Feb 11, 2009

குடிகாரர்களே ஒரு நிமிஷம் வாங்க


     கொரியாவில் சரக்கடிக்க சில ஃபார்மாலிட்டீஸ் உண்டு. சியர்ஸ் சொன்னவுடன் ஒரே கல்ப்பாக அடித்துவிட்டு க்ளாசை தலையில் கவிழ்த்துக் காட்டி முழுசா குடிச்சிட்டேன் பார் என்று சொல்லாமல் சொல்லனுமாம். LGல் வேலை செய்த போது MD சொன்னார். அவருக்கும் எனக்கும் பியர் போட்டி. இதேப் போல தொடர்ந்து அதிகம் குடிப்பவரே வெற்றியாளர். நான் தான் ஜெயிச்சேனு அவரே ஒத்துகிட்டு என்ன வேணும்ன்னு கேட்டார். டவல் என்றேன். அவ்ளோ மப்பு அண்ணாத்தைக்கு.

*******************************************

   இந்தியாவில் கிடைக்கும் பியர்களில் 6000 மற்றும் கிங்ஃபிஷர் ஸ்ட்ராங்க் போன்றவையே வெறும் 6% சதவிகித ஆல்கஹால்தான். சிங்கையில் கிடைக்கும் பரோன்ஸ் மற்றும் கார்ல்ஸ்பெர்க் போன்றவை 8.8% . இந்தியாவில் இவை ஏன் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. ஹைதையில் கோப்ரா கிடைக்கிறது. அது 7% என்றாலும் நல்ல டேஸ்ட் என்கிறார்கள். எத்தணை இண்டெர்னேஷ்னல் பிராண்டு அடித்தாலும் எனக்கு இன்னமும் ப்ளாக் நைட் கல்யானிதான் ஃபேவரிட். “பால் குடிக்கிற பசங்க எல்லாம் பீர் குடிச்சா இப்படித்தான்” என்ற விளம்பரம் நினைவிருக்கா? முகத்துல Zip ப்போட வருவாரே ஒரு ஹீரோ.

*********************************************

  எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு Quarterன் லாப கணக்கின்படி team outing போவது வழக்கம். சென்ற வாரம் ஒரு outing. ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு எனக்கு. எல்லாம் நல்லபடியாக நடந்த முடிந்தவுடன், டேமேஜர் அழைத்தார். ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார். ”இந்த Quarterல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு outingற்கு அனுமதி வாங்கித் தருவதாக” கூறினார். அவர் சொன்னதையே தான் நானும் சொன்னேன். ஒரு வார்த்தையை மட்டும் இடமாற்றி. அதுக்கு திட்டறாருங்க‌. நான் சொன்னது

“இந்த Outingல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு Quarterக்கு அனுமதி வாங்கி தாங்களேன்”

***********************************************

  அந்த பார்ட்டி முடிந்தபின் இரவு என் அறைக்கு பதினோரு மணிக்குதான் சென்றேன். ரொம்ப நேரம் சாவியை சரியாக போடாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அப்போது வெளியே வந்து ஹவுஸ் ஓனர் உதவி செய்ய வந்தார். சாவியை வாங்க வந்த அவரிடம் “அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க உங்க வீட்ட கொஞ்சம் ஆடாம புடிச்சுக்கோங்க. இப்படி ஆடுது. உங்க தாத்தா கட்டியதா?” என்றேன். தமிழ் புரியாமல் சென்றுவிட்டதாக நினைத்தால், மறுநாள் வந்து வீட்டை காலி செய்ய சொல்கிறார். ஆடற வீட்ட ஆடித்தானே தொறக்கனும்? அதான் தண்ணியடிச்சிட்டு வந்து திறந்ததாக சொல்லி சமாளித்திருக்கிறேன்.

**********************************************

ஒரு நிமிஷம் முடிஞ்சிடுச்சு. போய் தமிழ்மண ஓட்டு போடற வேலையப் பாருங்க.

58 கருத்துக்குத்து:

gayathri on February 11, 2009 at 9:50 AM said...

me they first

ok post padichitu varen ok

gayathri on February 11, 2009 at 9:54 AM said...

sorry idam mari vanthuten naan poren bye

அ.மு.செய்யது on February 11, 2009 at 9:58 AM said...

