Feb 9, 2009

அஹம் ப்ரம்மாஸ்மி -ஆள விடுங்கடா சாமீ


    நானும் பதிவர்தான் என்று நிரூபிக்க நான் கடவுள் விமர்சனம் எழுத வேண்டியிருகிறது. இதை விமர்சனமாக இல்லாமல் படத்தைப் பற்றி சில கருத்துகளாக எடுத்துக்கலாம்.

  முதலில் ஒரு கேள்வி. இந்த படத்தை எடுக்க எதற்கு மூன்றாண்டுகள்? அதுவும் சரியாக திட்டமிட்டிருந்தால் ஆர்யாவின் போர்ஷனை கடைசியாக எடுத்து சில மாதங்களிலே முடித்திருக்கலாம். ஹாலிவுட் பாணியில் திரைக்கதை ஆசிரியர், வசனம், இயக்கம் எல்லாம் தனித்தனி ஆட்கள் இருப்பார்கள். இயக்குனர் என்பவர் இதை எல்லாம் திட்டமிட்டு செயல்படுத்துபவர். அதனால் தான் தசாவாதாரம் படத்திற்கு பின் கே.எஸ்.ஆரை கமல் இந்தியாவின் சிறந்த இயக்குனர் என்றார்.

   திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தில் சுஜாதா சொல்லியிருப்பார் “நிறைய எழுதலாம், ஆனால் திட்டமிட்டதை தான் எடுக்க வேண்டும்”. பாலா அனேகமாக 10மணி நேரம் ஓடக்கூடிய படத்தை எடுத்துத் தள்ளியிருப்பார்.

  இரண்டு வெவ்வேறு தளங்கள். தனித்தனியே சொன்னாலே ஒரு படம் போதாது. அதை ஒரே படத்தில் எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைப்பதில் தடுமாறியிருக்கிறார். படத்தின் பிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று திரைக்கதை. இதில் பாலா கோட்டைவிட்டது பலரைப் போலவே எனக்கும் அதிர்ச்சி.

  இரண்டாவாது நடிகர்கள் தேர்வு. வழக்கம்போல அதை சரியாய் செய்திருக்கிறார். ஆனால் ஒரு கேள்வி. தயவு செய்து இதை வழக்கமான பகடியாக நினைக்க வேண்டாம். என்ன தைரியத்தில் இதற்கு அவர் முதலில் அஜித்தை தேர்வு செய்தார்? ஆச்சரியமூட்டும் காசி காட்சிகளில் முக்கியமானவை ஆர்யா நடத்தும் ஆசனங்கள் முயற்சி செய்தால் அஜித்தை நடிக்க வைத்து விடுவார். ஆனால் இவை? எனிவே, க்ரேட் எஸ்கேப் தல.

கதை, திரைக்கதை, இயக்கம் என கோட்டை விட்ட பாலா ஜெயமோகனிடம் வசன பொறுப்பைத் தந்து வென்றுவிட்டார். வசனங்கள் நறுக். அந்த பையனுக்கு எப்படி அம்பானியை தெரியும் என்றெல்லாம் கேள்வி கேட்காமல் ரசிக்கலாம்.

அனைவரும் ஆர்தர் வில்சனை புகழ்கிறார்கள். தவறில்லை. நிச்சயம் சேது ரத்னவேலையும் பிதாமகன் பாலசுப்ரமணியத்தையும் ஒப்பிட்டால் இவர் பாஸ் ஆவதே கஷ்டம் என்பது என் கருத்து.

இசை. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பின்ணணி இசை. ஆனால் பிச்சை பாத்திரம் பாடலின் கருத்து வேறொன்றாய் இருக்க அதைக் காட்சிப்படுத்தியதில் வேறு ஒரு அர்த்தம் தருகிறார் இயக்குனர். சிரமப்பட்டு ஒப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு பதில் அதே மெட்டில் வார்த்தைகளை மாற்றிப்போட்டு கலங்க வைத்திருக்கலாமே!! எப்படியோ ராஜாவால்தான் கடவுளே தப்பித்தார்.

இத்தணை கோரமில்லாமலும் அந்த பாதிப்பை பார்வ்வையளனின் மனதில் உருவாக்க முடியுமே பாலா? எதற்கு இவ்வளவு வன்முறை? போன பதிவில் சொன்னது போல நிச்சயம் குழந்தைகளும், பெண்களும் தவிர்த்தல் நலம். இல்லை நான் தைரியமான பெண்கள் என்பவர்கள் படம் பார்த்துவிட்டு ஒரு மெய்ல் தட்டுங்கள். அரங்கில் பல குழந்தைகள். பாவம். நயந்தாராவின் இடுப்புக்கே ஏ சான்றிதழ் வழங்கும் சென்ஸார் இதற்கு தரவில்லை. என்ன கொடுமை?

பூஜா ஆடாத ரெக்கார்ட் டான்ஸா? அவரை விட்டுவிட்டு நயனை இழுக்க வேண்டிய அவசியமென்ன பாலா? ஜோதிலட்சுமியின் இடுப்பை காட்டியவர் தானே நீங்கள்? துணியால் மறைத்தாலும் சிம்ரனின் இடுப்பு உங்களுக்கு தேவைப்பட்டதே!!

சொல்லும் கதையை விட சொல்லப்படும் விதத்தில்தான் ஒரு திரைப்படம் சிறப்பு கொள்கிறது என நினைக்கிறேன். அந்த விஷயத்தில் இது சுமார்தான். இந்த முயற்சிக்காகவது பாலாவை பாரட்டலாம் என்றால் நிச்சயாமாக. ஆனால் அதை விட்டுவிட்டு கலைஞருக்கு சப்பை கட்டு கட்டும் உடன்பிறப்புகள் போல, வில்லுக்கு காவடி தூக்கும் கார்க்கியைப் போல, பதிவர்கள் இதற்கு (சிலரைத் தவிர) வக்காலத்து வாங்குவது ஏன் எனப் புரியவில்லை. இது போல படமெடுக்க மட்டுமல்ல, பார்ப்பதற்கும் பாலாவால் மட்டுமே முடியும். நான் பாலா அல்ல.

