Feb 3, 2009

ஈழம். முடிவேயில்லையா?


  இலங்கையில் நடக்கும் கொடுமையைப் பற்றி எழுதி எழுதி என்னவாக போகிறது? தெரியவில்லை. அனானி நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். தேவையென்றால் ஈழத்தைப் பற்றி எழுதிவீங்க? அடுத்த நாளே மொக்கை போடுவீங்களா? உண்மைதான். எல்லோரும் யுத்தக் களத்தில் சென்று போராட வேண்டுமென்பதில்லை. அவரவர் இயங்கும் தளத்தில் இந்தப் பிரச்சினை குறித்து விழிப்புணர்வு ஏறப்டுத்துவதும் ஆக்கப்பூர்வமான செயல்தான். அதைத்தான் செய்ய விழைகிறோம்.

  இன்று புலிகளைத் தவிர ஈழ மக்களுக்காக போராட எவரும் தயாரில்லை. எனக்கும் அவர்கள் செயலில் முழு ஆதரவில்லை. ஆனால் களத்தில் நின்று பல இழப்புகளை சந்தித்த புலிகளும், சிங்கள ராணுவத்தின் பல வெறிச்செயலுக்கு உள்ளான அப்பாவி மக்களும் அது சரிதான் என்று நினைப்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. புலிகளுடன் போரிட்டு வெல்ல முடியாது என்று உணர்ந்த இலங்கை அரசாங்கம் அதற்கு பதிலாய் லட்சகணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிப்பதென்று முடிவு செய்ததலிருந்தே அவர்களின் பலத்தை உணரலாம்.

  இன்று நாம் குரல் கொடுக்க வேண்டியது புலிகளுக்கு ஆதரவு என்ற ஒற்றை சொல்லல்ல. அநியாயமாக ஆயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிப்பத்தை எதிர்த்துதான். கொல்லப்படுவது தமிழர்கள் என்பது மட்டும்மல்ல அதற்கு காரணம். எப்படி சாதி, மத அடிப்படையில் ஒரு மனிதனை அடையாளம் காண்பதில் எனக்கு உடன்பாடில்லையோ அதுப் போல்தான் இனமும். அவர்கள் மனிதன் என்ற ஒன்றே போதுமானது அந்த அக்கிரம செயலை எதிர்த்து குரல் கொடுக்க.

  புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்ற மொக்கை வாத்ததை எடுத்துக் கொண்டாலும், ஐ.நாவும் கலக நாட்டாமைகளும், மன்னிக்க, உலக நாட்டாமைகளும் தலையிட்டுருக்க வேண்டும். சரி, அவர்களை நிர்பந்திக்க முடியாது. ஆனால் நான் வாழும் நாட்டில், என் வரிப் பணத்திலிருந்தே இந்த கொலைகளுக்கு ஆயுதங்கள் வாங்கும் பொழுது அதை எதிர்த்து குரலொடுக்க என் உரிமை இருக்கிறதல்லவா?

   குரல் கொடுப்பதால் என்னவாகிவிட போகிறது? பல வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்களும் புரட்சியால் தான் நடந்திருக்கிறது. புரட்சியின் முதல் தீப்பொறி நாலு பேரின் முயற்சியால் தான் தோண்றிருக்கிறது. அதற்கான ஒரு முயற்சியை நான் செயலபடும் தளத்தில் உருவாக்க முனைவது தவறில்லையே? சிந்தித்துப் பாருங்கள். இந்தியா நினைத்தால் அந்த படுகொலைகளில் பாதியாவது தடுத்திருக்க முடியாதா? அதனால்தான் சொல்கிறோம். இந்திய அரசே இலங்கையில் அமைதி திரும்ப தலையிடு.