//“இந்த Outingல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு Quarterக்கு அனுமதி வாங்கி தாங்களேன்”//

நல்லா கிளப்புனீங்க பீதிய..

Cable Sankar on February 11, 2009 at 10:02 AM said...

மப்ப்பில் படித்ததால் ஓட்டை மாத்தி வேறு ப்ளாக்ல குத்திட்டேன்.. தல. இதோ இப்ப கரெட்ட்ட்ட்ட்ட்டாஆஆ.... (பொத்) மப்பில் மட்டையாவது.

தாரணி பிரியா on February 11, 2009 at 10:08 AM said...

ஹவுஸ் ஒனர் உங்களை காலி பண்ணாம வீட்டைத்தானே காலி பண்ண சொன்னார். அதுக்கு சந்தோஷப்படுங்க

பரிசல்காரன் on February 11, 2009 at 10:08 AM said...

இதற்குத்தான் காக்டெய்ல் என்ற தலைப்பு பொருத்தம் சகா!

முரளிகண்ணன் on February 11, 2009 at 10:10 AM said...

\\இதற்குத்தான் காக்டெய்ல் என்ற தலைப்பு பொருத்தம் சகா!\\

பரிசல் அடிக்கடி முந்திக்கிறீங்க

பரிசல்காரன் on February 11, 2009 at 10:10 AM said...

//Online 15//

அடக்குடிகாரர்களா! காலையிலேவா...

பரிசல்காரன் on February 11, 2009 at 10:11 AM said...

outing.. Quarter...

சூப்பர் சகா!

கார்க்கி on February 11, 2009 at 10:11 AM said...

//sorry idam mari vanthuten naan poren bye//

ஆமாம். முதல்லா போக வேண்டிய இடத்துக்கு போயிட்டு அப்புறம் இங்க வாங்க :))

***************
// அ.மு.செய்யது said...
//“இந்த Outingல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு Quarterக்கு அனுமதி வாங்கி தாங்களேன்”//

நல்லா கிளப்புனீங்க பீதிய.//

இதுல என்னக்க பீதி?

*************
/ Cable Sankar said...
மப்ப்பில் படித்ததால் ஓட்டை மாத்தி வேறு ப்ளாக்ல குத்திட்டேன்.. தல. இதோ இப்ப கரெட்ட்ட்ட்ட்ட்டாஆஆ.... (பொத்) மப்பில் மட்டையாவது//

ஆவ்வ்வ்... இப்ப சரி.. கேட்குதா?

பரிசல்காரன் on February 11, 2009 at 10:12 AM said...

//Blogger முரளிகண்ணன் said...

\\இதற்குத்தான் காக்டெய்ல் என்ற தலைப்பு பொருத்தம் சகா!\\

பரிசல் அடிக்கடி முந்திக்கிறீங்க///

முரளி.. நிச்சயமா நம்மாளுக யாராவது முந்திக்குவாங்கன்னு பதிவப் படிக்காமயே அவசர அவசரமா போட்ட கமெண்ட் அது!!!

கார்க்கி on February 11, 2009 at 10:13 AM said...

// பரிசல்காரன் said...
இதற்குத்தான் காக்டெய்ல் என்ற தலைப்பு பொருத்தம் சகா//

ஆமாம். இந்த தலைப்பு வச்சதுக்கு வேற காரணம் இருக்கு. அப்புறமா சொல்றேன்

*****************
// தாரணி பிரியா said...
ஹவுஸ் ஒனர் உங்களை காலி பண்ணாம வீட்டைத்தானே காலி பண்ண சொன்னார். அதுக்கு சந்தோஷப்படுங்//

ஹலோ நான் என்ன 90 ஆ? ஈஸீயா காலி பண்ண?

***************
//முரளிகண்ணன் said...
\\இதற்குத்தான் காக்டெய்ல் என்ற தலைப்பு பொருத்தம் சகா!\\

பரிசல் அடிக்கடி முந்திக்கிறீங்//

இந்த பதிவுக்கு நீங்க வந்ததே எப்ரிய விஷயம் தல

prakash on February 11, 2009 at 10:15 AM said...

