Feb 15, 2009

காதல்.. கண்றாவி..கருமம்..


   அழகான மாலை வேளை அது. சூரியன் சிவப்பு நிறத்தில் இருந்தாலும் எங்களுக்கு ரோஜாவாகாத்தான் தெரிந்தது. எங்களுக்கு என்றால் எனக்கும் என் அவளுக்கும். பிப்ரவரி 14. காதலர் தினம் கொண்டாடிக் கொண்டிருந்தோம்.

  கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம். அலைகள் சுருதி சேராமல் பாடிக் கொண்டிருந்தன. அலை வந்து மோதுகிறதே என்று பாறைகள் நகர்வதாய் தெரியவில்லை. பாறைகள் நம்மோடு வருவதில்லையே என்று அலைகளும் விடுவதாயில்லை.

“நான் தான் பாறையா?” என்றாள். எப்படி அவளுக்கு நான் யோசிப்பது தெரிந்தது  என்றுத் தெரியவில்லை.

நீதான் வந்துட்டியே.

நீ விடாம துரத்துன. சரி விடு. இப்ப அதுவா முக்கியம். நான் என்ன கிஃப்ட் வாங்கியிருக்கேன் சொல்லு?

எது வாங்கினாலும் எனக்குப் புடிக்கும்.

எப்படி சொல்ற?

எனக்கு யாரு தர்றாங்கிறதுதான் முக்கியம்.

என் கையில எதுவுமே இல்லையே. என்னவா இருக்கும்னு கெஸ் பண்ணேன்.

அப்படின்னா பெருசா எதுவோ வாங்கியிருக்க. இல்லைன்னா இப்ப கூட்டிட்டு போய் வாங்கலாம்னு சொல்லுவ.

ஏண்டா இவ்ளோ அறிவாளியா இருக்க? எதையுமே செய்ய முடியல.நம்ம கெளரி கடைல இருக்கு. இங்கேயே இரு. நான் போய் எடுத்துட்டு வர்றேன்.

  அவள் எழுந்து செல்வதைக் கண்ட அலைகள்  அவளை பின் தொடர ஆசைப்பட்டு இன்னும் வீரியத்துடன் எழுந்தன. நான் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டு சோகத்துடன் விழுந்தன. விழும் நேரத்தில் எழுந்த சத்தம் அலையின் அழுகுரல் போலவே கேட்டது எனக்கு. 1987க்கு முன்னால் கடலில் உப்புத்தன்மை இருந்ததா என்று பார்க்க வேண்டும்.

கையில் பெரிய பெட்டியுடன் வந்துக் கொண்டிருந்தாள். என்னவாக இருக்கும் என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையாக எனக்கு தெரியவில்லை.

To my porikki என்று எழுதப்பட்டிருந்தது.

Happy Valentine's day டா என்றாள்.

கையில் வாங்கினேன். என்னவென்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் பிரிக்கப் போனவனைத் தடுத்தவள் “ மூனு சாய்ஸ். என்னன்னு சொல்லிட்டு பிரி” என்றாள்.

என்னால் பொறுக்க முடியவில்லை. “ஷேர்ட், வாட்ச், மொபைல்” என்று சொல்லிவிட்டு பிரித்தேன். சிரித்துக் கொண்டே சொன்னாள் ” உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?”

என்னால் நம்ப முடியவில்லை. இதை எப்படி யோசிக்காமல் போனேன்? அழகிய கிடார். என் கைகள் நடுங்க ஆரம்பித்தன. எனக்கு உடனே அவளை அணைத்து ஒரு முத்தமிட வேண்டும் போலிருந்தது. ஆனால் கையில் கிடார். அந்தப் பாறையில் எங்கேயும் அதை வைக்க மனம் வரவில்லை. கிடார் எனக்கு முதல் காதலி. என் தயக்கத்தைப் புரிந்துக் கொண்டவள் கன்னத்தை காட்டினாள். ப்ச்.

தேங்ஸ்டா என்றேன்.

எனக்கு என்ன கிஃப்ட்?

உன்னையேக் கூட்டிட்டு போய் வாங்கலாம்னு வந்தேன்.

எனக்கு இப்பவே வேணும்.

அதான் கொடுத்தேனே.

ச்சீ. அது இல்ல. ஒரு பாட்டு பாடுடா

இங்கேயா?