  நம் நாட்டுக்கே செய்ய வேண்டியவை பல இருக்கும்போது ஏன் இலங்கைப் பற்றிக் கவலைக் கொள்ள வேண்டும் என்றார் பதிவுலக நண்பர் ஒருவர். சரிதான் நண்பரே. அதேக் கேள்வியை மீண்டும் கேளுங்கள். முடிவில் ஏன் தளவாடங்களை இலங்கைக்கு கொடுத்தார்கள் என்பதை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

   இங்கிருக்கும் அரசியல்வாதிகள் பற்றிதான் தெரியுமே. அறப்போராட்டம் நடத்துகிறாராம் திராவிடத் தலைவர்.அவர் என்ன செய்வார். எல்லோருக்கும்தான் பட்டம் கொடுத்துவிட்டாரே. வேறு வேலையென்ன? சாகும்(?) வரை உண்ணாவிரதம் இருந்து ஈழத்தில் எரிந்த தீயை தமிழகத்திலும் பற்ற வைத்தார் சிறுத்தை. கட்சியினர் நலனுக்காக பழச்சாறு கொடுத்து உதவினார் மாம்பழம், ஈழப் பிரச்சினைக்காக பிறந்த நாளே கொண்டாடாத கேப்டனை காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில்தான் காண முடியும் என்ற நிலை. அவ்வபோது புதுப்பிக்கப்ப்டும் புலிகள் மீதான தடையை நீட்டித்த அரசில் பங்கேற்று அமைதி காத்த வைகோ, இன்று திமுகவை குற்றம் சாட்டுவதே ஈழ மக்களுக்கு செய்யும் பெரிய உதவியாக நினைக்கிறார். உலகத் தமிழர்களின் நம்பிக்கையும் ஏழாவது முறையாக கடைசிகட்ட போராட்டத்தை நட்த்தவிருக்கிறார். அவரா? இதில் அவரின் பெயரை சேர்க்க கூட முடியுமா?

  நாளை பிறக்கும் த்மிழீழம் என்று நம்பிக்கை வளர்த்து இன்றைய சந்ததியினரை தொலைப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? கொஞ்சம் விட்டுக் கொடுத்தாவது இனியொரு உயிர் அழியாமல் வாழ வழியில்லையா? எல்லோரையும் பலி கொடுத்துவிட்டு யாருக்காக தனி நாடு காண வேண்டும்? சத்தியமாக எங்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான உதவிகள் கிடைக்குமென்று நம்ப வேண்டாம் ஈழ மக்களே. வெறும் போராட்டங்கள் உங்களுக்கு என்ன செய்து விடும்? 

  வெளிவரும் தகவல்கள் முழுவது உண்மையில்லை என்பதை அறிவோம். இருந்தும் உண்மையில் நிலைமை மிக மோசம் என்பது மட்டும் புரிகிறது. போரோ, சமாதானமோ எதுவும் இல்லாமல் அப்பாவி மக்கள் சாவது தொடர்ந்தால் புலிகள் மேல் கோபமும் நம்பிக்கையின்மையும் வளர வாய்ப்புண்டு. இப்போதைய உடனடி தேவை உயிர்கள் போகாமல் இருப்பது. என்ன செய்யனும் அதுக்கு? அதை செய்யுங்களேன்

32 கருத்துக்குத்து:

Anonymous said...

//
இந்திய அரசே தலையிடு.
//

Karki,

India arasai pothuwaaga thalaiyidu ena sollaatheergal...emakku vidivu pirakka wendum ena ninaithu thalaiyida kelungal...

pathivukku nandri

அருண் on February 3, 2009 at 11:26 AM said...

ஈழம் ஒரு நிரந்தர துயரமாக மாறக்கூடாது. இந்திய அரசு ஏதாவது செய்ய வேண்டும்.

தாரணி பிரியா on February 3, 2009 at 11:27 AM said...

எல்லார் மனசிலும் இருந்த கேள்விகளையும் வாதங்களையும் உணர்ச்சியையும் அப்படியே கொட்டி இருக்கிங்க கார்க்கி.

காலையில செய்திகள்ல பார்த்துட்டு சங்கடப்பட மட்டும்தான் முடிஞ்சது. என்ன செய்ய போறோம் என்ன செய்யணும் தெரியலை.

கார்க்கி on February 3, 2009 at 11:40 AM said...

