Feb 12, 2009

சிக்கிட்டாருய்யா ஜிங்கனக்கா சுவாமிகள்


  இத படிக்கறதுக்கு முன்னாடி பரிசலோட இந்தப் பதிவ படிச்சிட்டு வாங்க. ரொம்ப நாள் ஆச்சு எதிர் பதிவு எழுதி. இது எதிர்பதிவு சீஸன் 3

********************************************

வழமையாகத்தான் நடந்துக் கொண்டிருக்கிறது இது. வயல்வெளித் தொலைத்த அயல்வெளிக் குறிப்புகள்,  அடர்நீலத் தீற்றல் கொண்ட பறவை , முலையுதிர் சிறகு, உரையாடலினி கவிதைகள் என அசூசை உணர்வேற்படுத்தும் பதிவுகள் என மிகச்சிறந்ததொரு வாசிப்பனுபவத்தை வழங்கும் வாய்ப்பு கிட்டியதில் பெருமைக் கொண்டிருந்தேன்.

இந்த கடினமானொதொரு சம்யம் அந்த நண்பனை சந்தித்தலிருந்துதான் தொடங்கியிருக்க கூடும். கருப்பொருள் கிடைக்காமல் தவித்த சமயம். அதை அவன் தருவிக்க கூடுமென்றுதான் வரச் சொன்னேன்.

"கொஞ்சநாளா உன் வலைப்பூவை படிச்சிட்டிருக்கேண்டா"

அவன் கண்களில் தெரிந்த தேடல் எனக்கு அவன் சொன்னது உண்மைதான் என்பதை உணர்த்திக் கொண்டிருந்தது.

"என்னடா எப்பப் பார்த்தாலும் உன் பெண் நண்பர்கள் பத்தியே எழுதற? உன் ப்ளாக்கை ஒரு நாளைக்கு 1000 பேர் படிச்சாங்கன்னா அதுல ஆண்கள்தான் 80% இருக்காங்க. அவங்களுக்கு இது அந்நியமாப் படும் இல்லையா?"

"தன்னிரு வளைக் கைகளைக் கொண்டு கழுத்தை நெறிக்கும் பெண்ணைக் கூட ரசிக்க முடிகிறது. ஆண்களைக் கண்டால் எனக்கு துணுக்குறலாகத்தான் இருக்கிறது.”

அவன் குனிஞ்சான். செருப்பை எடுக்க சென்றவனிடம் “ பெண்கள் மீது விருப்பமில்லையா உனக்கு” என்றேன்.

"பிடிக்கலன்னு சொல்லல.. சரி... நீ ஏண்டா மொக்கையா எழுதக் கூடாது?"

குறியீட்டு வடிவினளுடன் விதி பேசத் தொடங்கியது

"மொக்கை என்பது என்ன" என்று நான் கேட்டேன்.

"எதுக்கும் அடங்காத, எவனுக்கும் உதவாத, மேட்டரே இல்லாம எழுதறதுதான் மொக்கை "

"என் சொல்படி என் எழுத்துக்கள் பெரும்பாலன விளிம்பு நிலையில் உள்ள வாசகனுக்கு புரிந்துத் தொலைப்பதில்லை. அவன் பார்வையில் மேட்டரே இல்லாமல் இருப்பதாலும், எதற்கும் உதவவில்லை. அப்படியென்றால் நான் மொக்கைசாமியா?"

மறுபடி குனிஞ்சான்.

"சரி...” என்றேன்

சாருவோட ஜீரோ டிகிரி படிச்சிருக்கியா"

நான் என் இருபெருகருநிற விழிகளை விரித்து ஆம் என்றேன்.

"டேய்.. அதுக்கேண்டா ஏதோ செக்ஸ் புக்கைப் படிச்சவனாட்டம் பார்க்கற?"

