Feb 28, 2009

நீங்க கடவுளா இல்லை நான் கடவுளா?

46 கருத்துக்குத்து

அதேதான். இத புதுசா படிக்கறவங்களுக்காக‌

அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும்.

*****************************************

இல்லை , நான் எழுதப் போவது திரைப்பட விமர்சனம் அல்ல.கடவுள் நம்பிக்கை ,ஜோதிடம் ,மதம் சார்ந்த நம்பிக்கைகள் பற்றி ஆளாளுக்கு பதிவுகளை போட்டு பயங்கரமாய் விவாதம் செய்கிறபோது நான் மட்டும் தேமேயென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் கருத்து கந்தசாமி ஆகி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். என்ன நான் கொஞ்சம் லேட். கடவுள் ,மதம் என்பது எல்லாம் தனி நபர் நம்பிக்கை என்றெல்லாம் ஜல்லியடிக்கப் போவதில்லை.இது ஒரு குழப்பமான விஷயம்.இருக்குப்பா என்று சொன்னால்சில பேர் படித்து விட்டு போவார்கள், இல்லை என்று சொன்னால் போதும் நிறைய பேர் படிப்பதோடு மட்டுமல்லாமல் கமென்ட் பண்ணுவார்கள் என்று நினைத்து இந்த பதிவை போடவில்லை (நம்ம்புங்க சார்).

கடவுள் நம்பிக்கை என்பதை அடிப்படையாக வைத்து மக்களை மூன்று விதமாகப் பிரித்திருக்கிர்றார்கள், ஆஸ்திகர்கள், நாஸ்திகர்கள், ஆஸ்திகநாஸ்திகர்கள் (அதாவது ரெண்டுங்கெட்டான்). விபரம் தெரியாத வரை எல்லோரும் ஆஸ்திகர்களே,கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் சில பேர் நாஸ்திக கரை ஒதுங்குவார்கள் தைரியமாக, பலர் ஆஸ்திகர்கள், என்னைப் போன்று நட்டாத்தில் நின்று கொண்டு எந்த பக்கம் ஒதுங்குவது என்று பேந்தப் பேந்த முழிப்பவர்களுக்கு இந்த பதிவு.ஓவர் பில்ட் அப் வேண்டாம் விஷயத்திற்கு வருகிறேன்.

கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை எதனால் ஏற்பட்டிருக்கக் கூடும், அல்லது யாரால் ஏற்படுத்தப் பட்டிருக்கக் கூடும்.தனி ஒரு மனிதன் ஒரே நாளில் இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்க முடியாது.இயற்கையிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் ,தன்னை விட சக்தி வாய்ந்ததான ஒன்றைப் பணிந்து வணங்கும் பழக்கத்தின் அடிப்படை என்னவாக இருக்க முடியும்?உயிர் பயம்.அல்லது காட்டுமிராண்டிகளாக இருந்த மனிதனை வழிக்கு கொண்டு வர யாராலோ ஏற்படுத்தப்பட்ட ஒரு கற்பனை.நாளடைவில் அதற்குப் பல்வேறு முகங்கள் ஏற்பட்டு விரிவடைந்திருக்க வேண்டும்.சடங்குகளை ஏற்படுத்தி அதை தொடர்வதால் உண்டாகும் நன்மைகளின் பட்டியல் ஏற்பட்டு விட்டது இப்போது.கடவுள் இருக்கிறாரா இல்லையா?என்று யோசிக்கக் கூடத் தயாராக இல்லை பலர்.

என் நண்பர் ஒருவரிடம் சில வருடங்களுக்கு முன் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது அவர் சொன்னது,"உன் தாய் கற்புடையவள் என்பதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளாய்? பிறக்கும் குழந்தைக்கு தகப்பன் நீதான் என்பதை எப்படி நம்புகிறாயோ அப்படித்தான் இதுவும்" என்று கொதித்தார். sensitive விஷயம். எங்கும் நிறை பரப்ரம்மம்,ஆதியும் அந்தமும் இல்லாத,இது என்னவாக இருக்க முடியும்?அறிவியல் ரீதியாக கதிர் வீச்சு இல்லாத பொருள்களே இல்லை என்கிறார்கள் .மரம் ,செடி கொடிகளில் இருந்து மனிதன் வரை.காந்தக் கதிர் வீச்சுக்கள் அல்லது magnetic field , அல்லது ஆரா Body என்று அழைக்கப்படும் . இது மனிதனின் ஆரோக்கியத்துக்கும் துணை புரிகிறது .இது பாதிக்கப் பட்டால் உடல் நோயுறும் என்கிறார்கள். இது வேறொன்றுமில்லை ,நம் உடல் சேகரித்து வைத்திருக்கும் cosmic energy தான்.ஒரு பாட்டரி போல. ஆக வெளியில் இருப்பதுதான் உள்ளேயும் இருக்கிறது ,அல்லது எங்கும் இருக்கிறது.

சரி இதில் கடவுள் எங்கே வருகிறார் ?எங்கேயும் வரவில்லை. இருப்பதெல்லாம் மனிதன் மட்டுமே.இந்த cosmic energy என்பதைக் கொண்டு நிறைய விஷயங்கள் பண்ணலாம்.நோய்களை குணப்படுத்துவது உட்பட. சாமியார்கள் செய்வது இதைத்தான்.ஆனால் இது எல்லாராலும் முடியும்.ஜப்பானியர்கள் இதை reiki என்று பெயரிட்டு இதை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள். மனோ சக்தி பல அற்புதங்களைச் செய்யக்கூடியது. ரெய்கியின் அடிப்படைத் தத்துவம் அதுதான்,cosmic energy யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்,உங்கள் மனம் அதற்கு எந்த அளவு உபயோகப்படும் என்றெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்கள்.ஆரம்ப காலங்களில் இந்த தத்துவத்தை எளிதாக சொல்லப் போய் அது கை கால்கள் முளைத்து வேறு வடிவத்துக்கு வந்து விட்டது.சரி அப்படியென்றால் கோவில்கள் எதற்கு?அவை எனர்ஜியை சேமிக்கும் பெரிய பாட்டரி.கோவிலுக்கு போனால் அது உங்களுக்குள் புகும் என்பதால்தான்.உங்களிடம் இருந்து கோவிலுக்குள்ளும் பரவும்.அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு.எனவேதான் பழைமையான கோவில்களில் ஒரு தனி நிம்மதி relaxation ஐ உணர்கிறீர்கள் .புதிதாக கட்டப்பட்ட கோவில்களில் அது கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு.

சரி நாம் செய்யும் பிரார்த்தனைகள் நிறைவேறுவது எப்படி ? அல்லது நிறைவேறாமல் போவது எப்படி?என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். ஒரு சரியான, மனம் ஒருமுகப்பட்ட , பிரார்த்தனை நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.அது அந்த இடத்தில் பல மடங்காக replicate ஆகிறது .அப்படி பிரார்த்தித்தால் கோவிலில்தான் என்று இல்லை எங்கும் அது நிகழ வாய்ப்பு உண்டு.செயல்படுவது முழுக்க முழுக்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இதைப் பற்றி தனியாக ஒரு பதிவே போடலாம்.ஏனெனில் இந்தப் பதிவைப் படிக்கும் போதே உங்களுக்கு புரிந்திருக்கும் எனக்கு எதையும் சுருக்கமா சொல்லத் தெரியாதுன்னு.

இருப்பினும் சுருக்கமாக சொல்ல முயற்சித்தால், நீங்கள் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருப்பது ஒரு காந்த சக்திப் புலத்தை, அதன் செயல்களை எளிதாகச் சொல்ல முன்னோர்கள் கையாண்ட விதம் வேறொன்றாக மாறி அல்லது மாற்றி புரிந்துகொள்ளப்பட்டு வேரூன்றி கிளை பரப்பி அசைக்க முடியாமல் ஆகிவிட்டது இப்போது.அதற்காக ஏற்படுத்தப்பட்ட சில வழிமுறைகள் மருவி வெறும் சடங்காக மாறி விட்டது.கையில் இருப்பது வெறும் சாவிதான்.எந்தப் பூட்டை திறக்கும் என்கிற விவரத்தையெல்லாம் எப்போதோ தொலைத்தாயிற்று.

இவரின் மற்ற பதிவுகளைப் படிக்க இங்கே க்ளிக்குங்கள்.
*********************************

Feb 27, 2009

ச்சே அவ்ளோதானா கார்க்கி நீ?

76 கருத்துக்குத்து

  இது வரைக்கும் எனக்கு இப்படி ஆனதே இல்லைங்க. புடுங்க நிறைய ஆனி இருந்தாலும் வேலை செய்ய மனசே வரல. அவ்ளோதானானு என் மேலயே எனக்கு வெறுப்பு. சரி அம்மாகிட்ட பேசிட்டா சரியாயிடும்னு ஃபோன் போட்டு பேசினேன். வச்சத்துக்கப்புறமும் இப்படியே தான் இருக்கு. அவ்ளோதானா கார்க்கி நீ?

  சரி ஏதாவது கூகிளில் தேடலாம், மனசு மாறும்னு தேடறேன். கை நமீதானு டைப் பண்ண போச்சு. ச்சே அதான் மூனு கோடி பேர் தேடிட்டாங்களேனு விட்டுட்டேன். வேற பேர் அடிக்க மனசு வரல. அப்படியே கூகிள் ஹோம் பேஜையே பார்த்துட்டு இருந்தப்ப தோனுச்சுங்க. அவ்ளோ பேர் வர்ற இடம், ஒரு விளம்பரம் கூட இல்ல. கவனிச்சு இருக்கிங்களா? நிறையே இடமிருக்கு. வெள்ளையா விட்டு இருக்காங்களே தவிர விளம்பரம் இல்ல. ஏன்? யார் செய்த தாமதம்னு கூகிளுக்கு மெய்ல் அனுப்பலாம்னு முடிவு பண்ணப்ப, என் கஷ்டம் மறுபடியும் ஞாபகம் வந்துடுச்சு. அவ்ளோதானா கார்க்கி நீ?

மறுபடியும் ஒரு மயான அமைதி மனசுக்குள்ள. தம்மடிக்கிற பழக்கம் இல்லாதது எவ்ளோ பெரிய தப்புனு தோனுச்சு. அப்படியே கேஃபேட்டேரியா போனா அங்கயும் யாருமில்ல. கோக் ஒன்னு எடுத்துக்கிட்டு தனியா வெளிய வந்து நின்னேன். யாரோ பைப்ப திறந்து விட்டு மூடாம போயிட்டாங்க. தண்ணி வேஸ்ட்டாவதேனு போய் சொல்லலாம்னு கீழ போனேன். ச்சே. fountain கூட தெரியாதாடா உனக்கு அப்பதான் தோனுச்சு.என்னடா ஆச்சு கார்க்கினு கேள்வி கேட்டப்ப மறுபடியும் சேம் ப்ளட். அவ்ளோதானா கார்க்கி நீ?

இருக்கவே இருக்காங்க பதிவுலக நண்பர்கள். அவர்களிடம் பேசினா மனசு லேசாகுமேனு ஃபோன எடுத்தேன். நம்ம மக்கள் மொத கேள்வியே அதானே கேட்பாங்க? என்ன பதில் சொல்றது? அப்படியே உண்மைய சொன்னாலும் அவங்களும் அதானே சொல்லுவாங்க, இல்லைனாலும் நினைப்பாங்க. அவ்ளோதானா கார்க்கி நீ?

என்னடா பண்ணப் போற? புரியாம தவித்தேன். குழம்பினேன். ஏதோ ஒன்னு மனசுக்குள்ள கிடந்து உறுத்துது. அப்படியே டாய்லெட்டுக்குள்ள போய் உட்கார்ந்தேன், தலைய ரெண்டும் கையால அமுக்கி மனசுக்குள்ள காட்டுக் கத்தல் கத்தினேன். சற்று ஆசுவாசப்படுத்தி கழிவறையில் அமர்ந்து யோசிச்ச கண நேரத்தில் உதயமானது அந்த ஐடியா

 அவ்ளோதானா கார்க்கி நீ? என்ற கேள்வி காணாமல் போனது. அவன் தாண்டா நீ கார்க்கின்னு சொல்லிச்சு மனசு. மக்கள் படிப்பாங்களா? ஏத்துப்பாங்களானு ஒரு நிமிஷம் யோசிச்சேன். நான் என்ன நடிகை..... தலைப்பு வச்சேனா, ஆஸ்கார் ரகுமானுக்கு அனுதாபங்கள்னு பொடி வச்சேனா, யாரையாவது திட்டினேனா இல்லை சாக்கடைல தூக்கிப் போட்டேனா? என் கஷ்டத்த சொல்றேன். உங்க கிட்ட சொல்லக் கூடாதாங்க? எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியலைங்க..

Feb 25, 2009

காக்டெய்ல்

64 கருத்துக்குத்து

  நன்றாக எழுதியும் பிரபலமான பதிவர்களில் இவர் முக்கியமானவர். கார்ப்பரேட் கம்பர் என்று அழைக்கப்படும் இவரின் படைப்பு ஒன்று இன்றைய ஜூ.வி.யில் வந்திருக்கிறது. தொடர்ந்து பதிவர்களை ஊக்கப்படுத்தி வரும் விகடனுக்கு நன்றியும் நம்ம நர்சிம்முக்கு வாழ்த்துகளும்.

*************************************************

எந்தப் பொருளை வாங்கினாலும் MRP விலை என்று ஒன்றிருக்கும். அந்த விலையை விட அதிகமாக விற்க கூடாது என்பது விதி. எல்லாப்  பேருந்து நிலையங்களிலும் இது கடைப்பிடிக்கப் படுவதில்லை. ஒவ்வொரு முறையும் எனக்கும் கடைக்காரருக்கும் வாக்குவாதம் நடக்கும். கடையை ஏலத்தில் அதிக தொகை கொடுத்து வாங்குவதே இதற்கு காரணம். இவர்களாவது பில் கொடுப்பதில்லை. பிஸ்ஸா ரெஸ்ட்ராண்டுகளில் 20 ரூபாய் பாட்டிலுக்கு 30 ரூபாய் பில் போடுவார்கள். கையிலே ஆதாரம் இருந்தாலும் கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போனதில்லை. சமீபத்தில் டெல்லியில் ஒரு புண்ணியவான் போய் 10,000 ரூபாய் நஷ்ட ஈடு வாங்கியிருக்கிறார். இன்னமும் சென்னை தோமினோஸில் கோக் அரை லிட்டர் 27.50 +வரிகள்.

************************************************ 

பீட்டர்சன், ஜயவர்தனே என்று இரண்டு கேப்டன்களுக்கும் ஓய்வு வாங்கித் தந்த இந்திய அணி, வெட்டோரிக்கு ஆப்பு வைக்கும் எண்னத்துடன் நியூசிலாந்து சென்றிருக்கிறது. அது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அங்கேயும் ஜொலித்து விட்டால் நம்ம பசங்க கில்லிதான் என்பதை எவரும் மறுக்க முடியாது. முதல் ஆட்டமே ட்வெண்ட்டி ட்வெண்ட்டி. பார்க்க மறக்காதீங்க மக்கா. எங்க கேஃபட்டேரியாவில் டி.வி இருக்கு. பிரச்சனையில்லை. யூனிஸ் கான் வேற 306 ரன்களுடன் களத்துல நிற்கிறார், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில். இன்று லாராவின் சாதனையை முறியடிப்பாரா? (Flash news: புட்டுக்குட்டாரு.313ல க்ளீன் போல்ட்)

************************************************

    ஸ்பாம் தொல்லையால் பல இணையத்தளங்களில் word verification கொண்டு வந்து விட்டார்கள். நல்லதுதான். ஆனால் பல தளங்களில் எழுத்துக்கள் கோணலாக இருக்கிறது. சரியாக புரிவதில்லை. ஸீரோவுக்கும் O (ஓ) க்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஒரு முறை தவறாக தட்டச்சினால் மேலே தட்டச்சு செய்தவை காணாமல் போய் விடுகின்றன. சில இடங்களில் மட்டும் புரியாமல் போனால் வேறு வார்த்தை கேட்கும் வசதி இருக்கிறது. மற்றத் தளங்களில் இல்லை. உங்களுக்கு இந்தக் கஷ்டம் இருக்கா?