ஆமாம்.நான் மாஸ்டர்கிட்ட கொடுத்து ட்யூன் பண்ணிதான் எடுத்துட்டு வந்தேன்.

கிட்டாரை என் ஸ்டைலில் கையிலெடுத்தேன். அப்படியே  தலை சாய்த்து சொன்னாள் “இதான்டா. நீ இத வாசிக்கும் போதெல்லாம் கிடார்தான் நான்னு நினைச்சுக்கோ. இப்படி கட்டிபுடிச்சுட்டே  வாசிப்பில்ல. அதான்டா வேணும்”

நான் கிடாரை முத்தமிட்டேன். அவள் சிலிர்த்தாள்.கொஞ்ச நேரம் கண்மூடி ரசித்தாள்.

ஏதாவது பாடுடா. உனக்கு பிடிச்ச பாட்டு.

யோசிக்காமல் தொடங்கினேன்.

“என் இனிய பொன் நிலாவே.

பொன்நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம்....தர தத் தரா..

தொடருதே தினம் தினம்.. தர தத் தரா..”

 

 

   நினைவுகளில் இருந்து மீண்டேன். கடிகாரம் ஃபிப்ரவரி 12 என்று மட்டும்தான் காட்டியது. வருடத்தை காட்டவில்லை. என்னோடு அவளும்,கிடாராக. இறுக அணைத்துக் கொண்டேன். தேடிப்பிடித்து அதே பாறையில் உட்கார்ந்துக் கொண்டேன். பாடுடா என்று அவள் சொன்னது இன்னுமும் அங்கேயே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.  கிடாரை முத்தமிட்டு பாடத் தொடங்கினேன்.

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது

மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் விளையாடும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி
மறு வாசல் வைப்பான் இறைவன்

பாடி முடித்தவுடன் கைத்தட்டல் வந்த திசையை நோக்கி பார்த்தேன். wow.It was awesome என்றது அந்த பூங்கொத்து.  I am Nandhini  என்று தட்டிய கைகளில் ஒன்றையும் நீட்டினாள்.

சரியான பாடலைத்தான் பாடியிருக்கிறேன்.

தொடரும்...

 

41 கருத்துக்குத்து:

அத்திரி on February 15, 2009 at 2:01 PM said...

நாந்தான் முதல்ல

அத்திரி on February 15, 2009 at 2:07 PM said...

//அவள் எழுந்து செல்வதைக் கண்ட அலைகள் அவளை பின் தொடர ஆசைப்பட்டு இன்னும் வீரியத்துடன் எழுந்தன. நான் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டு சோகத்துடன் விழுந்தன.//

வார்த்தைகள் விளையாடுது..............

அத்திரி on February 15, 2009 at 2:12 PM said...

//பாடுடா என்று அவள் சொன்னது இன்னுமும் அங்கேயே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.//

ஒன்னு இல்லைனா இன்னொன்னு.......

அனுஜன்யா on February 15, 2009 at 3:37 PM said...

கார்க்கி,

கிடார் வரும் இரு நல்ல பாடல்கள். சேம் ப்ளட். 'இளைய நிலாவை'யும் புகுத்தி இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். நல்லா இருக்கு.

//ஒரு வாசல் மூடி
மறு வாசல் வைப்பான் இறைவன்//

எவ்வளவு உண்மை.

அனுஜன்யா

Bleachingpowder on February 15, 2009 at 4:24 PM said...

ஹேய் மேன்... வொய் ஆர் யு வொரியிங்.இஸிட்? கூல் டவுன் கூல் டவுன்..கூல் டவுன்..லீவ் இட்... பி ஹேப்பி...

No peelings of India.

சீங் இன்தெ ரெயின்...ஐ ஏம் சொயிங் இந்த ரெயின்...ஐ வாண்ட் மோர் இன்தெ ரெயின்.........

அன்புடன் அருணா on February 15, 2009 at 5:05 PM said...

:((
anbudan aruNaa

தமிழன்-கறுப்பி... on February 15, 2009 at 5:54 PM said...

பதிவு அனுபவம்கிறது தெரிகிறது ஆனா...;)

தலைப்பு சூடா இருக்கே....

கார்க்கி on February 15, 2009 at 7:39 PM said...