64 கருத்துக்குத்து:

வித்யா on February 9, 2009 at 11:02 AM said...

me the 1st:)

தாரணி பிரியா on February 9, 2009 at 11:03 AM said...

அச்சோ கொ.ப.செ முந்திட்டாங்க‌

வித்யா on February 9, 2009 at 11:04 AM said...

நானும் தம்பியும் செகண்ட் ஷோவூக்குப் போய் நொந்தே போய்ட்டோம். மறுநாள் வெண்ணிலா கபடிக் குழுன்னு இந்த வீக்கெண்ட் சூனியமாப் போச்சு:(

அருண் on February 9, 2009 at 11:06 AM said...

கார்கீ, உங்களுக்கு பெண் விசிறிகள் ஜாஸ்தி ஆயிட்டாங்களோ?

கும்க்கி on February 9, 2009 at 11:11 AM said...

ஹி...ஹி...@#$@$#&^%(&^%)&*(_%$*$#%#@.....

தாரணி பிரியா on February 9, 2009 at 11:12 AM said...

பாலா படம் அப்படின்ற ஓரே காரணத்துக்காக பாராட்டாம சரியா சொல்லி இருக்கிங்க கார்க்கி. நான் இன்னும் படம் பாக்கலை. பாக்கற மாதிரியும் இல்லை. நேரடியா காட்டபடற வன்முறைகள் பயங்கரமா இருக்கு அப்படின்னு சொல்லறாங்க. பாலாவை சேதுல மட்டும்தான் எனக்கு பிடிச்சது. இதை சொன்னா எனக்கு நல்ல ரசனை இல்லைன்னு சொல்லறாங்க. என்ன செய்ய ?

வித்யா on February 9, 2009 at 11:15 AM said...

தாரணி எல்லோரும் சொல்ற அளவுக்கு பயப்படுற மாதிரி காட்சிகள் ஏதுமில்லை. அவனவன் ஆயிரம் பிரச்சனை ரிலாக்ஸ் பண்ணலாம்னு படத்துக்குப் போனா அங்க இன்னும் மனச்சுமையை ஏத்திவிடறாங்க:((

கோவி.கண்ணன் on February 9, 2009 at 11:21 AM said...

:)

நானும் பதிவர் தான் அதனால் பின்னூட்டம் போட்டுக் கொள்கிறேன்.

பாலா அபிமானிகள் இந்தப்படத்தை ஓவராக புகழுவது எனக்கும் சகிக்கலை.

Bleachingpowder on February 9, 2009 at 11:21 AM said...

விளிம்பு நிலை மனிதர்களை பற்றி படமெடுக்க எத்தனை பேர் இருக்கிறார்கள்? சிறு சிறு குறைகளை ஒதிக்கிவிட்டு, இம்மாதிரி படங்களை மீடியா, பதிவுலகம் ஆதரிக்க வேண்டும்.

//சேது ரத்னவேலையும் பிதாமகன் பாலசுப்ரமணியத்தையும் ஒப்பிட்டால் இவர் பாஸ் ஆவதே கஷ்டம்//

காசியில் இரவொளியில் பிணங்களை எறிக்கும் காட்சியை படமாக்கிய விதத்தை உலகதரம் என்று சொன்னால் அது under statement. இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை மிக சரியாக ஆர்தர் வில்சன் கொடுத்திருக்கிறார் என்றே எனக்கு தோன்றுகிறது.

அளவுக்கதிகமாக எதிர்பார்த்து படம் பார்க்க சென்று ஏமாறுவது பாலாவின் குற்றமல்ல தல.

இருக்கும் ஒரிரெண்டு இயக்குனர்களையும் குத்தம் சொல்லிக் கொண்டே இருந்தால் பின்னர் யார் தான் இது போன்ற முயற்சிகளை எடுக்க முன்வருவார்கள்.

கொஞ்சம் மெதுவாக தலையில் குட்டியிருக்கலாம். பொளேருன்னு கன்னத்துல அறைஞ்ச மாதிரி இருக்கு தல உங்க விமர்சணம். குறிப்பா இந்த பதிவின் தலைப்பு "ஆள விடுங்கடா சாமீ"

கார்க்கி on February 9, 2009 at 11:24 AM said...

// வித்யா said...
நானும் தம்பியும் செகண்ட் ஷோவூக்குப் போய் நொந்தே போய்ட்டோம். மறுநாள் வெண்ணிலா கபடிக் குழுன்னு இந்த வீக்கெண்ட் சூனியமாப் போச்சு://

என்னங்க கபடி நல்லாயிருக்குனு சொல்றாங்க? விக்டன்ல கூட 43 மார்க்

*************

/ தாரணி பிரியா said...
பாலா படம் அப்படின்ற ஓரே காரணத்துக்காக பாராட்டாம சரியா சொல்லி இருக்கிங்க கார்க்கி. நான் இன்னும் படம் பாக்கலை. பாக்கற மாதிரியும் இல்லை. நேரடியா காட்டபடற வன்முறைகள் பயங்கரமா இருக்கு அப்படின்னு சொல்லறாங்க. பாலாவை சேதுல மட்டும்தான் எனக்கு பிடிச்சது. இதை சொன்னா எனக்கு நல்ல ரசனை இல்லைன்னு சொல்லறாங்க. என்ன //

நமக்கு புடிச்சா புடிக்குது. இல்லன்னா இல்லைதான்

*************
// அருண் said...
கார்கீ, உங்களுக்கு பெண் விசிறிகள் ஜாஸ்தி ஆயிட்டாங்களோ?//

ஏன் சகா???????????

***************
// கும்க்கி said...
ஹி...ஹி...@#$@$#//

உங்க ஒப்பினியன் இன்னா நைனா?