//ஒவ்வொரு Quarterன் லாப கணக்கின்படி //

ஹி ஹி.. இத படிக்கும் போதே நான் அந்த குவாட்டர்னு நெனைச்சி குழம்பிட்டேன்...

கார்க்கி on February 11, 2009 at 10:15 AM said...

/ பரிசல்காரன் said...
//Online 15//

அடக்குடிகாரர்களா! காலையிலேவா//

நேத்து நைட் குடிச்சாலும் குடிகாரர்கள் தானே சகா?

//outing.. Quarter...

சூப்பர் சகா//

ஆமாம் சகா.. ரெண்டுமே சூப்பர்தான்.. :))

//முரளி.. நிச்சயமா நம்மாளுக யாராவது முந்திக்குவாங்கன்னு பதிவப் படிக்காமயே அவசர அவசரமா போட்ட கமெண்ட் அது!//

நீங்களுமா????? கிகிகிகி

prakash on February 11, 2009 at 10:17 AM said...

//ஒரே கல்ப்பாக அடித்துவிட்டு க்ளாசை தலையில் கவிழ்த்துக் காட்டி முழுசா குடிச்சிட்டேன் பார் என்று சொல்லாமல் சொல்லனுமாம்.//

யார் தலையில?

பரிசல்காரன் on February 11, 2009 at 10:18 AM said...

//
ஆமாம். இந்த தலைப்பு வச்சதுக்கு வேற காரணம் இருக்கு. அப்புறமா சொல்றேன்//

உன்னத் தெரியாதா.. நாளைக்கு காக்டெய்ல்ல இந்த மாதிரி பதிவு போட்டேன், இத்தனை பேர் படிச்சாங்க.. எல்லாரும் குடிகாரங்கம்ப. மவனே அப்படி மட்டும் சொல்லிப்பாரு.. அப்பறம் இருக்கு ஒனக்கு சேதி..

prakash on February 11, 2009 at 10:20 AM said...

//ஒரே கல்ப்பாக அடித்துவிட்டு க்ளாசை தலையில் கவிழ்த்துக் காட்டி முழுசா குடிச்சிட்டேன் பார் என்று சொல்லாமல் சொல்லனுமாம்.//

க்ளாஸ்ல இருந்த சரக்கு தலைக்கு ஏற்றிடுச்சின்னு சொல்லுறதுக்காக இருக்கும் :))

இராகவன் நைஜிரியா on February 11, 2009 at 10:27 AM said...

// ஒரு நிமிஷம் முடிஞ்சிடுச்சு. போய் தமிழ்மண ஓட்டு போடற வேலையப் பாருங்க. //

அப்ப தமிழிஷ் ஓட்டு வேண்டாமா?

ஸ்ரீதர்கண்ணன் on February 11, 2009 at 10:29 AM said...

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க உங்க வீட்ட கொஞ்சம் ஆடாம புடிச்சுக்கோங்க. இப்படி ஆடுது. உங்க தாத்தா கட்டியதா?” என்றேன். தமிழ் புரியாமல் சென்றுவிட்டதாக நினைத்தால், மறுநாள் வந்து வீட்டை காலி செய்ய சொல்கிறார். ஆடற வீட்ட ஆடித்தானே தொறக்கனும்? அதான் தண்ணியடிச்சிட்டு வந்து திறந்ததாக சொல்லி சமாளித்திருக்கிறேன்.


முடியல பாஸு முடியல .... :)))))))))))))))))))))))))))))

கார்க்கி on February 11, 2009 at 10:32 AM said...

// prakash said...
//ஒரே கல்ப்பாக அடித்துவிட்டு க்ளாசை தலையில் கவிழ்த்துக் காட்டி முழுசா குடிச்சிட்டேன் பார் என்று சொல்லாமல் சொல்லனுமாம்.//

க்ளாஸ்ல இருந்த சரக்கு தலைக்கு ஏற்றிடுச்சின்னு சொல்லுறதுக்காக இருக்கும் :)//

மேல இருந்து ஊத்தினா தலைல இறங்கும் சகா. எப்படி ஏறும்?