கண்கள் சுருக்கி கொட்டாவி விடுவது போல பாவனை செய்து “என்ன சொல்லனும். சீக்கிரம்” என்றேன்

"அது பார்த்தீன்னா எதுக்கும் உதவாது. அந்த மாதிரின்னு வெச்சுக்கலாம்"

"ஓ அதுதான் மொக்கோ கேனயினிசமா?"

"அது மொக்கோ கேனினிசம் மொக்கோ கேனயினிசம் இல்ல"

"படிக்கும் வாசகர்களையெல்லாம் கேனையனாக பாவித்து அவர் எழுதுவதால் அது மொக்கோ கேனயினிசமா என்ற ஐயம் எழுவதில் என்ன தவறிருக்க முடியும்?”!

மறுபடி குனிஞ்சான். காலணியாதிக்கத்தின் வீச்சை உணர  முடிந்ததது என்னால்.

"கரும்புல ஜூஸ் இல்லன்னா சக்க.. வெய்ட்டே இல்லைன்னா தக்க.. மேட்டரே இல்லன்னா மொக்கை..”

இப்போ நான் குனிஞ்சேன். ”எல்லா வார்த்தைகளிலும் குறும்பு கொப்பளிக்க பேசுவாயே. என்னவாயிற்று என்றுக் கேட்டேன்.

"இதுதான் உன்னை மாதிரி ஆளுங்க சொன்னாலும் கேட்க மாட்டீங்க" னான்.

"சரி சொல்லு"

"இப்போ ஒரு படம் இருக்கு. நீங்க வழக்கமா ஹீரோ என்ன செய்யணும்னு நெனைக்கறீங்களோ அதை அவன் செய்வான். அப்போ அது மொக்கைப் படமாகுது"

"உதாரணம்?"

"வில்லுவை எடுத்துக்கலாம்"

"அவர் படம் வழமையாகவே நன்றாகத்தானே எடுப்பார்கள்"

"மூடிட்டு கேளுடா.."

"எப்போதும் மொழியுடன் விளையாட்டு நடத்தும்படி பேசும் நான் விஜயைப் பற்றி சொன்னதும் சிலிர்க்கிறேன். அப்படியென்றால் நானும் மொக்கைவாதியாக அவர் உதவுவாரோ?"

" நாசமாப் போ. நான் சொல்லிடறேன். அதுல அப்பா விஜய கொன்ன பிரகாஷ்ராஜுக்கு, மகன் விஜய அடையாளம் தெரியாம போனதற்கு காரணம், அப்பா வச்சிருந்தா வித்தியாசமான மீசைதான்னு காட்டுவாங்களே. அதுதான் மொக்கை"

நரம்புகளில் ஓடும் குருதி கொப்பளிக்க தொடங்கியது. உன் வார்த்தைகளில் இருக்கும் கருத்துபடி பார்த்தோமேயானால் தமிழ் திரைப்பட உலகில் அஜித்தைத்தான் மகா மொக்கை என்று சொல்வதில் எனக்கு உடன்பாடிருக்கிறது. ஜி யில் மாணவனாகவும், ஆஞ்சனேயாவில் தொப்பை உண்டு என்ற ஒரே காரணத்திற்காக காவலராகவும், கொலை செய்ய ஆறு மணி நேரம் செல்வழித்து உடலெங்கும் வண்ணப் பூச்சுகளுடன்  சென்ற ஆழ்வாரும் தான் மகா மொக்கையர்களன்றோ?

“ஒண்ணு சொல்றேன் தெரிஞ்சுக்க. மொக்கையைப் புரிஞ்சுக்கணும்னா நீ ஒரு மொக்கைசாமி மாறணும். அப்போதான் இதெல்லாம் ஒனக்குப் புரியும். தெரியும்”

“புரிவதற்கும் தெரிவதற்கும் என்ன வேறுபாடுகள் இருக்க முடியும்?”

“அங்க பாரு அது என்ன?”

“பேப்பர் வெய்ட்”

“அது ஒனக்குத் தெரியுதா?”

