Feb 8, 2009

ஒரு மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்கள்
1. தான் கடைசியாக எழுதியது என்னவோ அதுவே தன் வாழ்நாளின் “மாஸ்டர் பீஸ்” என்று சொல்லிக்கொள்வார்கள்.

2. பொது இடங்களில் சந்திக்க நேர்ந்தால் சந்தனத்துல என்னோட கட்டுரை வந்துருக்கு, தூர மலர்ல என்னோட கதை வந்திருக்கு, யோக்யாவில என்னோட தொடர் வரப்போவுது எனப் பெருங்குரலில் பேசி கலவரமூட்டுவார்கள்.

3. வட்டார மொழியில் எழுதுகிறேன் பேர்வழி என்று எந்த வட்டாரத்திலும் இல்லாத ஒரு மொழியில் எழுதுவார்கள்.

4. எப்போதும் ஏதாவது ஒரு பிரசுரத்தின் பெயரைச் சொல்லி அதற்காக ஒரு நூலை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்வார்கள்.

5. ஒவ்வொரு பத்திரிகையின் தன்மைக்கேற்ப தன்னையும் மாற்றிக்கொண்டு எழுதுவார்கள்.

6. என்பதுகளில் காலாவதியாகிப் போய்விட்ட உத்திகளையும் நாடகத்தனமான உரையாடல்களையும் எழுதி விட்டு அதன்படியே எழுதி ரெமுனரேஷன் வாங்கும்படி சக எழுத்தானுக்கு யோசனை சொல்வார்கள்.

7. கதை ஏதேனும் வார இதழ்களில் வர இருப்பதாகத் தெரிந்துவிட்டால் போஸ்ட்கார்டில் துவங்கி, எஸ்.எம்.எஸ், இமெயில், ஸ்க்ராப் என சகல வழிகளிலும் அதை மொத்த ஜனத்தொகைக்கும் தெரியப் ‘படுத்து’ வார்கள்.

8. நண்பர்களின் வஞ்சகப் புகழ்ச்சியை உண்மையென்று நம்பித் தொலைப்பார்கள்.

9. கதைகளிலும், சிந்தனையிலும் செய்ய வேண்டிய மாற்றத்தை தலைமுடியிலும், மோவாய்க்கட்டையிலும் அடிக்கடி மேற்கொண்டு கலவரப்படுத்துவார்கள்.

10. வாசிப்பதைக் காட்டிலும் சுமார் நூறு மடங்கு அதிகமாக எழுதிக் குவிப்பார்கள் (யாரும் வாசிக்கத் தயாராக இல்லாத போதும்)

இந்தப் பகடி பதிவின் சுவாரஸ்யமான் பின்னூட்டங்களுக்கு இங்கே க்ளிக்கவும்

*************************************************

அதேதான். இத புதுசா படிக்கறவங்களுக்காக‌

அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன்

20 கருத்துக்குத்து:

அத்திரி on February 8, 2009 at 11:18 AM said...

நாந்தான் மொதல்ல

ASSOCIATE on February 8, 2009 at 11:21 AM said...

ரொம்ப கஷ்டப்பட்டு கவனிச்சு பதிவு பண்ணி இருக்கீங்க நண்பரே.

SanJai காந்தி on February 8, 2009 at 11:28 AM said...

//அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன்//

ரொம்ப நல்ல மேட்டர்.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்.. :)

அத்திரி on February 8, 2009 at 11:32 AM said...

ஞாயிற்றுக்கிழமைனாலே மீள் பதிவுதானா...................

Bleachingpowder on February 8, 2009 at 12:13 PM said...

// தான் கடைசியாக எழுதியது என்னவோ அதுவே தன் வாழ்நாளின் “மாஸ்டர் பீஸ்” என்று சொல்லிக்கொள்வார்கள்//

என்ன தான் சொன்னாலும் இது தான் உங்க மாஸ்டர் பீஸ் தல ;)

Anonymous said...

Superoo super

வால்பையன் on February 8, 2009 at 1:26 PM said...

