Feb 4, 2009

காக்டெய்ல்


நாலு இல்லைன்னா ஐந்தே மாதம் என்றுதான் ஹைதைக்கு அனுப்பினார்கள். அப்ரைசல் அது இதுவென்று ஒன்பது மாதம் ஆகிவிட்டன. இப்போது எல்லாம் நண்பர்கள் வேலை எப்படி இருக்கிறது என்று கேட்பதில்லை. வேலையில் இருக்கிறாயா என்றுதான் கேட்கிறார்கள். தினமும் உலகம் முழுவதும் 9000 பேர் வேலையை விட்டு நீக்கப்படுவதாக சொல்கிறார்கள். உண்மையா என்று தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் ஒரு வருட புராஜெக்ட் ஒன்று. நல்ல வாய்ப்புதான் என்றாலும் இன்னும் ஒரு வருடம் ஹைதையா என்ற பயம். வேறு வழி? ப்ளாக் இருக்கும் நம்பிக்கையில் ஓக்கே சொல்லிவிட்டேன். பாவம். நீங்கதான். விதி வலியதுதுதுதுது.

************************************************

நான் கடவுள் பாடலே இன்னும் நாலு மாசத்துக்கு போதும் என்றிருந்தேன். குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தில் மிரட்டியிருக்கிறார் யுவன். குறிப்பாக கடலோரம் ஒரு ஊரு என்று ஒரு பாடல். யுவனின் குரலிலும் எஸ்.பி.பி, அட இருங்க ஒரு நிமிஷம், எஸ்.பி.பி சரணின் குரலிலும் வருகிறது. யாரோ ஒரு இளம் பாடலாசிரியர். பேரு வாலியாம்.


இடைதான் எனக்கோர் நூலகம்
வழங்கும் கவிதை வாசகம்


அப்படியே நந்தலாலாவையும் மிஸ் பண்ணிடாதீங்க. அனைத்துப் பாடல்களையும் கணக்கில் எடுத்தால் நந்தலாலா தான் பெஸ்ட் என்று தோண்றுகிறது.


**********************************************


போரடிக்கும் போதெல்லாம் பதிவுகள் படிப்பேன். அப்பவும் போரடித்தால் யூட்யூபில் காணொளி பார்ப்பதுதான் என் பொழுதுபோக்கு. அதுவும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகளை தேடுவது வழக்கம். அப்படி பார்த்த ஒரு காணொளிதான் இது. கடைசி பந்தில் ஏழு ரன் எடுக்க வேண்டும் நியூஸிலாந்து. ஆஸ்திரேலியா என்ன செய்தது தெரியுமா? நீங்களே பாருங்கள். அப்பவே இவனுங்க இப்படித்தான் போலிருக்கு. அப்போ கேப்டன் யாரு தெரியுமா? நம்ம செப்பல், சாரிங்க சேப்பல்


********************************************


நான் கடவுள் படத்திற்கு பிரம்மாண்டமான ஓப்பனிங் இருக்குமென்று எதிர்பார்த்தேன். சத்யமில் சனிக்கிழமையே டிக்கெட்டுகள் இருக்கின்றன. உண்மையிலே மக்களிடம் காசில்லையா? அல்லது பிணம் தின்னும் காட்கிகள் உண்டு என்ற செய்தியால் பெண்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களா? படம் வெளிவந்த பின் மாற்ற நேர்ந்தால் வேறு ஒரு க்ளைமேக்ஸ் வைத்திருக்கிறாராம் பாலா. உஷாராயிருங்கப்பூ. ரிலீஸான பின் மாற்றினால் எடுபடாது.


*******************************************


யாரு ஆரம்பிச்சாங்கனு தெரியல. ஆனா பரிசலின் அவியல் மூலமாத்தான் இந்த மாதிரி பதிவுகள் அதிகம் வர ஆரம்பிச்சன. காக்டெய்ல், அவியல், துணுக்ஸ், நொறுக்ஸ், கொத்து பரோட்டா, கூட்டாஞ்சோறு இப்படி பல பெயர்களில் எழுதுகிறார்கள். என்ன இருந்தாலும் அவியலின் சுவை எதிலும் இல்லை. எல்லோரும் தகவல்களை சொல்வதிலே குறியாய் இருக்கிறோம். பரிசல் மட்டும்தான் சுவைக்கு தகுந்த விஷயஙகளை மட்டும் சொல்கிறார். கலைக்கண் என்பார்களே!!! இவருக்கு இருப்பதோ வலைக்கண். எந்த மேட்டரை எப்படி சொல்ல வேண்டும் என்பதில் வல்லவர். பால்காரன் தண்ணி அதிகமா கலந்துட்டானேனு தங்கமணி கவலைப்படும் போது, அவன் வித்தியாசமா பதில் சொன்னத கேட்டு சந்தோஷப்படுகிறாராம். அவியலுக்கு பதார்த்தம் கிடைச்சதுன்னு.