“தெரிகிறதே”

“அது பேப்பர் வெய்ட்னு தெரியுது. ஆனா அது ஏன் பேப்பர் வெய்ட்னு தெரியுமா?”

“புரிய மறுக்கிறது..”

“ஆங்... அதுதான் மேட்டர். அது பேப்பர் வெய்ட்னு தெரிஞ்சா தெரியுதுன்னு சொல்லலாம். அது ஏன் பேப்பர் வெய்ட்னு தெரிஞ்சா புரிஞ்சதுன்னு சொல்லலாம்”

“புரியல”

“வில்லு

“டேய்... வேற பேசு”

“அஜித்தோட படங்கள்..”

“இதுக்கு அதையே பேசு”

“சரி... ரெண்டும் வேண்டாம். டீ.ஆர். இல்லைன்னா சிம்புவோட  நாலு படத்த பார்த்தா புரியும்”

“அப்ப சிலம்பாட்டத்துல சின்ன தல என்று சொல்லும் அவனும் மொக்கைசாமியா?”

“ஆங்... இப்பதான் நீ ஓரளவு புரிஞ்சுட்டிருக்க”

மொக்கையை விளக்க தேவையான அடிப்படை விதயமாக நான் நினைப்பது சரியான எடுத்துக்காட்டு. வில்லுவை மொக்கையென் வகைப்படுத்திய அவன் அறியாமைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன், அவன் “அப்ப நான் கெளம்பறேன்”ன்னான்.

“வரும் போது கொடுக்கனும் கை. போம்போது சொல்லனும் பை” என்றேன்..

”வெரிகுட். இதான்.. இப்படித்தான்”னுட்டே போய்ட்டான்.

அப்போ டம்ளர் எடுக்க வந்த ஆஃபீஸ் பாய்கிட்ட “மாப்பி. இன்னொரு காஃபி” என்றேன்

“ தலைவலிக்கு குடிக்கலாம் காபி. இங்க தலைவலியே கேட்குது காஃபி” னான் அவன்.

ஆஹா.. இத்தனை நாள் இவன் இப்படிப் பேசினதில்லையே.. ஒருவேளை ஓரமா நின்னு ஒட்டுக் கேட்டானோன்னு, இவனும் மொக்கைசாமி ஆகறானோன்னு நான் யோசிச்சுகிட்டிருப்பவே எங்க எம்.டி வந்தார்.

“அய்யணார்... அந்த ரிப்போர்ட் ரெடியா?” ன்னு கேட்க..

“உங்களுக்கு இப்போ தேவை ரிப்போர்ட். நான் உங்கள பத்தியே பண்ணுவேன் ரிப்போர்ட்” ன்னேன்.

அவரு சிரிச்சுகிட்டே போக.. ‘அகிலெங்குமெங்கும் ரிஸஷன் தலைவிரித்தாடும் போது கலங்காமல் சிரிக்கும் இவரும் மொக்கைசாமியோ?’ ன்னு ஒரு சிந்தனை எனக்குள்ள ஆரம்பிக்க.. என் ஃபோன் ஒலிச்சது.

Girl friend(33) calling....

எடுத்து பேசத்தொடங்கி மூனேகால் மணி நேரம் கழித்து சார்ஜ் இல்லாமல் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதுதான் உணர்ந்தேன்.

சந்திராசாமிகளுக்கு அரசியல்வாதிதான் close friend

மொக்கைசாமிகள  உருவாக்கறவங்க  girl friend.

51 கருத்துக்குத்து:

SK on February 12, 2009 at 7:41 PM said...

me the first :)

SK on February 12, 2009 at 7:42 PM said...

போய் படிக்கிறேன் :)

கார்த்திகைப் பாண்டியன் on February 12, 2009 at 7:43 PM said...