************************************************

     சில நாட்களுக்கு முன் அலுவலக பார்ட்டியில் என்னை ரஜினியின் வசனங்களை பேசிக் காட்ட சொன்னார்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் நான் செய்தாக வேண்டுமென்பதால் (அப்படி ஒரு விளையாட்டு) வேறு வழியில்லாமல் அருணாச்சலம் படத்தில் இருந்து ஒரு வசனம் பேசினேன். “இழுத்துட்டு போறதுக்கு அவ ஒன்னும் மாடு இல்ல. எங்க வீட்டு மகாலக்ஷ்மி” என்ற வசனத்துக்கு அமோக வரவேற்பு. யூட்யூபில் அந்த காட்சியைத் தேடினேன், வசனங்களை சரிபார்க்க.  அப்படியே ஒரு மணி நேரம் சூப்பர் ஸ்டாரின் சூப்பர் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்று.உங்களுக்காக.

“என்னை விடுங்க. என் தலைமுடி கூட ஆடாது” தலைவா..

***********************************************

சந்தேக சந்திராசாமியை ஞாபகமிருக்கா? பழைய காக்டெயிலில் அவரது சந்தேகங்களைப் படித்துப் பாருங்கள். இனி எல்லா வாரமும் தன் பங்கை அவர் செவ்வனே செய்வார். இந்த வார சந்தேகம்.

செய்தி: மருத்துவமனையில் இருந்தபடியே கலைஞர் பாடி மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

சந்தேகம்:  என்ன பாட்டு ‘பாடி’ திறந்து வச்சார்? எங்கே நிம்மதி எங்கே நிம்மதி.. அங்கே எனக்கோர் இடம் வேண்டுமா?

Feb 24, 2009

பஜாஜ் பைக்குகள் வாங்காதீங்க - ப்ளீஸ்

81 கருத்துக்குத்து
                             

   பஜாஜ் நிறுவனத்தின் புதிய பைக் ப்ளாட்டினா 125CC. 110 Km மைலேஜ் என்று விளம்பரபடுத்துகிறார்கள். இதேப் போல 2007ல் பஜாஜ் XCD, 109 Km என்ற விளம்பரத்தைப் பார்த்து வாங்கி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். 44,000 ரூபாய் மட்டுமே, செல்ஃப் ஸ்டார்ட், அலாய் வீல், என்ற கவர்ச்சியில் மயங்கி வாங்கிய பின்தான் அவர்களின் உண்மை முகம் தெரிந்தது. முதலில் 70கி.மீ தந்த வண்டி ஒரே மாதத்தில் 65 ஆகியது. மூன்றே மாதங்களில் 60 ஆகிவிட்டது. முதல் மூன்று சர்வீஸ்களை சரியான நேரத்தில் செய்தது மட்டுமில்லாமல் முதல் 600 கி.மீ வரை 40Km/H வேகத்தில்தான் வண்டியை ஓட்டினேன்.

   சிக்னலில் பார்ப்பவர்கள் எல்லாம் எவ்ளோ சார் மைலேஜ் என்று கேட்பதிலே அதன் விளம்பரத்தின் தாக்கத்தை உனர முடிந்தது. என்னால் முடிந்தவரை காப்பாற்றினேன். மற்ற வண்டிகளும் விளம்பரத்தில் சொல்லுமளவுக்கு மைலேஜ் தராவிட்டாலும் இவரகளைப் போல  இரண்டு மடங்கு சொல்வதில்லை. 125 சிசி என்பதால் பிக்கப் நன்றாக இருக்கும். ஆனால் வண்டியின் எடை 112 கிலோ மட்டுமே. அந்த எடைக்கு டிஸ் பிரேக்கும் சாத்தியமில்லை. அதனால் விபத்துகள் அடிக்கடி நேர்ந்தது மட்டுமில்லாமல், முதுகு வலி வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். டீலர்களே திருமணமானவர்களுக்கு கூடிய வரையில் இதை வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.

  இதையெல்லாம் தாண்டி இவர்களிடத்தில் இன்னொரு பெரிய குறை உண்டு. முதலில் Discover 125CC வந்தது. ஒரே வருடத்தில் அதை Discover 135CC என்றாக்கிவிட்டு, XCD125CC என்றார்கள். இதோ, ஒன்றரை வருடத்தில் XCD 135CC ஆக்கிவிட்டு Platina 125cc என்கிறார்கள். இதற்கு முன் Platina 100CC ஆக இருந்தது. இன்னும் சில மாதங்களில் XCD 125CC க்கு உதிரி பாகங்கள் எளிதில் கிடைக்காது. புது வண்டி வாங்கலாம் என்று நினைத்தால், மார்க்கெட்டிலே பஜாஜ் வண்டிகளுக்குத்தான் ரீசேல் வேல்யூ குறைவு. 20000 ரூபாயில் பல்சர் வாங்கிவிடலாம். ஆனால் ஹீரோ ஹோண்டாவின் Passion Plus (வெறும் 105cc) கூட 25,000 குறைவாக  கிடைப்பதில்லை.

  பல்சரை தவிர இவர்களின் எந்த மாடலும் சந்தையில் நிலைத்ததில்லை. போன வருட சர்வேயில் முதல் முறை வாகனம் வாங்குபவர்களில் 60% பேர் பஜாஜை தேர்ந்தெடுப்பதாகவும், அதுவே இரண்டுக்கு மேலான தடவை வாங்குபவர்களில் வெறும் 10% பேர் மட்டுமே பஜாஜை விரும்புவதாகவும் சொல்கிறார்கள். அதை ஊர்ஜிதப்படுத்துவது போல்தான் அவர்களின் விற்பனையும் இருக்கிறது.
  புது மாடல் வந்ததும் அவர்களின் விற்பனை அபரிதமாக வளர்வதை இந்த கிராஃப் குறிக்கிறது.

   பஜாஜ் காலிபர், பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் ,பஜாஜ் M80 என்று சில மாடல்கள் மக்களிடம் வெகுவாய் சென்றடைந்து இருக்கின்றன. அதனால் சில வயதான மக்கள் இன்னமும் பஜாஜ் மீது மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் பஜாஜ் நிறுவனம் தனது வியாபார யுத்திகளை மாற்றிக் கொண்டு பல வருடமாக்கிவிட்டன. அவர்களுக்கு  loyal Customers தேவையில்லை. கவர்ச்சியான விலை, கவர்ச்சியான விளம்பரம், கவர்ச்சியான நிதி உதவிகள் மூலம் இளைஞர்களை கவர்ந்திழுத்து விடலாம் என்ற நோக்கில்தான் செயல்படுகிறது.

   சிறு வயதிலிருந்தே எனக்கு ஆட்டோமொபைல் மீதி ஒரு காதல் உண்டு. எனது விருப்ப பாடமும் அதுதான். தாமிரா ஒரு நாள் துறை சார்ந்த பதிவு எழுத சொன்ன போதே இதைப் பற்றி எழுத நினைத்தேன். Platina 125cc விளம்பரம் பார்த்த பின்புதான் இதை உடனே எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன். சற்று விலை அதிகமானலும் Honda shine, Honda Unicorn ஆகியவை நல்ல சாய்ஸ். ஸ்டைலாக வேண்டும் என்பவர்கள் யமஹா R15 முயற்சிக்கலாம். பஜாஜ் மட்டும் வேண்டாம்.ப்ளீஸ்

Feb 23, 2009

அடையாறில் ஓடிய இரத்த ஆறு

47 கருத்துக்குத்து

  கொஞ்சம் கொஞ்சமாக ஏழுவின் கெப்பாசிட்டி ஏறிக் கொண்டே வந்தது. அவனை நம்பி வெகு நாட்களுக்கு பின் பாருக்கு சென்றோம். வழக்கம்போல முதல் ரவுண்ட் முடிந்தது.

"ஹாஃபுன்னா சவுண்டு மட்டும்தான்..

ஃபுல்லுன்னா கிரவுண்டுல மட்டம்தான்” என்ற ஏழுவை பாரில் இருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவன் சொன்ன ஹாஃப், ஹாஃப் பியர் என்பதை அறியாதவர்கள் அவர்கள்.

  அடுத்த ரவுண்டுக்கு வாங்குவதற்கு எப்போதும் ஏழுவை அனுப்ப மாட்டோம். ஆனால் அன்று ட்ரீட் அவனுடையது என்பதால் அவனே சென்றான். அவனுடன் துணைக்கு செல்ல யாரும் தயாராயில்லை. தனியே சென்றவன வெகு நேரம் ஆகியும் வராததால் ஆறு சென்றான்.

அங்கே ஏழுவை சில பேர் அடிக்க வர, ஆறு குறுக்கே பாய்ந்தான். அடி அவனுக்கு விழுந்தது. நாங்கள் அனைவரும் ஓடிப் போய் பார்த்தபோது ஒரு பெரிய கும்பலே வருவதைக் கண்டு அனைவரும் ஓடத் தொடங்கினோம். ஆறுவின் தலையில் ரத்தம் வந்துக் கொண்டிருந்தது. வலியைப் பொறுத்துக் கொண்டு அவனும் எங்களுடன் ஓடி வந்துக் கொண்டிருந்தான். சிறிது தூரம் ஓடிய பின் ஏழு என்னை சீன்டினான். என்னடா என்றேன்.

நாளைக்கு தினத்தந்தில போடுவாங்க இல்ல என்றான்.

எத?

அடையாறில் ஓடிய இரத்த ஆறு. அப்படின்னு மொத பக்கத்துல போடுவாங்க மச்சி என்றவனை நின்னு அடிக்க கூட முடியாமல் இன்னும் வேகமாக ஓடத் தொடங்கினேன்.

ஒரு வழியாக அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டோம் என்று நினைத்தப் போதுதான் அவர்கள் ஆட்டோவில் வருவதைப் பார்த்து பாலாஜி சொன்னான். அங்கிருந்து ஆறாவது குறுக்குத் தெரு வழியாக ஓடி மாநகராட்சி மைதானத்தில் ஒளிந்துக் கொள்ளலாம் என்று ஐடியா சொன்னான் பாலாஜி.

வேணாம் மச்சி என்று பதறினான் ஏழு.

ஏன்டா?

அப்புறம் அதே தந்தில ஆறாவது பக்கத்துல இரண்டாவது பத்தில குறுக்குத் தெரு வழியாக கிறுக்கு பசங்க ஓட்டம்னு போடுவாங்கடா.

  ஒரு வழியாக தப்பித்து கோட்டூர்புரம் வந்துவிட்டோம். ஆறுவுக்கு உடனடியாக சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று, அருகில் இருந்தவரிடம் ஆஸ்பிட்டல் எங்க இருக்கு என்றோம்.

அதோ பறக்கும் ட்ரெயின் பாலம் போதே. அத தாண்டினா மொத ரைட்டு என்றார்.

என்னண்ணா, அது அவ்ளோ பெருசா இருக்கு. அதப் போய் தாண்ட சொல்றீங்க. லூசாப்பா நீ? என்றான் ஏழு.

அந்த ஏரியா கொஞ்சம் மோசமானது என்பதை நாங்களறிவோம். நின்னு மன்னிப்பு கேட்கவோ ஏழுவை மொத்தவோ நேரமில்லை. மீண்டும் ஓடினோம்.
ஆறுவைப் பார்க்கத்தான் பாவாமயிருந்தது. ஒரு வழியாய் ஆஸ்பிட்டலுக்கு சென்றோம்.பார்த்து பதறிய நர்ஸ் "என்னங்க தலையில இவ்ளோ ரத்தம் வருது" என்றார்.

ஏதாவது ஏடாகூடமாய் சொல்லிவிடுவானோ ஏழு என்று பயத்துடன் பார்த்தான் பாலாஜி.அதைக் கூட நேயர் விருப்பமாய் நினைத்து வாய் மலர்ந்தார் ஏழு.
தலையில ரத்தம்தாங்க வரும். வாயிலதான் சத்தம் வரும்.

குத்துற மாதிரி குத்துன்னா வாயில இருந்து ரெண்டும் வரும். போய் ரிசப்ஷன்ல டெபாசிட் கட்டிட்டு வாங்க என்ற படியே நகர்ந்தார் அந்த நர்சு.

மச்சி நர்ச காணோம் என்று அலறினான் ஏழு.

மூடியக் கதவை திறந்து தலையை மட்டும் காட்டினார் நர்சு.

சாரிங்க. பர்ச காணோம்னு சொல்ல வந்தேன். அவர் ஏழுவைப் பார்த்து புன்னகைக்க ஹீரோ சிரிப்பு சிரித்தார் ஏழு.
அவனை முறைத்துக் கொண்டே ஐவரும் தனித்தனியே அமர்ந்தோம். சிறிது நேரத்திற்குப் பின் தலையில் கட்டுடன் வந்தான் ஆறு. நேராய் ஏழுவை நோக்கி வந்தவன், அப்படி என்னடா செஞ்ச பார்ல என்றான்.

இல்ல மச்சி. எப்ப பீரு வாங்கப் போனாலும் அந்த நாப்பது வயசு ஆன்ட்டியே தருது. அதான் மினி பீரு கொடுக்க இருவது வயசுல யாரும் இல்லையான்னு கேட்டேன் என்றான்.

யாரோ பலமாக சிரிக்க சிரிப்பு வந்த திசையை பத்துக் கண்களும் பார்த்தது. நர்சு சிரித்துக் கொண்டிருந்தார்.

Feb 20, 2009

புதுப் ப‌திவ‌ர்க‌ள் பின்னூட்ட‌ பிதாம‌க‌ன்க‌ளிட‌ம் கேட்கும் 10 கேள்விக‌ள்

907 கருத்துக்குத்து
1) தமிழ்மணம் ஓட்டுப் போடுங்க, தமிலீஷ் ஓட்டுப் போடுங்க‌– இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?

2) எங்க கடையில் வந்து பின்னூட்டம் போடும்போது மட்டும் அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு விஷயத்தை மறந்துட்டு போறீங்க?

3) கும்மின்னா ஓடறது, மொக்கைன்னா சூப்பர்னு சொல்றதுனு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா நல்ல கதை, சமூகப் பதிவுன்னு போட்டா வர்றது எல்லாம் மெய்ல் அனுப்பினதக்கப்புறம் நடக்குது. அது ஏன்?

4) எங்க கதையிலோ, கவிதையிலோ ‘பளிச்’னு ஏதாவது பாராட்டுறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்?

5) நீங்க பின்நவீனத்துவ பதிவ‌ பார்த்தா அதுல இருக்கற உடான்ஸ் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க அதுவே பின்நவீனத்துவம்னு பதிவு போட்டா கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க?