56 கருத்துக்குத்து:

Jenbond on February 5, 2009 at 8:31 AM said...

First uuuuuu

Anonymous said...

//ப்ளாக் இருக்கும் நம்பிக்கையில் ஓக்கே சொல்லிவிட்டேன். பாவம். நீங்கதான். விதி வலியதுதுதுதுது.
//

எத்தனியோ பாத்துட்டோம். இதெல்லாம் ஜுஜுபி :)

Anonymous said...

//பேரு வாலியாம்//

:)

Anonymous said...

//பரிசல் மட்டும்தான் சுவைக்கு தகுந்த விஷயஙகளை மட்டும் சொல்கிறார்.//

என்ன இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தானே.

Jenbond on February 5, 2009 at 8:49 AM said...

\\அப்பவே இவனுங்க இப்படித்தான் போலிருக்கு.\\
சகா ஆஸ்திரேலியா டீமை பத்தி தப்பா எதுவும் சொல்லாதிங்க. அவங்களுக்கு தெரியுது (எப்படி போங்கு அடிப்பது) செய்யராங்க. கடைசியா newzland மேட்ச்ல கூட ஹாடின் தனது முழு திறமையையும் (போங்கு அடிப்பதில்) பயன்படுத்தி Neil Broom ஆட்டமிழக்க செய்தார்.

மொழி படத்துல பாஸ்கர் சொல்லுற மாதிரி சொன்ன
"note my words Australia will be awarded for No.1 Fraud Team"

எம்.எம்.அப்துல்லா on February 5, 2009 at 8:56 AM said...

//எத்தனியோ பாத்துட்டோம். இதெல்லாம் ஜுஜுபி :)
//

ஹா..ஹா..ஹா..கரெக்டா சொன்னீங்க அக்கா :)))

Cable Sankar on February 5, 2009 at 9:00 AM said...

சரக்கு சும்மா கிக்காயிருக்கு கார்கி

எம்.எம்.அப்துல்லா on February 5, 2009 at 9:02 AM said...

கார்க்கி அடுத்த வாரம் வர்றேன் ஹைதைக்கு...எங்கயும் ஒடிப் போய்ராத :)

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

கோபிநாத் on February 5, 2009 at 9:03 AM said...

\\குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் \\

எல்லா பாட்டும் கலக்கல் தான் சகா..எனக்கு பிடித்த பாட்டு

நீ ஒரு நிமிஷம் காத்து இருந்தா உன் கழுத்தில் என் தாலி...
நீ ஒத்துக்கிட்டு நீயிருந்தா உடையுமடி பெரும் வேலி..

அடி பின்னியிருக்காரு யுவன் ;)

\\சத்யமில் சனிக்கிழமையே டிக்கெட்டுகள் இருக்கின்றன\\

அங்க இப்படி இருக்கா!!? ஆகா..!!

இங்க படம் வருமான்னே தெரியல..

அத்திரி on February 5, 2009 at 9:09 AM said...

சகா நல்லாயிருக்கியா

அத்திரி on February 5, 2009 at 9:10 AM said...

//காக்டெய்ல், அவியல், துணுக்ஸ், நொறுக்ஸ், கொத்து பரோட்டா, கூட்டாஞ்சோறு இப்படி பல பெயர்களில் எழுதுகிறார்கள். என்ன இருந்தாலும் அவியலின் சுவை எதிலும் இல்லை//

எல்லாமே நல்லாத்தான் இருக்கு சகா..... இன்னைக்கு கொஞ்சம் கிக் கம்மியா இருக்கு

பரிசல்காரன் on February 5, 2009 at 9:14 AM said...

யோவ்.... என்னய்யா இது!
இன்னைக்குத்தான் அவியல் எழுதி தமிலிஷ்ல இணைக்கும்போது, கீழ உன்னோட காக்டெய்ல்...

வாட் எ கோ இன்சிடென்ஸ்!

அப்புறம்..

ரொம்பப் புகழாதீங்க சகா.. கூச்சமா இருக்கு.. :-)))))))))))

முரளிகண்ணன் on February 5, 2009 at 9:39 AM said...

வழக்கம் போல கலக்கல் காக்டெயில் கார்கி.