ஆவியில் "முதல் முத்தம்" படித்தேன் கார்க்கி.. வாழ்த்துக்கள்.. நீங்கள் பெரிய விஜய் ரசிகர் என்பது தெரியும்.. எனவே.. நேரம் இருப்பின்.. என்னுடைய பதிவு "எல்லா புகழும் வில்லுக்கே" என்பதை படித்துவிட்டு என்னைத் திட்டும்படி பேரன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..

வித்யா on February 12, 2009 at 7:46 PM said...

\\நீ ஏண்டா மொக்கையா எழுதக் கூடாது?"\\

இப்ப மட்டும் எப்படி எழுதறீயாம்??

SK on February 12, 2009 at 7:49 PM said...

கார்க்கி கன்னாபின்னாவென எல்லாரையும் கலைச்சு இருக்கீங்க. :) :)

ஏதோ நல்ல இருந்த சரி :)

கார்க்கி on February 12, 2009 at 7:49 PM said...

// SK said...
me the first ://

வாங்க சகா

**********
/ கார்த்திகைப் பாண்டியன் said...
ஆவியில் "முதல் முத்தம்" படித்தேன் கார்க்கி.. வாழ்த்துக்கள்.. நீங்கள் பெரிய விஜய் ரசிகர் என்பது தெரியும்.. எனவே.. நேரம் இருப்பின்.. என்னுடைய பதிவு "எல்லா புகழும் வில்லுக்கே" என்பதை படித்துவிட்டு என்னைத் திட்டும்படி பேரன்புடன் கேட்டுக் கொள்கிறேன்//

நன்றி.. படித்துவிட்டேன். மக்களின் அறியாமையை பகடி செய்யும் அளவிற்கு நான் வன்முறையாளனல்ல. :))

***********
// வித்யா said...
\\நீ ஏண்டா மொக்கையா எழுதக் கூடாது?"\\

இப்ப மட்டும் எப்படி எழுதறீயா//

என்ன அவசரம்? முழுசா படிங்க. அது நானில்ல.

SK on February 12, 2009 at 7:52 PM said...

நல்ல வார்த்தைகள் நிறைய உபயோக 'படுத்தி' இருக்கீங்க அருமை :)

உங்களுக்கு ஒரு விதிமுறை போடலாம்னு இருக்கேன். :)

தாமிரா on February 12, 2009 at 8:43 PM said...

கொஞ்சம் டஃப்பான பந்துதான்.. சிக்ஸர் இல்லைன்னாலும்.. பவுண்டரி விளாசியிருப்பதற்கு வாழ்த்துகள்.!

எம்.எம்.அப்துல்லா on February 12, 2009 at 8:52 PM said...

நடத்துடா...நடத்து !

மணிகண்டன் on February 12, 2009 at 9:19 PM said...

****
மக்களின் அறியாமையை பகடி செய்யும் அளவிற்கு நான் வன்முறையாளனல்ல. :))
****

பதிவ விட இது இன்னுமே நல்லா இருக்குங்க கார்க்கி.

பாண்டியன் வன்முறையாளர் ஆகிட்டார்ன்னு சொல்றீங்களா ?

கார்க்கி on February 12, 2009 at 10:24 PM said...

//தாமிரா said...
கொஞ்சம் டஃப்பான பந்துதான்.. சிக்ஸர் இல்லைன்னாலும்.. பவுண்டரி விளாசியிருப்பதற்கு வாழ்த்துகள்//

நன்றி சேப்பல்..

****************

// எம்.எம்.அப்துல்லா said...
நடத்துடா...நடத்து
//

விரைவில் எதிர்பாருங்கள் கம்யுனிஸமும் திராவிடமும்

*************8


// மணிகண்டன் said...
****
மக்களின் அறியாமையை பகடி செய்யும் அளவிற்கு நான் வன்முறையாளனல்ல. :))
****

பதிவ விட இது இன்னுமே நல்லா இருக்குங்க கார்க்கி.

பாண்டியன் வன்முறையாளர் ஆகிட்டார்ன்னு சொல்றீங்களா
//

நான் மெளன விரதங்க

முரளிகண்ணன் on February 12, 2009 at 10:55 PM said...

