Feb 2, 2009

ராஜாவுக்காக சாகலாம்


  அதிகாலை நாலு மணி. காரணமே இல்லாமல் விழித்திருக்கிறேன். எதனால் விழித்தேன்? நினைவில்லை. தனியாக இருப்பதில் இது ஒரு வசதி. அந்த நேரத்திலும் நினைத்தப் பாடலை கேட்கலாம். சுயநலமாக ஹெட்ஃபோனில் இல்லாமல் ஸ்பீக்கரிலே. ஏதோ ஒன்று என்னை இயக்குவது போல கைகள் தானாக நான் கடவுள் பாடலை தட்டியது

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே.. என் அய்யனே

   அப்ப‌டியே சுவ‌ரில் சாய்ந்து நிற்கிறேன். ர‌யில் கூவினாலும் கூட‌வே கூவும் ப‌ழ‌க்க‌முண்டு என‌க்கு. அதிசய‌மாக‌ அமைதியாக‌ கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு வ‌ரியும் என் நெஞ்சில் ஆணியில் கீறி ப‌ச்சைக் குத்துவ‌து போல‌ இருக்கிற‌து

பிண்ட‌மெனும் எலும்பொடு ச‌‌தை ந‌ர‌ம்பு

உதிரமும் அட‌ங்கிய‌ உட‌ம்பு எனும்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே

  என் ம‌யிர்க‌ள் கூச்செரிய‌த் தொட‌ங்கின‌. இத‌ற்கு முன்ன‌ரே இந்த‌ப் பாட‌லைக் கேட்டிருக்கிறேன். அப்போது ஏற்ப‌டாத‌ அதிர்வுக‌ள் இப்போது ஏற்ப‌ட‌ கார‌ன‌மென்ன‌? எதையும் ஆராயும் நிலையில் நானில்லை. க‌ண்க‌ள் மூட‌ ப‌ய‌மாயிருக்கிற‌து. அது என்னை நான்றியாத‌ ஓருல‌கிற்கு அழைத்து செல்வ‌தால் க‌ண்க‌ள் மூட‌ பய‌மாயிருக்கிற‌து. குளிர் குறைந்திருக்கிற‌து ஹைதையில். ஆனால் இப்போதுதான் நான் உறைந்திருக்கிறேன். இசைக் கருவிகளின் விஸ்வரூபத்தில் மெய்மறந்திருந்தேன். நீண்டதொரு இரவின் விளிம்பில் தெரியும் அதிகாலை சூரியனின் வெளிச்சம்போல ஆக்ரமித்தது மது பாலகிருஷ்ணின் குரல்

அம்மையும் அப்பனும் தந்ததா - இல்லை

ஆதியின் வல்வினை சூழ்ந்ததா

  இருவரி குறளுக்கு கூட இத்தணை அர்த்தம் உண்டா எனத் தெரியவில்லை. பாடல் முடிந்துவிட்டது. நான் இன்னும் தரை இறங்கவில்லை. அந்த இரண்டு வரிகளின் அர்த்தம் தேடிப் பறந்துக் கொண்டிருந்தேன்

  மீண்டும் தொடங்கியப்பாடலை தொற்றிக் கொண்டேன். மேலும் ஒருவரி கேட்க முடியவில்லை. பயமாயிருக்கிறது. கடவுள் என்றால் யார் என்று வீம்பு பேசுபவரையும் கைத்தொழ வைக்கிறார் இளையராஜா

சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட‌

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே

  இந்த சரணத்திற்கு பின் வரும் இசையில் வாழ்கிறார் ராஜா. இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா? அதை இசையாக்க முடியுமா? வார்த்தைகள் கொடுக்காத அர்த்தத்தை இந்த சத்தங்கள் கொடுக்குமா? எளிதில் பதில் கிடைக்கிறது. ஆம். ராஜா ராஜாதான்.

   இரண்டாவது முறைதான் கேட்கிறேன் என்று நினைத்திருந்தேன். நாலறை மணிக்கு ஒரு முறை நேரம் பார்த்தேன். இப்போது மணி ஐந்தேகால். "தேவ மெளனம் சிந்திக் கொண்டிருந்தது" என்று ஒரு முறை எழுதியது நினைவிருக்கிறது. இன்று அனுபவிக்க முடிகிறது அதை.

வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்

அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்

  கர்வங்களை சுவடின்றி அழித்துக் கொண்டிருந்தன ராசாவின் இசையும் வரிகளும்.