முரளிகண்ணன் on February 9, 2009 at 11:27 AM said...

\\நானும் பதிவர்தான் என்று நிரூபிக்க நான் கடவுள் விமர்சனம் எழுத வேண்டியிருகிறது\\

first line pinniiddingka

narsim on February 9, 2009 at 11:43 AM said...

சகா.. நல்ல வார்த்தைகள்..

கார்க்கி on February 9, 2009 at 11:46 AM said...

//கோவி.கண்ணன் said...
:)

நானும் பதிவர் தான் அதனால் பின்னூட்டம் போட்டுக் கொள்கிறேன்.

பாலா அபிமானிகள் இந்தப்படத்தை ஓவராக புகழுவது எனக்கும் சகிக்கலை//

வாங்க கோவியாரே.உங்க விமர்சனத்திலெ தெரிந்துக் கொண்டேன் :))

***********

//முரளிகண்ணன் said...
\\நானும் பதிவர்தான் என்று நிரூபிக்க நான் கடவுள் விமர்சனம் எழுத வேண்டியிருகிறது\\

first line pinniiddingk//

எப்போ பார்க்க போறீங்க தல?

கார்க்கி on February 9, 2009 at 11:53 AM said...

// Bleachingpowder said...
விளிம்பு நிலை மனிதர்களை பற்றி படமெடுக்க எத்தனை பேர் இருக்கிறார்கள்? சிறு சிறு குறைகளை ஒதிக்கிவிட்டு, இம்மாதிரி படங்களை மீடியா, பதிவுலகம் ஆதரிக்க வேண்டும்//

அதற்காகத்தான் போய் பார்த்தோம் தல. அதுக்காக நல்லாதானிருக்குனு சொல்ல முடியுமா? இந்த அவ்ரிகள போல்ட் வேற செஞ்சேனே. கவனிக்கலையா?

”சொல்லும் கதையை விட சொல்லப்படும் விதத்தில்தான் ஒரு திரைப்படம் சிறப்பு கொள்கிறது என நினைக்கிறேன்”

//காசியில் இரவொளியில் பிணங்களை எறிக்கும் காட்சியை படமாக்கிய விதத்தை உலகதரம் என்று சொன்னால் அது under statement. இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை மிக சரியாக ஆர்தர் வில்சன் கொடுத்திருக்கிறார் என்றே எனக்கு தோன்றுகிறது//

சேதுவில் அந்த மருத்துவமனையில் நுழையும்போதே ஓஹோ என்ற ராஜாவின் கதறலுக்கு ஈடு கொடுத்தது கேமரா. இதில் போராடியிருக்கிரது என்றுதான் சொல்கிறேன். ஒரேஅடியாக மோசமில்லை. முந்தைய பாலா பட்ங்களோடு ஒப்பிட்டுதான் சொன்னேன்

//அளவுக்கதிகமாக எதிர்பார்த்து படம் பார்க்க சென்று ஏமாறுவது பாலாவின் குற்றமல்ல தல//

அப்படி சொல்லைல தல.பார்த்த் பின்பும் அளவுக்கதிகமாக போற்றுவதைப் பற்றிதான் சொல்லியிருக்கிறேன்

/இருக்கும் ஒரிரெண்டு இயக்குனர்களையும் குத்தம் சொல்லிக் கொண்டே இருந்தால் பின்னர் யார் தான் இது போன்ற முயற்சிகளை எடுக்க முன்வருவார்க//

அதற்காக எதுவும் சொல்லக் கூடாதா? சேதுவையும் பிதாமகனையும் கொண்டாடித்தான் எழுதியிருக்கிறேன். அதுவும் பாலாதானே? இதை சரியான பட்ஜெட்டில் எடுத்திருந்தால் தயாரிப்பளாரும் பிழைத்திருப்பார். பாலவை நம்பி சிலர் வருவார்கள்.

//கொஞ்சம் மெதுவாக தலையில் குட்டியிருக்கலாம். பொளேருன்னு கன்னத்துல அறைஞ்ச மாதிரி இருக்கு தல உங்க விமர்சணம். குறிப்பா இந்த பதிவின் தலைப்பு "ஆள விடுங்கடா சா//

உண்மைதான். தலைப்பு மாற்றியிருக்கலாம்.

வெண்பூ on February 9, 2009 at 12:15 PM said...

அருமையான நச் விமர்சனம். வெளிப்படையா மனசில பட்டதை சொல்லியிருக்கீங்க.. நான் இன்னும் ஒரு பதிவரா ஜனநாயகக் கடமை ஆற்றல (இன்னும் இந்த படத்தை பாக்கலை).. :)))

வெண்பூ on February 9, 2009 at 12:17 PM said...

//
Bleachingpowder said...

இருக்கும் ஒரிரெண்டு இயக்குனர்களையும் குத்தம் சொல்லிக் கொண்டே இருந்தால் பின்னர் யார் தான் இது போன்ற முயற்சிகளை எடுக்க முன்வருவார்கள்.
//

ரொம்ப ரொம்ப சரியான கருத்து..

வெயிலான் on February 9, 2009 at 12:28 PM said...

// என்ன தைரியத்தில் இதற்கு அவர் முதலில் அஜித்தை தேர்வு செய்தார்? //

ஆமாம் என்ன தைரியத்தில்? விஜய்யை பரிசீலனை செய்திருக்கலாமோ கார்க்கி? ;)

அனுஜன்யா on February 9, 2009 at 12:31 PM said...

கார்க்கி,

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அதனால ஒண்ணும் சொல்லக்கூடிய நிலையிலில்லை. ஆனா சைக்கிள் காப்ல 'தல' கால வாரியிருக்கும் உன் நுட்பம் ..ம்ம்.. கவனிக்கப்பட்டது.