கார்க்கி, தாமிராவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

இது மைதானத்தை தாண்டி விழுந்த மகத்தான சிக்ஸர்

தாரணி பிரியா on February 12, 2009 at 11:22 PM said...

//வில்லுவை மொக்கையென் வகைப்படுத்திய அவன் அறியாமைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்//

வில்லுவை எல்லாம் படம் லிஸ்ட்லயே சேத்த கூடாது. இதுல என்ன அதிர்ச்சி வேண்டி கிடக்கு?

தாரணி பிரியா on February 12, 2009 at 11:25 PM said...

//தமிழ் திரைப்பட உலகில் அஜித்தைத்தான் மகா மொக்கை என்று சொல்வதில் எனக்கு உடன்பாடிருக்கிறது//

ஏனிப்படி இப்ப நிம்மதியா தூக்கம் வருமே

தாரணி பிரியா on February 12, 2009 at 11:29 PM said...

இப்ப மட்டும் எங்கையில ஒரு பேப்பர் வெயிட் இருந்தா அதை உங்க தலையில போட்டு அந்த வெயிட்டை புரிய வெச்சு இருப்பேன் :)

தாரணி பிரியா on February 12, 2009 at 11:29 PM said...

என்னமோ போங்க நல்லா இருங்க

ஸ்ரீதர்கண்ணன் on February 13, 2009 at 12:20 AM said...

Girl friend(33) calling....

எடுத்து பேசத்தொடங்கி மூனேகால் மணி நேரம் கழித்து சார்ஜ் இல்லாமல் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதுதான் உணர்ந்தேன்.

என்னானு??

சும்மா சொல்லக்கூடாது கார்க்கி செம செம செம செம செம மொக்க.... :))))))))

Mahesh on February 13, 2009 at 7:02 AM said...

அதானே பாத்தேன்.. என்னடா பரிசல் பதிவை மத்தவங்க கும்மி ரொம்ப நாளாச்சேன்னு... பின்நவீனத்துவம்னு சொன்ன உடனே ஆரம்பிச்சுட்டீங்களே !!

Natty on February 13, 2009 at 7:41 AM said...

தெய்வமே! எங்கேயோ போயிட்டீங்க ;)

Natty on February 13, 2009 at 7:42 AM said...

Girl friend(33) calling....
தல, 33 என்பது எதை குறிக்கிறது? :)

பரிசல்காரன் on February 13, 2009 at 8:59 AM said...

கலக்கல்டா சகா. ஒரு இடத்துலயும் தொய்வோ, குறையோ சொல்ல முடியல.

தலைப்புதான் சங்கடப்படுத்துது. அது எதுக்கு சாரி?

விகடன் புகழ் முரளிகண்ணனுக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன். அவருதான் என்னப்பா எல்லாரும் சீரியஸாவே எழுதறீங்க.. ஒரு சரவெடி கொளுத்துங்க.. வெடிக்கட்டும்னாரு.

என் பதிவு உன்னால் எதிர்ப்பதிவு ஆக்கப்பட்டதில் எனக்குப் பெருமை!

கார்க்கி on February 13, 2009 at 9:24 AM said...

/ முரளிகண்ணன் said...
கார்க்கி, தாமிராவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

இது மைதானத்தை தாண்டி விழுந்த மகத்தான சிக்ஸ//

ரொம்ப நன்றி தல. அவருகிட்ட கேட்டா நான் இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பார்க்கிறேனு சொல்லுவாரு.. :))

***********
/ தாரணி பிரியா said...
//தமிழ் திரைப்பட உலகில் அஜித்தைத்தான் மகா மொக்கை என்று சொல்வதில் எனக்கு உடன்பாடிருக்கிறது//

ஏனிப்படி இப்ப நிம்மதியா தூக்கம் வரு//

ஏங்க? விஜயை கூடத்தான் கிண்டல் செஞ்சிருக்கேன். அத பார்க்கலையா?