முன்பு பினாத்தல் சுரேஷ் போன்றோர் புல் பார்மில் இருந்த நேரத்தில் உப்புமா போன்ற லேபில்களில் இம்மாதிரி பத்திகளை எழுதிவந்தார்கள். (நம்ம ஸ்ரீகாந்த் ஓவர் தி ஹெட்ஸ் விளையாடி கலக்கியது போல). பின் லக்கி, கூட்டாஞ்சோறு (வலையுலக ஸ்பெசல்) போன்ற தலைப்புகளில் எழுதினார். (கிரேட் பாட்ச் கோடி காட்டியது போல). நம் பரிசல் ஜெயசூரியா மாதிரி. பெர்பார்மண்சுடன் கன்சிஸ்டென்சியும் காட்டினார். இப்போது அப்ரிடி, கில்லி, கிப்ஸ் போல நிறைய பேர் காக்டெயில்,கொத்துப் புரோட்டா, கதம்பம்,கிச்சடி என கலக்கி வருகிறார்கள்.

என்ன இருந்தாலும் ஜெயசூரியா ஸ்பெசல்தானே?

வித்யா on February 5, 2009 at 10:04 AM said...

யோவ் recession போது எங்க வேலை செஞ்சா என்ன. வேலைன்னு ஒன்னு இருக்குல்ல அது போதும்:)

Anonymous said...

கார்க்கி,

recession பத்தி பரிசல் சொன்ன ஜோக்கப் போட்டிருக்கலாம் பொருத்தமா இருந்திருக்கும்.

பரிசல் ஒவ்வொரு நாளும் அவரோட ஆபீசுக்குள்ள நுழையுமுன் செக்யூரிட்டிகிட்டக் கேட்பாராம், “ ஏம்பா புதுசா யாராவது பெர்சனல் மேனேஜர் யாராவது ஜாய்ன் பண்ணியிருக்காங்களா?”

“இல்லீங்க”

“அப்ப சரி நான் இன்னும் இந்தக் கம்பனியிலதான் இருக்கேன்”

குசும்பன் on February 5, 2009 at 10:34 AM said...

//ப்ளாக் இருக்கும் நம்பிக்கையில் ஓக்கே சொல்லிவிட்டேன். பாவம். நீங்கதான். விதி //

உங்க டீம் மேட் பிகரரோட செல்ல பேர் பிளாக்கின்னு சொன்னீங்களே அவுங்களைதானே சொன்னீங்க!!!:)

குசும்பன் on February 5, 2009 at 10:35 AM said...

//போரடிக்கும் போதெல்லாம் பதிவுகள் படிப்பேன். அப்பவும் போரடித்தால் யூட்யூபில் காணொளி பார்ப்பதுதான் என் பொழுதுபோக்கு. //

புலவரே வானொலி,சுண்டெலி, தென்னாலி தெரியும் அது இன்னா காணொளி???

அப்புறம் போரடிப்பது தமிழில் இன்னான்னு தெரியலையா?

குசும்பன் on February 5, 2009 at 10:36 AM said...

//என்ன இருந்தாலும் அவியலின் சுவை எதிலும் இல்லை. //

வழிமொழிகிறேன்.

குசும்பன் on February 5, 2009 at 10:37 AM said...

//எம்.எம்.அப்துல்லா said...
கார்க்கி அடுத்த வாரம் வர்றேன் ஹைதைக்கு...எங்கயும் ஒடிப் போய்ராத :)//

இந்த உலகம் சுற்றும் வாலிபனை கொஞ்சம் கவனிச்சு அனுப்பு கார்க்கி!!!

ஸ்ரீமதி on February 5, 2009 at 10:38 AM said...

1. அய்யய்யோ... :O (இது சத்தியமா உங்க ஹைதை பயத்துக்கு தான்... நம்புங்க.. )

2.இன்னும் எந்த பாட்டும் கேட்கல.. கேட்டு பார்க்கிறேன்..

3.எனக்கு தேவை இல்லாத விஷயம்..

4.ஆஆஆஆஆஆஆஆ....

5. :)))

narsim on February 5, 2009 at 10:57 AM said...

சகா..சலம்பல்..

MayVee on February 5, 2009 at 11:28 AM said...

"ப்ளாக் இருக்கும் நம்பிக்கையில் ஓக்கே சொல்லிவிட்டேன். பாவம். நீங்கதான். விதி வலியதுதுதுதுது."
ஆமாங்க. "வாழ்கையே ஓர் அலை போலே; நாமெல்லாம் அதேன் மேல"...
தொடராது கருப்பு ; விடாது கார்கியின் கோழி வாலு.....


"அப்படியே நந்தலாலாவையும் மிஸ் பண்ணிடாதீங்க. "
கட்டாயம்.

"போரடிக்கும் போதெல்லாம் பதிவுகள் படிப்பேன். அப்பவும் போரடித்தால் யூட்யூபில் காணொளி பார்ப்பதுதான் என் பொழுதுபோக்கு."
ஒரே ரத்தம்......