//அத்திரி said...
//அவள் எழுந்து செல்வதைக் கண்ட அலைகள் அவளை பின் தொடர ஆசைப்பட்டு இன்னும் வீரியத்துடன் எழுந்தன. நான் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டு சோகத்துடன் விழுந்தன.//

வார்த்தைகள் விளையாடுது..//


நன்றி சகா

*************8

//அனுஜன்யா said...
கார்க்கி,

கிடார் வரும் இரு நல்ல பாடல்கள். சேம் ப்ளட். 'இளைய நிலாவை'யும் புகுத்தி இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். நல்லா இருக்கு//

கதைக்காகத்தான் பாடல்கள். பாடலுக்காக கதைய மாத்த முடியுமா தல? :))))
*****************


// Bleachingpowder said...
ஹேய் மேன்... வொய் ஆர் யு வொரியிங்.இஸிட்? கூல் டவுன் கூல் டவுன்..கூல் டவுன்..லீவ் இட்... பி ஹேப்பி... //

அட புனைவுதான் தல இது

தராசு on February 15, 2009 at 7:59 PM said...

வாழ்த்துக்கள் தல,

ரசிக்க முடிந்த புனைவுதான், ஆனால் எங்கியோ பிசிறடிக்குதே!!,
கொஞ்சம் அனுபவம் பேசறாப்ல இருக்கு.

narsim on February 15, 2009 at 8:05 PM said...

என்னால் பொறுக்க முடியவில்லை. “ஷேர்ட், வாட்ச், மொபைல்” என்று சொல்லிவிட்டு பிரித்தேன். சிரித்துக் கொண்டே சொன்னாள் ” உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?”//

good latr.thinking saga..

வித்யா on February 15, 2009 at 9:40 PM said...

பாட்டு ரெண்டும் டாப்பு. பதிவும் தான்:)

மைக்ரோ மனிதன் on February 15, 2009 at 10:22 PM said...

கொல்றீங்க கார்க்கி...
நினைப்பதையெல்லாம் வார்த்தைகளாய் வடிப்பதென்பது ஒரு கலை..
நீங்களும் அதை கை கொள்ளப் பெற்றிருக்கிறீர்கள்...

ஸ்ரீதர்கண்ணன் on February 16, 2009 at 6:54 AM said...

1987க்கு முன்னால் கடலில் உப்புத்தண்மை இருந்ததா என்று பார்க்க வேண்டும்.

Good.

கார்க்கி on February 16, 2009 at 9:34 AM said...

/அன்புடன் அருணா said...
:((/
ஏன் சோகம் அருணா?

***********
/ தமிழன்-கறுப்பி... said...
பதிவு அனுபவம்கிறது தெரிகிறது ஆனா../

இல்லீங்கண்ணா புனைவுதான்..

************
// தராசு said...
வாழ்த்துக்கள் தல,

ரசிக்க முடிந்த புனைவுதான், ஆனால் எங்கியோ பிசிறடிக்குதே!!,
கொஞ்சம் அனுபவம் பேசறாப்ல இருக்கு//

அப்படியெல்லாம் இல்ல தல

கார்க்கி on February 16, 2009 at 9:37 AM said...

/ narsim said...
என்னால் பொறுக்க முடியவில்லை. “ஷேர்ட், வாட்ச், மொபைல்” என்று சொல்லிவிட்டு பிரித்தேன். சிரித்துக் கொண்டே சொன்னாள் ” உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?”//

good latr.thinking saga.//

நன்றி தல :)))

***********

/ வித்யா said...
பாட்டு ரெண்டும் டாப்பு. பதிவும் தான்//

பாட்டு சேர்க்கிற ஐடியாவே இல்ல.. கதை போன போக்கிலே போய் கடைசில பாட்டு சேர்த்தா நல்லாயிருக்குமேன்னு சேர்த்தேன். பதிவு படிக்காதவ்ங்களும் பாட்ட பார்ப்பாங்க இல்ல.. வியாபார தந்திரம்.. :))

************

// மைக்ரோ மனிதன் said...
கொல்றீங்க கார்க்கி...
நினைப்பதையெல்லாம் வார்த்தைகளாய் வடிப்பதென்பது ஒரு கலை..
நீங்களும் அதை கை கொள்ளப் பெற்றிருக்கிறீர்கள்./

மகிழ்ச்சியாக இருக்கு சகா. ஜுனில் தொடங்கிய நீங்கள் இன்னும் ஏன் முதல் பதிவை எழுதவில்லை?