ராஜன் அவர்களது பின்னூட்டம்

இராஜன் said...
/* இந்திய அரசே தலையிடு. */
இந்திய அரசு தலையிடுவதால்தான் இத்தனை பிரச்சனையும் அய்யா. தாலாட்டுவது போல் தாலாட்டிவிட்டு பிள்ளையையும் கில்லி விடுகிறார்கள். உண்மையில் இந்த போரை இந்தியாதான் நடத்துகிறது. இராஜபாக்ஸே ஒரு கேன பயல் இத்தனை வருடம் போர் செய்து அவன் அரசாங்கம் என்ன கிழித்தது? இந்தியாவின் காண்டுக்காக அவன் நாட்டின் பொருளாதாரத்தை அல்லவா வீனடிக்கிறான். ஈழ மக்களுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு நாட்டிற்க்காக பாடுபட்டிருந்தால் இன்று இரண்டு சிங்காபூர் அல்லவா இலங்கையில் தோன்றியிருக்கும். மூலையில்லதவன் என்ன நினைக்கிறான் என்று தெரியவில்லை. புலிகளை ஒழித்துவிட்டால் போரட்டம் ஒய்ந்துவிடும் என்று நினைக்கிறானா? இந்தியா கஷ்மீரை இத்தனை காலமாக கட்டி காத்து என்ன் புடுங்குகிறது என்று பார்கவேண்டாமா? புலி வாலை அல்லவா புடித்த கதையாகிவிட்டது. இராஜபாக்ஸேக்கு இலங்கையிலும் ஒரு கஷ்மீர் வேண்டும் போலிருக்கிறது

prakash on February 3, 2009 at 11:55 AM said...

//சத்தியமாக எங்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான உதவிகள் கிடைக்குமென்று நம்ப வேண்டாம் ஈழ மக்களே. வெறும் போராட்டங்கள் உங்களுக்கு என்ன செய்து விடும்? //

நிச்சயமான உண்மை இது....
நம்மால் புலம்ப மட்டுமே முடியும்....
தமிழக அரசியல்வாதிகள் டெல்லியின் அதிகாரமையத்தில் இருந்தாலும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்...
ஜெயலலிதா செய்யவே மாட்டேன் என்பார்
மற்றவர்கள் செய்ய ஆசை ஆனால் அதற்கு விலை என்னுடைய அமைச்சர்கள் என்றால் அது முடியாது என்பார்கள்
காலம் தான் தீர்ப்பெழுத வேண்டும் :(((

WebAdmin on February 3, 2009 at 12:28 PM said...
This comment has been removed by the author.
வித்யா on February 3, 2009 at 12:29 PM said...

கார்க்கி நடுவண் அரசு தெளிவாக இருக்கிறது. ஒருபோதும் தலையிடப் போவதில்லையென்று. தமிழகத்தில் நடப்பதெல்லாம் ஓட்டுக்களை குறிவைத்து நடக்கும் நாடகம் மட்டுமே. நிரந்தரப் போர் நி்றுத்தத்தை இலங்கை அரசு ஒரு போதும் மேற்கொள்ளாது புலிகள்/மக்களை அழிக்கும் வரை. புலிகள் மக்களை அனுப்பிவைப்பது கொஞ்சமாவது உயிர் பலியைக் குறைக்குமென்பதென் எண்ணம்.

WebAdmin on February 3, 2009 at 12:29 PM said...

/*நம்மால் புலம்ப மட்டுமே முடியும்....*/
மன்னிக்கவும், நம்மிடம் ஒரு ஒட்டு உள்ளது, மற்றும் இரண்டு செருப்பு உள்ளது...
ஒட்டு = நல்லவர்களுக்கு போடவும்
செருப்பு = இவர்களுக்கு

narsim on February 3, 2009 at 12:50 PM said...

ஆழ்ந்த சிந்தனை,அழுத்தமான பதிவு.

கார்க்கி on February 3, 2009 at 1:09 PM said...

//India arasai pothuwaaga thalaiyidu ena sollaatheergal...emakku vidivu pirakka wendum ena ninaithu thalaiyida kelungal...

pathivukku nandri//

அதைத்தானே சொல்கிறோம் தூயா

*****************
/அருண் said...
ஈழம் ஒரு நிரந்தர துயரமாக மாறக்கூடாது. இந்திய அரசு ஏதாவது செய்ய வேண்டும்//

ஆமாம் சகா..