//தான் கடைசியாக எழுதியது என்னவோ அதுவே தன் வாழ்நாளின் “மாஸ்டர் பீஸ்” என்று சொல்லிக்கொள்வார்கள்.//

அப்போ தானே பீஸ்(வருமானம்) அதிகமாக கிடைக்கும்

வால்பையன் on February 8, 2009 at 1:33 PM said...

//நண்பர்களின் வஞ்சகப் புகழ்ச்சியை உண்மையென்று நம்பித் தொலைப்பார்கள்.//

ரொம்ப அருமையா எழுதுறிங்க சகா!
விரைவிலேயே உங்களுக்கு பிரபல வார இதழில் எழுத வாய்ப்பு வரும் பாருங்களேன்

வால்பையன் on February 8, 2009 at 1:34 PM said...

அங்கிள கிண்டல் பண்ணி அவரு எழுதினது!

மீண்டும் பத்த வச்சிட்டியே பரட்ட

செல்வேந்திரன் on February 8, 2009 at 2:37 PM said...

யோவ், வால் பையன் உம்ம போதைக்கு நாந்தான் ஊறுகாயா? ஐய்யோ அவர்கிட்ட வேற ரெண்டு துப்பாக்கி இருக்குதே....

Sinthu on February 8, 2009 at 3:53 PM said...

"அத்திரி said...
ஞாயிற்றுக்கிழமைனாலே மீள் பதிவுதானா..................."
அது முதலே சொல்லப்பட்ட விடயம் தானே.... மீள் பதிவு மீள் பதிவு மீள் பதிவே தான்... எதை மாத்தினாலும் இதை மாத்த முடியாது என்று நினைக்கிறேன்...

ஆதவா on February 8, 2009 at 4:22 PM said...

ரொம்ப அருமைங்க....

நேரம் கிடைச்சா, இதையும் கொஞ்சம் படிச்சுப்பாருங்க

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=1132

ILA on February 8, 2009 at 9:41 PM said...

அழியாத கோலங்கள்-paguthi paarkkavum. Lot of blogs available similar to this

ஸ்ரீமதி on February 9, 2009 at 10:40 AM said...

:)))

கார்க்கி on February 9, 2009 at 10:56 AM said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி

LOSHAN on February 10, 2009 at 12:34 PM said...

எங்கேயோ படிச்ச மாதிரிர்யே இருக்கே.. நம்ம சகாவும் தொடங்கீட்டாரான்னு பார்த்தேன்.. இறுதி வரிகளில் தான் உங்க ஞாயிறு ஸ்பெஷல்னு புரிஞ்சது.. நடத்துங்க.. நடத்துங்க..

கார்க்கி on February 10, 2009 at 6:43 PM said...

ஞாயிற்றுக்கிழமை கடை லீவு. இல்லைன்னா ஓசி பதிவுதான் சகா

விஜய் on February 11, 2009 at 1:09 PM said...

gd gd nalla idea, thannoda moolai velai seiyathannaikku ippadithaan "Suttu" podanum

Shameem on February 12, 2009 at 10:27 AM said...

7. கதை ஏதேனும் வார இதழ்களில் வர இருப்பதாகத் தெரிந்துவிட்டால் போஸ்ட்கார்டில் துவங்கி, எஸ்.எம்.எஸ், இமெயில், ஸ்க்ராப் என சகல வழிகளிலும் அதை மொத்த ஜனத்தொகைக்கும் தெரியப் ‘படுத்து’ வார்கள்.

idhil enna thavaru irukkiradhu? thanadhu santhosangalai matravargaludan pagirndhu kolvathil, alladhu chinaathaaga thaan saadhithadhai pirarukku solvadhil enna thavaru? vilakkavum...

செல்வேந்திரன் on February 12, 2009 at 10:04 PM said...

கார்க்கி, யூத் விகடனில் லிங்க் கொடுத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?!

மிக நீண்ட இடைவெளிக்குப் பின் அடியேனின் கவிதைகள் நடப்பு இதழ் விகடனில் வெளியாகி உள்ளது. படித்துவிட்டு அபிப்ராயம் சொல்லவும்

 

all rights reserved to www.karkibava.com