************

/ ஸ்ரீதர்கண்ணன் said...
Girl friend(33) calling....

எடுத்து பேசத்தொடங்கி மூனேகால் மணி நேரம் கழித்து சார்ஜ் இல்லாமல் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதுதான் உணர்ந்தேன்.

என்னானு??//

அதான் கடைசி ரெண்டு வரி போட்டேனே.. அதான்

//சும்மா சொல்லக்கூடாது கார்க்கி செம செம செம செம செம மொக்க....//

வெற்றி வெற்றி வெற்றி

கார்க்கி on February 13, 2009 at 9:28 AM said...

/ Mahesh said...
அதானே பாத்தேன்.. என்னடா பரிசல் பதிவை மத்தவங்க கும்மி ரொம்ப நாளாச்சேன்னு... பின்நவீனத்துவம்னு சொன்ன உடனே ஆரம்பிச்சுட்டீங்க//

கிகிகி. அவரு அவ்ளோ நல்லவருங்க. உங்க ஏரியாவுக்கு அவர அனுப்பி வைக்கவா?

*************
// Natty said...
Girl friend(33) calling....
தல, 33 என்பது எதை குறிக்கிறது? //

அதான்.அதேதான். இதெல்லாம் புரிஞ்சிக்கனும். விளக்கம் சொன்னா நல்லாயிருக்காது சகா

*****************
// பரிசல்காரன் said...
கலக்கல்டா சகா. ஒரு இடத்துலயும் தொய்வோ, குறையோ சொல்ல முடியல.//

அப்பாடா.. கொஞ்சம் டென்ஷனாதான் இருந்ததது.

//தலைப்புதான் சங்கடப்படுத்துது. அது எதுக்கு சாரி?//


வியாபார தந்திரங்கள் நீங்கள் அறியாததா?

//என் பதிவு உன்னால் எதிர்ப்பதிவு ஆக்கப்பட்டதில் எனக்குப் பெருமை//

எனி உள்குத்து???

Jenbond on February 13, 2009 at 9:31 AM said...

\\ஒண்ணு சொல்றேன் தெரிஞ்சுக்க. மொக்கையைப் புரிஞ்சுக்கணும்னா நீ ஒரு மொக்கைசாமி மாறணும். அப்போதான் இதெல்லாம் ஒனக்குப் புரியும். தெரியும்\\

சகா அப்ப உங்களோட ப்லாக் படிச்சி புரிஞ்சி தெரிஞ்சிக்கணும்னா நாங்க எல்லோரும் மொக்கைசாமியா மாறணுமா?

Jenbond on February 13, 2009 at 9:39 AM said...

\\நாசமாப் போ. நான் சொல்லிடறேன். அதுல அப்பா விஜய கொன்ன பிரகாஷ்ராஜுக்கு, மகன் விஜய அடையாளம் தெரியாம போனதற்கு காரணம், அப்பா வச்சிருந்தா வித்தியாசமான மீசைதான்னு காட்டுவாங்களே.\\

சகா உங்களுக்கு அடையாளம் தெரிஞ்சுதா?(நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை). அவரு நல்லா தான் நடிச்சிருப்பார்னு(!?) நம்புறேன். friends படத்துல கிளைமேஸ் சீனுல வந்தது கூட யார்ரோன்னு தான் நினச்சேன் அப்ப என் friend டேய் அது விஜய் தான் சொன்னான் என்னால இப்ப கூட அத நம்ப முடியில.

Jenbond on February 13, 2009 at 9:45 AM said...

\\Girl friend(33) calling....\\

என்ன சகா ரொம்ப கம்மியா (33) கீது. இல்ல கணக்குல வந்தது 33 வராம எத்தனை இன்னும் இருக்கு?

Jenbond on February 13, 2009 at 9:49 AM said...