உன்னை மட்டும் சொல்லவில்லை; பொதுவாகவே, (வெகுஜனப் பத்திரிகை விமர்சகர்கள் உட்பட) காமெரா, எடிட்டிங் பற்றி தைரியமாகக் காலத் தூக்கிப் போட்டு தோனி மாதிரி சிக்சர் அடிக்கிறீங்க. என்னைப் பொறுத்தவரை, நடிப்பு, பாடல்கள், கதை, திரைக்கதை எல்லாம் கலைகள். காமெரா, எடிட்டிங் நேர்த்திகளில், தொழில் நுட்பத்தின் பங்கு மிகுதி. அதைப் பற்றி அடிப்படை புரிதல் இல்லாமல், ஒரு end user ஆக உட்கார்ந்துகொண்டு 'சரியில்லை' என்று புறங்கையால் தள்ளுவது சுலபம்; ஆனால் அது சரிதானா என்பது அவரவர் மனசாட்சி தான் சொல்லவேண்டும். உன் கிட்ட இருக்கும் உரிமையால் தைரியமாக என்னால் சொல்ல முடிகிறது. Seriously just think about it. கேபிள் சங்கர் போல் ஒருவர் சொன்னால் ஒரு நியாயம் இருக்கும். ஒரு வேளை உங்களைப் போல கூறிய, நுட்பமான பார்வை எனக்கு வரவில்லையோ என்னமோ! மணிரத்னம் படங்களின் இருட்டு கேமரா, சில திகில்/சண்டைக் கட்சிகளில் கண்களை மிகுந்த சிரமப்படுத்தும்,ஆடும் கேமரா என்பன தவிர்த்து, பெரும்பாலும் எல்லாக் காமிராவும் நல்லா இருப்பது போலவே படுகிறது.

மற்றபடி, திரைக்கதை, திட்டமிடல், தயாரிப்பாளரின் நலனில் உண்மையான அக்கறை போன்ற உன் விமர்சனப் பார்வைகளுடன் முற்றிலும் ஒத்துப் போகிறேன்.

அனுஜன்யா

Massattra Kodi on February 9, 2009 at 12:33 PM said...

ரிலாக்ஸ் பண்ணனும்னு "நான் கடவுள்" போனா என்ன சொல்றது ? அதுக்குதான் "வில்லு" JKR படங்கள் எல்லாம் இருக்கே !

டிஸ்கி : நானும் விஜய் பேன் தான்.

அன்புடன்
மாசற்ற கொடி

வால்பையன் on February 9, 2009 at 12:40 PM said...

//கலைஞருக்கு சப்பை கட்டு கட்டும் உடன்பிறப்புகள் போல, வில்லுக்கு காவடி தூக்கும் கார்க்கியைப் போல, பதிவர்கள் இதற்கு (சிலரைத் தவிர) வக்காலத்து வாங்குவது ஏன் எனப் புரியவில்லை. இது போல படமெடுக்க மட்டுமல்ல, பார்ப்பதற்கும் பாலாவால் மட்டுமே முடியும். நான் பாலா அல்ல.//

பினிஷிங் டச் சூப்பர்
நான் கார்க்கி அல்ல என்றே எனக்கு தோன்றியது!

இந்த படத்தை நான் பார்க்க போறதில்லை
(தியேட்டருக்கு போய் நாலு வருடம் ஆச்சு)

எம்.எம்.அப்துல்லா on February 9, 2009 at 1:11 PM said...

//நான் பாலா அல்ல.

//

நான் பதிவரே அல்ல :))

Karthik on February 9, 2009 at 1:14 PM said...

//நானும் பதிவர்தான் என்று நிரூபிக்க நான் கடவுள் விமர்சனம் எழுத வேண்டியிருகிறது.

அப்ப நானும் பதிவர்தான். எழுதிட்டேன்.

//படத்தின் பிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று திரைக்கதை.

யெஸ்..!

//இத்தணை கோரமில்லாமலும் அந்த பாதிப்பை பார்வ்வையளனின் மனதில் உருவாக்க முடியுமே பாலா? எதற்கு இவ்வளவு வன்முறை?

இத இத இதத்தான் நானும் சொல்ல வந்தேன்.

Karthik on February 9, 2009 at 1:16 PM said...

//என்ன தைரியத்தில் இதற்கு அவர் முதலில் அஜித்தை தேர்வு செய்தார்?

:((

செல்வேந்திரன் on February 9, 2009 at 2:13 PM said...

:)

பரிசல்காரன் on February 9, 2009 at 2:30 PM said...

//இருக்கும் ஒரிரெண்டு இயக்குனர்களையும் குத்தம் சொல்லிக் கொண்டே இருந்தால் பின்னர் யார் தான் இது போன்ற முயற்சிகளை எடுக்க முன்வருவார்கள்.//

Well said Bleaching Powder! (பேரை இன்னும் மாத்தலியா!!!)

பரிசல்காரன் on February 9, 2009 at 2:31 PM said...

//எம்.எம்.அப்துல்லா said...

//நான் பாலா அல்ல.

//

நான் பதிவரே அல்ல :))//

நான் கார்க்கியின் எதிரி அல்ல!

கார்க்கி on February 9, 2009 at 2:32 PM said...

//வெண்பூ said...
அருமையான நச் விமர்சனம். வெளிப்படையா மனசில பட்டதை சொல்லியிருக்கீங்க.. நான் இன்னும் ஒரு பதிவரா ஜனநாயகக் கடமை ஆற்றல//

நன்றி சகா

***************
// வெயிலான் said...
// என்ன தைரியத்தில் இதற்கு அவர் முதலில் அஜித்தை தேர்வு செய்தார்? //

ஆமாம் என்ன தைரியத்தில்? விஜய்யை பரிசீலனை செய்திருக்கலாமோ கார்க்கி//

நக்கல் இருக்கட்டும். சரியான்னு சொல்லுங்க

****************
//ரிலாக்ஸ் பண்ணனும்னு "நான் கடவுள்" போனா என்ன சொல்றது ? அதுக்குதான் "வில்லு" JKR படங்கள் எல்லாம் இருக்கே !

டிஸ்கி : நானும் விஜய் பேன் தான்.