பொருளுக்கு அலைந்திடும்

பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே

உன் அருள் அருள் அருளென்று

அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே

அருள் விழியால் நோக்குவாய்

மலர் பத்த்தால் தாங்குவாய்

  பிறவிப் பயன் என்பார்களே!! இந்தப் பாடலை கேட்கும் பொழுது எனக்கு கிடைத்துவிட்டது. இனி மெல்ல சாகலாம். இதை எழுதி இசையமைத்த ராஜாவுக்காக சாகலாம்

44 கருத்துக்குத்து:

Jenbond on February 2, 2009 at 11:27 AM said...

First uuuuuuuuuuuuuuuuuuu

தாரணி பிரியா on February 2, 2009 at 11:38 AM said...

ஆஹா எனக்கு ரொம்பவே பிடிச்ச பாட்டு கார்க்கி. போன வாரம் நான் இதை பத்தி ஒரு பதிவு போட்டேன். எனக்கு வரிக்கு வரி வர்ணிக்க தெரியலை. ஆனா ஒவ்வொரு த‌ட‌வை கேட்கும் போது க‌ண்ணை க‌லங்க‌ வைக்க‌ற‌ பாட்டு.

அதுவும் எந்த‌ ச‌த்தமும் இல்லாத‌ நேர‌த்தில‌ கேட்கும்போது அப்ப‌டியே உட‌ம்பு எல்லாம் அதிரும். ர‌ம‌ண‌ மாலையில‌ ராஜாவே பாடுவார். அதையும் கேட்டு பாருங்க‌.

"ஒருமுறையா இல்லை இருமுறையா

பல முறை பலப்பிறபெடுக்க வைத்தாய்

புது வினையா ? பழ வினையா ?

கனம் கனம் தினம் எனை துடிக்க வைத்தாய்"

இதுதான் என்னோட‌ விருப்ப‌ வ‌ரிக‌ள்

narsim on February 2, 2009 at 11:38 AM said...

இந்த சிட்டை கொண்டுவரும் நபரிடம்...

Jenbond on February 2, 2009 at 11:40 AM said...

\\இந்தப் பாடலை கேட்கும் பொழுது எனக்கு கிடைத்துவிட்டது. இனி மெல்ல சாகலாம். இதை எழுதி இசையமைத்த ராஜாவுக்காக சாகலாம்\\

சகா ஏன் இந்த விபரீத ஆசை. மற்ற பாடல்களை பற்றி குறிப்பாக "வாலியை" பற்றி ஏன் ஒண்ணுமே சொல்லுல.

narsim on February 2, 2009 at 11:41 AM said...

//ர‌யில் கூவினாலும் கூட‌வே கூவும் ப‌ழ‌க்க‌முண்டு என‌க்கு. அதிசய‌மாக‌ அமைதியாக‌ கேட்டுக் கொள்கிறேன்//

கலக்கலான நடை சகா

vinoth gowtham on February 2, 2009 at 11:44 AM said...

பாட்டிற்கு உங்களின் வர்ணனை அருமை அபாரம்.. இன்னும் கேக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. கண்டிப்பாய் கேக்க வேண்டும்.

கார்க்கி on February 2, 2009 at 11:52 AM said...

/சகா ஏன் இந்த விபரீத ஆசை. மற்ற பாடல்களை பற்றி குறிப்பாக "வாலியை" பற்றி ஏன் ஒண்ணுமே சொல்லுல.//

இந்தப் பதிவு இந்தப் பாட்ட பத்தி மட்டும்தான் சகா :))

***************

/ தாரணி பிரியா said...
ஆஹா எனக்கு ரொம்பவே பிடிச்ச பாட்டு கார்க்கி//

எல்லோருக்கும் புடிக்கனும்.. ரமண மாலையும் கேட்டுட்டேன்

************

/ narsim said...
இந்த சிட்டை கொண்டுவரும் நபரிடம்..//

:)))

கார்க்கி on February 2, 2009 at 11:53 AM said...

/narsim said...
//ர‌யில் கூவினாலும் கூட‌வே கூவும் ப‌ழ‌க்க‌முண்டு என‌க்கு. அதிசய‌மாக‌ அமைதியாக‌ கேட்டுக் கொள்கிறேன்//

கலக்கலான நடை ச//

நன்றி தல

***************
// vinoth gowtham said...
பாட்டிற்கு உங்களின் வர்ணனை அருமை அபாரம்.. இன்னும் கேக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. கண்டிப்பாய் கேக்க வேண்டும்//

கண்டிப்பா கேளுங்க.. முடிந்தால் அதிகாலையில், அமைதியாக கேளுங்கள்

Karthik on February 2, 2009 at 11:58 AM said...

