Feb 13, 2009

காக்டெய்ல் (காதலர் தின ஸ்பெஷல்)


  ஜப்பானில் காதலர் தினத்தன்று பெண்கள் தனக்கு பிடித்த ஆண்களுக்கு (கவனிக்கவும், ஆண்களுக்கு) சாக்லெட்கள் வழங்குவார்கள். சரியாக ஒரு மாதம் கழித்து மார்ச் 14 அன்று வெள்ளை தினம் என்று கொண்டாடுவார்கள். அப்போது சாக்லெட் வாங்கிய ஆண்கள் அந்த பெண்களுக்கு சாக்லெட் தருவார்கள். அதுவும் வெள்ளை நிற சாக்லெட். வெட்டிப்பசங்க. நம்ம ஊருல சரியா ஒன்பது மாதம் கழித்து ஆண்கள் பரிசு தருவார்கள். என்ன பரிசா? ஃபிப்ரவரி 14 ல இருந்து ஒன்பது மாசம் தள்ளிப் போய் பாருங்க.

************************************************

ரோமானியாவில் 24ம் தேதி அன்றும், பிரேசிலில் ஜூன் 12ம் தேதியும், வெனிசுலாவில் ஃபிப்ரவரி 25ம் தேதி அன்றும், சீனாவில் ஜூலை 7ம் தேதியும் காதலர் தினம் கொண்டாடப் பட்டாலும், உலகோடு ஒத்துப் போவதற்காக ஃபிப்ரவரி 14ம் தேதியும் கொண்டாடுகிறார்கள். என்னது ..சவுதி அரேபியாவா? அங்க காதலிக்கவே கூடாதாம். மீறினா... இது என்ன? சங்கு. பிச்சு எறிஞ்சுடுவேன்.. ஆவ்வ்வ்

*************************************************

ஃப்ரான்ஸில் முன்பு ஒரு சூப்பர் மேட்டர் உண்டு. காதலர் தினத்தன்று திருமணமாகாத ஆணும் பெண்ணும் எதிரெதிர் வீட்டுக்குள் இருப்பார்கள். ஜன்னல் வழியே பெண் தனக்கு பிடித்தவனை அழைப்பாள். அவளை அவனுக்கு பிடிக்காவிட்டால் அவன் வெளியே வரமாட்டானாம். இது மாதிரி பலரும் செய்த பின், அன்றிரவு நெருப்பு மூட்டி வேண்டாம் என்று சொன்ன ஆண்களின் படங்களை எரிப்பது மட்டுமில்லாமல் ஆபாச அர்ச்சணையும் நடக்கும். இது மற்றவ்ர்களுக்கு தொல்லையாக இருந்தத்தால் அரசாங்கம் தடை விதித்து விட்டது. மாதர் சங்கம், கவனிச்சுக்கோங்க.

************************************************

   சிங்கப்பூரில காதலர் தினத்தை அன்பர்கள் தினம் என்று கொண்டாடுவார்கள். அன்பு என்பதால் யாருக்கு வேண்டுமென்றாலும் வாழ்த்து சொல்லலாம். அம்மா, அப்பா, அக்கா, தங்கை என எல்லோருக்கு வாழ்த்து சொல்லுவார்கள். இதை பார்த்த என் நண்பன் ஒருவன் சென்னையில் இருந்த தன் கஸினுக்கு தொலைபேசியில் ”அன்பர்” தின வாழ்த்து சொல்லியிருக்கிறான். சிங்கைப் பழக்கத்தை சொல்லும் முன்பே அவள் கட் செய்து அப்பாவிடம் சொல்லி, அவர் இவன் அப்பாவிடம் திட்டி பல களேபரங்கள் நடந்து விட்டது. இவன் எடுத்து சொல்லியும் யாரும் நம்பவில்லை. அந்த வருடம் இந்தியா வருவதாக இருந்த திட்டமும் பணால். இந்த வருடமும் மறக்காமல் அவனுக்கு அழைத்து அன்பர் தின வாழ்த்து சொல்லனும்.