அன்புடன்
மாசற்ற கொ//

உண்மையாவாங்க?

கார்க்கி on February 9, 2009 at 2:45 PM said...

/ அனுஜன்யா said...
கார்க்கி,

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அதனால ஒண்ணும் சொல்லக்கூடிய நிலையிலில்லை. ஆனா சைக்கிள் காப்ல 'தல' கால வாரியிருக்கும் உன் நுட்பம் ..ம்ம்.. கவனிக்கப்பட்டது//

சத்யமா இது கிண்டலில்லை தல.

/'சரியில்லை' என்று புறங்கையால் தள்ளுவது சுலபம்; ஆனால் அது சரிதானா என்பது அவரவர் மனசாட்சி தான் சொல்லவேண்டும்//

நான் புறங்கையால் தள்ளவில்லை. பாலாவின் படத்தோடு ஒப்பிட்டுதான் சொல்றேன். உங்க பாய்ண்ட்டும் சரிதான் :)

****************

//பினிஷிங் டச் சூப்பர்
நான் கார்க்கி அல்ல என்றே எனக்கு தோன்றிய//

நன்றி வால்

************

// எம்.எம்.அப்துல்லா said...
//நான் பாலா அல்ல.

//

நான் பதிவரே அல்ல //

இருங்க. இதையும் ஹேக் செய்யறேன்

கார்க்கி on February 9, 2009 at 2:49 PM said...

// Karthik said...
//என்ன தைரியத்தில் இதற்கு அவர் முதலில் அஜித்தை தேர்வு செய்தார்?

:((//

சரிதான் என்கிறாயா?

*************
//செல்வேந்திரன் said...
:)//

என்னங்கண்ணா அர்த்தம்

**************
// பரிசல்காரன் said...
//இருக்கும் ஒரிரெண்டு இயக்குனர்களையும் குத்தம் சொல்லிக் கொண்டே இருந்தால் பின்னர் யார் தான் இது போன்ற முயற்சிகளை எடுக்க முன்வருவார்கள்.//

Well said Bleaching Powder//

என்ன சகா? அதுக்காக இந்த ப்டத்த ஆதரிச்சா இதுவே போதும்னு பாலா நினைச்சா? ஆதரிக்கனும்னு தானே முத நாள் போய் பார்த்தோம். அதுக்காக குறையே சொல்லக் கூடாதா?

அமிர்தவர்ஷினி அம்மா on February 9, 2009 at 4:17 PM said...

ஆனால் பிச்சை பாத்திரம் பாடலின் கருத்து வேறொன்றாய் இருக்க அதைக் காட்சிப்படுத்தியதில் வேறு ஒரு அர்த்தம் தருகிறார் இயக்குனர். சிரமப்பட்டு ஒப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு பதில் அதே மெட்டில் வார்த்தைகளை மாற்றிப்போட்டு கலங்க வைத்திருக்கலாமே!!

ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க் கார்க்கி
நான் இன்னைக்கு காலைல இந்த டி.வி.யில பாத்துட்டு, அந்தப் பாட்ட கேக்கும் போது இருந்த மெய் சிலிர்ப்பு பார்க்கும் போது...............


இத்தணை கோரமில்லாமலும் அந்த பாதிப்பை பார்வ்வையளனின் மனதில் உருவாக்க முடியுமே பாலா? எதற்கு இவ்வளவு வன்முறை?

அது ஏன் தான் தெரியவில்லை
பாலாவிற்கு வன்முறையின் மீது இவ்வளவு காதலோ

கார்க்கி on February 9, 2009 at 4:18 PM said...

ஒருத்தர் மெய்ல்ல திட்டியிருக்காரு.. நானு வேஸ்ட்டாம். படம் ஆஸ்கார் வாங்குமாம் கிகிகிகி

தாமிரா on February 9, 2009 at 4:19 PM said...

வில்லுக்கு காவடி தூக்கும் கார்க்கியைப் போல,// இப்பிடிப்போட்டா நீ நல்லவனாயிடுவியா..? யாருகிட்ட 'டும்மா' வேல காட்டுற.?

தாமிரா on February 9, 2009 at 4:19 PM said...

பூஜா எந்தப்படத்தில் ரிக்கார்ட் டான்ஸ் ஆடியிருக்கிறார் என்பதைக்கூறவும். மேலும் இடுப்பு டான்ஸெல்லாம் சும்மா ஜாலிக்குதான், அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்காம‌ தாண்டிவாங்கப்பு..

தாமிரா on February 9, 2009 at 4:19 PM said...

ஏதோ சக இயக்குனர் ரேஞ்சுக்கு 'காட்டி'யிருப்பது கொஞ்சம் ஓவர்னுதான் நெனைக்கிறேன்.

Sinthu on February 9, 2009 at 4:55 PM said...

பதிவுக்கு நன்றி....
"நான் பாலா அல்ல.'
உங்களை யாராவது பாலா என்று சொன்னாங்களா....... அப்புறம் ஏன் இப்படி? LOL.........

ஸ்ரீமதி on February 9, 2009 at 5:02 PM said...

:)))

கார்க்கி on February 9, 2009 at 5:54 PM said...

//ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க் கார்க்கி
நான் இன்னைக்கு காலைல இந்த டி.வி.யில பாத்துட்டு, அந்தப் பாட்ட கேக்கும் போது இருந்த மெய் சிலிர்ப்பு பார்க்கும் போது.//

ஆமாம,அ.அம்மா. பாட்ட கேட்கவே முடியல

***************
// தாமிரா said...
பூஜா எந்தப்படத்தில் ரிக்கார்ட் டான்ஸ் ஆடியிருக்கிறார் என்பதைக்கூறவும். மேலும் இடுப்பு டான்ஸெல்லாம் சும்மா ஜாலிக்குதான், அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்காம‌ தாண்டிவாங்கப்பு.//

நாங்க எடுத்துக்கலப்பா. அவர்தான் அத ஒரு பெரிய தப்புனு சொல்றாரு.அவர வர சொல்லுங்க. ஜித்தன்னு ஒரு படம் அவ்ந்துச்சு தெரியுமா? ஜே.ஜே தெரியுமா?