\\பேசத்தொடங்கி மூனேகால் மணி நேரம் கழித்து சார்ஜ் இல்லாமல் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதுதான் உணர்ந்தேன்.\\

இனிமேல் நோக்கியா பயன்படுத்துங்க சகா.

அருண் on February 13, 2009 at 10:20 AM said...

ரொம்ப நல்லா இல்ல....

gayathri on February 13, 2009 at 10:33 AM said...

athu enna girl friend (33) calling

gayathri on February 13, 2009 at 10:33 AM said...

me they 30

gayathri on February 13, 2009 at 10:37 AM said...

ஏங்க? விஜயை கூடத்தான் கிண்டல் செஞ்சிருக்கேன். அத பார்க்கலையா?

vijay ya mattuma kental panni irukenga. simbuva kuda kendal panni irukenga eaan intha kola veri ungaluku

கார்க்கி on February 13, 2009 at 10:47 AM said...

// Jenbond said...
\\Girl friend(33) calling....\\

என்ன சகா ரொம்ப கம்மியா (33) கீது. இல்ல கணக்குல வந்தது 33 வராம எத்தனை இன்னும் இருக்கு//

நான் சொல்றது இந்த வாரம்..

//இனிமேல் நோக்கியா பயன்படுத்துங்க ச//

அதுலதான் மூனு மணி நேரம் பேச முடியும்..

************
//அருண் said...
ரொம்ப நல்லா இல்ல//

என்ன சகா? தெளிவா சொல்லுங்க :((

**********
// gayathri said...
athu enna girl friend (33) calling//

பேரு எல்லாம் ஞாபகம் வச்சுக்க முடியல. அதான் நம்பருங்க.. :))

prakash on February 13, 2009 at 11:00 AM said...

சூப்பரப்பு....

prakash on February 13, 2009 at 11:04 AM said...

//மறுபடி குனிஞ்சான். காலனியாதிக்கத்தின் வீச்சை உணர முடிந்ததது என்னால்//

கார்க்கி. கால"ணி" யாதிக்க வீச்சுக்காக குனிந்திருப்பார் :))

prakash on February 13, 2009 at 11:17 AM said...

//குறியீட்டு வடிவினளுடன் //

??????????????

மத்ததெல்லாம் ரொம்ப புரிஞ்ச மாதிரி இதுக்கு மட்டும் கொஸ்டின் மார்க் போடறியான்னு கேட்கப்படாது :))

அருண் on February 13, 2009 at 11:57 AM said...

//
என்ன சகா? தெளிவா சொல்லுங்க :((//

சும்மா டைம் பாஸ் சகா. ;)

அருண் on February 13, 2009 at 11:59 AM said...

நீங்க எழுதி எந்த பதிவு நல்லா இருந்ததில்ல???

narsim on February 13, 2009 at 12:18 PM said...

//“வில்லு “டேய்... வேற பேசு” “அஜித்தோட படங்கள்..” “இதுக்கு அதையே பேசு” “சரி... //

சகா.. எங்க தான் உட்காந்து யோசிக்கிறீங்களே.. கலக்கல் எதிர்வினை

Karthik on February 13, 2009 at 12:42 PM said...

கலக்கல்ஸ் கார்க்கி. :)

நான் மேஜிக்கல் ரியலிஸம் எழுதலாமான்னு யோசிக்கிறேன். oops!

Bleachingpowder on February 13, 2009 at 12:56 PM said...

நல்லா தான போயிட்டு இருந்துச்சு இப்ப என்னாச்சு தீடீருன்னு, சாரு கீருட்ட ஃபோன்ல ஏதாச்சும் பேசுனீங்களா?

பாலா படத்துல விஜய் நடிச்ச மாதிரி ஒன்னுமே புரியல தல இந்த மரமண்டைக்கு

Anonymous said...

agrrrrrrrrrrrrrrrrrrrrrrr

ஸ்ரீமதி on February 13, 2009 at 1:46 PM said...