*************************************************   

 காதல் கல்யாணத்தில் முடிவதைத் தானே எல்லோரும் விரும்புவார்கள்? (என்ன பரிசல், இல்லையா????) அதனால் ஒரு கல்யாண மேட்டர். சில நாட்களுக்கு முன் ”வெட்கம் வேதனை அவமானம்” என்ற பதிவில் சாஃப்ட்வேர் என்ஜினியர்கள் படும் அவஸ்தையைப் பற்றி சொல்லியிருந்தேன். நிலைமை அவ்வளவு மோசமில்லைனு பலரும் சொன்னார்கள். மெய்லில் வந்த இந்தப் படத்தைப் பாருங்கள். எங்க கஷ்டம் புரியும்.  43 கருத்துக்குத்து:

விஜி on February 13, 2009 at 8:39 PM said...

me the first :-)

விஜி on February 13, 2009 at 8:40 PM said...

இனிமே தான் படிக்கனும் :-)

விஜி on February 13, 2009 at 8:47 PM said...
This comment has been removed by the author.
விஜி on February 13, 2009 at 8:47 PM said...

//
ஃபிப்ரவரி 14 ல இருந்து ஒன்பது மாசம் தள்ளிப் போய் பாருங்க.
//

அட ஆமாம். அப்போவே Nehru மாமா வொட Daddy(பேரு மறந்து போச்சு) Valetine's Day எல்லாம்
celebrate பண்ணி இருக்கார் போல:-)

தேனியார் on February 13, 2009 at 9:21 PM said...

கடைசி மெயில் பாத்ததும் என்னையறியாமல் சிரித்துவிட்டேன்.
இதெல்லாம் டூ மச்.

லைப்ல அப் அண்ட் டவுன் இருப்பதுதானே லாஜிக்.

Darvin on February 13, 2009 at 9:24 PM said...

It's one thing to comment what you saw at a website without naming any names, it's a different thing to post a person's complete profile with photograph from a matrimonial site. You're violating someone's privacy. How would you feel if your profile from such a site were posted in some body's blog and every body had a good laugh about it. Let's be a little sensitive, shall we? ..if possible plz remove.

Thanks,
Darvin

நான் ஆதவன் on February 13, 2009 at 9:24 PM said...

//

மக்களே!!


சாதி
மதம்
இனம்
இவற்றைத் தாண்டி வரும்
காற்றைப் போல
காதலையும் சுவாசிப்போம்..//

விஜய் படத்தில வர்ர கவிதை தானே இது?

ஜ்யோவ்ராம் சுந்தர் on February 13, 2009 at 9:31 PM said...

/மக்களே!!

சாதி
மதம்
இனம்
இவற்றைத் தாண்டி வரும்
காற்றைப் போல
காதலையும் சுவாசிப்போம்..

பூக்கள் அனுப்ப விரும்பும் வாசகிகள் முகவரிக்கு தனியே என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் :))) /

இப்படில்லாம் கவிதை போட்டா பூக்கள் வராது, பிங்க் ஜட்டிகள்தான் வரும் :)

வித்யா on February 13, 2009 at 9:40 PM said...

இரு இரு ராம்சேனாகாரங்க உன் அட்ரஸ் விசாரிச்சிட்டுருக்காங்களாம்.

கார்க்கி on February 13, 2009 at 10:56 PM said...

// நான் ஆதவன் said...
//

மக்களே!!


சாதி
மதம்
இனம்
இவற்றைத் தாண்டி வரும்
காற்றைப் போல
காதலையும் சுவாசிப்போம்..//

விஜய் படத்தில வர்ர கவிதை தானே இது?
//
ஆமாங்கண்ணா.. ஷாஜஹான்

************8

//இப்படில்லாம் கவிதை போட்டா பூக்கள் வராது, பிங்க் ஜட்டிகள்தான் வரும் :)//

நாளைக்கு பார்ப்போம் தல. உங்க ஜட்டி சைஸு என்ன? :))))

****************
// வித்யா said...
இரு இரு ராம்சேனாகாரங்க உன் அட்ரஸ் விசாரிச்சிட்டுருக்காங்களாம்.//

கிகிகி..

தாரணி பிரியா on February 13, 2009 at 10:59 PM said...

உங்களையெல்லாம் சவுதிக்குதான் நாடு கடத்தணும்.:)

கார்க்கி on February 13, 2009 at 11:01 PM said...

//விஜி said...
me the first :-)//

வாங்க...

*************8

//தேனியார் said...
கடைசி மெயில் பாத்ததும் என்னையறியாமல் சிரித்துவிட்டேன்.
இதெல்லாம் டூ மச்.