*************
/தாரணி பிரியா said...
எல்லார் மனசிலும் இருந்த கேள்விகளையும் வாதங்களையும் உணர்ச்சியையும் அப்படியே கொட்டி இருக்கிங்க கார்க்கி//

வேறு என்ன செய்ய முடிகிரது நம்மால்???

கார்க்கி on February 3, 2009 at 1:12 PM said...

நன்றி ராஜன்

************
/ prakash said...
//சத்தியமாக எங்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான உதவிகள் கிடைக்குமென்று நம்ப வேண்டாம் ஈழ மக்களே. வெறும் போராட்டங்கள் உங்களுக்கு என்ன செய்து விடும்? //

நிச்சயமான உண்மை இது....
நம்மால் புலம்ப மட்டுமே முடியும்....
தமிழக அரசியல்வாதிகள் டெல்லியின் அதிகாரமையத்தில் இருந்தாலும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்..//

ஆமாண்ணா..

*************

/ புலிகள் மக்களை அனுப்பிவைப்பது கொஞ்சமாவது உயிர் பலியைக் குறைக்குமென்பதென் எண்ண//

எங்கே அனுப்பனும் வித்யா? இங்கேயும்தான் அவர்களுக்கு உரிய விஷயங்கள் கிடைப்பதில்லையே

***************
/ WebAdmin said...
/*நம்மால் புலம்ப மட்டுமே முடியும்....*/
மன்னிக்கவும், நம்மிடம் ஒரு ஒட்டு உள்ளது, மற்றும் இரண்டு செருப்பு உள்ளது...
ஒட்டு = நல்லவர்களுக்கு போடவும்
செருப்பு = இவர்களுக்//

யாருங்க நல்லவங்க? அந்த குழப்பம்தான் ரொம்ப நாளா இருக்கே

*************

// narsim said...
ஆழ்ந்த சிந்தனை,அழுத்தமான பதிவு//

வாங்க தல

prakash on February 3, 2009 at 1:19 PM said...

//ஒட்டு = நல்லவர்களுக்கு போடவும்//

நல்லவர்களுக்கு போடவேண்டும் என்றால் என் ஒட்டு என்னிடமே பத்திரமாக இருக்கும்

//செருப்பு = இவர்களுக்கு//

மன்னிக்கவும் என்னிடம் அவ்வளவு செருப்பு இருப்பில் இல்லை

குசும்பன் on February 3, 2009 at 1:33 PM said...

சத்தியமாக எங்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான உதவிகள் கிடைக்குமென்று நம்ப வேண்டாம் ஈழ மக்களே. வெறும் போராட்டங்கள் உங்களுக்கு என்ன செய்து விடும்? //

இத நம் தலைவர் சொல்லி தொலைச்சுப்புட்ட ஒரு பிரச்சினையுமே இல்லையே!!! எதுக்கு இத்தனை நாடகம் போடனும்.

prakash on February 3, 2009 at 1:35 PM said...

அரசியல்வாதிகளில் யாருமே அக்மார்க் நல்லவர்கள் இல்லை. அது முக்கியமும் இல்லை. இது போன்ற கொடுமையான காலகட்டங்களில் கூட சொந்த நலன் பார்ப்பதுதான் கொடுமை.

இது வரை பணத்தில் கொழித்தது கூட போகட்டும்...

அடுத்த தேர்தலில் எங்கள் கோரிக்கையை புறக்கணித்த காங்கிரசுடன் கூட்டு இல்லை என இப்போதே சொல்ல எந்த கட்சிக்கு தைரியம் இருக்கிறது.

அதையும் சொல்வார்கள் ஆனால் இப்போது இல்லை. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால்.

உண்மை காரணத்தை சொல்லமுடியாது அல்லவா....

பரிசல்காரன் on February 3, 2009 at 1:46 PM said...

தெளிவான பதிவு. எவன் கேட்கறான்!!!

LOSHAN on February 3, 2009 at 2:08 PM said...