6) கும்மில நூறுக்கு அஞ்சுதான் குறையுதுன்ணா உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – 0 பின்னூட்டம் இருக்கிற எங்க பதிவ பார்க்கும்போது ஏன் இருக்க மாட்டீங்குது?

7) நியாயமான கேள்வி கேட்கும்போது, தவறுதலா அதுல உங்களுக்கு சம்பந்தம் இருந்திட்டா அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம ஒரு ஸ்மைலிய போடறீங்க‌?

8) எங்க கடைக்கு வர்றப்ப மட்டும் அவசர அவசரமா பத்தி தாவி தாவி படிக்கிற நீங்க, மூத்தப் பதிவர்கள் பதிவ மட்டும் ஒரு நாளைக்கு நாலு தடவ படிக்கறீங்க‌.. அது ஏங்க?

9) நாங்க ரசிச்சு ரசிச்சு பதிவு எழுதறப்ப மட்டும் உங்க டேமேஜர் ஆணி புடுங்க சொல்றாரு. அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா எழுதற மேட்டர் மட்டும் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?

10) எங்க பதிவுல மட்டும் பரிசல் பதிவுல கும்மி, குசும்பன் பதிவுல மொக்கைன்னு கிளம்பும்னு குதிக்கறீங்களே.. அதே மாதிரி அவங்க பதிவுல இருக்கும்போது எங்க மேட்டர் ப‌டிக்கனும்னு குதிப்பீங்களா?

Feb 19, 2009

பதிவர்களைப் பற்றிய கிசுகிசு-காத கொடுங்க.

34 கருத்துக்குத்து

  பதிவர்கள் மசினகுடி சுற்றுலா சென்றபோது நடந்த ’சம்பவம்’ இது. ஒரு பெட்ரோல் பங்கில் காற்றுப் பிடிக்கப்படும் இடத்தில் இப்படி எழுதி வைத்திருந்தார்கள்.

“சில்லறை வேண்டாம். சின்ன புன்னகை போதும்”

  இது போன்ற சுவையான தகவல்களை திரட்டும் பதிவர் அவர். ஆர்வத்துடன் சென்று அதை படம் பிடித்துவிட்டு அவரைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார்.  சன்னமான குரலில் காத்தடிப்பவர் சொன்னது எங்கள் காதுகளில் விழவில்லை. அவர் இதைத்தான் சொல்லியிருக்க கூடும்.“இதுக்கு சில்லறையையே வாங்கிக்கலாம்”.

*********************************************

  நாளுக்கு நாள் விலையேறிக் கொண்டிருக்கும் உலோகமணி பதிவர் என்று பெயர் பெற்றவர் அவர். குறும்படங்கள் எடுப்பதில் சமீபகாலமாக மும்மரமாக உள்ளார். அது தொடர்பாக ஒரு அழகான, நல்ல நடிகரை தேடும் பணியில் ஒரு பிரபலமான, இளம் பதிவரை வளைத்திருக்கிறார். சோதனை நடிப்பில் அவர் அநியாயத்துக்கு வெட்கப்பட, இவர் அவரை மோடிவேட் செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். எடுத்தைப் பார்த்து மகிழ்ந்துக் கொண்டிருக்கிறாராம் இயக்குனர்.

***********************************************

  முதலில் இவரை ஒரு பெண் என்றுதான் நினைத்தார்கள். பின் அவர் ஆண் என்பது தெரிந்ததும் அவரை ஒரு பின்நவீனத்துவவாதி என்று நினைத்தனர். அதையும் அவர் தகர்க்க அவரை ஒரு பெருசு என்று முத்திரை குத்தினார்கள். காதலர் தினத்தன்று அதையும் அவர் பாம் ப்ளாஸ்ட் செய்ய, குழம்பி போய் உள்ளனர் பதிவர்கள். வெடிகுண்டுக்கு பெயர் பெற்ற ஊரில் இருக்கும் அவரின் உண்மையான தகவல்கள் அறிய விரும்புவோர் அலைபேசி சித்தரை தொடர்பு கொள்ளவும்.

***********************************************

வலையுலக ரித்தீஷ் என்ற செல்லப்பேரு கொண்டவர் இந்தப் பதிவர். பார்க்க மட்டுமல்ல, பிறருக்கு உதவுவதிலும் ஜே.கே.ஆர் தான் என்பது சமீபத்தில் கார்ட்டூன் கம்பரின் நீண்ண்ண்ண்ட நன்றி பதிவில் தெரிந்தது. இவரை வைத்து தொடங்கப்பட்ட அஜால் குஜால் படம் பாதியில் நிற்பதால் சோகத்தில் இருக்கிறாராம். விரைவில் தனது சக பதிவர்களுடன் சென்னைக்கு அருகில் ஏதேனும் ஒரு இடத்திற்கு ஒருநாள் பயனத்திற்கு திட்டமிடுவதாக வலையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

************************************************

இவரின் தம்பியை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் போதும் ”இவர்தான் என் தம்பியண்ணே” என்பாராம் அவர். சமீபகாலமாக உலகம் சுற்றுவதிலே நேரம் செலவழிக்கும் இவர் பலம்பொருந்திய பின்னணி கொண்டவர். சொந்த ஊரிலே நல்ல வாய்ஸ் உடையவர். அதனாலோ என்னவோ அதற்கேற்றார் போல ஒரு வேலை செய்திருக்கிறார். இதோ அதோ என்று இழுத்தடிக்கும் பணி நல்லபடியாய் முடிந்து அவர் “வாய்ஸ்” அகிலம் முழுவதும் பரவ வாழ்த்துவோம்.

Feb 18, 2009

சர்வம் - இசை விமர்சனம்

53 கருத்துக்குத்து

   விஷ்ணுவர்தன் - யுவன் கூட்டணியைப் பற்றி தமிழகமே அறியும். குறும்பில் (படம் பேருப்பா) இவர்கள் ஆரம்பித்து வைத்த ரீமிக்ஸ் காய்ச்சல் (ஆசை நூறுவகை) இன்னமும் முழுமையாய் விட்டபாடில்லை. அதைத் தொடர்ந்து பட்டியல், பில்லா என டாப் கியரில் போய்க் கொண்டிருக்கிறது இந்த கூட்டணி. பில்லாவின் பாடல்கள் ஆரம்பத்தில் சறுக்கல் என்று பேசப்பட்டாலும் மை நேம் இஸ் பில்லா மற்றும் வெத்தலயை போட்டேன்டி இரண்டும் ரியல் ஹிட்ஸ் என்பதை மறுக்க முடியாது.  இவர்களின் அடுத்த படம் சர்வம். ஆர்யாவும் த்ரிஷாவும் இணையும் முதல் படம்.

1) அடடா வா(இளையராஜா, ஆண்டிரியா)

   வாவ். இந்தப் பாடலை ராஜாவைப் பாட வைக்க யுவன் ரொம்ப மெனெக்கட்டிருப்பார். ஆனால் ரெக்கார்டிங் முடிந்த பின் ராஜா இன்னொரு பாட்டு இப்படி கொடு என்றுக் கேட்டிருப்பார். A typical Pub song. நடுநடுவே புல்லாங்குழல் மேஜிக் செய்கிறது. அதிரடியான ரிதத்திற்கும் அல்ட்ரா மாடர்ன் ஆண்டிரியாவின் குரலுக்கும் (பச்சைக்கிளி மு.ச. பட ஹீரோயின் தாம்ப்பா)  ஈடு கொடுத்து பின்னியிருக்கிறார் ராஜா. கைய கொடுங்க யுவன். உங்க அப்பாதான் இளையராஜாவாமே?

2) நீதானே (யுவன்)

   போகாதே, ஒரு கல் கண்னாடி, நினைத்து நினைத்துப் பார்த்தேன், பொய் சொல்ல என யுவனுக்கென்று ஒரு டைப்பான சோகப்பாடல் ஒன்று உண்டு. அதில் எப்போதும் யுவன் ஏமாற்றினதில்லை. இந்த முறை ஒரு சின்ன டவுட்.  எத்தணை முறைக் கேட்டாலும் மனதில் பச்சக் என்று ஒட்டவில்லை.  ஆங்காங்கே ஹைபிட்ச்சில் ஏ.ஆர்.ஆர். போல முயற்சி செய்கிறாரோ? சாரி யுவன். அது அவரின் பலம். பா.விஜய் பாடல் எழுதுவது எப்படி என்பதை மறந்து போய்விட்டார் என்று நினைக்கிறேன்.

3) சுட்ட சூரியனே (விஜய் யேசுதாஸ்)

     மெல்லத் தொடங்கி செட்டில ஆனபின் அடித்து ஆடும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் போல ஆகிவிட்டார் விஜய். சமீபகாலமாக பல நல்லப் பாடல்களை யுவன் இவருக்கு கொடுக்கிறார். இதுவும் அப்படி ஒன்றுதான். நல்ல ஃபோக் சாங். இசைக்கருவிகளை மீறி ஒலிக்கிறது விஜயின் இளமை. இந்த பேரு இருக்கிறவங்க எல்லோருமே பட்டய கிளப்புவாங்க போல(அடங்குடா.. நெகட்டிவ் ஓட்டு வேணுமா)

4) காற்றுக்குள்ளே (யுவன்)

மீண்டும் யுவன். மழைத்துளியின் சத்தம் வருடுகிறது. வித்தியாசமான் முயற்சி. கார்த்திக் அல்லது பென்னி தயாள் பாடியிருந்தால் இன்னும் அருமையாயிருக்குமோ? கிடாரில் எதை வாசித்தாலும் நல்லாதானிருக்கும். வயலினுக்கும் கிடாருக்கும் ரிலே ரேஸ் போட்டி. வரிகள் சுகம். காதலியின் பிரிவை உணர்த்தியிருக்கின்றன. ஆர்யா முகத்தை விறைப்பாக இல்லாமல் பிரிவின் வலியைக் காட்டுவாரா? இல்லை, போடி என்று காசிக்கு போவாரா என்று பார்ப்போம்.

5) சிறகுகள் (ஜாவித் அலி, மதுஸ்ரீ)

     சாதனா சர்கம், மதுஸ்ரீ, ஷ்ரேயா கோஷல். இவங்க மூனு பேரும் பாடும் பாட்டை மூனு தடவ கேட்டாதான் வித்தியாசம் தெரிகிறது. ஜாவித் அலி இன்னும் தம் உச்சரிப்பை மேம்படுத்த வேண்டும். இல்லையென்றால் டாக்ஸி டாக்ஸி போன்ற பாடல் பாடுவது நலம். எளிதில் ரீச்சாக கூடிய ரிதம். ஹிட்டாகிவிடும். இரண்டு பேருக்கும் ஆடத் தெரியாது. எப்படித்தான் எடுத்தாரோ விஷ்ணு?

6) தீம் மீயுஸீக்

   யுவனின் பலமான ஏரியா. பில்லா தீம் மியூஸிக் இன்னமும் என் ரிங் டோனாக இருக்கிறது. படம் த்ரில்லர் என்பதை இதை வைத்தே சொல்ல முடிகிறது. கிடார் (ஸ்பானிஷ் கிடார் என நினைக்கிறேன்) பீஸோடு தொடங்கி heavy metal notes க்கு மாறுகிறது. பில்லாவின் சாயல் தெரிந்தாலும் எக்ஸலன்ட் யுவன்.

************************************************

  வழக்கமான விஷ்ணுவின் படம் போல சில நல்லப் பாடல்களும் சில சுமாரன பாடல்களும் தான் சர்வமும்.(ஐ மீன் சர்வம் படத்திலும்). படம் வெளிவந்த பின் தான் ஆடியோ சேல்ஸ் ஏறும். யுவனின் சமீபத்திய சாதனையான குங்கும பூவும் கொஞ்சு புறாவோடும் இதை ஒப்பிடவே முடியாது. அது யுவன் ராஜாவாகும் முயற்சி. இதில் ராஜாவை யுவனாக்கும் முயற்சி.

Feb 16, 2009

புட்டிக்கதைகள்

39 கருத்துக்குத்து

   ஏன் மச்சி.. எதுக்கெதுக்கோ நாளு வச்சு கொண்டாடறாங்க. உண்மையா கொண்டாடுற குடிகாரர்களுக்கு ஏதாவது நாளிருக்காடா என்று பியரை திறக்குமுன்னே வாய் திறந்தான் ஏழு.

உனக்கு ஒரு சைட் இல்லைன்னா உலகமே காதலர் தினம் கொண்டாட கூடாதா என்றான் ஆறு.

இப்ப யாரு காதலர் தினம் வேணாம்னு சொன்னா? குடிக்கறதுக்கு நாளிருக்கான்னுதானே கேட்டேன்.

ரைட் விடு. நாம கொண்டாடிலாம்.நீ என்னைக்கு முழு பியர் ராவா அடிக்கிறியோ அன்னைக்குத்தான் குடிகாரர்கள் தினம்.

கொண்டாடவே கூடாதுன்னு இப்படி சொல்றீயா மச்சி என்ற பாலாஜியை முறைத்தான் ஏழு.

அவனை ஏண்டா முறைக்கிற? எதுக்கு ஒன்ன கெமிஸ்ட்ரி திட்டிட்டு இருந்தாரு என்ற கேட்ட ஆறுவையும் முறைத்தான் ஏழு.

நான் சொல்றேன் மச்சி. அவரோட முக்கியமான bag காணாம போயிடுச்சாம். அதுல அவர் பண்ற ஆராய்ச்சி பத்தியெல்லாம் இருந்தததாம். அதனால அத கண்டுபுடிச்சு கொடுக்கறவங்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்னு சொல்லியிருந்தாரு.

சரி.

அது எவ்ளோ பெரிய புராஜெக்ட். அத கண்டுபுடிச்சு கொடுக்கறவங்களுக்கு வெய்ட்டா ஏதாவது தரலாமில்ல. அத விட்டுட்டு “தக்க” சன்மானம் கொடுத்தா நல்லாவாயிருக்கான்னு இவன் கேட்டத அந்த சிவசங்கரி போய் அவர் கிட்ட போட்டுக் கொடுத்துடுச்சு மச்சி.

எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்கிற என்று வியந்த பாலாஜியின் தலையில் தட்டினான் ஆறு.

இது ஒரு மேட்டரா?கிரேசி மோகன் படமும் நாடகமும் பார்த்துட்டு எதுக்கெடுத்தாலும் மொக்கை போடறான். நேத்து இப்படித்தான் எனக்கு ஃபோன் பண்ணி ஹாஸ்டல்லா பிரம்மா இருக்காரான்னா கேட்டான். அது யாருடா பிரம்மான்னா கரண்ட்டுதான்னு சொல்றான். பிரம்மாவுக்கும் த்ரீ ஃபேஸ். கரண்ட்டுக்கும் த்ரீ ஃபேஸூதானேனு அறுக்குறாண்டா.

இந்த இடத்தில் சிரித்தால் ஆறுவுக்கு கோவம் வரும் என்று தெரிந்தும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை எங்களால். இந்த கேப்பில் பாதி பியரை ராவாக அடித்துவிட்டான் ஏழு.

ஸ்லாப்ஸ்டிக் காமெடி பத்தி உனக்கென்ண்டா தெரியும் என்றான் ஏழு.

இது எப்படிடா Slapstick காமெடி ஆகுமென்றேன்.

நான் எப்ப ஜோக்கடிச்சாலும் இவன் ஸ்டிக்கால அடிக்கிறான். இல்லன்னா கன்னத்துலா Slap ஒன்னு கொடுக்கிறான். அப்ப இது Slapstick காமெடியில்லையா என்றவனுக்கு இன்னொரு Slap விழுந்தது ஆறுவிடமிருந்து.