லைப்ல அப் அண்ட் டவுன் இருப்பதுதானே லாஜிக்.//

அதுவும் சரிதான்

************88

@டார்வின்,

உங்க கருத்தை மதிக்கிறேன். ஆனால் அவரை கிண்டலடிக்கும்படி எதுவும் சொல்லவில்லையே. மேலும் அந்த தளத்தில் அந்தப் படத்தை எல்லோரும் பார்க்கும்படிதான் இருக்கிறது. பிரைவஸியாக இல்லை.

தாரணி பிரியா on February 13, 2009 at 11:12 PM said...

//பூக்கள் அனுப்ப விரும்பும் வாசகிகள் முகவரிக்கு தனியே என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் :)))//

ராம் சேனாகாரங்க லாரி அனுப்ப போறாங்களாம் அவங்களுக்கு அட்ரஸ் எப்படி சொல்ல போறீங்க‌

அனுஜன்யா on February 14, 2009 at 12:01 AM said...

இந்த வருடத்தில் உன் காதல் கல்யாணத்தில் நிறைவுறட்டும். என்னது, இன்னும் யாரும் காதலிக்கவில்லையா? அப்ப, உண்மையிலேயே வாழ்த்துகள் :)

அனுஜன்யா

ச்சின்னப் பையன் on February 14, 2009 at 7:25 AM said...

நல்ல வேளடா சாமி, எனக்கு கல்யாணமாயிடுச்சு!!!!

வெட்டிப்பயல் on February 14, 2009 at 7:52 AM said...

கார்க்கி,
இதை அனுப்பிய நண்பருக்கு சொன்னதை தான் உங்களுக்கும் சொல்கிறேன். ஒரு பொண்ணு கல்யாணத்துக்காக கொடுத்திருக்கற ப்ரொஃபைலை இப்படி எல்லாருக்கும் ஃபார்வேர்ட் பண்றது அநாகரிகம். அதே மாதிரி பப்ளிக்கா எடுத்து போடறதும். தயவு செய்து அந்த படத்தை எடுத்துவிடவும்.

வெட்டிப்பயல் on February 14, 2009 at 7:56 AM said...

நான் டார்வின் பின்னூட்டத்தை பார்க்கலை.

இதுக்கு நீங்க சொன்ன லாஜிக்கும் சரியில்லை.

வெட்டிப்பயல் on February 14, 2009 at 8:02 AM said...

//மேலும் அந்த தளத்தில் அந்தப் படத்தை எல்லோரும் பார்க்கும்படிதான் இருக்கிறது. பிரைவஸியாக இல்லை//

நம்ம ஊர்ல பொண்ணு பார்க்கும் போது பொண்ணோட ஃபோட்டோவை கல்யாண தரகர்களிடன் கொடுப்பாங்க. அவுங்களும் அதை மாப்பிள்ளைக்கு பார்க்க கொடுப்பாங்க. உடனே அதான் யார் வேணா ஃபோட்டோ பார்க்கலாமேனு சொல்லிட்டு ஃபோஸ்டர் அடிச்சி தெருவெல்லாம் ஒட்றது எப்படியோ, அது மாதிரி செயல் தான் இதுவும் :(

அத்திரி on February 14, 2009 at 8:41 AM said...

காதல்னாலே போதைதான்... அதுவும் காக்டெயிலில் வந்ததால் போதை ரெட்டிப்பு ஆச்சு

தாமிரா on February 14, 2009 at 9:44 AM said...

சூப்பரா காதலர் தின ஸ்பெஷல் போயிகிட்டிருக்கும்போதே கிளைமாக்ஸ்ல ஒரு சோகத்தை வெச்சிட்டியே.. ராசா..! உச்..உச்..

அப்புறம் எல்லோருக்கும் வாத்துகள்!

தாமிரா on February 14, 2009 at 9:46 AM said...

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே..

இதுவரை சாக்லெட் மற்றும் பூக்கள் தருவதற்காக 27 இளம்பெண்கள் முகவரி கேட்டு என் தனிமெயிலுக்கு வந்துள்ளார்கள். யார் வந்துள்ளார் என்று சொல்லாவிட்டாலும் எத்தனை மடல்கள் வந்துள்ளன என்றாவது சொல்லவும்.

ஃபாலோயர்ஸ் லிஸ்ட் மட்டும் அதிகமா இருந்து பிரயோஜனமில்லை.!

அவன்யன் on February 14, 2009 at 10:09 AM said...