*****************
//Sinthu said...
பதிவுக்கு நன்றி....
"நான் பாலா அல்ல.'
உங்களை யாராவது பாலா என்று சொன்னாங்களா....... அப்புறம் ஏன் இப்படி? LOL...//

போய் எதுக்காக அப்படி சொன்னேனு படிசிட்டு வாங்க தாயீ :))

**************
// ஸ்ரீமதி said...
:)))//

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு

மணிகண்டன் on February 9, 2009 at 6:21 PM said...

me the 38th.

rapp on February 9, 2009 at 6:40 PM said...

ஹா ஹா ஹா, ஏன் ரொம்ப பயந்துட்டீங்களா?:):):)

ஆனா பாருங்க இந்த ஏ சர்டிபிகேட் கொடுக்குறவங்க அறிவுக்கெட்டத்தனமா , ஆண் பெண் யாரெல்லாம் எதெல்லாம் பாக்கலாம்னு சொல்றதில்ல உங்கள மாதிரி தெளிவா:):):)

அன்புடன் அருணா on February 9, 2009 at 7:11 PM said...

//இது போல படமெடுக்க மட்டுமல்ல, பார்ப்பதற்கும் பாலாவால் மட்டுமே முடியும். நான் பாலா அல்ல.//

சூப்பர் punch!!!!Enjoyed...
அன்புடன் அருணா

சரவண வடிவேல் on February 9, 2009 at 7:41 PM said...

சரியான விமர்சனம். மற்றவர்களை போல் திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்து ஆடாமல், உங்கள் மனதில் உள்ளதை சொல்லியிருக்கிங்க...

கார்க்கி on February 9, 2009 at 7:54 PM said...

வாங்க மணிகண்டன்

************

// rapp said...
ஹா ஹா ஹா, ஏன் ரொம்ப பயந்துட்டீங்களா?:):):)

ஆனா பாருங்க இந்த ஏ சர்டிபிகேட் கொடுக்குறவங்க அறிவுக்கெட்டத்தனமா , ஆண் பெண் யாரெல்லாம் எதெல்லாம் பாக்கலாம்னு சொல்றதில்ல உங்கள மாதிரி தெளிவா:):)://

வாங்க தலைவி. எங்க போனீங்க இத்தணை நாள்?

*******************
//சூப்பர் punch!!!!Enjoyed...
அன்புடன் அருணா//

நன்றி அருணா

*************
//சரவண வடிவேல் said...
சரியான விமர்சனம். மற்றவர்களை போல் திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்து ஆடாமல், உங்கள் மனதில் உள்ளதை சொல்லியிருக்கிங்க.//

நன்றி நண்பரே

கணினி தேசம் on February 9, 2009 at 8:52 PM said...

//நானும் பதிவர்தான் என்று நிரூபிக்க நான் கடவுள் விமர்சனம் எழுத வேண்டியிருகிறது. //

பின்ன.. "பாலா" படமாச்சே.

கணினி தேசம் on February 9, 2009 at 8:54 PM said...

//தசாவாதாரம் படத்திற்கு பின் கே.எஸ்.ஆரை கமல் இந்தியாவின் சிறந்த இயக்குனர் என்றார்.//

மிகச்சரி...! கே.எஸ்.ஆர். மிகக்குறைவான காலத்தில் திட்டமிட்டு படத்தை முடிப்பதில் வல்லவர். !!

கணினி தேசம் on February 9, 2009 at 8:56 PM said...

//படத்தின் பிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று திரைக்கதை.//

சமீபகாலமாக இயக்குனர்கள்...வெளிநாட்டு வீதிகளில் குத்து ஆட்டம் போட யோசிப்பதை விட மிகக்குறைவான நேரத்தையே "திரைக்கதை"க்காக செலவிடுகிறார்கள் என்பது என் கருத்து.

பாலாவிடம் ஒரு வித்தியாசம்.. எப்படியெல்லாம் வன்முறையை காட்டலாம் என்பதில் அதிகம் யோசிப்பார்போல.

கணினி தேசம் on February 9, 2009 at 8:56 PM said...

//இதற்கு அவர் முதலில் அஜித்தை தேர்வு செய்தார்? //

தல
தலைகீழா....
தாடியோட...
சிரமம்யா..!!

கணினி தேசம் on February 9, 2009 at 8:57 PM said...

//இத்தணை கோரமில்லாமலும் அந்த பாதிப்பை பார்வ்வையளனின் மனதில் உருவாக்க முடியுமே பாலா? //

நச்!!

கணினி தேசம் on February 9, 2009 at 8:57 PM said...

//பூஜா ஆடாத ரெக்கார்ட் டான்ஸா? //

நான் பாக்கவே இல்லையே.. எந்த படம்னு ஒரு டிஸ்கி போடுங்க!!

கணினி தேசம் on February 9, 2009 at 8:57 PM said...

//சொல்லும் கதையை விட சொல்லப்படும் விதத்தில்தான் ஒரு திரைப்படம் சிறப்பு கொள்கிறது என நினைக்கிறேன்.//

நெசந்தானுங்கோ..!!

கணினி தேசம் on February 9, 2009 at 8:57 PM said...

கொஞ்சம் தூக்கலா இருந்தாலும், வெளிப்படையான விமர்சனம்...!
எவ்வளவு பெரிய இயக்குனரா இருந்தால் என்ன.. தாரளமா விமர்சிக்கலாம்.


நன்றி.

ஸ்ரீதர்கண்ணன் on February 9, 2009 at 9:57 PM said...

//நானும் பதிவர்தான் என்று நிரூபிக்க நான் கடவுள் விமர்சனம் எழுத வேண்டியிருகிறது.

