுக்கறவங்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்னு சொல்லியிருந்தாரு.

சரி.

அது எவ்ளோ பெரிய புராஜெக்ட். அத கண்டுபுடிச்சு கொடுக்கறவங்களுக்கு வெய்ட்டா ஏதாவது தரலாமில்ல. அத விட்டுட்டு “தக்க” சன்மானம் கொடுத்தா நல்லாவாயிருக்கான்னு இவன் கேட்டத அந்த சிவசங்கரி போய் அவர் கிட்ட போட்டுக் கொடுத்துடுச்சு மச்சி.

எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்கிற என்று வியந்த பாலாஜியின் தலையில் தட்டினான் ஆறு.

இது ஒரு மேட்டரா?கிரேசி மோகன் படமும் நாடகமும் பார்த்துட்டு எதுக்கெடுத்தாலும் மொக்கை போடறான். நேத்து இப்படித்தான் எனக்கு ஃபோன் பண்ணி ஹாஸ்டல்லா பிரம்மா இருக்காரான்னா கேட்டான். அது யாருடா பிரம்மான்னா கரண்ட்டுதான்னு சொல்றான். பிரம்மாவுக்கும் த்ரீ ஃபேஸ். கரண்ட்டுக்கும் த்ரீ ஃபேஸூதானேனு அறுக்குறாண்டா.

இந்த இடத்தில் சிரித்தால் ஆறுவுக்கு கோவம் வரும் என்று தெரிந்தும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை எங்களால். இந்த கேப்பில் பாதி பியரை ராவாக அடித்துவிட்டான் ஏழு.

ஸ்லாப்ஸ்டிக் காமெடி பத்தி உனக்கென்ண்டா தெரியும் என்றான் ஏழு.

இது எப்படிடா Slapstick காமெடி ஆகுமென்றேன்.

நான் எப்ப ஜோக்கடிச்சாலும் இவன் ஸ்டிக்கால அடிக்கிறான். இல்லன்னா கன்னத்துலா Slap ஒன்னு கொடுக்கிறான். அப்ப இது Slapstick காமெடியில்லையா என்றவனுக்கு இன்னொரு Slap விழுந்தது ஆறுவிடமிருந்து.

மச்சி. இப்பெல்லாம் இவன் படிக்கிறதே இல்லடா. தண்ணியடிக்கனும். இந்த மாதிரி மொக்கையா பேசனும்.வேற எண்ணமே இல்ல. அதான்டா கஷ்டமா இருக்கு.

நான் எப்பவும் சிபிடா.

அதுயாருடா?

ஸ்டூடண்ட் நம்பர் ஒன்னுடா..

ஆங். இது ஒன்னு ஆரம்பிச்சிட்டாண்டா. எதுக்கெடுத்தாலும் சினிமாவுல எக்ஸாம்பிள் கொடுக்கறான் என்று தொடர் குற்றப்பத்திரிக்கை வாசித்தான் ஆறு.

அதுவரை அமைதி காத்த ஏழுவை சீண்டிவிட்டது பாதி பியர்.

உனக்கு எது தெரியுமோ அதப் பத்திதானே உங்கிட்ட சொல்ல முடியும். நியூட்டனும் பாஸ்கலும் கம்யூனிஸ்ட் ரைட்டரான்னு கேட்டவன்தாண்டா நீ.

நல்லத சொன்னா கேட்கமாட்ட்டா. எப்படியோ நாசமா போங்க. இவனால நாம் எல்லோரும் ஒரு நாள் வாங்கப் போறோம் பிரின்சிகிட்ட என்று சொல்லிவிட்டு தன் மானம் நடனமாடியதை மறைக்க  பியரை அடித்தான் ஆறு.