அனுஜன்யா on February 5, 2009 at 12:30 PM said...

நல்ல காக்டெயில்தான்.

அப்துல்லா இவ்வளவு வெள்ளந்திப் பேர்வழியா? சொல்லிட்டு வராரு. அதுவும் உன்ன நம்பி...

முரளி, உங்க அலசல் பிரமாதம். கிரிக்கெட்டை மிக உன்னிப்பாகக் கவனித்து எழுதியிருக்கிறீர்கள். பரிசலைப் புகழ்ந்தால், எனக்கே கூச்சமாக இருக்கு. ஏதோ, நான்தான் எழுதின மாதிரி.

பரிசலின் சுவாரஸ்யம் என்னளவில் இணையில்லாதது. உன்னுடையது 'யூத்'. சும்மா ஜிவ்வுன்னு இருக்கு. கதம்பம் மெல்லிய தென்றல். வருடும். மீதி பேர் பற்றி எழுதும் அளவு படித்ததும் இல்லை; அவ்வளவு நெருக்கமும் இல்லை. சங்கரின் விமர்சனங்கள் ரொம்ப நல்லா, நடுநிலையுடன் இருக்கும். 'கொத்து' இனிமே படிக்கத் துவங்கணும். ஹரன் பிரசன்னா புதுசா பத்தி துவங்கியிருக்கார். ofcourse, அவருடையது முற்றிலும் வேறு தளத்தில் இருக்கும்.

எனக்குத் தெரிந்து முரளி மற்றும் நர்சிம் கூட regular columns எழுதினால் நல்லா இருக்கும். நாங்க எல்லாம் 'சபாஷ், சரியான போட்டி' என்று சாய்ந்து உட்கார்ந்துகொண்டு ரசிக்கலாம்.

அனுஜன்யா

Karthik on February 5, 2009 at 12:56 PM said...

//வேலையில் இருக்கிறாயா என்றுதான் கேட்கிறார்கள்.

காலேஜ்ல ப்ரொபஸர்ஸுக்கு எல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லையா? என்ன கொடுமை சார் இது?

//நான் கடவுள் பாடலே இன்னும் நாலு மாசத்துக்கு போதும்

கேட்டுட்டு சொல்றேன்.

//சத்யமில் சனிக்கிழமையே டிக்கெட்டுகள் இருக்கின்றன.

பசங்க எல்லாம் ஊறுக்கு ட்ரெய்ன் ஏறிப்போய்ட்டாங்க கார்க்கி. :))

//என்ன இருந்தாலும் அவியலின் சுவை எதிலும் இல்லை.

அடடா, ரெயின்போ தாட்ஸை ஞாபகப் படுத்திட்டீங்களே?
:)

மணிகண்டன் on February 5, 2009 at 2:35 PM said...

********
யோவ் recession போது எங்க வேலை செஞ்சா என்ன. வேலைன்னு ஒன்னு இருக்குல்ல அது போதும்:)
*********

புலி பசி எடுத்தாலும் புல்ல தின்னாது வித்யா !

காக்டைல் சூப்பர்.

Sinthu on February 5, 2009 at 3:45 PM said...

"போரடிக்கும் போதெல்லாம் பதிவுகள் படிப்பேன். அப்பவும் போரடித்தால் யூட்யூபில் காணொளி பார்ப்பதுதான் என் பொழுதுபோக்கு. அதுவும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகளை தேடுவது வழக்கம். அப்படி பார்த்த ஒரு காணொளிதான் இது. கடைசி பந்தில் ஏழு ரன் எடுக்க வேண்டும் நியூஸிலாந்து. ஆஸ்திரேலியா என்ன செய்தது தெரியுமா? நீங்களே பாருங்கள். அப்பவே இவனுங்க இப்படித்தான் போலிருக்கு. அப்போ கேப்டன் யாரு தெரியுமா? நம்ம செப்பல், சாரிங்க சேப்பல்"

பார்க்க முடியாது அண்ணா....
Our administration blocked that web... b coz v always use it....
do u have any ways to see that?

அமிர்தவர்ஷினி அம்மா on February 5, 2009 at 3:46 PM said...

கதம்பம் விட்டுட்டீங்க கார்க்கி

MayVee on February 5, 2009 at 4:05 PM said...

recession .........................
இத பற்றி நான் ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணி; இப்போ தான் submitted.....
ஆனா ராமன் rule பண்ண என்ன ராவணன் rule பண்ண என்ன .......
இன்னும் சில பல நாளுக்கு பழைய முடிவினால் உலகம் சொந்த செலவில் சூனியம் kept

ச்சின்னப் பையன் on February 5, 2009 at 4:41 PM said...