//வில்லுக்கு காவடி தூக்கும் கார்க்கியைப் போல,

:))))))))

தமிழ்ப்பறவை on February 9, 2009 at 10:56 PM said...

//விளிம்பு நிலை மனிதர்களை பற்றி படமெடுக்க எத்தனை பேர் இருக்கிறார்கள்? சிறு சிறு குறைகளை ஒதிக்கிவிட்டு, இம்மாதிரி படங்களை மீடியா, பதிவுலகம் ஆதரிக்க வேண்டும்.
இருக்கும் ஒரிரெண்டு இயக்குனர்களையும் குத்தம் சொல்லிக் கொண்டே இருந்தால் பின்னர் யார் தான் இது போன்ற முயற்சிகளை எடுக்க முன்வருவார்கள்.

கொஞ்சம் மெதுவாக தலையில் குட்டியிருக்கலாம். பொளேருன்னு கன்னத்துல அறைஞ்ச மாதிரி இருக்கு தல உங்க விமர்சணம். குறிப்பா இந்த பதிவின் தலைப்பு "ஆள விடுங்கடா சாமீ"//
இதுக்கு பெரிய ரிப்பீட்டு.
நண்பரே..நீங்க தான் படம் பார்க்கப் போறதுக்கு முன்னயே நெகடிவா பதிவு போட்டுட்டீங்க படத்தைப் பற்றி.கமெண்ட் போடறப்போ கூட ஒரு தடவை மறுபடியும் உங்க பதிவைப் படிச்சுப் பார்த்தேன், எங்கயாவது மறந்து போய் பாராட்டிருக்க மாட்டீங்களான்னு. ம்ஹூம்...கிடைக்கலை(ரெண்டு மூணு வார்த்தை போட்டிருக்கேனேன்னு சொல்லலாம்..அதெல்லாம் கல்லில் அரிசி மாதிரி)...
இதுவரை நீங்க பண்ண மத்த பட, பாட்டு விமர்சனத்தைக் கம்ப்பேர் பண்றப்போ இந்த ஒரு விமர்சனம் மட்டும் ரொம்ப தனித்துத் தெரியுது. காரணம் சொல்ல வேண்டியதில்லை.அதனால்தான் கேட்கிறேன். இதே போல அளவுகோல எல்லா விமர்சனத்துக்கும் போட்டிருந்தீங்கன்னா இது வித்தியாசமாத் தெரியாது.
இன்னும் சுருக்கமாச் சொன்னா இந்த விமர்சனம், ‘தினமலர் வாசகர் கடிதத்துல, ஆவடியிலிருந்து அசோகன் அப்பிடின்னு ஒரு டாக்டர், கலைஞர் பத்தி விமர்சிக்கிறமாதிரி இருக்கு’
தோன்றியதைச் சொன்னேன். தவறிருந்தால் மன்னிக்க...

Saravana Kumar MSK on February 10, 2009 at 1:06 AM said...

இதுவரை பாலா எடுத்த படங்களிலே இந்த படம்தான் எனக்கு பிடிச்சி இருந்தது என்று சொன்னால் நீங்க நம்புவீங்களா கார்க்கி அண்ணே.. :)

MayVee on February 10, 2009 at 7:14 AM said...

நல்ல வேலை.... பாலா படம் என்று நம்பி நான் இநோக்ஸ் ல டிக்கெட் வாங்கவில்லை....ஒரு பட்டு வரும்; அது ரேடியோல இருந்து வருதா இல்லை பூஜா singing ஆ ஒரே confusion..... அதை மட்டும் யாரவது சொல்லுங்க....
ஒரு அறுதல் ....
சேதுல ஜோதிலஷ்மி லோ ஹிப்....
பிதாமகன்ல சிம்ரன் பட் நோ லோ ஹிப்....
நான் கடவுள்ல அட்லீஸ்ட் அத வைகாம avoid பண்ணிடாங்க .....

மொத்தமாக சொன்னால் ; "பாலா படம் என்ற பீலிங் வரவில்லை"

என் நண்பன் ஒரவன் பாலாவின் ரசிகன், அவன் சொன்னான் " எப்பொழுதுமே பாலா படம் பார்த்துவிட்டு வந்தால் மனதில் ஒரு வெறுமை இருக்கும் ; ஆனால் இந்த படத்தில் அது மிஸ்ஸிங்"

கார்க்கி on February 10, 2009 at 9:38 AM said...

விரிவான கருத்துக்களுக்கு நன்றி கண்ணி தேசம்

***************

சிரிப்புக்கு நன்றி ஸ்ரீதர்

**************

@தமிழ்ப்பறவை,

வழக்கம் போல வெளிப்படையான் கருத்துக்கு நன்றி சகா. எனக்கு பிடித்த ராஜா, நடிகர்கள் தேர்வு, வசனம் போன்றவற்றை பாரட்டியிருக்கிறேன். பிடிக்காததை குறை சொல்லியிருக்கிறேன். இதுவரை இது போல ஒரு ஆஃப்பீட் படத்துக்கு நான் விமர்சனம் எழுதியதில்லை என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

கார்க்கி on February 10, 2009 at 9:39 AM said...

// Saravana Kumar MSK said...
இதுவரை பாலா எடுத்த படங்களிலே இந்த படம்தான் எனக்கு பிடிச்சி இருந்தது என்று சொன்னால் நீங்க நம்புவீங்களா கார்க்கி அண்ணே.. :)//

நான் நம்புறது இருக்கட்டும். வேற யாராவ்து நம்பினாங்கன்னா சொல்லு தம்பி

***************

/என் நண்பன் ஒரவன் பாலாவின் ரசிகன், அவன் சொன்னான் " எப்பொழுதுமே பாலா படம் பார்த்துவிட்டு வந்தால் மனதில் ஒரு வெறுமை இருக்கும் ; ஆனால் இந்த படத்தில் அது மிஸ்ஸி//

நிச்சயம் உண்மை. சகா

ஜ்யோவ்ராம் சுந்தர் on February 10, 2009 at 11:09 AM said...