பிரின்சிக்கு இவன பத்தி தெரியும்டா. மெக்கானிக்கல் பசங்களுக்கு அவரு செமினார் எடுத்தப்ப, கம்ப்யூட்டர் படிச்சாதான் உங்களுக்கு இனிமேல வேலை கிடைக்கும்னு சொன்னாரு. இவன் சும்மா இல்லாம “அப்புறம் எதுக்கு சார் நாங்க படிக்கனும். கம்ப்யூட்டர் படிச்சாலே போதுமேன்னு சொல்லியிருக்கான்”. இவன நோட் பண்ணி வச்சிருக்காரு.

மச்சி. இவன் மத்தவங்கள கலாய்ச்சதுக்கே பொங்கறீங்களே. நேத்து தலைவலி பயங்கரமா வலிச்சது. “தலைவலிக்குதுடா. பொறுக்க முடியல”னு இவன் கிட்ட சொன்னா, கூலா கேட்கிறான். “தலைவலிக்கும்போது நீ ஏண்டா பொறுக்க போற”. மவனே அப்படியே கழுத்துல கால் வச்சு கொன்னுடலாம்னு தோணுச்சு என்று பியரை போல பொங்கினான் மதன். அப்புறம் அவனா போய் மாத்திரை வாங்கிட்டு வந்தான். மாத்திர ஓரத்தையெல்லாம் வெட்டினவன ஏண்டான்னு கேட்டா “அப்பதான் சை எஃபெக்ட் வராது” னு சொல்றான்.

க்ரூப்ல புதுசா சேர்ந்த அருண் மட்டும் ஏழுவை பாவமா பார்த்தான். இரக்கப்படுகிறானா என்று கேட்டதுக்கு அவன் சோகக் கதையை சொல்லத் தொடங்கினான். ஒரு நாள் நோட்டிஸ் போர்டுடல் உனக்கு மணி ஆர்டர் போட்டிருக்காங்கனு வந்து சொன்னா ”ங்கொய்யால..யாருடா அவன் மணி? எனக்கே ஆர்டர் போடறதுனு” கேட்கறாண்டா. இவன் எப்பவுமே இப்படித்தானா என்று தன் அறியாமையை சபைக்கு சமர்ப்பித்தான் அருண்.

அனைத்து முனைகளிலிருந்தும் ஏவுகணைகள் தாக்குவதைக் கண்ட ஏழு வழக்கம்போல அரை பியரோடு தரையில் சாய்ந்தான்.

39 கருத்துக்குத்து:

அருண் on February 16, 2009 at 4:03 PM said...

Me the First

அருண் on February 16, 2009 at 4:03 PM said...

படிச்சிட்டு வாரேன்.

vinoth gowtham on February 16, 2009 at 4:06 PM said...

வணக்கம் தல..

வித்யா on February 16, 2009 at 4:17 PM said...

:)
இந்த தடவை சரக்குல கொஞ்சம் தண்ணி ஜாஸ்தியாயிடுச்சி.

ரமேஷ் வைத்யா on February 16, 2009 at 4:21 PM said...

:)))

Thusha on February 16, 2009 at 4:58 PM said...

பதிவிலா எதோ குறை அண்ணா சிரிப்போ வரலை

கார்க்கி on February 16, 2009 at 5:36 PM said...

// அருண் said...
படிச்சிட்டு வாரே//

இன்னுமா?

**************
/ vinoth gowtham said...
வணக்கம் தல//

வணக்க்க்க்க்கம்

********
// வித்யா said...
:)
இந்த தடவை சரக்குல கொஞ்சம் தண்ணி ஜாஸ்தியாயிடுச்சி/

அச்சச்சோ..அப்படியா????

கார்க்கி on February 16, 2009 at 5:37 PM said...

/ ரமேஷ் வைத்யா said...
:)))//

என்னண்ணா? ஏழு ஏமாத்திட்டாரா?????? எனக்கு புரியல

***********

/ Thusha said...
பதிவிலா எதோ குறை அண்ணா சிரிப்போ வர/

என்னப்ப்ப.. ஒப்பனிங்லயே விகடன மாதிரி அலற வைக்கறீங்க?