*********************

/ பரிசல்காரன் said...
//
ஆமாம். இந்த தலைப்பு வச்சதுக்கு வேற காரணம் இருக்கு. அப்புறமா சொல்றேன்//

உன்னத் தெரியாதா.. நாளைக்கு காக்டெய்ல்ல இந்த மாதிரி பதிவு போட்டேன், இத்தனை பேர் படிச்சாங்க.. எல்லாரும் குடிகாரங்கம்ப. மவனே அப்படி மட்டும் சொல்லிப்பாரு.. அப்பறம் இருக்கு ஒனக்கு சேதி//

பதிவர்கள் எல்லாரும் ஒரே மாதிரிதான் யோசிக்கறாங்கப்பா.. அதேதான்..

******************
//இராகவன் நைஜிரியா said...

அப்ப தமிழிஷ் ஓட்டு வேண்டாமா//

அது நீங்களா போடுவீங்கனு தெரியும் சகா

************

// ஸ்ரீதர்கண்ணன் said...

முடியல பாஸு முடியல .... :))))))))))))))))))))))))))))//

ஆமாங்க. என்னாலயும் கடைசி வரைகும் தொறக்க முடியல.. :))))

அ.மு.செய்யது on February 11, 2009 at 10:32 AM said...

வழக்கம் போல கலக்கீட்டிங்க சகா...

ஆனாலும் இந்த புட்டிக்கதைகள் மீது மக்களுக்கு இருக்கும் மோகம் அளப்பரியது.

ஸ்ரீதர்கண்ணன் on February 11, 2009 at 10:35 AM said...

// ஸ்ரீதர்கண்ணன் said...

முடியல பாஸு முடியல .... :))))))))))))))))))))))))))))//

ஆமாங்க. என்னாலயும் கடைசி வரைகும் தொறக்க முடியல.. :))))


கார்க்கி எப்படியோ என்னை தூங்கவிடாம பண்ணிடீங்க .... சிரிச்சுகிட்டே இருக்கேன் :)))))

அனுஜன்யா on February 11, 2009 at 10:36 AM said...

பியர்ல இவ்வளவு விஷயம் இருக்கா? நமக்கு எங்க இதெல்லாம் தெரியுது? குருஜியோட 'முதிய சந்நியாசி' பருகியபோது அவரும் இதேதான் சொன்னாரு - பியர் குடிக்கிற பசங்க எல்லாம் குடிகாரர்கள் என்று :)

அனுஜன்யா

அ.மு.செய்யது on February 11, 2009 at 10:36 AM said...

//இந்தியாவில் கிடைக்கும் பியர்களில் 6000 மற்றும் கிங்ஃபிஷர் ஸ்ட்ராங்க் போன்றவையே வெறும் 6% சதவிகித ஆல்கஹால்தான். சிங்கையில் கிடைக்கும் பரோன்ஸ் மற்றும் கார்ல்ஸ்பெர்க் போன்றவை 8.8% . இந்தியாவில் இவை ஏன் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. ஹைதையில் கோப்ரா கிடைக்கிறது. அது 7% என்றாலும் நல்ல டேஸ்ட் என்கிறார்கள்.//

தலைசிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை.

கார்க்கி on February 11, 2009 at 10:45 AM said...

/அ.மு.செய்யது said...
வழக்கம் போல கலக்கீட்டிங்க சகா...

ஆனாலும் இந்த புட்டிக்கதைகள் மீது மக்களுக்கு இருக்கும் மோகம் அளப்பரிய//

நன்றி சகா. புட்டிகள் மீதே மக்களுக்கு மோகம் அதிகம்தான்.

***************
// ஸ்ரீதர்கண்ணன் said...

கார்க்கி எப்படியோ என்னை தூங்கவிடாம பண்ணிடீங்க .... சிரிச்சுகிட்டே இருக்கேன் :))))//

தூக்கத்த விட சிரிப்புதான் சகா நல்லா ரிலாக்சேஷன் :))

*****************
//பியர்ல இவ்வளவு விஷயம் இருக்கா? நமக்கு எங்க இதெல்லாம் தெரியுது? குருஜியோட 'முதிய சந்நியாசி' பருகியபோது அவரும் இதேதான் சொன்னாரு - பியர் குடிக்கிற பசங்க எல்லாம் குடிகாரர்கள் என்று :)

அனுஜன்யா//

ஆமாங்க. ஆனா அத பத்தி எழுதறவங்க குடிகாரங்க கிடையாது.