எம்.எம்.அப்துல்லா said...
//எத்தனியோ பாத்துட்டோம். இதெல்லாம் ஜுஜுபி :)
//

ஹா..ஹா..ஹா..கரெக்டா சொன்னீங்க அக்கா :)))

ரிப்பீட்டேஎ.........:-)))

வால்பையன் on February 5, 2009 at 6:37 PM said...

//இப்போது எல்லாம் நண்பர்கள் வேலை எப்படி இருக்கிறது என்று கேட்பதில்லை. வேலையில் இருக்கிறாயா என்றுதான் கேட்கிறார்கள்.//

ஹாஹாஹாஹா
ரொம்ப வலிக்குதா!
இங்கேயும் அப்படி தான் இருக்கு!

கார்க்கி on February 5, 2009 at 6:43 PM said...

நன்றி ஜென்பான்டு

நன்றி அம்மினி
**************************

//எம்.எம்.அப்துல்லா said...
கார்க்கி அடுத்த வாரம் வர்றேன் ஹைதைக்கு...எங்கயும் ஒடிப் போய்ரா//

வாங்க வாங்க.. வாங்க‌றதுக்கு வாங்க‌

*************************
//Cable Sankar said...
சரக்கு சும்மா கிக்காயிருக்கு கார்கி//

நன்றி சகா

கார்க்கி on February 5, 2009 at 6:46 PM said...

// கோபிநாத் said...
\\குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் \\

எல்லா பாட்டும் கலக்கல் தான் சகா..எனக்கு பிடித்த பாட்//

எனக்கு என்னவோ கடலோரம் பாட்டுதான் கேட்டுகிட்டே இருக்கனும் போலிருக்கு

*************************

//அத்திரி said...
சகா நல்லாயிருக்கி//

இருக்கேன். அவ்ளோதான் சொல முடியுது சகா :)))

******************************

// பரிசல்காரன் said...
யோவ்.... என்னய்யா இது!
இன்னைக்குத்தான் அவியல் எழுதி தமிலிஷ்ல இணைக்கும்போது, கீழ உன்னோட காக்டெய்ல்...

வாட் எ கோ இன்சிடென்ஸ்!//

உதைக்க போறாங்க நம்மள..


//ரொம்பப் புகழாதீங்க சகா.. கூச்சமா இருக்கு.. :-))))))))))

ஒழுங்கா படிங்க.. உள்குத்து குத்தியிருக்கோமில்ல‌

***********************************
// முரளிகண்ணன் said...
வழக்கம் போல கலக்கல் காக்டெயில் கார்கி//

வாங்க தல.. உண்மைதான். அவர் ஜெயசூரியாதான்

கார்க்கி on February 5, 2009 at 6:49 PM said...

// வித்யா said...
யோவ் recession போது எங்க வேலை செஞ்சா என்ன. வேலைன்னு ஒன்னு இருக்குல்ல அது போதும்//

அதனால்தான் அடங்கியிருக்கேன். ஆனா ஒன்னு. சென்னை வந்துட்டா ப்ளாகிங் குறைஞ்சிடும்

*************************
// வடகரை வேலன் said...
கார்க்கி,

recession பத்தி பரிசல் சொன்ன ஜோக்கப் போட்டிருக்கலாம் பொருத்தமா இருந்திருக்கும்//

அவரு எத சொன்னாலும் அத எழுதிடுவாருன்னு நினைச்சேன். அதனால்தான் விட்டூட்டேன் தல‌
****************************

// குசும்பன் said...
//எம்.எம்.அப்துல்லா said...
கார்க்கி அடுத்த வாரம் வர்றேன் ஹைதைக்கு...எங்கயும் ஒடிப் போய்ராத :)//

இந்த உலகம் சுற்றும் வாலிபனை கொஞ்சம் கவனிச்சு அனுப்பு கார்க்கி!!//

உங்க அளவுக்கு முடியாது சகா.. ஒன்னெ முக்கா மணி நேரம் சாப்பிட்டாராமே

கார்க்கி on February 5, 2009 at 6:52 PM said...