ஒரு பாட்டை இவ்வளவு அனுபவிக்கிறீங்களா, அதையும் எழுத முடிகிறதா!

Ammmmazing Karki!

குசும்பன் on February 2, 2009 at 12:00 PM said...

என்னைப் பற்றி..
karki bavananthi
காற்றாய் வருவேன், சில நேரம் தென்றலாய்... சில நேரம் புயலாய்... //

வீனா போன விஜய் படம் அதிகமாக பாக்காதேன்னா கேட்கிறீயாப்பா நீ!

முரளிகண்ணன் on February 2, 2009 at 12:02 PM said...

கரைந்து, எங்களையும் கரைத்து விட்டீர்கள் கார்கி. ராஜாவிடம் எல்லாம் இருக்கிறது. தோண்டியெடுக்கும் இயக்குனர்களுக்கு பஞ்சம் இங்கே.

Anonymous said...

ஏதாவது mp3 சுட்டி இருந்தா அதையும் போட்டிருக்கலாமே கார்க்கி, நான் கேட்டதேஇல்லை

கார்க்கி on February 2, 2009 at 12:50 PM said...

/ Karthik said...
ஒரு பாட்டை இவ்வளவு அனுபவிக்கிறீங்களா, அதையும் எழுத முடிகிறதா!

Ammmmazing Karki//

:))))

*******************

/ குசும்பன் said...
என்னைப் பற்றி..
karki bavananthi
காற்றாய் வருவேன், சில நேரம் தென்றலாய்... சில நேரம் புயலாய்... //

வீனா போன விஜய் படம் அதிகமாக பாக்காதேன்னா கேட்கிறீயாப்பா //

வீ’ணா’ போன படத்துக்குத்தான் போனேன் தல

****************
// முரளிகண்ணன் said...
கரைந்து, எங்களையும் கரைத்து விட்டீர்கள் கார்கி. ராஜாவிடம் எல்லாம் இருக்கிறது. தோண்டியெடுக்கும் இயக்குனர்களுக்கு பஞ்சம் இங்கே//

நன்றி முரளி. புதிய இய்க்குனர்கள் ராஜாவோடு கூட்டணி அமைக்க தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. வயதுதான் காரணமா?

****************
/ சின்ன அம்மிணி said...
ஏதாவது mp3 சுட்டி இருந்தா அதையும் போட்டிருக்கலாமே கார்க்கி, நான் கேட்டதேஇல்//

அது iillegal என்பதால் கொடுக்கவில்லை. கூகிளில் போட்டால் வரகிறது அம்மிணி

Anonymous said...

கொன்னுட்டீங்க கார்க்கி.

prakash on February 2, 2009 at 2:52 PM said...

//வீ’ணா’ போன படத்துக்குத்தான் போனேன் தல//

வீணா யாரு தம்பி?

PoornimaSaran on February 2, 2009 at 2:55 PM said...

என் கணவர் விரும்பி விரும்பி கேட்கும் பாடல்.. என்னையும் கேட்க சொல்லி பல முறை சொன்னார்.. ஆனால் நான் தான் இன்று வரை ஒருமுறை கூட முழுதாய் கேட்டதில்லை!!

கார்க்கி on February 2, 2009 at 3:33 PM said...

/ வடகரை வேலன் said...
கொன்னுட்டீங்க கார்க்//

பூரிக்கு கிழங்கு , வோட்காவுக்கு லைம் மாதிரி ராசா பாட்டை பரிசலோடு கேட்கனும். இல்லண்ணா?

*******************
/ prakash said...
//வீ’ணா’ போன படத்துக்குத்தான் போனேன் தல//

வீணா யாரு தம்பி//

வீணா அவங்க அக்காவுக்கு தங்கச்சி. தம்பியில்ல.

****************
/ PoornimaSaran said...
என் கணவர் விரும்பி விரும்பி கேட்கும் பாடல்.. என்னையும் கேட்க சொல்லி பல முறை சொன்னார்.. ஆனால் நான் தான் இன்று வரை ஒருமுறை கூட முழுதாய் கேட்டதில்லை!//

கேளு தாயி முதல்ல.. அப்புறமா அரசி பார்க்கலாம்.

prakash on February 2, 2009 at 3:43 PM said...