ஸ்ரீமதி on February 16, 2009 at 5:44 PM said...

எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அண்ணா :))

ஸ்ரீமதி on February 16, 2009 at 5:44 PM said...

me the 10th :):)

முதலமைச்சர் 2011 on February 16, 2009 at 6:20 PM said...

விழுந்து விழுந்து சிரிச்சேன் புட்டிக்கதைகள் யாவும் அருமையாக இருக்கு

முதலமைச்சர் 2011 on February 16, 2009 at 6:21 PM said...

கொடுக்கறவங்களுக்கு வெய்ட்டா ஏதாவது தரலாமில்ல. அத விட்டுட்டு “தக்க” சன்மானம் கொடுத்தா நல்லாவாயிருக்கான்னு

பிரம்மாவுக்கும் த்ரீ ஃபேஸ். கரண்ட்டுக்கும் த்ரீ ஃபேஸூதானேனு

இவன் ஸ்டிக்கால அடிக்கிறான். இல்லன்னா கன்னத்துலா Slap ஒன்னு கொடுக்கிறான். அப்ப இது Slapstick காமெடியில்லையா

உனக்கு எது தெரியுமோ அதப் பத்திதானே உங்கிட்ட சொல்ல முடியும். நியூட்டனும் பாஸ்கலும் கம்யூனிஸ்ட் ரைட்டரான்னு கேட்டவன்தாண்டா நீ.


:)))))))))))

கார்க்கி on February 16, 2009 at 7:17 PM said...

// ஸ்ரீமதி said...
எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அண்ணா :)/

ஸப்பா.. நீயாவது நல்ல வார்த்தை சொன்னியே..

*********

/ முதலமைச்சர் 2011 said...
விழுந்து விழுந்து சிரிச்சேன் புட்டிக்கதைகள் யாவும் அருமையாக இருக்கு/

வருங்கால முதலமைச்சர் வாழ்க வாழ்க.. யாருங்க ஆமை அமைச்சர்? :))

லவ்டேல் மேடி on February 16, 2009 at 7:19 PM said...

// ஏன் மச்சி.. எதுக்கெதுக்கோ நாளு வச்சு கொண்டாடறாங்க. உண்மையா கொண்டாடுற குடிகாரர்களுக்கு ஏதாவது நாளிருக்காடா என்று பியரை திறக்குமுன்னே வாய் திறந்தான் ஏழு. //

நியாயமான கருத்து ... வாழ்க ஏழு ........


// ஏன் மச்சி.. எதுக்கெதுக்கோ நாளு வச்சு கொண்டாடறாங்க. உண்மையா கொண்டாடுற குடிகாரர்களுக்கு ஏதாவது நாளிருக்காடா என்று பியரை திறக்குமுன்னே வாய் திறந்தான் ஏழு. //


வயித்தெரிச்சல் புடுச்ச ஆறு ... ஒழிக .......// . உண்மையா கொண்டாடுற குடிகாரர்களுக்கு ஏதாவது நாளிருக்காடா என்று பியரை திறக்குமுன்னே வாய் திறந்தான் ஏழு. //


அட தெனமும் நம்முளுக்கு நல்ல நாளுதாங்கோவ் ..... " ஆடில காத்தடுச்சா என்னோ ..!! ஆணில காத்தடுச்சா என்னோ ......!! உம்மி பரந்தாச்சேரி ..... பயிறு தெருஞ்சாச்சேரி ....... "


// அவரோட முக்கியமான bag காணாம போயிடுச்சாம். அதுல அவர் பண்ற ஆராய்ச்சி பத்தியெல்லாம் இருந்தததாம். //


தென்ன ஆராச்சி கண்ணு ... மூலிவ பெட்ரோலா.............??!!???.


// அதனால அத கண்டுபுடிச்சு கொடுக்கறவங்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்னு சொல்லியிருந்தாரு. ///


தென்ன சன்மானம் கண்ணு .... குச்சி முட்டாயும் ... குருவி ரொட்டியுமா.. ???