*********
/ ஸ்ரீதர்கண்ணன் said...
1987க்கு முன்னால் கடலில் உப்புத்தண்மை இருந்ததா என்று பார்க்க வேண்டும்.

Good//

அப்பாடா.. யாருமே கவ்னிக்காம போயிடுவாங்களோனு நினைச்சேன்

ஸ்ரீமதி on February 16, 2009 at 10:23 AM said...

//1987க்கு முன்னால் கடலில் உப்புத்தண்மை இருந்ததா என்று பார்க்க வேண்டும். //

இருந்திருக்காது :))

முரளிகண்ணன் on February 16, 2009 at 10:40 AM said...

கலக்கல் சகா

ஜி on February 16, 2009 at 11:05 AM said...

கலக்கல் சஹா...

கார்க்கி on February 16, 2009 at 11:16 AM said...

/ ஸ்ரீமதி said...
//1987க்கு முன்னால் கடலில் உப்புத்தண்மை இருந்ததா என்று பார்க்க வேண்டும். //

இருந்திருக்காது :)/

ஏன்? நீயும் அப்பதான் பொறந்தியா?

************
/முரளிகண்ணன் said...
கலக்கல் ச/

நன்றி தல

************
/ ஜி said...
கலக்கல் சஹா.//

நன்றி ஜி

prakash on February 16, 2009 at 11:28 AM said...

//எழுந்த சத்தம் அலையின் அழுகுரல் போலவே கேட்டது எனக்கு. 1987க்கு முன்னால் கடலில் உப்புத்தன்மை இருந்ததா என்று பார்க்க வேண்டும்//

அருமை

விஜய் on February 16, 2009 at 11:44 AM said...

mmm nadathunga nadathunga

தாமிரா on February 16, 2009 at 11:49 AM said...

ஸ்ரீமதி said...
//1987க்கு முன்னால் கடலில் உப்புத்தண்மை இருந்ததா என்று பார்க்க வேண்டும். //
இருந்திருக்காது :))
////

ஸ்ரீமதியின் பதிலுடன் இணைத்துப்பார்க்கும் போது இந்த வரிகள்.. கவிதை.! கவிஞிகள் பின்னூட்டம் போட்டாகூட கவிதையா இருக்குது.. அப்புறம் கதை நல்லாதான் இருக்குது.. தலைப்பு ஏன் இப்பிடி.?

எம்.எம்.அப்துல்லா on February 16, 2009 at 12:07 PM said...

:)

எம்.எம்.அப்துல்லா on February 16, 2009 at 12:07 PM said...

ஹை மீ த 25 :)

கார்க்கி on February 16, 2009 at 12:24 PM said...

// prakash said...
//எழுந்த சத்தம் அலையின் அழுகுரல் போலவே கேட்டது எனக்கு. 1987க்கு முன்னால் கடலில் உப்புத்தன்மை இருந்ததா என்று பார்க்க வேண்டும்//

அருமை
//

:))))

************
/ விஜய் said...
mmm nadathunga nadathunga/

என்ன நடத்தனுங்க?

**********

// தாமிரா said...
ஸ்ரீமதி said...
//1987க்கு முன்னால் கடலில் உப்புத்தண்மை இருந்ததா என்று பார்க்க வேண்டும். //
இருந்திருக்காது :))
////

ஸ்ரீமதியின் பதிலுடன் இணைத்துப்பார்க்கும் போது இந்த வரிகள்.. கவிதை.! கவிஞிகள் பின்னூட்டம் போட்டாகூட கவிதையா இருக்குது.. அப்புறம் கதை நல்லாதான் இருக்குது.. தலைப்பு ஏன் இப்பிடி//

நன்றி சகா.. தலைப்பு? ஒரு மேட்டர் இருக்கு..யோவ் அதில்லையா..வேற

***********
/ எம்.எம்.அப்துல்லா said...
ஹை மீ த 25 /

பொய் சொல்லாதீங்கண்னே.. நீங்க 35

பரிசல்காரன் on February 16, 2009 at 1:30 PM said...

பறவைகள் பறந்துகொண்டேதான் இருக்கும். வானம் எங்கும் நகராமல்தான் இருக்கும்.

வானமே இல்லை!

