Mar 6, 2009

புட்டிக்கதை


மறுநாள் செமெஸ்டர் தேர்வுகள். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் முழு பியரையும் அடித்துவிட்டான் ஏழு. படிப்பதில் அவன் சூரன். எங்கள் கவலையெல்லாம் அவனை எப்படியாவது எழுப்பி கிளப்ப வேண்டுமென்பதே. நினைத்தது போலில்லாமல் காலை எட்டு மணிக்கே எழுந்துவிட்டான். ஆனால் மப்பு மட்டும் முழுமையாக இறங்கவில்லை.

தேர்வு அறைக்குள் நுழைந்தவன் நேராக ப்ளாட்ஃபார்ம் மீது ஏறினான். "யாருப்பா இன்னைக்கு எனக்கு பேப்பர் கொடுத்து புண்ணியம் தேடிக்கப் போறது?"

எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ஏழுவா இவ்வளவு சத்தம் போட்டு பேசுவது? பின் மெல்ல அவனை சமாதானப்படுத்தி தேர்வை ஒழுங்காக எழுதுமாறு எடுத்து சொன்னோம். தேர்வும் தொடங்கியது. கேள்வித்தாளையும் விடைத்தாளையும் கொடுத்துவிட்டு சரிப்பார்த்திட சொன்னார். மேற்பார்வையாளர். ஏழு எழுந்ததைப் பார்த்தவுடன் எனக்கு பயம் ஏறியது.

"எக்ஸ்க்யூஸ் மீ சார். Question paperல இருக்கு. ஆனா Answer paperல Answers எதுவுமே இல்ல சார்”

நான் சிரித்ததைப் பார்த்து அவர் ஏழுவை விட்டுவிட்டு என்னை திட்டத்தொடங்கினார். ஏழுவை முறைத்துக் கொண்டே அமர்ந்தேன். அரைமணி நேரம் கழித்து மீண்டும் எழுந்தான்.

"சார். Differential Assembly எப்படி வேலை செய்யுது?” அவர் கோவமடைவதை கண்ட ஏழு பம்மினான். "என்ன சார். சந்தேகம் கேட்டா தீர்த்து வைக்கிறவர்தானே நல்லஆசிரியர்?"

கழுத்தைப் பிடித்து இழுத்து சென்றார் அவர். அவன் மீது எந்த ஒரு 'நல்'வாசனையும் வராததால் இவன் வேண்டுமென்றே விளையாடுவதாக முடிவுசெய்து விட்டார்கள். ஸ்டாஃப் ரூமில் எல்லா லெக்சரரும் கூடியிருக்க விசாரணை ஆரம்பமானது. ஏழு நல்லா படிக்கிற பையன் என்று அனைவரும் சொன்னாலும் அடிபட்டவர் விடுவதாக இல்லை. அதுவரை வாயை மூடியிருந்த ஏழு வாயைத்திறக்கத் தொடங்கினான்.

கெமிஸ்ட்ரி மேடத்தை பார்த்து முதலில் சொன்னான். "மேடம் இவருக்கும் எனக்கும் ஏனோ கெமிஸ்ட்ரி ஒத்து வரவில்லை".

என்னடா பேசற. திமிரா? என்றார் பிஸிக்ஸ்.

”சார். மேல போனா கீழ இறங்கித்தான் ஆகனும்னு சொல்றாரு நியூட்டன். எனக்கு மட்டும் ஏன் சார் இறங்க மாட்டங்குது" என்ற போதுதான் இவன் தண்ணி அடித்திருக்கிறான் என்பதை உணர்ந்தார்கள் உரையாளர்கள்.(அதாம்ப்பா லெக்சரர்ஸ்)

இருந்தாலும் அவன் உருவத்தைப் பார்த்து பாவப்பட்ட சில நல்ல ஜீவன்கள் அவன் தண்ணியடிக்கவில்லை என்றும், கூடவே சுத்தும் நாங்கள்தான் அவனுக்கு கஞ்சா டோப்பு அபின் என்று எதோ பழக்கப்படுத்திக் கெடுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். அரை பியர் அய்யாவுக்கு கஞ்சா அபின் என்றதும் முதுகெலும்பில் எறும்பு ஊர்ந்திருக்கிறது.
"ஆமா சார். நேத்து கார்க்கிதான் எனக்கு ஏதோ கொடுத்தான்” என்று உளறியிருக்கிறான்

எப்படி மார்க் போட்டாலும் 40 வரவில்லை என்பதால் மீண்டும் கேள்வித்தாளினை புரட்டிக் கொண்டிருந்தேன், தேர்வு முடிந்து பல மணி நேரம் ஆன பின்னும்.
"உன்னை பிரின்ஸி வர சொன்னாரு. உடனே வா" என்றார் ஆஃபீஸ் பாய்.