எனக்கு நேரமாச்சு .... அப்பரமா வந்து மொக்க போடுறேன் .....

புதுவை சிவா on February 16, 2009 at 7:35 PM said...

super mokkai

அன்புடன் அருணா on February 16, 2009 at 7:40 PM said...

கொஞ்சம் கிக் கம்மிதாம்பா!!!
அன்புடன் அருணா

கார்த்திகைப் பாண்டியன் on February 16, 2009 at 8:13 PM said...

என்னுடைய பதிவிற்கு முதலில் காக்டைல் என்று பெயர் இட்டிருந்தேன்.. அது ஏற்கனவே புழக்கத்தில் இருப்பதை சுட்டிக் காட்டிய தோழர் கார்க்கிக்கு நன்றி..அதனால் தலைப்பை மாற்றி விட்டேன்.. தவறினை பொறுத்தருள்க..

கார்க்கி on February 16, 2009 at 8:23 PM said...

லவ்டேல்மேடி,

உங்க பின்னூட்டங்கள் என் பதிவ விட நீலமா, சாரி, நீளமா இருக்குங்க
************

// புதுவை சிவா said...
super mokkai//

நன்றிங்க..

************
/ அன்புடன் அருணா said...
கொஞ்சம் கிக் கம்மிதாம்பா//

இப்பாதாங்க தெரியுது. ஏன் கிரேசி கமல் கூட்டணி தாய்க்குலங்களிடம் தோத்து போதுன்னு.. அடுத்த முறை மாத்திக்கிறேன். கருத்துக்கு நன்றி

**************
// கார்த்திகைப் பாண்டியன் said...
என்னுடைய பதிவிற்கு முதலில் காக்டைல் என்று பெயர் இட்டிருந்தேன்.. அது ஏற்கனவே புழக்கத்தில் இருப்பதை சுட்டிக் காட்டிய தோழர் கார்க்கிக்கு நன்றி..அதனால் தலைப்பை மாற்றி விட்டேன்.. தவறினை பொறுத்தருள்க//

என்ன சகா ரொம்ப ஃபீல் பண்றீங்க. நான் என்ன காப்பிரைட்டா வாங்கி வச்சிருக்கேன்? சும்மா சொன்னேன். குழப்பம் வருமேன்னுதான் சொன்னேன்.

affable joe on February 16, 2009 at 9:48 PM said...

"பிரம்மாவுக்கும் த்ரீ ஃபேஸ். கரண்ட்டுக்கும் த்ரீ ஃபேஸூதானேனு
"
இது ஏழு வோட கருத்தா இல்ல உங்களோடதா !!

கலக்கல் சகா எழுத்தில் முன்னேற்றம் தெரிகிறது

Jenbond on February 16, 2009 at 10:30 PM said...

\\கொடுக்கறவங்களுக்கு வெய்ட்டா ஏதாவது தரலாமில்ல. அத விட்டுட்டு “தக்க” சன்மானம் கொடுத்தா நல்லாவாயிருக்கான்னு

பிரம்மாவுக்கும் த்ரீ ஃபேஸ். கரண்ட்டுக்கும் த்ரீ ஃபேஸூதானேனு \\

கலக்கல் சகா. அரை பியரை மிக்ஸிங் போட்டு குடிக்கிற ஏழுமலையே இப்படி ஆட்டம் போட்டார்னா நீங்க எப்படி? உங்களை பத்தி சொல்லவே இல்லை.

கும்க்கி on February 16, 2009 at 11:24 PM said...

:-)))

நான் ஆதவன் on February 16, 2009 at 11:57 PM said...

சகா சூப்பர்...இதையெல்லாம் சேர்த்து ஒரு புத்தகமா வெளியிட்டா நல்லா சிரிக்கலாம்.