கார்க்கி on February 11, 2009 at 11:02 AM said...

யாரோ ஒரு புண்ணியவான் நெகட்டிவ் ஓட்டு குத்த ஆரம்பிச்சிட்டாரு. குடிகாரகளே பீரு கொண்டு, ச்சே, வீறு கொண்டெ எழுந்திருங்கள். நம் பலத்தை வோட்டு போட்டு காட்டுங்கள்.

தராசு on February 11, 2009 at 11:03 AM said...

//ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு எனக்கு. எல்லாம் நல்லபடியாக நடந்த முடிந்தவுடன், டேமேஜர் அழைத்தார்.//

இன்னுமா இந்த ஊர் உங்கள நம்பிகிட்டிருக்கு, பொறுப்பெல்லாம் குடுக்கறாய்ங்களா??

அதுவும் எல்லாம் நல்லபடியா நடந்து "முடுஞ்சுடுச்சா"

அப்ப சரி தான்

அருண் on February 11, 2009 at 11:10 AM said...

கலக்குற கார் கீ, சூஊஊஊப்பர்.

MayVee on February 11, 2009 at 11:43 AM said...

நான் இன்னும் ஆவின் பால் குடி மாறாத பையன்.....
இந்த விஷயத்தில் எல்லாம் நான் இன்னும் இந்த ஸ்கூல்யில் சேரவில்லை....
(application form எங்கு கிடைக்கும் )
cock tail (கோழி வால்) நல்ல இருக்கும் என்று கேள்வி பட்டு இருக்கேன்......

"நான் தான் ஜெயிச்சேனு அவரே ஒத்துகிட்டு என்ன வேணும்ன்னு கேட்டார். டவல் என்றேன். அவ்ளோ மப்பு அண்ணாத்தைக்கு. "
மப்பு போக ..... ஒரு வோட்கா லார்ஜ் அல்லது ஒரு cutting வித் லெமன்....

"சிங்கையில் கிடைக்கும் பரோன்ஸ் மற்றும் கார்ல்ஸ்பெர்க் போன்றவை 8.8% "
இங்கையும் கிடைக்கும்..... top management பார்ட்டி ல பார்க்கலாம்....

"என்ற விளம்பரம் நினைவிருக்கா? முகத்துல Zip ப்போட வருவாரே ஒரு ஹீரோ."
நியாபகம் இருக்கு.... advertisement பார்த்துவிட்டு அது என்ன என்று என் அண்ணன் கிட்ட கேட்டு.... ஒரு அரை வாங்கின நியாபகமும் இருக்கு....

“இந்த Outingல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு Quarterக்கு அனுமதி வாங்கி தாங்களேன்”
ஹ ஹ ஹ

"ஆடற வீட்ட ஆடித்தானே தொறக்கனும்? அதான் தண்ணியடிச்சிட்டு வந்து திறந்ததாக சொல்லி சமாளித்திருக்கிறேன்."
உங்க அலம்பலுக்கு ஒரு அளவே இல்லையா.....

MayVee on February 11, 2009 at 11:45 AM said...

me th 30th

MayVee on February 11, 2009 at 11:46 AM said...

me also th 31st

கார்க்கி on February 11, 2009 at 11:52 AM said...

// தராசு said...


இன்னுமா இந்த ஊர் உங்கள நம்பிகிட்டிருக்கு, பொறுப்பெல்லாம் குடுக்கறாய்ங்களா??

எங்க போனாலும் புரட்சி பன்றதே வேலையா தல உங்களுக்கு? :)))))

******************
// அருண் said...
கலக்குற கார் கீ, சூஊஊஊப்பர்//

நன்றி சகா.. நேத்து கும்மில உங்கள தேடினாங்க

***********
@Mayvee,

விரிவான கமென்ட்டுக்கு நன்றி

ஸ்ரீமதி on February 11, 2009 at 12:08 PM said...