:)))

அனுஜன்யா on February 13, 2009 at 1:55 PM said...

செம்ம கலக்கல் rejoinder.

ஆனால், இன்னும் பிரமாதமாகச் செய்ய உன்னால் முடியும். ஆனாலும், அட்டகாசம்தான்.

அனுஜன்யா

அமிர்தவர்ஷினி அம்மா on February 13, 2009 at 2:15 PM said...

என்ன ஒரு பின்நவீனத்துவம்

அதுவும் அந்த கடைசி வரிகளில் அவர் செய்த நையாண்டியும், நீங்கள் செய்த நையாண்டியும் சூப்பர்

நேத்து அந்தப் பதிவையும் படிச்சேன், அதுல நீங்க போட்டிருந்த ரெண்டு கமெண்டும் படிச்சேன்

வாழ்த்துக்கள் இன்னும் எழுத்தில ஜொலிக்க

ரமேஷ் வைத்யா on February 13, 2009 at 2:37 PM said...

33 ங்கிறது வயசுங்கிறதை உடைச்சுச் சொல்லிட்டுப் போயேம்பா.... :‍))))

SK on February 13, 2009 at 3:04 PM said...

:)

கார்க்கி on February 13, 2009 at 7:54 PM said...

/ prakash said...
சூப்பரப்பு..//

:))))

**********
//narsim said...
//“வில்லு “டேய்... வேற பேசு” “அஜித்தோட படங்கள்..” “இதுக்கு அதையே பேசு” “சரி... //

சகா.. எங்க தான் உட்காந்து யோசிக்கிறீங்களே.. கலக்கல் எதிர்வினை//

இதுல உள்குத்து ஏதுமில்லையே தல????

*************
/ Karthik said...
கலக்கல்ஸ் கார்க்கி. :)

நான் மேஜிக்கல் ரியலிஸம் எழுதலாமான்னு யோசிக்கிறேன். oops//

அடிச்சு கிளப்பு கார்த்திக்

*************
// Bleachingpowder said...
நல்லா தான போயிட்டு இருந்துச்சு இப்ப என்னாச்சு தீடீருன்னு, சாரு கீருட்ட ஃபோன்ல ஏதாச்சும் பேசுனீங்க//

பரிசல் பதிவ படிச்சாலும் புரியலையா சகா?
\

கார்க்கி on February 13, 2009 at 7:55 PM said...

/ Thooya said...
agrrrrrrrrrrrrrrrrrrrrrrr//

அப்படின்னா???????

**********
/ ஸ்ரீமதி said...
:)))//

:))))

*********
/அனுஜன்யா said...
செம்ம கலக்கல் rejoinder.

ஆனால், இன்னும் பிரமாதமாகச் செய்ய உன்னால் முடியும். ஆனாலும், அட்டகாசம்தான்//

என்ன தல குழப்பறீங்க..

கார்க்கி on February 13, 2009 at 7:56 PM said...

/அமிர்தவர்ஷினி அம்மா said...
என்ன ஒரு பின்நவீனத்துவம்

அதுவும் அந்த கடைசி வரிகளில் அவர் செய்த நையாண்டியும், நீங்கள் செய்த நையாண்டியும் சூப்ப//

நன்றி அ.அம்மா

**********
/ ரமேஷ் வைத்யா said...
33 ங்கிறது வயசுங்கிறதை உடைச்சுச் சொல்லிட்டுப் போயேம்பா..../

அபப்டியே இருந்தாலும் என்ன தப்பு தல?

************

/ SK said...
:)//

இது எதுக்கு?

வெண்பூ on February 14, 2009 at 10:48 AM said...

கலக்கல் எதிர்வினை... பின்நவீனத்துவ பிதாமகன் சேது நந்தா கார்க்கி வாழ்க..

Me the 50...

விஜய் on February 17, 2009 at 3:18 PM said...

51st is me

 

all rights reserved to www.karkibava.com