(புத்தகத்திற்கு "போதை ரூப கதைகள்"ன்னு தலைப்பு வைங்கன்னு நான் சொல்ல மாட்டேன்)

அத்திரி on February 17, 2009 at 7:36 AM said...

சகா என் கட பக்கம் வாங்க........... உனக்கு விருது கொடுத்திருக்கேன்.

கார்க்கி on February 17, 2009 at 9:12 AM said...

/ affable joe said...
"பிரம்மாவுக்கும் த்ரீ ஃபேஸ். கரண்ட்டுக்கும் த்ரீ ஃபேஸூதானேனு

கலக்கல் சகா எழுத்தில் முன்னேற்றம் தெரிகிறது//

நன்றி ஜோ:))

***************
// Jenbond said...
கலக்கல் சகா. அரை பியரை மிக்ஸிங் போட்டு குடிக்கிற ஏழுமலையே இப்படி ஆட்டம் போட்டார்னா நீங்க எப்படி? உங்களை பத்தி சொல்லவே இல்//

ஹிஹிஹி.. என்னைப் பத்தி நானே சொன்னா ஓவரா ஆடறான்னு(அந்த ஆடறது இல்ல) சொல்லுவாங்க சகா..

***********
// கும்க்கி said...
:-)))//

என்ன சிரிப்பு சின்னப்புள்ளத்தனமா..

பாபு on February 17, 2009 at 9:26 AM said...

//கொடுக்கறவங்களுக்கு வெய்ட்டா ஏதாவது தரலாமில்ல. அத விட்டுட்டு “தக்க” சன்மானம் கொடுத்தா நல்லாவாயிருக்கான்னு//

ரசித்தேன்

Priya Kannan on February 17, 2009 at 9:42 AM said...

உம் இந்த தடவை ஏழு கொஞ்சம் ஏமாத்திட்டார்

அனுஜன்யா on February 17, 2009 at 9:54 AM said...

கலக்கலா இருக்கு. பிரம்மா த்ரீ பேஸ் அட்டகாசம். ஆமா, பியர் ராவா குடிக்காம, வேற ஏதாவது கலந்து குடிக்க முடியுமா?

அனுஜன்யா

கார்க்கி on February 17, 2009 at 10:24 AM said...

// நான் ஆதவன் said...
சகா சூப்பர்...இதையெல்லாம் சேர்த்து ஒரு புத்தகமா வெளியிட்டா நல்லா சிரிக்கலாம்.

(புத்தகத்திற்கு "போதை ரூப கதைகள்"ன்னு தலைப்பு வைங்கன்னு நான் சொல்ல மாட்டேன்//

இல்ல சகா..புட்ட்க்கதைகள் தான் சரி.. ஆவ்வ்.. நானும் ட்ம்ப்ட் ஆயிட்டேன்.. புக்கா? போங்க சகா..

************
// அத்திரி said...
சகா என் கட பக்கம் வாங்க........... உனக்கு விருது கொடுத்திருக்கேன்/

ரொம்ப நன்றி சகா :))

************

கார்க்கி on February 17, 2009 at 10:25 AM said...

// பாபு said...
//கொடுக்கறவங்களுக்கு வெய்ட்டா ஏதாவது தரலாமில்ல. அத விட்டுட்டு “தக்க” சன்மானம் கொடுத்தா நல்லாவாயிருக்கான்னு//

ரசித்தேன்//

நன்றி சகா

************

// Priya Kannan said...
உம் இந்த தடவை ஏழு கொஞ்சம் ஏமாத்திட்டா///

அச்சச்சோ!!!!!!!!

*************

// அனுஜன்யா said...
கலக்கலா இருக்கு. பிரம்மா த்ரீ பேஸ் அட்டகாசம். ஆமா, பியர் ராவா குடிக்காம, வேற ஏதாவது கலந்து குடிக்க முடியுமா//

தெஇர்யல தல.. எப்படித்தான் அந்த கருமத்த குடிக்கறாங்களோ!!!!!:))

வெண்பூ on February 17, 2009 at 11:48 AM said...