மச்சி. இப்பெல்லாம் இவன் படிக்கிறதே இல்லடா. தண்ணியடிக்கனும். இந்த மாதிரி மொக்கையா பேசனும்.வேற எண்ணமே இல்ல. அதான்டா கஷ்டமா இருக்கு.

நான் எப்பவும் சிபிடா.

அதுயாருடா?

ஸ்டூடண்ட் நம்பர் ஒன்னுடா..

ஆங். இது ஒன்னு ஆரம்பிச்சிட்டாண்டா. எதுக்கெடுத்தாலும் சினிமாவுல எக்ஸாம்பிள் கொடுக்கறான் என்று தொடர் குற்றப்பத்திரிக்கை வாசித்தான் ஆறு.

அதுவரை அமைதி காத்த ஏழுவை சீண்டிவிட்டது பாதி பியர்.

உனக்கு எது தெரியுமோ அதப் பத்திதானே உங்கிட்ட சொல்ல முடியும். நியூட்டனும் பாஸ்கலும் கம்யூனிஸ்ட் ரைட்டரான்னு கேட்டவன்தாண்டா நீ.

நல்லத சொன்னா கேட்கமாட்ட்டா. எப்படியோ நாசமா போங்க. இவனால நாம் எல்லோரும் ஒரு நாள் வாங்கப் போறோம் பிரின்சிகிட்ட என்று சொல்லிவிட்டு தன் மானம் நடனமாடியதை மறைக்க  பியரை அடித்தான் ஆறு.

பிரின்சிக்கு இவன பத்தி தெரியும்டா. மெக்கானிக்கல் பசங்களுக்கு அவரு செமினார் எடுத்தப்ப, கம்ப்யூட்டர் படிச்சாதான் உங்களுக்கு இனிமேல வேலை கிடைக்கும்னு சொன்னாரு. இவன் சும்மா இல்லாம “அப்புறம் எதுக்கு சார் நாங்க படிக்கனும். கம்ப்யூட்டர் படிச்சாலே போதுமேன்னு சொல்லியிருக்கான்”. இவன நோட் பண்ணி வச்சிருக்காரு.

மச்சி. இவன் மத்தவங்கள கலாய்ச்சதுக்கே பொங்கறீங்களே. நேத்து தலைவலி பயங்கரமா வலிச்சது. “தலைவலிக்குதுடா. பொறுக்க முடியல”னு இவன் கிட்ட சொன்னா, கூலா கேட்கிறான். “தலைவலிக்கும்போது நீ ஏண்டா பொறுக்க போற”. மவனே அப்படியே கழுத்துல கால் வச்சு கொன்னுடலாம்னு தோணுச்சு என்று பியரை போல பொங்கினான் மதன். அப்புறம் அவனா போய் மாத்திரை வாங்கிட்டு வந்தான். மாத்திர ஓரத்தையெல்லாம் வெட்டினவன ஏண்டான்னு கேட்டா “அப்பதான் சை எஃபெக்ட் வராது” னு சொல்றான்.

க்ரூப்ல புதுசா சேர்ந்த அருண் மட்டும் ஏழுவை பாவமா பார்த்தான். இரக்கப்படுகிறானா என்று கேட்டதுக்கு அவன் சோகக் கதையை சொல்லத் தொடங்கினான். ஒரு நாள் நோட்டிஸ் போர்டுடல் உனக்கு மணி ஆர்டர் போட்டிருக்காங்கனு வந்து சொன்னா ”ங்கொய்யால..யாருடா அவன் மணி? எனக்கே ஆர்டர் போடறதுனு” கேட்கறாண்டா. இவன் எப்பவுமே இப்படித்தானா என்று தன் அறியாமையை சபைக்கு சமர்ப்பித்தான் அருண்.

அனைத்து முனைகளிலிருந்தும் ஏவுகணைகள் தாக்குவதைக் கண்ட ஏழு வழக்கம்போல அரை பியரோடு தரையில் சாய்ந்தான்.

Feb 15, 2009

காதல்.. கண்றாவி..கருமம்..

41 கருத்துக்குத்து

   அழகான மாலை வேளை அது. சூரியன் சிவப்பு நிறத்தில் இருந்தாலும் எங்களுக்கு ரோஜாவாகாத்தான் தெரிந்தது. எங்களுக்கு என்றால் எனக்கும் என் அவளுக்கும். பிப்ரவரி 14. காதலர் தினம் கொண்டாடிக் கொண்டிருந்தோம்.

  கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம். அலைகள் சுருதி சேராமல் பாடிக் கொண்டிருந்தன. அலை வந்து மோதுகிறதே என்று பாறைகள் நகர்வதாய் தெரியவில்லை. பாறைகள் நம்மோடு வருவதில்லையே என்று அலைகளும் விடுவதாயில்லை.

“நான் தான் பாறையா?” என்றாள். எப்படி அவளுக்கு நான் யோசிப்பது தெரிந்தது  என்றுத் தெரியவில்லை.

நீதான் வந்துட்டியே.

நீ விடாம துரத்துன. சரி விடு. இப்ப அதுவா முக்கியம். நான் என்ன கிஃப்ட் வாங்கியிருக்கேன் சொல்லு?

எது வாங்கினாலும் எனக்குப் புடிக்கும்.

எப்படி சொல்ற?

எனக்கு யாரு தர்றாங்கிறதுதான் முக்கியம்.

என் கையில எதுவுமே இல்லையே. என்னவா இருக்கும்னு கெஸ் பண்ணேன்.

அப்படின்னா பெருசா எதுவோ வாங்கியிருக்க. இல்லைன்னா இப்ப கூட்டிட்டு போய் வாங்கலாம்னு சொல்லுவ.

ஏண்டா இவ்ளோ அறிவாளியா இருக்க? எதையுமே செய்ய முடியல.நம்ம கெளரி கடைல இருக்கு. இங்கேயே இரு. நான் போய் எடுத்துட்டு வர்றேன்.

  அவள் எழுந்து செல்வதைக் கண்ட அலைகள்  அவளை பின் தொடர ஆசைப்பட்டு இன்னும் வீரியத்துடன் எழுந்தன. நான் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டு சோகத்துடன் விழுந்தன. விழும் நேரத்தில் எழுந்த சத்தம் அலையின் அழுகுரல் போலவே கேட்டது எனக்கு. 1987க்கு முன்னால் கடலில் உப்புத்தன்மை இருந்ததா என்று பார்க்க வேண்டும்.

கையில் பெரிய பெட்டியுடன் வந்துக் கொண்டிருந்தாள். என்னவாக இருக்கும் என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையாக எனக்கு தெரியவில்லை.

To my porikki என்று எழுதப்பட்டிருந்தது.

Happy Valentine's day டா என்றாள்.

கையில் வாங்கினேன். என்னவென்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் பிரிக்கப் போனவனைத் தடுத்தவள் “ மூனு சாய்ஸ். என்னன்னு சொல்லிட்டு பிரி” என்றாள்.

என்னால் பொறுக்க முடியவில்லை. “ஷேர்ட், வாட்ச், மொபைல்” என்று சொல்லிவிட்டு பிரித்தேன். சிரித்துக் கொண்டே சொன்னாள் ” உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?”

என்னால் நம்ப முடியவில்லை. இதை எப்படி யோசிக்காமல் போனேன்? அழகிய கிடார். என் கைகள் நடுங்க ஆரம்பித்தன. எனக்கு உடனே அவளை அணைத்து ஒரு முத்தமிட வேண்டும் போலிருந்தது. ஆனால் கையில் கிடார். அந்தப் பாறையில் எங்கேயும் அதை வைக்க மனம் வரவில்லை. கிடார் எனக்கு முதல் காதலி. என் தயக்கத்தைப் புரிந்துக் கொண்டவள் கன்னத்தை காட்டினாள். ப்ச்.

தேங்ஸ்டா என்றேன்.

எனக்கு என்ன கிஃப்ட்?

உன்னையேக் கூட்டிட்டு போய் வாங்கலாம்னு வந்தேன்.

எனக்கு இப்பவே வேணும்.

அதான் கொடுத்தேனே.

ச்சீ. அது இல்ல. ஒரு பாட்டு பாடுடா

இங்கேயா?

ஆமாம்.நான் மாஸ்டர்கிட்ட கொடுத்து ட்யூன் பண்ணிதான் எடுத்துட்டு வந்தேன்.

கிட்டாரை என் ஸ்டைலில் கையிலெடுத்தேன். அப்படியே  தலை சாய்த்து சொன்னாள் “இதான்டா. நீ இத வாசிக்கும் போதெல்லாம் கிடார்தான் நான்னு நினைச்சுக்கோ. இப்படி கட்டிபுடிச்சுட்டே  வாசிப்பில்ல. அதான்டா வேணும்”

நான் கிடாரை முத்தமிட்டேன். அவள் சிலிர்த்தாள்.கொஞ்ச நேரம் கண்மூடி ரசித்தாள்.

ஏதாவது பாடுடா. உனக்கு பிடிச்ச பாட்டு.

யோசிக்காமல் தொடங்கினேன்.

“என் இனிய பொன் நிலாவே.

பொன்நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம்....தர தத் தரா..

தொடருதே தினம் தினம்.. தர தத் தரா..”

 

 

   நினைவுகளில் இருந்து மீண்டேன். கடிகாரம் ஃபிப்ரவரி 12 என்று மட்டும்தான் காட்டியது. வருடத்தை காட்டவில்லை. என்னோடு அவளும்,கிடாராக. இறுக அணைத்துக் கொண்டேன். தேடிப்பிடித்து அதே பாறையில் உட்கார்ந்துக் கொண்டேன். பாடுடா என்று அவள் சொன்னது இன்னுமும் அங்கேயே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.  கிடாரை முத்தமிட்டு பாடத் தொடங்கினேன்.

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது

மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் விளையாடும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி
மறு வாசல் வைப்பான் இறைவன்

பாடி முடித்தவுடன் கைத்தட்டல் வந்த திசையை நோக்கி பார்த்தேன். wow.It was awesome என்றது அந்த பூங்கொத்து.  I am Nandhini  என்று தட்டிய கைகளில் ஒன்றையும் நீட்டினாள்.

சரியான பாடலைத்தான் பாடியிருக்கிறேன்.

தொடரும்...

 

Feb 14, 2009

காதல் தேவதையின் பிறந்த நாள்

50 கருத்துக்குத்து


    முன்பொரு நாள்
    உன்
   முந்தானைத் தீண்டலில் உடைந்த‌
   வெற்றுக்கோப்பை நான்...

   உடைந்ததை
   ஒட்ட வைத்த போதும
   முன் போலில்லை..

*************************************************
  
         என் கனவில் நீ வருவதே இல்லை என்று பல நாட்கள் கவலைப்பட்டதுண்டு. நீ ஒரு பொழுதும் என் கனவாக முடியாது என்பதுதான் அதன் பொருளோ?

    என்னை தயவு செய்து திருமணம் செய்துக் கொள்ளாதே. என் காதலை தாங்கும் சக்தி உனக்கு இருக்குமென எனக்குத் தோண்றவில்லை.

      உன் பிறந்த நாளுக்கு  புடவை எடுக்க சென்று ஒரே ஒரு புடவையோடு திரும்பினாய். உன் அழகைப் பற்றிக் கேட்க நான் அங்கு சென்றேன். நீ வேண்டாமென சொன்ன‌ப் புடவையெல்லாம் அழுதுக் கொண்டிருந்தன. பேசாமல் வந்துவிட்டேன்.நான் ஆண்மகன் அல்லவா?

      உன் பிறந்த நாளன்று அதிகாலை முதலே உன் வீட்டுக்கருகில் இருந்த மரத்தின் உச்சியில் மறைந்திருந்தேன். எழுந்தவுடன் ஜன்னல் கதவைத் திறந்தாய். அன்றுதான் நீ குளிப்பதே உன் அழகையெல்லாம் அழிக்கத்தான் என்று தெரிந்துக் கொண்டேன்.

     புதுப் புடவையில் நீ அழகாய் நடந்து வந்தாய்.பூக்களைத்தானே காம்புகள் தாங்கும். உனக்கு மட்டும் ஏன் காம்புகளை பூக்கள் சுமக்கின்றன?

   எல்லோர் வீட்டுப் பெண்களும் பூக்களை சூடி அழகாகிறார்கள். நீ மட்டும்தான் தினம் ஒரு வகை பூவெனச் சூடி பூக்களை அழகாக்கிறாய்.

     உன்னை சில நிமிடங்கள் பார்த்த எனக்கே இருப்புக் கொள்ளவில்லை. எப்படித்தான் அன்று உன்னை முழுவதுமாய் பார்த்தும் உடையாமலிருக்கிறது உன்  வீட்டுக் கண்ணாடி?

     அன்று மாலை நீயும் கோவிலுக்கு வந்தாய். "யார் பேருக்குப்பா அர்ச்சணை" என்ற அய்யரிடம் " சாமி பேருக்கு" என்றேன். அவரும் சரியாய் உன் பெயருக்கு அர்ச்சணை செய்தார். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது அந்தக் கோவில் சாமிக்கும் உன் பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள்.

    காலை முதலே உன்னைப் பின்தொடர்ந்து வருகிறேன் என்பதை நீ அறிந்தும், இரவு வீட்டுக்குள் நுழையும்முன் தான் ஒரு பார்வைப் பார்த்தாய். இதை காலையிலே செய்திருந்தால் என் நண்பர்களுக்கு ஒரு ட்ரீட்டாவது கிடைத்திருக்கும்.


பி.கு: காதலர் தின சிறப்பு பதிவெழுதிய பின் படித்துப் பார்த்தால் ஒரே சுடுகாடு வாச னை. அதனால் மீள்பதிவாய நமஹ.. :))))

Feb 13, 2009

காக்டெய்ல் (காதலர் தின ஸ்பெஷல்)

43 கருத்துக்குத்து

  ஜப்பானில் காதலர் தினத்தன்று பெண்கள் தனக்கு பிடித்த ஆண்களுக்கு (கவனிக்கவும், ஆண்களுக்கு) சாக்லெட்கள் வழங்குவார்கள். சரியாக ஒரு மாதம் கழித்து மார்ச் 14 அன்று வெள்ளை தினம் என்று கொண்டாடுவார்கள். அப்போது சாக்லெட் வாங்கிய ஆண்கள் அந்த பெண்களுக்கு சாக்லெட் தருவார்கள். அதுவும் வெள்ளை நிற சாக்லெட். வெட்டிப்பசங்க. நம்ம ஊருல சரியா ஒன்பது மாதம் கழித்து ஆண்கள் பரிசு தருவார்கள். என்ன பரிசா? ஃபிப்ரவரி 14 ல இருந்து ஒன்பது மாசம் தள்ளிப் போய் பாருங்க.