:))

அசோசியேட் on February 11, 2009 at 12:15 PM said...

""எனக்கு இன்னமும் ப்ளாக் நைட் கல்யானிதான் ஃபேவரிட்.""


ஒங்களுக்கு மட்டும் இல்லேங்க (................???)-
தப்பா அர்த்தம் பண்ணிகிட்டீங்கன்னா நா பொறுப்பில்ல.

வெண்பூ on February 11, 2009 at 12:39 PM said...

//
ப்ளாக் நைட் கல்யானிதான்
//

யாருங்க அந்த கல்யாணி? எட்டாவது ஆளா?

கார்க்கி on February 11, 2009 at 12:47 PM said...

//ஸ்ரீமதி said...
:))//

நீயுமா?

*************
// அசோசியேட் said...
""எனக்கு இன்னமும் ப்ளாக் நைட் கல்யானிதான் ஃபேவரிட்.""

ஒங்களுக்கு மட்டும் இல்லேங்க (................???)-
தப்பா அர்த்தம் பண்ணிகிட்டீங்கன்னா நா பொறுப்பில்ல//

ஓ..அதேத்தான்.. சரி சரி

*****************

//வெண்பூ said...
//
ப்ளாக் நைட் கல்யானிதான்
//

யாருங்க அந்த கல்யாணி? எட்டாவது ஆளா//

நம்பிட்டோங்க..

விஜய் on February 11, 2009 at 12:56 PM said...
This comment has been removed by the author.
விஜய் on February 11, 2009 at 1:00 PM said...

nalla samalicheenga ponga

தராசு on February 11, 2009 at 1:59 PM said...

//ப்ளாக் நைட் கல்யானிதான்
//

//யாருங்க அந்த கல்யாணி? எட்டாவது ஆளா?//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

Bleachingpowder on February 11, 2009 at 2:07 PM said...

//குடிகாரர்களே ஒரு நிமிஷம் வாங்க//

May i come in?

Thusha on February 11, 2009 at 4:32 PM said...

"குடிகாரர்களே ஒரு நிமிஷம் வாங்க"

அட இங்கயெல்லாம் நான் வரக்குடாது இல்ல

sorry anna தெரியமா வந்திட்டன்

ச்சின்னப் பையன் on February 11, 2009 at 4:43 PM said...

:-)))))))))

ச்சின்னப் பையன் on February 11, 2009 at 4:44 PM said...

'காபி' குடிக்கறவங்ககூட வரலாமில்லே!!!!!!!!!!! நான் வந்துட்டேன்!!!!!!!!

வித்யா on February 11, 2009 at 5:38 PM said...

:x

மணிகண்டன் on February 11, 2009 at 5:41 PM said...

:)-

ஸ்ரீமதி on February 11, 2009 at 5:50 PM said...

//கார்க்கி said...
//ஸ்ரீமதி said...
:))//

நீயுமா?//

அண்ணா ஏதாவது உருப்படியான பதிவு போட்டுருப்பாருன்னு பார்க்க வந்தா... நீ இப்படி பதிவு போட்டதும் இல்லாம... என்னப் பார்த்து நீயுமான்னு வேற கேட்கறியா அண்ணா?? :@

கார்க்கி on February 11, 2009 at 5:59 PM said...

/ விஜய் said...
nalla samalicheenga ponga//

ண்ணா.. வாஙகண்ணா வாங்கண்ணா

************
/ Bleachingpowder said...
//குடிகாரர்களே ஒரு நிமிஷம் வாங்க//

May i come in?//

உங்களுக்கு தகுதி இல்லன்னா வேற யாருக்கு இருக்கு ச்கா?

**********

// Thusha said...
"குடிகாரர்களே ஒரு நிமிஷம் வாங்க"

அட இங்கயெல்லாம் நான் வரக்குடாது இல்ல

sorry anna தெரியமா வந்திட்ட//

குடிகாரன் தவறி வராம இருக்கலாம். நீ எப்படி வந்த?

கார்க்கி on February 11, 2009 at 6:02 PM said...