பாவம் ஏழு. காப்பற்றலாம் என்ற நல்லெண்ணத்தில் போன என்னிடம் டொய்ங் என சுத்தி ஏழு சொன்னதை ரீப்ளே செய்து காமித்தார்கள். கொலைவெறியோடு அவனைப் பார்த்தேன்.கூலாக சிரித்துக் கொண்டே கேட்டான். "அது அபினா மச்சி?"

அப்படியே அவனைக் கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது. கோவத்தை அடக்கிக் கொண்டு
சார். அவன் நேத்து ஒரு பியர் குடிச்சான். அதுக்குதான் இந்த ஆட்டம் என்றேன்.

ஒரு பியருக்கு ரெண்டு நாளா ஆடுவாங்களா? கூட என்ன சேர்த்த என்று கேட்டுதானும் ஒரு குடிகாரர்தான் என்று நிரூபித்தார் கணக்கு.

சத்தியமா சார்.வேணும்ன்னா பாலாஜிய கூட கேளுங்க என்று சொல்லிவிட்டு பின்பு நாக்கைக் கடித்தேன், இன்னொருத்தனையும் சிக்க வைத்து விட்டோமே என்று.

அந்தக் கவலையே இல்லாமல் அடுத்த டயலாக்கை அடித்தான் ஏழு. " அவன் இவனுக்குதான் சப்போர்ட் பண்ணுவான் சார். நீங்க ஆறுவையும் வர சொல்லுங்க.அவன் தான் எனக்கு மிக்ஸ் செய்து தந்தான்"

பியரடிச்சவனுக்கு எதைடா மிக்ஸ் செய்தீங்க என்று தன் மானம் போவது தெரியாமல் விசாரித்தார் கணக்கு.

அவன் பீரையே தண்ணி கலந்துதான் அடிப்பான் சார் என்றேன். ஏதோ அவனை மன்மதன் என்று சொன்னதைப் போல நகத்தைக் கடித்து அந்த சிமென்ட் தரையில் கால் கட்டை விரலால் நோண்டி வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார் தலைவர்.

அழைத்து வரப்பட்டார்கள் ஆறுவும் பாலாஜியும். பின்புதான் தெரிந்தது அவர்கள் இழுத்து வரப்பட்டார்கள் என்ற உண்மை.

மூன்று பேர் சொல்லியும் யாரும் நம்பத் தயாரில்லை. ஏதோ பெரிய லெவலில் போதை மருந்து பழக்கம் இருப்பதாக முடிவு செய்து விட்டார்கள். பேரன்ட்ஸ் வரனும். சஸ்பென்ஷன் தரணும். இவனுங்களுக்கெல்லாம் எதுக்கு சார் படிப்பு.டி.சி. கிழிச்சிடுங்க, போலிஸ்ல சொல்லலாம் சார் என்ற ஆளுக்கொரு ஐடியா தந்துக் கொண்டிருந்தார்கள்.

மறுநாள் வரை விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. மப்பு இறங்கி எழுந்தவனை கைகள் வலிக்க மொத்தினோம். மறுநாள் எல்லா உண்மையும் சொல்வதாக சொன்னதால் விட்டோம்.

அடுத்த நாள்.. வரிசையாக நின்றோம். யாரிடம் கஞ்சா வாங்கிறீங்க என்றவரிடம் காலில் விழாத குறையாக கெஞ்சினோம். அடிச்சவனே ஒத்துக்கிட்டானே என்றார். ஏழுவைப் பார்த்தோம்.

சார். இல்ல சார். நான் பீரடிச்சாலே ஏறிடும் சார். சத்யமா நேத்து பீருக்குத்தான் அப்படியாயிட்டேன் என்றான்.

டேய். மெக்கானிக்கல்ன்னா பெரிய பருப்பா? நாங்களும் அத படிச்சிட்டுதானே வந்திருக்கோம். ஒரு பீருக்கே இவரு ரெண்டு நாள் ஆடுவாராம். யார் கிட்ட கதை உடறீங்க என்றார் ஹெச்.ஓ.டி.

மெதுவாக சொன்னான் ஏழு " வேணும்ன்னா ஒன்னு வாங்கித் தந்து பாருங்க சார்.எப்படி ஆடுறேனு”

39 கருத்துக்குத்து:

அருண் on February 6, 2009 at 10:28 AM said...

Super!

அருண் on February 6, 2009 at 10:29 AM said...