இந்தப் பதிவில் உள்ள அபாயகரமான விஷயம் - ஆண்கள் பார்க்கலாம், ஆனால் பெண்கள் பார்க்க முடியாதென்பது. இதன் நீட்சிதான் பப்களில் ஆண்கள் குடிக்கலாம், ஆனால் பெண்கள் குடிதால் அடிப்போம் என்பது. இதை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம். (இதையே நீங்கள் இரண்டாவது முறையும் எழுதியிருப்பதால் சொல்லத் தோன்றியது).

கார்க்கி on February 10, 2009 at 11:16 AM said...

தல,

ரெண்டுத்துக்கும் எப்படி தொடர்புனு புரியல. அத விடுங்க. நான் சொல்வது சராசரி பெண்கள். நிச்ச்யமாய் இதை அவர்கள் ரசிக்க மாட்டார்கள். ரசிக்காததை நானே பார்த்தேன். பதிவர்களில் சில பெண்களும் அதை குறிப்பிட்டுள்ளார்கள். நீங்கள் புரிந்துக் கொண்ட விதத்தை பார்க்கும்போது என் எழுத்தில் அவ்வளவு தெளிவில்லை என்பதை உணர்கிறேன்.

பெண்கள் பார்க்க கூடாதென்று நான் சொல்லவில்லை. பார்க்க தயங்குவார்கள் என்றே சொல்கிறேன். மத்தபை பெண்களுடன் தண்ணியடிக்க நான் தயார் :)))

LOSHAN on February 10, 2009 at 12:56 PM said...

//முயற்சி செய்தால் அஜித்தை நடிக்க வைத்து விடுவார்.//
உங்கள் வழக்கமான அஜித் விரோத பிரசாரம்?

//எப்படியோ ராஜாவால்தான் கடவுளே தப்பித்தார். //
வேணாம் சாமி.. இப்பவே அவர் பாதி சாமி என்று தான் அவரே சொல்கிறாராம்.. ;)

//ஜோதிலட்சுமியின் இடுப்பை காட்டியவர் தானே நீங்கள்? துணியால் மறைத்தாலும் சிம்ரனின் இடுப்பு உங்களுக்கு தேவைப்பட்டதே!! //
சாட்டையடி.. நானும் இதே போல சில வாதங்களையே கண்மூடித் தனமாக பாலாவின் பக்தர்கள் ஆகியிருக்கும் நண்பர்களுக்கு அடிக்கடி சொல்வேன்.யதார்த்தம்,யதார்த்தம் என்று பாலா சொல்வது இவற்றையா?

தமிழ் சினிமா தரம் உயர இது போன்ற விளிம்பு நிலை மனிதர்கள்,வன்முறைகள் தான் படம் பிடிக்கப்பட வேண்டுமா?

//கலைஞருக்கு சப்பை கட்டு கட்டும் உடன்பிறப்புகள் போல, வில்லுக்கு காவடி தூக்கும் கார்க்கியைப் போல, பதிவர்கள் இதற்கு (சிலரைத் தவிர) வக்காலத்து வாங்குவது ஏன் எனப் புரியவில்லை.//
பரவாயில்லையே உண்மையெல்லாம் வருது..

//இது போல படமெடுக்க மட்டுமல்ல, பார்ப்பதற்கும் பாலாவால் மட்டுமே முடியும். நான் பாலா அல்ல.//
நச்!! இன்று தான் பார்க்கப் போகிறேன். ஒரு பக்கம் பயமுறுத்தறீங்க.. இன்னொரு பக்கம் அபாரம் என்கிறார்கள்.. பார்த்துவிட்டு வந்து உங்களையெல்லாம் ஒரு கை பார்க்கிறேன். ;)

கார்க்கி on February 10, 2009 at 1:01 PM said...

// LOSHAN said...
//முயற்சி செய்தால் அஜித்தை நடிக்க வைத்து விடுவார்.//
உங்கள் வழக்கமான அஜித் விரோத பிரசாரம்//

நிச்சயாமாக இல்லை. அஜித்தை நடிக்க வைக்க கூடுமென்பதே அவருக்கு ஆதரவான் ஒன்றுதானே. அதை செய்யவும் விஜயிடம் கஷ்டப்படனும்.

//பரவாயில்லையே உண்மையெல்லாம் வருது//

கிகிகி

LOSHAN on February 10, 2009 at 1:08 PM said...

//நிச்சயாமாக இல்லை. அஜித்தை நடிக்க வைக்க கூடுமென்பதே அவருக்கு ஆதரவான் ஒன்றுதானே. அதை செய்யவும் விஜயிடம் கஷ்டப்படனும்.//
பரவாயில்லையே உண்மையெல்லாம் வருது
பரவாயில்லையே உண்மையெல்லாம் வருது ;)

ஷாஜி on February 10, 2009 at 8:36 PM said...

/வில்லுக்கு காவடி தூக்கும் கார்க்கியைப் போல//

//அஜித்தை நடிக்க வைக்க கூடுமென்பதே அவருக்கு ஆதரவான் ஒன்றுதானே. அதை செய்யவும் விஜயிடம் கஷ்டப்படனும்.//

---நீங்க இவ்வளவு நல்லவரா? யப்பா இப்பவே கண்ண கட்டுதே....

விஜய் on February 12, 2009 at 11:56 AM said...

//அஜித்தை நடிக்க வைக்க கூடுமென்பதே அவருக்கு ஆதரவான் ஒன்றுதானே. அதை செய்யவும் விஜயிடம் கஷ்டப்படனும்.//

athennamo unmaithaan, ajith kitta easya nadika varrengalanu kettu chance vangiralam.......... but , Ivarkitta chance vanga romba kashtam thaan yaar illaena???

விஜய் on February 12, 2009 at 11:57 AM said...

Ippadilam padathai pathi ennenamo solreenglae eppadi pa thairiyama pakurathu???

 

all rights reserved to www.karkibava.com