// ஸ்ரீமதி said...
1. அய்யய்யோ... :O (இது சத்தியமா உங்க ஹைதை பயத்துக்கு தான்... நம்புங்//

உனக்கு தனியா இருக்கு.. நற நற‌

*********************

// narsim said...
சகா..சலம்பல்//

:)))))

***********************
//MayVee said...
"ப்ளாக் இருக்கும் நம்பிக்கையில் ஓக்கே சொல்லிவிட்டேன். பாவம். நீங்கதான். விதி வலியதுதுதுதுது."
ஆமாங்க. "வாழ்கையே ஓர் அலை போலே; நாமெல்லாம் அதேன் மேல"...
தொடராது கருப்பு ; விடாது கார்கியின் கோழி வாலு.//

தப்பிக்க முடியாதுங்க‌

************************

//எனக்குத் தெரிந்து முரளி மற்றும் நர்சிம் கூட regular columns எழுதினால் நல்லா இருக்கும். நாங்க எல்லாம் 'சபாஷ், சரியான போட்டி' என்று சாய்ந்து உட்கார்ந்துகொண்டு ரசிக்கலாம்.

அனுஜன்//

மத்தவங்க இருக்கட்டும். சுந்தர்ஜி சொன்னாரே. நீங்க எப்போ ஸ்டார்ட் மீஸீக்?

கார்க்கி on February 5, 2009 at 6:54 PM said...

@கார்த்திக்,

உன் ரெய்ன்போ தாட்ஸையும் சொல்லலாம்னு இருந்தேன். எங்க தொடர்ந்து எழுத மாட்டறீயே

********************

// மணிகண்டன் said...
********
யோவ் recession போது எங்க வேலை செஞ்சா என்ன. வேலைன்னு ஒன்னு இருக்குல்ல அது போதும்:)
*********

புலி பசி எடுத்தாலும் புல்ல தின்னாது வித்யா !

காக்டைல் சூப்ப//

சூப்பர் பதில் சகா.. நன்றி :))

*************************

// அமிர்தவர்ஷினி அம்மா said...
கதம்பம் விட்டுட்டீங்க கார்க்//

ஆமாங்க. எப்படி மிஸ் பண்னேனு தெரியல.. அண்ணாச்சி கோச்சிக்க மாட்டாரு
****************************

// MayVee said...
recession .........................
இத பற்றி நான் ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணி; இப்போ தான் submitted.....
ஆனா ராமன் rule பண்ண என்ன ராவணன் rule பண்ண என்ன .......
இன்னும் சில பல நாளுக்கு பழைய முடிவினால் உலகம் சொந்த செலவில் சூனியம் கெப்//

பயமுறுத்தாதிங்க‌

கார்க்கி on February 5, 2009 at 6:58 PM said...

// ச்சின்னப் பையன் said...
எம்.எம்.அப்துல்லா said...
//எத்தனியோ பாத்துட்டோம். இதெல்லாம் ஜுஜுபி :)
//

ஹா..ஹா..ஹா..கரெக்டா சொன்னீங்க அக்கா :)))

ரிப்பீட்டேஎ.........:‍))//

வாங்க தோசா மாஸ்டர்
***********************

// வால்பையன் said...
//இப்போது எல்லாம் நண்பர்கள் வேலை எப்படி இருக்கிறது என்று கேட்பதில்லை. வேலையில் இருக்கிறாயா என்றுதான் கேட்கிறார்கள்.//

ஹாஹாஹாஹா
ரொம்ப வலிக்குதா!
இங்கேயும் அப்படி தான் இருக்கு//

எல்லா இடமும்தாங்க‌

*******************

இன்னைக்கு எங்க டீம் அவுட்டிங். மாலைதன் மறுபடியும் நெட். காக்டெய்ல் போடறோமே.தலைப்பும் கேட்ச்சியா இல்ல. கடை காத்தாட‌ போது. நம் பதிலும் வரலைன்னா யாரும் பின்னூட்டமும் போட மாட்டேங்களேனு பயந்தேன். வந்து பார்த்தா 30 கமென்ட்ஸ், 500 ஹிட்ஸ்.. சபாஷ்டா கார்க்கி கிகிகிகிகிகி

அன்புடன் அருணா on February 5, 2009 at 7:41 PM said...
This comment has been removed by the author.
அன்புடன் அருணா on February 5, 2009 at 7:50 PM said...

ம்ம்ம் என்னத்தைக் கலக்கி கலந்து கட்டிக் கொடுத்தாலும் வியாபாரமாகிடுது...அதுதானே வித்தை....நடத்துங்க...
நடத்துங்க...sorry...
கலக்குங்க..கலக்குங்க!!!
அன்புடன் அருணா

தாமிரா on February 5, 2009 at 9:06 PM said...

சென்னைக்கோ, பிற எடத்துக்கோ போனா.. பிளாக் எழுதமுடியாதா என்ன.? மற்றபடி கார்க்கி, பரிசல் போல மீஜிக் உயிரோடு ஒன்றியதில்லை என்பதால் ஆஜர்.!

தாமிரா on February 5, 2009 at 9:07 PM said...