************************************************

ரோமானியாவில் 24ம் தேதி அன்றும், பிரேசிலில் ஜூன் 12ம் தேதியும், வெனிசுலாவில் ஃபிப்ரவரி 25ம் தேதி அன்றும், சீனாவில் ஜூலை 7ம் தேதியும் காதலர் தினம் கொண்டாடப் பட்டாலும், உலகோடு ஒத்துப் போவதற்காக ஃபிப்ரவரி 14ம் தேதியும் கொண்டாடுகிறார்கள். என்னது ..சவுதி அரேபியாவா? அங்க காதலிக்கவே கூடாதாம். மீறினா... இது என்ன? சங்கு. பிச்சு எறிஞ்சுடுவேன்.. ஆவ்வ்வ்

*************************************************

ஃப்ரான்ஸில் முன்பு ஒரு சூப்பர் மேட்டர் உண்டு. காதலர் தினத்தன்று திருமணமாகாத ஆணும் பெண்ணும் எதிரெதிர் வீட்டுக்குள் இருப்பார்கள். ஜன்னல் வழியே பெண் தனக்கு பிடித்தவனை அழைப்பாள். அவளை அவனுக்கு பிடிக்காவிட்டால் அவன் வெளியே வரமாட்டானாம். இது மாதிரி பலரும் செய்த பின், அன்றிரவு நெருப்பு மூட்டி வேண்டாம் என்று சொன்ன ஆண்களின் படங்களை எரிப்பது மட்டுமில்லாமல் ஆபாச அர்ச்சணையும் நடக்கும். இது மற்றவ்ர்களுக்கு தொல்லையாக இருந்தத்தால் அரசாங்கம் தடை விதித்து விட்டது. மாதர் சங்கம், கவனிச்சுக்கோங்க.

************************************************

   சிங்கப்பூரில காதலர் தினத்தை அன்பர்கள் தினம் என்று கொண்டாடுவார்கள். அன்பு என்பதால் யாருக்கு வேண்டுமென்றாலும் வாழ்த்து சொல்லலாம். அம்மா, அப்பா, அக்கா, தங்கை என எல்லோருக்கு வாழ்த்து சொல்லுவார்கள். இதை பார்த்த என் நண்பன் ஒருவன் சென்னையில் இருந்த தன் கஸினுக்கு தொலைபேசியில் ”அன்பர்” தின வாழ்த்து சொல்லியிருக்கிறான். சிங்கைப் பழக்கத்தை சொல்லும் முன்பே அவள் கட் செய்து அப்பாவிடம் சொல்லி, அவர் இவன் அப்பாவிடம் திட்டி பல களேபரங்கள் நடந்து விட்டது. இவன் எடுத்து சொல்லியும் யாரும் நம்பவில்லை. அந்த வருடம் இந்தியா வருவதாக இருந்த திட்டமும் பணால். இந்த வருடமும் மறக்காமல் அவனுக்கு அழைத்து அன்பர் தின வாழ்த்து சொல்லனும்.

*************************************************   

 காதல் கல்யாணத்தில் முடிவதைத் தானே எல்லோரும் விரும்புவார்கள்? (என்ன பரிசல், இல்லையா????) அதனால் ஒரு கல்யாண மேட்டர். சில நாட்களுக்கு முன் ”வெட்கம் வேதனை அவமானம்” என்ற பதிவில் சாஃப்ட்வேர் என்ஜினியர்கள் படும் அவஸ்தையைப் பற்றி சொல்லியிருந்தேன். நிலைமை அவ்வளவு மோசமில்லைனு பலரும் சொன்னார்கள். மெய்லில் வந்த இந்தப் படத்தைப் பாருங்கள். எங்க கஷ்டம் புரியும்.  Feb 12, 2009

சிக்கிட்டாருய்யா ஜிங்கனக்கா சுவாமிகள்

51 கருத்துக்குத்து

  இத படிக்கறதுக்கு முன்னாடி பரிசலோட இந்தப் பதிவ படிச்சிட்டு வாங்க. ரொம்ப நாள் ஆச்சு எதிர் பதிவு எழுதி. இது எதிர்பதிவு சீஸன் 3

********************************************

வழமையாகத்தான் நடந்துக் கொண்டிருக்கிறது இது. வயல்வெளித் தொலைத்த அயல்வெளிக் குறிப்புகள்,  அடர்நீலத் தீற்றல் கொண்ட பறவை , முலையுதிர் சிறகு, உரையாடலினி கவிதைகள் என அசூசை உணர்வேற்படுத்தும் பதிவுகள் என மிகச்சிறந்ததொரு வாசிப்பனுபவத்தை வழங்கும் வாய்ப்பு கிட்டியதில் பெருமைக் கொண்டிருந்தேன்.

இந்த கடினமானொதொரு சம்யம் அந்த நண்பனை சந்தித்தலிருந்துதான் தொடங்கியிருக்க கூடும். கருப்பொருள் கிடைக்காமல் தவித்த சமயம். அதை அவன் தருவிக்க கூடுமென்றுதான் வரச் சொன்னேன்.

"கொஞ்சநாளா உன் வலைப்பூவை படிச்சிட்டிருக்கேண்டா"

அவன் கண்களில் தெரிந்த தேடல் எனக்கு அவன் சொன்னது உண்மைதான் என்பதை உணர்த்திக் கொண்டிருந்தது.

"என்னடா எப்பப் பார்த்தாலும் உன் பெண் நண்பர்கள் பத்தியே எழுதற? உன் ப்ளாக்கை ஒரு நாளைக்கு 1000 பேர் படிச்சாங்கன்னா அதுல ஆண்கள்தான் 80% இருக்காங்க. அவங்களுக்கு இது அந்நியமாப் படும் இல்லையா?"

"தன்னிரு வளைக் கைகளைக் கொண்டு கழுத்தை நெறிக்கும் பெண்ணைக் கூட ரசிக்க முடிகிறது. ஆண்களைக் கண்டால் எனக்கு துணுக்குறலாகத்தான் இருக்கிறது.”

அவன் குனிஞ்சான். செருப்பை எடுக்க சென்றவனிடம் “ பெண்கள் மீது விருப்பமில்லையா உனக்கு” என்றேன்.

"பிடிக்கலன்னு சொல்லல.. சரி... நீ ஏண்டா மொக்கையா எழுதக் கூடாது?"

குறியீட்டு வடிவினளுடன் விதி பேசத் தொடங்கியது

"மொக்கை என்பது என்ன" என்று நான் கேட்டேன்.

"எதுக்கும் அடங்காத, எவனுக்கும் உதவாத, மேட்டரே இல்லாம எழுதறதுதான் மொக்கை "

"என் சொல்படி என் எழுத்துக்கள் பெரும்பாலன விளிம்பு நிலையில் உள்ள வாசகனுக்கு புரிந்துத் தொலைப்பதில்லை. அவன் பார்வையில் மேட்டரே இல்லாமல் இருப்பதாலும், எதற்கும் உதவவில்லை. அப்படியென்றால் நான் மொக்கைசாமியா?"

மறுபடி குனிஞ்சான்.

"சரி...” என்றேன்

சாருவோட ஜீரோ டிகிரி படிச்சிருக்கியா"

நான் என் இருபெருகருநிற விழிகளை விரித்து ஆம் என்றேன்.

"டேய்.. அதுக்கேண்டா ஏதோ செக்ஸ் புக்கைப் படிச்சவனாட்டம் பார்க்கற?"

கண்கள் சுருக்கி கொட்டாவி விடுவது போல பாவனை செய்து “என்ன சொல்லனும். சீக்கிரம்” என்றேன்

"அது பார்த்தீன்னா எதுக்கும் உதவாது. அந்த மாதிரின்னு வெச்சுக்கலாம்"

"ஓ அதுதான் மொக்கோ கேனயினிசமா?"

"அது மொக்கோ கேனினிசம் மொக்கோ கேனயினிசம் இல்ல"

"படிக்கும் வாசகர்களையெல்லாம் கேனையனாக பாவித்து அவர் எழுதுவதால் அது மொக்கோ கேனயினிசமா என்ற ஐயம் எழுவதில் என்ன தவறிருக்க முடியும்?”!

மறுபடி குனிஞ்சான். காலணியாதிக்கத்தின் வீச்சை உணர  முடிந்ததது என்னால்.

"கரும்புல ஜூஸ் இல்லன்னா சக்க.. வெய்ட்டே இல்லைன்னா தக்க.. மேட்டரே இல்லன்னா மொக்கை..”

இப்போ நான் குனிஞ்சேன். ”எல்லா வார்த்தைகளிலும் குறும்பு கொப்பளிக்க பேசுவாயே. என்னவாயிற்று என்றுக் கேட்டேன்.

"இதுதான் உன்னை மாதிரி ஆளுங்க சொன்னாலும் கேட்க மாட்டீங்க" னான்.

"சரி சொல்லு"

"இப்போ ஒரு படம் இருக்கு. நீங்க வழக்கமா ஹீரோ என்ன செய்யணும்னு நெனைக்கறீங்களோ அதை அவன் செய்வான். அப்போ அது மொக்கைப் படமாகுது"

"உதாரணம்?"

"வில்லுவை எடுத்துக்கலாம்"

"அவர் படம் வழமையாகவே நன்றாகத்தானே எடுப்பார்கள்"

"மூடிட்டு கேளுடா.."

"எப்போதும் மொழியுடன் விளையாட்டு நடத்தும்படி பேசும் நான் விஜயைப் பற்றி சொன்னதும் சிலிர்க்கிறேன். அப்படியென்றால் நானும் மொக்கைவாதியாக அவர் உதவுவாரோ?"

" நாசமாப் போ. நான் சொல்லிடறேன். அதுல அப்பா விஜய கொன்ன பிரகாஷ்ராஜுக்கு, மகன் விஜய அடையாளம் தெரியாம போனதற்கு காரணம், அப்பா வச்சிருந்தா வித்தியாசமான மீசைதான்னு காட்டுவாங்களே. அதுதான் மொக்கை"

நரம்புகளில் ஓடும் குருதி கொப்பளிக்க தொடங்கியது. உன் வார்த்தைகளில் இருக்கும் கருத்துபடி பார்த்தோமேயானால் தமிழ் திரைப்பட உலகில் அஜித்தைத்தான் மகா மொக்கை என்று சொல்வதில் எனக்கு உடன்பாடிருக்கிறது. ஜி யில் மாணவனாகவும், ஆஞ்சனேயாவில் தொப்பை உண்டு என்ற ஒரே காரணத்திற்காக காவலராகவும், கொலை செய்ய ஆறு மணி நேரம் செல்வழித்து உடலெங்கும் வண்ணப் பூச்சுகளுடன்  சென்ற ஆழ்வாரும் தான் மகா மொக்கையர்களன்றோ?

“ஒண்ணு சொல்றேன் தெரிஞ்சுக்க. மொக்கையைப் புரிஞ்சுக்கணும்னா நீ ஒரு மொக்கைசாமி மாறணும். அப்போதான் இதெல்லாம் ஒனக்குப் புரியும். தெரியும்”

“புரிவதற்கும் தெரிவதற்கும் என்ன வேறுபாடுகள் இருக்க முடியும்?”

“அங்க பாரு அது என்ன?”

“பேப்பர் வெய்ட்”

“அது ஒனக்குத் தெரியுதா?”

“தெரிகிறதே”

“அது பேப்பர் வெய்ட்னு தெரியுது. ஆனா அது ஏன் பேப்பர் வெய்ட்னு தெரியுமா?”

“புரிய மறுக்கிறது..”

“ஆங்... அதுதான் மேட்டர். அது பேப்பர் வெய்ட்னு தெரிஞ்சா தெரியுதுன்னு சொல்லலாம். அது ஏன் பேப்பர் வெய்ட்னு தெரிஞ்சா புரிஞ்சதுன்னு சொல்லலாம்”

“புரியல”

“வில்லு

“டேய்... வேற பேசு”

“அஜித்தோட படங்கள்..”

“இதுக்கு அதையே பேசு”

“சரி... ரெண்டும் வேண்டாம். டீ.ஆர். இல்லைன்னா சிம்புவோட  நாலு படத்த பார்த்தா புரியும்”

“அப்ப சிலம்பாட்டத்துல சின்ன தல என்று சொல்லும் அவனும் மொக்கைசாமியா?”

“ஆங்... இப்பதான் நீ ஓரளவு புரிஞ்சுட்டிருக்க”

மொக்கையை விளக்க தேவையான அடிப்படை விதயமாக நான் நினைப்பது சரியான எடுத்துக்காட்டு. வில்லுவை மொக்கையென் வகைப்படுத்திய அவன் அறியாமைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன், அவன் “அப்ப நான் கெளம்பறேன்”ன்னான்.

“வரும் போது கொடுக்கனும் கை. போம்போது சொல்லனும் பை” என்றேன்..

”வெரிகுட். இதான்.. இப்படித்தான்”னுட்டே போய்ட்டான்.

அப்போ டம்ளர் எடுக்க வந்த ஆஃபீஸ் பாய்கிட்ட “மாப்பி. இன்னொரு காஃபி” என்றேன்

“ தலைவலிக்கு குடிக்கலாம் காபி. இங்க தலைவலியே கேட்குது காஃபி” னான் அவன்.

ஆஹா.. இத்தனை நாள் இவன் இப்படிப் பேசினதில்லையே.. ஒருவேளை ஓரமா நின்னு ஒட்டுக் கேட்டானோன்னு, இவனும் மொக்கைசாமி ஆகறானோன்னு நான் யோசிச்சுகிட்டிருப்பவே எங்க எம்.டி வந்தார்.

“அய்யணார்... அந்த ரிப்போர்ட் ரெடியா?” ன்னு கேட்க..

“உங்களுக்கு இப்போ தேவை ரிப்போர்ட். நான் உங்கள பத்தியே பண்ணுவேன் ரிப்போர்ட்” ன்னேன்.

அவரு சிரிச்சுகிட்டே போக.. ‘அகிலெங்குமெங்கும் ரிஸஷன் தலைவிரித்தாடும் போது கலங்காமல் சிரிக்கும் இவரும் மொக்கைசாமியோ?’ ன்னு ஒரு சிந்தனை எனக்குள்ள ஆரம்பிக்க.. என் ஃபோன் ஒலிச்சது.

Girl friend(33) calling....

எடுத்து பேசத்தொடங்கி மூனேகால் மணி நேரம் கழித்து சார்ஜ் இல்லாமல் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதுதான் உணர்ந்தேன்.

சந்திராசாமிகளுக்கு அரசியல்வாதிதான் close friend

மொக்கைசாமிகள  உருவாக்கறவங்க  girl friend.

Feb 11, 2009

விகடனில் எனது பதிவும் புகைப்படமும்

85 கருத்துக்குத்து

  youthful vikatanல குட் ப்ளாக்ஸ்னு போடறாங்களே. அத சொல்லவில்லை மக்களே. என் முதல் முத்தம் என்ற பதிவு என் ஃபோட்டோவுடன் வந்து இருக்கிறது. அவர்களே என் புரொஃபைலில் இருந்த புகைப்படத்தை எடுத்து போட்டிருக்கிறார்கள். நன்றி விகடன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைவருக்கும் நன்றி சொல்ல விழைகிறேன்

http://youthful.vikatan.com/youth/karki110209.asp

மேலும் கடந்த இரண்டு நாட்களாக குட் ப்ளாக் வரிசையில் எனது இரண்டு பதிவுகளுக்கு சுட்டி கொடுத்து இருக்கிறார்கள். இதில் இன்று இடம்பிடித்த நர்சிம்முக்கும், இதற்கு முன்னர் வந்த தாமிரா, புதுகைத்தென்றல் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

சின்ன விஷயமோ பெரிய விஷயமோ கொண்டாடி விடுவோம். என்ன சொல்றீங்க? அப்படியே இன்னும் இருவர் Followers ஆனா 100 ஆயிடும். ஸ்டார்ட் மீஸீக்..