//வீணா அவங்க அக்காவுக்கு தங்கச்சி. தம்பியில்ல.//

என்னது?
வீணா அவங்க அக்காவுக்கு தங்கச்சின்னா?
வீணாவோட அக்காவுக்கு நீ என்ன முறை?

PoornimaSaran on February 2, 2009 at 4:21 PM said...

//கேளு தாயி முதல்ல.. அப்புறமா அரசி பார்க்கலாம்.
//

அய்யே நான் அதெல்லாம் பார்ப்பதில்லை:)

அனுஜன்யா on February 2, 2009 at 4:42 PM said...

யாராவது ராஜாவைப் பற்றி சிலாகித்துக்கொண்டால் மெல்லிய புன்னகையுடன் நகர்வேன். என் இசை அறிவைப் பற்றியும், ராஜா என்ற ஜீனியஸ் பற்றியும் வேறு யாரும் என்னைவிட அறிய முடியாது என்ற மமதை என்றும் கொள்ளலாம். ஏனோ, உன் பதிவைப் பார்த்ததும் 'சபாஷ்டா' என்று சொல்லத் தோன்றுகிறது. தம்பி நம்மள மிஞ்சினால் சந்தோசம்தான் என்று அறிந்துகொண்டேன்.

அனுஜன்யா

கார்க்கி on February 2, 2009 at 4:44 PM said...

/என்னது?
வீணா அவங்க அக்காவுக்கு தங்கச்சின்னா?
வீணாவோட அக்காவுக்கு நீ என்ன மு//

அதெல்லாம் எனக்கு தெரியாதுண்ணா.. ஆனா என்னை பார்க்கும் போதெல்லாம் முறைப்பாங்க

************
/ PoornimaSaran said...
//கேளு தாயி முதல்ல.. அப்புறமா அரசி பார்க்கலாம்.
//

அய்யே நான் அதெல்லாம் பார்ப்பதில்லை

அப்புறம்? வேற எந்த சீரியல் பார்ப்ப? இல்ல சன் மீயூஸீக்கா?

கார்க்கி on February 2, 2009 at 4:52 PM said...

அனுஜன்யா said...
யாராவது ராஜாவைப் பற்றி சிலாகித்துக்கொண்டால் மெல்லிய புன்னகையுடன் நகர்வேன். என் இசை அறிவைப் பற்றியும், ராஜா என்ற ஜீனியஸ் பற்றியும் வேறு யாரும் என்னைவிட அறிய முடியாது என்ற மமதை என்றும் கொள்ளலாம். ஏனோ, உன் பதிவைப் பார்த்ததும் 'சபாஷ்டா' என்று சொல்லத் தோன்றுகிறது. தம்பி நம்மள மிஞ்சினால் சந்தோசம்தான் என்று அறிந்துகொண்டேன்.//

சபாஷ்டா..
தம்பி..

சந்தோஷத்தில் துள்ள வச்சிட்டிங்க.. நன்றி தல

வித்யா on February 2, 2009 at 6:07 PM said...
This comment has been removed by the author.
வித்யா on February 2, 2009 at 6:07 PM said...

நான் இனிமேல் தான் கேக்கனும். ஆனா நேத்து என் அண்ணா சொன்னார் "நான் கடவுள் பாட்டுக்கு முன் Slumdog is nothing. Rahman is blessed by the media. Raja is cursed by the media"

ச்சின்னப் பையன் on February 2, 2009 at 6:11 PM said...

கொன்னுட்டீங்க கார்க்கி

கார்க்கி on February 2, 2009 at 6:54 PM said...

//வித்யா said...
நான் இனிமேல் தான் கேக்கனும். ஆனா நேத்து என் அண்ணா சொன்னார் "நான் கடவுள் பாட்டுக்கு முன் Slumdog is nothing. Rahman is blessed by the media. Raja is cursed by the media//

இரண்டும் வெவ்வெறு வகை இசை. அந்த ஒப்பீடே தவறானது. பலரின் கருத்துப்படி இசை ஏ.ஆர்.ஆரின் முந்தைய ப்டங்களை விட slumdog சிறந்தது இல்லை என்பதே. அது ஒரு ஹாலிவுட் படமென்பதால் மட்டுமே இந்த பரபரப்பு..