/ ச்சின்னப் பையன் said...
'காபி' குடிக்கறவங்ககூட வரலாமில்லே!!!!!!!!!!! நான் வந்துட்டேன்!!!//

அப்படி ஒரு பிராண்டா சகா? பிராந்தியா ரம்மா?

***********

//வித்யா said...
:x//

என்ன இது?????

************
// மணிகண்டன் said...
:)-//

என்னப்பா இது?

************
//அண்ணா ஏதாவது உருப்படியான பதிவு போட்டுருப்பாருன்னு பார்க்க வந்தா... நீ இப்படி பதிவு போட்டதும் இல்லாம... என்னப் பார்த்து நீயுமான்னு வேற கேட்கறியா அண்ணா?? ://

அண்ணா அண்ணானு அழுத்தி சொல்லிட்டே இருந்தா இப்படித்தான் செய்வோம்

கார்க்கி on February 12, 2009 at 9:40 AM said...

இன்னும் ஒன்னுதான். யாராவது 50 அடிங்க. நானே அடிச்சா தெய்வ குத்தமாம்

ஸ்ரீதர்கண்ணன் on February 12, 2009 at 9:50 AM said...

50

பாண்டி-பரணி on February 12, 2009 at 11:24 AM said...

//“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க உங்க வீட்ட கொஞ்சம் ஆடாம புடிச்சுக்கோங்க. இப்படி ஆடுது. உங்க தாத்தா கட்டியதா?” என்றேன். தமிழ் புரியாமல் சென்றுவிட்டதாக நினைத்தால், மறுநாள் வந்து வீட்டை காலி செய்ய சொல்கிறார். ஆடற வீட்ட ஆடித்தானே தொறக்கனும்? அதான் தண்ணியடிச்சிட்டு வந்து திறந்ததாக சொல்லி சமாளித்திருக்கிறேன்.//
--இது எங்க தல ஏழு style ல்ல இருக்கு ;)

விஜய் on February 12, 2009 at 12:02 PM said...

\\ண்ணா.. வாஙகண்ணா வாங்கண்ணா\\

illeengna naan ingayae irunthukraengna.........

கார்க்கி on February 12, 2009 at 12:45 PM said...

@ஸ்ரீதர்,

50க்கு நன்றி சகா

@பரணி,

ஏழுவுக்கு நீங்கதான் பெரிய ரசிகர்ங்க.. வேற யாரும் சொல்லவேயில்ல..

@விஜய்,

அப்ப ரைட்

Pattaampoochi on February 12, 2009 at 2:44 PM said...

உங்க லொள்ளு இருக்கே...
சரியான மொடாகுடியரா இருப்பீங்க போல இருக்கே...
இருந்தாலும் டவல் கேக்ற அளவுக்கு அப்பாவியா நீங்க?

வால்பையன் on February 12, 2009 at 4:43 PM said...

இது தான் அக்மார்க் புட்டிகதைகள்

உங்களுக்கு எதிரிகள் அதிகமாகிட்டாங்க போல, ஏகப்பட்ட நெகட்டிவ் ஓட்டுகள்

கார்க்கி on February 12, 2009 at 5:47 PM said...

/ Pattaampoochi said...
உங்க லொள்ளு இருக்கே...
சரியான மொடாகுடியரா இருப்பீங்க போல இருக்கே...
இருந்தாலும் டவல் கேக்ற அளவுக்கு அப்பாவியா நீங்க//

அபப்டியெல்லாம் இல்லைங்க.. இதெல்லாம் புனைவுதான்.. கிகிகி

************

/வால்பையன் said...
இது தான் அக்மார்க் புட்டிகதைகள்//

அதெல்லாம் இருக்கட்டும். இந்த பதிவுக்கு லேட்டா வந்து வரலாற்றுல கறை உண்டாக்கிட்டீங்க

//உங்களுக்கு எதிரிகள் அதிகமாகிட்டாங்க போல, ஏகப்பட்ட நெகட்டிவ் ஓட்டுக//

ஆமாங்க..

Sendha on February 12, 2009 at 6:11 PM said...

நல்ல தண்ணி ஜோக்

குசும்பன் on February 12, 2009 at 6:52 PM said...

கடைசி மேட்டர் கலக்கல்

 

all rights reserved to www.karkibava.com