இன்னிக்கு என்ன நிறைய பதிவுகளில் கீழே எனது இணைப்பு தரப்பட்டுள்ளது. இது எப்படி? நீங்களே பண்றதா அல்லது வேற ஏதாவதா? எத்தனை தடவை கேக்குறது.. சொல்லுங்கப்பா.!

தாரணி பிரியா on February 5, 2009 at 11:00 PM said...

1) :) தெலுங்கு நல்லா தெரிஞ்சுரும் விடுங்க சகா

2) நந்தலாலா இன்னிக்கு தான் சி.டி. வாங்கினேன். இன்னும் கேட்கலை. கேட்டுட்டு சொல்லறேன்.

3)கிரிக்கெட் :( எனக்கு போரடிச்சா நல்லா தூங்கிதான் பழக்கம் :)

4)நான் கடவுள் நீங்க சொன்னதுதான் காரணமுன்னு நினைக்கிறேன். என்னோட தோழிகள் நிறைய பேர் டிரைய்லர் பார்த்தாலே பயமா இருக்குன்னு சொல்லறாங்க. இதுல எங்க போயி படம் பாக்கறது ?

5)ஹலோவ் பரிசல், நீங்க எல்லாம் வலையுலக பிதாமகன்கள். உங்க பதிவுக்கு எல்லாம் பின்னூட்டம் போடறதுக்கே எனக்கு அறிவில்லை. இதுல உங்க பதிவுகள் கூட என்னோடதை கம்பேர் செய்யறது என்னாதிது? இப்பதான் ஒழுங்கா பேராகிராப் பார்ம் பண்ணவே வந்து இருக்கு. ஏன் சகா இப்படி?

தமிழ்ப்பறவை on February 5, 2009 at 11:10 PM said...

நல்ல காக்டெயில்...
அப்படியே ‘சிவா மனசுல சக்தி’ கேட்டுப் பாருங்க...
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’(யுவன் பாடினது மட்டும்),’ஒரு பார்வையில்’

வெட்டிப்பயல் on February 5, 2009 at 11:55 PM said...

I think Sudharsan Gopal used to write Omapoadi... Boston Bala can tell the history of this form of writing in blogs :)

I like Parisalkaran's and Vadakarai Velan's :)

கார்க்கி on February 6, 2009 at 9:51 AM said...

// அன்புடன் அருணா said...
ம்ம்ம் என்னத்தைக் கலக்கி கலந்து கட்டிக் கொடுத்தாலும் வியாபாரமாகிடுது...அதுதானே வித்தை....நடத்துங்க...
நடத்துங்க...sorry...
கலக்குங்க..கலக்குங்//

உங்கள மாதிரி தொடர் ஆதரவு தருபவர்கள் இருக்கிற வரைக்கும் நம்ம பொழப்பு ஓடுங்க.. நன்றி

****************
/ தாமிரா said...
இன்னிக்கு என்ன நிறைய பதிவுகளில் கீழே எனது இணைப்பு தரப்பட்டுள்ளது. இது எப்படி? நீங்களே பண்றதா அல்லது வேற ஏதாவதா? எத்தனை தடவை கேக்குறது.. சொல்லுங்கப்பா//

settngs பக்கத்துல "links to this post" ஒரு ஐகான் இருக்கும். அத கிளிக் பண்ணியிருந்தால் எனதெந்த பதிவுல இருந்து லிங்k புடிச்சு வந்தாங்களோ அந்த பதிவெல்லாம் கீழே தெரியும் சகா

*******************
//ஹலோவ் பரிசல், நீங்க எல்லாம் வலையுலக பிதாமகன்கள். உங்க பதிவுக்கு எல்லாம் பின்னூட்டம் போடறதுக்கே எனக்கு அறிவில்லை. இதுல உங்க பதிவுகள் கூட என்னோடதை கம்பேர் செய்யறது என்னாதிது? இப்பதான் ஒழுங்கா பேராகிராப் பார்ம் பண்ணவே வந்து இருக்கு. ஏன் சகா இப்படி//

”ஹலோ பரிசல், நீங்கனு” சொன்னா அது பரிசலுக்கு மட்டுமா இல்ல என்னையும் சேர்த்தா? என்னையும் சேர்த்துன்னா பெரியவா எல்லாம் உங்கள அடிக்க போறா..

கார்க்கி on February 6, 2009 at 9:56 AM said...

// தமிழ்ப்பறவை said...
நல்ல காக்டெயில்...
அப்படியே ‘சிவா மனசுல சக்தி’ கேட்டுப் பாருங்க...
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’(யுவன் பாடினது மட்டும்),’ஒரு பார்வையி//

ஓ அப்படியா.. இன்னைக்கே கேட்டுடலாம் சகா..யுவன் பேக் டூ ஃபார்ம்மா?