குடிகாரர்களே ஒரு நிமிஷம் வாங்க

58 கருத்துக்குத்து
     கொரியாவில் சரக்கடிக்க சில ஃபார்மாலிட்டீஸ் உண்டு. சியர்ஸ் சொன்னவுடன் ஒரே கல்ப்பாக அடித்துவிட்டு க்ளாசை தலையில் கவிழ்த்துக் காட்டி முழுசா குடிச்சிட்டேன் பார் என்று சொல்லாமல் சொல்லனுமாம். LGல் வேலை செய்த போது MD சொன்னார். அவருக்கும் எனக்கும் பியர் போட்டி. இதேப் போல தொடர்ந்து அதிகம் குடிப்பவரே வெற்றியாளர். நான் தான் ஜெயிச்சேனு அவரே ஒத்துகிட்டு என்ன வேணும்ன்னு கேட்டார். டவல் என்றேன். அவ்ளோ மப்பு அண்ணாத்தைக்கு.

*******************************************

   இந்தியாவில் கிடைக்கும் பியர்களில் 6000 மற்றும் கிங்ஃபிஷர் ஸ்ட்ராங்க் போன்றவையே வெறும் 6% சதவிகித ஆல்கஹால்தான். சிங்கையில் கிடைக்கும் பரோன்ஸ் மற்றும் கார்ல்ஸ்பெர்க் போன்றவை 8.8% . இந்தியாவில் இவை ஏன் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. ஹைதையில் கோப்ரா கிடைக்கிறது. அது 7% என்றாலும் நல்ல டேஸ்ட் என்கிறார்கள். எத்தணை இண்டெர்னேஷ்னல் பிராண்டு அடித்தாலும் எனக்கு இன்னமும் ப்ளாக் நைட் கல்யானிதான் ஃபேவரிட். “பால் குடிக்கிற பசங்க எல்லாம் பீர் குடிச்சா இப்படித்தான்” என்ற விளம்பரம் நினைவிருக்கா? முகத்துல Zip ப்போட வருவாரே ஒரு ஹீரோ.

*********************************************

  எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு Quarterன் லாப கணக்கின்படி team outing போவது வழக்கம். சென்ற வாரம் ஒரு outing. ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு எனக்கு. எல்லாம் நல்லபடியாக நடந்த முடிந்தவுடன், டேமேஜர் அழைத்தார். ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார். ”இந்த Quarterல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு outingற்கு அனுமதி வாங்கித் தருவதாக” கூறினார். அவர் சொன்னதையே தான் நானும் சொன்னேன். ஒரு வார்த்தையை மட்டும் இடமாற்றி. அதுக்கு திட்டறாருங்க‌. நான் சொன்னது

“இந்த Outingல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு Quarterக்கு அனுமதி வாங்கி தாங்களேன்”

***********************************************

  அந்த பார்ட்டி முடிந்தபின் இரவு என் அறைக்கு பதினோரு மணிக்குதான் சென்றேன். ரொம்ப நேரம் சாவியை சரியாக போடாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அப்போது வெளியே வந்து ஹவுஸ் ஓனர் உதவி செய்ய வந்தார். சாவியை வாங்க வந்த அவரிடம் “அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க உங்க வீட்ட கொஞ்சம் ஆடாம புடிச்சுக்கோங்க. இப்படி ஆடுது. உங்க தாத்தா கட்டியதா?” என்றேன். தமிழ் புரியாமல் சென்றுவிட்டதாக நினைத்தால், மறுநாள் வந்து வீட்டை காலி செய்ய சொல்கிறார். ஆடற வீட்ட ஆடித்தானே தொறக்கனும்? அதான் தண்ணியடிச்சிட்டு வந்து திறந்ததாக சொல்லி சமாளித்திருக்கிறேன்.

**********************************************

ஒரு நிமிஷம் முடிஞ்சிடுச்சு. போய் தமிழ்மண ஓட்டு போடற வேலையப் பாருங்க.

Feb 10, 2009

ஏழு பேரை காதலித்த நயவஞ்சகன்

117 கருத்துக்குத்து

   விசில் என்று ஒரு படம் வந்தது. பென்ட்டாமீடியாவின் தயாரிப்பு என்பதால் சுஜாதாவின் பங்கும் இருந்தது. விதியே என்று அவரும் கற்றதும் பெற்ற‌துமில் அதைப் பற்றி பாராட்டி நாலு வரிகள் எழுதினார். படம் ஊத்திக் கொண்டாலும் பாடல்கள் ஹிட். அந்தப் படத்தில் ஒரு பாடலின் சரணம்தான் இது

"எல்லோர் வாழ்விலும் நண்பா

ஏழு காதல்கள் உண்டு..

பள்ளிப் பருவத்தில் ஒன்று

காலேஜ் காம்பவுண்டில் ஒன்று

அட அடுத்த வீட்டுப் பொண்ணு

தெளிச்சு கோலம் போட்டு

வெறிச்சுப் பார்க்கையில ஒன்று

ரயில் சினேகம் போலவே வரும் ஒன்று

தங்கை திருமணக் கூட்டத்தில் வரும் ஒன்று

மணம் முடிக்கும் பெண்ணிடத்தில் வரும் ஒன்று..

இன்னொன்று.."

இது அப்ப‌டியே என‌க்கு ஒத்துப் போகுதுங்க‌. இனி ஓவ்வொரு வ‌ரியா கொசு வ‌த்தி சுத்த‌லாமா?

1) ப‌த்தாம் வ‌குப்பு பொதுத் தேர்வு நேர‌ம். (எக்ஸாம் நடக்கறப்ப என்ன செஞ்சேன்னு மொக்கை போடாதீங்க ப்ளீஸ்) எங்க‌ டியூஷ‌ன் மாஸ்ட‌ர் அவ‌ர் வீட்டின் முத‌ல் த‌ள‌த்தை எங்க‌ளுக்காக‌ கொடுத்துவிட்டார். அதுதான் அவ‌ர் டியூஷ‌ன் எடுக்கும் இட‌மென்றாலும் எங்க‌ள் நான்கு பேருக்கு சிற‌ப்பு அனும‌தி 24 மணி நேர‌‌மும். அவ‌ள் பெய‌ர் ம‌துமிதா. முன்ன‌ரே தெரியும் என்றாலும் தாம‌த‌மாக‌த்தான் என் ம‌ன‌தை திருடினாள். இன்ன‌மும் நினைவிருக்கிற‌து அவ‌ளின் முக‌ம். பின் புத்தக‌த்தில் ”மதுமிதாய நமஹ“ எழுதி வைத்து அண்ண‌னிட‌ம் மாட்டிக் கொண்டு "ச்சும்மா ஃப்ரெண்ட்ஸ் விளையாட‌றாங்க‌டா" என்று ச‌மாதான‌ப்ப‌டுத்தி எஸ்கேப்பினேன். உண்மையில் அழ‌கி அவ‌ள். ம‌துமிதாஆஆஆஆஆஆ

2) பத்தாவது முடித்தவுடனே டிப்ளோமா சேர்ந்து விட்டேன்.(ஓ அப்பதான் எல்லோரும் சேருவாங்கில்ல) முதல் நாள் அவள் வரவில்லை. இரண்டாம் நாள் அவள் உள்ளே நுழைகையில் சரியாக என் தலையில் மோதினாள். (தலயோட மோதினாளானு அஜித் ஃபேன்ஸ் மறுபடியும் நெகடிவ் ஓட்டு குத்தாதீங்கப்பா) சினிமாவில் வருவது போல தேவதைகள் கும்மியடிக்க, அலை அப்படியே அந்தரத்தில் நிற்க, பறவைகள் ஸ்தம்பித்தன, அவள் சாரி என்று சொல்லும்வரை. அவள் சொன்னபின் அவையாவும் இன்னும் வேகமெடுத்தன. மூன்றாண்டுகள் வேறு எந்த அழகியையும் பார்த்து மயங்காமல் பார்த்துக் கொண்டாள். பேர சொல்லலையா? அனிதாஆஆஆஆ

3) கோலம் போட்டு வெறிச்சு பார்த்தவ முகம் மறந்துப் போய் விட்டது. பெருசா ஒன்னும் அழகு இல்ல. ஆனாலும் புடிச்சிருந்தது. பேரு மட்டும் நியாபகமிருக்கு. ஜெயாஆஆஆஆ

4) ரயின் சினேகம் போலவே. கல்லூரி முடிந்து நண்பர்களுடன் குற்றாலம் வரை சென்றோம். அப்போதுதான் அவளைப் பார்த்தேன். நல்லா பேசினா. பார்த்தவுடனே கவரும் விதத்திலா நாமிருக்கிறோம்? பேசிதான் கரெக்ட் செய்யனும். இறங்கும்போது சொன்னாள். "உன் கண்ணும் பேச்சும் பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு.” (நோட் பண்ணிட்டீங்களா?) அப்ப எல்லாம் மொபைல் கிடையாது.(என்கிட்டப்பா) டாடா காட்டி சென்றாள் திவ்யாஆஆஆஆ

5) தங்கை திருமண கூட்டத்தில் அல்ல. ஆனால் ஒரு திருமண நிகழ்ச்சியில்தான் பார்த்தேன். மணபெண்ணின் தங்கை. ஆனால் மொத்த கூட்டமும் அவளைத்தான் பார்த்தது. ஒருவேளை அவள் என் மனதை கொள்ளையடித்தது ஊருக்கு தெரிந்து விட்டதோனு கவிதை வேறு. தூரத்து சொந்தம்தான். மறுநாள் அலுவலக நண்பர்களை கவிதை சொல்லி கடுப்படிக்க, அப்படி யாருடான்னு எல்லோரும் கிளம்ப, அவள் வீட்டு பெல்லை அடித்து ”டாக்டர் மணிமாறன் வீடு இதுதானானு நண்பன் கேட்க, அவளும் அடுத்த தெருன்னு வழிகாட்ட,(உங்க ஊருலயும் மணிமாறன்னு ஒரு டாக்டர் இருப்பாரே?) அவன் வழியை விட்டு அவள் விழியிலே சொக்கி போக, வந்து நல்லா வாங்கினான் என்னிடம். அந்த நாள்முதல் இரண்டு மாதம் கம்யா கோயான்னு அரைகுறை இங்கிலீஷ் பேசவில்லை. வாய தொறந்தா வித்யாஆஆஆஆஆ

6) மணம் முடிக்கும் பெண் இன்னும் யாரென்று தெரியாத்தால் அதைப் பற்றி அப்புறமா பேசுவோமா?

7) இன்னொன்று. வேணாங்க. சொன்னா கேளுங்க. அட நான் தண்ணியடிக்க கூடாதுனு முடிவெடுத்திருக்கேன். விட மாட்டிங்களா? புரிஞ்சுக்கோங்க. அடம் பிடிக்காதீங்க. சரி.போய் தொடர்கதை லேபிள்ல ஒரு கதைய பாதி சொல்லியிருப்பேன். வேணும்ன்னா போய் படிங்க. பேரு மட்டும் சொல்றேன் கம்லாஆஆஆஆஆ.

அப்புறம் எல்லா பொண்ணுங்க பேரும் ’ஆ’ ல முடியுது பார்த்திங்களா? அவங்க ஆச்சரியமானவங்கனு ஸ்ரீ, MSK மாதிரியான காதல் இளவரசர்கள் நினைச்சுக்கலாம். இல்லைன்னா கடைசில அவங்கள பார்த்து பயந்துதான் ஆகனும்னு தாமிரா, வெண்பூ,பரிசல், அப்துல் மற்றும் பலர் நினைச்சுக்கலாம்.

மறுபடியும் அந்தப் பாடலைக் கேட்டேன். எழுதியவன் மேல் கோபம் கோபமாக வந்தது. ஏன் தெரியுமா? யோசிச்சிட்டு போய் பின்னூட்ட்த்த பாருங்க.

Feb 9, 2009

அஹம் ப்ரம்மாஸ்மி -ஆள விடுங்கடா சாமீ

64 கருத்துக்குத்து

    நானும் பதிவர்தான் என்று நிரூபிக்க நான் கடவுள் விமர்சனம் எழுத வேண்டியிருகிறது. இதை விமர்சனமாக இல்லாமல் படத்தைப் பற்றி சில கருத்துகளாக எடுத்துக்கலாம்.

  முதலில் ஒரு கேள்வி. இந்த படத்தை எடுக்க எதற்கு மூன்றாண்டுகள்? அதுவும் சரியாக திட்டமிட்டிருந்தால் ஆர்யாவின் போர்ஷனை கடைசியாக எடுத்து சில மாதங்களிலே முடித்திருக்கலாம். ஹாலிவுட் பாணியில் திரைக்கதை ஆசிரியர், வசனம், இயக்கம் எல்லாம் தனித்தனி ஆட்கள் இருப்பார்கள். இயக்குனர் என்பவர் இதை எல்லாம் திட்டமிட்டு செயல்படுத்துபவர். அதனால் தான் தசாவாதாரம் படத்திற்கு பின் கே.எஸ்.ஆரை கமல் இந்தியாவின் சிறந்த இயக்குனர் என்றார்.

   திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தில் சுஜாதா சொல்லியிருப்பார் “நிறைய எழுதலாம், ஆனால் திட்டமிட்டதை தான் எடுக்க வேண்டும்”. பாலா அனேகமாக 10மணி நேரம் ஓடக்கூடிய படத்தை எடுத்துத் தள்ளியிருப்பார்.

  இரண்டு வெவ்வேறு தளங்கள். தனித்தனியே சொன்னாலே ஒரு படம் போதாது. அதை ஒரே படத்தில் எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைப்பதில் தடுமாறியிருக்கிறார். படத்தின் பிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று திரைக்கதை. இதில் பாலா கோட்டைவிட்டது பலரைப் போலவே எனக்கும் அதிர்ச்சி.

  இரண்டாவாது நடிகர்கள் தேர்வு. வழக்கம்போல அதை சரியாய் செய்திருக்கிறார். ஆனால் ஒரு கேள்வி. தயவு செய்து இதை வழக்கமான பகடியாக நினைக்க வேண்டாம். என்ன தைரியத்தில் இதற்கு அவர் முதலில் அஜித்தை தேர்வு செய்தார்? ஆச்சரியமூட்டும் காசி காட்சிகளில் முக்கியமானவை ஆர்யா நடத்தும் ஆசனங்கள் முயற்சி செய்தால் அஜித்தை நடிக்க வைத்து விடுவார். ஆனால் இவை? எனிவே, க்ரேட் எஸ்கேப் தல.

கதை, திரைக்கதை, இயக்கம் என கோட்டை விட்ட பாலா ஜெயமோகனிடம் வசன பொறுப்பைத் தந்து வென்றுவிட்டார். வசனங்கள் நறுக். அந்த பையனுக்கு எப்படி அம்பானியை தெரியும் என்றெல்லாம் கேள்வி கேட்காமல் ரசிக்கலாம்.

அனைவரும் ஆர்தர் வில்சனை புகழ்கிறார்கள். தவறில்லை. நிச்சயம் சேது ரத்னவேலையும் பிதாமகன் பாலசுப்ரமணியத்தையும் ஒப்பிட்டால் இவர் பாஸ் ஆவதே கஷ்டம் என்பது என் கருத்து.

இசை. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பின்ணணி இசை. ஆனால் பிச்சை பாத்திரம் பாடலின் கருத்து வேறொன்றாய் இருக்க அதைக் காட்சிப்படுத்தியதில் வேறு ஒரு அர்த்தம் தருகிறார் இயக்குனர். சிரமப்பட்டு ஒப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு பதில் அதே மெட்டில் வார்த்தைகளை மாற்றிப்போட்டு கலங்க வைத்திருக்கலாமே!! எப்படியோ ராஜாவால்தான் கடவுளே தப்பித்தார்.