ஆமா நீங்க ஏங்க இதுக்கலாம் கவலை படுறீங்க. இது இல்லனா இன்னொன்னு வுட்டு தள்ளுங்க பாஸ். ரொம்ப பீல் பண்ணாதீங்க நான் ஒரு ஐடியா சொல்லவா வேலையை விட்ட்ருரங்க. சும்மா தமாஷ். உலகம் உருண்டைங்க கவளி படாதீங்க

குசும்பன் on February 14, 2009 at 10:11 AM said...

போதும் கார்க்கி இன்னும் எத்தனை நாளைக்குதான் உங்க காதலை மறைச்சு வைக்கமுடியும்! உங்க காதலையும் காதலியை பற்றியும் இன்றாவது சொல்வீங்க என்று நினைச்சேன்!

(இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் கார்க்கி அல்ரெடி கமிட்டெட் பார்ட்டிங்கோவ்வ்)

பூ, புஸ்பம், புய்பம் அனுப்புவர்கள் kusumbuonly@gmail.comக்கு அனுப்புங்கோ!!!!

அவன்யன் on February 14, 2009 at 10:21 AM said...

Kaarki could you help me how to insert website counter on my site. please help me. mail me to p.mugund@gmail.com

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Sinthu on February 14, 2009 at 11:22 AM said...

"சிங்கப்பூரில காதலர் தினத்தை அன்பர்கள் தினம் என்று கொண்டாடுவார்கள். அன்பு என்பதால் யாருக்கு வேண்டுமென்றாலும் வாழ்த்து சொல்லலாம். அம்மா, அப்பா, அக்கா, தங்கை என எல்லோருக்கு வாழ்த்து சொல்லுவார்கள். இதை பார்த்த என் நண்பன் ஒருவன் சென்னையில் இருந்த தன் கஸினுக்கு தொலைபேசியில் ”அன்பர்” தின வாழ்த்து சொல்லியிருக்கிறான். சிங்கைப் பழக்கத்தை சொல்லும் முன்பே அவள் கட் செய்து அப்பாவிடம் சொல்லி, அவர் இவன் அப்பாவிடம் திட்டி பல களேபரங்கள் நடந்து விட்டது. இவன் எடுத்து சொல்லியும் யாரும் நம்பவில்லை. அந்த வருடம் இந்தியா வருவதாக இருந்த திட்டமும் பணால். இந்த வருடமும் மறக்காமல் அவனுக்கு அழைத்து அன்பர் தின வாழ்த்து சொல்லனும்."

அண்ணா பொதுவாக தெற்காசிய நாடுகளில் ( முக்கியமாக ஸ்ரீ லங்கா, இந்தியா, பங்களாதேசம்) மட்டுமே காதலர்களுக்கு மட்டும் தான் வாழ்த்துத் தெரிவிக்கலாம் என்ற ஒரு கருத்து உண்டு,. ஆனால் மற்றைய நாடுகளில் எல்லோருக்கும் சொல்லும் பழக்கம் உண்டு............ என் நண்பர்களுக்குச் சொல்லி அவர்கள் என்ன என்று கேட்ட கொடுமை எனக்கே நடந்தது..... வேறு என்ன செய்ய...?

கார்க்கி on February 14, 2009 at 11:41 AM said...

// தாரணி பிரியா said...
உங்களையெல்லாம் சவுதிக்குதான் நாடு கடத்தணும்.://

எங்களயெல்லாம் பாலைவனத்துல விட்டா கூட பால் பாயசம் காய்ச்சி குடிப்போம். ஓட்ட்க பால்ல..

**********

/ அனுஜன்யா said...
இந்த வருடத்தில் உன் காதல் கல்யாணத்தில் நிறைவுறட்டும். என்னது, இன்னும் யாரும் காதலிக்கவில்லையா? அப்ப, உண்மையிலேயே வாழ்த்துகள்//

எனக்கு ஒரு காதலி இருந்தா நான் ஏன் இன்னைக்கு வந்து உங்களுக்கு பதில் சொல்லிட்டு இருக்கப் போறேன் தல..

***********

/ ச்சின்னப் பையன் said...
நல்ல வேளடா சாமி, எனக்கு கல்யாணமாயிடுச்சு!!//

பார்த்தீங்களா? உங்களுக்கு கல்யானம் ஆனைதயே நல்ல வேளைனு சொல்ல வச்சிட்டேனே

கார்க்கி on February 14, 2009 at 11:45 AM said...