**************
// வெட்டிப்பயல் said...
I think Sudharsan Gopal used to write Omapoadi... Boston Bala can tell the history of this form of writing in blogs :)

I like Parisalkaran's and Vadakarai Velan's//

வெட்டிப்பேச்சையும் சேர்த்திருக்கலாம். ஆனா நீங்க எல்லாம் பெரியவ்வா என்பதால் விட்டுட்டேன். அந்த கடைசி ஸ்மைலிக்கு என்னன்னா அர்த்தம்? போடா வேஸ்ட்டா? :))))

prakash on February 6, 2009 at 10:37 AM said...

47

prakash on February 6, 2009 at 10:37 AM said...

48

prakash on February 6, 2009 at 10:37 AM said...

49

prakash on February 6, 2009 at 10:38 AM said...

50

வெட்டிப்பயல் on February 6, 2009 at 10:38 AM said...

//வெட்டிப்பேச்சையும் சேர்த்திருக்கலாம். ஆனா நீங்க எல்லாம் பெரியவ்வா என்பதால் விட்டுட்டேன். அந்த கடைசி ஸ்மைலிக்கு என்னன்னா அர்த்தம்? போடா வேஸ்ட்டா? :))))//

என்னது இது? பெரியவ்வா , சின்னவ்வானு சொல்லிட்டு (அவ்வானா எங்க ஏரியாலா பேசற தெலுகுல பாட்டினு அர்த்தம்)...

To be Frank, நாம எல்லாரும் எழுதறதுக்கும் அவுங்க எழுதறதுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கு. அவுங்க, அவுங்க வாழ்க்கையை பத்தி மட்டுமில்லாமல், படிக்கிற புத்தகங்கள்க இருந்தும் சுவையா எடுத்து தராங்க. அதுலயும் கன்சிஸ்டன்ஸி ரொம்ப முக்கியம்.

நீங்க வடகரை வேலனை விட்டுட்டீங்கனு ஒரு சின்ன ஸ்மைலி. ஏதோ நாட்டாமை மாதிரி சொல்லக்கூடாதில்லையா :) (இதுவும் அதுக்கு தான்)

prakash on February 6, 2009 at 10:39 AM said...

லேட்டாக வந்ததால் 50 மட்டும் அடிக்கிறேன் :)))

தாரணி பிரியா on February 6, 2009 at 11:36 AM said...

//ஹலோ பரிசல், நீங்கனு” சொன்னா அது பரிசலுக்கு மட்டுமா இல்ல என்னையும் சேர்த்தா? என்னையும் சேர்த்துன்னா பெரியவா எல்லாம் உங்கள அடிக்க போறா..
//

உங்களையும் சேர்த்துதான் கார்க்கி சொல்லறேன். எந்த டாபிக் இருந்தாலும் போணியாகற மாதிரி எழுதறீங்கதானே அப்புறம் என்ன?

அவாளுக்கும் உம்ம பத்தி தெரியும். அதனால எந்த பெரியவாளும் என்னை அடிக்க போறதில்லை.இத்தனை தன்னடக்கமா அம்பின்னு உம்மைதான் தோச்சு காய போட போறா :)

கார்க்கி on February 6, 2009 at 12:51 PM said...

அதே தான் பிரகாஷ். 50க்கு நன்றி :)))

*****************
@வெட்டிப்பயல்,

சரியா சொன்னீங்க தல. உங்க தொடர்கதை நல்லப்டியா வளர வாழ்த்துகள். வேலண் மட்டுமில்ல பல பேர விட்டூட்டேன் :))

************

//உங்களையும் சேர்த்துதான் கார்க்கி சொல்லறேன். எந்த டாபிக் இருந்தாலும் போணியாகற மாதிரி எழுதறீங்கதானே அப்புறம் என்ன//

நோட் பண்ணுங்கப்பா

செல்வேந்திரன் on February 6, 2009 at 11:56 PM said...

கலைக்கண் என்பார்களே!!! இவருக்கு இருப்பதோ வலைக்கண் // அட நல்லாருக்கே...
ஜெமோக்கு அடுத்தபடியா தமிழ்நாட்டில அதிகமா எழுதுறவரு நம்ம பரிசல்தான் போலருக்கு

ASSOCIATE on February 8, 2009 at 10:35 AM said...

////இப்போது எல்லாம் நண்பர்கள் வேலை எப்படி இருக்கிறது என்று கேட்பதில்லை. வேலையில் இருக்கிறாயா என்றுதான் கேட்கிறார்கள்./////

? ? ? !

 

all rights reserved to www.karkibava.com