Me the First!!!

நான் on February 6, 2009 at 10:32 AM said...

நான் தான் செகண்ட்...படிச்சுட்டு வாரேன்

narsim on February 6, 2009 at 10:35 AM said...

//ஒரு பியருக்கு ரெண்டு நாளா ஆடுவாங்களா? கூட என்ன சேர்த்த என்று கேட்டுதானும் ஒரு குடிகாரர்தான் என்று நிரூபித்தார் கணக்கு.
//
என்றதும்முதுகெலும்பில் எறும்பு ஊர்ந்திருக்கிறது//

எக்ஸ்க்யூஸ் மீ சார். Question paperல இருக்கு. ஆனா Answer paperல Answers எதுவுமே இல்ல சார்//

நல்லா இருந்துச்சு சகா..

ரமேஷ் வைத்யா on February 6, 2009 at 10:48 AM said...

kachidham...

முரளிகண்ணன் on February 6, 2009 at 11:12 AM said...

very nice one karki

கார்க்கி on February 6, 2009 at 11:13 AM said...

/ அருண் said...
Super//

அடிக்கடி மாயமா போயிடறீங்க. ஏன் சகா?

*************
// நான் said...
நான் தான் செகண்ட்...படிச்சுட்டு வாரேன்//

இன்னுமா படிக்கறீங்க?

************
// narsim said...

நல்லா இருந்துச்சு சகா//

நன்றி தல

**************
//ரமேஷ் வைத்யா said...
kachidham..//

நன்றிண்ணா

தாரணி பிரியா on February 6, 2009 at 11:26 AM said...

//எக்ஸ்க்யூஸ் மீ சார். Question paperல இருக்கு. ஆனா Answer paperல Answers எதுவுமே இல்ல சார்” //


//"என்ன சார். சந்தேகம் கேட்டா தீர்த்து வைக்கிறவர்தானே நல்லஆசிரியர்?"//

நிஜ‌மாவே புத்திசாலிதான். டாக்ட‌ர் ப‌ட்ட‌ம் வாங்கிட்டாரா இல்லையா.
:)

ஸ்ரீமதி on February 6, 2009 at 11:38 AM said...

அண்ணா சூப்பர் :))

ஸ்ரீமதி on February 6, 2009 at 11:38 AM said...

me the 10 :):)

வித்யா on February 6, 2009 at 12:10 PM said...

வேணும்னே தான பாலாஜியப் போட்டுக்கொடுத்த?? ஏழுமலையின் அட்டகாசங்கள்ன்னு சீக்கிரமே ஒரு புக் போடு கார்க்கி:)

prakash on February 6, 2009 at 12:16 PM said...

//"எக்ஸ்க்யூஸ் மீ சார். Question paperல இருக்கு. ஆனா Answer paperல Answers எதுவுமே இல்ல சார்”//

:))))

கார்க்கி on February 6, 2009 at 12:17 PM said...

// தாரணி பிரியா said...

நிஜ‌மாவே புத்திசாலிதான். டாக்ட‌ர் ப‌ட்ட‌ம் வாங்கிட்டாரா இல்லையா//

அவன் டிகிரியே இன்னும் வாங்கல..

**************

/ஸ்ரீமதி said...
சூப்பர் :)//

ஆபாச வார்த்தைகள் சென்ஸார் செய்யப்பட்டுள்ளன.(அண்ணனதான் சொல்றேன்)

******************
// வித்யா said...
வேணும்னே தான பாலாஜியப் போட்டுக்கொடுத்த?? ஏழுமலையின் அட்டகாசங்கள்ன்னு சீக்கிரமே ஒரு புக் போடு கார்க்கி:)//

கிகிகி.. ஆமா..

புத்தகமா? வர வர நீங்களும் என்னை நக்கலடிக்க ஆரம்பிச்சிட்டிங்க

ஸ்ரீமதி on February 6, 2009 at 12:27 PM said...

//கார்க்கி said...
/ஸ்ரீமதி said...
சூப்பர் :)//

ஆபாச வார்த்தைகள் சென்ஸார் செய்யப்பட்டுள்ளன.(அண்ணனதான் சொல்றேன்)//

இது அநியாயம் :((

Thusha on February 6, 2009 at 12:56 PM said...

:-))))))))))))

சூப்பர் அண்ணன

பாபு on February 6, 2009 at 1:42 PM said...

சிரிக்க வைத்ததுக்கு நன்றி

அனுஜன்யா on February 6, 2009 at 1:52 PM said...

அமர்க்களம் கார்க்கி. ஆமாம், நிசமாலுமே பீர் குடிச்சா இப்படியெல்லாம் ஆகுமா?