ஏழு.. தூளு..

gayathri on February 17, 2009 at 12:35 PM said...

அனுஜன்யா said...
கலக்கலா இருக்கு. பிரம்மா த்ரீ பேஸ் அட்டகாசம். ஆமா, பியர் ராவா குடிக்காம, வேற ஏதாவது கலந்து குடிக்க முடியுமா//

தெஇர்யல தல.. எப்படித்தான் அந்த கருமத்த குடிக்கறாங்களோ!!!!!:))

neenga eppadi kudikurengalo appadi than avangalum kudippaga

gayathri on February 17, 2009 at 12:36 PM said...

மாத்திர ஓரத்தையெல்லாம் வெட்டினவன ஏண்டான்னு கேட்டா “அப்பதான் சை எஃபெக்ட் வராது” னு சொல்றான்.

:))))

விஜய் on February 17, 2009 at 1:14 PM said...

Thanni adikura sakkula Nalla Koothdipeenga polarukkae

கார்க்கி on February 17, 2009 at 1:48 PM said...

/ வெண்பூ said...
ஏழு.. தூளு.//

நன்றி சகா

*********

//gayathri said...

தெஇர்யல தல.. எப்படித்தான் அந்த கருமத்த குடிக்கறாங்களோ!!!!!:))

neenga eppadi kudikurengalo appadi than avangalum kudippaga//

நக்கல் இருக்கட்டும். ஒன்னு எனக்கு மெய்ல் அனுப்புங்க.இல்லைன்னா மெய்ல் ஐடி கொடுங்க. எனக்கு கிரெடி கார்ட் வேனும்

***************

/ விஜய் said...
Thanni adikura sakkula Nalla Koothdipeenga polarukkae//

தண்ணி அடிக்கிரதுக்கே கூத்தடிக்கத்தானே.. ஐ மீன் அவங்க.. நான் இல்ல

விஜய் on February 17, 2009 at 3:12 PM said...

35th'a vanthutaen

அத்திரி on February 18, 2009 at 1:35 AM said...

//இது எப்படிடா Slapstick காமெடி ஆகுமென்றேன்.
நான் எப்ப ஜோக்கடிச்சாலும் இவன் ஸ்டிக்கால அடிக்கிறான். இல்லன்னா கன்னத்துலா Slap ஒன்னு கொடுக்கிறான். அப்ப இது Slapstick காமெடியில்லையா என்றவனுக்கு இன்னொரு Slap விழுந்தது ஆறுவிடமிருந்து.//

சகா ஏன் இப்படி ஏழுவை போட்டுத்தாக்குற............முடியல

அத்திரி on February 18, 2009 at 1:37 AM said...

//“தலைவலிக்கும்போது நீ ஏண்டா பொறுக்க போற”. மவனே அப்படியே கழுத்துல கால் வச்சு கொன்னுடலாம்னு தோணுச்சு//

ம்ஹும்..............ஏழுமலய பாத்தே ஆகனும்................... இல்ல அவரோட!!!!!!!!! பொட்டோவ போடு சகா................

Natty on February 18, 2009 at 4:12 AM said...

ஜூப்பர்...

கார்க்கி on February 18, 2009 at 11:01 AM said...

// அத்திரி said...
//“தலைவலிக்கும்போது நீ ஏண்டா பொறுக்க போற”. மவனே அப்படியே கழுத்துல கால் வச்சு கொன்னுடலாம்னு தோணுச்சு//

ம்ஹும்..............ஏழுமலய பாத்தே ஆகனும்................... இல்ல அவரோட!!!!!!!!! பொட்டோவ போடு சகா.//

ஃபோட்டோ போட்டேனே சகா? நீங்க பார்க்க்லையா?

**********
/ Natty said...
ஜூப்பர்.//

நன்றி சகா

 

all rights reserved to www.karkibava.com