இத்தணை கோரமில்லாமலும் அந்த பாதிப்பை பார்வ்வையளனின் மனதில் உருவாக்க முடியுமே பாலா? எதற்கு இவ்வளவு வன்முறை? போன பதிவில் சொன்னது போல நிச்சயம் குழந்தைகளும், பெண்களும் தவிர்த்தல் நலம். இல்லை நான் தைரியமான பெண்கள் என்பவர்கள் படம் பார்த்துவிட்டு ஒரு மெய்ல் தட்டுங்கள். அரங்கில் பல குழந்தைகள். பாவம். நயந்தாராவின் இடுப்புக்கே ஏ சான்றிதழ் வழங்கும் சென்ஸார் இதற்கு தரவில்லை. என்ன கொடுமை?

பூஜா ஆடாத ரெக்கார்ட் டான்ஸா? அவரை விட்டுவிட்டு நயனை இழுக்க வேண்டிய அவசியமென்ன பாலா? ஜோதிலட்சுமியின் இடுப்பை காட்டியவர் தானே நீங்கள்? துணியால் மறைத்தாலும் சிம்ரனின் இடுப்பு உங்களுக்கு தேவைப்பட்டதே!!

சொல்லும் கதையை விட சொல்லப்படும் விதத்தில்தான் ஒரு திரைப்படம் சிறப்பு கொள்கிறது என நினைக்கிறேன். அந்த விஷயத்தில் இது சுமார்தான். இந்த முயற்சிக்காகவது பாலாவை பாரட்டலாம் என்றால் நிச்சயாமாக. ஆனால் அதை விட்டுவிட்டு கலைஞருக்கு சப்பை கட்டு கட்டும் உடன்பிறப்புகள் போல, வில்லுக்கு காவடி தூக்கும் கார்க்கியைப் போல, பதிவர்கள் இதற்கு (சிலரைத் தவிர) வக்காலத்து வாங்குவது ஏன் எனப் புரியவில்லை. இது போல படமெடுக்க மட்டுமல்ல, பார்ப்பதற்கும் பாலாவால் மட்டுமே முடியும். நான் பாலா அல்ல.

Feb 8, 2009

ஒரு மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்கள்

20 கருத்துக்குத்து


1. தான் கடைசியாக எழுதியது என்னவோ அதுவே தன் வாழ்நாளின் “மாஸ்டர் பீஸ்” என்று சொல்லிக்கொள்வார்கள்.

2. பொது இடங்களில் சந்திக்க நேர்ந்தால் சந்தனத்துல என்னோட கட்டுரை வந்துருக்கு, தூர மலர்ல என்னோட கதை வந்திருக்கு, யோக்யாவில என்னோட தொடர் வரப்போவுது எனப் பெருங்குரலில் பேசி கலவரமூட்டுவார்கள்.

3. வட்டார மொழியில் எழுதுகிறேன் பேர்வழி என்று எந்த வட்டாரத்திலும் இல்லாத ஒரு மொழியில் எழுதுவார்கள்.

4. எப்போதும் ஏதாவது ஒரு பிரசுரத்தின் பெயரைச் சொல்லி அதற்காக ஒரு நூலை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்வார்கள்.

5. ஒவ்வொரு பத்திரிகையின் தன்மைக்கேற்ப தன்னையும் மாற்றிக்கொண்டு எழுதுவார்கள்.

6. என்பதுகளில் காலாவதியாகிப் போய்விட்ட உத்திகளையும் நாடகத்தனமான உரையாடல்களையும் எழுதி விட்டு அதன்படியே எழுதி ரெமுனரேஷன் வாங்கும்படி சக எழுத்தானுக்கு யோசனை சொல்வார்கள்.

7. கதை ஏதேனும் வார இதழ்களில் வர இருப்பதாகத் தெரிந்துவிட்டால் போஸ்ட்கார்டில் துவங்கி, எஸ்.எம்.எஸ், இமெயில், ஸ்க்ராப் என சகல வழிகளிலும் அதை மொத்த ஜனத்தொகைக்கும் தெரியப் ‘படுத்து’ வார்கள்.

8. நண்பர்களின் வஞ்சகப் புகழ்ச்சியை உண்மையென்று நம்பித் தொலைப்பார்கள்.

9. கதைகளிலும், சிந்தனையிலும் செய்ய வேண்டிய மாற்றத்தை தலைமுடியிலும், மோவாய்க்கட்டையிலும் அடிக்கடி மேற்கொண்டு கலவரப்படுத்துவார்கள்.

10. வாசிப்பதைக் காட்டிலும் சுமார் நூறு மடங்கு அதிகமாக எழுதிக் குவிப்பார்கள் (யாரும் வாசிக்கத் தயாராக இல்லாத போதும்)

இந்தப் பகடி பதிவின் சுவாரஸ்யமான் பின்னூட்டங்களுக்கு இங்கே க்ளிக்கவும்

*************************************************

அதேதான். இத புதுசா படிக்கறவங்களுக்காக‌

அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன்

Feb 6, 2009

நான் கடவுள் - நோ டூ பெண்கள் குழந்தைகள்

47 கருத்துக்குத்து

   ஷங்கரின் படங்கள் எப்படி ஒரே மாதிரி இருக்குமோ அதே மாதிரி ஆகி வருகிறார் பாலா. மேக்கிங்கில் கலக்கியிருந்தாலும் கதாநாயகன் ஒரே மாதிரி இருப்பதாக சொல்கிறார்கள். விருதுக்குரிய படமாகத்தான் இருக்கிறதாம். பிதாமகனோடு ஒப்பிட்டால் நான் கடவுள் சுமார் என்று இப்போதுதான் அரங்லிருந்து வெளிவந்த நண்பன் அழைத்து சொன்னான். பிணம் தின்னும் காட்சி தேவையில்லை என்னுமளவிற்கு வன்முறையும் அ “கோர” க்காட்சிகளும் இருப்பதால் குடும்பத்துடன் செல்வதை, குறிப்பாக குழந்தைகள் செல்வதை தவ்ர்க்க வேண்டும்.

ரசிகர்கள் கருத்து : ஓவர் ஸீன் உடம்புக்கு ஆகாது.

எது எப்படியோ நான் பார்ப்பேன். இது என் நண்பனின் கருத்து மட்டுமே.

Feb 4, 2009

காக்டெய்ல்

56 கருத்துக்குத்து

நாலு இல்லைன்னா ஐந்தே மாதம் என்றுதான் ஹைதைக்கு அனுப்பினார்கள். அப்ரைசல் அது இதுவென்று ஒன்பது மாதம் ஆகிவிட்டன. இப்போது எல்லாம் நண்பர்கள் வேலை எப்படி இருக்கிறது என்று கேட்பதில்லை. வேலையில் இருக்கிறாயா என்றுதான் கேட்கிறார்கள். தினமும் உலகம் முழுவதும் 9000 பேர் வேலையை விட்டு நீக்கப்படுவதாக சொல்கிறார்கள். உண்மையா என்று தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் ஒரு வருட புராஜெக்ட் ஒன்று. நல்ல வாய்ப்புதான் என்றாலும் இன்னும் ஒரு வருடம் ஹைதையா என்ற பயம். வேறு வழி? ப்ளாக் இருக்கும் நம்பிக்கையில் ஓக்கே சொல்லிவிட்டேன். பாவம். நீங்கதான். விதி வலியதுதுதுதுது.

************************************************

நான் கடவுள் பாடலே இன்னும் நாலு மாசத்துக்கு போதும் என்றிருந்தேன். குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தில் மிரட்டியிருக்கிறார் யுவன். குறிப்பாக கடலோரம் ஒரு ஊரு என்று ஒரு பாடல். யுவனின் குரலிலும் எஸ்.பி.பி, அட இருங்க ஒரு நிமிஷம், எஸ்.பி.பி சரணின் குரலிலும் வருகிறது. யாரோ ஒரு இளம் பாடலாசிரியர். பேரு வாலியாம்.


இடைதான் எனக்கோர் நூலகம்
வழங்கும் கவிதை வாசகம்


அப்படியே நந்தலாலாவையும் மிஸ் பண்ணிடாதீங்க. அனைத்துப் பாடல்களையும் கணக்கில் எடுத்தால் நந்தலாலா தான் பெஸ்ட் என்று தோண்றுகிறது.


**********************************************


போரடிக்கும் போதெல்லாம் பதிவுகள் படிப்பேன். அப்பவும் போரடித்தால் யூட்யூபில் காணொளி பார்ப்பதுதான் என் பொழுதுபோக்கு. அதுவும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகளை தேடுவது வழக்கம். அப்படி பார்த்த ஒரு காணொளிதான் இது. கடைசி பந்தில் ஏழு ரன் எடுக்க வேண்டும் நியூஸிலாந்து. ஆஸ்திரேலியா என்ன செய்தது தெரியுமா? நீங்களே பாருங்கள். அப்பவே இவனுங்க இப்படித்தான் போலிருக்கு. அப்போ கேப்டன் யாரு தெரியுமா? நம்ம செப்பல், சாரிங்க சேப்பல்


********************************************


நான் கடவுள் படத்திற்கு பிரம்மாண்டமான ஓப்பனிங் இருக்குமென்று எதிர்பார்த்தேன். சத்யமில் சனிக்கிழமையே டிக்கெட்டுகள் இருக்கின்றன. உண்மையிலே மக்களிடம் காசில்லையா? அல்லது பிணம் தின்னும் காட்கிகள் உண்டு என்ற செய்தியால் பெண்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களா? படம் வெளிவந்த பின் மாற்ற நேர்ந்தால் வேறு ஒரு க்ளைமேக்ஸ் வைத்திருக்கிறாராம் பாலா. உஷாராயிருங்கப்பூ. ரிலீஸான பின் மாற்றினால் எடுபடாது.


*******************************************


யாரு ஆரம்பிச்சாங்கனு தெரியல. ஆனா பரிசலின் அவியல் மூலமாத்தான் இந்த மாதிரி பதிவுகள் அதிகம் வர ஆரம்பிச்சன. காக்டெய்ல், அவியல், துணுக்ஸ், நொறுக்ஸ், கொத்து பரோட்டா, கூட்டாஞ்சோறு இப்படி பல பெயர்களில் எழுதுகிறார்கள். என்ன இருந்தாலும் அவியலின் சுவை எதிலும் இல்லை. எல்லோரும் தகவல்களை சொல்வதிலே குறியாய் இருக்கிறோம். பரிசல் மட்டும்தான் சுவைக்கு தகுந்த விஷயஙகளை மட்டும் சொல்கிறார். கலைக்கண் என்பார்களே!!! இவருக்கு இருப்பதோ வலைக்கண். எந்த மேட்டரை எப்படி சொல்ல வேண்டும் என்பதில் வல்லவர். பால்காரன் தண்ணி அதிகமா கலந்துட்டானேனு தங்கமணி கவலைப்படும் போது, அவன் வித்தியாசமா பதில் சொன்னத கேட்டு சந்தோஷப்படுகிறாராம். அவியலுக்கு பதார்த்தம் கிடைச்சதுன்னு.

ஏதாவது செய்வோம் பாஸ்

50 கருத்துக்குத்து

நர்சிம் ஏதாவது செய்வோம் பாஸ் தொடர் பதிவை புதிப்பிச்சிருக்கார். அதனால

அதுல என் பதிவுக்கு சுட்டி கொடுக்க மறந்துட்டார். அதனால

அலுவலகத்தில் ஆணிகள் கடப்பாறை ஆகிவிட்டன. அதனால

போன மாதமே 23 பதிவுதான் போட்டேன்.அதனால

நிறைய அதனால் சொல்லிட்டேன். அதனால

இந்த ஒரு மீள்பதிவை மட்டும் போட்டுக்கறேன். ஹிஹிஹி

********************************************

    நர்சிம்மின் இந்த பதிவுக்கு லக்கி,பரிசல்கோவி.கண்ணன் எல்லாம் பதிவெழுதி விட்டார்கள். வெகு காலமாய்(என் பள்ளி காலத்திலிருந்தே) நான் நினைத்துக் கொண்டிருக்கும் விடயத்தை இப்போது சொல்வது பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன். இதையும் எழுதலாமா வேண்டாமா என்று யோசித்ததலே ஒரு வாரம் போய்விட்டது. இதை எழுத தொடங்கிய போதெல்லாம் நான் ஏன் இதை முன்பே எழுதவில்லை என்ற கேள்வி என் முன்னே வந்து அப்போதும் எழுத முடியாமல் போனது.பரிசல் சொன்னதைப் போல காரணம் தெரியவில்லை.

  சரி,மேட்டர் இதுதான். நான் எட்டாம் வகுப்பு படித்தபோது எங்க‌ள் அறிவியல் ஆசிரியர் சில குழுக்களாய் பிரித்து ஒரு தலைவனையும்(அடியேனும் ஒரு குழுவின் தலைவன்)நியமித்தார். நாங்களாக புதுசாக ஏதாவது செய்து காட்ட வேண்டும்.ஒவ்வொரு குழுவின் எல்லா முயற்சிக்கும் மதிப்பெண்கள் தந்து ஆண்டிறுதியில் வென்ற அணிக்கு பரிசுகள் தந்தார்.

      அப்போது என் குழுவில் இருந்த சில மாணவர்கள்   " இதற்கு மார்க் கொடுத்தாவது பரவா இல்ல. வீணாப் போன பேனாவையும் ஸ்கேலையும் வாங்க இவ்ளோ கஷ்டபடுனுமா" அப்படினு சொன்னார்கள். அப்போது என் மூளையின் ஒரு மூலையில் மணி அடித்தது. (ஹும்,மொழி படத்தில் வருவதைப் போல அடித்தலாவது தேவலை). வெட்டியாக ரெக்கார்ட் வொர்க் என்ற ஒன்றிர்க்கு  50 மதிப்பெண்கள் தருவதை விட, ஏதாவது சமுதாயத்திற்கும் அல்லது பள்ளிக்கும் தேவையான ஒன்றை செய்பர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கலாம் என்பதே அந்த மணி சொன்ன மேட்டர்.

  நான் மட்டும் கல்வி அமைச்சர் ஆனால்(சரியாக படிக்கவும்,கல்வி அமைச்சர்) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் படிப்புக்கேற்ப அவர்கள் தரும் சிறந்த ,உபயோகமான திட்டங்களுக்கு கூடுதல் மதிப்பெண்ணும், சான்றிதழும் வழங்குவேன். இந்த சான்றிதழ்கள் அவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெற உதவும்.சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருப்பதைப் போல இவ்வாறு சான்றிதழ் பெற்ற மாணவர்கள் " நல்ல சாதியாக" கண‌க்கில் கொண்டு அவர்களுக்கு தனி பங்கீடும் அளிக்கலாம்.