அனுஜன்யா

Bleachingpowder on February 6, 2009 at 1:55 PM said...

//மெதுவாக சொன்னான் ஏழு " வேணும்ன்னா ஒன்னு வாங்கித் தந்து பாருங்க சார்.எப்படி ஆடுறேனு”//

:)))))))

நான் கடவுள் ஹைதையில் ரிலீஸா தல. படம் நல்லாயிருக்காமே

கார்க்கி on February 6, 2009 at 2:41 PM said...

// ஸ்ரீமதி said...

இது அநியாயம் :((//

இது என் நியாயம்

*************

// Thusha said...
:-))))))))))))

சூப்பர்//

:)))))

*************
// பாபு said...
சிரிக்க வைத்ததுக்கு நன்றி//

சிரித்ததுக்கு நன்றி

Sinthu on February 6, 2009 at 3:19 PM said...

முடியல்ல.............. ஏன் இப்படி.........?

அருண் on February 6, 2009 at 3:20 PM said...

//அடிக்கடி மாயமா போயிடறீங்க. ஏன் சகா?//

இப்போதான் leave முடிஞ்சி வரேன். கொஞ்சம் மெயில் படிக்க வேண்டியிருந்தது.

கார்க்கி on February 6, 2009 at 3:48 PM said...

//அமர்க்களம் கார்க்கி. ஆமாம், நிசமாலுமே பீர் குடிச்சா இப்படியெல்லாம் ஆகுமா?

அனுஜன்//

அடிச்சுதான் பாருங்களேன் தல

**********

// Bleachingpowder said...
//மெதுவாக சொன்னான் ஏழு " வேணும்ன்னா ஒன்னு வாங்கித் தந்து பாருங்க சார்.எப்படி ஆடுறேனு”//

:)))))))

நான் கடவுள் ஹைதையில் ரிலீஸா தல. படம் நல்லாயிருக்கா//

இப்பதான் நண்பன் அழைத்து வேலைக்காவதுனு சொன்னான் சகா???

******************

/ Sinthu said...
முடியல்ல.............. ஏன் இப்படி......//

ச்சும்மாதான்

***************
// அருண் said...
//அடிக்கடி மாயமா போயிடறீங்க. ஏன் சகா?//

இப்போதான் leave முடிஞ்சி வரேன். கொஞ்சம் மெயில் படிக்க வேண்டியிருந்தது//

என்ன சகா அடிக்கடி லீவு?

Karthik on February 6, 2009 at 4:36 PM said...

//"அது அபினா மச்சி?" அப்படியே அவனைக் கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது.

ஹா..ஹா, கலக்கல்ஸ் கார்க்கி.
:))

வால்பையன் on February 6, 2009 at 4:41 PM said...

//மெதுவாக சொன்னான் ஏழு " வேணும்ன்னா ஒன்னு வாங்கித் தந்து பாருங்க சார்.எப்படி ஆடுறேனு”//

இந்த இடத்துல தான் எனக்கு ஏழுவை ரொம்ப புடிச்சிருக்கு!

ஆதவா on February 6, 2009 at 6:05 PM said...

நான் படிக்கும் உங்களின் முதல் பதிவு... ரகளையா இருக்குனஙக....

அப்படியய அலேக்காக அந்த இடத்தில் கொண்டு போகும் எழுத்துக்கள்...

இது உண்Mஐயா நடந்ததா??

Natty on February 7, 2009 at 3:20 AM said...

//"எக்ஸ்க்யூஸ் மீ சார். Question paperல இருக்கு. ஆனா Answer paperல Answers எதுவுமே இல்ல சார்”//

கலக்கல் நகைச்சுவை...

ஏழுதான் கார்க்கியான்னு லைட்டா ஒரு டவுட்டு இருக்கு! ;)

வெண்பூ on February 7, 2009 at 5:35 AM said...

புட்டிக்கதைகள் சீரிஸ் அருமையா போகுது கார்க்கி.. ஏழு செம என்டர்டெய்னிங் ஆளுதான்..

ஸ்ரீதர்கண்ணன் on February 7, 2009 at 6:16 AM said...

பியரடிச்சவனுக்கு எதைடா மிக்ஸ் செய்தீங்க என்று தன் மானம் போவதுதெரியாமல் விசாரித்தார் கணக்கு.

அவன் பீரையே தண்ணி கலந்துதான் அடிப்பான் சார் என்றேன்.


Superu....

ASSOCIATE on February 7, 2009 at 10:45 AM said...