நண்பா, பெயரில்லாமல் முகமூடியை வருபவர்களுக்கு நின்று பதில் சொல்லவேண்டிய தேவை இல்லை.. உங்களைப் போல தெளிவான சிந்தனையும்,ஈழத் தமிழர் மேல் உண்மை இரக்கம் கொண்டவர்கள் பற்றி எமக்கு நன்றாகவே தெரியும்..


ஈழத்துப் போர் எப்போது,எவ்வாறு முடியும்? யாருக்கும் தெரியாது.. அதற்காக அதுவரை எல்லோரும் ஈழம் பற்றித் தான் எழுத வேண்டும் எனும் கட்டுப்பாட்டை யாரும் விதிக்க முடியாது.. அப்படி சொல்ல அந்த அனானி யார்?

இன்று ஈழத்தில் தமிழர் படும் பாடு பற்றி தமிழக எழுத்தாளர் எழுப்பும் குரல்களோடு ஒப்பிடும்போது புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் எழுப்பும் குரல்கள் குறைவே.. (இலங்கையில் இருந்து நாம் முணுமுணுக்கக் கூட முடியாது..)

உங்கள் பதிவு பார்த்து மேலும் நெஞ்சு கனத்தது..
நன்றிகள் கார்க்கி..

//குரல் கொடுப்பதால் என்னவாகிவிட போகிறது? பல வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்களும் புரட்சியால் தான் நடந்திருக்கிறது. புரட்சியின் முதல் தீப்பொறி நாலு பேரின் முயற்சியால் தான் தோண்றிருக்கிறது. அதற்கான ஒரு முயற்சியை நான் செயலபடும் தளத்தில் உருவாக்க முனைவது தவறில்லையே? சிந்தித்துப் பாருங்கள்.//

நூறு சதவிகிதம் உண்மை..

//நம் நாட்டுக்கே செய்ய வேண்டியவை பல இருக்கும்போது ஏன் இலங்கைப் பற்றிக் கவலைக் கொள்ள வேண்டும் என்றார் பதிவுலக நண்பர் ஒருவர். சரிதான் நண்பரே. அதேக் கேள்வியை மீண்டும் கேளுங்கள். முடிவில் ஏன் தளவாடங்களை இலங்கைக்கு கொடுத்தார்கள் என்பதை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.//

இதையே தான் நாமும் இந்தியாவிடம் கேட்கிறோம்..

தமிழ் மக்களை இரக்கத்தோடு பார்த்தாவது,அழிந்துபோகும் ஒரு இனமாகக் கருதி மனசாட்சியோடு இந்தியா தலையிட வேண்டும்.
முன்பு போல் ஒப்பந்தம்,அமைதி,உடன்படிக்கை என்ற பம்மாத்துக்கள் வேண்டாம்..

தமிழக அரசியல்வாதிகளில் நம்பிக்கை இப்போது போய்விட்டது..
நம்பி இருப்பது பொறுப்பான உங்கள் போன்ற விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவோரில் மட்டும் தான்..

கார்க்கி on February 3, 2009 at 3:13 PM said...

/குசும்பன் said...

இத நம் தலைவர் சொல்லி தொலைச்சுப்புட்ட ஒரு பிரச்சினையுமே இல்லையே!!! எதுக்கு இத்தனை நாடகம் //

அந்தக் காரணம் தெரியாதா?

*********************

//அடுத்த தேர்தலில் எங்கள் கோரிக்கையை புறக்கணித்த காங்கிரசுடன் கூட்டு இல்லை என இப்போதே சொல்ல எந்த கட்சிக்கு தைரியம் இருக்கிறது.

அதையும் சொல்வார்கள் ஆனால் இப்போது இல்லை. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால்.//

செருப்படி

*****************
/பரிசல்காரன் said...
தெளிவான பதிவு. எவன் கேட்கறான்!!!//

ம்ம்

************

@லோஷன்

கருத்துக்கு நன்றி சகா

Karthik on February 3, 2009 at 4:14 PM said...

:((

அமிர்தவர்ஷினி அம்மா on February 3, 2009 at 4:28 PM said...