       உதாரணமாக, எங்கள் குழுவில் நான் செய்ததை சொல்கிறேன். அப்போது எல்லாம் அடிக்கடி நான் விளையாடும்போது(வீட்டுக்குள்ளேதான்) அடிபடும். உடனே போட்டுக் கொள்ள பேன்டேஜோ அல்லது டிஞ்சரோ வீட்டில் இருக்காது.மருந்துக் கடைக்கு சென்று ஒரு பாட்டில் டிஞ்சர்,பஞ்சு,பேன்டேஜ் மற்றும் சில முக்கியமான பொருட்களை வாங்கி ,மளிகை கடையில் ஒரு சிறு அட்டைப் பெட்டி வாங்கி அதுனுள் எல்லாவற்றையும் போட்டு மேலே காகிதத்தால் சுற்றி "முதுலுதவிப் பெட்டி" என எழுதி வைத்தேன்.இதை எங்கள் ஆசிரியரிடம் காட்டிய போது ,அதைப் போல மேலும் 50 பெட்டிகள் செய்ய அவரே காசு தந்தார். நாங்களும் சந்தோஷத்தோடு செய்து கொடுத்தோம்.அதை எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அடக்க விலையில் விற்றார்.இதை ஏன் சொல்கிறேன் என்றால்,மாணவர்களுக்கும் பல நல்ல யோசனைகள் தோண்றும்.அதை நாம் எப்படி செயலபடுத்துவது என்பதில்தான் இருக்கு மேட்டர்.

     ஒரு வாரம் விசுவின் மக்கள் அரங்கில் வந்த சில மாணவர்கள் அவர்கள் ஊரில் கழிவு நீர் வெளியேற்றதிற்கு ஒரு மாற்று வழியை சொன்னார்கள். அதை ஆராய்ந்த சில வல்லுனர்கள் அதை மிகவும் நல்ல திட்டம் என்று சான்றளித்து அதை இப்போது நடைமுறைபடுத்த போகிறார்கள். சென்னையில் ராஜ்பவன் அருகே சாலையை ஒரு வழி சாலையாய் மாற்றிய பிறகு ட்ராஃபிக் வெகுவாக குறைந்தது.அது ஒரு பள்ளி மாணவனின் யோசனைதான் என்பது பலருக்கு தெரியாது.இதைப் போல அவர்கள் வாழும் ஊருக்கு தேவையானது மற்றும் பொதுவாக சில நல்ல திட்டங்களை தரும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் கொடுத்தால் நிச்சயம் நமக்கு ஆயிரமாயிரம் நல்ல திட்டங்கள் கிடைக்கும்.அதை நடைமுறைபடுத்துவதும் எளிது.

     சென்னையில் இப்போதெல்லாம் போக்குவரத்து காவலர்களோடு சில இளைஞர்கள் நீல நிற உடையில் நிற்பதை காணலாம்.அவர்களுக்கு சம்பளம் தருவது ஹுன்டாய் கார் நிறுவனம்.அது மட்டுமின்றி 1000 கார்களையும் தந்துள்ளது.டி.வி.எஸ். நிறுவனம் ஃபியரோ ரக இரு சக்கர வாகணங்களை இலவசமாக தந்துள்ளது.இதேப் போல் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பெரிய நிறுவன‌ங்களை மாணவர்கள் தரும் திட்டங்களை செயல்படுத்த உதுவுமாறு அழைக்கலாம்.அவர்களும் விளம்பரத்திற்காகவும், மக்களிடம் நல்ல பெயர் எடுக்கவும் நிச்சயம் உதுவுவார்கள்.

      ஒருவழியாக என் திட்டத்தை புரிய வைத்துவிட்டேன் என நினைக்கிறேன்.எந்த ஒரு திட்டத்தையும் செயல் படுத்துவதுதான் பெரிய சவால். ஆனால் இந்த திட்டம் ஒரு அளவுக்கு சுலபமானதுதான் என நினைக்கிறேன். இது கட்டாயம் எல்லா மாணவர்களும் செய்ய வேண்டியதில்லை.செய்பவர்களுக்கு ஐந்தே ஐந்து கூடுதல் மதிப்பெண்கள் தந்தாலே பல்லயிரம் திட்டங்கள் குவியும். என்ன நண்பர்களே, நான் சொல்வது சரிதானே?

Feb 3, 2009

ஈழம். முடிவேயில்லையா?

32 கருத்துக்குத்து

  இலங்கையில் நடக்கும் கொடுமையைப் பற்றி எழுதி எழுதி என்னவாக போகிறது? தெரியவில்லை. அனானி நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். தேவையென்றால் ஈழத்தைப் பற்றி எழுதிவீங்க? அடுத்த நாளே மொக்கை போடுவீங்களா? உண்மைதான். எல்லோரும் யுத்தக் களத்தில் சென்று போராட வேண்டுமென்பதில்லை. அவரவர் இயங்கும் தளத்தில் இந்தப் பிரச்சினை குறித்து விழிப்புணர்வு ஏறப்டுத்துவதும் ஆக்கப்பூர்வமான செயல்தான். அதைத்தான் செய்ய விழைகிறோம்.

  இன்று புலிகளைத் தவிர ஈழ மக்களுக்காக போராட எவரும் தயாரில்லை. எனக்கும் அவர்கள் செயலில் முழு ஆதரவில்லை. ஆனால் களத்தில் நின்று பல இழப்புகளை சந்தித்த புலிகளும், சிங்கள ராணுவத்தின் பல வெறிச்செயலுக்கு உள்ளான அப்பாவி மக்களும் அது சரிதான் என்று நினைப்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. புலிகளுடன் போரிட்டு வெல்ல முடியாது என்று உணர்ந்த இலங்கை அரசாங்கம் அதற்கு பதிலாய் லட்சகணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிப்பதென்று முடிவு செய்ததலிருந்தே அவர்களின் பலத்தை உணரலாம்.

  இன்று நாம் குரல் கொடுக்க வேண்டியது புலிகளுக்கு ஆதரவு என்ற ஒற்றை சொல்லல்ல. அநியாயமாக ஆயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிப்பத்தை எதிர்த்துதான். கொல்லப்படுவது தமிழர்கள் என்பது மட்டும்மல்ல அதற்கு காரணம். எப்படி சாதி, மத அடிப்படையில் ஒரு மனிதனை அடையாளம் காண்பதில் எனக்கு உடன்பாடில்லையோ அதுப் போல்தான் இனமும். அவர்கள் மனிதன் என்ற ஒன்றே போதுமானது அந்த அக்கிரம செயலை எதிர்த்து குரல் கொடுக்க.

  புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்ற மொக்கை வாத்ததை எடுத்துக் கொண்டாலும், ஐ.நாவும் கலக நாட்டாமைகளும், மன்னிக்க, உலக நாட்டாமைகளும் தலையிட்டுருக்க வேண்டும். சரி, அவர்களை நிர்பந்திக்க முடியாது. ஆனால் நான் வாழும் நாட்டில், என் வரிப் பணத்திலிருந்தே இந்த கொலைகளுக்கு ஆயுதங்கள் வாங்கும் பொழுது அதை எதிர்த்து குரலொடுக்க என் உரிமை இருக்கிறதல்லவா?

   குரல் கொடுப்பதால் என்னவாகிவிட போகிறது? பல வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்களும் புரட்சியால் தான் நடந்திருக்கிறது. புரட்சியின் முதல் தீப்பொறி நாலு பேரின் முயற்சியால் தான் தோண்றிருக்கிறது. அதற்கான ஒரு முயற்சியை நான் செயலபடும் தளத்தில் உருவாக்க முனைவது தவறில்லையே? சிந்தித்துப் பாருங்கள். இந்தியா நினைத்தால் அந்த படுகொலைகளில் பாதியாவது தடுத்திருக்க முடியாதா? அதனால்தான் சொல்கிறோம். இந்திய அரசே இலங்கையில் அமைதி திரும்ப தலையிடு.

  நம் நாட்டுக்கே செய்ய வேண்டியவை பல இருக்கும்போது ஏன் இலங்கைப் பற்றிக் கவலைக் கொள்ள வேண்டும் என்றார் பதிவுலக நண்பர் ஒருவர். சரிதான் நண்பரே. அதேக் கேள்வியை மீண்டும் கேளுங்கள். முடிவில் ஏன் தளவாடங்களை இலங்கைக்கு கொடுத்தார்கள் என்பதை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

   இங்கிருக்கும் அரசியல்வாதிகள் பற்றிதான் தெரியுமே. அறப்போராட்டம் நடத்துகிறாராம் திராவிடத் தலைவர்.அவர் என்ன செய்வார். எல்லோருக்கும்தான் பட்டம் கொடுத்துவிட்டாரே. வேறு வேலையென்ன? சாகும்(?) வரை உண்ணாவிரதம் இருந்து ஈழத்தில் எரிந்த தீயை தமிழகத்திலும் பற்ற வைத்தார் சிறுத்தை. கட்சியினர் நலனுக்காக பழச்சாறு கொடுத்து உதவினார் மாம்பழம், ஈழப் பிரச்சினைக்காக பிறந்த நாளே கொண்டாடாத கேப்டனை காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில்தான் காண முடியும் என்ற நிலை. அவ்வபோது புதுப்பிக்கப்ப்டும் புலிகள் மீதான தடையை நீட்டித்த அரசில் பங்கேற்று அமைதி காத்த வைகோ, இன்று திமுகவை குற்றம் சாட்டுவதே ஈழ மக்களுக்கு செய்யும் பெரிய உதவியாக நினைக்கிறார். உலகத் தமிழர்களின் நம்பிக்கையும் ஏழாவது முறையாக கடைசிகட்ட போராட்டத்தை நட்த்தவிருக்கிறார். அவரா? இதில் அவரின் பெயரை சேர்க்க கூட முடியுமா?

  நாளை பிறக்கும் த்மிழீழம் என்று நம்பிக்கை வளர்த்து இன்றைய சந்ததியினரை தொலைப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? கொஞ்சம் விட்டுக் கொடுத்தாவது இனியொரு உயிர் அழியாமல் வாழ வழியில்லையா? எல்லோரையும் பலி கொடுத்துவிட்டு யாருக்காக தனி நாடு காண வேண்டும்? சத்தியமாக எங்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான உதவிகள் கிடைக்குமென்று நம்ப வேண்டாம் ஈழ மக்களே. வெறும் போராட்டங்கள் உங்களுக்கு என்ன செய்து விடும்? 

  வெளிவரும் தகவல்கள் முழுவது உண்மையில்லை என்பதை அறிவோம். இருந்தும் உண்மையில் நிலைமை மிக மோசம் என்பது மட்டும் புரிகிறது. போரோ, சமாதானமோ எதுவும் இல்லாமல் அப்பாவி மக்கள் சாவது தொடர்ந்தால் புலிகள் மேல் கோபமும் நம்பிக்கையின்மையும் வளர வாய்ப்புண்டு. இப்போதைய உடனடி தேவை உயிர்கள் போகாமல் இருப்பது. என்ன செய்யனும் அதுக்கு? அதை செய்யுங்களேன்

Feb 2, 2009

ராஜாவுக்காக சாகலாம்

44 கருத்துக்குத்து

  அதிகாலை நாலு மணி. காரணமே இல்லாமல் விழித்திருக்கிறேன். எதனால் விழித்தேன்? நினைவில்லை. தனியாக இருப்பதில் இது ஒரு வசதி. அந்த நேரத்திலும் நினைத்தப் பாடலை கேட்கலாம். சுயநலமாக ஹெட்ஃபோனில் இல்லாமல் ஸ்பீக்கரிலே. ஏதோ ஒன்று என்னை இயக்குவது போல கைகள் தானாக நான் கடவுள் பாடலை தட்டியது

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே.. என் அய்யனே

   அப்ப‌டியே சுவ‌ரில் சாய்ந்து நிற்கிறேன். ர‌யில் கூவினாலும் கூட‌வே கூவும் ப‌ழ‌க்க‌முண்டு என‌க்கு. அதிசய‌மாக‌ அமைதியாக‌ கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு வ‌ரியும் என் நெஞ்சில் ஆணியில் கீறி ப‌ச்சைக் குத்துவ‌து போல‌ இருக்கிற‌து

பிண்ட‌மெனும் எலும்பொடு ச‌‌தை ந‌ர‌ம்பு

உதிரமும் அட‌ங்கிய‌ உட‌ம்பு எனும்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே

  என் ம‌யிர்க‌ள் கூச்செரிய‌த் தொட‌ங்கின‌. இத‌ற்கு முன்ன‌ரே இந்த‌ப் பாட‌லைக் கேட்டிருக்கிறேன். அப்போது ஏற்ப‌டாத‌ அதிர்வுக‌ள் இப்போது ஏற்ப‌ட‌ கார‌ன‌மென்ன‌? எதையும் ஆராயும் நிலையில் நானில்லை. க‌ண்க‌ள் மூட‌ ப‌ய‌மாயிருக்கிற‌து. அது என்னை நான்றியாத‌ ஓருல‌கிற்கு அழைத்து செல்வ‌தால் க‌ண்க‌ள் மூட‌ பய‌மாயிருக்கிற‌து. குளிர் குறைந்திருக்கிற‌து ஹைதையில். ஆனால் இப்போதுதான் நான் உறைந்திருக்கிறேன். இசைக் கருவிகளின் விஸ்வரூபத்தில் மெய்மறந்திருந்தேன். நீண்டதொரு இரவின் விளிம்பில் தெரியும் அதிகாலை சூரியனின் வெளிச்சம்போல ஆக்ரமித்தது மது பாலகிருஷ்ணின் குரல்

அம்மையும் அப்பனும் தந்ததா - இல்லை

ஆதியின் வல்வினை சூழ்ந்ததா

  இருவரி குறளுக்கு கூட இத்தணை அர்த்தம் உண்டா எனத் தெரியவில்லை. பாடல் முடிந்துவிட்டது. நான் இன்னும் தரை இறங்கவில்லை. அந்த இரண்டு வரிகளின் அர்த்தம் தேடிப் பறந்துக் கொண்டிருந்தேன்

  மீண்டும் தொடங்கியப்பாடலை தொற்றிக் கொண்டேன். மேலும் ஒருவரி கேட்க முடியவில்லை. பயமாயிருக்கிறது. கடவுள் என்றால் யார் என்று வீம்பு பேசுபவரையும் கைத்தொழ வைக்கிறார் இளையராஜா

சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட‌

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே

  இந்த சரணத்திற்கு பின் வரும் இசையில் வாழ்கிறார் ராஜா. இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா? அதை இசையாக்க முடியுமா? வார்த்தைகள் கொடுக்காத அர்த்தத்தை இந்த சத்தங்கள் கொடுக்குமா? எளிதில் பதில் கிடைக்கிறது. ஆம். ராஜா ராஜாதான்.

   இரண்டாவது முறைதான் கேட்கிறேன் என்று நினைத்திருந்தேன். நாலறை மணிக்கு ஒரு முறை நேரம் பார்த்தேன். இப்போது மணி ஐந்தேகால். "தேவ மெளனம் சிந்திக் கொண்டிருந்தது" என்று ஒரு முறை எழுதியது நினைவிருக்கிறது. இன்று அனுபவிக்க முடிகிறது அதை.

வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்

அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்

  கர்வங்களை சுவடின்றி அழித்துக் கொண்டிருந்தன ராசாவின் இசையும் வரிகளும்.

பொருளுக்கு அலைந்திடும்

பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே

உன் அருள் அருள் அருளென்று

அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே

அருள் விழியால் நோக்குவாய்

மலர் பத்த்தால் தாங்குவாய்

  பிறவிப் பயன் என்பார்களே!! இந்தப் பாடலை கேட்கும் பொழுது எனக்கு கிடைத்துவிட்டது. இனி மெல்ல சாகலாம். இதை எழுதி இசையமைத்த ராஜாவுக்காக சாகலாம்

 

all rights reserved to www.karkibava.com