நல்ல எழுத்து நடை ! என்னை மறந்து சிரித்தேன் நண்பரே !

கார்க்கி on February 7, 2009 at 8:26 PM said...

//Karthik said...
//"அது அபினா மச்சி?" அப்படியே அவனைக் கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது.

ஹா..ஹா, கலக்கல்ஸ் கார்க்கி//

நன்றி கார்த்திக்.

*****************

// வால்பையன் said...
//மெதுவாக சொன்னான் ஏழு " வேணும்ன்னா ஒன்னு வாங்கித் தந்து பாருங்க சார்.எப்படி ஆடுறேனு”//

இந்த இடத்துல தான் எனக்கு ஏழுவை ரொம்ப புடிச்சிருக்கு!//

சத்யமா நம்புங்க உங்ககிட்ட இந்த கமெண்ட்ட எதிர்பார்த்தேன்..கிகிகி

*********************

// ஆதவா said...
நான் படிக்கும் உங்களின் முதல் பதிவு... ரகளையா இருக்குனஙக....

அப்படியய அலேக்காக அந்த இடத்தில் கொண்டு போகும் எழுத்துக்கள்...

இது உண்Mஐயா நடந்ததா??//

ரொம்ப நன்றி சகா. அப்படியே புட்டீக்கதைகள் அனைத்தையும் படிக்கவும். இந்த வாரம் முழுவதும் புனைவே.

கார்க்கி on February 7, 2009 at 8:29 PM said...

// Natty said...
//"எக்ஸ்க்யூஸ் மீ சார். Question paperல இருக்கு. ஆனா Answer paperல Answers எதுவுமே இல்ல சார்”//

கலக்கல் நகைச்சுவை...

ஏழுதான் கார்க்கியான்னு லைட்டா ஒரு டவுட்டு இருக்கு! ;)//

அந்த டவுட்ட க்ளியர் பண்னத்தான் கார்க்கியும் கதைல சேர்த்தேன். நம்புங்கப்பா

*********************

// வெண்பூ said...
புட்டிக்கதைகள் சீரிஸ் அருமையா போகுது கார்க்கி.. ஏழு செம என்டர்டெய்னிங் ஆளுதான்//

நன்றி சகா

**********************

// ஸ்ரீதர்கண்ணன் said...

Superu....//

நன்றி சகா
*************************

//ASSOCIATE said...
நல்ல எழுத்து நடை ! என்னை மறந்து சிரித்தேன் நண்பரே
//

ரொம்ப சந்தோஷம் சகா

அத்திரி on February 8, 2009 at 10:11 AM said...

//மெதுவாக சொன்னான் ஏழு " வேணும்ன்னா ஒன்னு வாங்கித் தந்து பாருங்க சார்.எப்படி ஆடுறேனு”//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........

அத்திரி on February 8, 2009 at 10:16 AM said...

//”சார். மேல போனா கீழ இறங்கித்தான் ஆகனும்னு சொல்றாரு நியூட்டன். எனக்குமட்டும் ஏன் சார் இறங்க மாட்டங்குது"//

ஏழுமலைக்கு மப்பு இறங்கவிடாமல் சதி செய்த சகா எழு சார்பா உனக்கு தண்டனை ரெடி.. ரெண்டு பீர் ஏழுமலைக்கு வாங்கி கொடுக்கனும் ஆமா சொல்லிப்புட்டேன்

ஜி on February 9, 2009 at 10:30 AM said...

//ஆமாம், நிசமாலுமே பீர் குடிச்சா இப்படியெல்லாம் ஆகுமா? //

ரிப்பீட்டே....

பதிவு செம கலக்கல்.. :))

rameshkar on February 9, 2009 at 3:24 PM said...

"வேணும்ன்னா ஒன்னு வாங்கித் தந்து பாருங்க சார்.எப்படி ஆடுறேனு"

நச்சுன்னு எழுதி இருக்கீங்க .

கார்க்கி on February 9, 2009 at 6:06 PM said...

நன்றி ஜி மற்றும் ரமேஷ்

வெட்டிப்பயல் on March 21, 2009 at 3:35 AM said...

Karki,
Pathivu kalakal...

intha pathiva poatiku anupina?

Post 2nd Marchku mela ezhuthirukanumnu rule poatiruke...

யாத்ரீகன் on March 26, 2009 at 10:03 AM said...

:-))))))))))))))))))))))))))))))))))))))))) சான்ஸே இல்ல பாஸ் :-))

mythees on March 30, 2009 at 3:45 PM said...

மீண்டும் ஒரு முறை படித்து இரசித்தேன்,போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

eesh

 

all rights reserved to www.karkibava.com