ராஜா ராஜாதான் என்பது ரகுமானே ஒப்புக் கொண்ட உண்மை. ரகுமான் ஒரு கடின உழைப்பாளி. ராஜா ஒரு பிறவி மேதை

*****************
/ ச்சின்னப் பையன் said...
கொன்னுட்டீங்க கார்க்//

ண்ணா இது உங்க கமெண்ட்டா இல்ல வேலனண்ணாச்சிக்கு ஏதாவ்து உள்குத்தா?

வித்யா on February 2, 2009 at 7:26 PM said...

\\ ஏ.ஆர்.ஆரின் முந்தைய ப்டங்களை விட slumdog சிறந்தது \\

நேத்து படம் பாக்கும்போது நானும் இதேதான் நினைத்தேன். படமும் சிலாகிக்கிற அளவுக்கு இல்லை. மீடியா hype???!!

அன்புடன் அருணா on February 2, 2009 at 8:50 PM said...

ஐயே...இன்னும் எவ்வ்ளோ பாட்டுக் கேட்டு தேவ மௌனத்தை ரசிக்க வேண்டியதிருக்கிறது?அதற்குள் சாவைப் பற்றி ஏங்க??? நல்லா ரசிச்சுருக்கீங்க....
அன்புடன் அருணா

Thusha on February 2, 2009 at 9:52 PM said...

பதிவு நல்ல இருக்கு அண்ணா ஆனால் நான் இன்னும் பாட்டு கேக்கவில்லை இனி தன் download பண்ணவேண்டும்

வால்பையன் on February 2, 2009 at 10:55 PM said...

தலைப்பை
”ராஜாயின் இசையை கேட்பதற்க்காகவே வாழலாம்” என்று மாற்றுங்கள்

தமிழ்ப்பறவை on February 2, 2009 at 11:19 PM said...

அருமையாச் சொல்லிருக்கீங்க கார்க்கி...
//கடவுள் என்றால் யார் என்று வீம்பு பேசுபவரையும் கைத்தொழ வைக்கிறார் இளையராஜா//
எனக்குப் பொருந்துது.’தேவ மௌனத்தை’ அனுபவிக்க முடிகிறது.
இதைத் தவிர வார்த்தை இல்லை சொல்ல, வேறு யாரிருக்கிறார் ராஜாவை வெல்ல....
போகிறபோக்கில அப்படியே ‘நந்தலாலா’ பாட்டுக்களையும் கேட்டுச் சொல்லுங்க..பாடல்களைக் கேட்கும்போதே ஒரு பயண அனுபவம் கிடைக்கிறது.

தமிழ்ப்பறவை on February 2, 2009 at 11:20 PM said...

mail follow up oly..not to publish

கோபிநாத் on February 3, 2009 at 1:45 AM said...

சகா...அணு அணுவாக அனுபவித்ததை வார்த்தையில கொண்டு வந்துட்ட ஆனா அது என்னால முடியல. கலக்கிட்ட சகா ;)

நேரம் கிடைக்கும் போது இதை பாரு

Ilayarajaa Tiruvannamalai Concert -PitchaiPaathirm

http://www.youtube.com/watch?v=8Ps_3lsHavc

\\இனி மெல்ல சாகலாம். இதை எழுதி இசையமைத்த ராஜாவுக்காக சாகலாம்
\\

ராசா வாழவச்சி தான் பழக்கம் வேண்டாம்ய்யா சாக எல்லாம் வேண்டாம்..;))

கோபிநாத் on February 3, 2009 at 1:46 AM said...

நான் இன்னொரு பாடலை சொல்லிக்கிறேன் அதை கேளு

நந்தலாலா படத்தில் தாலாட்டு கேட்க நானும் அப்படி ஒரு பாட்டு ராசா தான் குரல் கேட்டு பாரு இப்போ சாகலாமுன்னு சொன்னே இல்ல அதை கேளு செத்தேப்போயிடுவிங்க ;)

மணிகண்டன் on February 3, 2009 at 3:08 AM said...

இந்த பாட்ட ராஜா எப்படி வேற ஒருத்தரவிட்டு பாடவிட்டாருன்னு தெரியல. அவர் தான் பாடி இருக்கனும்.

Most of the songs in this movie and the music too has a nostalgic feeling which to me means that i have heard them before ! (om siva om was really fantastic composition)

இளையராஜா fans clubla வந்து இந்த மாதிரி சொல்லிட்டு திட்டு வாங்காம போக முடியாது. மீ த ஜுட்டு.

கார்க்கி on February 3, 2009 at 10:50 AM said...