பரிசல்காரன் on February 16, 2009 at 1:31 PM said...

ச்சே.. வானமே இல்லை - இல்ல. வானமே எல்லை!!!

கார்க்கி on February 16, 2009 at 1:39 PM said...

//பரிசல்காரன் said...
பறவைகள் பறந்துகொண்டேதான் இருக்கும். வானம் எங்கும் நகராமல்தான் இருக்கும்.

வானமே இல்லை//

சகா கதையின் முடிவை மாத்தியிருக்கிறேன். :))))

ஸ்ரீமதி on February 16, 2009 at 1:48 PM said...

//பாடி முடித்தவுடன் கைத்தட்டல் வந்த திசையை நோக்கி பார்த்தேன். wow.It was awesome என்றது அந்த பூங்கொத்து. I am Nandhini என்று தட்டிய கைகளில் ஒன்றையும் நீட்டினாள். சரியான பாடலைத்தான் பாடியிருக்கிறேன்.//

இது எப்போ நடந்தது?? ஐ மீன் முடிவு மாற்றம்.. பட் இதும் நல்லாத்தான் இருக்கு.. :))

Massattra Kodi on February 16, 2009 at 3:07 PM said...

இந்த "புதிய" முடிவு நல்லா இருக்கு. அதனால அந்த "முற்றுமை" தூக்கிட்டு தொடரும் போட்ருங்க ....

அன்புடன்
மாசற்ற கொடி

Karthik on February 16, 2009 at 3:24 PM said...

nice post karki.
:)

விஜய் on February 16, 2009 at 3:45 PM said...

Intha "காதல்.. கண்றாவி..கருமம்.."
ithaithaan........

கார்க்கி on February 16, 2009 at 3:50 PM said...

//இது எப்போ நடந்தது?? ஐ மீன் முடிவு மாற்றம்.. பட் இதும் நல்லாத்தான் இருக்கு.. :))//

சுகமா முடிக்கனும்னு நண்பர்கள் விரும்பறாங்க..

**********

// Massattra Kodi said...
இந்த "புதிய" முடிவு நல்லா இருக்கு. அதனால அந்த "முற்றுமை" தூக்கிட்டு தொடரும் போட்ருங்//

மாத்திட்டங்க

********
/ Karthik said...
nice post karki.
:)//

நன்றி கார்த்திக்

**********

/ விஜய் said...
Intha "காதல்.. கண்றாவி..கருமம்.."
ithaithaan../

என்ன சொல்ரீங்க? புரியல

Sundar on February 16, 2009 at 5:14 PM said...

உங்கள் மனம் போகும் போக்கில் கதை போகிறதா? விரைவில் ஒரு நந்தினி வர வாழ்த்துக்கள்!

பரிசல்காரன் on February 16, 2009 at 6:09 PM said...

ம்ம்ம்.. இதுவும் நல்லாத்தாம்ப்பா இருக்கு!!!!

கார்க்கி on February 16, 2009 at 7:23 PM said...

/ Sundar said...
உங்கள் மனம் போகும் போக்கில் கதை போகிறதா? விரைவில் ஒரு நந்தினி வர வாழ்த்துக்கள்//

உங்க வாழ்த்து பலிக்கட்டும் :)))

**********
// பரிசல்காரன் said...
ம்ம்ம்.. இதுவும் நல்லாத்தாம்ப்பா இருக்கு!/

நன்றி சகா

லவ்டேல் மேடி on February 16, 2009 at 8:31 PM said...

// காதல்.. கண்றாவி..கருமம்.. //


மூணுமே ஒன்னுதான ......// அழகான மாலை வேளை அது. சூரியன் சிவப்பு நிறத்தில் இருந்தாலும் எங்களுக்கு ரோஜாவாகாத்தான் தெரிந்தது. //


ஏன் .. அத பொருச்சு .. அந்த சிலேப்பி கொண்டையில சொருக வேண்டியதுதானோ ...
// எங்களுக்கு என்றால் எனக்கும் என் அவளுக்கும். //


வெளக்கமெல்லாம் நெம்ப சிறப்பாத்தான் இருக்குது ....

/// பிப்ரவரி 14. காதலர் தினம் கொண்டாடிக் கொண்டிருந்தோம். //


எங்க ... ???? டிக்கட்டு எடுக்காம ஓசி பார்க்குலையா .......????


// கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம். //


அப்பறம்... அங்கியும் ஓசிதானோ ........

// அலைகள் சுருதி சேராமல் பாடிக் கொண்டிருந்தன. ///


சொல்லீட்டாருயா இசைஞானி ... சுண்டல வாங்குனம்மா ....... தின்னமான்னு இருக்குக வேண்டியதுதானோ ......


// அலை வந்து மோதுகிறதே என்று பாறைகள் நகர்வதாய் தெரியவில்லை. பாறைகள் நம்மோடு வருவதில்லையே என்று அலைகளும் விடுவதாயில்லை. //


செம மொக்கைங்கோவ் .... சொரியறதா தவற .. வேற வழி இல்லீங்கோவ் .......


// “நான் தான் பாறையா?” என்றாள். எப்படி அவளுக்கு நான் யோசிப்பது தெரிந்தது என்றுத் தெரியவில்லை. //


உம்பட மொக்க வைப்ரேசன் அப்புடி இருக்குது .........


// நீ விடாம துரத்துன. சரி விடு. இப்ப அதுவா முக்கியம். நான் என்ன கிஃப்ட் வாங்கியிருக்கேன் சொல்லு? //


ஏதாவது பழைய பேப்பர்காரன்கிட்ட வாங்குன மொக்க கவுஜ ( கவிதை ) புக்கா இருக்கும் ....


// எது வாங்கினாலும் எனக்குப் புடிக்கும். //


எப்புடியோ ... ஒசியிலதனோ வருது ...........


// எனக்கு யாரு தர்றாங்கிறதுதான் முக்கியம். //


யாரு தம்பி .. நேத்து பொடவ வாங்கி குடுத்தையே ... அந்த அம்முனியா..????

// என் கையில எதுவுமே இல்லையே. என்னவா இருக்கும்னு கெஸ் பண்ணேன். //


எப்புடி இருக்கும் .... அந்த ஊசிப்போன சுண்டல இனிமேளுதானோ வாங்கவேணும் ....

// ஏண்டா இவ்ளோ அறிவாளியா இருக்க? எதையுமே செய்ய முடியல.நம்ம கெளரி கடைல இருக்கு. இங்கேயே இரு. நான் போய் எடுத்துட்டு வர்றேன். //


காண்டீபா ... கடலமுட்டாயாதான் இருக்கும் ..... நீயும் அதுக்கு வெயிட்டு பண்ணிக்கிட்டு இருந்திருக்குற ......


// அவள் எழுந்து செல்வதைக் கண்ட அலைகள் அவளை பின் தொடர ஆசைப்பட்டு இன்னும் வீரியத்துடன் எழுந்தன. நான் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டு சோகத்துடன் விழுந்தன. //


நல்லா பாத்தியா தம்பி .... சுனாமியா இருக்கபோவுது ........


/// விழும் நேரத்தில் எழுந்த சத்தம் அலையின் அழுகுரல் போலவே கேட்டது எனக்கு. //


அதுகளுக்கு தெரியுது ... நீ சிக்கிகிட்டைனு ........ உனக்கு புரியல .....
// கையில் பெரிய பெட்டியுடன் வந்துக் கொண்டிருந்தாள். என்னவாக இருக்கும் என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையாக எனக்கு தெரியவில்லை. //


ஓஒ .. ஹோ ...... அந்தம்முனி ஊரைவிட்டு ஓடிபோரதுக்கு ரெடி ஆயிருச்சு போல ....// To my porikki என்று எழுதப்பட்டிருந்தது. //


உம்பட ஒரிஜினல் பேர எப்புடியோ கண்டுபுடுச்சிட்டா அம்முனி .........

// Happy Valentine's day டா என்றாள். //


இந்த வார்த்தைய எங்கயோ அடிக்கடி கேட்டிருக்கேனே ..........


ம்ம்ம்ம்ம்ம்........


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......


ம்ம்ம்ம் ... ஆமா ... கசாப்பு கடையில ஆட்ட வெட்டும்போது .. ஆடுகிட்ட சொல்லுவாங்க ......