என் வரிப் பணத்திலிருந்தே இந்த கொலைகளுக்கு ஆயுதங்கள் வாங்கும் பொழுது அதை எதிர்த்து குரலொடுக்க என் உரிமை இருக்கிறதல்லவா? குரல் கொடுப்பதால் என்னவாகிவிட போகிறது? பல வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்களும் புரட்சியால் தான் நடந்திருக்கிறது. புரட்சியின் முதல் தீப்பொறி நாலு பேரின் முயற்சியால் தான் தோண்றிருக்கிறது. அதற்கான ஒரு முயற்சியை நான் செயலபடும் தளத்தில் உருவாக்க முனைவது தவறில்லையே? சிந்தித்துப் பாருங்கள்.

மிகவும் கூரிய சிந்தனை கார்க்கி.

Bleachingpowder on February 3, 2009 at 4:35 PM said...

//சத்தியமாக எங்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான உதவிகள் கிடைக்குமென்று நம்ப வேண்டாம் ஈழ மக்களே.//

பெண்கள்,குழந்தைகள் எல்லாம் வீடு வாசலை இழந்ததும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல்,எந்த மருத்துவ வசதிகளும் இல்ல்லாமல் தினமும் சாவை எதிர் நோக்கி இருக்கிறார்கள்.ஆனால் இங்கே அதை தடுக்க முடிந்தும் தடுக்காமல், மருத்துவமனையில் ஒளிந்து கொண்டு ஆட்சி நடத்துபவர்களிடம் என்ன சொல்லி புரியவைப்பது.

பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுக்கும் போது மட்டும் தண்டவாளத்தில் தலை வைத்து படுப்பேன் கடலில் போட்டாலும் கட்டு மரமாக மிதப்பேன்னு வீல் சேரில் உட்கார்ந்துட்டு வீர வசனம் பேசுவார்.

இருந்தும் இவர்கள் போடும் அஞ்சு,பத்து பிச்சைகளை பொறுக்கிட்டு அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஜென்மங்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

இராஜன் on February 3, 2009 at 5:10 PM said...

Please sign petition to Obama to stop war...

in www.tamilsforobama.com

Please participate in a poll too

in www.citynews.ca/polls.aspx?pollid=4786

இராஜன் on February 3, 2009 at 5:11 PM said...

Please sign petition to Obama to stop war...

in www.tamilsforobama.com

Please participate in a poll too

in www.citynews.ca/polls.aspx?pollid=4786

வெத்து வேட்டு on February 3, 2009 at 5:12 PM said...

if India should save Tamil, why can't Praba surrender to India and see what happens to Tamils? atleast India can go back to Indo lanka accord..
if we hang on to Ltte's agenda...it is going to continue and now Vanni will be reduced to rubble..ltte can't beat back SLArmy as long as India supports SLArmy

தமிழ்பித்தன் on February 3, 2009 at 6:10 PM said...

இந்தியா நினைத்தால் அந்த படுகொலைகளில் பாதியாவது தடுத்திருக்க முடியாதா/////
நிச்சயமாக அண்ணா இதே இந்தியா அன்றைய வடமராட்சியில் நடத்தப்பட்ட இன அழிப்பை நிறுத்துமாறு கோரி இலங்கை நிறுத்தியது! அத்துடன் நிவாரணங்களை நேரடியாக மக்களுக்கு தானே வழங்கியது. நாம் அதையெல்லாம் மறக்கவில்லை அவற்றை நன்றியுணர்வோடுதான் நோக்கிறோம். பின்னாளில் ஏற்பட்ட பல கசப்புக்கள் எங்களை பிரித்துவிட்டதோ எனத்தோன்றினாலும் அன்றை தமிழக முதல்வர் புரட்சி தலைவர் சிறந்த ஒரு தமிழ் தலைவராக அனைத்துலக தமிழருக்காகவும் பாடுபட்டார் அவர்போல உமக்கு மன்னிக்கவும் எமக்கு ஒரு(தமிழகத்துக்கு) தலைவர் கிடைப்பாரா????

அன்புடன் அருணா on February 3, 2009 at 6:38 PM said...

:((
anbudan aruna

கார்க்கி on February 3, 2009 at 7:44 PM said...