/அன்புடன் அருணா said...
ஐயே...இன்னும் எவ்வ்ளோ பாட்டுக் கேட்டு தேவ மௌனத்தை ரசிக்க வேண்டியதிருக்கிறது?அதற்குள் சாவைப் பற்றி ஏங்க??? நல்லா ரசிச்சுருக்கீங்க.//

அப்படி ஒரு ஃபீல்ங்க.. நன்றி

**************
// Thusha said...
பதிவு நல்ல இருக்கு அண்ணா ஆனால் நான் இன்னும் பாட்டு கேக்கவில்லை இனி தன் download பண்ணவேண்டு//

அப்படியே நந்தலாலாவும், குங்கும பூவும் கொஞ்சுப் புறாவும் கேளு

*************

/ வால்பையன் said...
தலைப்பை
”ராஜாயின் இசையை கேட்பதற்க்காகவே வாழலாம்” என்று மாற்றுங்க//

:)))

கார்க்கி on February 3, 2009 at 10:53 AM said...

// தமிழ்ப்பறவை said...
அருமையாச் சொல்லிருக்கீங்க கார்க்கி.//

நன்றி சகா

//போகிறபோக்கில அப்படியே ‘நந்தலாலா’ பாட்டுக்களையும் கேட்டுச் சொல்லுங்க//

கேட்காம இருப்போமா?அந்த குறத்திப் பாட்டு...

********************
/கோபிநாத் said...
சகா...அணு அணுவாக அனுபவித்ததை வார்த்தையில கொண்டு வந்துட்ட ஆனா அது என்னால முடியல. கலக்கிட்ட சகா //

நன்றி சகா

********************

/ மணிகண்டன் said...
இந்த பாட்ட ராஜா எப்படி வேற ஒருத்தரவிட்டு பாடவிட்டாருன்னு தெரியல. அவர் தான் பாடி இருக்கனு//

உண்மைதான்.. ஆனாலும் மது சுப்பர்ப்

பரிசல்காரன் on February 3, 2009 at 1:45 PM said...

@ கார்க்கி

முதல் சரணம் நீங்கள் எழுதியது தப்பு. கடைசியில் ‘ல்’ வரும்.

‘ல்’ வராவிட்டால் அதன் அர்த்தமே வேறு. இதைத்தான் நான் அவியலில் எழுதியிருந்தேன்.

@ மணிகண்டன்

ஏற்கனவே இந்தப் பாடலை ராஜாவின் ரமணமாலையில் ராஜாவே பாடிவிட்டதால், மதுவிற்கு வாய்ப்பைக் குடுத்திருக்கிறார். அவரும் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறார்.

கார்க்கி on February 3, 2009 at 3:14 PM said...

// பரிசல்காரன் said...
@ கார்க்கி

முதல் சரணம் நீங்கள் எழுதியது தப்பு. கடைசியில் ‘ல்’ வரும்.

‘ல்’ வராவிட்டால் அதன் அர்த்தமே வேறு. இதைத்தான் நான் அவியலில் எழுதியிருந்தேன்//

தெரியும் சகா. ஆனா ம்து அப்படித்தானே பாடுகிறார். என்ன செய்ய?

kishore on February 4, 2009 at 7:11 AM said...

ராஜா ஒரு சகாப்தம்... இசை ஒரு சத்தம் என்று மட்டுமே கேட்டு தலையாட்டதெரிந்த என் போன்றவர்களுக்கு... உங்கள் விமர்சனம் ஒரு குட்டு.. ரயில்உடன் கூவும் பழக்கம்... அது உங்களுக்கு இசை மீது உள்ள காதல்..
ஒருவன் இசையை கேக்கலாம்... ரசிக்கலாம்... ஆனால் ஒருவன் இசையை உணர்ந்தால் மட்டுமே இது போன்று விமர்சிக்க முடியும்.. கலக்கிட்ட மச்சான் ...

kishore on February 4, 2009 at 7:13 AM said...
This comment has been removed by the author.
kishore on February 4, 2009 at 7:45 AM said...

எனது முதல் பதிப்பின் தொடர்ச்சி வெளிஇட்டுள்ளேன்.. முடிந்தால் படித்து உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள் ...
நட்புடன்
கிஷோர்

கார்க்கி on February 4, 2009 at 9:31 AM said...

ரொம்ப நன்றி கிஷோர் :)))

dharshini on February 4, 2009 at 11:23 PM said...

super song.

 

all rights reserved to www.karkibava.com