/ வெட்டிப்பயல் said...
கார்க்கி,
இதை அனுப்பிய நண்பருக்கு சொன்னதை தான் உங்களுக்கும் சொல்கிறேன். ஒரு பொண்ணு கல்யாணத்துக்காக கொடுத்திருக்கற ப்ரொஃபைலை இப்படி எல்லாருக்கும் ஃபார்வேர்ட் பண்றது அநாகரிகம். அதே மாதிரி பப்ளிக்கா எடுத்து போடறதும். தயவு செய்து அந்த படத்தை எடுத்துவிடவும்.//

இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா? சரி தல தலய எடுத்தடறேன். ஐ மீன் ஃபோட்டோல..

************
/ அத்திரி said...
காதல்னாலே போதைதான்... அதுவும் காக்டெயிலில் வந்ததால் போதை ரெட்டிப்பு ஆச்//

அடட்ட்ட்ட்டாஆஆஆஆ
************
// தாமிரா said...
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே..

இதுவரை சாக்லெட் மற்றும் பூக்கள் தருவதற்காக 27 இளம்பெண்கள் முகவரி கேட்டு என் தனிமெயிலுக்கு வந்துள்ளார்கள். யார் வந்துள்ளார் என்று சொல்லாவிட்டாலும் எத்தனை மடல்கள் வந்துள்ளன என்றாவது சொல்லவும்.

ஃபாலோயர்ஸ் லிஸ்ட் மட்டும் அதிகமா இருந்து பிரயோஜனமில்லை//

நான் அதுக்குனு தனியா karkiflowers@karkibava.com னு தனியா மெய்ல் ஒன்னு தொடங்கிட்டேன். அதுல 300 400 unread mails இருக்கறதால யார் யார்னு பார்க்கல சகா..

(நம்ம ரெண்டு பேரையும் மொத்துனு பொத்தப் போறாங்க)

கார்க்கி on February 14, 2009 at 11:47 AM said...

/அவன்யன் said...
ஆமா நீங்க ஏங்க இதுக்கலாம் கவலை படுறீங்க. இது இல்லனா இன்னொன்னு வுட்டு தள்ளுங்க பாஸ். ரொம்ப பீல் பண்ணாதீங்க நான் ஒரு ஐடியா சொல்லவா வேலையை விட்ட்ருரங்க. //

எப்படி சொன்னிங்க பாருங்க!!!...

**********
/ குசும்பன் said...
போதும் கார்க்கி இன்னும் எத்தனை நாளைக்குதான் உங்க காதலை மறைச்சு வைக்கமுடியும்! உங்க காதலையும் காதலியை பற்றியும் இன்றாவது சொல்வீங்க என்று நினைச்சேன்!

(இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் கார்க்கி அல்ரெடி கமிட்டெட் பார்ட்டிங்கோவ்வ்)

பூ, புஸ்பம், புய்பம் அனுப்புவர்கள் kusumbuonly@gmail.comக்கு அனுப்புங்கோ//

மக்களே கமிட்டட் பார்ட்டிக்கு அனுப்பலாம். ஆனா கல்யானம் ஆனவங்களுக்கு?????????

***************
/அண்ணா பொதுவாக தெற்காசிய நாடுகளில் ( முக்கியமாக ஸ்ரீ லங்கா, இந்தியா, பங்களாதேசம்) மட்டுமே காதலர்களுக்கு மட்டும் தான் வாழ்த்துத் தெரிவிக்கலாம் என்ற ஒரு கருத்து உண்டு,. ஆனால் மற்றைய நாடுகளில் எல்லோருக்கும் சொல்லும் பழக்கம் உண்டு............ என் நண்பர்களுக்குச் சொல்லி அவர்கள் என்ன என்று கேட்ட கொடுமை எனக்கே நடந்தது..... வேறு என்ன செய்ய//

சேம் ப்ளட்டா???

வெட்டிப்பயல் on February 14, 2009 at 12:05 PM said...

//இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா? சரி தல தலய எடுத்தடறேன். ஐ மீன் ஃபோட்டோல..
//

Good Boy :)

Thk U...

narsim on February 14, 2009 at 12:18 PM said...

சகா..

உங்க "ரெண்டு" பேருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்..

முரளிகண்ணன் on February 14, 2009 at 12:59 PM said...

இங்க கமெண்ட் போட்ட எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

பரிசல்காரன் on February 14, 2009 at 1:10 PM said...