நன்றி கார்த்திக், அ.அம்மா, ப்ளீச்சிங்,
தமிழ்பித்தன், அருணா

*****************

/வெத்து வேட்டு said...
if India should save Tamil, why can't Praba surrender to India and see what happens to Tamils? atleast India can go back to Indo lanka accord..
if we hang on to Ltte's agenda...it is going to continue and now Vanni will be reduced to rubble..ltte can't beat back SLArmy as long as India supports SLArmy//

நல்லாயிருங்கண்ணா

Anonymous said...

தெளிவான கருத்துக்கள் கார்க்கி...

பலர் மனதிலிருந்ததை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்

எனது நாடு தவறு செய்தால் அதை தட்டிகேட்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது

என் நாடு நாளை துரோகிகள் பட்டியலில் இடம்பெறக்கூடாது என்பதற்காகத்தான் இந்தப் போராட்டமே!!!

Sinthu on February 5, 2009 at 4:05 PM said...

பதிவுக்கு நன்றி அண்ணா...
"நம் நாட்டுக்கே செய்ய வேண்டியவை பல இருக்கும்போது ஏன் இலங்கைப் பற்றிக் கவலைக் கொள்ள வேண்டும் என்றார் பதிவுலக நண்பர் ஒருவர். சரிதான் நண்பரே. அதேக் கேள்வியை மீண்டும் கேளுங்கள். முடிவில் ஏன் தளவாடங்களை இலங்கைக்கு கொடுத்தார்கள் என்பதை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்."

இது correct..

தாமிரா on February 5, 2009 at 9:23 PM said...

இதுக்கு ந‌ல்லதா ஒரு பின்னூட்டம் போட்டதா ஒரு நெனப்பு? எங்க போச்சுது.?

கார்க்கி on February 6, 2009 at 9:59 AM said...

/nareshin said...
தெளிவான கருத்துக்கள் கார்க்கி...

பலர் மனதிலிருந்ததை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறீர்க//

நன்றி சகா

************
நன்றி சிந்து

***********

// தாமிரா said...
இதுக்கு ந‌ல்லதா ஒரு பின்னூட்டம் போட்டதா ஒரு நெனப்பு? எங்க போச்சுது//

90 போட்டு போட்டிங்களா? இருங்க பரிசல் பதிவுல தேடிப் பார்க்கிறேன்

கலாட்டா அம்மணி on February 22, 2009 at 9:11 PM said...

\\நான் வாழும் நாட்டில், என் வரிப் பணத்திலிருந்தே இந்த கொலைகளுக்கு ஆயுதங்கள் வாங்கும் பொழுது அதை எதிர்த்து குரலொடுக்க என் உரிமை இருக்கிறதல்லவா? \\

இந்த உரிமை கூட நமக்கு இல்லைனா அப்புறம் இது என்ன ஜனனாயகநாடு..

S.Arockia Romulus on March 5, 2009 at 6:06 PM said...

பாரத நாடு பழம்பெரும் நாடு பண்பு நிறை நாடு

பாக்கிஸ்தானில் பத்துப்பேர் இறந்தாலும் பதறித்துடிப்போம்

இலங்கையிலே பத்தாயிரம் பேர் மடிந்தாலும் பதற்றமின்றி

ஆயுதம் விற்போம்-(பாரத...)

போருக்குப்பின் புனர் வாழ்வழிக்குமாம்-ஆம்

தமிழினம் அழிந்தப்பின் கல்லறைகளுக்கு கூரைப் புனையுமாம்-(பாரத...)

சாகக்கிடக்கின்றான் தண்ணீரூற்று என கேட்கின்றோம்-இல்லை இல்லை

செத்தொழியட்டும் பாலூற்றுகிறோம் என்கின்றது -(பாரத...)

உயிர் காக்க ,துயிலின்றி துப்பாக்கி ஏந்துகின்றார்கள்

அதையும் விட்டு விடு -அடிமை

சாசனம் அமைப்போம் வா என்கின்றது....

புலிக்கு புல் வைக்கப் பார்க்கின்றார்கள்..............

 

all rights reserved to www.karkibava.com