// கையில் வாங்கினேன். என்னவென்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் பிரிக்கப் போனவனைத் தடுத்தவள் “ மூனு சாய்ஸ். என்னன்னு சொல்லிட்டு பிரி” என்றாள். //உம்பட வாழ்க்கையில பாரு ... விதி எப்பிடியெல்லாம் தலைய விருச்சுபோட்டு ஆடுதுன்னு .... நெம்ப கஷ்டம் தம்பி ........// அழகிய கிடார் //


வால்பையன் கையில C++ புக்குங்குற மாதிரி இருக்குது ... உன்கையில கிட்டருங்கறது ..........
// என் கைகள் நடுங்க ஆரம்பித்தன. //


சரக்கு கம்மியா அடுச்சாதானோ ........

// எனக்கு உடனே அவளை அணைத்து ஒரு முத்தமிட வேண்டும் போலிருந்தது. //


பப்ளிக்குல அசிங்கம் பண்ண பாக்குற நீயி .... பிச்சுபோடுவ ராஸ்கோலு ...........

// அந்தப் பாறையில் எங்கேயும் அதை வைக்க மனம் வரவில்லை. //


வெச்சிருதீனா தெரியும் .... சுண்டல்காரன் தூகிட்டு போய் நல்ல வெலைக்கு வித்துருப்பான் .......// அது இல்ல. ஒரு பாட்டு பாடுடா //


அதுக்கு அந்த புள்ள கடல்லையே குதுச்சு உசுர காபாத்திக்கலாம் .........// கிட்டாரை என் ஸ்டைலில் கையிலெடுத்தேன். //


இதெல்லாம் உனக்கே கொஞ்சம் நக்கலா தெரியில ..........// “இதான்டா. நீ இத வாசிக்கும் போதெல்லாம் கிடார்தான் நான்னு நினைச்சுக்கோ. இப்படி கட்டிபுடிச்சுட்டே வாசிப்பில்ல. அதான்டா வேணும்” //


அடங்கொன்னியா ...... தம்பி கார்கி ... இதெல்லாம் ஆட்டோகிராப் படத்துலையே பாத்தாச்சு ........ நீ எங்க புதுசா பூ சுத்துற .........// நான் கிடாரை முத்தமிட்டேன். அவள் சிலிர்த்தாள்.கொஞ்ச நேரம் கண்மூடி ரசித்தாள். //

இதுதான்யா செல்போனையும் , பர்சையும் அடிகரதுக்கு சரியான நேரம் .... அட பழனிச்சாமி .... தூக்கிட்டு ஓடியேபோயிரு ..........


// ஏதாவது பாடுடா. உனக்கு பிடிச்ச பாட்டு.


யோசிக்காமல் தொடங்கினேன். //
எ ரூப்பு தேரா ..... மஸ்தானா .......


எ பியாறு மேரா .. தீவானா .............


அடுச்சு உடு பழனிச்சாமி .......... //

// பாடுடா என்று அவள் சொன்னது இன்னுமும் அங்கேயே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. கிடாரை முத்தமிட்டு பாடத் தொடங்கினேன். //


மருவுடியுமா ........ ஹே ... எ .. எ ..... எ .... ரிபீட்டே .................


// கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது

மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் விளையாடும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி
மறு வாசல் வைப்பான் இறைவன் //நெம்ப அருமையான மொக்க கவுஜ சாமி இது ..............
இப்படிக்கு ,,

காதலினால் நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள் சங்கம் .
ஈரோடு .

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை ......

ஆனால் இது போன்ற கம்பெனிகள் நிறைய உண்டு ........

கார்க்கி on February 16, 2009 at 8:38 PM said...

@லவ்டேல்மேடி,

சத்யமா வாய் விட்டு சிரிச்சேங்க.. முடியல.. இனிமேல உங்க கமெண்டுக்காவது காதல் பதிவு எழுதறேன்..:))))இன்னமும் சிரிச்சிட்டுதான் இருக்கிறேன்..இது உங்க ஜோக்குக்காக இல்ல

விஜய் on February 17, 2009 at 3:09 PM said...

39 and 40 is mine pa

விஜய் on February 17, 2009 at 3:11 PM said...

Athenna rendu padalai serthu padirukeenga???
rendum pidikkumo???!!!!!!!

விக்னேஷ்வரி on August 11, 2009 at 8:03 PM said...

இதை படிச்சு ரசிக்காதவங்க இருக்க முடியுமா. இயல்பாவே காதல் வழியுது உரையாடல்களில்.

 

all rights reserved to www.karkibava.com