//காதல் கல்யாணத்தில் முடிவதைத் தானே எல்லோரும் விரும்புவார்கள்? (என்ன பரிசல், இல்லையா????) //

ஆம்.

ஆனா யார் யார், யார் யார் கூட எனபதில் வேறுபாடு உண்டு,

அப்புறம் சகா.. இப்போதைக்கு வலையுலகப் பிரபலங்கள்ல நீயும், அதிஷாவும்தான் எலிஜபிள் பேச்சிலர்ஸ். சோ.. நிறைய ரோஸஸ் வந்திருக்கும். இப்போ அந்த ரோஸ்ல இருக்கற கலர், அப்புறமா உன் கண்ல வரும்!

வாழ்த்துகள்.

(இன்னைக்கு ஜூ.வி.வாங்கிட்டியா?)

கார்க்கி on February 14, 2009 at 1:22 PM said...

/ வெட்டிப்பயல் said...
Good Boy :)

Thk U..//

:)))))

**************
/ narsim said...
சகா..

உங்க "ரெண்டு" பேருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்//

யாரு தல அது??????

**********
/முரளிகண்ணன் said...
இங்க கமெண்ட் போட்ட எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்//

ரைட்டுங்க. இன்னைக்கு காதல் படங்கள்ல பத்தி ஏதாவது பதிவு?

*********
/இப்போதைக்கு வலையுலகப் பிரபலங்கள்ல நீயும், அதிஷாவும்தான் எலிஜபிள் பேச்சிலர்ஸ். சோ.. நிறைய ரோஸஸ் வந்திருக்கும். இப்போ அந்த ரோஸ்ல இருக்கற கலர், அப்புறமா உன் கண்ல வரும்!

வாழ்த்துகள்.

(இன்னைக்கு ஜூ.வி.வாங்கிட்டியா//

அப்பாடா.. நம்பிட்டாங்க.. என்ன விஷயம் சகா?

விஜய் on February 14, 2009 at 2:52 PM said...

Feb 14 'ai suthi ivlo vishayangal irukka????
hmm

gayathri on February 14, 2009 at 4:13 PM said...

ஃபிப்ரவரி 14 ல இருந்து ஒன்பது மாசம் தள்ளிப் போய் பாருங்க

ithu enna enku puriyala aniku enna naal

Thusha on February 14, 2009 at 5:18 PM said...

"எனக்கு ஒரு காதலி இருந்தா நான் ஏன் இன்னைக்கு வந்து உங்களுக்கு பதில் சொல்லிட்டு இருக்கப் போறேன் தல.."


அப்படியா அண்ணா

Thusha on February 14, 2009 at 5:18 PM said...

38

Thusha on February 14, 2009 at 5:18 PM said...

39 39 39 39 39 39 39

Thusha on February 14, 2009 at 5:19 PM said...

40 40 40 40 40 40 40 40 40 40 40 40 40 40 40 404 0

bye..............

Karthik on February 15, 2009 at 12:12 PM said...

கலக்கல் கார்க்கி..!

உங்க போஸ்ட்ட படிக்கிறதோட கமெண்ட்ஸையும் படிக்க வேண்டியிருக்கு..அதுவும் சூப்பர்பா இருக்குங்க!

கார்க்கி on February 15, 2009 at 3:42 PM said...

// விஜய் said...
Feb 14 'ai suthi ivlo vishayangal irukka???//

பின்ன?

*********
// gayathri said...
ஃபிப்ரவரி 14 ல இருந்து ஒன்பது மாசம் தள்ளிப் போய் பாருங்க

ithu enna enku puriyala aniku enna naa//

அய்யோ அய்யோ.. நவம்பர் 14..

*********

/ Thusha said...
"எனக்கு ஒரு காதலி இருந்தா நான் ஏன் இன்னைக்கு வந்து உங்களுக்கு பதில் சொல்லிட்டு இருக்கப் போறேன் தல.."


அப்படியா அண்//

அப்படியேதான்

*********

/ Karthik said...
கலக்கல் கார்க்கி..!

உங்க போஸ்ட்ட படிக்கிறதோட கமெண்ட்ஸையும் படிக்க வேண்டியிருக்கு..அதுவும் சூப்பர்பா இருக்குங்//

நன்றி கார்த்திக்

அமிர்தவர்ஷினி அம்மா on February 16, 2009 at 12:01 PM said...

:)-

 

all rights reserved to www.karkibava.com